Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கேட்க்கும் திறனை இழந்து ....பள்ளியில் படிக்க லாயிக்கு இல்லை என்று துரத்தப்பட்ட THOMAS ALVA EDISON எப்படி சாதித்தார் தெரியுமா?..

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் தவிக்கும் வன விலங்குகள் ( புகைப்படத் தொகுப்பு)

பருவ மழை காரணமாக இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தின், காஸிரங்கா தேசிய வன உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்குள்ள வன விலங்குகள் வெள்ளத்தில் சிக்கி போராடிவருகின்றன.

காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

கடலில் உயிருக்காக தத்தளித்த யானையை காப்பாற்றிய இலங்கை கடற்படை

  • தொடங்கியவர்
 

40 வருட வானிலை மாற்றங்களைப் பதிவு செய்யும் ’தனி ஒருவன்’ கேட்கும் அந்த ஒரு கேள்வி!

 
 
 

ஒல்லியான தேகம். நீள முடி. நீண்ட தாடி. முகத்தில் பனி வெடிப்புகள். பனியின் காரணமாக அந்த முகச் சுருக்கங்கள் கருத்துப் போயிருக்கின்றன. உயரந்த அந்த மலையின் உச்சியிலிருந்து பனிச் சறுக்கு உபகரணங்களை மாட்டிக் கொண்டு, படு வேகமாகக் கீழிறங்குகிறார் அந்தக் கிழவர். பக்கத்திலிருக்கும் சிறு நகரத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு நாடக அரங்கம். டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போய் உட்காருகிறார். மேடைத் தயாராக இருக்க, அந்தக் கிழவரைத் தவிர அங்கு வேறு யாருமேயில்லை. சரி... நாடகத்தை ரத்து செய்துவிடலாம் என்று எண்ணி நாடக இயக்குநர் அந்தக் கிழவரை நெருங்குகிறார். அவர் யாரென்று தெரிந்ததும்... புன்சிரிப்போடு கைகுலுக்குகிறார். அந்த ஒற்றைக் கிழவருக்காக அந்த நாடகம் அங்கு அரங்கேற்றப்படுகிறது. அந்தக் கிழவரின் பெயர் பில்லி பார் (Billy Barr). இந்தக் கதை அமெரிக்காவில் நடந்தது. 

பனிகளின் பாதுகாவலன் பில்லி வானிலை

அமெரிக்காவின் ராக்கி மலைத் தொடரில் அமைந்திருக்கிறது " கோதிக் மலை". 1973ம் ஆண்டு... அப்போது பில்லிக்கு வயது 22. கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டிருந்தார். அந்தப் பனியும், மலையும், ஈரக்காற்றும் அவருக்கு ரொம்பவே பிடிக்கும். மலையிலிருக்கும் சிறு ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஒன்றிரண்டு முறை போயிருக்கிறார் பில்லி. பணம், பணம் என எப்போதும் பணத்திற்குப் பின்னால் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் பொதுச் சமூக வாழ்க்கை அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அந்தப் பனியின் அடர்த்தியான குளிர் அளவிட முடியாத விருப்பத்தை அவருக்குள் ஏற்படுத்தியது. எதையும் யோசிக்கவில்லை. மலையை நோக்கி கிளம்பிவிட்டார். 

முதலில் மலையின் அடிவாரத்தில் 8ற்கு 10 என்ற அளவில் சிறு மர வீட்டைக் கட்டினார். சில நாள்கள் கூட அதில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்தளவிற்கு குளிர். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக அந்தப் பனி மலையைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார். மலையின் மேல் சென்று தனக்கான வீட்டை... உலகை உருவாக்கிக் கொண்டார். " பசுமை இல்லத்தை"  உருவாக்கி தனக்கான காய்கறிகளை விளைவித்துக் கொண்டார். சோலார் பேனல்களைக் கொண்டு தனக்கான மின்சாரத்தைத் தயாரித்துக் கொண்டார். அது மட்டுமில்லாமல், தனக்குப் பிடித்த "பாலிவுட் " படங்களைப் பார்க்க சின்ன ஹோம் தியேட்டரை உருவாக்கிக் கொண்டார். இப்படியாக, தனக்குப் பிடித்த மாதிரியான உலகை தானே உருவாக்கிக் கொண்டார். 

பனி மலையில் தனியாக பில்லியின் வீடு

பில்லி ஆரம்ப காலங்களில் தங்கிய மர வீடு...

முதல் ஒரு வருடம் அந்தத் தனிமையை அவருக்குச் சரிவர கையாளத் தெரியவில்லை. அவருக்குத் துணையாக இருந்தது அந்தப் பனியும் அங்கு வரும் சில மிருகங்கள் மட்டுமே. ஒரு பேப்பர், பேனாவை எடுத்துக் கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் பனிப் பொழிவை, அந்தப் பகுதியின் வானிலையைக் குறிக்கத் தொடங்கினார். அந்தப் பக்கம் வரும் மிருகங்களின் விவரங்களையும் குறிக்கத் தொடங்கினார். ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல... நாற்பது வருடங்களுக்கும் மேலாக இதைச் செய்து வருகிறார் பில்லி !

40 வருடங்களாக பில்லி எடுத்த பனி குறிப்புகள்

பில்லியைச் சமீபத்தில் யதேச்சையாக சந்தித்த ஓர் ஆராய்ச்சியாளர் அவரிடம் இருந்த 40 வருடங்களுக்கான வானிலைக் குறிப்புகளைக் கண்டு அசந்துப் போய்விட்டார். அவரிடம் இருந்த குறிப்புகள் மொத்த உலகின் " வானிலை மாற்றத்தின் " அத்தாட்சியாக இருக்கிறது. பில்லியின் குறிப்புகளைக் கொண்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மிருகங்கள், பறவைகள், பனிப் பொழிவு, பூமி வெப்பமயமாதல், நீர் வழித்தடங்களைக் கண்டறிவது, தண்ணீர்த் திட்டங்களை உருவாக்குவது எனப் பல துறைகளிலும் அவரின் குறிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

பனி மலையும், சில குறிப்புகளும்

உலகமே இன்று பில்லியைக் கொண்டாடுகிறது. ஆனால், பில்லி எதைக் கண்டும் அசராமல் தனக்குப் பிடித்த பாலிவுட் படங்களைப் பார்த்தபடியும், தொடர்ந்துக் குறிப்புகளை எடுத்தபடியும் இருந்து வருகிறார். 

" நான் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று நினைத்தெல்லாம் இந்தக் குறிப்புகளை எடுக்கவில்லை. எனக்குப் போரடித்தது. என்ன செய்வதென தெரியவில்லை... அதான் குறிப்புகளை எடுத்தேன். எனக்கு அறிவியல் தெரியாது. ஆனால், இயற்கையின் மொழிப் புரியும். நான் பார்த்த கடந்த 40 ஆண்டுகளில் இந்தப் பகுதியின் வெப்பம் அதிகரித்திருக்கிறது. கால நிலைகளின் பருவத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தூசு அதிகமாகியிருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் 4 அல்லது 5 டிகிரி வரை சூடு அதிகரிப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், கடந்த வருடம் 36 டிகிரி வெப்பம் உயர்ந்திருக்கிறது. 

எனக்கு வாழ்வதற்கு எந்த நோக்கமும் இல்லை. நான் அடைவதற்கு எந்த லட்சியமும் எனக்கில்லை. நான் யாரென்று யாருக்கும், எதற்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் இயற்கையை நேசிக்கிறேன். இயற்கை என்னை நேசிக்கிறது. திடீரென ஒரு நாள் நான் இறந்து விடுவேன்... ஆனால், பெரும் ஆசைகளோடு வாழும் நீங்கள் இந்த பூமியின் பிரச்னையை எப்படி தீர்க்கப்போகிறீர்கள் ?, நீங்கள் ஏற்படுத்தியுள்ள காயத்திற்கு எப்படி மருந்திடப் போகிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் ? " 

பனி பாதுகாவலன் - பில்லி பார்

 

பில்லி பார் சமூகத்தைப் பார்த்து எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு, நாம் ஒவ்வொருவருமே பதிலைத் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த பதில் எங்கோ வேற்று கிரகத்தில் இல்லை... அது நமக்குள்ளே தான் இருக்கிறது !!!  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தான்சானியா: சிறுத்தைக் குட்டிக்கு பாலூட்டும் பெண் சிங்கம்!

 

பெண் சிங்கமான நாசிகிடோக், சிறுத்தைக் குட்டிக்கு பாலூட்டும் காட்சிA picture of the lioness Nosikitok nursing a young leopard cub as she lounges in the arid Serengeti

`இது போன்ற புகைப்படங்களை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் ` என சிங்கங்கள் குறித்த நிபுணரான லூக் ஹண்டர் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

இந்த சிறுத்தைக் குட்டியால் தன் உடலில் உள்ள புள்ளிகளை மாற்ற முடியாது. ஆனால் இந்த பெண் சிங்கத்தி்ற்கு அதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது.

இந்த அற்புதமான புகைப்படங்கள், வேறு இனத்தைச் சேர்ந்த உயிரினத்திற்கு பெண் சிங்கம் ஒன்று பாலூட்டும் போது எடுக்கப்பட்டதாகும். இது அரிதிலும்,அரிதான நிகழ்வு.

தான்சானியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதியான கோரோன்கோரோ-வில் உள்ள டுடூ சஃபாரி விடுதியில் தங்கியிருந்த ஜுப் வான் டெர் லிண்டே என்பவர் இந்த காட்சியை பார்த்துள்ளார்.

இந்த நிகழ்வு நடைபெற்றுள்ள இடம் செரன்கெடி. சிறுத்தைக் குட்டிக்கு கவனமாக பாலூட்டும் தாய் சிங்கத்தின் பெயர் ஐந்து வயதான நாசிகிடோக்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொண்டு நிறுவனமான `கோப் லைன்` அமைப்பினால் பொறுத்தப்பட்ட ஜி.பி.எஸ் பட்டையை அணிந்திருக்கும் இந்த பெண் சிங்கம், கடந்த ஜுன் 27-28 தேதிகளில் 3 சிங்கக் குட்டிகளை ஈன்றது.

சிறுத்தைக் குட்டி பால் அருந்தும் போது, கண்மூடி படுத்திருக்கும் பெண் சிங்கம்.

நாசிகிடோக் என்ற இந்த பெண் சிங்கம், சமீபத்தில்தான் இரண்டாம் முறை கருவுற்று குட்டிகளை ஈன்றது.

 

கோப் லைன் அமைப்பிற்கு ஆதரவளித்து வரும் சிங்கங்களை பாதுகாக்கும் உலகளாவிய அமைப்பான பந்தேரா அமைப்பின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான லூக் ஹண்டர், இந்த சம்பவம் `உண்மையிலே தனித்துவமானது` என தெரிவிக்கிறார்.

`இது சகஜமான ஒன்று அல்ல. இரண்டு பெரிய பூனை இனங்களுக்கிடையே இப்படி முன்னெப்போதும் நடந்ததில்லை என எனக்கு நன்றாக தெரியும்.` என அவர் கூறுகிறார்.

`தனக்கு பிறக்காத வேறு சிங்கக் குட்டிகளை, பெண் சிங்கங்கள் தத்தெடுத்துக் கொண்ட சம்பவங்கள் உண்டு. ஆனால் இது முன்னெப்போதும் நடக்காதது.`

பொதுவாக உணவுச் சங்கிலியில் தங்களுக்கு போட்டியாக இருக்கும் சிறுத்தை போன்ற மற்ற வேட்டை மிருகங்களின் குட்டிகளை பார்த்தால் பெரும்பாலான பெண் சிங்கங்கள் அவற்றை கொன்றுவிடும்.

பால் அருந்திக் கொண்டிருக்கும் போது கேமராவை பார்க்கும் சிறுத்தைக் குட்டி

பாலினம் கண்டறியப்படாத இந்த சிறுத்தைக் குட்டி பிறந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகியிருக்கலாம்.

 

பால் அருந்தும் சிறுத்தைக் குட்டியின் நெருக்கமான புகைப்படம்.

`நல்லவேளையாக சிறுத்தைக் குட்டியை அந்த பெண் சிங்கம் கொல்லவில்லை `என ஹண்டர் கூறுகிறார்.

 

அந்த சிறுத்தைக் குட்டியை போன்று இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வயதுள்ள குட்டிகள் நாசிகிடோக்கிற்கு உள்ளன.

தனது குட்டிகளை மறைத்து வைத்துள்ள, தன் இருப்பிடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்தான் அந்த பெண் சிங்கம் சிறுத்தைக் குட்டிக்கு பாலூட்டிக் கொண்டிருந்த நிகழ்வு நடந்துள்ளது.

`அவள் சிறுத்தைக் குட்டியை எதிர் கொண்டது மட்டுமல்லாமல், தனது குட்டியைப் போலவே அதனை பார்த்துக் கொண்டாள்.

தாய்மைக்கான ஹார்மோன்களை அவள் பெருமளவு கொண்டிருக்கிறாள்.மேலும் இதே போன்ற கடுமையான,அதே சமயம் பாதுகாப்பான செயல்பாட்டை அனைத்து பெண் சிங்கங்களும் கொண்டிருக்கின்றன. அவை வல்லமைமிக்க தாய்கள்.` என அந்த சிங்கங்கள் குறித்த வல்லுநர் குறிப்பிடுகிறார்.

அந்த சிறுத்தைக் குட்டியின் தாய் எங்கு இருக்கிறது அல்லது இந்த பெண் சிங்கம் அந்த குட்டியை முழு நேரமாக தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறதா என்பது இப்போது வரை தெளிவாக தெரியவில்லை.

அதிர்ஷ்டம் இருந்தால், இந்த குட்டி சிறுத்தை விரைவில் அதன் தாயுடன் இணையும்.

அதிர்ஷ்டம் இருந்தால், இந்தக் குட்டி சிறுத்தை விரைவில் அதன் தாயுடன் இணையும்.

 

உள்ளூர் சுற்றுலா விடுதியினர் அந்த பகுதியில் குட்டிகள் இருக்கக் கூடிய சிறுத்தை ஒன்று வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். தற்பெருமை பேசுவதற்காக நாசிகிடோக் இந்த செயலை செய்யவில்லை என்றாலும், அந்த சிறுத்தைக் குட்டி தனது தாயிடம் சேர்வதே சிறப்பானதாக இருக்கும்.

`கூடாரங்களில் தங்கியுள்ள எங்களது அணியினர் அடுத்து என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பார்கள்` என டாக்டர் ஹண்டர் தெரிவித்துள்ளார்.

` இது ஒரு தனித்துவமான சம்பவம். இது எப்படி நடந்தது என்பதை அறிவது உற்சாகமூட்டக் கூடியதாக இருக்கும். இயற்கை கணிக்க முடியாதது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், `இதெல்லாம் கண்டிப்பாக நடக்காது` என கூறினோம். ஆனால் தற்போது அது நடந்துள்ளது.!` என ஹண்டர் கூறியுள்ளார்.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

துண்டானது: ஜமைக்கா அளவிலான பனிப்பாறை

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 15
 

article_1436942145-twitter.PNG1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தார்.

1888: ஜப்பானில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 500 பேர் பலி.

1927: ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 89 பேர் பலியாகினர்.

1955: அணுவாயுதங்களுக்கு எதிரான பிரகடனமொன்றில் நோபல்பரிசு பெற்ற 8 பேர் கையெழுத்திட்டனர்.

1974: சைப்ரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள், ஜனாதிபதி மக்காரி யோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை ஜனாதிபதியாக்கினர்.

1983: பாரிசில் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8பேர் கொல்லப்பட்டு 55பேர் காயமடைந்தனர்.

1991: இலங்கை எழுத்தாளர் நெல்லை க.பேரன், எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

2002: வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த 'அகமது ஷேக்' என்பவனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

2003: மோஸில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

2006: டுவிட்டர் சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2009: ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தினால் 153 பேர் பலியாகினர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

“தமிழர் பெருமிதம் பேசும் கேரளா!” - வயநாடு பயணமும், அரசியலும்

வயநாடு

'ஒவ்வொரு  மனுசனுக்கும் ஒவ்வொரு பிரேக்கிங் பாயின்ட் இருக்கு' -இது, குருதிப்புனல் படத்தில் கமல் பேசிய பிரபலமான வசனம்.  உண்மைதான். பரபரப்பான பத்திரிகையாளர் பயணத்தில், ஒரு பிரேக்கிங் பாயின்ட்டாக, எளிய இளைப்பாறலாக, குடும்பத்துடன் சுற்றுலா சென்றேன். கோழிக்கோடு நோக்கி, வேகமெடுத்தது தொடர்வண்டி. ஜன்னலோர இருக்கையில் என்னைக் கடந்து செல்லும் மரங்களும், செடிகளும், காட்சிகளும் பால்ய காலத்துக்கு என்னை அழைத்துச் சென்றது. ''விளையாடப் போனாலும் ஒரு கட்டுப் புல்லுக்கட்டோடு திரும்பனும்டா மகனே'' என்று என்னுடைய அம்மா போதித்தவை என் காதுகளில் ஒலித்தது. கிராமப் பின்னணியில் வளர்ந்த எனக்கு, இது பசுமரத்தாணி போலப் பதிந்த போதனை. இதோ, இந்தச் சுற்றுலா சுகத்தோடு ஒரு அரசியல் கட்டுரையையும் சுமந்து திரும்பினேன்.

'விண்ணைத்தொடும் மலை முகடுகள், எங்கு திரும்பினாலும் பசுமை. காதல் உறவொன்று காது மடலை வருடும் இதமாய் மலை முகடுகளைப் பனி வருடிக்கொண்டிருந்தது. தமிழ் இலக்கிய மாந்தர்கள் போன்று நீண்ட கூந்தலாக வளைந்து சென்றன சாலைகள். மழலையின் புன்னகையாய் ஆங்காங்கே தென்படும் சிறு சிறு நீர்வீழ்ச்சி, உடலைத் தொட்டுச் சிலிர்க்கச் செய்யும் குளிர் காற்று. நாசிக்குள் புகுந்து இதயம் வருடும் இயற்கையின் மனம் என 'வயநாடு' நம்மை வேறொரு புது உலகத்துக்குக் கொண்டு சென்றது.  

வயநாடு என்றில்லை, ஒட்டுமொத்த கேரளாவின் முகமும், இயற்கையால் வசீகரிக்கப்பட்டவை. அதனால்தான் "எங்கள் நாடு 'கடவுளின் சி.எம் பினராயி விஜயன்தேசமாகப் புகழப்படுகிறது" என்றார் நம்மை கோழிக்கோட்டில் இருந்து வயநாடுக்கு அழைத்துச் சென்ற வேன் டிரைவர் அமீர். ஆம், அற்புதமான கடவுளின் தேசத்தைத்  இப்போது கம்யூனிஸ்டுகள் ஆளுகிறார்கள். தமிழ்நாட்டைப் போலவே ஓராண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டில் நடைபோடுகிறது ஆட்சி.  இந்த ஓராண்டை, வயநாடுவாசிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? 

''மலபார் மாவட்டத்தில், பினராயி என்ற ஊரில் பிறந்தவரே எங்கள் சி.எம் பினராயி விஜயன். இப்போ அது கண்ணூர் மாவட்டமா மாறியிருக்கு. எங்க பக்கத்து மாவட்டம்னாலும் எங்களுக்கும் அது பெருமைதான்'' என்றார் கல்பட்டா பகுதியில் எதிர்ப்பட்ட குடை விற்பனையாளர். கலர், கலராக மினுக்கும் குடைகள் இரண்டை வாங்கிக்கொண்டு, மீன்முட்டி நீர்வீழ்ச்சி நோக்கி நகர்ந்தேன்.

நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் மாணவ சமூகத்துக்கு மட்டும் குறைந்த நுழைவுக் கட்டணம் வாங்கப்பட்டது. ''மாணவ சமூகத்தின் மீதான கரிசனம்'' என்ற அலுவலரிடம், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கும் இப்போதைய சி.பி.எம் ஆட்சிக்குமான வேறுபாடுகள், அரசியல் குறித்தெல்லாம் கேட்டேன். ''இவ்வளவு கேள்வி கேட்கிறீரே ? நீங்கள் யார் ?''என்றார். ''பத்திரிகையாளர்'' என்றபோது ஆச்சர்யத்துடன் கையைப்பிடித்து வாழ்த்தியவர், ''பத்திரிகையாளர் என்று மட்டுமில்லை, எழுத்தாளர்களிடமும் நாங்கள் கட்டணம் வாங்குவதில்லை. எங்கள் கேரளா பற்றி எழுதும்போது அதன் சிறப்பை எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று நுழைவுக் கட்டணத்தை மறுத்துவிட்டார்.

அதன்பிறகு சில மணித்துளிகள் வைக்கம் முகமது பஷீர், மாதவிக்குட்டி என்று அளவளாவிவிட்டு அங்கிருந்து எடக்கல் குகைக்குப் பயணித்தேன். கொட்டும் மழையைக் கிழித்தபடி வேன் முன்னேற ''சேட்டா செம்ம மழையில்ல'' என்றேன் டிரைவரிடம். "கடந்த ஒருவாரமா இதைவிட மோசமா மழை பெஞ்சு பயங்கர வெள்ளம்" என்றார். "அப்படின்னா ஊர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கணுமே, அதற்கான  சுவடே இல்லையே '' என்றேன் 2015- ம் ஆண்டு சென்னை வெள்ளப் பாதிப்பை நினைத்தபடியே. "இது சுற்றுலாப்  பகுதி என்றாலும் தேவையை மீறி யாரும் ரிசார்ட் கட்டிவிட முடியாது. முந்தைய காங்கிரஸ் அரசும் இதைக் கண்காணித்தாலும், இப்போதைய கம்யூனிஸ்ட் அரசு, கூடுதல் கவனத்தோடு இருக்காங்க. தேவையில்லாத இடங்களை அபகரிக்க யாரையும் அனுமதிப்பதில்லை. வாய்க்கால்களும் முறையாகப் பராமரிக்கப்படுது. அதனால தண்ணீர் , வெள்ளமாகத் தேங்காமல் விரைவாக வடிந்துவிடுகிறது" என்றார். ஏனோ அந்த நேரத்தில் சுமார் 75 ஏரிகளை விழுங்கிவிட்டு, நகரமாக மாறிய சென்னை என் நினைவுக்கு மீண்டும் வந்து சென்றது. பழைய கற்காலத்தின் வரலாற்றுப் பதிவான எடக்கல் குகையைக் கேள்விப்பட்டு அங்கே பயணத்தை நீட்டினேன்.

எடக்கல் குகை சித்திரங்கள்

உயர்ந்த செங்குத்தான இரண்டுமலைகளுக்கு இடையில் பிரமாண்டமான ஒற்றைக் கல் சிக்கியபடி இருந்தது. அந்த வானுயர பாறைகளில் பிராமி எழுத்துகள் காட்சி தந்தன. “இந்தக் குகை, 1890 ம் ஆண்டு, இந்த மலபார் மாவட்டத்தின் எஸ்.பி-யாக இருந்த பிரெட் பாவ்கெட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்பே இந்தக் குகை குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கின. இடையில் சிக்கியுள்ள இந்தக் கல், என்பது சுமார் 33 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில், உயர்ந்த மலை முகடாக இருந்த கல், கீழ்நோக்கி வீழ்ந்து, இங்கே இந்த இரு மலைக்கு இடையில் சிக்கிக்கொண்டது. இந்தக் குகைப் பாறையில் இடம்பெற்றுள்ள சித்திரங்கள், ஹரப்பாவில், சிந்து சமவெளி நாகரிகம் குறித்த தொல்பொருள் ஆராய்ச்சியிலும் கண்டெடுக்கப்பட்ட சித்திரங்களுடன் ஒத்துப்போயுள்ளன. ஒரு ஜாடியுடன் உள்ள மனிதனைப் போன்ற சித்திரம், ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட சித்திரத்தோடு இணைந்துப்போகிறது. இது ஆரியர்களுக்கும் முந்தைய, பண்பாட்டை பிரதிபலிக்கும் பாறை. இந்தப் பிராமிச் சித்திரங்களில் தென்படும் தேர்ச் சக்கரங்கள், ஒரு கட்டமைப்போடு வாழ்ந்த தமிழர்களின் பண்பாட்டையும்,  தொன்மையையும் குறிப்பதாகும்’' என்று கேரளா மாநில தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம் கைடு மற்றும் அரசு அலுவலர்கள் கூறுகின்றனர்.

முத்தங்காடு

தமிழர் என்ற பெருமிதத்துடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, அடுத்து பனசுரா அணைக்கு விரைந்தேன். பாட்டில் தண்ணீர் வாங்கிச் செல்பவர்கள் திரும்பி வரும்போது அந்த பிளாஸ்டிக்  பாட்டிலை கொடுத்தால் ஐந்து ரூபாய் திருப்பித் தருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இந்த நடைமுறை என்றார் அலுவலர்.

அணையில் இருந்து இறங்கி முத்தங்காடு சென்றேன். விலங்குகள் உள்ள காட்டில் ஜீப்பில் பயணித்தேன். புலி, சிறுத்தை, யானை மிகுதியாக உள்ள காட்டில் மான்களும் , காட்டெருமைகளும் மட்டும் எங்கள் கண்களில் பட்டன. "இவையெல்லாம் புலிக்கு உணவாகப் போகிறது " டைமிங் காமடி செய்தார்  ஜீப் ஓட்டுனர். தொடர்ந்து பேசியவர், "கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என மூன்று மாநிலங்களும் ஒன்று சேரும் காடு இது. புது ஆட்சியில் பெருசாக எந்தப் பிரச்னையுமில்லை என்றாலும் நாள் முழுக்க ஜீப் ஓட்டினாலும் வெறும் ரூ 150/- மட்டும்தான் எங்க தினக்கூலி. அதை உயர்த்தித் தர அரசு முயற்சிக்கணும்" என்றார் கோரிக்கையாக.

சிசி ஜெய்சன்,நீத்து ஜோசப், லிதின் கே.எஸ்

அங்கிருந்து ரிசார்ட்டுக்குத் திரும்பிய நம் கண்ணில் ஒரு கடைக்கு முன்பு நீண்ட வரிசையில், பெரும் கூட்டம் தென்பட்டது. "அது மதுபான பார். 'ஆட்சிக்கு வந்தால் பார்கள் திறக்கப்படும்' என்று வாக்குறுதி கொடுத்தபடியே, தற்போது பார்களுக்கு அரசு அனுமதி கொடுத்துடுச்சு. அதனாலதான் கூட்டம். எவ்வளவோ கூட்டமா இருந்தாலும் இங்க கேரளாவுல வரிசையில நின்னுதான் சரக்கு வாங்கணும் சேட்டா" என்றார் நம்ம அமீர், புன்னகைத்தபடி.

வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பேத்தரி, கல்பேட்டா, மனத்தவாடி என்று மூன்று சட்டமன்றத் தொகுதிகள் இருக்க, சுல்தான்பேத்தரி தொகுதி காங்கிரஸ் வசமும், ஏனைய இரண்டும் கம்யூனிஸ்டுகள் வசமும் உள்ளன. சிட்டிங் எம்.பி-யாக காங்கிரஸ் ஷாநவாஸ் இருக்கிறார். வயநாடு மாவட்டத்தில் வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வருவாய் தரும் சுற்றுலாத் தலம் என்பதால் ரிசார்டுகள் தொழில் பிரதானம். எனவே அங்கிருந்த ரிசார்ட்களில் பணியாற்றும் சிலரிடம் பேசினேன்.

பனசுரா அணை

''எங்க சி.எம் பினராயி விஜயன் மேல எங்களுக்குத் தனிப்பட்ட பற்று இருக்கு. இங்க மலையாளிகள் பெரும்பாலும் பீப் சாப்பிடுவாங்க. சென்ட்ரல் கவர்ன்மென்ட் மாடுகள் வெட்டுவதற்கு தடை போட்டப்போ, ‘இப்படியே போனா நாளைக்கு மீன் சாப்பிடக் கூட தடைபோடுவாங்க'ன்னு சண்டை போட்டவர் எங்க சி.எம். சட்டமன்றத்துலயே பீப் தடைக்கு எதிராத் தீர்மானம் போட்டவர். அந்தத் தைரியம் எங்களுக்குப் பிடிக்கும்" என்றார் சிசி ஜெய்சன். "உண்மைதான். முந்தைய ஆட்சியைவிட இப்போது தண்ணீர், சாலை வசதிகள் மிகுதியாக உள்ளன. இந்த ஒரு ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாக்குறுதிகளை நிறைவேற்றி வரார். எங்களுக்கு அவர் ஓ.கே. ஆனா இன்னும் சில விஷயம் எதிர்பார்க்கிறோம். இங்க ரிசார்ட்ஸ்களுக்கு சுற்றுலா வாசிகள் வந்தால்தான் வருமானம். நைட் 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை கர்நாடகா, தமிழ்நாடு பார்டர்கள் வழியாக உள்ளே வாகனங்கள் வரத் தடை உள்ளது. இதைத் தளர்த்த வேண்டும். இங்கே ரயில் போக்குவரத்துக்கு அனுமதித்தால் கூடுதலாக சுற்றுலாவாசிகள் வருவார்கள்" என்றார் நீத்து ஜோசப். ஆனால் இதை மறுக்கும் லிதின், " வனங்களைப் பாதுகாப்பது முக்கியம். எனவேதான், ரயில் போக்குவரத்துக்கு அனுமதிப்பதில்லை. அந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ளலாம். அதேநேரம், இதைவிடப் பெரிய சிக்கல் என்னவென்றால், மதுபான பார்கள் மீண்டும் திறந்துவிட்டார்கள். வருமானத்துக்காக திறந்துவிட்டதாக அரசு தெரிவித்தாலும் இதனால் பெண்களான எங்களுக்குத்தான் பிரச்னை. இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்ல பயமாக உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? பெண்களுக்குப் போதிய பாதுகாப்பில்லை. இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் அரசை விட முந்தைய காங்கிரஸ் அரசுதான் சிறப்பு " என்றவர் , "இதற்கு மாற்றாக பார்கள் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கலாம் " என்றார் ஆலோசனையாக.

வயநாடு

'சரி நீங்க எல்லோரும் இந்த ஓராண்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு என்ன மதிப்பெண் கொடுப்பீர்கள் ?" என்றேன். "இன்னும் நாலு வருஷம் இருக்குன்னாலும், இந்த ஒரு வருஷத்துக்கு மார்க் என்றால் 45  முதல்  50 மார்க் கொடுக்கலாம் " என்றனர் கோரஸாக.

இரவின் குளிரில் அற்புதமான ஒரு தேநீரைப் பருகியபடி, மக்களின் குரலை, நம் தொடர்பில் இருக்கும் தோழர் நித்தின் கணிச்சேரியிடம் பகிர்ந்தோம். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சி.சி உறுப்பினர். 

"காம்ரேட் , விகடன் மூலமாக வெளிப்படும் கருத்துகளை நிச்சயம் எங்க முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு போகிறோம். அதேநேரம், இந்த ஓராண்டு காலத்தில் பல கோரிக்கைகளை எங்கள் ஆட்சி நிறைவேற்றியுள்ளது. வயநாடு, பாலக்காட்டில் மட்டும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் சிலவற்றைச் சொல்கிறேன்" என்றவாறு பட்டியலிட்டார்.

"இதற்கு முன்பு இங்கு மின் தட்டுப்பாடு இருந்தது.இன்று பூரண மின்சாரம் வழங்கியுள்ளோம். கேரளாவில் வயநாடு மற்றும் பாலக்காடு இரண்டும்  மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாகும். எனவே, கம்யூனிஸ்ட் அரசு இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் எடுத்துவருகிறது. நிதின் காணிச்சேரிஇங்கு பெரும்பான்மையாக வசிப்பவர்கள் பழங்குடி மக்கள். அனைவருக்கும் நிலம் உத்தரவாதப்படுத்தும் நோக்கில் வயநாடு முழுக்க மீண்டும் சர்வே எடுக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முன்பு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை குறைவாக இருந்தது. இப்போது பழங்குடியின ஆசிரியர்கள் உட்பட  400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 15 முதல் 30 பள்ளிகளுக்கு ஐந்து முதல் ஆறு  கோடி ரூபாய் வழங்கி அதை ஹை-டெக் பள்ளிகளாக மாற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. ஆட்சியின் ஐந்தாவது ஆண்டு முடிவில் இந்த மாவட்டங்கள் மேலும் மெருகேறியிருக்கும்" என்றார் தோழமையோடு. 

 

நம்முடைய மூன்று நாள் சுற்றுலாவிலும் பொது இடங்களில் ஓர் இடத்தில் கூட குப்பைகளைப் பார்க்க முடியவில்லை. உடனுக்குடன் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகள் ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுகின்றன. மலையாளம் இல்லாத ஒரு விளம்பரப் பலகை கூட பார்க்கமுடியவில்லை. முதலில் மலையாளத்திலும் அதற்கு கீழே ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் எழுதப்பட்டுருந்தன. கேரளா என்றாலும் எங்கு திரும்பினாலும் தமிழ் பாடல்கள் குறிப்பாக விஜய் பாடல்கள் ஒலித்தபடி உள்ளன. தமிழில் பேசினால் அன்போடு மலையாளத்தில் பதில் அளிக்கின்றனர். உரையாடல் என்பது அங்கே பிரச்னையாக இருப்பதில்லை. அதேநேரம் இதுவரை நாம் பாத்திராத,  நடிகர்களுக்கான கட்-அவுட்டுகள், ரசிகர் மன்ற போர்டுகள் இப்போது தென்பட்டன . இந்த மாற்றம், பண்பாட்டு மாற்றமாக மாறுமா என்று தெரியவில்லை. இயற்கையின் உன்னதத்தை அங்குள்ள ஒவ்வொரு மக்களும் புரிந்து வைத்துக்கொண்டு, இயற்கையின் இயல்புக்கு ஏற்ப தங்களைப் புதுபித்துக்கொள்கின்றனர். மொத்தத்தில் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா, கடவுளின் தேசமாகவே மிளிர்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

விம்பிள்டனில் நடந்த கூத்து..tw_blush:

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme

ஜூலை 15: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம்

 

கழகத்தை மையம் கொண்ட காமராஜர் புயல்... மாற்று முகாமிலிருந்தும் மாலையிடப்பட்ட கர்மவீரர்!

 

nehrukamaraj.jpg

மிழக வரலாற்றில், காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகள் ஒரு பொற்காலம்...தமிழக வரலாறு, புவியியல் ரீதியாக வலுப்பெற்ற காலகட்டம் அவர் ஆட்சியில்தான்.

அவர் சென்னை மாகாண முதல்வராக பொறுப்பேற்ற சில வருடங்களில் அந்த சம்பவம் நிகழ்ந்தது.  செய்தித்தாள்களை நாள்தவறாமல் படிக்கும் பழக்கமுள்ள முதல்வர் காமராஜின் பார்வையில், அன்றைய தினமணி நாளிதழில் இடம்பெற்ற ஒரு செய்தி தென்பட்டது. அன்றைய கல்வித்துறை ஆலோசகர் நெ.து சுந்தரவடிவேலு, தென்மாவட்டத்தின்  ஒரு பள்ளிக்கு  ஆய்வுக்கு சென்றபோது, ஒரு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளான். அவனுக்கு முதலுதவி அளித்து தெளிவித்தபின், மயக்கத்திற்கான காரணம் கேட்டபோது அதிர்ச்சியானாராம் நெ.து சு. ஆம், அவன் அன்று காலை உணவு எடுக்காமல் வகுப்புக்கு வந்திருந்தான். 'இம்மாதிரி ஏழை மாணவர்களுக்கு பள்ளியிலேயே உணவு வழங்கினால் நன்றாக இருக்கும்' என ஆய்வின் முடிவில் அவர் பேசியதாக அந்த சிறிய செய்தி சொன்னது.

செய்தியை காமராஜ் படித்து முடித்த சில நொடிகளில், நெ.து சுந்தரவடிவேலுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து போன் பறந்தது. அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. அடுத்த சில நாட்களில்  மதிய உணவுத் திட்டம் என்ற மகத்தான திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. சிறிய செய்தி ஒன்றுக்கு காமராஜ் அளித்த முக்கியத்துவத்தால், மதிய உணவுத் திட்டம் என்ற ஏழைக் குழந்தைகளின் பசி போக்கும் திட்டம் பிறந்தது. அந்த மனிதநேயர் காமராஜரின் பிறந்தநாள் இன்று.

kamarajsathunavu.jpg

ஆரம்பத்தில் அந்த திட்டத்தில் பெற்றோர் பங்களிப்பாக மிகக் குறைந்த தொகை வசூலிக்கப்பட்டது. அதிகாரிகள் சிலர், 'அரசு இவ்வளவு தொகை செலவு செய்கிறபோது எதற்காக மிக அற்பத்தொகையை பெற்றோரிடம் பெறவேண்டும். அரசுக்கு ஒன்றும் இது இழப்பில்லையே...' என்றனர். “நான் திட்டத்தின் செலவை குறைக்க இப்படி செய்யவில்லை. எந்த ஒன்றும் இலவசமாக அளிக்கப்பட்டால் அதன்மீது ஒரு பொறுப்பு வராது. இப்போது சிறிய தொகையானாலும் தங்களது பணமும் இதில் இருக்கிறது என அவர்களுக்கு தோன்றுமானால், இலவச உணவை வீணாக்கமாட்டார்கள்.” என்றார் காமராஜர். 3 வது படித்த காமராஜரின் நுண்ணிய அறிவை எண்ணி வியந்து போயினர் அதிகாரிகள். அதுதான் காமராஜர். அவரை மாற்றுக்கட்சியினரும் நேசிக்க அதுவே காரணமானது.

காங்கிரஸின் பரம வைரியான திராவிட இயக்கங்கள், அரசியல் மேடைகளில் அவரை வரிந்துகட்டி தாக்கினாலும், தனிப்பட்ட முறையில் அவர் மீது நன்மதிப்பு கொண்டிருந்தனர். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என இந்த வரிசைத் தலைவர்கள் காமராஜரை நேசித்தவிதம் அரசியல் கண்ணியத்திற்கு என்றும் அழியாத சாட்சிகள்.

காங்கிரசும், அண்ணா தலைமையிலான திமுகவும் அரசியல் களத்தில் அனல் கிளப்பிவந்த 60 களில்,  எம்.ஜி.ஆரை மையமாகக் கொண்டு திமுகவில் ஒரு புயல் கிளம்பியது. அண்ணாவின் தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்கள் வரிசையில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர், எதிர் கூடாரத்திலிருந்த காமராஜர் மீது கொண்ட காதலுக்கு அந்த சம்பவம் சாட்சியானது.

கருத்தியல் ரீதியாக எம்.ஜி.ஆரை திமுகவிடமிருந்து தனிமைப்படுத்திய அந்த சம்பவம் ஒரு வரலாற்று  நிகழ்வும்கூட. திமுகவில் ஒரு பெரிய புயலை கிளப்பிய அந்த சம்பவம் நிகழ்ந்தது 1965 ம் ஆண்டு காமராஜரின் 62 வது பிறந்தநாள் விழாவின்போது.

mgrspeech6001.jpg

சென்னை, எழும்பூர் பெரியார் திடலில் நடந்த அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், மேடையில் சற்று உணர்ச்சிவயப்பட,  பின்னாளில் அது பெரும் சலசலப்பை திமுகவில் உருவாக்கியது.

எம்.ஜி.ஆரின் சர்ச்சைக்குரிய உரை இதுதான்...

“காமராஜரின் பிறந்த தின விழாவில் நானும் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தி,  அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன். தலைவர் காமராஜர், தோழர் காமராஜர், அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார். எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்; பாராட்டப்பட வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும். மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.

கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும். யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும். யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும். இந்த நிலை மாறும்போது அருவருப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் (தி.மு.க.) இருந்து விட்டுப்போனவர். அவருடைய ‘கட்டபொம்மன்’ நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை. அதுதான் நல்ல பண்பு.

mgrkamaraj6001.jpg

காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை. நான் அவரைவிட்டு வந்தவன் (எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்).  நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது. காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்? வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்? காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார். யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தன்னை ஈன்றெடுத்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவரை 10 நிமிடங்கள், 5 நிமிடங்களுக்கு மேல் இருந்து பார்ப்பதில்லை.

தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார். காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்? நான் ஒரு கலைஞன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அண்ணா வழியில் நடப்பவன். அவர் கொள்கை எனது உயிர். அப்படிப்பட்ட நான் காமராஜரையும், அய்யாவையும் (பெரியார்) பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்ட முடியும்?

இதே மேடையில்தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன். நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன். நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர். அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன். காமராஜர் இரவு-பகல் பாராமல் பாடுபடுகிறார். அவரை ஏன் பாராட்டக் கூடாது? என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது? எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித் தந்தவர் காமராஜர். ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார். நானும் அதைத்தான் சொல்கிறேன். என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.

annakamaraj6001.jpg

பண்புள்ளவன், பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான். காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன். ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர், அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி. நான் ‘நாடோடி மன்னன்’ படத்தில் சொன்ன கருத்துக்கள், போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன். அது நடந்து வருகிறது. உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.

இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். நான் இதை ஏற்க விரும்பவில்லை. ஏனென்றால், சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை. ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது. ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல சரியல்ல.
என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன். சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அது மறையவில்லை. இருந்த இடத்தில்தான் இருக்கிறது. அதுபோல காமராஜரின் புகழ், தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும். மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும். கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதோடு நாம் சிந்திக்கவேண்டும். அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும்.

kamarajperiyar.jpg

ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார். இது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். சர்வாதிகார ஆட்சி வேறு, பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு, ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம், பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை. ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது. காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது. காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார். எப்படி மாறியது? ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது. அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.

இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார். அதற்குக் காலதாமதம் ஆகலாம். காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி. என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன். இங்கே பேசிய என்.வி. நடராஜன், ‘காமராஜர் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டார். நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவைதான். காங்கிரசை தி.மு.க.கழகம் எதிர்க்கிறது. தி.மு.கவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இரண்டும் எதிர்க்கட்சிகள்தான். அதில் எது உயர்ந்த கட்சி என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் மனமாற்றத்திற்கேற்ப மாறும் ஆட்சிதான் தேவை.

ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன். அப்போது அவரது நல்ல எண்ணத்தைத்தான் கண்டேன். எண்ணி எண்ணிப் பூரித்தேன். என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. மாநகராட்சித் தேர்தலின்போது அவர் ‘வேட்டைக்காரன்’ வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர், பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர். தொண்டராய், தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார்.

kamarajpeople.jpg

சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். சிகப்பு, நான் கறுப்பு என்று (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார். மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை. ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான். கறுப்பு என்றால் களங்கம் அல்ல. இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும்." என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் இந்தப் பேச்சு திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 'கட்சியின் முக்கியத் தலைவர் அந்தஸ்தில் இருப்பவர், எப்படி மாற்றுக்கட்சியின் தலைவரை புகழலாம்' என கட்சியில் கலகக்குரல் எழுந்தது. குறிப்பாக,  'காமராஜரை தலைவர் எனக் குறிப்பிட்டது அண்ணாவை அவமதிக்கும் செயல்' என பரபரப்பு கிளப்பினர் எம்.ஜி.ஆருக்கு எதிரான கோஷ்டியினர்.

இருப்பினும் எம்.ஜி.ஆர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். அண்ணாவிடம் தன் நிலைப்பாட்டை அவர் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்தார். எம்.ஜி.ஆரை நன்கு புரிந்தவரான அண்ணா, மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்திற்கு பிறகு, பொதுவான அண்ணா பற்றாளர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்பட்டது உண்மை. பின்னாள் நடந்தவை தமிழக அரசியல் வரலாற்றில் பதிவானவை.

1967 தேர்தல் நிலவரம் வெளியாகிக்கொண்டிருந்தது. விருதுநகர் தொகுதியில் கல்லூரி மாணவரான பெ.சீனிவாசனிடம் காமராஜர் தோல்வியுற்ற தகவலைக் கேட்டு எம்.ஜி.ஆர் கண்ணீர் வடித்ததாக சொல்வார்கள். திமுக வெற்றியை மற்றவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, அண்ணா நுங்கம்பாக்கம் வீட்டில் சோகமாக இருந்தார். “காமராஜர் தோற்றிருக்கக்கூடாது. எத்தனை அதிருப்தி இருந்திருந்தாலும் மக்கள் காமராஜரை தோற்கடித்திருக்கக்கூடாது' என திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.

karunanithikamaraj.jpg

“சட்டமன்றத்தில் நாம் ஒரு வலுவான தலைவரின் அனுபவத்தை இழந்துவிட்டோம்”என வேதனைப்பட்டார் அண்ணா. காமராஜரின் வெற்றியை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே அந்த தொகுதியில் முன்பின் அறிமுகமாயிராத ஒருகல்லுாரி மாணவனை நிறுத்தியிருந்தார் அண்ணா என்பார்கள். ஆனால் அதிருப்தி அலையில் காமராஜரும் தப்பவில்லை.

திமுக அரியணைக்கு வந்த சில மாதங்கள் கடந்த நிலையில், திமுக ஆட்சி பற்றி அதுவரை காமராஜர் எந்த விமர்சனமும் வைக்காதது பற்றி சிலர் காமராஜரிடம் குறைபட்டுக்கொண்டனர். " அவங்க வந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. கட்சி நிர்வாகம் வேற...ஆட்சி வேற...இப்போதான் புதுசா வந்திருக்காங்க. ஆட்சியின் நிர்வாக விஷயங்களை அவர்கள் தெரிந்துகொள்வதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும்...அதுக்குள்ள விமர்சிக்கறதுதான் ஜனநாயகமா... ?" என குறைபட்டவரை கடிந்துகொண்டார் காமராஜர். அதுதான் காமராஜர்.

அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கருணாநிதியும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கருணாநிதியின் காதுகளுக்கு இந்த தகவல்போனது.

kamarajarrajaji.jpg

கொதித்துவிட்டார் அவர். “காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகார் ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிதராயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார். மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கருணாநிதி, " நான்  சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை"  என கறாராக கூறினார்.

காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் துாணாக விளங்கிய கர்மவீரர்,  இப்படி மாற்றுக்கட்சியினராலும் போற்றக்கூடிய வகையில் தன் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை நேர்மையான முறையில் கையாண்டார் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

'திரும்ப வந்துட்டோம்னு சொல்லு' - சிஎஸ்கே ஆடையுடன் தோனி பகிர்ந்த புகைப்படம்

 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடையுடன் தோனி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடையுடன் தோனி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம்
  • தொடங்கியவர்

 

வந்துவிட்டது ஆளில்லா விமானக் காவல்துறை

பிரிட்டன் காவல்துறை தனது முதலாவது முழுநேர ஆளில்லா விமானப்பிரிவை ஆரம்பித்துள்ளது.

  • தொடங்கியவர்

ட்விட்டரில் வைரலாகும் மலாலா - சகோதரர் உரையாடல்!

 
 
 

மிகச்சிறிய வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடி வருபவருமான மலாலா யூசுப்சாய், சமீபத்தில்தான் ட்விட்டரில் இணைந்தார். இவரைத் தற்போது சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

மலாலா

சில தினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய மலாலாவுக்கு அவருடைய சகோதரர் குஷால் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. "டியர் மலாலா, நீயோர் அற்புதமான மனிதர் மட்டுமல்ல. ஓர் அற்புதமான சகோதரியும்கூட! ஆனால் என்னைப்போல சிறப்பானவனாக மாறவேண்டுமென்றால், எனது வழிகளை நீ பின்தொடர வேண்டும். அதனால் முதலில் ட்விட்டரில் என்னைத் தொடரவும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" எனத் தனது சகோதரி ட்விட்டரில் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை குஷால் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

malala_twitter_14150.jpg

 

இக்கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்ட மலாலா, "நான் ஃபாலோ செய்கிறேன். ஆனால் இன்று ஒருநாள் மட்டும்தான்" எனக் கண்டிப்போடு தெரிவித்ததோடு, தனது சகோதரரைத் தற்போது பின்தொடர்ந்துள்ளார். இதற்கு, "அதிக ஃபாலோயருக்காகத்தான் பொய் சொன்னேன். ஐ லவ் யூ" என நகைச்சுவையாக அவருடைய சகோதரர் பதிலளித்துள்ளார். மலாலா மற்றும் அவரின் சகோதரர் இடையே நடந்த இந்த ஜாலியான கலாட்டா ட்விட்டரில் பலரையும் கவர்ந்துள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person, Text
·

ஜூலை 15: #மறைமலையடிகள் எனும் தனித்தமிழ் இயக்கத்தந்தை பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு

தமிழ் மொழியில் வடமொழி கலந்து எழுதுவது அன்றைய காலத்தில் மிக இயல்பான ஒன்றாக இருந்து வந்தது. அதையே பெருமையாகவும் பண்டிதர்களும் கருதினர். நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள காடம்பாடியில் பிறந்த இவருக்கு திருக்கழுக்குன்ற இறைவனை நினைவுப்படுத்தும் வகையில் வேதாசலம் என்று பெயர் சூட்டப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் நூலுக்கு நயவுரை எழுதி இவர் அனுப்பியது சுந்தரம் பிள்ளையை வெகுவாக கவர்ந்தது. அதனால் இவருக்கு கேரளாவில் தமிழ் ஆசிரியர் பணி கிடைக்குமாறு செய்தார் சுந்தரம் பிள்ளை. அப்பணியை வெகு விரைவில் துறந்து வெளியேறிய வேதாசலம் சென்னை கிறித்துவக்கல்லூரியில் பரிதிமாற் கலைஞருடன் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றினார்.

”பெற்ற தாய்தனை மக மறந்தாலும் ” என்று துவங்கும் வள்ளலாரின் அருட்பா பாடலை நெக்குருக பாடிவிட்டு மகள் நீலாம்பிகையை நோக்கி ”இதில் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் ” என்று அடிகளார் பாடியுள்ளார். இதையே யாக்கை எனும் நற்றமிழ் சொல்லால் குறித்திருந்தால் இன்னமும் இனிமையாக இருந்திருக்கும்.” என்று புலம்பினார். அன்று முதல் எல்லாவற்றையும் தனித்தமிழில் பயன்படுத்துவது என்று இருவரும் முடிவு செய்தார்கள். வேதாசலம் மறைமலையடிகள் ஆனார். ‘ச‌ம‌ர‌ச‌ ச‌ன்மார்க்க‌ம்’ என்னும் த‌ம் இல்ல‌த்தின் பெயரை ‘பொதுநிலைக் க‌ழ‌க‌ம்’ என்றும், தாம் ந‌ட‌த்திவ‌ந்த‌ ‘ஞான‌சாக‌ர‌ம்’ திங்க‌ளித‌ழை ‘அறிவுக்க‌ட‌ல்’ என்றும் மாற்றினார்.

ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலியவை மறைமலையடிகள் கொண்டுவந்ததே. வேள்வி நிகழ்த்தல், ஆரியவழிபாடு முதலியவற்றையும் எதிர்த்தார். ஆரியர் எப்படி தமிழ்நாட்டை சீரழித்தனர் என்று ஆதாரங்களை அடுக்கினார் அடிகளார்.

அதோடு நில்லாமல் சைவ சித்தாந்த பதிப்பகம் உருவாவதற்கும் முக்கிய காரணமானார் . அவரின் வாசிப்பு எல்லையில்லாதது. அவர் மாதத்துக்கு ஐம்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கி வாசிக்கிற குணம் கொண்டவராக இருந்தார். அவரின் நான்காயிரம் நூல்கள் தான் மறைமலையடிகள் நூலகத்துக்கான அச்சாரம். பேச்சில்,எழுத்தில் எங்கும் தனித்தமிழை இவர் கொண்டு வந்த காலத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் ஏற்பட்டு இருந்தது. ஆரியரின் வடமொழியை நிராகரிப்போம் என்று இவரின் வழிநின்று எண்ணற்ற இளைஞர்கள் தனித்தமிழில் செயலாற்ற ஆரம்பித்தனர்.

ஐம்பத்தி எட்டு வயதில் ராஜாஜி அரசு சென்னை மாகாணத்தில் ஹிந்தி திணிப்பை செயல்படுத்த முயன்ற பொழுது சிறை புகுந்தார் அடிகள். ‘பொதுமொழி என்பது மக்களால் பேசப்படுகிறது. வாழும் மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அம்மொழி பண்டைய மொழியாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக நெடுங்காலம் பேசப்பட்டு, இப்போதும் பேசும்மொழியாக இருக்கவேண்டும். அந்த மொழி உயரிய இலக்கிய வளம் நிரம்பியதாக இருக்கவேண்டும். அந்த மொழியைப் பேசுகின்ற மக்களின் அரசியல் கொள்கைகள், சிந்தனை சார்ந்த சமயக் கொள்கைகள், சமூக நெறிகள் போன்ற
மக்கள் மனமுவந்து ஏற்கத்தக்க பல்துறை அறிவுசார்ந்த இலக்கியங்கள் சொந்தப் படைப்பிலக்கியங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வகையில் இந்தி மொழிக்கு பழமைச் சிறப்பும் இல்லை; இலக்கிய வளமும் இல்லை. வட இந்தியாவில் இந்தி பேசப்படுவதிலேயே பலவித வேறுபாடுகள் உள்ளபோது தமிழர்களை இந்தியைக் கற்றுக் கொள் என்று வற்புறுத்துவது சக்தியையும் முழு நேரத்தையும் வீணாக்குவதாகும்’ என்று உறுதியாக பதிவு செய்தார் அடிகள்

மறைமலையடிகள் இல்லாமல் போயிருந்தால் இன்றைய தமிழ் உரைநடை தனித்தமிழாக இருந்திருக்காது. தவறிப்போன தமிழாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவரைப்பற்றி தமிழ்த்தென்றல் திரு.வி.க. குறித்த வரிகளோடு இந்த கட்டுரையை முடிக்கலாம் ,” தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்”.

  • தொடங்கியவர்

”இந்த ஜெல் நம்மள 300 டிகிரி வெப்பத்தில் இருந்தும் காப்பாத்தும்..!” - சென்னைவாசியின் ‘நெருப்புடா’ கண்டுபிடிப்பு

 

ஜெல்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோசப் என்பவர் உடல் முழுக்க தீ வைத்துக் கொண்டு 5 நிமிடம் 41 வினாடிகள் தீயோடு இருந்திருக்கிறார். இதுவே இப்போது வரை கின்னஸ் சாதனையாக இருக்கிறது. இதற்கும் நாம் பார்க்க இருக்கிற நபருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதற்கு முன் அவரைப் பற்றிய அறிமுகம்.

ஜெல்

இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை அரசு மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரைப் பார்க்க ஒருவர் வருகிறார். மருத்துவமனையில் தீக்காயங்களுடன் இருக்கிற நோயாளிகளைப் பார்த்து வருத்தப்படுகிறார். தீக்காயங்களோடு இருக்கிறவர்களோடு பேசுகிறார். அவர்களின் வலியும் வேதனையும் அவரை மனதளவில் பாதிக்கிறது. மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவர் தீக்காயம் மற்றும் வெப்பத்தில் இருந்து  தடுப்பதற்கு என்ன செய்வதென இரவு பகலாக யோசிக்க ஆரம்பிக்கிறார். தீக்காயம் மற்றும் சூரிய வெப்பத்தில் இருந்து மனிதனை காத்துக்கொள்வதற்கு ஒன்றை கண்டுபிடித்ததாக வேண்டுமென முடிவு செய்கிறார். தீக்காயத்தின் வலியை உணர்ந்தவனால் மட்டுமே அதற்கான தீர்வைத் தேடித் தர முடியும் என நம்பியவர் தன்னுடைய  கைகளில் அவராகவே மூன்று முறை தீயால் சுட்டுக்கொள்கிறார். அந்த வலியோடு அவர் கண்டுபிடித்திருக்கிற விஷயம்தான்  “ஹீட் அண்ட் பயர் ரெசிஸ்டன்ஸ் வியரபில்” (Heat and fire resistence wearable)

ஜெல் 

சென்னையைச் சேர்ந்த அவரது பெயர் பாஸ்கர். தீயில் இருந்தும் வெப்பத்தில் இருந்தும் காத்துக்கொள்ளும் ஜெல் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அப்படி என்ன அந்தக் கண்டுபிடிப்பில் இருக்கிறது என அவரைச் சந்தித்துப் பேசியபோது

 “இதைக்  கண்டுபிடிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது. கிட்டத்தட்ட 200 பொருள்களுக்கும் மேலாக என்னுடைய ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தி இருப்பேன். அநேக முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. தீ தடுப்பிற்கு பயன்படுகிற முக்கியப் பொருளைக் கண்டுபிடிக்க ஆன  நாள்களை விட அந்தப் பொருள் எங்கே கிடைக்குமென தேடிய நாள்கள் அதிகம். பெங்களூரு சென்னை என அலைந்ததில் கடைசியாக ஒருவர் அந்தப் பொருளைக் கொடுத்து உதவினார். தீ தடுப்பை கண்டுபிடித்தவுடன் அந்த ஜெல்லை உலரவைத்து உள்ளங்கைகளில் தடவி அதன் மேல் பத்து சூடங்களை வைத்து கொளுத்தினேன் . 300 டிகிரி செல்ஷியஸ் வரை  இருந்த வெப்பத்தைக் கைகள் உணரவே இல்லை என்பதை உறுதிசெய்த பின்புதான் காப்புரிமைக்கு விண்ணப்பித்தேன். இந்த ஜெல்லை ஒரு துணியில் வைத்து தைத்து தொப்பிக்குள் வைத்து கொண்டால் காவல்துறையினரில் இருந்து சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வரை வெயிலின் வெப்பத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். தீயணைப்புத்துறையில் இருக்கிறவர்கள் தங்களின் உடைக்குள் இந்த ஜெல்லை வைத்துக்கொண்டால்  சாதாரணமாக தீயை நோக்கி முன்னேறுகிற அளவை விட இன்னும் ஐம்பது சதவிகிதம் முன்னேறி  செல்லாம்” என்கிறார். தொப்பிக்குள் வைக்கிற அளவிற்கான ஜெல்லின் அதிகப்படியான விலையே 80 ரூபாய் மட்டும்தான். ஜெல் நிரப்பப்பட்ட உடையாகத் தயாரிக்கும் போது அதன் விலையில் மாற்றங்கள் வரும் என்கிறார்.

ஜெல்

பாஸ்கர் கண்டுபிடித்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரமாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னுடைய படைப்பை நிரூபிக்க பல இடங்களில் ஏறி இறங்கியிருக்கிறார். கண்டுபிடிப்பின் பயனை அறிந்தவர்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் உதவுவதற்கு யாரும் முன்வரவில்லை என்கிறார் வேதனையோடு. தனக்கான உதவிகள் கிடைத்தால் கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.

 

இப்போது கின்னஸ் சாதனை பற்றிய முதல் பத்திக்கு வருவோம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோசப்பின் சாதனையான 5 நிமிடம் 41 வினாடிகளை முறியடிக்க காத்திருக்கிறார் பாஸ்கர். தனது கண்டுபிடிப்பான ஜெல்லை உடையாக உடுத்திக்கொண்டு 6 நிமிடங்கள் வரை தீயோடு இருந்து புதிய கின்னஸ் சாதனை புரிய ஆயத்தமாகிவருகிறார். அதற்கான பணிகளில்தான் இப்போது ஈடுபட்டு வருகிறார் . படைப்புகளை நிரூபிக்கக் காத்திருப்பும் பொறுமையும் ஒரு பொருட்டே இல்லை என்று சொல்கிற பாஸ்கர் தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் கின்னஸ் சாதனை படைக்க வாழ்த்துகள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆண்கள் எப்போதும் தவறானவர்களா..?' ஃபேஸ்புக்கில் வைரலாகும் வீடியோ!

 
 

குறும்படம்


பேருந்தில் பயணம் செய்யும்போது பல பெண்கள் தேவையில்லாத தீண்டலுக்கும் கஷ்டத்துக்கும் ஆளாகிறார்கள். அது எல்லாமே ஆண்களால்தான் என்று சொல்ல முடியாது. ஆனால், காலையிலும் மாலையிலும் பேருந்துக்குள் இருக்கும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும்போது ஓர் ஆணின் கரமோ உடலோ பெண்மீது மோதும்போது, அந்தப் பெண்ணுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவது இயல்பு. ஆனால், எல்லா நேரங்களிலும் எல்லா ஆண்களும் தவறான உந்துதலோடு பெண்ணை இடிப்பதோ சீண்டுவதோ கிடையாது. பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போடும்போது தவறுதலாகச் சாய்வது நடக்கும். ஆனால், இதைப் பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள். பேருந்தில் ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி நடந்த உடனே அருகில் இருப்பவர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை வைத்து ஒரு குறும்படமாக ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருக்கிறார்கள்.

பேருந்தில் பயணிக்கும் ஓர் ஆண் தவறுதலாக ஒரு பெண்ணை இடித்துவிடுகிறார். அதனால் கோபமடைந்த அந்தப் பெண் அவரைத் திட்டுகிறாள். இதனால், அருகில் இருப்பவர்களும் கொதித்தெழுந்து அந்த ஆணை பேருந்திலிருந்து இறக்கிவிடுகிறார்கள். அதற்குள் பேருந்தில் பயணிக்கும் யாரோ ஒருவர் இந்தச் சம்பவத்தைப் படமெடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துவிடுகிறார். இதனால் சம்பந்தப்பட்ட ஆணை கைது செய்கிறார்கள். இதனால் தன் வேலையை இழக்கிறார், தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து துரத்தப்படுகிறார். இப்படி தன் வாழ்க்கையின் அனைத்தையும் இழந்து நிற்கிறார். இதுதான் கடைசி வழியென அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று, 'என் மீதுதான் தவறு, நான்தான் எனக்கிருந்த டென்ஷனில் வேண்டுமென்றே இவர்மீது பழிபோட்டேன் ' என மன்னிப்புக் கேட்கும் வீடியோவை பதிவு செய்துகொள்கிறார் அந்த ஆண். கடைசியில் அவர் எடுக்கும் முடிவுதான் யாருமே எதிர்பாராததாக இருக்கிறது. ஒரு பெண்ணை மட்டுமல்ல, ஓர் ஆணையும் சமூகம் தண்டனைக்குரியவராகப் பார்க்கும்போது அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை இந்தக் குறும்படம் விளக்குகிறது. இந்த வீடியோவை இதுவரை பதினைந்து லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும், ஃபேஸ்புக்கில் தொடர்ந்து ஷேர் ஆகி வருகிறது.

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

முதியோரும் மழலையரும் ஒரே இடத்தில்
-----------------------------------------------------------------------
முதியோரும் சிறார்களும் ஒரே இடத்தில் இருக்கும்போது இருதரப்பும் மகிழ்ச்சியடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அப்படியான முயற்சி ஒன்று லண்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
‘அறியாமை விசித்திரமானது’
 

image_2acf0673d9.jpgஇந்த அறியாமையே ரொம்பவும் விசித்திரமானது. அறியாமையுடனேயே சீவிக்கிறவர்களில் ஒரு சாரார், யார் கூறுவதையும் நம்பிவிடுவார்கள். இன்னும் ஒரு சாராரோ யார் எந்த நல்லதைச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். 

எந்த ஒருவிதப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் இன்றி, அல்லாடியபடி ஒரு நல்ல முடிவு எடுக்க முடியாமல் கஸ்டப்பட்டுக் காலத்தை விரயமாக்குவார்கள்.  

கல்வியையும் தேடாமல், நல்ல அனுபவ சாலிகளையும் நம்பாமல் மூளையை உபயோகிக்காமல் சந்தேக வாழ்வு வாழ்வது கடினம்தான்.  

ஆயினும், படிக்காத பாமரர்கள் தங்கள் கலாசாரம் பற்றிய நம்பிக்கையையும் தெய்வ வழிபாடு மூலம், அனுபவ அறிவை வளர்த்து, வருகின்றனர். எல்லா பாமரனையும் ஏமாற்றி விட முடியாது, இவர்களில் பலர் தெளிவுடனேயே செயற்படுகின்றனர். தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்கின்றார்கள். அறிவு பொதுவானது; யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 16
 

article_1437019505-Chicago-Millennium-Pa1945: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனி தோல்வியுற்ற ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து அமெரிக்க, பிரித்தானிய, ரஷ்ய தலைவர்கள் ஜேர்மனியின் பொஸ்டாம் நகரில் சந்தித்து கலந்துரையாடினர்.

1979: ஈராக்கிய ஜனாதிபதி ஹசான் அல் பக்ர் ராஜினாமா செய்தார். புதிய ஜனாதிபதியாக சதாம் ஹுஸைன் பதவியேற்றார்.

1981: மலேஷியாவில் மஹதிர் முஹம்மட் பிரதரானார்.

1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக உக்ரைன் சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1999: முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி ஜூனியர் அவரின் மனைவி, மைத்துனி சகிதம் விமான விபத்தொன்றில் பலியானார்.

2004: தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி உயிரிழந்தனர்.

2004: சிக்காகோவில் மிலேனியம் பூங்கா, அமைக்கப்பட்டது.

2006: தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115பேர் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

`ஷாப்பிங்' மனைவிக்காக காத்திருக்கும் கணவருக்கு பொழுதுபோக்கு மையம்: சீனாவில் ஒரு புதுமை!

 
பழைய பள்ளி கேம்களை கணவர்கள் விளையாடலாம்படத்தின் காப்புரிமைTHE PAPER Image captionபழைய பள்ளி கேம்களை கணவர்கள் விளையாடலாம்

ஷாப்பிங் செல்லும் போது கணவர்களை விட்டுச் செல்வதற்காக 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ்' என்ற பொழுதுபோக்கு முனையங்களை சீனாவை சேர்ந்த ஒரு ஷாப்பிங் மால் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தி பேப்பர் என்ற ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் படி, ஷாங்காய் மாகாணத்தில் அமைந்துள்ள க்ளோபல் ஹார்பர் என்ற ஷாப்பிங் மால், ஷாப்பிங் செல்லும் போது அனைத்துக் கடைகளையும் சுற்றி அலைவதற்கு அதிருப்தி தெரிவிக்கும் கணவர்களுக்காக கண்ணாடியால் செய்யப்பட்ட பொழுதுபோக்கு முனையங்களை அமைத்துள்ளது.

ஒவ்வொரு முனையத்திலும் இருக்கை, திரை, கணினி மற்றும் கேம்பேட் என அழைக்கப்படும் விளையாட பயன்படுத்தப்படும் பலகைகள் இருக்கின்றன. இந்த முனையத்தில் அமரும் ஒருவர் 1990-களில் மிகவும் பிரபலமாக இருந்து ரெட்ரோ கேம்களை விளையாடலாம். தற்சமயம் இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இனிவரும் மாதங்களில் தங்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்தி சிறிதளவு தொகை செலுத்திய பின்னரே பயனாளர்களால் இதை உபயோகிக்க இயலும் என்று பணியாளர் ஒருவர் அந்த நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த பொழுதுபோக்கு முனையங்களை பயன்படுத்திய சிலர் இது ஒரு வித்தியாசமான புதிய யோசனை என்று தாங்கள் நினைத்ததாக தி பேப்பர் நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.

யாங் என்பவர் இது குறித்து தெரிவிக்கையில், `உண்மையாகவே இது சிறந்த முறையில் இருந்தது. நான் டெக்கன் 3 என்ற விளையாட்டை விளையாடினேன். நான் எனது பள்ளிக்கூட காலங்களில் இருப்பதைப் போன்று உணர்ந்தேன்` என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபரான வூ, இந்த அமைப்பில் முன்னேற்றம் தேவை என்றார். குறிப்பாக சரியான காற்றோட்டம் இல்லை என்றும், 5 நிமிடத்தில் தான் வியர்வையில் நனைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷாப்பிங் செல்ல ஊக்கப்படுத்துமா?

தற்போது சீனாவின் சமூக வலைதளங்கில் மிகப் பெரிய அளவில் நகைச்சுவையை ஏற்படுத்தி பொழுதுபோக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது கணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு முனையங்கள்தான். இது மேலும் பரவுமா என்ற விவாதத்தையும் சமூக வலைதளங்களில் தூண்டியுள்ளது.

இதை பயன்படுத்திய பயனாளர் ஒருவர் தெரிவிக்கையில், இந்த பொழுதுபோக்கு முனையங்கள் மனைவியுடன் ஷாப்பிங் செல்வதற்கும் பொருட்களை வாங்குவதற்கான தொகையை செலுத்தவும் கணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், வேறு சிலர் குறிப்பாக பெண்கள் இதை மறுத்துள்ளனர். `ஷாப்பிங் செல்லும் போது எனது கணவர் என்னுடன் இருக்க வேண்டுமே தவிர கேம் விளையாடுவதற்கு அவரை ஏன் நான் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கும் பல பெண்கள் ஆதரவாகத்தான் கருத்துத் தெரிவிப்பார்கள்!.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஆடிப்­பி­றப்­பன்று தித்­திக்­கப் பா­டுங்­கள்

 

தங்­கத்­தாத்தா என்­ற­ழைக்­கப்­ப­டும் நவா­லி­யூர் சோம­சுந்­த­ரப்­பு­ல­வர், ஆடிக்­கூ­ழை நனி­சொட்­டும்­ப­டி­யாக்கி அனு­ப­வித்து இத­யத்­தில் இனிக்­கும்­ப­டி­யா­கப் பாடிய அற்­பு­தப் பாடல்­தான் ‘‘ஆடிப்­பி­றப்­புக்கு நாளை விடு­தலை’’ என்ற இலக்­கண இலக்­கி­யப்­பா­ட­லா­கும்.

இந்­தப்­பா­ட­லில் வரும் ஒவ்­வொரு எழுத்­தும், ஒவ்­வொரு சொல்­லும், ஒவ்­வொரு வரி­யும், ஒவ்­வொரு பத்தி­ யும், ஒவ்­வொரு அசை­வும், ஒவ்­வொரு உட்­பொ­ரு­ளும் அதைப் பாடும் போதும், படிக்­கும் போதும் , மனதில் இனிக்­கவே செய்­யும். எனவே ஒவ்­வொரு தமிழரும் ஆடிப்­பி­றப்­பன்று தித்­திக்­கப் பா­டுங்­கள்.

அம்மா காய்ச்­சிய கூழோடு தமி­ழும் குருதியில் சுவ­றியே தீரும். பின்­னர் உங்­கள் உடம்பே தமி­ழா­கப் பிர­வா­கிக்­கும். இவர் சொல்லி நாம் பாடு­வதா என்று முணு­மு­ணுக்­காது ஒரு முறை­ தமி­ழுக்­கா­க­வா­வது பாடுங்­கள். ஆடி உங்­களை ஆசீர்­வ­திக்­கும்.

ஆடிப்பிறப்பு என்றால் என்ன?

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

- நவாலியூர் சோமசுந்தரப்புலவர் -


 

டிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!



பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து



வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு



வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே



பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே



குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே



வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே



வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே



ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

  • தொடங்கியவர்

உலகில் இருக்கும் 3458 வகை பாம்புகளில் எத்தனை விஷத்தன்மையுள்ளவை? #WorldSnakeDay

இன்று பாம்புகள் தினம்.

Snakes  

(Credit: Huw Cordey/naturepl.com)

உலகில் மிகவும் விசித்திரமான பிராணி மனிதன்தான் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. சின்னஞ்சிறிய புழு முதல் மிகப்பெரிய யானை வரையிலான அத்தனை உயிர்களுக்குமான இருப்பிடமாக திகழ்கிறது இப்பூவுலகு. இதில் வாழ்வதற்கு மனிதனுக்கு இருக்கும் உரிமைகள் அத்தனையும், புழு, பூச்சிகள் முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. ஒன்றின் கழிவு ஒன்றின் உணவு என்ற சித்தாந்தப்படி, ஒவ்வொரு உயிருக்குமான வாழிடம், உணவு என அனைத்தையும் உருவாக்கிக்கொடுத்திருக்கிறது இயற்கை. 'இந்த கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்' என இயற்கை வரையறுத்துள்ள லட்சுமணக்கோட்டை, அடிக்கடி மீறுவது மனிதன் மட்டும் தான். எந்த இனமும் அரிதி பெரும்பான்மையாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவளையை பாம்பு தின்கிறது. பாம்பை, கழுகு தின்கிறது. இப்படி நடந்தால்தான் பல்லுயிர் பெருக்கம் பலப்பட்டு, உயிர்சங்கிலி உடையாமல் காக்கப்படும். ஆனால், மனிதன் தனக்கு நன்மை செய்யும் உயிரினங்களை மட்டும் விட்டு விட்டு, தீமை செய்யும் உயிரினங்களை அழிப்பதில் வெகு முனைப்பு காட்டுகிறான். அந்த வகையில் மனிதனின் எதிரி உயிரினங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவை பாம்புகள். 

மனிதன் தோன்றுவதற்கு பன்னெடுங்காலத்துக்கு முன்தோன்றியவை பாம்புகள். இத்தனை யுகங்கள் கடந்த பிறகும் பாம்புகள் மீதான பயம் மட்டும் மனிதர்களுக்கு நீங்கவே இல்லை. பயத்தின் உச்சகட்டம் பணிந்து போதல். அதன் அடிப்படையில் தான் பாம்புகளை தெய்வமாக வழிபடுகிறோம். ஆனால், நேரில் பாம்பை பார்த்தால் அடித்துக்கொல்ல துடிக்கிறோம். முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் மனிதனோ? 

மனிதர்கள் நினைப்பது போல, பாம்புகள் அத்தனை அபாயகராமவை அல்ல. அவை மனிதர்களைக் கண்டு பயந்து ஓடுகின்றன. உலகளவில் 3,458 வகை பாம்பு வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதில் 600 வகை பாம்புகளே நஞ்சுள்ளவை. அதிலும் 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதனை கொல்லும் அளவுக்கு விஷமுள்ளவை. இந்தியாவை பொறுத்தவரை நான்கு வகைகள் மட்டுமே மனிதனைக் கொல்லும் விஷம் உள்ளவை.  பாம்புகள் வசிக்கும் இடங்கள் என நாம் நினைக்கும் இடங்களில் கூடுதல் கவனமாக இருந்தால் போதும். மின்சாரம் தொட்டால் ஆளையே காலிசெய்து விடும். அதற்காக மின்சாரத்தை பயன்படுத்தாமலா இருக்கிறோம். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறோம். அதுப்போலத்தான் பாம்புகளும். நாம் பாதுகாப்புடன் இருந்தால் பாம்புகளால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை.உழவனின் நண்பன் மண்புழுக்கள் மட்டுமில்லை. பாம்புகளும் தான். நெல் விளைச்சலில் 20 சதவிகிதத்தை காலி செய்கின்றன எலிகள். அந்த எலிகளை பைசா செலவில்லாமல் அழித்து விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்க உதவியாக இருக்கின்றன பாம்புகள். உண்மையில் பாம்புகள் தேடிப்போய் மனிதனை தொந்தரவு செய்வதில்லை. தன்னை தாக்க வரும்போதும், இரைக்காகவும் மட்டுமே அவை பிற உயிர்களை தாக்குகின்றன. சிங்கம், புலியைக் கூட காப்பாற்ற நினைக்கும் விலங்குநேசர்களும் பாம்புகளுக்காக வாய் திறப்பதில்லை. பாம்புகளும் இந்த உலகில் வாழ்வதற்கான உரிமையுள்ளவை என்பதை நினைவில் நிறுத்தி அவற்றிற்கு தொல்லை கொடுக்காமல் இருந்தாலே போதும். 

இதைப் பற்றி பேசிய திண்டுக்கல் வன அலுவலர் வெங்கடேஷ், '' இன்று உலக பாம்புகள் தினம். உயிர்சூழலில் பாம்புகள் முக்கியமானவை என்பதால் சர்வதேச அளவில் ஜுலை 16-ம் தேதி உலக பாம்புகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த, முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவற்றிற்கு கால்கள் இல்லை என்றாலும், உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரும். சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. உலகில் உள்ள மொத்த பாம்புகளில், விஷமுள்ள பாம்புகள், ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே. இந்தியாவைப் பொறுத்தவரை, நாகப்பாம்பு, கட்டுவிரியன், சுருட்டை, கண்ணாடி விரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். உலகளவில் இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் பாம்பு கடியால் இறக்கிறார்கள். ஆனால், பாம்பு கடித்து இறப்பவர்களில் விஷம் ஏறி இறப்பவர்களை விட, அதிர்ச்சியால் இறப்பவர்களே அதிகம். உலகில் அதிக நச்சுப்பாம்புகள் உள்ள ஆஸ்திரேலியாவில், பாம்புகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கே பத்துபேர் இருந்தால் அதிகம். ஆக, பாம்புகளை பற்றிய விழிப்பு உணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். பாம்பை கண்டதும் உடலில் அட்ரீனல் சுரந்து, பயமும் பதட்டமும் அதிகமாகி வேகமாக ஓடத்தோன்றும். இப்படி பாம்புகளை பற்றிய பயத்தை, 'ஒப்கிடோபோபியா' என்கிறார்கள். தவளைகள், எலிகள் இருக்கும் இடங்கள், பாம்புகள் வசிக்கும் இடங்கள் ஆகியவற்றில் போதுமான பாதுகாப்புடன் சென்றாலே பாம்பு கடியில் இருந்து தப்பி விடலாம். குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளை பார்த்தால் உடனே அடித்துக்கொள்ளக் கூடாது. வனத்துறையினருகு தகவல் கொடுத்தால் முறைப்படி, பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 படி அனைத்து பாம்புகளும் பட்டியல் விலங்காக கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. எனவே அவற்றை அடிப்பதோ, கொல்வதோ சட்டப்படி குற்றம். உலக பாம்புகள் தினமான இன்று, நாம் ஒரு உறுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாம்புகளை பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம்  தொந்தரவு கொடுக்க மாட்டோம். குடியிருப்பு பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை கொல்லாமல், அவற்றை வனத்துறை மூலமாக முறையாக வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதியை ஏற்றுக்கொண்டால், உயிர்சங்கிலி இன்னும் உறுதியாகும்'' என்றார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தடைகளைத் தகர்த்து சமஸ்கிருதப் பேராசிரியை ஆன துப்புரவுத் தொழிலாளி மகள்!

 

ள்ளியில் சமஸ்கிருதப் புத்தகத்தைக் கையில் எடுத்துப் படித்துக்கொண்டிருந்தது அந்தக் குழந்தை. `பால்மிகி' எனும் துப்புரவுத் தொழில் செய்யும் சாதியைச் சேர்ந்தவள். தாழ்த்தப்பட்ட சாதிக் குழந்தையின் கையில் சமஸ்கிருதப் புத்தகம்! சமஸ்கிருதத்தில் எதையோ திக்கித் திக்கி உளறிக்கொண்டிருந்தது அவளின் உதடுகள். இதைப் பார்த்த டீச்சருக்கு வந்ததே கோபம். குழந்தையை நோக்கி ஓடிவந்தவர்... கன்னத்தில் `பளார்' என அறைந்தார். கதிகலங்கிப்போனது குழந்தை. ``உன் அப்பா - அம்மா என்ன செய்றாங்களோ, அதையேதான் நீயும் பண்ணணும். போ... போய், டாய்லெட்டை க்ளீன் பண்ணு'' என உத்தரவிட்டார். பத்து வயது குழந்தைக்கு என்ன தெரியும்? கண்களைத் துடைத்துக்கொண்டு பள்ளிக் கழிவறையைச் சுத்தம் செய்யத் தொடங்கியது அந்தக் குழந்தை. எந்தப் புத்தகத்தைத் தொட்டதற்காக ஆசிரியர் கன்னம் பழுக்க அடித்தாரோ, அதே குழந்தை வளார்ந்து இப்போது கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியை ஆகியிருக்கிறார்.

பேராசிரியை ஆன துப்புரவுத் தொழிலாளி

ஹரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் உள்ள ராஜுன்ட் என்ற கிராமம்தான், சிறுமி குஷால் பன்வாரின் சொந்த கிராமம். சாதி துவேஷத்துக்குப் பஞ்சமே இல்லாத கிராமம். அங்கே ராஜ்புத் இனத்தவர் பெரும்பான்மையினர் உள்ளனர். பால்மிகி இனத்தவரின் வீடுகள் அங்கே சொற்பம். ஊரிலோ சாதிக் கொடுமை அதிகம். ஊரில் உள்ள குளத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினர் குளிக்கத் தடை. உயர் சாதிக் குழந்தைகள் குளித்துவிட்டுப் போன பிறகு, யாரும் இல்லாத சமயத்தில் குஷாலும் தோழிகளும் குளித்து ஆசையைத் தீர்த்துக்கொள்வார்கள்.

ஒருநாள் குஷாலும் அவளின் தோழிகளும் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது, மேல் சாதிச் சிறுமிகள்  பார்த்துவிட்டனர். அவர்களுக்கோ கடும் ஆத்திரம். ``எங்கள் குளத்தில் குளித்து, தண்ணீரை அசுத்தப்படுத்திவிட்டீர்கள்!'' எனக் கோபத்தில் கொந்தளித்தனர்.  குஷாலின் தோழிகள் பயந்துபோனார்கள். குஷால் நிமிர்ந்த பார்வையுடன், ``உங்கள் குளத்தை அசுத்தப்படுத்திவிட்டோம் அல்லவா... இனிமேல் இந்தக் குளத்தில் குளிக்க நீங்கள் வராதீர்கள்'' எனத் தைரியமாகச் சொன்னாள். ஊரில் சாதிச் சண்டையே ஏற்பட்டுவிட்டது. 

இப்படியான சூழலில் பள்ளியில் மட்டும் எப்படி சமநிலை நிலவும்? பால்மிகி இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிப் பக்கமே ஒதுங்கியதில்லை. குஷாலுக்கு மட்டும்  படிக்க ஆசை. போனால் போகட்டும் என, பள்ளியில் சேர்த்திருந்தார்கள். சமஸ்கிருதம்தான் அவளுக்குப் பிடித்த பாடம். சமஸ்கிருத ஆசிரியருக்கோ, குஷால் சமஸ்கிருதம் படிப்பதே பிடிக்கவில்லை. அந்தப் பாடத்திலிருந்து கேள்விக் கேட்டால்,  உயர்சாதிக் குழந்தைகள் பதில் சொல்லத் தடுமாறிக்கொண்டிருக்கையில், குஷால் அடுத்த விநாடியே பதில் சொல்லிவிடுவாள். வெறுத்துபோன அவளின் ஆசிரியர், தன் வகுப்பில் அவளைக் கடைசி பெஞ்சில்தான் அமரவைத்தார். 

`சமஸ்கிருதம் படித்தால், இந்து சாதியக் கூறுகளை முழுவதுமாக அறிந்துகொள்ள முடியும்' என்பது கொலம்பியப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் சமஸ்கிருத வல்லுநருமான ஷெல்டன் பொல்லாகின் கூற்று. ஹரியானாவில், 7-ம் வகுப்பிலிருந்து சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாகப் படிக்கலாம். உயர் வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள், தாழ்த்தப்பட்ட சாதிக் குழந்தைகளை சமஸ்கிருதம் படிப்பதை விரும்ப மாட்டார்கள். `சமஸ்கிருதம் தெய்வ மொழி. அதை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் படிக்கக் கூடாது' எனத் தடுப்பார்கள். குஷாலோ மசியவில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தாள்.

ஊரில் பொதுக்குளத்தில் குளிக்க முடியாது. கிணற்றில் குடிக்கத் தண்ணீர் பிடிக்க முடியாது. பள்ளியில் சக குழந்தைகளுடன் பழக முடியாது; உயர்சாதிக் குழந்தைகளுக்கு ஒரு யூனிஃபார்ம், இவர்களுக்கு ஒரு யூனிஃபார்ம் எனச் சுற்றிச் சுற்றி சாதிக் கொடுமைகளைப் பார்த்தே குஷால் வளர்ந்தாள். சமஸ்கிருதம் கற்பதில் ஏற்படும் தடைகளை உடைத்தெறிந்து அந்தப் பாடத்தை பயில்வதில் உறுதியாக இருந்தாள். அந்த மன உறுதிக்கு பலன் கிடைத்துவிட்டது. ஆம், குஷால் இன்று பேராசிரியை குஷாலாக மாறியிருக்கிறார்.

குருக்ஷேத்ரா பல்கலையில் சமஸ்கிருதத்தில் முதுகலையும், ஜவஹர்லால் பல்கலையில் டாக்டர் பட்டமும் பெற்றார்.  தற்போது டெல்லி மோதிலால் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியைப் பணி.  மேற்கு டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். பார்ப்பவர்கள் `நமஸ்தே புரொஃபசர்ஜி' என வணக்கம் வைத்தே கடந்துபோகிறார்கள்.

``எங்க அப்பா-அம்மா கழிவறையைச் சுத்தம் செய்யும் தொழில்தான் செஞ்சாங்க. அதைச் சொல்றதுக்கு நான் வெட்கப்படலை. பள்ளியில என்னையுமே அதைச் செய்யவெச்சாங்க. சமஸ்கிருதத்தைப் படிக்க நான் எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எங்க அப்பாகிட்ட போய் `சாதினா என்ன... ஸ்கூல்ல ஏன் இப்படி நடத்துறாங்க?'னு அழுவேன். எங்க அப்பா சொன்ன ஒரே விஷயம். `அவங்களைவிட நாம அதிகமா படிச்சுக் காட்டணும். அதுதான் நாம ஜெயிக்கிறதுக்கான வழி'னு சொல்லிச் சொல்லி வளர்த்தார். வளர வளர, சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் தெரிஞ்சது. அதைப் படிச்சா சாதிக் கொடுமையிலிருந்து அத்தனை விஷயங்களையும் தெரிஞ்சுக்கலாம்னு தோணுச்சு. அந்த வெறிதான் இப்போ என்னை சமஸ்கிருதப் பேராசிரியை ஆக்கியிருக்கு.  சமஸ்கிருதத்தைப் படிச்சால்தானே நாட்டுல உள்ள ஏற்றத்தாழ்வுகள் பற்றிப் பேச முடியும்... அதைப் பற்றி கேள்வி எழுப்ப முடியும்?'' என்கிறார்.

டெல்லியில் அவர் வசித்துவரும் ஃபிளாட்டில் `குஷால் பன்வார் பால்மிகி, சமஸ்கிருதப் பேராசிரியை' எனப் பெயர்ப்பலகை தொங்குகிறது. `என்ன... நீங்களே இப்படி சாதிப் பெயர் போட்டுக்கொள்ளலாமா?' என்றால்,  ``இந்தச் சாதியைக் காட்டித்தானே என்னை மற்றவர்களிடத்திலிருந்து வேறுப்படுத்தினாங்க. இப்போ நிரந்தரமா என் பெயரோடு இருக்கட்டும்... உலகம் உருண்டை'' எனச் சிரிக்கிறார்.

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இர்வின் ஆலன் ரோஸ்

 
irvin_alan_rose_3186583f.jpg
 
 
 

அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியலாளரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான இர்வின் ஆலன் ரோஸ் (Irwin Allan Rose) பிறந்த தினம் இன்று (ஜூலை 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* புரூக்ளின் நகரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார் (1926). சிறிது காலம் உள்ளூரில் உள்ள ஒரு ஹீப்ரு பள்ளி யில் பயின்றார். 13 வயதில், இவரது தம்பியின் உடல் நலனைக் கருதி குடும் பம் வாஷிங்டனில் உள்ள ஸ்போகான் என்ற இடத்துக்கு குடியேறியது.

* அங்கிருந்த அரசுப் பள்ளியில் படிப்பு தொடர்ந்தது. பின்னர் கோடை விடுமுறைகளில் உள்ளூர் மருத்துவ மனையில் பணியாற்றி வந்த இவர், அப்போதே மருத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தார். பின்னர் வாஷிங்டன் மாநிலக் கல்லூரியில் பயின்றார்.

* இதனிடையே இரண்டாம் உலகப்போரில் கப்பற்படையில் சேர்ந்து ரேடியோ தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். இதனால் இவரது படிப்பு சிறிது காலம் தடைபட்டது. 1948-ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

* அசாதாரண புத்திக்கூர்மை கொண்ட இவர், சிகாகோ பல்கலைக் கழகத்தில் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். சி-14 ரேடியோ ஐசோடோப்பைக் பயன்படுத்தி ரைபோ நியுக்ளியோடைட் என்சைம்களிலிருந்து உற்பத்தியாகும் டெக்சிசைடிடைன் உருவாகும் முறையைக் கண்டறிந்து கூறினார்.

* அங்கேயே முதுகலைப் பட்டமும் பெற்றார். 1952-ல் உயிரிவேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஃபாக்ஸ் சேஸ் கான்சர் சென்டரில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. என்சைம் ஸ்டீரோகெமிஸ்ட்ரியின் தோற்றம் மற்றும் அதன் வினையூக்கி இடையேயான தொடர்பு, ஒவ்வொரு ரசாயன மாற்றங்களுக்குப் பின்னரும் என்சைம்கள் தங்களை எவ்வாறு மீட்டமைத்துக் கொள்கின்றன என்பன குறித்து அங்கு ஆராய்ந்தார்.

* ஆவ்ரம் ஹெர்ஷ்கோ என்ற தொழில்நுட்ப நிபுணர் மற்றும் அவரது மாணவர் ஆரோன் ஜே.சியானாவோவர் ஆகியோருடன் இணைந்து செல்களின் புரதம் அகற்றும் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். செல்கள் எவ்வாறு பழைய மற்றும் சேதமடைந்த புரோட்டீன்களை அடையாளம் கண்டு அவற்றை துகள்களாக மாற்றி புதிய புரோட்டீன்களாக மறுசுழற்சி செய்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.

* அடையாளம் காணப்பட்ட சேதமடைந்த புரோட்டீன்கள் புரோட்டியோசோம்ஸ் என்ற சேம்பருக்குக் கொண்டு செல்லப்பட்டு, துண்டாக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் புதிய புரோட்டீன்களாக மாற்றப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். இதற்காக ஆரோன் ஜே.சியானாவோவர், ஆவ்ரம் ஹெர்ஷ்கோ ஆகியோருடன் இணைந்து 2004-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

* இந்தக் கண்டுபிடிப்பு சாதாரண உடலியங்கலியல் செல் சிதைவு குறித்த ஆராய்ச்சிகள் மேம்படுவதற்கு மட்டுமல்லாமல் புற்றுநோய் செல்களைத் தாக்கும் மருந்து மற்றும் சிகிச்சை முறையைக் கண்டறியவும் வழிகோலியது. இதன் நேரடி விளைவாக வெல்கேட் மைலோமா என்ற ரத்தப் புற்றுநோய்க்கான மருந்து கண்டறியப்பட்டது.

* யேல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஃபிலடல்ஃபியாவில் உள்ள ஃபாக்ஸ் சேஸ் கான்சர் சென்டரில் மூத்த உறுப்பினராகச் செயல்பட்டார். பதவி ஓய்வுக்குப் பிறகு, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இணைந்தார்.

* அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உயிரிவேதியியல் களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கிய இர்வின் ஆலன் ரோஸ், 2015-ம் ஆண்டு தனது 89-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஜென் கதை: பயத்தை போக்கும் ஒளி

ஒவ்வொருவருக்கும் அவரவர் அகமே விளக்கு. அதுதான் நமக்கு கடைசிவரை ஒளி தந்து வழி காட்டும். இதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

 
ஜென் கதை: பயத்தை போக்கும் ஒளி
 

அந்த ஆசிரமம் ஊரில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, வனத்தை ஒட்டி அமைந்திருந்தது. மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து நெடுந்தொலைவில் இருந்த அந்த ஆசிரமத்தில் ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார். அடர்ந்தக் காட்டுப்பகுதி அது என்றாலும், அந்த குருவைக் காண பகல் நேரத்தில் ஏராளமான மக்கள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவரும் தன்னைக் காண வரும் மக்களிடம் நல்லபடியாக உரையாடி உபசரித்து, அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி அனுப்பிவைப்பார்.

ஒரு நாள் குருவைக் காண்பதற்காக அவரது பழைய சீடன் ஒருவன் வந்திருந்தான். அன்று முழுவதும் குருவின் அருகிலேயே இருந்து, அவரது போதனைகளைக் கேட்டான். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. மாலை நேரம் முடிந்து இருள் சூழத் தொடங்கிவிட்டது.

சீடன் அங்கிருந்து புறப்பட நினைத்தான். குரு அவனைத் தடுத்து, ‘இரவு நேரமாகி விட்டது. நீ இங்கேயே தங்கியிருந்து, நாளைக் காலையில் புறப்பட்டுச் செல்’ என்றார்.

ஆனால் சீடன் மறுத்தான். ‘இல்லை குருவே! எனக்கு ஒரு முக்கியமான பணி இருக்கிறது. அதனால் நான் இன்று இரவே இங்கிருந்து போயாக வேண்டும்’ என்றான்.

அதற்கு மேல் அவனை தடுத்து நிறுத்த விரும்பாத குரு, ‘நல்லது, பத்திரமாகப் போய் வா’ என்று விடை கொடுத்தார்.

மடத்தின் வாசல் வரை வந்த சீடன் தயங்கியபடி நின்றான். வெளியே இருள் கவ்விக் கிடந்தது. மடத்தின் வெளிச்சத்தைத் தவிர, வேறு எங்கும் ஒரு துளி ஒளி இல்லை. ஆனால் அவனுக்கிருந்த பணி, அவனை அங்கேயே தங்கி விடவும் அனுமதிக்கவில்லை.

சீடன் தடுமாறுவதைக் கவனித்த குரு, உள்ளே போய் ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்தார். அதை சீடனின் கையில் கொடுத்து, ‘புறப்படு’ என்றார்.

தன்னுடைய மனநிலையை சரியாக கணித்துவிட்ட குருவைக் கண்டு பெருமிதம் கொண்ட சீடன், அவருக்கு நன்றியை தெரிவித்து விட்டு அவரிடம் இருந்து விடைபெற்றான்.

ஆனால் அவன் கொஞ்ச தூரம் போனதுமே, ‘நில்!’ என்றார் குரு.

சீடன் நின்றதும், அவனருகே விரைந்து சென்ற குரு, அவன் கையில் இருந்த விளக்கின் தீபத்தை, வாயால் ஊதி அணைத்தார். பின்னர் ‘இப்போது புறப்படு’ என்றார்.

சீடன் திகைத்துப் போய் குருவைப் பார்த்தான்.

அவனது பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்து கொண்ட குரு அவனிடம் விளக்கம் அளிக்கலானார்.

‘இரவல் வெளிச்சம் உனக்கு நெடுந்தூரம் துணைக்கு வராது. உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது. அது எரியாதவரை, இந்த விளக்கால் எந்த பயனும் இல்லை. உன் கையில் விளக்கு தேவை என்றால், உன் உள்ளே பயம் உறைகிறது என்று பொருள். உள்ளத்தில் துணிவிருந்தால், வெளியே விளக்குத் தேவையில்லை. உள்ளுக்குள் இருக்கும் பயம் போகாதவரை உன்னால், வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. இதே இருள், இதே பாதை.. இவை எப்பொழுதும் இங்கேயேதான் இருக்கும். ஆனால் உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணம் தொடரும்’ என்றார்.

சீடன் இப்போது மன உறுதியுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

எல்லா பாதைகளும் இருள் சூழ்ந்தவைதான். முன்னேறும் துணிவுடையவன் எந்த விளக்கையும் எதிர்பார்ப்பதில்லை. விளக்குடன் முன்னேறியவர்களை விட, விளக்கின்றி முன்னேறியவர்கள்தான் அதிக அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் அகமே விளக்கு. அதுதான் நமக்கு கடைசிவரை ஒளி தந்து வழி காட்டும்.

http://www.maalaimalar.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.