Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

காதல் சின்னத்துக்கு அழகூட்ட ‘முல்தானி மிட்டி’

உலக அதிசயங்களில் ஒன்றான காதல் சின்னம் ‘தாஜ்மஹால்'-ன் வெள்ளை நிற அழகை மேம்படுத்தி அழகூட்ட ‘முல்தானி மிட்டி’யுடன் கூடிய ‘மட் தெரபி’ செய்யப்படுவதாக இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.

taj

 

உலக காதல் சின்னமான தாஜ்மஹால் வெள்ளை நிற மார்பிள் கற்களால் உருவான ஓர் வரலாற்றுப் பொக்கிஷம். தாஜ்மஹாலின் அழகே அதன் மங்கா வெள்ளைத் தோற்றம். ஆனால் தற்போது அதிகப்படியான சுற்றுசூழல் சீர்கேடுகளாலும், காற்று மாசுபாட்டினாலும் அந்த வெள்ளை ஓவியத்தின் நிறம் மங்கி வருகிறது.

இது தொடர்பாக இன்றைய நாடாளுமன்ற கேள்வி-பதில் நேரத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசின் சார்பாக பதிலளித்த கலாசாரத் துறை அமைச்சர் மஹேஷ் சர்மா ‘தாஜ்மஹால்’ அழகை மாசுபாடுகளிலிருந்தும், பூச்சிகளிடமிருந்தும் பாதுக்கப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தாஜ்மஹாலின் வெள்ளை நிற அழகை மெருகேற்ற ‘முல்தானி மிட்டி’ என்ற இயற்கை அழகூட்டியுடன் கூடிய ‘மட் தெரபி’ செய்யப்படுவதாகவும் அதன் பலன் கண்கூடாகத் தெரிவதாகவும் அமைச்சர் கூறினார்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ராம்ப் வாக்கில் அசத்திய நைனிகா... பூரிப்பில் மீனா!

நைனிகா

சென்னையில் குட்டீஸ்களுக்கான ராம்ப் வாக் நிகழ்ச்சி மற்றும் அழகு போட்டிக்கான துவக்க விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை மீனா மற்றும் அவரது ‘தெறி பேபி’ நைனிகா கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்ட பிரபலங்களின் குழந்தைகள் ராம்ப் வாக்கில் கலந்துகொண்டனர். 
இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, ‘ப்ரே ஃபார் சென்னை’ என்ற தன்னார்வ அமைப்புக்கு நன்கொடையாக அளிக்கப்படும் என்று இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த நடிகை மீனா, “ இது ஒரு புது அனுபவமா இருக்கு. நான் இந்த மாதிரியான நிகழ்ச்சிக்குப் பல தடவை போயிருந்தாலும், என் பொண்ணு நைனிகாவோட வர்றது இதுதான் முதல்முறை”, என்று கூறினார். மேடையில் இருந்த நைனிகாவும், இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ‘ஆல் தி பெஸ்ட்’ என்று சொல்ல... அத்தனை அழகு. 

நைனிகா

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த ராம்ப் வாக் துவங்கியது. முதல் ஆளாக வாக் செய்து வந்த நைனிகா ப்ளூ வித் பிங்க் ஃப்ராக்கில் அழகு தேவதையாக தன் குட்டிக் கால்களால் மெல்ல நடை போட்டார். மீனாவுக்கு பூரிப்புத் தாங்க முடியவில்லை. முகம் கொள்ளா சந்தோஷத்துடன் தன் மொபைலில் தன் செல்ல மகள் கேட் வாக் செய்வதை கன்னம் சிவக்க படம்பிடித்துக்கொண்டிருந்தார். மற்றொரு தெறி பேபியான சிங்கம் படத்தில் நடித்த ரக்‌ஷனாவும் கேட் வாக்க... அரங்கமே அழகால் மிளிர்ந்தது. 

நைனிகா

செலிபிரட்டிகளின் குழந்தைகளோடு மற்ற குழந்தைகளும் ரேம்ப் வாக்க அரங்கம் கைதட்டல்களாலும், சந்தோஷத்தாலும் நிரம்பி வழிந்தது. இந்தக் குழந்தைகளுக்கான அழகுப்போட்டி, சென்னை, பெங்களூரு, கொச்சி, கொல்கத்தா, மும்பை, பூனே மற்றும் புது தில்லியில் நடக்கவுள்ளது. சென்னையில் நடக்கும் போட்டி வரும் மே மற்றும் ஜூன் மாதத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கு ஜட்ஜாக வந்து கலந்து கொண்டார் 2016 ஆம் ஆண்டின் முன்னாள் தென்னிந்திய அழகி மீரா மிதுன். மேலும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் மூலம் பிரபலமான சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர், இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் – 06

 

கிமு 648 : ஆரம்­ப­கால சூரிய கிர­கணம் கிரேக்­கர்­களால் பதி­யப்­பட்­டது.


1782 : சியாமில் (தற்­போ­தைய தாய்­லாந்து) மன்னர் டாக்சின், ஆட்­சியில் இருந்து அகற்­றப்­பட்டார். முதலாம் ராமா புதிய மன்­ன­ராக முடி சூடினார்.


1814 :  பிரான்ஸின் மன்னன் நெப்­போ­லியன் போனபார்ட் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்­தப்­பட்டார்.
1869 : செலு­லோயிட் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


1896 : 1,500 ஆண்­டு­க­ளாக ரோம் பேர­ரசர் முதலாம் தியோ­டோ­சி­ய­சினால் தடை­செய்­யப்­பட்­டி­ருந்த ஒலிம்பிக் போட்­டிகள் முதற்­த­ட­வை­யாக கிரேக்­கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்­ப­மா­கின.


Untitled-21917 : முதலாம் உலகப் போரில் ஜேர்­ம­னிக்கு எதி­ராக ஐக்­கிய அமெ­ரிக்கா  போர்ப் பிர­க­டனம் செய்­தது.


1919 : இந்­தி­யாவில் மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்­தத்தை அறி­வித்தார்.


1936 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜோர்­ஜியா மாநி­லத்தில் சுழற்­காற்று தாக்­கி­யதில் 203 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1941 : இரண்டாம் உலகப் போர்: யூகோஸ்­லா­வியா மற்றும் கிரேக்­கத்தை ஜேர்­மனி முற்­று­கை­யிட்­டது.


1965 : "ஏர்லி பேர்ட்"  எனும் முத­லா­வது தொலைத்­தொ­டர்பு  செய்­மதி விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.


1968 : அமெ­ரிக்­காவின் இண்­டி­யானா மாநி­லத்தில் இடம்­பெற்ற இரட்டைக் குண்­டு­வெ­டிப்­பு­களில் 41 பேர் கொல்­லப்­பட்டு, 150 காய­ம­டைந்­தனர்.


1994 : ருவாண்டா ஜனா­தி­பதி ஜூவெனல் ஹபி­ரி­மானா மற்றும் புருண்டி ஜனா­தி­பதி சைப்­ரியன் என்­டா­ரி­மிரா ஆகியோர் பயணம் செய்த விமானம் ருவாண்­டாவில் சுட்டு வீழ்த்­தப்­பட்டு இவ்­வி­ரு­வரும் உயி­ரி­ழந்­ததை தொடர்ந்து ருவாண்­டாவில் இனப்­ப­டு­கொ­லைகள் ஆரம்­ப­மா­னது.


1998 : இந்­தி­யாவைத் தாக்கக் கூடி­ய­தான நடுத்­தர ஏவு­க­ணை­களை பாகிஸ்தான் பரி­சோ­தித்­தது.


2005 : குர்­தியத் தலை­வ­ரான ஜலால் தல­பானி, ஈராக்­கிய ஜனா­தி­ப­தி­யானார்.


2009 : இத்­தா­லியில் 6.3 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்பட்டதால் 307 பேர் இறந்தனர்.


2012 : ஆபிரிக்க நாடான மாலியில் இருந்து பிரிவதாக அஸாவத் பிராந்தியம் சுதந்திரப் பிரகடனம் செய்தது. எனினும், இது அங்கீகரிக்கப்படவில்லை. 

http://metronews.lk/

  • தொடங்கியவர்

குழப்பத்தில் இருந்த மன்னன்... தீர்த்துவைத்த குரு! #MorningMotivation

Motivation மன்னன்

போர்வையை போர்த்தியது போல எங்கும் பசுமை, கடல் கடந்து கொடிகட்டி பறக்கும் வாணிபம், மக்கள் நலனே முக்கியம் என அவர்களின் பிரச்னைகளை உடனுக்குடன் களையும் மன்னன் மருதன் என அந்த நாட்டு மக்களின் செழிப்பைப் பார்த்து பொறாமைப்படாதவர்களே இல்லை எனச் சொல்லலாம். எந்த பிரச்னை என்றாலும் அங்கு உடனடியாக அமைச்சர்கள் சென்று பிரச்னையை தீர்த்து வைப்பார்கள். "மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைத்தால்தான் நிம்மதியாக தங்களின் வாழ்ககையை வாழ முடியும். அதனால் எதையும் காலம் தாழ்த்தாமல் அதை தீர்த்து வையுங்கள்" என அன்புக் கட்டளையிட்டிருந்தான் மருதன். அப்படி அமைச்சர்களால் தீர்த்து வைக்க முடியாத சூழல்களில் அவை நேரடியாக அரசனின் பார்வைக்கு வரும். இப்படி தனது சமயோசித சிந்தனையாலும், விரைவான செயல்களாலும் நாட்டு மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றிருந்தான் மருதன். 

ஆனால், சில நாட்களாக மன்னனின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிப் போயிருந்தன. மன்னன் கவனிக்க வேண்டிய எல்லா வேலைகளும் கிடப்பில் போடப்பட்டன. அமைச்சர்களுக்கு மன்னனின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை, அதைக் கேட்கவும் தயக்கம். கிடப்பில் போடப்பட்டிருந்த பிரச்னைகளில் முக்கியமானது கொள்ளையர்கள் பிரச்னை. அண்டை நாடுகளுக்கு வாணிபம் செய்ய போகும் வணிகர்களின் கப்பலை வழிமறித்து அவற்றை கொள்ளையடித்து கொண்டிருந்தனர். இதனால் நாட்டின் வணிகம் பெருமளவில் பாதிக்க தொடங்கியிருந்த நேரத்தில் மூத்த அமைச்சர் ஒருவர் மட்டும் இந்த பிரச்னையை மன்னனிடம் எடுத்து சொல்வதற்காக சென்றார். அவர் சொல்லச் சொல்ல மன்னன் தலையாட்டி கொண்டிருந்தான் தவிர இந்த பேச்சில் அவன் முழுமையான ஈடுபாட்டுடன் இல்லை என்பதை அவனுடைய முகக்குறிப்பிலேயே அறிந்து கொண்டார் மூத்த அமைச்சர். 

‘இவ்வளவு வருத்தம் தோய்ந்த முகத்துடன் மன்னனை எப்போதும் கண்டது இல்லையே, மன்னன் ஏதோ ஒரு தீவிரமான மனக்குழப்பத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவருடைய பிரச்னையை கண்டறிவதற்கு முயற்சி செய்து நேரம் தாழ்த்துவதை விட நேரிடையாக அவரை அதிலிருந்து விடுபடச் செய்யும் சூழலைத் தான் உருவாக்க வேண்டும்.’ என்பதை உணர்ந்தார் மூத்த அமைச்சர்.

MorningMotivaion

அடுத்த நாள் பொழுது புலர்ந்தது. நேரடியாக மன்னனைச் சென்று சந்தித்தார் மூத்த அமைச்சர். "கடற்கொள்ளையர்களின் தொல்லை எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது. அண்டை நாட்டுக்கு பொருட்களை கப்பலில் ஏற்றி சென்ற நம் வணிகர்களின் கப்பல் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த பிரச்னைகள் குறித்து தெளிவான முடிவெடுத்து அதை செயல்படுத்த வேண்டும். தாங்கள் ஏதோ குழப்பமான மனநிலையில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தற்போதைய சூழலில் தாங்கள் இங்கு இருப்பதை விட சில நாட்கள் நாட்டை சுற்றி வருவது ஓய்வை கொடுப்பதோடு உங்கள் மனக் குழப்பங்களிலிருந்து வெளியில் வரவும் வழிவகை செய்யும்" என சொல்லி முடித்தார் மூத்த அமைச்சர். மருதனுக்கும் அந்த யோசனை சரியாகப்படவே உடனடியாக பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மன்னனுடன் மூத்த அமைச்சரும் பயணம் செய்தார். இருவரும் நாட்டைச் சுற்றி வந்தனர். அவர்களின் பயணப்பாதையில் மன்னன் தனது இளம்வயதில் கல்வி கற்ற குருவின் ஆசிரமம் இருப்பதை அறிந்து கொண்டு அங்கு மன்னனை அழைத்துச் சென்றார் அமைச்சர். 

Motivation

மருதனும் குருவும் தனிமையில் சந்தித்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அமைச்சர் குருவிடம் மன்னனுடைய மனக்குழப்பம் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஆனால் மன்னனின் மனக்குழப்பத்துக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் அமைச்சருக்கு நம்பிக்கை இருந்தது. குருவிடம் தனது சந்திப்பை நிறைவு செய்து கொண்டு வெளியே வந்த மன்னனுடைய உடல்மொழியில் அவ்வளவு உற்சாகம். அவன் முகம் பழையபடி பிரகாசமாய் இருந்தது. வேகமாகத் தனது குதிரையில் ஏறிக்கொண்ட மருதன் உற்சாகமாய் குதிரையை விரட்டத் துவங்கினான். அவனுடைய பழைய உற்சாகத்தை மீண்டும் கண்ட அமைச்சருக்கு  மகிழ்ச்சி  தாங்கவில்லை. உடனடியாக குடிசைக்குள் ஓடி குருவைச் சந்தித்தார். 

MorningMotivation

"கடந்த சில நாட்களாக மன்னன் முகத்தில் உற்சாகத்தையே பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு மனக்குழப்பதிலேயே இருந்தார். அது என்னவென்றும் எங்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால், உங்களை சந்தித்து விட்டு கிளம்பிய மன்னனின் முகத்தில் பழைய சந்தோஷத்தைப் பார்க்க முடிந்தது. அது எப்படி குருவே..?" என வினவினார் அமைச்சர்.

மெலிதான புன்னகையைத் தவழ விட்டபடி அமைச்சரைப் பார்த்துப் பேசினார் குரு;  "உங்கள் மன்னனை நீங்கள் சந்திக்கும் நேரங்களில் எல்லாம் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள். அவனும் மனிதன் தானே.   தொடர்ந்து அவற்றை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது இனம் காண முடியாத குழப்பம் தொற்றிக் கொள்ளுமல்லவா.  அவன் உள்ளே வந்ததும் அவன் ஆட்சியில் நடக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி அவனிடம் பேசினேன். நல்ல விஷயங்களைத் தொடர்ந்து கேட்கும் மனதில் எந்தக் கவலைக்கும் இடம் இல்லை" எனச் சொல்லி முடித்தார் குரு.

vikatan

  • தொடங்கியவர்

செந்நிற ஆறாக ஓடும் எட்னா எரிமலை..! (காணொளி இணைப்பு)

ஐரோப்பாவின் மிகப்பெரிய உயிர்ப்பெரிமலையான எட்னா கடந்த சிலமாதங்களாகவே மாக்மா குழம்புகளை கக்கி வரும் நிலையில், தற்போது தீ குழம்புகள் ஆறாக ஓடும் காணொளி வெளியாகியுள்ளது.

volcano.jpg

எட்னா எரிமலையின் தொடர்ச்சியான உயிர்ப்பினால் குறித்த பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலு குறித்த எரிமலையை ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்களும் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொளவதற்காக ஓடிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் கடந்த 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் எட்னாவின் உயிர்ப்புத்தன்மை அதிகமாகவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த மலையின் வெப்பநிலையானது தற்போது 1000 பாகை செல்ஸியஸை தண்டியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

volcano_2.jpg

இந்நிலையில் சுமார் 3000 மீற்றர் பரப்பில், 650 அடி உயரத்தில் எட்னா எரிமலை தீக்குழம்புகளையும், புகையையும் கக்கி வருவதால், இதுவரை சுமார் 10 பேர் வரையில் காயமுற்றுள்ளதோடு, குறித்த மலை பள்ளத்தாக்கில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

விலங்குகளுடன் வளர்ந்த சிறுமி! ஒரு ரியல் ’ஜங்கிள் புக்’

உத்தரப்பிரதேசத்தில், காட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுமி, விலங்குகளைப் போன்று செயல்படும் வினோதம் நடந்துள்ளது.

girl found in forest
 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், கத்தர்ணியாகாட் என்னும் வனப் பகுதியிலிருந்து, ஒரு சிறுமியை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சிறுமியின் உடலில் காயங்கள், தழும்புகள் இருந்துள்ளன. பின்னர்,  மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சையின்போது, அந்தச் சிறுமி, மனிதர்களைக் கண்டு பயந்து, கூச்சல் எழுப்புவதும், விலங்குகளைப் போலவே  உணவு உட்கொள்வதும் வியப்பை அளித்துள்ளது.

Girl found in Katarniaghat forests of Uttar Pradesh's Bahraich two months back with habits similar to that of animals.

C8tJCBCXsAALuiG.jpg
C8tJCwrXUAQzYhl.jpg
C8tJFXoXUAAyEwR.jpg

இதுகுறித்து, சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் டி.கே.சிங் கூறுகையில், “சிறுமியை இரண்டு மாதங்களுக்கு முன், காட்டுப் பகுதியில் இருந்து மீட்டோம். மனிதர்களைப் பார்த்துப் பயந்தார். தற்போது இவளுக்கு பயம் தெளிந்துள்ளது. மனிதர்களைப் பார்த்து இப்போது கூச்சல் எழுப்புவதில்லை. சிறுமி, விலங்குகளுடன் சில ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அதனால்தான் விலங்குகள் போன்று நடக்கிறாள், உணவு உட்கொள்கிறாள். சிறுமியின் உடலில் இருந்த காயங்கள் குணமாகிவிட்டன. விரைவில் பழக்கவழக்கங்களும் மாறும்” என்றார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சர்ச்சை நாயகன் ரமித் ரம்புக்வெல்லவின் பேஸ்புக் பதிவால் புதிய சர்ச்சை

பல சர்ச்சைகளில் சிக்குண்ட பலராலும் பேசப்பட்ட கிரிக்கெட் வீரரான ரமித் ரம்புக்வெல்ல அவரது காதலி நடாலியா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியுள்ளார்.

இவர் தனது காதலியுடன் இணைந்து எடுத்த படங்களை முதல் முறையாக பேஸ்புக் தளத்தில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நடாலியா ரமித்துடன் பல வருடங்களாக காதல் தொடர்பில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

17498925_10210861022635445_4108412612115

17796467_10210944407520015_1258613217751

17795771_10210944407560016_6448502105398

17800177_10210944407600017_7696715034994

17800173_10210944407640018_3661146090019

17523528_10210944409320060_1085745400110

17798955_10210944409440063_8701695039992

17799415_10210944409520065_8473116895166

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

5 வயது டான்ஸ் மாஸ்டர்! - வைரலாகும் வீடியோ

சீனாவில், டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் ஒரு குழுவின்  மாஸ்டருக்கு, வயது என்ன தெரியுமா? ஐந்து. 

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று, சோங்சிங். இங்கே, 'ஷபிங்பா' என்ற இடத்தில் உள்ள சதுக்கத்தில்,  நடனக் குழு ஒன்று, பலருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கிறது. 

unnamed_%281%29_02170.jpg

இந்த நடனக் குழுவில் பயிற்சி பெற்றவர்களில், 'டைலான் ஜிங்யீ' என்ற ஐந்து வயது சிறுமியும் ஒருவர். இரண்டே மாதங்களில் சூப்பராக நடனம் கற்றுக்கொண்ட டைலான், இப்போது அதே குழுவில் மற்றவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் அளவுக்குத் தேறிவிட்டார். 

கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இந்த நடனக் குழுவில் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறார். அங்குள்ள சதுக்கம் ஒன்றில், மேடை மீது இருந்தவாறு டைலான் போடும் க்யூட் அண்டு ஃபாஸ்ட் அசைவுகளைப் பின்பற்றி, கிட்டத்தட்ட 100 பேர் தரையில் நடனமாடுகிறார்கள். பார்க்கும்போதே மனதைக் கொள்ளையடிக்கிறது அந்த வீடியோ. 

 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

"உயிர் பெற்ற" கங்கை....

இந்தியாவின் பெருமைமிகு நதிகளில் ஒன்றான கங்கை நதியும் அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் “உயிருள்ள நபர்கள்” என்று இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலையின் பனிமுகடு வேகமாக உருகிவருகிறது.


கடந்த 25 ஆண்டுகளில் 850 மீட்டர் அளவுக்கு அது குன்றியுள்ளது.


எனவே இந்த பனிமுகட்டை உயிருள்ள நபராக இந்திய நீதிமன்றம் அறிவித்திருப்பது அதை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சுமார் 450 மில்லியன் மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் கங்கை நதியை பல்லாயிரம் பக்தர்கள் புனிதமானதாக வழிபடுகிறார்கள்.


இந்துக்கள் தமது பாவங்களை கங்கையில் குளித்து நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.


இறந்தவர்களின் அஸ்தியும் இந்த நதியின் நீரில் கரைக்கப்படுகிறது.


அதேசமயம் ஏராளமான கழிவுகளும், மலஜலமும் இந்த நதியில் கொட்டப்படுவதால் கங்கை நதி மிக மோசமாக மாசடைந்துள்ளது.

தற்போது நீதிமன்றம் அளித்திருக்கும் "உயிருள்ளமனித" அங்கீகாரத்தின் மூலம் கங்கை நதியும் அதன் தோற்றுவாயான இமயமலை பனிமுகடும் சட்டப்பாதுகாப்பை பெற்றுள்ளன.

  • தொடங்கியவர்

பூமிக்கடியில், மின்சாரம் இல்லாமல் ஒரு இயற்கை ஃபிரிட்ஜ்... நெதர்லாந்து ஆச்சர்யம்!

பாதாள குளிர்சாதனப் பெட்டி முகப்பு பூமி

நாம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களில் முக்கியமானது குளிர்சாதனப்பெட்டி. இன்றைய கோடை கொளுத்தும் நிலையில் இதன் பங்கு மிகமுக்கியமானது. வீடுகளில் மட்டுமல்லாமல் பெரிய, பெரிய கடைகளிலும் காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்கக் கடை முழுவதும் அறைகள் குளிரூட்டப்பட்டு காய்கறிகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், குளிர்சாதனப்பெட்டியில் மொத்தம் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு கேடு தரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும், 150 வாட்ஸ் திறனுடைய குளிர்சாதனப்பெட்டி தினமும் 12 மணிநேரம் இயங்கினால் மாதத்திற்கு 54 யூனிட் மின்சாரம் செலவாகும். மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசம். இதில் குளிர்சாதனப்பெட்டிக்கு மட்டுமே பாதியளவு மின்சாரம் போய்விடும். மீதம் இருக்கும் மின்பொருளும் தங்கள் திறனுக்கேற்றவாறு மின்சாரத்தை உறிஞ்சும். தற்போது நெதர்லாந்தில் டச்சு மக்கள் செயற்கை குளிர்சாதனத்துக்கு மாற்று வழியாக பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப்பெட்டி அமைத்து வீட்டு உணவுப்பொருட்களைப் பாதுகாத்து வருகின்றனர். இப்படி பூமிக்கடியில் அமைக்கப்படும் குளிர்சாதனப்பெட்டியானது மிகவும் குளிர்ச்சியானதாகவும், விலை மலிவானதாகவும் மற்றும் உணவுப்பொருட்களைத் தரமாக சேமிக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூள்ளே வைக்கப்பட்டுள்ள காய்கறிகள்

இக்குளிர்சாதனப்பெட்டிக்கு மின்சார பயன்பாடு துளியும் தேவையில்லை என்பது கூடுதல் தகவல். குளிர்சாதனப்பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் கொள்கலனில் தண்ணீர் நிரப்ப வேண்டும். அந்தத் தண்ணீரை மட்டுமே எடுத்துக் கொண்டே குளிர்சாதனப்பெட்டி முழுவதும் சீரான குளிரைக் கொடுத்து உணவுப்பொருட்களைச் சேமிக்கிறது. இதனால் எந்த வாயுவும் வெளிவரப்போவதில்லை, அதனால் இது சுற்றுப்புற சூழலுக்கு மிகவும் உகந்தது. மேலும், இதில் சேமிக்கப்படும் உணவினை மனிதர்கள் உண்பதால் உடலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த குளிர்சாதனப்பெட்டியில் 10 முதல் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உணவுப்பொருட்களைப் பாதுகாக்க முடியும். மேலும், இந்த அமைப்பானது முற்றிலும் பூமிக்கடியில் இருக்குமாறு அமைக்கப்பட்டும், பூமிக்குள் இருக்கும் வாயுக்களால் உணவுப்பொருட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்தக் குளிர்சாதனப்பெட்டியில் காய்கறிகள், பழங்கள் என அவற்றுடன் சேர்த்து மற்ற உணவுப் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பு அமைக்கும்போதே குளிர்சாதனப்பெட்டியை சுற்றிலும் பசுமையாக இருக்குமாறு செடிகள் வளர்ப்பது அவசியம்.

உட்புறத் தோற்றம்

பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன பெட்டியின் கொள்ளளவு, சாதாரண குளிர்சாதனப்பெட்டியைப் போல 20 மடங்கு அதிகமான கொள்ளளவைக் கொண்டது. இந்த அமைப்பிற்குள் சாதாரணமாக ஒரு மனிதன் உள்ளே சென்று வரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதற்குள் காற்றுபுகாத, தண்ணீர் ஒரு சொட்டுகூட புகாத மற்றும் பூச்சிகள் புகாத வகையிலும் வடிவமைக்கப்பட்டிருப்பது, இதன் மற்றொரு சிறப்பு. இக்குளிர்சாதனப்பெட்டியில் உள்ளே நிலவும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறியும் வசதியும் உள்ளது. இதனுள்ளே ப்ளைவுட் மரப்பலகைகளால் அலமாரிகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோக உள்ளே வெளிச்சத்துக்கு எல்இடி விளக்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, நம் முன்னோர்கள் தானியங்களை சேமிக்கவும், மிதமான வெப்பநிலையில் வைத்துப் பாதுகாக்கவும், பூமிக்குக் கீழே அறை ஒன்று தோண்டி அதில் சேமித்து வந்தனர். இந்த அமைப்பும் அதே வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே வித்தியாசம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சாதனம் குளிர்ச்சிக்கு மட்டும்தான். இந்த பாதாள குளிர்சாதனப்பெட்டியானது விஞ்ஞானத்தின் ஒருபடி மேலே போய் நோய்த்தாக்குதல் இல்லாமல் வாழவும் இது வழி செய்கிறது.

வடிவமைப்பு

இதன் முக்கியமான நன்மை மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் என எந்தவிதமான இயற்கை சூழ்நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதாள குளிர்சாதனப்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பெட்டிக்குள் மேற்கண்ட வெப்பநிலையை(10-12 டிகிரி செல்சியஸ்) மாற விடாமல் வைத்திருக்கும். அப்போதுதான் உள்ளே வைத்திருக்கும் பழங்களும், காய்கறிகளும் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்கும். இந்தப் பாதாள குளிர்சாதனப் பெட்டியை அமைக்கும்போது மேற்புறம் ஒரு மீட்டர் உயரத்திற்கு இருக்குமாறு அமைத்தால் போதுமானது. இந்த குளிர்சாதனப்பெட்டி அமைப்பதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டி

அதேபோல இதனைப் புதைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் புதிய இடமாக இருக்க வேண்டும். இது 3,000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவைத் தாங்க கூடிய அளவு உருவம் கொண்டதாக இருக்கும். இதில் 5 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 500 கிலோ உணவுவை சேமித்து வைக்க முடியும். இந்தக் குளிர்சாதன பெட்டியை பூமிக்கடியில் அமைக்கும்போது அந்த இடம் குளிர்ச்சியான இடமாகவும் இருக்க வேண்டும். இதன் மேற்புறம் லேமினேட் செய்யப்பட்ட தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 300 கிலோ ஆகும். இதன் மேற்புறம் அமைக்கப்படும் கதவுகளை நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம். ஆனால், வெயிலைச் சிதறடிக்கும் வெள்ளை நிறமே இதற்கு ஏற்றது. இவ்வாறு சுற்றுச்சூழலுக்கும், வீட்டிற்கும் நன்மை ஏற்படும்படி அமைக்கப்பட்டுள்ளதால் நெதர்லாந்து மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற ஆரம்பித்துள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மெது வடைக்கு நேர்ந்த அவமானம்

இந்தியர் ஒருவர் செய்த மெதுவடைக்கு ட்விட்டரில் கலாய்த்து பதில் வெளியிட்டுள்ளார் உலகப்புகழ் சமையல் நிபுணர் கார்டன் ராம்சே.

வடை

 

இந்தியர் ஒருவர் தன் வீட்டில் செய்த மெதுவடையை சாம்பார் சட்னியுடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்தார். அதோடு இல்லாமல் அந்நபர்  உலகப் புகழ்பெற்ற சமையல் நிபுணர் கார்டன் ராம்சே-விடம் ’எப்படி என் சாம்பார் வடையும் தேங்காய் சட்னியும்? மதிப்பிடுங்கள் ராம்சே!’ எனக் கேட்டு கார்டன் ராம்சே பெயரை இணைத்துவிட்டார். இதற்கு பதில் ட்வீட் செய்த ராம்சே, ‘சிறையிலிருந்து தங்களால் எப்படி ட்வீட் செய்ய முடிகிறது?’ என நக்கலாக பதிலளித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் பிறந்தவரான ராம்சே, தற்போது பிரிட்டனின் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர். தொலைக்காட்சிகள், விழாக்கள் என எப்போதும் பிஸியாக அசத்தி வருபவர். நம் தமிழ்நாட்டுக்கு ஷெஃப் தாமு மாதிரி பிரிட்டனில் ராம்சே. ஆனால் இவருக்கு உலக அளவில் வரவேற்பு பல மடங்கு அதிகம்.

நம்ம ஊர் சாம்பார் சட்னியுடன் கூடிய வடையை கலாய்த்துள்ள ராம்சே இப்படிச் செய்வது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் ரசிகர்கள் பலர் அவரவர் செய்த உணவுகளைப் புகைப்படத்துடன் வெளியிட்டு கருத்து கேட்டால் எல்லாவற்றையும் நக்கலடித்து பதில் வெளியிடுவார். சில சமயங்களில் கடினமான வார்த்தைகள்கூட வந்துள்ளன. 'செய்வதற்கு ஒன்றும் இல்லை' எனப் பலரும் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.

 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

Miss Eco International 2017

சர்­வ­தேச சூழ­லியல் அழ­கு­ராணி போட்டி (Miss Eco International 2017) எகிப்தில் நடை­பெ­று­கி­றது. 63 நாடு­களின் அழ­கு­ரா­ணிகள் இப்­ போட்­டி யில் பங்­கு­பற்­று­கின்­றனர்.

இப்­ போட்­டியின் விசேட திற­மைகள் பிரிவில் பெலாரஸ் அழ­கு­ராணி முத­லிடம் பெற்றார். அவுஸ்­தி­ரே­லிய அழ­கு­ராணி இரண்­டா­மி­டத்­தையும் யுக்ரைன் அழ­கு­ராணி 3 ஆம் இடத்­தையும் பெற்­றனர்.

திற­மை க்கான பிரிவில் பரி­சு­களை வென்­ற­வர்­க­ளையும் போட்­டியில் பங்­கு­பற்றும் அழகுராணிகள் சிலரையும் படங்களில் காணலாம்.

3

1

2

17796561_1857284214534357_1114726809425871467_n

http://metronews.lk/

  • தொடங்கியவர்

டிஸ்னி ஓவியர்களைப் போல் வரைவது எப்படி?
---------------------------------------------------------------
இதோ சில இரகசியங்கள்:

  • தொடங்கியவர்

'2018ல நாங்கதாம்ல!’ - ஒரு சி.எஸ்.கே வெறியனின் டைரிக்குறிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் பெயரைச் கேட்டவுடனேயே சும்மா அதிருதுல்ல... நாடி, நரம்பு, ரத்தம், சதை என எல்லாத்துலேயும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெறி ஏறிப்போன ரசிகர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம். தோனியின் தலைமையில் 2008-ல் இருந்து இந்த சிங்கங்களின் பயணம் தொடங்கியது. சி.எஸ்.கே-வின் சில ஸ்வீட் மெமரிஸ் இதோ! 

சென்னை

* முதல் ஐபிஎல் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் ஆட்டத்தையே சென்னை அணி வெற்றியில்தான் தொடங்கி வைத்தது. பின் விளையாடிய ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாய்ப்பினை தக்கவைத்துக்கொண்டே வந்தது. அந்தச் சமயத்தில் லீவ் விட்ட ஸ்கூல் குழந்தை போல் இன்டர்நேசனல் மேட்சின் காரணத்தால் 'மைக்கெல் ஹசி', 'மேத்யூ ஹெய்டன்', 'ஜேக்கப் ஓரம்' ஆகிய ஸ்டார் ப்ளேயர்கள் பாதியிலேயே போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதையடுத்து தொடர்ந்து மூன்று மேட்சில் தோற்றுப் போனது சென்னை. அதிலிருந்து பதினாறாவது நாள் வந்தாங்க ஃபார்முக்கு. முன்பு தோற்கடித்த அதே 'டெல்லி டேர் டெவில்ஸ்' அணியை 'ஃப்ளெம்மிங்', 'மார்கல்', 'வித்யுத் சிவராமகிருஷ்ணன்' தயவால் 188 ரன்களை சேஸ் செய்து வெற்றியைக் கைப்பற்றினார்கள். பின் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் 'லட்சுமிபதி பாலாஜி'  ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததோடு இல்லாமல் 24 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும் பெற்றார். பின் மடமடவென பாயின்ட்ஸ் டேபிளில் மேலே உயர இறுதியில் ராஜஸ்தான் அணியுடன் ஃபைனல் மேட்சில் சென்னை 163 ரன்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்குக் கௌரவ ஸ்கோரை அடித்தது. பின் பேட்டிங் பிடித்த ராஜஸ்தான் அணி பொறுப்பாக ஆடி ஃபைனல் மேட்சை வென்றது. 2008 கப் சென்னைக்கு ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது. அந்த சீஸனில்தான் ஹெய்டன் மங்கூஸ் பேட்டை ஃபேமஸ் ஆக்கிவிட்டார். 

ஹெய்டன்

* இது 2009 ஐபிஎல். மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை 19 ரன்களில் வெற்றி வாய்ப்பினை தவறவிட்டது. அதன்பின் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் வித்தியாசத்தில் தெறி வெற்றிப் பெற்றது சென்னை. அதற்கு பிறகு விளையாடிய 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது சென்னை அணி. என்னடா இது சூப்பர் கிங்க்ஸுக்கு வந்த சோதனை?னு நெனச்சு மீசையை முறுக்கிவிட்டு களத்தில் துவம்சம் செய்தனர். சுரேஷ் ரெய்னாவின் 98 ரன்கள், ஜகாத்தியின் 4 விக்கெட்டுகள், ஹெய்டனின்  89 ரன்கள், பத்ரிநாத்தின் அசைக்க முடியாத 50 ரன்கள் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற உதவியது. இந்த வெற்றிப் பயணமானது பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் முடிவிற்கு வந்தது. முதல் ஆட்டத்தில் 93 ரன்கள் வென்றதையடுத்து பழி தீர்த்துக்கொண்டது பெங்களூரு அணி. அதன்பின் வெற்றி தோல்வி என மாறி மாறி சந்தித்த சென்னை அணி செமி ஃபைனலுக்குள் நுழைந்தது. முதல் மேட்சில் பெங்களூருவை தோற்கடித்ததையடுத்து செமி ஃபைனலிலும் தாக்கி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது பெங்களூர் அணி. ஹெய்டன் 12 இன்னிங்க்ஸ்களில் 572 ரன்களைப் பெற்று ஆரஞ்ச் தொப்பியைத் தக்கவைத்துக்கொண்டார். 

* 2010 ஐ.பி.எல். டெக்கான் சார்ஜர்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுடன் ஆரம்பித்த சென்னை அணி அடுத்த மேட்சில் சிறப்பாக ஆடி கொல்கத்தாவை அவர்கள் ஹோம் கிரவுண்டிலே துவம்சம் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 'தோனி' 33 பந்துகளுக்கு 66 ரன்களைப் பெற்று சென்னையை வெற்றியடையச் செய்தார். அடுத்ததாக டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 'ஹெய்டன்' அவரது பங்கிற்கு 43 பந்துகளில் 93 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை. அதன்பின் இடம்பெற்ற மேட்ச்களில் ட்ரா, 3 தோல்விகள் எனப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அடுத்தடுத்த இரண்டு ஆட்டங்களிலும் தன் முரட்டுத்தனமான ஆட்டத்தின் மூலம் சென்னை அணியை வெற்றியடையச் செய்தார் முரளி விஜய். முதல் மேட்சில் 78 ரன்களிலும் ரெண்டாவது மேட்சில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 127 ரன்களைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54-வது மேட்ச்தான் மறக்க முடியாத மேட்சாக அமைந்தது. பஞ்சாப்பிற்கான எதிரான ஆட்டத்தில் ஜெயிப்பவர் செமி ஃபைனலுக்கு முன்னேறும் முக்கியமான கட்டம். அதகள ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி, 193 ரன்களை சென்னை அணியின் இலக்காக நிர்ணயித்தது. அதை நோக்கி ஓடத்தொடங்கிய சென்னை அணியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசி ஓவரில் 16 ரன்கள் பெற வேண்டுமென்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. பேட்டிங் சைடில் தோனி இருந்த ஒரே ஆறுதல். பந்தை 'இர்ஃபான் பதான்' வீச அதை பாரபட்சம் பார்க்காமல் பவுண்டரிக்கு விரட்டியடித்தோடு, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து செமி ஃபைனலில் நுழைந்த வெறியில் ஹெல்மெட்டால் அடித்துக்கொண்டது இன்னும் கண் முன் நிற்கின்றது. கூல் கேப்டனை அப்படி யாரும் பார்த்திருக்க முடியாது. சென்னை ரசிகர்களால் மறக்க முடியாத தருணமென்றால் அதுதான். செமியில் டெக்கானை வீழ்த்தி மும்பை அணியை ஃபைனலில் சந்தித்தது சென்னை அணி. ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பின் உச்சத்தையடைய... முடிவில் ஃபைனலை வென்று சாம்பியன்ஸ் பட்டத்தைப் பெற்றது சென்னை அணி. இதில் சிறப்பு என்னவென்றால் அதே வருடத்தின் சாம்பியன்ஸ் லீக்கையும் வென்று ரெண்டு கோப்பையுடன் வலம் வந்தது சென்னை அணி. 

சென்னை

* அதற்கு அடுத்த வருடம்... சென்னை அணிக்கு ஒரு சின்ன கெட்டப் பழக்கம் எல்லா வருடமுமே இருக்கும். அது அந்த வருடமும் தொடர்ந்தது. ஆரம்பத்திலேயே வெற்றி பெற்று ரசிகர்களின் ப்ரஷரைக் குறைக்கும் பழக்கமே கிடையாது. கடைசி நேரத்தில் வேகமாக எக்ஸாம் எழுதும் ஸ்கூல் ஸ்டூடன்ட் மாதிரி முக்கியமான கட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஃபைனலுக்கு நுழையமுடியும் என்ற தருவாயில்தான் வெற்றியை நோக்கி ஓடும் சூப்பர் கிங்ஸ். அதே போல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த சென்னை அணி கடைசி 10 மேட்ச்களில், 8 மேட்ச்களில் வென்று நடுவில் இரண்டு மேட்சில் மட்டும் தோற்று ஃபைனலில் பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது சென்னை அணி. எவ்வளவு வெற்றி? ஒரே கஷ்டமப்பா..!

அதன் பின்னர் மூன்றுமுறை ஃபைனலுக்கும், ஒருமுறை செமி ஃபைனலுக்கும் சென்றது. எவ்வளவு பாஸ் சொல்றது ஒண்ணா? ரெண்டா? இதுவரை சென்னை அணி லீக்கிலேயே வெளியேறினதாக சரித்திரமே இல்லை!

கடைசியா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன்..!

'கிட்ஸ் வில் சப்போர்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு'

'மென் வில் சப்போர்ட் மும்பை இந்தியன்ஸ்'

'லெஜென்ட்ஸ் வில் வெயிட் ஃபார் 2018 ஐ.பி.எல்'

திரும்ப வருவேன்னு சொல்லு!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

க்யூட் இளவரசியாக மின்னி மறைந்த நிலா பெண்ணை மறக்க முடியுமா? #DivyaBharatiMemories

திவ்யா பாரதி

மழை நாள் ஒன்றில், அருகில் இருப்பவரையே பார்க்க முடியாத இருள். வானத்தை இரண்டாக கிழிப்பதுபோல ஒரு மின்னல். அப்போது ஓர் அழகிய உருவம் தெரிகிறது. நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்த உருவம் மனதிற்குள் ஆழ பதிந்துவிடுகிறது. அதுபோல மின்னல் ஒளிப்போல திரையில் ஒளிர்ந்து, மறைந்த போனவர்தான் திவ்யா பாரதி.

'நிலா பெண்ணே' எனும் தமிழ்படம்தான் திவ்யா பாரதி நடித்து வெளிவந்த முதல்படம். கதாநாயகன் ஆனந்த். இசை வித்யாசாகர். பேருந்து வசதியற்ற காட்டுப் பகுதியிலுள்ள ஊருக்கு அஞ்சல் ஊழியராக ஆனந்த் மாற்றலாகி செல்கிறார். அங்கு வாழும் திவ்யாவுடன் காதல் வயப்படுவார். அந்தப் பகுதியின் கடுமையான கட்டுபாட்டுகள் இருவரின் காதலுக்கு தடை விதிக்கிறது. அவற்றை மீறி எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே கதை. வர்த்தக ரீதியில் இந்தப் படம் தோல்வியைக் கண்டது. ஆயினும் புதுமுகம் திவ்யா பாரதியை தமிழ்த் திரை உலகம் கவனிக்க வைத்தது. என்றாலும் திவ்யாவைத் தொடர்ந்து தமிழ்த் திரையில் காணமுடியாத அளவுக்கு பிஸியாக்கியது அவர் நடித்த இரண்டாவது படம். நிலா பெண்ணே வெளியாகி அடுத்த மாதத்தில் தெலுங்கில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக போபிலி ராஜா வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

போபிலி ராஜாவைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியுடன் நடித்த ரவுடி அல்லுடு படமும் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன்பின் திவ்யா பாரதியின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் கால்கடுக்க காத்திருக்கும் சூழலாயிற்று. பாலகிருஷ்ணாவுடன் தர்ம ஷேத்ரம், மோகன் பாபு அசெம்ப்ளி ரவுடி என வெற்றி வேட்டையைத் தொடர்ந்தார். தெலுங்கு திரை உலகில் ஜொலித்த திவ்யாவின் பார்வை பாலிவுட்டை நோக்கி இருந்தது. அதற்கான காரணமும் இருந்தது. அப்போது இந்தி உலகில் கொடிகட்டி பறந்த ஶ்ரீதேவியின் முகச்சாயலோடு திவ்யா இருப்பதால் பலரும் இந்தி திரைப்படங்களில் நடிக்க அணுகினர். ஆனால், பலவித காரணங்களால் அது முடியாமல் போனது. அதனால், தான் புகழ்பெற்ற நடிகையானதும் இந்திக்குச் செல்லும் வாய்ப்புக்காக காத்திருந்தார்.

திவ்யா பாரதி

'விஷ்வாத்மா' படத்தில் சன்னி தியோலுடன் இணைந்து நடித்து இந்தியில் கால் பதித்தார். வசூல் ரீதியில் சுமாராகத்தான் சென்றது. கோவிந்தாவுடன் திவ்யா நடித்த 'ஷோலா அவுர் ஷப்னம்' படம் பெரும் வெற்றிப்பெற்றது. இந்த வெற்றி பாலிவுட்டில் திவ்யாவுக்கு வலுவான அடித்தளத்தை இட்டது. அதன்பின் தொடர்ச்சியாக பல படங்கள். ஷாருக்கானுடன் நடித்த 'தீவானா' வெற்றிப்பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப்பெற்றார். சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெரப் என பாலிவுட்டிலும் மோகன்பாபு, பிரசாந்த் என டோலிவுட்டிலும் இரண்டு குதிரைகளில் வெற்றி இளவரசியாக பவனிவந்தார்.

1992 -93 இடைப்பட்ட ஓர் ஆண்டுக் காலத்திற்குள் 14 இந்தி படங்களை நடித்தவர் எனும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் திவ்யா. அந்தளவுக்கு திவ்யாவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது. அது தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் திவ்யாவைத் தேடி வரச் செய்தது. தனது திறமையால் புகழின் உச்சத்தில் திகழ்ந்தார் திவ்யா. விளம்பர உலகிலும் கொடிகட்டிப் பறந்தார்.

சஜித் என்பவரோடு திவ்யா திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் அவரது சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை. பாலிவுட்டில் ஶ்ரீதேவியின் இடத்தைப் பிடிப்பார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட திவ்யா 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 தேதி மும்பையில் அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து இறந்தார். அது தற்கொலை என்றும் கொலை என்றும் பேசப்பட்ட மர்மம் இன்றுவரை நீடிக்கிறது. திவ்யா நடித்து பாதியில் நின்ற படங்கள் வேறு நடிகைகளை வைத்து முடிக்கப்பட்டன. நடிகை ரம்பா நடித்து ஒரு தெலுங்கு படம் முடிக்கப்பட்டது.

சில ஆண்டுகளே திரையில் ஒளிர்ந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் திவ்யா.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நீங்கள் லெஃப்டா? ரைட்டா?

Daily_News_7690502405167.jpg

நன்றி குங்குமம் முத்தாரம்

வெஜ்ஜா, நான் வெஜ்ஜா, மேரேஜ் ஆச்சா, இல்லையா என்ற கேள்விகளையெல்லாம் கடந்து இடதுகை பழக்கமா, வலதுகை பழக்கமா என்பது  ஒருவரின் வாழ்க்கையையே திருப்பிப்போடக்கூடியவை.

ஒருவர் தன்னியல்பாக குறிப்பிட்ட கையை அதிகம் பயன்படுத்துவதன் காரணம் என்ன? என்று அறிய ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு மூளைதான் முக்கிய காரணம் என்பவர்கள் தற்போது தண்டுவடத்தின் பங்கும் உண்டு என்று கண்டுபிடித்துள்ளது புதுசுதானே!

ஜெர்மனியின் போஹூமிலுள்ள ரூர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கருப்பையில் முதுகுத்தண்டு உருவாகும்போதே அக்குழந்தை பயன்படுத்தப்போவது வலது கையா, இடதுகையா என்பது உறுதியாகிவிடுகிறது என தம் ஆய்வில் கூறுகின்றனர். “நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவின் விளைவாக சமச்சீரற்ற பகுதிகளைக் குறித்து அறிய முடிந்தது” என்கிறார் ஆராய்ச்சிக்குழுவைச்சேர்ந்த ஒருவர்.

1980 இல் செய்த அல்ட்ரா சவுண்ட் சோதனைப்படி, பெண்ணின் கர்ப்பத்தில் 8வது அல்லது 10வது வாரத்தில் குழந்தையின் இயக்கத்தை சரியாக கவனித்தாலே அக்குழந்தை இடதா, வலதா என கூறமுடியும் என்கின்றனர்.13வது வாரத்தில் இடது கையின் (அ) வலது கையின்  கட்டைவிரலை குழந்தை சூப்பத்தொடங்குகிறது. பெருமூளையின் பின் பகுதியிலுள்ள நரம்புத்தூண்டுதல்களின் இயக்கமே இதற்கு காரணம் என்றும், மரபணுக்களின் சமச்சீரற்ற  இயக்கம் ஆகியவற்றின் காரணமாக இவை முன்னமே ஏற்படுகின்றன.

“பெருமூளைப்பகுதி தண்டுவடத்தில் இணையும் முன்னரே குழந்தைகளின் கை இயக்கங்கள் தொடங்கிவிடுகின்றன. தண்டுவடத்தில் ஏற்படும் மரபணுக்களின் சீரற்ற தூண்டுதல் கை அமைப்புகளை தூண்டுவிடுகின்றன” எனக் கூறுகிறது ஆய்வுக்குழுவின் அறிக்கை.

அதோடு தண்டுவடமே இதற்கு அடிப்படையாக இருக்கலாம் என்றரீதியிலும் நடைபெற்ற ஆராய்ச்சியில், கால்களையும் கைகளையும் இயக்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. மரபணுக்களின் மேலுள்ள எபிஜெனடிக்ஸ் மரபணுக்களின் இயக்கத்தை  இயங்கவும் நிறுத்தவும் செய்கிறது.

தண்டுவடத்திலுள்ள மரபணுக்களை கட்டுப்படுத்தும் அமைப்புகள் இதற்கு காரணம்  என்பதோடு, பிற்கால  வாழ்க்கையில் இவை  ஏற்படுத்தும் மாற்றத்தையும்  இந்த ஆய்வுகளின் மூலம் அறியலாம் என நம்பிக்கையோடு பேசுகின்றனர் ஆராய்ச்சிக்குழுவினர்.

http://www.dinakaran.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

36p1.jpg

 ஆர்.கே நகரில் பிரசாரம் செய்ய, ஏமி ஜாக்சனுக்குத் தூண்டில் போட்டிருக்கிறது டி.டி.வி தினகரன் தரப்பு. `நீங்கள் நடித்த `மதராசபட்டினம்' படத்தின் ரியல் மனிதர்கள் இங்குதான் இருக்கிறார்கள். இதுதான் உண்மையான மெட்ராஸ். ஒரு டூர் போற மாதிரி வாங்க. நீங்கள் எதுவும் பேசக்கூட வேண்டாம். தொப்பி போட்டுக்கொண்டு காரில் ரவுண்டு வந்தால் போதும்' என எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும், ` `2.0' படத்தில் பிஸியா இருக்கேன்' எனச் சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார் ஏமி. நல்லா சொல்றாங்கய்யா! டீட்டெய்லு! 


36p2.jpg

விதவிதமான மது வகைகளை உலகம் முழுவதிலிருந்தும் தேடித்தேடி எடுத்துவந்து அருந்திய சாரு நிவேதிதா, கடந்த இரண்டு ஆண்டுகளாக மது அருந்துவதை நிறுத்திவிட்டார். நண்பர்கள் மது அருந்தும்போது மாதுளை ஜூஸ் அருந்திக்கொண்டு உற்சாகமாக உரையாடலில் கலந்துகொள்கிறாராம். லைக்ஸ்... லைக்ஸ்!


36p3.jpg

திரடியாக ஆட்சியைப் பிடித்த ட்ரம்புக்குத் தொட்டதெல்லாம் தொல்லையாக வர, அரண்டுபோயிருக்கிறார். ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு நோ சொல்லிவிட்டு, ட்ரம்ப் கொண்டுவந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை `புதுசா எதுவும் இல்லை. இது ஒபாமா கேர் 2.0-தான்' என, சொந்தக் கட்சியினரே கவிழ்த்துவிட்டனர். முதல் சட்ட மசோதாவே தோல்வியில் முடிந்தது, விசா சட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது என செம அப்செட்டில் இருக்கிறார் டொனால்டு ட்ரம்ப். ட்ரம்ப்புக்கே பம்ப்பா!


36p5.jpg

பொதுக்கூட்ட உரைகளுக்கிடையே சினிமா ஸ்க்ரிப்ட் எழுதுவதிலும் பரபரப்பாக இருக்கிறார் சீமான். ஆர்.கே நகர் தேர்தல் முடிந்ததும் படம் இயக்குகிறார். படத்தின் பெயர் `பகலவன்'. அதிரடி போலீஸாக இதில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இதற்கு அடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஓர் அரசியல் த்ரில்லர் படத்தையும் இயக்கவிருக்கிறார் சீமான். படத்தின் பெயர் `கோபம்'. தெறிக்கவிடுறாய்ங்களே!


36p4.jpg

கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்த விஜய் மகன் சஞ்சய், இப்போது ஃபிட்னஸில் ஆர்வம் காட்டுகிறார். ஜிம்மில் அதிக நேரம் செலவிடும் சஞ்சய், கிட்டத்தட்ட விஜய்யின் உயரம், அவரைப்போலவே ஹேர்ஸ்டைல், சின்னதாக ஃபங்க் என ஸ்கூல் ஹீரோவாகச் சுற்றுகிறார். தற்போது பதினோராம் வகுப்பு படிக்கும் சஞ்சயின் கவனம் முழுக்க படிப்பில்தான் இருக்க வேண்டும் என்பது அப்பாவின் அன்புக்கட்டளை. விஜய் 2.0


36p6.jpg

மீபத்தில் நடந்து முடிந்த இந்தியன் ஓப்பன் பேட்மின்டன் போட்டியில், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சாய்னா நேவாலை நேர் செட்களில் தோற்கடித்திருக்கிறார் சிந்து. `சாய்னா நேவாலைத் தோற்கடிப்பது ஒன்றும் எனக்கு ஸ்பெஷல் அல்ல. நாங்கள் நீண்ட நாள்களாக ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடவில்லை. இதனால், `சிந்து - சாய்னா மோதல்!' என்று பரபரப்பைக் கிளப்பினார்கள். எப்போதும் ஆடும் ஒரு சாதாரணமான ஆட்டமாகத்தான் இதை நான் ஆடினேன். 47 நிமிடங்களில் முடிந்துவிட்டது' என வெற்றிக்குப் பிறகு கூல் பேட்டி தட்டியிருக்கிறார் சிந்து. சிறப்பு!

  • தொடங்கியவர்
சந்தர்ப்பத்தில் சாயும் பொய்மை
 
 

article_1491455729-.jpgமலர்ச் சோலையில் காதல் ஜோடி சேர்ந்து பேசலாயினர்.

அவன் சொன்னான், “நீ இல்லாது போனால் நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்றான். அதற்கு அவள், “நான் மட்டும் ஒரு கணமும் தாமதிக்காமல் உயிர் தரிக்கேன்” என்றாள். சற்று நேரத்தில் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

அடுத்த ஓரிரு நாள்களில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் தமக்குத் திருமணம் வீட்டில் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர்.  

‘சரிசரி இனி என்ன செய்ய’ எனக் கூறி, “பிரிவோம்” என்றனர்.

காதலி மனதுக்குள் சொல்லிக்கொண்டாள், ‘அடபோயும் போயும் பிச்சைக்காரன் உன்னை எனக்கு எதற்கு? எனக்குத்தான் பணக்கார மாப்பிளை கிடைத்துவிட்டானே’ எனப் பெருமைப்பட்டாள். அவனும் தனது மனதுக்குள் ‘அடி போடி, எனக்கு கோடீஸ்வரப் பெண் கிடைத்துவிட்டாளே இனி எனக்கு நீ எதற்கு’ என்றான்.

இருவருமே அழுது முடித்துவிட்டால் போதும் எனச் சந்தோசமாகச் சென்றனர். இதுவும் ஒரு புனிதக் காதல்தான். சந்தர்ப்பத்தில் சாயும் பொய்மையில் சாயம் போன காதல். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சின்ன விஷயங்களைப் பின்பற்றினால் பெரிய மாற்றங்கள்! #MorningMotivation

Morning motivation

நம்மள்ல நிறைய பேருக்கு எப்பவும் லைம்லைட்ல இருக்கணும்ங்கிற ஆசை இருக்கும் தானே? இந்த எண்ணம் ஒரு அலுவலகத்துல நாம வேலை செய்ய ஆரம்பிக்கும் போது இன்னும் அதிகமா இருக்கும். ஈபில் டவர் மேல ஒத்த கால்ல நின்னு செல்ஃபி போட்டாலும், தலை கீழா நின்னு தண்ணி குடிக்குற மாதிரி போட்டோ போட்டாலும் உங்கள கவனிக்காத இந்த உலகம், சில குட்டி குட்டி விஷயங்களையெல்லாம் நீங்க ஃபாலோ பண்ணுறப்போ உங்க பக்கத்துல நின்னு செல்ஃபி எடுத்துக்க ஆசைப்படும் பாஸ். அது என்ன என்னன்னு கொஞ்சம் பார்ப்போமா!? 

ப்ளஸ் - மைனஸ்!

நம்ம பலம் என்னன்னு நமக்கு தானே நல்லாத் தெரியும், முதல்ல எந்த வேலையை செய்ய தொடங்கும் பொழுதும் அதுல நம்ம பலம் என்ன, பலவீனம் என்னன்னு கண்டுபிடிச்சு அதுக்கு தகுந்த போல திட்டமிட்டாலே அந்த வேலை வெற்றியடையறது 100% உறுதியாகிடும். உங்க நண்பர்கள், மனைவி, காதலி, உயரதிகாரின்னு ஒவ்வொருத்தருக்கும் உங்க மேல வேற வேற நம்பிக்கைகள் இருக்கும். நீங்க டென்னிஸ்ல கில்லினு உங்க நண்பருக்கு தெரிஞ்சிருந்தா.., "எங்க வீட்டுக்காரருக்கு எப்பவும் ஆபிஸ் நினைப்புதான். வீட்டை பத்தி யோசிக்கவே மாட்டாருன்னு" உங்க மனைவி சொல்லுவாங்க. இன்னொரு பக்கம் "இந்த பையன் நம்ம ஆபிஸ்ல வேலை செய்யுறானா, இல்ல நம்ம ஆபீஸ் கேன்டீன்ல வேலை செய்யறானா'ங்கிற சந்தேகத்தோட  உங்க டீம் லீடரும் இருக்கலாம் இல்லையா? இப்படி எல்லோருடைய கருத்தையும் தாண்டி, நீங்க எதுல கில்லி; உங்களுக்கு என்ன பிடிக்கும் எதை சிறப்பா செய்வீங்கங்கிற ரகசியம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதை உங்களுக்குள்ளேயே பத்திரமா வைச்சுக்காம அப்பப்போ வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போல உலகத்துக்கு சொல்லிட்டே இருங்க பாஸ். யாரையாச்சும் சந்திச்சு பேசும்போது அவங்க என்ன மனநிலையில இருக்காங்கன்னு தெரிஞ்சா அந்த சந்திப்பு இன்னும் எளிமையான சந்தோஷமான சந்திப்பா இருக்கும் அல்லவா!? அதே போலத்தான் நாம என்ன மனநிலைல இருக்கோம்ங்கிறத தெரிஞ்சுக்குறவங்க அதுக்கு தகுந்த போல பேச ஆராம்பிப்பாங்க. இந்த இடத்துல ரெண்டு பேருக்குமே நீங்க தங்கம்னு நினைக்குற நேரம் மிச்சமாகும், அந்த நேரத்துல இன்னும் நிறைய நிறைய விஷயங்களை பகிர்ந்துக்க முடியுமே!?

challange - Morning motivation

"சவால் விடுறதுல தப்பே இல்லை"

'அண்ணாமலை' படம் பார்த்து இருப்பீங்க தானே!? அந்த படத்தோட ஒரு காட்சியில ரஜினி, சரத்பாபுவை பார்த்து ஒரு சவால் விடுவார். "நீ இதுவரைக்கும் இந்த அண்ணாமலைய நண்பனாத்தான் பார்த்து இருக்க. இனிமே நீ இந்த அண்ணாமலைய விரோதியா பார்க்க போற. இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வைச்சுக்கோன்னு" சொடக்கு போட்டு தொடையில தட்டி சவால் விட்டுட்டு போவார். அந்த காட்சியை பார்க்கும் போதெல்லாம் இப்பவும் நிறைய பேருக்கு சிலிர்த்து போகுறதை பார்க்க முடியும். நல்லா கவனிச்சு பார்த்தா.. ரஜினியோட சக்ஸஸ் ஃபார்முலாவே இதான்னு புரியும். அவரோட பெரும்பாலான படங்கள்ல இப்படி ஒரு சவால் காட்சி கண்டிப்பா இருக்கும்.  ஒரு எளிமையான மனிதன், அவனை விட உயர்ந்த மனிதர்கள்கிட்ட சவால் விடறப்போ  அவன் என்ன செய்யப் போறானோன்னு ஒரு எதிர்பார்ப்பு உருவாகும் இல்லையா? அது போல நம்மால செஞ்சு முடிக்க முடியும்னு நம்பற விஷயங்களை சவால் விட்டு செய்யுறப்போ இன்னும் சுவாரஸ்யமான வேலையா ஆக்க முடியும். அதுக்காக சொடக்கு போட்டு, தொடையை தட்டி ஹை பிட்ச்ல சொல்லணும்னு இல்ல. ரொம்ப சிம்பிளா, அழகா உங்க போட்டியாளர்கள்கிட்ட சவால் விடலாம். அட்லீஸ்ட் அவங்களைக் கடக்கறப்போ... மனசுக்குள்ள! ;-)

Say thank you - Morning Motivation

"நன்றி ரொம்ப எளிமையான வார்த்தைதான்" 

இந்த விஷயத்துக்கு நாம எங்கேயும் உதாரணம் தேட வேண்டியது கிடையாது. இருக்கவே இருக்கு சின்ன வயசுலேருந்து நாம படிச்ச திருக்குறள்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

செய்ந்நன்றி கொன்ற மகற்கு."

இந்த திருக்குறளை நிச்சயமா நாம நிறைய இடத்துல கடந்து வந்திருப்போம். ஆனா, இதுக்கான அர்த்தம் நிறைய பேரு மறந்திருப்போம். விஷயம் ரொம்ப எளிமையானதுதான் "எந்த அறத்தை மறந்தவருக்கும் வாழ்வுண்டு. ஆனால், ஒருவர் நமக்கு செய்த உதவியை மறந்தவருக்கு வாழ்வு கிடையாதுன்னு" இரண்டே வரிகள்ல சொல்லியிருக்கார் திருவள்ளுவர். ஆனா, தினசரி வேக வேகமா ஓடிக்கிட்டே இருக்கற வாழ்க்கையில நமக்கு உதவி செய்யற எத்தனை பேருக்கு அப்படி நாம நன்றி சொல்லுறோம்னு யோசிச்சு பார்த்தா.. அது ரொம்ப ரொம்பக் குறைவா தான் இருக்கும். நமக்கு உதவி செய்யறவங்ககிட்ட முழு மனசோட நன்றின்னு ஒரு வார்த்தை சொல்லி பாருங்களேன். அந்த வார்த்தையோட சக்தியைப் போகப் போக உங்களால உணர முடியும்.

இந்த மூன்று விஷயங்களை பின்பற்றினா வாழ்க்கை வாவ்னு ஆகிடும்னு பெரிசா உங்களை நம்பவைக்கத் தயாரில்லை. ஆனா.. முதல்ல இருக்கறதுக்கு, ஒரு இன்ச் முன்னால இருக்கும்! படிப்படியா பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும்! முயன்று பாருங்கள்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

10 டயர் லாரி ஓட்டும் பெண் செல்வமணியின் ஒரு நாள் எப்படி இருக்கும் தெரியுமா?! #Video

செல்வமணிக்கு சொந்த ஊர் சங்ககிரி. தொழில், 10 டயர் கொண்ட டாரஸ் லாரியின் டிரைவர். 14 வருடங்களாக குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா என நெடும் பயணங்களில் கழிகிறது வாழ்க்கை.  குடும்பத்தின் சிரமத்தைப் போக்க, கணவருக்கு உதவியாக கிளீனராக லாரி ஏறியவர், இப்போது முழுநேர டிரைவர். அதுவும், மாநிலம் விட்டு மாநிலம் போய் சரக்கு ஏற்றி இறக்கும் டிரைவர். 

 

செல்வமணி

 

சங்ககிரியில் பெரும்பாலானோருக்குத் தொழில் லாரி ஓட்டுவது தான். கோவை, திருப்பூர் என தொழில் நகரங்கள் சூழ்ந்திருப்பதால் சரக்கு ஏற்றி இறக்க லாரிகளுக்கு தேவை அதிகம். செல்வமணியின் பிறந்தகமும் புகுந்தகமும் டிரைவர் குடும்பம் தான். 

கடன் தொல்லை ஒரு பக்கம்... கணவர் படும் சிரமத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீவிரம் இன்னொரு பக்கம்... திருமணத்துக்கு முன் சைக்கிள் கூட ஓட்டப்பழகாத செல்வமணி, திருமணத்துக்குப் பிறகு குடும்பச்சூழல் காரணமாக லாரி ஓட்டக் கற்றுக் கொண்டார். வீடியோவின் 44-வது நொடியில் தன் குடும்பச் சூழலையும், தான் பட்ட சிரமங்களையும் பற்றிச் செல்வமணி சொல்லும்போது அத்துயரம் நம்மையும் சூழ்கிறது. 

முதன்முதலில் லாரிக்குக் கிளீனராக., கும்பகோணத்தில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு பயணித்த அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிறார் செல்வமணி. வீடியோவின் 1.47-வது நிமிடத்தில் தன் மனைவியின் திறமையைப் பற்றி செல்வமணியின் கணவர் கோபால் பெருமிதமாக பேசுவது அத்தனை அழகு!  வண்டியில் ஏற்றப்படும் சரக்கை சிறிதும் சேதாரம் இல்லாமல் உரிய  இடத்தில் இறக்க வேண்டும். எந்த சேதாரம் நேர்ந்தாலும் டிரைவர் தான் பொறுப்பு. இழப்பை வாடகையில் குறைத்து விடுவார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் அடர் வனப்பகுதிகளில் இதுபோன்ற சரக்கு லாரிகளை எதிர்பார்த்து கொள்ளைக்கூட்டங்கள் இருப்பதுண்டு. எதற்கும் அஞ்சாத அந்தக் கும்பல் சரக்கு பெரிதாக இருக்கும்பட்சத்தில் ஆளையே காலி செய்து லாரியை அபேஸ் செய்து விடுவதும் உண்டு. அப்படியான கொள்ளைக்கூட்டத்தை எதிர்கொண்ட அனுபவமும் செல்வமணி தம்பதிக்கு உண்டு. 

"எனக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேரையும் நல்லாப் படிக்க வச்சுட்டேன். மூத்தவன் எம்பிஏ முடிச்சுட்டு பெங்களூர்ல வேலைக்கு சேந்திருக்கான். சின்னவனும் ஐ.டி ஐ முடிச்சுட்டு வேலை பாக்குறான்.  8 லட்சத்துல ஒரு வீடு கட்டிட்டோம். இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. ரெண்டு வருஷத்துல அதையும் அடைச்சுட்டு நிம்மதியா வீட்டுல உக்காரலாம்ன்னு நினைக்கிறேன்..." என்று செல்வமணி  சொல்லும்போது நமக்குள்ளும் உற்சாகம் துளிர்க்கிறது.  

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 1 Person, Hut und Text
 

நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள் - சிறப்பு பகிர்வு #JackieChan

ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து திரை விருந்து, ஜாக்கிசான் படங்களில் எப்பொழுதும் நமக்குண்டு. அவரின் பிறந்தநாளான இன்று அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள்...

துவக்கத்தால் துவளாதே :

பிறக்கும் பொழுது ஐந்து கிலோ எடையோடு இருந்தார் அவர். மருத்துவர் ஏழையான இவரின் பெற்றோரால் வளர்க்க முடியாது என்று தத்து கேட்டார். கொடுக்க முடியாது என்று கம்பீரமாக இவரை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். வேலைக்காக ஆஸ்திரேலியா நோக்கி அவர்கள் நகர்ந்த பின்பு ஹாங்காங்கில் கூலி வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டிய கட்டாயம் ஜாக்கிக்கு உண்டானது. இன்றைக்கு ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர்!

செய்வதில் சிறந்திடு :

மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம் போதாமல் போனதால் அம்மா,அப்பாவுடன் சேர்ந்திருக்க ஆஸ்திரேலியா கிளம்பினார். போர்க்கலைகள் கற்றிருந்தபடியால் அங்கே ஸ்டன்ட்மாஸ்டராகவே வேலை கிடைத்தது. நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார். ஆனாலும்,செய்கிற ஸ்டன்ட்களில் உயிரைக்கொடுத்து செயல்பட்டார். வில்லி சான் என்பவரின் கவனம் திரும்பியது. நாயகனாக நடிக்கும் ' 'fist of fury' படத்தின் வாய்ப்பு ஒரே ஒரு டெலிகிராம் மூலம் வந்து சேர்ந்தது.

சுயத்தை நம்பு :

ஹாங்காங்கில் சில படங்களில் நடித்தாலும் அவை பெரிதாக ஓடவில்லை. யோசித்து பார்க்கையில் தன்னுடைய திறமையை முழுமையாக இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அவருக்கு புரிந்தது. ஆக்ஷன் என்றால் முகத்தை சீரியஸ் ஆகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உடைத்து அதில் நகைச்சுவையை புகுத்தினார். தன்னுடைய ஐடியாக்களை படத்தில் இணைத்து நடிக்க பாக்ஸ் ஆபிஸ் ஹிட்கள் குவிந்தன.

உண்மையை சொல் ! உயர்ந்து நில் :

ஆரம்ப காலத்தில் போர்னோ படத்தில் ஜாக்கி நடித்தார் என்று கிசுகிசுக்கப்பட்ட பொழுது ,"ஆமாம் ! வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்த பொழுது அப்படி படத்தில் நடிக்கவே செய்தேன். அதில் எனக்கு வருத்தமொன்றும் இல்லை." என்று சொன்னார் ஜாக்கி. அவரின் ஆங்கிலம் சகிக்கலை என்று விமர்சகர்கள் எழுதிய பொழுது ,"அதுவும் சரியே ! ஸ்டன்ட் செய்வதை விட ஆங்கிலம் பேசுவது கடினமான ஒன்றே !" என்று ஒப்புதல் தந்தார் ஜாக்கி !

பிடிக்காவிட்டாலும் காத்திரு :

ரஷ் ஹவர் எனும் அமெரிக்க படத்தில் நடித்தார் ஜாக்கி சான். அமெரிக்காவின் கதை சொல்லும் பாணி,அவர்களின் நகைச்சுவை எதுவுமே பிடிக்காமலே அப்படத்தில் நடித்திருந்தார். அடுத்த படம் அதே சீரீசில் வந்த பொழுது நல்ல சம்பளம் என்று நடிக்க ஒப்புக்கொண்டார். "எனக்கு பிடிக்கவில்லை தான் ; அதற்காக வருகிற வாய்ப்பை கைவிட நான் முட்டாள் இல்லை !" என்று பிற்காலத்தில் சொன்னார் அவர்.

உடைவது உன்னதம் பெறவே ! :

இடுப்பு எலும்பு உடைந்து இருக்கிறது,முகமே சின்னாபின்னம் ஆகியிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் கையெடுத்து கும்பிட்டு அனுப்புகிற அளவுக்கு எல்லா பாகமும் காலி ஆகி இருக்கிறது ஜாக்கி சானுக்கு. ஒரு முறை மண்டையோட்டில் அடிபட்டு எட்டு மணிநேர போராட்டமே அவரை மீட்டது. அந்த ஓட்டையை செயற்கை பூச்சின் மூலம் அடைத்துக்கொண்டு நடிக்க அவர் மீண்டும் வந்த பொழுது பலருக்கு நெஞ்சடைத்தது.

வழிகளைத் தேடாதே ! உருவாக்கு :

போலீஸ் ஸ்டோரி படத்தில் இவருடன் நடிக்க வந்த ஸ்டன்ட் ஆட்கள் அநியாயத்துக்கு அடிபட்டு நடிக்கவே மறுத்தார்கள். வேறு வழியே இல்லை என்று எல்லாரும் கை விரித்த பொழுது தானே ஸ்டன்ட் பயிற்சி பள்ளி ஆரம்பித்து ஆட்களை உருவாக்கினர் ஜாக்கி. அவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முழு மருத்துவ செலவை அவரே ஏற்றுகொள்ள படம் அதிவேகத்தில் உருவானது.

வெல்லும் வரை விடாதே :

டிராகன் லார்ட் படத்தில் ஜியான்ஜி கேம் பற்றிய ஒரு காட்சியில் ஜாக்கி எதிர்பார்த்தது போல காட்சி அமையவே இல்லை. எத்தனை டேக்குகள் எடுத்து அந்த காட்சியை ஓகே செய்தார் அவர் தெரியுமா ? மூச்சைப்பிடித்து கொள்ளுங்கள் : 2900 !

சொந்த காலில் நில் மகனே ! :

தன்னுடைய பல நூறு கோடி சொத்துக்கு தன் மகன் வாரிசில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் ஜாக்கி. " அவன் சம்பாதித்து வாழட்டும். நான் ஈட்டியவை அறக்காரியங்களுக்கு பயன்படட்டும் !" என்று சொல்கிற ஜாக்கி முழுச்சொத்தையும் அந்த மாதிரி பணிகளுக்கே எழுதி வைக்க போவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய பிள்ளையை இளமைக்காலத்தில் ராணுவத்துக்கு அனுப்பி பண்பட வைத்தார் !

பாணியை மாற்று ! :

பல வருட காலமாக ஆக்ஷனில் கலக்கிக்கொண்டு இருந்த ஜாக்கி அப்படிப்பட்ட படங்களில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். "எனக்கு இப்படிப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்க முடியாது ! வயதாகி விட்டது. நான் வெறும் ஆக்சன் ஸ்டார் மட்டுமில்லை ; நான் ஒரு உண்மையான நடிகன் என்று நிரூபிக்க விரும்புகிறேன். என் மீது இருக்கும் இமேஜை உடைக்கவே ஆசை. ஆசியாவின் ராபர்ட் டி நிரோ என்று பெயர் எடுக்க ஆசை எனக்கு ! என்னால் நடிக்கவும் முடியும். அதை சீக்கிரமே காண்பீர்கள் !" என்றிருக்கிறார் அவர். அது தான் ஜாக்கி சான் !

  • தொடங்கியவர்

மனம்விட்டுப் பேசலாம்... மனஅழுத்தம் குறைக்கலாம்! - உலக சுகாதார தினப் பகிர்வு #WorldHealthDay

ண்டுதோறும் ஏப்ரல் 7, `உலக சுகாதார தின’மாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் உடல்நலம் சார்ந்த முக்கியமான ஒரு கருப்பொருளை மையப்படுத்தி, அதைப் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில்  இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக, ‘மனஅழுத்தம் பற்றிப் பேசுவோம்’ (Depression, Let's Talk) அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி, `உலக அளவில்  மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 30 கோடிப் பேருக்கும் மேல். 2000 மற்றும் 2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களைவிட இது பதினெட்டு சதவிகிதம் அதிகம். 

மனஅழுத்தம்

மனஅழுத்தம், குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை யாரையும் விட்டுவைப்பதில்லை. ஐந்து பேரில் ஒருவர்  மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். முழுக்க முழுக்கப் பொருளியல் சார்ந்து மாறிவரும் சமூகச் சூழலில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு குழந்தையின் நிலையை எண்ணிப்பாருங்கள். எவ்வளவு கொடுமையானது அது? ’நாளைக்கு எக்ஸாம் இருக்கு, விளையாடிக்கிட்டு இருக்காம படிக்கிற வழியைப் பாரு’ என்று பதற்றத்தோடு மிரட்டும் அம்மாக்கள். இவர்களின் குழந்தைகள் ப்ளஸ் டூ படிப்பவர்களாக இருந்தால்கூடப் பரவாயில்லை; ஆனால், இந்த அறிவுரையோ பிரீகேஜியில் ரைம்ஸ் சொல்லும் தேர்வுக்குத்தான் சொல்லப்படுகிறது. 

குழந்தையின் மனஅழுத்தம்

பொருள் தேடும் ஓட்டம் தொடர்பான பயிற்சி, குழந்தைகளுக்கு பிரீகேஜியிலேயே தொடங்கிவிடுகிறது. தேர்ச்சி அட்டவணையில் எல்லா முறையும் ஃபர்ஸ்ட் ரேங்க் இருந்தால்தான் பெற்றோர் முகத்தில் பூரிப்பு எட்டிப்பார்க்கிறது. `நீ என்னவாகப் போறே?’ என்ற கேள்வி குழந்தை பேச ஆரம்பித்த சில நாட்களிலேயே கேட்கப்படுகிறது. ஒரு மனிதனாகவே அது அப்போதுதான் ஆகி வந்திருக்கிறது, அதற்குள் அது என்னவாக முடியும்?  சில ப்ளே ஸ்கூல்களில் குழந்தைகளுக்கு அவர்களின் பண்புகள் சார்ந்து, `இந்தக் குழந்தை அன்பானவன்’, `இந்தக் குழந்தை கருணைமிக்கவன்’... என்றெல்லாம் சான்றிதழ்கள் தரப்படுவதாக ஒரு நண்பர் சொன்னார். மூன்று வயதில் எல்லாக் குழந்தையும் பிறர் மேல் அன்புடனும் கருணையுடனும்தானே இருக்க முடியும்? `இது வக்கிரம் மிகுந்த குழந்தை’ என்று எந்தக் குழந்தைக்காவது சான்றிதழ் தர முடியுமா? ஒரு குழந்தை அன்பானவன் என்பதை ஈக்யூ (EQ) தேர்வு வைத்து கண்டிபிடித்த நேரத்தில், அதனுடன் கொஞ்சம் அன்பாகப் பேசியிருந்தால், உளச்சிக்கலில் இருந்து அந்தக் குழந்தையைத் தேற்றி இருக்கலாம். 

உளச்சிக்கல்

டாக்டர், இன்ஜினீயர் என ஏதாவது ஒன்றாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு, பாடப் புத்தகங்களைக் கரைத்துக் குடிக்கும் குழந்தை மெதுவாக இளமைக்குள் குதித்து இறங்குகிறது. எதிர்ப் பாலினம் பற்றிய ஆசைகள் மனதில் முளைக்கின்றன. உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அறிதலுக்கான ஆர்வம் அதிகரிக்கிறது. ஆனால், கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்களைத் தேர்வுத்தாளில் பிரதியெடுக்க வேண்டியிருக்கிறது. ஆணும் பெண்ணும் பேசவே முடியாதபடி பிரித்துவைக்கப்படுகிறார்கள். அணைகளை உடைத்து முன்னேறும் இளமைப் பருவம் சரியான நபர்களிடம் இருந்து வாழ்வியல் ஆலோசனைகள் கிடைக்காததால், இணையத்தின் மூலைமுடுக்குகளில் அதைத் தேடிப் பார்த்து தப்பு தப்பாக தகவல்களைப் பொறுக்கி எடுக்கிறது. ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் சரிவரப் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இல்லாமல், வெறும் உடல் ஆசைகளால் உந்தப்பட்டு அதன் முடிவில் காதல் தோல்வியாக அது கற்பனை செய்துகொள்ளப்படுகிறது. இது, உளச்சிக்கலாக மாறுகிறது. 

ஆனால், சிலருக்கு இந்த வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. பேசாமலேயே பிரித்து வைத்ததால், அவர்கள் எப்போதும் எதிர்ப் பாலினத்தை ஒருவித நடுக்கத்தோடு எதிர்கொள்கிறார்கள். `எதிர்ப் பாலினத்தோடு பேசாதே, பேசாதே’ என்று தினமும் கட்டளையிட்டுவிட்டு, இன்டர்வியூவில் எதிர்ப் பாலின மனிதவள அதிகாரியுடன் பேச முடியாமல் திக்கித் திணறும்போது ’உனக்கு கம்யூனிக்கேஷனே வராதுடா’ என மனச்சிக்கலை ஏற்படுத்துகிறது சமூகம். 

வேலையில் மனஅழுத்தம்

காலகட்டத்துக்கு ஒத்துவராத கல்விமுறையால், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் போய்விடுவதால் மனஅழுத்தம் இன்னும் அதிகமாகிறது. வேலை கிடைத்தாலும், மனஅழுத்தம் குறைவதில்லை. முற்றிலும் வணிகமயமான சூழலால், மேம்படாத முதலாளித்துவ நடைமுறைகளால் மனஅழுத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிறது. எதிர்பாலினப் புரிதல் இல்லாமல் திருமணம் செய்துகொள்வதால் மண உறவில் மனக்கசப்பு மேலோங்கி, விவாகரத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. இதனால் மனஅழுத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிறது. பெண்ணுக்கு முதல் குழந்தை பிறக்கும்போது, குழந்தை வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாது. அதனால், குழந்தையை எப்படி வளர்ப்பது என்று எண்ணி மனஅழுத்தம் ஏற்படும். இந்த ஓட்டத்துக்கு இடையில் பெற்றோரை கவனிக்க நமக்கு நேரம் ஏது? சிறு வயதில் அவர்கள் நம்மை கவனிப்பதில்லை; பெரியவர்களானதும் நாம் அவர்களை கவனிப்பதில்லை. கவனிப்பதற்கு ஆள் இல்லாத வயதான பெற்றோருக்கு தனிமையால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதே தனிமையைத்தான் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் அவர்கள் கொடுத்தார்கள் என்பது இங்கே ஒப்புநோக்கத்தக்கது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நம் வேகமான வாழ்வியல் ஓட்டமும், தவறான வாழ்க்கைமுறையுமே மனஅழுத்தத்துக்கான மிக முக்கியக் காரணம். நாம் யாருக்குமே நேரம் ஒதுக்குவதில்லை. 

கடந்த வாரம் உங்கள் குழந்தையோடு எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்? 

கல்லூரியில் படிக்கும் உங்கள் பையனின் பெண் தோழி பற்றி ஒரு முறையாவது அவனிடம் கேட்டிருக்கிறீர்களா?

அலுவலகத்தில் சோகமாக இருக்கும் ஒருவரிடம் ‘என்னாச்சு சார்?‘ என்று அக்கறையாகக் கேட்டதுண்டா? 

கண்ணே தெரியலடா, கண்ணாடி மாத்தணும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ காது கொடுத்தீர்களா?... 

உச்சகட்ட மனஅழுத்தம்

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரிடம் மனம்விட்டு பேசுவதே அதை விரட்டுவதற்கான வழி. யாராவது ஒருவர் உங்கள் தோள்மீது சாய்ந்து கொஞ்ச நேரம் அழ விரும்பலாம்; உங்களிடம் போனில் பேசினால், மனஆறுதல் கிடைக்கும் என நம்புபவர்கள் இருக்கலாம். அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும். மனஅழுத்ததால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கண்டிப்பாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். தியானப் பயிற்சிகளைச் செய்யலாம். இது சாதாரணப் பிரச்னையல்ல. தற்கொலை வரை கொண்டுசெல்லும் ஆற்றல் உடையது. `மனஅழுத்தம் பற்றி மனம் விட்டுப் பேசுவேன்’ என்பதே  இந்த நல்ல நாளில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமோழி. ஏனென்றால், இந்த 30 கோடிப் பேர் பட்டியலில் இருப்பது வேறு யாருமல்ல... நீங்களும் நானும்தான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இரண்டு தலைகளும் ஆறு கால்களுமுடைய அபூர்வ ஆமை..! (காணொளி இணைப்பு)

 

 

இரண்டு தலைகளும் ஆறு கால்களுமுடைய அபூர்வ ஆமை ஒன்று சீனாவிலுள்ள செல்ல பிராணிகள் விற்பனை நிலையத்திலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

vira_aamai.jpg

வட சீனாவின் சாங்க்சி மாகாணத்திலுள்ள செல்ல பிராணிகள் விற்பனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த ஆமையானது, ஆறுகால்கள் மற்றும் இரண்டு தலைகளுடன் இருந்தாலும் சாதாரண ஆமைகளைப் போல் உணவுகளை உட்கொள்வதோடு, இயல்பான இயக்கத்தை வெளிப்படுத்துவதாக சாங்க்சி மருத்துவம் மற்றும் வாழ்வியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3EF75DEE00000578-4382832-image-a-1_14914

3EF75DD800000578-4382832-image-a-3_14914

மேலும் குறித்த ஆமைக்கு, இரண்டிலிருந்து மூன்று மாதங்களே ஆகுமெனவும், மரபியல்  ஏற்பட்ட மாற்றங்களே அதன் உடற்கூறு பரிணமிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.virakesari.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 07
 
 

article_1460005769-WHO-Logo.jpg1927: முதலாவது தொலைதூர தொலைக்காட்சி ஒளிபரப்பு வாஷிங்டன் டி.சி நகரிலிருந்து நியூயோர்க் நகருக்கு மேற்கொள்ளப்பட்டது.

1939:அல்பேனியா மீது இத்தாலி படையெடுத்தது.

1943: உக்ரேனின் டேராபோவ்லியா நகரில் 1100 யூதர்கள் உள்ளாடைகள் வரை ஆடைகள் களையப்பட்டு அருகிலுள்ள கிராமொன்றுக்கு பேரணியாக கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1946: பிரான்ஸிடமிரந்து சிரியா சுதந்திரம் பெற்றது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

1948: உலக சுகாதார ஸ்தாபனம் ஐ.நா.வினால் அமைக்கப்பட்டது.

1978: நியூத்திரன் குண்டு தயாரிப்புத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஒத்திவைத்தார்.

1983: ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

1989: கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

1992: ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.

1994: ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.

2001: மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.

2003: அமெரிக்கப் படைகள், பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

2007: தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16பேர் கொல்லப்பட்டனர்.

2015: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட ஔி, ஒலிபரப்பாளரும் நடிகையுமான கமலினி செல்வராஜன் இன்று காலை காலமானார்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person, lächelnd, Brille, im Freien und Nahaufnahme
 

ஏப்ரல் 7: நகைச்சுவை நடிகை கோவை சரளா பிறந்தநாள்!

`தம்பி ராகவாஆஆஆஆஆஆ’ என்ற சரளாவின் அலறலுக்கு நண்டுசிண்டுகள் மத்தியில் ரணகள லைக்ஸ் பெற்ற நடிகை கோவை சரளா, தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகை, முக்கியத் துணைக் கதாபாத்திரங்கள், நகைச்சுவை நடிகை என 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Bild könnte enthalten: 6 Personen, Personen, die lachen, Personen, die stehen und Text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.