Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

“கான்ஸ்டபிள் எலியட் ரிப்போர்டிங் சார்..!” - நியூசிலாந்தைக் கலக்கும் பன்றிக்குட்டி

பன்றிகள் ஏற்படுத்தும் சத்தத்தை நினைவில் கொள்ளுங்கள். இப்போது அதே நினைப்போடு இதைப் படியுங்கள்...

“பன்றிகளோட அதிகபட்ச வேகம் என்னன்னு தெரியுமா? ஒரு மணி நேரத்திற்கு, 9கிமீ. ஆனால், நான் அவ்ளோ வேகத்துல ஓடமாட்டேன். எனக்கு பத்திரமா போகணும். அதனால, மெதுவாகத் தான் போவேன். எப்பவுமே மெதுவாகப் போறது தான் பாதுகாப்பு. இதை நல்லா ஞாபகத்துல வச்சுக்கங்க. குழந்தைகளும் என்னை மாதிரி ரொம்ப குட்டியா தான் இருப்பாங்க. திடீர்னு ஓடுவாங்க, நிப்பாங்க, நடப்பாங்க. அவங்களுக்கு ஆபத்தெல்லாம் தெரியாது. அதனால, பள்ளிக்கூடம் பக்கம்லாம் போகும் போது, ரொம்ப கவனத்தோடு வண்டி ஓட்டுங்க..." -

இப்படிக்கு, கான்ஸ்டபிள் எலியட் .

நியூசிலாந்து காவல்துறையில் பன்றிக்குட்டி

இப்படி ஒரு ஃபேஸ்புக் போஸ்டுக்கு , சில மணி நேரங்களிலேயே பத்தாயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிகின்றன. "ஓகே மிஸ்டர் எலியட்...", "கண்டிப்பாக எலியட்...", " எலியட் வீ லவ் யூ... நீங்கள் சொல்வதை நிச்சயம் கேட்போம்", " எலியட் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..." என்று ஏக கமெண்டுகள் நிறைகின்றன. இந்தப் பதிவுடன் இருக்கும் போட்டோவில் சாலையோரத்தில், போலீஸ் யூனிஃபார்ம், தொப்பி சகிதமாக அட்டகாசமாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கான்ஸ்டபிள் எலியட். கினியன் பன்றி. ( Guinea pig ) 
நியூசிலாந்த் காவல்துறையின் "மகேந்திர பாகுபலி" இந்த எலியட். அப்பா சொல்லி, அம்மா சொல்லி, அண்ணன் சொல்லி, தம்பி சொல்லி, நண்பன் சொல்லி, போலீஸ் சொல்லி கேட்காத நியூசிலாந்து சேட்டைக்காரர்கள் பலரும், எலியட்டின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்கள் . அதே போல், எலியட் சதாசர்வகாலமும் அறிவுரைகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருப்பதில்லை. பணி நேரம் முடிந்ததும், புல் மேய்வது, ஹாயாக படுத்துக் கொண்டிருப்பது போன்ற ஃபோட்டோக்களையும் ஷேர் செய்கிறது. நியூசிலாந்து பெண்கள் இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குளைக் குவித்து தள்ளுகிறார்கள். 

நியூசிலாந்து காவல்துறையில் பன்றிக்குட்டி - எலியட்

எலியட்டுக்கு இப்போது நான்கு வயதாகிறது. எலியட் இருக்கும் குடும்பத்தில் ஒருவர் நியூசிலாந்த்  காவல்துறையின் மீடியா பிரிவில் வேலைசெய்கிறார். வருடாவருடம் நியூசிலாந்தில் முயல்களை வேட்டையாடும் " பன்னி ஈஸ்டர் " ( Bunny Easter ) எனும் திருவிழா கொண்டாடப்படும். இந்த வருடம் நடந்த பன்னி ஈஸ்டரின் போது, பலரும் காவல்துறைக்கு போன் செய்து, முயல்கள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர். இளைய தலைமுறையினர் மத்தியில் மிருகங்களுக்கான மதிப்பு பெருமளவு இருப்பதை நியூசிலாந்து காவல்துறை உணர்ந்தது. சரி அவர்களுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு தான் எலியட்டை கான்ஸ்டபிளாக பணியமர்த்தினர். 

மக்களுடன் நட்பாகப் பழகும் காவல்துறை - கான்ஸ்டபிள் பன்றிக்குட்டி

அளவான வேகத்தில் வண்டிகளை ஓட்ட வேண்டும் என்பதில் தொடங்கி, குழந்தைகள் பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும், திருட்டிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி, திருடுவது எத்தனைப் பெரிய பாவச் செயல் என்பதில் தொடங்கி, சக நண்பனைப் போல் வார இறுதிகளைக் கொண்டாடிய போட்டோக்களைப் போடுவது, அவ்வப் போது ஜாலியான ஸ்டேட்டஸ்களைத் தட்டுவது என நியூசிலாந்து மக்களின் மனங்களில் தனக்கென தனியிடத்தைப் பிடித்திருக்கிறான் எலியட். 

நியூசிலாந்து காவல்துறையில் பன்றிக்குட்டி - எலியட்

எலியட்டை போலீஸ் கான்ஸ்டபிள் ஆக்கியதிலிருந்து உண்மையிலேயே வேகமாக வண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறது. எலியட் சொல்வதற்கு இளைஞர்கள் மதிப்பளிக்கிறார்கள் என்கிறார்கள், நியூசிலாந்து காவல்துறையினர். அதுமட்டுமில்லாமல், தாங்கள் விளையாடும் ரக்பி மேட்ச்சுகளின் வெற்றிகளைப் பகிர்ந்துக் கொள்வது, தங்கள் மோப்ப நாய்களின் சாகசங்களைப் பகிர்ந்துக் கொள்வது, சில கலக்கலான மீம்களைப் பகிர்வது, சமயங்களில் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளைப் பகிர்வது என பொது மக்களோடு இணக்கமாகவும், நட்பாகவும் இருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நியூசிலாந்து காவல்துறையினர். மக்களும் காவல்துறையினர் உண்மையிலேயே தங்களின் நண்பனாகப் பார்க்கிறார்கள். 

நியூசிலாந்து காவல்துறையில் பன்றிக்குட்டி - எலியட்

அப்படியே, உங்கள் வீட்டருகிலிருக்கும் போலீசைப் பாருங்கள். அசிங்கமான கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டு, ஏமாந்தவர்களிடம் சில நூறுகளை வாங்கி  மடித்து வைத்துக் கொண்டு, கட்டற்ற டிராபிக் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடியே செல்போனில் பேசிக் கொண்டு என கிட்டவே நெருங்க முடியாத அளவிற்கு பயமுறுத்திக் கொண்டு நிற்பார்கள். அதே சமயம், அவர்கள் நிற்கும் கூண்டிலோ, அவர்களின் வாகனத்திலோ நிச்சயம் இது எழுதப்பட்டிருக்கும்...

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வலைபாயுதே

 
 

சைபர் ஸ்பைடர்

 

www.facebook.com/RedManoRed:  வாட்டர் கேன் தூக்கிட்டு மூணாவது மாடிக்கு ஏறப்போறேன். ஜெய் #பாகுபலி

www.facebook.com/boopath23: கடைசியா பண்ணிக்கலாம்னு ஒதுக்கி வச்ச விஷயத்தாலதான் முதல் அடி விழும்!

twitter.com/jeytwits: பெற்றவர்களின் பேச்சைக் `கேட்காமல்' போவதில் ஆரம்பிக்கிறது இளமை.பிள்ளைகளின் பேச்சைக் `கேட்டும் கேட்காதது'போல் போவதில் ஆரம்பிக்கிறது முதுமை!

twitter.com/dhrogi: இவர்களுக்கென்ன உடைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்... சிதறல்களை நாம்தானே சேர்க்க வேண்டி இருக்கிறது.

p114a.jpg

facebook.com/rajhkumar.ranjan: உங்கள் நேரம் போவதற்கு மட்டும் எங்களை நினைக்காதீர்கள்

witter.com/aroobii_: உங்களின் தேவை தீர்ந்துபோன இடங்களில் நீங்கள் ஏற்கெனவே தொலைந்துவிட்டீர்கள்.

facebook.com/srideviramya.a: எத்தனை நூற்றாண்டு ஆனாலும், இந்தக் கேள்விக்கு இந்தப் பதில் மட்டும் மாறாதுபோல.

`ஏன் லேட்டு?'

`லேட்டாயிடுச்சு!'

twitter.com/aroobii_: வெகு அதீதமாகப் புகழ்ந்து விடுகிறீர்கள். பிறகெப்போதும் சிறு குறை சொல்லக்கூட உங்களுக்கே வழியில்லாதபடி.

twitter.com/Aiyswarya: பக்கத்துல ஒரு அக்கா பேசிட்டு இருந்தாங்க சரியா கேட்கல சத்தமா பேசுங்கனு சொல்றதுக்குப் பதிலா சவுண்ட் வையுங்கனுட்டேன்..திக்குனு பார்க்கறாங்க

twitter.com/expertsathya: அடுத்த தலைமுறைக்கு, நாம் பணத்தை மட்டுமே வைத்துவிட்டு செல்ல போராடுகிறோம்.

p114b.jpg

facebook.com/perumal.karunakaran.1: ப்ரியம் என்பது... உன்னை நினைத்துக்கொண்டே அடுத்தவர்களிடம் கவனம் இல்லாமல் பேசிக் கொண்டிருப்பது.

twitter.com/ikfizi: எல்லா மாற்றங்களும், ஏதாவதொரு ஏமாற்றத்திலிருந்தே தொடங்குகின்றன.

twitter.com/Rajendran Raina: தன் நாட்டை காப்பாத்த எதிரி நாட்டுக்கூட சண்டை போட்டால் அது #பாகுபலி 1.

தன் நாட்டை காப்பாத்த தன்  குடும்பத்துகூட சண்டை போட்டால் அது #பாகுபலி 2.

twitter.com/aroobii:  வேறுவழியின்றி பொறுத்துக் கொள்வதை, பொறுமையாக இருப்பதாக எண்ணி குழப்பிக் கொள்கிறீர்கள்.

twitter.com/laksh_kgm: வெளிச்சம், வேறுபடுத்துகிறது. இருள், எல்லாம் ஒன்று என்கிறது!

facebook.com/Umanath Selvan

ஏதோ கொஞ்சம் வளர்ந்துட்டேன். அதுக்காக எனக்கு போலியோ ட்ராப் போடமாட்டேன்னு சொல்லி சிரிப்பதெல்லாம் வன்முறையில் சேராதா?

p114d.jpg

twitter.com/CreativeTwitz

பொழுது போகவில்லையா? வாழ்க்கையில் முன்னேறுவது எப்படினு சொந்தகாரங்களுக்கு போன் பண்ணி கேட்டு பாருங்கள். நல்லாவே பொழுது போகும்...) #verified


#ட்ரெண்டிங்

p114c.jpg

Trump 100 daysதான் சென்ற வாரத்தின் வைரல் வெடி. நூறு நாள்கள் ஆட்சியை முடித்திருக்கிறார் ட்ரம்ப். இந்த நூறு நாள்களில் அவர் செய்த காமெடிகளும் அதிரடியான அறிவிப்புகளும் அலறவைக்கும் தடைகளும் என எல்லாமே இணையத்தில் மீம்ஸ்களாக, ஸ்டேடஸ்களாக மாறின. அமெரிக்க சரித்திரத்திலேயே முதல் நூறுநாள்களிலேயே மிக அதிக சட்டங்களுக்கு (29 சட்டங்கள்) ஒப்புதல் கொடுத்த ஆள் என்கிற சாதனையையும் ட்ரம்ப் நிகழ்த்தி இருக்கிறார். கூடவே அதிக எதிர்ப்பு போராட்டங்களை சந்தித்த முதல் அதிபர் என்கிற சாதனையும்தான்... சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட ட்ரம்ப்க்கு இந்த நூறுநாள்களில் அங்கும் சரிவுதானாம். அவருக்கு வருகிற லைக்ஸ் மற்றும் ஆர்டி எண்ணிக்கையும் இந்த நூறுநாள்களில் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது!


p114e.jpg

கருத்தா பேசுவாரு

காரமடைக்காரர் இந்த @savidhasasi. உண்மையானப் பெயர் சசித்ரா தாமோதரன். மகப்பேறு மருத்துவர். எளிய தமிழில் அரிய மருத்துவ விஷயங்களை அடிக்கடி பகிர்ந்துகொள்ளும் நல் உள்ளம். அது போலியோ தினமாகட்டும், பேலியோ தினமாகட்டும் அன்றைய தினம் இவரது ட்விட்கள் தொடர்ந்து அவற்றின் நன்மை தீமைகளை மருத்துவரீதியாக விளக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். மருத்துவத்துக்கு இணையாக புத்தக வாசிப்பை நேசிப்பவர். நண்பர்களின் நேசத்துக்கும் அவ்வப்போது நேரம் கொடுக்கிறார் என்பது எழுத்துகளில் தெரியும்.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: சொரசொரப்பான பொருட்கள் வழுக்குமா?

 

 
kaaranam_3160304f.jpg
 
 
 

சொரசொரப் பான பொருட் கள் வழுக்குமா? நிச்சயமாக வழுக்காது! வழுவழுப்பான பொருட்கள் தானே வழுக்கும்? சொரசொரப்பான தரையில் நடக்கும்போது அவை வழுக்குவதில்லையே! கழுவி விடப்பட்ட மொசைக் தரையில் நடப்பதுதானே கஷ்டமாக இருக்கிறது. கட்டாந்தரையில் சிரமமே இல்லாமல் நடந்துவிடுகிறோமே!.

இதுபோன்ற உங்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில் ஒரு கேள்விதான்.

பனிமலையில் சறுக்கி விளையாடும்போது, பனிச்சறுக்கு மலை வழுவழுப்பாக இருப்பதில்லையே! சொரசொரப்பாகத்தானே இருக்கிறது. மலையில் படிந்திருக்கும் உறைபனித் துகள்கள், பிரிட்ஜிலிருந்து வெளியில் எடுக்கும் பனிக்கட்டிகள் போல வழுவழுப்பாகவா இருக்கின்றன; மணலைத் தூவி வைத்தது போல பொலபொலவென்றுதானே இருக்கின்றன? ஆனாலும் நன்றாக வழுக்குகிறதே!

இப்போது உங்களுக்கு இரண்டு உண்மைகள் தெரிந்திருக்கும். ஒன்று, சொரசொரப்பான பகுதிகளும் வழுக்குகின்றன. இன்னொன்று பனிக்கட்டிகள் வழுக்குவதற்குக் காரணம் வழுவழுப்பு அல்ல. வேறு என்ன காரணம்…?

பனிக்கட்டிகளில் நாம் ஏறி நடக்கும்போதும், பனிச்சறுக்குப் பலகைகளை வைத்து நாம் சறுக்கி விளையாடும்போதும் பனிக்கட்டியின் மீது தரப்படும் நம்முடைய அழுத்தம் அதிகரித்து, உறைபனிப் படிவின் வெப்பநிலை அதிகரிக்கிறது. எனவே, பனிக்கட்டிகள் விரைவாக உருகுகின்றன. வழக்கமாக ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகும் பனிக்கட்டி, மைனஸ் ஒன்று அல்லது மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் அளவில் உருக ஆரம்பித்துவிடுகிறது.

பனிச்சறுக்கு வண்டிகளையோ, பனிச்சறுக்குப் பலகைகளையோ வைத்துப் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடும்போது, பனிக்கட்டிகளின் மீது அழுத்தம் அதிகரிப்பதால் அவை விரைவாக உருகத் தொடங்குகின்றன. பனிக்கட்டிகளுக்கும் பனிச்சறுக்குப் பலகைகளுக்கும் இடையே நீர் அடுக்கு உருவாகி உராய்வு குறைந்துவிடுகிறது. இதனால் பனிக்கட்டி மீது நம்மால் விரைவாக வழுக்க முடிகிறது.

இப்போது தெரிகிறதா? பனிக்கட்டிகள் வழுக்குவதற்கு அதன் வழுவழுப்பான தன்மை காரணம் அல்ல. மாறாக இந்த அழுத்தப் பிரச்சினைதான் காரணம்.

சொரசொரப்பான பனிக்கட்டிகள், வழுவழுப்பாக இருக்கும் பனிக்கட்டிகளை விட இன்னும் வேகமாக வழுக்குகின்றனவே! அதற்கு என்ன காரணம்?

மணல் போன்று காணப்படும் சொரசொரப்பான பனித்துகள்களின் முனைகள் கூர்மையாக இருக்கின்றன. எனவே, பனிச்சறுக்கு வண்டிகள் குறுகிய பரப்பில் அதிக அழுத்தத்தைச் செலுத்துகின்றன. கூறான, குறுகிய பனிப்பரப்பின் மீது அழுத்தம் செலுத்தப்படும்போது வெப்பநிலை விரைவாக அதிகரித்து, பனிக்கட்டிகள் விரைவாக உருகத் தொடங்குகின்றன. பனிச்சறுக்கு வண்டிகளுக்கும் பனிமலைக்கும் இடையே விரைவாக நீர்ப்பரப்பு உருவாகிறது. அதனால், சொரசொரப்பான பகுதிகள் வழுவழுப்பான பகுதிகளைவிட விரைவாக வழுக்குகின்றன.

பனிமலைகள் வழுக்குவதற்கு அதன் வழுவழுப்பான தன்மை காரணம் இல்லை, அழுத்தம் அதிகரிப்பதும், பனிக்கட்டிகள் உருகுவதும்தான் காரணம் என்பதும், மேலும் வழுவழுப்பான பனிக்கட்டிகளை விட, சொரசொரப்பான பனிக்கட்டிகள் விரைவாக வழுக்குவதற்கான காரணம் என்னவென்றும் இப்போது தெரிந்துவிட்டதல்லவா? அப்படியென்றால் இமயமலை முழுவதிலும் செயற்கைக் காரணிகள் மூலமாக அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, பனிக்கட்டியை உருகச் செய்தால், நீர் வளத்தைப் பெருக்கி வறட்சியைத் தடுத்துவிடலாமே! உங்கள் ஆர்வம் புரிகிறது.

அது அவ்வளவு எளிதான செயல் இல்லை.

ஒட்டுமொத்தமாகப் பனிப்பரப்பின் உருகுநிலையை அவ்வளவு எளிமையாகக் குறைத்துவிட முடியாது. ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவு கொண்ட பனிக்கட்டி மீது 100 கிலோ அளவுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் போதுதான் அதன் உருகு நிலை ஜீரோ டிகிரி செல்சியஸ் அளவிலிருந்து -1 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைக்க முடியும்.

ஒரு பெரிய பரப்பில் இவ்வளவு அதிக அழுத்தத்தை ஒரே நேரத்தில் செலுத்தக்கூடிய எந்தத் தொழில்நுட்பமும் இன்று நம்மிடம் இல்லை. கூடவே, இயற்கையின் போக்கில் குறுக்கிடுவது பேராபத்தையே ஏற்படுத்தும்.

அப்புறம், இந்த அழுத்தம் அதிகரிப்பதால் வழுக்குவது என்பது பனிக்கட்டிக்கு மட்டுமே பொருந்தும். கழுவி விட்ட மொசைக் தரையில் வழுக்கி விழுவதற்கும், குளியலறையில் வழுக்கி விழுவதற்கும் காரணம் தரைக்கும், நம் பாதத்துக்கும் இடையே நேரடியான உராய்வு குறைவாக இருப்பதுதான்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

சச்சினாக நடிக்க எத்தனை பேர் முயன்றார்கள் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சிறு வயது சச்சினாக நடிக்க சுமார் 300 குழந்தைகள் நேர்முகத் தேர்வில் ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

sachinnnn_16089.jpg

இந்திய கிரிக்கெட் பிதாமகன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை தழுவி 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்திய ரசிகர்களுடன் பின்னிப்பிணைந்த சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை மட்டுமின்றி, அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பவங்களையும் கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது. இதில் சிறுவயது சச்சினாக நடிக்க 300 சிறுவர்களை வைத்து தேர்வு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

களத்தில் ஜென்டில்மேன் எனவும் மிஸ்டர் கிரிக்கெட் எனவும் போற்றப்படும் சச்சின் சிறுவயதில் குறும்புத்தனத்துக்கு பஞ்சம் வைக்காத பலே கில்லாடி. அந்த சம்பவங்கள் அனைத்தும் மிக யதார்த்தமாக இப்படத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. அப்படி சிறுவயது  குறும்புக்கார சச்சின் கதாபாத்திரத்துக்கும் அந்த சுருட்டை முடிக்கும் ஒத்துப்போகும் சிறுவனை தேர்ந்தெடுக்கதான் 300 சிறுவர்களை வைத்து தேர்வு நடந்ததாம். இறுதியில் மிகெயில் காந்தி என்ற சிறுவனே குட்டி சச்சினாக நடிப்பதற்கு தேர்வாகியிருக்கிறார். மே 26 சச்சின் திரையரங்கங்களில் களமிறங்குகிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு ரயில் டிக்கெட் விலை 10,000 டாலர்; ஆனாலும் இடமில்லை

நீங்கள் ஒரு ரயில் டிக்கெட்டுக்கு $10,000 செலவழிக்கத்தயாரா?

தயாரென்றால், நீங்கள் வெகுவிரைவில் ஜப்பானின் புதிய சொகுசு ரயிலில் பயணிக்கலாம்.

கிழக்கு ஜப்பான் ரயில் நிறுவனம் தனது புத்தம்புது ஷிகிஷிமா சொகுசு ரயில் சேவையை துவக்கியுள்ளது.

டோக்யோவிலிருந்து ஹொக்கைடோவுக்கான 4-நாள் பயணத்தின் உயர்தரக்கட்டணம் $10,000 வரை ஆகும்.

உலகின் மிகச்சிறந்த மெஷெல் நட்சத்திர சமையல்காரர்கள் இதில் சமைக்கிறார்கள்.

பியானோ இசைக்கலைஞரின் ரம்யமான இசையை ரசித்தபடி நீங்கள் சாப்பிடலாம்.

பாரில் பல்வேறுவகையான காக்டெய்ல்களை நீங்கள் குடிக்கலாம்.

ரயில்பெட்டியின் துவக்கத்திலும் முடிவிலும் கண்ணாடிப்பெட்டிகளில் பயணித்தபடி வானத்தை ரசிக்கலாம்.

பத்து பெட்டிகள் கொண்ட ரயிலில் 34 பயணிகள் மட்டுமே பயணிப்பார்கள் என்பதால் கூட்ட நெரிசலே இருக்காது.

இதன் முதல்நாள் பயணத்திற்கான டிக்கெட்டுகளை குலுக்கல்முறையில் பெற ஏகப்பட்டபேர் முயன்றனர்.

மிக அதிகமான விலையிருந்தும் மார்ச் 2018 வரை இதன் பயண டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.

BBC

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme

 
 
நடிகை ராய் லக்ஷ்மியின் பிறந்தநாள் இன்று
Happy Birthday Raai Laxmi
 
Bild könnte enthalten: 1 Person, Text und Nahaufnahme
 
நடிகை ஷெரீனின் பிறந்தநாள்
Happy Birthday Sherin Shringar
 
Bild könnte enthalten: 1 Person, steht und Innenbereich
 
பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட்டின் நினைவு தினம்.
மாபெரும் பிரெஞ்சு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நெப்போலியன் ஐரோப்பிய வரலாற்றில் முக்கிய செல்வாக்கு செலுத்தியவன்.

"பயம் என்ற வார்த்தை என் அகராதியிலேயே கிடையாது"- நெப்போலியன்
Nepoleon Bonaparte
 
Bild könnte enthalten: 1 Person, sitzt
 
இந்தக்கால த்ரிஷா, சமந்தா, ஹன்சிகா மாதிரி அக்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த
டி. ஆர். ராஜகுமாரி அவர்களின் பிறந்த தினம்.

இவர் நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்று விளங்கியிருந்தார்.
 
 
  • தொடங்கியவர்

மூன்றாவது புகையின்போது பிடிபட்டால் மரண தண்டனை! - ரஷ்யா புகைப் பழக்கத்தின் ‘அடடே’ வரலாறு #History

இன்று உலகிலேயே அதிகம் சிகரெட் ஊதித்தள்ளும் நாடுகளில் மூன்றாமிடத்தில் உள்ளது ரஷ்யா! அதிலும் 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள் புகைபிடிப்பதில் முதலிடத்தில் உள்ளது. 12 முதல் 16 வயதுவரை சிறுவர்கள் தாரளமாக அங்கு புகைபிடிக்கிறார்கள். மொத்தமாக சிகரெட் பிடிப்பவர்களில் 33% பேர் 20 வயதுக்குக் கீழுள்ளவர்கள். இளைஞர்களில் 55% பேர், இளைஞிகளில் 40% பேர் புகை பிடிப்பது அங்கு சாதாரணம்!

சிகரெட்

ஆண்டுக்கு 4 லட்சம் பேர் புகைபிடித்தல் காரணமாக இறக்கிறார்கள். பலவித நோய்களுக்கும் காரணமாக புகைப் பழக்கம் இருக்கிறது. அதிபர் புடின் புகைபிடித்தலைத் தடுக்க பல விதமாக சட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார். ம்ஹூம் யாரும் மசியக்காணோம். இப்படி, சிகரெட் வெறியன் என்று பெயரெடுத்திருக்கும் ரஷ்யா ஒரு காலத்தில் புகைபிடித்தல் என்றால் என்னவென்றேதெரியாத அம்பி நாடாக இருந்தது என்பதுதான்.. சாமியார் ரௌடியான கதை!  

1580கள் வரைக்கும் ரஷ்யர்களுக்கு புகையிலை உபயோகமோ, அதன் சுகமோ தெரியவில்லை.. ஏனைய உலகநாடுகள் ஊதித்தள்ளிக்கொண்டிருந்தபோது, அவர்கள் பனிக்காலத்தில் வாயில் வரும் பனிப்புகையைத்தான் ஊதிக்கொண்டிருந்தார்கள். முதலில் 1544 ஆண்டில்  பிரிட்டிஷ் வணிகக் கப்பல் ஒன்று புயலில் ரஷ்யத் துறைமுகத்தில் கரை ஒதுங்குகிறது. அதில் இருந்த பல பொருட்களில் புகையிலையும் ஒன்று.

அதனைக் கையிலெடுத்தவர்கள், அதைச் சுவைத்துப் பார்க்கிறார்கள், கடித்து, புகைத்துப் பார்த்துவிட்டு விட்டுவிடுகிறார்கள். அது என்ன பொருள், எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற தெரியவில்லை. பிறகு, 1584ல் ரஷ்ய மன்னன் இவான் , பாதரச விஷம் கொடுக்கப்பட்டு இறந்துபோகிறான். அவனது மகன் ஃபியோதர் 1, மனநிலை சரியில்லாத மாற்றுத்திறனாளி. அவன் ஆள முடியாது என்பதால், மருமகன் போரிஸ் ஆட்சிப்பொறுப்பேற்கிறான்.

திடீர் யோகம் அடித்த போரிஸுக்கு தலைகால் புரியவில்லை. உடனே பிரிட்டனைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறான். அங்கு போய் தன் பட்டாளத்துடன் கும்மாளம், கூத்து என்று இருக்கிறான். அப்போது ஓவராக ஆடியதில் ஒரு விடுதியில் குடித்து முடித்தபின் பில் கட்ட காசு இல்லை. அப்போது அவன் யாரென்று தெரிந்துகொண்ட ஒரு பிரிட்டிஷ் வியாபாரி, அவனது பில் 500 பவுண்டுகளைக் கட்டுகிறார். ‘நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்?’ என்று போரிஸ் போதையில் உளற, காரியக்கார அந்த வியாபாரி, “இந்தக்காசை எனக்குத் திருப்பித் தரவேண்டாம். நீங்கள் ஊருக்குப்போகக்கூட நானே காசு தருகிறேன். கவலை வேண்டாம். ஆனால், அதற்கு பதிலாக, நான் ரஷ்யாவில் புகையிலை வியாபாரம் செய்ய அனுமதி தரவேண்டும்” என்கிறார்.

“அதுக்கென்ன எடுத்துக்கோ!” என்று போரிஸ் ’மதர் ப்ராமிஸ்’ செய்ய.. போரிஸ் திரும்பிச்செல்லும் கப்பலிலேயே, 2000 பெட்டிகள் புகையிலையும், சுருட்டும் ரஷ்யா நோக்கிப் பயணிக்கிறது. அப்படி, BRITISH TOBACCO TRADE COMPANY ரஷ்யாவில் கால் பதிக்கிறது. முதலில் துறைமுக நகரமான Archangelsk -ல் புகையிலையும் சுருட்டும் விற்பனை ஆரம்பிக்கப்படுகிறது. இதே துறைமுகத்தில்தான், 1544ல் பிரிட்டிஷ் கப்பல் கரை ஒதுங்கியது. ஏற்கனவே சுவைத்துப் பார்த்து விட்டுவிட்டார்கள் என்று படித்தோமல்லவா.. அதே துறைமுகம்.   

இது நடந்து சில மாதங்களுக்குப்பிறகு, அந்த வியாபாரி நேராக போரிஸைச் சந்திக்கிறார். “நீங்க அனுமதி கொடுத்தீங்க சரி, ஆனால் ரஷ்யர்கள் யாரும் சிகரெட், சுருட்டை விரும்பி புகைக்க மாட்டேங்கிறாங்க. நீங்கதான் ஏதாவது செய்யணும்.! இனிமே விக்கிற ஒவ்வொரு சிகரெட்டுக்கும் நான் உங்களுக்கு கப்பம் கட்டிடுறேன்” என்று புலம்ப, பழக்கத்துகாகக் கொலைகூடச் செய்யும் போரிஸ், உடனே ஒரு சட்டம் இயற்றுகிறான். ‘ரஷ்யர்கள் அனைவரும் கட்டாயம் புகைபிடிக்கவேண்டும், இல்லையேல் அபராதம், தண்டனை வழங்கப்படும்!’  

தெரிந்தோ தெரியாமலோ ரஷ்யர்கள், கட்டாயமாக புகைபிடிக்கத் துவங்கிவிட்டார்கள். ஊரெங்கும் புகை மண்டலம்! அரச கட்டளைக்குப் பயந்து புகைபிடிக்கத் துவங்கியவர்கள், ஆசைக்குப் பிடிக்கத் துவங்கிவிட்டார்கள். அப்புறம், பிரிட்டிஷ் வியாபாரிக்கு அமோக அறுவடை. ஆனால், போரிஸுக்குப் பிறகு வந்த மன்னர்கள், அடுத்த 50 ஆண்டுகளில் ரஷ்யர்களின் புகையிலை போதைக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை. நிறைய தீ விபத்துக்கள், மரணங்கள், வேலை செய்யுமிடங்களில் பிரச்னைகள், புகையிலையை வைத்து மாஃபியாக்கள் என்று உருவாகி ஆட்டம் போடுகிறார்கள். இந்தப்பஞ்சாயத்துகளைச் சகித்துக்கொள்ளமுடியாத மன்னன் ஜார் அலெக்ஸிஸ், 1634ல் புகையிலைக்கு தடை கொண்டுவருகிறான். புகைபிடிப்பது தடை செய்யப்படுகிறது. முதல் தடவை பிடிக்கப்பட்டால் அபராதம் , இரண்டாம் முறை என்றால், மூக்கு வெட்டப்படும். மூன்றாம் முறை பிடித்தால் மரண தண்டனை என்று கட்டளையிடுகிறான். இதுவும் அமலுக்கு வந்து, கள்ள சிகரெட் சந்தை, கள்ள புகையிலைக் கடத்தல் என்று அந்த வகையில் குற்றங்கள் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனாலும் ரஷ்யர்கள் மெதுவாக புகையிலைப்பழக்கத்தைக் கைவிடத் துவங்குகிறார்கள்.

இப்போது கதையில் இன்னொரு ட்விஸ்ட்.. மீண்டும் 1689ல் பீட்டர் த கிரேட் என்றழைக்கப்பட்ட ஜார் பீட்டர், ஹாலந்துக்கு கப்பல் கட்டுமானம் படிக்கப் பயணிக்கிறார். அவருக்கு, ஒரு அரியவகை, தலைசிறந்த சுருட்டு ஒன்றை அழகான வேலைப்பாடு கொண்ட பெட்டியில் வைத்து, ஒரு டச்சுக் கலைஞர் பரிசளிக்கிறார். மன்னன் அதை இழுத்துப்பார்த்துவிட்டு, “ஆஹா.. இப்படிப்பட்ட ஐட்டத்தையா நம் நாட்டுக்குள் விடாம வம்பு பண்ணிட்டிருக்கோம்?” என்று நினைத்தானோ என்னவோ, மீண்டும் ஜகஜ்ஜோதியாக புகையிலைக்கு வாசலைத் திறந்துவிட்டான். அனைத்துத் தடைகளையும் நீக்கிவிட்டான். சிகரெட், சுருட்டுப் பிடிப்பது கௌரவம் என்று அறிவித்தான். புகையிலை விற்பதற்கு மோனோப்போலியாக ஒரு நிறுவனத்துக்கு ஏழு ஆண்டுக்கான லைசென்ஸ் கொடுத்து அதற்காக 2 லட்சம் பவுண்டுகளும் பெற்றுக்கொள்கிறான். அவனும் எப்போதும் பைப்பும் வாயுமாகத் திரிந்ததாகக் கேள்வி.  அவனுக்கு முன்னால், யாராவது புகைக்காமல் இருந்தால், அவர்களை அழைத்து சிகரெட் எப்படி பற்றவைப்பது என்று கற்றுக்கொடுத்திருக்கிறான். அன்று பற்றவைத்தவர்கள்தான் .. இன்றும் பல்வேறு சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தவே முடியாமல் திணறும் வகையில் ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக்கதையை நீங்கள் டாஸ்மாக்கோடு தொடர்பு படுத்திக்கொண்டால், நான் பொறுப்பல்ல மக்களே! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்: மே.5, 1916

பி.யு.சின்னப்பா, தமிழ் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். 1916 ஆம் ஆண்டு மே மாதம் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி.யு.சின்னப்பாவானார். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின்

 
தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்: மே.5, 1916
 
பி.யு.சின்னப்பா, தமிழ் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். 1916 ஆம் ஆண்டு மே மாதம் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி.யு.சின்னப்பாவானார். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார். சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.

சிறுவயதிலேயே நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார். மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் பி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.இராமச்சந்திரன், எம்.கே.ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தனது 19-வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார் போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார். அத்துடன் புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரந்தூக்குவதில் இவருக்கு பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. எஸ். ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி ‘சந்திரகாந்தா’ மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி பெயரிலேயே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே. இந்த படம் பெரு வெற்றி பெற்றது.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார். 1944 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ.சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற பெயரில் ஒரு மகனும் உண்டு.

ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். கிருஷ்ணபக்தி படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே.. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.

1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 இல் தமது 35-ஆவது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் ‘வனசுந்தரி’. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த ‘சுதர்சன்’ இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1925 - தென்னாபிரிக்காவில் ஆப்ரிக்கன் மொழி அதிகாரபூர்வ மொழியானது.
* 1955 - மேற்கு ஜெர்மனி முழுமையான விடுதலை அடைந்தது.
* 1991 - ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணி தனது 23 ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
• 1916 - இந்தியாவின் 7-வது குடியரசு தலைவரான ஜெயில் சிங் பிறந்த தினம்
• 1922 - தமிழ் திரைப்பட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி பிறந்த தினம்
• 2006 - இந்திய திரைப்பட இசையமைப்பாளர் நௌசத் அலி இறந்த தினம்.
* 2007 - கென்யாவின் விமானம் ஒன்று கேமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தான் உள்பட நான்கு ஆஃப்கானியர்கள் கொல்லப்பட்ட தருணத்தை எடுத்திருந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.

 
Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die stehen

BBC

  • தொடங்கியவர்

கார்ல் மார்க்ஸிடம் ஜென்னி காதல் சொன்ன கதை! #KarlMarx

ஜென்னி

ம்யூனிஸத் தத்துவத்தை உலகிற்கு அளித்த கார்ல் மார்க்ஸ்க்கும் அவரைக் காதலித்து மணம்புரிந்துகொண்ட ஜென்னிக்கு இடையேயான கடிதப் பரிமாற்றம் உலகப் புகழ்பெற்றவை. அவர்களுக்குள் காதல் மலர்ந்த தருணங்களில் இருவரும் பகிர்ந்துக்கொண்ட அன்பின் வெளிப்பாடே அந்தக் கடிதங்கள். குறிப்பாக, அவர்களின் திருமணத்திற்கு முன்பு, ஜென்னி கார்ல் மார்க்ஸுக்கு எழுதிய கடிதங்களில், பெண்ணுக்கே உரிய குதூகலத்தைப் படிக்கும் எவரும் உணரமுடியும். அவரின் காதல் எழுத்துகளின் சில பகுதிகள் இதோ..
 
என் சின்ன அன்பு பன்றியே (ஜெர்மனியில் பன்றி செல்ல பிராணி),

என்னுடைய கடிதம் உங்களைக் குதூகலப்படுத்தும்... எனக்காக நீங்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.. நீங்கள் கோலன் நகரில் மது அருந்தினீர்கள்.. இன்னும் சில காலங்களில் நீங்கள் என்னுடையவர் ஆகிவிடுவீர்கள்.. நீங்கள்  மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் .. இவையெல்லாம் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கின்றன! ஆனால், ஒரே ஒரு விஷயத்தை எனக்காக நீங்கள்  செய்ய தவறவிட்டீர்கள்.. என்னுடைய கிரேக்க மொழி புலமையை நீங்கள்  கொஞ்சமெனும் பாராட்டி இருக்கலாம். என் புலமையைப் பாராட்டி சிறிய கட்டுரையாவது எழுதியிருக்கலாம். மற்ற எல்லா ஆண்களைப் போல, நீங்கள் எதையும் கவனிப்பதே இல்லை... அது சாதனைகளின் உச்சமாக இருக்கலாம்...ஒருவேளை.. அது உங்களுடைய பார்வையில் சாதனையாக இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும், என்னுடைய சிறிய மேதைமையிலிருந்து, இந்தச் சிறிய கடிதத்தை உலகிற்கு அனுப்புகிறேன்.

ஓ... என் அன்பே  இதயகனியே.. இப்போது நீங்கள் அரசியலில் ஈடுபட துவங்கி இருக்கிறீர்கள்.. மற்ற எல்லாவற்றையும் விட இது மிகவும் ஆபத்தான விஷயம்.  என் அன்பு கார்ல்... உங்களுக்காக  வீட்டில் எப்போதும் ஓர் அன்பு இதயம், உங்களை நம்பிக்கொண்டும், உங்களுக்காக ஏங்கிக்கொண்டும்  இருக்கிறது என்பதை மட்டும்  எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களை மற்றொரு முறை பார்க்க வேண்டும் என எவ்வளவு  ஆசையாக இருக்கிறது என்று தெரியுமா?
 
ஜென்னிஎன் அன்புக்குரியவரே, நீங்கள் என்னிடம் வெறும் இரண்டு வரிகள் மட்டும் கேட்டீர்கள். ஆனால், இந்தப் பக்கமே கிட்டதட்ட நிறைந்துவிட்டது.  இன்று, கடிதங்களுக்குரிய சட்டங்களை எதையுமே நான் பின்பற்றுவதாக இல்லை. எத்தனை பக்கங்கள் எழுத முடியுமோ.. அத்தனை பக்கங்களை எழுதவிருக்கிறேன். இந்த விஷயத்தைப் பொருத்தவரையில்,  இந்தச்  சின்னப் பெண் ஜென்னியிடம் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இன்று  என்  மூளையில் எதுவுமே இல்லை; காலியாக இருக்கிறது. என்னுடைய எண்ணங்கள் எல்லாம் எங்கோ சென்றுவிட்டன. ஆனால், மற்றொரு புறத்தில், என் இதயம் நிறைந்திருக்கிறது, காதலால் நிரம்பி வழிகிறது... உங்களுக்காக  ஏங்கிக்கொண்டே இருக்கிறது.. என் முடிவில்லா  காதலனே!

இதற்கிடையே,  வொபன் மூலமாக, பென்சிலில் எழுதிய கடிதம் உங்களுக்கு கிடைத்ததா? ஒருவேளை, நமக்கு இன்னும்  காதல்  தூதுவர்கள் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. வருங்காலத்தில் என்னுடைய தலைவனுக்கே  நான் நேரடியாக கடிதம் எழுத வேண்டும்.
 
ஓ.. என் அன்புக்குரியவரே..எனக்கு தூக்கம் வராத இரவுகளில் உங்களைப் பற்றியும் உங்கள் காதலை பற்றியுமே  நினைத்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுக்காக அடிக்கடி இறைவன் இடத்தில் வேண்டிக்கொள்கிறேன். நமக்கு கிடைத்திருக்கும் வரங்களையும், கிடைக்கவிருக்கும் ஆசிர்வாதங்களையும்  நான் அடிக்கடி இனிமையாக நினைத்துக்கொள்வேன்.  
என் மனத்துக்கு  நெருக்கமான கார்ல், உங்களிடம் நான் நிறைய பேச வேண்டும்.. எல்லாமே  ‘பேசி இருக்க வேண்டும்’ என்பதோடு நிற்கிறது.  ஆனால், அம்மா இதனை இதற்கு மேலும்  பொறுத்துக்கொள்ள  மாட்டார். என்னிடமிருந்து என் பேனாவை எடுத்துக்கொள்வாள்.  என்னுடைய  அன்பான, ஆழமான  வாழ்த்துகளைக்கூட என்னால் வெளிப்படுத்த முடியாது. தூரத்திலிருந்து உங்களின் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தங்களையே அனுப்புகிறேன்.

 

என் அன்புக்குரியவரே,   இதற்கு மேலும்  என்னால் எழுத முடியாது. என் தலை முழுவதும்.... உங்களுக்கே தெரியும்! என் சின்ன  பையனே.. உங்களை நான் திருமணம் செய்துக்கொள்வது  நிச்சயம்தானே?

விடைபெறுகிறேன்..என் அன்பே
என்றும் காதலுடன்,
ஜென்னி

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உங்கள் கனவில் வருபவர் நீங்கள்தான்! #DreamFacts

 

கனவில், அடிக்கடி பேய் வருகிறதா... முகம் தெரியாத யாரோ  வருகிறார்களா... காலையில் தூங்கி எழுந்தவுடன்  எவ்வளவு யோசித்துப்பார்த்தாலும் கனவில் வந்தவர்  யாரென்றே ஞாபகம்  வரவில்லையா?

அது வேறு யாரும்  அல்ல, உங்கள் கனவில் நீங்கள்தான் வருகிறீர்கள். இது உங்கள் ஆழ்மனதின் வெளிப்பாடு.

ஒருவரின் ஆன்மா அவரிடமே பேசுவதை, சினிமாவில்  பார்த்திருப்போம். உண்மை வாழ்வில், கனவில்தான் நம் ஆன்மா நம்முடன் பேசும், அதுவும் அடையாளம் தெரியாத யாரோ  ஒருவரைப்போல. யோசித்துப்பாருங்கள், முகம் தெரியாத யாரோ ஒரு நபரை  நம் கனவில் சந்தித்திருப்போம்.

`கனவுகள் - ஒரு சிறு குறிப்பு வரைக' என்பது, இன்று வரை ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகத்தான் உள்ளது. எவ்வளவோ அறிவியல் மற்றும் உளவியல் துறைகளில் வளர்ச்சி அடைந்திருந்தாலும்,  கனவுகள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்தவண்ணமே உள்ளன. காரணம், இதன் பிறகு இருக்கும் மென்டல் டிசைனிங்கை இதுவரை எவராலும் கண்டுபிடிக்க இயலாததுதான்.

 

கனவு

 நம் எண்ணங்களே கனவுகளாக வருவதாகக் கூறுகின்றனர்  ஆராய்ச்சியாளர்கள்.  ஆனால், அந்த எண்ணங்கள் நேரடியாக நம்  கனவில் வருவதில்லை. சில விருப்பங்கள் மற்றும் நிறைவேற்றப்படாத விஷயங்களே கனவுகளின் மூலம் நம் நினைவுக்கு வரலாம்.  பொதுவாக, அண்மையில் நிகழ்ந்த, நம் மனதைப் பாதித்த ஒருசில விஷயங்கள் கனவில் மறைமுகமாக வரக்கூடும். `ஒருவிதத்தில் நமது  ஆழ்மனதின்  இச்சைகள் கனவு ரூபத்தில் வருகின்றன மற்றும் Dreams are the Royal Road to  Unconsciousness' என்று விளக்கம் அளித்துள்ளார் சிக்மண்ட் ஃபிராய்டு .

இரவில் வந்த கனவுகள் பற்றி காலையில் எழுந்தவுடன் டைரியில் எழுதிப்பார்த்தால், சில விஷயங்கள் மட்டுமே  திரும்பத்  திரும்ப நினைவுக்கு வரும். இதிலிருந்து  நமது மன விருப்பங்கள், பயங்கள், மனக்குறைகளைக் கண்டறியலாம். கனவுப் பிரதேசத்தில் இடம்பெறும் கால ஓட்டத்தை நம்பவே நம்பாதீர்கள். பத்து நொடிகளில் ஒரு  வருடம்கூட கடந்துவிடும்... சினிமாவைப்போல.

தூக்கத்தில் இருக்கும் நம்மை எச்சரிக்கை செய்வது, எழுப்புவதும்தான் கனவுகளின்  வேலை. நமக்கு வரும் கனவுகள் பற்றி  மனநல மருத்துவர்களிடம் கேட்டால், அதற்கு ஒரு விளக்கவுரை தருவார்கள். அது என்னவென்றால், `நம் நிறைவேறாத ஆசைகளை ஆன்மா, கனவுகளின் மூலம்  நிறைவேற்றிக்கொள்ளும். இப்படிக் கனவில் வரும் ஆன்மா 'ஷேடோ' (Shadow) என்றழைக்கப்படுகிறது. இந்த ஷேடோ,  நமது பெர்சனாலிட்டியின் ஒரு பகுதி. எப்போது நாம் கோபத்தின் எல்லைக்குப்போகிறோமோ, அன்று நாம் தூங்கும்போது  நமது ஆன்மா நிச்சயம் கனவில் வரும்' என்று கூறுகின்றனர்.

சில நேரங்களில் ஆன்மா, பேய் வடிவிலும்கூட வரலாம். இது வெகுசிலருக்கே நடக்கும். இப்படி வந்தால், அந்த ஆன்மா நமது கோபத்தைக் குறைக்கும்படி  எச்சரிக்கைவிடுக்கிறது என்று அர்த்தம்.

இப்படி, கனவுகளின் மூலம் ஆன்மா  எப்போதும் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். இனி கனவில் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி யாராவது வந்தால், அது நீங்கள்தான்.

ரொம்ப யோசிக்காதீங்க... எவ்வளவு  யோசித்தாலும் ஆன்மாவின் ஒருசில உண்மைகளைக் கண்டறிய முடியாது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நோலன் இயக்கத்தில் பிரமிக்க வைக்கும் டன்கிர்க் ட்ரெய்லர்..!

 

இரண்டாம் உலகப்போரின் போது ஒருகட்டத்தில், வடக்கு ஃப்ரான்ஸின் டன்கிர்க் என்ற இடத்தில், பெல்ஜியம்-பிரிட்டன்-ஃப்ரான்ஸ் படைவீரர்களை ஜெர்மன் வீரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எட்டுநாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. இதுதான் டன்கிர்க் வெளியேற்றம் என்ற நிகழ்வு.

Dunkirk Trailer


இதை மையமாக வைத்து, கிறிஸ்டோபர் நோலன் தயாரித்து , எழுதி இயக்கும் படம் தான் டன்கிர்க். தனது முந்தைய படமான இன்டெர்ஸ்டெல்லாரைப் போல், இதையும் ஐமேக்ஸ் கேமராவிலும், ஃபிலிம் சுருளிலும் படமாக்கி வருகிறார் நோலன்.  முதல் முறையாக வரலாற்று போர் பின்னணி கொண்ட ஒரு படத்தை இயக்குகிறார் நோலன். இன்டெர்ஸ்டெல்லர் படத்தை ஒளிப்பதிவு செய்த Hoyte van Hoytema, இந்தப் படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார். டார்க் நைட் ட்ரையாலஜி, இன்செப்ஷன், இன்டெர்ஸ்டெல்லார் படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்திற்கும் இசைமையத்து வருகிறார் ஹான்ஸ் ஜிம்மர்.

 


இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. இந்நிலையில், படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. படத்தின் மெய்ன் ட்ரெய்லர் இதுதான். ட்ரெய்லரை பார்க்கும் போதே எதிர்பார்ப்பு எகிறுகிறது. ஜூலை 21-ம் தேதி படம் ரிலீஸ்.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: மே 06
 
 

article_1430888024-eiffel-tower.jpg1542: பிரான்சிஸ் ஷேவியர் அடிகளார் இந்தியாவின் கோவா நகரை அடைந்தர்.

1682: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னன் நீதிமன்றத்தை வேர்செய்ல்ஸ் அரண்மனைக்கு மாற்றினான்.

1889: ஈபில் கோபுரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது.

1910 பிரிட்டனின் 7ஆம் எட்வர்ட் மன்னர் இறந்ததையடுத்த 5ஆம் ஜோர்ஜ் மன்னரானார். 

1937: ஜேர்மனின் வெப்பவாயு ஆகாயக் கப்பலான (ஸெப்பளின்) ஹிண்டன்பர்க் அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகரில் தரையிறங்க முயன்றபோது தீப்பற்றியதால் 36 பேர் பலி.

1976: இத்தாலியின் பிரியூலி நகரில் வீசிய சூறாளியினால் 989 பேர் பலி.

1994: பிரிட்டன் - பிரான்ஸூக்கு இடையிலான கடலடி சுரங்கப்பாதையை பிரித்தானிய அரசிய இரண்டம் எலிஸபெத்தும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்கொய்ஸ் மிட்டரான்ட்டும் திறந்து வைத்தனர்.

1994: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக ஆர்கான்ஸ் மாநில அசாங்க ஊழியரான பௌலா ஜோன்ஸ் பாலியல் தொந்தரவு குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தார்.

2001: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் சிரியாவுக்குச் சென்றபோது பள்ளிவாசலொன்றுக்குள் சென்ற முதலாவது பாப்பரசரானார்.

2010: அணு உலையை ஜப்பான் மீண்டும் செயற்படுத்தியது.

2011: அமெரிக்காவில் வேலையின்மை வீதம் 9 சதவீதத்தினால் உயர்வடைந்தது.

2012: சோசலிஸ கட்சி வேட்பாளர் பிரான்ஸின் ஜனாதிபதியாக ப்ரன்சொயிஸ் ஹோலண்ட் தெரிவானார்.

2013: 2000ஆம் ஆண்டு காணாமல் போன அமெரிக்கப் பெண்கள் மூவர் உயிரோடு மீட்பு.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் அதிவேக கேமரா இதுதான்!

ஒரு நொடிக்கு 5 ட்ரில்லியன் படங்கள் எடுக்கும் உலகின் அதிவேக கேமராவை ஸ்வீடன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

camera

ஸ்வீடனில் இருக்கும் லண்ட் பல்கலைக்கழக (Lund University) ஆய்வாளர்கள் உலகின் அதிவேக கேமராவைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். பென் கேமரா, ஸ்க்ரூ கேமரா, கோட் ஹூக் கேமரா என  கேமராவின் வடிவங்கள் அடுத்தகட்டத்தைத் தாண்டிப் போய்க்கொண்டிருகின்றன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கேமராக்கள், ஒரு நொடியில் ஒரு லட்சம் புகைப்படங்கள் வரை படமெடுக்கும் தன்மை கொண்டவை. ஆனால் இந்த சூப்பர் ஃபாஸ்ட் கேமரா ஒரு நொடியில் ஐந்து ட்ரில்லியன் (ஐந்து லட்சம் கோடி) வரை படமெடுக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒளியின் நகர்வைக் கூட படமெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களைத் தொகுத்து வீடியோவாக மாற்ற முடியும்.

இந்த கேமராவைக் கொண்டு ஒளியின் ஃபோட்டான் துகள்கள் பேப்பரில் ஊடுருவதை வெற்றிகரமாகப் படம்பிடித்து ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த கேமராவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வேதியியல் மாற்றங்கள், ஒளி ஊடுருவல் போன்ற அதிவேகமாக நடைபெறும் செயல்களைப் படம்பிடிக்க முடியும். மேலும், அதிவேகமான செயல்கள் எப்படி நடக்கின்றன, அப்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பன பற்றியும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஓ மானே மானே மானே..
====================
கடற்கரையில் விளையாடிய ஒரு மான் கடலில் இறங்கிக் குளிக்க, அதனை அலை அடித்துச் சென்றுவிட்டது.
ஆனால், அது பத்திரமாக கரை சேர்ந்த பின்னர்தான் அனைவருக்கும் நெஞ்சில் நிம்மதி வந்ததாம்.

  • தொடங்கியவர்

வீட்டுச் சுவரை அலங்கரிக்கும் ஓவியங்கள்

 
கேரளா சுவர் ஓவியம்
கேரளா சுவர் ஓவியம்
 
 

சுவர்களில் ஓவியங்கள் வரையும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. கற்கால மனிதன் பாறைகளில் தங்கள் வாழ்க்கை முறைகளையும் சடங்குகளையும் ஓவியமாகத் தீட்டியதை, இதன் தொடக்கமாகச் சொல்லலாம். ஐரோப்பிய நாடுகளில் தேவாலயங்களில் ஓவியங்கள் வரைவது வழக்கமாக இருந்தது. மேற்குலகில் மிகச் சிறந்த ஆளுமைகள் உருவாக இது காரணம் ஆனது. இந்தியாவிலும் பரவலாகக் கோயில்களில், அரண்மனைகளில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

kalamkari_3161335a.jpg
கலம்கரி ஓவியம்

ராமாயணக் காவியத்தில் ஜனக மன்னன் தன் மகளான சீதாவின் திருமணத்துக்காக மிதிலா நகர் முழுவதும் ஓவியங்கள் வரையச் சொன்னதாகத் தொன்மக் கதையுண்டு. இப்படித்தான் மிதிலா ஓவியக் கலை உருவானதாகச் சொல்லப்படுகிறது. இன்றைய பிஹார் மாநிலத்தில் மதுபனி என்னும் மாவட்டப் பகுதியில் தோன்றியதால் இந்த ஓவியக் கலைக்கு மதுபனி என்ற பெயரும் உண்டு. இந்த மதுபனி-நேபாள எல்லையில்தான் ராமாயண இதிகாசத்தில் வரும் மிதிலை நாடும் உள்ளது.

mandana_3161333a.jpg
மந்தனா ஓவியம்

இதுபோல அரண்மனையில் வரையப்படும் ஓவியங்கள் அல்லாமல் பழங்குடிகள் தங்கள் வீட்டுச் சுவர்களில் ஓவியங்கள் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது கோண்டு என அழைக்கப்படுகிறது. இவர்கள் வட இந்தியாவில் கிழக்கு மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பரவலாக வாழ்ந்துவருகிறார்கள். கோண்டு இனத்தவர் மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட பழங்குடிகள் ஆவர். கோண்டு பழங்குடியினர் தங்கள் சமய வழிபாட்டுச் சடங்கின்போதும் திருமணம் போன்ற நிகழ்வின்போதும் வீட்டுச் சுவர்களை ஓவியங்களால் அலங்கரிக்கிறார்கள்.

pattachitra_3161332a.jpg
பட்டச்சித்ரா ஓவியம்

ஓவியத்துக்கான வண்ணங்களை கரி, மண், தாவரங்கள், மாட்டுச் சாணம் போன்றவற்றிலிருந்து எடுக்கிறார்கள். ஓவியங்கள், தெய்வ, இயற்கை வழிபாட்டுக்காக வரையப்படுபவை எனச் சொல்லப்படுகிறது. தீய சக்திகளிடமிருந்து ஓவியங்கள் தங்களைக் காக்கும் என்னும் நம்பிகையும் இவர்களுக்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

bahari_3161336a.jpg
பாஹரி ஓவியம்

வீட்டுச் சுவர்களில் வண்ணம் அடிப்பதற்குப் பதிலாக ஓவியங்கள் வரைவது வழக்கம் பரவலாக வருகிறது. முக்கியமாக வார்லி ஓவியங்கள் பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கலம்கரி, பட்டச்சித்ரா, செரியல் ஆகிய ஓவியங்கள் பெரும்பாலும் துணிகளில்தான் வரையப்படுகின்றன. அவற்றை சட்டகமாக்கி வீட்டுச் சுவர்களை அழகுபடுத்தலாம்.

warley_3161331a.jpg
வார்லி ஓவியம்

இவை அல்லாமல் கலம்கரி, பட்டச்சித்ரா, வார்லி, பாஹரி, செரியல், கேரள சுவர் ஓவியம் உள்ளிட்ட பல வகை மரபு ஓவியங்கள் இன்று புதுப்பொலிவு பெற்று வீட்டை அலங்கரித்துவருகிறது. அவற்றைக் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது.

http://tamil.thehindu.com

madhubani_3161337a.jpg

cheriyal_3161339a.jpg

gondh_3161338a.jpg

  • தொடங்கியவர்

ஸ்மார்ட்போனை பையில் வைத்தால்போதும் அதுவே வழிகாட்டும்! அசத்தும் Levi's ஆடை வடிவமைப்பு

உலகின் முன்னணி ஆடை நிறுவனமான Levi's, ஸ்மார்ட் ஆடைகளை வடிவமைத்துள்ளது. ’Smart Denim' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆடைகளில், ப்ளூ டூத் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. நமது ஸ்மார்ட் போனை ஸ்மார்ட் ஆடையின் பாக்கெட்டில் வைத்து, அப்படியே இயக்க முடியும். இதனைத் தொடு திரைக் கட்டுப்பாட்டுத் திறன்களுடைய ( touch-screen control) ஆடைகள் என்று சொல்லலாம்.

 

ஆடைகளில் தொழில்நுட்பத்தைப் பொருத்தும் இந்தத் திட்டத்துக்கு  கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நிறுவனம் மும்முரம் காட்டி வந்தது. தற்போது, ஸ்மார்ட் ஆடைகளுக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. Levi's நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், இளைஞர் ஒருவர் அடர் நீல டெனிம் டிரக்கர் ஜாக்கெட்டை அணிந்துகொள்கிறார். ஜாக்கெட்டின் பாக்கெட்டில் ஸ்மார்ட் போனை வைத்து, ஒரு காதில் மட்டும் ஹெட்போன் மாட்டிக்கொள்கிறார். சான் பிரான்சிஸ்கோ தெருக்களில் தனது சைக்கிளில் பயணிக்கும் அவர், அவ்வப்போது தனது ஜாக்கெட்டின் இடது கைகள் மீது தனது வலது கையைத் தட்டுகிறார். அதாவது அவர் தனது ஜாக்கெட் வாயிலாக தனது ஸ்மார்ட்போனை இயக்குகிறார். அந்த இளைஞர் போக வேண்டிய இடத்தின் திசையை ஹெட்போனின் உதவியோடு வழிநடத்துகிறது ஸ்மார்ட்போன். மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவைப் பார்க்கவும்..!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

கேமெராவுடனான செயற்கை கை: பிரிட்டன் பொறியாளர்கள் சாதனை

பிரிட்டனின் நியூகேஸல் பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியாளர்கள் புதியரக செயற்கைக் கை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.


இந்தக்கையின் மேற்புறத்தில் இருக்கும் சிறு கேமெரா எதிரிலுள்ள பொருளை படம்பிடிக்க, அதன் அடிப்படையில் அதை பற்றி எடுப்பதற்குத் தேவையான அழுத்தத்தை அந்த கை தானாகவே பயன்படுத்தும். எல்லாமே சில நொடிகளில் நடக்கும் என்பதால் இயற்கையான கை செயற்படுவதைப்போலவே இந்த செயற்கைக் கையும் செயற்படவல்லது.

எளிமையான, செயற்படக்கூடிய இந்த செயற்கைக் கை உலகில் கையிழந்த லட்சக்கணக்கானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இதை உருவாக்கிய பொறியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்கைக் கையின் செயற்படும் விதம் குறித்த பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு.

  • தொடங்கியவர்

“ஜோதிகாவுக்கு 10 வயசு குறைச்ச ரகசியம் இதுதான்!” - ‘மகளிர் மட்டும்’ பூர்ணிமா!

 
 

ஜோதிகா

“மகளிர் மட்டும் படம் எனக்கொரு பெரிய திருப்புமுனைன்னு சொல்லலாம். ஜோதிகா அண்ணியோட வேலை பார்க்கிறது எப்பவுமே ஜாலி அனுபவமா இருக்கும். அப்படித்தான் 'மகளிர் மட்டும் ' படமும் அமைஞ்சிருக்கு” என்கிறார் ’மகளிர் மட்டும்’  படத்தின் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி. தற்போது அமெரிக்காவில் மகளுடன் விடுமுறைக்கொண்டாட்டத்தில் இருந்தவரை வாட்ஸ்அப் அழைப்பில் பிடித்தோம். 

இவர்தான் '36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவை பருத்திப்புடவையில் பாந்தமாகக் காட்டியவர். ஆனால் 'மகளிர் மட்டும்' படத்தின் ஸ்டில்களில் ரிவர்ஸாக, செம யூத் அண்ட் யங் ஜோதிகாவாக மாற்றியிருப்பதைப் பற்றிப் பேசினார்.

jothika2802_17427.jpg“ஒரு உண்மைய சொல்லட்டுமா, 36 வயதினிலே படத்துக்கு, அவங்களுக்கான  டிரஸ், ஸ்டைல் எப்படிப் பண்ணலாம்னு ஐடியா பண்ணவே நிறைய நாள்கள் எடுத்துக்கிட்டோம். ஏன்னா அது ஜோதிகாவோட கம்பேக் ஃபிலிம். ஸோ எப்படி எப்படினு மண்டையைப் போட்டு உடைச்சுக்கிட்டேன். ஆனா 'மகளிர் மட்டும்' கதையைக் கேட்டதும் ஜோ அண்ணியோட ஸ்டைல் இதுதான்னு பட்டுனு மனசுக்குள்ள ஃபிளாஷ் அடிச்சது. அதை அண்ணிகூட உட்கார்ந்து பேசி நாங்க இரண்டு பேரும் சேர்ந்து டிரஸ் ஸ்டைல் இதுதான்னு பிக்ஸ் பண்ணினோம். அதுக்கு நாங்க எடுத்துக்கிட்டது ஒருநாள்தான்னா நம்புவீங்களா?!

'மகளிர் மட்டும்' படத்துல ஜோ அண்ணி பிலிம் மேக்கரா; பத்திரிகையாளரா நடிக்கிறாங்க. டைரக்டர் பிரம்மா இந்தப் படத்தோட முழுக் கதையையும் என்கிட்ட மூன்றரை மணிநேரம் சொன்னாரு. ஜோதிகா இப்படித்தான் சட்டைக்கையை மடிக்கணும், இப்படித்தான்  காலரை சரி பண்ணணும்னு ஒவ்வொரு  விஷயத்தையும் தெளிவா சொல்லிட்டாரு. காஸ்டியூம் விஷயத்தில அவ்வளவு மெனக்கெட்டவர் படத்துக்காக எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்னு பார்த்துக்கோங்க" என்று சிலாகிக்கிறார் பூர்ணிமா.

’மகளிர் மட்டும்’ பிரபாவதி அப்படியே 'சிநேகிதியே' படத்தில் பார்த்த ஜோதிகாவை நினைவுபடுத்துகிறாரே...’ என்று நாம் கேட்டுமுடிப்பதற்குள்,

 “அட ஆமா! இந்தப் படத்துக்காக, ஜோ அண்ணி  கொஞ்சம்  வெயிட் குறைச்சாங்க. அவங்க எப்பவுமே துறுதுறுப்பா இருப்பாங்கில்ல... அதுக்குத் தீனி போடுற கேரக்டர் இதுல! மேக்அப்கூட அதிகம்   போடல.. துறுதுறுனு ஊர் சுத்துற பொண்ணு, நிறைய மேக்அப் போட்டு நடிச்சா அது ரியாலிட்டியா இருக்காதுனு  இரண்டு பேருமே யோசிச்சோம். அதனால, இயல்பா தெரியற மாதிரி பேஸிக் மேக் போட்டுக்கிட்டாங்க. அவங்களுக்கு செலக்ட் பண்ணின டிரஸ் கலர்ஸ் எல்லாம் டார்க்தான். ஏன்னா, பிரபாவதியா அவங்க கேரக்டர் ரொம்ப தைரியமான, போல்டான  பொண்ணு! அதை  வெளிப்படுத்தற மாதிரி, கறுப்பு, சிவப்புனு  கலர்ஸ் யூஸ் பண்ணினேன். பத்துபன்னண்டு டி-ஷர்ட்கிட்ட யூஸ் பண்ணியிருப்பாங்க.

இந்தப் படத்துக்காக ஜோதிகா யூஸ் பண்ணின ஷூ எத்தனை தெரியுமா? ரெண்டே ரெண்டு ஜோடிதான்! அதுல ஒண்ணு கறுப்பு, இன்னொண்ணு நீலநிறம்! எவ்வளவு சிம்பிளா பக்கத்து வீட்டுப் பொண்ணா காட்ட முடியுமோ அந்தளவுக்கு மெனக்கெட்டேன். எதுவும் அபரிமிதமா தெரிஞ்சிடக்கூடாதுனு உறுதியா இருந்தோம்" என்பவருக்கு கிளாஸிக் ஸ்டைல் காஸ்டியூம்தான் சாய்ஸாம்

‘பொதுவா எல்லா பெண்களும் ட்ரண்டியா இருக்கணும்னு நினைப்பாங்க. பேஷன் உலகத்துல ட்ரண்டுங்கிற விஷயமே இல்ல. வரலாற்றில உள்ள விஷயத்தை திரும்பவும் நடைமுறைக்குக் கொண்டு வந்திட்டிருக்கோம். அதனால, ட்ரண்டுங்கிற வார்த்தையே தப்பு" என்கிறார் யதார்த்தமாக.

 

‘அப்படியே டைரக்டர் பாலா படத்துல ஜோதிகாவுக்கு நீங்க டிசைன் பண்ணியிருக்கிற காஸ்டியூம் பத்தியும் சொல்லலாமே’ என்றால், சிரித்தபடியே ''சாமீ, ஆளை விட்டிருங்க. பாலா சார் அனுமதியில்லாம மூச்'' என்றபடியே விடுமுறைக்கொண்டாட்டத்தில் ஐக்கியமானார் பூர்ணிமா.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இந்த தந்தை தன் குழந்தையின் அழுகையை எப்படி நிறுத்துகிறார் என்ற பாருங்கள் 1f476.png?1f476.png?1f476.png?1f476.png

குழந்தையின் அழுகையை நிறுத்தும் `ஓம்' (காணொளி)

டேனியல் ஐயிசென்மன் என்பவர் தன்னுடைய பெண் குழந்தையின் அழுகையை ஓம் என்ற சப்தத்தின் மூலம் நிறுத்துகிறார்.

  • தொடங்கியவர்

இந்த நாட்டுக்குத்தான் விரைவில் வரவிருக்கிறார் ரொனால்டோ!

விரைவில் இந்தியா வரவிருப்பதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ronaldo

கால்பந்தாட்டத்தில் பிலே, பெக்காம் எல்லாம் கடந்த காலத்தின் கில்லாடிகள்தாம். ஆனால் தற்போதைய ஜென் Z தலைமுறையைப் பொறுத்தவரையில் கால்பந்து என்றாலே அது மெஸ்ஸியும் ரொனால்டோவும் மட்டுமே. போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடும் ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் பல இளைஞர்களும் சிறுவர்களும் ரொனால்டோவின் ஆட்டத்துக்கு அடிமைகள். யூரோ கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கோப்பை, பலொன் டி விருது என எதையும் விட்டுவைக்கவில்லை ரொனால்டோ.

இந்நிலையில் இந்தியா வர அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததையடுத்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் உலகம் முழுவதும் இருக்கும் அவரின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து அவர் செல்ல விரும்பும் நாடுகளைக் குறிப்பிட்டுப் பேசுகையில், விரைவில் இந்தியா செல்ல வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ரொனால்டோவின் இந்தத் தகவலால் அவரின் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

18199059_10155833880504578_5102834144102

  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 3 Personen, Text
 

மே 6: மாணவர்களுக்கு மிகப் பிடித்த கல்வி முறையை உருவாக்கிய மரியா மாண்டிச்சோரியின் நினைவு தின சிறப்பு பகிர்வு..

குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு ஏன் எக்கச்சக்கமாக பயப்படுகிறார்கள் என்று நாம் யோசித்து இருக்கிறோமா ? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிற விஷயமாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால்,கல்விக்கூடங்கள் குழந்தைகள் ஆனந்தமாக வந்து சேர்ந்து கற்றுத்தேர்கிற இடமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் மரியா மாண்டிசோரி. மருத்துவப்படிப்பு படிக்கப்போனார் அவர்.

அங்கே அவரைப்பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்தரக்கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் வெறுத்தார் அவர். இருந்தாலும் மருத்துவப்பட்டம் பெற்று வெளியே வந்தார். உளவியலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தினார்.

கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக அவர் ஆனார்.. பிள்ளைகளை மிரட்டுவதோ,அடிப்பதோ பிடிக்காத அன்பான நபர் அவர். அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார்.

நோட்டு புத்தகங்களுக்கு பதில் பொம்மைகளை அவர்களின் கையில் கொடுத்தார். எழுத்துக்களை சொல்லித்தருவதற்கு முன்னர் அவற்றை உணர்கிற வகையில் பொருட்களை காட்டினார். வீட்டில் குழந்தைகள் வேலையே செய்ய விடக்கூடாது என்று இருந்த பொழுது எளிய செயல்களை செய்ய வைத்து பிள்ளைகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டார்.

மாணவர்கள் ஆசிரியர்களை கவனிக்க வைக்க நாம் முயலக்கூடாது,ஆசிரியர் மாணவரை கவனித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னவர் அப்படியே பிள்ளைகளை நடத்தினார். வண்ண அட்டைகள்,ஒலி எழுப்பும்கருவிகள்,ஓவியங்கள்,வண்ணத்தாள்கள், புட்டிகள் என்று குழந்தைகளின் கற்றலை வண்ணமயமானதாக இந்த வகுப்புகள் மாற்றின. அவரின் கல்விமுறையில் படித்து சாதித்தவர்கள் தான் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனர்கள் ஆகியோர் இவரின் கல்விமுறையில் படித்தவர்களே. இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது இல்லையா?.

  • தொடங்கியவர்

இணையத்தையே இஸ்தம்பிக்க வைத்த நெகிழ்ச்சியான வீடியோ

  • தொடங்கியவர்

பிரியங்கா சோப்ரா: ஒயிலாய்த் தோன்றிய எழில்

 
priyanka_3161197f.jpg
 
 
 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது மெட்ரோபாலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட் என்னும் நவீன உடை வடிவமைப்பு நிறுவனம். இங்கே ஆண்டுதோறும் ஃபேஷன் ஷோ நடைபெறுவது வழக்கம். மனத்தைக் கிறங்கடிக்கும் நவீன பாணி உடையை அணிந்துவரும் பிரபலங்களின் மேடைத் தோற்றம் உலகெங்கிலும் உள்ள உடை பிரியர்களையும் கவர்ந்துவிடும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலம் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார். இந்த ஆண்டில் இந்த ஃபேஷன் ஷோ நிகழ்வின் தொடக்க நாளில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். ட்ரென்ச் கோட் ஸ்டைல் கவுனை அணிந்துவந்து அனைவரது கவனத்தையும் அவர் ஈர்த்தார். அவர் அணிந்திருந்த அந்த உடையை வடிவமைத்தவர் ரால்ஃப் லாவ்ரென். அந்த நிகழ்வின் அவரது எழில்மிகு தோற்றம் இங்கே உங்களுக்காக…

p1_3161196a.jpg

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.