Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

ஜூலை – 17

 

1755 : கிழக்­கிந்­தியக் கம்­ப­னிக்குச் சொந்­த­மான டொடிங்டன் என்ற கப்பல் இங்கி­லாந்தில் இருந்து திரும்பும் வழியில் பெறு­ம­தி­யான தங்க நாண­யங்களுடன் கடலில் மூழ்­கியது.


1762 : ரஷ்­யாவின் மூன்றாம் பீட்டர் கொல்­லப்­பட்­டதை அடுத்து அவரின் மனைவி இரண்டாம் கத்­தரீன் அர­சி­யானார்.


1815 : பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லியன் போன­பார்ட், பிரித்­தா­னி­யர்­க­ளிடம் சர­ண­டைந்தான்.

varalaru-17-07
1918 : ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்­க­லஸும் அவரின் குடும்­பத்­தி­னரும் போல்­ஷெவிக் கட்­சியின் உத்­த­ரவின் பேரில்  கொல்­லப்­பட்­டனர்.


1918 : டைட்­டானிக் கப்­பலில் இருந்து 705 பேரைக் காப்­பாற்­றிய "கர்­பாத்­தியா" என்ற கப்பல் அயர்­லாந்­துக்கு அருகில் மூழ்­கி­யதில் 5 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1944 : இரண்டாம் உலகப் போர்: கலி­போர்­னி­யாவில் ஆயு­தங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்­பல்கள் வெடித்­ததில் 320 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1944 : இரண்டாம் உலகப் போர்: முதல் தட­வை­யாக நேபாம் குண்­டுகள் அமெ­ரிக்­கா­வினால் பிரான்ஸ் மீது வீசப்­பட்­டன.


1945 : இரண்டாம் உலகப் போர்: அமெ­ரிக்­காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்­தா­னி­யாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உல­கப்போர் தொடர்­பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜேர்­ம­னியின் பொட்ஸ்டாம் நகரில் ஆரம்­பித்­தனர்.


1973 : ஆப்­கா­னிஸ்தான் மன்னர்  முஹ­மது சாகிர் ஷா கண் சிகிச்­சைக்­காக இத்­தாலி சென்­றி­ருந்த போது பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டு அவரின் உற­வினர் முக­மது தாவுத் கான் மன்­ன­ரானார்.

 

Nicholas_II

1975 : அமெ­ரிக்­காவின் அப்­பலோ விண்­க­லமும் சோவி­யத்தின் சோயுஸ் விண்­க­லமும் விண்­வெ­ளியில் ஒன்­றாக இணைந்­தன. இரண்டு நாடு­களின் விண்­க­லங்கள் ஒன்­றாக இணைந்­தது இதுவே முதற் தட­வை­யாகும்.


1976: கன­டாவின் மொண்ட்­ரியால் நகரில் கோடை கால ஒலிம்பிக் விளை­யாட்­டுக்கள் ஆரம்­ப­மா­யின. நியூ­ஸி­லாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரி­வித்து 25 ஆபி­ரிக்க நாடுகள் இப்­போட்­டி­களைப் புறக்­க­ணித்­தன.


1976 : கிழக்குத் தீமோர் இந்­தோ­னே­ஷி­யா­வுடன் இணைக்­கப்­பட்­டது.


1994 : உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறு­திப்­பேட்­டியில் இத்­தா­லியை பிரேஸில் 3: 2 என்ற பெனால்டி கோல்­டிகள்  அடிப்­ப­டையில் வென்ற உலகக் கிண்­ணத்தை வென்­றது.


1996 : நியூயோர்க்­கி­லி­ருந்து  பாரிஸ் சென்­று ­கொண்­டி­ருந்த போயிங் 747  விமா­ன­மொன்று நியூயோர்க் லோங் தீவுக்கு மேலாக வெடித்துச் சித­றி­யதில் 230 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1998 : சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் ஒன்றை நிரந்­த­ர­மாக அமைப்­ப­தற்­கான உடன்­பாடு ரோம் நகரில் எட்­டப்­பட்­டது.


2006 : இந்­தோ­னே­ஷி­யாவின்  ஜாவா தீவில் ஏற்­பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.


2007 : பிரேஸிலில் விமானம் ஒன்று தரையில் விபத்துக்குள்ளானதால் 199 பேர் கொல்லப்பட்டனர்.


2014 : மலேஷியா எயார்லைன்ஸின் எம்.எச். 17 விமானம் யுக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 298 பேர் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தல தோனி, கம்பேக் சி.எஸ்.கே நமக்குக் கற்றுத்தரும் 7 பாடங்கள்! #MondayMotivation

சி.எஸ்.கே

எந்த ஒரு விஷயத்துலயும் ஜெயிச்சுட்டே இருக்கவும் முடியாது. தோத்துட்டே இருக்கவும் முடியாது. வாழ்க்கை ஒரு வட்டம். இப்படித்தான் எல்லாரோட வாழ்க்கையும் ஓடிட்டே இருக்கு. ஆனா ஒருத்தர் இந்த ரேஸ்ல இருந்து வெளியில போய்ட்டு மறுபடியும் இதே ரேஸுக்குள்ள வரும்போது மத்தவங்க கொஞ்சம் மிரண்டு போனா அவங்க கண்டிப்பா வெற்றியாளராத்தானே இருப்பாங்க?. ஆமா பாஸ்.. அப்படி கெத்தா ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) டீம்கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய 7 பாடங்கள் இதோ...

1. விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்!

ஏதோ ஒரு காரணத்துக்காக நீங்கள் விமர்சிக்கப்படலாம்; குற்றஞ்சாட்டப்படலாம். சில நேரங்களில் உங்கள் மீதான விமர்சனம், குற்றச்சாட்டு சரியாக இருந்து அதற்கு உங்களுக்குத் தண்டனையும் கிடைக்கலாம். உங்கள் தண்டனைக்காலம் முடியும் வரை உங்கள் ஆதரவாளர்கள் உங்களைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும் அப்படி நடந்தால் 2 வருட தடைக்குப்பின் களமிறங்கும் சி.எஸ்.கே-வுக்கு இருக்கும் மரியாதை உங்களுக்கும் இருக்கும். அதற்கு நீங்கள் எல்லா விமர்சனங்களையும் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும்.

2. பலம்தான் ஆயுதம்!

ஐ.பி.எல் போட்டிகளில் எல்லா அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள்தான். ஆனால் ப்ளே ஆஃப் என்றால் சி.எஸ்.கே-வுடன் மோதும் அணி எது என்பதற்கான ஆட்டமாக அது பார்க்கப்படுவதற்கு காரணம் அந்த அணியின் தொடர்ச்சியான செயல்பாடுதான். அதே போலதான் உங்கள் செயல்பாடு தொடர்ச்சியாக இருந்தால் வருட இறுதியில் அப்ரைசலுக்கோ அல்லது தவறு என்று உங்களுக்குத் தெரிந்தாலும் பதவி உயர்வுக்கு பாஸ் சொல்வதற்கு பணிந்து செயல்படவோ வேண்டிய அவசியம் இருக்காது. பலத்தைப் பயன்படுத்துங்கள்.

3. மிஸ் செய்ய வையுங்கள்!

ஒரு வேலையில் உங்கள் தேவை இருக்கும் ஆனால் வேண்டுமென்றோ அல்லது தவறான முடிவால் நீங்கள் அந்த வேலையில் ஈடுபடமுடியாமல் போனால் நீங்கள் அந்த வேலையில் இல்லை அதனால் அந்த வேலை சிறப்பாக இல்லை என்பதை உணர வையுங்கள். உங்களை ஒரு வேலை மிஸ் செய்கிறது என்றால் அதற்கு தகுதியான ஆள் நீங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. இதே நிலைதான் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும். கடைசி இரண்டு ஐ.பி.எல் சீஸன் டல்லடித்ததற்கு சி.எஸ்.கே இல்லாததும் ஒரு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.

சி எஸ் கே

4. பொறாமைப்படட்டும்! 

உங்களிடம் கொடுக்கப்பட்ட வேலையை நீங்கள் செய்யும் விதத்தைப் பார்த்து மற்றவர்களோ அல்லது போட்டியாளர்களோ பொறாமைப்படும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள். அதே விஷயம்தான் தோனிக்கும். சி.எஸ்.கேவை வழிநடத்தும் விதத்தைக் கண்டு வியந்து, இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் என் ஆடைகளை விற்றாவது தோனியை வாங்குவேன் என்று கூறியதுதான் சி.எஸ்.கே மற்றும் தோனியின் பெருமை.

5. தலைவர்களின் தலைவன் ஆகுங்கள்!

ஓர் அணி என்று இருந்தால் அதில் ஒரு தலைவர்தான் இருப்பார். ஆனால் ஓர் அணி முழுவதும் தலைவருக்கான தகுதியோடு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த அணியின் தலைவன் தலைவர்களை உருவாக்குகிறார் என்று அர்த்தம். தலைவனாக வேண்டும் என்பது மட்டும் லட்சியமாக இல்லாமல் தலைவர்களை உருவாக்குவது லட்சியமாக இருக்க வேண்டும். தோனியும் அதைத்தான் சி.எஸ்.கேவில் செய்திருக்கிறார். ஜார்ஜ் பெய்லி(ஆஸி), ஜேசன் ஹோல்டார்(மேற்கிந்தியத் தீவுகள்), டூப்ளெஸிஸ்(தெ.ஆ), முரளி விஜய்(பஞ்சாப்), சுரேஷ் ரெய்னா(குஜராத்) என அணிக்குள் வந்த வீரர்களைக் கேப்டனாகும் அளவுக்கு வழிநடத்தியுள்ளார். இதனை இவர்களே பேட்டிகளில் கூறியிருப்பது நம்மை தோனிக்கு சல்யூட் போட வைக்கும்.

6. அதிர்வுகளை ஏற்படுத்துங்கள்!

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் சில காரணங்களுக்காக வேலையை விட்டுச் சென்று விட்டு மீண்டும் அதே வேலைக்கு வருகிறீர்கள் என்றால் இரண்டு விஷயம் கட்டாயம் இருக்க வேண்டும். ஒன்று அந்த நிறுவனத்துக்கு நீங்கள் அவசரமாக தேவைப்பட வேண்டும். இரண்டாவது உங்கள் வருகை அதிரடியாக இருக்க வேண்டும். இதுதான் என்று ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸுக்கும், இன்று சி.எஸ்.கேவுக்கும் நிகழ்ந்தது. உங்கள் கம்பேக்கை அதிரடியாக வைத்திருங்கள்.

7. தோனியாக இருங்கள்!

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen und im Freien

உங்கள் அணி ஒரு தண்டனையில் இருக்கிறது அல்லது உங்களுக்கான வேலை உங்களிடம் தரப்படவில்லை. அதற்காக உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருங்கள். தடை நீங்கியோ அல்லது அந்த வாய்ப்பு உங்களைத் தேடி வரும் போதோ உங்கள் பவர் என்ன என்பதைக் காட்டுங்கள். அது உங்களின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். தல என்ற 7ம் நம்பர் எண் பதிக்கப்பட்ட சி.எஸ்.கே டி-ஷர்ட்டுடன் தோனி வெளியிட்ட படம்தான். அவருக்கு இந்த அணிமீது இருக்கும் காதலை வெளிப்பட்டுத்தியது. உங்கள் வேலை மீதான காதலை எப்போதும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

 

அப்பறம் என்ன பாஸ்....இந்த வருஷம் மஞ்சள் கலர் ஜெர்ஸி, விசில் போடு சத்தம், தல தோனி..,இப்படி உற்சாகமா ஆரம்பிக்கப்போற ஐபிஎல் மாதிரி இந்த வாரத்த ஆரம்பிங்க... இந்த வாரம் முழுக்க விசில்போடு தான்...

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சாம்பியன் பெடரரின் சாதனைப் பயணம் (புகைப்படத் தொகுப்பு)

2017-ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம், மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை ரோஜர் பெடரர் படைத்துள்ளார்.

  • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மோதிய ரோஜர் பெடரர் மற்றும் மரின் சிலிக்GETTY IMAGES

    விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மோதிய ரோஜர் பெடரர் மற்றும் மரின் சிலிக்

  • 35 வயதாகும் ரோஜர் பெடரர் தனது 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.REUTERS

    35 வயதாகும் ரோஜர் பெடரர் தனது 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

  • விம்பிள்டன் கோப்பையை வென்றவர்கள் பட்டியலில் தனது பெயர் மீண்டும் இடம்பெறுவதை கண்டு பூரிப்பு அடையும் பெடரர்BBC

    விம்பிள்டன் கோப்பையை வென்றவர்கள் பட்டியலில் தனது பெயர் மீண்டும் இடம்பெறுவதை கண்டு பூரிப்பு அடையும் பெடரர்

  • Roger FedererPA

    8 முறை விம்பிள்டன் கோப்பையை வென்று பெடரர் சாதனை

  • ஏமாற்றம் அளித்த மரின் சிலிக்GLYN KIRK/AFP/GETTY IMAGES

    ரோஜர் பெடரருக்கு பெரிதும் சவால் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மரின் சிலிக் தனது ஆட்ட பங்களிப்பில் ஏமாற்றம் அளித்தார்.

  • நேர் செட்களில் எளிதாக வென்ற ரோஜர் பெடரர்REUTERS

    நேர் செட்களில் எளிதாக வென்ற ரோஜர் பெடரர்

  • விம்பிள்டன் இறுதிப் போட்டியின் துவக்கம் முதலே பெடரர் ஆதிக்கம் செலுத்தினார்BBC

    விம்பிள்டன் இறுதிப் போட்டியின் துவக்கம் முதலே பெடரர் ஆதிக்கம் செலுத்தினார்

 

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

17a.jpg
ஆர்டிஸ்ட் வண்டு!

ஜப்பானைச் சேர்ந்த மாண்டி என்ற பெண் வளர்க்கும் ஆர்டிஸ்ட் வண்டுதான் இப்போது ஆன்லைன் சென்சேஷன். இந்த வண்டு தானாகவே  பேனா பிடித்து வரையும் லைன் ஆர்ட்டுகளை ரசிக்க தானாகவே ஒரு கூட்டம் ட்விட்டரில் உருவாகிவிட்டது. ஜப்பான் சுட்டிகளிடம் பெட்  ஆக வண்டுகள் வளர்ப்பதுதான் இப்போது அங்கே ட்ரெண்டிங்.

பர்கர் ராணி!

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த 8வது பர்கர் சாம்பியன்ஷிப்பில்தான் இச்சாதனை. 10 நிமிடத்தில் 21 ஹாம் பர்கரை மூச்சு முட்ட தின்று  வென்ற சாதனை லேடி மோலி சூய்லெர், 3 ஆண்டுகளாக டைட்டில் வின்னர். கிடைத்த 4 ஆயிரம் டாலரில் தன் குழந்தைகளுக்கு உணவு  வாங்கித்தருவாராம்!

மேயரின் கல்யாணம்!

மெக்சிகோவைச் சேர்ந்த மேயர் விக்டர், தங்கள் மரபுப்படி பெண் தேடித்தான் திருமணம் செய்தார். விழாவில் மணமகளைப்  பார்த்தவர்களுக்குத்தான் செம பீதி. மணமகள் கெட்டப்பில் இருந்தது முதலை! மேயரின் நகரில் மீன்வளம் டன் கணக்கில் பெருக நடந்த  மேரேஜ் இது.

முட்டை உடையாமல் கின்னஸ்!

பாகிஸ்தானின் கராச்சியில் தற்காப்புக் கலை வீரரான முகமது ரஷீத் 30 செகண்டில் 29 கூல்ட்ரிங்க் கேன்களை நொறுக்கி கின்னஸ்  செய்திருக்கிறார். அதுவும் உள்ளங்கையில் முட்டையை வைத்துக்கொண்டு அது உடையாமல் இந்த வீரச்செயலை செய்ததுதான் மாஸ் ஹிட்.

சுறா வேட்டை!

அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த செர்ஜியோ ரோக், 55வது மீன்பிடிக்கும் போட்டியில் ஜாலியாக கலந்து கொண்டார். 3 மணிநேர  போராட்டத்தில் அவருக்கு கிடைத்த புலிச் சுறா மீனின் எடை எவ்வளவு தெரியுமா? 437 கிலோ! இந்த மீனின் மூலமே முதல்பரிசு  வாங்கிவிட்டார் செர்ஜியோ.

காற்றினால் கிடைத்த லக்!

நியூயார்க்கின் கிளிப்டன் பார்க்கைச் சேர்ந்த ஆண்டனி லவரோன், தன் கார் டயர்களில் காற்றுப் பிடிக்க ஸ்டூபர்ட் கடைக்குச் சென்றார்.  எதேச்சையாக அருகிலிருந்த கடையில் லாட்டரிச்சீட்டை வாங்க, நம்புவீர்களா? அதற்கு கிடைத்த மிராக்கிள் பரிசு 1 மில்லியன் டாலர்கள்.  லக்கிமேன்!

  • தொடங்கியவர்

ஷ்மூயல் யூசப் அக்னான்

 
 
yui_3186836f.jpg
 
 
 

நோபல் பெற்ற போலந்து எழுத்தாளர்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரபல போலந்து எழுத்தாளர் ஷ்மூயல் யூசப் அக்னான் (Shmuel Yosef Agnon) பிறந்த தினம் இன்று (ஜூலை 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* போலந்தின் புகாஸ் (தற்போது உக்ரைனில் உள்ளது) நகரில் 1888-ல் பிறந்தார். தந்தை யூத மதகுரு, வர்த்தகர். வீட்டிலேயே பெற்றோரிடம் கல்வி பயின்றார் அக்னான். ஹஸ்காலா, ஜெர்மன் மொழிகள், பண்டைய மற்றும் நவீன இலக்கியங்கள் கற்றார்.

* எட்டு வயதிலேயே ஹீப்ரூ, இத்திஷ் மொழிகளில் எழுத ஆரம்பித்தார். ஜெர்மன் மொழியிலும் எழுதினார். முதலில் கவிதைகள், அடுத்து சிறுகதைகளை எழுதினார். ஜெர்மனி, ஐரோப்பிய இலக்கியம், கலாச்சாரம் தொடர்பாக நிறைய நூல்களைப் படித்தார். 15 வயதில் இவரது முதல் கவிதை வெளிவந்தது. அது நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து எழுதினார்.

* பாலஸ்தீனத்தின் ஒட்டாமன் பகுதியில் உள்ள ஜாஃபா நகரில் 1908-ல் குடியேறினார். ‘அக்னான்’ என்ற பெயரில் எழுதி வந்தார். ‘ஆகனாட்’ என்ற இவரது முதல் கதை பிரபல இதழில் வெளி வந்தது. அதைத் தொடர்ந்து, நல்ல படைப்பாளியாக அறியப்பட்டார். ஜெர்மன் மொழியில் இந்தக் கதை மொழிபெயர்க்கப்பட்டது.

* ‘தி க்ரூக்டு ஷல் பீ மேட் ஸ்ட்ரெய்ட்’ என்ற நாவலை வெளியிட்டார். 1913-ல் ஜெர்மனி சென்றவர் பெர்லினில் குடியேறினார். அங்கு வணிகரும், வெளியீட்டாளருமான சால்மன் ஷாக்கெனின் நட்பும் ஆதரவும் கிடைத்ததால் முழு மூச்சாக எழுத ஆரம்பித்தார்.

* அடுத்தடுத்து இவரது நூல்கள் வெளிவந்தன. பிரபல இதழ்கள் இவரது சிறுகதைகளைத் தொடர்ந்து வெளியிட்டன. பாரம்பரிய யூத வாழ்க்கை மற்றும் மொழிக்கும், நவீன உலகத்துக்கும் இடையேயான முரண்பாடுகளை இவரது படைப்புகள் பிரதிபலித்தன. மறைந்துவரும் பாரம்பரியங்கள் குறித்தும் எழுதினார்.

* தான் வாழ்ந்த இடங்கள், அங்குள்ள மக்கள், அவர்களது வாழ்க்கைத் தரத்தை தன் படைப்புகளில் சித்தரித்தார். கவிதை, கதை, நாவல் என ஏராளமாக எழுதினார். உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்பட்ட நிலையில், 1924-ல் பாலஸ்தீனம் திரும்பினார்.

* ஹீப்ரூ இலக்கிய உலகில் ஷாய் அக்னான் என்றும் ஆங்கிலப் படைப்புலகில் எஸ்.ஒய்.அக்னான் என்றும் பிரபலமடைந்தார். இவரது நூலகமும், பல அரிய படைப்புகளும் யூத எதிர்ப்பாளர்களால் 1929-ல் அழிக்கப்பட்டன.

* இவரது பிரைடல் கெனோபி என்ற நாவல் (1931), இலக்கியவாதிகள், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. ஹீப்ரூ இலக்கிய உலகில் முக்கிய இடத்தையும் இவருக்குப் பெற்றுத் தந்தது. இவரது படைப்புகள் உள்ளூர் மொழிகள், ஜெர்மன், ஆங்கிலம் உட்பட 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது நூல்கள் உலகம் முழுவதும் அதிக அளவில் விற்பனையாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

* சில படைப்புகள் நாடகங்களாக அரங்கேறின. பல முன்னணி ஹீப்ரூ மொழி அறிஞர்கள் இவரது படைப்புகளை ஆராய்ந்து அதுபற்றி பல நூல்கள், கட்டுரைகளை வெளியிட்டனர். இஸ்ரேலில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த படைப்பாளிக்கான பியாலிக் பரிசு, இஸ்ரேல் பரிசு ஆகிய இரண்டையும் 2 முறை பெற்றுள்ளார்.

* இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1966-ல் நெல்லி சாஸ் என்ற ஜெர்மனி கவிஞருடன் இணைந்து இவருக்கு வழங்கப்பட்டது. நவீன ஹீப்ரு இலக்கியக் களத்தின் முக்கியப் படைப்பாளியாகப் புகழ்பெற்ற ஷ்மூயல் யூசப் அக்னான் 82-வது வயதில் (1970) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கனடா பிரதமரை நெகிழ வைத்த சிரியா குழந்தை!

கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ,  கடந்த சனிக்கிழமையன்று தன் பெயர்கொண்ட சிரியக் குழந்தையைச் சந்தித்து மகிழ்ந்தார். சிரியாவில் நடைபெற்றுவரும் போரினால், சிரிய மக்கள் பலரும்  கனடா நாட்டுக்கு குடியேறிவருகின்றனர். 

adam_13273.jpg

இந்நிலையில், சிரியத் தம்பதியர் கனடா பிரதமருக்கு நன்றி செலுத்தும் வகையில்,  அவரது பெயரான ஜஸ்டின்  ட்ரூடோவை தங்கள் குழந்தைக்குச்  சூட்டியிருக்கின்றனர். கனடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ,  அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார்.  இதுகுறித்து அந்தக் குழந்தையின் தாய் கூறுகையில், “நாங்கள் பிரதமரைச் சந்தித்தோம் என்று என்னால்  நம்பவே  முடியவில்லை. அவர் எங்களிடம் உங்கள்  குழந்தைக்கு என் பெயரைச் சூட்டியதில் மகிழ்ச்சியடைக்கிறேன் என்று கூறினார்”, என்று உற்சாகம் பொங்கத் தெரிவித்தார். 

 

அந்தக் குழந்தையின் பெற்றோர், முகமது மற்றும் அஃப்ரா  பிலால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கனடா நாட்டில் குடியேறினர். கடந்த மே மாதம் 4-ம் தேதி பிறந்த தங்களின் குழந்தைக்கு,  ஜஸ்டின் ட்ரூடோ என்று பெயர் சூட்டினர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உங்கள் புகைப்படங்கள்: `என் வீட்டு வாசலில்`..!

வாரந்தோறும் நமது வாசகர்கள் எடுத்த புகைப்படங்களை ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பதிவிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இந்த வார புகைப்படத் தொகுப்பின் தலைப்பு ` என் வீட்டு வாசலில்`.

  • வேல்ஸ் பகுதியில் கார்களை சூழ்ந்திருக்கும் ஆட்டுக் கூட்டம்.IZZY NAGLE

    இஸ்ஸி நக்லி: ஆட்டு மந்தையை கடக்கும் போது ஏற்பட்ட சிறிய விபத்து. இந்த தருணத்தை புகைப்படம் எடுக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.கார்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

  • வாசற்படியில் நிற்கும் நியூட்ஸ்SJOERD WADMAN

    ஜோர்டு வாட்மென்: `என் வீட்டில் வாழும் அல்பைன் நியூட்ஸ் உயிரினம். வீட்டின் வாசலிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கிறது.`

  • அயர்லாந்தின் உள்ள ஒரு வீட்டின் வாசலில்TOBY DEMEULDRE

    டோபி டெமுல்டெர்: வெல்கம் என்ற செய்தியை சொல்லும் விரிப்பின் மீது செடிகள் வளரத் தொடங்கிவிட்டன. இதை பார்க்கும் போது `நீ வருவதற்கு முன்னரே நான் வந்துவிடுவேன்` என சொல்வது போல இருக்கிறது.

  • இரண்டு சிவப்பு நிறக் கார்கள்CORINNA DEL DEBBIO

    கோரின்னா செல் டெபிபோ: எடின்பர்க்கில் உள்ள எனது வீட்டின் வாசலில் இருந்து இந்த புகைப்படத்தை எடுத்தேன். இந்த கார்கள் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தந்தை மற்றும் மகனுடையது. அற்புதமான பார்க்கிங் திறனுடன் நிறுத்தப்பட்டிருந்தது. இது நகர குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கூறும் ஒரு சிறந்த புகைப்படம்.

  • சவுத் கரோலினாவில் உள்ள கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்பம்TRACY JONES

    ட்ரேசி ஜோன்ஸ்: `கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு கன்சாஸ் நகருக்கு பயணம் செய்த போது , சிற்பக் கல்லூரி மாணவர்களுக்கான பொருட்காட்சிக்கு சென்றேன். என்னை அங்கிருந்த இளம் கலைஞர் ஒருவர் சிலையாக வடித்தார். மேலும் இந்த சிற்பத்தை பல மணி நேரம் பயணித்து வந்து என்னிடம் ஒப்படைத்தார்.`

  • சார்ட்டர் ஹவுசில் உள்ள கிரேட் ரூம்RAKESH MATHUR

    ராகேஷ் மாத்தூர்: `இடைக்கால இசை மூலம் வரலாற்றை நினைவுபடுத்துதல்.`

  • பிரிஸ்டலில் உள்ள வீடுகளை பிரதிபலிக்கும் கார்களின் மேற்கூரைகள்CATHRYN GALLACHER

    கேத்ரீன் கேலச்சர்: `பிரிஸ்டல் நகரின் கிங்ஸ்டவுன் பகுதியில் உள்ள எனது வீட்டின் வாசலுக்கு வெளியே பல கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த கார்கள் இல்லாமலும் இந்த தெரு அழகாக காட்சியளிக்கும் என்றாலும், மழைக்கால மாலை நேரம் ஒன்றில், அவற்றின் மேற்கூரைகள் சில கவர்ந்திழுக்கும் பிரதிபலிப்புகளை தருகின்றன.`

  • இலைகள்MATT BERRISFORD

    மட் பெரிஸ்ஃபோர்டு:` கடந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் எனது வீட்டின் வாசலில் கிடந்த இலைகளில் கலவை.`

  • கோழிகள்DERRICK

    இறுதியாக தெற்கு ஜகார்த்தாவில் உள்ள டெர்ரிக்கின் மூன்று கோழிகளான பா ப்ரூன்,பெட்டி மற்றும் ஹோரஸ் குறித்த புகைப்படம்.

 

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

8118-samanthas-new-photo931867656.jpg

 

சமந்தாவின் கவர்ச்சி படங்களால் திக்கு முக்காடி போன ரசிகர்கள்..:grin:

  • தொடங்கியவர்

விசித்திரமான தீ
------------------------------------------
அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் கைவிடப்பட்ட தொழிற்சாலையில் இருந்த கந்தகம் பற்றி எரிந்தது பார்க்க விசித்திரமாக இருந்தது.

  • தொடங்கியவர்

கூகுள் பறக்கவிடும் 20 மில்லியன் கொசுக்கள்... எதற்கு தெரியுமா?

 

கூகுள் கொசுக்கள்

இன்டர்நெட் உலகில்தான் கூகுள் ஏதாவது வித்தியாசமாக செய்து கொண்டிருக்கிறது என்றால், அறிவியல் தளத்திலும் பல விநோத முயற்சிகளை அவ்வப்போது எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதன் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet), தனது உயிர் அறிவியல் துறையான வெரிலி (Verily Life Science) உதவியுடன் 20 மில்லியன் கொசுக்களை கலிஃபோர்னியாவிலிருந்து பறக்கவிடப்போகிறது. சிட்டி ரோபோ போல் ரங்கூஸ்கி கொசுவைக் கண்டுபிடிக்கும் முயற்சியோ என்று ஆச்சர்யப்பட வேண்டாம். இது வளர்ந்து கொண்டே இருக்கும் ஒட்டுமொத்த கொசு இனத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி!

கொசுவின் இனப்பெருக்கம் குறையும்

கொசுவின் இனப்பெருக்கத்தைக் குறைக்கவும், அதன் மூலமாக பரவும் உயிர்கொல்லி நோய்களான ஜிகா (Zika) மற்றும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் இந்த ஆராய்ச்சியைக் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது வெரிலி. ரோபோட் ஒன்றைத் தயாரித்து அதன் மூலம் ஆண் கொசுக்களை மலட்டுத் தன்மையுடன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதற்கட்டமாக, 20 மில்லியன் கொசுக்களை கலிபோர்னியாவில் இருக்கும் ஃப்ரெஸ்னோ கவுண்டி என்ற இடத்தில் பறக்கவிட இருக்கிறார்கள். வாரத்திற்கு ஒன்றரை லட்சம் கொசுக்கள் என 20 வாரங்களுக்கு இதை செய்யவிருக்கிறார்கள். இதற்காகவே இரண்டு 300 ஏக்கர் நிலங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

இந்த மலட்டுத் தன்மையுடைய கொசுக்கள் பெண் கொசுக்களுடன் சேரும் போது உருவாகும் கருமுட்டைகள் கொசுக்களை உருவாக்காது. இதன் மூலம், கொசுவின் இனப்பெருக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும். 20 மில்லியன்களில் தொடங்கும் இந்த முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் எண்ணிக்கைகளை மேலும் உயர்த்த முடிவு செய்துள்ளது வெரிலி.

தொழில்நுட்பத்திற்காக கைகோர்ப்பு

இந்த ஆராய்ச்சிக்காக வெரிலி நிறுவனம் கென்டக்கியை சேர்ந்த மஸ்கிட்டோ மேட் மற்றும் ஃப்ரஸ்னோவின் கொசு கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுடன் நட்பு கரம் நீட்டி இருக்கிறது. மஸ்கிட்டோ மேட் ஏற்கெனவே இது போன்ற ஆராய்ச்சிகள் பலவற்றை சிறிய அளவில் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போதில்லாத ஓர் உதவிக்கரம் அவர்களுக்கு இந்த முறை வெரிலியின் டெக்னாலஜி வடிவில் இருக்கிறது. இதனால் சிக்ஸர் பறக்கவிடும் கனவில் இருக்கிறது மஸ்கிட்டோ மேட்!

இது மரபணு மாற்றம் இல்லை, ஆபத்தும் இல்லை

மலட்டுத் தன்மையுடன் கொசுக்கள் என்றவுடன் ஏதோ மரபணு மாற்றம் என்று நினைத்துவிட வேண்டாம். பாக்டீரியாக்கள் உதவியுடன் இந்த மலட்டுத் தன்மையை உருவாக்குகிறார்கள். இதனால் பெண் கொசுக்கள், இவ்வகை ஆண் கொசுக்களுடன் இணைந்தாலும் இனப்பெருக்கம் நடைபெறாது. சாதாரண ஆண் கொசுக்களைப் போலவே இருந்தாலும், இனப்பெருக்கம் செய்ய முடியாததால் விரைவில்  ஃப்ரஸ்னோவில் கொசுக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெரிலி நிறுவனத்தில் பணியாற்றும் சீனியர் என்ஜினீயர் லினஸ் அப்ஸன் (Linus Upson) பேசுகையில், ”உலக மக்களுக்கு நிஜமாகவே உதவ வேண்டும் என்றால் இது போன்ற கொசுக்கள் பலவற்றை உருவாக்கி உலகம் முழுவதும் அனுப்ப வேண்டும். எல்லா வகை தட்பவெப்ப சூழ்நிலையிலும் இந்த கொசுக்களை வாழவைக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் விளைவு என்ன என்பதை குறைந்த செலவிலே நாம் கண்டறிய முடியும்.” என்றார். வெரிலியின் இந்த அசாத்திய முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிரிப்பு யோகா - நம் ஆரோக்கியத்துக்கான இனிப்பு மருந்து

பால் (Ball) யோகா, டான்ஸ் யோகா, தண்ட யோகா... இப்படி வித்தியாசமான பல யோகாசனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம்விட வித்தியாசமான ஒரு யோகா ஒன்று உண்டு... அது, சிரிப்பு யோகா. இதை உலகளவில் பரப்பி, பயிற்சியும் அளித்து வருகிறார் 'ஹாஹோ' சிரிப்பானந்தா. அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை அலைபேசியில் அழைத்தோம்.

சிரிப்பு யோகா

அவர் அழைபேசி காலர் ட்யூனே (Caller tune) சொல்லிவிடுகிறது சிரிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஈர்ப்பை. `ஆளவந்தான்’ திரைப்படத்தில் வரும் `சிரி சிரி சிரி’ என்ற பாடலைத்தான் தன் அலைபேசியின் காலர் ட்யூனாக வைத்திருக்கிறார் `ஹாஹோ’ சிரிப்பானந்தா. அந்த அளவுக்குச் சிரிப்பின் மீது தீராத காதல் சிரிப்பானந்தாவுக்கு.

அவர் பயிற்சியளிக்கும் சிரிப்பு யோகா பற்றியும், அதனால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் அவரிடம் கேட்டோம்...

“யோகா ஓர் அற்புதமான கலை. மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. சிரிப்பும் அப்படித்தான். சிரிக்கும்போது, உடலின் முக்கியமான பல நரம்புகள் செயல்படுவதாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவித்திருக்கின்றன. எனவே, யோகாவையும் சிரிப்பையும் இணைத்துத் தரும்போது அது தேன் தடவிய மருந்தாகிறது.

யோகா பயிற்சி

யோகா என்றாலே ‘அது வயதானவர்களுக்கானது’ என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமானது. மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றைக் கடுமையான பயிற்சிகளாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், சிரிப்பு அதனுடன் இணையும்போது அனைவரும் ஆர்வமாக செய்ய முன்வருகின்றனர்.

இன்றைய அவசர உலகத்தில் அனைவருக்குமே மனச்சோர்வு தவிர்க்க முடியாதது. மாணவர்களுக்கு, அதிகமான மார்க் எடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிகள். இதனால் சிறு வயதிலே அவர்களுக்கு வாழ்க்கை பற்றிய பயம் அதிகமாகிவிடுகிறது. இந்த யோகா இந்த பயத்தைப் போக்கி வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்ள உதவுகிறது. அவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் படிக்கும்போது, அதிகமான மதிப்பெண்களையும் பெறுகிறார்கள்.

சிரிப்பானந்தா

வேலைக்குச் செல்பவர்களுக்கு முன்னால் இன்று பல்வேறு சவால்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது... போட்டிகளும் அதிகம். இதனால், எப்படியாவது முன்னேறிச் செல்லவேண்டும் என்ற நெருக்கடிக்கு எல்லோருமே உள்ளாகிறார்கள். இதன் காரணமாக, மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் எண்ணற்ற நோய்கள் உண்டாகின்றன. எளிமையாகச் செய்யவேண்டிய வேலைகளைக்கூட பதற்றத்துடன் செய்யும்போது அரை மணி நேரத்தில் முடிக்கவேண்டிய வேலைக்குக்கூட இரண்டு, மூன்று மணி நேரம் ஆகிறது. இதனால் வேலையிலும் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குத்தான் சிரிப்பு யோகா ஆகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. இது, இவர்களின் பதற்றத்தை, மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. வேலையில் உற்சாகத்தோடு செயல்படவைக்கிறது.

மது அருந்துபவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு நேர்ந்த சோகங்களுக்காகவே குடிப்பதாகவே சொல்கிறார்கள். சோகமாக இருப்பவர்களுக்குச் சிரிப்புதான் சரியான மருந்தாக இருக்க முடியுமே தவிர, மது மருந்தாக இருக்க முடியாது. அது, மேலும் பல நோய்களைத்தான் உண்டாக்கும். ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்குக் கவலையில் இருப்போருக்குச் சிரிப்பு அவசியம். இந்தச் சிரிப்பு வழி யோகா அவசியம். சிரிப்பு யோகாவின் மூலம் மதுவில் இருந்து விடுபட்டவர்கள் பலர். தற்போது மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்துவருகின்றனர்.

பயிற்சியில் சிரிப்பானந்தா

இப்போதெல்லாம் வீட்டில் ஆண்கள், பெண்கள் இருவருமே வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். பேரக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றுவிடுகிறார்கள். மாலை வீடு திரும்பியதும் குழந்தைகளுக்கு இருக்கவே இருக்கின்றன ட்யூஷன், பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்... வீட்டில் இருக்கும் முதியவர்களோ பேசுவதற்குத் துணை இல்லாமல், தனிமையில் அவதிப்படுகின்றனர். எப்போதும் ஒருவித மன இறுக்கத்துடனேயே இருக்கவேண்டிய சூழல். சிரிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லலாம். அவர்களுக்கு இந்தச் சிரிப்பு யோகா மிகச் சிறந்த மருந்து’’ என்கிறார் சிரிப்பானந்தா.

“உங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவம் ஏதாவது இருக்கிறதா?’’ என்று கேட்டோம்.

“ஒரு முறை வேலூர் சிறைக் கைதிகளுக்குச் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கச் சென்றிருந்தேன். பயிற்சி முடிந்ததும், ஒரு பெண் கைதி என் அருகே வந்து என் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டார். `சிரிப்பு யோகா பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருந்தால் நான் சிறைச்சாலைக்கே வந்திருக்க மாட்டேன்’ என்றார். அந்த அளவுக்கு ஒரு மகத்துவமானதாக இருக்கிறது சிரிப்பு யோகா.

சிரிப்பு பாடல்

ஒருநாள் எனக்கு போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய பெண் ஒருவர், தான் தற்கொலை செய்து கொள்ள இருந்ததாகவும், தொலைக்காட்சியில் சிரிப்பு யோகா நிகழ்ச்சி பார்த்த பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு வாழ முடிவெடுத்ததாகவும் கூறினார். தற்கொலை எண்ணத்தையே தகர்க்கும் வல்லமை சிரிப்பு யோகாவுக்கு உண்டு’’ சிரிப்புக் குறையாமல் சொல்கிறார் சிரிப்பானந்தா.

“சரி... சிரிப்பு யோகாவால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?’’ என்று கேட்டால் சட்டென்று அவரிடம் இருந்து வருகிறது பதில்.

“நம் நுரையீரலில் 6.8 லிட்டர்  அளவு அசுத்தக் காற்று உள்ளது. நாம் சிரிக்கும்போது  5 லிட்டருக்கும் மேல் அசுத்தக்காற்று வெளியேறி, அதே அளவுக்கு நல்ல காற்று உள்ளே செல்கிறது. இது உடலுக்கு உற்சாகத்தைத் தரும்.

மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிரிப்பு யோகா நல்ல மருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து செய்துவந்தால், அதிலிருந்து குணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன’’ என்கிறார் சிரிப்பானந்தா.

 

 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு யோகா இது. சிறார்கள் விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்துவருகிறார்கள். வயதானவர்களும் சிரிப்போடு துள்ளிக் குதித்துக்கொண்டே இந்த யோகாவைச் செய்துவருகிறார்கள். முதியவர்களும் குழந்தைகளாக மாறிப் போகிறார்கள். மிகவும் நெருக்கடியான இன்றைய வாழ்க்கைச்சூழலில் அனைவருக்கும் அருமருந்தாக இந்த யோகா இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘கோமாளிகள் பலகோடி’
 

image_0b698be3e4.jpgஎவரையும் அடிமைகொள்ளத் துடிப்பவர்கள், இந்த உலகில் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் ஏதிலிகளின் துன்பங்கள் பற்றி, ஒரு கணமாவது சிந்திப்பார்களா?

நிலையற்ற வாழ்வு என அறிந்தும், தங்களை மாமன்னராக எண்ணியபடி கற்பனை வாழ்வுடன் சீவிக்கும் கோமாளிகள் பலகோடி.

வஸ்திரம் இல்லாமலேயே கைது செய்யப்பட்ட சர்வாதிகாரியின் வரலாற்றைக் கேள்விப்பட்டவர்கள் கூட, தங்களைச் சண்டியனாகக் கருதுவது, வேடிக்கையிலும் வேடிக்கை.

மேலாதிக்க உணர்வு, நிம்மதியைத் தரவே மாட்டாது. சாமானியனாக வாழ்வதில் உள்ள சுகம் போல, வேறு ஏதும் உண்டா ஐயா?

எல்லோரும் இந்த உலகில் சமனானவர்களே என வாயளவில் சொல்பவர்கள், அதனை மனதளவில் கூறுவதில்லை.

மனதுக்கும் பொய் உரைக்காதீர்கள்!

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஜூன் – 18

 

1656 : போலந்து மற்றும் லித்­து­வே­னியப் படைகள் வோர்­சோவில் சுவீ­டனின் படை­க­ளுடன் போரை ஆரம்­பித்­தன. சுவீடிஷ் படைகள்  இப்­போரில் வெற்றி பெற்­றனர்.


1872 : ஐக்­கிய இராச்­சி­யத்­திலும் அயர்­லாந்­திலும் இர­க­சிய  வாக்­கெ­டுப்பு முறை அறி­மு­கப்ப­டுத்­தப்­பட்­டது.


1916 : யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற பெரும் சூறா­வ­ளியில் பலர் கொல்­லப்­பட்­டனர். வீடுகள் மற்றும் பல தொலைத்­தொ­டர்பு சாத­னங்கள் சேத­ம­டைந்­தன.


1925 : அடோல்வ் ஹிட்லர் தனது 'மேய்ன் கேம்ப்' எனும் நூலை வெளி­யிட்டார்.


indonesia-tsunami2-431x3001944 : இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்­பட்ட பல தோல்­வி­களை அடுத்து ஜப்­பா­னியப் பிர­தமர் ஹிடெக்கி டோஜோ பத­வியைத் துறந்தார்.


1965 : சோவி­யத்தின் சோண்ட் 3 விண்­கலம் ஏவப்­பட்­டது.


1966 : நாசாவின் ஜெமினி 10 விண்­கலம் ஏவப்­பட்­டது.


1968 : இன்டெல் நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1977 :  வியட்நாம் ஐக்­கிய நாடுகள் சபையில் இணைந்­தது.


1982 : குவாத்­த­மா­லாவில் பெண்கள், குழந்­தைகள் உட்­பட 268 மாயன் பழங்­கு­டி­யினர் இரா­ணு­வத்­தி­னரால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


1984: அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் உண­வ­க­மொன்றில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் 21 பேர் உயி­ரி­ழந்­தனர். 19 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர். துப்­பாக்­கி­தாரி ஜேம்ஸ் ஹியூ­பேர்ட்டி காவற்­து­றை­யி­னரால் கொல்­லப்­பட்டான்.


1995 : -கரி­பியன் தீவான மொன்­செ­ராட்டில் சௌபி­யரே மலை வெடித்துச் சித­றி­யதன் கார­ண­மாக ‎மொன்­செ­ராட்டின் தலை­ந­கரம் அழிக்­கப்­பட்­ட­துடன் மண்­ட­லத்தின் மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பகு­தி­யினர் தீவை விட்டு வெளி­யே­றினர்.


1996: -முல்­லைத்­தீவு இரா­ணுவ முகாம் விடு­தலைப் புலி­களால் முற்­று­கை­யி­டப்­பட்­டது.


1997 : மும்­பாயில் 10 சிறு­வர்கள் காவற்­து­றை­யி­னரால் கொல்­லப்­பட்ட சம்பவத்துக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கல­கத்தில் ஈடு­பட்­டனர்.


1998 : பப்­புவா நியூ கினியில் 23-அடி உயரமான சுனாமி அலைகளால் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர்.


 2007 : மும்பாயில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

அமைதியின் சின்னம் நெல்சன் மண்டேலா பிறந்ததினம் இன்று!

அடிமைத்தனத்தை விரட்ட வந்த அந்த கிழக்கு சூரியன் கறுப்பாகத்தான் இதே நாளில் பிறந்தது.  27 ஆண்டுகள் சிறைவாசம், எழுத்தில் எழுத முடியாத அடக்குமுறை என இன்னல்கள் தொடர்ந்தபோதும் விடாமுயற்சியால் தனது தாய்நாட்டின் விடுதலையைப் பெற்றுத்தந்த நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள்தான் இன்று. 1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா என்ற பழங்குடி இன மக்களின் தலைவர்.

நெல்சன் மண்டேலா

சிறுவயது முதலே வெள்ளையர்களின் அடக்குமுறை ஆட்சியின் கொடுமைகளைக் கண்டு வந்த மண்டேலா தனது சட்டக்கல்வியை 1941-ம் ஆண்டு  முடித்தார். இவர் தன்னுடைய இருபத்தியோராவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ஆங்கில ஆட்சியின் கொடுமைகளை குறித்த விழிப்புஉணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தார். தென்னாப்பிரிக்காவின் கனிம வளங்களைக் கொள்ளையிட வந்த கூட்டம், அந்த மண்ணின் மக்களையே அடிமைப்படுத்தி விலைக்கு விற்பதை தடுக்கப் போராடினார். அதற்காக 1943-ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் எனும் இயக்கத்தில் சேர்ந்தார். இவரது அயராத போராட்டங்களின் தீவிரங்களைக் கண்டு வெள்ளையர் கூட்டம் அதிர்ந்து போனது. 1956-ம் ஆண்டு இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. நான்காண்டு விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்தது.

சிறைவாசத்துக்குப் பிறகு இவரது விடுதலைப் போராட்ட செயல்கள் தீவிரமானது. முழுமையான விடுதலைக் கோரி இவரது போராட்டங்கள் வெள்ளையர் அரசின் அஸ்திவாரத்தை தாக்கியது. ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுக்கத் தொடங்கிய நெல்சன் மண்டேலாவின் அதிரடித் தாக்குதல்கள் அங்கிருந்த வீர இளைஞர்களை வீறு கொண்டு எழச்செய்தன. தென்னாப்பிரிக்க தேசமே விடுதலைத் தீ பற்றிக்கொண்டு எரிந்தது. இதனால், மீண்டும் 1962-ம் ஆண்டு கைதான நெல்சன் மண்டேலாவுக்கு 1964-ம் ஆண்டு ஜூன் 12 அன்று  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்றா இரண்டா, 27 ஆண்டுகள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டார். இளமையெல்லாம் கழிந்துபோன பிறகு 11.2.1990 அன்று விடுதலையானார். இவரோடு தென்னாப்பிரிக்காவின் விடுதலையும் உறுதியானது.

 

ஆம், 1994-ம் ஆண்டு நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார் நெல்சன் மண்டேலா. உலக சமாதானத்தையும் விடுதலை கொண்ட மக்கள் கூட்டத்தையும் விரும்பிய மக்கள் தலைவர் தனது 95-ம் வயதில் மரணமடைந்தார். ஆனால், இன்னமும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். நோபல் உள்ளிட்ட உலக விருதுகள் பலவற்றைப் பெற்ற நெல்சன் மண்டேலா தியாகத்தின் அடையாளமாக, அமைதியின் சின்னமாகவே வாழ்ந்தார். அவரின் பிறந்த நாளான இந்த நாளில் நமது வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரூபிக்ஸ் கியூப் உலக சாம்பியன்ஷிப் போட்டி

ரூபிக்ஸ் கியூப் விளையாட்டுப் போட்டியின் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பாரிஸில் இடம்பெற்றன. அதில் முதல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவனான மேக்ஸ் பார்க் இந்த ரூபிக்ஸ் கியூப் புதிரை வெறும் ஐந்து புள்ளி எட்டு நொடிகளில் முடித்து வென்றார்.

இந்த ரூபிக்ஸ் கியூப் புதிரை முதலில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தவருக்கு அதனை தீர்க்க ஒரு மாதம் பிடித்ததாம்.

  • தொடங்கியவர்

ஸ்மிருதிக்கு வாழ்த்து சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் #HBDSmritiMandhana

 
 

`பெண் சேவாக்'. இப்படித்தான் ரசிகர்கள் இவரை அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், அதற்கு சேவாக்கே எதிர்ப்பு தெரிவித்து ஸ்மிருதியை பாராட்டி இருந்தார். பொதுவாக, பெண்கள் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை அடிக்கடி காண முடியாது. இந்திய அணியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீராங்கனைகளே அதிகம். இந்நிலையில் சேவாக் பாணியில் ஆரம்பத்திலிருந்தே பெளண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசிவருகிறார் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana). மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மிருதிக்கு, வயது 21தான். ஸ்மிருதியின் அண்ணன் ஷ்ரவணன், கிரிக்கெட்டர். அண்ணன் மகாராஷ்டிரா அணிக்காக ஆடும்போது  கிடைத்த புகழைப் பார்த்த பிறகு, ஸ்மிருதிக்கும் கிரிக்கெட் ஆசை வந்திருக்கிறது. ஏழு வயதில் பேட் பிடிக்க ஆரம்பித்த ஸ்மிருதி, ஒன்பது வயதில் மகாராஷ்டிரா அணிக்குள் நுழைந்தார்.  பதினாறு வயதிலேயே  இந்திய அணியிலும் இடம்பிடித்தார். 

ஸ்மிருதி, இயல்பிலேயே வலதுகை ஆட்டக்காரர். ஆனால், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனின் பேட்டிங் ஸ்டைல் பிடித்துப்போக லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்வுமன் ஆனார். ஸ்மிருதியின் ஷாட் தேர்வுகள் அபாரமாக இருக்கின்றன. இவரின் சிக்ஸர்கள் கங்குலியின் ஆட்டத்தை நினைவுபடுத்துகின்றன. 2013-ம் ஆண்டில் குஜராத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் ஸ்மிருதி இரட்டைச்சதம் விளாசியிருந்தார். உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் முதன்முதலில் இரட்டைச்சதம் அடித்த வீராங்கனை இவர்தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூட்டில் ஏற்பட்ட காயத்தால் ஐந்து மாதங்கள் விளையாடாமல் இருந்தார். இதனால் உலகக்கோப்பைத் தகுதிச்சுற்று ஆட்டத்தில் விளையாட முடியவில்லை. ``இந்திய அணிக்காக  உலகக்கோப்பையில் ஆடுவதே என் கனவு. அது மிஸ்ஸாகப்போகிறது" எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர், வேகமாக குணமடையவே உலகக்கோப்பைக்கான அணியில்  இடம் கிடைத்தது.  

ஸ்மிருதி மந்தனா Smriti Mandhana

ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு அணியில்  இடம்பெற்றதும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளுத்துவாங்கினார். சொந்த மண்ணில் உலகக்கோப்பையில் ஆடும் இங்கிலாந்துக்கு, ஸ்மிருதியை எப்படிச் சமாளிப்பது என்றே புரியவில்லை. ஸ்மிருதியின் அதிரடி ட்ரீட்மென்டில் இந்தியா எளிதில் வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பத்து ரன்களில் சதத்தை மிஸ்செய்தவர், அடுத்த மேட்சிலேயே சதம் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார். இந்த உலகக்கோப்பையின் சென்சேஷனாக உருவெடுத்திருக்கிறார். 

இந்த உலகக்கோப்பைக்கு முன்னதாகவே அவர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். 2014-ம் ஆண்டு அவர் அணியில் நுழைந்த தருணத்தில், இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பக்கிங்காம்ஷைரில் நடந்த டெஸ்ட் போட்டியில், இரு அணி வீரர்களும் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில்  92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் எடுத்தது. அந்த இன்னிங்ஸில் இரண்டாவது அதிகபட்சம் ஸ்மிருதிதான். இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களைக் குவித்தது. தாறுமாறாக ஸ்விங் ஆகிய ஆடுகளத்தில் இந்தியாவுக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது இங்கிலாந்து அணி. பதினெட்டு வயது ஸ்மிருதி அருமையாக ஆடி அரைசதம் அடித்து அணி வெற்றிபெற உதவினார். 

Smirithi Mandhana

அந்தப் போட்டியிலிருந்து ஸ்மிருதி மீது கவனம் திரும்பியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. மூன்று போட்டிகள்கொண்ட டி20 தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அதில் குறிப்பிடத்தக்க பங்களித்திருந்தார் ஸ்மிருதி. 

 

முன் காலை சாதுர்யமாக நகர்த்தி விளையாடுவதில் ஸ்மிருதி வல்லவர். முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தவருக்கு, அடுத்தடுத்த போட்டிகள் சோதனையாக அமைந்தன. இனிவரும் போட்டிகளில் அவர் மீண்டும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம். இன்று அவருக்கு பிறந்த நாள். இந்த நாளிலிருந்து அவரின் கரியர் வேற லெவலுக்குச் செல்ல வாழ்த்துகளைப் பகிர்வோம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

”கார்களையும் இயற்கையை அழிக்கும் எண்ணத்தையும் வெளிய விட்டுட்டு வாங்க”- பூமியின் சொர்க்கம் கீத்தோர்ன்

ஒரு நாளாவது நமக்கே நமக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட மாட்டோமா என்ற ஏக்கமும், நோக்கமும் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், பிடித்த வாழ்க்கையை பிடிவாதத்தோடு வாழ்ந்திடும் வாய்ப்பு மிகச் சிலருக்கு மட்டுமே அமைந்திடும். அப்படி ஓர் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் நெதர்லந்து நாட்டின் கீத்தோர்ன் நகர மக்கள். இது பூமியின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படுகிறது.

பூமியின் சொர்க்கம் - நெதர்லாந்து கீத்தோர்ன்

13ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது இந்த நகரின் வரலாறு. அது அப்போது அழகிய கிராமம். ஒரு பெரிய வெள்ளம் வருகிறது. ஊரே காலியாகிவிடுகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு அங்கு வந்து ஒரு கூட்டம் குடியேறுகிறது. கிராமத்தில் எங்கு பார்த்தாலும் ஆடுகளின் கொம்புகள் குவிந்துக் கிடந்தன. அதைப் பார்த்து எல்லோரும் அந்த இடத்திற்கு " Goat Horn " என்று சொல்ல... கால மாற்றத்தில் அது மருவி " Geithoorn "" என்றாகிவிட்டது. 

பூமியின் சொர்க்கம் - நெதர்லாந்து கீத்தோர்ன்

இந்த நகரில் தார்ச்சாலைகளே கிடையாது. முழுக்க முழுக்கப் படகு போக்குவரத்து மட்டுமே. சமீபத்தில்தான் கால்வாயை ஒட்டி சிறிய சாலை, சைக்கிள் ஓட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் மொத்தம் 2400 பேர் வசித்து வருகிறார்கள். 1100 வீடுகள் இருக்கின்றன. 600க்கும் மேற்பட்ட படகுகள் இருக்கின்றன. கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்குவது தொடங்கி, குழந்தைகள் பள்ளிக்கூடம் போவது வரை எல்லாவற்றிற்குமே படகைத் தான் பயன்படுத்துகிறார்கள். 

இங்கு யான் என்று ஒருவர் இருக்கிறார். அவர் தான் இந்தப் பகுதியில் ஓடும் பெரும்பாலான படகுகளைக் கட்டியவர். சமதளம் கொண்ட "புன்டர் " ( Punter ) எனும் வகையிலான படகினை இவர் கட்டுகிறார். இந்த வகைப் படகின் பிறப்பிடம் கீத்தோர்ன்தான். இது அல்லாமல் சில ஃபைபர் படகுகளும் இங்கிருக்கின்றன. இந்த அனைத்துப் படகுகளுமே அதிக சத்தம் எழுப்பாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கார்களின் இரைச்சல், படகுகளின் இரைச்சல், புகை, டிராபிக் என வழக்கமான நகரங்கள் சந்திக்கும் எந்தச் சீர்கேடுகளுமே கீத்தோர்னை நெருங்கவில்லை. 

பூமியின் சொர்க்கம் - நெதர்லாந்து கீத்தோர்ன் - படகுப் பயணம்

கால்வாயின் இரு பக்கங்களும் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. கால்வாயைக் கடக்க ஆங்காங்கே மரப் பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மொத்தம் 176 மரப்பாலங்கள் இருக்கின்றன. நம் ஊரில் டிராபிக் போலீஸ் இருப்பதைப் போல் அங்கு " ப்ரிட்ஜ் கண்ட்ரோலர் " ( Bridge Controller ) இருக்கிறார். அவர் பெரிய படகுகள் கடக்கும் போது பாலத்தை உயர்த்தி, திறந்து விடுகிறார். 

" ஃபையர் போட் " ( Fire Boat ) என்ற ஒரு பாதுகாப்புப் படகு அங்கு வலம் வந்துக் கொண்டிருக்கும். வீடுகளில் தீப்பிடித்துவிட்டாலோ, படகுகள் கவிழ்ந்து விட்டாலோ, யாரேனும் மூழ்கி விட்டாலோ அல்லது வேறேதேனும் ஆபத்து ஏற்பட்டாலோ அவர்களை இந்தக் குழு காப்பாற்றும். 
கீத்தோர்ன்னில் இருக்கும் வயல் வெளிகளையும், மாடுகளையும் பார்த்துக்கொள்ள ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் மாடுகளிலிருந்து பால் கறந்து வீடுகளுக்கு விநியோகம் செய்கிறார். 

பூமியின் சொர்க்கம் - நெதர்லாந்து கீத்தோர்ன் - படகுப் பயணம்

ஆம்ஸ்டர்டாம் நகரின் கிழக்கில் 75 மைல்கள் தொலைவில் அமைந்திருக்கும் கீத்தோர்ன் நகரம் குளிர்காலங்களில் கடுமையான பனிப் பொழிவைக் காணும். கால்வாய் மொத்தமும் உறைந்துப் போய்விடும். அந்தக் காலங்களில் மக்கள் கால்வாயின் உறைந்தப் பனியின் மீது ஐஸ் ஸ்கேட்டிங் செய்து, அதையே தங்களுக்கான பயண வாகனமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். 

பூமியின் சொர்க்கம் - நெதர்லாந்து கீத்தோர்ன் - படகுப் பயணம்

சமீபகாலங்களில் இந்நகரைப் பற்றிக் கேள்விப்பட்டு நிறைய சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகைத் தர ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களை அன்போடு வரவேற்று, தங்கள் வீடுகளுக்குள் கூட அனுமதித்து உபசரிக்கிறார்கள். தங்கள் ஊருக்கு வந்து, தங்கள் வாழ்வைப் பார்க்க விரும்பும் ஊர்சுற்றிகளுக்கு அவர்கள் வைக்கும் கோரிக்கை ஒன்றேயொன்றுதான்...

 " உங்கள் வாகனங்களை ஊரின் எல்லையிலேயே நிறுத்திவிடுங்கள். அதோடு உங்களின் கவலைகளையும், சோகங்களையும், இயற்கைக்கு எதிரான எண்ணங்களையும், துவேஷங்களையும், பொறாமைகளையும், நகரை நாசப்படுத்தும் செயல்களையும் கூடத்தான். அப்போதுதான் நாங்களும் நன்றாக வாழமுடியும். நீங்களும் சந்தோஷமாக வந்து போக முடியும்..."

பூமியின் சொர்க்கம் - நெதர்லாந்து கீத்தோர்ன் - ஆட்டுக் கொம்பு கொடி

 

அவர்களின் அந்தக் கோரிக்கையையும், அன்பையும், வரலாற்றையும் வெளிப்படுத்தும் விதமாக அந்த மஞ்சள், சிகப்பு, நீலக் கொடியில் ஆட்டின் இரு கொம்புகள் அத்தனை வீரமாக வீற்றிருக்கின்றன.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

97 வயதில் பட்டம் பெற்ற இரண்டாம் உலகப்போர் வீரர்


97 வயதில் பட்டம் பெற்ற இரண்டாம் உலகப்போர் வீரர்
 

அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற சார்லஸ் லியீஸ்ஸி என்ற வீரர், 97 வயது ஆகும் நிலையில் தான் படித்த பள்ளியிலிருந்து பட்டத்தைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள தெற்கு ப்லாடெல்பியா நகரைச் சேர்ந்த சார்லஸ் லியீஸ்ஸி, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு இராணுவத்தில் சேர்ந்து போரில் பங்கேற்றார்.

போரில் பங்கேற்று பதக்கங்களையெல்லாம் பெற்ற பின்னர், ஓய்வுக்காலத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சார்லஸ்க்கு விட்டுப்போன படிப்பின் பட்டத்தை பெற வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டுள்ளது.

தனது ஆசையை குடும்பத்தினரிடம் அவர் சொல்ல, அவரது குடும்பத்தினர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த ப்லாடெல்பியா மாவட்ட பள்ளி நிர்வாகம், மகிழ்ச்சியுடன் சார்ல்ஸின் ஆசையை நிறைவேற்றியுள்ளது.

2017 ஆம் ஆண்டில் பட்டம் பெரும் மாணவர்களுடன் சார்லஸிற்கு பள்ளி பட்டம் வழங்கியுள்ளது.

தன் குடும்பத்தினரின் முயற்சியே இதற்கு காரணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் 97 வயது பட்டதாரி.

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

மரணத்தை ஏமாற்றிய மனிதன்: 40 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்

 
தன்னை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகளுடன் ஜான் ஆக்பர்ன்படத்தின் காப்புரிமைOGBURN FAMILY Image captionதன்னை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகளுடன் ஜான் ஆக்பர்ன்

மாரடைப்பினால் நாடித் துடிப்பு நின்று போயிருந்த ஒருவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி செய்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவு ஊழியர்கள் இருவர் மீட்டுள்ளனர் .

கடந்த ஜுன் 26-ஆம் தேதி தனது வீட்டில் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 36 வயதான ஜான் ஆக்பர்னுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இது குறித்து அவசரப்பிரிவு எண்ணான 911-க்கு தெரிவிக்கப்பட்டதும் , மூன்று குழந்தைகளின் தந்தையான ஆக்பர்னின் வீட்டிற்கு உடனடியாக வந்த இரண்டு காவல்துறையினர் அவருக்கு சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation) எனப்படும் இதயத்தை இயங்க வைக்கும் முதலுதவி முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அவருடைய நாடித்துடிப்பு மீண்டும் வரும் வரை சுமார் 42 நிமிடங்கள் அவர்கள் இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சி.பி.ஆர் முதலுதவி செய்தும், பாதிக்கப்பட்டவருக்கு 20 நிமிடங்கள் வரை மீண்டும் நாடித்துடிப்பு வரவில்லை எனில் அந்த நபருக்கு மீண்டும் சி.பிஆர் முதலுதவி செய்வது அவசியமில்லை. ஆனால் சார்லெட்-மெக்லென்பர்க் காவல்துறை அதிகாரிகளான லாரன்ஸ் கைலர் மற்றும் நிக்கோலினா பஜிக் ஆகியோர் 40 நிமிடங்களுக்கு மேலாக சி.பி.ஆர் முதலுதவி செய்து ஆக்பர்னின் உயிரை காப்பாற்றியுள்ளது போற்றுதலுக்குரியது.

`நான் நலமாக இருக்கிறேன்`

நாடித்துடிப்பு வந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஆக்பர்ன், விரைவில் குணமடைவதற்காக மருத்துவர்களால் ஒரு வாரத்திற்கு கோமா நிலையில் வைக்கப்பட்டார்.

மீண்டும் பணிக்கு செல்வதை எளிதாக்குவதற்காக, இன்னும் ஆறு மாதங்கள் அவர் வாகனங்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்பில் உள்ள புண்களைத் தவிர, தான் முழுமையான குணமடைந்துவிட்டது போல உணர்வதாக அவர் கூறியுள்ளார்.

`என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை எப்படி சிறப்பாக உருவாக்கிக் கொள்வது என யோசித்து வருகிறேன். அவர்களுடைய பணியையும் தாண்டி என்னை காப்பாற்ற முயற்சி எடுத்து, என்னுடைய ஒவ்வொரு நாளையும் வாழ எனக்கு வாய்ப்பளித்துள்ள அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன்.` என ஆக்பர்ன் தெரிவித்துள்ளார்.

தங்க நிமிடங்கள்:

`இதயத்துடிப்பு நின்ற ஒருவருக்கு உடனடியாக சி.பி.ஆர் முதலுதவி செய்யப்படவில்லை என்றால் அடுத்த ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.` என அலபாமா பல்கலைகழகத்தின் மருத்துவ கல்வித்துறை இணைப் பேராசிரியரான மைக்கேல் குர்ஸ் தெரிவித்துள்ளார்.

`வடக்கு கரோலினாவில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், சி.பி.ஆர் முதலுதவி உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதை உணர்த்துகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடியாக அளிக்கப்படும் சி.பி.ஆர் சிகிச்சை, அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை மும்மடங்காக்குகிறது.பெரும்பாலான அமெரிக்க பணியாளர்கள் திடீரென ஏற்படும் மாரடைப்பை கையாளத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.` என அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் 3,50,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். மருத்துவமனைக்கு வெளியில் மாரடைப்பால் பாதிக்கப்படும் 46 சதவீதம் பேர், மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு முன்னர் வேறு எந்த வித முதலுதவியும் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஏற்கனவே 100 பிள்ளைகள்-'மேலும் பெற்றுக்கொள்ள ஆசை'
----------------------------------------------------------------------------------------

நூற்றுக்கும் மேல் 'மக்களைப் பெற்ற மகராசனுக்கு' இன்னும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளதாம்.

  • தொடங்கியவர்

சென்னையில் ஒரு ராஜஸ்தான்! (காணொளி)

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘அதீத பணச் செலவீனம் புழுக்கத்தை ஏற்படுத்தும்’
 

image_0c2654afe5.jpgகடும் முயற்சியுடன் உழைத்து உயர்ந்தவர்கள் அடையும் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கைபோல, திடீர் பணக்காரர்களுக்கு வாழ்வு அமைதியானதாக அமைந்து விடுவதில்லை. 

கஷ்டப்பட்டு உழைத்தவன் இஷ்டப்படி செலவழிக்க மாட்டான். ஆனால், இன்று ஏதோ ஓர் வழியில் திடீர் என, செல்வத்தைக் கண்டவர்களுக்கு வாழும் முறை தெரியாமலே இயங்குவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். 

சலனமற்ற, நிர்மலமான வாழ்க்கை வாழும் மாந்தர்கள் இன்ப, துன்ப நுகர்வுகளைக் கண்டு தெளிந்தவர்கள். பணம் இவர்களை ஆட்சி செய்ய முடியாது. 

பணம் மனிதரைப் பொங்கி எழச் செய்து, மயங்க வைக்கும் அசுரன். சிங்கம் போன்றவரையும் அசிங்கமாக்கிவிடும். அதீத பணச் செலவீனம் மனதில் புழுக்கத்தை ஏற்படுத்த வல்லது. காசுக்காரர்களைப் பார்த்து யாசகன் உழைக்காமல் ஏக்கப்படக்கூடாது. 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஜூன் – 19

 

64 : இத்­தா­லியின் ரோம் நகரம் தீயினால் அழிந்­தது. இதன் போதே மன்னன் நீரோ பிடில் வாசித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. ஆனால், அவர் இவ்­வாறு பிடில் வாசித்­த­மைக்கு ஆதாரம் இல்லை என்­கி­றார்கள்.


1545 : இங்­கி­லாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்­கப்பல் போர்ட்ஸ்­மவுத்" என்ற இடத்தில் மூழ்­கி­யதால் நூற்­றுக்­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­தனர். 35 பேர் மட்டும் தப்­பினர்.


1553 : 9 நாட்­களே இங்­கி­லாந்தின் அர­சி­யாக இருந்த ஜேன் கிறே பத­வி­யி­ழந்தார். முதலாம் மேரி அர­சி­யாக முடி சூடினார்.


varalaru-09-07-20171870 : பிரஷ்யா (ஜேர்­ம­னியின் ஒரு பிராந்­தியம்) மீது பிரான்ஸ் போர்ப் பிர­க­டனம் செய்­தது.


1900 : பாரிஸில் முத­லா­வது சுரங்க ரயில் சேவை ஆரம்­ப­மா­கி­யது.


1912 : அமெ­ரிக்­காவின் அரி­சோனா மாநி­லத்தில் 190 கிலோ­கிராம் எடை­யுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து ஏறத்­தாழ 16,000 துகள்­க­ளாகச் சித­றுண்­டது.


1940 : இரண்டாம் உலகப் போர்: இத்­தா­லியப் போர்க்­கப்பல் ஒன்று மூழ்­கி­யதில் 121 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1947 : சுவாமி விபு­லா­னந்தர் இறை­யடி எய்­தினார்.


1947 : நவீன பர்­மாவின் தந்தை என வர்­ணிக்­கப்­படும் பர்­மிய தேசி­ய­வா­தி­யான பிர­தமர் ஆங் சான் (ஆங் சான் சூகியின் தந்தை) மற்றும் அவ­ரது 6 அமைச்­சர்கள் கொல்­லப்­பட்­டனர்.


1952 : பின்­லாந்தின் ஹெல்­சிங்கி நகரில் ஒலிம்பிக் போட்­டிகள் ஆரம்­ப­மா­கின.


1967 : அமெ­ரிக்­காவின் வட கரோ­லி­னாவில் போயிங் 727 விமானம் மற்றும் இருவர் பய­ணித்த செஸ்னா 310 விமானம் ஆகி­யன நடு­வானில் மோதி­யதில் 82 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1969 : அப்­பலோ 11 விண்கலத்தில் சென்ற அமெ­ரிக்க விண்­வெளி வீரர்­க­ளான நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் அல்ட்ரின், மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் சந்­தி­ரனை வலம்­வரத் தொடங்­கினர்.


1979 : நிக்­க­ர­கு­வாவில் அமெ­ரிக்க சார்பு சமோசா அரசு சண்­டி­னீஸ்டா கிளர்ச்­சி­வா­தி­களால் கவிழ்க்­கப்­பட்­டது.


1980 : ஒலிம்பிக் போட்­டிகள் சோவியத் ஒன்­றியத்தின் மொஸ்கோ நகரில் ஆரம்­ப­மா­கின. ஆப்­கா­னிஸ்தான் மீதான சோவியத் படை­யெ­டுப்­புக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்­காக அமெ­ரிக்கா முத­லான நாடுகள் இப்­போட்­டி­களை புறக்­க­ணித்­தன.


1985 : இத்­தா­லியில் அணைக்­கட்டு ஒன்று இடிந்­ததில் 268 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1996 : ஒலிம்பிக் போட்­டிகள் அமெ­ரிக்­காவின் அட்­லாண்­டாவில் ஆரம்­ப­மா­யின.


1997 : வட அயர்­லாந்தில் பிரித்­தா­னிய ஆட்­சிக்கு எதி­ராக போரா­டிய ஐ.ஆர்.ஏ. கிளர்ச்­சி­யா­ளர்கள் போர் நிறுத்­தத்தை ஆரம்­பித்­தனர். 


2014 : எகிப்தில் இரா­ணுவ காவ­லரண் ஒன்றின் மீது ஆயு­த­பா­ணிகள் தாக்­குதல் நடத்­தி­யதால் 21 
சிப்­பாய்கள் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

20 ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவை எல்லாம் இன்று நிஜம்... இலுமினாட்டியா பில் கேட்ஸ்?

ழுத்தாளர் சுஜாதா, "எதிர்காலத்தில் தண்ணீர் பாட்டிலில் விற்கப்படும்" என எழுபதுகளில் வாரப் பத்திரிகை ஒன்றில் எழுதியபோது, 'இது நடைமுறையில் சாத்தியமாக வாய்ப்பே இல்லை' என்றுதான் தமிழகத்தில் பல வாசகர்களும் நினைத்தனர். ஆனால் அது நிஜமானது. இதேபோல, கற்றதும் பெற்றதும் தொடரில், தொழில்நுட்பம் குறித்து அவர் அப்போது எழுதிய பல விஷயங்களும் தற்போது நிஜமாகியிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், காலின்ஸ் ஹெமிங்வே என்பவருடன் இணைந்து 1999-ம் ஆண்டு எழுதிய புத்தகத்தின் பெயர் "Business @ the Speed of Thought". டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பம் சார்ந்து வியாபாரத்தில் என்ன மாற்றங்கள் எல்லாம் ஏற்படக்கூடும் என இந்தப்புத்தக்கத்தில் பில் கேட்ஸ் எழுதியிருந்தார். சுமார் 20 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 15 முக்கியமான விஷயங்கள், தற்போது டெக் உலகத்தில் நடைமுறையில் இருக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போமா!

மைக்ரோசாப்ட் - பில் கேட்ஸ்

15. ஆன்லைன் மூலம் வேலை :

கேட்ஸ் சொன்னது : வேலை தேடுவோர் அவர்களின் விருப்பம், தேவைகள் மற்றும் சிறப்புத்தகுதிகள் பற்றி ஆன்லைனில் குறிப்பிட்டு, அதற்கேற்ற வேலை வாய்ப்பைத் தேடிக்கண்டறியும் வாய்ப்பிருக்கிறது.

நிஜத்தில் நடந்தது : நெளக்ரி, மான்ஸ்டர், லிங்கெட்இன் போன்ற ஆன்லைன் தளங்களில் தங்களின் தேவைக்கேற்ப ஃபில்டர் செய்து, வேலைவாய்ப்பைக் கண்டறியும் நிலை தற்போது சாத்தியமாகியிருக்கிறது.

14. சோஷியல் மீடியா :

Social Media

கேட்ஸ் சொன்னது : உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே தனிப்பட்ட செய்திகளை அனுப்பிக்கொள்ளவும், சாட் செய்துகொள்ளவும், ஒரு நிகழ்வுக்காகத் திட்டமிடவும் எதிர்காலத்தில் முடியும்.

நிஜத்தில் நடந்தது : ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் இவை அத்தனையும் சாத்தியமாகியிருக்கின்றன.

13. தானியங்கி விளம்பரச் சலுகைகள் :

கேட்ஸ் சொன்னது : ஒரு பயணத்துக்காக டிக்கெட் புக் செய்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதை அறிந்துகொண்டு, அதற்கேற்ப, பயணம் செல்லும் இடத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விலை குறைவான பொருள்களைப்பற்றிய விளம்பரங்களை மென்பொருள் காண்பிக்கும்.

நிஜத்தில் நடந்தது : பயனாளரின் இடம் மற்றும் விருப்பத்தை அறிந்துகொண்டு, கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கில் அதற்கேற்ப விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன. உதாரணமாக, திருவல்லிக்கேணியில் இருக்கும் ஒரு நபர் 'ஹோட்டல்' எனத்தேடினால், அவரின் இடத்தை அறிந்துகொண்டு திருவல்லிக்கேணி பகுதியைச்சுற்றியுள்ள ஹோட்டல்களையும், அவற்றில் கிடைக்கும் பொருள்களின் விலைப்பட்டியலையும், கூகுள் தனது ரிசல்ட்டில் காண்பிக்கும்.

12. ஸ்மார்ட் விளம்பரங்கள் :

கேட்ஸ் சொன்னது : அனைவரும் பயன்படுத்தும் டிவைஸ்களானது ஸ்மார்ட்டாக விளம்பரம் செய்யும் தன்மையைக் கொண்டிருக்கும். அவை உங்களது வாங்கும் பழக்கத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ற விளம்பரங்களை டிஸ்ப்ளே செய்யும்.

நிஜத்தில் நடந்தது : மொபைல், கணினி... இவ்வளவு ஏன்... மொபைலில் டைப் செய்யும் கீபோர்டு உள்ளிட்ட பல இடங்களில் விளம்பரங்கள் வரத்தொடங்கிவிட்டன. பிரவுசர் வழியாக ஃபிளிப்கார்ட் தளத்தில் ஒரு பொருளைத் தேடினால், அதை அறிந்துகொண்டு, ஃபேஸ்புக்கில் பயனாளர்களுக்கு அப்பொருள் குறித்த விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன.

11. லைவ் ஸ்போர்ட்ஸ் மற்றும் விவாதத் தளங்கள் :

Sports Live

கேட்ஸ் சொன்னது : விளையாட்டுப் போட்டிகளை டிவியில் பார்க்கும்போதே, லைவ்வாக அதைப்பற்றி விவாதிக்கவும், எந்த அணி வெற்றிபெறும் என வாக்களிக்கும் வகையிலும் எதிர்காலத்தில் சில சேவைகள் உருவாகும்.

நிஜத்தில் நடந்தது : சமீபத்தில் நடந்துமுடிந்த ஐ.பி.எல் தொடரின்போது, அனைத்துப் போட்டிகளும் ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பப்பட்டன. அப்போது ஒவ்வொரு அணியின் வெற்றி வாய்ப்பைப்பற்றியும் ஃபேஸ்புக்கிலேயே லைவ்வாக வாக்கெடுப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

10. ஆன்லைனிலேயே வீட்டைக் கண்காணிக்கலாம் :

கேட்ஸ் சொன்னது : வீடியோ மூலம் இருந்த இடத்திலிருந்தே உங்கள் வீட்டை கண்காணிக்க முடியும். நீங்கள் இல்லாதபோது யாராவது உங்கள் வீட்டுக்கு வந்து திரும்பியதைக்கூட, வீடியோ பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.

நிஜத்தில் நடந்தது : 2014-ம் ஆண்டு டிராப்கேம் (Dropcam) என்ற ஹோம் சர்வைலன்ஸ் கேமரா தயாரிக்கும் நிறுவனத்தை, 555 மில்லியன் டாலருக்கு கூகுள் வாங்கியது. இந்நிறுவனம் தயாரித்த டோர்பெல் கேமரா இணையத்தில் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் வாசலுக்கு யார் வந்துபோனாலும் வீடியோவில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

9. விருப்பமே முதன்மை :

கேட்ஸ் சொன்னது : இருப்பிடத்தைவிட, விருப்பத்துக்கு ஏற்ற வகையில் ஆன்லைன் தளங்கள் செயல்படும்.

நிஜத்தில் நடந்தது : செய்தித் தளங்கள் மட்டுமில்லாமல், Quora உள்ளிட்ட ஆன்லைன் விவாதத்தளங்களும் விருப்பத்துக்கேற்ற வகையில் தான் தங்களது தளங்களை வடிவமைத்து, செயல்பட்டுவருகின்றன.

8. ஸ்மார்ட்போன் :

Smartphone

கேட்ஸ் சொன்னது : மக்கள் தங்களுடன் சின்ன டிவைஸ்களை சுமந்து செல்வார்கள். இவை மூலம் செய்திகள், புக் செய்த டிக்கெட் விவரங்கள், வர்த்தகச்சந்தை நிலவரங்கள் போன்ற விவரங்களை அறிந்துகொள்வார்கள். எந்தச்செயலையும் எங்கிருந்தும் செய்துமுடிக்க இந்த டிவைஸ்கள் உதவும்.

நிஜத்தில் நடந்தது : இணையத்தின் உதவியுடன் கையடக்க ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மூலம் மேலே சொன்ன செயல்கள் அனைத்தையும் செய்யக்கூடிய அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

7. ஆன்லைன் விவாதங்கள் :

கேட்ஸ் சொன்னது : உள்ளூர் அரசியல், பாதுகாப்பு போன்ற தங்களைப் பாதிக்கும் அத்தனை விஷயங்கள் குறித்தும், மக்கள் இணையத்தில் விவாதிப்பார்கள்.

நிஜத்தில் நடந்தது : ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில், மக்களிடையே நடந்த விவாதங்களால் தான், வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் தொடங்கி... மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு வரை அத்தனை விஷயங்களுக்கும் அடிப்படையாக இருந்தன.

6. தொலைக்காட்சியில் இணையதள விவரங்கள் :

கேட்ஸ் சொன்னது : தொலைக்காட்சி ஒளிபரப்பின்போது நீங்கள் பார்க்கும் பொருளைப்பற்றிய இணையதளங்களின் முகவரிகளும், கன்டென்ட்களுக்கான லிங்குகளும் ஒளிபரப்பப்படும்.

நிஜத்தில் நடந்தது : தொலைக்காட்சியில் ஏறக்குறைய அனைத்து விளம்பரங்களும், தங்களுடைய இணையதள முகவரி தந்து விசிட் அடிக்கவும், ட்விட்டர் பக்கத்தில் பின் தொடரவும், ஃபேஸ்புக்கில் லைக் இடவும் சொல்கின்றன.

5. விலை ஒப்பீட்டுத் தளங்கள் :

Price Comparison Sites

கேட்ஸ் சொன்னது : ஒரு பொருளின் விலையை ஒப்பிடும் சேவைகள் எதிர்காலத்தில் மேம்பட்டிருக்கும். இதனால், பல்வேறு இணையதளங்களிலும் விற்கப்படும் விலையைத் தெரிந்துகொள்ளவும், விலை மலிவான பொருளை சிரமமின்றித் தேர்ந்தெடுக்கவும் அப்போது வசதி ஏற்பட்டிருக்கும்.

நிஜத்தில் நடந்தது : கூகுள், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் குறிப்பிட்ட மொபைல் போன் மாடலைத் தேடினாலே, அதன் பல்வேறு விலை மற்றும் விற்பனையாளர் குறித்த விவரங்கள் கொட்டிவிடுகின்றன.

4. பிஸினஸ் கம்யூனிட்டி சாப்ட்வேர் :

கேட்ஸ் சொன்னது : நிறுவனங்கள் சில வேலைகளை மட்டும் இணையத்தின் வழியாக அவுட்சோர்ஸ் செய்வார்கள். ஒரு வேலையை அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனமும், அதைப்பெறும் நிறுவனமும் நேரடியாக சந்திக்கக்கூட தேவையிருக்காது.

நிஜத்தில் நடந்தது : இந்தியாவில் இந்த சேவை இன்னும் அதிக அளவில் பிரபலம் ஆகவில்லை என்றாலும்கூட, மேலை நாடுகளில் சில தளங்களில் ஆன்லைன் மூலமாகவே வேலைகளை அவுட்சோர்ஸ் செய்கிறார்கள்.

3. புராஜெக்ட் மேனேஜ்மென்ட் சாப்ட்வேர் :

கேட்ஸ் சொன்னது : புராஜெக்ட் மேனேஜர்கள் தங்களது புதிய புராஜெக்ட் பற்றி ஆன்லைனிலேயே டீமுக்கு விளக்குவார்கள். யார் எந்த வேலையை, எப்போதுக்குள் முடிக்கவேண்டும் போன்ற விவரங்களை இந்த சாப்ட்வேர் மூலமே திட்டமிட முடியும்.

நிஜத்தில் நடந்தது : பல கார்ப்பரேட் நிறுவனங்களில் புராஜ்கெட் மேனேஜ்மென்ட் சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அசானா (Asana) போன்ற ஆன்லைன் தளங்களும் இதுபோன்ற செயல்களைச் செய்கின்றன.

2. பர்சனல் அசிஸ்டன்ட்ஸ் மற்றும் பொருள்களின் இணையம் :

Apple Siri

கேட்ஸ் சொன்னது : இணையம் சார்ந்து செயல்படும் தனிப்பட்ட அசிஸ்டன்ட்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். அவை உங்கள் டிவைஸ்களை இணையத்தில் கனெக்ட் செய்து, தகவல்களைத் தானாகவே sync செய்யும். இமெயில் அல்லது நோடிஃபிகேஷன்களை உங்களுக்காக டிவைஸே செக் செய்து, உங்களுக்குத் தேவையான தகவலைத்தரும். கடைக்குச் செல்லும்போது என்ன ரெசிப்பி செய்ய விருப்பம் எனச்சொன்னால் போதும். உங்கள் பர்சனல் அசிஸ்டன்ட் தேவையான பொருள்களைத் தானாகவே பட்டியலிடும்.

நிஜத்தில் நடந்தது : ஆப்பிள் சிரி, கூகுள் நிறுவனத்தின் 'கூகுள் நெள', அமேசான் நிறுவனத்தின் எக்கோ போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ் இந்த வேலையைச் செய்யத்தொடங்கிவிட்டன.

1. இணையவழி பரிவர்த்தனைகள் :

கேட்ஸ் சொன்னது : எதிர்காலத்தில் பில்களுக்குப் பணம் செலுத்த, வர்த்தகத்தைக் கவனித்துக்கொள்ள, மருத்துவர்களுடன் ஆலோசிக்க என அத்தனை விஷயங்களையும் இணையத்தின் வழியாக மக்கள் செய்வார்கள்.

நிஜத்தில் நடந்தது : ஒரேயொரு நாள் இணையம் தடைபட்டாலும், மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் பாதிக்கப்படும். அந்த அளவுக்கு இணையத்தின் மூலமாகப் பல்வேறு பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன.

 

தொழில்நுட்ப உலகம் சார்ந்து பில் கேட்ஸ் அன்று சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நிஜமாகியிருக்கின்றன. ஒருவேளை அவர் இலுமினாட்டியா இருப்பாரோ பாஸ்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.