Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

என் பாதையில்: முத்தங்களுக்கு அர்த்தம் என்ன?

 

 
 
kiss_3161694f.jpg
 
 
 

பெற்றோருக்கு ஆசிரியர் அனுப்பும் ‘Come and meet me’ என்ற ‘குறிப்பு’இல்லாமல் என் மூத்த மகன் ஒருநாளும் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதில்லை! வழக்கம்போல பள்ளியிலிருந்து மகனை அழைத்து வரச் சென்றேன். வழியில் டிராபிக் ஜாம் ஆகிவிட்டதால், சற்று தாமதமாகிவிட்டது. சீருடையில் இருக்கும் மகனைக் கண்டுபிடிக்க எப்போதும் சிறிது தடுமாறுவேன். ஆனால் அன்று அவன் எனக்கு அந்தச் சிரமத்தைக் கொடுக்கவில்லை! சட்டென்று தெரியும் விதத்தில் அவன் வகுப்பு ஆசிரியருடன் தனியாக நின்றிருந்தான். பள்ளி வாயிலுக்கே என்னைத் தேடி வரும் அளவுக்கு அவன் செய்த வால்தனம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். என்னவாக இருந்தாலும் சமாளித்துவிட உறுதிகொண்டேன். குழந்தைகளைக் கடந்து ஒருவழியாக அவனிடம் போய்ச் சேர்ந்தேன்.

கன்னத்தில் முத்தமிட்டால்...

ஆசிரியரின் முகம் இறுக்கமாக இருந்தது. “நீங்கள் பள்ளி முதல்வரைச் சந்திக்க வர வேண்டும்” என்றார். திடுக்கிட்ட நான், என்ன விஷயம் என்று கேட்டேன்.

“அசிங்கமான, அவமானகரமான, அருவருப்பான செயலை உங்கள் மகன் செய்திருக்கிறான்” என்றார் ஆசிரியர்.

இந்த மூன்று ‘அ’வார்த்தைகளும் என்னை ஆணியடித்ததுபோல அசைய விடாமல் நிறுத்திவிட்டன. சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு, நடந்ததைக் கூறும்படிக் கேட்டுக்கொண்டேன்.

“உங்கள் மகன் சக மாணவிக்கு முத்தம் கொடுத்துவிட்டான்” என்று கோபத்துடன் வார்த்தைகளை வீசினார்.

சே, இவ்வளவுதானா விஷயம் என்று ரிலாக்ஸ் ஆனேன். ஆசிரியரோ முதல்வரிடம் அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தார். என் மகனைப் பார்த்தேன். ‘பயப்பட ஒன்றும் இல்லை, நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்ற அர்த்தத்தில் அவனிடம் ஒரு புன்னகை புரிந்தேன்.

இப்படிச் செய்யலாமா?

“யாருக்கு முத்தம் கொடுத்தான்?”

“யஷ்வந்தி.”

“இதற்கு முன் என் மகன் யாருக்காவது முத்தம் கொடுத்திருக்கிறானா?”

“இல்லை.”

“யஷ்வந்திக்கு?”

“இல்லை. வாருங்கள் முதல்வரைச் சந்திப்போம். பள்ளியில் முத்தம் கொடுக்கலாமா? அதுவும் சக மாணவிக்கு? ஒரு மாணவன் செய்யக்கூடிய செயலா அது?” என்று பொறுமையிழந்து கேள்விகளை அடுக்கினார் ஆசிரியர்.

நிதானமடைந்தேன். பாலின பேதத்தை லாகவமாகக் கையாள வேண்டியது மிக முக்கியம், மிக அவசியம். மாணவ, மாணவிகளுக்கு இடையே நடக்கும் செயல்களைக் கவனமாக உற்றுநோக்கி, விஷயம் ஒன்றுமில்லை என்று தெளிவு படுத்துவதுதானே ஆசிரியர்களின் கடமை?

எல்லா முத்தமும் ஒன்றா?

“ஒருவேளை அவன் உங்களுக்கு முத்தம் கொடுத்திருந்தால்?”

என் கேள்வியை ஆசிரியர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை

அவரது முகக் குறிப்புகள் உணர்த்தின. அவர் பேசுவதற்கு இடம் தராமல்,

“எனக்கு இரண்டே மகன்கள்தான். பெண் குழந்தைகள் இல்லை. பெண் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்ற என் கணவரின் திட்டம் சாத்தியமாகவில்லை. இருபாலர் படிக்கும் பள்ளி என்பதால்தான், இந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தோம். மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் இவனுக்கு இடம் கிடைத்தது. ஆனால் அங்கே பெண்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்காது. அவன் வளர வளர பெண்களிடம் பழக வேண்டிய சந்தர்ப்பம் அதிகரிக்கும் . சிறு வயது முதல் பெண்களிடம் பழகிவரும்போது, வேறுபாடின்றி நட்புடன் பழகுவதற்கான சூழல் கிடைக்கும். பதின் வயதில் எதிர்பாலின ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அப்போது அவனிடம் விஷயத்தைப் புரியவைக்க முடியும்.

பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், அவர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற புரிதல் ஓரளவுக்காவது அவனுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை இந்தப் பள்ளி அளிக்கும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தோழன், தோழி, கணவர் கொடுக்கும் முத்தங்களுக்கு அர்த்தமும் வேறுபாடும் நமக்குத்தான் தெரியும், புரியும். குழந்தைகளுக்குப் புரியவும் புரியாது, தெரியவும் தெரியாது,” என்றேன்.

ஆசிரியர் அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஆசிரியர் பயிற்சியை முழுவதும் முடித்திருப்பீர்கள் என்று எண்ணு கிறேன். முதலில் குழந்தைகளைக் கையாள்வதைக் கற்றுக்கொள்ளுங்கள். அதை விடுத்து புகார் பத்திரம் வாசிக்காதீர்கள். வாருங்கள் முதல்வரைச் சந்திக்கலாம்” என்றேன்.

முத்தம் ஏன்?

பிறகென்ன, நானும் என் மகனும் வீட்டுக்கு வந்து நிம்மதியாக மதிய உணவை முடித்தோம். வீட்டில் நடந்தவற்றை நானும் பள்ளியில் நடந்தவற்றை அவனும் தினசரி கதைப்பது வழக்கம்.

“ஆமாம், நீ ஏன் அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தே?” என்று மெதுவாகக் கேட்டேன்.

“திடீர்னு நம்ம தம்பி ஞாபகம் வந்திருச்சும்மா…”

சட்டென்று என் மகனை வாரி அணைத்துக்கொண்டேன். அந்தப் பெண்ணின் பெயர் யஷ்வந்தி. என் இரண்டாவது மகன் யஷ்வந்த். இந்தச் சம்பவம் என் மகன் யூ.கே.ஜி. படிக்கும்போது நடந்தது. இப்போது அவன் முத்தங்களுக்கு அர்த்தம் புரிந்தவனாக வளர்ந்துவிட்டான்!

 

 

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கின்னஸ் சாதனை புரிந்த ஈஷாவின் ‘ஆதியோகி சிலை’..!

 
 
 

கோவை, ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள, ‘ஆதியோகி சிலை’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆதியோகி


கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு கொண்ட சிலை என்று அறிவித்து, அங்கீகாரம் அளித்துள்ளது கின்னஸ் புத்தகம். கடந்த பிப்ரவரி மாதம், 112 அடி உயரத்தில், 81 அடி அகலத்தில், 147 அடி நீளத்தில் அமைந்துள்ள சிலையின் பிரமாண்ட திறப்பு விழாவினை மோடி தலைமைதாங்கி நடத்தி வைத்தார்.


தற்போது இச்சிலைக்கு ’உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை’ என்ற அங்கீகாரத்தை கின்ன்ஸ் புத்தகம் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பினை அங்கீகரித்து மத்திய அரசு அந்தத் தலத்தினை அதிகாரப்பூர்வ சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், ‘ஆதியோகி’ போன்றே மேலும் மூன்று சிலைகளைத் திறக்க திட்டமுள்ளதாக, ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈஷா மையம் 2006-ம் ஆண்டு, அதிக மரக்கன்றுகளை நட்டதற்காக, கின்னஸ் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Text

ஹிந்தித் திரையுலகின் கவர்ச்சி ராணி சன்னி லியோனின் பிறந்தநாள்.

தமிழிலும் 'வட போச்சே'யில் கலக்கியவர் சன்னி
Happy Birthday Sunny Leone

ஆயிரக்கணக்கான இளைஞரின் அன்பை வென்றுள்ள நடிகை இவர்

Sunny+Leone+HD+Photo+Collection+-+raag.fm+(18).jpg

  • தொடங்கியவர்

ஹாலிவுட்டின் அடுத்த பிரமாண்டம்... ஜாக்கி சான் - சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் இணையும் ஆக்‌ஷன் படம்!

 
 

Syl_2_400_02463.jpg

அதிரடி மன்னன் ஜாக்கி சான் மற்றும் ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் கிங் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் இணைந்து முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையம்சம்கொண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளனராம். இப்போது, ஹாலிவுட்டின் ஹாட் டாப்பிக் இதுதான்.

'எக்ஸ்பெண்டபல்ஸ்' வரிசைத் திரைப்படங்களின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஸ்டாலோன், இப்போது ஜாக்கியுடன் கை கோத்திருப்பது படத்தின் வீச்சை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்துக்கு 'எக்ஸ்-பாக்தாத்' (Ex- Baghdad) என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்.

 

இரண்டு முன்னாள் அதிரடிப்படை வீரர்கள், பாக்தாத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பாக  அழைத்து வருவதுதான் கதைக் கரு. கிட்டத்தட்ட 80 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுக்க திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறதாம். த்ரில்லர், ஆக்‌ஷன், விறுவிறுப்பு என்ற எதற்கும் பஞ்சம் இல்லாத வகையில் இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தொடங்கியவர்

 

சென்னை : வங்கி சேவையில் ரோபோ அறிமுகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் வாடிக்கையாளர் சேவையில் மனித உருக்கொண்ட ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவே இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது.


குரல் மற்றும் தரவு உள்ளீடு வழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்த ரோபோ துல்லியமாக பதிலளிக்கின்றது.


வாடிக்கையாளரின் வங்கி இருப்பு உள்ளிட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கும் இந்த ரோபோ, முதல் கட்டமாக 125 தலைப்புகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தருகிறது.


ஆங்கிலத்தில் மட்டுமே தற்போது பதிலளிக்கும் ரோபோ, விரைவில் பிராந்திய மொழிகளிலும் பேசும் என இந்த நூதன முயற்சியை அறிமுகப்படுத்தியிருக்கும் சிட்டி யூனியன் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


வரவேற்பறையில் வங்கி வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கும் இந்த ரோபோக்களின் சேவை, வங்கியின் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள தயாராகும் என நம்பப்படுகிறது.


மனித உருக்கொண்ட இந்த ரோபோக்களின் வருகை வங்கிகளின் தானியங்கி சேவையின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.


வங்கிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் காத்திருப்பு நேரங்களை குறைக்க இது போன்ற புதிய முன்முயற்சிகள் வேண்டும் என்றே வாடிக்கையாளர்களும் கூறுகின்றனர்.

  • தொடங்கியவர்

விவேகம் டீசர் #கல்பனா அக்கா வெர்ஸன் .

  • தொடங்கியவர்

சீனாவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய ஊழியருக்கு குவியும் பாராட்டு

 

 
சீனாவில் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றும் ரயில்வே ஊழியர் | படம் உதவி: சீனா டெய்லி .காம்
சீனாவில் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றும் ரயில்வே ஊழியர் | படம் உதவி: சீனா டெய்லி .காம்
 
 

சீனாவில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நொடிப் பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சீனாவின் ஃபுஜைன் மாகாணத்திலுள்ள சியான்யூ ரயில் நிலையத்தில் புதன்கிழமை மதியம் 2.50 மணியளவில், இளம்பெண் ஒருவர் மன அழுத்தத்துடனும், சோர்வுடனும் நடைமேடையில் நின்று கொண்டிருந்ததை ரயில்வே அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

அப்பெண்ணிடம் அதிகாரிகள், அவர் செல்லும் ரயில் எண் குறித்து கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் அதற்கு பதிலளிக்காமல் ரயில் வரும் பாதையையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். இதனை சியான்யூ ரயில் நிலையத்தில் ஊழியராகவுள்ள வெங் ஜியான்சாங் கவனித்து வந்திருக்கிறார்.

அப்போது அதிவிரைவு ரயில் D6529 வேகமாக வந்து கொண்டிருக்கும்போது, அப்பெண் அந்த ரயிலை நோக்கி நடைபாதையிலிருந்து பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு சற்று பின்னால் நின்று கொண்டிருந்த வெங் விரைந்து சென்று அப்பெண்ணை பிடித்து இழுந்து காப்பாற்றியுள்ளார். இந்தக் காட்சி அந்த ரயில்வே நிலையத்திலுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

அதன்பின் தற்கொலைக்கு முயன்ற பெண் அவரது குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அப்பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அப்பெண்ணைக் காப்பாற்றிய வெங்கின் தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டது.

வெங் ஜியான்சாங்கின் இந்த துணிச்சலான செயலுக்கு 6,000 யுவான் பரிசுத் தொகை வழங்கி மாகாண அரசு அவரைப் பாராட்டியுள்ளது. பல்வேறு தரப்புகளிடமிருந்து வெங்குக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

http://tamil.thehindu.com

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

 
 
ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வாத்தியக் கலைஞரான தவில் இசை வித்தகர் இணுவில் வி. தெட்சணாமூர்த்தி அவர்களின் நினைவு தினம்.
  • தொடங்கியவர்

ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே கவனம் பெற்ற வோடபோன் தம்பதிகள்

 
கோப்புப் படம்: வோடபோன் விளம்பரத்தில் வி.பி. தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன்
கோப்புப் படம்: வோடபோன் விளம்பரத்தில் வி.பி. தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன்
 
 

ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே ஒளிபரப்பப்படும் வயதான தம்பதியினர் இருவரின் கோவா பயணம் பற்றிய வோடபோன் விளம்பரம் பெரும்பாலனவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடன கலைஞர்களும், தம்பதிகளுமான சாந்தா தனஞ்செயனும், வி.பி.தனஞ்செயனும் வோடபோனின் புதிய விளம்பரத்தில் நடித்ததன் மூலம் நடிகர்களாக புதிய அவதாரம் எடுத்துள்ளனர்.

பத்ம பூஷண் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த சாந்தா தனஞ்செயனும், வி.பி.தனஞ்செயனுக்கு இந்த வோடபோன் விளம்பரம் புதிய அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இந்த விளம்பரத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர்கள் கூறியதாவது," உங்களால் நம்ப முடியுமா? நாங்கள் உலகில் பெரும்பாலான இடங்களுக்கு பயணம் செய்துள்ளோம். ஆனால் கோவாவுக்கு பயணம் செய்ததில்லை.

ஆனால் எதிர்பாரதவிதமாக விளம்பர இயக்குனர் பிரகாஷ் வர்மா தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஐபிஎல் தொடருக்காக வோடோ போனின் புதிய விளம்பர தொடரில் நாங்கள் நடிக்க வேண்டும் என்று கூறி அதற்காக நாங்கள் கோவாவுக்கு செல்லவும் ஏற்பாடு செய்தார்.

12-mp-DhananjayG8C_3164142a.jpg

இந்த விளம்பரத்தின் மூலம் இதற்கு முன்னர் நாங்கள் செய்திருந்தாத பல செயல்களை செய்ய வாய்ப்பு கிடைத்தது. உதாரணத்துக்கு பாரசூட்டில் பறப்பது, ஸ்கூட்டர் ஓட்டுவது, கடற்கரையில் விருந்து கொண்டாடுவது போன்றவைகளை நாங்கள் செய்தோம்.

இந்த விளம்பரத்தில் ஆறு பிரிவுகள் இருந்தன. என்னிடம் (வி.பி.தனஞ்செயன்) விளம்பரத்தில் நடிப்பதற்கு முந்தைய நாள், ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும் என்று கூறினார்கள். உண்மையின் நான் இதற்கு முன்னர் ஸ்கூட்டர் ஓட்டியது கிடையாது. கடைசி நிமிடத்தில் சில பயிற்சிகள் எடுத்துக் கொண்டு அதிசயமாக ஒட்டி விட்டேன்.

இதற்கு முன்னரும் நாங்கள் பல விளம்பரங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் பயணம் தொடர்பான கதாப்பாத்திரங்களை நடிப்பது ஆவலாக இருந்தது. நாங்கள் எப்போதும் புதிய முயற்சிகளை செய்ய விரும்புகிறவர்கள். மேலும் அந்த விளம்பரக் குழுவில் இருந்தவர்கள் எங்களை அக்கறையோடு பார்த்துக் கொண்டனர்.

வோடபோனின் இவ்விளம்பரத்தில் நடிக்க உண்மையான தம்பதிகளை தேடியுள்ளனர். எங்களது மகன் சத்யஜித்தின் நண்பரும் இந்த விளம்பரத்தில் பங்கெடுத்திருக்கிறார். அவருக்கு எங்களை பற்றி தெரிய வர இந்த விளம்பரத்தில் நடிக்க எங்களை அணுகினர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நாங்கள் எதிர்பார்த்திருந்த கோவா செல்வதற்கு காரணமும் கிடைத்தது.

இந்த விளம்பரத்தை பார்த்த எங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எங்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக கூறினர்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 14
 

article_1431577683-rohanaw.jpg1610: பிரான்ஸில் 4 ஆம் லூயி மன்னன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து 13ஆம் லூயி ஆட்சிக்கு வந்தார்.

1643: பிரான்ஸில் 4 வயதான 16 ஆம் லூயி மன்னராக முடிசூடப்பட்டார்.

1796: எட்வட் ஜென்னரால் சின்னம்மை நோய்கக்hன தடுப்பூசி ஏற்றப்பட்டது.

1870:  நியூஸிலாந்தில் முதலாவது றக்பி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

1879: இந்தியாவிலிருந்து பிஜிக்கு அழைத்து செல்லப்பட்ட 463 தொழிலாளர்களின் முதல் தொகுதியினர் பிஜியை சென்றடைந்திருந்தனர்.

1940: ஜேர்மனியிடம் நெதர்லாந்து சரணடைந்தது.

1948: இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது. இப்பிரகடனத்தையடுத்து இஸ்ரேல் மீது அரபுநாடுகள் தாக்குதலை ஆரம்பித்தன.

1955: 8 கம்யூனிஸ நாடுகள் இணைந்து வார்ஷோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

1963: ஐ.நாவில் குவைத் இணைந்தது.

1965: இலங்கையில் ரோஹண விஜேவீரவினால்  மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1973: அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையமான ஸ்கைலாப் ஏவப்பட்டது.

2004: டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "மேரி டொனால்ட்சன்" என்னும் பெண்ணை திருமணம் தார்.

2013: 2,300 வருடங்கள் பழமையான மாயன் பிரமிட்டுக்கள் தகர்க்கப்பட்டன. 

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அன்னையர் தினத்தை சிறப்பித்த ’கூகுள் டூடுல்’

உலக அன்னையர் தினத்தையொட்டி  தாய்மையை போற்றும் ”கூகுள் டூடுல்” இன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் சர்ச் இஞ்சினின்  முகப்பு பக்கமான டூடுலில், இன்று உலகம் முழுவதும் உள்ள அன்னையரை போற்றும் வகையில் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்மாக்களின் தியாகத்தை கார்டூன் வாயிலாக கதையாக வெளிப்படுத்தி உள்ளது. ஒரு கள்ளிச்செடியின் கர்ப்பம் தொடங்கி, குழந்தை பிறப்பு, வளர்ப்பு உள்ளிட்டவற்றை அழகான எளிமையான அனிமேஷன் மூலம் கதையாக வெளிப்படுத்தி உள்ளது. 

mothers day gif

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

தாய் குரங்கின் பிள்ளைப் பாசம்: இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்

 

 
monkey

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் புகைப்படக் கலைஞராக இருக்கும் அவினாஷ் அங்குள்ள குரங்குகளை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, அங்கு ஒரு அம்மா குரங்கு அவினாஷின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அம்மா குரங்கு தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு இருக்கும்போதே, திடீரென, தனது குழந்தை குரங்கு சுயநினைவு இழந்து விடுகிறது. குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அம்மா குரங்கு அழுகிறது. தொடர்ந்து இந்தக் காட்சிகளை படம் எடுத்துக் கொள்கிறார் அவினாஷ்.

அவரால் இந்த காட்சிகளை படம் பிடித்த பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பேச முடியவில்லை. பாலூட்டி வகையைச் சேர்ந்த குரங்கிற்கும் இந்த அளவிற்கு பாசம் இருக்குமா? அந்த சோகத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை என்று வருந்துகிறார் அவினாஷ்.

இந்தப் புகைப்படத்தை கடந்த ஏப்ரல் மாதம் அவினாஷ் எடுத்துள்ளார். ஆனாலும், தற்போதுதான் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

மே 14 - உலக அன்னையர் தினம் இன்று!

 

 
mothers-day

 

அன்னையர் நாள் (Mother's day) என்பது உலக அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.

இது இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக இங்கிலாந்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது.

அன்னையர் தின நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை நினைவு கொள்ளத்தக்க ஒரு விடுமுறை தினம் என்று கருதினர். அன்னா தான் முதலில் விடுமுறையை உருவாக்குவதற்கு உதவியதிலிருந்து மாறி, இறுதியில் அன்னையர் தின விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

'நீ பாதியிலேயே திரும்பி விடுவாய்' என முன்கூட்டியே அலக்ஸாண்டரை எச்சரித்த கிரேக்க ஞானி!

லக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுக்கச் செல்வதற்கு முன் தியோஜினிஸ் என்னும் கிரேக்க ஞானியைச் சந்திக்க விரும்பினார். தியோஜினிஸ் கிரேக்க நாட்டின் நதிக்கரை ஒன்றில் ஒரு பரதேசியைப் போல் அமர்ந்திருந்தார். காலை பொழுது... இளம் சூரியன், குளிர்ந்த மணல். இளம் காற்று வீசுகிறது. மிகவும் உற்சாகத்துடன் தியோஜினிஸ் இருந்தார். இந்தியாவை நோக்கிய பயணத்தில், தான் சந்திக்கச் சென்றவருடைய தோற்றத்தைப் பார்த்த அலக்ஸாண்டர் திகைத்தார். அலக்ஸாண்டர் ஆடை அலங்காரங்களை பூட்டிக்கொண்டும் எல்லா ஆபரணங்களையும் அணிந்தவராக இருந்தார். பதட்டத்துடன் இருந்தார். ஆனால், தியோஜினிஸ் முன்னால் யாசகம் பெற வந்தவர் போல் நின்றார் அலக்ஸாண்டர்.

அலக்ஸாண்டர்

'உங்களோடு ஒப்பிடும்போது நான் ஏழையாக உள்ளேன். உங்களிடமோ ஒன்றுமேயில்லை. எது உங்களைச் செல்வந்தனாக்கி வைத்திருக்கிறது?' என்றார், அலக்ஸாண்டர். 'எனக்கு எந்த ஆசையும் இல்லை, என்னிடம் எதுவுமில்லை. எதுவும் என்னுடையது என்று இல்லாமல் இருப்பதே என் பலம். நான் என்னை வென்றுவிட்டதால் உலகை வென்றுவிட்டேன். என்னுடைய வெற்றி என்னோடு வரப்போகிறது. உன்னுடைய வெற்றி நீ இறக்கும்போது உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படப் போகிறது' என்றார்.

அலக்ஸாண்டர் சற்று திகைப்படைந்தார். அவர் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

தியோஜினிஸ்: நீ எங்கே, எதற்காகப் போகிறாய்?

அலக்ஸாண்டர்: இந்தியாவை வெல்லப் போகிறேன்.

தியோஜினிஸ்: இந்தியாவை வென்றபின் என்ன செய்வாய்?

அலக்ஸாண்டர் சிலை

அலக்ஸாண்டர்: உலகத்தை வெல்வேன்.

தியோஜினிஸ்: உலகம் முழுவதையும் வென்றபின் என்ன செய்வாய்?

அலக்ஸாண்டர்: அதற்குப்பின் நிம்மதியாக ஓய்வெடுப்பேன்.

தியோஜினிஸ் சிரித்தார், தன் நாயைக் கூப்பிட்டார். நாயைப் பார்த்துக் கூறினார். 'இவர் சொல்வதைக் கேட்டாயா? உலகத்தை வென்றபின் இந்த மனிதர் ஓய்வெடுக்கப் போகிறாராம்! இங்கே நீ ஒரு சிறு இடத்தைக்கூட வெல்லாமல் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய்!' என்று நாயிடம் கூறிவிட்டு, அலக்ஸாண்டரிடம் தொடர்ந்தார். 'ஓய்வுதான் உன்னுடைய கடைசி லட்சியம் என்றால், இந்த அழகான ஆற்றங்கரையில் என்னுடனும், என் நாயுடனும் இங்கே இப்போதே நீ சேர்ந்துகொள்ளலாமே! இங்கே நம் எல்லோருக்கும் தேவையான இடம் இருக்கிறது. நான் இங்கே ஓய்வெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். இறுதியில் ஓய்வெடுப்பதற்காக ஏன் உலகம் முழுவதும் துன்பம் துயரங்களை உருவாக்க வேண்டும்? இப்போதே இங்கேயே நீ எங்களுடன் சேர்ந்து ஓய்வெடுக்கலாமே!' என்றார்.

அலக்ஸாண்டர் (சற்று வெட்கப்பட்டார்.) 'நீங்கள் சொல்வது அறிவுப்பூர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால், நான் இப்போது ஓய்வெடுக்க முடியாது. உலகத்தை முதலில் வென்றுவிட்டு வருகிறேன்' என்று கூறிக் கிளம்பினார்.

தியோஜினிஸ்: உலகத்தை வெல்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும் சம்பந்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உலகத்தை வெல்லாமல் இங்கேயே நான் நிம்மதியாக ஓய்வெடுக்கவில்லையா?

மாவீரன் அலக்ஸாண்டர்

அலக்ஸாண்டர்: நீங்கள் சொல்வது நியாயம்தான், ஆனால், நான் இந்தியாவைக் கைப்பற்றுவதற்காகப் புறப்பட்டுவிட்டேன். இடையில் நிறுத்த விருப்பமில்லை.

தியோஜினிஸ்: நீ பாதி வழியைத் தாண்டமாட்டாய்.

(இந்தியாவை முழுமையாகக் கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்த, அலக்ஸாண்டர் கீரிசை அடையவேயில்லை. பாதி வழியிலேயே இறந்து போனார். இவ்வாறே சேர்க்கும் செல்வங்களை அனுபவிக்காமலேயே எல்லா அலெக்ஸாண்டர்களும் இறந்தே போகிறார்கள்).

இந்தியாவுக்குச் செல்லும்போது அலக்ஸாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் அவரிடம் சொல்லியிருந்தார் 'நீ திரும்பும்போது உன்னுடன் ஒரு இந்தியத் துறவியை அழைத்துவா! நான் பார்க்கவேண்டும். இறப்புக்குப் பின் என்ன? ஆன்மா என்றால் என்ன? தியானம் என்றால் என்ன? சந்நியாசம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

இந்தியாவிலிருந்து திரும்பும்போது அலக்ஸாண்டர் இந்தியாவிலிருந்தவர்களிடம் விசாரித்து, அவர்கள் கூறிய ஞானியை சென்று சந்தித்தார். அவரது பெயர் தந்தமெஷ் தந்தமெஷின் அருகாமையில் சென்றதும், தியோஜினிஸ்தான் அலக்ஸாண்டருடைய நினைவுக்கு வந்தார். அதே அழகு, அதே பார்வை, அதே தோற்றம்எஸ்.குருபாதம்

அலக்ஸாண்டர்: நான் உங்களை கிரேக்கத்துக்கு அழைத்துப் போக வந்திருக்கிறேன். என்னோடு வந்துவிடுங்கள். அரச விருந்தினராக இருக்கலாம். எல்லா சௌகரியங்களும் செய்து தருகிறேன். என்னோடு ஏதென்ஸுக்கு வாருங்கள்' என்றார்.

தந்தமெஷ் : வருவது போவது எல்லாமும் கழித்துவிட்டவன் நான். வந்தது யாருமில்லை... சென்றது யாருமில்லை. வந்தவர் யாரோ அவர் யாருமில்லை, சென்றவர் யாரோ அவர் யாருமாகவும் இல்லாதவர்

அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. (துறவி சொன்ன கருத்து: இனி உலகுக்கு வருவதும் இல்லை, உலகத்திலிருந்து போவதுமில்லை. வருவதையும் போவதையும் கடந்துவிட்டவன் நான். கருவறைக்குள் வருவதையும், மரணத்துக்குள் போய்விடுவதையும் கடந்துவிட்டேன் என்பதுதான்).

அலக்ஸாண்டர்: இது என் ஆணை வாருங்கள்.

தந்தமெஷ்: கடகடவென்று சிரித்தார். யாரும் எனக்கு ஆணையிட முடியாது. மரணம்கூட எனக்கு ஆணையிட முடியாது.

துறவியின் பேச்சு தியோஜினிஸை இவருக்கு ஞாபகமூட்டியது.

அலக்ஸாண்டர்: (வாளைப் பார்த்தவாறே) என்னோடு வந்து விடுங்கள்.

தந்தமெஷ்: நீ என்ன செய்வேன் என்று சொல்கிறாயோ அதை நான் என்றோ செய்து விட்டேன். தலை உருண்டு விழும்போதுஉன்னோடு சேர்ந்து நானும் வேடிக்கை பார்ப்பேன்.

அலக்ஸாண்டர்: எப்படிப் பார்க்க முடியும்? நீங்கள் இறந்து விடுவீர்களே!

தந்தமெஷ்: நான் இனிமேல் இறக்க முடியாது. என்னுடைய மரணத்தை நீ வேடிக்கை பார்ப்பது போல் நானும் வேடிக்கை பார்ப்பேன், நீயும் பார்ப்பாய். இந்த உடலின் பயனும் நிறைவேறிவிடும். நான் ஏற்கெனவே போய்ச் சேர்ந்துவிட்டவன். அந்த உடல் இனியும் இருக்க வேண்டியதில்லை. தலையை வெட்டிச் சாய்த்துவிடு.

மக்கள்

அவரது கண்கள் அகன்று விரிந்ததன.

அலக்ஸாண்டர் தன் வாளை உறையில் போட்டார். அவரை உற்றுநோக்கினார். உள்மாற்றம் உணர்ந்தார். மரியாதையுடன் பின் நகர்ந்தார். அலக்ஸாண்டர் இறக்கும்போது தியோஜினிஸ், தந்தமெஷ் இருவரையும் நினைவுகூர்ந்தார். மரணத்தை தாண்டிய ஒன்று அவர்களிடம் இருந்தது. மரணத்துக்கு அப்பால் இருப்பதை, அவர்களிடம் கண்டேன். அவர்களிடம் இருந்தது என்னிடம் இருக்கவில்லை, என்னிடமோ ஒன்றுமில்லை” என்று அழுதார்.

தனது சேவர்களை அழைத்தார். 'தான் இறந்த பின்பு தன்னுடைய உடலை கல்லறைக்குத் தூக்கிக் கொண்டு போகும்போது தன் கைகளை வெளியே தொங்குமாறு போடுங்கள்' என்று ஆணையிட்டார். மந்திரிகள், சேவகர்கள் எதற்காக? என்று பவ்வியமாகக் கேட்டனர்.

அலக்ஸாண்டர்: “வெறுங்கையோடு வந்தேன், வெறுங்கை யோடு போகிறேன் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். என் வாழ்க்கை முழுக்க வீணாகிப் போய்விட்டது. எல்லோரும் பார்க்கும்படியாக என் கைகள் வெளியே தொங்கட்டும். மாவீரன் அலக்ஸாண்டர் எதையும் எடுத்துச் செல்லவில்லை. வெறுங்கையோடுதான் போகிறான்” என்பதை உலகம் அறியட்டும் என்றார்.

 

எஸ்.குருபாதம், சமய மெய்யியல் ஆய்வாளர் , எழுத்தாளர் டொரொன்டோ, கனடா

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

புன்னகைக்கும் மோனலிசாவின் வீடு

 
monalisa_3164075f.jpg
 
 
 

மோனலிசா புன்னகைக்கும் ஓவியத்தைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் அபூர்வம்தான். அந்த ஓவியத்தின் பிரதியையும் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்போம். அந்தப் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் இத்தாலியைச் சேர்ந்த லியானார்டோ டாவின்சி. இந்தப் புகழ்பெற்ற ஓவியத்தின் அசல் பிரதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியத்தில்தான் இருக்கிறது. இதைப் புன்னகைக்கும் மோனலிசாவின் இருப்பிடம் எனலாம். இந்த ஓவியம் மட்டுமல்லாமல் உலகின் பிரபலமான பல ஓவியங்களையும் சிற்பங்களையும் தன்னிடத்தில் கொண்டிருக்கிறது இந்த அருங்காட்சியகம். இது உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று.

தொடக்கத்தில் ஒரு கோட்டையாக எழுப்பப்பட்டிருந்தது இந்தக் கட்டிடம். 1546-ல் இதை அரண்மனையாக உருமாற்றியவர் மன்னர் முதலாம் பிரான்சிஸ். 1793-ல் மன்னன் பதினான்காம் லூயி தன் இருப்பிடத்தை வெர்செயிலெஸ் நகருக்கு மாற்றிவிட, லூவர் கலைக்கூடமானது. விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று இப்போதைய அதன் பரப்பு ஆறரை லட்சம் சதுர அடிக்கும் அதிகம்.

louvre_2_3164076a.jpg

மோனலிசா ஓவியம்

இங்குள்ள ஓவியங்களின் பங்களிப்பில் மன்னர் நெப்போலியனுக்குப் பெரும் பங்கு உண்டு. எந்த நாட்டை வென்றாலும் அங்குள்ள கலைப் படைப்புகளை இங்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார். அப்போது நெப்போலியன் மியூசியம் என்றே அழைக்கப்பட்ட இது வாட்டர்லூவில் நெப்போலியன் தோல்வி கண்ட பிறகு, மீண்டும் லூவர் மியூசியம் என்றே அழைக்கப்படத் தொடங்கியது.

இங்கிருக்கும் அத்தனை படைப்புகளில் சுற்றுலாப் பயணிகளின் மிக அதிக ஆர்வத்தைத் தூண்டுவது ஒரு படைப்புதான். 21-க்கு 30 அங்குலம் அளவில் அது குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் பாதுகாப்பாக இருக்கிறது. போதாக்குறைக்கு அங்கு எக்கச்சக்கமாகப் பாதுகாப்பு வீரர்களும் இருக்கிறார்கள். அது மோனலிசா ஓவியம்.

லூவரின் நுழைவாயிலே அட்டகாசம். ஒரு பிரமிடு வடிவில் இருக்கிறது (டான் ப்ரவுன் எழுதிய பெரும் சர்ச்சைக்கு உள்ளான ‘டா வின்ஸி கோடு’ புதினத்தைப் படித்தவர்களுக்கு இந்த மியூசியம் இன்னும் சிறப்பானது. அந்தக் கதை தொடங்குவதும், முடிவதும் இங்குதான். ஏசுநாதர் மணமானவர் என்றும் அவர்களுக்கு மகதலின் என்ற மகள் உண்டு என்றும் கூறும் இந்த நூல் மகதலினின் கல்லறை லூவர் மியூசியப் பரப்பில்தான் உள்ளது என்கிறது).

glass_3164077a.jpg

ஐ.எம்.பெய் வடிவமைத்த பிரமிடு

1988-ல்தான் இந்த நவீன கண்ணாடி பிரமிடு எழுப்பப்பட்டது. என்றாலும் இன்று ஈஃபிள் டவர் போலவே லூவர் மியூசியத்தின் நுழைவாயிலும் பாரிஸ் நகரின் தனித்தன்மையைப் பறைசாற்றுகிறது.

பிரான்ஸில் உள்ள கலாச்சார அமைப்புக் கட்டிடங்களை எல்லாம் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்ற கருத்து கொண்டவர் அப்போதைய பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஃப்ராங்கோயிஸ் மிட்டராண்ட். ஐ.எம்.பெய் என்ற கட்டிடக்கலை நிபுணரைத் தேர்ந்தெடுத்து லூவர் மியூசிய நுழைவாயிலை வடிவமைக்கச் செய்தார்.

கட்டுமானத்தின்போது பல விமர்சனங்கள் எழுந்தன. தொன்மையான லூவர் மியூசியத்துக்கு நவீன கட்டுமான வடிவமைப்பு பொருந்தாது என்றனர் சிலர். எகிப்தை நினைவுபடுத்தும் பிரமிடு வடிவம் பிரான்ஸுக்கு எதற்கு? அதிலும் பிரமிடு என்பது சாவை நினைவுபடுத்தும் ஒன்றல்லாவா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர். சீன- அமெரிக்க வம்சாவளியில் வந்த ஒருவர் பிரான்ஸ் கலாச்சாரத்தை எப்படி உள்வாங்கிக் கொண்டு கட்டிடத்தை வடிவமைப்பார் என்றனர்.

லூவர் பிரமிடில் உள்ள கண்ணாடிகளின் எண்ணிக்கை சரியாக 666. இதுவும் எதிர்ப்பைக் கிளப்பியது. காரணம் கிறிஸ்தவ மதத்தில் இது சாத்தானின் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

நுழைவுச் சீட்டுகளை வாங்குவதற்காக இந்தப் புதிய பிரமிடுகளுக்குள்தான் நுழைய வேண்டும். உலக நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் குவிகிறார்கள். ஆனால் அருங்காட்சியத்தில் உள்ள அறிவிப்புகள் அத்தனையும் பிரெஞ்சு மொழியில் மட்டும்தான் இருக்கின்றன. ஒப்புக்குக்கூட அவர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தவில்லை.

மோனலிசா ஓவியம் சிறப்பாகத்தான் இருந்தது. மர்மப் புன்னகை காரணமாகவே பெரும் பிரபலம் அடைந்த ஓவியம். இந்த ஓவியத்தைப் பல கோணங்களிலிருந்து பயணிகள் பார்க்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் எங்கிருந்து பார்த்தாலும் மோன லிசா பார்வையாளரை நேரடியாகப் பார்ப்பதுபோலத் தோன்றுவதுதான்.

மோன லிசாவை விடச் சிறப்பானதாக வேறு பல ஓவியங்களைக் கருத முடிகிறது. ஏதோ நேற்றுதான் அவற்றை வரைந்ததுபோல காணப்படுகிற வண்ணங்களின் ஜாலம் மயக்க வைக்கிறது.

‘The raft of the Medusa’ ஓவியத்தின் அளவு அதிரவைக்கிறது. அகலம் கிட்டத்தட்ட ஏழு மீட்டர் இருக்கிறது. உயரம் அதைவிடக் கொஞ்சம் குறைவாக இருக்கும். மெடுசா என்று பெயரிடப்பட்ட கப்பல் மூழ்கியதும், அதிலிருந்த அத்தனைபேரும் இறந்ததும் அன்றைய பரபரப்புச் செய்திகள். தப்பித்த சிலர் சக மனிதர்களின் உடல்களைத் தின்று உயிர் தப்பினர்.

சிற்பங்களும் ஓவியங்களும்

சிற்பப் பகுதியும் உண்டு. ஓவியப் பகுதிக்குச் செல்லும் வழியிலேயே கூட சிற்பங்கள் உள்ளன. மைக்கேல் ஆஞ்சலோவின் ‘The dying slave’ குறிப்பிடத்தக்கது. அலெக்சாண்டரோஸ் கைவண்ணமான அஃப்ரோடைட், வீனஸ் என்ற பெயரில் மேலும் பிரபலமானது. இருகைகளும் வெட்டப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது இந்தச் சிற்பம். என்றாலும் அப்படியொரு நளினம், அழகு.

இங்குள்ள பல ஓவியங்கள் பிரான்ஸை ஆண்ட பல மன்னர்களுக்குச் சொந்தமானவை. வேறு பல ஓவியங்கள் வாடிகன் மற்றும் வெனிஸ் குடியரசோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் கொண்டுவரப்பட்டவை. டெனோன், ரிசெலூ, சுல்லி என்று மூன்று பிரிவுகளாக உள்ளது இந்த மியூசியம். ஒவ்வொன்றிலும் குறைந்தது 70 அறைகள். பைபிள் காட்சிகள் ஓவியங்களாகச் சொக்க வைக்கின்றன. ஒரே ஓவியத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதும், ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மையோடு காணப்படுவதும் பிரமிப்பை உண்டாக்குகிறது.

நெப்போலியன் பட்டாபிஷேகக் காட்சி ஓவியத்தில் காட்சி தரும் ஒவ்வொருவரும் ஒரு சலவைக்கல் சிலை போலவே காட்சி தருகிறார்கள். இதை வரைந்தவர் அந்த விழாவை நேரடியாகக் கண்ட ஓவியர் ஜெக்வஸ் லூயி டேவிட். யுகேன் டெலக்ரோயிக்ஸ் கைவண்ணமான ‘மக்களை வழிநடத்தும் சுதந்திர தேவியின்’ கையில் காணப்படும் பிரெஞ்சுக் கொடி அந்த நாட்டு மக்களுக்கு ஒரு தனி உற்சாகத்தை அளிக்கிறது.

குறைந்தது 35,000 கலைப் படைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றையும் பார்ப்பதற்கு இரண்டே நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டால்கூட முழுவதையும் ஒரே நாளில் கண்டு ரசிக்க முடியாது. அதனால் பெரும்பாலானவற்றைப் பார்க்கலாமல்தான் திரும்பி வருகிறார்கள் சுற்றுலாப் பயணிகள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text und Nahaufnahme

உலகின் No 01 சமூக வலைத்தளம் பேஸ்புக்கின் நிறுவுனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு இன்று பிறந்த நாள்
உலகத்தை இணைக்க வேண்டும் என்ற கனவுடன். 2004 ஆம் ஆண்டு உலகில் உள்ள இணைய பயனாளர்களை ஒருசேர இணைக்கும் முகமாக முகப்புத்தகத்தை தொடக்கி வைத்தார்.

நீண்ட நெடிய முயற்சிகள் மூலம் தன் தூங்கும் அறையில் தொடங்கப்பட்ட பேஸ்புக்
வலைத்தளத்தால் நம் எல்லோரையும் வசியப்படுத்தி அதன் தாக்கத்தால் பைத்தியமாக்கியவர்.

இவருக்கு தமிழில் பேசவோ, எழுதவோ தெரியாது ஆனால் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் "நல்விதிகளின் ஐந்தை" நேர்த்தியாக கடைப்பிடிப்பித்தவர். உலகின் இளம் பில்லியனர்களின் ஒருவராக திகழும் இவர் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றியாளர்.

அசுர பலத்துடன் மில்லியன் பயனாளர்களுடன் வலம் வந்து உலகலாவிய நட்பு வட்டத்தை இணையமெங்கும் பரப்பி புதுமை செய்த மார்க் சக்கர்பெர்க்கிற்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Happy Birthday Mark Zuckerberg

 

 

மார்க் மட்டும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால்..! #HBDMarkZuckerberg

 

மார்க்

மெக்கானிக்... விவசாயி... ஜல்லிக்கட்டு! - ஃபேஸ்புக்குக்காக மார்க் நடத்தும் ''நமக்கு நாமே''-சிறப்பு ஆல்பம்

இன்று உங்கள் காதலியுடன் வாட்ஸ்அப்பில் பேச, நண்பர்களுடன் ஃபேஸ்புக்கில் செல்ஃபிக்கள் பகிர, இன்ஸ்டாகிராமில் உங்கள் காலை, மதிய உணவுகளை ஷேர் செய்ய எல்லாவற்றுக்குமே இந்த மனிதர் முக்கிய காரணம். ஒவ்வொரு நாளும் சமூக வலைதளத்தில் நம்மை புதுமையை உணர வைக்க நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார் இந்த சிலிக்கான் வேலி சிஇஓ.  33 வயது இளைஞனால் உலகில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கைத் தரும் மார்க்கிடம் கற்க வேண்டியவை அதிகம். 

ஹார்வர்டு பல்கலைகழகத்துக்குள் மாணவர்களுக்கிடையேயான தொடர்புக்கு ஏற்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் இன்று உலக மக்கள் தொகையில் 4-ல் ஒருவரை தனது பயன்பாட்டாளர் ஆக்கியுள்ளது. மக்களை உலகின் ஒற்றை குடையின் கீழ் இணைப்பது தான் மார்க்கின் நோக்கம். அதற்கான படிகளை தான் மார்க் தற்போது செய்து வருகிறார்.

அமெரிக்காவில் மோடியுடனான மார்க் சக்கர்பெர்க்கின் கலந்துரையாடல் ஃபேஸ்புக் குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை உலகிற்கு சொன்னது. அதில் மார்க் சக்கர்பெர்க் சொன்னது இதுதான்.

 ''ஃபேஸ்புக் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு போதிய வரவேற்பு இல்லை. அப்போது தான் எனது மெண்டார் ஸ்டீவ் ஜாப்ஸிடம் சென்று எனது பிரச்னைகளை எடுத்துக் கூறினேன். அவர் இந்தியாவுக்கு செல். உனது குழப்பத்துக்கான பதில் கிடைக்கும் என்றார். அதன் படி இந்தியா சென்றேன். உத்ராகாண்ட்  மாநிலத்தில் உள்ள நைனிடால் அருகேயுள்ள பத்நகர் என்ற இடத்தில்  கியன்ஞ்சி  தாம் என்ற கோவிலுக்கு சென்றேன். அங்குள்ள நீப் கரோலி பாபா என்பவரின் ஆசிரமத்தில் இரு நாட்கள் தங்கினேன். அதனருகில் இருந்த கோவிலுக்கு சென்றேன். மனதிற்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஃபேஸ்புக்கும் மாற்றத்தை சந்தித்தது. 

mark zuckerberg

இங்கு தான் ஃபேஸ்புக்கின் மந்திர வார்த்தையான கனெக்ட் என்ற வார்த்தையை பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. மக்களை கோவில் என்ற விஷயம் எப்படி இணைப்பில் வைத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது, ஃபேஸ்புக்கை விற்றுவிடலாம் என்ற நிலையில் இருந்து மாற்றியது இந்தியா தான்...'' என்று சிலாகித்தார்.

இந்தியா மீது மார்க்கின் பாசம் அதோடு நின்று விடவில்லை. 2016ம் ஆண்டு இயர் ஆஃப் ரன்னிங்கை துவங்கப்போகும் அறிவிப்பை இந்தியாவில் பாராளுமன்றம் முன் ஓடிய புகைப்படத்தை பதிவு செய்து தான் அறிவிக்கிறார். ஃபேஸ்புக் லைவ் பற்றிய பதிவுக்கும் இந்தியாவில் உள்ளவர்களை தான் அடையாளம் காட்டுகிறார். தற்போது எக்ஸ்ப்ரஸ் ஃபேஸ்புக் வை-பைக்கும் இந்தியாவின் ரோட்டுக்கடைக்காரரை தான் அடையாளம் காட்டுகிறார். 

mark and modi

இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தை அதனை அடிக்கடி இன்ஃப்ளுயன்ஸ் செய்ய வேண்டும் என்பது மார்க்கின் திட்டம் என்றாலும் மார்க்கின் இந்திய காதல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஃப்ரீ பேசிக்ஸுக்கு இந்தியா நோ சொன்ன போது சோகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தினார் மார்க். பேச்சுகளில் கனெக்ட் என்ற வார்த்தையை எப்படி விடாமல்  வைத்திருக்கிறாரோ அதே போல் மேற்கோள் காட்டுவதில் இந்தியாவை விடாமல் வைத்திருக்கிறார்.

மக்களின் தேவையை அறிந்து கொள்ளவும், மக்கள் மனதில் ஃபேஸ்புக்கை ஒற்றை ஆளுமையாக்கவும் ஓடிக்கொண்டிருக்கும் மார்க். இந்தியாவையும், இந்தியர்களையும் கவனித்து தான் ஃபேஸ்புக்கை மாற்றி வருகிறார் என்பது மறக்க முடியாத உண்மை. மார்க்கை வெறும் சிஇஓவாக பார்க்காமல், நல்ல சமூக ஆர்வலராக இந்தியாவும், உலக நாடுகளும் பார்க்க துவங்கிவிட்டன. இதுக்கெல்லாம் விதை இந்தியா போட்டது என மார்க் சொல்லும் வார்த்தைகளில் வணிகமும், இந்தியாவின் பெருமையும் அடங்கி இருக்கிறது. 34வயதில் மார்க்கின் பயணம் அவரை அடுத்த லெவலுக்கு அழைத்து செல்லும்... வாழ்த்துக்கள் மார்க்...

ஊருக்கே ஃபேஸ்புக்ல வாழ்த்து சொல்றோம். அத நமக்கு கொடுத்த மார்க்குக்கும் வாழ்த்து சொல்வோம். ஹாப்பி பர்த்டே மார்க்....

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

’நீ தானம்மா என் உலகம்’ .. நெகிழ்ந்த சச்சின்!

உலக அன்னையர் தினத்தையொட்டி நெட்டிசன்ஸ் மிகவும் ஆக்டிவ்வாக தன் அம்மாவோடு எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு புறம் இன்று மட்டும் அம்மாவுடன் செல்ஃபி எடுத்து பகிர்ந்து வாழ்த்து சொல்வதை விட தினம் தினம் தாயை போற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த விவாதங்களுக்கு இடையே இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தன் அன்னையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பகிர்ந்து சிறிது நேரத்தில் புகைப்படம் வைரலாகிவிட்டது. 

Sachin Tendulkar
 

அன்னை உடனான புகைப்படத்தை பகிர்ந்த சச்சின், ‘இந்த உலகத்தை பொறுத்தவரை நான் உன் மகன். என்னை பொறுத்தவரை நீ தான் என் உலகம்’, என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

To the world you are my mother but to me you are my world. #HappyMothersDay Aiee!!

http://www.vikatan.com

தாயே!, உனக்கு நான் தாயாக.., அன்னையர் தின சிறப்பு கவிதை)

 
 
தாயே!, உனக்கு நான் தாயாக..,   அன்னையர் தின சிறப்பு கவிதை)
 
அம்புலி காட்டி, இன்னமுதூட்டி
என்பசி தீர்த்தாயே..!
அல்லும், பகலும் ஈயெறும்போட்டி
இன்னுயிர் காத்தாயே..!

தாயே..!தாயே..! என் தாயே..!
ஈரைந்து திங்கள்
என்னை சுமந்தாயே..!

உன்னை நிகர்த்த கோயில் இல்லை
உன்னை விஞ்சிய தெய்வமும் இல்லை-உன்
மதிமுகம் தரும் இதம், மலர்மடி தரும் சுகம்
சொர்க்கம் கூட தருவதில்லை.

உன் மணி வயிற்றில் கருவாக
நான் சூல் கொண்ட வேளையில்
நீ அடைந்த பூரிப்பும்..

பனிக்குடம் நீங்கி நான்
கண் விழித்த பொழுதினில்
நீ அடைந்த வேதனையும்..

உன் கருவறையின் கதகதப்பில்
இன்புற்றிருந்த என்னையன்றி
சரியாக உவமிக்கத் தக்க நபர்..
இவ்வுலகினில் வேறாருண்டு?

மாசற்ற வாஞ்சையுடன்
மார்போடு எனையணைத்து,
நீ அளித்த ஒவ்வொரு துளி
தாய்ப்பாலுக்கும் ஈடு செய்ய

எனக்கு ஓர் பிறவி மட்டும் போதாது..

மீண்டும் ஒரு பிறவி எடுத்து
உனக்கு அன்னையாகி தொண்டு செய்யும்
அரிய வரத்தை அளித்திடுமாறு

தாயே..,தாயே.., உன்னிடத்தன்றி
வேறு யாரிடம் நான் வேண்டி நிற்க..?

-கவிஞர் உமர் இளவல்

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சினிமா வீடு: பத்மநாபபுரம் அரண்மனை - எளிமையின் கம்பீரம்

 

 
 
padma_3164069f.jpg
 
 
 

வீடு என்றால் முகப்பு அறை, படுக்கையறை, சமையலறை என மூன்று அறைகள் இருக்கும். சில வீடுகளில் கூடுதலாக ஓர் அறை இருக்கும். இப்படித்தான் வீடுகள் இருக்கும். ஆனால் நமது இந்த எண்ணத்தைத் தாண்டிய விரிவு கொண்டது ‘சினிமா வீடு’. பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகி அல்லது வில்லன்களின் வீடாகக் காண்பிக்கப்படும் இந்த சினிமா வீடு நம் கற்பனைகளை மிஞ்சிவிடும் அளவுக்குப் பிரம்மாண்டமானது.

இந்த மாதிரியான வீடுகளைப் பார்க்கும்போது இவ்வளவு பிரம்மாண்டமான வீடுகள் எங்கு இருக்கும், அவற்றில் யார் வசிப்பார்கள்? என்ற கேள்விகள் நமக்கு எழும். அந்த மாதிரியான சினிமா வீடுகளில் ஒன்றுதான் ‘பத்மநாபபுரம் அரண்மனை’.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறுநகரத்தில் வெள்ளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. 17 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ரவிவர்மா குலசேகரப் பெருமாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த அரண்மனை தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

p4_3164071a.jpg

இந்த அரண்மனை கேரளக் கட்டிடக் கலையின் நிகழ்காலச் சாட்சியாக இருக்கிறது. தாய்க் கொட்டாரம், மந்திர சாலை, நாடக சாலை, உப்பரிகை மாளிகை,தெற்குக் கொட்டாரம் ஆகிய முக்கியப் பகுதிகளைக் கொண்டது இந்த அரண்மனை திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தலைமையகமாக விளங்கியது. ஆரம்பத்தில் இந்த அரண்மனை ஓலைக் கூரையால் வேயப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மார்த்தாண்ட வர்மா காலத்தில்தான் ஓடு வேயப்பட்டிருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

ஓடுகளாலும் தேக்கினாலும் தேங்காய் சாம்பல் கரியினாலும் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனை எளிமையின் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அரசவை கூடாரத்தில் தொடங்கும் மாளிகை நெடுந்தூரம் நீண்டுகொண்டே போகும். அரண்மனையின் தரைப்பகுதி முழுவதும் இயற்கையான பொருள்களைக் கொண்டு செய்யப்பட்டது. நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பளபளப்புடன் உள்ளது.

p3_3164072a.jpg

மாளிகையின் எந்தத் திசையில் திரும்பினாலும் தேக்கில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் உள்ள ஜன்னல்களும் கதவுகளும் தூண்களும் வியப்பூட்டும். மட்டுமல்ல உத்திரமும் மரத்தால் நுட்பாமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கிறது. இந்த மரச் சட்டகத்தில் செதுக்கப்பட்டுள்ள தெய்வங்களும் பிற உருவங்களும் துள்ளியமாகப் பிசிரின்றிச் செதுக்கப்பட்டுள்ளன. இவை அக்கால கலைஞர்களின் திறனைப் பறைசாற்றுகின்றன. வளைந்த மர வேலைப்பாடுகள் மாளிகையின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளன. இவை சாருபடிகள் என அழைக்கப்படுகின்றன. கேரளத்தின் தனிச்சிறப்பு இந்தக் கட்டுமானம் நல்ல காற்றோட்டத்தையும் ஒளியையும் அளிப்பதுடன் உள்ளிருப்பவர்கள் யார் என வெளியே தெரியாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம்பேர் அமர்ந்து உண்ணக்கூடிய வகையிலான பிரம்மாண்டமான அன்னதானக் கூடமும் இதற்குள் உள்ளது. மேலும் அந்த அறையில் உணவு பரிமாறுவதற்காக வைக்கப்பட்டுள்ள குவளைகள் ஒரு மனிதனின் உயரத்தில் பாதி அளவில் இருப்பது பார்போரை வியப்பில் ஆழ்த்தும். வெவ்வேறு அளவில் அம்மியும் ஆட்டு உரலும் மண் அடுப்புகளும் தண்ணீர் தொட்டிகளும் ஆள் உயர குவளைகளும் இட்லிக் கொப்பறைகளும் கொண்ட சமையலறையும் உண்டு.

p2_3164073a.jpg

தாய்க் கூடாரம் 1550 ல் கட்டப்பட்ட மிகவும் பழைய மாளிகை. அரசியின் அறை மற்ற அறைகளைக் காட்டிலும் கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கலைநயம் மிக்க கதவுகள், ஜன்னல்கள், அலமாரிகள், வீணை, கண்ணாடிகள், தொட்டில் போன்றவை கொண்டதாக உள்ளது அந்த அறை.

64 வகை மூலிகைகளால் செய்யப்பட்ட கட்டில் மன்னரின் அறையில் உள்ளது. டச்சு அரச வம்சத்தினரிடமிருந்து இந்தக் கட்டில் பரிசாகப் பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மன்னரின் கூடாரம் நான்கு அடுக்கு மாடிகளை கொண்டதாகும். கீழ் தளத்தில் கருவூலம் அமைக்கப்பட்டுள்ளது. போர்காலத்தில் அரச குடும்பத்தினர் தப்பித்துச் செல்ல தனிச் சுரங்கம் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் கதவுகள் மூடப்பட்டுப் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

p5_3164070a.jpg

அரசப் பெண்களுக்கென்று தனி அறைகள் உள்ளன. அழகிய ஊஞ்சலும் பெல்ஜியத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கண்ணாடியும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனிக் குளமும் அரண்மனையின் பின்பகுதியில் உள்ளன. பிரத்யேகமாக நாட்டிய சாலையும் அரண்மனையில் உள்ளது. இந்த நாட்டிய சாலை தமிழகக் கோயில் கட்டிடக் கலையைப் போன்று தூண்கள் வைத்துக் காணப்படுகிறது. இந்த நாட்டிய சாலையில் அரச பெண்கள் பார்ப்பதற்காக தனி அறைகள் உள்ளன. அவர்களை சபையில் உள்ளவர்கள் காண முடியாதபடி அறைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர்களுக்கென்று தனி மாளிகை பிற்காலத்தில் கட்டப்படுள்ளது. போர் கருவிகள் வைக்கப்பட்ட கூடாரத்தில் பல விதமான வால்களும் கேடயங்களும் வில்லும் அம்பும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

கார்த்திக்-குஷ்பு நடிப்பில் வெளி வந்த ‘வருஷம்-16’ படத்தில் கார்த்திக்கின் வீடாக வருவது பத்மநாபபுரம் அரண்மனைதான். இந்த அரண்மனை அரவிந்தசாமி-அனுஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘இந்திரா’வில் அவர்களது வீடாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

'அப்ப நாங்க மட்டும் யாரு?' - வி.ஐ.பிகளின் ட்விட்டர் பஞ்சாயத்து

 

ட்விட்டரில் அடிக்கடி செலிபிரிட்டிகளை வம்பிழுப்பது, அவர்களின் ரசிகர்களோடு மல்லுகட்டுவது என ஹிட் படங்கள் எடுத்த காலத்தைவிட இப்போது படுபயங்கர பிஸியாக இருக்கிறார் ராம்கோபால் வர்மா. 'நீங்க பழையபடி படம் எடுக்கவே போயிடுங்க சிவாஜி' என வெல்விஷர்கள் சொல்ல, 'அவர் படம் ரிலீஸாகுதுல, அதான் பப்ளிசிடி தேடுறாரு' என மறுபக்கம் திட்ட, அசரவே இல்லை ஆர்.ஜி.வி. போனஸாக பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் வேறு, 'அவர்தான் ட்விட்டரின் ராக்ஸ்டார்' என சொல்லியிருக்கிறார். 'ஆஹாங்.. அப்ப நாங்கனாப்ல யாரு?' என அவரைப் போலவே ட்விட்டர் பஞ்சாயத்து பண்ணும் சில வி.ஐ.பிகளின் லிஸ்ட்தான் இது.

மோடி:

ட்விட்டர்

முதலிடத்தில் இருப்பது 'மித்ரோன்' புகழ் மோடிதான். பொறுப்பான பதவி என்பதால் சர்ச்சை ட்வீட் எதுவும் போடுவதில்லை. ஆனால், மத்திய அரசின் ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும்போதும் இவரது டைம்லைனை பிஸியாகவே வைத்துக்கொள்கிறார்கள் நெட்டிசன்கள். அவர்களுக்கு கன்டென்ட் தருவது போலவே தமிழில் ட்வீட்டுவது, தெலுங்கில் மாட்லாடுவது என தெறிக்கவிடுகிறது மோடியின் பதினொரு பேர் கொண்ட குழு. 

சேவாக்:

ட்விட்டர்

களத்தில் கம்பு சுற்றிய சேவாக் எல்லாம் காணாமல் போய் இரண்டு உலகக் கோப்பைகள் ஆகின்றன. இப்போது இவர் சிலம்பு சுற்றுவது எல்லாமே ட்விட்டரில்தான். குல்மேஹர் கவுர் என்ற பெண்ணை நக்கலடித்து வாங்கிக் கட்டியது, கணவர்களையும் ஏர் கண்டிஷனர்களையும் ஒப்பிட்டு கிச்சுகிச்சு மூட்டுவது என விரல் வித்தை காட்டுகிறார். லேட்டஸ்ட்டாக கிங்ஸ் லெவன் அணிக்கு ஆதரவாய் சில மீடியாக்களை கலாய்த்திருக்கிறார். 

சுப்ரமணியன் சுவாமி:

ட்விட்டர்

ட்விட்டர் தாதா. இவர் மொத்தமாய் பேசிய பொதுக்கூட்ட பேச்சை விட ட்வீட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். போதாக்குறைக்கு எதிர்த்து வாதிடுபவர்களை பொறுக்கி, பயந்தாங்கொள்ளி என்றெல்லாம் பெயர் வைத்து சக்கரைத்தண்ணி ஊற்றுகிறார். 'என்னா பாஸ், இன்னிக்கு யாரையுமே திட்டாம இருக்கீங்க?' என வம்பிழுத்து வம்பிழுத்தே அவரை டயர்டாக்குகிறார்கள். அவரோ, 'நான் உலகத்துக்கு கருத்து சொல்லியே ஆகணும்' என கால் வராத போனில் ஹலோ சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கமல்:

ட்விட்டர்

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்' என்ற ரஜினி பன்ச் ட்விட்டரில் கமலுக்குத்தான் பொருந்தும். ஆறேழு மாதங்களுக்கு முன்புவரை சத்தம் காட்டாமல் இருந்தவர் டிசம்பருக்கு பின் தசாவதாரம் எடுத்தார். சின்னம்மாவை சதாய்ப்பது, எடப்பாடியை எகத்தாளம் செய்வது, சுப்ரமணியன் சுவாமியின் பவுன்சர்களை சிக்ஸருக்கு விரட்டுவது என ஆல்டைம் பிஸி. என்ன, டிவீட்டுக்கு எல்லாம் சப்டைட்டில் போடவேண்டியது இருப்பதுதான் பிரச்னை.

ஜி.வி பிரகாஷ்:

ட்விட்டர்

 

இசையமைப்பாளராக இருந்தவரை ஜி.வி சமத்துப்பிள்ளைதான். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவுடன் கூடிதலாக 'ட்விட்டர் போராளி' பட்டத்தையும் தத்தெடுத்துக்கொண்டார். தளபதி ரசிகர்களுக்கு ஆதரவாக ட்வீட் போடுவது, எதிர்த்து பேசும் தல ரசிகர்களை செந்தமிழில் திட்டுவது என உக்கிரமாய் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். இப்போது கொஞ்சம் சாந்தசொரூபியாகி இருக்கிறார். அனேகமாய் அடுத்த விஜய் படம் வரும்போது மீண்டும் பஞ்சாயத்து தொடங்கும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஃபிரெஞ்சு புல் டாக் ரக நாய் ஒன்று லண்டனில் உள்ள பிபிசி அலுவலகத்திற்கு வெளியே ஸ்கேட்டிங் செய்த அற்புத காணொளி

  • தொடங்கியவர்

அரை நிர்வாண படத்தை வெளியிட்டு அழகியல் விளக்கம் தரும் மைக்கேல் ஜாக்சனின் மகள்

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் தன்னை பின்தொடரும் 14 லட்சம் பின்தொடர்பாளர்களுக்கு, 'நிர்வாணம் என்பது இயற்கையானது' என்றும், 'நாம் அனைவரும் மனிதர்கள் என்பதன் ஒரு பகுதிதான் நிர்வாணம்' என்றும் மறைந்த பிரபல பாப் இசைப்பாடகரான மைக்கேல் ஜாக்சனின் மகளான பாரீஸ் ஜாக்சன் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

'நிர்வாணத்தை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது'படத்தின் காப்புரிமைREUTERS Image caption'நிர்வாணத்தை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது'

முன்னதாக, பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் ஒரே மகளும், மாடல் அழகியுமான பாரீஸ் ஜாக்சன், தனது நாயுடன் மேலாடை ஏதுமின்றி சூரிய வெளிச்சத்தில் படுத்தவாறு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததால் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார்.

வண்டு வடிவில் இருந்த இரண்டு எமோஜிகளை (சமூகவலைதளத்தில் முகபாவனைகள் மற்றும் உணர்ச்சிகளை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் வடிவங்கள்) கொண்டு தனது மார்பக காம்புகளை மறைத்தவாறு இருந்த நிலையில் பாரிஸ் ஜாக்சன் புகைப்பட போஸ் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு பின்னர் நீக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால், 19 வயதான பாரீஸ் கருப்பு வெள்ளை புகைப்பட பாணியில், மேலாடையின்றி புகைப்பிடித்தவாறு தனது மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டார். இப்புகைப்படத்துடன் தனது விமர்சகர்களை தாக்கும் வகையில் ஒரு நீண்ட வாசகத்தையும் அவர் இணைத்திருந்தார்.

இயற்கை வழியில் மீண்டும் திரும்பும் விதமாக நிர்வாணம் ஓர் இயக்கமாக தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்ட பாரீஸ், நிர்வாணத்தை ஒரு தத்துவம் என்றும் வர்ணித்துள்ளார்.

பாரீஸ் ஜாக்சன்படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTPARISJACKSON/INSTAGRAM

தன்னை இவ்வுலகுடன் தொடர்பு கொள்ள நிர்வாணம் உதவுகிறது என்றும், அழகியல் விஷயமான நிர்வாணத்தை பாலியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது என்றும் பாரீஸ் ஜாக்சன் மேலும் கூறியுள்ளார்.

மேலும், தனது பதிவில், ''இது எவ்வகையிலாவது உங்களில் சிலரை வருந்த வைத்தால், அதனை நான் முழுமையாக புரிந்து கொள்வேன். இனியும் என்னை இன்ஸ்டாகிராமில் நீங்கள் பின்தொடர வேண்டியதில்லை.

ஆனால், இதற்காக நான் எவ்வகையிலும் மன்னிப்பு கோரப் போவதில்லை. நான் நானாகவே இருப்பேன்'' என்று பாரிஸ் ஜாக்சன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதியன்று மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்த போது, பாரீஸ் ஜாக்சனுக்கு வயது 11.

தனது தந்தை கொல்லப்பட்டதாக தான் நம்புவதாக, ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கைக்கு அண்மையில் அளித்த பேட்டியில் பாரீஸ் ஜாக்சன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

90 வயதில் ஆடுகளை விற்று மாமியாருக்கு கழிவறை கட்டிக் கொடுத்த மருமகள்..!

 

சமூகவலைதளங்களில் அன்னையர் தினம் கொண்டாடி வரும் நிலையில், 90 வயது மூதாட்டி ஒருவர் தனது 120 வயது மாமியாருக்கு கழிவறை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். 

C_yztajVwAAUQ71_21419.jpg


உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் சந்தனா. 90 வயதான இவருக்கு, 120 வயதில் மாமியார் ஒருவர் உள்ளார். அவர்களது வீட்டில் கழிவறை இல்லை. இதனால், கடந்த மாதங்களுக்கு முன் காலை கடனை கழிப்பதற்காக, அவரது  மாமியார் வெளியே சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது கால் உடைந்துள்ளது.


இதையடுத்து, தனது மாமியாருக்கு கழிவறை ஒன்றை கட்டிக் கொடுக்க சந்தனா திட்டமிட்டுள்ளார். மத்திய அரசின் கழிவறை திட்டத்தின் மூலம், அவர் கழிவறை கட்ட முயற்சி செய்தார். ஆனால், அவரது முயற்சி வீணானது. அரசு அதிகாரிகள், அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.


இதைத்தொடர்ந்து தனது சொந்த காசில் கழிவறை கட்ட அவர் முயற்சி செய்துள்ளார். இதற்காக, அவர்கள் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விற்று, கழிவறை கட்டியுள்ளார். அதை, அன்னையர் தினமான இன்று, தனது மாமியாருக்கு வழங்கியுள்ளார். தனது மகனின் உதவியுடன் சந்தனா கழிவறை கட்டியுள்ளார். இதையடுத்து, சந்தனாவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


குறிப்பாக, கிராமப்புறங்களில் கழிவறை கட்டும் மத்திய அரசின் திட்டத்துக்கு, சந்தனாவை தூதராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு உதவியுடன் கழிவறை கட்ட சந்தனா முயற்சித்தபோது, அதிகாரிகள் ஒத்துழைக்காதது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

நன்றி ANI

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 15
 

article_1431661818-israel300.jpg1610: பிரான்ஸில் 4 ஆம் லூயி மன்னன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து 13ஆம் லூயி ஆட்சிக்கு வந்தார்.

1643: பிரான்ஸில் 4 வயதான 16 ஆம் லூயி மன்னராக முடிசூடப்பட்டார்.

1948: இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1796: எட்வட் ஜென்னரால் சின்னம்மை நோய்கக்hன தடுப்பூசி ஏற்றப்பட்டது.

1870:  நியூஸிலாந்தில் முதலாவது றக்பி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

1879: இந்தியாவிலிருந்து பிஜிக்கு அழைத்து செல்லப்பட்ட 463 தொழிலாளர்களின் முதல் தொகுதியினர் பிஜியை சென்றடைந்திருந்தனர்.

1940: ஜேர்மனியிடம் நெதர்லாந்து சரணடைந்தது.

1948: இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது. இப்பிரகடனத்தையடுத்து இஸ்ரேல் மீது அரபுநாடுகள் தாக்குதலை ஆரம்பித்தன.

1955: 8 கம்யூனிஸ நாடுகள் இணைந்து வார்ஷோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

1963: ஐ.நாவில் குவைத் இணைந்தது.

1973: அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையமான ஸ்கைலாப் ஏவப்பட்டது.

2005: திருகோணமலை நகர மத்தியில் புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் கலவரம் வெடித்தது.

2006: வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகளவில் பிரபல்யம் அடைந்த கனேடிய பிரதமரின் குட்டி மகன்!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் டுரூடேவ்வின் மகன் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

கனேடிய பிரதமர் கடந்த வியாழக்கிழமை தனது அலுவலகத்திற்கு அவரது மூன்றாவது மகனையும் அழைத்து வந்திருந்தார்.

பிரதமரின் மகன் தனது தந்தையுடன் கூட்டங்கள் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்புகளில் கலந்து கொண்டார். இந்தக் காட்சிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அத்துடன் பிரதமரான தனது தந்தையுடன் மகன் கண்ணாமூச்சு விளையாடியமையினால் அவர் மிகவும் பரப்பரப்பாக செயற்பட்டுள்ளார்.

பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் Had some company at the office today!'என குறிப்பிட்டு தனது மகனின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அது தற்போது நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

கனேடிய பிரதமரின் மகன் தற்போது உலகம் முழுவதும் பல இலட்சம் மக்களின் அன்பை பெற்றுள்ளார். குறித்த புகைப்படங்களுக்கு பல இலட்சம் பேர் விருப்பங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

 

tamilwin

  • தொடங்கியவர்

1930-களில் கட்டப்பட்ட சைக்கிள் பாதையை மீட்டெடுக்கும் இங்கிலாந்துக்காரர்!

 
 

British-1930s-cycle-track-location-unkno

1934-ம் ஆண்டிலிருந்து 1940-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 280 மைல்கள் தூரத்துக்கு அன்றைய இங்கிலாந்து அரசாங்கம், லண்டன் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், சைக்கிளுக்கென தனிப் பாதை அமைத்திருந்தது. பிரதான சாலையை ஒட்டி, சிவப்பு நிற பெயின்ட் அடிக்கப்பட்ட இந்தச் சாலை அமைந்திருக்கும். அன்றைய நாட்களில், மக்களுக்கு இந்தப் பாதைகள் பெரிதும் பயன்பட்டன. 

பின்னர், மோட்டார் வாகனங்களின் படையெடுப்பின் காரணமாக, சைக்கிள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. சைக்கிள் பாதையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோகத் தொடங்கியது. இந்த நிலையில், இங்கிலாந்து எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கார்ல்டன் ரீய்ட் என்பவர், இந்தப் பழைய சைக்கிள் பாதையை முழுவதுமாகக் கண்டுபிடித்துச் சீரமைத்து, மீண்டும் உபயோகத்துக்குக் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்.

 

சிவப்பு நிற பெயின்ட் அடிக்கப்பட்டிருந்த அந்தப் பாதைகள், இன்று ஆங்காங்கே வெளுத்துப்போய் பிங்க் நிறத்தில் இருக்கின்றன. பல இடங்களில் அவ்ற்றின் மீதே புதுச் சாலைகள் போடப்பட்டுவிட்டன. முழுவதுமாக 280 மைல் தூரத்தையும் மீட்க முடியாவிட்டாலும், முடிந்தளவுக்கு  பழைய பாதைகளைக் கண்டுபிடித்து, சீரமைத்து, மீண்டும் உபயோகத்துக்கு கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் கார்ல்டன். இந்தத் திட்டத்துக்கு 'கிக் ஸ்டார்டர்' என்று பெயர் வைத்துள்ளார். இதற்கென தனி வலைதளத்தையும் கார்ல்டன் தொடங்கியுள்ளார்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.