Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சின்ன மாற்றம்... பெரிய வெற்றி... விக்கிபீடியாவின் அந்த ‘சூப்பர்’ ஐடியா! #Wikipedia

 

விக்கிபீடியா மற்றும் கூகுள் பயன்படுத்தாமல் ஒருவர் வெற்றிகரமாக ஒரு நாளைக் கடத்திவிட்டால், அந்த நபருக்கு டேட்டா பேக் முடிந்திருக்கும் என்பது புதுமொழி. அந்த அளவுக்கு இணையம் பயன்படுத்தும் அனைவரின் வாழ்வோடும் இவை இரண்டும் ஒன்றிப் போயிருக்கின்றன. ஆனால், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தணிக்கை என்ற பெயரில் இந்த இரண்டு தளங்களுமே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்திருக்கின்றன. தணிக்கை சிக்கலைச் சமாளிக்க விக்கிபீடியா தொழில்நுட்ப ரீதியில் செய்த ஒரு சின்ன மாற்றம் இன்று அதன் வளர்ச்சிக்கான முக்கியமான காரணியாக மாறியுள்ளது.

விக்கிபீடியா

துருக்கியில் பெண்களின் பிறப்புறுப்பு குறித்த விக்கிபீடியாவின் பக்கம் அந்நாட்டு அரசால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இதே போல், ரஷ்யாவில் கஞ்சா குறித்த பக்கமும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சீனாவில் தற்போது விக்கிபீடியா தளமே முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக தியான்மென் சதுக்கத்தில் மாணவர்களும், தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, அரசு ராணுவத் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த 26-வது ஆண்டு விழா நெருங்கும் சமயத்தில்தான், அதாவது 2004 ஆம் ஆண்டு முதன்முதலாக விக்கிபீடியா தளம் சீனாவில் முடக்கப்பட்டது. காரணம், தியான்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து விக்கிபீடியாவில் இருந்த கட்டுரை. இதிலிருந்துதான், சீனாவுக்கும் விக்கிபீடியாவுக்குமான மோதல் போக்கு தொடங்கியது. மேலும், "தங்கள் நாட்டைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்ட பின்பே, இணையத்தில் வெளியிடப்பட வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அதன்பின் சீனா விதிக்கத் தொடங்கியது.

விக்கிபீடியா இணையதளம் சீனாவில் இதுவரை பல்வேறு முறை தடை செய்யப்பட்டு, அதன் பின் தடை நீக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளும் தணிக்கை என்ற பெயரில் விக்கிபீடியாவின் தகவல்களைத் தொடர்ந்து கத்தரிக்கத் தொடங்கின. இதை தடுத்து நிறுத்துவதோடு, இணையம் பயன்படுத்தும் அனைவருக்கும் தனது தகவல்கள் அனைத்தும் சென்றடைய வேண்டும் என விக்கிபீடியா விரும்பியது. 2011 ஆம் ஆண்டில் HTTP (Hypertext Transfer Protocol) ஃபார்மட்டில் தணிக்கை செய்த பக்கங்களை, HTTPS என்ற செக்யூர்ட் பக்கங்களில் படிக்கக் கொடுத்தது விக்கிபீடியா. இதனால் சில நாடுகளில் தணிக்கை காரணமாக நீக்கப்பட்ட பக்கங்களையும், அந்நாட்டில் உள்ளவர்களால் HTTPS ஃபார்மெட்டில் படிக்க முடிந்தது.

இணைய தணிக்கை

HTTPS தளத்தைப் பொறுத்தவரை தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டுவிடும். இதனால், ஒருவர் அந்தத் தளத்தைப் பார்வையிடுவதை மட்டுமே கண்டுபிடிக்க முடியுமே தவிர, அவர் எந்தப் பக்கத்தைப் படிக்கிறார் என்பதைத் தணிக்கை செய்பவர்களால் கண்டறிய முடியாது. இதனால் ஒன்று ஒட்டுமொத்தமாக விக்கிபீடியாவைத் தடை செய்ய வேண்டும் அல்லது அனைத்தையும் தடை இல்லாமல் வழங்க வேண்டிய நிலைக்குப் பல நாடுகளும் தள்ளப்பட்டன. 2015 ஆம் ஆண்டில் இருந்து தனது அனைத்துத் தகவல்களையும் என்க்ரிப்ட் செய்தது விக்கிபீடியா. கொஞ்சம் ரிஸ்க் அதிகம் என்றாலும், விக்கிபீடியா இதைத் துணிந்து தேர்ந்தெடுத்தது. இந்த மாற்றத்துக்குப் பிறகு விக்கிபீடியா பக்கங்களில் அரசினால் செய்யப்படும் தணிக்கைகளின் எண்ணிக்கை முன்பைவிடக் குறைந்துள்ளதாக ஹார்வர்டைச் சேர்ந்த பெர்க்மேன் க்ளெய்ன் சென்டர் (Berkman Klein Center) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. 

 

முன்னேற்பாடாக விக்கிபீடியா செய்த சின்ன மாற்றத்தால் அதன் இணையதளத்தின் பாதுகாப்பு அதிகரித்ததோடு, அதை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ‘ரோபோ’ பாதிரியார் நியமனம்

ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ‘ரோபோ’ பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளது. அவை ‘கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக’ என்று பைபிளில் உள்ள வாசகத்தை கூறுகிறது.

 
ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ‘ரோபோ’ பாதிரியார் நியமனம்
 
பெர்லின்:

‘ரோபோ’ எனும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கி நிற்கிறது. இந்த நிலையில் பாதிரியார் பணியிலும் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த ‘ரோபோ’ ஜெர்மனியின் விட்டன் பெர்க் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் மார்டின் லூதர் பிராட்டஸ் டன்ட் சீர்திருத்தங்களை பரப்ப 95 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். அதன் 500-ம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில் விட்டன் பெர்க் தேவாலயத்தில் ‘ரோபோ’ பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ‘ரோபோ’வுக்கு ‘பிளஸ்யூ -2’ என பெயரிடப்பட்டுள்ளது. இது ஹெஸ்சி மற்றும் நசாயூ இவர்ஞ் சலிகல் கிறிஸ்தவ தேவாலயத்தினரால் உருவாக்கப்பட்டது.

அதில் தொடுதிரையுடன் கூடிய உலோக பெட்டி உள்ளது. இரு புறமும் 2 கைகளும், 2 கண்களுடன் தலை உள்ளது. அதில் டிஜிட்டல் வாயும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

201705311043388410_BlessU-2-Robot._L_sty

கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வரும் பக்தர்களை இந்த ரோபோ ஆண் மற்றும் பெண் குரலில் வாழ்த்தி வரவேற்கிறது. மேலும் தனது 2 கைகளை உயர்த்தி அவர்கள் விரும்பும் மொழியில் ஆசி வழங்குகிறது. அப்போது கைகளில் சிவப்பு நிற விளக்கு எரிகிறது.

‘கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக’ என்று பைபிளில் உள்ள வாசகத்தை கூறுகிறது. அதை பிரிண்ட் ஆகவும் எடுத்துக்கொள்ள முடியும். இது போன்று ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட 5 மொழிகளில் இது ஆசி வழங்குகிறது.

தனிசிறப்பு மிக்க இந்த ‘ரோபோ’ தேவாலயத்துக்கு வருகை தரும் அனைத்து தரப்பினரையும் கவர்கிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

மூளைக்காய்ச்சலுக்கு காரணமாகும் பன்றி இரத்தம்

பலருக்கு பன்றி இறைச்சி பிடிக்காவிட்டாலும் கூட, வியட்நாமில் பலர் பன்றியின் பச்சை இரத்தத்தை ஒரு அருஞ்சுவை உணவாக உண்கிறார்கள்.

அதுவும் பச்சை இரத்தத்தை தினசரி உண்கிறார்கள்.

அந்த நாட்டின் கலாச்சாரப்படி, ஒரு விருந்தின் ஆரம்ப உணவாகவும் இது பரிமாறப்படுகின்றது.

ஆனால், அது ஒரு பெரும் தீங்கு விளைவிக்கும் உணவு என்பது இப்போது தெரியவந்துள்ளது. அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

  • தொடங்கியவர்

“ஜீரோ பட்ஜெட்ல வாட்ஸ்அப் மூலமா இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறோம்! - கலக்கும் இல்லத்தரசிகள்

 

வாட்ஸ்அப்

ன்னிக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தாத பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆன்லைனில் கலக்குவதில் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என அங்கிங்கெனாதபடி எங்கும் இறங்கி அடிக்கும் பெண்களும் அதிகம். வெட்டி அரட்டை, ஜாலி பகிர்வுகள் என எத்தனை குழுக்களாக பெண்களின் வாட்ஸ்அப் இயங்குகிறது தெரியுமா? இதில், வாட்ஸ்அப் தளத்தைத் தங்களது பிசினஸ் தளமாக மாற்றிக்கொண்டு மாதம் இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் கில்லிகள் இருக்கிறார்கள். இதோ அவர்களின் ஜீரோ பட்ஜெட் அனுபவப் பகிர்வுகள்... 

சென்னையைச் சேர்ந்த ராதா, தமிழகத்தின் பல ஊர்களிலும் மொத்த வியாபாரிகளிடம் வாங்கிய சேலை மற்றும் சுடிதார் ரகங்களை, தனது நட்பு வட்டத்தில் பிராட்காஸ்ட் செய்து விற்பனை செய்துவந்தார். இதில் கிடைத்த ஆயிரக்கணக்கான நண்பர்களை இணைத்து, வாட்ஸ்அப்பில் எந்த முதலீடுமின்றி தொடர்கிறார். புதிய நண்பர்களைப் பிடிக்க அவ்வப்போது பிராட்காஸ்டும் செய்கிறார். 

‘‘ராதூஸ் ஃபேஷன்ஸ் என்பது நான் செய்யும் பிசினஸின் பெயர். எனக்கு டிரஸ்ஸிங்ல ரொம்ப ஈடுபாடு. நானே மேட்ச் பண்ற சாரீஸ், அதுக்காக வாங்கிச் சேர்த்த அணிகலன்கள் என்னை ஸ்பெஷலா வாட்ஸ் அப்காட்டும். இதுவே பல பெண்களையும் எனக்குத் தோழிகளாக மாத்திச்சு. அவங்களுக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சு அதுவே பிசினஸாகவும் மாறுச்சு. ஒரு ஜவுளிக்கடையை ஆரம்பிச்சு நடத்த குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும். வாடகை, ஆட்களை வேலைக்கு நியமிக்கிறதுன்னு ஒரு மாதம் பிசினஸை நடத்துறதுக்கான ரன்னிங் காஸ்ட், கடனுக்கான வட்டி இப்படிக் கணக்குப் போட்டால் அது பெரிதாக வளர்ந்து நிற்கும். சம்பாதிக்கும் லாபத்தை எல்லாம் இதுவே விழுங்கிடும். வாட்ஸ்அப்ல எத்தனையோ குரூப்ஸ் உருவாக்குறோம். இதையே பிசினஸ் மாடலா மாற்றலாமேனு ஆன்லைனில் தேடிப் பார்த்து அதுக்கான டீலரைப் பிடிச்சேன். அதன் கிளைகள் நம்ம ஊரில் இருக்கும். நேரில் விசிட் அடிச்சு நம்ம சந்தேகங்களைத் தீர்த்துக்கலாம். ஆசிரியைகள், ஐ.டி இன்டஸ்ட்ரி எனப் பல துறைகளில் ஆயிரக்கணக்கான தோழிகள் இருக்காங்க. புதுசா வரும் சாரீஸ், சல்வார், டாப்ஸ், பெல்ட், ஹேண்ட்பேக். செப்பல்ஸ் என எல்லாவற்றையும் சேல்ஸ் பண்றேன். வாட்ஸ்அப் டேட்டாவுக்கான சிறிய செலவு மட்டும்தான். மற்றபடி இது ஜீரோ பட்ஜெட் பிசினஸ். வாட்ஸ்அப்ல இமேஜ் அனுப்பி ஓகே வாங்கிடலாம். மாசம் இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். பண்டிகை காலங்களில் அதிகம் கிடைக்கும்’’ என்கிறார் ராதா. 

இந்த ஆன்லைன் பிசினஸில் பிரச்னை எதுவும் வராதா? 

ஈரோட்டைச் சேர்ந்த வித்யா லட்சுமி, ‘‘ 'பர்வதவர்த்தினி பொட்டிக்' என்கிற பெயரில் வாட்ஸ்அப் மூலம் சாரீஸ் மற்றும் சுடிதார்ஸ் சேல்ஸ் பண்றேன். ஒரு சில மெட்டீரியல்ஸை நானே வாங்கி யூஸ் வாட்ஸ்அப்பண்ணிப் பார்த்திருக்கேன். டீலர்ஸ்கிட்ட பேசுறேன். புகார் எதுவும் இருக்கக் கூடாதுன்னு சொல்லிடுறேன். பார்சலில் வரும் பொருள்களில் டேமேஜ் இருந்தாலும் திரும்பிக் கொடுத்து மாத்திக்கவும் வாய்ப்பு இருக்கு. இந்த பிசினஸில் கேஷ் அண்டு கேரி என்பதால் கடன் கொடுத்துச் சங்கடப்பட வேண்டியதில்லே. டிராவல் பண்ண வேண்டியதில்லே. இப்படி நைன்ட்டி பெர்சன்ட் பிளஸ் பாயின்ட்தான். அபூர்வமாக சில பிரச்னைகள் வந்தாலும் சரிபண்ணிடலாம். ஸோ, வாட்ஸ்அப் பிசினஸில் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் லாபமே’’ என்கிறார். 

சேலம் அம்பிகா: இரண்டாவது குழந்தை பிறந்து ஆறு மாதங்களில் 'விஸ்வாக் கலக்ஷன்ஸ்' என்கிற பெயரில் வாட்ஸ்அப் குரூப்பில் சேலை மற்றும் மேட்ச்சிங் அணிகலன்களையும் சேர்த்து பிசினஸ் செய்கிறார் அம்பிகா. மாலையில் டியூசன், பைனான்ஸ் மற்றும் ஒன்கிராம் ஜூவல்லரி என்று பிசினஸ் வுமனாக வளைய வந்த அம்பிகாவின் ஸ்பெஷல், பார்க்கும் யாரோடும் நட்பாகிவிடுவதுதான். இன்னர் வீல், லேடீஸ் சர்க்கிள், ரோட்டரி, ஜேசீஸ் போன்ற கிளப்களில் மெம்பராகி ஆயிரக்கணக்கானோரைத் தனது நட்பு வட்டத்தில் இணைத்திருக்கிறார். 

வாட்ஸ்அப் பிசினஸ் சுவாரஸியங்கள் குறித்து பேசிய அம்பிகா, ‘‘குழந்தைகளுக்கான நேரத்தை வேலையில் தொலைத்துவிடக் கூடாது என்பதில் ஸ்ட்ரிக்டாக இருந்தேன். சின்னச் சின்ன பிசினஸ் வாட்ஸ்அப்வாய்ப்புகளை எப்பவும் நட்பு வட்டத்துல ஏற்படுத்திக்கிறேன். நான் ஒரு வாட்ஸ்அப் பிசாசு. போனைத் தொட்டாலே கண்கள் வாட்ஸ்அப் பார்க்காமல் திரும்பியதில்லை. இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாட்ஸ்அப் வழியாக உலகில் நடக்கும் மாற்றங்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். இதையே பிசினஸ் மாடலா மாற்றலாமேனு முடிவுப் பண்ணினேன். போன் கான்டாக்ட்ஸ்தான் முதலீடு. போனில் பேசவேண்டியதை நான் பார்த்துப்பேன். என் கணவரும் உதவறார். வித்தியாசமான வெரைட்டீஸ் ட்ரெண்டியாவும் வேணும். இன்னிக்குப் பெண்கள் ஒவ்வொரு நாளும் புதுசா தெரியணும்னு விரும்புறாங்க. டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா கம்மல், நெக்செட், வளையல்னு தேடி அலைவாங்க. அதையெல்லாம் செட்டா கொடுத்துடறேன். வாட்ஸ்அப்ல வாங்கும் விற்கும் ரெண்டு பேருக்குமே பல செலவுகள் மிச்சமாகுது. வாட்ஸ்அப் பிசினஸுக்கு அப்புறம் என்னோட ஃப்ரெண்ட் லிஸ்ட் எண்ணிக்கை கூடிட்டே போகுது. குறைந்த லாபத்தையே பிக்ஸ் பண்றேன். அதனால், கூடுதல் பிசினஸ் கிடைக்குது. மாசம் பதினைந்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்’’ என்கிறார். 

 

வாட்ஸ்அப்பையும் பிசினஸில் சிகரம் எட்டும் இவர்களுக்கு ஒரு ஹாட்ஸ் அப்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..!

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards

 

 
  • உலகம் சுற்றும் வாலிபர்களே... இந்த இடங்களுக்கெல்லாம் போயிடாதீங்க..! #VikatanPhotoCards
  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்!

 
plastic_oil_3169970f.jpg
 
 
 

பிளாஸ்டிக் பயன்பாடுகள் கூடிக்கொண்டே போகின்றன. இந்த பிளாஸ்டிக்குகளை மனிதர்களால் அழிக்க முடியாது என்று சொன்னாலும்கூட யாரும் கேட்பதாகவில்லை. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்தாலும் மக்காமல் அப்படியேதான் இருக்கும். பிளாஸ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும்கூடப் பெரிய சவாலாகவே மாறிவருகின்றன.

நமக்கு வசதியாக இருக்கிறது என்று பயன்படுத்திய ஒரு பொருள் இன்று நமக்கே ஆபத்தாக வந்து நிற்கிறது. ஒரு புறம் பிளாஸ்டிக்குகளை எந்த ஆபத்தும் இல்லாமல் அழிப்பதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த பிளாஸ்டிக்குகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

பிளாஸ்டிக்குகளை வைத்து ஜெர்மனி விஞ்ஞானிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிளாஸ்டிக்கைத் தூள் தூளாக்கி, கசக்கிப் பிழிந்து பெட்ரோலாகத் தயாரித்துவிடலாம் என்று சொல்கிறார்கள். இந்தச் சோதனை முயற்சியில் வெற்றியும் கிடைத்துவிட்டது. அதெப்படி பிளாஸ்டிக்கை உருக்கிப் பெட்ரோல் தயாரிக்க முடியும்?

பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் உருவாக்கும் முறையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, பிளாஸ்டிக் உருவான விதத்தை முதலில் தெரிந்துகொள்வோம்.

1907-ம் ஆண்டு லியோ பேகிலாண்டு என்ற விஞ்ஞானிதான் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தார். செல்லுலோஸ், நிலக்கரி, வேதி உப்புகள், கச்சா எண்ணெய் (குரூட் ஆயில்) போன்ற பகுதிப் பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது.

plastic_bottles_3169971a.JPG

பிளாஸ்டிக் உருவாக்கும்போது, பகுதிப் பொருட்களின் மூலக்கூறுகளைத் தொடர்ச்சியாகச் சங்கிலி போல் அமையச் செய்கின்றனர். தனி மூலக்கூறுகள் சங்கிலிபோல் மாறியவுடன் அவை புதிய வேதிப் பண்புகளையும், இயற்பியல் பண்புகளையும் பெறுகின்றன. தனி மூலக்கூறுகள் தொடர்ச்சியாகச் சங்கிலிபோல் மாறும். இந்த நிகழ்வை ‘பாலிமரைஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இப்படித் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகள் அதன் புதிய மூலக்கூறு தன்மையால் உடையாத, அழிக்க முடியாத இயல்பைப் பெற்றுவிடுகிறது. இந்த இயல்புதான் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் மனித குலம் தவிக்கக் காரணம். பிளாஸ்டிக்கை அழிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டபோதுதான் பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் உருவாக்கலாம் என்ற விஷயத்தை விஞ்ஞானிகள் எதேச்சையாகக் கற்றுக்கொண்டார்கள்.

பிளாஸ்டிக்கை அழிப்பதற்கு ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். கழிவு பிளாஸ்டிக்குகள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் குவித்துவைத்து, கொளுத்திவிட்டால் அவை எரிந்து சாம்பலாகிவிடுமே என்றுகூட நீங்கள் நினைக்கலாம். அப்படிப் பிளாஸ்டிக்குகள் எரிந்து சாம்பலாகாது என்பதுதான் பிரச்சினை. பிளாஸ்டிக்கை எரித்து அழித்துவிட முடியாது. எரிந்த பின் கரி மாதிரிச் சில வேதிப் பொருட்கள் மிஞ்சுகின்றன. அதனால் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடிகிறதே தவிர, முற்றிலுமாக அழிக்க முடியவில்லை.

பிளாஸ்டிக் மறுசுழற்சியின்போது மிஞ்சும் கழிவுப் பொருட்களை என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் விஞ்ஞானிகளுக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது. பிளாஸ்டிக் கழிவுகளுடன் ஹைட்ரஜனைச் சேர்த்து, ஒரு பெரிய கொள்கலனில் போட்டு, அதை அதிக அழுத்தத்துக்கு உள்ளாக்கினார்கள். அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் அதிக வெப்பத்தால் பிளாஸ்டிக் மூலக்கூறுகள் தங்கள் இயல்பான பிளாஸ்டிக் அமைப்பை இழந்து விடுகின்றன.

இறுதியில் இது கச்சா எண்ணெயாக (குரூட் ஆயில்) மாறிவிடுகிறது. ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவிலிருந்து முக்கால் கிலோ குரூட் ஆயில் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்தியாவிலும் இந்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடக்கத் தொடங்கிவிட்டன.

இந்தக் கண்டுபிடிப்புக்குப் பலன் கிடைத்தால், பிளாஸ்டிக்கும் அழியும்; பெட்ரோலும் கிடைக்கும்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

நாளைய உலகின் சூப்பர் ஸ்டார்ஸ் இந்த 7 டெக்னாலஜிகள்தான்! #TechnologyNext

கடைசியாக உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்புக்கு எப்போது அப்டேட் வந்தது? ஓர் ஆண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். எந்த விஷயமும் அப்டேட் ஆவதற்கு ஆகும் காலம் என்பது குறைந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்பம் தான் இனி எல்லாம் என்ற நிலை விரைவில் வரும். அந்த வகையில் எதிர்காலத்தில் உலகை ஆளப்போகும் டெக்னாலஜிகள் இவைதாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

1. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence):

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் டெக்னாலஜிகள்

நமது தேவையையும், பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு நமக்குத் தேவையான உதவிகளை அதுவே சிந்தித்து கொடுப்பதுதான் AI. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகுள் I/O டெவலப்பர் மாநாட்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவுத்திறன் எனும் வார்த்தைதான். உலக தொழில்நுட்பங்களில் புதுமையாகப் பார்க்கப்பட்ட ரோபோக்கள் மட்டுமல்லாமல் நாம் உபயோகப்படுத்தும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் வரைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது. கூகுள் தனது அனைத்து தயாரிப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் புகுத்தப் போகிறது. இது நிச்சயமாக வருங்காலத்தில் டிஜிட்டல் உலகில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2. விர்ச்சுவல் ரியாலிட்டி:

விர்ச்சுவல் ரியாலிட்டி

கற்பனை உலகிற்கு நம்மைக் கடத்திச் செல்லும் தொழில்நுட்பம்தான் விர்ச்சுவல் ரியாலிட்டி. தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டியை உபயோகப்படுத்திப் பல கேம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில மொபைல் போன் நிறுவனங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், தங்கள் சாதனத்தில் புகுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. மொபைல் போன்களின் உற்பத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பதித்த நோக்கியா மொபைல் தயாரிப்புகளில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தது. ஆனால், மீண்டும் மொபைல் தயாரிப்புகளில் அந்நிறுவனம் இறங்கியிருப்பதும், அதில் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

3. சாட்பாட் (Chatbot):

சாட்பாட் (Chatbot)

பொதுவாக மெசெஞ்சர், கூகுள் ஹேங்அவுட், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் பேசிக்கொள்வதைத்தான் 'சாட்' என்கிறோம். மீதம் இருக்கும் 'பாட்' எனும் சொல் ரோபட்டிலிருந்து எடுக்கப்பட்டு மொத்தமாகச் 'சாட்பாட்' எனும் சொல் உருவாக்கப்பட்டது. அதாவது ஓர் இயந்திரத்துடன் சாட் செய்வது. இந்தச் சாட்பாட்டானது, நமது தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு நமக்குப் பதிலளிக்கும். எல்லோரும் hike அப்ளிகேஷன் கேள்விப்பட்டிருப்போம். அதில் இருக்கும் சாட்பாட் பெயர் 'நடாஷா'. இந்த நடாஷா சாட்பாட்டுடன் எதிர் முனையில் யாரும் இல்லாமலே நீங்கள் வழக்கம்போல உரையாடலைத் தொடரலாம். அதுவும் சரியான பதிலைக் கொடுக்கும்.

4. இன்டலிஜென்ட் வெர்பல் இண்டர்பேஸ்(Intelligent Verbal Interface):

இன்டலிஜென்ட் வெர்பல் இண்டர்பேஸ்(Intelligent Verbal Interface)

Intelligent Verbal Interface டெக்னாலஜியானது தற்போதே பலரது ஸ்மார்ட்போனில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆம், நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் கூகுள் அசிஸ்டெண்ட்-ம் Intelligent Verbal Interface தான். கீ போர்டு, மவுஸ் ஆகியவற்றின் உதவி இல்லாமல் நாம் பேசும் வார்த்தையைச் சரியாகப் புரிந்து கொண்டு நமக்குத் தேவையான உதவிகளைச் செய்யும். இதுபோலப் பல பர்சனல் அசிஸ்டெண்ட்களில் இத்தொழில்நுட்பம் இருக்கின்றன. 24 மணி நேரத்தில் பாதியை யாருடனோ டிஜிட்டல் மூலம் சாட் செய்வதில் தான் செலவழிக்கிறோம். எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் எத்தகைய வீரீயம் பெறும் என்பதற்கு இந்த டேட்டாவே போதும்.

5. வெப் அசம்ப்ளி (WebAssembly):

வெப் அசம்ப்ளி (WebAssembly)

இனிமேல் மொபைலிலோ, கணினியிலோ உபயோகிக்கக்கூடிய அப்ளிகேஷன்கள் அனைத்தும் OS என்பதையும் தாண்டி, அனைத்து பிரவுசரிலும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வெப் அசம்ப்ளி டெக்னாலஜி செயல்படும். இணையம்தான் எல்லாமே என்பதை நோக்கமாகக் கொண்டு வெப் அசம்ப்ளி டெக்னாலஜி உருவாக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வாட்ஸ் அப்பை, அந்தந்த OS ல் மட்டுமே செயல்படும். ஆனால், வாட்ஸ் அப் வெப் மூலம் கணினியுடன் இணைத்துக் கொள்ளலாம். இனிமேல் கேம்ஸ், சாட் உள்ளிட்ட அனைத்து அப்ளிகேஷன்களும் இணையத்தில் பயன்படுத்திக் கொள்ளுமாறு இருக்கும்.

6. ட்ரோன் டெலிவரி (Drone Delivery):

ட்ரோன் டெலிவரி (Drone Delivery)

எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தின் பங்கு மிக உபயோகமானதாக இருக்கும். நமது தேவைகளையோ அல்லது நமக்குத் தேவையான பொருட்களையோ ஆட்களின் உதவி இல்லாமல், ட்ரோன் மூலம் பூர்த்திச் செய்து கொள்ளும் தொழில்நுட்பம்தான் ட்ரோன் டெலிவரி. எதிர்காலத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தைத்தான் பின்பற்றும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமேசான் நிறுவனம் ட்ரோனை உபயோகித்துப் பொருட்களை விற்பனை செய்யச் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

7. மொபைல்:

மொபைல்

 

இதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதே தென்பட ஆரம்பித்துவிட்டன. கணினியில் செய்யும் செயல்களை எல்லாம் இனி மொபைலை கொண்டே செய்யலாம். தற்போதும் அந்த நிலைதான் நீடித்து வருகிறது. ஆனால், இன்னும் எதிர்காலத்தில் அதிகத் தர மேம்பாட்டுடன் மொபைல்கள் வெளிவந்தால் மொபைல்தான் உலகம் என்று மாறும். தனது அன்றாடப் பணிகளைக் கூட மொபைலிலேயே செய்து முடிக்கும் அளவுக்கு எதிர்கால டெக்னாலஜி இருக்கும். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

World No Tobacco Day.
உலக புகைபிடிப்பு எதிர்ப்பு நாள்.

விலைகொடுத்து சாவை வரவேற்பதை நிறுத்துவோம்.
புகைபிடிக்கும் எமது நண்பர்கள்,உறவுகளைத் திருத்த முயல்வோம்.
ஆரோக்கியமான உலகம் ஒன்றை அன்பால் கட்டியெழுப்புவோம்.

 

 

உயிரைப் பறிக்கும் புகைப்பழக்கம் வேண்டாமே! - உலக புகையிலை எதிர்ப்பு தினப் பகிர்வு

 

புகை நமக்குப் பகை, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குத் தீங்கானது... பீடி, சிகரெட் அட்டைகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் இத்தகைய வாசகங்கள் புகைப்பழக்கத்துக்கு ஆளான எத்தனைபேரை மனம் மாறச் செய்திருக்கும். இது... சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். இத்தகைய சூழலில், உலக சுகாதார அமைப்பால் இன்று (மே 31) உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படும் சூழலில் அதுகுறித்து பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் இன்றைக்குப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புகையால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஏறத்தாழ 60 லட்சம் பேர் உலகளவில் உயிரை விடுகிறார்கள் என்றால் நிச்சயம் வருத்தப்பட வேண்டிய செய்தியே. இந்தியாவில் மட்டும், ஏறத்தாழ 80 லட்சம் பேர் புகையால் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த புகையிலை பாதிப்புக்கு ஆளானவர்களில், பலர் புகைபிடிப்பவர்களின் அருகே இருந்து அதை சுவாசித்ததன்மூலம் பாதிப்புக்கு ஆளானவர்கள். இவர்களைப் போன்றே புகையிலையால் பாதிக்கப்படுபவர்கள், தங்களது வாழ்நாளில் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இழக்கிறார்களாம்.

புகையிலை என்ன செய்யும்?

1) புகையிலையைச் சுவாசிப்பதால், அதனுள்ளே இருக்கும் நிகோட்டின், உடலுக்குள் செல்கிறது. ரத்தத்துக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யக்கூடிய நுரையீரலில் நிகோட்டின் கலந்து ரத்தத்தை மாசுபடுத்துகிறது. அது நுரையீரல் புற்றுநோய்க்கும், ரத்தப் புற்றுநோய்க்கும் வழிவகை செய்கிறது.

2) புகையிலையில் இருக்கும் நிகோட்டின், ஒருவரது டி.என்.ஏ-வில் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. அந்த வகையில், அவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கு ஆஸ்துமா, மூச்சுக்குழாய் பாதிப்பு, கண் தெரியாமல் போவது போன்ற தீராத பிரச்னைகளால் பாதிப்பு ஏற்படலாம்.

மூச்சுக்குழாய் பாதிப்பு ஏற்படும்

3) புகையில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு, ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அழித்துவிடுகிறது. ஆக்சிஜன் உள்ளிழுக்க உதவியாக இருக்கும் ஹீமோகுளோபின் பாதிப்படைவதால், மூச்சுவிடுவதில் சிரமம் வருகிறது. இது, மாரடைப்பு, ரத்தக்குழாயில் அடைப்பு போன்ற இதயக்கோளாறுகளுக்கு வழிவகை செய்யும்.

4) புகைபிடிப்பது, நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிடும். செயற்கையாகத் தூண்டப்படும் நரம்பு மண்டலம், மிகவும் அதிக சக்தி பெற்றிருக்கும். நாளடைவில், புகைபிடிக்காமல் இருக்கும்போது, நரம்பு மண்டலம் மந்தமாகச் செயல்படுவதுபோலத் தோன்றும். இதன் கடைசி கட்டமாக, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

5) செகண்ட்-ஹேண்ட்-ஸ்மோக்கிங்க் (SECOND HAND SMOKING) மிகவும் ஆபத்தானது. அதாவது, ஒருவர் புகைபிடித்து வெளிவிடும் புகையை மற்றொருவர் உள்ளிழுப்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாகப் பாதிக்கப்படுவர். இது, பெண்களது இனப்பெருக்க உற்பத்தி செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

2017-ன் நோக்கம்!

என்னதான் எல்லா பாதிப்புகளும் தெரிந்திருந்தாலும், புகைப் பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாகத் தெரியவில்லை. 1987-ல் தொடங்கப்பட்ட இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை, ஆண்டுதோறும் ஏதாவதொரு 'தீம்' கொண்டுதான் உலகச் சுகாதார நிறுவனம் அனுசரிக்கிறது. 2017 ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில், Tobacco - a threat to development (புகையிலை வளர்ச்சிக்கு ஓர் அச்சுறுத்தல்) என்பதே அதன் தீம். இந்த வருடத்தைப் பொறுத்தவரையில், இவர்களது முக்கிய நோக்கம் புகையிலையின் வளர்ச்சியைக் கண்டறிந்து, அதைத் தடுக்கும் நோக்கில் செயல்படுவதேயாகும்.

புகைப்பழக்கம்

வெளிவரலாமே!!!

புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பவர்கள், அதிலிருந்து வெளிவர முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்வில் நீங்கள் தினமும் புகைபிடிக்கச் செல்லும் இடத்தையும், உடன் புகைபிடிக்கும் மனிதர்களையும் தவிர்ப்பது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது, தேவையான அளவு தூங்குவது, குடும்பத்தினரோடு நேரம் செலவிடுவது போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். அலுவலகத்தில் வேலை இல்லாத நேரத்தில்தான் சிகரெட் பழக்கத்தில் ஈடுபடுவேன் என்பவர்கள், எப்போதும் தங்களை ஏதாவது ஒரு விஷயத்துக்குள் நுழைத்துக்கொண்டே இருக்கலாம். சிலரால் தங்களது புகைப் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் இருக்கலாம். அவர்கள், மருத்துவரை அணுகி மருத்துவ ரீதியாக அதிலிருந்து வெளிவர முன்வரலாம். ஒருவர் புகைபிடிப்பது அவரை மட்டுமன்றி அருகிலிருப்பவருக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பொது வெளிகளில் புகைபிடிப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பழக்கம்

 

இத்தனைப் பாதிப்புகளை ஏற்படுத்தும் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பதே சிறந்தது. உண்மையில் புகையிலை விற்பனையால் வரும் வருமானத்தைக் காட்டிலும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும், அதனால் வாடும் குடும்பங்களும் அதிகம்.!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Bart, Hut, Sonnenbrille, Text und im Freien

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பிரபலமான நடுவராக விளங்கிய ஸ்டீவ் பக்னரின் பிறந்தநாள்
Happy Birthday Steve Bucknor

Bild könnte enthalten: 5 Personen, Nahaufnahme und Text

 
 
பிரபல ஹொலிவூட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் பிறந்த நாள் இன்று.
Happy Birthday Clint Eastwood

Bild könnte enthalten: 1 Person

ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞரில் ஒருவரான அமரர் நீலாவணன் அவர்களது பிறந்த தினம்.

 
 

Bild könnte enthalten: 1 Person, Anzug und Text

இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த முன்னாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரொஷான் மகாநாமவின் பிறந்த தினம்.
Happy Birthday Roshan Mahanama

நேர்த்தியான துடுப்பாட்ட வீரராக விளங்கிய மகாநாம, அற்புதமான களத்தடுப்பு வீரராகவும் விளங்கினார்.
தற்போது உலகின் மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தராக விளங்குகிறார்.

  • தொடங்கியவர்

விமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்

விமான விபத்திலிருந்து பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் தப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
201705311826513733_Sunny-leone-escapes-p
 
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் சன்னி லியோனுக்கென்று உலகமெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், சன்னிலியோன் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையால் விபத்து ஏற்படும் நிலைக்கு சென்று கடைசியில் உயிர் பிழைத்து வந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நாங்கள் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி, கிட்டத்தட்ட விபத்து ஏற்படும் நிலைக்கு சென்றுவிட்டது. விமானி ரொம்பவும் சிரமப்பட்டு எங்களுடைய விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார்.

201705311826513733_sunny22-X._L_styvpf.g

இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இந்த மாதிரியான தருணத்தில் விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் எங்களுடைய நிலைமையை யோசித்துதான் பார்க்கவேண்டும் என்று நகைச்சுவையுடனும் கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம். எங்களுடைய வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய விமானிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

http://cinema.maalaimalar.com/

  • தொடங்கியவர்

டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் நடைபெற்ற நாள்: மே31- 1911

 

டைட்டானிக் கப்பல் 1911-ம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.

 
டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் நடைபெற்ற நாள்: மே31- 1911
 
டைட்டானிக் என்ற சொகுசுக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் பலியானார்கள். இந்த உண்மை சம்பவத்தை வைத்து வெளிவந்த டைட்டானிக் என்ற ஆங்கிலப்படம் வெற்றிகரமாக ஓடி ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கிக்குவித்தது.

இந்த டைட்டானிக் கப்பல் 1911-ம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1889 - பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் கொல்லப்பட்டனர். * 1900 - பிரித்தானியப் படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜோகன்னஸ்பர்க் நகரைக் கைப்பற்றின. * 1902 - தென்னாபிரிக்காவில் இரண்டாவது போவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது. * 1910 - தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. * 1911 - டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

* 1921 - ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 பேர் கொல்லப்பட்டனர். * 1931 - பாகிஸ்தானின் குவெட்டா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர். * 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சிட்னி நகரைத் தாக்கின. * 1961 - தென்னாப்பிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது. * 1962 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

* 1970 - பெருவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 47,000 பேர் கொல்லப்பட்டனர். * 1997 - கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது. * 1981 - யாழ்ப்பாணம் பொது நூலகம் நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது. * 2004 - வீரகேசரி பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். * 2005 - இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஜர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். * 2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது. 

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்
‘ஆசையின் வலையில் வீழ்வது கேலிக்குரியது’
 

image_5fe05b06ce.jpgஆசை அதிகாரம் செய்தால் அறிவு உறங்கிப் போகும். தன்னிலை உணராமல் ஆசையின் வலையில் வீழ்வது கேலிக்குரியதும்கூட! 

முயற்சி செய்கின்றவனுக்கே ஆசைப்படுகின்ற வல்லமையும் அதிகாரமும் உண்டு. நாங்கள் எதனை நோக்கிப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்காமல் கண்டதையும் நோக்கி அவாவுறுதல் தன்னைத்தான் ஏமாற்றுவதும் ஓர் ஏக்க நிலையை உருவாக்குவதும் ஆகும். 

இதனால் பெறப்படும் ஏமாற்றங்கள் மனநிலையில் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இந்தத் தொல்லைகள் எதற்கு? அதனைவிட நியாயபூர்வமாக அறிவின் துணைகொண்டு மெய்வருந்தி உழைப்பதே மேலானதாகும். 

எதற்கும் ஏங்கித் துவழ்வதைவிட, சந்தோசமாகப் பணிசெய்தால் எந்தப் பிணிகளும் எமக்கு நேர்ந்துவிடப் போவதில்லை. உழைக்கும் எண்ணத்துக்கு ஆசைதான் அத்திவாரம் ஆகின்றது. 

ஏற்றுக்கொள்ளத்தக்க ஆசைகளே, நிறைவேற்றக் கூடியவைகளாக இருக்கும். 

  • தொடங்கியவர்

விதவிதமாக மூக்குகள்!

 

 
நீள மூக்குக் குரங்கு
நீள மூக்குக் குரங்கு
 
 

சில உயிரினங்களின் மூக்குகளைப் பார்த்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதுவேகூட அந்த உயிரினங்களின் அடையாளமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சில உயிரினங்களைப் பார்ப்போமா?

நீள மூக்கு குரங்கு

குரங்கு இனங்களிலேயே நீளமான மூக்குள்ள குரங்கு இதுதான். சுமார் 18 செ.மீ. நீளத்தில் வாய் வரை வந்து இந்து மூக்கு தொங்கும். பார்ப்பதற்கே விசித்திரமாக இருக்கும். இந்தக் குரங்கு சாப்பிடும்போது மூக்கை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டுத்தான் சாப்பிட முடியும். ஆண் குரங்குகளுக்கு மட்டுமே இப்படி வித்தியாசமான மூக்கு உள்ளது. சத்தமாகக் கூச்சல் எழுப்பவும், எச்சரிக்கை ஒலி எழுப்பவும் இந்த மூக்கு உதவுகிறது. இந்தோனேஷியா, போர்னியோ தீவில் மட்டுமே இந்த நீள மூக்கு குரங்கு உள்ளது.

ரம்ப மீன்

nose_3_3169967a.JPG

மரங்களை அறுக்க உதவும் ரம்பம் போல காட்சியளிக்கும் வினோத மூக்குள்ள மீன்தான் ரம்ப மீன். மூக்கானது நீண்ட, தட்டையான, ஓரங்களில் பல் வரிசையுடன் இருக்கும். இதன் மூக்கு முழுவதும் துவாரங்கள் இருக்கும். இதன்மூலம் அருகில் இருக்கும் இரையை உணர்த்து அதை உணவாக்கிவிடும். ஆழ்கடலின் அடிமட்டத்தில் மண் மற்றும் சகதிக்குள் புதைந்து இரையைத் தேடிக் கண்டுபிடிக்கும். அதற்கு ரம்பம் போல் இருக்கும் மூக்கும் உதவுகிறது. அதோடு எதிரிகள் வந்தால் மூக்கைக் கொண்டு தற்காத்துக் கொள்ளவும் செய்யும். இதை‘தச்சர் சுறா’ என்றும் அழைக்கிறார்கள். அட்லாண்டிக் மற்றும் இந்தோ-பசிபிக் கடல்களில் இது அதிகம் காணப்படுகிறது.

டேபிர் பன்றி

nose_2_3169968a.JPG

பொதுவாகப் பன்றியின் முக அமைப்பில் மூக்கு நீண்டிருப்பது போலத் தெரியும். ஆனால், டேபிர் என்ற வகையைச் சேர்ந்த பன்றியின் மூக்குக் குட்டித் தும்பிக்கை போலவே இருக்கும். அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளில் இந்தப் பன்றி வாழ்கிறது. இதன் நீளமான மூக்கை எல்லாத் திசைகளிலும் அசைக்க முடியும். அதனால் கொஞ்சம் உயரத்திலிருக்கும் இலை தழைகளைக்கூடப் பற்றி பிடித்துவிடும். இந்தப் பன்றிகளில் ஏதாவது ஒன்று பிரிந்துவிட்டால், தன் கூட்டத்தோடு சேர இரு உத்தியைப் பின்பற்றும். மூக்கை வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்து, பற்களைக் காட்டியபடி மற்ற டேபிர்கள் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்துவிடும். அதற்கு அப்படிப்பட சிறப்பு உள்ளது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: அசத்தும் கூகுளின் கிரிக்கெட் டூடுள்

சாம்பியன்ஸ் டிராபி கிரக்கெட் தொடர் போட்டிகள் இன்று முதல் துவங்கவுள்ளதைத் தொடர்ந்து கூகுள் விசேஷ டூடுள் ஒன்றை பதிவிட்டுள்ளது. டூடுளில் புகைப்படம், ஜிஃப், வீடியோக்களை தவிர்த்து இம்முறை புதிய கேமினை கூகுள் பதிவிட்டுள்ளது.

 
 
 
 
சாம்பியன்ஸ் டிராபி: அசத்தும் கூகுளின் கிரிக்கெட் டூடுள்
 
புதுடெல்லி:
 
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் மோதவுள்ள நிலையில், கிரிக்கெட் தொடரை சிறப்பித்து கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை பதிவிட்டுள்ளது.
 
உலகின் முக்கிய நிகழ்வுகளை சிறப்பித்து கூகுள் டூடுள்களை பதிவிடுவது வழக்கமான ஒன்று தான். இதுவரை டூடுள்களில் புகைப்படம், வீடியோ, ஜிஃப் உள்ளிட்டவற்றை பதிவிட்டு வந்த கூகுள் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை சிறப்பிக்க புதிய கிரிக்கெட் கேம் ஒன்றை பதிவிட்டுள்ளது.
 
201706011026556641_Google%20game._L_styv
 
டூடுளை கிளிக் செய்ததும் நத்தை மற்றும் பட்டுப்பூச்சுகள் விளையாடுவதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை கிளிக்களில் விளையாடுவதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய கேம் கூகுள் செய்வோரை பேட்டிங் செய்ய மட்டும் வழி செய்கிறது. 
 
மிகவும் எளிமைாயக வடிவமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் கேம் குழந்தைகளுக்கு மகிவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். மேலும் ரன்களை குவித்து அவுட் ஆகும் பட்சத்தில் நீங்கள் குவித்த மொத்த ரன்களை பேஸ்புக், ட்விட்டர் மற்றும் அவுட்லுக் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
 
  • தொடங்கியவர்

டொனால்டு ட்ரம்ப் - மெலானியா விரிசலுக்கு என்ன காரணம்? DonaldTrumpVsMelania

ட்ரம்ப்

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் அவர் மனைவி மெலானியாவுக்கும் இடையே விரிசல் என வெளிநாட்டு ஊடகங்கள் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில், இஸ்ரேல் நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் டொனால்டு ட்ரம்ப். அவருடன் மெலானியாவும் சென்றார். இஸ்ரேல் விமான நிலையத்தில், மெலானியாவின் கையைப் பிடிக்க ட்ரம்ப் முயன்றபோது, அதனைத் தவிர்க்கும் விதமாக தட்டிவிட்டார் மெலானியா. இருவருக்குமிடையே இப்படி நடப்பது புதிதானது இல்லை. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற விழாவில், ட்ரம்ப் பின்னால் நின்றுகொண்டிருந்தார் மெலானியா. அப்போது, மெலானியாவிடம் ஏதோ பேசிவிட்டு ட்ரம்ப் திரும்பியதும் மெலானியாவின் முகம் இறுக்கமாக மாறிவிட்டது. அது சமூக வலைதளத்தில் வைரலானது. டொனால்டு ட்ரம்ப் - மெலானியா திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை எனப் பல்வேறு சம்பவங்களைப் பட்டியலிட்டு சொல்கின்றனர். அவற்றில் சில...

* அமெரிக்க அதிபராக வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் வசிக்கிறார் டொனால்டு ட்ரம்ப். ஆனால், மெலானியா தனது மகன் பரோன் (Baron) பள்ளிப் படிப்பை காரணம் காட்டி, நியூயார்க் நகரில் வசித்துவருகிறார். 

* அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாளன்று, காரிலிருந்து இறங்கிய ட்ரம்ப், அவரை வரவேற்பதற்காக நின்றிருந்த ஒபாமாவைச் சந்திக்கச் சென்றுவிட்டார். சில நொடிகள் கழித்தே, மெலானியாவை தன்னுடன் சேர்த்துக்கொண்டு நின்றார். ஒருவர் அதிபராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனது மனைவியை தன்னுடன் அழைத்துச் செல்வதுதான் நாகரிகம்.

* அதிபர் பதவியேற்பு விழாவில், டொனால்டு டிரம்ப் மனைவியுடன் சம்பிரதாயமாக நடனமாடினார், அவர்கள் இருவருக்குமிடையேயான அந்நியோன்யம் வெளிப்படவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

* எந்த நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் தனது மனைவி விமானத்தைவிட்டு இறங்குவதற்கு முன்னரே, ட்ரம்ப் விமானத்திலிருந்து இறங்கி, அதிகாரிகளுடன் நடந்துசெல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

* கடந்த பிப்ரவரி மாதம், ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொள்ள வந்தனர். அப்போது, விமானத்தைவிட்டு இறங்கி ட்ரம்புடன் ஒன்றாக காரில் ஏற முயன்றார் மெலானியா. ஆனால், சில நொடிகள் கழித்து, காரின் மறுபக்கமாகச் சென்று ஏறினார். இது, மெலானியா தன்னுடன் அமரவும் ட்ரம்ப் அனுமதிக்கவில்லை என்பதை தெளிவாக காட்டியது. 

* அதே ஃப்ளோரிடா நிகழ்ச்சியில், மெலானியா பேச ஆரம்பித்த சில நிமிடங்களில், மெலானியாவின் கையைத் தொட்டவாறு கடந்துசென்றார் ட்ரம்ப். அந்தத் தொடுதல் தனக்குப் பிடிக்கவில்லை என்பது போல முகத்தில் உணர்வை வெளிப்படுத்தினார் மெலானியா. 

* மெலானியாவை பொது இடங்களில் மரியாதை நிமித்தமாக ட்ரம்ப் கட்டியணைக்கும்போதும், ஏதோ கடமையே எனச் செய்வதாக சர்ச்சை எழுந்தது. 'இவர்கள் கட்டியணைக்கும் விதம் கணவன் - மனைவிபோல தெரியவே இல்லை' என்று நெட்டிசன்கள் ‘ட்ரோல்’ செய்கிறார்கள். 

* ட்ரம்ப் பற்றி விமர்சித்து எழுதப்பட்ட ஒரு ட்விட்டை, சில மாதங்களுக்கு முன்பு ’லைக்’ செய்திருக்கிறார் மெலானியா. இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'இது அவருக்குத் தெரியாமல் நடந்த தவறு' என்று மழுப்பியிருக்கிறார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 01
 

article_1433134713-birendra%20famely.jpg1215: பெய்ஜிங் நகரம் செங்கிஸ் கான் தலைமையிலான மொங்கோலிய படையினால் கைப்பற்றப்பட்டது.

1485: ஹங்கேரியின் மத்தாயஸ் வியென்னாவைக் கைப்பற்றினான்.

1533: இங்கிலாந்தின் அரசியாக ஆன் போலெய்ன் முடிசூடினார்.

1605: மொஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோதரையும் அவனது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.

1792: கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1796: டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1812: பிரிட்டன் மீது யுத்தப் பிரகடனம்செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மெடிசன் நாடாளுமன்றத்தை கோரினார்.

1831: ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.

1855: அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.

1869: மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.

1879: பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ - சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான்.

1910: ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென் முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.

1941: ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1946: ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1947: சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.

1959: நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.

1962: நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ஃப் ஐக்குமன் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.

1964: சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.

1971: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1978: டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

1979: ஸிம்பாப்வேயில் வெள்ளையின ஆட்சி முடிவுக்கு வந்தது.

1980: சி.என்.என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.

1990: அமெரக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ், சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவ் ஆகியோர் இரசாயன ஆயுத உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

2001: நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி, ஐஸ்வர்யா  மற்றும் பல அரச குடும்பத்தினர் உட்பட 9 பேர்  முடிக்குரிய இளவரசர் திபேந்திராவினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இளவரசர் திபேந்திராவும் தன்னைதானே சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.

2009: பிரேஸிலில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பிரெஞ்சு விமானம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 228 பேரும் பலி.

2014: நைஜீரியா, முபீ கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதுலில் 40 பேர் பலியாகினர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p35a.jpg

 கால்பந்தாட்ட உலகின் `தல' லியோனல் மெஸ்ஸிக்கு சிறை தண்டனை விதித்திருக்கிறார்கள்.  வரி ஏய்ப்புக் குற்றத்திற்காக 21 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், கால்பந்தாட்ட ரசிகர்கள் எல்லாம் சோகத்தில் மூழ்க, மெஸ்சி சிறை செல்லவேண்டிய அவசியம் இல்லை என்று ஆறுதல் கொடுத்தி ருக்கிறது மெஸ்ஸி தரப்பு. வன்முறை அல்லாத குற்றச்செயல்களில் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும்பட்சத்தில் அதை ரத்து செய்யும் நடைமுறை ஸ்பெயினில் இருக்கிறதாம்! சட்டத்துல இல்லாத ஓட்டையா?


p35b.jpg

 கஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் `விவேகம்' படத்தில் அஜித்தின் பெருமைகளைப் பேசும் தீம் சாங் ஒன்று இடம் பெறுகிறது. ட்ரெய்லரில் அஜித் பேசிய `never ever give up' வசனத்தைப் பின்னணியாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் இந்தப் பாடல், அஜித்தின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உருவாகியிருக்கிறது. தெறிக்கவிடுவாங்களே தல ஆர்மி


p35c.jpg

 தெலுங்கு சினிமாவின் ரொமான்டிக் ஜோடி சமந்தா - நாகசைதன்யா அக்டோபரில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். திருமணம் முடிந்ததும் ஹனிமூனுக்கு நியூயார்க்கிற்குப் போகிறார்களாம். ஏன் நியூயார்க்? என விசாரித்தால், `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்சன் ஷூட்டிங் நியூயார்க்கில் நடந்தபோதுதான், சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்ததாம்! ஆராமலேய்ய்ய்...


 ஆசிட்வீச்சால் முகம் சிதைந்துபோனவர் மும்பையைச் சேர்ந்த லலிதாபென். அவரைக் காதலித்துக் கரம்பிடித்திருக்கிறார் ராஞ்சியைச் சேர்ந்த ரவிசங்கர். மிஸ்டுகாலில் ஆரம்பித்த நட்பு, காதலாகி கசிந்துருகி கல்யாணம் வரை வந்திருக்கிறது. அன்புக்கு முன்னால் அழகெல்லாம் அவசியமில்லை என்று நிரூபித்திருக்கிற இந்த இளம் ஜோடியை பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நேரில் வந்து வாழ்த்தி ஒரு ஃபிளாட் ஒன்றையும் பரிசளித்திருக்கிறார்! நெகிழ்ச்சி மகிழ்ச்சி


p35d.jpg

p35e.jpg

மீபத்தில் சீனாவில் ரிலீஸான அமீர்கானின் `டங்கல்', இதுவரை 1523 கோடி ரூபாய் வசூல் செய்தி ருக்கிறது. இந்திய சினிமாவின் புலிப்பாய்ச்சல் இது என்கிறார்கள். `பாகுபலி', இன்னும் சீனாவில் திரையிடப்படவில்லை. `டங்கல்' வெற்றியில் `பாகுபலி' டீம் செம உற்சாகத்தில் இருக்கிறது. பாகுபலியின் வெளிநாட்டு விற்பனை உரிமையை வைத்திருக்கும் Francois Da Silva, ‘சீனாவுக்கு நாங்கள் வேறொரு திட்டம் வைத்திருக் கிறோம். சீனா ரிலீஸும் முடிந்த பிறகு, `பாகுபலி' இந்தியத் திரைத் துறையின் வரலாற்றுச் சாதனை யாக அமையும் பாருங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். ஜெய்மகிழ்மதி!


 பாடகர் அட்னான் சாமிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. மெடீனா என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகளுக்குப் பரிசாக, தன்னுடைய 20 ஆண்டுகால புகைப்பழக்கத்தைக் கைவிட்டிருக்கிறார்! ஏற்கெனவே தன்னுடைய தந்தையின் அன்புக்காகக் குண்டுப்பையனாக இருந்த சாமி கஷ்டப்பட்டு டயட் இருந்து, ஜிம்மில் போராடி 167 கிலோவைக் குறைத்திருக்கிறார். இப்போது இது! அன்பு அடிக்ட் சாமி!


p35f.jpg 

குலுமணாலியில் இக்லூதான் இப்போது ட்ரெண்ட். ஆர்டிக் மக்களின் இக்லூ என்கிற பனிவீடுகள் பற்றி நூல்களில்தான் படித்திருப்போம். இப்போது மணாலியின் பனிமலைப்பகுதிகளில் இத்தகைய இக்லூ வீடுகளை உருவாக்கி தங்குவசதிகளைச் செய்து தருகிறார்கள் தனியார் நிறுவனங்கள். கூடவே ஸ்கையிங் ஸ்னோபோர்டிங் கூட செய்யலாம். குளுகுளுஹவுஸ்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

01.06.1926:  உலகப் புகழ் பெற்ற நடிகை மர்லின் மன்றோ பிறந்த தினம் இன்று!

 
marlin_mandro

 

மர்லின் மன்றோ  அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார். 1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கிச் சிறப்பித்தது. உலகில் ஏற்பட்ட கலாசாரா மற்றம் அல்லது புதிய கலாச்சாரத்திற்குக் காரணமான நடிகையாகவும் இவர் காணப்படுகின்றார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்த இவர், அனாதை இல்லத்தில் தனது ஆரம்ப வாழ்க்கையைக் கழித்த இவர், 16 வயதில் மனம் முடித்தார். 1944 இல் ஒரு மாடல் அழகியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

உடல் நலக் குறைபாடு காரணமாக ஆகஸ்ட் 5, 1962 அன்று மரணமடைந்தார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

பிரேக்கிங் நியூஸ் எதுவும் இல்லையா? இந்த ஐடியாக்களை பாலோ பண்ணுங்க!

இது நமது கண்களையும், மூளையையும், கபாலத்தையும் கதற வைக்கும் பிரேக்கிங் நியூஸ் யுகம். காலையில் எழுந்ததும் டி.வியில் பிரேக்கிங் நியூஸ் பார்க்கலைன்னா தமிழர்களுக்கு மண்டை வெடிக்கும் நிலைமை. சீரியல் பார்த்த பெண்களெல்லாம்கூட இப்போது நியூஸ் பார்க்க கிளம்பிவிட்டதால், டி.வி சேனல்கள் புதுசு புதுசாக நியூஸ்கள் பிடிக்க திணறி வருவதாக ஒரு பிரேக்கிங் நியூஸ் கிடைத்திருக்கிறது. அதனால், தமிழர்களின் 'நலன்' கருதி எதை எதை எல்லாம் பிரேக்கிங் நியூஸ் ஸ்லாட்டுகளாக மாற்றலாம் என்று ஐடியாக்கள் லிஸ்ட் போட்டுருக்கோம். 

பிரேக்கிங் நியூஸ்  

இன்னிக்கு ரஜினியை சுத்தித்தான் அரசியலே சூறாவளியா சுத்திக்கிட்டு இருக்கு. ஆனால், 'அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்'னு பேசிய அவரது வசனத்தை வச்சே எத்தனை நாளைக்கு பிரேக்கிங் நியூஸ் போடுறது? இந்த இடத்துலதான் சயின்ஸோட உதவியை கேட்கணும். நரசிம்மா ஸ்டைல்ல மனோதத்துவ நிபுணர்களை வச்சு ரஜினி ஆழ்மனசுல உண்மையிலேயே என்ன நினைக்கிறார்னு லைவ் பண்ணா மக்களும் விழுந்து விழுந்து பார்ப்பாங்க. 

டி.வி ஸ்க்ரீன்ல, 'ரஜினி'ன்னு பெயர் வந்தாலே மக்கள் என்னமோ ஏதோனு பார்க்குறதால அடுத்த பிரேக்கிங் நியூஸூக்கான ஆஃபரையும் அவர்கிட்ட இருந்தே எடுக்கலாம். 'நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்'ன்னு அவர் சொல்றதால, உண்மையில் ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றி அந்த ஆண்டவன் என்னதான் நினைக்கிறான் என்று கண்டுபிடித்து சொல்லலாம். இதுக்காக மத பாரபட்சம் இல்லாம எல்லா கடவுள்களிட்டயும் போய் குறி கேட்கலாம். அதோட முடிவுகளை எல்லாம் லிஸ்ட் போட்டு சொன்னா லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்! 
 
அடுத்து தீபாவை வச்சுதான் கன்டென்ட் எடுக்கணும். வடிவேலு படத்துல இல்லாத சிரிப்பைக் கூட இப்போ தீபாதான் வாரி வழங்குறாங்க. 'சொல்லுங்க... இத்தனை நாளா எங்க இருந்தீங்க? என்ன பண்ணீங்க?'னு கேக்க வைக்குற அளவுக்கு திடீர் திடீர்னு காணாம போறது, அப்புறம் பிரஸ்மீட் வைக்கிறதுனு இவங்க பண்றதெல்லாம் டமால்டுமீல் ரகம். அதனால இவர் எங்க போறார், என்னலாம் பண்றார்னு ஆள் விட்டு பாலோ பண்ணி அதையே நியூஸா போடலாம்.
 
வைகோ ஐம்பது நாள்களுக்கு மேலாக சிறையில் இருந்ததால், சிலிர்க்க வைக்கும் அவரோட வரலாற்று சிறப்புரைகளை கேட்டு ரொம்ப நாளாச்சு. அதனால சேனல்காரங்களே ஆளுக்கு ஒரு மேடை போட்டு மைக் செட்டை கையில் கொடுத்தால்... ரோம், பாரீஸ், சான் பிரான்சிஸ்கோனு எல்லா நகரங்களோட வரலாறுகளையும் புட்டு புட்டு வைப்பார். அதை அப்படியே லைவ் பண்ணி ஹிட்ஸ் அள்ளிட வேண்டியதுதானே! 
 
முதல்வர் எடப்பாடி இந்த ஆட்சியின் நூறு நாள் சாதனைகள்னு ஒரு லிஸ்ட் போட்டு அவருக்கு அவரே பப்ளிசிட்டி தேடிக்கிறார். எதையும் செய்யாத அவரே இவ்ளோ பில்டப் பண்ணும்போது நாம பண்ணக்கூடாதா? அதே ஸ்டைல்ல ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போய் அவங்க அவங்களை பத்தின தற்பெருமைகளை வீடியோவா வாங்கிப் போட்டா மக்களும் ஒருமனதா ஆதரிச்சுடுவாங்க. நாமளும் ஹிட்ஸ் அள்ளலாம். 

 

இன்னும் இப்படி எத்தனையோ பிரேக்கிங் நியூஸ் ஐடியாக்கள் இருக்கு. அவற்றை ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகையே வியக்க வைத்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் உலகின் மிகப்பெரிய விமானத்தைக் கட்டமைத்துள்ளார். 

மிகப்பெரிய விமானம்

 


விண்வெளிக்கு ராக்கெட்டை சுமந்து செல்லும் உலகின் மிகப்பெரிய விமானத்தை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் வடிவமைத்துள்ளார். தன் ஆறு வருட கால உழைப்பின் பலனை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ’ஸ்ட்ராடோலாஞ்ச்’ எனப் பெயரிடப்பட்ட அந்த விமானம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனத்தில் கட்டமைக்கப்பட்டது. 6 ஜெட் என்ஜின்கள், 28 சக்கரங்கள் மிகப் பிரமாண்டமாக இந்த விமானம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு ராக்கெட்டுகளைச் சுமந்து செல்லவுள்ள இந்த விமானம், 226 டன் எடையுடன், 113 டன் எரிபொருள் சேமிக்கும் வசதியுடன் உள்ளது. இந்த விமானத்தின் இறக்கைகள் 385 அடி நீளத்தில் 50 அடி உயரத்தில் உள்ளன. இதில், 1000 டன் வரையிலான எடை கொண்ட ராக்கெட்டுகள் சுமந்து செல்லுமளவு திறன் கொண்டுள்ளது. இந்த விமானத்தின் முதல் கட்ட சோதனை ஓட்டம் 2019-ஆம் ஆண்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Bart, Text und Nahaufnahme

அலைபாயுதே முதல் அனைவரதும் இதயம் கவர்ந்த அழகிய நாயகன் மாதவனின் பிறந்தநாள்.

தமிழிலும் ஹிந்தியிலும் கலக்கும் கதாநாயகன்.

Happy Birthday R Madhavan

 

 

‘இந்தப் படத்துல நடிக்காதே..!' - மணிரத்னம் பேச்சை மீறிய மாதவன் #HBDMaddy

 

மாதவன் என்றதும் புன்னகை பரவிய ஒரு முகம்தான் நமக்கு நினைவுவரும். 2000... இளைஞர்கள் வாக்மேனும் கையுமாக அலைந்த காலம். பைக்கில் `என்றென்றும் புன்னகை...' என்று கால் பதித்த இவருக்கு, என்றுமே புன்னகைதான். தமிழ் சினிமாவில் எக்கச்சக்க கார்த்திக்குகள் இருந்தாலும், `அலைபாயுதே' கார்த்திக் என்றுமே ஸ்பெஷல்தான். அந்த சாக்லேட் பாய்க்கு இன்று பிறந்த நாள்.

மாதவன்

பீகார் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்த மாதவன், விஷுவல் மீடியா மீது தனி கவனம் செலுத்திவந்தார். இவரின் தந்தை ரங்கநாதன், டாடா நிறுவனத்தில் பணிபுரிந்தார். தாயார் சரோஜா வங்கியில் பணியாற்றினார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட மாதவன், கோலாபூர் ராஜாராம் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் படித்தார். அப்போது, ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. காரணம், கல்லூரியின் என்.சி.சி பிரிவில் இவரும் இருந்தார். முகாம்களில் அளிக்கப்பட்ட பயிற்சிகளை முறையாகக் கற்றார். இருப்பினும், வயது தவறியதால் ராணுவத்தில் சேர முடியாமல்போனது.

ஒருபக்கம் இவர் தன் மேற்படிப்பை மும்பையில் படித்துவந்தாலும், மறுபக்கம் தன் புரொஃபைலை மாடலிங் ஏஜென்சிக்கு அனுப்பிவைத்தார் மேடி. தான் நடித்த விளம்பரப் பட இயக்குநரின் உதவியால் மணிரத்னத்துக்கு அறிமுகமானார். அவரின் 'இருவர்' படத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இவருக்கு, கண்கள் மிகவும் இளமையாக இருந்ததால் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. அதன் பிறகு, இந்தி நாடகங்களில் நடித்தும், சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும் வந்தார். `இஸ் ராத் கி சுபா நாகின்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய ரோல் இல்லை.

1997-ம் ஆண்டில் வெளியான 'இன்ஃபெர்னோ' எனும் ஆங்கிலப் படத்தில் ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துக் கலக்கினார். பிறகு கன்னடத்திலும் களமிறங்கிய இவர், 'சாந்தி சாந்தி சாந்தி' எனும் படத்தில் துணை நடிகராக நடித்து அங்கேயும் கால் பதித்தார். பிறகு, ரொமான்டிக் ஜானர்களில் டாப் இடத்தில் இருக்கும் 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார். தமிழ் சினிமாவில் எத்தனை லவ் ப்ரபோஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இந்தப் படத்தில் இடம்பெற்ற லவ் ப்ரபோஸ் காட்சியை எவராலும் மறக்க முடியாது.

Madhavan

2001... அந்தப் படத்துக்குப் பிறகு மாதவனுக்கு ரசிகைகள் மட்டுமல்லாது, பட வாய்ப்புகளும் குவிந்தன. `அலைபாயுதே' ஏ சென்டர் ரீச் கொடுக்க, பி, சி மக்களையும் சென்றடைவோம் என்ற நோக்கத்தில் நடித்ததுதான் 'என்னவளே'. அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

அறிமுக இயக்குநர் ஒருவரின் கதையைக் கேட்ட மேடிக்கு, அது பிடித்திருந்தது. ஆனால், அது சரியாக இருக்குமா என மாதவனுக்குச் சந்தேகம். அந்த இயக்குநரை, மணிரத்னத்திடம் கதை சொல்ல அழைத்துச் செல்கிறார். 'அலைபாயுதே' படத்துக்கு முன்னரே 'மின்னலே' படத்துக்கான பேச்சு போய்க்கொண்டுதான் இருந்தது. 'அலைபாயுதே' எனும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததால், மாதவனிடம் 'இனி நீ படங்கள் எல்லாம் பார்த்து தேர்வு செய்' என்று அட்வைஸ் செய்திருக்கிறார் மணிரத்னம். இப்படிச் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு, `மின்னலே' பட சம்பந்தமாக கௌதம் மேனனை அழைத்துக்கொண்டு அட்வைஸ் கேட்டார் மாதவன். அதற்கு, மணிரத்னம் 'இந்தப் படத்தை நீ பண்ணாதே' என்று கூறியுள்ளார். 'என்னுடைய இன்ஸ்பிரேஷனான மணிரத்னம் சாரின் முன்னாடியே இப்படி ஒரு தருணத்தில் உட்காரவைத்ததால், மேடியை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன்' என்று ஒரு பேட்டியில் ஜாலியாகக் கூறியிருந்தார் கெளதம் மேனன். ஆனால், அதற்குப் பிறகு பல குழப்பங்களைத் தாண்டி நடித்த அந்த 'மின்னலே'தான் மேடி வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனைப் படமாக அமைந்தது.

2003... `அலைபாயுதே' பலருக்கும் ஃபேவரைட் படமாக இருந்தாலும், மேடிக்கு அவர் நடித்ததிலேயே பிடித்தது 'மின்னலே', 'அன்பே சிவம்' மற்றும் 'இறுதிச்சுற்று' படங்கள்தான். மேடி, தன் பெர்சனல் வாழ்க்கையில் பயங்கர கோவக்காரர். இவரின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தப்படும் சில சம்பவங்கள் `இறுதிச்சுற்று' படத்தில் இடம்பெற்றிருந்ததால், அந்தப் படம்தான் இவரது ஆல் டைம் ஃபேவரைட்.

'அன்பே சிவம்' படத்தின் ஷூட்டிங் டைமில் கமல் மேக்கப் போட்டுக்கொள்ளும் நேரத்தில் அவரையே பார்த்துக்கொண்டிருப்பாராம் மேடி. முதல் காட்சியின் ஷூட்டிங் முடிந்த பிறகு கமல், மேடியிடம் சென்று `நாட் பேட் மேடி' என்று அவர் பாராட்டியதை எப்போதும் மறக்க முடியாததாகவும், ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றதுபோல் சந்தோஷமாக இருந்ததாகவும் கூறுவார். படத்தில் இவரின் நேர்த்தியான நடிப்புக்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அதற்குப் பிறகு `நளதமயந்தி', `லேசா லேசா', 'பிரியமானதோழி'. 'ஜே ஜே' என வெரைட்டியான படங்களில் நடித்தார்.

Aayutha Ezhuthu

2004... தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் ஹீரோவாக நடித்துவந்த மாதவன், ஒரு மாற்றத்துக்காக `ஆய்தஎழுத்து' படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கி, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதுவரை பார்க்காத மாதவனாக படத்தில் நடித்து, அதற்காக ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றார். 2005-ம் ஆண்டு முழுவதும் இந்தியில் பிஸியான மாதவன், தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. மெடிக்கல் லீவில் சென்ற மாதவன், 2006-ம் ஆண்டில் 'தம்பி', 'ரெண்டு' ஆகிய இரு படங்களில் நடித்தார். பிறகு, தமிழிலும், இந்தியிலும் மாறி மாறி நடித்த மாதவனுக்கு, வெளிவந்த படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அதற்குப் பிறகு இந்தியில் நடித்த `3 இடியட்ஸ்' படம், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 2012-ம் ஆண்டில் வெளியான 'வேட்டை' படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் லாங் லீவ் எடுத்த மேடி, கொஞ்சம் நாள்கள் இந்திப் படங்களில் கவனம் செலுத்தினார்.

Irudhisuttru

2016... தமிழ் சினிமாவுக்குள் வேற லெவலில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதுவரை வெவ்வேறு விதங்களில் படம் கொடுத்த மேடி, 'இறுதிச்சுற்று' படத்தில் பாக்ஸராக அவதாரம் எடுத்தார். லாங் ஹேர், ஷேவ் செய்யாத தாடி, இந்தப் படத்துக்காக ஒரு வருடமாகத் தயார்செய்த உடல்... என ஆளே வேறு மாதிரி இருந்தார். பாக்ஸராகக் களமிறங்கிய இந்தத் திரைப்படம், பாக்ஸ் ஆபீஸையும் நிரப்பியது.

தற்போது தமிழிலும் இந்தியிலும் பல படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. என்னதான் இவர் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும், ரசிகர்கள் மத்தியில் `சாக்லேட் பாய்'யாகத்தான் பதிந்துள்ளார். `இறுதிச்சுற்றை'த் தொடர்ந்து இவரது படங்களுக்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. மாதவன், நல்ல நடிகர் மட்டும் அல்ல; தன்னம்பிக்கைப் பேச்சாளரும்கூட. பல கல்லூரிகளுக்குச் சென்று நிறைய விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். திறந்த மனசு, தமிழ் சினிமாவின் மீது தீராக்காதல், கடின உழைப்பு ஆகிய அனைத்தும் உங்களை வெற்றியின் உச்சத்துக்கு அழைத்துச் செல்ல வாழ்த்துகள்.

ஹேப்பி பர்த்டே மேடி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வியாட்நாமை சேர்ந்த ஆசிரியர் மை ஸுவான் மியு தன் மாணவர்களுக்கு நடனம் மூலம் பாடம் கற்பித்து வருகிறார்.

மியு நடனமாடும் இந்த தொழில்முறையாக எடுக்கப்படாத காணொளி வைரலாக பரவி வருகிறது.

1978லிருந்து மத்திய வியாட்நாமில் உள்ள டனாங்கில் 59 வயதுடைய மியு ஆசியராக பணியாற்றி வருகிறார்.

  • தொடங்கியவர்

உலகிலேயே குண்டான சிறுவனுக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சை! ஒரே மாதத்தில் 31 கிலோ குறைப்பு!

 

 

உலகின் மகா ‘குண்டுச்’ சிறுவன், ஒரு சத்திர சிகிச்சையின் பலனாக தனது உடல் எடையில் ஆறில் ஒரு பங்கைக் குறைத்திருக்கிறார்.

6_V_Arya.jpg

ஆர்யா பெர்மானா என்ற பதினொரு வயது நிரம்பிய இந்தச் சிறுவன் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மானிலத்தில் உள்ள கரவங் என்ற பகுதியைச் சேர்ந்தவர். ஐந்து நிமிடம் தொடர்ந்து நடக்கவே முடியாத இந்தச் சிறுவனின் உடல் எடை 190 கிலோகிராம். இவனது வயதையொத்த ஆறு பேரின் மொத்த எடையை இவர் கொண்டிருக்கிறார்.

பிறக்கும்போது சாதாரண உடல் எடை கொண்டிருந்த ஆர்யா, தனது ஆறாவது வயது முதல் அதீத உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

 

தினமும் ஐந்து வேளை சாப்பிடும் இவரால் உணவை உட்கொள்வதை நிறுத்த முடியாது. என்றபோதும், இந்நிலை தொடர்ந்தால் அச்சிறுவனின் உயிருக்கே ஆபத்து என்பதை மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு உணர்த்தினர். கடும் முயற்சிக்குப் பின் தமது மகனை சிகிச்சைக்கு உட்படுத்த அவர்கள் சம்மதித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த மாதம் அச்சிறுவனுக்கான மொத்த சிகிச்சையின் முதல் பகுதியான ‘கேஸ்ட்ரிக் ஸ்லீவ்’ என்ற ஐந்து மணி நேரம் நீடித்த சத்திர சிகிச்சையை மருத்துவர்கள் செய்து முடித்தனர். உலகிலேயே இந்த சிகிச்சையைச் செய்துகொண்ட மிகக் குறைந்த வயதுடையவரும் ஆர்யாவே! இதனால் கடந்த ஒரு மாத காலத்தில் 31 கிலோ எடை குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் தொடர் சிகிச்சைகள் மூலம் ஆர்யாவின் இரைப்பையின் அளவைக் குறைத்து, மொத்தமாகச் சுமார் 150 கிலோ எடையைக் குறைக்கவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

இங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் பங்கேற்பு (Photos)

இங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் பங்கேற்பு (Photos)

இங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் (Cheese-rolling) போட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

பாலாடையால் செய்யப்பட்ட உருளையைக் கொண்டு விளையாடும் இந்தப் போட்டி, குளொசெஸ்டர் என்னும் கிராமத்தில் வருடாவருடம் நடைபெற்று வருகிறது.

கூப்பர்ஸ் மலையின் உச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் போட்டிக்குத் தயாராக இருப்பர்.

மேலிருந்து பாலாடை உருளையைக் கீழ்நோக்கி உருட்டிவிடுவர்.

அதனைத் தொடர்ந்து யார் முதலில் எல்லைக் கோட்டைத் தொடுகின்றார்களோ அவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

ஆண்கள் பிரிவில் 29 வயதான கிரிஸ் ஆன்டர்சன் என்பருவம் பெண்கள் பிரிவில் 18 வயதான கெவி மார்க்கலும் வெற்றி பெற்றனர்.

பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டி 1826 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதற்கு முன்னரே இந்தப் போட்டியானது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

1

2

3

5

6

7

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

 

இன்று உலக பெற்றோர் தினமாகும்..

உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜீன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

Kein automatischer Alternativtext verfügbar.

 

 
 
இன்று உலக பால் தினம்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு தினம்

2017 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, பண்ணைத் துறை "ஒரு கோப்பையை உயர்த்துங்கள்" (ஆங்கிலத்தில் : “Raise a Glass” ) தலைப்பில் சமூக வலைதளங்களில் உலக பால் தினம் (#WorldMilkDay) எனும் பிரச்சார ஹேஸ்டேக்(hashtag) மூலம் ஒரு சிறப்பு பிரச்சாரத்தை கொண்டாடுகிறது.

இன்று உலக பால் தினம்!

பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக பால் தினம்

இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால். தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்பும், சத்தும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது. இதை உலகுக்கு உணர்த்த ஐநா சபை ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

 

பால் மற்றும் பால் பொருள்களின் சிறப்பு அம்சங்களை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐநா சபை வலியுறுத்தியுள்ளது. பசும்பாலில் அனைத்துவித அமினோ அமிலங்களும் உள்ளன. 5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது. இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.