Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

குழந்தைகள் தோல்வியும் பழக வேண்டும்... ஏன் தெரியுமா?#GoodParenting

குழந்தைகள்

து ஒரு கல்யாண வீடு. உறவுகளின் கேலி கிண்டல்களுக்கு மத்தியில் குழந்தைகளின் ரகளையும் கலகலப்பு சேர்ந்தது. சொந்தங்கள் புதுப்புது விளையாட்டுகளில் களம் இறங்கினர். வெற்றிபெற்றால் பரிசு என்று சொல்லப்பட்டது. போட்டியும் கமெண்டுமாக சுட்டிகள் கூட்டம் களம் இறங்கியது. கல்யாணப் பெண்ணின் அம்மா சாந்தி, விசேஷத்துக்கு வந்த ஒரு குழந்தைகூட மனம் வருத்தப்படக்கூடாது என்பதில் கவனமாகச் செயல்பட்டார். மியூசிக்கல் சேர் போட்டியின் ஒவ்வொரு ரவுண்டிலும் வெளியேறிய குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்து புன்னகைக்கச் செய்தார். இது சரியா? 

அது ஒரு பூங்கா... அங்கு சற்றுமுன்பு அறிமுகமான குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். சந்துருவுக்கு திடீரென கீழே விழுந்து முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பதறியடித்து உதவ முன்வந்தனர். சந்துருவை அள்ளிக்கொண்ட அவன் அம்மாவோ, ‘‘நான் உன்கூட இருக்கேன் சந்துரு. உனக்கு எதுவுமில்லை. சரியாகிடும்'' என அன்பு வார்த்தைகளால், அவன் விழுந்ததை மறக்கவைக்க முயற்சி செய்தார். இப்படி வலியே அறியாமல் நம் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமா? 

ஷாப்பிங் செல்லும்போதெல்லாம் பார்க்கும் பொருள்களில் எதையாவது வாங்கித் தரச்சொல்லி அடம்பிடிப்பாள் மித்ரா. தராவிட்டால் முகம் சோர்ந்துவிடும். அவள் கேட்பதற்கும் மேலாக வாங்கித் தந்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அம்மா சித்ரா. ஆனாலும், மித்ரா எதிலும் திருப்தியடையாமல் எல்லாவற்றையும் கேட்டு சித்ராவை திகைக்கவைப்பாள். குழந்தைகள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமா? 

 

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தருகிறார் மனநல ஆலோசகர் பாபு ரங்கராஜன், ‘‘ஒற்றைக் குழந்தைகள் மட்டுமே உள்ள நியூக்ளியர் குடும்பங்களில், குடும்பத்தின் மொத்த கவனமும் குழந்தை மீதே குவிகிறது. அவர்கள் பசியை உணரும் முன்பே உணவூட்டப்படுகிறது. விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிக் குவிக்கப்படுகிறது. குழந்தை தனக்கு எது தேவை என்று யோசிப்பதற்கான வாய்ப்பே கொடுக்கப்படுவதில்லை. பெற்றோரின் அதீத கவனிப்பு, அவர்களின் வாழ்விலிருந்து அனுபவம் வழியாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. 

குழந்தைகள்

 

நாம் எதிர்பார்க்கும் எல்லாம் உடனே கிடைத்துவிடாது. சிலவற்றுக்குக் காத்திருக்க வேண்டும். தோல்விகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதைக் குழந்தைகள் உணராமல் வளர்க்கப்படுகின்றனர். சிறு வயதில்தான் நினைத்தது கிடைக்காவிட்டால், அந்தக் குழந்தை அழுகையாகவும் அடம்பிடித்தலாகவும் வெளிப்படுத்தும். அதன் அழுகையை நிறுத்துவதற்காகவும் மனம் வருந்தக்கூடாது என்ற நோக்கத்திலும் கேட்பதை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். இது தவறான நடைமுறை. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தை நல்ல விஷயங்களைச் செய்யும்போது, பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே குழந்தை தவறு செய்யும்போது தண்டிப்பதால், குழந்தை கோபம்கொள்கிறது. இங்கே தண்டிப்பதற்குப் பதிலாக, 'நீ செய்தது தவறு' எனப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. 

குழந்தைகளின் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் தோல்வியில் முடியும்போது, சமாதானப்படுத்துவது தவறு. மாறாக, 'நடந்தது நடந்துவிட்டது அடுத்து என்ன செய்யலாம்?' என்று உங்கள் குழந்தையிடமே கேளுங்கள். தோல்விக்கான காரணங்களை குழந்தைகளிடம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கலந்துரையாடுங்கள். எதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று ஆலோசித்து தன்னை மதிப்பிட்டுக்கொள்ளும் வாய்ப்பை குழந்தைக்குக் கொடுங்கள். தன்னிடம் மாற்ற வேண்டிய குறைகள் இவைதான் என்று குழந்தைகள் மனம் பட்டியலிட்டுக்கொள்ளும். அவற்றை மாற்றவும் முயற்சி செய்யும். இதுபோன்ற விஷயங்கள் குழந்தைக்குள் தானாகவே நடக்கும். தோல்வியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, அந்தக் குழந்தைக்குள் பிராப்ளம் சால்விங் திறன் வளரும். 

வாழ்வில் எப்போதும் ஏதாவது ஒரு தோல்வி அல்லது ஏமாற்றத்தை நாம் சந்தித்தாக வேண்டும் என்ற இயல்பை குழந்தைகள் புரிந்துகொள்ளட்டும். கீழே விழுந்து அடிபடுவதும் வலிப்பதும் இயல்பு என்பதைப் புரிந்துகொள்ளட்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் இது பொதுவானதே. அப்போதுதான் பிரச்னைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் யோசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதற்கு வாய்ப்பற்ற குழந்தைகள்தான் தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காகவோ, கல்லூரியில் எதிர்பார்த்த படிப்பு கிடைக்காமல் போனதற்காகவும் தற்கொலை வரை போகின்றனர். வாழ்வின் இன்பதுன்பங்கள் இரண்டையும் குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. இதற்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அவர்கள் வலியிலிருந்து வெளியில் வர நாம் உதவலாம். ஆனால், வலியே தெரியாத மாதிரி வளர்க்கக் கூடாது’’ என்கிறார் பாபு ரங்கராஜன்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சூடான் விமான விபத்தில் 117 பேர் பலி

சூடானில் 2003-ம் ஆண்டு ஜுலை 8-ந்தேதி நடந்த விமான விபத்தில் 117 பேர் பலியானார்கள். இரண்டு வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது. மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் * 1099- முதலாம் சிலுவைப் போர்: 15 ஆயிரம் கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர். * 1497 - வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம். * 1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர்,

 
 
 
 
சூடான் விமான விபத்தில் 117 பேர் பலி
 
சூடானில் 2003-ம் ஆண்டு ஜுலை 8-ந்தேதி நடந்த விமான விபத்தில் 117 பேர் பலியானார்கள். இரண்டு வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது.

மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

* 1099- முதலாம் சிலுவைப் போர்: 15 ஆயிரம் கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.

* 1497 - வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.

* 1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர், போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் 12-ம் சார்ல்ஸ் மன்னனைத் தோற்கடித்தார்.

*  1815 - 18-ம் லூயி, பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னரானார். இரு வாரங்களே பதவியில் இருந்த நான்கு வயது இரண்டாம் நெப்போலியன் பதவி இழந்தான்.

*   1859 - சுவீடன்- நார்வே மன்னனாக சுவீடனின் 15-ம் சார்ல்ஸ் முடி சூட்டப்பட்டார்.

* 1982 - ஈராக் அதிபர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.

* 1985 - திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

* 1990- ஜெர்மனி ஆர்ஜெண்டினாவை வென்று கால்பந்து உலகக்கோப்பையை வென்றது.

* 2006 - ம.பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.

 

 

தோல்வியில் முடிந்த திம்பு பேச்சுவார்த்தைகள்

 

ராஜீவ் காந்தியின் தலைமையில் 1985-ல் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதே ஆண்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின. இதில் அனைத்து தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும்

 
 
 
 
தோல்வியில் முடிந்த திம்பு பேச்சுவார்த்தைகள்
 
ராஜீவ் காந்தியின் தலைமையில் 1985-ல் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதே ஆண்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின. இதில் அனைத்து தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன.

தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக்கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது.

இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடத்திய தாக்குதலில் தமிழினப் படுகொலையில் 200-ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

கங்குலி - இந்திய‌ கிரிக்கெட்டின் கபாலி

 

sriramsathiyamoorthy  GIF

 

‘தாதா’ – இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு பெயர். இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய பெயர். இந்திய கிரிக்கெட்டிற்கு முகவரி அளித்த பெயர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் பெயர். சினிமா ரசிகனை ஆட்டுவிக்க பாட்ஷா, கபாலி என்று எத்தனையோ தாதாக்கள் இருக்கலாம், ஆனால் கிரிக்கெட் ரசிகன் உச்சிமுகரும் ஒரேயொரு தாதா – சவுரவ் கங்குலி. ‘பெங்கால் டைகர்’, ‘கொல்கத்தா பிரின்ஸ்’, ‘காட் ஆஃப் ஆஃப்சைடு’ என இவரைக் கொண்டாடிய ரசிகர்களெல்லாம் இன்னும் இவரது ரசிகர்கள் தான். இவரது ஓய்வுக்குப் பிறகு தோனியின்  பின்னாலோ, கோலியின் பின்னாலோ அவர்கள் செல்லவில்லை. தாதாவின் கிரிக்கெட் வர்ணனையை கேட்க‌, அவரது ஆளுமையை ஏன் அவரது பேட்டிகளைக் கூட இன்னுமும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர் கங்குலி வெறியர்கள். ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் அடித்த சிக்ஸரை பார்த்த பலரது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கடவுள் இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனான கங்குலி, கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர். ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று 44வது பிறந்தநாள் கொண்டாடும் தாதாவை ஏன் ரசிகர்கள் இந்த அளவிற்கு நேசிக்கிறார்கள்.  தாதாவை இந்திய கிரிக்கெட் ரசிகனால் மிஸ் செய்ய முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது அவற்றில் சில இதோ...


அசத்தல் அறிமுகம்:

    கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தான் கங்குலியின் டெஸ்ட் பயணம் தொடங்கியது. பலம் வாய்ந்த இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்ட சவுரவ், அறிமுக போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். அதுமட்டுமின்றி தனது இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து கிரிக்கெட் உலகிற்கு தனது வருகையை அறிவித்தார். அந்தத் தொடரிலேயே சச்சினுடன் இணைந்து 255 ரன்கள் எடுத்து அச்சமயத்தில் இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் தாதா. உலக பந்துவீச்சாளர்கள் அனைவரையும் அசர வைக்கும் ஒரு காம்போவிற்கான அஸ்திவாரத்தை தனது முதல் தொடரிலேயே ஏற்படுத்தினார் கங்குலி.

84629.jpg

களம் தாண்டிய பந்துகள்

    இன்று கெயிலோ, வார்னரோ 100 மீட்டருக்கு சிக்சர் அடித்தாலே வாய்பிளக்கும் நாம், ஷார்ஜாவில் கங்குலி அடித்த அடிகளைப் பார்த்திருந்தால்?! ஜிம்பாப்வே நிர்ணயித்த 197 ரன் டார்கெட்டை சச்சினும் கங்குலியுமே ரவுண்டு கட்டி அடித்தனர். அதிலும் கிரான்ட் பிளவர் வீசிய ஒரு ஓவரில் மூன்று முறை பந்துகளை கூறையின் மீது பறக்கவிட்டார். ஒவ்வொரு முறையும் பந்து ஸ்டாண்டுகளைத் தாண்டிப் பறந்த போது ரசிகர்கள் மிரண்டே போயினர். கெயில் போன்று பலம் கொடுக்காமல், வெறும் கிளாசிக்கல் ஷாட்களால் சிக்சர் அடிக்கும் கங்குலியின் ஸ்டைலைக் காணக் கண் கோடி வேண்டும். அதாவது பரவாயில்லை 2003 உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இரண்டு முறை பாலை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பி வைத்தார். பந்தை அவுட் ஆஃப் ஸ்டேடியம் அனுப்புவதிற்கு கங்குலியை விட்டால் சிறந்த ஆளில்லை.கங்குலி ஆடியது இன்று உள்ளது போல் பேட்ஸ்மேன் ஃப்ரெண்ட்லி பிட்ச்களில் அல்ல...பந்துகள் எகிறும் பவுன்ஸி பிட்ச்களில்...

அவுட்ஸ்டேண்டிங் ஆல் ரவுன்டர்

    கங்குலி ஃபார்மில் இருக்கும்போது உண்மையிலேயே அவர் பெங்கால் டைகர் தான். எதிரணியை கடித்துக் குதறிவிடுவார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 1997ல் நடந்த சஹாரா கோப்பை. பாகிஸ்தானுக்கு எதிரான அத்தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கி அசத்தினார் தாதா. பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்திய தாதா அந்த 4 போட்டிகளில் மட்டும் 11 விக்கெட்டும் 205 ரன்களும் எடுத்து அல்ரவுண்டராக ஜொலித்து, அந்தத் தொடரைத் தனக்கான இரையாக்கினார். இதுநாள் வரையில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் கங்குலி தான்.

கேப்டன் அல்ல லீடர்

189707.jpg

   

கேப்டன் – ஒரு அணியை வழிநடத்துபவர். ஆனால் கங்குலியோ இந்திய அணியை வடிவமைத்தவர். சூதாட்டப் புகாரால் சின்னா பின்னமான அணியை ஒருங்கிணைத்து உலக அரங்கில் ஒரு கம்பீர நடை போட வைத்தார் தாதா. அதுவரை இந்தியாவிற்கு என்று இருந்த முகத்தை மாற்றினார். மற்ற அணிகளெல்லாம் பார்த்துச் சிரித்த இந்திய அணியை ஆங்க்ரி பேர்டு மோடுக்கு மாற்றினார் தாதா. அதில் தானே முன்மாதிரியாகவும் விளங்கினார். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அதன் சொந்த மண்ணிலேயே சவால் விடுமளவு அணியை சிறப்பாக்கினார் தாதா. அதுமட்டுமின்றி இளம் வீரர்களை ஊக்குவித்து, அவர்களை நட்சத்திரங்களாக்கியவர் கங்குலி. சேவாக், யுவி, ஜாகிர், பாஜி என அந்தப்படை நீண்டு கொண்டே போகும். மிடில் ஆர்டரில் தவித்த சேவாக்கின் திறமையறிந்து, தனது ஓப்பனிங் ஸ்லாட்டையே அவருக்காக விட்டுக்கொடுத்தார் தாதா. அதுதான் தாதா. அணிக்காக எதையும் செய்யக் கூடியவர் அவர். எப்படிப்பட்ட அதிரடி முடிவுகளையும் எடுக்க அவர் தயங்கியதில்லை. வெற்றிகளை கூலாக அணுகும் தோனிக்கும், மைதானத்தில் ஆக்ரோஷம் காட்டும் கோலிக்கும் இன்ஸ்ப்ரேஷன் தாதா தான்.

ஆஸியை ஸ்விட்ச் ஆஃப் செய்தவர்:

    அன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் என்பது ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்லெட்ஜிங்கால் எதிரணியை மனதளவில் தாக்கி வந்த ஆஸி வீரர்களையும், அவர்கள் கேப்டன் ஸ்டீவ் வாக்கையுமே கலங்கடித்தவர் தாதா. 2001 ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸி அணியை வீழ்த்தி அவர்களது 16 போட்டி தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது தாதா அண்ட் கோ. மேலும் அத்தொடரில் டாஸ் போடுவதற்கு லேட்டாக வந்து பிறரை எரிச்சலூட்டும் ஸ்டீவ் வாக்கையே எரிச்சலூட்டினார் தாதா. அப்போதுதான் வெற்றியாலும் தலைகனத்தாலும் பறந்து கொண்டிருந்த ஆஸி அணி தரை தொட்டது. 2004ம் ஆண்டு ஆஸியில் நடந்த டெஸ்ட் தொடரை முதல் முறையாக தாதாவின் தலைமையில் தான் டிரா செய்தது நம் அணி. அதுமட்டுமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவின் கடைசிப் போட்டியில் ஆஸியை வீழ்த்தி பேரதிர்ச்சி கொடுத்தது டீம் இந்தியா.


மெக்காவை மெரசலாக்கியவர்

    தாதா என்றாலே இங்கிலாந்து நாட்டவர்களுக்கு 2002 நாட்வெஸ்ட் கோப்பை தான் நினைவிற்கு வரும். கிரிக்கெட்டின் மெக்காவாகக் கருதப்படும் மிகவும் மரியாதைக்குரிய லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற பிறகு தாதா சட்டையக் கழற்றி சுற்றிய காட்சி இன்னும் நம் கண் முன்னர் வந்து போகும். தாதாவின் வெறித்தனமான ரசிகனுக்கு அதுதான் மெய்சிலிர்க்கும் தருனம். பிளின்டாப் வான்கடே மைதானத்தில் செய்ததற்காகத் தான் இப்படிச் செய்ததாக தாதா விளக்கம் கூறியிருப்பார். அதற்கு இங்கிலாந்து லெஜெண்ட் பாய்காட், “ என்ன இருந்தாலும் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா. அங்கு இப்படி செய்யலாமா?” என்று கேட்டிருப்பார். அதற்கு “லார்ட்ஸ் உங்களுக்கு மெக்கா என்றால், வான்கடே தான் எங்களுக்கு மெக்கா” என்று கவுன்டர் சொன்னதெல்லாம் தாதாவின் எவர்கிரீன் ஸ்பெஷல்.

132816.jpg

உலக நாயகன்!

எத்தனையோ வீரர்கள், பிற போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்டு உலகக்கோப்பை போன்ற மிகமுக்கிய தொடர்களில் சொதப்புவார்கள். ஆனால் தாதாவோ வோர்ல்டு கப் என்ற பிரஷெரை ஃபீல் செய்ததே இல்லை. இதுவரை 21 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள தாதா 1006 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரியோ 50க்கும் மேல். அதுமட்டுமின்றி 4 சதங்களும் அடித்துள்ள தாதா தான் ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த இந்தியர் (183), ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக சதம் அடித்தவர் (3) என்ற சாதனைகளையெல்லாம் தன்வசப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தான் கேப்டனான போது தரவரிசையில் எட்டாவது இடத்திலிருந்த அணியை 2003 உலகக்கோப்பையின் இறுதிவரை அழைத்துச் சென்றவர்  இந்த கொல்கத்தா பிரின்ஸ்.

நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்

“இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடவெல்லாம் லாயக்கற்றவர். கேப்டன் பதவியை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்” என்று பலரும் தாதாவின் டெஸ்ட் பேட்டிங்கை தூற்றினார்கள். சிங்கத்தின் பிடரியைப் பிடித்துவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா? எதுக்குமே கவுண்டர் கொடுத்து பழகிய தாதா இதற்கும் பதில் சொல்லக் காத்திருந்தார். அவரிடம் அடிபட பாகிஸ்தானும் அணியும் காத்திருக்க , அவர்களை வேட்டியாடியது வங்க‌ சிங்கம். யுவியோடு இணைந்து 300 ரன்கள் குவித்த தாதா, அந்த இன்னிங்சில் 239 ரன்கள் குவித்து, தன்னை சந்தேகித்தவர்களிடம் திரும்ப வந்துருக்கேன்னு போய் சொல்லு என்று  தன்னை நிரூபித்தார். அவ்வாண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் கங்குலி தான் இரண்டாம் இடத்தில். அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், அவரது சராசரி 40க்குக் குறைந்ததில்லை என்று சொல்லும்போதே அவரது திறமை நமக்குத் தெரிய வேண்டும்.

கண்கள் கலங்கிய கடைசி தருணம்

95952.jpg


    இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார். 2008ம் ஆண்டு ஆஸி அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய தாதாவிடம், ஒரு சில ஓவர்கள் கேப்டனாக இருக்கும்படி கூறினார் அப்போதைய தற்காலிக கேப்டன் தோனி. அதன்படி கேப்டனாக சில நிமிடங்கள் விளையாடிய கங்குலி வெற்றி கேப்டனாகவே கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். ஒரு அணியை உருவாக்கி அழகாக்கிய அம்மாமனிதன் தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் ஆனது தான் சோகம். ஆனால் கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேன் கூட தனது கடைசி இன்னிங்சில் டக் தானே!

நோ கங்குலி நோ கிரிக்கெட்

    கொல்கத்தா – கங்குலியின் கோட்டை. மும்பையில் சச்சினுக்கு இருக்கும் ஆதரவை விட கங்குலிக்கு இங்கு இரண்டு மடங்கு ஆதரவு. 2011 ஐ.பி.எல் ஏலத்தில் கங்குலியை புறக்கணித்த கே.கே.ஆர் அணிக்கு கொல்கத்தா ரசிகர்கள் ஆதரவளிக்க மறுத்தனர். தங்களிம் சொந்த ஊர் அணியாக இருந்தாலும் பரவாயில்லை, தங்கள் நாயகனுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என் நினைத்தார்கள். ‘NO DADA NO KKR’ என்ற கோஷத்தோடு தொடர்ச்சியாக கொல்கத்தா அணியின் போட்டிகளை புறக்கணிக்க, கங்குலியின் செல்வாக்கை உலகறிந்தது. ஒருமுறை ரவி சாஸ்திரி விளையாட்டாக கங்குலியிடம், “மைதானத்தின் ஒரு கேலரிக்கு உங்கள் பெயர் வைக்கப்படவில்லை என்று வருத்தம் இருக்கிறதா?” என்று கேட்க “அந்த மைதானமே என்னுடையது” என்று கொக்கரித்தவர் தாதா.அது உண்மைதான். கொல்கத்தா ஒருகாலத்தில் எப்படி சுபாஷின் கோட்டையாக விளங்கியதோ அப்படி இப்போது இவரின் கோட்டையாக விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கழற்றிவிடப்பட்டார் கங்குலி மொத்த மைதானமும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவளித்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ வைத்தது. இவர்கள் தாதா ரசிகர்கள் அல்ல தாதா வெறியர்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சினுக்கு கூட இப்படி டை ஹார்டு ரசிகர்கள் இல்லை.

69844.gif

தாதா – இந்திய கிரிக்கெட்டின் கபாலி

    இந்தியா பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி மழையால் கிட்டத்தட்ட ரத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட, மைதானத்தற்குள் களம்புகுந்த பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலி, துரிதமான நடவடிக்கைகள் மூலம், மைதானத்தை உடனடியாக சீரமைத்தார். அவரது செயல்பாட்டை வேறு எந்த ஒரு நபரும் இதுவரை செய்ததில்லை. கிரிக்கெட்டே கங்குலியை ஒதுக்க நினைத்தாலும், தாதாவிடமிருந்து கிரிக்கெட்டை ஒதுக்கிவிட முடியாது. அதனால் தான் இப்பொழுதும் ஐ.பி,எல் குழுவிலும், பி.சி.சி.ஐ ஆட்சி மன்றக் குழுவிலும் தன்னை இணைத்துக்கொண்டு இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார்.

தைரியத்தின் மறுபெயர்

    புலியைப் பற்றிக் கூறும்போது அதன் வரியைப் பற்றிக் கூறாமல் விட்டால் எப்படி? தாதா – தைரியத்தின் மறுபெயர். எதற்காகவும் எப்பொழுதும் அஞ்சாதவர். உடனுக்குடன் எதையும் எதிர்க்கும் மனதைரியம் கொண்டவர். அதனால் தான் சூதாட்டப் புகாரில் சிக்கிய ஒரு அணியை அவரால் மீட்டெடுக்க முடிந்தது. முன்னாள் பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட தகராறாகட்டும், லார்ட்ஸ் நிகழ்வாகட்டும்  அங்கு தாதாவின் சீற்றம் குறைந்ததில்லை. தாதாவின் சொற்கலெல்லாம் அவரது ஆஃப் சைடு கவர் டிரைவ் போலத்தான் அவ்வளவு நேர்த்தியானவை. அதற்கு எடுத்துக்காட்டாக போன வாரம் நடந்த இந்தியப் பயிற்சியாளர் தேர்வு சம்பவம். கங்குலி நேர்கானலில் பங்குபெறவில்லை என்று ரவி சாஸ்திரி குற்றம் சாட்ட, கூலாக பாங்காக்கில் விடுமுறை கழித்தவர் என்று ரவியை ஆஃப் செய்துவிட்டார்.

 

197177.jpg

இன்றைக்கு அவரது ஆளுமைகளை ரசித்தாலும், மனதில் ஏதோ ஒரு மூலையில் மீண்டும் கங்குலி மட்டையோடு மைதானத்தில் நுழைந்து பந்தை மைதானத்துக்கு வெளியே விரட்ட மாட்டாரா என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. 11 வீரர்களையும் ஆஃப் சைடில் நிற்க வைத்து ஒரு பந்தை வீசிப்பாருங்கள். ஆஃப் சைடில் ப்ந்து பவுண்டரிக்கு செல்லும்.  ஒருசமயம் தாதா கூறிய வார்த்தை “ எனது சுயசரிதை வெளிவந்தால் பலருடனும் பல பிரச்சனை எழும். பெரிய பூகம்பங்கள் வெடிக்கும். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். நீங்கள் மட்டுமல்ல தாதா நாங்களும் தான்! ஹேப்பி பர்த்டே டு தி காட்ஃபாதர் ஆஃப் இந்தியன் கிரிக்கெட்!

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/amuduarattai 
பெற்றோர்கள் சொல்படிக் கேட்டு நடக்கும், பிள்ளைகளாகப் பிறந்தோம். பிள்ளைகள் சொல்படிக் கேட்டு நடக்கும், பெற்றோர்களாக வாழ்கிறோம்.

facebook.com/Guru Srini
நாம எப்படி A சர்டிபிகேட்டை மதிக்கி றோம்னா, `லோகன்’ மாதிரி படத்துல ஒரு குழந்தையே முகத்துல/கண்ணுல கத்தியைச் செருகுற உச்சக்கட்ட வயலன்ஸ் இருக்கிற படத்துக்குக் குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போவோம். ஆனா, காண்டம் விளம்பரம் வந்தா, சேனல் மாத்திடுவோம்.

twitter.com/writternagarani
இன்றுவரை சாதாரண டீக்கடையில குடிக்கிற டம்ளர்கூட எல்லோருக்கும் ஒரே மாதிரி தருவதில்லை. அப்படி இருக்கையில் ஒரே நாடு, ஒரே வரி எப்படிச் சாத்தியமாகும்?

p114a.jpg

twitter.com/LordZha 
இப்ப ஓடிக்கிட்டிருக்கிற படங்கள் லட்சணத்துக்கு ஜி.எஸ்.டி இல்லைனாலும் ரெண்டு வாரத்துக்கு தியேட்டர்களை மூடி வைக்கிறதுதான் லாபம். கரன்ட்டு பில்லாவது மிஞ்சும்.

twitter.com/HAJAMYDEENNKS 
குழந்தைகள், பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கின்றனர் என்பதுதான் உண்மை..!

twitter.com/nathanjkamalan
சாப்பிடும்போது பரிமாறவோ, பகிர்ந்து கொள்ளவோ ஒருவர் அருகிலிருப்பது ஒருவகையில் மனநிறைவைத் தந்துவிடுகிறது!

twitter.com/iamkarthikeyank 
கிரிக்கெட் பார்க்க பொண்டாட்டி கிட்ட ரிமோட் வாங்க முடியாம கதறுனவங்களுக்குக் கிடைச்ச வரம்தான் `hotstar, jio’

twitter.com/senthilcp
திரைப்படங்களை நேரடியாக DTH-ல் வெளியிடத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு எனத்  தகவல். - இப்போ தெரியுதா தமிழ் சினிமாவின் `பிக்பாஸ்’ யாருன்னு?

p114b.jpg

twitter.com/writternagarani
பெண்களை இளமையாகக் காட்டத்தான் பெரிதும்  கஷ்டப்பட வேண்டியிருக்கிறது, ஆண்களை இளமையாகக் காட்ட, ஒரு டி-சர்ட் போதுமானதாக இருக்கிறது.

twitter.com/manipmp 
எதையாவது எழுதிட்டுக் கீழே கலாம்னு போடுற மாதிரிதான், எந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும், கீழே கருப்புப் பணம் ஒழியும்னு போட்டுடுறாங்க.

twitter.com/npgeetha 
நான்லாம் ப.சிதம்பரம்தான் நாட்டை வித்துடுவாருபோலன்னு கவலைப் பட்டேன். இவிங்க அக்கக்காப் பிரிச்சு, கூறு பத்து ரூவான்னு விக்குறாய்ங்க!

twitter.com/Chaintweter 
வயிற்றிற்குள் பறக்கும் பட்டர்ஃபிளைக்கு வயசாகி விட்டதுபோல், இப்போதெல்லாம் அவை பறப்பதேயில்லை.

twitter.com/mekalapugazh
பழைய ஆயிரம் ரூபாய்  நோட்டில் ஆன காரியம், இனிப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் ஆகும் என்பதுதான் பண மதிப்பிழப்பின் பயனோ?

twitter.com/HAJAMYDEENNKS
ஒரே அளவிலான வருமானம் இல்லாத நாட்டில், ஒரே விதமான வரி மட்டும் எப்படிச் சாத்தியமாகும்...?

p114d.jpg

twitter.com/sanraj2416
ப்ளாட்ஃபார்ம்ல நின்னாதான் கட்டணம் 10 ரூபாயாம்.

அப்படியே கீழ உட்கார்ந்துட்டா கேட்க மாட்டாங்களாம். பிச்சைக்காரன் சொன்னான்!

facebook.com/Sarav Urs

கதவை உடைச்சுட்டு ‘உப்பு இருக்கா’ன்னு கேட்கிற காஜல் அகர்வால் மாதிரி திடீர்னு உள்ள வந்தாய்ங்க இரண்டு பேர்...

முகத்தை அவ்ளோ சீரியஸா வெச்சுக்கிட்டு, ``ஜி.எஸ்.டி வருது சார். எல்லா ரேட்டும் ஏறப்போகுது. சீக்கிரமா பழைய காரைக் கொடுத்துட்டுப் புது கார் வாங்கிக்கோங்க, இப்போ வாங்கினா டிஸ்கவுன்ட் இருக்கு.’’

‘‘இல்லீங்க... கார் வாங்குற ஐடியா இல்லை.’’

‘‘என்ன சார், இப்படிச் சொல்லிட்டீங்க பழைய கார்  இரண்டு லட்சம், டிஸ்கவுன்ட் 35,000. டேக்ஸ், ஆன் ரோடுன்னு கணக்கு பண்ணா, சார் நீங்க மூன்று லட்சம் கட்டினா போதும். இதே காரைப் புதுசா வாங்கிக்கலாம். வேற கலர்ல... செம்ம ஆஃபர் சார்... வாங்குங்க.’’

‘‘நான் இப்போ வெச்சிருக்கிற காரை கலர் மாத்துறதுக்கு மூணு லட்சம் தரணுமா... என்னய்யா சொல்ற?’’

‘‘நீங்க பணம்கூட கட்டவேணாம் சார். லோன் போட்டுக்கலாம். பழைய காரை விக்கிறோம்ல... அந்தப் பணத்தை டவுன் பேமென்ட்டா வெச்சு முடிச்சிடுறேன். ஒரு 10 கையெழுத்துப் போட்டா போதும். புதுசு என்ன கலர் சார் வேணும்?’’

‘‘டாய்... என்னமோ கத்தரிக்காய் வாங்குற மாதிரி கார் வாங்கச் சொல்ற... ஓடிரு.’’

‘‘சார், ஜி. எஸ்.டி வந்தா, நீங்க 15,000 ரூபாய் அதிகமா கட்ட வேண்டி வரும்.’’

‘‘அடேய்... அது கார் வாங்குறவன்தானே கட்டணும். நான் சும்மாதானே இருக்கேன். ஏண்டா குழப்புறீங்க... போங்கடா பேசாம.’’

‘‘சார் சொன்னா கேளுங்க.. உங்களுக்குத்தான் நஷ்டம்’’னு சொல்லிட்டே போறான்...

உண்மையிலயே நமக்கு நஷ்டம் ஆகிடுமோ, குழப்புறானுகளே....

p114c.jpg

facebook.com/Guru Srini

பார்லிமென்ட்டே டி.ஆர்.பி. ரேட்டிங்கை நோக்கித்தான் போயிட்டிருக்கு, இதுல ‘பிக்பாஸ்’ விஜய் டி.வி-யைத் திட்டி என்ன பயன்?


p114e.jpg

ட்ரெண்டிங்

ட்ரம்ப்பும் மீடியாவும் எப்போதும் சக்கரைப் பொங்கல் வடகறி காம்பினேஷன்தான். நியூயார்க் டைம்ஸை `தோல்வியடைந்த நாளிதழ்’ எனக் கலாய்த்த அமெரிக்க அதிபர் இந்த முறை எதிர்த்திருப்பது சி.என்.என் ஊடகத்தை. ``அது ஒரு குப்பை மீடியா. பொய்யான ஜர்னலிஸம் செய்பவர்கள்” என ட்வீட் செய்த ட்ரம்ப் அடுத்து வெளியிட்ட வீடியோ இன்னும் மோசம். ரெஸ்லிங்கில் முன்பு ஒருமுறை கலந்துகொண்ட ட்ரம்ப் ஒருவரை அடித்து வீழ்த்தும் வீடியோவில், அடி வாங்கியவரை சி.என்.என் என மார்ஃபிங் செய்யப்பட்டிருந்தது. “ஊடகவியலாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்க்கிறார் ட்ரம்ப்” என எதிர்ப்புக் கிளம்ப, “அவர் உண்மையானவர். தனது எதிர்ப்பைப் போலியின்றிப் பதிவு செய்கிறார்” என ஆதரவளார்களும் பதிலுக்குக் கிளம்பினார்கள். “நாங்கள் எங்கள் வேலையைத் தொடர்ந்து செய்வோம். அவர், அவருடைய வேலையைச் செய்யத் தொடங்கட்டும்” எனப் பதில் சொல்லியிருக்கிறது சி.என்.என்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தனக்கே உரிய 'தனி ஸ்டைலில்' கேக் வெட்டிய தோனி!

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று தனது 36-வது பிறந்தநாளை தனக்கே உரிய பாணியில் கேக் வெட்டி கொண்டாடினார். 

இந்திய அணி தற்போது, மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஜூலை 7-ம் தேதியான நேற்று, தோனியின் பிறந்தநாள். உலக கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் அனைத்துத்துறை சார்ந்தவர்களும் தோனியை வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். ஒரு நாள் தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்ட நிலையில், நேற்று தோனி தன் பிறந்தநாளை சக வீரர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். ஸ்டம்பிங், ரன் அவுட், சிக்ஸர் அடிப்பது என எல்லாவற்றிலும் தனக்கென ஒரு ஸ்டைலை வைத்திருப்பவர் தோனி. நேற்று வெட்டிய கேக்கிலும் தனக்கான ஸ்டைலைக் காட்டினார்.

msd_13443.jpg

 

அப்போது வீரர்கள் சூழ்ந்து நிற்க, கேக் வெட்டத் தயாரானார் தோனி. கேக்கை வெட்டியதும், தவான் முன்னே வந்து கேக்கை தோனியின் முகத்தில் பூசுவதற்குத் தயாராவதற்கு முன்னதாகவே, தானே கேக்கில் தன் முகத்தை புதைத்துக்கொண்டு, தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாகக் கொண்டாடினார். இருந்தாலும், வீரர்கள் மீண்டும் ஒரு முறை அவர் மீது  கேக்கைப் பூசிக் கொண்டாடினர். 

 

இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகப் பரவிவருகிறது. 

  • தொடங்கியவர்

புதன் கிரக புதிர்களை அவிழ்க்க ஏழாண்டு பயணிக்கும் விண்கலன்

இருபது ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட பயணத்தை பூர்த்தி செய்ய ஏழு ஆண்டுகள் பயணித்தாக வேண்டும். புதன் கிரகத்துக்கான விண்கலன் அடுத்த ஆண்டு புறப்படும் என்று ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரு விண்கலங்கள் ஒன்றாக எட்டு கோடி கிலோமீட்டர்கள் பயணிக்கும்.
ஆனால், 400 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையில் அவை வெவ்வேறாக இறங்கி சோதனை செய்யும்.நம் சூரிய மண்டலத்தின் மிகச்சிறிய கிரகம் புதன். சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகமும் இதுவே.
பழமையான எரிமலைகள், நெடிதுயர்ந்த பாறைகள், ஆழமான பெரும்பள்ளங்களுமான மேற்பரப்பைக்கொண்டிருக்கும் இந்த கிரகத்தில் மிகக்குறைந்த ஆய்வுகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை மாற்றியமகைப்போகிறது இந்த மிகப்பெரிய புதிய ஆய்வு.
புகழ்பெற்ற இத்தாலிய விஞ்ஞானியான பேபி கொழும்பின் பெயரிடப்பட்டுள்ள விண்கலம் இது.
இதை உருவாக்க பத்தாண்டுகள் பிடித்தது. இந்த விண்கலனின் அருகில் செல்லும்போது தான் இதன் பிரம்மாண்டம் தெரிகிறது. அதிதீவிர சூழலைத்தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதன்கிரகத்தை அடைய சூரியனை நோக்கி பயணிக்க வேண்டும்.
அதாவது கடுமையான கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தை எதிர்கொள்ளவேண்டும். புதன்கிரக மேற்பரப்பில் வெப்பம் நானூற்றைம்பது டிகிரி செல்ஷியஸ் வரை எட்டலாம். ஈயத்தையே உருகச்செய்யும் வெப்பம் அது. அடுத்த ஆண்டு இது விண்ணில் ஏவப்படும்.
“இதுவரை நாம் மேற்கொண்ட மிகச்சவாலான முயற்சிகளில் இது ஒன்று” என்கிறார் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த மார்க் மெக்கொக்ரியன்.
“புதனை சென்றடைவது ஒரு நீண்ட பயணம். சூரியனை நெருங்கும்போது அதன் வெப்பத்தை சமாளிக்க வேண்டும். நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் குறித்த மேலதிக தகவல்களை நமக்கு வழங்கப்போகும் ஒரு புதிரான சிறிய உலகம் தான் புதன்கிரகம்”, என்கிறார் மார்க்.
பெபி கொலம்போவின் பயணத்திற்கு ஏழு ஆண்டுகள் பிடிக்கும். அதாவது 2025இல் தான் அது புதன்கிரகத்தை சென்றடையும்.
அங்கு சென்றவுடன் அதன் எஞ்சின் விலகி, இரண்டு விண்கலங்கள் தனியாக பிரியும்.இரண்டும் இணைந்து அரிய காட்சிகளை அனுப்பும்.
புதன்கிரகத்தின் தோற்றங்களை தெள்ளத்தெளிவாக பார்க்கமுடியும். புதன்கிரகத்தின் மையத்தில் என்ன இருக்கிறது என்ற மர்மத்தை தீர்க்க இது உதவும்.
இந்த திட்டத்துக்காக எக்ஸ் ரே கேமராக்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
“புதனிலிருந்து வரும் தகவல்களை இந்த பூமியில் பார்க்கப்போகும் முதல் மனிதர்கள் நாங்கள் தான்”, என்கிறார் இந்த திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானி எம்மா பன்ஸ்.
“புதனிலிருந்து வரும் எக்ஸ்ரே படங்கள் புதனின் மேற்பரப்பில் என்ன இருக்கிறது என்பதை காண்பிக்கப்போகிறது. நமது இதுநாள் வரையிலான புரிதலை அது மாற்றியமைக்கப்போகிறது”, என்கிறார் எம்மா.
மிக விரைவில் இந்த விண்கலம் தன் நீண்ட பயணத்துக்கு தயாராகிவிடும். நமக்கு முதல்கட்ட தகவல்கள் கிடைக்க சிறது காலம் பிடிக்கும். இதுவரை கண்டிராத காட்சிகளுக்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

  • தொடங்கியவர்

சினிமா வீடு: தேவர் மகனின் சிங்காநல்லூர் மாளிகை

 

 
Desktop2_3183943f.jpg
 
 
 

பல்வேறு தேவையின் பொருட்டு நாம் இயற்கையை அழித்து வருகிறோம். காடுகளை அழித்து கட்டுமானங்களை உருவாக்குகிறோம். விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிவருகிறோம். இந்தச் சூழலிலும் சில பகுதிகளின் இயற்கையான அம்சம் தப்பிப் பிழைத்திருக்கிறது. அந்தப் பகுதிகளில் காணும் இயற்கை அழகைக் காண யாருக்கும் விருப்பம் இருக்கும். இந்தப் பகுதிகள்தான் நாம் திரையில் காணும் இயற்கை எழில் கொஞ்சும் விவசாய நிலங்கள். அந்தப் பகுதிதான் பொள்ளாச்சி.

சினிமாவில் சிங்காநல்லூர் வீடு

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்கள் பொள்ளாச்சியின் இந்த இயற்கை தவழும் நிலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல இங்கு படமாக்கப்படும் சினிமாக்களில் நாயகன் அல்லது வில்லன்களின் வீடு என்று ஒரு வீடு காண்பிக்கப்படும். பிரம்மாண்டமான தூண்களுடன் செட்டுநாடு வீடுகளின் கம்பீரத்துடன் இருக்கும் இந்த வீட்டின் பெயர் ‘சிங்காநல்லூர் மாளிகை’. பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சிங்காநல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது இது.

இந்த வீட்டுக்கு மிகப் பெரிய அடையாளம் இங்கு படமாக்கப்பட்ட ‘தேவர் மகன்’ படம். சிவாஜி கணேசனின் வீடாக வரும் இந்த வீட்டில்தான் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. சிவாஜி கணேசன் கதாபாத்திரம் இறப்புக்குப் பிறகு கமல் ஹாசன் புதிய தோற்றத்துடன் மக்கள் முன்னால் அவதாரம் எடுக்கும் காட்சி இந்த வீட்டின் முகப்புப் பகுதியில் எடுக்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் மைல்கல்லாகிவிட்ட கமலுக்கும் சிவாஜிக்குமான பல வசனங்கள் இந்த வீட்டில் படமாக்கப்பட்டன. உதாரணமாக ‘இந்த ஊரைவிட்டே போய்டலாம்னு இருக்கேன்’ என கமலும் சிவாஜியும் பேசும் புகழ்பெற்ற வசனம் இந்த வீட்டின் நடுமுற்றத்தில் படமக்கப்பட்டது. அதுபோல் சிந்தர்.சி. இயக்கத்தில் ஜெயராம், கவுண்டமணி, குஷ்பு நடிப்பில் வெளியான முறைமாமன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த வீட்டில்தான் படமாக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் அண்மையில் வெளியான ‘கொடி’, ‘ஆம்பள’ உள்ளிட்ட பல படங்களும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன.

சிங்காநல்லூர் வீட்டின் கட்டிடக்கலை

கேரளக் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு இந்த வீடு உருவக்கப்பட்டுள்ளது. வீட்டின் நடுவில் கேரள வீடுகளில் காணப்படக்கூடிய நடுமுற்றம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடுமுற்றத்திலிருந்து பிரிந்து செல்லக்கூடிய வகையில் நான்கு திசைகளிலும் நான்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டின் கதவு, ஜன்னல், தூண்கள் அனைத்தும் தேக்கு மரத்தால் ஆனவை. நல்ல வெளிச்சமும் காற்றும் அறைக்கு உள்ளே வரும்படி ஒவ்வொரு அறையிலும் மூன்று ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டின் மேல்தளத்தில் மூன்று அறைகளும் பால்கனியும் அமைக்கப்பட்டிருக்கிறது. கதவுகள் அனைத்தும் நுட்மான வேலைப்பாடுகள் கொண்டவை. கதவின் பூட்டுகள்கூடக் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டினுள் நுழைந்ததும் மேற்குத் திசையில் சிறிய பூஜை அறை உள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை கொண்ட ஓடுகளைக் கொண்டு இந்த வீட்டின் கூரை வேயப்பட்டுள்ளது.

இந்த அரண்மனை 1934-ம் ஆண்டில் பழனிசுவாமியின் என்பவரின் உறவினரால் கட்டப்பட்டது. கேரளத்திலுள்ள குல்லுகப்பாறை என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டைக் கண்டு வியந்து, இதேபோலொரு வீட்டைத் தானும் கட்ட வேண்டும் என நினைத்துள்ளார் இந்த வீட்டை உருவாக்கிய பெயர் கண்டறியப்படாத பழனிசாமியின் உறவினர். அதற்குப் பிறகு இந்த வீடு பழனிசாமியிடமிருந்து வேறு ஒருவர் கைக்கு மாறியுள்ளது. இப்போது ‘கவுண்டர் வில்லா’ என்னும் பெயரில் சினிமாத் தயாரிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது,

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கனடா பிரதமர் ஜேர்மனியில்

  • தொடங்கியவர்

தென்னிந்திய மசாலா என்றால் என்னவென்று கூகுளுக்கு நாம் சொல்வோமா? #ThisIsNotSouthIndianMasala #LetsCleanGoogleResult

சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு ஸ்க்ரீன்ஷாட் பார்க்க நேர்ந்தது. அநேகமாக நீங்களும் அதைப் பார்த்திருப்பீர்கள். கூகுள் இமேஜில் 'North Indian Masala' என்று தேடினால் உணவுப் பொருட்களையும்.. 'South Indian Masala' கிளாமரான நடிகைகளின் படங்களையும் காட்டுகிறது என்று ஒருவர் பதிவேற்ற அது பரபரவென பற்றிக் கொண்டது. இது ’நாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு. இதெல்லாம் ஒரு மேட்டரா?’ என்று கடந்து போகக்கூடிய விஷயமோ...  ’ஹா ஹா’ ஸ்மைலி போட்டுவிட்டு ஸ்க்ரோல் செய்துவிடக்கூடிய பிரச்னையோ இல்லை. 

This is not south Indian Masala

இது சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாகக் களைய வேண்டிய பிரச்னை. ஏனென்றால் இன்று இணையம் பயன்படுத்தும் எல்லோருக்கும் கூகுள் தான் முதல் ஆசான். எந்த ஒரு சந்தேகத்திற்கும் முதலில் கூகுளைத்தான் நாடுகிறோம். எந்த ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வதென்றாலும் கூகுளில்தான் தேடுகிறோம் என்றிருக்கும் நிலையில், கூகுளில் காட்டப்படும் தகவல்கள் உண்மை என்றுதான் பெரும்பாலானோர் நம்புகிறோம். நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தில் கூகுள்  ரிசல்ட்தான் அதைப் பற்றிய நமது முதல் பிம்பம். அந்த பிம்பம் தவறாக இருக்கும் பட்சத்தில் அது தேடுபவர்களின் மனதில் தவறாகவே அடையாளப்படுத்தப்படும். இப்போது சொல்லுங்கள் இந்த ரிசல்ட் 'South Indian’ மக்கள் இப்படித்தான் என்று அடையாளப்படுத்துவதாகத் தானே இருக்கும். 

தவறு கூகுளுடையது தானே... இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது? அப்படி முழுக்க முழுக்க கூகுளின் மீது பழிபோட்டு நாம் தப்பித்துக்கொள்வது சரியல்ல. பாதித் தவறு நம்மீதும் உள்ளது என்பதால் கூகுள் ரிசல்டை சுத்தம் செய்ய வேண்டிய பொறுப்பும் நமதாகிறது. ஒரு சவுத் இந்தியனை சி.இ.ஓவாகக் கொண்ட கூகுளில் சவுத் இந்தியர்கள் இப்படித்தான் சித்தரிக்கப் படவேண்டுமா? இது கூகுள் இமேஜ் பற்றிய பிரச்னை இல்லை சவுத் இந்தியர்களின் ’இமேஜ்’ பற்றிய பிரச்னை. இன மானம், தன் மானம் என்ற பேச்செல்லாம் லைக்ஸூக்காக ஸ்டேட்டஸ் போட மட்டும்தானா? இணையத்தில் நம் மானம் காக்க களமிறங்க வேண்டாமா? 

இதை எப்படி சரி செய்யலாம்?

இந்த ரிசல்ட் ஏன் இப்படி வருகிறது? இதை எப்படி சரி செய்யலாம்? என்று பார்ப்பதற்கு முன் ஒரு சில ஃப்ளாஷ்பேக்ஸ். கூகுள் இப்படி தவறான ரிசல்ட் வந்து சர்ச்சை வெடிப்பது இது முதல்முறை அல்ல. மிகச்சரியாக ஓராண்டுக்கு முன்புகூட ஒரு பஞ்சாயத்தில் சிக்கியது கூகுள் இமேஜ் சர்ச். அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கூகுள் இமேஜில் இரண்டு விஷயங்களைத் தேடி அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவேற்றினார். சில நிமிடங்களில் தடதடவென ரீட்வீட்களை அள்ளிக் குவித்து வைரலானது. காரணம் கூகுள் காட்டிய ரிசல்ட். அந்த இரண்டு விஷயங்கள் என்ன தெரியுமா?  ‘Three black teenagers’ & ‘Three white teenagers’. இதில் ‘Three white teenagers' என்ற கீவேர்டுக்கு மூன்று வெள்ளை நிற சிறுவர்கள் சிரிப்பது.. விளையாடுவது என அழகான புகைப்படங்களாக காட்டியது. அதே ‘Three black teenagers' என்ற கீவேர்டுக்கு போலீஸ் வெளியிடும் கிரிமினல்களின் புகைப்படங்களில் இருக்கும் மூன்று கருப்பு நிற சிறுவர்களைக் காட்டியது. ’வெள்ளையர்களை அழகாகவும்... கருப்பர்களை கிரிமினல்களாகவும் காட்டுவதா??? நிறவெறி பிடித்த கூகுளே..!’ என்று கடுப்பாகி கூகுளை வறுத்தெடுத்தார்கள் நெட்டிசன்கள். ஏன் நம்மூரில் கூட “Top 10 criminals” என்று தேடினால் நரேந்திர மோடியின் படத்தைக் காட்டியதும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுவும் பல்வேறு எதிர்ப்புகளைக் கிளப்ப... அந்த ரிசல்டுக்கு மேலேயே ‘இது அல்காரிதம்(Algorithm) தரும் ரிசல்ட் மட்டுமே தவிர கூகுளின் கருத்தை பிரதிபலிக்கவில்லை’ என்று  வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. 

 

எப்படி இதுபோன்ற தவறுகள் நடக்கிறது?

இதற்கு முதலில் கூகுள் இமேஜ் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். கூகுளால் வார்த்தைகளைப் புரிந்து கொள்வதைப் போல இமேஜை புரிந்துகொள்ள முடியாது. இந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் என்று டிக்சனரியை வைத்து முடிவு செய்வதைப் போல இமேஜூக்கு டிக்சனரி போட முடியாதல்லவா? பிறகு எப்படி ஒரு இமேஜில் இதுதான் இருக்கிறது என்று முடிவுசெய்கிறது. இணையத்தில் ஒரு படம் பதிவேற்றப்பட்ட உடன் கூகுள் ஸ்பைடர் என்றழைக்கப்படக்கூடிய ஒரு ப்ரோக்ராம் அதைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்ளும். தொடர்ந்து எல்லா வெப்சைட்களிலும் நுழைந்து தகவல் சேகரிப்பதுதான் இதன் வேலையே. அப்படி சேகரிக்கும் போது அந்த இமேஜில் என்ன இருக்கிறது என்பதை, அதன் File name, கட்டுரையின் தலைப்பு, வெப்சைட்டில் அந்த இமேஜை சுற்றி இருக்கும் வார்த்தைகள் என சில விஷயங்களை வைத்து முடிவு செய்யும். இதெல்லாம் விட மிக முக்கியம் Alt Text. வெப்சைட்டில் ஒரு இமேஜை பதிவேற்றும்போது Alt Text என்ற ஃபீல்டில் அந்த இமேஜில் என்ன இருக்கிறது என்பதைத் தரவேண்டும். எந்த ஒரு வெப்சைட்டிலும் இருக்கும் படங்களின் மீது மவுஸ் கர்சரை வைத்தால் இந்த Alt Text ஐக் காணலாம். இந்த Alt Text தான் கூகுளுக்கு வேத வாக்கு. (உதாரணமாக கீழே உள்ள படத்தின் மீது உங்கள் மவுஸ் கர்சரை வைத்துப் பாருங்களேன்..!) 

தோசை

கூகுள் இமேஜில் நாம் ஒரு வார்த்தையைக் கொடுக்கும்போது மேலே சொன்ன லிஸ்ட்களை ஆராய்ந்து இதற்கு சரியான இமேஜ் எது என்று முடிவு செய்து கூகுள் தனது ரிசல்ட்டில் காட்டும்.  உதாரணமாக ஃபைல் நேம், Alt Text, கட்டுரையின் தலைப்பு எல்லாவற்றிலும் ’தோசை’ என்ற வார்த்தை இருந்தால் அந்த படத்தில் இருப்பது ‘தோசை’ என்று தானாக முடிவு செய்துகொள்ளும். ஆனால் தலைப்பில் மட்டும் ’தோசை’ என்ற வார்த்தை இருந்து உண்மையில் அது ‘இட்லி’யின் படமாக இருந்தால்..? கூகுளைப் பொறுத்தவரை அதை ’தோசை’ என்றுதானே நினைக்கும். அதே பிரச்னை தான் இந்த நார்த் இந்தியா சவுத் இந்தியா விஷயத்திலும். 

உண்மையில் வெறும் 'Indian Masala' என்று கூகுளில் தேடினால் கூட ஆபாசமான படங்கள் தான் பட்டியலிடப்படுகிறது. காரணம் சில இணையதளங்கள் தங்கள் இணையப் பக்கங்களுக்கு அப்படி பெயர் வைத்திருக்கின்றன. அதில் அப்லோடப்பட்டிருக்கும் படங்களுக்கு அவ்வாறு பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு ஏன் ‘North Indian Masala’ வுக்கு மட்டும் வரவில்லை? ஏனென்றால் அந்த பெயரில் ஆபாச இணையதளங்கள் குறைவாக இருக்கின்றன அதனால் உணவுப் பொருட்கள் வருகிறது. (நார்த் இந்தியர்கள் மசாலா என்கிற வார்த்தையை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை). 

கூகுள் தன்னை எப்படி திருத்திக்கொள்ளப் போகிறது?

Mob or Komondor

சில நாட்களுக்கு முன்பு நடந்த கூகுள் I/O 2017 கான்ஃப்ரன்ஸின் போது கூகுளின் Developer advocate, sara robinson சொன்னது நினைவுக்கு வருகிறது. வீடு துடைப்பதற்கு பயன்படும் மாப் (Mob) ஐயும் கிட்டத்தட்ட அதே தோற்றத்தில் இருக்கும் komondor வகை நாய்களையும் கூட பிரித்து அறியும் அளவிற்கு கூகுளின் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறதாம். (லிங்க்)  Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கூகுளில் வெப் சர்ச், முன்பை விட பன்மடங்கு முன்னேறிவிட்டாலும் இமேஜ் சர்ச்சில் தன்னை மேம்படுத்திக்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறது. முழுமையாக செயற்கை அறிவைப் பயன்படுத்தி தேடல்களுக்கு பதில் தருமளவிற்கு வளரும் வரை கூகுள் வார்த்தைகளை வைத்து மட்டும்தான் இமேஜில் என்ன இருக்கிறது என்ற முடிவுக்கு வரும். படத்தில் இருப்பது மங்கையா மசாலாவா என்று பிரித்தறியும் தொழில்நுட்பத்திற்கு சீக்கிரம் மாறுங்க  கூகுள்..!

அதுவரை வெயிட் பண்ணாமல் இதை எப்படி சரி செய்யலாம்?

நம்மால் என்ன செய்துவிட முடியும் என்கிறீர்களா? இரண்டு விதங்களில் இந்த ரிசல்டை நாம் மாற்றியமைக்க முடியும். ஒன்று கூகுள் Machine learning அடிப்படையில் இயங்குகிறது. அதாவது கூகுளில் ஒன்று தேடப்படும் போது முதலில் தன்னிடம் இருக்கும் சில ரிசல்ட்களுக்கு தானாக ஒரு ரேங்க் கொடுத்து எந்த ரிசல்ட் முதலில் வரவேண்டும், எது இரண்டாவது என்று முடிவு செய்து அதன்படி பட்டியலிடும். பிறகு நமது க்ளிக்குகளை கவனிக்கத் தொடங்கும்... அந்த லிஸ்டில் எதை அதிகமாக க்ளிக் செய்கிறார்கள் என்பதை வைத்து தனது ரேங்கை சரிசெய்துகொள்ளும். உதாரணமாக ஒரு தேடலுக்கு முதல் இமேஜை விட்டு விட்டு ஏழாவது இமேஜைத் தான் எல்லாரும் க்ளிக் செய்கிறார்கள் என்றால் சில நாட்களில் அந்த ஏழாவது இமேஜ் முதலில் காட்டப்படும். 

’South Indian Masala' என்று கூகுளில் தேடி ஒரு ஸ்க்ரோலுக்கு கீழே போனால் நம்மூர் மசால் தோசைகூட இருக்கும். அது போன்ற இமேஜ்களை க்ளிக் செய்து பார்க்கலாம். ஆயிரக்கணக்கானவர்கள் உணவுப் பொருட்களை க்ளிக் செய்யும்போது தானாகவே அவை மேலே வந்துவிடும். இது ஒரு வழி.

இன்னொரு வழி... நீங்கள் Blog அல்லது இணையதளம் வைத்திருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களின் கரம் தான் பெரிதாகத் தேவை. உடனடியாக உங்கள் Website / Blog / Google+ / Pinterest போன்ற தளங்களில் 'South Indian Masala' என்ற தலைப்புடன் நம்மூர் மசாலா உணவுகளைப் பதிவேற்றுங்கள். இப்படி பதிவேற்றும்போது அந்த படங்களின் File name, Alt Text போன்றவைகளில்  ‘South Indian Masala' என்றிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

File Name

உங்கள் வெப்சைட் என்ன மாதிரியானது என்பதைப் பொறுத்து ஆல்ட் டெக்ஸ்ட் வைப்பதற்கான முறை மாறும். பொதுவாக ப்ளாக்கில் ஒரு இமேஜ் அப்லோட் செய்தால் அந்த இமேஜின் கீழ் Image Properties என்று ஒரு ஆப்சன் வரும் அதைக் க்ளிக் செய்து ஆல்ட் டெக்ஸ்ட் கொடுக்கலாம். இந்த இமேஜை Pinterest இல் ஷேர் செய்யும்போது Description இல் ‘South Indian Masala’ என்று சேர்க்கலாம்.

How to change alt text in Blogger

 

#LetsCleanGoogleResults இதெல்லாம் செய்தால் ஒரே நாளில் சுத்தமாகுமா என்றால் நிச்சயம் ஆகாது. இப்படி நூறு பேர் செய்தால் நிச்சயம் விரைவில் மாறிவிடும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

யானை மாரத்தான்!
ஜிம்பாப்வேயில் நடந்த விக்டோரியா ஃபால்ஸ் மாரத்தானில் வீரர்கள் கால் நரம்பு துடிக்க ஓடிக் கொண்டிருந்தனர். திடீரென சாலை அருகிலிருந்த காட்டு யானையும் அவர்களோடு இணைந்தது! துரத்திய யானையால் பள்ளத்தில் விழுந்து எழுந்து ஓடிய வீரரின் வீடியோ இப்போது வைரல்!
14a.jpg
பேபிக்கு விமானம் தந்த கிஃப்ட்!
துருக்கிஸ் ஏர்லைன்ஸின் எண்: 971 விமானத்தில் கிரிஸ்டினா பென்டன், 36 வார கர்ப்பிணியாக விண்ணிலேறினார். நடுவானில் திடீரென குவா குவா சத்தத்தோடு குழந்தை டெலிவரியாக, உடனே நியூ ஆர்லியன்ஸ் நகரில் விமானம் இறங்கியது. கிரிஸ்டினாவின் குழந்தை ஆயுள் முழுக்க தங்கள் ஃபிளைட்டில் ஃப்ரீயாக பறக்கும் பரிசை அளித்து அசத்தியுள்ளது ஏர்லைன்ஸ் கம்பெனி.
14c.jpg
பிகினியில் வேலைவாய்ப்பு!
செக் நாட்டு மின்சாரவாரியம் தனது ஃபேஸ்புக் கணக்கில் ‘மிஸ் எனர்ஜி 2017’ தலைப்பில் 2 மாத இன்டர்ன்ஷிப்பை அறிவித்திருந்தது. ஆனால், 10 பள்ளி மாணவிகளை பிகினியில் நிற்க வைத்து அதில் ஒருவரை ‘மிஸ் எனர்ஜி’ என செலக்ட்  செய்யச் சொன்னதுதான் விபரீதம். நாடே கூடி மீம்ஸ்களால் வறுத்தெடுக்க, கம்பெனி என்ன செய்யும்? அறிவிப்பு உடனே வாபஸ்தான்!
14b.jpg
ஹைவே ஸ்டிக்கர் திருடர்!
அமெரிக்காவின் க்லீவ்லாண்டிலுள்ள அவோன் லேக் போலீஸுக்கு போர்டுகளை காணவில்லை என பலரும் புகார் செய்தனர். செக்யூரிட்டி கேமராவை செக் செய்தபோது, ரோடிலுள்ள போர்டுகள், ஸ்டிக்கர்களை ஜான் ஹோய்ஸெல் என்பவர் அபேஸ் செய்வது தெரிந்தது. அவரது வீட்டில் நடத்திய ரெய்டில் கிடைத்த போர்டுகளின் எண்ணிக்கை 500; அவற்றின் மதிப்பு  5,500 டாலர்கள். இவர் வேறமாதிரி திருடர்!

வெறுங்கையில் மெகா நண்டு!
ஆஸ்திரேலியா சூழலியலாளரான ப்யூ க்ரீவ்ஸின் கையிலிருந்த நண்டின் சைசை பார்த்து அவரது கேமராமேன்கூட அலறிவிட்டார். மெகா சைஸில் gargantuan crustacean என்ற நண்டை நூதனமாக அவர் பிடித்த வீடியோ ஆன்லைனில் செம ஹிட். நண்டு இருமுறை கடித்தும் விரல் துண்டான நிலையிலும் கூட அதை க்ரீவ்ஸ் விடவில்லையாம். மெகா தில்!
14e.jpg
டூத் பிரஷ்ஷில் நின்ற பேஸ்கட் பால்!

பஞ்சாபைச் சேர்ந்த உத்தம் சிங், தன் வாயிலுள்ள டூத்பிரஷ்ஷின் மீது பேஸ்கட்பாலை நிற்க வைத்து கின்னஸ் ரெக்கார்ட் செய்திருக்கிறார். ஊரே சூழ்ந்து நிற்க, கையில் ட்யூன் செய்த பேஸ்கட்பாலை மெல்ல வாயில் வைத்திருக்கும் டூத்பிரஷ் ஷுக்கு கொண்டுவந்து சுற்றியபடி 53 நொடிகள் நிற்க வைத்திருக்கிறார்!
14d.jpg

 

  • தொடங்கியவர்

ஹாரி பாட்டருக்கு 20 வயது!

 

HP_3183521f.jpg
 
 
 

உலக அளவில் கவனத்தை ஈர்த்த ஹாரி பாட்டர் கதையைச் சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் வாசித்தார்கள். அந்தப் புத்தகத்துக்கு வயது 20 ஆகிவிட்டது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சில சுவாரசியத் தகவல்கள்.

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு (1997, ஜூன் 26) ஜே.கே. ரவுலிங், ஹாரி பாட்டர் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகம் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது. அந்தப் புத்தகத்தின் மூலம் தன் மந்திர உலகுக்குள் ரவுலிங் எல்லோரையும் கொண்டுவந்தார். அதற்குப் பின் வரிசையாக 7 பாகங்களையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்கள் விற்பனையில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்தன. அது மட்டுமல்ல; திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது.

சிறுவர்களைக் குறிவைத்து எழுதப்பட்ட புத்தகமாக ஹாரி பாட்டர் இருந்தாலும் இளைஞர்களும் இந்தப் புத்தகத்தின் ரசிகர்களானார்கள். இந்தப் புத்தகம் பல சிறுவர்களுக்கு மட்டுமல்ல; இளைஞர்களுக்கும் வாசிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுத்தது. இதைப் படித்தவர்கள் பலருக்கும் ஹாரி, ஹெர்மாய்னி, ரான் ஆகியோர் படித்த ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் படித்து மந்திரங்களைக் கற்று அங்கு இருக்கும் நகரும் படிக்கட்டுகளில் ஏறி, மாயாஜாலத்தோடு பறக்கும் துடைப்பக் குச்சியில் (Broom stick) பறக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

ஹாரி பாட்டர் புத்தகம், இதுவரை சுமார் 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களின் ஆசிரியர் ஜே.கே. ரவுலிங், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தபோது, அதிலிருந்து மீண்டுவர இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய புத்தகத்தை, புளூம்ஸ்பெரி வெளியீட்டு நிறுவனத் தலைவரின் 8 வயது மகள் ஆலிஸ் நியூட்டன்தான் முதலில் படித்து, ‘இதுபோன்ற அருமையான புத்தகத்தைத் தான் படித்ததே இல்லை’ எனப் பாராட்டினார். அவர் படித்து முடித்த பின்புதான், ஹாரி பாட்டர் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியானது.

ஹாரி பாட்டரின் முதல் பாகம் வெறும் 500 பிரதிகள்தான் அச்சிடப்பட்டது, ஆனால், அதன் கடைசி பாகமோ, 12 மில்லியன் (1.20 கோடி) பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியானது. அதன் சுவாரசியம் முதல் பாகம் முதல் கடைசி பாகம்வரை ஒரே மாதிரியாக இருந்ததுதான் இந்தப் புத்தகத்தின் வெற்றிக்குக் காரணம்.

ஹாரி பாட்டர் வெளி வந்து 20 ஆண்டுகள் ஆனதைச் சிறப்பிக்கும் வகையில் ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டஸில் மாயாஜாலத்தைக் கொண்டுவந்து சிறப்பித்தது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘வலிந்து நுழைந்து பேசுதல் அழகல்ல’
 

image_43f8b2f343.jpgஉறவினர்களாயினும் சரி, எமக்கு வேண்டப்பட்ட எவராயினும் சரி, நாங்கள் உரிமை எடுக்கும்போது அது மிகையானதாக இருத்தலாகாது. 

எந்த வஞ்சனையுமின்றி, அப்பாவித்தனமாக உரிமையுடன் பேசும்போதும் பழகும்போதும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு அறவே பிடிக்காமல் போகலாம்.  

நீங்கள் ஒருவரது இல்லத்துக்குச் செல்லும்போது, அவர்களுக்கு அறிவித்துவிட்டுச் செல்லுங்கள். நீங்கள் செல்லும் வீட்டுக்காரர் சொந்தக் காரணங்களால் அந்த நேரம் உங்கள் வருகையை விரும்பாமலும் இருக்கலாம். 

எவரதும் அந்தரங்க வாழ்க்கையில் நீங்கள் வலிந்து நுழைந்து பேசுதல் அழகல்ல; உரிமையும் அல்ல. 

எதிலும் நாசுக்காகவும் எச்சரிக்கையும் கொண்டு இயங்கும்போது, அவர்கள் மீதான அன்பை மட்டும் நிலையாக வைத்திருங்கள். அவர்களுக்கு உங்களைப் பிடிக்காமல் இருந்தாலும் கூட! 

  • தொடங்கியவர்

ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்

 
ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இத்தாலியில் நடைபெறும் ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை குறிக்கும் பேரணி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபியட் 500 கார் ஆர்வலர்கள் ஐரோப்பா முழுவதிலிருந்து வருகை புரிந்துள்ளனர்.

மலிவான விலையில் நகரத்தில் ஓட்டுவதற்கு ஏதுவான இந்த கார் ஐரோப்பாவின் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக நிரூபித்து காட்டியது. இன்றைய தினம் வரை சுமார் 6 லட்சத்திற்கும் அதிகாமான கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தவார தொடக்கத்தில், நியுயார்க்கில் உள்ள மாடர்ன் ஆர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்பில், 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஃபியரட் 500 கார் ஒன்று புதிதாக இணைந்துள்ளது. அது இத்தாலியன் டிசைன் கிளாசிக் ரகத்தை சேர்ந்தது என அதன் தனித்துவம் குறித்து அங்கு முத்திரையிடப்பட்டுள்ளது.

ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் கார் ஆர்வலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

உலகின் விலை உயர்ந்த வீடு இதுதான்!

 
Desktop1_3183944f.jpg
 
 
 

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள செயிண்ட் ஜான் காப் ஃபெர்ரா என்ற இடத்தில், நீஸ், நதிக்கருகில் அமைந்திருக்கிறது ‘வில்லா லே செத்ர’(Villa Les Cedres). இந்த மாளிகை Cedres என்பது பிரெஞ்சில் தேவதாரு மரங்களைக் குறிக்கும். வில்லா லே செத்ர என்றால் ‘தேவதாரு மரங்களடர்ந்த வில்லா’எனப் பொருள். இது 187 ஆண்டுப் பழமை கொண்டது. ஒரு காலத்தில் பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்ட்டின் ஓய்வு மாளிகையாக இருந்திருக்கிறது. ஆனால் இதெல்லாம் அல்ல இதன் சிறப்பு. இன்றைய தேதியில் உலகின் மிக விலை உயர்ந்த வீடு இதுதான். இதுதான் இதன் பெருமை. இதன் மதிப்பு 100 கோடி யுரோ.

பத்து படுக்கையறைகள், வரவேற்பு அறை, ஒரு பிரம்மாண்ட நடன அறை, ஒரு தேவாலயம், 50 மீட்டர் நீளம்கொண்ட நீச்சல் குளம், குளிர்காலத் தோட்டம், முப்பது குதிரைகளைக் கட்டுவதற்கான லாயம் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது இந்த வில்லா. அத்துடன், 35 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்த வில்லாவின் தோட்டங்கள் ஐரோப்பாவிலேயே மிக அழகானவை என்று வர்ணிக்கப்படுகின்றன. இருபது பசுமைக் குடில்கள், பதினைந்தாயிரம் அரிய தாவரங்கள் இந்த வில்லாவில் பராமரிக்கப்படுகின்றன.

வெறும் இரண்டாயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்ட இந்தப் பகுதி, எப்போதும் பிரபலங்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் பிடித்த இடமாக இருந்திருக்கிறது. இந்த வில்லாவில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சார்லி சாப்ளின், எலிசபெத் டெய்லர் போன்ற சினிமா பிரபலங்கள், சோமர்செட் மாம், டேவிட் நிவென் போன்ற எழுத்தாளர்கள் தங்கியிருக்கிறார்கள்.

இந்தப் பத்து படுக்கையறை வில்லாவை விற்பதற்குக் கடந்த ஆண்டு முடிவுசெய்திருக்கிறார்கள். ‘கிராண்ட் மார்னியர்’ என்ற பிரபல மதுபானம் தயாரிக்கும் வம்சத்தினரின் கைவசம் இருந்த இந்த வில்லா, தற்போது கம்பாரி குழுமத்திடம் இருக்கிறது. அவர்கள் இந்த வில்லாவை விற்பதற்கு முடிவுசெய்திருக்கிறார்கள். இந்த வில்லா விற்பதால் கிடைக்கும் லாபத்தைப் பங்குதாரர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறது கம்பாரி நிறுவனம். இந்த வில்லா அமைந்திருக்கும் ‘செயிண்ட்-ஜான் -காப்- ஃபெர்ரா’வில் ஒரு சதுர அடி 2,00,000 யுரோக்களாக இருக்கிறது. இது உலகத்திலேயே மிக அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வில்லாவை வாங்குவதற்கு உலகளவில் கடும்போட்டி நிலவுகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 1 Person, Sonnenbrille und Hut
 

ஜூலை 9: இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு
 

தமிழ் சினிமாவின் பீஷ்மர். உறவுகளுக்கு, உணர்வுகளுக்குப் புது வண்ணம் பூசிய பிதாமகன். செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள்.
தஞ்சைத் தரணியின் நன்னிலம் - நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜுலை 1930-ல். கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்!
சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்திவந்தார். 'மேஜர் சந்திரகாந்த்' மிகப் பிரபலமான நாடகம். 'எதிர் நீச்சல்', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!
கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவாராம் ரஜினி!
100க்கும் மேல் படங்களை இயக்கி இருக்கிறார். முதல் படம், 'நீர்க்குமிழி'.
ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில். கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!
தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!
பி.எஸ்சி., முடித்துவிட்டு முத்துப்பேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். 'தென்றல் தாலாட்டிய காலம்' என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்!
தோட்டக் கலையில் ஆர்வம். யார் உதவி யையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்புவார்!
ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல்
எம்.ஜி.ஆரின் 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியைவைத்து 'எதிரொலி' என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!
மலையருவியும் கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் சேர்த்தவர்!
கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 50க்கும் மேற்பட்ட படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணிவிடலாம்!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார் பாலசந்தர். 'ஏக் துஜே கேலியே' மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய 'தேரே மேரே பீச் மே' இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!
பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!
அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். 'இரு கோடுகள்' படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!
படங்கள் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால், உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். '16 வயதினிலே' பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறிவிட்டார் பாரதிராஜா!
ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!
தூர்தர்ஷனில் 1990-ல் வெளிவந்த இவரது 'ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் ஆரம்ப விதை போட்டார்!
இந்திய திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை இந்திய அரசு 2010 ஆம் ஆண்டு அளித்தது.

  • தொடங்கியவர்

ஒலிம்பிக்கில் 30 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா சேர்ப்பு (9-7-1991)

தென்ஆப்பிரிக்கா 1904-ம் ஆண்டும் முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வந்தன. அங்கு ஏற்பட்ட நிறவெறி தாக்குதல் காரணமாக 1964 முதல் 1988 ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1991-ம் நடைபெற்ற ஒலிம்பி்கில் கலந்து கொண்டது. மேலும் இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள் * 1900 - ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொது நலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார். * 1903 - யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

 
 
 
 
ஒலிம்பிக்கில் 30 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா சேர்ப்பு (9-7-1991)
 
தென்ஆப்பிரிக்கா 1904-ம் ஆண்டும் முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வந்தன. அங்கு ஏற்பட்ட நிறவெறி தாக்குதல் காரணமாக 1964 முதல் 1988 ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1991-ம் நடைபெற்ற ஒலிம்பி்கில் கலந்து கொண்டது.

மேலும் இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்

* 1900 - ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொது நலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.

* 1903 - யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

* 1943 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தனர்.

* 1948 - பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.

* 1982 - ஐக்கிய அமெரிக்க போயிங் விமான லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 146 பேரும் தரையில் இருந்த 8 பேரும் கொல்லப்பட்டனர்.

* 1995 - யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

* 2002 - ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.

* 2006 - சைபீரியாவில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 122 பேர் பலியானார்கள்.

* 2006 - அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.

 

 

இத்தாலி 4-வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது - (9-7-2006)

2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, பிரான்சை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. 32 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி- பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது.

 
 
 
 
இத்தாலி 4-வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது - (9-7-2006)
 
2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, பிரான்சை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. 32 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.

இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி- பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது.

இதில் இத்தாலி 5-3 என்ற கணக்கில் வென்று உலககோப்பையை 4-வது முறையாக கைப்பற்றியது.

இந்தத் தொடரின் சிறந்த கோல்கீப்பராக இத்தாலியைச் சேர்ந்த பபோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸ் தங்க ஷுவைப் பெற்றார்.

இதற்கு முன் இத்தாலி 1934, 1938 மற்றும் 1982-ம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை கைப்பற்றியிருந்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஜீவநாயகம் சிரில் டேனியல்

 
daniel_3184185f.jpg
 
 
 

இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு ஆராய்ச்சியாளர் ஜீவநாயகம் சிரில் டேனியல் (Jeevanayagam Cyril Daniel) பிறந்த தினம் இன்று (ஜூலை 9), அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* நாகர்கோவிலில் பிறந்தார் (1927). சொந்த ஊரிலேயே பள்ளிக் கல்வி கற்றார். விலங்குகளின் மீதான அம்மாவின் நேசம் இவருக்கும் தொற்றிக் கொண்டது. நரிகளின் ஊளை, ஆந்தைகளின் அலறல் நமக்கு ஏதோ சேதி சொல்கின்றன என்று அம்மா கூறக்கேட்டு, இது போன்ற ஏராளமான நுணுக்க மான விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.

* உயிரினங்கள் குறித்து மேலும் மேலும் அறிந்துகொள்ளும் இவரது ஆசையை நிறைவேற்றுவதில் இவரது தந்தையும் துணை நின்றார். திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நூலகத்தில் இயற்கையியல், ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான ஏராளமான நூல்களைப் படித்தார்.

* சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சலீம் அலியின் பணிகளால் உத்வேகம் பெற்றார். நீர், நில வாழ்வினங்கள், குறிப்பாக இவற்றில் அழியக்கூடிய ஆபத்தில் உள்ள ஆசிய யானைகள், காட்டு எருமை, புலி, வரையாடு, உப்புநீர் முதலை, கானமயில் குறித்தெல்லாம் ஆராய்ந்தார். பறவைகள் வலசை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* சலீம் அலியின் நட்பைப் பெற்ற இவர், பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் சேர்ந்தார். 1950களில் அதன் காப்பாளராகத் தன் பணியைத் தொடங்கினார். பின்னர் அதன் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

* இந்தப் பணியின்போது களப்பணிகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு அவை குறித்து, கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார். பல இயற்கை, வன உயிரி ஆய்வாளர்களையும் உருவாக்கினார். உலகப் பாதுகாப்பு அமைப்பு, உலக ஊர்வன மாநாடு, குரங்கினம், ஆசிய யானை, முதலை, பாம்புகள் ஆகியவற்றுக்கான நிபுணர் குழுக்களில் முக்கிய அங்கம் வகித்தார்.

* கோடியக்கரை, கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் உயர்ந்த பகுதிகளிலும் சத்தீஸ்கர் மாநிலம் பஸ் தாரில் உள்ள தீபகற்பக் காடுகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

* இந்திய வன உயிர்கள் நிறுவனத்தின் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் கல்விக் குழுக்களில் இடம்பெற்றிருந்தார். பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக ஆய்வு இதழின் நிர்வாக ஆசிரியராக சுமார் 40 ஆண்டு காலம் செயல்பட்டார். இயற்கை ஆர்வலர்களுக்காக ‘ஹார்ன்பில்’ என்ற இதழைத் தொடங்கினார்.

* ‘தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் அன்ட் ஆம்பிபியன்ஸ்’, ‘ஏ வீக் வித் எலிபன்ட்ஸ்’, ‘ஏ செஞ்சுரி ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி’, ‘பேட்ஸ் ஆஃப் இன்டியன் சப் கான்டினன்ட் ஏ ஃபீல்ட் கைட்’, ‘கன்வர்ஷன் இன் டெவலப்பிங் கன்ட்ரீஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தான் குருவாக மதித்த சலீம் அலி எழுதிய ‘தி புக் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ்’ நூலைத் திருத்தி அவரது நூற்றாண்டு விழாவில் அதன் 12-வது பதிப்பை வெளியிட்டார்.

* பீட்டர் ஸ்காட் பாதுகாப்பு விருது, சாங்ச்சுவரி இதழ் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆசிய யானைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக கேரள வேளாண்மைப் பல்கலைக்கழக விருது, இந்திராகாந்தி பர்யாவரன் புரஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

* முதுமையடைந்து, நோய்வாய்ப்பட்ட நிலையிலும்கூடத் தன்னை நாடி வரும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். சர்வதேச அளவில் ‘ஜே.சி.’ என பிரபலமடைந்த ஜீவநாயகம் சிரில் டேனியல் 2011-ம் ஆண்டு 84-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் கற்பனையில் டிரம்ப் - புதின் சந்திப்பு

 
டிரம்ப் மற்றும் புதின்படத்தின் காப்புரிமை@TODD_SPENCE/TWITTER

ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு இடையில் முதலாவது சந்திப்பு நடைபெற்றது. ஆனால், அந்த சந்திப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் கற்பனை செய்து முன்னதாகவே பல படங்களை வெளியிட்டனர்.

டிரம்ப் மற்றும் புதின் உருவப்படம்படத்தின் காப்புரிமைSTARECAT

உலகில் மிகவும் வலிமையானவர்களாகக் கருதப்படும் இந்த இரு தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் கலந்துரையாடலை முன்னிட்டு டிவிட்டர் பதிவுகளில் நகைச்சுவை மற்றும் கணினி மென்பொருட்களின் உதவியோடு திருத்தப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்திற்கு முன்பாகவே, இந்த இருவருக்கு இடையிலான உறவு கடந்த பல மாதங்களாக ஊகிக்கப்பட்டு வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டாலும், அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு எதிராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்புக்கு ரஷ்யா மிகவும் ஆதரவு காட்டியதாக எழுந்த பார்வையாலும் இந்த இரு தலைவர்களுக்கு இடையிலும் தொடர்பு இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.

புதின் தன்னுடைய ஆதாயத்திற்கு டிரம்ப் பயன்படுத்துவது போன்ற படங்கள்படத்தின் காப்புரிமைFILMYSTIC/@THEJETSETER/TWITTER

குறிப்பாக, இந்த இரு தலைவர்களுக்கு இடையிலான உறவு பற்றி விமர்சிப்போர், ஜெர்மனியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னர் புதின், அதிபர் டிரம்பை அவருடைய ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்வது போல படங்களை பகிர்ந்துள்ளனர்.

டிரம்ப் மற்றும் புதின்படத்தின் காப்புரிமைREUTERS

டிரம்பும், புதினும் ஹாம்பர்க்கில் கேமராக்களுக்கு முன்னால் தோன்றியபோது, கைகுலுக்கியும், புன்னகைத்தும் கொண்டனர். இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், பேச்சுவார்த்தைகள் நன்றாகவே நடந்தன என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

டிரம்ப் மற்றும் புதின்படத்தின் காப்புரிமை@TODD_SPENCE/TWITTER

சிரியா நெருக்கடி மற்றும் உக்ரைன் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும், இருவரும் பரஸ்பர புரிதலும், அன்பும் கொண்டுள்ளதாக காட்டும், டிரம்பும் புதினும் முத்தமிடுவது போன்று உருவாக்கப்பட்ட இந்தப் படம் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் பற்றி புதின் கொண்டிருக்கும் பார்வைகளால் புதின் பாதுகாப்பாக இருக்கிறார். "புதிய கருத்து" கொண்ட "நேரிடையான, வெளிப்படையான" மனிதர் என்று ஜூன் மாதம் புதின் அமெரிக்க அதிபர் பற்றி தெரிவித்த கடைசி கருத்தாகும்.

டிரம்ப் மற்றும் புதின்படத்தின் காப்புரிமை@PAULREVERE42/TWITTER

சமீபத்தில் டிரம்ப் கருத்துக்கள் கூறாமல் சற்று ஒதுங்கி இருந்தாலும், ரஷ்ய அதிபர் தெரிவித்தற்கு சமமான கருத்துக்களையே டிரம்பும் தெரிவித்திருக்கிறார்.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற 20 நாடுகள் குழு கூட்டத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களில் 76 காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Pflanze, Natur und im Freien

Bild könnte enthalten: Pflanze, Baum, im Freien und Natur

Bild könnte enthalten: Pflanze, Natur und im Freien

தொட்டா சிணுங்கி.

போனவாரம் இங்கு ஒரு கடையில் இருந்தது.

  • தொடங்கியவர்

“வான்வழி பார்வையில்'' - அபாரமான ட்ரோன் படங்களின் தொகுப்பு

 

இந்த வருடம் ட்ரோன்ஸ்டாகிராம் என்ற ஆன்லைன் தளத்தால் நடத்தப்பட்ட, வான்வழி புகைப்பட போட்டிகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நேஷனல் ஜியோகிராபிக் துணை இயக்குனர் பேட்ரிக் விட்டி, நேஷனல் ஜியோகிராபிக் பிரான்ஸ் புகைப்பட ஆசிரியர் இமானுலா அஸ்கோலி மற்றும் ட்ரோன்ஸ்டாகிராம் குழு போன்றோர் நீதிபதிகளாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தேடுத்தனர்.

நான்கு பிரிவுகளின் கீழ் வென்ற படங்களை இங்கே ரசிக்கலாம்.

இயற்கை

டிரான்சில்வேனியாவிலுளள் ஒரு சாலை, ருமேனியா

இரண்டாம் பரிசை காளின் ஸ்டான் பெற்றார். ``இந்த சாலை கவுண்ட் ட்ராகுளா பிறந்த இடமான, ஷிகிஸோராவிற்கு ( ருமேனியா) செல்கிறது. அவரது விமானத்தில் இருந்து, தனது நாட்டை பார்ப்பது போல் இருப்பதாக அம்மேதை கூறுகிறார்.`` என்கிறார் ஸ்டான்.

 

 

புரோவேன்ஸ் உள்ள லாவண்டர் வயல், பிரான்ஸ்

ப்ரான்ஸில் உள்ள புரோவேன்ஸ் பகுதியில், லாவண்டர் அறுவடையின் போது ஜே கோர்டியால் எடுத்த புகைப்படம் இயற்கை பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது. ``பின்னணியில் சூரியன் மறையும் ஓர் அற்புதமான காட்சியை விட, இவ்விடத்திற்கு தகுந்தஓர் உண்மையான படம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வலேன்சோல் சென்றேன். அது அறுவடை காலத்தின் தொடக்கம் என எனக்குத் தெரியும், அதனால் டிராக்டர்களை கேமரா மூலம் பின் தொடர்ந்தேன். மேலிருந்து பார்க்கும் போது அருமையான வடிவமைப்பை கொடுக்கும், முறையான வடிவிலான அறுவடையை சிலர் ஆரம்பிக்கும் வரை காத்திருந்தேன்.`` என்கிறார் அவர்.

 

 

கிரீன்லாந்தின் கிழக்கு பகுதியில் கடல் பனி உருவாகுமதல், பிப்ரவரி 2017

கிழக்கு கிரீன்லாந்தில் கடல் பனி உருவாகும் புகைப்படத்தை எடுத்த ப்ளோரேய்ன் முன்றாம் இடத்தை பெற்றார்.

 

 

நகரம்

வானளாவிய கட்டடங்கள், துபாய்

துபாயின் உயர்ந்த கட்டடங்களை மையமாக வைத்து புகைப்படம் எடுத்த பாக்ஹிர்ம், நகர்புற பிரிவில் சிறந்த புகைப்பட பரிசை வென்றார்.

 

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள மெர்குரி சிட்டி டவர் கட்டிடத்தின் கண்ணாடிகளை தொழிலாளர்கள் சுத்தம் செய்வதை அலெக்ஸ்யேகோ படம்பிடித்துள்ளார்.

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள மெர்குரி சிட்டி டவர் கட்டிடத்தின் கண்ணாடிகளை தொழிலாளர்கள் சுத்தம் செய்வதை அலெக்ஸ்யேகோ படம்பிடித்துள்ளார்.

 

நகர சுற்றுச்சூழல், மாட்ரிட், ஸ்பெயின்

அமைதி என்ற தலைப்பில் ஸ்பெயினின் மாட்ரிட் மேலிருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்டத்தை லக்கிட்ரோம் எடுத்துள்ளார். நகர பிரிவில் இப்புகைப்படம் முன்றாம் இடத்தை பெற்றது.

 

மக்கள்

டென்னிஸ் ஆடுகளத்தில் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் ஒருவர்

கோட்டின் முடிவு என்ற தலைப்பு வைக்கப்பட்ட இப்புகைப்படம் மக்கள் பிரிவில் முதலிடத்தை பெற்றது. இப்புகைப்படத்தை எடுத்த மார்டின் சான்சேஸ்,`` நீங்கள் ஒரு புதிய உலக கண்ணோட்டத்தை சுற்றி நடக்கும் போது, மேலே என்ன இருக்கிறது கீழே என்ன இருக்கிறது என்பதை மறந்துவிடுவீர்கள்`` என்றார்.

 

வியட்நாமில் உள்ள மீகாங் டெல்டாவில் உள்ள ஒரு குளத்தில், அல்லிப் பூக்களை பறிக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஹெலிஓஸ்1412 எடுத்துள்ளர். இப்புகைப்படம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

வியட்நாமில் உள்ள மீகாங் டெல்டாவில் உள்ள ஒரு குளத்தில், அல்லிப் பூக்களை பறிக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஹெலிஓஸ்1412 எடுத்துள்ளர். இப்புகைப்படம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

 

 

ஸ்பெயினின் சிலியோவில் நடந்த `லா விஜனேரா` என்ற குளிர்கால முகமூடி திருவிழா நிகழ்வினை படம் பிடித்த பீலீங்மூவி மூன்றம் இடம் பெற்றார்.

ஸ்பெயினின் சிலியோவில் நடந்த `லா விஜனேரா` என்ற குளிர்கால முகமூடி திருவிழா நிகழ்வினை படம் பிடித்த பீலீங்மூவி மூன்றம் இடம் பெற்றார்.

 

 

படைப்பாற்றல்

ட்ரோன்ஸ்டாகிராம் சமூகத்தின் படைப்பாற்றலை அடையாளம் கண்டுகொள்ள சிறப்பு வகை இந்த ஆண்டு இருந்தது.

லூக்கா மாக்சிமோ பெல்லின் இப்புகைப்படத்தில், இரண்டு மாடுகள் காலை நேரத்தில் தண்ணீர் குடிக்கின்றது. மாட்டின் நிழல் தண்ணீரில் தெரிகின்றன.

லூக்கா மாக்சிமோ பெல்லின் இப்புகைப்படத்தில், இரண்டு மாடுகள் காலை நேரத்தில் தண்ணீர் குடிக்கின்றது. மாட்டின் நிழல் தண்ணீரில் தெரிகின்றன.

 

 

குழந்தை தள்ளுவண்டிக்கு அருகில் படுத்திருக்கும் ஒரு ஜோடி

``நானும் என் காதலியும் விரைவில் பெற்றோர்களாகப் போகிறோம். இதனை எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு தெரிவித்த இப்புகைப்படம் ஒரு வேடிக்கையான மற்றும் நேரடி வழியாக இருக்கும். பள்ளி வீடியோ கேம்ஸ் ஆர்வம் காரணமாக இப்புகைப்பட எடுக்க உந்தப்பட்டேன்`` என்கிறார் மேக்ரேக்ஸ் புரொடக்சன்ஸின் திபோட் பேகூ.

மணல் பகுதியில் எடுக்கப்பட்ட மற்றொரு படம் படைப்பாற்றல் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. திறந்த கடற்கரையில் புகைப்படம் எடுக்கும் சிரமத்தை ர்காவின் புகைப்படம் காட்டுகிறது.

 

மணல் பகுதியில் எடுக்கப்பட்ட மற்றொரு படம் படைப்பாற்றல் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. திறந்த கடற்கரையில் புகைப்படம் எடுக்கும் சிரமத்தை ர்காவின் புகைப்படம் காட்டுகிறது.

 

புகைப்படங்கள் dronestagr.am.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எறும்புகளுக்கு ஓர் அழகான வீடு' - குழந்தைகளுக்கான இரவு நேரக் கதை! #BedTimeStory

குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இது ஆரோக்கியமானது அல்ல. கதைகளே குழந்தைகளுக்குப் புதிய உலகத்தை அறிமுகப்படுத்தும். அவர்களின் கற்பனை ஆற்றலையும் சொல் வங்கியை அதிகரிக்கவும் கதைகளே உதவும். இரவு நேரத்தில் கதைகள் சொல்லி உறங்க வைக்கும்போது, அவர்களின் கனவில் அந்தக் கதை காட்சிகளாக விரியும். உங்களின் குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் சொல்ல அழகான கதை இதோ!

கதை

'எறும்புகளுக்கு ஓர் அழகான வீடு' -
விழியன்.

அக்காவும் தம்பியும் மினியேச்சர் உருவங்களைச் செய்வதில் கில்லாடிகள். பூதக்கண்ணாடி வைத்துச் சின்னச் சின்ன உருவங்களை உருவாக்க ஆரம்பித்தார்கள். அரிசியில் பெயரை எழுதிப்பார்த்தார்கள். 'இதுபோல எல்லோருமே செய்கிறார்களே நாம் ஏதேனும் புதுமையாகச் செய்யலாம்' என்றான் தம்பி. இருவரும் யோசித்தனர். சிறிது நேரம் கழித்து, தம்பியே ஒரு யோசனை சொன்னான்.

“அக்கா, நாம ஒரு எறும்பு வீடு செய்வோமா? அழகான அறை, படுக்கைகள், சாப்பாடு அறை என அருமையான வீடு செய்யலாம். பார்த்தாலே பிடிக்கும் வண்ணத்தில் செய்து வைப்போம். இரண்டு எறும்புகளைப் பிடித்து உள்ளே போடுவோம். சாப்பாடு வைக்க ஓர் இடத்தை மட்டும் திறந்து வைப்போம்” என்று கூறினான்.

"அடடா... நல்ல யோசனையாக இருக்கே" என்று அக்காவும் ஒத்துக்கொள்ள,  இருவரும் எறும்புக்கு வீடு கட்டும் வேலையில் இறங்கினார்கள். எறும்பின் வீடு எப்படி இருக்கும் என்று முதலில் அவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு உயரத்துக்கு இருக்கும் என முடிவு எடுக்க முடியவில்லை. எறும்பை விட எல்லாமே பத்து மடங்கு அதிகமாகச் செய்யலாம் எனத் தம்பி கூறினான். மிகச்சிறிய கட்டில்களையும் எறும்பிற்கு போர்வையையும் தயார் செய்தனர். ஒரு குட்டி மேஜை, அதற்கு ஏற்ற குட்டி இருக்கையும் செய்ய யோசித்தார்கள். “அவங்க டேபிள்ல உட்கார்ந்தா சாப்பிடுவாங்க” என்ற கேள்வியால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் அக்கா.

ஒரு மாதத்திற்குப் பிறகு, எறும்பின் வீடு தயாரானது. பள்ளிக்குச் சென்று வந்த பிறகு கிடைத்த நேரத்திலும் விடுமுறை நாள்களிலும் எறும்பின் வீட்டினைச் செய்து முடித்திருந்தனர்.

“அக்கா, இப்ப நாம எறும்புகளை இங்கே கொண்டு வரவேண்டும்” என்றான் தம்பி. அதற்கும் அவனே திட்டம் போட்டான். வீட்டில் எந்தப் பகுதியில் எறும்புகள் இருக்கின்றன எனத் தேடினான். வீட்டிற்குள் அவை எங்கும் இல்லை. தோட்டத்தில் ஓர் இடத்தில் எறும்பு புற்று இருப்பதைப் பார்த்தான். ஒரு கவரில் கொஞ்சம் சர்க்கரையைப் போட்டு புற்றின் அருகே வைத்தான். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது அதில் ஒரே ஒரு எறும்பு இருந்தது. ”ஹைய்யா.. “ எனத் துள்ளி குதித்தான்.

“அக்கா… அக்கா… அக்கா.. எங்க இருக்க. நான் எங்கயோ மாட்டிகிட்டேன். என்னைக் காப்பாத்து” எனக் கத்திக்கொண்டே இருந்தது தம்பி எறும்பு. அது மாட்டிக்கொண்டு இருந்த கவரை யாரோ எடுப்பது அதற்குத் தெரிந்தது. எங்கோ அழைத்துச் செல்கின்றார்கள் நாம ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் எனப் பயந்தது தம்பி எறும்பு. மேலே இருந்து கவர் திறந்து விடப்பட்டதும் அழகிய மாளிகைக்குள் சென்றது போன்ற உணர்வு. அழகான குட்டிக் கட்டில்களும் குட்டி போர்வையும், சின்னச் சின்ன ஜன்னல்களும் இருந்தன. நான்கு கண்கள் தம்பி எறும்பைப் பார்ப்பது போல இருந்தது ஆனாலும் அது பாதுகாப்பாகவே உணர்ந்தது. உடனே அதற்கு ஓர் எண்ணம் தோன்றியது.

கதை

“அக்காவை எப்படியாவது இங்கே கொண்டு வந்து காட்ட வேண்டும். அக்கா ரொம்பவே சந்தோஷப்படுவாள்" என எண்ணியது. சின்னக் கதவு வழியே வெளியே சென்றது. தான் வந்த பாதையை நினைவில் வைத்துக்கொண்டது. தோட்டத்துக்குச் செல்ல எந்தத் திசையில் போக வேண்டும் என அங்கே சென்ற கரப்பான்பூச்சியிடம் கேட்டுக்கொண்டது. கரப்பான் வழிகாட்ட தோட்டத்திலுள்ள அதன் பொந்தினை அடைந்தது. அக்காவிடம் காதில் ரகசியமாக வெளியே வா என அழைத்தது. “என்னடா தம்பி, என்னாச்சு சொல்லு” என வெளியே வந்தது. அங்கே எறும்புகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன.

“அக்கா உனக்கு நான் ஒரு மாளிகை கண்டுபிடிச்சு இருக்கேன். வா என்கூட” என்றது வந்த வழியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றது. எறும்பு வீட்டில் கதவைத் திறந்தது அவர்களுக்கு உள்ளே ஓர் ஆச்சர்யம் காத்து இருந்தது. அழகிய வீட்டிற்குள் சின்ன டப்பாவிற்குள் சர்க்கரை. மூன்று நாட்கள் அதனைச் சாப்பிடலாம். வேலையே செய்யத் தேவையில்லை.

கட்டிலில் இருவரும் படுத்துக்கொண்டார்கள். மகிழ்வாகக் கதைகள் பேசினார்கள். உறங்கினார்கள். மறுநாள் காலை எழுந்தார்கள். சாப்பிட சாப்பிட சர்க்கரை நிரம்பிக்கொண்டே இருந்தது. யாரோ நிரப்பிக்கொண்டே இருந்தார்கள். மூன்று நாள்கள் இப்படியே கழிந்தது. நான்காம் காலையில் சூரியன் உதித்தது.

“தம்பி, நாம நம்ம இடத்துக்கே போகலாம். நம்ம உணவை தேடிச் சாப்பிட்ற சுகம் இதில வரல. அதுவும் இல்லாம நம்ம நண்பர்கள் உறவினர்கள் கூட பாதி வயிறு சாப்பிட்டாக்கூடப் போதும். வா.” என்று இருவரும் கிளம்பிவிட்டனர்.

ஏன் எறும்புகள் காணாமல் போனது என வீட்டைக் கட்டிய அக்காவும் தம்பியும் குழம்பினார்கள். அந்த எறும்பின் வீட்டினை எறும்பின் புற்றுக்கு அருகிலே வைத்துவிட்டார்கள். எறும்பின் வீடு எறும்புகளின் சுற்றுலா தளமானது.
 

உமாநாத்

 

விழியன்: சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய மாகடிகாரம் எனும் சிறுவர் நூல் விகடன் விருது பெற்றது. குழந்தை வளர்ப்புத் தொடர்பாகவும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

1991 : தென் ஆபிரிக்கா மீண்டும் ஐ.சி.சி. அங்கத்துவம் பெற்றது

வரலாற்றில் இன்று….

ஜூலை 10

 

1212 : லண்டன் நகரின் பெரும்­ப­குதி தீயினால் அழிந்­தது.


1778 : பிரிட்­ட­னுக்கு எதி­ராக பிரான்ஸின் 16 ஆம் லூயி மன்­னனால் யுத்தப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டது.


1821 : ஸ்பெய்­னி­ட­மி­ருந்து வாங்­கப்­பட்ட புளோ­ரிடா பிராந்­தி­யத்தை அமெ­ரிக்கா பொறுப்­பேற்­றது.


Southafrica_cricket_logo1913 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் 56.7 பாகை செல்­சியஸ் வெப்­ப­நிலை பதி­வா­கி­யது. அமெ­ரிக்க வர­லாற்றில் பதி­வு­செய்­யப்­பட்ட மிக அதி­க­மான வெப்­ப­நிலை இது.


1921 : வட அயர்­லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 16 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1938 : ஹோவார்ட் ஹியூஸ் என்­பவர் 91 மணித்­தி­யா­லங்­களில் விமா­னத்தில் உலகை சுற்­றி­வந்து சாதனை படைத்தார்.


1942 : சோவியத் யூனி­ய­னுக்கும் நெதர்­லாந்­துக்கும் இடையில் இராஜ­தந்­திர உறவு ஆரம்­ப­மா­கி­யது.

 
1947 :  பாகிஸ்­தானின் முதல் ஆளுநர் நாய­க­மாக முஹமட் அலி ஜின்­னாவை பிரித்­தா­னிய பிர­தமர் கிளெமென்ட் அட்லி சிபா­ரிசு செய்தார்.


1962 : உலகின் முத­லா­வது தொலைத்­தொ­டர்பு செய்­ம­தி­யான டெல் ஸ்டார், நாசா­வினால் விண்­வெளிக்கு  ஏவப்­பட்­டது.


1973 : பஹா­ம­ஸுக்கு பூரண சுதந்­திரம் வழங்­கப்­பட்­டது.


1991 : தென் ஆபி­ரிக்­காவில் நிற­வெறி ஆட்சி முடி­வுற்­ற­தை­ய­டுத்து அந்­நாடு மீண்டும் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் (ஐ.சி.சி) அங்­கத்­துவம் பெற்­றது.


1992 : பனா­மாவின் முன்னாள் ஆட்­சி­யாளர் மனுவெல் நொரி­கா­வுக்கு போதைப் பொருள் கடத்தல் விவ­காரம் தொடர்­பாக அமெ­ரிக்க நீதி­மன்­றத்­தினால் 40 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 


2000 : நைஜீ­ரி­யாவில் எரி­வாயு குழா­யொன்றில்  வெடிப்பு ஏற்­பட்­டதால் 250 பேர் உயி­ரி­ழந்­தனர். 


2003 : ஹொங்­கொங்கில் இடம்­பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் உயி­ரி­ழந்­தனர். ஹொங்கொங் வரலாற்றில் மிக மோசமான வாகன விபத்து இது.


2011 : ரஷ்ய பயணிகள் கப்பலொன்று வோல்கா நதியில் கவிழ்ந்ததால் 122 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

பிக் பாஸ் வீட்டுக்குள் நீங்கள் யார்? #MondayMotivation #MisterK

’நேரம் காலை 8 மணி. இங்கே இவர்கள் பிக் பாஸ் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ 

மேலே உள்ள வாக்கியத்தை மனதுக்குள் - எந்தக் குரலில் -  என்ன மாடுலேஷனில் படித்தீர்கள்? பிக் பாஸில் வரும் குரலிலா? ஓகே.. அப்படியென்றால் நீங்களும் என்னைப் போல பிக் பாஸ் பார்க்கிறீர்கள் அல்லவா? சரி.. அப்படியென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்குப் புரியும். நான்  மிஸ்டர் K.

பிக் பாஸ்

இது என்ன மாதிரி நிகழ்ச்சி, இது தேவையா, இல்லையா போன்ற கேள்விகளையெல்லாம் விடுத்து, கொஞ்சம் பேசுவோம். ஒரு வீடு. அங்கே 15 பேர். அறிமுகமானவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் என்று கலந்து கட்டிய ஒரு குழு. எல்லாரிடமும் மைக். எல்லா இடங்களிலும் கேமரா. என்ன பேசினாலும், என்ன செய்தாலும் வெளி உலகிற்குத் தெரிந்து விடும். இது அவர்களுக்கும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். 

முதல் ஒருநாள் அல்லது இரண்டு நாள்கள்தான் அவர்கள்  ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’யாக இருந்தார்கள். அதற்குப் பிறகு சிலர் 'நான் யாரு.. நான் யாரு.. நான் ராஜா.. நான் ராஜா'  எனவும், சிலர் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே’ எனவும் பல ரூபங்களுக்கு மாறத் தொடங்கினர். 

ஏன்? 

அவர்களுக்கு, அவர்கள் பேசுவதும் அவர்கள் செய்கைகளும் வெளியில் தெரியும் என்று தெரியும். ஆனாலும், அதை அவர்கள் பார்ப்பதில்லை. அதனால் அவற்றின் விளைவுகளை அறிவதில்லை.  அவர்களைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியாததால், அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ’மத்தவங்க என்ன நினைக்கறாங்கனு கவலைப்படாத’ என்போமே.. அந்த நிலையில் இருக்கிறார்கள்.

சிலர் ஒரு பிம்பத்தில் சிறைபட்டுக் கிடக்கிறார்கள். எங்கேயும் அவர்களுக்கு ஒரு ‘அட்டென்ஷன்’ தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோதோ, அல்லது அவர்கள் பார்வையில் ‘தங்களை விட குறைவாக’ சிலரை அவர்கள் எண்ணும்போதோ, அந்த சிலரின்மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறார்கள். 

சிலருக்கு ‘நான் இவர்களை விட எந்த விதத்தில் குறைவு?’ என்கிற எண்ணம் இருக்கிறது. அது சரியும்கூட.  யாரும் யாருக்கும் குறையுமில்லை; கூடுதலுமில்லை. ஆனால், அதற்காக கொஞ்சம் அதிகப்படியாக கவனமீர்க்கும் செய்கைகளைச் செய்து கொண்டிருந்தால், அது கவனம் கலைக்குமே தவிர ஈர்க்காது. 

ஒரு சிலருக்கு, எந்தச் சலனமும் இல்லாமல் நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர்மீது பொறாமையோ.. அல்லது ‘அவர் மட்டும் ஏன் அப்படி இருக்கிறார்?’ என்ற எண்ணமோ வருகிறது. அவர்கள் கூடி ஒரு சதியாலோசனை நடத்துகிறார்கள். சதியாலோசனை என்ற வார்த்தை சரியா என்று தெரியவில்லை. ஒருவகையில், அந்த ‘நதிபோல ஓடிக்கொண்டிருக்கும்’  நபருக்கு நன்மை விளைவிக்கக்கூட இருக்கலாம்.  ‘அந்த ஒருவர், இருக்கத் தயங்கும் இடத்தில் அவரை இருத்துவோம். அதில் அவர் தாக்குப்பிடிக்கிறாரா என்று பார்ப்போம்’ என்கிறார்கள். கிட்டத்தட்ட Comfort Zoneல் இருக்கும் உங்களை துறை மாற்றும் செயல்தான் அது. கிட்டத்தட்ட ஜெயிக்கப் பிறந்தவர்கள் கடந்து வந்த பாதைதான்.  

இன்னொருவரைப் பற்றி உள்ளே இருப்பவர்கள் ‘வெள்ளந்தி; எங்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்’ என்று உருகுகிறார்கள். ஆனால் அவர் வெளிப்படையாக ஒருவர் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருந்தார். எல்லாக் கேள்வியையும் கேட்கும் உரிமை இருக்கும் நிகழ்ச்சி நடத்துனரோ, ‘பிக் பாஸ்’ உள்பட எவருமோ ‘அப்படி இருப்பது தவறு. ஒருவரை கார்னர் செய்யாதீர்கள்’ என்று சொல்லவில்லை. ஒருவரின் குணாதிசயத்தைக் குறித்த விமர்சனம் வைக்க வேண்டாம் என்பதாகக்கூட இருக்கலாம். தவிர, அவர் எல்லாரையும் ‘இமிடேட்’ செய்கிற மாதிரி குறை சொல்லிக் கொண்டே இருந்தார். ‘உள்ளே அவர்தான் எனக்கு மகிழ்ச்சி அளித்துக் கொண்டிருந்தார்’ என்று சொன்ன ஒருவரையே ‘அய்யய்யே தொந்தரவு தாங்கலைப்பா’ என்று சலித்துக் கொண்டிருந்தார். அதனாலேயே மக்களின் வாக்கு அவருக்கு கிடைக்காமல் போயிற்று. அவருடன் இருந்தவர்களுக்கு இந்த விஷயம் 360 டிகிரி கோணத்தில் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையான பிக் பாஸாகிய மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

சரி இவர்களில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு சமயமும், சிலரின் ஒவ்வொரு செய்கைகளிலும்  ‘அட.. அந்த விஷயத்துல நான் இதே மாதிரிதானே இருந்தேன்.. அப்ப என்னையும் இப்டித்தான் திட்டிருப்பாங்களோ’ என்று தோன்றியதா? சிலர் செய்யும் செய்கைகளைப் பார்த்து, ‘அட.. நாமும் இப்படி சரியாகத்தான் செய்திருக்கிறோம்’ என்று தோன்றியதா?  எல்லாம் கலந்து கட்டிய வடிவம்தான் நாம்.  ஆனால் எந்த நேரத்தில், எப்படி இருக்கிறோம் என்பதுதான் வேறுபடுகிறது. 

எதற்கும் கவலைப்படாமல், சிலருக்குப் புரியாவிட்டாலும், பலருக்கும்  பிடிக்கிற மார்டன் ‘ஆர்ட்’ போல இருந்தால் தொல்லையில்லை.   அவர்களுக்கு உள்ளே இருப்பதில் பெருமையும் இல்லை. வெளியே இருப்பதில் சிறுமையும் இல்லை. சொல்லப்போனால் அவர்கள்தான் பல சந்தர்ப்பங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய செயலைச் செய்கிறார்கள். காரணம், எல்லாவற்றையும் அவர்கள் மூன்றாவது கோணத்தில் அலசுகிறார்கள். 

பிக் பாஸ்

உங்கள் வீட்டில், உங்கள் நண்பர்கள் மத்தியில் என்று எப்போதும் உங்களை யாரோ கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பிற இடங்களாவது பரவாயில்லை; நீங்கள் இருக்கும் அலுவலகத்தில், நிச்சயம் நீங்கள் ஒரு பிக் பாஸ் விளையாட்டில்தான் இருக்கிறீர்கள்.

ஓடவும் முடிவதில்லை. ஒளியவும் முடிவதில்லை. ரெஸ்ட் ரூம் தவிர எல்லா இடங்களிலும் கேமராக்கள். தலைமைப்பொறுப்புகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. நம் எல்லா செய்கைகளும் கணக்கு வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எலிமினேஷன்களுக்காக நம் பெயரை யாரோ சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ‘இல்லையே அவரு கரெக்ட்தான்’ என்று நமக்காக யாரோ ஓட்டுப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டிய வேலையை, நமக்காக எவரோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எவரோ செய்ய வேண்டிய வேலைகளை, நாம் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டுதான் இருக்கிறோம்.  யாரோ ஒருவருடைய  அமைதி, நம்மை அச்சுறுத்துகிறது அல்லது நம் அமைதி யாரையோ அச்சுறுத்துகிறது.  ‘என்னை எப்படியாவது வெளியே அனுப்பிடுங்கய்யா’ என்று அவ்வப்போது நம் மனது அரற்றிக்கொண்டுதான் இருக்கிறது. எதற்கும் கவலைப்படாமல், என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் ‘இவர் நம்ம ஆஃபீஸ்தானா?’ வகையறா ஆட்களும் நமக்கு மத்தியில் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்.  கொடுக்கப்படும் டாஸ்க்-குகளை நம்மால்  முடிந்த நியாயத்தில் முடிக்கிறோம். ஆனாலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்குத்தான் சிறந்த பட்டங்கள் சென்றடைகின்றன. அப்படியே நமக்குக் கிடைத்தாலும் அதற்கான கைதட்டல்களில் நமக்கே திருப்தி இருப்பதில்லை.  

‘உடனே கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க’ என்ற குரல் ‘ஹெச். ஆர் கேபினுக்கு வாங்க’-வாக  அவ்வப்போது கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. கன்ஃபெஷன் ரூமுக்குள் நாம் ‘ரொம்ப கான்ஃபிடென்ஷியலாக’ச் சொல்லும் விஷயம் அடுத்தநாளே யாருக்குத் தெரியக்கூடாதோ அவர் உள்பட எல்லாருக்கும் தெரிந்து விடுகிறது. ‘கன்ஃபெஷன் ரூமு’க்குள் நமக்கு கிடைத்த திட்டை ‘சும்மா பேசிட்டிருந்தோம் மாமா’ லெவலில் வெளியே வந்து டீல் செய்கிறோம். ‘எல்லாரையும் பிக் பாஸ் லிவிங் ரூம்ல அசெம்பிள் ஆகச் சொல்றார்’ போல ‘எல்லாரையும் கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு மீட்டிங்கிற்கு வரச் சொன்னாங்க’ என்று சக நண்பன் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான்.

‘நாய் குரைப்பதெற்கெல்லாம்’ கவலைப்படாமல், நாம் வேலை செய்யும்போது, சிலர் கண்மூடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அல்லது அவர்கள் வேலை செய்யும்போது நாம் கண்மூடிக் கொண்டிருக்கிறோம். எலிமினேஷன் ஆகி வெளியே போய் குடும்பத்தைப் பார்க்கலாம் என்று ஏங்குகிறோம். எலிமினேஷன் கிடைத்தால், ‘மறுபடி கூப்டுவீங்க.. நானும் வருவேன்’ என்கிறோம்;   அல்லது வேறு ஒரு பிக் பாஸ் வீட்டுக்குச் செல்ல கையெழுத்துப் போடுகிறோம்.    

ஆனால், எப்போதும் இன்னொருவர் செய்யும்போது அதிலுள்ள குற்றம் குறைகள் நமக்குப் புலப்படுகிற அளவுக்கு, நாம் செய்யும்போது நமக்கே புலப்படுவதில்லை. ஆக, இவர்களில் யார் நாம் என்பதைவிட, எந்தச் சூழலில் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்தக் கலை வாய்க்க நேர்ந்தால்.. நாம் நிச்சயம் வின்னர்தான்! 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இன்றைய கூகுள் டூடுலின் சிறப்பு என்ன தெரியுமா...?

இன்று, கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்தில், உருளைக்கிழங்கிலிருந்து மதுபானம் தயாரித்த இவா எக்பால்டை கௌரவிக்கும் விதமாக, கூகுள் டூடுல் அமைக்கப்பட்டுள்ளது. 

eva ekebald

உலக அளவில் முதன்மையான தேடுதல் தளமாக விளங்குகிறது, கூகுள். இதன் முகப்புப் பக்கத்தில், கூகுள் டூடுல் என்ற சித்திரம் இடம்பெறுவதுண்டு. இது, அன்றைய நாளில் வரலாற்று சிறப்புமிக்க ஒருவரைப் பற்றியோ, வேறு ஏதாவது நிகழ்வுகளைப் பற்றியோ வடிவமைக்கப்படும். இதில் அப்துல்கலாம், நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, பல உலக நிகழ்வுகளையும் டூடுலாக வடிவமைத்து அசத்திவருகிறது கூகுள்

இந்நிலையில், இன்றைய கூகுள் டூடுல் உருளைக்கிழங்கிலிருந்து மதுபானம் தயாரித்த இவா எக்பால்டை கௌரவிக்கும் விதமாக  அமைக்கப்பட்டுள்ளது. இவர், 1746ல் உருளைக்கிழங்கிலிருந்து வைன் மற்றும் வோட்கா தயாரித்தார். இவரின் கண்டுபிடிப்பு, ஸ்வீடன் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றியது. இதையடுத்து, 'ராயல் ஸ்வீடிஷ் அகாடமி  ஆஃப் சயின்ஸ்' அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டார். இந்த அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் இவர். இன்று இவரின் 293-வது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் கௌரவப்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

என்றும் இளமையாக இருக்க ஆண்கள் இதைச் செய்யலாம்!

ஓயாத உழைப்பு, உடல் நலத்தில் அக்கறை இல்லாததன் விளைவால், ஆண்கள் சீக்கிரமே முதுமையடைகிறார்கள். சிலர் மட்டும்,  மார்க்கண்டேயனைப்போல என்றும் இளமையாக இருப்பார்கள். அதன் ரகசியம் என்னவென்றால், உடல்வாகு அப்படி என்று சிரிப்பார்கள். ஆழ்ந்து கவனித்ததில், இவையெல்லாம் இருக்கலாம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைப் பின்பற்றி, நீங்களும் என்றும் இளமையாக இருக்கலாமே?

இளமை

1.தினமும் 10 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர்  குடியுங்கள். 2.இரண்டு வேளை குளியல் 4 வேளை முகம் கழுவ வேண்டும். 3. பசலைக் கீரை, பீன்ஸ் சேருங்கள் முகச்சுருக்கங்கள் வராது. 4.மாதுளை, திராட்சை ஜூஸ் குடியுங்கள். 5.பால், பயத்தம்பரும்புகொண்டு முகம் கழுவுங்கள். 6.உடற்பயிற்சி, உடலில் தளர்வை உண்டாக்காது. 7. மிகச் சரியான அளவு உடைகளை அணியுங்கள். 8.வெயிலில் சுத்த வேண்டாம். அப்படிச் சுற்றினால், சன் ஸ்க்ரீன் லோஷன் போடவும். 9. அளவான உணவை இடைவெளி விட்டு உண்ணவும்.10.வெது வெதுப்பான நீரில் ஷேவ் செய்யவும். 11.உணவில் உள்ள கருவேப்பிலையை மென்று தின்னவும்.

12.அதிக நேரம் பல் துலக்கி பல்லைக் கெடுக்க வேண்டாம். 13. புகைப்பழக்கம் முகச்சுருக்கம் தரும். 14.குடிப்பழக்கம் வேண்டவே வேண்டாம். 15. அதிக நேரம் கண்விழிக்க வேண்டாம். 16.தலையில் அழுக்கில்லாமல் இருந்தாலே முடி உதிர்வது நிற்கும். 17.மசாஜ் செய்துகொள்ளுங்கள் தசைகள் பொலிவாகும். 18. மூன்று மாதம் ஒருமுறை சரும மருத்துவரை ஆலோசியுங்கள். 19. எண்ணெய் உணவுகள் வேண்டாம். 20. முகத்தைக் காய விட வேண்டாம். 21.நல்ல ஓய்வும் உறக்கமும் தேவை. 22.மீசை, தாடியை அழகாக வைத்துக்கொள்ளுங்கள். 23.சோப்பு, ஷேம்பு, கிரீம்களில் கவனம் செலுத்துங்கள், இயற்கை மூலிகையாகத் தேர்வுசெய்யுங்கள். 24.அடிக்கடி வாய்விட்டுச் சிரியுங்கள்.

 

மேற்சொன்னவற்றை கடைபிடித்தால், கட்டாயம் நீங்கள் ஐம்பதிலும் ஜொலிஜொலிக்கலாம். 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.