Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

'காலா' படத்தின் பாடல் - பன்ச் டைலாக் லீக்கானது..!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ஹீமா குரேஷி மற்றும் பலர் காலா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 40 நாள்கள் மும்பையில் நடைபெறும் என்றும், பின்னர் சென்னையில் செட் அமைத்து ஷூட்டிங் நடத்தப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

DA-N0S0W0AAPRB4_12318_18409.jpg

தற்போது மும்பையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த வீடியோவில் காலா படத்தின் ஓபனிங் பாடலில் ரஜினி நடனம் ஆடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினி பேசும், ’நான் கால வைக்கிறதும் வைக்காததும், உன் தலை இருக்குறதும், இருக்காததும் உன் கையிலதான் இருக்கு...’ என்ற பன்ச் டைலாக்கும் இடம்பெற்றுள்ளது.

மேலும், படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் ஹீமா, தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ஜரினா என்றும் 'காலா' படத்தின் ஸ்கிரிப்ட் பேப்பரின் ஒரு பகுதியை போட்டோ எடுத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மலர்களின் ‘அத்திப்பட்டி’ கோப்ரா லில்லி..! மேற்குத்தொடர்ச்சி மலை ஆச்சர்யம்

 
 

கோப்ரா லில்லி மலர்


ஒரு வாரத்திற்கு முன்பாக கோப்ரா லில்லி என்ற மலர், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. இந்த செய்தி உலகளவில் மிக முக்கியமான சுற்றுச்சூழல் இதழ்களில் வெளியாகி சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். அப்படி என்ன இருக்கிறது அந்தப் பூவில்? இதே கேள்வியை, கோப்ரா லில்லியை கண்டுபிடித்த கேரளாவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், மூத்த தாவரவியல் விஞ்ஞானியுமான பிரபுகுமாரிடம் நாம் கேட்டோம்.

”கோப்ரா லில்லி மிக அபூர்வமான மலர். அதன் வரலாறும் அப்படிதான் அந்த மலருக்கு விளக்கம் கொடுக்கிறது. கோப்ரா லில்லி என்பது அதன் பொதுப்பெயர்தான். அதாவது மலைவாழ் மக்கள் அழைக்கும் பெயர். பார்ப்பதற்கு பாம்பின் தலை போல இருக்கும் அதன் உருவமே இந்தப் பெயருக்குக் காரணம். கடந்த 1932ம் ஆண்டு இந்த மலரை இதே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் ’பர்னீஸ்’ என்ற இயற்கை ஆர்வலர் கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார். அதன் பின்னர் இந்தப் பகுதிக்கு வந்த தாவரவியல் விஞ்ஞானிகள் கோப்ரா லில்லியை பார்க்க ஆர்வமாக இருந்தனர். காரணம் அதன் வடிவமும், கண்ணாடி இழை போல இருக்கும் அதன் இதழ்களும்தான். பார்த்தவுடன் அனைவரையும் கவரும் அதன் வடிவத்தையும் மிளிரும் வண்ணத்தையும் பார்க்க நிச்சயம் அதிஷ்டம் வேண்டும். கிட்டத்தட்ட 84 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை யாரலும் அந்த மலரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மலர்

 

மலர்நாங்கள் கடந்த மாதம், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிக்கு ஆராய்ச்சி தொடர்பாக சென்றுகொண்டிருந்த போது இந்த மலரைக் கண்டோம். பார்த்தவுடன் எங்களை அது ஈர்த்தது. வெறும் புத்தகங்களில் மட்டுமே கண்ட அந்த மலரை நேரில் பார்த்தபோது எங்களால் அதை உடனே அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதன் வண்ணத்தையும் கண்ணாடி இழை போன்று இருக்கும் இதழ்களையும் பார்த்து அதனருகில் சென்ற பிறகுதான் தெரிந்தது, அது கோப்ரா லில்லி என்று. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக விஞ்ஞானிகளின் கண்ணில் படாமலிருந்த கோப்ரா லில்லியை அந்த அடர் வனத்தில் பார்க்கும்போது பிரம்மித்துப் போனோம். உடனே அந்த மலரைப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மலர் தொடர்பான தரவுகளைப் பதிவு செய்துகொண்டோம். இந்த அரிய கண்டுபிடிப்பானது, கடந்த வாரம்  “Phytotaxa” என்ற தாவரவியல் இதழில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மற்ற இதழ்களில் வெளியானது. 

 

மிக அபூர்வமான இந்த மலரிலிருந்து மலை வாழ் மக்கள் குடல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்து தயாரிப்பார்கள். கேன்சரை குணப்படுத்தும் தன்மை இந்த மலருக்கு இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. மலைவாழ் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள இந்த மலர் மலர்வதை வைத்துதான் பருவமழையை கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால், மாறி வரும் வனச்சூழல் காரணமாக இந்த இனம் மறைந்துபோனது. தற்போதைய இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றே நான் கருதுகிறேன். காணாமலே போய்விட்டது என்று இதுநாள் வரை நினைத்துக்கொண்டிருந்த மலரைப் பற்றிய பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றன. இந்தப் பேச்சுகள் சூழலியல் தொடர்பான பல விவாதங்களை இனி எழுப்பும் என்று நம்பலாம்.” என்றார் நிறைவாக.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
எத்தனை நொடிகளை வீணாக்கியுள்ளீர்கள்?
 

image_99f0d54b9b.jpgஒரு நொடிப் பொழுது கூட, வியத்தகு பணிகளைச் செய்து முடிக்க வல்லது. ஓட்டப் போட்டியின் வெற்றிகளை நிர்ணயிப்பது, மிகத் துளிகளில் ஒன்றான விநாடி தான். இப்படியிருக்க, மனிதர் ஒருநாளில் எத்தனை விநாடிகள் கழிந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அவைகளில் எத்தனை நொடிகளை வீணாக்கியுள்ளீர்கள் என்பதையும் எண்ணினால், விழிப்புநிலை, கட்டாயம் உங்களை உஷாராக்கிவிடும்.

கோடீஸ்வரர் ஒருவர் என்னிடம் கூறினார், “நான் காலத்தை அநியாயமாகக் கரைத்து விட்டேன். நான், முதுமை அடைந்த பின்னர் தான், உழைக்கும் ஆசையே எனக்கு வந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு, அதி உன்னத நிலைக்கு இன்று வந்துவிட்டேன். இந்த அறிவு, நான் இளைஞனாக இருந்தபோது வந்திருந்தால், இந்த நாட்டில், முன்னணி கோடீஸ்வரர் வரிசையில் வந்திருப்பேன்” என்று. இளையவர்கள் இதனை உணர்க.

நன்றாக உழைப்பவர்கள், ஒரு பொழுதும் சும்மா இருப்பது இல்லை. அடுத்ததாக, அதற்கும் அடுத்ததாக, என்ன செய்ய வேண்டும் என்றே, சதா மனதை உஷார்படுத்திய வண்ணமிருப்பர்.

  • தொடங்கியவர்

மயில்கள் இனப்பெருக்கம் பற்றி நீதிபதி சொன்ன கண்ணீர்க் கதை... எது உண்மை?

 

மயில்கள்

“மயில்கள் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. ஆண் மயில் விடும் கண்ணீரை குடித்துத்தான் பெண் மயில்கள் முட்டையிடுகின்றன. பிரம்மச்சர்யம் கடைபிடிக்கும் தெய்வீகப்பறவை அது. இந்துக்களின் புனித நூலில் ஒன்றான பகவத் புராணத்தில் இந்தத் தகவல் உள்ளது. மேலும், இது குறித்து ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை.”

இப்படி ஒரு அதிரடி தகவலை கூறியிருப்பவர்.. யாரோ பாமரன் அல்ல. ராஜஸ்தான் மாநிலத்தைசேர்ந்த நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா என்பவர். இவரது இந்தக் கண்ணீர் கதை உலக அளவில் வைரல் ஆகியுள்ளது.

சரி.. இதில் எந்த அளவு உண்மையுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக, நாம் சந்தித்த நபர் மயில்களைப்பற்றி  நீண்டகாலமாக ஆய்வு மேற்கொண்டு வருபவரும், ‘மயிலு’ என்னும் 40 நிமிட ஆவணப்படத்தின் இயக்குனரும், ஊர்புறத்துப் பறவைகள் என்கிற புத்தகத்தின் ஆசிரியருமான கோவை சதாசிவம்.

“நீதிபதி சர்மாவின் பேச்சு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. சட்டம் படித்த  ஒரு மனிதர் இப்படியெல்லாம் பேசுவது வியப்பாக இருக்கிறது. அவர் சொல்லும் கண்ணீர் கதையில் கடுகளவும்  உண்மையில்லை. கண்ணீரில் உயிரணுக்கள் எப்படி இருக்கமுடியும்? கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவைதான் மயில். கோழி எதையெல்லாம் உண்ணுகிறதோ அதையெல்லாம் மயில்களும் உண்ணும். சேவல் கோழி, பெட்டைக்கோழி  மீது ஏறி மிதித்து இனப்பெருக்கம் செய்வது போலத்தான் ஆண் மயில் தோகை விரித்து ஆடி பெண்மயிலைக் கவர்ந்து இழுத்து அருகில் வர வைத்து பெண்மயில் மீதி ஏறி உடலுறவு கொள்ளும். இது பல முறை நான் நேரில் பார்த்த நிகழ்வு.

மயில்

பெண்மயில்கள்  ஒரு தடவையில் அதிக பட்சம் 9 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகளை, கரடுமுரடான புதர் பகுதியில் மண்ணைக்கிளறி போட்டுவைத்து கோழிகள் செய்வது போலவே அடைகாக்கும். இதுதான் நிதர்சனம்.
கண்ணீரைக்குடித்து கர்ப்பம் தரிக்கின்றன மயில்கள் என்பது வெறும் கேலிக்கூத்து” என்றார் சதாசிவம்.

“பறவைகள் எப்போதும் அழுவதில்லை....” என்பதாக கவிஞர் வைரமுத்துவின் பாடல்வரிகள் ஒன்று உண்டு. அது நீதிபதிக்கு தெரியவில்லை போலும், தெரிந்திருந்தால் இப்படி பேசியிருக்கமாட்டார்.

மயில்கள் பற்றிய சில தகவல்கள்:

ஆங்கிலத்தில் மயிலின் பொதுப் பெயர் Peafowl. ஆண் மயிலின் பெயர் Peacock. பெண் மயிலின் பெயர் Peahen.

 இந்திய மயிலின் அறிவியல் பெயர், பாவோ க்ரிஸ்டாடஸ் (Pavo Cristatus).

 ஆண் மயிலுக்கு தமிழ் மொழியில், சேவல் என்ற பெயரும் உண்டு.

1972-ம் ஆண்டு இயற்றிய இந்தியச் சட்டப்படி, மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதிக ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண நாள்களைவிட, மழைக் காலங்களில் அதிகமுறை ஒலியெழுப்பும். காடுகளில் கேட்கும் மயிலின் குரல் மூலம், புலி போன்ற ஆபத்தான விலங்குகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளலாம்.
பிறந்து ஒரு நாளே ஆன மயில் குஞ்சுகள், தாயின் உதவியின்றித் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். உணவு உண்ணவும், நீர் அருந்தவும் செய்யும்.

ஆண் மயிலின் வண்ணமயமான தோகை, பெண் மயில்களை ஈர்க்கவும், பிற விலங்குகள் தாக்க வரும்போது, தனது தோகையை விரித்துக் காட்டி பயமுறுத்தவும் பயன்படுத்தும்.

மயிலின் தோகை, நாம் பார்க்கும் கோணத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களை எதிரொளிக்கும்.

அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயிலின் ஒலியைக் குறிப்பிடுகிறார்கள்.

மயில் தோகையின் வேறு பெயர்கள்... சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, பீலி, தொங்கல் மற்றும் தூவி.

 

 1963-ல் மயில், இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 02
 

article_1433304108-Hosni%20Mubarak.jpg1886: அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லன்ட், பிரான்செஸ் போல்சொம் எனும் பெண்ணை வெள்ளை மாளிகையில் திருமணம் செய்தார். வெள்ளை மாளிகையில் வைத்து திருமணம் செய்த முதல் ஜனாதிபதி இவராவார்.

1946: இத்தாலியில் மன்னராட்சியை ஒழித்து குடியரசாக்குவதற்கு ஆதரவாக சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்தனர் .

1953: பிரித்தானிய மகா ராணியாக இரண்டாம் எலிஸபெத் முடிசூடினார்.

1979: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர், தனது சொந்த நாடான போலந்துக்கு விஜயம் செய்தார். கம்யூனிஸ்ட் நாடான போலந்துக்கு விஜயம் செய்த முதலாவது பாப்பரசர் இவராவார்.

1985: பெல்ஜியத்தில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 39 பேர் பலியானதையடுத்து, இங்கிலாந்து கழகங்கள் இங்கிலாந்துக்கு வெளியே ஐரோப்பாவில் போட்டிகளில் பங்குபற்ற ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கம் தடை விதித்தது.

1999: பூட்டானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

2003: வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் இருந்து ஏவியது.

2012: 2011 இடம்பெற்ற எகிப்திய புரட்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானார் என்ற குற்றச்சாட்டில் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2014: இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கனா பிரகடனப்படுத்தப்பட்டது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

துபாயில் போலீஸ்காரர் ஆக பணிபுரியும் ‘ரோபோ’

 

துபாயில் போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ள ரோபோ தெருக்களில் ரோந்து செல்கிறது. தற்போது சோதனை முறையில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 
 
துபாயில் போலீஸ்காரர் ஆக பணிபுரியும் ‘ரோபோ’
 

துபாய்:

‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் பரவிவருகிறது. முன்பு மருத்துவம், மற்றும் ஓட்டல் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டது.

தற்போது போலீஸ் வேலையிலும் ‘ரோபோ’ ஈடுபட்டுள்ளது. உலகில் முதன் முறையில் துபாயில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்த ரோபோ துபாய் போலீஸ் சீருடை அணிந்துள்ளது. அது போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்குகிறது. ராணுவ வீரர்கள் போன்று கம்பீரமாக சல்யூட் அடிக்கிறது.

தெருக்களில் போலீசார் போன்று ரோந்து பணியும் செல்கிறது. தற்போது சோதனை முறையில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் திருப்தி அடைந்தால் போலீஸ் பணியில் 25 சதவீதம் ரோபோக்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

201706021056579386_duba._L_styvpf.gif

அந்த ரோபோக்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எதுவும் இன்றி வருகிற 2030-ம் ஆண்டில் பயன்படுத்தப்படும் என போலீஸ் டைரக்டர் ஜெனரல் பிரிகேடியர் காலித் நாசர் அல் ரஷூகி தெரிவித்தார்.

இத்தகைய ரோபோக்கள் நாள் முழுவதும் பணிபுரியும். அது விடுமுறை எடுக்காது. உடல் நலக் குறைவு காரணமாகவோ, பிரசவ கால விடுமுறையோ கேட்காது. 24 மணி நேரமும் வேலை பார்க்கும், என்று அவர் கூறினார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

மோடியிடம் இந்தக் கேள்வியை எப்படிக் கேட்கலாம்?: ஆதங்கத்தில் நெட்டிசன்கள்!

 

இந்தியப் பிரதமர் மோடி, பல நாடுகள், கண்டங்கள் எனச் சுற்றிவருபவர். உலகத்துடனும் மக்களுடனும் எப்போதும் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவரும் உலகத் தலைவர்களுள் முன்னிலையில் உள்ளவர்.

ட்விட்டரில் மோடி

 


இத்தகைய சிறப்புமிக்க உலகத் தலைவரைப் பார்த்து ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்வி, மோடி உட்பட பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பொது மாநாட்டில் கலந்துகொண்டவர், பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, என்.பி.சி. பத்திரிகையாளர் மேகின் கெல்லி, மோடியுடனும் புதினுடனும் கலந்துரையாடினார். அப்போது, ட்விட்டரில் கெல்லியின் ‘ப்ரோஃபைல் பிக்சர்’ சிறப்பாக இருப்பதாக மோடி தெரிவித்தார். வியப்படைந்த கெல்லி, ‘நீங்கள் ட்விட்டரில் இருக்கிறீர்களா..?’ என்று கேட்க, மோடி முதலில் அதிர்ச்சியடைந்து, பின்னர் சிரிப்பாக அதை வெளிப்படுத்தினார்.

ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் சிறப்பாகச் செயல்படுபவர் என்றும், உலக மக்களால் அதிகம் பின்தொடரப்படும் உலகத் தலைவர்களில் முன்னணியில் இருப்பவர் என்றும் பல பெருமைகளைக்கொண்டவர், மோடி. அத்தகைய தலைவரிடம், ‘நீங்கள் ட்விட்டரில் இருக்கிறீர்களா?’ எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டது நெட்டிசன்களைப் பயங்கர டென்ஷனாக்கிவிட்டது.

’எங்கள் பிரதமர் நாட்டில் இருக்கிறாரா இல்லையா என்பதையே நாங்கள் ட்விட்டரில்தானே தெரிந்துகொள்கிறோம். இந்தியாவில் இருக்கிறாரோ இல்லையோ, ட்விட்டரில் எங்கள் பிரதமர் சிறப்பாகத்தானே செயல்படுகிறார். எங்கள் பிரதமரிடம் இப்படியொரு கேள்வியா?’ என சமூக வலைதள உலகமே கொந்தளித்துள்ளது.

http://www.vikatan.com

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உணர்வதும் கரைவதும் ராஜா இசையில் தொடங்குதம்மா..! #HBDIlaiyaraaja

 

இளையராஜா ஓர் ஆன்மிகவாதி. ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட ராஜாவை ஏற்றுக்கொள்வார்கள். `தான் என்ற அகங்காரத்தை அழித்து, பித்துநிலையை அடைவதுதான் ஆன்மிக உணர்வுநிலை' எனச் சொல்லப்படுவதுண்டு. தன்னை மறப்பது, தன்னில் கரைவது, பரவசம் அடைவதுதான் ஆன்மிகம் என்றால், அந்த உணர்வுகளைத் தமிழர்களுக்குத் தந்தது ராஜாவின் இசைதான். ஆன்மிகத்தையும் ஆன்மிகம் குறித்த ராஜாவின் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்களும்கூட, அவரது இசையின்மூலம் `ஆன்மிக நிலை' எனச் சொல்லப்படும் பரவசத்தை அடையலாம். ஏனெனில், ராஜாவின் இசை... தமிழர்களின் தீரா தியானம்.

நூற்றாண்டு காணும் தமிழ் சினிமா, மகத்தான பல சாதனையாளர்களையும் மேதைகளையும் உலகத்துக்குத் தந்திருக்கிறது. அந்தச் சாதனையாளர்களில் ராஜாவுக்கு  தனித்துவமான ஓர் இடம் உண்டு. தமிழ் சினிமா சாதனையாளர்களில் பலர், தமிழ் மண்ணுக்கே உரிய தனித்துவம்கொண்டவர்கள். உலக அளவில் முன்னிறுத்தக்கூடிய தன்மை அவர்களின் சாதனைகளில் இருந்ததில்லை (அவசியம் இல்லாமலும் இருக்கலாம்). ஆனால் ராஜாவோ, தமிழ் மண்ணின் தனித்துவத்தையும் உலகளாவிய தன்மையையும் தன் இசையின் மூலம் நிகழ்த்திக்காட்டியவர். ராஜாவுக்கு முன்னால் இருந்த இசையமைப்பாளர்களின் இசையிலும் பல நல்ல பாடல்கள் உருவாகியிருக்கின்றன. ஆனால், பின்னணி இசையின் தன்மையையும் அதன் அர்த்தத்தையும் தமிழர்களுக்கு அழுத்தமாக உணரவைத்தவர் இளையராஜாதான். ஒரு சிற்பி இறுதியில் கண்களைத் திறக்கும்போது அந்தச் சிற்பத்துக்கு ஜீவன் வந்துவிடுவதைப்போல, ஒரு சினிமாவுக்கு உயிர் கொடுக்கும் கலையை நிகழ்த்தியவர் இளையராஜா.

இசைஞானி இளையராஜா

அவருக்கு அரசியல்மீது ஆர்வமில்லை அல்லது அரசியலைக் கண்டு விலகிக்கொள்கிறார் என்று சொல்லலாம். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பிறந்து வந்ததால் அவரை தங்களின் அடையாளமாக, ஒடுக்கப்பட்ட மக்களும் சாதி எதிர்ப்பாளர்களும் முன்வைப்பதுண்டு. ஆனால், அதை ராஜா விரும்புவதில்லை. அவர் விரும்பாவிட்டாலும் அவரது இசை ஓர் அரசியல் செயல்பாடுதான். அயோத்திதாசரின் தமிழ் பௌத்த அரசியல், பெரியாரின் திராவிடர் அரசியல், பண்ணையடிமை முறைக்கு எதிராகப் போராடிய பொதுவுடைமை இயக்க அரசியல் என  இரு நூற்றாண்டுத் தமிழக அரசியலின் அடிப்படைகளாக இருந்தவை சுயமரியாதைக்கான போராட்டமும், தங்கள் இடத்தை உறுதிசெய்துகொள்ளும் விடுதலை அரசியலும்தான். இந்தித் திணிப்பை எதிர்த்த தமிழ் மண்ணில், இந்திப் பாடல்களின் ஆதிக்கம் நிறைந்த காலகட்டத்தை மாற்றியமைத்தவர் இளையராஜா. எளிய மக்களின் இசைக் கருவிகளான பறை, உடுக்கை, உறுமி ஆகியவற்றுக்கான மகத்தான இடத்தை உருவாக்கித்தந்தது அவரது இசை.

ராஜாவின் இசையோடு பயணிக்க முடியாமல் தடுமாறி நின்றவை இரண்டு விஷயங்கள். ஒன்று, தமிழ் சினிமாக்களின் அபத்தமான காட்சியமைப்பு. எண்பதுகளில் வெளியாகி இன்றளவும் நம் ஆன்மாவை உலுக்கும் ராஜாவின் பாடல்களில் சிலவற்றை டி.வி-யிலோ யூடியூபிலோ பாருங்கள். ஒலியை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு, ம்யூட்டில் பார்த்தால் அந்தப் பாடல்கள் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவைக் காட்சிகளைவிட காமெடியாக இருப்பதை உணரலாம். மிகச்சில பாடல்களின் காட்சியமைப்புகளே ராஜா இசையின் உயரத்தைத் தொட்டவை அல்லது தொட முயன்றவை. அதேபோல் சத்தற்றப் பாடல் வரிகளை எழுதிக் குவித்த பாடலாசிரியர்கள் இன்னொரு நெருடல். ராஜா சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, இந்தப் பாடலாசிரியர்களின் பாடல் வரிகள் மலையடிவாரத்தில் சுள்ளி பொறுக்கிக்கொண்டிருந்தன. ராஜா உருவாக்கித் தந்த பல்லக்கில் சொற்களின் பிணங்களை அடுக்கிவைத்த பாடலாசிரியர்களும் உண்டு. இளையராஜா, காலத்துக்கு அப்பால் பறந்துகொண்டிருந்தபோது அவர் இசையமைத்த பெரும்பாலான தமிழ் சினிமாக்கள் அண்ணாந்து பார்த்தபடி, மூச்சிரைக்க பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன என்பதுதான் நிதர்சனம்.

ஒவ்வொருவருக்குமே 'எனக்குப் பிடித்த இளையராஜா பாடல்கள்' என ஒரு பட்டியல் இருக்கும். நிச்சயமாக அவை நூற்றுக்கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கில் இருக்கும். எனக்கும் அப்படியே. உள்ளங்கைக்குள் ஏந்தியிருக்கும் பனிக்கட்டியின் வழியே ஒரு பனிச்சிகரத்தை உணர்வதைப்போல ராஜாவின் மிகச்சில பாடல்களை மட்டும் எடுத்துப் பேசலாம்.

இசைஞானி இளையராஜா

ராஜாவின் இசையில் மிகச்சிறந்த பாடலாக நான் நினைப்பது 'ஹே ராம்' படத்தில் இடம்பெற்ற 'இசையில் தொடங்குதம்மா...' பாடல். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை தமிழ் சினிமாவில் வெளியான பாடல்களை தராசில் ஒரு தட்டிலும், ராஜாவின் 'இசையில் தொடங்குதம்மா...' பாடலை இன்னொரு தட்டிலும் வைத்தால், என் தட்டு ராஜாவின் 'இசையில் தொடங்குதம்மா...'வை நோக்கியே தாழும். கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலைக் கேட்கும்போது நம் மனதின் வெப்பத்தை, உடலின் அதிர்வை உணர முடியும். ஒரு களியாட்டத் திருவிழாவில் கூட்டத்தில் நம்மைத் தொலைக்கும் உணர்வையும், நம் ஆடை பிடித்து இழுத்து அண்ணாந்து பார்த்து சிரிக்கும் குழந்தையின் குதூகலத்தையும் நமக்குள் கடத்தும் பாடல் இது.

இளையராஜாவிடம் நல்ல பாடல்களைக் கேட்டு வாங்குவதிலும் அதைச் சிறப்பாகக் காட்சியமைப்பதிலும் தேர்ந்த மிகச் சிலரில் ஒருவர் கமல்ஹாசன். கமலின் 'குணா' படத்தில் வரும் 'உன்னை நான் அறிவேன்...' பாடல் ராஜாவின் மேதைமைக்கு இன்னோர் உதாரணம். தடதடக்கும் பழைய மின்விசிறி சுழலும் ஓசையிலிருந்து தொடங்கி, காதலும் தாய்மையும் கலந்த 'உன்னை நான் அறிவேன்...' மெல்லிசையில் தொடர்ந்து இடைவெட்டி நுழையும் வடக்கத்திய செவ்வியல் இசையின் ஆலாபனை நீண்டு, இடையில் அதை ஏந்திக்கொண்டு 'ஒயிலா ஹோய்...' என்று நாட்டுப்புற இசை உயரத்தில் பறக்கும்.

உண்மையில் இளையராஜாவின் இசையை அனுபவிப்பது என்பதே ஓர் ஆன்மப் பயணம்தான். அது நம்மை வெவ்வேறு நிலப் பகுதிகளுக்குத் தூக்கிச் செல்லும்; மெல்ல விடுவித்து, அந்தரத்தில் மிதக்கச் செல்லும்; திடீரென நாம் இதுவரை அறியாத நிலப்பரப்பில் தூக்கிப்போடும். இப்படி வெவ்வேறு காலத்துக்கும் நிலத்துக்குமிடையில் நம்மைப் பயணிக்கச் செய்வது ராஜாவின் இசை. 

'நிழல்கள்' படத்தில் இடம்பெற்ற 'மடை திறந்து...' பாடல், ஓர் இளம் இசையமைப்பாளன் திரைப்படத் தயாரிப்பாளர் முன்னால் பாடிக்காட்டும் பாடல். பாறைகளை உடைத்துவிடுவதைப்போல ஆவேசத்துடன் கொட்டும் அருவிக்கு முன்னால், சின்னச் சிலிர்ப்புடனும் தயக்கத்துடனும் கூச்சத்துடனும் நின்று,  பிறகு அருவிக்குள் மெள்ள நுழையும்போது, சடார் எனக் கொட்டும் அருவியைப் போன்ற அனுபவத்தை இந்த 'மடை திறந்து...' பாடலில் உணரலாம்.

 

இசைஞானி இளையராஜா

'சிந்து பைரவி' படத்தில் இடம்பெற்ற 'தொம் தொம் தொம்...' பாடல். மனைவி நெருக்கமான வேளையில் முத்தமிடும்போது காதலியின் நினைவு வந்துபோக, காமத்தையும் காதலையும் தன் உடலையும் சேர்த்துத் தூக்கிப்போட முனையும் ஒரு பாடகனின் ஆவேசமும் அவஸ்தையும் கலந்த பாடல். விடாது கனன்றுகொண்டிருக்கும் வேள்வித்தீயும் பாறைகள்மீது மோதும் அலைகளின் இரைச்சலும் என உணர்வுகளை, வார்த்தைகள் அதிகமில்லாமல் கொண்டுவந்து கொட்டும் பாடல்.

 

ராஜாவின் இசையில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களும் நமக்குள் வந்து போகும். உண்மையில் இளையராஜாவின் இசையைக் குறித்து எழுதுவது எளிதானதல்ல. ஏனெனில், அவரது இசை எழுதுவதற்கானதல்ல... உணர்வதற்கானது; கரைவதற்கானது. நம்முடைய உயிர் சொட்டுச் சொட்டாய் வழிய, அதை வெளியில் இருந்து ரசிக்கும் அனுபவமே இசைஞானியின் இசை தரும் அனுபவம்.

http://www.vikatan.com

Bild könnte enthalten: 1 Person, Text

ராகவேந்தன், இசைஞானி, மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களது பிறந்தநாள் இன்று.

  • தொடங்கியவர்

இயற்கை உணவு பிசினஸ்: ஆச்சர்யப்படவைக்கும் 12 வயது சிஇஓ!

 

’சில்லறை வர்த்தகத்தின் எதிர்காலம்’ என்ற பட்டம் பெற்று, 12 வயதிலேயே உலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறாள், சிறுமி மிகைலா உல்மர். ’நான் சந்தித்த சிஇஓ-க்களில் மிகச்சிறந்தவர் மிகைலா, என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்யா நாதெல்லா குறிப்பிடுகிறார்.

12 வயது சிஇஓ, மிகைலா உல்மர்


உணவுத்துறையில், குறிப்பாக இயற்கைவழி உணவு விற்பனையில் பல சாதனைகளை எட்டி, முன்னணியில் இருந்துவருகிறார், இளம் சிஇஓ மிகைலா உல்மர். ‘மீ அண்ட் தி பீஸ் லெமனேட்’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாகப் பதவி வகிக்கிறார் மிகைலா உல்மர். தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தேனீக்களைக் காப்பாற்றுவதற்காகச் செலவிட்டுவருகிறார். தேனீக்களைக் காப்பதே தன் மிகப்பெரிய குறிக்கோள் என்கிறார் மிகைலா.

2016ஆம் ஆண்டின் சிறந்த சில்லறை வர்த்தகர் விருது வென்றுள்ள மிகைலா, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்யா நாதெல்லாவுடன் சேர்ந்து, அவருக்கு நிகராக பல தொழில் மாநாடுகளில் சிறப்புரை ஆற்றியுள்ளார். அமெரிக்காவில் நடந்த பெண்களுக்கான மாநாட்டில், அப்போதைய அதிபர் ஒபாமாவை ஆச்சர்யப்பட வைத்தவர் எனப் பல சிறப்புகளைக் கொண்டவர். தன் தொழிலில் தொடர் வளர்ச்சியைச் சந்தித்துவருகிறார்.

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்யா நாதெல்லா, நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில், ‘நான் சந்தித்த சிஇஓ-க்களில் மிகச் சிறந்தவர் மிகைலா. தன் ஆர்வத்தால் உலகையே மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மிகைலா தற்போது, ’சமூகத் தொழில்முனைவோர் ஆவது எப்படி?’ எனப் பல முன்னணித் தொழில்முனைவோருக்கும் வகுப்புகள் எடுத்துவருகிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

டீன் ஏஜ் பருவத்தினரை வழிநடத்த பெற்றோருக்கு உதவும் 10 வழிகள்!

 

டீன் ஏஜ்

குழந்தைகள் 13 வயதைத் தொட்டதும் பெற்றோருக்கு ஓர் இனம் புரியாத பயம் தொற்றிக்கொள்ளும். டீன் ஏஜ் எனப்படும் இந்தப் பருவத்தில், குழந்தைகள் வழிதவறிச் செல்வதற்கான வாய்ப்புகள் சுற்றிலும் இருக்கும். இந்தச் சமயத்தில் குழந்தைகளுடன் பெற்றோர் நட்பாகப் பழகுவதன்மூலம், சிறப்பாக வழிநடத்த முடியும். டீன் ஏஜ் குழந்தைகளிடம் தோழமையுடன் பழகுவதற்கான 10 வழிகள் இங்கே... 

1. ஹாபியைத் தேர்ந்தெடுங்கள்: குழந்தைகள் வீட்டிலிருக்கும் நேரங்களில் உங்களுடன் செலவிடும் வகையில் இருவருக்கும் பிடித்த ஹாபியைத் தேர்ந்தெடுங்கள். இருவரும் புத்தகங்களைப் படித்து விவாதிக்கலாம். யோகா, ஸ்விம்மிங், மியூசிக், டான்ஸ் போன்ற வகுப்புகளுக்கு இருவரும் சேர்ந்து செல்லலாம். 

2. பயணம் செய்யுங்கள்: இருவரும் சேர்ந்து சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அருகில் உள்ள இடங்களுக்குச் செல்லுங்கள். அவ்வாறு செல்லும்போது நிறைய விஷயங்களைப் பேசியவாறு செல்லுங்கள். மாதம் ஒருமுறை குழந்தைகளின் நண்பர்களுடன் சேர்ந்து டிரக்கிங், பட்டர்ஃப்ளை வாட்சிங் என்றும் வித்தியாசமாகச் செய்யலாம். 

3. குழந்தைகளிடம் மாணவராகுங்கள்: பெற்றோர் கற்ற விஷயங்களுக்கும், குழந்தைகள் கற்கும் விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். பாடத்திட்டம், தொழில்நுட்பம் என புதிய விஷயங்களைக் குழந்தைகள் வழியே கேட்டறிந்து ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுங்கள். 'நீ சொன்ன விஷயத்தை ஃபாலோ பண்ணினேன். ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்துச்சு' என பாராட்டுங்கள். அவர்களும் மேலும் பல விஷயங்களை உங்களுடன் பகிர முன்வருவார்கள். 

டீன் ஏஜ்

4. ஆசைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்: இப்பருவத்தில் குழந்தைகளுக்கு ட்ரெண்டியான ஹேர்ஸ்டைல், டிரஸ் பிடிக்கும். சூழலுக்கு ஏற்றவாறு அவர்களின் ஆசைகளுக்குச் சம்மதியுங்கள். தற்போது, ஆண் குழந்தைகள் குடுமி வைத்துக்கொள்வது, தலையில் கோடு போல முடி வெட்டிக்கொள்வது ஃபேஷனாக இருக்கிறது. இதுபோன்ற ஆசைகளை அவர்களது விடுமுறை காலங்களில் செய்துகொள்ள அனுமதியுங்கள். 

5. உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பருவத்தில் காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். உடனடியா சந்தோஷமாவார்கள். குழந்தைகளின் மாறிவரும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வழிநடத்துங்கள். 'நீ எப்படி கோபப்படலாம்? நான் உன் அம்மா/அப்பா. நான் சொல்வதை கேட்டே ஆகணும்' என அடக்க முயற்சி செய்யாதீர்கள். 

6. செக்ஸ் பற்றி பேசுங்கள்: ஆண், பெண் இணைந்து வாழும் வாழ்வில் செக்ஸ் பற்றி பேசுவதும், முழுமையான அறிவைத் தெரிந்துகொள்ளுவதும் அவசியம். அதைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், எதிர்பாலின இனக்கவர்ச்சி போன்றவை டீன் ஏஜ்ஜில் ஏற்படும். குழந்தைகள் கேட்காமலேயே செக்ஸ் பற்றிய அறிவியல் உண்மையை விளக்குங்கள். அதில் ஏற்படும் சந்தேகங்களை உங்களிடமே கேட்குமாறு அன்புடன் சொல்லுங்கள். கேள்விகளுக்கேற்ப பக்குவமான பதில்களைச் சொல்லுங்கள். 

7. சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்: குழந்தைகளுக்கு இயல்பாகவே கதை கேட்பது பிடிக்கும். இப்படிச் செய்யாதே; அப்படிச் செய்யாதே என சொல்வதைவிட, இதுபோன்ற செயலால் ஏற்பட்ட உங்கள் சொந்த அனுபவத்தைச் சுவாரஸ்யமாக சொல்லுங்கள். இது மனதில் எளிதாகப் பதிந்துவிடும். 

8. சமூகத்தோடு பழக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்: குழந்தைகளைச் சமூகத்தின் சிறந்த மனிதனாக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கும் சமூகத்துக்கும் நிறைய தொடர்புள்ளது என்பதை உணர்த்துவதற்கான வாய்ப்பை வழங்குங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று பெரியவர்களிடம் பழகுதல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல் போன்ற வழக்கத்தை ஏற்படுத்துங்கள். 

9. திட்டுதல், அடித்தல் வேண்டாம்: குழந்தைகளின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் பேசுவதோ, திட்டுவதோ வேண்டாம். இந்த வயதில் சமூக வலைதளம், எலக்ட்ரானிக் கேஜெட்ஸ் போன்றவற்றின்மேல் ஆர்வமாக இருப்பார்கள். அதனால், சில தவறுகளும் நடக்கலாம். அதுபோன்ற சூழலில், நிலைமையைப் புரிந்துகொண்டு பின்விளைவுகளை எடுத்துக்கூறி வழிநடத்துங்கள். அதைவிடுத்து திட்டுவதும் அடிப்பதும் பிரச்னையைத் தீர்க்காது. 

 

10. மனதை ஒருமுகப்படுத்த உதவுங்கள்: டீன் ஏஜ் பருவத்தில் மனதை ஒருமுகப்படுத்த தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை அறிமுகப்படுத்துங்கள். தினமும் சாமி கும்பிட்டுச் சாப்பிட வேண்டும். இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும் எனச் சொல்லலாம். இதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்வு பெறுவதைக் குழந்தைகள் உணர்வார்கள். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாலி, வைரமுத்து முதல் பா.விஜய் வரை பாடிய மயில் புராணம்..! #MustKnowMakkale

 
 

மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது, அவை ஏன் இந்தியாவின் தேசியப் பறவையாக இருக்கிறது என்பன குறித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'மயில்கள் ஒருபோதும் தன் இணையுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயிலானது கர்ப்பம் தரிக்கிறது' என குந்தாங்கூறாக அவர் போட்டுத்தாக்க நெட்டிசன்கள் வெச்சு செய்யத் தொடங்கியுள்ளனர். 

மயில் (மயிலு) - ஆண்பாவம்

மயிலினை வர்ணித்து தமிழ் சினிமாவில் காலங்காலமாகப் பாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போதைய இந்த `peacock' தகராறுக்கு இடையே வாலி, வைரமுத்து முதல் பா.விஜய் வரை எழுதிய மனதை வருடும் சில பாடல்களைக் கேட்கலாமே...  

மயிலிறகே மயிலிறகே... வருடுகிறாய் என்னை... (அன்பே ஆருயிரே)

மயில் போல பொண்ணு ஒண்ணு...  (பாரதி)

மயிலாடும் பாறை... (மனுநீதி)

மயில்தோகை அழைத்தால் மழை மேகம் நெருங்கும்... (ரகசிய போலீஸ்)

தோகை இளமயில்... (பயணங்கள் முடிவதில்லை)

மயிலு மயிலு மயிலம்மா... (வி.ஐ.பி)

வெள்ளை மயில்... (சமர்)

மயிலே மயிலே... (கடல் மீன்கள்)

ஏ... மைலாப்பூரு மயிலே... (ஏய்)

மலையோரம் மயிலே... (சாமி போட்ட முடிச்சு)

மயிலே... மயிலே... (கடவுள் அமைத்த மேடை)

மயிலே மயிலே... இறகு போடு... (ஆழ்வார்)

 
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, machen Sport und Text

இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவரும் சிறந்த சகலதுறை வீரருமான அஞ்செலோ மத்தியூசின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Angelo Mathews

Bild könnte enthalten: 3 Personen, Sportler, Baseball und Text

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கலக்கல் தலைவர், உலகின் முன்னணி இளைய துடுப்பாட்ட நட்சத்திரம், இளம்புயல் ஸ்டீவ் ஸ்மித்தின் பிறந்தநாள்.
Happy Birthday Steve Smith

Bild könnte enthalten: 2 Personen, Sonnenbrille, Hut, Text und im Freien

கிரிக்கெட் சரித்திரத்தில் எப்போதுமே மிகச் சிறந்த இரட்டையருக்கு இன்று பிறந்தநாள்.
Happy Birthday Steve & Mark Waugh
உலகின் மிகச் சிறந்த அணித்தலைவர்களில் ஒருவராக விளங்கிய சகலதுறை வீரர் ஸ்டீவ் வோ, மிக நேர்த்தியான துடுப்பாட்ட வீரர் மார்க் வோ ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வேறெந்தக் கிரிக்கெட் சகோதரர்களையும் விட அதிக ஓட்டங்களை சர்வதேச மட்டத்தில் குவித்த பெருமை வோ இரட்டையருக்கு உள்ளது.

  • தொடங்கியவர்

வைரல்: குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள நபரை வரவேற்க ஓடி வரும் யானைகள்

தாய்லாந்திலுள்ள உயிரியல் பூங்காவுக்கு Dok Geaw என்ற யானை கடந்த சில நாள்களுக்குமுன் கொண்டு வரப்பட்டது. தற்போது 2 வயதாகும் அந்த யானைக்கு, நான்கு மாதம் இருக்கும்போதே அதன் தாய் இறந்துவிட்டது. இதனால், அந்தக் குட்டி யானை தனித்து விடப்படுகிறது. காட்டில் தனியாகச்  சுற்றித்திரிந்த அந்தக் க்யூட் குட்டி யானையைப் பார்த்த வனத்துறையினர் அதனை மீட்டு, தாய்லாந்திலுள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Untitled_17281.jpg

 

 

 

இந்நிலையில், உயிரியல் பூங்காவிலுள்ள 6 யானைகள் ( அதில் ஒரு குட்டி யானை) தங்களது குடும்பத்தில் புதிதாக இணையவுள்ள யானையைக் காண்பதற்காக ஓடிவரும் வீடியோ, யூடியூபில் அதிரிபுதிரி வைரலாகி வருகிறது. சில தூரங்களுக்கு ஓடிச்செல்லும் அந்த யானைகள், பின் புதிதாக வந்துள்ள யானையைக் கண்டவுடன் செய்யும் அனைத்து எக்ஸ்பிரஷன்களுக்கும், கோடி லைக்ஸ்களைக் கொட்டலாம். குறிப்பாக, யானையின் குரல் செம க்யூட். முக்கியமாக, Dok Geaw யானை அழகோ, அழகு. யூடியூபில் 2 மில்லியன்ஸ் வியூவ்ஸ்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது இந்த வைரல் வீடியோ.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் 'பலே உத்தி' : ஆய்வு

 
 

பெண் மயில்களின் கவனத்தை ஈர்க்க ஆண் மயில்கள் பொய்யான பாலியல் அழைப்பு ஒலிகளை எழுப்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி

பொதுவாக மயில்கள் தங்களது தோகைகளை அசைக்கும் பழக்கமுடைவை, ஆனால், இது பாலியல் ரீதியான அழைப்பு உத்தி என்று கனடா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல விதங்களில் குரல் எழுப்பும் தன்மை மயில்களுக்கு உண்டு. மேலும், கூடலின்போது மயில்கள் தனித்துவமான பேரொலியொன்றை எழுப்பும்.

பெண் மயில்களை கண்டவுடன் ஆண் மயில்கள் இந்த ஒலியை எழுப்புவதாக பதிவு செய்துள்ள உயிரியலாளர்கள், இந்த ஏமாற்று வித்தை ஆண் மயில்களுக்கு அவற்றின் நோக்கத்துக்கு பலன் கிட்டும் வகையில் அமைவதாக தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்புகள் 'தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட்' என்ற சஞ்சிகையில் பதிப்பாகியுள்ளது.

பார்வையை ஈர்க்கும் தோகை மற்றும் நடையழகால் தனது பாலியல் ஈடுபாட்டை பறைசாற்றும் வகையில் நடந்து கொள்ளும் மயில்கள் விலங்கு மற்றும் பறவையினங்களில் பாலியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த உதாரணமாகும்.

ஆண் மயில்கள் பலமான ஒலி எழுப்புவதன் காரணமென்ன?

வெற்றிகரமாக பெண் மயிலை ஈர்த்துவிட்ட ஆண் மயில், அதனுடன் கூடலில் ஈடுபடுவதற்கு முன்பு, பெண் மயிலருகே அருகே சென்று தனித்துவமான பேரொலியொன்றை எழுப்பும்.

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி: ஆய்வுபடத்தின் காப்புரிமைATTILA KISBENEDEK/AFP/GETTY IMAGES

ஆண் மயில்கள் எழுப்பும் இந்த ஒலி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கூட கேட்கும் அளவு பலமான ஒலியாக இருப்பதால், இவ்வாறான பலத்த ஒலியை எழுப்பும் ஆண் மயிலுக்கு இதனால் என்ன பலன் என்று ஆராய்ந்தனர்.

இந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ரோஸ்லின் டக்கின் கூறுகையில், ''ஆண் மயில் எழுப்பும் ஒலி மிகவும் பலமாக இருக்கும். தான் கூடவுள்ள பெண் மயிலுக்கு தனது எண்ணத்தை புரிய வைப்பதை தாண்டியும் இந்த ஒலிக்கு பங்குள்ளது'' என்று தெரிவித்தார்.

வட அமெரிக்கவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சுதந்திரமாகவும், கூண்டில் அடைக்கப்படாமலும் கூட்டமாக இருக்கும் பறவைகள் குறித்து டக்கின் ஆய்வு மேற்கொண்டார். இப்பறவைகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவையாகும்.

60% அளவுக்கு ஆண் மயில்களிடையே பொய்யான அழைப்புகள் இருந்தது வியப்பளிக்கும் வகையில் பொதுவான அம்சமாக டக்கின் கண்டறிந்துள்ளார்.

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி: ஆய்வுபடத்தின் காப்புரிமை2. YOSHIKAZU TSUNO/AFP/GETTY IMAGES Image captionபெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி: ஆய்வு

இந்த ஏமாற்று வித்தையின் மூலம் அந்த ஆண் மயில்களுக்கு பெண் துணை கிடைப்பதாக டக்கின் கண்டறிந்துள்ளார்.

''ஆண் மயில் எழுப்பும் ஒலியின் அளவு அதிகரித்தவுடன், அதனால் ஈர்க்கப்பட்டு அதனருகே பெண் மயில் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. ஆனால், இவ்வாறான செய்கையினால் ஆண் மயில்களுக்கு ஏதாவது உடல்தகுதி ரீதியான ஆதாயம் கிடைக்கிறதா என்று இன்னமும் தெரியவில்லை'' என்று டக்கின் மேலும் தெரிவித்தார்.

ஆனால், அதிகப்படியான முறைகள் இவ்வாறான ஒலியை கேட்கும் போது, ஆண் மயில்களின் ஏமாற்று வித்தையை பெண் மயில்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் ஆபத்தும் உள்ளது.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

அசத்தலான டூருக்கு இந்தத் தீவுதான் பெஸ்ட் சாய்ஸ்!

 

து, உலகின் 25-வது பெரிய தீவு. ஆஸ்திரேலியாவின் ஒரே தீவு மாநிலமும் இதுதான். இந்தத் தீவைச் சுற்றி 364 தீவுகள் உள்ளன. இவற்றில் 45 சதவிகித அளவில் தேசியப் பூங்காக்களும் உலகப் பாரம்பர்ய இடங்களும் அடக்கம். இங்கு புதிரான பல இடங்கள் இருப்பதால், இதை 'புதிர் தீவு' என்று அழைக்கிறார்கள். 

tasmania

இந்தியாவுக்கு அந்தமான் தீவுகள்போல ஆஸ்திரேலியாவுக்கு `டாஸ்மேனியா தீவு'. ஆஸ்திரேலியாவிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த அழகிய தீவு, முன்னொரு காலத்தில் `டாஸ்மேனியா' என்ற பழங்குடி மக்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. கருமை நிறம்கொண்ட இந்தப் பழங்குடிகளுக்கு வெளி உலகமே தெரியாது. தங்களுக்கென ஒரு தனிக் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்த இந்த மக்களை அழிப்பதற்காகவே வெள்ளையர்கள் இங்கு வந்தனர்.

இந்தத் தீவில் முதன்முதலாக 1810-ம் ஆண்டு காலடி எடுத்துவைத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள். ஆங்கிலேய ஆட்சியின்போது தண்டனைக் கைதிகளை இந்தத் தீவுக்கு அனுப்பிவைத்துவிடுவார்கள். கப்பலில் வந்து இறங்கும் கைதிகளை அடைத்துவைப்பதற்காகப் பெரும் சிறைச்சாலைகளைக்  கட்டிவைத்திருந்தார்கள். வெள்ளை நிறம்கொண்ட  அவர்களின் உருவத்தைப் பார்த்ததுமே பயந்து ஓடினார்கள் டாஸ்மேனியா மக்கள். இது வெள்ளையர்களுக்குச் சாதகமானது.

tasmania

பல கப்பல்களிலிருந்து தீவில் வந்து இறங்கிய ஆங்கிலேயர்கள், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள். சிறுவர்கள் அடிமையாக்கப்பட்டார்கள். வெளியுலகத் தொடர்பு இல்லாத அந்த மக்களுக்கு, ஆயுதம், யுத்தம் எல்லாம் அநியாயமாக இருந்தன. எதற்காக தாங்கள் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலேயே மாண்டார்கள். 

tasmania

1828-ம் ஆண்டில் வெள்ளையர் அரசு ஆட்சி புரிந்தது. 'வெள்ளையர்கள் அல்லாத எவரையும் கொல்லலாம்' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. `ஒரு கருப்பரைக் கொன்றால், மூன்று பவுண்ட் பரிசு. ஒரு குழந்தையைப் பிடித்துக் கொடுத்தால், ஒரு பவுண்ட் பரிசு' என்றும் அறிவித்தார்கள். கொன்றதற்கு அடையாளமாக அவர்களின் காதுகளை மட்டும் கொண்டுவந்தால் போதும்.

ஐந்தாயிரம் பேர்கொண்ட அந்தப் பழங்குடிச் சமூகம், 75-ஆகக் குறைந்துபோனது. அவர்களில் 72 ஆண்களும், மூன்று பெண்களும் இருந்தனர். இந்த இன அழிப்புக்கு எதிராக, ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதனால் அந்த 75 பழங்குடியினரையும் கொல்லாமல் விட்டுவைத்தார்கள். 

tasmania

ஆனாலும் அவர்களை இருள் சிறைக்குள் அடைத்து, உணவின்றி கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றார்கள். 1876-ம் ஆண்டில் கடைசிப் பழங்குடிப் பெண்ணும் இறந்துபோனாள். 66 ஆண்டுகளில் ஓர்  இனத்தையே அழித்துவிட்ட பெருமை, வெள்ளையர்களுக்கு உண்டு. இப்படி அழிந்த டாஸ்மேனியா ஆவிகள், இந்தத் தீவில் அலைவதாகக் கூறப்படுகிறது. இங்கே வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கொல்வதாகவும், அடர்ந்த வனங்களில் இரவில் விபத்தில் அடிபட்டு வருபவர்களை இந்த ஆவிகள் சாப்பிடுவதாகவும் நம்புகிறார்கள் அங்கு இருக்கும் மக்கள். அதனால்தான் இதை `புதிர் தீவு' என்கிறார்கள்.

இந்தத் தீவில் சுற்றுலா பயணிகளை வசீகரிக்க நிறைய இடங்கள் உள்ளன. பே ஆஃப் ஃபயர்ஸ் அற்புதமான இடம். நீல நிறக் கடல் நீர், சிவப்பு நிறப் பாறைகள், வெள்ளை மணல் நிறைந்த கடற்கரை... என்று அற்புதமான ஓர் உலகத்துக்கு இந்த இடம் நம்மை அழைத்துச் செல்லும். அழகு மட்டும் அல்ல, முகாம் அமைத்துத் தங்குதல், படகு சவாரி, பறவைகளைப் பார்வையிடுதல், மீன் பிடித்தல், நீச்சல், சர்ஃபிங், கடற்கரையில் நடத்தல் எனப் பல பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்தலாம். ஹாஸ்டிங்ஸ் குகைகள், ஒரு மாயாஜால உலகத்துக்குள் நுழைந்த உணர்வைத் தரும். நீண்ட குகை சுற்றுலாவாக இது அமையும். 

மேலும், ஆர்துர் துறைமுகம், சாலமங்கை, மோல்க்ரீச் கார்ட்ஸ், கிரெடிர் மலை, கார்டன் நதி, கேட்ராக்ட் ஜார்ஜ், வெல்லிங்டன் சிகரம் என்ற அனைத்துமே நமக்கு இயற்கை வழங்கியுள்ள கொடை. வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும் அற்புத இடங்களைக்கொண்டது டாஸ்மேனியா தீவு. என்ன, உங்கள் Must Visit Listல் டாஸ்மேனியாவைச் சேர்த்துவிட்டீர்கள்தானே?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

எட்டுமொழிகளில் ஆசி வழங்கும் ரோபோ பாதிரியார்

இந்த ஜெர்மன் ரோபோ பாதிரியார் எட்டு மொழிகளில் ஆசி வழங்குகிறார்.


பிளஸ்யு-2 ரோபோ புரோட்டஸ்டண்ட் திருச்சபை சீர்திருத்தத்தின் 500 ஆம் ஆண்டைகுறிக்க உருவாக்கப்பட்டது.

இதை மக்கள் விரும்புகிறார்களா என கிறித்தவ தேவாலய பணியாளர் ருடால்ஃப்வென்ஸிடம் பிபிசி கேட்டது.

“தேவாலயத்துடன் இணைந்து வாழ்பவர்கள் இதை வித்தியாசமாக பார்க்கிறார்கள். ஆனால் புதியவர்களும் ஆன்மீகத்தோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களும் புரோட்டஸ்டண்ட் கிறித்தவர்களும் இதை சுவாரஸ்யமானதாக கருதுகிறார்கள் கிறிஸ்தவ மதம் என்ன சொல்கிறது என சிந்திக்கத் துவங்குகிறார்கள்.
கிறிஸ்தவ மதசீர்திருத்தத்தின் அடிப்படை நோக்கமே இப்படி சிந்திக்கச் செய்வதுதானே?” என்கிறார் கிறித்தவ தேவாலய பணியாளர் ருடால்ஃப்வென்ஸ்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen

இலங்கையில் பிறந்து ஹிந்தித் திரையுலகில் கலக்கும் கனவுக்கன்னி ஜக்குலின் பெர்னாண்டஸ் பிறந்தநாள்.
Happy Birthday Jacqueline Fernandez

Bild könnte enthalten: 1 Person, Brille, Bart und Text

தமிழ்த் திரையுலகின் முத்திரை பதித்த முன்னணி இயக்குனர் மணி ரத்னம் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
Happy Birthday Maniratnam

 

  • தொடங்கியவர்

கால்பந்து விளையாடும் கன்னியாஸ்த்ரீ

  • தொடங்கியவர்

18813582_1052722271525184_28772110911736

ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இரண்டாவது தகுதிகாண் சுற்றுப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் 3.46 மீட்டர் உயரம் பாய்ந்த அனித்தா, தனது பழைய சாதனையை (3.45 மீட்டர்) முறியடித்தார்.
வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

பீட்டாவின் சைவ உணவு விளம்பரத்தில் நடிகை சன்னி லியோன்

 
 
பீட்டாவின் சைவ உணவு விளம்பரத்தில் நடிகை சன்னி லியோன்படத்தின் காப்புரிமைPETA

விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவிற்கு ஆதரவாக பிரச்சார விளம்பரத்தில் நடித்துள்ள சன்னி லியோனின், `வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்` என்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்காக, விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவுடன் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கைகோர்த்துள்ளார்.

சைவ உணவிலேயே, வீகன் வகை உணவு என்றழைக்கப்படும், பால் பொருட்களையும் தவிர்க்கும் உணவுக்கு ஆதரவாக பீட்டாவின் பிரச்சார விளம்பரத்தில் நடித்துள்ள சன்னி சைவ உணவாளராக மாறிடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பீட்டா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சன்னி லியோனின் சிறிய பேட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

அதில், தனக்கு அதிகமாக சக்தி இருப்பதை தான் கவனித்திருப்பதாகவும், அதிகமாக காய்கறிகளை சாப்பிட்டு வருவதாகவும் சன்னி லியோன் கூறியுள்ளார்.

மேலும், இறைச்சி தொழிலில் விலங்குகள் வதைபடுவதுதான் மோசமான மிகவும் மோசமான விஷயம் என்றும் அதில் கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு பீட்டாவின் சிறந்த நபராக சன்னி லியோன் தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

பீட்டாவின் நாய் - கருத்தடை பிரசாரத்திலும் சன்னி லியோன் பங்கேற்றுள்ளார்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்
‘ஆசையின் வலையில் வீழ்வது கேலிக்குரியது’
 

image_5fe05b06ce.jpgஆசை அதிகாரம் செய்தால் அறிவு உறங்கிப் போகும். தன்னிலை உணராமல் ஆசையின் வலையில் வீழ்வது கேலிக்குரியதும்கூட! 

முயற்சி செய்கின்றவனுக்கே ஆசைப்படுகின்ற வல்லமையும் அதிகாரமும் உண்டு. நாங்கள் எதனை நோக்கிப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்காமல் கண்டதையும் நோக்கி அவாவுறுதல் தன்னைத்தான் ஏமாற்றுவதும் ஓர் ஏக்க நிலையை உருவாக்குவதும் ஆகும். 

இதனால் பெறப்படும் ஏமாற்றங்கள் மனநிலையில் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இந்தத் தொல்லைகள் எதற்கு? அதனைவிட நியாயபூர்வமாக அறிவின் துணைகொண்டு மெய்வருந்தி உழைப்பதே மேலானதாகும். 

எதற்கும் ஏங்கித் துவழ்வதைவிட, சந்தோசமாகப் பணிசெய்தால் எந்தப் பிணிகளும் எமக்கு நேர்ந்துவிடப் போவதில்லை. உழைக்கும் எண்ணத்துக்கு ஆசைதான் அத்திவாரம் ஆகின்றது. 

ஏற்றுக்கொள்ளத்தக்க ஆசைகளே, நிறைவேற்றக் கூடியவைகளாக இருக்கும். 

  • தொடங்கியவர்

2017 கேன்ஸ் விழாவில் கவனம் ஈர்த்த விருதுகள்!

உலக சினிமாக்களில் கலை சார்ந்து மதிப்பிடும் முக்கியத் திருவிழாவான 'கேன்ஸ் திரைப்பட விழா' முடிவடைந்துள்ளது. இந்த விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டாலும், பத்து பிரிவுகளில் வழங்கப்படும் விருதுகளே முக்கியத்துவம் பெறும். இந்த ஆண்டு, `கேன்ஸின் 70-ம் ஆண்டு' என்பது கூடுதல் சிறப்பு. இந்தியாவிலிருந்து ஒரே ஒரு குறும்படம் மட்டுமே திரையிடப்பட்டது.  

கேன்ஸ்

இனி விருதுகளின் பட்டியல்... 

தங்க கேமரா 

வேறு எங்குமே திரையிடப்படாத, 60 நிமிடத்துக்கும் அதிகமாக ஓடும் படத்துக்கு இந்த விருது அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன் எங்கும் திரையிடப்பட்டிருக்கக் கூடாது என்ற விதி இருப்பதால், பெரும்பாலும் புதுமுக இயக்குநர்களே இந்த விருதுகளை வாங்குவர். இந்த ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த லியோனார் செராலி என்கிற பெண் இயக்குநர்தான் 'இளம் பெண்' என்ற படத்துக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். பாரீஸில் தனித்து வாழத் தொடங்கும் இளம் பெண் ஒருவர் சந்திக்கும் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டது இந்தப் படம். 

சிறந்த குறும்படம் 

கடந்த 2015-ம் ஆண்டில் சினிமா பள்ளிகளுக்கான குறும்பட பிரிவில் முதல் பரிசை வென்ற சீன இயக்குநர் க்யூ யாங்கின் அடுத்த படைப்பு 'ஓர் கனிவான இரவு'. ஒரு சீன நகரத்தில் இரவில் மகளைத்தேடி அலையும் தாய் ஒருவரை பற்றிய கதை. நேர்த்தியான படமாக்கலில் முதல் பரிசை வென்றுள்ளார் க்யூ யாங். 

சிறந்த திரைக்கதை

இந்த விருது இரண்டு படங்களுக்கு இணைத்து வழங்கப்பட்டுள்ளது.  கிரேக்க இயக்குநர் யார்கோஸ் லாந்திமோஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பெண் இயக்குநர் லின் ராம்சே ஆகியோர் இந்த விருதைப்பெறுகின்றனர். யார்கோஸ் இயக்கியுள்ள 'கில்லிங் ஸ்கார்ட் டீர்' என்கிற படத்தில் பிரபல நடிகர்களான காலின் பெர்ரல், நிக்கோல் கிட்மன் ஆகியோர் நடித்துள்ளனர். இளம் வயது மனநிலை குறைப்பாடுள்ள நோயாளிக்கும் மருத்துவருக்குமான உறவு குறித்த கதையைக் கொண்டது இந்தப்படம். லி ராம்சேயின் 'யூ நெவர் பீன் ஹியர்'' என்கிற படம் பாலியல் தொழிலுக்கு கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் முன்னாள் ராணுவ வீரன் பற்றியது. 

ஜூரி விருது 

விருதுகளை தேர்வு செய்யும் ஜூரிக்களால் வழங்கப்படும் விருது இது. ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரே ஸவாக்னிஸ்தவ் இயக்கிய 'அன்பற்ற' என்கிற படம் இந்த விருதினை பெற்றுள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள கணவன் மனைவி. கணவனுக்கு கிடைத்துள்ள இளமையான காதலி, மனைவிக்கு கிடைத்துள்ள புகழும், பணமும் நிறைந்த புதிய காதலன். விவாகரத்து கிடைத்த உடனே புதிய திருமணம் செய்துகொள்ள காத்திருக்கின்றனர் இருவரும். இந்நிலையில் இந்த ஜோடியின் ஒரே வாரிசான மகன் காணாமல் போய்விடுகிறான். அதன் பின் என்ன ஆனது என்று சொல்கிறது கதை.  ஏற்கனவே ஒரு முறை கேன்ஸில் நேரடியாக திரையிட்டு 'எலேனா' என்கிற படத்திற்காக  விருது பெற்றவர் இயக்குநர் ஆந்த்ரே ஸ்வாக்னிஸ்தவ். 

சிறந்த நடிகை 

கேன்ஸின் சிறந்த விருதான தங்கப்பனை விருதுக்காக தேர்வான படங்களில்  'இன் தி ஃபேட்' என்கிற படமும் இடம்பெற்றது.  பிரபல ஜெர்மனிய இயக்குநர் பாடிக் அகின் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு குண்டு வெடிப்பில் தன் மகனையும் ,கணவனையும் பறிகொடுக்கும் பெண்ணின் பழிவாங்கல்தான் கதை. தன் சிறந்த நடிப்பால் டியானே ருஜெர் இந்த விருதை வென்றுள்ளார்

சிறந்த நடிகர் 

ஜாக்யூவேன் பினிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை 'யூ நெவர் பீன் ஹியர்' படத்துக்காக பெற்றுள்ளார். இதுவரை பினிக்ஸ் நடித்துள்ள ஏழு படங்கள் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளன. ஆனால் இதுதான் அவர் வாங்கும் முதல் விருது. இதே படம் சிறந்த திரைக்கதைக்கான் விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்துள்ள பினிக்ஸ்தான் புகழ்பெற்ற க்ளாடியேட்டர் திரைப்பட வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த இயக்குநர்

2013ல் இயக்குநர் சோபியா கப்போலா இயக்கத்தில் வெளியான 'தி ப்ளிங் ரிங்' திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. இது அமெரிக்காவில் செலிப்ரட்டி வீடுகளில் மட்டுமே கொள்ளையடித்த இளம் நண்பர்கள் பற்றிய உண்மைக்கதை. அதன் பின் சோபியா இயக்கியுள்ள படமான 'தி பிகில்ட்' படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெற்றுள்ளார். அமெரிக்க உள்நாட்டு போரின் போது நடக்கும் கதை. போரில் காயமடைந்த வீரன் ஒருவன் பெண்கள் விடுதிக்குள் தஞ்சமடைகிறான். எதிரி நாட்டு வீரனை ஒளித்து வைத்து சிகிச்சையளிக்கின்றனர் பெண்கள். அதன்பின் நடக்கும் திடீர் திருப்பங்களே கதை. இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளிலும் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என பேச்சு கிளம்பியுள்ளது. 

கிராண்ட் ப்ரிக்ஸ் 

'தங்கப்பனை' விருதுதான் கேன்ஸ் திரைவிழாவில் உயரிய அந்தஸ்து பெற்றது. அதற்கு அடுத்த இடத்தில் மதிக்கப்படும் விருது கிராண்ட்ப்ரிக்ஸ். இந்த ஆண்டு 'நொடிக்கு 120 துடிப்புகள்'  என்கிற பிரெஞ்ச் படம் வென்றுள்ளது. சாதாரண மனிதர்களுடன் பொருந்திப்போக விரும்பும் எய்ட்ஸ் நோயாளி ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமே கதை. சிறந்த எடிட்டர் என பெயர் பெற்ற ராபின் காம்பிலோவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இது. 

நிக்கோல் கிட்மேன்

ஆண்டு விருது

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு ஆங்கில நடிகை நிக்கோல் கிட்மேனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 49 வயதாகும் கிட்மேன் தனது 16 வயதிலிருந்து நடித்துக்கொண்டுள்ளார். இந்த ஆண்டு கேன்ஸில் சிறந்த திரைக்கதைகான விருது பெற்றுள்ள 'கில்லிங் ஸ்கேர்ட் டீர்' படத்திலும் நடித்துள்ளார். 

தங்கப்பனை - 'தி ஸ்கொயர்' 

 
 

தோல்வியில் முடிந்த திருமணம், பிரிந்து போன பிள்ளைகள் என்று இருக்கும் நாயகன். சுற்றுலாத்தளமாகிவிட்ட கோட்டை ஒன்றில் வேலை செய்கிறான். அங்கு நடக்கும் நிகழ்வுகளும் அதைத்தொடர்ந்து வரும் பிரச்சினைகளுமே கதை. இந்தப்படத்தின் இயக்குநர் ரூபன் ஒஸ்ட்லாண்ட் இயக்கிய இரண்டு படங்கள் ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் கேன்ஸின் விருதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

வேகமான மழலைக்கான வித்தியாசமான போட்டி

லிதுவேனியாவில் ஆண்டுதோறும் நடக்கும் வேகமான மழலைக்கான போட்டியில் இந்த ஆண்டு 25 மழலைகள் பங்கேற்றனர்.
5 மீட்டர் நீளமுள்ள சிகப்புக்கம்பளத்தில் இந்த போட்டி நடந்தது.
பெற்றோரும் பாட்டிகளும் மழலைகள் தம்மை நோக்கி விரைந்து வருவதை ஊக்குவிக்க பல உத்திகளை கையாண்டனர்.
பால் பாட்டில், விலங்கு பொம்மைகள், செல்பேசிகள் போன்றவற்றோடு சிலர் டிவி ரிமோட்களைக்கூட ஆட்டிக்காட்டி மழலையை தம்மை நோக்கி ஈர்க்கப்பார்த்தனர்.
ஆனாலும் எல்லா மழலைகளுமே போட்டியில் ஆர்வம் காட்டவில்லை. சிலர் தவழ்ந்து ஓடி பரிசு வாங்குவதைவிட ஓடி விளையாடவே விரும்பினர்.
இறுதியில் இந்த 10-மாத மழலை மட்டும் கருமமே கண்ணாக தவழ்ந்து வந்து போட்டியில் வென்றார்.
ஐந்து மீட்டர் தூரத்தை 11 நொடியில் தவழ்ந்து கடந்தார் இவர்.
குழந்தை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக 1999 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

  • தொடங்கியவர்

மரங்களுக்கான நூலகம்!

புத்­தங்­க­ளுக்­காக நூல­கங்கள் உள்­ளதைப் போல் மரங்­க­ளுக்­கா­கவும் நூல­கங்கள் உள்­ளன. மரங்­க­ளுக்­காக மரங்­களால் செய்­யப்­பட்ட நூல­கத்தை  xylotheques என்று அழைக்­கி­றார்கள்.

masala_3169943f

Xylos என்றால் மரம் வாந­ங­ரந என்றால் களஞ்­சியம். புத்­தக வடிவில் மரத்­தா­லான பெட்­டி­களைச் செய் கிறார்கள். இந்தப் பெட்­டிக்குள் மரங்­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட இலை, பூ, காய், கனி, விதை, மரப்­பட்டை, வேர் போன்ற மாதி­ரி­களைச் சேக­ரித்து வைக்­கி­றார்கள்.

 
தாவ­ர­வியல் பெயர்கள், மரம் பற்­றிய குறிப்­புகள், ஏதா­வது நோய் தாக்­கி­யி­ருக்­கி­றதா போன்ற தக­வல்­க­ளையும் எழுதி வைத்­து­வி­டு­கி­றார்கள்.

masala_2

வழக்­க­மான நூல­கத்தைப் போலவே மர அல­மா­ரி­களில் இந்த மரப்­புத்­த­கங்­களும் அழ­காக அடுக்கி, தலைப்­புகள் எழுதி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

 

அமேரிக்காவின் யேல் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லுள்ள சாமுவேல் ஜேம்ஸ் மர­நூ­ல­கத்தில் 60 ஆயிரம் மரங்கள் குறித்த தக­வல்கள் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 

பெல்­ஜி­யத்தில் 57 ஆயிரம் மாதிரிகளுடனும் ஜேர்மனியில் 37 ஆயிரம் மாதிரிகளுடனும் மர நூலகங்கள் இயங்கிவருகின்றன.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

இன்றே பாருங்கள் இன்ஸ்டா லைவ்!

 

சென்ற மாதம் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியை பல லட்சம் ரசிகர்கள் நேரலையில் பார்த்து ரசித்தார்கள். அந்த லைவ் பேட்டி ஒளிபரப்பானது தொலைக்காட்சிகளில் இல்லை, இன்ஸ்டாகிராமில். உலக பிரபலங்கள் கூடி கும்மியடிப்பது இப்போதெல்லாம் இன்ஸ்டாவில்தான்... லைவில்தான்!

p78d.jpg

p78a.jpg

சமூக வலைதளங்களில் இளைஞர்களின் முதல் சாய்ஸாக இன்ஸ்டா மாறிக் கொண்டிருக்கிறது. எதையும் எழுதவேண்டாம், பேசவேண்டாம், எல்லாமே புகைப்படங்களும் வீடியோவும்தான்! காட்சிகளின் தலைமுறைக்கு இதுதான் பிடித்திருக்கிறது. கூடவே, இது பிரபலங்களின் செல்லப்பிள்ளையாகவும் மாறிவிட்டது. இன்ஸ்டாவின் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் இந்த லைவ் வீடியோக்கள். ஃபேஸ்புக் தொடங்கி, பல சமூக வலைதளங்கள் லைவ் வசதி தந்தாலும், இன்ஸ்டாகிராம் லைவ்தான் `கூல்' என்கிறார்கள் இளைஞர்கள். இன்ஸ்டாகிராம் `லைவ்' வந்த பிறகு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெறும் நான்கே மாதங்களில் பயனாளிகள் எண்ணிக்கை 60 கோடியிலிருந்து, 70 கோடியாக  அதிகரித்திருக்கிறது.

ஏன் இவ்வளவு ரீச்? இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ முடிந்தபின், ஒளிபரப்பியவர் மட்டுமே அதைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். வேறு எங்கும் அது சேமித்துவைக்க முடியாது என்பது இதன் மிகப்பெரிய ப்ளஸ். எதைப்பற்றி லைவ் வீடியோ செய்கிறோம் என்பதை கமென்ட் செய்து, அதை பின் (Pin) செய்து வைத்துக்கொள்ள முடியும். இதனால் புதிதாக வீடியோவைப் பார்க்க வருபவர்கள் அதைப்படித்து அதன்படி உரையாட முடியும். பிரபலங்களுக்குத் தங்களுடைய திரைப்படங்கள், நிகழ்வுகள், விளம்பரங்களை ப்ரமோட் செய்ய இது பெரிய பலம்! அதனால், ட்விட்டரில் இதற்கு முன் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரபலங்களின் சமீபத்திய சாய்ஸ் இன்ஸ்டாகிராம்தான்!

p78b.jpg

தொழில் நிறுவனங்கள் தங்களது புதிய பொருள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் அறிவிக்கவும், விளம்பரங்களை நேரடியாகப் பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த லைவ் வீடியோக்களைப் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராமின் வீச்சை உணர்ந்துதான், சுமார் 10 லட்சம் நிறுவனங்கள் அங்கு கடைவிரித்திருக்கின்றன.

இந்த லைவ் வீடியோக்களில் காலை நேரங்களில் உடற்பயிற்சிகளைக் கற்றுத் தருகிறவர்கள் நிறைகிறார்கள். இரவு நேரங்களில் கையில் கிதாரோடு ஜப்பானிய இளைஞர்கள் பாடுகிறார்கள். நகங்களில் எப்படி நெயில் பாலிஷ்களை விதவிதமாகப் போடுவது எனக்கற்றுத்தருகிறார்கள். நடனம் சொல்லித்தருகிறார்கள். வெட்டியாக மணிக்கணக்கில் அரட்டை அடிக்கிறார்கள். ஏதாவது இசைநிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டியில் அமர்ந்துகொண்டு லைவ்வில் கலகலக்கலான கமென்ட்ரி கொடுக்கிறார்கள். சாப்பிடும்போது துணைக்கு ஆள் இல்லை என்றாலும்கூட லைவ்வில் வந்து நண்பர்களோடு பேசிக்கொண்டே சாப்பிடுகிற விநோதமெல்லாம் நடக்கிறது.

p78c.jpg

நடிகை பார்வதிமேனன், நிவேதா பெத்துராஜ் முதலான நடிகைகள், ரசிகர்களோடு உரையாடுகிற இடமாக இன்ஸ்டா லைவ்வைப் பயன்படுத்து கிறார்கள். ராபின்ஷர்மா மாதிரியான தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் இன்ஸ்டா லைவ்வில் இன்ஸ்பிரேஷன் பிரசங்கங்களும் செய்கிறார்கள். சமீபத்தில் இரண்டாவது முறையாக இரான் தேர்தலில் போட்டியிடும் அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தேர்தல் பிரசாரத்தை இன்ஸ்டாகிராம் லைவ்வில் முன்னெடுத்தார். அதுவும் அதிகாலை மூன்று மணிக்கு!

ஆனால், இந்த இன்ஸ்டா லைவ் பார்க்கும் பழக்கம் போதையாக மாறி நம்மை அடிமைப்படுத்துகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. எனவே, இன்ஸ்டாவில் நுழைந்தாலும் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தால் இன்ஸ்டா நிச்சயம் இனிக்கும் ஃப்ரெண்ட்ஸ்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.