Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கூகுளின் புதிய ஆபிஸ் மதிப்பு 8,300 கோடி ரூபாய்! அப்படி என்ன இருக்காம்?

கூகுள் நிறுவனம் லண்டனில் தனது தலைமையகத்தைக் கட்டவிருக்கிறது. தற்போது கூகுளின் துணை நிறுவனமான டீப்-மைண்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அலுவலகங்கள் லண்டனில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. புதிதாகக் கட்டப்படும் இந்த பிரமாண்ட கட்டடத்தில், இனி அவை அனைத்தும் செயல்படத் தொடங்கும். சுமார் 7,000 பேர் பணிபுரியக்கூடிய அளவுக்கு அனைத்து வசதிகளுடனும், இந்தக் கட்டடம்  மிகப் பிரமாண்டமாக உருவாகவிருக்கிறது. கூகுளின் இந்தத் தலைமையகம் தான் தற்போது இணையத்தில் வைரல் டாபிக்.

கூகுள் - லண்டன் தலைமையகத்தின் மாதிரி

அமெரிக்காவைத் தாண்டி, கூகுள் சொந்தமாகத் தானே கட்டும் முதல் கட்டடம் இது தான். 2013-ம் ஆண்டே தலைமையக கட்டடத்திற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்கிவிட்டது கூகுள். ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தத் திட்டத்தை கூகுள் கிடப்பில் போட்டிருந்தது. தற்போது இந்தக் கட்டடத்திற்கான புதிய வடிவமைப்பிற்கான திட்டத்தை இங்கிலாந்து அரசின் ஒப்புதலுக்காக கூகுள் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

310 மீட்டர் உயரம் கொண்ட 'தி ஷார்டு' (The Shard) என்ற கட்டடம் தான் லண்டனின் மிக உயரமான கட்டடம். தற்போது கூகுள் கட்டத் திட்டமிட்டிருக்கும் இந்த லண்டன் தலைமையகத்தின் நீளம் 330 மீட்டர். எனவே தான் இதற்கு 'லேண்ட் ஸ்க்ராப்பர்' (Land Scraper) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் கலிபோர்னியா தலைமையகத்தை வடிவமைத்த தாமஸ் ஹெதர்விக் (Thomas Heatherwick) உள்ளிட்ட உலகின் தலைசிறந்த ஆர்க்கிடெக்ட்கள் இணைந்து லண்டன் தலைமையகத்தை வடிவமைத்திருக்கின்றனர்.

கூகுள் லண்டன் தலைமையகம்

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது லண்டன் தலைமையகத்தில் மரபுசாரா ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தவிருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். இந்தக் கட்டடத்தில் பதிக்கப்படும் சோலார் பேனல்கள் மூலமாக ஆண்டுக்கு 20 மெகாவாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அலுவலகத்துக்குத் தேவையான மின்சக்தி, சோலார் மின்சக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றலில் இருந்தே பெறப்பட இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியாவில் கட்டிவரும் தலைமையகத்திலும், மரபுசாரா ஆற்றல் பயன்படுத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

11 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் 25 மீட்டர் நீச்சல் குளம், விளையாட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன. இவை அனைத்தையும் விட ஒரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், 300 மீட்டர் நீளம் கொண்ட மாடித்தோட்டமும் இந்தக் கட்டடத்தில் இடம்பெற உள்ளது. வெயில் அதிக அளவு உட்புகாதவாறு தடுக்கும் வகையில் சுழலக்கூடிய, மின் மோட்டாரினால் இயங்கக்கூடிய மரத்தினால் ஆன ஜன்னல்கள் இதன் வெளிப்புறத்தில் அமைக்கப்பட உள்ளது.

1 பில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 8,300 கோடி ரூபாய்) மதிப்பில் கட்டப்படும் இந்தக் கட்டடம், பத்து லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் அமைய உள்ளது. இதன் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்க இருக்கிறது.

கூகுள் லண்டன் தலைமையகம் - மாடித்தோட்டம் மாதிரி

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கடந்த ஆண்டின் இறுதியில், லண்டனில் உள்ள கூகுள் பணியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "திறமையானவர்களும், கல்வி நிறுவனங்களும், புதுமைக்கான வேட்கையும் கொண்டவர்கள் அதிகம் இருப்பதால், யுனைட்டட் கிங்டத்தில் கணினி அறிவியலுக்கான எதிர்காலம் சிறப்பாக உள்ளது" என கூகுளின் தலைமையகம் லண்டனில் அமைவது பற்றிப் பேசியிருந்தார்.

 

Thanks:www.theguardian.com

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

உலக சுற்றாடல் தினம்.

நாம் வாழும் பூமியின் சுத்தம் பற்றி சிந்திப்போம்.
எங்கள் எதிர்கால சந்ததிக்கும் அழகான உலகம் ஒன்றைப் பரிசளிப்போம்.
எம்மால் முடிந்தவரை நாம் வாழும் சூழலையாவது சுத்தமாக வைத்துக்கொள்வோம்.

 

 

நாம் வெட்டும் ஒரு மரம் என்பது ஒரு மரம் மட்டும் தானா? #WorldEnvironmentDay

 
 

world environment day

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும், கலாசாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பதுதான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது.

பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாக அவை செயல்படுகின்றன. மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும்போது மழை நீரில் மூன்று விழுக்காடே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97 விழுக்காடு நீர் உடனடியாக ஓடி விடுகின்றது. ஆனால் காடுகளில் பெய்யும் மழை நீரில் 33 விழுக்காடு உள்ளிளுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

தமிழகத்தில் குடிநீருக்காக சேலம், தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை போன்ற பெருநகரங்கள் காவேரி ஆற்றையும், கோவை, திருப்பூர் நகரங்கள் பவானி, சிறுவாணி ஆறுகளையும், மதுரை வைகையையும், நெல்லை தாமிரபரணியையும் நம்பியுள்ளனர். இன்னும் மிச்சமிக்கும் மழைக்காடுகள்தான் இந்த நதிகளை வாழ வைக்கின்றன.

பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு

ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும். சீனக் காடுகளில் மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் பாண்டா கரடிகள் தற்போது அரிதாகிவிட்டன  இதன் காரணம் மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டு விட்டதுதான். நாம் வெட்டும் ஒவ்வொரு மரமும் ஒரு மரம் மட்டுமல்ல. அதைச் சார்ந்து வாழும் பல உயிரினங்களையும் சேர்த்துதான்.

வேலையில்லாத் திண்டாட்டம்

காடுகளின் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதனால் இவர்களும் வேலைத்தேடி நகரத்திற்கு வருகின்றனர். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.

மரம்

மரம் என்றால் உயிர், இன்னும் சொல்லப்போனால் அதுவே நமக்கும் விலங்கு பறவைகளுக்கும் வாழ்வாதாரம். காடு இருப்பதால் யாருக்கு என்ன லாபம் என சிலபேர் நினைப்பதுண்டு. மரங்களை வெட்டி விற்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். காடுகளை அழித்து குடியிருப்புக்களைக் கட்டினால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். இந்த எண்ணம் தவறானது , இந்த ஆசையினால்தான் இதுவரையில் உலகத்தில் உள்ள காடுகளில் பாதிக்குமேல் அழிந்து விட்டது. காடுகள் சோலைவனங்கள் இந்த சோலைவனங்கள் அழியுமானால் நாம் பாலைவனத்தில்தான் வசிக்க வேண்டும்.

உலகில் உள்ள பல பாலைவனங்கள் காடுகள் அழிந்ததால் ஏற்பட்டவை என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். மரங்கள் மகத்தானவை என்பதை நாமறிவோம். மரங்களை முயன்றால் நம்மால் வளர்த்துவிட முடியும். ஆனால் காடுகளை பாதுகாக்க மட்டுமே முடியும். காடு என்பது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாவிலிருந்து யானை வரை, பாசியிலிருந்து ஆலமரம் வரை, பூச்சி, புழு, பறவை, விலங்கு, மரம், செடி, கொடி எனப் பல்லுயிர் பரப்பு. அதனை காப்பாற்றினால்தான் இந்த உயிர்கோளத்தைக் காக்க முடியும்.

ஒரு நாட்டின் நிலப்பரப்பின் 33% மாவது காடுகளிருக்க வேண்டும். நம்மிடம் இருப்பதோ 20% காடுகள்தான். அடைய வேண்டிய இலக்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே சாலைகள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள், விவசாயம், என மனிதகுல வளர்ச்சிப் பணிகளையும் காடுகளற்ற சமவெளிப் பகுதிகளில் விரிவுபடுத்துவோம். மிச்சமுள்ள காடுகளுக்கு சிறு அழிவும் ஏற்படாமல் காத்து நிற்போம். இதுவே இனிவரும் தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

1994: பிரிட்டன், பிரான்ஸ் நாடு­க­ளி­டை­யி­லான கட­லடி சுரங்­கப்­பாதை திறக்­கப்­பட்­டது.

வரலாற்றில் இன்று

ஜுன் – 05

 

1527 : இத்­தா­லியின் 5 ஆம் ஜோர்ஜ் மன்­னரின் படை­களை ஸ்பானிய மற்றும் ஜேர்மன் படைகள் தோற்­க­டித்­தன.


1536 : ஆங்­கில மொழி­மூல பைபிள் நூல் ஒவ்­வொரு தேவா­ல­யத்­திலும் வைக்­கப்­பட வேண்­டு­மென 8 ஆம் ஹென்றி மன்னர் கட்­ட­ளை­யிட்டார்.


1542 : இந்­தி­யாவில் போர்த்­துக்­கேய தலை­ந­க­ராக விளங்­கிய கோவாவை பிரான்சிஸ் ஷேவியர் அடி­களார் சென்­ற­டைந்தார்.


varalaru1-19891757 : பர்­மாவில் 17 வரு­ட­கால சிவில் யுத்தம் முடி­வுற்­றது.


1889 : ஈபிள் கோபுரம் உத்­தி­யோ­க பூர்வமாக பொது­மக்­க­ளுக்கு திறந்­து­வைக்­கப்­பட்­டது.


1910 : பிரித்­தா­னிய மன்னர் 7 ஆம் எட்வர்ட் கால­மா­ன­தை­ய­டுத்து 5 ஆம் ஜோர்ஜ் புதிய மன்­ன­ரானார்.


1937 : ஜேர்­ம­னி­யி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு சென்ற ஹிண்­டன்பேர்க் எனப் பெய­ரி­டப்­பட்ட ஆகாயக் கப்பல் (ஸெப்­பளின் எனும்) நியூஜேர்­ஸியில் தரை­யி­றங்­கி­ய­போது தீப்­பற்­றி­யதால் 36 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1942 : பிலிப்­பைன்ஸில் கடைசித் தொகுதி அமெ­ரிக்கப் படை­யினர், ஜப்­பா­னி­ய­ரிடம் சர­ண­டைந்­தனர்.


1954 : ரோஜர் பென்­னிஸ்டர், ஒரு மைல் தூர ஓட்­டப்­போட்­டியை 4 நிமி­டங்­க­ளுக்குள் கடந்த முதல் பெண் எனும் சாத­னைக்­கு­ரி­ய­வ­ரானார்.


1960 : பிரித்­தா­னிய அரசி 2 ஆம்  எலி­ஸ­பெத்தின் சகோ­தரி மார்­க­ரெட்டின் திரு­மண வைப­வத்தை தொலைக்­காட்சி மூலம் 2 கோடி பேர் பார்­வை­யிட்­டனர். தொலைக்­காட்­சியில் ஒளி ­ப­ரப்­பப்­பட்ட முத­லா­வது அரச குடும்ப திரு­மணம் இது.


1976 : இத்­தா­லியில் ஏற்­பட்ட பூகம்­பத்தால் 989 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1983 : ஜேர்­ம­னிய சர்­வா­தி­கா­ரியின் நாட்­கு­றிப்­பென கூறப்­பட்ட நாட்­கு­றிப்பு போலி­யா­னது என நிபு­ணர்கள் அறி­வித்­தனர்.


1994 : பிரிட்­ட­னுக்கும் பிரான்­ஸுக்கும் இடையில் ஆங்­கிலக் கால்­வாயில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட­லடி சுரங்கப் பாதையை பிரிட்­டனின் 2 ஆம் எலி­ஸபெத் அர­சியும் பிரெஞ்சு ஜனா­தி­பதி பிராங்­சுவா மிட்­ட­ராண்டும் திறந்­து­வைத்­தனர்.


1994 : வெள்ளை மாளி­கையின் முன்னாள் ஊழி­ய­ரான பௌலா ஜோன்ஸ், அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளிண்­ட­னுக்கு எதி­ராக பாலியல் தொந்­த­ரவு குற்­றச்­சாட்டு வழக்குத் தொடுத்தார்.


1996 : சி.ஐ.ஏ. முன்னாள் பணிப்­பாளர் வில்­லியம் கொல்பி, காணாமல் போய் 8 நாட்­க­ளின்பின் அவரின் சடலம் மேரிலாண்ட் மாநி­லத்­தி­லுள்ள ஆற்­றங்­க­ரை­யொன்றில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


1997 : இங்­கி­லாந்து வங்கி, அர­சியல் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டது. அவ்­வங்­கியின் 300 ஆண்­டு­கால வர­லாற்றில் மிகப்­பெ­ரிய மாற்றம் அது.


2001 : பாப்­ப­ரசர் 2 ஆம் அரு­ளப்பர் சின்­னப்பர், சிரி­யா­வுக்­கான விஜ­யத்­தின்­போது பள்­ளி­வா­ச­லொன்­றுக்குச் சென்­றதன் மூலம் பள்­ளி­வா­ச­லுக்குச் சென்ற முத­லா­வது பாப்­ப­ர­ச­ரானார்.


2013 : அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் 3 தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் காணாமல் போன பெண்கள் மூவர் வீடொன்­றி­லி­ருந்து உயி­ருடன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டனர். 


2014 : சீனாவின் குவாங்ஸோ நகர ரயில் நிலை­யத்தில் சில நபர்கள் கத்­தியால் பொது­மக்­களை தாக்­கி­யதால் நால்வர் காய­ம­டைந்­தனர்.


2015 : மலே­ஷி­யாவில் பூகம்­பத்­தை­ய­டுத்து ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் 18 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

வாவ்... நேற்று போட்டியைப் பாத்தீங்களே.. இந்த ஜோடியை பார்த்தீர்களா?

 பிர்மிங்காம்: இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் நேற்று பிர்மிங்காம் மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க விளையாடியதைப் பார்த்த கோடானு கோடி கண்களில் பளீரென விழுந்து எழுந்தது இந்த ஜோடி.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பதை போர் போல மாற்றி விட்டார்கள் "தேசபக்தர்கள்". போட்டியில் யார் ஜெயித்தால் என்ன என்ற மன நிலை மாறி இந்தியா மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்ற வெறித்தனத்தையும் உள்ளே ஊடுறுவ விட்டு விட்டார்கள்.

 

இதேபோலத்தான் பாகிஸ்தானிலும். பாகிஸ்தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அங்கும் ஏகபோகமாகவே உள்ளது. இந்த நிலையில்தான் இந்த ஜோடி கண்ணில் பட்டது.

கண்ணில் பட்ட பளிச் ஜோடி

கண்ணில் பட்ட பளிச் ஜோடி

இந்த ஜோடிதான் நேற்று போட்டியை விட பெரிய ஸ்பாட்லைட்டாக மாறியது. இந்தப் படத்தில் இருக்கும் ஜோடி நேற்று பிர்மிங்காமில் நடந்த இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியைக் காண வந்த ஜோடியாகும்.


யாருங்க இது

 

யாருங்க இது

இப்பெண் பாகிஸ்தானியப் பெண் போலத் தெரிகிறது. அவருடன் இருப்பவர் இந்தியர். இருவரும் தத்தமது தேசிய அணிகளை ஆதரித்து குரல் எழுப்பியபடி போட்டியை ரசித்தனர்.

யார் இந்த ஜோடி

யார் இந்த ஜோடி

இவர்கள் கணவன் மனைவியா, காதலர்களா அல்லது மைதானத்தில் சந்தித்து நட்பானவர்களா என தெரியவில்லை. நேற்று வீரர்களின் மோதலை விட இந்த இருவரின் நேசம்தான் அனைவரையும் கவர்ந்தது.

போருக்கு இது பரவாயில்லையே
போருக்கு இது பரவாயில்லையே

இந்திய - பாகிஸ்தான் வீரர்களின் அனல் பறந்த ஆட்டம், ரசிகர்களின் கூக்குரல், வெறிக் கூச்சல் ஆகியவற்றையெல்லாம் அவுட் ஆப் போகஸ் ஆக்கி விட்டு இந்த ஜோடிதான் பலரது கண்களையும், மனதையும் கவர்ந்திழுத்தது.

http://tamil.oneindia.com/

 

Bild könnte enthalten: 2 Personen, Text

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

 

அபுதாபியில் ரம்ஜானுக்கு ஒருநாள் முன்பு லூ லூ என்ற மாலில் 9 to 9.30 மணிக்குள் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது,

மக்கள் பொருட்களை அள்ளிச் சென்ற போது தள்ளு முள்ளு காட்சி.

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கால்பந்து டு கிரிக்கெட் - நிஜ ஆல்ரவுண்டர் மையந்தி லாங்கர்! #FunFacts

 

கிரிக்கெட்

கிரிக்கெட் மேட்ச்களுக்கு நடுவே விளம்பரம் வந்தாலே, சேனல் மாற்றிவிடுவார்கள் ரசிகர்கள். ஆனால் இப்போதெல்லாம், மேட்ச் ரிப்போர்ட் வரை காத்திருந்து பார்த்துவிட்டுத்தான் சேனல் தாவுகிறார்கள். காரணம், மையந்தி லாங்கர். பளீர் அழகு, கலகலப் பேச்சு, நடுநடுவே தெறிக்கும் குறும்புத்தனம் என, ஆன் கேமராவில் பயங்கர துறுதுறு ஆள் இவர். இந்திய விளையாட்டு ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ், மையந்தி மேல்தான். ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் அடிக்கும் இவரைப் பற்றிய சின்னச்சின்ன டிட் பிட்ஸ் இது:

* மையந்தியின் அப்பா சஞ்சீவ் லாங்கர், இந்திய ராணுவம் சார்பாக ஐக்கிய நாடுகள் சபையில் வேலைபார்த்தார். அம்மா, டீச்சர். இவரின் தாத்தா ராஜிந்தர்நாத்தும் ராணுவத்தில் லெப்டினென்ட்டாக இருந்தவர்தான்.

* மையந்தி வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில். வளர வளர கால்பந்து மீதான அவரின் காதலும் வளர்ந்தது. கல்லூரி கால்பந்து அணியில் இவர்தான் கீ பிளேயர்.

* விளையாடுவதோடு சில போட்டிகளையும் அவர் தொகுத்து வழங்க, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் கண்ணில்பட்டார். அவர்கள் நடத்திய பீச் ஃபுட்பால் போட்டிகளுக்கு மையந்தி தொகுப்பாளரானார்.

* ஜீ ஸ்போர்ட்ஸ் சேனலின் தொகுப்பாளராக சில நாட்கள். பின்னர், ஈ.எஸ்.பி.என்-னுக்கு ஜாகை மாறினார். 2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியாவில் தொகுத்து வழங்கியது மையந்திதான்.

மையந்தி

* 2012-ல் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியோடு டும்டும்டும். பின்னி, மையந்தியைவிட மூன்று ஆண்டுகள் இளையவர். காதலுக்கு ஏது வயது பேதம்?

* கோலி சொதப்பினால், ரசிகர்கள் அனுஷ்கா சர்மாவை வறுத்தெடுப்பார்கள். அதேபோல பின்னி ஆடுகளத்தில் சொதப்பும்போதெல்லாம் மையந்தி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவார். ஆனால், அசராமல் அவற்றுக்கு நச் பதில் கொடுப்பது இவரின் ஸ்டைல்.

* உலகிலேயே கால்பந்து உலகக் கோப்பை, கிரிக்கெட் உலகக் கோப்பை, காமன்வெல்த் போட்டிகள் ஆகிய மூன்றையும் தொகுத்து வழங்கிய ஒரே தொகுப்பாளர், மையந்தியாகத்தான் இருக்கும். அவரின் கனவு, ஒலிம்பிக் போட்டிகளைத் தொகுத்து வழங்க வேண்டும் என்பதுதான்.

* ஒரே விளையாட்டில் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் பயங்கர புரொஃபஷனலிஸத்தோடு இருப்பார்கள். அருகருகே இருந்தாலும் பயிற்சியின்போதோ விளையாட்டின்போதோ, ஒருவரை ஒருவர் டிஸ்டர்ப் செய்வதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.
  
* மையந்தியின் காஸ்ட்யூம்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதே காஸ்ட்யூம்களுக்காக சில நேரம் வறுத்தெடுக்கவும்படுவார். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அலட்டிக்கொள்வதில்லை மையந்தி.

 

* சோஷியல் மீடியாக்களில் பயங்கர ஆக்டிவ். ட்விட்டர், இன்ஸ்டா ஆகிய தளங்களில் அடிக்கடி கிரிக்கெட் பற்றி, தன்னைப் பற்றி அப்டேட் செய்துகொண்டே இருப்பதால், இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கும் ரம்பாவுக்கு இன்று பிறந்தநாள்.
இனிய வாழ்த்துக்கள்.
Happy Birthday Rambha

Bild könnte enthalten: 1 Person, steht und Bart

இந்திய கிரிக்கெட் அணியின் இளைய நட்சத்திரங்களில் ஒருவரான துடுப்பாட்ட நட்சத்திரம் அஜியாங்கே ரஹானேயின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Ajinkya Rahane

  • தொடங்கியவர்

பச்ச, மஞ்ச, சிவப்பு ’பூரி’ நான்..! கண்ணைக் கவர்ந்த கல்யாண விருந்து! #NewSnack

கலர்..கலரா அப்பளம் சாப்பிட்டிருப்பிங்க...கலர்..கலரா பூரி சாப்பிட்டது உண்டா..? 

கலர் பூரி

செங்கல்பட்டில் ஒரு கல்யாண வீட்டில், காலை விருந்தாக பச்சை, சிவப்பு, நம்ம நார்மல் பூரி எனக் கலர், கலரா பூரி சுட்டுத்தள்ளி விருந்தினர்களின் மொத்தப் பாராட்டுகளையும் அள்ளிட்டாங்க. அப்படி இந்தக் கலர் பூரி மேல என்ன பயமோ, சிலர் கல்யாண வீட்டை விட்டே ஓடிட்டாங்க. அப்படியா..? ஆமா, இருக்காதா பின்ன, ‘என்ன சாயம் அள்ளித் தெளிச்சாங்களோ’ என அம்மாக்கள் தெறித்து ஓட, கலர் பூரி சாப்பிடாம நகர மாட்டோம் எனக் குட்டீஸ்கள் அலற, கல்யாண வீட்டுக் கச்சேரி சும்மா அதிரி புதிரி ஆய்டுச்சு.

கலர் பூரி விருந்து

சரி, பூரி போகுது, அடுத்தது என்னன்னு பார்ப்போம் எனத் தயார் ஆனவங்களுக்கு மீண்டும் ஒரு கலர்ஃபுல் ஷாக். அட ஆமாங்க. நம்மாளுங்க பூரியோட நிக்கல, அவங்க கைவண்ணத்தை ரசகுலாவிலும் காட்ட, அப்டியே பஞ்சு மிட்டாய் கலர்ல, நெளு நெளுன்னு ரசகுலா உருண்டுட்டு இருந்துச்சு. எது எப்படியோ, பார்க்கவும் சூப்பர், சாப்பிடவும் சூப்பர் என வெளுத்துக்கட்டிய கூட்டம் ஒருபுறம், ’ப்ப்பா..’ என வெறுத்து ஓடிய கூட்டம் மற்றொரு புறம். 

ரசகுலா

 

இத உங்க வீட்ல ட்ரை பண்ணணுமா...? இந்த மாதிரி செயற்கை நிறமூட்டிகள் எல்லாம் வேண்டாங்க. நம்ம வீட்ல இருக்கவே இருக்கு பீட்ரூட்டும், கருவேப்பிலையும்..! அப்டியே கோதுமை மாவோட சேர்த்து வச்சு செய்து கொடுங்க மம்மீஸ்...கலருக்குக் கலர் ஆச்சு, சத்துக்குச் சத்தும் ஆச்சு. கூட்டிக் கழிச்சு பாருங்க...பூரி சரியா வரும்..!

 

  • தொடங்கியவர்

ஜெயித்த இந்தியா.. டென்ஷனில் டிவி பெட்டிகளை அடித்து நொறுக்கிய பாகிஸ்தானியர்!

 

Bild könnte enthalten: 12 Personen, Personen, die lachen, Text

  • தொடங்கியவர்

சூரியனின் வளிமண்டலத்திற்குள், நேரடியாக விண்கலத்தை செலுத்தவுள்ள நாசா!

  • தொடங்கியவர்
 
 

இந்தியாவின் No 1 பேடல் சர்ஃபிங் பெண்!

ஆஸ்துமாவை மீறி தன்வி ஜெகதீஷ் சாதித்த கதை

-ச.அன்பரசு

பயம் கலைந்து, உற்சாகம் துள்ள மங்களூருவிலுள்ள பள்ளி மாணவர்கள் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தனர். தனியே நின்றபடி ஏக்கம் நிறைந்த கண்களோடு ஒரு சிறுமி அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பெற்றோருக்கும் தன் பெண்ணின் சிறிய ஆசையை பூர்த்தி செய்யமுடியவில்லையே என்று வருத்தம்தான்.
29.jpg
ஆனால், ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கடல்நீரில் நீச்சல் எப்படி சாத்தியம்? இந்நிலையில் தாத்தா மட்டுமே அச்சிறுமிக்கு ஆறுதலாய் இருந்தார். வெறும் ஆறுதல் மட்டுமல்ல. பெற்றோரிடம் போராடி அச்சிறுமி நீரில் இறங்க பர்மிஷனும் வாங்கிக் கொடுத்துவிட்டார்! தன் கனவான கடலில் அலைச்சறுக்கு பயிற்சி என்ற மகிழ்ச்சியோடு, ஆஸ்துமா என்ற தன் நோய்மையையும் அச்சிறுமி சமாளிக்க வேண்டியிருந்தது.

‘‘கடலை தாயின் மடியைப்போலவே உணர்கிறேன். கடல்நீரில் இருக்கும்போது என் மனதில் எந்தவிதமான தயக்கமும் பயமும் இதுவரை எழுந்ததேயில்லை...’’ கரைபுரளும் உற்சாகத்தோடு பேசுகிறார் தன்வி ஜெகதீஷ். 17 வயதுக்குட்பட்டோருக்கான பேடல் சர்ஃபிங்கில் இன்று இந்திய அளவில் நெ.1 வீராங்கனை இவர்தான்.
29a.jpg
கடலில் குதிக்க முடிவெடுத்த தன்விக்கு, நோய், அணியும் ஆடை, பெற்றோரின் அனுமதி என பல்வேறு தடைகளை கடக்க வேண்டியிருந்தது. ‘‘எட்டு வயதில் கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு சர்ஃபிங் போர்டை தொட்டுவிட்டேன் என்றாலும், 14 வயதில்தான் ஸ்டேண்ட் அப் பேடல் சர்ஃபிங்கில் ஆர்வம் வந்தது...’’ கபடமில்லாமல் சிரிக்கிறார்.

கடல் நீச்சல் தொடங்கி சர்ஃபிங் வரை கற்றவருக்கு, சரியான நேரத்தில் திசை காட்டும் குருவாக வந்தார் மந்த்ரா பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஏப்ரல். உயரே எழும் அலைகளின் மீது சறுக்கி விளையாடுவது சர்ஃபிங் என்றால், பேடல் சர்ஃபிங்கில் கூடுதலாக துடுப்பு இருக்கும். அலைகள் உயரே எழும் என்று காத்திருக்காமல் ஏரியில் கூட இதனை விளையாடலாம்.

‘‘பேடல் சர்ஃபிங் போல எனர்ஜியான விளையாட்டு எதுவுமேயில்லை. முன்பே பேடல் சர்ஃபிங் விளையாட்டுக்கான பொருட்கள் எங்களிடம் இருந்தது என்றாலும், கோச் ஏப்ரல் சொல்லும்வரை அதனை பயன்படுத்துவது பற்றி யாருமே யோசிக்கவில்லை...’’ ஈரக் கூந்தலைத்  துவட்டியபடியே பேசும் தன்வி, தளராமல் உழைத்திருக்கிறார்.

இந்தியாவில் பேடல் சர்ஃபிங் புதிது என்றாலும் அதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். இதற்குக் கிடைத்த பரிசுதான் 2015 மற்றும் 2016 ஆகிய இரு ஆண்டுகளில் அவர் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் முதலிடம் என்ற அங்கீகாரம். இந்தியாவில் தேசிய சாம்பியன் என்பதோடு உலகளாவிய போட்டிகளிலும் பேடல் சர்ஃபிங் விளையாட்டில் இந்தியாவின் முகம் 17 வயதான தன்வி ஜெகதீஷ்தான் என்ற பெருமை.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளாக சர்ஃபிங் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. எந்த வயதைச் சேர்ந்தவர்களும் இதை விளையாடலாம். சர்ஃபிங் பயிற்சியளிக்கும் பள்ளிகள் திறமையானவர்களை அடையாளம் காணும் தேசிய அளவிலான போட்டிகளையும் நடத்தி வருகின்றன.

அப்படித்தான், தான் 2015ம் ஆண்டு கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே முதல் பரிசை தன்வி தட்டிச் சென்றிருக்கிறார். ‘‘இதற்காக எந்தளவு நான் பயிற்சி பெற்றேனோ அதை விட இரு மடங்கு போட்டியில் பங்கேற்பதற்கான அனுமதியைப் பெற பெற்றோருடன் போராட வேண்டியிருந்தது. குறிப்பாக எனக்காக என் பயிற்சியாளர்கள் பேசியதை மறக்கவே முடியாது.

ஒரு பெண்ணாக சர்ஃபிங் போட்டியில் சாதிக்க முடியும் என்பதை அனைவருக்கும் நிரூபித்துக் காட்டுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். சென்னையில் நடந்த முதல் போட்டியில் அது கிடைத்தது. 18 கி.மீ. தூரத்தைக் கடந்தேன். அந்தத் தருணத்தை எப்போது நினைத்தாலும் மனம் அலை அலையாக துள்ளும்.

முன்னணி வீரர்களின் சர்ஃபிங் வீடியோக்களை பார்த்துப் பார்த்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். போலவே அமெரிக்காவின் ஃபிஜித் தீவில் ‘மெரைன் கரோலினா கிளப்’ நடத்திய போட்டியில் 18 கி.மீ. பந்தய தூரத்தை சுட்டெரிக்கும் வெயிலில் கடந்ததையும் மறக்கவே முடியாது.

சக போட்டியாளர்களின் மன உறுதியும், ரோபாட்டுகள் போன்ற உடல் வலிமையும் பெரும் ஆச்சர்யம் தந்தன...’’ வியப்புடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் தன்வி ஜெகதீஷ் அப்போட்டியில் மூன்றாமிடம் பிடித்தார். இப்போது தன் போட்டிகளுக்கான ஸ்பான்சர்ஷிப் கிடைக்காத நிலைமையில்தான் டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் ISA World SUP Paddleboard Championship போட்டிக்கு உழைத்து வருகிறார்.

‘‘நான் எதிலும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எளிய ஆதரவு கூட கிடைக்காமல் தவிக்கும் நிலையில், என் வெற்றிகள் அனைத்தையும் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். ஏதோ ஒருவகையில் இந்திய சிறுமிகள் ஊக்கம் பெற்று சர்ஃபிங்கில் ஈடுபட்டால் போதும்....’’ நம்பிக்கையும் உறுதியும் கண்களில் வழிய புன்னகைக்கிறார் தன்வி ஜெகதீஷ்.

பேடல் சர்ஃபிங் ஹிஸ்டரி

பேடல் சர்ஃபிங் விளையாட்டின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. 16ம் நூற்றாண்டில் ஹவாய் வீரர்கள் 5 மீ. நீள பளுவான மரத்தில் அலைச்சறுக்கு செய்து பேடல் போர்டை நடைமுறை ரீதியாக பரிசோதித்தனர். 20ம் நூற்றாண்டில் நீச்சல் வீரர்களுக்கு காயம்பட்டுவிட்டால் அவர்களை காப்பாற்ற லைஃப் கார்டுகள் பேடல் போர்டுகளை பயன்படுத்தினர்.

1940ம் ஆண்டு ட்யூக் கஹானமோகு மற்றும் லெராய் பாபி ஆகிய அலைச்சறுக்கு வீரர்கள், சிறிய கடல் அலைகளை சமாளிக்க பேடல் போர்டு உதவும் என்று கண்டுபிடித்தார்கள். 1990ம் ஆண்டு முதல் சர்ஃபிங் பள்ளிகளில் பேடல் போர்டு புகழ் பெறத் தொடங்கியது. 2012ம் ஆண்டு நடந்த முதல் பேடல் போர்டு சர்ஃபிங் போட்டியின் வின்னர், கால் லென்னி. இந்த விளையாட்டுக்காகவே ‘Standup Journal’ (2007) என்ற பத்திரிகையும் ஸ்பெஷலாக வெளியாகிறது.

டாப் 5 சர்ஃபிங் பெண்கள்!

ஜோகன்னே டெஃபே (ஃபிரான்ஸ்), மாலியா மானுவேல் (ஹவாய்), பைகே ஹரப் (நியூசிலாந்து), மேசி கலாகன் (ஆஸ்திரேலியா), பிலிப்பா ஆண்டர்சன் (ஆஸ்திரேலியா).

சாகச சர்ஃபிங் ஹாட் ஸ்பாட்!

பெல்ஸ், போண்டி பீச் (ஆஸ்திரேலியா), குடா பீச் (பாலி), சான்டாக்ரூஸ் (கலிஃபோர்னியா), மென்டாவாய் தீவு (இந்தோனேஷியா), ஹோசேகர் (ஃபிரான்ஸ்).

http://www.kungumam.co.in/

  • தொடங்கியவர்

விலங்குகளைக் காப்பாற்றும் பீட்டா... பெண்களைக் காட்சிப்படுத்துவது நியாயமா?

விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா', நடிகை சன்னி லியோனை வைத்து விளம்பரம் செய்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

peta

விலங்குகளின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் அமைப்பு தான் பீட்டா. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே இப்பெயர் தமிழகத்தில் மிக பிரபலம்! பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பிரபல நட்சத்திரங்களை வைத்து விலங்குகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் விளம்பரங்களைத் தயாரித்து வெளியிட்டு வந்தது. தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள திரிஷா, எமி ஜாக்ஸன் உள்ளிட்டோரும் இந்த விளம்பரங்களில் நடித்துள்ளனர். 

இதனிடையே பீட்டா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள விளம்பரம் சமூக வலைதளத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சைவ உணவை வலியுறுத்தும் பீட்டாவின் விளம்பரத்தில் நடிகை சன்னி லியோன், ஆபாசமான ஆடைகள் அணிந்து இருப்பதால், சமூக வலைதளத்தினர் பீட்டவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஊருக்கு உபதேசம் சொல்வதெல்லாம் இருக்கட்டும், பெண்களை காட்சிப்பொருளாக சித்தரிப்பது சரியா என பீட்டாவை நெட்டிசன்கள் வறுதெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

Sizzling @SunnyLeone proclaims "Spice Up Your Life! Go Vegetarian" in new PETA ad. http://petain.vg/2o2 

DBSsNaTUIAAkFkB.jpg

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘படைத்த கடவுள் என்னை வாழ்த்தியபடி’
 

image_882f088394.jpgஉறக்கத்திலும் நீ என்னுடன் இணைந்திருக்க வேண்டும். விழித்ததும் உன்பார்வையுடன் காலம் கழிந்தபடி நிலைக்க வேண்டும்.  

தாயின் தந்தையின் அரவணைப்புடன் வாழ்ந்த என்னை, உன்னிடம் ஒப்படைத்தாள் என் அன்னை.  

வரவும் தெரியாமல் செலவும் எனக்கெட்டாமல், வாழ்வதே சுகமானது. என்னுடன் இவள் இணைந்த பின்னரும், தடையில்லாத நெடும் பயணத்தைத் தொடர்ந்திடக் குடை பிடிக்கும் தோழி இவள்.  

எனக்கு எனச் சேமிப்பும் சம்பாத்தியமும் தெரியாமலே, தெருக்களில் உலா வந்தவன். இரகசியம் இல்லாத எல்லை தொடாத பயணங்கள். இடையிடையே இன்ப துன்ப நுகர்ச்சிகள். எதிலும் கவனம் செலுத்தி, ஐக்கியப்படாத சுதந்திர அபிமானி.  

எனினும் நான் செய்த குறும்புகளும் குளறுபடிகளும் இன்னமும் அப்படியேதான். இதனை இரசிப்புடன் ஏற்பவள் அம்மாவுக்கு அடுத்ததாக எனது துணைவி. 

எழுதுகோல் என்னை இளமையாக்கியபடியே இசைந்து கொடுக்கின்றது. படைத்த கடவுள் என்னை வாழ்த்தியபடி என்றும்...    

  • தொடங்கியவர்

2004 : தமி­ழுக்கு செம்­மொழி அங்­கீ­காரம்

வரலாற்றில் இன்று…

ஜுன் – 06

 

1654 : சுவீ­டனின் அரசி கிறிஸ்­டினா, அந்­நாட்டில் தடை­செய்­யப்­பட்­டி­ருந்த கத்­தோ­லிக்க சம­யத்தை தழுவ விரும்­பி­யதால் அர­சு­ரி­மையை துறந்தார்.


1674 : இந்­தி­யாவின் மஹ­ராஷ்­டிரா ராஜ்­யத்தின் மன்­ன­ராக சிவாஜி முடி­சூ­டினார்.


1683 : உலகின் முத­லா­வது பல்­க­லைக்­க­ழக நூத­ன­சாலை இங்­கி­லாந்தின் ஒக்ஸ்பேர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் திறக்­கப்­பட்­டது.


1792 : ரஷ்­யாவின் மொஸ்கோ நகரில் ஏற்­பட்ட பாரிய தீயினால் 18,000 வீடுகள் உட்­பட அந்­ந­கரின் மூன்றில் ஒரு பகுதி அழிந்­தது. 


Dr_abdulkalam1833 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி அன்ட்ரூ ஜக்ஷன், ரயில் பயணம் செய்த முதல் ஜனா­தி­ப­தி­யானார்.


1844 : வை.எம்.சி.ஏ. அமைப்பு லண்­டனில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1882 : மும்­பையை தாக்­கிய சூறா­வ­ளி­யினால் சுமார் ஒரு லட்சம் பேர் உயி­ரி­ழந்­தனர்.


1944 : 2 ஆம் உலக யுத்­தத்தில் பிரான்ஸின் நோர்­மண்டி கடற்­க­ரையில்  நேச­நா­டு­களின் 155,000 துருப்­பினர் தரை­யி­றங்கி தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தனர். வர­லாற்றின் மிகப்­பெ­ரிய ஈரூ­டக இரா­ணுவ நட­வ­டிக்­கை­யாக இது உள்­ளது.


1971 : சோயுஸ் 2 விண்­கலம் ஏவப்­பட்­டது.

 

1971 : அமெ­ரிக்­காவின் கலி­ஃபோர்­னியா மாநி­லத்தில் பய­ணிகள் விமா­ன­மொன்றும் இரா­ணுவ விமா­ன­மொன்றும் நடு­வானில் மோதிக்­கொண்­டதால் 50 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1981 : இந்­தி­யாவின் பீஹார் மாநி­லத்தில் பக்­மதி நதிக்கு மேலாக பயணம் செய்­து­கொண்­டி­ருந்த ரயி­லொன்று பாதையை விட்டு விலகி நதியில் பாய்ந்தால் ஐந்­நூற்றுக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தனர்.


1982 : இஸ்ரேல், லெபனான் நாடு­க­ளுக்­கி­டையில் யுத்தம் ஆரம்­பா­கி­யது.


1993 : மொங்­கோ­லி­யாவில் முத­லா­வது நேரடி ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்­றது.


2002 : கிறீஸ், லிபி­யா­வுக்கு இடை­யி­லான மத்­திய தரைக்­க­ட­லுக்கு மேலாக சுமார் 10 மீற்றர் விட்­ட­மு­டைய விண்­கல்­லொன்று வெடித்­து­சி­த­றி­யது. இதன்­போ­து ­வெ­ளி­வி­டப்­பட்ட சக்தி நாக­சாக்கி அணு­குண்டு வெடிப்பை விட வலி­மை­யா­னது என மதிப்­பி­டப்­பட்­டது.


2004 : இந்­திய நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற இரு அவை­க­ளி­னதும் இணைந்த கூட்­ட­மொன்­றின்­போது ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமினால் தமிழ் 'செம்மொழி' அங்கீகாரம் அளிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


2012 : சிரியாவின் ஹமா நகருக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

செல்போனில் சிக்னல் கிடைக்காததால் மரத்தில் ஏறிய மத்திய அமைச்சர்

 
maram_3171995f.jpg
 
 
 

பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர் தனது செல்போனில் சிக்னல் கிடைக்க மரத்தில் ஏறி, அதிகாரியிடம் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினரும், மத்திய நிதித்துறை இணை அமைச் சருமான அர்ஜூன் மெக்வால் (62), தனது தொகுதிக்கு உட்பட்ட தூலியா எனும் கிராமத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென் றார். அப்போது பொதுமக்களிடம் அவர்களது குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவரிடம், இங்குள்ள மருத்துவமனையில் போதுமான செவிலியர்கள் இல்லாததால் மருத்துவ வசதிகளைப் பெற மிகவும் சிரமமாக இருப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய அமைச்சர், சுகாதார அதிகாரியிடம் பேச தனது செல்போனில் அழைத்தார். ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை.

சிக்னல் கிடைக்க வேண்டுமா னால் மரத்தில் ஏறினால்தான் கிடைக்கும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் வேறு வழியில்லா மல், ஏணியில் ஏறி மரத்தில் நின்று கொண்டு போன் செய்தார். அப்போதுதான் சிக்னல் கிடைத் தது. மத்திய அமைச்சர் ஒருவரே செல்போனில் சிக்னல் கிடைக்க மரத்தில் ஏறிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகப் பரவி வருகிறது. இதை யடுத்து, அப்பகுதியில் ரூ.13 லட் சம் செலவில் 3 மாதங்களுக்குள் செல்போன் டவர் அமைக்கவும், மின்சார வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தூலியாவைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் போதுமான மின்சாரம் இல்லை. இதனால் அங்கு தொலைக்காட்சி, செல்போன் போன்ற வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான கிராமங்கள் இன்னும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது இந்நிகழ்வின் மூலம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது ஏணியில் நின்று பேசுகிறார் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

‘‘கொஞ்சம் மாற்றிச் சிந்திக்கலாமே’’ - பெண்களின் வெற்றிக்கான வழிகள்!

 

பெண்

‘சிஸ்டம் சரியில்ல...’ தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெல்லாம் இந்த வார்த்தை பாடாய்ப்படுகிறது. பால் பேதமின்றி இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இன்னொரு பக்கம், வாழ்வதற்கான நெருக்கடிகள் மனிதர்களை இயந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் எப்போதும் மனிதர்களாக இருப்பதுதான் அவர்களுக்கான இயல்பும் மகிழ்வும். பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பெண்கள் தங்கள் சந்திக்கும் பிரச்னைகளையே தடைக்கற்களாகப் பார்க்கின்றனர். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப் படிக்கட்டுகளாகும். 

தன்னை அறிதல்:
நம்மால் வளர முடியாமல் போவதற்கு சிஸ்டம் சரியில்ல என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. மாற்றவேண்டியது சிஸ்டத்தையா அல்லது நம்மையா என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். தன்னிடம் உள்ள பிளஸ், மைனஸ் விஷயங்களைப் பெண்கள் மனம் திறந்து ஒத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் புறக் காரணங்களை விட்டு விட்டு தன்னிடம் மாற்றிக்கொள்ள வேண்டியவற்றை பட்டியலிட்டு சரி செய்யவும். 

எதார்த்த பார்வை:
பிரச்னைகளை அணுகுவதில் ஆண்களைவிடப் பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள். அதுவே, அவர்களின் பிரச்னைக்கான வலியை அதிகரிக்கச் செய்கிறது. பெண் தன் உடல் ரீதியான மாற்றங்களைக்கூட சங்கடங்களோடும், சிரமங்களோடும் எதிர்கொள்வதால் பல தருணங்களில் அவர்கள் ஏன் பெண்ணாய்ப் பிறந்தோம் என்று யோசிக்கின்றனர். எந்தப் பெண்ணும் தன் வாழ்வில் ஒருமுறையாவது இப்படி யோசித்திருக்கக் கூடும். இந்த உலகுக்கு ஓர் உயிரைத் தருவதற்கான கருவறையே பெண்ணுக்குள் தனக்கான மாற்றங்களை அந்தந்தப் பருவங்களில் ஏற்படுத்திக்கொள்கிறது. தாய்மையின் அற்புதங்களை உணர்ந்த பெண்ணுக்கு வலிகளோ, அது சார்ந்த சிரமங்களோ பெரிதில்லை. வலிகளே பெண்களுக்கான சிகரங்களை எப்போதும் திறந்திருக்கின்றன. தான் சந்திக்கும் பிரச்னகளைப் பெண்கள் எதார்த்தமாக அணுகலாம். 

பெண்

திறனை மேம்படுத்து:
ஓர் அலுவலகத்தில் உங்களுக்கான வேலை இலக்கை நிர்ணயிக்கிறார்கள், புதிய வேலைகளை உங்களது தலையில் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், உடனடியாக மனதில் டென்சன் தொற்றும். கசக்கிப் பிழிவதாக மனம் புலம்பும். இதை நம்மால் சமாளிக்க முடியுமா என்று அச்சப்படும். இதை இப்படியும் பார்க்கலாம். கொடுக்கப்பட்ட பணிகளுக்கான நேரத்தையும் எளிய வழிகளையும் உத்தேசிப்பதன் மூலம் உங்களது வேலைத்திறனை நீங்கள் உயர்த்திக்கொள்ள முடியும். இப்படிப் பல சந்தர்ப்பங்களை நீங்கள் எளிதாகக் கடந்துவிட்டால், அதே அலுவலகத்தில் திறமை மிகுந்த ஆளாக நீங்கள் மிளிர்வதை உணரலாம். இதுவே உங்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். கூடுதல் பெறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் தன் தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம். 

சக மனிதரைப் புரிதல்:
திருமணம் பெண்ணின் வாழ்வில் மிகவும் மதிப்பு மிகுந்த பகுதி. ஒரு வீட்டில் பெண்ணாக வளர்க்கப்பட்ட செல்ல மகள், தனக்கான குடும்பத்தின் தலைவியாகப் பொறுப்பேற்கும் வைபவம். புதிதாக ஒரு குடும்பத்தில் நுழையும்போதும் எதிர்ப்படும் எல்லா விஷயங்களுமே பிரச்னைகளாகத்தான் தோன்றும். புதிய உறவுகள் வலியுறுத்தும் சிறிய விஷயம்கூடப் பெரிதாக மனதைக் காயப்படுத்தும். புதிய மனிதர்களை முன்கூட்டிய விருப்புவெறுப்புகளுடன் பார்க்காமல், அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். புதிய உறவுகளைத் தனதாக்கிக்கொள்வதன் வழியாக, பெண் தனக்கான ஓர் அன்புக் கூட்டை உருவாக்க முடியும். பெண்கள் மனிதர்களைப் புரிந்து செயல்படுவதால் வீட்டிலும்..தனது வேலையிடத்திலும் பிரச்னைகளை எளிதாக சமாளிக்க முடியும். 

இனிக்கும் இல்லம்:
பல வீடுகளிலும் எதிரெதிர் துருவங்களாக இருப்பது தம்பதிகள்தான். முதலில் அன்பை மட்டுமே பகிர்ந்துகொள்ள உருவாக்கிக்கொண்ட உறவுதான். போகப்போக அவர்களுக்கிடையில் பலவீனங்களும் வெறுப்புகளும் மட்டுமே இடிக்க முடியாத சுவராக வளர்ந்து நிற்கும். நெகட்டிவான விஷயங்களை மட்டுமே பட்டியலிடுவதால் வரும் பிரச்னைதான் இது. இந்தச் சுவரையே ஊதினால் உடைந்துவிடும் கண்ணாடி மொட்டுகளாக மாற்ற முடியும். அப்படியே இருவருக்குமான அன்பின் பகிர்வுகளை நினைவு கூறுங்கள். பாசிட்டிவ் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். அவரவருக்கான சுதந்திர வெளியை அனுமதித்து, உறவை அழகாக்குங்கள். உங்களைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருக்காமல், உங்களது குழந்தைகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கத் தொடங்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு இந்த உலகின் சிறந்த அப்பா, அம்மாக்களாக நீங்கள் மாற வாய்ப்புள்ளது. எந்த உறவிலும் பாசிட்டிவ் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வழியாக பெண்கள் சுமுகமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம். 

 

பெண்கள் மாற்றி சிந்திப்பதன் வழியாகவே எந்தப் பிரச்னையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். அவர்களுக்கான தடைக்கற்கள் எல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

தமிழ் பசங்களுக்கு ஏன் கேரள பெண்களை பிடிக்கும்?

  • தொடங்கியவர்

இதுதான் உலகின் காஸ்ட்லி கார்! இதன் மைலேஜ் தெரியுமா?

 

கார் என்றால் ஓடும்; சூப்பர் கார் என்றால் பறக்கும்; ஹைப்பர் கார் என்றால் தெறிக்கும். ஹைப்பர் கார்கள்தான் உலகின் பவர்ஃபுல் மற்றும் காஸ்ட்லி கார்கள். இதில் 'கோய்னிக்செக்' எனும் கார்தான் உலகின் காஸ்ட்லி காராக இருந்து வந்தது. இதன் விலை 5 மில்லியன் டாலர். அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 32 கோடி ரூபாய். இப்போது அதற்கெல்லாம் அண்ணனாக, மன்னனாக வந்துவிட்டது ‘ஸ்வெப்டெய்ல்’ என்னும் மாடல். 

ரோல்ஸ் ராய்ஸ் கார்

இது வாயில், காதில் நுழையாத நிறுவனத்தின் காரெல்லாம் இல்லை. நமக்கெல்லாம் பழக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் மாடல்தான் இந்த ‘ஸ்வெப்டெய்ல்’. உலகின் அதிக பொருட்செலவில் தயாரான, உலகின் அதிக விலை கொண்ட கார் என்னும் நாமத்தைப் பெற்றிருக்கிறது ஸ்வெப்டெய்ல்.

காரைப் பார்த்துவிட்டு ‘மாடல் அப்படி ஒண்ணும் புதுசா இல்லையே’ என்று நினைத்தால் அதுதான் ஸ்வெப்டெய்லுக்கு வெற்றியே! ஆம்... 1920, 1930-களில் வெளிவந்த ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் க்ளாஸிக் டிசைனைக் கொண்டுதான் இந்த ஸ்வெப்டெய்ல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு பாகங்களின் டிசைனுக்கும் ஒவ்வொரு க்ளாஸிக் டிசைன் பின்புலம் உண்டு.

ரோல்ஸ் ராய்ஸ்

அதாவது, இதன் கதவு டிசைன், 1925-ல் வெளிவந்த பாந்தம் காரில் இருந்து எடுக்கப்பட்டது. இதன் பின்புற வடிவமைப்பு, 1934-ல் ரிலீஸான மற்றொரு பாந்தம் காரில் இருந்து எடுக்கப்பட்டது. கிரில், பான்ந்தியான் மாடலில் இருந்து உருவியது. காரின் மேற்கூரை, இன்டீரியர் எல்லாம் பாந்தம்-2 காரின் டிசைன். இப்படி கலந்துகட்டி டிசைன் செய்யப்பட்டிருப்பதுதான் ஸ்வெப்டெய்லின் ஸ்டைல். ஆனால், கூபே மில்லெனியல் டிசைன்! மற்றபடி இன்டீரியரில் மிக்ஸி, கிரைண்டர் தவிர எல்லா வசதிகளும் உண்டு. இதிலுள்ள ஒரு கடிகாரத்தின் விலை மட்டுமே ஒரு கோடி ரூபாயாம். 

ரோல்ஸ் ராய்ஸ்

காரின் லைட் வெயிட்டுக்காக வெளியே தெரியக்கூடிய அனைத்து பாகங்களிலும் அலுமினியம் ஃபினிஷ் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் ஹைப்பர் காருக்கு இணையான பெர்ஃபாமென்ஸை இந்த ரோல்ஸ்ராய்ஸுக்குத் தரவல்லது. இது ஒரு கஸ்டமைஸ்டு கார். அதாவது, நீங்கள் உங்கள் விருப்பப்படி என்ன கலர், எந்த மாதிரி டிசைன் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தால் போதும்... ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்’ என்றில்லாமல், நீங்கள் கேட்டபடியே உங்கள் காரை ரெடி பண்ணித் தருவார்கள். அப்படி இந்த கார் தயாரிக்க, இரண்டரை வருடங்கள் ஆனதாம். ஆனால், இதற்கான டிசைன் வேலைகள் 2013-லேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.

 

 

இன்ஜின் போன்ற மற்ற விஷயங்கள் எதையும் ரோல்ஸ்ராய்ஸ் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இதன் மைலேஜ் லிட்டருக்கு 1 அல்லது 1.2 கி.மீதான் இருக்கும் என்கிறார்கள். இத்தாலியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இதை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார் ரோல்ஸ்ராய்ஸின் தலைமை அதிகாரி டார்ஸ்டான் முல்லர், ‘‘ஸ்வெப்டெய்ல் மிகவும் அற்புதமான கார். ஒரு தடவை இதில் இன்பச் சுற்றுலா சென்று பாருங்கள். நீங்களே இதை லவ் பண்ண ஆரம்பித்து விடுவீர்கள்’’ என்றார்.

அதற்கு 85 கோடிக்கும் மேலே செலவாகுமே!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வீடியோ: பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 'பியானோ' வாசித்து மகிழ்ந்த கரடி

பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த கரடி அங்கிருந்த அறையில் ஜாலியாக உலாவிவிட்டு, பியானோவை வாசித்து சந்தோஷமாக இருந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

 
வீடியோ: பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 'பியானோ' வாசித்து மகிழ்ந்த கரடி
 
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார்.  தனது வீட்டின் சமையலறை குப்பையாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்ககூடும் என போலீசில் புகார் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்து சோதனையிட்ட போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை சோதனை செய்ததில், அந்த குற்றவாளி திருடன் கரடி என தெரியவந்துள்ளது.

வீட்டின் வெளி அறையில் ஜாலியாக உலாவிய கரடி அங்கு இருந்த பியானோவில் கையை வைத்து வாசித்துள்ளது, அதன் பின்னர் அங்கிருந்த சமையலறைக்கு சென்று, அவற்றையெல்லாம் சூறையாடியுள்ளது.
 

இவை அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்துள்ளது. சமையலறையில் உள்ள ஜன்னலானது அளவில் பெரியதாக இருந்ததால் அதன் வழியாக கரடி வந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

  • தொடங்கியவர்

எப்படி இருக்கிறான் ஓம்ரான்?

 
சமூக வலைதளங்களில் வைரலான ஓம்ரானின் புகைப்படம் (இடது)., பத்திரிகையாளர் கினானாவுடன் ஓம்ரான் (வலது)
சமூக வலைதளங்களில் வைரலான ஓம்ரானின் புகைப்படம் (இடது)., பத்திரிகையாளர் கினானாவுடன் ஓம்ரான் (வலது)
 
 

தூசி படிந்த உடலில் தலை மற்றும் கண்ணில் ரத்த காயங்களுடன் சிறுவன் ஒருவன் அமர்திருந்த புகைப்படமும், வீடியோவும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், இடிந்த கட்டிடங்களுக்கிடையே ஓம்ரானும், அவனது குடும்பத்தினரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயங்களுடன் ஓம்ரான் ஆம்புலன்ஸில் அமரந்திருக்கும் புகைப்படம் சிரியாவில் போரினால் நடக்கும் அவலத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தியது.

இந்த நிலையில் ஓம்ரான் தற்போது எவ்வாறு உள்ளார் என்ற புகைப்படங்கள் சிரிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அப்புகைப்படங்களில் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படும் ஓம்ரான் அரசு கட்டுபாட்டிலுள்ள அலெப்போ நகரில் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

syria_3172296a.jpg

தந்தையுடன் ஓம்ரான்

ஓம்ரான் அவரது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை பத்திரிக்கையாளர் கினானா அல்லுஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் ஓம்ரான் புகைப்படங்கள் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இருள் ருசி உணரலாமா? - `Taste of Darkness’ உணவக அனுபவம்

மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஏதோ ஓர் இரவில், நிலவொளிகூட நுழைய முடியாத உங்கள் வீட்டின் இருட்டறையில், விளக்கு வெளிச்சத்தைக்கூட அனுமதிக்காமல் அன்றைய இரவு உணவை உங்களால் உண்ண முடியுமா? முடியும் என்றால், `வழக்கமாக நீங்கள் உட்கொள்ளும் கலோரியைவிட சற்றுக் குறைவாக, (ஏறத்தாழ 9% வரை) குறைவான கலோரியைத்தான் உங்களால் உட்கொள்ள முடியும்’ என்கிறது அறிவியல்.

இருள்

நாகரிகம் வளரத் தொடங்கியதும் உணவின் மீதான விருப்பங்களும், அதன் தேவைகளும் பன்மடங்காக வளர்ந்துவிட்டன. விருந்தினர் வருகை, விசேஷ நாட்கள், திருவிழாக்கள்... என வருடத்தின் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே ஆடம்பர உணவை உட்கொண்டுவந்தது நம் சமுதாயம். அதிலும் இன்று, உணவை போகப்பொருளாகப் பார்க்கிற அளவுக்கு சுவையூட்டிகளின் வர்த்தக வளர்ச்சி, உணவை வைத்து மனஅழுத்தத்தைப் பன்மடங்காகப் பெருக்கியுள்ளது.

அம்மா உணவகம் - இருள் ருசி அறியலாம்

ஒருபக்கம் ரேஷன் கடையில் விநியோகப் பொருட்கள் குறைவது, `அம்மா உணவக’த்தையும் `ஆந்திரா மீல்ஸை’யும் நாடுவது என மக்கள் திண்டாடினாலும், இன்னொரு பக்கம் பசிக்காக உண்ணவேண்டிய உணவு, உற்சாகத்துக்காக உண்ணும் அளவுக்கு அது என்டெர்டெய்ன்மென்ட் ஆகவும் மாறுகிறது. உணவில் அதன் ஆடம்பரம் (Luxury) என்பது மிக முக்கியமான அம்சமாகிவிட்டது. ஏன் இருக்கக் கூடாது என்று கேட்கலாம். ஆனால், அதில் உடல்நலன் பல நேரங்களில் இரண்டாம் பட்சமாகவும் பார்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

``ரொம்ப போர் அடிக்குது, சாப்பிட எதாவது கொடு!’’ - விடுமுறை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு மனதிலும் எளிதாகக் கேட்கும் குரல் இது. உளவியல்ரீதியாக இது மிகக் குறிப்பாக பெண்களிடமும் குழந்தைகளிடமும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது மற்றோர் ஆய்வு. `அவர்களின் மனஅழுத்தமும் சூழலும்தான் காரணம்’ என்கிறது.

அரிசி, சப்பாத்தி, பிரெட், நூடுல்ஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர்... என `Main course' எனச் சொல்லப்படும் முதல்நிலை உணவுக்கே இன்று மிகப் பெரிய லிஸ்ட் முன்வைக்கப்படுகிறது. இன்னமும், மூன்று வகை பன்னீர்... அதில் முப்பது வகை ரெசிபிகள், ஐந்து வகை பருப்புகள்... அதில் ஐம்பது வகைச் சமையல், வறுவல், பொரியல், டெஸர்ட், ஜாம், சாஸ்... என வண்ண வண்ணமான உணவுகளின் அணிவகுப்பு எப்போதும் நம் மூளையின் செபலிக்கை (Cephalic) தூண்டியபடியே இருப்பதை நாம் இன்பமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

இருள் -  நூடுல்ஸ்

இதுதான் உணவு குறித்த நம் தேவைகளை உடல் அளவில் தீர்மானித்து வருகிறது. பேஸ்ட்ரீஸ், ஐஸ்க்ரீமைப் பார்க்கும்போது வாயில் எச்சில் ஊறுவதும் இப்படித்தான். உணவில் பல வண்ணங்கள், வாசனைகள் என பழகிப்போன மூளைக்கு இட்லி, தோசை போன்ற வழக்கமான ஆரோக்கிய உணவு கொஞ்சம் அலர்ஜியைத் தருவதாகவும் இது நம்மை மாற்றியுள்ளது . இதனால்தான் மேற்கத்திய நாடுகள், `சரிவிகத உணவு’ எனச் சொல்லும் நம் இட்லி, தோசையைக்கூட தந்தூரி வெரைட்டிகளாக உள்நுழைக்கவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது எனலாம்.

இப்படி உணவின் வண்ணங்களையும் வடிவங்களையும் மட்டுமல்ல; தினம் உட்கொள்ளும் உணவின் அளவையும் கணக்கிட்டபடிதான் நாம் டைனிங் டேபிளிலேயே அமர்வோம். காலை உணவுக்கு, `ஒரு சாப்பாத்தி, ஒரு கப் தயிர்...’ என்றாலும், `இதுதான் என் உணவு, இதுதான் என் தட்டு, இதைத்தான் நான் உண்ணப் போகிறேன்’... எனக் கணக்கிட்டுப் பழகிவந்த நமக்கு, சூரி போட்ட பரோட்டா கணக்காக `போட்ட கோட்டையெல்லாம் அழி, மறுபடியும் புதுசா ஆரம்பிப்போம்’ என உணவின் மீது புது ஈர்ப்பை உருவாக்கும் ஒரு வழிமுறையைக் கண்டேன். அதாவது, சென்னை, இராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவின், முதல் தளத்தில் சமீபத்தில் நான் பிரமித்து வியந்த `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’ (Taste of Darkness) எனும் உணவகம் பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்.

இருள் - வண்ணமயமான உணவுகள்

உணவகம் என்றாலே பல வண்ண விளக்குகள், கண்ணைக் கவரும் பல நிற உணவு வகைகள் எனப் பழகிப்போன நிலையில், இங்கே இருட்டில் உணவு உண்ண வேண்டும் என்பது முற்றிலும் புது முயற்சியாகத் தெரிந்தது. `இப்படி ஒரு முயற்சிக்கு வரவேற்பு இருக்குமா?’ என யோசிக்க வேண்டாம்! அயல் நாடுகளிலும், ஹைதராபாத், மும்பை போன்ற பெரு நகரங்களிலும் பெரிதும் விரும்பப்படும் உணவக முறைகளில் இதுவும் ஒன்று. எளிமையும் ஆச்சர்யமும் இன்னும் மிக அதிகமாக புலன் விழிப்புஉணர்வை உருவாக்கும் ஒரு முயற்சியாக சென்னையிலும் அதன் கிளை விரிந்திருப்பது சென்னையின் புதுமைக்கு இன்னொரு வரவேற்பாகத் தெரிகிறது.

 

விடுமுறை அல்லது அவுட்டிங் என்றால் நாணயத்தின் இரண்டு பக்கம்போல பெற்றோர்களும் குழந்தைகளும் ஆளுக்கொரு பக்கமாக நிற்கும் அவஸ்தையில்தான் இன்றைய பல குடும்பங்கள், அதுவும் சென்னை போன்ற பெருநகரவாசிகள் இருக்கிறார்கள். ஏனென்றால், `எது செய்தாலும் அது வாழ்க்கைக்கான உணர்வுப்பூர்வமானதாக இருக்க வேண்டும்’ - இது பெற்றோர்களின் சாய்ஸ். `புதுமையாகவும் த்ரில்லாகவும் இருந்தால் போதும்’ - இது பிள்ளைகளின் வாய்ஸ்!

 

த்ரில்லும் வேண்டும், அதே சமயம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் கைகூட வேண்டும். சாப்பிடும்போது தட்டைப் பார்த்து சாப்பிடப் பழக்கப்படாத இந்த யங் ஜெனரேஷனுக்கு கண்ணைக் கட்டிச் சோறு போடுவதும், சென்னையின் எல்லைக்குள் இந்த உணவகம் இருப்பதும் ஒரு குடும்பக் குதூகல உணர்வுக்கு நிச்சயம் ஒரு `ஹாய்...’ சொல்லும் எனலாம்.

இருள்

இருட்டுதான் இவங்க தீம்!

தாவர உணவோ, மாமிச உணவோ அது உங்கள் சாய்ஸ். ஆனால் இருட்டில்தான் உணவு உண்ண வேண்டும் இதுதான் `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’ கான்செப்ட்!

`அது சரி... ஏசி, நல்ல உணவு... என இயல்பான சென்னை ஹோட்டலுக்கே பட்ஜெட் பாக்கெட்டைக் கடிக்கும். இதில், `இருட்டுதான் இவங்க தீம்’ என்றால், இவர்கள் பட்ஜெட் நம் குடும்பத்துக்கு சூட் ஆகுமா?’ என யோசித்தால், கூகுள் செய்து, அவர்களை போனில் தொடர்புகொள்ளலாம், முன்பதிவு வசதியும் இருக்கிறது.

விலை... நாலு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அதாவது ஆளுக்கு 500 ரூபாய்! இது ஒரு பீட்சா கார்னரில்கூட எளிதாக இன்று நாம் கொடுத்துக்கொண்டிருக்கும் தொகை என்றே தோன்றுகிறது. பகலில் இரவையும், அதே சமயம் பாதுகாப்பையும், நல்ல உணவையும் அனைத்துக்கும் மேலாக புலன் உணர்வை அறியவைக்கும் ஒரு தீம் ரெஸ்டாரென்டுக்கு இந்தத் தொகை பொருத்தமானதாகவே தெரிகிறது.

இருள்

எக்ஸ்பிரஸ் அவென்யூவின் மூன்றாவது தளத்தை அடைந்ததுமே இந்த உணவகம் பளிச்சென்று (வெளியில் மட்டும்தான்) தெரியும். மிகப் பெரிய ஆரவாரம் ஏதும் இல்லாமல், டிக்கெட்டுக்கான தொகை, உணவக விதிமுறைகள்... என எல்லாச் சந்தேகங்களும் நுழைந்தவுடன் முதலிலேயே ஓர் இளைஞரால் விளக்கப்படுகின்றன.

விலையுயர்ந்த மற்றும் ஒளிரும் பொருட்கள் எதுவும் உணவகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. நம் பொருள்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கச் சொல்லி சாவியை நம் கையில் கொடுத்துவிடுகிறார்கள். இருக்கைக்கான முன் அனுமதி பெற்று வந்திருந்தால், காத்திருப்பு நேரம் சில நொடிகள்தான்.

கையில் மெனுகார்டு போன்ற அட்டை ஒன்றைத் தருவார்கள். அதை மெனு கார்டு என நினைத்தால் நமக்கு பல்ப் நிச்சயம். அது உணவகச் சட்ட திட்டங்களை தெளிவாக அறிவுறுத்தும் ஏடு.

இருள் உணவு

த்ரில் அனுபவமே பிரதானம்!

அறிவுறுத்தலைப் படிக்கும்போது சமாளித்துவிடலாம் என்ற தைரியம்கூட இருக்கும். ஆனால் கதவைத் திறந்து, உள்ளே அனுப்பிய நொடியில் அவசரப்பட்டு வந்துவிட்டோமோ என யோசிக்கும் அளவுக்கு இருட்டு நம்மை அச்சுறுத்தத் தொடங்கிவிடும். தீக்குச்சி வெளிச்சம்கூடக் கிடையாது. போதாத குறைக்கு, பல காலமாக `ஈவில் டெட்’ முதற்கொண்டு `காஞ்சனா’, `காஞ்சுரிங்’ வரை வெளிச்சத்தில் பார்த்துவைத்த அத்தனை பேய்களும் விதவிதமாக மனக்கண் முன்னே வந்து நிற்கும் என்பதும் ஒரு சாராரின் பதற்றமாக இருக்கும்.

அறிவியலாகப் பார்த்தால், கண்களைத் திறந்திருந்தும் ஒளியைக் காண முடியாத முதல் அனுபவத்தை நம் மூளையால் எடை போட முடியாது என்பதே உண்மை. இதனால் பயத்துக்கான அட்ரினலினை உடல் அதிகமாகவே சுரந்துகொண்டிருக்கும்.

உண்மையைச் சொல்லப் போனால், பாதுகாப்பான ஓர் இடத்தில் நம் புலனறிவை நாம் சோதித்துக்கொண்டிருக்கிறோம் என தைரியமாக நம்பலாம். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள் என்பதால், உங்கள் குழந்தைக்கும் ஒரு த்ரில்லான அனுபவத்தை இது தரும். எனவே, குழந்தையுடன் அதிகம் பேசிக்கொண்டே இருக்காமல், அவர்களை சிந்திக்கவும்விடுங்கள். காரணம், `பேசினால் பயம் தெரியாது’ என்பது உணவகத்துக்குச் சென்று தப்பித்து வந்த சிலரின் அறிவுரையாகச் சொல்லப்படுகிறது.

ஆகவே, `பேச்சைக் குறை!’ என்பது த்ரில்லுக்கான மெனு கார்டில் இல்லாத நமது எக்ஸ்ட்ரா அட்வைஸ்!

என்னதான் இங்கு அட்வைஸ் செய்தாலும், `சாப்பிடத்தான் அழைத்துச் செல்கிறார்கள்’, `சாப்பிட்டதும் மீண்டும் வெளிச்சத்தை பார்க்க இயலும்’ என்ற உத்தரவாதங்கள் எல்லாம் இருளில் கிடைக்கும் அசலான புலன்களின் முரண்பாட்டால் செல்லுபடியாகாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான்.

இருள் உணவு

இந்தப் பதற்றத்தில் கைகாட்டியாக... இல்லை இல்லை குரல் காட்டியாக ஒரு கணீர் குரல் உணவக இருக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல வரும். எத்தனை உற்று நோக்கினாலும், உங்களால் யாரையும் பார்க்க முடியாது. நூறு சதவிகிதம் அவர் உருவம் தெரியாது என்பதால், குரலை வைத்து, பெண் என உணர்ந்துகொள்ளலாம். இனி அவர் குரலைத்தான் பின்பற்றி ஆக வேண்டும் என்பதால், செவிக்கு முதல் உணவு அங்கேயே ஈயப்படுகிறது. இப்போது உங்கள் செவி சத்தத்தை நோக்கி தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும். கிச்சனில் பாத்திரத்தைத் தூக்கிப்போட்டு உடைத்தால்கூட டோரிமானை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த உங்கள் குழந்தை, கைக்கடிகாரத்தின் சிறு ஒலியைக்கூட கவனிக்கத் தொடங்குவான்.

சுவர் தெரியாது, வழி தெரியாது, ஒலிவழி பயணப்படும் உங்களை, அவசியம் என்றால் மட்டுமே தொடுதல் வழி யூ டர்ன் போடவைப்பார்கள். இல்லையேல், சுவற்றைப் பிடித்துக்கொண்டு அவர் குரலைக் கேட்டுத்தான் நடந்தாக வேண்டும். இதுவரை எல்லைகளை கண்வழி பழகியிருப்பீர்கள், முதன்முறையாக தொட்டுப் பார்த்து நடக்கப் பழகுவீர்கள். இதுதான் உங்கள் முதல் தொடு பயிற்சியாகவும் இருக்கலாம். உங்கள் வீட்டு சுவர் மென்மையானதா? தெரியாது! இன்று, சுவரிடம்கூட பேசியிருக்கிறீர்கள் என்பது உங்களையே வியக்கவைக்கும் தொடு உணர்வின் அருமை.

இது வரை சத்தமோ, வாசனையோ முதலில் அதைக் கண்களால் ஊர்ஜிதம் செய்தே பழகிய எளிமையான மூளையின் செயல்பாட்டுக்கு இந்த வழிமுறைகள் பெரும் சவாலாகவே இருக்கும். பலருக்கும் புதிதாக முட்டிபோட்டு, தவ்வி நடக்கும் குட்டிக் குழந்தைபோல சுவற்றைக் கட்டிக்கொண்டே நகர்ந்து சென்ற பால்யம்கூட கண்முன் வரும். வேறு வழி இல்லை! இன்று நீங்கள் குழந்தைதான். காரணம், நீங்கள் இதுவரை பார்க்காத, பழகாத புது உலகம் இது.

இருள் உணவு

த்ரில் குறையக் கூடாது என்பதால், கூட்டம் கூட்டமாக அனுமதிப்பதில்லை என நினைக்கிறேன். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் என்றால், அவர்களுடன் இரண்டு பேர் கொண்ட நண்பர் குழு அல்லது தம்பதிகளை அனுமதிக்கிறார்கள். இது இருக்கைகளைப் பொறுத்து சில நேரங்களில் மாறவும் செய்யலாம்.

இதில் வெளியே சொல்லப்பட்ட ஒரு ரூல், படிக்கும் போது ஈசியாக இருந்திருக்கும். உணவகம் அனுமதிக்கும் இருக்கைகளில்தான் அமரவேண்டும், இருக்கைகள் நம் தேர்வு அல்ல என்பதுதான் அது. ஆனால், உள்ளே இருட்டு உங்களை அச்சுறுத்தும்போது, இருபது வருடங்களுக்கு முன்னர் உங்கள் கைபிடித்த கணவனோ, மனைவியோ இன்றுதான் பயத்தால் மீண்டும் உங்கள் கைகளைப் பிடித்திருப்பார்கள். ஆனால் இருக்கையில் இந்த ஆறுதல்கள் எல்லாம் கிடைக்காது. தனித் தனி சீட்; வேண்டுமென்றால், குரல்வழி உறுதி செய்துகொள்ளலாம் அல்லது கை நீட்டும் தொலைவா எனத் தொட்டுத் தெரிந்துள்ளலாம். ஆனால் பயப்படும்போது, மூளை அவ்வளவாகப் பேசுவதையும் பிறரைத் தேடும் நிலையையும் அனுமதிப்பதில்லை, சுய விழிப்புஉணர்வில் திளைத்திருக்கும் என்பதையும் அங்கு நிலவும் நிசப்தம் சொல்லிவிடும்.

`ஊசி விழுந்தால்கூட சத்தம் கேட்கணும்’ என டீச்சர் சொன்னதை உங்கள் குழந்தையும், ஏன்... நீங்களும்கூட அங்கு உணர்ந்துகொள்வீர்கள். அமைதி எப்போதாவது பயமுறுத்துமா? அனுபவித்ததால், `ஆம்’ என்கிறது மனம்.

எப்படியோ இருட்டைப் பழக்கி, இருக்கைக்குள் அமர்த்திவிட்டாலும், உங்கள் பயம் உங்களுக்கு முன் அவர்களால் யூகிப்பட்டது என்பதால் உங்களை ஆசுவாசப்படுத்தி சானிடைசர், தண்ணீர், சாப்பாடு, டிஷ்யூஸ் என வரிசையாக தன் குரல்வழி தன்னுடைய இருப்பை அவ்வப்போது ஊர்ஜிதம் செய்வார். ``அம்மா வாசல்லதான் காத்திருப்பேன்’’ எனச் சொல்ல, ப்ரிகேஜிக்குள் பயந்து நுழையும் குழந்தையின் மனநிலையைத்தான் அவர்களின் இருப்பும் உணர்த்தும். இல்லையென்றால், இருட்டு நம்மை பலவீனப்படுத்தி, திணறடிக்கவும் செய்யும்.

``சானிடைசர்...’’ என்று குரல் எழுப்பி, நம் கையில் அதை ஊற்றுவார்கள்! அது எத்தனை திண்ணமான திரவம், லெமன் கிராஸா அல்லது லாவண்டரா எனத் தொடுதலும் மோப்பமும் போட்டி போட்டுக்கொண்டு நம்மைச் சிந்திக்கச் செய்யும் . இதில் கண்முன்னே தட்டு வைக்கப்பட்டிருக்கும் என்பதைத் தடவி பார்க்கலாம் அல்லது அவர்கள் உணவைத் தரும்போது தேடிக்கொண்டிருக்கலாம் .

``உணவு...’’ என்று சொல்லி, கேரியர் ஒன்றில் உணவைத் தருகிறார்கள், `என்னடா கொடுமை இது? கிண்ணத்தில் கொடுத்தாலாவது கையைவிட்டுக் குழப்பி (இருட்டுதானே என்ற ஒரு வசதி) சாப்பிட்டுக்கொள்ளலாம்; கேரியர் என்றால் பிரித்துவைக்க வேண்டும், ஒதுக்க இடம் பார்க்க வேண்டும், தேடித்தேடி உண்ண வேண்டும் என வெளிச்சத்தில் செய்யும் நொடிப்பொழுது வேலைகளை, இன்று மூளை நோட்டு போட்டு கணக்கெழுதிப் பார்க்கும்.

கேரியர் கனம் பார்த்ததும், `அட இது போதுமா?’ எனக் கேள்வி எழும். அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விடுங்கள். எனக்கு மட்டுமல்ல... பலருடன் பேசியவரை 99 சதவிகிதம் பேர் `சாப்பாடு ஏ1’ என்றுதான் சொன்னார்கள். மெனுவில் பெரிய வகைகளை எதிர்பார்க்காதீர்கள். காரணம், இருக்கும் நான்கைந்து வெரைட்டியை இருட்டின் பிடியில் பிரித்துமேய்வதே பெரும்பாடாக இருக்கும். இதில் தட்டுக்குள் சரியாக கை வைக்கணும், தண்ணீரையும் பிடிக்கணும் என கமலின், `பம்மல்’ பட வசனம்போல பிதற்றவேண்டிய நிலையில்தான் அப்போது நாம் இருப்போம்.

இருள் உணவு

வெஜ் என்றால், சாஃப்டான இரு ரொட்டி, சூப்பரான ஒரு சைடிஷ். கூடவே வெஜ் ஃபிரைடு ரைஸ் மற்றும் கிரேவியும் வரும். நான்வெஜ் என்றால், சிக்கன் நிச்சயம். உணவு வகை எது என்றாலும் டேஸ்டுக்குக் குறை இருக்காது.

`நம்பிச் சாப்பிடுங்கள்’ எனச் சொல்கிறேன். ஆனால், `எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....’ என்பது திருவள்ளுவரின் குறள் மட்டுமல்ல, அன்று உங்களாலேயே உணரப்படும். அதாவது, `கண்களால் பார்த்து உணரப்படாத இந்த உணவு உங்கள் உடலுக்கு உகந்ததா, இல்லையா என இன்று உங்கள் மூளை தவிக்கத் தொடங்கிவிடும். வழக்கமாக அப்படித்தானே இதுவரை பழக்கியுள்ளோம். எனவே, அந்த நேர உணவைத் தேவைக்கு மேல், சுவைக்காகவோ, உற்சாகத்துக்காகவோ எக்ஸ்ட்ராவாக ஒரு துளி உணவைக்கூட உள்ளே அனுமதிக்காது’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் மிகக் குறைந்த அளவு உட்கொள்ளும்போதே பசி அடங்கிவிடும் நிலையை நான் மட்டுமல்ல, என்னுடன் இருந்த பலரும் தெரிவித்தனர். உங்கள் உண்மையான உணவுத் தேவை இவ்வளவுதானா என்பதையும் நீங்கள் முதல் சில உணவுகளை உண்ணும்போதே உணர்ந்துவிடுவீர்கள். `கொடுத்த காசுக்கு மிச்சம் வைக்காம சாப்பிட்டாகணுமே...’ என ஈட்டிக் கடைக்காரர்போல குத்தித் தள்ளினால்தான் உணவை முழுவதுமாக முடிக்க முடியும்.

அடுத்து..? `எப்படியோ சாப்பிட்டாகிவிட்டது. ஆனால் கை கழுவ என்ன செய்வது? கடவுளே...’ எனப் பதற்றம் வரும். வெட் டிஷ்யூவும் டிரை டிஷ்யூவும் கைக்குப் பரிமாறப்பட்டுவிடும். இதில் இன்னொரு ட்விஸ்ட் உங்கள் அருகில் உள்ளவருக்கான டிஷ்யூவை நீங்கள்தான் தரவேண்டும். `நல்லா கோத்துவிடுறீங்கம்மா’ எனச் சொன்னபடி உங்கள் கையைத் தேடி பின் அவர் கை தேடி, அதற்குப் பின்னர் உடன் வந்தவர் அல்லது அருகிலிருப்பவர் கை தேடி கொடுப்பதற்குள் இருட்டிலும் கண்ணைக்கட்டிக்கொண்டு வரும்.

இன்னமும் அதிகமாகச் சொல்லி முடித்துவிடலாம் ஆனால் இது உணர்வதற்கான தருணம் என்பதால், வார்த்தைகளாலும், கற்பனைவழியும் பார்த்துக்கொண்டிருந்த நாம், கொஞ்சம் உணர்ந்துகொள்ளவும் மிச்சம் வைப்போம்.

இயற்கை கொடுத்திருக்கும் ஐம்புலன்களில் ஒரு புலனை சட்டென நிறுத்திவைத்தால், மற்ற புலன்கள் எவ்வாறெல்லாம் உதவ முன்வரும் என்பதும், அதை எப்படி மூளைக்குப் பழக்கப்படுத்தப் போகிறோம் என்பதும் அத்தனை த்ரில்லான அனுபவம்.

` `Nyctophobia' எனும் இருட்டைக் கண்டு பயப்படும் போபியா சிலருக்கு இருந்தால், துணையுடன் செல்லுங்கள் அல்லது அது உங்கள் சாய்ஸ். பாதுகாப்பான ஓர் இடத்தில் உங்கள் சோல்மேட்டுடன் இந்தப் பயணம் இருட்டின் மீதான உங்கள் பயத்தை ஆராய்ச்சி செய்யவும் அல்லது அரிதாக விடுவிக்கவும் செய்யலாம். என்றாலும், உங்கள் மனதின் வலிமை பொறுத்து இதைக் கையாளலாம்’ என்கிறது அயல்நாட்டு ஆய்வு ஒன்று.

இருள் உலகம்

`டெலிகிராப்’ இதழின் ஆராய்ச்சியில், `கண்களைக் கட்டிக்கொண்டு இருட்டில் உண்பதால், தேவையற்ற உணவுகளையும் கலோரியையும் தவிர்க்க இயலும்’ என்கின்றனர். இதை இன்னமும் அதிகமாக அசைபோட்டால் தேவையில்லாமல் உண்ணும் உணவைக் குறைத்து, உணவை வீணாவாக்குவதை உணர்த்தும் இந்த அனுபவம், தனிமனிதச் சிந்தனையில் முற்போக்கு எண்ணங்களை விதைப்பதாக இதன் வாடிக்கையாளர்களால் பேசப்படுகிறது..

``படுத்தபடி டி.வி பார்க்காதே! கண்ணு போயிடும்’’ என உங்கள் குழந்தைக்கு இது வரை நீங்கள் சொன்ன அட்வைஸ் எல்லாம் மூளைக்குச் சென்றடையாமல் மிதந்துகொண்டிருக்கலாம், ஆனால், கண்களின் ஒளி எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக நிச்சயம் இது அமையும்.

எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் கட்டாயமாக உடன் அழைத்துச் செல்லுங்கள். பார்வையற்றவர்களின் வாழ்க்கை எப்படியானது என்பதையும், சக மனிதர்களுக்கான உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் இது அவர்களுக்குப் பாடமாக அமையும்.

முடிப்பதற்குள் சொல்லியாகவேண்டிய இன்னொரு விஷயம், ஆரம்பத்திலிருந்து அனைவருக்கும் `குரல்காட்டி’யாக இருக்கும் அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர்... பெயர் ஜானகி! அவருக்கு பார்வை இல்லை என்பது உணவகத்தைவிட்டு வெளியே வரும்போதுதான் தெரியவரும். ஜானகியுடன் வழித்துணையாக இருக்கும் இன்னொரு உதவியாளர் செல்வகுமாருக்கும் பார்வை இல்லை என்பது, வழிகாட்டியாக இருக்க விழிப்புடன் இருந்தால் போதும் என்பதையும், அதற்கு அனைத்துப் புலன்களின் விழிப்புஉணர்வு எவ்வளவு அவசியம் என்பதையும் அசைபோடச் செய்யும்.

 

`திறமை மிக்கவர்கள்’ என்ற எண்ணமெல்லாம் மாற்றுத் திறனாளிகளின் விழிப்புஉணர்வின் முன் மறு விசாரணைக்குள்ளாகும் என்பது திண்ணம்.

ஹோட்டல் மேனேஜர் அனந்த நாராயணனைச் சந்தித்துப் பேசினோம்... ``இது என் அங்கிளோட ஹோட்டல். சென்னை கிளை என் பொறுப்புல இருக்கு. ஹைதராபாத், பெங்களூரூலயும் கிளைகள் இருக்கு. சென்னையில் கிளை தொடங்கி ஆறு மாசங்கள்தான் ஆச்சு. ஆனா, இங்கே எங்களுக்குக் கிடைச்சிருக்கும் ரெஸ்பான்ஸ் வேற லெவல். என் மாமா ஜெர்மனிக்குப் போயிருந்தப்போ, அங்கே இருந்த `டயலாக் இன் த டார்க்’ ரெஸ்டாரன்ட் பத்திக் கேள்விப்பட்டு போய் பார்த்திருக்காங்க. ஜெர்மனியில் இந்த ஹோட்டலின் உரிமையாளர் ஆண்ட்ரூஸின் நண்பர் ஒருவர் திடீரென ஒரு விபத்தில் தன்னுடைய கண்பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகு அவரை எல்லோரும் அணுகுகிற முறை ஆண்ரூஸுக்குப் பிடிக்கவில்லை. பார்வையற்றவர்களின் மேல் இருக்கும் பொதுவான கருத்தையும், அவர்கள் மேல் காட்டும் பரிதாபத்தையும் மாத்தணும்னு அவர் யோசிச்சதோட விளைவுதான் `டயலாக் இன் த டார்க்.’அனந்த நாராயணன்

பார்வை இல்லாதவங்களோட கண்கள் எந்த அளவுக்கு இருட்டுக்குப் பழக்கப்பட்டிருக்கும், இப்படிப்பட்ட இருட்டில்கூட அவங்க தன்னம்பிக்கையோட தங்களோட வேலைகளை சக மனிதர்கள்போல எப்படிச் செய்யறாங்கனு நாம் புரிஞ்சிக்க இந்த ரெஸ்டாரன்ட்டில் சாப்பிடும் அனுபவம் சிறந்ததாக இருக்கும். மதியம் மற்றும் இரவு இயக்கப்படும் இந்த ரெஸ்டாரன்ட்டில் தினமும் மெனு மாற்றப்படும். இதிலிருந்து வரும் லாபம் `Ace Foundation’ எனப்படும் எங்களோட அறக்கட்டளைக்கு செல்கிறது. அதன் மூலம் பல பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கச் செய்வது, ஸ்கில் டெவலப்மென்ட், தொழில்நுட்பப் படிப்புகள் போன்றவையும் கற்றுத்தரப்படுகிறது’’ என்கிறார் அனந்த நாராயணன்.

சாப்பிட்டு முடித்து வழியனுப்பும் முன்னர், `ஃபேஸ்புக்கில் எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்’ எனச் சொல்லி அனுப்புகிறார்கள். `வெளிச்சத்தில் அனுப்புவதென்றால் எதை வேண்டுமானாலும் செய்கிறோம், தயவுசெய்து வெளிச்சத்தைக் காட்டுங்கள்’ என மன்றாடாத குறையாகவே வெளிவரும் அந்த நொடி... பிறந்த குழந்தைபோல மீண்டும் ஒருமுறை உங்கள் கண்களை வெளிச்சத்துக்குப் பழக்கப்படுத்திக்கொண்டிருப்பீர்கள்.

இந்தப் பயணம் உண்மையில் உங்கள் புலன்கள் குறித்த விழிப்புஉணர்வை உங்களுக்குள் விதைத்துப் போகச்செய்யும் இலக்கு. இழந்த பின் அல்ல... இருக்கும்போதே புலன்களின் அருமையை அறிய அவசியம் பார்க்கவேண்டியதில் `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’-ஸும் ஒன்று

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சி.டி, காலி பாட்டில்களால் சுற்றுச்சூழல் காக்க ஒரு ஆல்பம்! #Samhara

 

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழலுக்கு நாம் இழைத்து வரும் தீங்குப் பற்றி எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? எவையெல்லாம் தீங்கு என்பது பற்றிய போதிய அறிவு கூட நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. பெருகிவரும் மக்கள் தொகையாலும் தொழிற்சாலைகள் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சுழல் வெகுவாக பாதிப்படைகிறது. இது பற்றிய விழுப்புஉணர்வுக்காக ,ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 5 தேதி உலக சுற்றுச்சுழல் தினமாகக் கொண்டப்படுகிறது.

இன்று நாம் பயன்படுத்தும் பல பொருளின் பயன்பாடு நிறைவடைந்ததும் அதை நாம் தூக்கி எரிந்து விடுகிறோம். அவ்வாறு எரியப்படும் பல பொருட்கள் சுற்றுப்புறச்சூழலை எந்த அளவு பாதிக்கும் என்பதை நாம் நினைத்துகூட பார்ப்பதில்லை. இயற்கையில்  நஞ்சை விதைக்கிறோம் என்பதை கூட உணராமல்  பல்லாயிரக்கணக்கான வருடங்களாக செய்த தவறையே மீண்டும் செய்து வருகின்றோம். இன்று பலரும் தங்கள் பங்குக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க, பல வழிகளில் செயல்பட்டும், விழிப்புஉணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். குறிப்பாக பல தன்னார்வத் தொண்டு அமைப்புகள் இயற்கை பாதுகாப்பிற்காகவும், சுற்றுச்சூழல் மாசாகாமல் இருப்பதற்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த வகையில் புதிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தி பல தொண்டு நிறுவனங்களை தங்கள் பக்கம் கவர்ந்து உள்ளது ஷட்டர்ஸ்பார்க்’ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும்  சம்ஹாரா என்னும் படத்தொகுப்பு. 

சம்ஹாரா என்பது அழிவு. நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் எவ்வாறு சுற்றுப்புறச்சூழலை அழித்து வருகின்றது என்பதை பிரபதிபலிக்கும் விதத்தில் இந்தப் புகைப்படத்தொகுப்பை வெளியிட்டு உள்ளனர் 

சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல்

டிசைனர் காவ்யா ரெட்டி  என்பவரின் ‘தமாரா’ என்ற அமைப்புடன் இணைந்து ஷட்டர்ஸ்பார்க் ஸ்டூடியோஸ் இந்தப் புகைப்படத்தொகுப்பை தயாரித்துள்ளது. 'சம்ஹாரா’-வில் பிரபல மாடல்கள் பவித்ரா லஷ்மி, அபினயா நாராயணசாமி, பாவனா கத்ரி, ஷாலி நிவேகாஸ் மற்றும் ஷரோன் போன்றோர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் ஒவ்வொருவரின் உடைகளிளும் மனிதன் இயற்கைக்கு எதிராக தினமும் பயன்படுத்தும் பொருட்கள், சுற்றுச்சுழலுக்கு பெரும் அழிவை ஏற்படுத்துகிறது என்பதை குறிப்பிடும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதையே மிக சிறப்பாக பிரபலித்தும் இருக்கிறது ஷட்டர்ஸ்பார்க் ஸ்டுடியோ "சம்ஹாரா "படத்தொகுப்பு 

சுற்றுச்சூழல்   சுற்றுச்சூழல்


ஷட்டர்ஸ்பார்க்’ ஸ்டுடியோஸ் பற்றி :-

”மெக்கானிக்கல் இஞ்சினியர், கணினி வல்லுனர், மார்க்கெட்டிங் துறை அனுபவசாலி, டேட்டா அனாலிஸ்ட் மற்றும் வங்கி ஊழியர் என பல்துறை சார்ந்த வல்லுநர்களின் நட்பின் சங்கம் தான் இந்த ஸ்டூடியோ” என்றுகிறார்  ஷட்டர்ஸ்பார்க் ஸ்டுடியோஸின் உரிமையாளரும் மார்க்கெட்டிங் துறை அனுபவசாலியுமான அடைக்கப்பன். 

“இரண்டு ஆண்டுகள் முன் சென்னையில் நடத்த ஒரு ஃபோட்டோகிராபி பயிற்சி முகாமில் தான் நாங்கள் எல்லாரும் சந்தித்துக் கொண்டோம். எங்கள் ஐந்து பேருக்கும் புகைப்படக்கலை ரொம்ப பிடிக்கும். அது தான் எங்களை ஒன்று சேர்த்தது. வார இறுதிகளில் கேமரா கையுமாக ஐந்து பேரும் ஒனண்ணு சேர்ந்து போட்டோ எடுக்க புறப்படுவோம். ஒண்ணுமே எடுக்கலைனாலும் அந்த வீக் எண்டை கேமராவுக்கே அர்ப்பணிப்போம்.  இப்படியாக எங்கள் நட்பு தொடர்ந்தது. பின் நாங்க எல்லாரும் சேர்ந்து முகநூலில் எங்களுக்கும் என ஒரு தனிப் பக்கம் தொடங்க முடிவெடுத்தோம். பெயர் வைக்க ரொம்ப யோசித்து, பின் எங்கள் ஐந்து பேரின் முதல் எழுத்துகளை ஒன்றாக சேர்த்து ஸ்பார்க் (SPARK) என்று வைத்தோம். அதுவே "ஷட்டர்ஸ்பார்க்’ ஸ்டுடியோவாக உருவெடுத்தது. ஒரே மாதிரியான பணியில் போரடித்துப் போன நண்பர்கள் புதிதாக, சமூகத்துக்கு பயனுள்ளதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இந்த ஸ்டூடியோவை தொடங்கினோம்” என்கிறார்  அடைக்கப்பன் . 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

1975 : முத­லா­வது உலக கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி ஆரம்பம்

வரலாற்றில் இன்று…

ஜுன் – 07

 

1099 : முத­லா­வது சிலுவைப் போரில் ஜெரு­ஸலேம் மீதான முற்­றுகை ஆரம்­ப­மா­கி­யது.


1494 :  புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உல­கத்தை (வட அமெ­ரிக்கா, தென் அமெ­ரிக்கா) இரு நாடு­க­ளுக்கும் இடையில் பிரித்­துக்­கொள்­வது தொடர்­பாக ஸ்பெய்­னுக்கும் போர்த்­துக்­க­லுக்கும் இடையில் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

First-World-Cup-cricket

1654 : பிரான்ஸில் 16ஆம் லூயி மன்­ன­னுக்கு முடி­சூட்­டப்­பட்­டது.


1692 : ஜமைக்­காவின் போர்ட் ரோயல் நகரம் பாரிய பூகம்­பத்­தினால் 3 நிமி­டங்­களில் அழிந்­தது. 1600 பேர் பலி­யா­கினர். சுமார் 3000 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.


1832 : ஐரிஸ் குடி­யேற்­ற­வா­சிகள் மூலம் கன­டாவில் கொலரா நோய் பர­வி­யது. இதனால் சுமார் 6000 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1862 : அடிமை வர்த்­த­கத்தை ஒழிப்­ப­தற்கு அம­ரிக்­காவும் பிரிட்­டனும் இணங்­கின.


1863 : மெக்­ஸிகோ தலை­ந­க­ரான மெக்­ஸிகோ சிற்றி பிரெஞ்சுப் படை­க­ளினால் கைப்­பற்­றப்­பட்­டது.


1905 : சுவீ­ட­னுடன் இணைந்த ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தற்கு நோர்வே நாடா­ளு­மன்றம் அங்­கீ­கா­ர­ம­ளித்­தது.


1940 : 2ஆம் உலக யுத்­தத்­தின்­போது நோர்வே மன்னர் 7 ஆம் ஹக்­கோனும் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் ஒலாவும் நாட்­டை­விட்டு வெளி­யேறி லண்­டனில் வசிக்க ஆரம்­பித்­தனர்.


1975 : ஆண்­க­ளுக்­கான முத­லா­வது உல­கக்­கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி இங்­கி­லாந்தில் ஆரம்­ப­மா­கி­யது. முதல் போட்­டியில் இந்­தி­யாவை இங்­கி­லாந்து 202 ஓட்­டங்­களால் வென்­றது.


1977 : பிரித்­தா­னிய அரசி இரண்டாம் எலி­ஸ­பெத்தின் பொன்­விழா கொண்­டாட்­டத்தின் முக்­கிய நிகழ்வு நடை­பெற்­றன. இந்­நி­கழ்­வு­களை தொலைக்­காட்­சியில் சுமார் 50 கோடி பேர் பார்­வை­யிட்­டனர்.


1989 : சூரினாம் எயார்வேஸ் விமா­ன­மொன்று சூரி­னாமில் விபத்­துக்­குள்­ளா­னதால் 176 பேர் கொல்லப்பட்­டனர்.


1995 : போயிங் 777 பய­ணிகள் விமானம் முதல் தட­வை­யாக சேவைக்கு வந்­தது.


2000 : இஸ்­ரே­லுக்கும் லெப­னா­னுக்கும் இடை­யி­லான எல்­லை­களை ஐ.நா. வரை­யறை செய்­தது.


2006 : ஈராக்கில் அல் கைதா தலை­வ­ரான அபு முசாப் அல் ஸார்­காவி, அமெ­ரிக்க விமா­னப்­ப­டை­யி­னரின் தாக்­கு­தலில் பலி­யானார்.


2007 : கொழும்பு விடு­தி­களில் தங்­கி­யி­ருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான தமிழர்கள் வலுக் கட்டாயமாக பொலிஸாரால் வெளியேற்றப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

இரவு நேரத்தில் டீ விற்பது, எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

 

 சென்னையில், இரவு 10 மணிக்கு மேல், ஒரு தனி உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பலதரப்பட்ட மனிதர்களைக்கொண்டு அது இயங்கினாலும், பெரும்பாலும் அனைவரது கண்ணிலும் படுபவர்கள், டீ விற்பனை செய்பவர்கள்தான். சைக்கிள், டிவிஎஸ் XL போன்ற வாகனங்களில், அதன் பின் இருக்கையைத் தூக்கிவிட்டு, ஒரு டீ கேனை அதில் வைத்துக்கொண்டு, மாநகரத்தின் முக்கிய இடங்களில் அவர்கள் சுற்றிவருவார்கள்; இரவுக்கு இருக்கக்கூடிய ஆயிரம் கண்களில், நிச்சயம் ஒரு கண் இவர்களுடையதுதான். அப்படிப்பட்ட மனிதர்களைச் சந்தித்துப் பேசியதின் தொகுப்புதான் இந்தக் கட்டுரை! 

 

chennai night

 

அசோக்பில்லர் பகுதியில் டீ விற்கும் ஒருவரிடம் பேசியதில்,  "மூணு மாசத்துக்கு முன்னாடி வரை, டிவிஎஸ் XL வண்டிலதான் டீ வித்துட்டு இருந்தேன். அது என்னோட சொந்த வண்டி; தவணை கூட கட்டி முடிச்சுட்டேன். ஒரு நாள் ராத்திரி 12 மணிக்கு ரவுன்ட்ஸ் வந்த போலீஸ்காரவுங்க, ரோட்டுல டீ விக்கக் கூடாதுனு சொல்லி, லத்தியால பயங்கரமா அடிச்சுப் போட்டுட்டு போய்ட்டாங்க; கை காலெல்லாம் வீங்கிப்போயிருச்சு. அப்போ அவங்க அடிச்ச அடியால, ஜுரம் வந்து படுத்த படுக்கையாகிட்டேன். வேற வழியில்லாம, குடும்பத்தக் காப்பாத்துறதுக்காக வண்டிய வித்துட்டேன். எத்தன நாள் வருமானமே இல்லாம வீட்டுல இருக்கறது? வீட்லயும் கஷ்டம்; அதான் இப்போ ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சைக்கிள் வாங்கி, அதுல டீ கேனை வச்சு டி வித்துக்கிட்டு இருக்கேன். இப்போ வரைக்கும், வலது கையை சரியா தூக்க முடியல. இந்தத் தொழில்ல, நெறயப் பிரச்சனை இருக்கு தம்பி" என்கிறார் வருத்தத்துடன்.

 

ஈக்காட்டுதாங்கல்  பேருந்து நிறுத்தத்துக்கு அருகில், சாலை மறைவில் டீ விற்றுக்கொண்டிருந்த இன்னொருவரிடம் பேசியபோது,  “ஒரு நாள் ரெண்டு மணிக்கு, ஒரு போலீஸ் ஜீப் வந்துச்சு. வா வண்டில ஏறுன்னு சொல்லிட்டாங்க; டீ, சைக்கிள அப்டியே நடுரோட்டுல விட்டுட்டு, அவங்க கூட ஏறிட்டேன். பாதி தொலைவு போனதும், 'முன்னூறு ரூவா குடு' உன்ன எறக்கி விட்டுர்றோம்; இல்லன்னா வழக்கு போட்ருவோம்னு மிரட்டுனாங்க. சைக்கிள் பொருளெல்லாம் ரோட்டுல இருந்தனால, அவங்க கேட்ட காசக் குடுத்துட்டேன். பூந்தமல்லி ரோட்டுல அப்படியே என்ன எறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க; மனசு வெறுத்து 2 கி.மீ தூரம் ஓடி வந்தேன். சம்பவ இடத்தத் திரும்பி வந்து பார்க்கும்போது, என்னோட சைக்கிளை பக்கத்துல ஒரு ஹிந்திக்காரர் பாதுகாப்பா வச்சிருந்தார். எப்பவும் என்கிட்டதான் அவர் டீ வாங்கிக் குடிப்பாரு. நான் போலீஸ் ஜீப்ல ஏறுனத பாத்துட்டு, திரும்பி வர்ற வரை அங்கேயே நின்னுட்டு இருந்தாரு; அந்த ஒரு மனிதர்தான், நான் வாழணும்னு ஒரு நம்பிக்கைய குடுத்தாரு" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

 

19024456_1327180457403491_551962009_o_05

 

ஒலிம்பியா டெக் பார்க் பக்கத்தில், கொசுக்கடிக்குப் பயந்து ஒரு ஓரத்தில், அட்டையைப் பற்றவைத்து, அதற்குப் பக்கத்தில் நின்று டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் ஒரு டீயை வாங்கிக்கொண்டு பேச்சுக் கொடுத்தேன். "பத்தொன்பது வருசமா டீ வித்துட்டு இருக்கேன், அப்போல்லாம் இந்த ஏரியாவுல நான் மட்டுந்தான்; எல்லாரும் என்கிட்டேதான் டீ வாங்கிக் குடிப்பாங்க. ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் நாலஞ்சு வண்டி எப்பவும் நின்னுட்டே இருக்கும். பதினாறு பிளாஸ்க் வரை ஒரு நைட்டுல டீ வியாபாரம் பண்ணிருக்கேன். ஆனா இப்போ, நாலு பிளாஸ்க் டீ விக்கிறதுக்குள்ள, நாயி படுற பாடா இருக்கு. ஒரு இடத்துல நின்னாத்தான் பொழப்பு போகும்; அலைஞ்சிகிட்டே இருந்தா எங்க தொழிலுக்கு சரிப்பட்டு வராது. போலீஸ் நிக்க விடாம தொரத்திகிட்டே இருப்பாங்க. பொழுது விடியும் போது பார்த்தா ரெண்டு பிளாஸ்க் டீ அப்படியே இருக்கும். விக்காத டீயை வீட்டுக்கு எடுத்துட்டுபோகும் போது, மனசு அவ்வளவு கனமா இருக்கும்; இத நம்பி கடன் வாங்குனது எல்லாம் கண்ணுக்குள்ள வந்து வந்து போகும்பா. நான்லாம் நல்லா தூங்கியே ரொம்ப வருஷம் ஆச்சு, இப்போல்லாம் தூக்கமே வர்ரது இல்ல" என்கிறார்.  

 

ஒரு கப் டீக்குப் பின்னால், நமக்குத் தெரியாத பல அடர்த்தியான  விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. டீ விற்பனை செய்கிற எல்லோரும், சென்னையில் உள்ள  டீ கம்பெனிகளில் டீயை மொத்தமாக வாங்கி, கேன்களில் வைத்து வியாபாரம் செய்கிறார்கள். ஒரு பிளாஸ்க் டீ நூறு ரூபாய்; அதில் மொத்தமா சுமார் முப்பது டீ வரும். ரெண்டு வருசத்துக்கு முன்பெல்லாம், விற்பனை ஆகாத டீயை, அந்தக் கம்பெனியே திரும்பப் பெற்றுக்கொள்ளும். இப்போ, டீ வியாபாரிகள் எண்ணிக்கைப் பெருகிவிட்டதால, இப்போது அந்த டீ கம்பெனி, யாரிடமும் விற்பனையாகாத  டீயைத் திரும்பப் பெறுவதில்லை.

 

chennai night

 

இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, டீ விற்கக் கூடாது என்று காவல் துறை சொல்வதற்கு முக்கிய காரணமே, “டீ விற்கிறேன் என்ற பெயரில், சிலர் போதைப் பொருள்கள் விற்பதுதான்'' என்கிறார்கள். சைக்கிளில் டீ விற்பவர்களோடு சேர்ந்து, ஒருசிலர் போதைப் பொருள்களையும்  விற்பனைசெய்வதால்தான், டீ விற்பனை செய்பவர்களுக்கும் பிரச்னைவருகிறது என்றார்கள். அவர்கள் சொல்வது போலவே, பைக்கில் வரும் சிலர், சைக்கிள் அருகில் வந்ததும், டீ விற்பவரின் முகத்தைப் பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் சென்று விடுகிறார்கள்; ''அவர்கள் எல்லோருமே, போதையைத்  தேடி இரவில் வருபவர்கள்தான் என அவர்கள் சொன்னார்கள். இப்படி சிலர் செய்கிற தவறுகளால், ஒட்டுமொத்தமாக டீ விற்பவர்களைக் குற்றவாளியாகப் பார்ப்பது கவலையளிக்கிறது'' என்கிறார்கள் டீ விற்பவர்கள். 

 

“போலீஸ் வந்துரும் சீக்கிரம் டீயைச் சாப்பிட்டுட்டு கிளம்புங்கப்பா” - இந்த ஒரு வாக்கியத்தில்தான், அவர்களின் ஒட்டுமொத்த இரவுமே அடங்கியிருக்கிறது. இரவு நேரத் தவறுகள், சட்டம், தண்டனை ஆகியவற்றைத் தாண்டி, இந்த எளிய மனிதர்களுக்கென ஒரு வாழ்க்கையும் கதையும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படியான மனிதர்களின் கதை, எப்போதும் அவர்கள் நினைத்தபடி இருந்ததே இல்லை. இருக்கப் போவதுமில்லை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சினிமா வீடு: நாயகிகள் ஆடும் வீடு

 

Desktop_3170989f.jpg
 
 
 

பல படங்களில் கேரளத்து கலையம்சத்துடன் கூடிய வீட்டில் நடிகர் நடிகைகள் ஆடுவதும் பாடுவதும் பார்த்திருப்போம். அந்த வீடு ரீனா’ஸ் வென்யூ. பழைய மகாபலிபுரம் சாலையில் இஸ்கான் கோயில் அருகில் இருக்கிறது இந்த வீடு. நகருக்கு வெளியில் இஸ்கான் கோயிலின் ரிங்காரம் கேட்டபடி மரங்களுக்கு மத்தியில் கண்களைப் பரிக்கும் கட்டுமானத்துடன் அமைந்திருக்கிறது இந்த வீடு.

ch_28_3170988a.jpg
‘சென்னை 28 (2ம் பாகம்)’ படக் காட்சி

ஓட்டுச் சாய்ப்பில் வீட்டின் பூமுகம் (முகப்பு) நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்தால் வாசல் கதவு பாரம்பரியக் கதைகள் பேசுகின்றன. வாசலில் நின்று பார்த்தாலே உள்ளே இருக்கும் புஜையறை தெரியும். வீட்டிற்குள் சென்றாலே கோயிலுக்குள் சென்றதுபோல் இருக்கும். நடுமுற்றத்துடன் கூடிய இந்த வீடு கேரளக் கட்டுமான முறையில் கட்டப்பட்டது. நடுமுற்றம் நான்கு பக்கமும் வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் வீட்டுக்கு அழகைக் கூட்டுகின்றன. தேக்கில் செய்யப்பட்ட இந்தத் தூண்கள் காரைக்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டவை.

தொங்கு விளக்குகள், மணிகள் போன்ற சின்ன சின்ன பொருட்களும் கேரளத்திலிருந்து தருவிக்கப்பட்டுள்ளான. அவையும் இந்த வீட்டுக்கு சவுந்தர்யம் அளிக்கின்றன. உள் அறைகளில் ஆத்தங்குடி டைல்கள் போடப்பட்டிருக்கின்றன. காரைக்குடி செட்டிநாடு வீடுகளில் மட்டுமே காணக்கூடியவை இந்த ரக டைல்களைப் பிரத்யேகமாகத் தருவித்து அமைத்திருக்கிறார்கள். வளவுகளில் கேரளப் பாரம்பரிய சிவப்பு டைல்களைப் பதித்திருக்கிறார்கள். உத்திரத்திலும் இதேமாதிரியான சிவப்பு டைலக்ளைப் பதித்திருக்கிறார்கள். இது லாரி பேக்கரின் ஃபில்லர் ஸ்லாப் பணியை (Filler slab) ஒத்தவை.

thiruvidhangur_3170987a.jpg
திருவிதாங்கூர் ஊஞ்சல்

இந்த வீடு 2005 –ல் கட்டிமுடிக்கப்பட்டது. இதன் உரிமையாளார் ரீனா வேணுகோபலின் மகன் திருமணம் இந்தப் புதிய வீட்டில் நடந்தது . திருமணத்திற்கு வந்தவர்கள் இந்த வீட்டை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்குக் கேட்டதால் ,மேலும் ரீனா வேணுகோபல் வெளி நாடுகளிலேயே அதிக நாட்கள் தங்குவதால் இதற்கு ஒப்புக்கொண்டார். பின் பல இயக்குனர்கள் கலைஞர்கள் இங்கு வந்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல் திருமணங்களும் நடைபெற்றிருக்கின்றன. இதுவரை 120-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களும் 100-க்கும் மேற்பட்ட படங்களும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊஞ்சல் ஒன்று உள்ளே இருக்கிறது. அதன் சிறப்பு என்னவென்றால் அது திருவாங்கூர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது. ரீனா வேனுகோபால் அந்த வம்சத்தை சேர்ந்தவர். இந்த ஊஞ்சலில்தான் சினிமா நாயகிகள் இப்போது ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.