Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சினிமா வீடு: ஐஸ்வர்யா ராய் ஆடிய அக்பரின் தர்பார்

 

 
ஆக்ரா கோட்டையின் நுழைவு வாயில்
ஆக்ரா கோட்டையின் நுழைவு வாயில்
 
 

இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்று ஆக்ரா கோட்டை. முகலாயர் காலத்து முக்கியக் கட்டிடங்களுள் ஒன்றான இதைப் பற்றி 10-ம் நூற்றாண்டு வாக்கில்தான் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோதி, தன் ஆட்சிக் காலத்தில், 15-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் கோட்டையை அரண்மனையாக மாற்றி அதில் வசிக்கத் தொடங்கினார். ஆனால், இன்று நாம் பார்க்கும் ஆக்ரா கோட்டை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டப்பட்டதல்ல; காலகாலமாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. அக்பர் காலத்தில்தான் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

3_3178662a.jpg

மொழிகளைக் கடந்து பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற இந்திப் படம் ‘ஜோதா அக்பர்’. ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த இந்தப் படம் அக்பரின் வாழ்க்கைத் துணையான ஜோதா அக்பரைக் குறித்தது. இந்தப் படத்தின் பல காட்சிகள் ஆக்ரா கோட்டையில் படமாக்கப்பட்டன. அரண்மனையின் கிழக்குத் திசையின் மத்தியில் அமைந்திருக்கும் ‘திவான் ஐ ஆம்’ (பொது மண்டபம்) என்ற இடத்தில்தான் ‘ஜோதா அக்ப’ரில் வரும் அரசவைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

1_3178665a.jpg

இதே இடத்தில்தான் 16 நூற்றாண்டுகளுக்கு முன்பு அக்பர் அமர்ந்திருந்து ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. ‘முழுமதி அவளது முகமாகும்...’ என்ற பாடல் காட்சியும் இந்த ஆக்ரா கோட்டை வளாகத்தில் படமாக்கப்பட்டதுதான். 70 அடி உயரம் கொண்ட அரண்மனையின் மதில் சுவர்கள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

அர்ஜுன் நடித்து 1996-ல் வெளிவந்த ‘செங்கோட்டை’ என்னும் படமும் இங்குதான் படமாக்கப்பட்டிருக்கிறது. அஜித்துக்குத் தொடக்க காலத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்த ‘ஆசை’ திடைப்படத்தின் சில காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டன. இவை அல்லாமல் ‘ஜீன்ஸ்’, ‘தாண்டவம்’ போன்ற சில தமிழ்ப் படத்தின் காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

2_3178664a.jpg

முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஹாஜஹான், ஒளரங்கசீப் என்று 6 தலைமுறைகளைக் கண்ட பெருமையும் இதற்கு உண்டு. யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோட்டையின் கட்டிடங்கள் பலவிதமான கட்டிடக் கலை பாணியைப் பின்பற்றிக் கட்டப்பட்டவை. உதாரணமாக ஜஹாங்கீர் மாளிகை பாரசீக பாணிக் கட்டிடக் கலையால் உருவாக்கப்பட்டது. மற்ற மாளிகைகள் முகலாய பாணியில் உருவாக்கப்பட்டன. பல அம்சங்களைக் கொண்ட இந்த அரண்மனையில் சுவர், மாடம் , கற்தரை போன்ற இடங்களில் ஆங்காங்கே நீரூற்றுகள் காணப்படுகின்றன. அதிநவீன முறையில் உருவாக்கப்பட்ட இந்த நீரூற்று வெயில் காலங்களில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

19366487_1020676724701536_80648945963114

 
 
ஜூன் 24: பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன் பிறந்ததினம் இன்று.

“மது அருந்தினால்தான் அப்பா பாட்டெழுதுவாரா?” - நிஜம் சொல்லும் கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் #KannadasanMemoirs

 
 

ரேவதி சண்முகம் திருமணத்தின் போது உடனிருக்கும் அப்பா கண்ணதாசன்

ன்னோட 24 வயசுலேயே அப்பா இறந்துட்டதால, அப்போ அவரோட புகழும் அருமையும் முழுசா தெரியலை. இப்போ அதெல்லாம் தெரிஞ்சு தினமும் பெருமைப்பட்டாலும் அப்பா உடன் இல்லை"...  நெகிழ்ச்சியாகப் பேசுகிறார், பிரபல சமையல் கலைஞர் ரேவதி சண்முகம். இவர், கவிஞர் கண்ணதாசனின் மகள். 

"நாளைக்கு அப்பாவோட 91-ம் ஆண்டு பிறந்த நாளை பலரும் கொண்டாடுவாங்க. எனக்கோ அவர் தினசரி துதி'' என்பவர் தன் அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார்.

"எல்லோரையும்போல எங்களுக்கும் பெற்றோர்தான் ரோல் மாடல். அப்பா எந்த அளவுக்கு பாசமானவரோ அதே அளவுக்குக் கோபக்காரரும்கூட. அவர் சினிமா துறையில இருந்தாலும், அவரோட பிள்ளைகளான நாங்க சினிமா துறையைப் பத்தி தெரிஞ்சுக்கவும், அவரின் சினிமா பணியை பார்க்கவும் விரும்பமாட்டார். எங்களை சினிமா படம் பார்க்கக்கூட அனுமதிக்காதவர். அவர் வெளியூர் போகும் சமயத்துலதான் அம்மா அனுமதியோடு படம் பார்ப்போம். 

இரவு 11 மணிக்குத் தொடங்கும் அப்பாவோட அந்த உலகம் பற்றி, பலருக்கும் தெரியாது. அது முழுக்கவே எங்களுக்கானது. இன்னைக்கு ஒரு குழந்தை வளர்க்கவே பெருசா சிரமப்படுற காலம். ஆனா முதல் மனைவியோட ஏழு பிள்ளைகள், என்னோட அம்மாவுக்கு ஏழு பிள்ளைகள்னு வீடு முழுக்கக் குழந்தைச் செல்வங்களா இருப்போம். எல்லோரும் ஒரே குடும்பமா ஒரு வீட்டில்தான் வாழ்ந்தோம். வேலைகள் முடிஞ்சு அப்பா வீட்டுக்கு வந்து சாப்பிட்ட பிறகு, அந்நேரம் தூங்கிட்டு இருக்கும் எங்களைச் சரியா 11 மணிக்கு எழுப்பிவிட்டு பேசத் தொடங்குவார். அப்போ படிப்பு, பிடிச்ச விஷயங்கள், ஆசைகள்னு எங்க ஒவ்வொருத்தரோட தேவைகளையும் விசாரிப்பார். அந்த நேரங்களை இப்போ நினைச்சுப் பார்த்தா, அதைவிடப் பொக்கிஷம் இந்த வாழ்க்கையில எதுவும் இல்லைன்னு தோணுது.

ரேவதி சண்முகம் திருமணத்தில் கண்ணதாசன் 

வாரத்துல தவறாம மூணு நாளாவது எங்களோடு இரவு நேரத்துல உரையாடுவார். அந்தத் தருணங்கள்ல அன்றைய நாளில் தன்னோட வேலைகள்ல முக்கியமானவை, எழுதின பாடல், பிரபலங்கள் பத்தியெல்லாம் சொல்லுவார். அப்படி ஒரு நிகழ்வுல, 'யார் யாருக்கோ பாட்டு எழுதுறீங்க. எங்களுக்கு பாட்டு எழுதமாட்டீங்களா?'னு எல்லோருடைய சார்பா தம்பி கேட்டான். 'என்னடா இப்படிக் கேட்டுட்டீங்க'னு சொன்னவர், ' 'ஏன் பிறந்தாய் மகனே' பாட்டு உனக்காகத்தான் எழுதினேன். 'ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா.. ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி...'  பாட்டை உங்களை மையமா வெச்சுதான் எழுதினேன். இப்படி உங்களுக்காக நிறைய பாட்டு எழுதியிருக்கேன் செல்லங்களா'னு சொன்னார். அப்போ அது எங்களுக்குப் புரியல. ஆனா இப்போ நினைச்சா முகமும் மனசும் புன்னகை பூக்குது. 

அப்பா தனக்குத் தெரிஞ்ச பலருக்கும் உதவி செய்தும், சாட்சி கையெழுத்துப் போட்டும் நிறைய சொத்துகளை இழந்திருக்கார். அதையெல்லாம் ஒவ்வொரு முறையும் எங்ககிட்டச் சொல்லி, 'அப்பா செஞ்ச கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம்தவறை நீங்க செய்திடக்கூடாது. அதைச் சொல்லுற தகுதி எனக்குதான் இருக்கு'னு சொல்லுவார். 'நல்லா படிக்கணும். ஆசைப்பட்ட படிப்புகளைப் படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்'னு சொல்லுவார். ஆனா, சரியா படிக்காட்டின்னா திட்டவோ அடிக்கவோ மாட்டார்.

'பெண் குழந்தைகள் அழவே கூடாது. கல்யாணம் ஆன பிறகு புகுந்த வீட்டுல என்ன பிரச்னைனாலும் முடிஞ்சவரைக்கும் அனுசரிச்சுப் போகணும். எக்காரணம் கொண்டும் கோவிச்சுக்கிட்டு பெத்தவங்க வீட்டுக்கு வரக்கூடாது'ன்னு எல்லா சகோதரிகளுக்கும் அறிவுரை சொல்லுவார். எனக்கு 15 வயசுல கல்யாணம் செய்துவெச்சார். அந்தச் சமயத்துல, 'பெண் பார்த்துட்டுப் போனவங்க, என் பிள்ளையைப் பிடிச்சிருக்குன்னு சொல்லணுமே'னு தவிச்ச அவரோட தகப்பன் மனசை, இப்பவும் அப்பப்போ நினைச்சு உருகுவேன். நான் கல்யாணமாகி என் கணவர் வீட்டுக்குப் போனப்போ, அம்மா என் பின்னாடி அழுதுகிட்டே வந்தாங்க. அம்மாவை அழக்கூடாதுன்னு சொன்னவர், அம்மாவுக்குப் பின்னாடி அழுதுட்டே வந்ததைப் பார்த்து நானும் கதறி அழுதுட்டேன். எனக்குக் குழந்தைப் பிறந்தப்போ, 'என் குழந்தைக்கு ஒரு குழந்தை'னு கண்கலங்கினார். சொல்லப்போனா, அவரும் ஒரு குழந்தைதான். 

அப்பா ஒருமுறை சிங்கப்பூர் போனப்போ, எல்லாக் குழந்தைகளுக்கும் என்ன வேணும்னு கேட்டுட்டுப்போனார். திரும்பி வந்ததும் வாங்கிவந்த பரிசுகளைக் கொடுத்தார். அப்போ எனக்குக் கொடுத்த புடவையும், என் குழந்தைக்கு வாங்கிட்டு வந்த துணிகளும் என் வாழ்நாளில் எப்பவும் மறக்க முடியாத பரிசு. 

மது அருந்திய நேரத்தில்தான் அப்பாவால் நல்ல பாடல்களை எழுத முடியும்னு பலரும் சொல்லுவாங்க. அது ரொம்பவே தவறு. அப்பா மது  அருந்தினாலும், அதை, வேலை நேரத்துல பெரும்பாலும் செய்யமாட்டார். எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு, மதியம் மற்றும் இரவு நேரத்துல சாப்பிட்ட பிறகுதான் மது அருந்துவார். அடுத்து உடனே தூங்கிடுவார். மது அருந்தாத நேரத்தில்தான் பெரும்பாலான நல்ல பாடல்களை எழுதியிருக்கார். இது நான் கண்கூடாப் பார்த்த விஷயம். அவர் தன்னோட உடல்நலத்துக்கு பெருசா முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். அதை நினைச்சுதான் நாங்க ரொம்பக் கலங்குவோம். 

கவிஞர் கண்ணதாசன்

அப்பாவைச் சந்திக்க பல தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. அப்படி ஒருமுறை காமராஜர் எங்க வீட்டுக்கு வந்த சமயத்துல, 'அப்பா, உடல்நலத்தைப் பத்தி கவலைப்படாம  இருக்கிறார் அய்யா. நீங்கதான் எடுத்துச் சொல்லணும்'னு நானும், சக உடன் பிறப்புகளும் சொல்லி அழுதோம். யார் சொல்லியும் பெருசா கண்டுக்காம இருந்தவர், ஒரு கட்டத்துக்கு பிறகு பாடல்கள் எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கிட்டு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் செலுத்த ஆரம்பித்தார்.  எதிர்பாராதவிதமா தன்னோட 54 வயசுல எங்களையும், ரசிகர்களையும் தவிக்கவிட்டுட்டு இறந்துட்டார். 

இப்போ சமையல் கலையில நான் புகழ்பெற்று இருந்தாலும், அப்பா இருக்கும்வரை சமையலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதனால அப்பாவுக்கு பிடிச்ச உணவுகளை நான் அவருக்கு சமைச்சுக் கொடுக்கவே இல்லை. மேலும், அப்பா சினிமாவுல வேலை செய்த தருணங்களை நேர்ல பார்க்காதது, அவர்கூட நான் மட்டும் நின்று ஒரு பிரத்யேக போட்டோ எடுத்துக்காததுனு இந்த மூணு விஷயங்களும் இப்போ வரைக்கும் எனக்கு மனசு ஆறாத ஆதங்கமா இருக்கும். 'இந்த ஆளுமையோட புள்ள இவங்க'னு எனக்கு அங்கீகாரமான ஒரு அடையாளத்தைக் கொடுத்த அப்பாவுக்கு, அவர் பூரிச்சுப்போற அளவுக்கு ஒரு மகளா அப்போ நான் எதுவும் செய்யலையே என்ற ஆற்றாமை நான் இருக்கும்வரை என்கூட இருக்கும்!"

கண்கள் நீர்த்திரையால் ஒளிர்கின்றன கவிஞரின் மகளுக்கு! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மாட்டுக்கு பதிலாக மனிதனே ஏர் உழும் பரிதாப நிலை

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், சாலம்பாத் கிராமத்தில் வசிக்கும் சீதாராம், தன்னிடம் இருக்கும் ஒரு எருமையை ஏரில் பூட்டி, மற்றொரு எருமைக்கு பதிலாக தன்னையே ஏரில் பூட்டிக் கொண்டு உழவு செய்கிறார். ஏர் ஓட்டுவது அவரது மனைவி முன்னி தேவி. அவர்களின் வாழ்க்கை பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

'ஸ்பெஷல் குஜராத்தி உணவு'... மோடியை அசரவைத்த போர்ச்சுகல் பிரதமர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மறுபடியும் ஒரு வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தில் முதல் நாடாக போர்ச்சுகல் சென்றுள்ளார் மோடி. அப்படி அங்கு சென்ற மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனியோ கோஸ்டா, 'ஸ்பெஷல் குஜராத்தி மதிய உணவுக்கு' ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார். 

1_20426.jpg

இந்த ஸ்பெஷல் மதிய உணவுக்கான மெனு கார்டை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்ளே அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். போர்ச்சுகல் பயணம் குறித்து மோடி, 'நான் போர்ச்சுகலில் மேற்கொண்ட இந்த ஒருநாள் பயணமானது இரு நாட்டுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்.' என்று தெரிவித்துள்ளார். போர்ச்சுகல் பயணத்தை அடுத்து பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நாளை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளார். இதற்கு முன்னர் ட்ரம்ப்பும் மோடியும் போனில் உரையாடியுள்ள போதும், நாளைதான் முதன்முறையாக இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாக சந்தித்து ஆலோனை நடத்த உள்ளனர்

 

2_20594.jpg

 

 
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்: ஜூன் 25- 1900

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் இருந்தவர். மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ்

மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்: ஜூன் 25- 1900
 
லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten,  ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர்.

பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் இருந்தவர். மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சிறுவனுக்கு அடித்த அதிஷ்டம்!

594a283caf500-IBCTAMIL.jpg

சீனாவின், சென்குடு பகுதியில் ரயிலில் பயணித்த ஒரு பெண் மற்றும் அவரது மகனின் படம் வைரலாகி வருகிறது, அந்த சிறுவன் தாய்க்கு தன் கையை தலையணையாக்கியது அனைவரையும் கவர்ந்துள்ளதுள்ளது. இந்த படத்தை பதிவேற்றிய வெய்போ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது அதை விட ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அதில், முதலில் அந்த சிறுவன் தன் தாயின் அருகில் அமர்ந்திருந்ததாகவும், பின்னர் அங்கு ஒரு பெண் கைக்குழந்தையுடன் வந்ததும், அவருக்கு அமர இடம் கொடுத்தது எழுந்து நின்றான்.

அப்படி அந்த சிறுவன், தன் தாயின் அருகில் நிற்கும் போது, தூங்கி வழிந்த தன் தாயின் கைப்பையை வாங்கி வைத்து கொண்டதோடு, தன் கையை, அவருக்கு தலையணையாக வைத்தார் என குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியை படித்த ஒருவர், அந்த சிறுவனையும், அவரின் பெற்றோரையும் யார் என தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றேன். அப்படி தெரிந்துகொண்டு, என் மகளுக்கு வருங்கால மணமகனாக இவனை தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது என தெரிவித்துள்ளார்.

தாய்பாசத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த ஒரு படம் போதும் என்பது போல, இந்த சீன சிறுவனின் படம் உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றது. இந்த படத்தில் 10,000 க்கும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சிறுவனின் செயல் அனைத்து இதயங்களையும் வென்று வருகிறது. சிலர் அவரை புகழ்ந்துரைக்கையில், உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகள் அவரைப் பற்றி கற்றுக்கொள்வார்கள் என்று கூறிவருகின்றனர்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழக மாணவனின் ‘கலாம்சாட்’ செயற்கைக்கோள்.. விண்ணில் பறந்த திக் திக் தருணங்கள்!

 

கலாம்சாட்

"இது ஒன்றும் பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்லை!" மிகவும் சாதாரண விஷயங்களைச் சுட்டிக் காட்ட கிண்டலுக்காகப் பலர் இதைக் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் கரூரில் உள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது ரிஃபாத் ஷாரூக் நிஜமாகவே ராக்கெட் சயின்ஸில் உலக அளவில் அசத்தியிருக்கிறார்! வருடந்தோறும் நாசா நடத்தும் "Cubes in Space" என்ற போட்டியில் இந்த வருடம் "ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா" என்ற அமைப்பின் உதவியுடன் பங்குக்கொண்டு வெற்றிப்பெற்றிருக்கிறார்.

ஜூன் 17 முதல் 23 வரை NASAவில் கொண்டாடப்படும் 'ராக்கெட் வீக்'கின் ஓர் அங்கமாக நடந்த இப்போட்டியில், ஜூன் 22 அன்று, உலகமெங்கும் இருக்கும் பள்ளிமாணவர்கள் தயாரித்த 80 சிறிய க்யூப்களை ஏற்றி பறந்தது 36 அடி ‘நாசா டெரியர்-இம்ப்ரூவ்ட் ஓரியன் சப்பார்பிட்டல் சௌண்டிங் ராக்கெட்’ (NASA Terrier-Improved Orion suborbital sounding rocket). இப்போட்டிக்காக ‘கலாம்சாட்’ என்ற க்யூப் வடிவ செயற்கைக்கோள் ஒன்றை கார்பன் இழைகளால் 3D பிரின்டிங் தொழில்நுட்பம் கொண்டு தயாரித்திருந்தார் ரிஃபாத். வெறும் 3.8 செ.மீ. நீளமும், 64 கிராம் எடையும் கொண்ட இந்த செயற்கைக்கோளை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் "உலகின் மிகவும் எடைக்குறைவான மற்றும் சிறிய செயற்கைக்கோள்" என்று சான்றளித்து பாராட்டியிருக்கிறது.

‘கலாம்சாட்' விண்ணில் ஏவப்படும் நிகழ்வை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அலுவலகத்திலிருந்தே கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியத் திரையில், பலரின் முன்னிலையில் அந்த அற்புதமான சாதனைத் தருணத்திற்கு ஒட்டுமொத்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அணியும் காத்திருந்தனர். நேரடி வர்ணனையுடன், கீழே நொடிகள் ஒவ்வொன்றாகக் கரைய ஆரம்பிக்க, அனைவருக்கும் தொற்றிக்கொண்டது பரபரப்பு! சரியாகக் குறித்த நேரத்தில் பலத்த ஆரவாரங்களுக்கு இடையே வெற்றிகரமாக விண்ணில் பறந்தது கலாம்சாட். நம்மிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்ட ரிஃபாத், இந்த மிஷன் குறித்து விளக்கத்தொடங்கினார்.

"எங்கள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அணி பல்வேறு திறமைசாலிகளை உள்ளடக்கியது. மிஷன் டைரக்டராக டாக்டர். ஸ்ரீமதி கேசன், கட்டமைப்பு பொறியாளராக திரு. வினய் பரத்வாஜ், தலைமை தொழிநுட்பவியலாளராக திரு. யக்ஞா சாய், விமான பொறியாளராக திரு, தனிஷ்க் திவிவேதி, உயிரியல் அறிஞராக திரு. கோபிநாத், சோதனைப் பொறியாளராக திரு. முகமத் காசிப் மற்றும் தலைமை விஞ்ஞானியாக நானும் இணைந்து பணியாற்றியுள்ளோம். 73 மையில்கள் உயரம் தொடப்போகும் கலாம்சாட், விண்வெளியில் சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் தங்கி தகவல்களைச் சேகரிக்கும். இதன் மூலம் 3D பிரின்டட் கார்பன் இழைகள் விண்வெளியில் எத்தனை நேரம் பயணிக்கமுடியும், அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை நாம் அறிய முடியும். மேலும், பூமியின் கதிர்வீச்சு, முடுக்கம், சுழற்சி மற்றும் காந்தப்புலன் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும். கூடுதலாக விண்வெளியில் விவசாயம் சாத்தியமா என்ற கேள்விக்கு விடைக்காணும் நோக்கிலும் இதை வடிவமைத்துள்ளோம். தன் வேலை முடிவடைந்தவுடன் சேகரித்த தகவல்களுடன் தரையிறங்கும் கலாம்சாட்டைக் கொண்டு நாங்கள் எங்கள் ஆராய்ச்சியைத் தொடர உள்ளோம்."

கலாம் சாட்

இந்த மிஷனின் டைரக்டர் ஸ்ரீமதி கேசன் பேசுகையில், "விஞ்ஞானி ஆக வயது என்றுமே தடையில்லை என்று அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறார்கள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அணி. இந்தப் பொன்னான வாய்ப்பளித்த நாசா, "Cubes in Space" போட்டிக்கு உறுதுணையாக இருந்த idoodlelearning inc. மற்றும் Colorado Space Grant Consortium ஆகிய நிறுவனங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

 

இறுதியாக, "அமெரிக்காவில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் போல, நமது நாட்டிலும் விண்வெளி உற்பத்திகள் மற்றும் விண்வெளி போக்குவரத்து சேவைகள் செய்யும் நிறுவனங்கள் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் இந்தியாவை கூடிய விரைவில் அனைவரும் வியந்துப்பார்க்கும் ‘ஸ்பேஸ் ஹப்பாக’ மாற்றுவதே எங்கள் எண்ணம்" என்று பெரிய கனவுடன் முடித்தார், மறைந்த உயர்திரு. அப்துல்கலாமின் பெயரில் சாட்டிலைட் தயாரித்த ரிஃபாத். அவரின் கனவுகள் நனவாக வாழ்த்துவோமே.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

போலீசுடன் ஜாலி விளையாட்டு!
8a.jpg
அயர்லாந்தில் ஹென்றி தெருவில் நடந்தது அந்த விநோத கால்பந்து போட்டி. கார்டா ஓ கனல் என்ற போலீஸ்காரரும், லிமெரிக் சர்ச்சின் எனும் கன்னியாஸ்திரீயும் ‘கீப்பி அப்பி’ என்ற பெயரில் விளையாடிய ஸ்ட்ரீட் கால்பந்து மேட்ச் வீடியோ மாஸ் ஹிட். அசத்தலான மேட்ச்சில் பந்து பவுன்ஸாகி அடுத்த தெருவுக்கு எகிறியதால் ஜெயித்தது யார் என்று தெரியவில்லையாம்!

டாய்லெட் பேப்பரில் ட்ரம்ப்!

உலகில் பலருக்கும் கிண்டலுக்கு சுண்டல் என்றால் அது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். மெக்சிகோவின் பிசினஸ் மனிதரான அன்டானியோ பட்டாகிலியா வேறு ரகம். அதிரடியாக ட்ரம்ப்பை நக்கலடித்து டாய்லெட் பேப்பரே தயாரித்துவிட்டார். ‘அகதிகள் பயன்படுத்தலாம். இதன் மென்மைக்கு எல்லையே கிடையாது...’ எனும் அதன் கவர் வாசகங்களிலேயே திகுதிகு பாலிடிக்ஸ் அதிகம்!

அழகின் பெயர் லில்லி!

ரஷ்யாவின் டாட்டர் ஸ்டன் பகுதியைச் சேர்ந்த ‘லில்லி விடோக்கின் லில்லி லோ’ எனும் வீடியோ மேக்கப் டுட்டோரியலுக்கு 13 மில்லியன் பார்வையாளர்கள். தன் 7 வயதில் மெக்யூன் ஆல்ப்ரைட் எனும் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட லில்லியின் முகம் சிதைந்தாலும், பிறருக்கு நம்பிக்கை தரும் வீடியோக்களை உருவாக்கி ஏராள விருதுகளை அள்ளி வருகிறார்.

kungumam

  • தொடங்கியவர்

உலகின் மிக `அசிங்கமான` நாய் தேர்வு

 

`மார்த்தா` என்ற மாஸ்டினோ வகை நாய், இந்த ஆண்டின் "அசிங்கமான" நாயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

`மார்த்தா` என்ற மாஸ்டினோ வகை நாய், இந்த ஆண்டின்

29-ஆவது ஆண்டாக இந்த வருடத்தின் போட்டி கலிஃபோர்னியாவின், பெட்டலுமாவில் நடைபெற்றது.

தனது உரிமையாளர் ஷர்லி சிண்ட்லருடன் பங்குபெற்ற மார்த்தா, 13 போட்டியாளர்களை தோற்கடித்து வெற்றிபெற்றது.

மார்த்தாவிற்கு பரிசாக கோப்பையும், 1500 அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டது.

பார்வையாளர்களை கவர்ந்த, கீழ் தாடையில் அதிக சதைக் கொண்ட மாஸ்டினோ இனத்தைச் சேர்ந்த இந்த நாய், ஊடகங்களில் காட்சியளிப்பதற்காக நியூயார்க்கிற்கு செல்லவுள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழ் தாடையில் அதிக சதைக் கொண்ட மாஸ்டினோ இனத்தைச் சேர்ந்த மார்த்தா அனைவரையும் கவர்ந்தது கீழ் தாடையில் அதிக சதைக் கொண்ட மாஸ்டினோ இனத்தைச் சேர்ந்த மார்த்தா அனைவரையும் கவர்ந்தது

இந்த கண்காட்சியில் பங்குபெற்ற நாய்கள், இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் இடங்களிலிருந்தும், நாய்கள் அடைத்து வைக்கப்படும் இடங்களிலிருந்தும் மீட்கப்பட்ட நாய்கள் ஆகும்.

மார்த்தாவும் அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட நாய் என்றும், அது பார்வையை இழந்திருக்கக்கூடும் என்றும் அதன் உரிமையாளர் சிண்ட்லர் தெரிவித்தார்.

பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு மார்த்தாவால் தற்போது பார்க்க முடிகிறது என்றும், வலியில்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நோக்கம் எதுவுமின்றி, தற்செயலாக மேடையில் திடீரென பரப்பிக் கொண்டு உட்கார்ந்த மார்த்தா நடுவர்களை கவர்ந்துவிட்டது என அசோசியேடட் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

வெற்றிபெற்ற மார்த்தா வெற்றிபெற்ற `மார்த்தா`

தங்களின் முதல் அனுபவத்தை கருத்தில் கொண்டு வழக்கத்திற்கு மாறான பண்புகள், ஆளுமை, பார்வையாளர்களின் வரவேற்பு, ஆகியவற்றைக் கொண்டு நடுவர்கள் தீர்ப்பளித்ததாக அசோசியேடட் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

"இந்த போட்டி நாய்களை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக என்றும், அன்பான துணையாக இருப்பதால் அவற்றின் உடல்நிலை ஒரு விஷயமல்ல" என்றும் இந்த போட்டிக்கான வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டியில் இரண்டாவதாக வந்த நாய் போட்டியில் இரண்டாவதாக வந்த நாய் உலகின் மிக `அசிங்கமான` நாய் தேர்வு ராஸ்கல் என்ற இந்த நாயும் போட்டியில் பங்கேற்றது ’ராஸ்கல்’ என்ற இந்த நாயும் போட்டியில் பங்கேற்றது உலகின் மிக `அசிங்கமான` நாய் தேர்வு

மேலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பை நாய்கள் ரசித்ததாகவே தெரிகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

'ரகுவரன் இஸ் பேக்'... விஐபி-2 ட்ரெய்லர்

வேல் ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சரண்யா நடிப்பில், கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரின் சினிமா வாழ்க்கையில், இது முக்கியமானப் படமாக இருந்தது.

Vip 2


முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியால், இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் படத்தை இயக்கியுள்ளார். அமலாபால்,  சமுத்திரகனி, விவேக் என முதல்பாகத்தில் நடித்தவர்களே இந்தப் படத்திலும் மெயின் ரோல்களில் நடித்திருக்கிறார்கள். நெகட்டிவ் ரோலில் பாலிவுட் நடிகை காஜோல் நடித்திருக்கிறார். அனிருத்துக்குப் பதில், இப்படத்தின் இசையை ஷான் ரோல்டன் கவனிக்கிறார்.

இந்நிலையில், விஐபி-2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்து வருகிறது. அதில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். அதேபோல தெலுங்கு வெர்ஷனின் ட்ரெய்லரையும் வெளியிட்டுள்ளனர்.

 

 

....

  • தொடங்கியவர்

 

தாய்லாந்தின் ஆணுறை அரசன்

  • தொடங்கியவர்

1.6 கோடி பார்வையாளர்கள்... 473 ஸ்டேஷன்கள்... லிம்கா சாதனை புரிந்த சயின்ஸ் எக்ஸ்பிரஸ்..!

 
 
 

ரயில்

தற்போது, பருவநிலையே தடாலடியாக மாறி கிடக்கிறது. வெயில் காலத்தில் மழையும், மழை பெய்ய வேண்டிய நேரத்தில் காற்றும் அடித்து பருவ சுழற்சி மாறி, பூமி பாடாதியாகி கொண்டிருக்கிறது. இதனால், பூமி நாளுக்கு நாள் வெப்பமாகி கொண்டே போகிறது. உலகமே விழித்துக் கொண்டு இயற்கையை காக்க, இயற்கைக்கு திரும்ப நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டிய நாளும் நெருங்கிவிட்டது. இல்லை என்றால், 'இங்கு மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் இல்லை' என்று பூமியில் ஆங்காங்கே அபாய எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த விசயங்களை எல்லாம் நாடு முழுக்க உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புஉணர்வு செய்ய நடமாடும் விழிப்புஉணர்வு கண்காட்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை செயல்படுத்தி வருகிறது. அதுவும் எதில் தெரியுமா...?. நம் எல்லோருக்கும் பிடித்த ரயிலில்தான். 'சயின்ஸ் எக்ஸ்பிரஸ்' என்று பெயர் கொண்ட அந்த ரயில் பதினாறு பெட்டிகளை கொண்டது. நவீன கண்காட்சியுடன் கூடி சயின்ஸ் எக்ஸ்பிரஸ் அது.

 2007 ம் ஆண்டு அக்டோபரில் துவக்கப்பட்ட இந்த ரயில்,சுமார் 1,46000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருக்கிறது. 473 ஸ்டேஷன்களில்,1650 நாள்கள் நிறுத்தப்பட்டு, இந்த கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரை இந்த நடமாடும் ரயில் கண்காட்சியை 1.6 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

ரயில்  ரயில்

ரயில்  ரயில்

 இந்த நடமாடும் அறிவியல் கண்காட்சி ரயிலால், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், மக்களுக்கும் அறிவியல் சார்ந்த அறிவும், இயற்கை தொடர்பான விழிப்புஉணர்வும் ஏற்பட்டிருக்கிறது. அதோடு உலகிலேயே மிகப்பெரிய, நீண்டகால மற்றும் அதிகமானோர் பார்வையிட்ட நடமாடும் அறிவியல் கண்காட்சி ரயில் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது இந்த 'சயின்ஸ் எக்ஸ்பிரஸ்'. லிம்கா புத்தகத்தில் பன்னிரெண்டு பிரிவுகளில் சாதனைகளாக பதியப்பட்டுள்ளது. 

கரூர் ஸ்டேஷனுக்கு இந்த சயின்ஸ் எக்ஸ்பிரஸ் சில நாள்களுக்கு முன்பு வந்தது. இந்த ரயிலை வரவேற்று, கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் திறந்து வைத்தார். நான்கு நாள்களிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.

சுருதி

இந்த ரயிலை பார்வையிட்ட ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவியான சுருதி (நடுவில் இருப்பவர்) நம்மிடம்,

“உண்மையில் இந்த கண்காட்சி ரயிலைப் பார்த்து அதிசயித்து போனோம். நமக்காக எல்லாம் செய்யும் இயற்கையின் நலன் பற்றி ஒரு நொடிகூட நாம் சிந்திப்பதில்லைங்கிற உண்மை தோணுச்சு. அதோடு, அறிவியலாகவும் நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. 'இனி இயற்கையை மனிதர்களாக பாவித்து காப்பேன்'ன்னு மனசுக்குள்ள உறுதி எடுத்துகிட்டேன். பதினாறு பெட்டிகளையும் சுத்தி பார்த்து முடிச்சதும், ரயிலை விட்டு இறங்கவே மனசு வரலை" என்றார் துள்ளலாக!.

 மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்த ஆசிரியர் குர்மீத்சிங்கிடம் பேசினோம்.

"மாணவர்களுக்கு இந்த ரயில் கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இந்த ரயிலில் பல்வேறு விதமான கண்காட்சிகள் உள்ளன. அவற்றில் முக்கியமாக பருவமாற்றத்தால் மனிதனுக்கு ஏற்படும் விளைவுகள், வெப்பநிலை உயர காரணங்கள், பருவநிலை வேறுபாடுகள், குடிநீர் வளம், வனம், விவசாயம், சுகாதாரம்,சுற்றுச்சுழல் பிரச்னை, உணவு உற்பத்தி, பருவநிலை மாற்றம், பேரிடர், வெள்ளப்பெருக்கு, கடல்மட்டம் உயர்தல் ஆகிவைகளால் பருவநிலை மாற்றம் உலகளாவிய அளலில் எப்படி கெட்டிருக்கிறது, அதனால் என்னன்ன பாதிப்புகள், நாம் அதை சரி செய்ய உடனடியாக என்னன்ன செய்ய வேண்டும்ன்னு இந்த ‘சயின்ஸ் எக்ஸ்பிரஸ்’ கண்காட்சி அழகாக மாணவர்களுக்கு புரிய வச்சுருக்கு. இந்த நடமாடும் ரயில் கண்காட்சியால் நல்ல மாற்றம் கிடைக்கும். இதை சாதனைக்காக மட்டும் பண்ணாமல், விடாமல் எல்லா பகுதிகளிலும் இயக்கி, 'இயற்கை மீதான விழிப்புஉணர்வு அடைந்த நாடு இந்தியா'ங்கிற நிலையை ஏற்படுத்தனும் மத்திய அரசு" என்றார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மூளையில் காயம்பட்டும் தூரிகை ஏந்தும் அதிசய மனிதர்கள்

  • மூளையில் காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் இந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் தங்களுடைய அசாதாரண கலைப்படைப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.படத்தின் காப்புரிமைLEON FOGGITT / BILLY MANN

மூளையில் காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் கடந்த மே மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தங்களுடைய அசாதாரண கலைப்படைப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

தீவிர மூளை காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்களின் குணநலன்கள், உறவுகள் மற்றும் சுதந்திரம் போன்றவற்றை பாதிக்கும் நீண்டகால பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

''மூளையில் காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் பெரும்பாலும் ஆழமான இழப்பை அனுபவிப்பார்கள். இதனோடு, அடையாளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்வார்கள். சிலருக்கு தங்களுடைய உணர்வுகளையும், யோசனைகளையும் வெளிப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.'' என்கிறார் ஹெட்வே ஈஸ்ட் லண்டன் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பென் கிரஹாம்.

'' ஓவியம் தீட்டுதல் மற்றும் வரைதல் ஆகியவை, உள்ளார்ந்த நம்பத்தகுந்த நடவடிக்கைகள். ஏனென்றால் அவை இதற்குமுன் இல்லாத விஷயங்களை தங்களுடைய உலகிற்குள் கொண்டுவருகின்றனர். ஒரு நபரால் புதிய விஷயம் ஒன்றை செய்ய முடியும் என்றால், இது தங்கள் மீது இழந்த கட்டுப்பாட்டை, நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.'' என்கிறார் பென்.

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான தொண்டு நிறுவனம்தான் ஹெட்வே ஈஸ்ட் லண்டன், அது ஹாக்னியில் உள்ள லண்டன் பரோவில் 'சப்மிட் ஆஃப் லவ்' என்ற கண்காட்சியை நடத்தியது. அதில், மூளையில் காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் வரைந்த ஓவியங்கள் ஓர் அங்கமாக காட்சிக்கு வைக்கப்பட்டன.

இரு ஓவியர்கள் அவர்களுடைய கதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

சாம் ஜுவோன் : வயது 49

இரு குழந்தைகளை தனியோருவராக கவனிக்கும் தாய் சாம் ஜுவோன். 2006ல் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் முக முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டார். விபத்து நடைபெறுவதற்குமுன், அவர் ஓர் ஓவியர் அல்ல, ஆனால் தற்போது அவருடைய படைப்புகள் பல கண்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

சாம் ஜீவோன் : வயது 49படத்தின் காப்புரிமைLEON FOGGITT / BILLY MANN Image captionசாம் ஜுவோன்

''மூளையில் காயம் ஏற்பட்டவுடன் தான் நான் ஓவியர் என்பதையே உணர்ந்தேன். தற்போது, நான்கு வருடங்களாக ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறேன். மிக நீண்ட தூரத்தை கடந்து வந்துள்ளேன். நான் சாதித்துள்ள விஷயத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

''ஓவியம் என்பது நம்மை வெறும் ஆசுவாசப்படுத்தும் ஒன்றுமட்டுமல்ல. அது எனக்கு நிறைய பொறுமை மற்றும் தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்துள்ளது. எனக்கு என்ன நடந்தது, என்னுடைய கதையை பிறருக்கு சொல்வதற்கு ஓவியம்தான் சிறந்த கருவியாக இருந்தது.''

''நான் என்னை ஓர் மாற்றுத்திறனாளி என்று ஒருநாளும் சொல்லிக்கொள்ள மாட்டேன். நான் நடக்கும் பாணியை பொருத்து அல்லது நான் தோன்றும் விதத்தை பொருத்து என்னை நான் வர்ணித்து கொள்வேன். நான் சற்று கால் தாங்கித்தான் நடப்பேன். என்னுடைய குரல் வேறுமாதிரி உள்ளது. என்னுடைய கண்களில் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் உள்ளது. ஆனால், இவை அனைத்தும் என்னிடம் உள்ள வெறும் மாற்றங்களே.

''முன்பை காட்டிலும் நிறைய விஷயங்களை சுயமாக செய்து கொள்ள ஆரம்பித்துள்ளேன். ஓவ்வொரு ஆண்டும் பெரியளவில் முன்னேறி வருகிறேன்.''

செஸில் வால்ட்ரன், 78

லண்டனில் வாழ்கிறார் செஸில். 2000ல் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் செஸிலின் இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது. மேலும், பார்வை சமநிலை பிரச்சனை மற்றும் நினைவக சிக்கல்களாலும் செஸில் வால்ட்ரன் பாதிக்கப்பட்டார்.

செஸில் வால்ட்ரன்படத்தின் காப்புரிமைLEON FOGGITT / BILLY MANN Image captionசெஸில் வால்ட்ரன்

''17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் விபத்துக்குள்ளானேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், அதை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. அது உடம்பில் ஏற்பட்டதா அல்லது மூளையில் ஏற்பட்டதா என்பதை நான் எண்ணிப்பார்க்க விரும்பவில்லை. அது எனக்குத் தெரியாது.

'' கலை மற்றும் என்னுடைய ஆசிரியரால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அது என்னிடமிருந்தது என்பதை நான் நினைத்து பார்க்கவில்லை.

''இதுபோன்ற தொண்ப்டு பணிகளில் ஈடுபட எனக்கு ஊக்கம் இருந்தது என்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்காக ஒவ்வொரு வாரமும் ஸ்டூடியோவிற்கு சென்று பிற மனிதர்களை சந்திக்கின்றேன்.

''முன்பு இருந்த செஸில் இப்போது நிறைய மாறியிருக்கிறார். ஒரு கதவு அடைக்கப்பட்டால் மற்றொன்று திறப்பதை போன்று இதைப் பார்க்கிறேன்.'' என்கிறார் செஸில்.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏன் நமக்குத் தூக்கம் தேவைப் படுகின்றது?

  • தொடங்கியவர்
இது எங்ஙனம் நடைபெறுகின்றது?
 

image_43d6fa07a7.jpgசூது, விபசாரம் எல்லாமே, தற்போது பலநாடுகளில் சட்டப்படியாகச் செய்யலாம் என்கின்ற மோசமான நிலை உருவாகிவிட்டது. 

முன்னர், காசுக்காகச் சீட்டாடியவர்களைக் கண்டால் பொலிஸார் உடனே கைது செய்து விடுவார்கள். ஆனால் இன்று, உலகம் பூராவும் விடுதிகளில் சீட்டாட்டம் பணம் வைத்து சூதாட்டமாக ஆடப்படுகிறது. நிலைமை இப்படியிருந்தால் சட்டம் என்றால் என்ன? 

‘ரம்மி’ என்ற சீட்டாட்டம் தொலைக்காட்சியில் காசுக்காக ஆடும் முறைமைக்கு விளம்பரம் செய்யப்படுகின்றது. மேலும், விபசாரிகள் தங்களுடன் தொடர்பு கொள்ளத் தொலைபேசி எண்ணை இணையத்தில் சாதாரணமாக விளம்பரப்படுத்தி விடுகின்றனர். இது எங்ஙனம் நடைபெறுகின்றது? 

இதை நோக்கும்போது, கொள்ளை, திருட்டு, நிதிமோசடிகளை, ஏன் கொலையைக்கூட எப்படிச் செய்வது என்று வகுப்புகளை வைத்தே கற்றுக்கொடுத்து விடுவார்கள் போல் இருக்கின்றது. மக்கள் விழிப்படைய வேண்டும்.  

  • தொடங்கியவர்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation

 
 

ராபர்ட் வில்லியம் பிளேர் (அ) பாப் பிளேர். 23 ஜூன் - இவருக்கு 85ஆவது பிறந்த நாள். இவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர். வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒரு வித்தியாசமான சாதனைக்குச் சொந்தக்காரர். அதாவது, டெஸ்ட் மேட்ச்களில் அரைசதம் அடித்தவர்களிலேயே மிகக் குறைவான பேட்டிங் ஆவரேஜ் இவருடையதுதான். 33 முறை பேட்டிங் செய்த பிளேர், இரண்டே இரண்டு முறைதான் இரட்டை இலக்கங்களையே தொட்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் அந்த அரை சதம். ஆனால், நம்முடைய கட்டுரையோ, அவரது புகழ்பெற்ற ஒரு ஒற்றை இலக்க இன்னிங்ஸைப் பற்றித்தான். 

கிரிக்கெட்

1953, டிசம்பர் 24. எல்லிஸ் பார்க், ஜொஹன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அதுவரையில் மொத்தம் 27 டெஸ்ட் மேட்ச் போட்டிகள் ஆடி இருந்தது. ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதுவும் முதல் டெஸ்ட் முடிந்தவுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் டிரான்ஸ்வால் அணியைத் தோற்கடித்த உடன் அவர்களது தன்னம்பிக்கை உச்சத்தைத் தொட்டிருந்தது. அதே உத்வேகத்துடன் அவர்கள் இரண்டாவது டெஸ்ட் மேட்ச் போட்டியை எதிர்கொண்டனர். அப்போதெல்லாம் டெஸ்ட் மேட்ச் போட்டிகளில் ஓவருக்கு எட்டு பந்துகள் வீசுவார்கள். இந்த டெஸ்ட் மேட்ச் போட்டி நான்கு நாள்களுக்கானது. 

கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளில், இரண்டாவது டெஸ்ட் மேட்ச் துவங்கியது.. துவக்க பந்துவீச்சாளரான பாப் பிளேர், முதல் விக்கெட்டை வீழ்த்தி சரிவைத் துவக்கி வைத்தார். முதல் நாள் முடிவில் பலம் பொருந்திய தென்னாப்பிரிக்க அணியை 259 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்று கட்டுப்படுத்தினார்கள், நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்கள். அடுத்த நாள் கிறிஸ்துமஸ் என்பதால், அன்று ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வீரர்கள் அனைவரும் அவரவர் அறையில் ஓய்வெடுத்து, மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர். மறுநாள் காலை (பாக்சிங் டே) அன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கும்போதுதான் அந்தச் செய்தி வந்து சேர்ந்தது.

டான்ஜிவாய் பயங்கரம்:

நியூசிலாந்து

நியூசிலாந்தில் இருக்கும் டான்ஜிவாய் என்ற இடத்தில் இருக்கும் வாங்கஹேகு ஆற்றின் மீதிருந்த பாலம் சிதைவுற்றதால், ஒரு ரயில் கவிழ்ந்து, ஆறு பெட்டிகள் ஆற்றில் முழுகி, 151 பேர் இறந்தார்கள். அப்போதைக்கு, நியூசிலாந்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய துன்பியல் நிகழ்வு அதுதான். அறிமுகமாகி ஒரு ஆண்டு மட்டுமே ஆன 21 வயதான பிளேர், தன்னுடைய முதல் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். இந்தத் தகவல் வந்தடைந்ததும் மனமுடைந்து விட்டார். பிளேர்,  இதற்கு மேல் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று நியூசிலாந்தின் கிரிக்கெட் மேனேஜர் அறிவித்துவிட்டார்.  காரணம்?

டான்ஜிவாய் விபத்தில் இறந்த 151 பேரில் பிளேரின் மனைவியாக வேண்டியவரான நெரிஸ்ஸா லவ்-வும் இருந்தார். இருவரும் காதலித்து, தங்களது திருமணத்தைப் பற்றிய கனவு கோட்டைகளைக் கட்டி வந்த நேரமது. தான் கரம்பிடிக்க இருந்த ஆருயிர்க் காதலி மரணமடைந்த செய்தி கேட்டு, அவர் பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார். ஒட்டுமொத்த அணியுமே பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தது.

கனத்த இதயத்துடனும், பயத்துடனும் மற்ற வீரர்கள் அனைவரும் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர மைதானத்திற்குச் செல்ல, பிளேர் மட்டும் ஹோட்டல் அறையிலேயே தங்கிவிட்டார். மைதானத்திலும் - அந்த பெரிய விபத்தின்காரணம் - துக்கம் செலுத்தும்விதமாக இரு நாட்டுக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.

நீ(ய்)ல் அட்காக்கின் அட்டகாசம்:

ஆலன் டொனால்ட் வருவதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று பெயர் எடுத்திருந்த நீ(ய்)ல் அட்காக் அந்தப் போட்டியின் திசையையே மாற்றிவிட்டார். 24 ரன்களிலேயே முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அவரது அனல் பறக்கும் பந்துகளால் நியூசிலாந்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆன சட்க்ளிஃப் மற்றும் லாரி வில்லியம்ஸ் ஆகிய இருவரையும் காயமடைய வைத்து சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் அட்காக். சொல்லப்போனால், 24 ரன்களுக்கு 5 பேட்ஸ்மேன் அவுட் என்ற நிலைமையில் தடுமாறிக்கொண்டு இருந்தது நியூசிலாந்து. வேகப்பந்து வீச்சாளர் அயர்ன்ஸைடும் விக்கெட்டுகளைக் குவிக்க, ஒரு கட்டத்தில் 81 ரன்களுக்கு 6 விக்கெட் என்று தள்ளாடிக்கொண்டு இருந்தது, நியூசிலாந்து. இரண்டு பேட்ஸ்மேன்கள் மருத்துவமனையில், ஒருவர் மேட்ச்சில் தொடர்ந்து பங்கேற்காமல் வீட்டிற்குத் திரும்பும் சூழலில் இருக்க, வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் துவக்கிய நியூசிலாந்து கொஞ்சம் கொஞ்சமாக துவள ஆரம்பித்தது.

அட்காக் வீசிய பௌன்சரால் தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தலையில் பெரிய கட்டுடன் மைதானத்திற்குத் திரும்பினார், சட்க்ளிஃப். நியூசிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், துணிச்சலுடன் (தலையில் கட்டுடன்) விளையாட வந்தது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. திரும்ப வந்து, மூன்றாவது பந்தையே சிக்ஸருக்கு அடித்து அதிரடியைத் துவக்கினார், சட்க்ளிஃப். 

ராபர்ட் ஃபாலோ-ஆன்:

சட்க்ளிஃப்பின் அதிரடியால், ஃபாலோ-ஆனைத் தவிர்த்தது நியூசிலாந்து. ஆனாலும் ஏகப்பட்ட ரன் வித்தியாசம் இருந்ததால், ஒவ்வொரு ரன்னுமே மிக அவசியம் என்ற சூழலில் சிக்ஸர் மழையாகப் பொழிந்தார், சட்க்ளிஃப். 154 ரன்னில் அணியின் ஒன்பதாவது விக்கெட் விழுந்தபோது, பிளேர் விளையாட வரமாட்டார் என்றெண்ணிய சட்க்ளிஃப், பெவிலியனுக்குத் திரும்ப வர ஆரம்பித்தார். ஆனால், திடீரென்று மைதானத்தில் ஒரு அமைதி. நிமிர்ந்து என்னவென்று பார்க்கிறார், சட்க்ளிஃப்.

மைதானத்தில் இருக்கும் 20, 000 பார்வையாளர்களும் எழுந்து நின்று, பெவிலியனில் இருந்து வரும் ஒருவருக்கு மரியாதை செலுத்துகின்றனர். ஆமாம், பாப் பிளேர் பேட்டிங் செய்ய வந்துக்கொண்டிருந்தார். அறையில் ரேடியோவைக் கேட்டுக்கொண்டிருந்த அவர், தனது அணியினர் மிக மோசமான நிலையில் இருப்பதைக் கேட்டு, மைதானத்திற்கு வந்திருக்கிறார்.

ஸ்கோர்

சட்க்ளிஃப்பை நெருங்கிய பிளேர் “என்னால் உதவ முடியுமென்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அவரது தோள்மீது தனது கரங்களை ஆதரவுடன் வைத்தவாறே பிட்ச்சை நோக்கி நடக்க ஆரம்பித்தார், சட்க்ளிஃப். பெவிலியனில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த நியூசிலாந்து வீரர்கள் அழுதுகொண்டிருக்க, மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைக் கடந்து ஒரு மனிதனுக்கும் அவனது உணர்ச்சிகளுக்கு இடையேயான போராட்டம் துவங்கியது. 

போராட்டம்:

பேட்டிங் செய்ய வந்து, முதல் பந்தை சந்திக்க தயாரானார், பிளேர். வேகப்பந்து வீச்சாளர் அயர்ன்சைட் பந்து வீச ஆயத்தமானார். அப்போது, தனது கையில் இருந்த பேட்டிங் கிளவுசைக் கழற்றி, தனது கண்களை  பிளேர்  துடைக்க,  தென்னாப்பிரிக்க வீரர்களே ஒருகணம் நிலைதடுமாறினார்கள். இதைப்பார்த்து இன்னமும் அதிக முனைப்போடு ஆட ஆரம்பித்தார், சட்க்ளிஃப். தென்னாப்பிரிக்காவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹ்யூ டேபீல்ட்டின் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்தார். 

தலையில் கட்டுடன் மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஒருவரும், வாழ்வின் மிகத்துயரமான வலியை சுமந்து வரும் இன்னொருவரும் இணைந்து 33 ரன்களைக் குவித்தனர். பிளேர் அந்த இன்னிங்க்ஸ்சில் ஒரே ஒரு ஸ்கோரிங் ஷாட்தான் அடித்தார். அது ஒரு சிக்ஸர். அதற்கடுத்த ஓவரிலேயே அவர் அவுட் ஆனார். 4 பவுண்டரிகள், 7 சிக்ஸருடன் 105 பந்துகளில் 80 ரன்களைக் குவித்த சட்க்ளிஃப், பெவிலியனுக்குத் திரும்பும் முன், நின்று பிளேருக்கு வழிவிட்டார். இருவரும் நியூசிலாந்து அணியின் தங்கும் அறையை நோக்கி, அந்த இருள் சூழந்த வழியில் நடக்க ஆரம்பித்தனர். அன்று அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையை நோக்கிய பயணமாகவே அமைந்தது. 

வழக்கமாக, கதைகளில் இதுபோன்ற சூழலில் நியூசிலாந்து அணி அந்த டெஸ்ட் மேட்ச்சை ஜெயித்திருக்கும். ஆனால், இது கதையல்ல. நிஜ வாழ்க்கை. இங்கே நிஜங்களும் நியாயங்களும் போராட வேண்டிய சூழலில்தான் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அந்த டெஸ்ட் மேட்சை ஜெயித்தார்கள். ஆனால், ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க மக்களின் மனதை ஜெயித்தது என்னவோ, பிளேரும், சட்க்ளிஃப்பும் மற்ற நியூசிலாந்து வீரர்களும்தான்.

அடுத்தடுத்து நடந்த போட்டிகளில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவந்தது நியூசிலாந்து அணி. இயற்கை செய்த நியாயமோ என்னமோ, தென்னாப்பிரிக்காவில் காயமுற்ற லாரி வில்லியம்ஸ்சின் திறமையான பேட்டிங் காரணமாக. 1955ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் வெற்றியை சுவைத்தனர்.

காதலி மரணம். ஆட்டத்தில் இல்லை என்று கிட்டத்தட்ட அறிவித்தாகிவிட்டது. ஆனால் 21 வயதான பிளேருக்கு, தன்னுடைய முதல் சுற்றுப் பயணத்திலேயே ஒரு மிகப்பெரிய பாடத்தை வாழ்க்கை கற்றுக் கொடுத்துவிட்டது அந்த நொடி, அந்த ஒரு நொடி மட்டுமே நிரந்தரம். வேறொன்றுமே வாழ்க்கையில் நிரந்தரமல்ல. ஆகவே, என்ன நடந்தாலும், உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கடமையைச் செய்யுங்கள். முடிவுகள் உங்கள் கைகளில் இல்லை. 

இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்ட பிளேர், அதற்கடுத்து பத்து ஆண்டுகள் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். தனது கடைசி டெஸ்ட் மேட்ச் போட்டியிலும்கூட 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், பல அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துவிட்டு, இப்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். பிளேரின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஒரு நாடகம், ஒரு புத்தகம் மற்றும் ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது. 

நியூசிலாந்து வரும்போதெல்லாம் பிளேர் தவறாமல் நெரிஸ்ஸாவின் நினைவிடத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 330 முதல் தர விக்கெட்டுகளை வீழ்த்திய பிளேரிடம் அந்த குறிப்பிட்ட நாளைப் பற்றிக் கேட்டபோது, அவர் சொன்ன பதில் மறக்க முடியாத ஒன்று.

”அந்த நாளை என்னால் மறக்கவே இயலாது. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் அன்றும் எனக்கு அந்தச் சம்பவம் மட்டும்தான் நினைவுக்கு வருகிறது. என் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துமஸ் என்ற உடனே நினைவுக்கு வரும் சம்பவம் அது ஒன்றுதான். ஆனால், அந்தச் சம்பவம் எனக்கான உத்வேகத்தைக் கொடுத்தது. எனக்குள் இருந்த நெருப்பை மற்றவர்களிடம் கடத்த அந்தச் சம்பவம் உதவியது. உண்மையைச் சொல்வதாயின், என்னை உருவாக்கியது அந்தத் துன்பியல் நிகழ்வுதான்”. 

கடமையைச் செய். கடமையை எந்தச் சூழலிலும் செய்.

டான்ஜிவாய் விபத்து பற்றிய யூ ட்யூப்:

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

1906 : முதலாவது : குறோன் ப்றீ மோட்டார் பந்தயம் நடைபெற்றது

வரலாற்றில் இன்று

ஜூன் – 26

 

363 : ரோமப் பேர­ரசன் ஜூலியன் கொல்­லப்­பட்டான்.


1483 : மூன்றாம் ரிச்சர்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­ராக முடி சூடினார்.


1541 : இன்கா பேர­ரசை முடி­வுக்குக் கொண்டு வந்த பிரான்­சிஸ்கோ பிசாரோ கொல்­லப்­பட்டார்.


1690 : தென்­மேற்கு இங்­கி­லாந்தின் நக­ரான டெயின்­மவுத் நகரை பிரான்ஸ் முற்­று­கை­யிட்­டது.


1906_French_Grand_Prix_Edmond1718 : தனது தந்தை மன்னர் முத­லா­வது பியோத்­தரை கொல்லச் சதி செய்­த ­தாக மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட ரஷ்­யாவின் இள­வ­ரசர் அலெக்ஸி பெட்­ரோவிச் மர்­ம­மான முறையில் இறந்தார்.


1723 : அசர்­பைஜான் தலை­நகர் பாக்கூ, ரஷ்­யா­விடம் வீழ்ந்­தது.


1906 : முத­லா­வது குறோன் ப்றீ மோட்டார் வாகனப் போட்­டி­யான, பிரெஞ்சு குறோன் ப்றீ போட்டி ஆரம்­ப­மா­கி­யது.


1924 : அமெ­ரிக்கப் படை டொமி­னிக்கன் குடி­ய­ரசை விட்டு வில­கி­யது.


1936 : முத­லா­வது ஹெலி­கொப்­ட­ராக கரு­தப்­படும் Focke-Wulf Fw 61 வான்  கலத்தின் முத­லா­வது பறப்பு  ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றது.


1941 : ஹங்­கேரி மீது சோவியத் விமா­னங்கள் குண்­டு­வீ­சின. மறுநாள் ஹங்­கேரி போர்ப் பிர­க­டனம் செய்­தது.


1960 : பிரித்­தா­னி­யா­விடம் சோமா­லி­லாந்து சுதந்­திரம் பெற்­றது.


1960 : பிரான்­ஸி­ட­மி­ருந்து மட­காஸ்கார் சுதந்­திரம் பெற்­றது.


1974 : அமெ­ரிக்­காவின் மார்ஷ் சுப்­பர்­மார்க்­கெட்டில் விற்­பனை செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு முதல் தட­வை­யாக 'பார்கோட்' அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 
1976 : உலகின் மிக உய­ர­மான கட்­ட­ட­மான கன­டாவின் சி.என் கோபுரம் பொது­மக்கள் பயன்­பாட்­டிற்­காக திறக்­கப்­பட்­டது.


2006 : கிழக்குத் திமோரின் முது­லா­வது பிர­தமர் மெரி அல்­கத்ரி, உள்­நாட்டு அர­சியல் பதற்­ற­நிலை கார­ண­மாக ராஜி­னாமா செய்தார்.


2013 : சீனாவின் சியான்­ஜியாங் பிராந்­தி­யத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 36 பேர் உயிரிழந்தனர்.


2013 : கட்டாரின் பிரதமராக அப்துல்லா பின் நஸீர் பின் கலீபா அல் தானி பதவியேற்றார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

இன்று 42-வது ஆண்டு: இந்திரா கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’ நாள்

 

இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்ட வரலாறு தனி இடம் பிடித்து இருப்பது போல் இன்றிலிருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை பிரகடனம் இன்றும் பேசப்படுகிறது.

 
 
இன்று 42-வது ஆண்டு: இந்திரா கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’ நாள்
 
சென்னை:

இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்ட வரலாறு தனி இடம் பிடித்து இருப்பது போல் இன்றிலிருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா அமல்படுத்திய நெருக்கடி நிலை பிரகடனம் இன்றும் பேசப்படுகிறது.

அது இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்ட இந்திராகாந்தியின் ஆட்சிக்காலம்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவி ஏற்றது முதல் காங்கிரஸ் கட்சி மட்டுமே அசுர பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது.

ஆனால் இந்திராவின் தலைமையில் 1971-களில் கட்சி ஒரு சரிவை சந்தித்தது. எதிர்க்கட்சிகள் வலுவாக தடம் பதித்ததால் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க தடுமாறியது.

இன்றைக்கு ஆர்.கே.நகர் தேர்தல் தில்லுமுல்லு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது போல் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் பெற்ற வெற்றியும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜ்நாராயண் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா இந்திராவின் வெற்றி செல்லாது என்று 1975 ஜூன் 12-ல் தீர்ப்பளித்தார்.

எம்.பி. பதவியில் இருந்து உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும். 6 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை தொடர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியை உருவாக்கினார்கள். நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடந்தது.

டெல்லி தெருக்களில் மக்கள் வெள்ளமாக திரண்டு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினார்கள். பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு ஆகியவை பூட்டப்பட்டன.

நெருக்கடிக்கு ஆளான இந்திரா நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்த முடிவெடுத்தார்.

ஏற்கனவே பாகிஸ்தானுடன் நடந்த போர் காரணமாக நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் இந்த தருணத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே நெருக்கடி நிலை அவசியம் என்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.
 
201706261334000775_indira-gandhi.-1._L_s

பிரதமர் இந்திராவின் கோரிக்கையை ஏற்று அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது நெருக்கடி நிலை பிரகடனத்தை 1975 ஜூன் 25 இரவில் பிறப்பித்தார்.

இந்த சட்டத்தின் மூலம் பாராளுமன்ற தேர்தல், மாநில அரசுகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது.

இந்தியாவின் கருப்புச் சட்டம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த நெருக்கடி நிலையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் பெரிய அளவில் வெடித்தன.

அனைத்து துறைகளும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அடக்கி ஆளப்பட்டன.

மத்திய அரசை எதிர்த்த தலைவர்கள் நாடு முழுவதும் வேட்டையாடப்பட்டு சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயண், ராஜ்நாராயண், மொரார்ஜி தேசாய், கிருபாளனி, வாஜ்பாய், அத்வானி உள்பட தேசிய தலைவர்கள் சிறைபட்டனர். பலர் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

காமராஜர் நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தார். ஆனால் நெருக்கடி நிலை அமலான 4 மாதத்தில் அவர் மறைந்தார்.

அப்போதைய தி.மு.க. ஆட்சியும் எதிராக இருந்ததால் மு.க.ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறை சித்ரவதைகளை அனுபவித்தார்கள். தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்பட்டது.

எந்த காரணமும், முன்னறிவிப்பும் இல்லாமல் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான அரசியல்வாதிகள் பலர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘மிசா’ என்ற அடைமொழியை போட்டு பிற்காலத்தில் அரசியலுக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு ராணுவ ஆட்சி போல் நடந்த அந்த கால கட்டத்தை ‘பொற்காலம்’ என்று சொல்பவர்களும் உண்டு.

அதற்கு காரணம் அரசு அலுவலகங்கள் சரியாக இயங்கியது. அலுவலர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகங்களுக்கு வந்தார்கள். சரியாக வேலை பார்த்தார்கள். வேலை நிறுத்தங்கள், கடை அடைப்புகள், போராட்டங்கள் என்று எதுவும் இல்லை. கள்ள மார்க்கெட், பதுக்கல் என்று எதுவும் இல்லை.

ஒரு சில நல்ல வி‌ஷயங்கள் இருந்தாலும் மக்கள் நெருக்கடிக்குள் இருந்தனர். இந்திராவுக்கு பக்க துணையாக இருந்த அவரது மகன் சஞ்சய் காந்தியின் தேவையற்ற நடவடிக்கை மூலம் கடும் அதிருப்தி ஏற்பட்டது. கட்டாய கருத்தடை அமலானது. கருத்தடைக்கு ஆள் பிடிக்க ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். 5 மாதத்தில் 37 லட்சம் பேருக்கு கருத்தடை செய்யப்பட்டது.

கொந்தளிப்பான நிலையில் நாடு இருந்த சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு 1975 டிசம்பர் 19-ந்தேதி வழங்கிய இறுதி தீர்ப்பில் இந்திராவின் வெற்றி செல்லும் என்று அறிவித்தது.

அதன் பிறகு பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நம்பினார். ஆனால் 21 மாதம் அனுபவித்த நெருக்கடி கால அனுபவத்தால் 1978-ல் நடந்த பொதுத்தேர்தலில் இந்திரா பெரும் தோல்வியை சந்தித்தார்.

ஆட்சிகள் மாறலாம். ஆனால் மக்கள் என்றுமே நெருக்கடியை விரும்புவதில்லை என்பதற்கு இந்த வரலாற்று சம்பவம் ஒரு சாட்சி.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
 

பேர்ல் எஸ்.பக்

 
uiop_3179212f.jpg
 
 
 

நோபல் பெற்ற அமெரிக்க படைப்பாளி

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நாவலாசிரியரான பேர்ல் எஸ்.பக் (Pearl S Buck) பிறந்த தினம் இன்று (ஜூன் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஹில்ஸ்பரோ நகரில் (1892) பிறந்தார். தந்தை மத போதகர். இவர் 5 மாதக் குழந்தையாக இருந்தபோது, இவர்களது குடும்பம் சீனாவின் ஷென்ஜியாங் நகரில் குடியேறியது.

* காலையில் தாயிடம் பாடம் கற்பார். மதிய வேளையில் ஓர் ஆசிரியரிடம் சீன மொழி கற்பார். 9 வயது வரை இப்படி நகர்ந்தது. பின்னர், பள்ளிப்படிப்பை முடித்தார். ஆங்கிலம், சீன மொழிகளில் சரளமாகப் பேசுவார். 1910-ல் அமெரிக்கா சென்று தத்துவத்தில் பட்டம் பெற்றார்.

* அமெரிக்காவிலேயே தங்க முடிவு செய்தார். தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சீனா திரும்பினார். அங்கு நான்கிங் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பித்தார். 1926-ல் மீண்டும் அமெரிக்கா சென்று கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று சீனா திரும்பினார்.

* அப்போது அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் மீண்டும் அமெரிக்கா திரும்பியவர், பென்சில்வேனியா மாநிலத்தில் குடியேறினார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், எழுதும் திறனும் பெற்றிருந்தார். பெற்றோர் உடல்நலம் குன்றியதால் குடும்ப வருமானத்துக்காக, எழுதலாம் என முடிவு செய்து எழுத ஆரம்பித்தார்.

* இவரது முதல் படைப்பான ‘ஈஸ்ட் விண்ட் வெஸ்ட் விண்ட்’ 1930-ல் வெளிவந்து, ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அடுத்த ஆண்டு ‘தி குட் எர்த்’ என்ற நாவலை எழுதினார். இது அமோக வரவேற்பு பெற்றதால், ஒரு படைப்பாளியாகப் புகழ் பெற்றார். இந்த நாவல் இவரது படைப்புகளிலேயே தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.

* தான் வளர்ந்த சீன மண்ணின் மீதான இவரது அன்பும் நேசமும் இந்த நூலில் இழையோடியது. இந்த படைப்புக்காக இவருக்கு 1932-ல் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் மாறி மாறிச் சென்று வந்தவர் 1933-ல் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறினார். யேல் பல்கலைக் கழகத்தில் கூடுதல் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1938-ல் இவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண் படைப்பாளி, உலகின் 4-வது பெண் படைப்பாளி என்ற பெருமை பெற்றார். அதன் பிறகு நாவல், மொழிபெயர்ப்பு நூல்கள், குழந்தைகளுக்கான படைப்புகள் என ஏராளமாக எழுதினார்.

* ‘சைனா ஸ்கை’, ‘தி டிராகன் சீட்’, ‘ஏ ஹவுஸ் டிவைடட்’, ‘தி வாட்டர் பஃபெல்லோ சில்ரன்’, ‘தி கிறிஸ்துமஸ் கோஸ்ட்’, ‘ஏஷியன் குசைன்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது பெரும்பாலான படைப்புக் களங்கள் சீனப் பின்னணியைக் கொண்டிருந்தன.

* ஆசிய அமெரிக்கர்களின், குறிப்பாக குழந்தைகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மனிதநேய அறக்கட்டளையைத் தொடங்கி, பல்வேறு உதவிகளைச் செய்துவந்தார்.

* வறுமை, பாகுபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் நோக்கில் ‘ஈஸ்ட் வெஸ்ட் அசோசியேஷன்’ என்ற பொதுநலத் தொண்டு அமைப்பை 1941-ல் தொடங்கினார். இறுதிவரை இலக்கியப் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டுவந்த பேர்ல் எஸ்.பக் 81-வது வயதில் (1973) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மேற்கிந்தியத்தீவுகள் மைதானத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தைக் கொண்டுசென்ற தமிழர்!

 

மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த ஒருநாள் போட்டியில்,  105 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று அசத்தியது. இந்தியாவின் வெற்றிகுறித்த பதிவுகள் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பரவலாகக் காணப்பட்டன. ஆனால் தமிழ் நெட்டிசன்ஸ், இந்தப் போட்டியைக் காணச்சென்ற ஒரு ரசிகரின் புகைப்படத்தை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.  

beef ban
 

இந்தியா - மேற்கு இந்தியத்தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் (Port of Spain) நேற்று நடைபெற்றது. போட்டியைக் காண வந்த தமிழ் ரசிகர் ஒருவர்,  `we eat beef -  Tamilian’ என்று  ஒரு பதாகையில் எழுதிக் கையில் பிடித்துக்கொண்டிந்தார்.  போட்டியை லைவ்வாக ஒளிப்பரப்பிக்கொண்டிருந்த டி.வி சேனல் ஒன்று, அவரை ஃபோக்கஸ் செய்து காட்டியது. அந்தக் காட்சியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, தமிழ் நெட்டிசன்ஸ் பகிர்ந்துவருகின்றனர். 

po mone modi
 

இதற்கு முன்னர்,  இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி  தொடரின்போது, கேரள ரசிகர் ஒருவர்  ’Po Mone Modi’ என்று மோடிக்கு எதிரான வாசகத்தை எழுதி கையில் பிடித்திருந்தார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. 

 

இதுபோன்று வேறு நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், இந்திய ரசிகர்கள் மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு எதிராகப் பதாகைகள் பிடிப்பது வருத்தமளிப்பதாக ஒருசாரார் கூறிவருகின்றனர். அதே சமயம், பெரும்பாலான மக்களுக்குப் பிடிக்காத ஒன்றை அவர்கள் மீது மத்திய அரசு திணிப்பதால்தான் தங்கள் வெறுப்பை இதுபோன்று வெளிபடுத்திவருவதாக மற்றொரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்: ஜூன் 26- 1987

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகாளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். ஜூன் 26 1987-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது.

 
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்: ஜூன் 26- 1987
 
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகாளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும்.

ஜூன் 26 1987-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது.

இன்று உலகெங்கணும் ஐநா அவையின் ஆதரவில் 200க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கின்றன.

இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய போட்டிகள்:-

* 1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். * 1541 - இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான். * 1690 - தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது. * 1718 - தனது தந்தை மன்னர் முதலாவது பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் இளவரசன் அலெக்சி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான். * 1723 - அசர்பைஜான் தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

* 1924 - அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது. * 1948 - முதலாவது இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார். * 1960 - சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது. * 1975 - இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார். * 1976 - உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
‘பாவிகளின் அட்டகாசம் கூடி விட்டது’
 

image_d2041beb04.jpgஒரு பாவமும் செய்யாதவர்கள் கூட, பயத்துடன் வாழ்கின்றார்கள். பயத்தை ஒழித்தால் துணிச்சல் வரும் என்கின்றோம்.  

மேலும், நேர்மையுடன் வாழ்பவர்களுக்கு பயம் வரவே வராது என்பர். அப்படியாயின் பயஉணர்வு ஏன் நல்லவர்களுக்கும் வருகின்றது? 

இன்று பாவிகளின் அட்டகாசம் கூடி விட்டது. அரசாங்கங்களும் இவர்களைத் துணிச்சலுடன் அடக்குவது இல்லை. இந்தப் பாவம் செய்யும் துஷ்டர்களுக்குச் செல்வாக்கும் அதிகம். 

‘எமக்கு எதற்குப் பொல்லாப்பு’ என ஒதுங்கும் கூட்டம் அதிகமாகி விட்டது. அடாவடித்தனம் செய்பவர்களை ரௌத்திரத்துடன் துரத்தியடிக்க வெகுண்டெழுக! 

நல்லோர் சாபம் துஷ்டரைப் பஸ்மமாக்கும். ஒரு தரமாவது வெகுண்டெழுந்தால் போதும் கெட்டவர் அடங்கிப் போவர். உறுதி.  

  • தொடங்கியவர்

தான் பேசாமால், தன்னைப் பற்றி உலகையே பேச வைத்த ஹெலன் கெல்லர் #HelenKeller

 
 

ஹெலன் கெல்லர்


‘வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்' என்று சொல்வார்கள். இதன் பொருள், எந்த இக்கட்டு வந்தபோது, அதிலிருந்து பேசியே வென்றுவிடலாம் என்பதுதான். அந்தளவுக்கு ஒருவரின் வாழ்வில் பேச்சு முக்கியமானது. தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த, உரிமைகளை உரக்கக்கூற என ஒவ்வொரு தருணத்திலும் உதவக்கூடியது பேச்சு. ஆனால், ஹெலன் கெல்லருக்கு இந்த வாய்ப்பு இல்லை. ஆனபோதும் உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார். தன்னைப் போன்றோருக்கான உரிமைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்றார்.

1880 ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 27) அமெரிக்காவின் டஸ்கும்பியா நகரில் பிறந்தார் ஹெலன். எல்லாக் குழந்தைகளையும்போல வளர்ந்துகொண்டிருந்த ஹெலன் 18-ம் மாதத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் பேசும், பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை இழந்தார். அன்பு மகளுக்கு ஏற்பட்ட நிலை, பெற்றோர் தாளவியலாத துயரத்தில் ஆழ்ந்தனர். அதன்பின், பொருள்களைத் தடவி, முகர்ந்துப் பார்த்து அடையாளம் காணமுயன்றார் ஹெலன். மெள்ள, மெள்ள சமையலுக்கு அம்மாவுக்கு உதவுதற்குப் பழகுகினார்.

ஹெலனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரின் பெற்றோர் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லைச் சந்தித்தனர். அவர் ஹெலனின் கல்விக்கான வாசலைத் திறக்க உதவினார். கிரஹம்பெல்லின் ஆலோசனைப்படி ஹெலனின் பெற்றோர், பாஸ்டனில் இயங்கிவரும் பெர்க்கின்ஸ் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினர். வழக்கமாகக் கதைகளில்தான் தேவதைகள் வருவார்கள். ஆனால், பெர்க்கின்ஸ் நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை மலரச் செய்யும் தேவதையை அனுப்பி வைத்தது. அவர்தான் ஆன் சல்லிவன்.

ஹெலன் கெல்லர்

சல்லிவன் முதன்முதலாக ஹெலனைத் தொட்டதை, பின்னாளில் அவர் எழுதும்போது, 'அது அன்னையின் அரவணைப்புக்கு இணையானது' எனக் குறிப்பிட்டார். சல்லிவனின் அன்புப் பிணைப்பு ஹெலனுக்குக் கிட்டதட்ட 49 ஆண்டுகளுக்குக் கிடைத்தது. ஹெலன் எப்போது கையில் வைத்திருக்கும் பொம்மையிலிருந்து கற்றுக்கொடுப்பதைத் தொடங்கினார். d - o - l -l  என எழுதி பொம்மை எனப் புரிய வைக்கமுயன்றார். ஒரு விஷயத்தை உணர்வதன் மூலம் கற்றல் விரைவாக நடக்கும் என்பதைப் புரிந்துகொண்ட சல்லிவன் அந்த வழியில் கற்பிப்பதைத் தொடர்ந்தார். ப்ரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளைக் கற்றார் ஹெலன். ஹெலனின் வாழ்வில் மிக முக்கியமானது அவர் ரேட் கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததுதான். கடும் போராட்டங்களுக்குப் பிறகே அவருக்கு அனுமதி கிடைத்தது. அங்குதான் அவர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பார்வை, கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற ஒருவர் இளங்கலை முடித்தது அதுவே முதன்முறை. தனது 24 வயதில் முதுகலைப் பட்டமும் பெற்று வியப்பிலாழ்த்தினார்.

ஹெலனின் உற்ற தோழமை யார் என்றால் புத்தகங்கள்தாம். அவர் இளங்கலை படிக்கும்போதே தி ஸ்டோரி ஆஃப் மை லைப் (the story of my life) எனத் தன் சுயசரிதையை எழுதினார். அது பரவலாகக் கவனிப்புக்குள்ளானது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கப்பட்டுவருகின்றது. அதைத் தொடர்ந்து அவர் பத்திரிகைகளில் எழுதினார். தன் வாழ்வின் உந்துசக்தியாக விளங்கிய ஆசிரியர் சல்லிவன் பற்றி என் ஆசிரியர் எனும் பகுதியை எழுதினார்.

பெண்ணுரிமை, பார்வை, கேட்கும், பேசும் திறனற்றவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை உணர்வுபூர்வமான எழுத்துகளாக வடித்தெடுத்தார். தன் ஆசிரியர் உதவியுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று ‘ஹெலன் கெல்லர் நிதி’ எனும் பெயரின் நிதி திரட்டினார். அப்போது கிடைத்த தொகையினை பார்வை, கேட்கும், பேசும் திறனற்றவர்களின் மேம்பாட்டுக்காகச் செலவிட்டார். இந்தியாவுக்கும் வந்திருந்தார். நம் நாட்டின் தேசிய கீதம் எழுதிய தாகூரைச் சந்தித்தார். அமெரிக்க சோஷலிசக் கட்சியின் தன் அரசியல் பங்களிப்பை ஆற்றினார்.

 

தனது குறைகளைப் பற்றி சிறிதும் கவலைபடாமல் உலகை வலம் வந்த ஹெலனை பக்கவாதம் வீட்டிலேயே முடக்கியது. 1968 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். தன் வாழ்நாளின் இறுதிவரை தெளிவாக அவரால் பேச முடியவில்லை. ஆனால், அவரின் அசராத பணிகளால் அவரைப் பற்றி உலகமே இன்றும் பேசிவருகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

வரலாற்றில் இன்று…

ஜூன் – 27

 

1709 : ரஷ்­யாவின் முதலாம் பியோத்தர் பொல்­டாவா என்ற இடத்தில் சுவீ­டனின் பன்­னி­ரண்டாம் சார்ள்ஸின் படை­களை வென்றான்.


1801 : எகிப்தின் கெய்ரோ நகரம் பிரித்­தா­னியப் படை­யி­ன­ரிடம் வீழ்ந்­தது.


1806 : ஆர்­ஜென்­டீனா, புவனஸ் அ­ரசை பிரித்­தா­னியர் கைப்­பற்­றினர்.


varlaru21896 : ஜப்பான், சன்­ரிக்கு என்­னு­ மி­டத்தில் நில­ந­டுக்கம் மற்றும் சுனாமி கார­ண­மாக 27,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1950 : கொரியப் போரில் பங்கு பற்­று­வ­தற்கு தனது படை­களை அனுப்ப ஐக்­கிய அமெ­ரிக்கா முடிவு செய்­தது.


1954 : உலகின் முத­லா­வது அணு­சக்தி மின் உற்­பத்தி மையம் மொஸ்­கோ­வுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்­கப்­பட்­டது.


1957 : அமெ­ரிக்­காவின் லூசி­யானா, மற்றும் டெக்ஸாஸ் மாநி­லத்தில் நிகழ்ந்த சூறா­வ­ளியில் 500 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.


1967 : உலகின் முத­லா­வது ஏ.டி.எம். லண்டன் என்ஃ­பீல்டில் அமைக்­கப்­பட்­டது.


1974 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்­றி­யத்­துக்கு பயணம் மேற்­கொண்டார்.


1976 : இஸ்­ரேலில் இருந்து பிரான்ஸ் நோக்கிச் சென்ற விமா­ன­மொன்று கடத்­தப்­பட்டு உகண்­டா­வுக்கு திசை திருப்­பப்­பட்­டது.


1979 : குத்­துச்­சண்­டையில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக முஹம்­மது அலி அறி­வித்தார்.


1980 : இத்­தா­லியில் விமா­னமொன்று நடு­வானில் மர்­ம­மாக வெடித்­ததால் விமா­னத்­தி­லி­ருந்த 81 பேரும் உயி­ரிழந்­தனர்.


1988 : பிரான்ஸில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 56 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1991 : ஸ்லோவே­னியா தனது விடு­த­லையை அறி­வித்த இரண்டாம் நாளில் யூகோஸ்­லா­வியா அதன் மீது படை­யெ­டுத்­தது.


2007 : டோனி பிளேயர் பிர­தமர் பத­வியைத் துறந்­ததைத் தொடர்ந்து கோர்டன் பிரவுண் ஐக்­கிய இராச்­சி­யத்தின் பிர­த­ம­ரானார்.


2008 : ஸிம்­பாப்வே ஜனா­தி­ப­தி­யாக ரொபர்ட் முகாபே மீண்டும் தெரிவானார்.


2015 : தாய்வானிலுள்ள உல்லாச நீரியல் பூங்காவொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக 510 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ரம்ஜானுக்காக ஷாரூக் கான் வீட்டு முன்பு திரண்ட ரசிகர்கள்!

 
 
 

ரம்ஜான் பண்டிகை, நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. ரம்ஜான் வாழ்த்துகளைப் பலரும் தெரிவித்து மகிழ்ச்சியடைந்தனர்.  நேற்று, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் வீட்டின் முன்பாக, அவரது ரசிகர்கள் படையெடுத்து வந்து அவருக்கு ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ரசிகர்களின் வாழ்த்துகளில் திக்குமுக்காடிப்போன ஷாரூக், வீட்டின் பால்கனியிலிருந்து தன் மகன் அப்ராம் உடன் தன்னுடைய ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்துகள் மற்றும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

shah ruhu khan

மேலும், அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டு, எனது கலைப்பயணத்தில் 25 வருடங்களாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் புகழ்பெற்ற பயணத்தில் என்னை சேர்த்ததற்கு நன்றி. லவ் யூ ஆல் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ரம்ஜான், தனக்கு மிகவும் சிறப்பான ரம்ஜான் எனவும் ஷாரூக் கான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஜூன் மாதத்தோடு ஷாரூக் கான் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன என்பதால், இது ரொம்ப ஸ்பெஷலான ரம்ஜான் எனக் கூறியுள்ளார்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.