Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
காதல் கைகூடுமா?
 

image_7efb468a92.jpgசொல்லப்பட்ட காதலைவிட சொல்லப்படாத காதல்களே அநேகம். இதுபோன்ற சோகம், உங்களில் பலருக்கும் உண்டு. காதலிப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமல்ல. 

ஆனால், பல அப்பாவிகள் இன்னமும் தங்கள் நியாயபூர்வமான காதலை வெளிப்படுத்தாமல், அந்த இனிய காதலைக் காப்பாற்றி, கரையேறாமல் மனதை அழித்து, வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  

ஒருதலைக் காதல் கொண்ட பேர்வழிகள், தங்கள் காதல் கைகூடுமா? அது சரிவராதா? எனப் பேதலிப்பதைவிட, அதைச் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்பது, தண்டனைக்குரிய குற்றமே இல்லை. 

ஒருவரை ஒருவர் விரும்பியும் கூட, ஒரு சொல்கூடப் பேசாமலே, கரைந்து உடைந்த காதல் கதைகள் கோடி. 

இவர்கள் திருமண வாழ்வை, வேறு ஒருவருடன் கலந்தபின்பு, வருடம் பல கடந்தும் ஒருவருக்குள் ஒருவர் மனம் மறுக்க, இறுகிய வாழ்வுடன் இழந்து நிற்பது கொடுமையோ கொடுமை. 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 25
 
 
patil.jpg1978: உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் பிரவுண் பிறந்தது.
 
1983: வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.
 
1984: ரஷ்யாவின் ஸ்வெட்லான ஸ்விட்ஸ்கயா விண்வெளியில் நடந்த முதலாவது பெண்ணானார்.
 
1993: லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் பாரிய தாக்குதலை ஆரம்பித்தது.
 
1996: புரூண்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
 
2000: எயார் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கொன்கோர்ட் விமானம் விபத்துக்குள்ளானதால் 109 பேர் பலி.
 
2007: இந்தியாவில் பிரதீபா பட்டீல் முதலாவது பெண் ஜனாதிபதியானார்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

பெர்லின் சுவர் பிரித்தது...நெல்லைச் சுவர் பிணைத்தது!

ரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜெர்மனி இரண்டாக உடைந்தது. கிழக்கு, மேற்கு எனப் பிரிந்தது. பெர்லினில் இரு நாடுகளுக்குமிடையே பெருஞ்சுவர் கட்டப்பட்டது. ஒரே நாட்டு மக்களைப் பிரிக்கும் சுவராக நின்றது. வெறுப்புக்கும் போருக்கும் பிரித்தாளுமைக்கு அடையாளமாக அந்த ஆணவச்சுவரை பெர்லின் மக்கள் பார்த்தனர்.  வெறுப்பைக் கக்கும் அந்தச் சுவரால் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியவில்லை. 1999-ம் ஆண்டு, மக்களே அந்தச் சுவரை உடைத்தும் தகர்த்தும் எறிந்தனர். பெர்லின் சுவர், அடையாளமே தெரியாமல் போனது.

நெல்லையில் உருவாக்கப்பட்டுள்ள அன்பு சுவர்

பாசத்துக்கும் நேசத்துக்கும் பெயர் போன நெல்லையிலும் இப்போது ஒரு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்தச் சுவரின் பெயர், 'அன்புச் சுவர்'. இந்தச் சுவர், வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்க வேண்டும் என்கிற வகையில் எழுந்து நிற்கிறது. அதாவது, மக்களுக்குத் தேவையில்லாத பொருள்களை இங்கு வைத்துவிட்டால், தேவைப்படுவோர் அவற்றை எடுத்துக்கொள்வார்கள். இந்தியாவில் எங்குமில்லாத வகையில், இந்தத் திட்டம் நெல்லையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சில நகரங்களில், வீணாகும் உணவுப் பொருள்களைச் சேமித்து, பொது இடத்தில் உள்ள ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். தேவைப்படுவோர், அந்த உணவை எடுத்துக்கொள்வார்கள். முதன்முதலில் நெல்லையில்தான் அனைத்துப் பொருள்களும் வைப்பதற்கு ஏற்ப சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டதுபோல,  நகரின் முக்கியப் பகுதிகளிலும் இதுபோன்ற சுவர் எழுப்பப்பட்டால், ஆங்காங்கே இருந்து பொருள்களைத் திரட்ட முடியும். நாளடைவில், பொதுமக்களே குழந்தைகளுக்கான உடைகள், காலணிகள், பொம்மைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றைப் புதிதாக வாங்கிவைக்கும் நிலையும் உருவாகும். 

 

இரண்டுமே சுவர்தான்; அடையாளம்தான் வேறு!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மர்லின் மன்றோவின் முதல் புகைப்படத்துக்கு கிடைத்த அதிர்ச்சி ரியாக்‌ஷன்..!

 

marlinn monroe's

''ஹாலிவுட் என்பது ஒரு பெண்ணின் முத்தத்துக்கு 50 ஆயிரம் டாலர்களும், அவள் மனசுக்கு வெறும் 50 செண்ட்டும் தரக் கூடியது’’ என்ற வாசகத்துக்குச் சொந்தக்காரர் நடிகை மர்லின் மன்றோ. 

Marilyn-Monroe-rare-photos-in-the-woods-

தாய், தந்தையின் அரவணைப்பு இன்றி அநாதை விடுதியில் வளர்ந்த மர்லின் மன்றோ, ஹாலிவுட் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். இவரது அழகுக்கு மயங்காத ஆண்களே இந்த உலகில் இல்லை என்று பெயர் வாங்கியவர். இத்தனை சிறப்புக்குத் தகுந்த மர்லின் மன்றோ தனது மாடல் உலகின் பயணத்தை ஆரம்பித்தபோது, அவருக்கு கிடைத்தது ஏமாற்றங்களும் தோல்வியும்தான். 

Marilyn-Monroe-rare-photos-in-the-woods-

லைஃப் பத்திரிகையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் எட் கிளார்க் என்பவர் மர்லின் மன்றோவை  புகைப்படம் எடுத்து லைஃப் பத்திரிகைக்கு அனுப்பியுள்ளார். மர்லினின் புகைப்படத்தைப் பார்த்த லைஃப்  பத்திரிகை, ''who the hell is Marilyn Monroe?'' என்று கூறி திருப்பிஅனுப்பி உள்ளனர். ஆனால், பின் நாளில் சிறந்த, எண்ணிப்பார்க்கமுடியாத ஸ்டாராக திகழ்ந்தார். இதற்கெல்லாம் மேல், பிளேபாய் பத்திரிகையின் ஆசிரியரான ஹக் யஹஃப்னர், மர்லின் மன்றோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகில் தனக்காக கல்லறைக்கு இடம் வாங்கினார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘அந்தக் குரங்கின் செல்ஃபி புகைப்படம் என்னை அழித்துவிட்டது’

3235%201

குரங்கின் செல்ஃபி புகைப்படம்

அந்தக் குரங்கின் செல்ஃபி புகைப்படம் என்னை அழித்துவிட்டது என்று பிரபல வனவிலங்கு புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டர் கூறியுள்ளார்.

கடந்த 2011ம் ஆம் ஆண்டு இந்தோனேசிய ஜாவா காடுகளில் டேவிட் ஸ்லேட்டரின் கேமராவால் எடுக்கப்பட்ட கருங்குரங்கு ஒன்றின் செல்பி புகைப்படம் உலக அளவில் மிகப் பிரபலமானது. டேவிட் ஸ்லேட்டர் எடுத்த அந்த குரங்கின் செல்ஃபி புகைப்படம் சுமார் 5 கோடிக்கு அதிகமானோரால் பகிரப்பட்டது.

குரங்கின் இந்த செல்ஃபி புகைப்படம் டேவிட்டுக்கு எந்த அளவு புகழை தேடித் தந்ததோ அந்த அளவுக்கு அவரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சிக்கலான குரங்கின் செல்ஃபி புகைப்படம்

டேவிட்டின் அந்த குரங்கின் செல்பி புகைப்படங்களை விக்கிமீடியா தனது பொதுத் தளத்தில் வெளியிட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் தனக்குச் சொந்தமான புகைப்படத்தை பொதுவெளியில் விக்கிமீடியா வெளியிட்டது தவறு என்றும், அதனால் அப்படத்தை நீக்க வேண்டும் என்றும் டேவிட் வலியுறுத்தினார்.

ஆனால் விக்கிபீடியாவோ இந்தப் புகைப்படம் குரங்கு எடுத்தது. அதனால் டேவிட்டுக்கு அதன் காப்புரிமை சாராது. எங்கள் தளத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதில் எந்தத் தவறும் இல்லை என்றது.

மேலும் இந்தப் பிரச்னைக்கு காப்புரிமை பொருந்தாது. காரணம், ஒரு புகைப்படம் எடுப்பவர் அதற்கான ஒளி, தேவைப்படும் கோணம் போன்றவற்றை எல்லாம் யோசிப்பார். இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு புகைப்படத்துக்கு ஒருவர் காப்புரிமை கோர முடியும். வெறுமனே குரங்கிடம் கேமராவைத் தந்து விட்டு அது எடுத்துக்கொண்ட படங்களுக்கு ஒருவர் காப்புரிமை கோர முடியாது. காப்புரிமை என்பது ஒருவரின் உழைப்புக்குத் தரப்படும் வெகுமதி அல்ல. அவரை மேலும் ஊக்கப்படுத்தும் ஒரு தூண்டுதல்தான். இதை டேவிட் புரிந்துகொள்ள வேண்டும் என்று காப்புரிமை வல்லுநர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்தப்புகைப்படத்துக்கான காப்புரிமை பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. இதன் காரணமாக டேவிட் பெருட் இழப்புகளை சந்தித்திருக்கிறார்.

காப்புரிமை தொடர்பான இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் நடந்து வருவதால் இங்கிலாந்தில் வசிக்கும் டேவிட் விமான போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால் புதன்கிழமை நடந்த இந்த வழக்கில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது இந்த வழக்கு காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலைக்கு டேவிட் தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக தனது உடைந்த கேமிராவை சரி பார்ப்பதற்கு, தனது வழக்கறிஞருக்கு பணம் அளிக்க முடியாத நிலையில்தான் டேவிட் உள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றிடம் டேவிட் கூறியதாவது, ஒரு புகைப்பட கலைஞனுக்கு இதுபோன்ற புகைப்படங்கள் கனவு போன்றது. இந்த குரங்கின் செல்ஃபி புகைப்படத்தால் நான் உடைந்துவிட்டேன். வெறும் குரங்கால் மட்டுமே அந்த செல்ஃபி புகைப்படத்தை எடுத்துவிட முடியாது. இதில் என் உழைப்பும், வியர்வை, விடா முயற்சி உள்ளது. இப்புகைப்படத்தை எடுக்க நிறைய பொறுமையும் அறிவும் வேண்டும்.

நான் இந்த குரங்கின் செல்ஃபி புகைப்படத்தால் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளேன். இதனால் என் குடும்பத்துக்கு உதவ முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

ஹட்ஜா வேட்டைக்காரரின் பெர்ரி மற்றும் முள்ளம்பன்றி வேட்டை

 
ஹட்ஜா வேட்டைக்காரரின் பெர்ரி மற்றும் முள்ளம்பன்றி வேட்டை

உலகில் எஞ்சியிருக்கும் பழங்குடியின வேட்டைக்கார இனங்களில் ஒன்றான ஹட்ஜா, தான்சானியாவின் வடக்குப் பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள், 40 ஆயிரம் ஆண்டுகளாக இந்த இனத்தை சேர்ந்த மக்கள், பெர்ரிப் பழங்கள், கிழங்குவகைகள் மற்றும் மாமிச உணவுகளை உண்பவர்களாக அறியப்படுகிறார்கள்.

பிபிசியின் டான் சால்டினோ, அவர்களின் வாழ்க்கைமுறை, உணவுக்கான தேடுதல், வேட்டையாடுதல், போன்றவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ளச் சென்றார். பிற மக்கள் கற்றுக் கொள்வதற்கான விசயங்கள், அவர்களது உணவு வழக்கத்தில் இருக்கிறதா என்பதை அவர் ஆராய்கிறார்.

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள விலங்குகளின் புகைப்படங்கள் சில வாசகர்களுக்கு கவலையளிக்கலாம்

பூமியில் படுத்துக்கொண்டு, வயிற்றை எக்கி, தலையை நீட்டி இருண்ட, குறுகிய குழிக்குள் தலையை விடுகிறான்.

விலங்குகள்...

ஆனால் இதற்குள் சரிந்து யாராவது உள்ளே நுழைந்து, விலங்கை வெளியே இழுக்கமுடியுமா? என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் செய்கிறார் 'ஜிக்வாட்ஜீ' சரி, அவர் குறி வைக்கும் விலங்கு? முள்ளம்பன்றி!

வில், அம்பு, தேன், கோடாரி ஆகியவற்றை தனது நண்பரிடம் ஒப்படைத்த 'ஜிக்வாட்ஜீ', சிறிய கூர்மையான ஒரு குச்சியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு குறுகிய பொந்துக்குள் ஊர்ந்து செல்கிறார், பார்வையில் இருந்து மறைகிறார்.

ஹட்ஜா வேட்டைக்காரரின் பெர்ரி மற்றும் முள்ளம்பன்றி வேட்டை

குழுவில் மிக இளம் வயதினர் என்பதால் அவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அங்கு இருந்தவர்களிலேயே பயம் குறைந்தவர் அவரே என்பதை தொடர்ந்து கவனித்து தெரிந்துக் கொண்டேன். அச்சம் எதற்கா? பாம்பென்றால் படையும் நடங்குமே? கோப்ரா மற்றும் மாம்பா பாம்புகள், ஊர்வன, பறப்பன மற்றும் உண்ணிகள், மற்றும் 35 செ.மீ (14 அங்குலம்) நீள முட்களைக் கொண்ட முள்ளம்பன்றிகள் என இவரது வேட்டையின் இலக்குகள் பலவகைப்படலாம்.

இதுவரை எனது ஹட்ஜா உணவு சைவமாக இருந்த்து. இந்த மக்கள் உண்பதையே நானும் உண்டேன். புதர்களில் இருந்து பறிக்கப்பட்ட பழங்களும், நிலத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட கிழங்குகளுமே எங்களது உணவு. ஆங்காங்கே தீயை மூட்டி, கிடைக்கும் பொருட்களை, சுட்டு சாப்பிடுவதே அவர்களின் பழக்கம்.

ஹட்ஜா வேட்டைக்காரரின் பெர்ரி மற்றும் முள்ளம்பன்றி வேட்டை

பெண்களால் பறிக்கப்படும் பழங்களும், கிழங்குகளுமே அவர்களின் உணவின் முக்கிய அம்சம்

தடிமனான கொட்டைகளைக் கொண்ட பாபாப் பழங்களே பெருமளவில் கிடைப்பவை. வெண்மையான சுண்ணாம்பில் தூசி கலந்தது போன்ற நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தில், நார்ச்சத்தும் விட்டமின் 'சி' சத்தும் அபரிதமாக இருக்கிறது.

விட்டமின் 'சி' சத்து நிறைந்த பாபாப் பழம்

விட்டமின் 'சி' சத்து நிறைந்த பாபாப் பழம்

"ஹட்ஜா மக்கள் எப்போதும் பசியுடன் இருப்பார்கள், ஆனால் பட்டினியுடன் இல்லை" என்று தசாப்தங்களுக்கு முன்னரே மானுடவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களை சுற்றியிருக்கும் ஏராளமான பொருட்கள், அவர்களின் உண்பதற்கான உற்சாகத்தை ஊக்குவிக்கிறது. மேலும், அவற்றை கண்டறிவதற்கான முயற்சியையும் கண்காணிப்பையும் அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அருகிலுள்ள உணவுப் பொருட்களை என்னால் அடையாளம் காணமுடியாவிட்டாலும், அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நான்கு வயது குழந்தைகூட உணவை கண்டறியும் திறனை பெற்றுள்ளது.

உணவை கண்டறிந்ததும் வெகுதொலைவில் இருந்து அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்கமுடிகிறது. 'ஜிக்வாட்ஜீ' 2 மீட்டர் (6 அடி) ஆழத்தில், நிலத்தடியில், நீளமான, வெப்பமான பகுதியில் பாதுகாப்பாக மறைந்திருந்த ஒரு முள்ளம்பன்றியை பார்த்துவிட்டார். அதன் இருப்பை கண்டறிந்த உடனே, அது தப்பித்துச் செல்லக்கூடிய வழித்தடங்களை மூடிவிட தனது சக வேட்டைக்காரர்களுக்கு அறிவுறுத்தும் சமிக்ஞை அது.

40 நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்த அவர் மீது மண்ணும், தூசியும் நிறைந்திருந்தது. முள்ளம்பன்றி இருந்த சரியான இடத்தை மேலும் தோண்டத் தயாராகிவிட்டார்.

பாபாப் மரத்தில் குச்சிகளை ஊன்றி, தேன்கூட்டை கைப்பற்றும் முயற்சி

பாபாப் மரத்தில் குச்சிகளை ஊன்றி, தேன்கூட்டை கைப்பற்றும் முயற்சி

 

உணவுப் பொருட்களை பயிரிடவோ, உருவாக்கவோ, விவசாயம் தொடர்பான எந்தவித பயிற்சியும் பெறாதது இந்தக் குழு. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 1000 பேர் இருந்தாலும், வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களின் எண்ணிக்கை 200-300 தான் இருக்கும். ஹட்ஜா இனத்தினர், விவசாயிகளை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர்.

ஒருவர் என்னிடம் கேட்டார்: "நாள் முழுவதும் வயலில் நின்று, வாரக்கணக்கில் மாதக்கணக்கில் இவர்கள் ஏன் உணவுக்காக காத்திருக்க வேண்டும்? ஒரு புதரில் இருந்து பெர்ரிப் பழத்தை பறித்துச் சாப்பிடலாம், அல்லது மரத்தில் ஏறி தேனை குடிக்கலாம். அல்லது ஒரு சில மணி நேரம் பாடுபட்டால், குழிக்குள் மறைந்திருக்கும் முள்ளம்பன்றியை பிடிக்கலாம், ஒரு கூட்டத்திற்கே உணவளிக்கலாமே? பாவம் இவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை!"

உணவை கண்டுபிடிப்பதற்கான முன்னோர்களின் வழக்கங்களையே இவர்களும் தொடர்கின்றனர். மனிதர்கள் உருவானபோது இருந்த உணவு பழக்கத்தின், அதாவது நமது ஆரம்பகால செரிமான அமைப்பை கொண்டிருப்பவர்கள் இவர்களே.

நம் உடலில் உள்ள நுண்ணுயிரிகளானது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் ஒரு முக்கியமான அம்சமாகும். பன்முகத்தன்மை வளமையைக் கொண்ட நமது நுண்ணுயிர்கள், நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. அதுவேதான் ஹட்ஜா மக்களுக்கும் நடக்கிறது. அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களின் காரணமாக பூமியில் மிகவும் மாறுபட்ட மனித குடல் நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கின்றனர்.

ஜீப்ராவைப் போன்ற விலங்குகளை கொல்ல நச்சு தோய்க்கப்பட்ட அம்புகள் தேவை

வரிக்குதிரை போன்ற விலங்குகளை கொல்ல நச்சு தோய்க்கப்பட்ட அம்புகள் தேவை

 

 

வரிக்குதிரையின் தலையை சுமந்து வருதல்

 

குறைவான நீராதரங்களே இருப்பதால், வறட்சியான காலத்தில் வரிக்குதிரைகளை கொல்வது சுலபம்

 

 

வரிக்குதிரை தலையை சாப்பிடுதல்

. ஆனால் அவை அரிதாகி வருகின்றன. ஏனெனில் அவற்றிற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது

இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்தார் லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் டிம் ஸ்பெக்டர். ஹட்ஜாக்களைப் போல சாப்பிட்டால், தனது சொந்த நுண்ணுயிர் தன்மை இன்னும் அதிகமாகுமா என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வமாக இருந்தார், எனவே, அவர் தனது சொந்த ஹட்ஜா உணவை எடுத்துக் கொண்ட ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு பிறகும் தனது மலக்கழிவுகளின் மாதிரியை எடுத்துக்கொண்டார். மாதிரியை ஆராய்ந்து, பல்வேறு பாக்டீரியாக்களின் வெளிப்பாட்டில் மாறுபாடு இருக்கிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்த்தார்.

முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக இருந்தன. மூன்று நாட்களுக்குப் பிறகு, ஏற்கனவே இருந்த ஆரோக்கியமான நுண்ணுயிர் எதிர்ப்பு பாக்டீரியாவின் பன்முகத்தன்மை 20% அதிகரித்தது. இதைத்தவிர, ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பாக்டீரியாவின் அரிய வகைகளையும் கண்டறிய முடிந்தது.

வேட்டை முடிந்த பிறகு, பல கிலோமீட்டர்கள் மாமிசத்தை சுமந்துவர வேண்டும்

வேட்டை முடிந்த பிறகு, பல கிலோமீட்டர்கள் மாமிசத்தை சுமந்துவர வேண்டும்

 

நமக்கு உகந்த உணவுகள் எது என்பதை கண்டறியும் ஸ்பெக்டரின் ஆராய்ச்சி, ஒரு திட்டவட்டமான முடிவை எட்ட பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் ஹட்ஜா இனத்தினருக்கான விஷயங்கள் வேகமாக மாறி வரும் சூழலில், இதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளது.

இவர்களின் நிலப் பரப்பிற்குள் விவசாயிகளின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இவர்களின் இடத்திற்குள் நுழையும் விவசாயிகள், கடந்த தசாப்தத்தில் மட்டும், அண்டுதோறும் 160 ஹெக்டேர் (395 ஏக்கர்) என்ற அளவில் வனப்பகுதியை அழித்துவிட்டனர்.

கால்நடை மேய்ப்பவர்களும், அவர்களின் பசித்த கால்நடைகளும் ஏராளமான எண்ணிக்கையில் வனத்திற்குள் வந்து குவிவதால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹட்ஜா இன மக்களுக்கு உணவளித்து வந்த வெவ்வேறு விதமான 30 காட்டு பாலூட்டி இன வன விலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஹைராக்ஸ் (hyrax) சமைப்பதற்கு முன்

ஹைராக்ஸ் (hyrax) சமைப்பதற்கு முன்

 

எனினும் வேறு வகையான ஊடுருவல் பற்றி எனக்கு மிக பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. முள்ளம்பன்றி வேட்டையில் இருந்து 30 நிமிட தொலைவில், குறுக்காக சென்றால் அங்கு ஒரு மண் குடிசை இருந்தது. அங்கிருந்த அலமாரிகளில், குளிர் பானங்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் நிரம்பியிருந்தது. அந்தப் பகுதியில் இருந்து ஒன்பது மணி நேர பயணத்திற்கு பிறகே, இதுபோன்ற பிரபல பிராண்டுகளின் உணவுப்பொருட்களை நான் கண்டறிய முடிந்தது.

இருப்பினும் ஹட்ஜா இனத்தின் திறமையை கொண்டிருக்கும் 'ஜிக்வாட்ஜீ' துரிதமாக, திறமையாக முள்ளம்பன்றியை வேட்டையாடினார். அந்த விலங்கை நேருக்கு நேராக பார்த்து, அதை ஒரு குச்சியால் தட்டிய அவர், "வெளியே வா முள்ளம்பன்றியே, வா ... இங்கே வந்து பாருங்கள்!" என்றார். ஆனால், வெளியே வந்தது, ஒன்றல்ல, இரண்டு.

கருப்பு மற்றும் வெள்ளை முட்களை உடலில் கொண்ட அவை தலா 30 கிலோவுக்கு குறையாத எடை கொண்டவை. நீங்கள் கற்பனை செய்வதை விட பெரிய உருவத்தைக் கொண்டவை. அவை எழுப்பிய ஓலம் அச்சமூட்டுவதாக, எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது. 'ஜிக்வாட்ஜீ' அவற்றின் தலையில் சில பலமான அடிகள் போட்டதும், அவற்றின் ஓலம் காற்றில் கலந்தது, எல்லாம் முடிந்துவிட்ட்து.

Zig-wad-zee hitting a porcupine

ஹட்ஜா வேட்டைக்காரர்கள் கிடைக்கும் அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றர்னர். சமத்துவ சமுதாயம் கொண்ட அவர்களிடையே தலைமை கட்டமைப்பு கிடையாது. கிடைத்த மாமிசத்தை சமமாக பிரித்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி அவர்களிடையே உள்ளது. வேட்டையாடப்பட்ட விலங்கின் உட்பகுதி, இதயம், கல்லீரல் மற்றும் ஈரல்கள் அங்கேயே உடனே சமைக்கப்படும். மீதமுள்ள உடல் பாகங்கள் முகாம்களுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்கப்படும்.

நான் அங்கு நடப்பவற்றை பதற்றத்துடன் கூர்ந்து கவனித்தேன். முள்ளம்பன்றியின் ஈரலின் ஒரு சிறிய பகுதியை சுவைத்தபோது, அதன் பிரத்யேக சுவையை உணர்ந்தேன். 'ஒரு வேட்டை மற்றும் ஓர் உணவு அனுபவம்', என்னை நமது பண்டைய நினைவலைகளோடு பிணைத்தது.

ஹஸ்டா ஆணின் ஒரே உடைமை வில். விலங்கின் தசைநாண்களால் சுற்றப்பட்டு, அதிலிருந்து வெளிவரும் கொழுப்பு, வில்லை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

ஹட்ஜா வேட்டைக்காரரின் பெர்ரி மற்றும் முள்ளம்பன்றி வேட்டை

ஹட்ஜா வேட்டைக்காரரின் பெர்ரி மற்றும் முள்ளம்பன்றி வேட்டை

 

புகைப்படங்கள் அனைத்தும், லண்டன் கிங்க்ஸ் கல்லூரியின் பேராசிரியர் ஜெஃப் லீச்சுடையது.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

பாடம் புகட்டியபின் நேசக்கரம் நீட்டிய கிளி (காணொளி)

  • தொடங்கியவர்

இயற்கை பேரிடர் நிகழ்வை முன்கூட்டியே அறியும் நாய்கள்: மனிதனை விட மோப்பசக்தி 10 லட்சம் மடங்கு துல்லியமானவை

dogsjpg

கோப்புப் படம்: ரமேஷ் குரூப்

வீடுகளில் நாம் பல செல்லப் பிராணிகளை வளர்த்து வந் தாலும், நாய்களே நமக்கு உதவிகளை செய்வதில் முன் நிற்கின்றன. அதனால், நாய்கள் வளர்ப்பதில் எல்லோரும் ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக வீடுகளில் நாய்கள் காவலுக் காகவும், பொழுது போக்குக் காகவும் வளர்க்கப் படுகின்றன. காவல்துறை, ராணுவத்தில் பயிற்சி பெற்ற நாய்கள் விசாரணைக்கும், குற்றவாளிகளை பிடிக்கவும், பேரிடர் கால மீட்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

மோப்ப நாய்களில் பிளட் ஹவுண்ட், பீகில், அமெரிக்கன் பிட்டில் டெரியர், பார்டர் கூலி, ஜெர்மன் ஷெப்பர்டு, கோல் டன் ரீட்ரைவர், லேப்ரடார் உள்ளிட்டவையும், தேடல் நாய் வகைகளில் டாபர்மேன், பிளட் ஹவுண்ட், பெல்ஜியன் ஷெப்பர்டு, லேப்ரடார் உள்ளிட்டவையும் குறிப்பிடத்தக்கவை. பேரிடர் காலங்களில் மோப்ப நாய்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் காவலுக்கு மட்டுமின்றி, தன்னுடைய எஜமானர்களின் உயிர் காக்கும் தோழனாகவும் இருக்கின்றன. அதனால், நாய்கள் பயன்பாட்டினை அதிகரிக்க, அதை பற்றிய ஆராய்ச்சி உலகளவில் தொடங்கி உள்ளது.

binladenjpg

பின்லேடனை பிடிக்க அமெரிக்க படையினருக்கு உதவியதாகக் கூறப்படும் பெல்ஜியன் மாலினோய்ஸ் ரக நாய். என்.எஸ்.ஜி.யில் இந்த வகை நாய்கள் பிரிவு செயல்படுகிறது. சந்தேகிக்கும் நபர் அல்லது பொருளை கண்டுபிடித்து விட்டால் உடனே குரைக்காது. தலையை ஆட்டி வீரர்களுக்கு சிக்னல் கொடுக்கும். இதை வீரர்கள் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பர். (கோப்பு படம்)

இதுகுறித்து மதுரை கொண்டையம்பட்டி கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் மெரில்ராஜ் கூறியதாவது:

உலகிலேயே மோப்ப சக்தி மிகுந்த விலங்கு நாய்கள்தான். அதன் மோப்ப சக்தி மனிதர்களை ஒப்பிடும்போது 10 லட்சம் மடங்கு துல்லியமானது. உதாரணமாக ஒரு துளி ரத்தத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்தாலும், அதன் வாசனையை அறியும் திறன் கொண்டவை நாய்கள். அது மட்டும் இல்லாது, ஒவ்வொரு வாசனையையும் தனித்தனியே பிரித்து நுகரும் சக்தி கொண்டவை.

மனிதர்களின் மோப்பத் திறன் ஒரு வாசனையையோ அல்லது பல வாசனைகள் கலந்த கலவைப் பொருள்களின் மொத்த வாசனையையோ, ஒரு நேரத்துக்கு ஒன்றை மட்டுமே உணரக் கூடியதாக இருக்கிறது. நாய்களின் மூக்கினுள் வாசனையைக் கிரகிக்கும் நரம்பின் நுனி அமைந்துள்ள பரப்பு பல வளைவுகளாக மடக்கப்பட்டு சுருளாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் அளவு 60 சதுர அலகு ஆகும். ஆனால், மனிதனில் இது ஒரு சதுர அங்குலம் மட்டுமேயாகும்.

அது மட்டுமில்லாது உணர்வுகளை உணரச் செய்வது, பதியச் செய்யும் மூளைப்பகுதியின் அளவு மனிதர்களை காட்டிலும் நாற்பது மடங்கு அதிகம். நாயின் மூக்கின் நீளம் மற்றும் அகலத்தைப் பொறுத்து வாசனை உணரும் நரம்புக் கூறுகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது. மனிதர்களுக்கு 5 மில்லியன் நரம்பு நுனிகளும், டேஷண்டு வகை நாய்க்கு 125 லட்சம் நரம்பு நுனிகளும், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்க்கு 225 மில்லியனும், பிளட் ஹவுன்டு வகை நாய்க்கு 300 மில்லியனும் இருக்கிறது.

நாய்கள் சாதாரணமாக சுவாசிக்கும்போது வாசனை எல்லா நரம்பு நுனிகளையும் அடைவதில்லை. ஆனால், அவை வாசனையை உணர முற்படும்போது, வாசனைத் துகள்கள் நரம்பு நுனிப் பரப்பை அடைந்து மூளைக்குச் சென்று மிகவும் ஆற்றலுடன் உணருகிறது.

நிலநடுக்கம், சுனாமி, பஞ்சம், வறட்சி, காட்டுத் தீ, நிலச்சரிவு, பனிச்சரிவு, மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், நாய்களின் பங்கு அளப்பரியது. பேரிடர் நிகழ்வை முன்கூட்டியே உணரும் தன்மை விலங்குகளுக்கு இயற்கை கொடுத்த வரம்.

அதனாலே பேரிடர் நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, செல்லப் பிராணிகள் சில விசித்திரமான சமிக்ைஞகளை வெளிப்படுத்தும். உதாரணம், அமைதியின்றி இருத் தல், மனிதர்களை துரத்துதல், பதுங்குதல், மிரட்சியுடன் காணப் படுதல் போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தும். இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்ப நிலை யிலேயே இருக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எஜமானர்களை காப்பாற்றும் நாய்கள்

பேரிடர் காலங்களில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மனிதர்களை மீட்க நாய்கள் உதவுகின்றன. அப்போது போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தகவல் தொடர்புக்கும் உதவுகின்றன. பேரிடர்கால நிகழ்வின்போது தன் எஜமானருக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொண்டுவர உதவுகின்றன. தன் எஜமானரை விஷ ஜந்துகள் தாக்குதலிலிருந்து காப்பாற்றுகின்றன.

சில நேரங்களில் பேரிடரில் சிக்கி தவிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஊன்றுகோலாக நின்று உதவி செய்த நிகழ்வுகளும் வரலாற்றில் பதிவாகி உள்ளன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘உடல் வேட்கை, அறிவை மயக்கும்’
 

image_9e69838c15.jpgகாதலில் எதிர்பார்ப்புகள் உண்டு. மாறா அன்புமட்டும் காதலினுள் இணைந்தது அல்ல; இதைவிட வேறு சங்கதிகளும் இருக்கின்றன. 

தேகம் சார்ந்தவையாக இருபாலாருக்கும் தேவைகள் உண்டு. ஆண், பெண் ஸ்பரிசங்கள் காதலைத் தூண்டுகின்றன. காமம் இந்தக் கைங்கரியத்தை மின்வேகத்தில் செய்யும். மிக மென்மையாகவும் கூடச் செய்யும் திறனுடையது.  

நல்ல அறிவு, புத்தியுள்ளவர்கள் கூடத் திருமணத்துக்கு முன்பு காதலில் கட்டுண்டு, காமத்தின் வழியாகப் புலன் இன்பங்களை அனுபவித்து விடுகின்றனர். இதன் சரிபிழைகளைச் சொல்லத் தேவையில்லை. இதன் விளைவுகளுக்கு இவர்களே பொறுப்பானவர்கள். 

உடல் வேட்கை, அறிவை மயக்கும் மாவல்லமை பெற்றது. திருமணத்துக்கு முன்னரே அப்பா, அம்மா ஆனவர்களுக்கு, மனம் பாதிப்படைவதுமுண்டு. பொறுமையுடனான காதல் வலியது. 

  • தொடங்கியவர்

6 அடி கூந்தல் கொண்ட யுவதி

ரஷ்­யாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் முழங்­கால்­க­ளுக்கு கீழ் தொங்கும் அள­வுக்கும் நீள­மான கூந்­தலைக் கொண்­டுள்ளார். கால் விரல்­களைத் தொடும் அள­வுக்கு கூந்­தலை வளர்க்க வேண்டும் என்­பதே இவரின் இலட்­சி­ய­மா­க­வுள்­ளது.

Daria-Kubanova

27 வய­தான டேரியா குப­னோவா எனும் இந்த யுவதி, ரஷ்­யாவின் தென் மேற்குப் பிராந்­தி­ய­மான அல்டாய் கிராய் பகு­தி­யி­லுள்ள பார்னோல் நகரைச் சேர்ந்­தவர்.


டேரி­யா­வினால் நீள­மாக தலை­ முடியை வளர்க்க முடி­யாது என பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் அவரின் நண்பி ஒருவர் சவால் விடுத்­தாராம். இந்தச் சவாலை ஏற்­றுக்­கொண்ட டேரியா, கடந்த 14 வரு­டங்­க­ளாக தலை முடியை வளர்த்து வரு­கிறார். தற்­போது டேரி­யாவின் முழங்­கால்­களைக் கடந்து அவரின் கூந்தல் வளர்ந்­துள்­ளது.

hair1

எனினும், இதில் டேரி­யா­வுக்குத் திருப்­தி­யில்லை. தனது கால் விரல்­களைத் தொடும் அள­வுக்கு கூந்தல் வளரும் வரை தான் தலை­ முடியை கத்­த­ரிக்கப் போவ­தில்லை என அவர் தெரி­வித்­துள்ளார்.  இவரின் தலை­முடியின் நீளம் சுமார் 6 அடி எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  சமூக வலைத்­த­ளங்­களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் டேரியாவை பின்தொடர்ந்து வருகின்றனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

1957 : பண்டா – செல்வா ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது

வரலாற்றில் இன்று…

ஜூலை – 26

 

1309 : ஜேர்­ம­னியின் மன்னர் 7 ஆம் ஹென்­றியை ரோமா­னி­யர்­களின் மன்­ன­ராக பாப்­ப­ரசர் 5 ஆம் கிளெமென்ட் அங்­கீ­க­ரித்தார்.


1509 : இந்­தி­யாவில் விஜய நகரப் பேர­ரசின் மன்­ன­ராக கிருஷ்ண தேவ ராயர் முடி­சூ­டினார். இதை­ய­டுத்து விஜய நகர பேர­ரசு எழுச்­சி­பெற ஆரம்­பித்­தது.


1745 : பதி­வு­செய்­யப்­பட்ட முத­லா­வது மகளிர் கிரிக்கெட் போட்டி இங்­கி­லாந்தின் கில்போர்ட் நகரில் நடை­பெற்­றது.

Selva-Agreement

1803 : உலகின் முத­லா­வது பய­ணிகள் ரயில் சேவை தெற்கு லண்­டனில் ஆரம்­ப­மா­கி­யது.


1847 : ஐக்­கிய அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து லைபீ­ரியா சுதந்­திரம் பெற்­றது.


1848 : இலங்­கையில் பிரித்­தா­னி­ய­ருக்கு எதி­ராக வீர­புரன் அப்பு தலை­மையில் கிளர்ச்சி வெடித்­தது. வீர­புரன் அப்பு கைது செய்­யப்­பட்டு பின்னர் தூக்­குத்­தண்­டனை வழங்­கப்­பட்­டது.


1891 : பசுபிக் தீவான தஹிட்­டியை பிரான்ஸ் தன்­னுடன்  இணைத்­துக்­கொண்­டது.


1944 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் இரா­ணுவம் யுக்­ரைனின் லுவிவ் நகரை நாஸி­க­ளிடம் இருந்து கைப்­பற்­றினர். அந்­ந­கரில் இருந்த 160,000 யூதர்­களில் 300 பேர் மட்­டுமே எஞ்­சி­யி­ருந்­தனர்.


1944 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னியின் முத­லா­வது வீ-2 ஏவு­கணை பிரித்­தா­னி­யாவைத் தாக்­கி­யது.


1945 : இரண்டாம் உலகப் போரின்­போது ஜேர்­ம­னியின் போட்ஸ்டாம் என்ற இடத்தில் சோவியத் ஒன்­றியம், அமெ­ரிக்கா, ஐக்­கிய இராச்­சியம் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் போட்ஸ்டாம் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.


1952 : எகிப்தில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் மன்னர் பாரூக் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டு அவ­ரது ஆறு மாதங்கள் அக­வை­யு­டைய மகன் இரண்டாம் புவாட் மன்னன் ஆக்­கப்பட்டார்.


1953 : கியூ­பாவில் மொன்­காடா இரா­ணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலை­மையில் தீவி­ர­வா­திகள் மேற்­கொண்ட தாக்­குதல் முறி­ய­டிக்­கப்­பட்­டது.


1956 : அஸ்வான் அணைக்­கட்­டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்­ததை அடுத்து சூயஸ் கால்­வாயை எகிப்­திய ஜனா­தி­பதி கமால் அப்துல் நாசர் அர­சு­டமை ஆக்­கினார்.


1957 : குவாத்­த­மா­லாவின் சர்­வா­தி­காரி கார்லொஸ் அர்மாஸ் கொல்­லப்­பட்டார்.


1957 : இலங்கைப் பிர­தமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்­டா­ர­நா­யக்­கா­வுக்கும், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்­வ­நா­ய­கத்துக்கும் இடையே “பண்டா- செல்வா ஒப்­பந்தம்” கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. 


1958 : எக்ஸ்­பு­ளோரர் 4 ஏவப்­பட்­டது.


1963 : மசி­டோ­னி­யாவில் இடம்­பெற்ற நில­ந­டுக்­கத்தில் 1,100 பேர் வரை கொல்­லப்­பட்­டனர்.


1965 : மாலை­தீ­வுகள் ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து முழு­மை­யாக சுதந்­திரம் பெற்­றது.


1971 : அப்­பலோ 15 விண்­கலம் ஏவப்­பட்­டது.


1974 : 7 வருட கால இரா­ணுவ ஆட்­சியின் பின்னர் கிரேக்­கத்தில் மக்­க­ளாட்சி ஏற்­பட்­டது.


1994 : எஸ்­தோ­னி­யாவில் இருந்து ரஷ்யப் படை­களை வெளி­யேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் தீர்­மா­னித்தார்.


2005 : நாசாவின் டிஸ்­க­வரி விண்­வெளி ஓடம் ஏவப்­பட்­டது.


2008 : இந்­தி­யாவின் அஹ­ம­தாபாத் நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பு­களால் 56 பேர் உயி­ரி­ழந்­தனர்.


2009 : நைஜீ­ரி­யாவில் போகோ ஹராம் கிளர்ச்­சி­யா­ளர்­களால் பொலிஸ் நிலை­ய­மொன்றின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. அதன்பின் அவ்வமைப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் பல நகரங்களில் மோதல்கள் இடம்பெற்றன.


2016 : அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் பெரிய கட்சியொன்றின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவராவார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

 

தூணில் ஏறும் வினோத போட்டி (காணொளி)

தூணில் ஏறும் வினோத போட்டியை ரசித்திருக்கீறீர்களா?

வழுக்கு மரம் ஏறும் போட்டி போல எண்ணிவிட வேண்டாம்.

இந்த வித்தியாசமான, வினோத போட்டிகள் பலரை கவர்ந்திழுத்திருக்கின்றன.

  • தொடங்கியவர்

கர்நாடகாவில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்26YADGIRRAIN1

கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் நல்ல மழைப் பொழிவைச் சந்தித்த யாத்கிர் மாவட்டம், ஜூலையில் 31.02 மி.மீ. மழையையே சந்தித்தது. ஜூன் மாத மழை காரணமாக குறுகிய காலப் பயிர் வகைகளாக பருப்பு வகைகளை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். ஆனால் ஜூலையின் குறைவான மழையின் காரணமாக விளைச்சல் கடுமையாக சரிய வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இதனால் கடவுளுக்கு சிறப்பு பூஜைகளை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

அத்தகைய சம்பவங்களில் ஒன்றாக தவளைக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை அன்று நாய்க்கல் கிராமத்தில் நடைபெற்றது.

திருமணத்தின்போது ஊர் மக்கள் அனைவரும் பாடல்களைப் பாடிக் கொண்டாடினர். இதுகுறித்துப் பேசிய பெண், ''எங்களால் மழை வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறோன்றும் செய்ய முடியாது'' என்றார்.

அனைத்து சடங்குகளும் முடிந்தபின்னர், புதிதாகத் திருமணம் ஆன தவளை ஜோடிகள் அதன் போக்கில் விடப்பட்டன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஆப்பிளின் 'சிரி' உடன் நடிக்கப்போகும் 'ராக்' ஜான்சன்therocksiri

'தி ராக் x சிரி: டாமினேட் தி டே’ படத்தின் போஸ்டர்

பிரபல நடிகர் ராக் ட்வைன் ஜான்சன் புதிய படமொன்றில், ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு குரலான சிரி உடன் நடிக்கவுள்ளார்.

'தி ராக் x சிரி: டாமினேட் தி டே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் குறித்து தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஜான்சன் பகிர்ந்துள்ளார்.

"ஆப்பிளுடன் இணைந்து, பிரம்மாண்டமான, அற்புதமான, நகைச்சுவையான ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடன் மிக உயர்ந்த நடிகரும் உள்ளார். சிரி. உலக மக்கள் ரசிக்க நான் படங்கள் நடிக்கிறேன். இந்தப் படம் உங்களை உற்சாகப்படுத்த எடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் பார்க்க வேண்டும். பார்த்து ரசியுங்கள். பிறகு அதை நடைமுறைப்படுத்துங்கள்" என் ஜான்சன் " குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படம் www.YouTube.com/Apple என்ற இணைப்பில் காணக் கிடைக்கிறது.

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

தாய்ப்பாசம் பார்த்திருப்போம் இந்த நாய்ப் பாசத்தைப் பாருங்க...

 

  • தொடங்கியவர்

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி: எலி இறைச்சி சாப்பிட்ட மேயர்

 


கால்பந்து போட்டி சவாலில் தோல்வி: எலி இறைச்சி சாப்பிட்ட மேயர்
 

கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பாரிஸ் அணி தோல்வி அடைந்ததால் மேயர் ஒருவர் எலி இறைச்சி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள மோன்ட் டி மர்சான் நகர் மேயராக உள்ளார் சார்லஸ் டயோட்.

கால்பந்து விளையாட்டு ரசிகரான இவர் போட்டிகள் நடக்கும்போது யார் வெற்றி பெறுவார்கள் என பந்தயத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பாரிஸ் ஜெயின் ஜெர்மன் அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் இடையே கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் பந்தயம் கட்டிய மேயர், பாரிஸ் அணி தோல்வியடைந்தால் எலி இறைச்சி சாப்பிடுவதாக சவால் விட்டார்.

விளையாட்டுப் போட்டி தொடங்கியதும் முதல் சுற்றில் பாரிஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால், இரண்டாவது சுற்றில் பாரிஸ் அணி படு தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து சவால் விட்டவாறு மேயர் எலி இறைச்சி சாப்பிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

சில நாட்களுக்கு பின்னர், எலி இறைச்சி சாப்பிடுவதாக மேயர் ஒப்புக்கொண்டதையடுத்து, கடந்த சனிக்கிழமை ஹோட்டல் ஒன்றில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேஜையில் எலி இறைச்சி பரிமாறப்பட்டதும், மேயர் எவ்வித தயக்கமும் இன்றி எலி இறைச்சியை முழுவதுமாக சுவைத்து முடித்துள்ளார்.

”கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன். எலி இறைச்சி மிகவும் சுவையாக, முயல் இறைச்சியைப் போல் நன்றாக இருந்தது” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மேயர்.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 27
 
 

article_1469602004-abdul-kalam.jpg1214: பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.

1549: பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.

1627: தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.

1789: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது.

1794: பிரெஞ்சுப் புரட்சி - புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரை தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.

1862: சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பனாமா நோக்கிச் சென்றுகொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.

1865: வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.

1880: இரண்டாவது ஆங்கில - ஆப்கானியப் போர் - மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.

1921: பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

1929: மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

1941: ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.

1953 :கொரிய யுத்தம் முடிவடைந்தது.

1975: விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1976: ஜப்பானிய பிரதமர் ககுவேய் டனாகா, வெளிநாட்டு நாணயமாற்று சட்டத்தை மீறினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதானார்.

1983: வெலிக்கடை சிறையில் 18 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். இரு நாட்களில் இரண்டாவது தடவையாக இத்தகைய சம்பவம் நடைபெற்றது.

1990: பெலாரஸ் சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1990: திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.

1997: அல்ஜீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2002: உக்ரேனில் இடம்பெற்ற விமான சகாசத்தின்போது விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 85 பேர் பலி.

2007: பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.

2015: இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உயிரிழந்தார்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

 
kavimani

தமிழக மறுமலர்ச்சிக் கவிஞர்

தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (Kavimani Desika Vinayagam Pillai) பிறந்த தினம் இன்று (ஜூலை 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

குமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார் (1876). ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார்.

l

திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியர், திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார்.

l

இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல் கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘விடுதலைக் கவிஞர்’ எனவும் போற்றப்பட்டார்.

l

‘ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்றுதான் நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

l

‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’, ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’, ‘கதர் பிறந்த கதை’, ‘குழந்தைச் செல்வம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைப்பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை, இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள்.

l

இவரது சொற்பொழிவுகள் ‘கவிமணியின் உரை மணிகள்’ என்ற நூலாக வெளிவந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் எட்வின் ஆர்னால்டின் ‘தி லைட் ஆஃப் ஏஷியா’ என்ற படைப்பைத் தழுவி ‘ஆசிய ஜோதி’ என தமிழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.

l

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப் பணியாற்றினார். ‘கம்பராமாயணம் திவாகரம்’, ‘நவநீதப் பாட்டியல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்துள்ளார். ‘தேசியக் கவிஞர்’, ‘குழந்தைக் கவிஞர்’, ‘சமுதாயக் கவிஞர்’, ‘விடுதலைக் கவிஞர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்றெல்லாம் போற்றப்பட்டார்.

l

‘பைத்தியக்காரன்’, ‘மணமகள்’, ‘தாயுள்ளம்’, ‘வேலைக்காரன்’, ‘கள்வனின் காதலி’, ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

l

‘தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை’ என நாமக்கல் கவிஞர் பாராட்டியுள்ளார். 1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு ‘கவிமணி’ பட்டம் வழங்கினார்.

l

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ம் ஆண்டு, 78-வது வயதில் மறைந்தார். இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை வெளியிட்டது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வறுமையை மாற்றும் நிறங்கள்... ஒரு மொபைல் கேமரா செய்திருக்கும் மாயாஜாலம்!

நிறங்கள்

ஒரு பெரிய மலை. மலை என்றாலே வளமான ஓரிடமாகத்தான் நமக்கு காட்சிகள் விரியும். இந்த மலை அப்படி அல்ல. அதன் ஒரு பக்க சரிவு முழுவதும் குடிசைகள். அந்தக் குடிசைப்பகுதியைப் பார்த்தபடி அவர் நிற்கிறார். 

“நிறங்கள் அற்ற ஓர் உலகத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்...” என வாய்ஸ் ஓவர் தொடங்குகிறது.

அவர் மெள்ள நடக்கத் தொடங்குகிறார். கருப்பு வெள்ளை நிறக் காட்சிகள் ஓடத் தொடங்குகின்றன. வறுமையின் கீற்று மட்டுமே வீற்றிருக்கும் அந்தக் குரல் தொடர்கிறது.

“கற்பனை செய்யுங்கள்... நிறங்கள் இல்லாத அந்த இடம் மகிழ்ச்சியற்ற இடம்... சோகம் அப்பியிருக்கும் இடம்... வெறுமையான இடம்... அங்கு வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இருக்காது... சவால்கள் மட்டுமே சகாக்கள்... நிறங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை”

The painter of Jalouzi என்ற அந்த ஆவணப்படம் இப்படித்தான் தொடங்குகிறது. முழுக்க முழுக்க ஐபோன் கேமராவால் படம்பிடிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜீவன் இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது. அன்பு இருக்கிறது. ஒரு பிரச்னை இருக்கிறது. அதற்கொரு தீர்வு இருக்கிறது. கொஞ்சம் பழைய கதைதான். ஆனால், தவறவிடக்கூடாத ஒரு கதை.

ஜலூசி. ஹெய்ட்டி என்ற நாட்டின் மிகப்பெரிய குடிசைப்பகுதி. கிட்டத்தட்ட 45000 மக்கள் இங்கு வாழ்கிறார்கள். மேலே சொன்னது போல ஜலூசியில் வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. ”மக்காச்சோளம் போல நாங்க ஒட்டி வாழ்கிறோம்” என்ற நா.முத்துக்குமார் வரிகளின் சரியான விஷுவல் ஜலூசிதான். வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் வண்டி வரும். அதை விட்டால் வேறு நீராதாரம் அந்த மலைப்பகுதிக்குக் கிடையாது. மழை வந்தால் எது சாலை, எது குப்பை என்பதை கண்டறியவே முடியாது. அந்தக் காலனியில் யாருக்கும் காலணியே கிடையாது. உணவுப்பொருள்களை தரையில் வைத்துதான் விற்பார்கள். இளைஞர்களுக்கு ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதே பொழுதுபோக்கு. வீட்டுக்கு ஒருவர் அமெரிக்காவில் வேலைக்குப் போய் விடுவார்கள். அல்லது போக முயல்வார்கள். அந்த வருமானம்தான் ஜலூசியின் மிகப்பெரிய ஆதாரம்.

இந்த நிலையில்தான் ஹெய்ட்டி அரசின் கவனம் ஜலூசி மீது விழுந்தது. இந்தப் பகுதியில் இருக்கும் குடிசைகள் மொத்தத்தையும் வண்ணமயமாக்க நினைத்தார்கள். அதற்கென ஒரு புராஜெக்ட் தொடங்கி, நிதியும் ஒதுக்கப்பட்டது. வறுமையை தேசிய குணமாகக் கொண்ட ஒரு நாட்டில் இப்படி ஒரு திட்டம் ஆரம்பித்ததே அதிசயம்தான். ஆனால், தொடரவில்லை. நிதி போதவில்லை என ஒதுங்கிக் கொண்டது அரசு. 

மொத்தப்பகுதியும் வண்ணங்களால் நிறைந்தால் அங்கு பாசிட்டிவ் எனர்ஜி கூடும் என்ற கனவு தகர்ந்தது. வண்ணங்கள் ஜலூசிக்குப் புதிதல்ல. அவர்களுக்கும் நிறங்களுக்குமான தொடர்பு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. ஓவியக்கலை ஜலூசியின் பாரம்பர்யக் கலை. 

அரசு ஆரம்பித்த வேலையை கையில் எடுத்தார்கள் ட்யூவல் (Duval Pierre) மற்றும் ஜெரார்ட் ஃபார்ச்சுன் (Gerard fortune). இருவருக்கும் நிறங்களின் சக்தி மீது மிகப்பெரிய நம்பிக்கை. ஜலூசியின் வீடுகள், பேருந்துகள், சுவர்கள் என அந்த மலை முழுவதும் நிறங்களால் நிறைந்தால் எப்படி இருக்கும் என அவர்கள் கனவு விரிந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக... சிறிது சிறிதாக அந்தச் சாம்பல் நிற மலை வானவில் ஆக மாறியது. 

நிறங்கள்

நிறங்கள் என்ன செய்யும்?

”நிறங்கள் நம்பிக்கையைத் தரும். நிறங்கள் மகிச்ழ்ச்சியை தரும். நிறங்கள் அடையாளத்தைத் தரும்” என்கிறார் ட்யூவல். நிறங்கள்தான் ஜலூசி மக்களுக்கு சூரியனையும், கடலையும், மரங்களையும் நினைவுப்படுத்துகிறது என்கிறார். ஜலூசியின் எதிர்காலத்தை மாற்ற நினைத்தவர்கள் அதற்கு தங்களுடன் சேர்த்துக்கொண்டது குழந்தைகளை. சில நேரம் பிரஷ் கிடைக்கும். பல நேரம் கைகளே பிரஷ் ஆகிவிடும்.

 

”நாளை என் ஜலூசிக்கு இப்போது இருப்பதை விட சிறப்பான வாழ்வு சாத்தியமாகும். அதற்கு இந்த நிறங்களே காரணமாக இருக்கும். இதை நாங்கள் எங்கள் குழந்தைக்களுக்காக செய்தோம். இந்த உலகுக்கு ஹெய்டி அழகான நாடு என சொல்வதற்காக செய்தோம்” என்கிறார் ட்யூவல்.

ஒரு மொபைல் கேமராவால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இந்தப் படம் சரியான உதாரணம். செல்ஃபிக்களை சுட்டுத்தள்ளும் அதே கேமராதான் இப்படியொரு படத்தையும் எடுத்திருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

91 வயது அழகியின் அசாதாரண வாழ்க்கை கதை

 
கிரைஸ்டினா ஃபார்லிபடத்தின் காப்புரிமைBRIAN FINKE

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் அழகிப் பட்டத்தை பெற்றவரான, 91 வயதான கிரைஸ்டினா ஃபார்லியின் வாழ்க்கை எப்போதும் இந்தளவு அழகாக இருந்ததில்லை. போலந்தின் கிராமப்புற பகுதியில் ஒரு அன்பான குடும்பத்தில் வளர்ந்தவர் என்றாலும், திடீரென உருவான போர் இவரது குழந்தை பருவத்தையே பாதித்தது.

``எனது தோல் அழகானது. அதனால் நான் எந்த ஒப்பனையும் செய்ய மாட்டேன். வெறும் உதட்டுச் சாயம் மட்டும் போதுமானது`` என்கிறார் கிரைஸ்டினா ஃபார்லி.

விரைவில் 92 வயதை அடைய உள்ள கிரைஸ்டினா, கடந்த ஆண்டு ` திருமதி கனெக்டிகட் மூத்த அமெரிக்கர்` என்ற அழகிப்பட்டத்தை பெற்றுள்ளார்.

அழகிப் போட்டியினை தான் விரும்புவதற்கான காரணத்தை விவரிக்கும் கிரைஸ்டினா,`` நீங்கள் 60 வயதை அடைந்துவிட்டாலே உங்களது ஆயுள் முடிந்துவிட்டது என மக்கள் நினைப்பார்கள். உங்களால் நடனம் ஆட முடியும், படம் வரைய முடியும் மற்றும் நீங்கள் நினைப்பது அனைத்தையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கலாம்`` என்கிறார்.

1925-ம் ஆண்டு கிழக்கு போலந்தில் பிறந்தவர் கிரைஸ்டினா. முதலாம் உலக போரில் ராணுவத்தில் பணியாற்றியதற்காக, கிரைஸ்டினா தந்தைக்கு கொடுக்கப்பட்ட 35 ஏக்கர் நிலத்தில் அக்குடும்பம் நிம்மதியுடன் வாழ்ந்தது.

கிரைஸ்டினாவுக்கு 14 வயதாகும்போது, ஜெர்மனியும், சோவியத் ஒன்றியமும் போலாந்து மீது படையெடுத்தது. இது இரண்டாம் உலகப்போருக்கு தூண்டுகோலாக அமைந்தது.

ஆயிரக்கணக்கான போலந்து மக்களைப் போலவே கிரைஸ்டினா குடும்பமும், ரஷ்ய ராணுவம் மற்றும் உக்ரேனிய காவல்துறையால் சுற்றிவளைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கால்நடைகளை ஏற்றிச்செல்லும் ரயிலில் அடைக்கப்பட்டு, உரால் மலைகளின் உறைந்த காடுகளை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிறகு, ரஷ்யா தொழிலாளர் முகாமில் கிரைஸ்டினா குடும்பத்திற்கு மரம் அறுக்கும் வேலை ஒதுக்கப்பட்டது. 1941-ம் ஆண்டு ஜெர்மனி சோவித் யூனியனை தாக்கும் வரையில், இக்குடும்பம் அங்கு மோசமான இரண்டு ஆண்டுகளைக் கழித்தது.

கிரைஸ்டினா ஃபார்லிபடத்தின் காப்புரிமைKRYSTYNA FARLEY Image caption1938-ல் சிறுமியாக கிரைஸ்டினா ஃபார்லி

ஹிட்லரை எதிர்த்துச் சண்டையிட ராணுவ வீரர்கள் தேவைப்பட்டதால் கிரைஸ்டினா குடும்பத்தை போன்ற முன்னாள் ராணுவ வீரர்களில் குடும்பத்தை சோவியத் விடுவித்தது.

ஜெர்மனியை எதிர்த்து பேரிட அமைக்கப்பட்ட புதிய போலாந்து ராணுவ படையில் கிரைஸ்டினாவின் அப்பா சேர்ந்துகொள்ளப்பட்டார். அச்சயமத்தில் ஹிட்லர் கிழக்கு போலாந்தை கைப்பற்றியதால், முகாம்களில் இருந்து வெளியேறிய பெண்களாலும், குழந்தைகளாலும் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை.

அங்கிருந்து மக்களுடன் கூட்டமாக கப்பலில் ஈரான் வந்தடைந்த கிரைஸ்டினா, ஜெர்மனியை எதிர்க்க அமைக்கப்பட்ட போலிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். இராக், எகிப்து போன்ற பகுதிகளில் ராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அவர், அதே ராணுவ படையில் பணியாற்றிய தனது தந்தையுடன் மீண்டும் ஒன்று சேர்ந்தார்.

கிரஸ்டைனா என்பவரை கிரைஸ்டினா திருமணம் செய்துகொண்டு ப்ரிட்டனில் குடியேறிய நிலையில், மதுவின் காரணமாக அவரது கணவர் உயிரிழந்தார். கணவர் விட்டுச் சென்ற போது கிரைஸ்டினாவிற்கு அவரது குழந்தைகள் மட்டுமே ஆறுதலாக இருந்தன.

வறுமையில் இருந்து தனது குழந்தைகளைக் காப்பாற்ற சிறுவர்களுக்கு நடனம் கற்றுத்தர ஆரம்பித்த அவரை, மறு திருமணம் செய்யத் தந்தை வற்புறுத்திய போதும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

கிரைஸ்டினா ஃபார்லிபடத்தின் காப்புரிமைKRYSTYNA FARLEY Image captionராணுவத்தில் பணியாற்றிய போது தனது சகாக்களுடன் கிரைஸ்டினா எடுத்துக்கொண்ட புகைப்படம்

1955-ல் ஒரு ஆர்வத்தில் நான்கு குழந்தைகளுடனும், கையில் சில நூறு டாலர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் தனது குழந்தைகளுக்காகவும், தனக்காவும் ஒரு புதிய வாழ்க்கையினை தொடங்கி அவர், தனது 50வது வயதில் எட் பார்லீ என்பவருடன் மணம் முடித்தார்.

கனெக்டிகட் மாகாணத்தின் உள்ள போலாந்து மக்களிள் நடத்தும் அமைப்புகளில் கிரைஸ்டினா ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறார்.

``அனைத்து விதமான கிளப்களிலும் நான் சேர்ந்து பணியாற்றினேன். குழந்தைகளுக்கு போலந்து நடனத்தைக் கற்றுத்தருவது என என்னை எப்போதும் ஆர்வமாக வைத்திருப்பேன்`` என்கிறார் அவர்.

கிரைஸ்டினா ஃபார்லிபடத்தின் காப்புரிமைKRYSTYNA FARLEY Image captionவறுமையில் இருந்து தனது குழந்தைகளைக் காப்பாற்ற சிறுவர்களுக்கு நடனம் கற்றுத்தர ஆரம்பித்தார்

அமெரிக்காவின் பாரம்பரிய அழகிப்போட்டி குறித்து தாமதமாகவே அறிந்துகொண்ட அவர், தனது 70வது வயதில் முதல்முறையாக ``திருமதி கனெக்டிகட் மூத்த அமெரிக்கர்`` என்ற அழகிப்போட்டியில் கலந்துகொண்டார்.

முதல் இரண்டு முயற்சிகள் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்றாலும். 2016-ல் முன்றாம் முறையாக முயன்று அழகிப்பட்டத்தை வென்றார்.

``எனக்குப் பல திறமைகள் உள்ளது. என்னால் கவிதை வாசிக்க முடியும், நடனம் ஆட முடியும், பாடல் பாட முடியும்`` என்கிறார்.

கிரைஸ்டினா ஃபார்லிபடத்தின் காப்புரிமைBRIAN FINKE Image caption2016-ல் திருமதி மூத்த அமெரிக்கர் அழகிப் பட்டத்தை பெற்ற போது

``அனைவர் மீது அன்பு செலுத்துவது, அனைவருக்கும் நல்லது செய்வது இதுவே எனது வாழ்க்கைத் தத்துவம்.`` என்கிறார் கிரைஸ்டினா.

2017-ம் ஆண்டு பட்டம் வெல்ல உள்ள அழகிக்குத் தனது கிரீடத்தை மே மாதம் ஒப்படைக்க உள்ள கிரைஸ்டினா, ஆகஸ்ட் மாதம் தனது 92வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார்.

``எது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயராக இருக்கிறேன். எதுவும் ஆகாது என தெரியும். ஆனாலும் நான் எப்போதும் தயாராக இருப்பேன்`` என்கிறார் கிரைஸ்டினா.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

அப்துல் கலாம் சிலாகித்த மாற்றுத் திறனாளி! அப்துல் கலாம் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை

 
 

அப்துல் கலாம்

“உறக்கத்தில் வருவதல்ல கனவு
நம்மை உறங்க விடாமல்  செய்வதுதான் கனவு


-  கடந்த தலைமுறையின் வெற்றிக்குக் காரணமான இந்த தன்னம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தவர் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம்; நேருவுக்குப்பின் இந்திய இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லா தரப்பினராலும் கொண்டாடப்பட்ட தலைவர். இன்று அவரது நினைவுநாள்...

ஜனாதிபதி என இந்தியாவின் மிக உயர்ந்த பதவியை எட்டியபின்னும் யதார்த்தமான எளிமை தாங்கிய மனிதராக அவர் இருந்தார். ஓய்வுக்குப்பின் டெல்லியில் பிரமாண்டமான மாளிகையை மத்திய அரசு அவருக்காக ஒதுக்கிக் காத்திருக்க, விமானம் ஏறி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சாதாரண வசதிகளைக் கொண்ட விருந்தினர் இல்லத்தில் தங்கினார் அந்த எளிய மனிதர். அரசாங்கம் அவரைத்தாங்கிக்கொள்ள தயாராக இருந்தபோதும் ஒற்றை வேலையாள்கூட இன்றி இளைஞர்கள், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக நாடு முழுவதும் சுற்றிவந்தவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்று அவர் உரையாற்றினாலும் சென்னை ராமாபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளியில் சில வருடங்களுக்கு முன் 'வெற்றியடைந்தே தீருவேன்’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை உணர்ச்சியவமானது. அப்துல்கலாமின் பேச்சை மாணவர்களுக்கு சைகை மொழியில் தெரிவித்தார் ஒரு ஆசிரியர்.

அந்த விழாவில் ‘அவர்  பேசும்போது, " தமிழக மக்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் வந்து உங்களைச் சந்தித்து, உரையாடக் கிடைத்த வாய்ப்புக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். அதுதான் வெற்றியின் முதற்படி.  நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒரு சமயம் வெளிநாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 1000 பேர், அத்லடிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தனர். என்னைப்பார்க்க விரும்பி அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுக்காக நான் ஒரு கவிதையை தயார் செய்து வைத்திருந்தேன். அந்தக் கவிதை இதுதான்...

அப்துல் கலாம்

'நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்
எங்களது மனம் வைரத்தை காட்டிலும்  பலமானது
எங்களது தன்னம்பிக்கையால் எப்போதும் வெற்றிபெறுவோம்.
கடவுள் எங்களோடு இருக்கும்போது எங்களுக்கு எதிரி என்று யாரும் கிடையாது!'

-இதை  வாசித்து முடித்ததும், ஈரான் நாட்டை சேர்ந்த முஸ்தபா என்ற மாணவன் என் அருகே தவழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு கால்களும் இல்லை. என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தான். அதில் ஒரு அழகான கவிதை இருந்தது. அதற்கு அவன் வைத்திருந்த தலைப்பு ‘மன தைரியம்’. அந்தக் கவிதையைப் படிக்கிறேன்; கேளுங்கள்...
‘எனக்கு கால்கள் இரண்டும் இல்லை
அழாதே அழாதே என்று என் மனசாட்சி சொல்கிறது
ஆம்! என் மனசாட்சி சொல்கிறது
நான் மன்னன் முன்பாகக் கூட மண்டியிட்டு வணங்கவேண்டியதில்லை மகனே என 
நான் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவேன்!'

அப்துல் கலாம்

- அவனது மன உறுதியைக் கண்டு அசந்துபோனேன். 2 கால்களையும் இழந்த அவனுக்குள்தான் என்னவொரு தன்னம்பிக்கை. அப்படிப்பட்ட தன்னம்பிக்கையை இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும்  நாம் விதைக்கவேண்டும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபோது மற்றொரு முறை ஹைதராபாத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர்கள் நுாற்றுக்கணக்கானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரிடமும், ‘யார் யார் என்னென்னவாக ஆவீர்கள்’ எனக் கேட்டேன். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது 9 ம் வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற பார்வையற்ற மாணவன் ஒருவன், ‘சார் என் ஆசை, நான் ஒருநாள் இந்த நாட்டின் பார்வையற்ற முதல் குடியரசுத் தலைவனாவேன்’ என்றான். அவன் தன்னம்பிக்கையைக் கண்டு பிரமித்துப் போனேன். ‘உனது எண்ணம் பெரிது. ஆனால் விடாமுயற்சியோடு அறிவை தேடிப்பெற்று, கடுமையாக உழைத்தால் உன் லட்சியம் நிறைவேறும்' என வாழ்த்தினேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற 4 செயல்கள் அவசியம். முதலாவது, வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியத்தை வகுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாவது, அந்த லட்சியத்தை அடைய அறிவாற்றலை தொடர்ந்து பெருக்கிக் கொள்ள வேண்டும். அறிவை பெருக்குவது என்றால் நல்ல புத்தகங்களை வாசிப்பதும், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை ஊன்றிக்கேட்பது. மூன்றாவது, கடின உழைப்பு . நான்காவது, விடாமுயற்சி. அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையும்படி தொடர்ந்து முயற்சிப்பது. இந்த நான்கையும் கடைபிடித்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றிபெறமுடியும். இது குறித்து என் கவிதை ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் அதைத் திரும்பச் சொல்லுங்கள்...

அப்துல் கலாம்

“நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
நான் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர; எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்.
தவழவேமாட்டேன்.
ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன் பறப்பேன் 
வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.” 

வெற்றி என்பது ஒன்றின் இறுதிப்புள்ளி, தோல்வி என்பது இடைப்புள்ளி. இடைப்புள்ளிகளின் துணையின்றி இறுதிப்புள்ளியை அடைதல் சாத்தியமல்ல. வெற்றியைக் கொண்டாடத் தவறினாலும் தோல்வியைக் கொண்டாடத் தவறக்கூடாது. ஏனென்றால் தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. அதுதான் நம் பயணத்தை முழுமை பெறச் செய்பவை. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாராட்டும் சந்தரப்பங்கள் வந்தால் பரிசாக புத்தகத்தை தாருங்கள். பள்ளி வயதிலேயே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். 

அப்துல் கலாம்

 

உறக்கத்தில் வருவதல்ல கனவு
நம்மை உறங்காமல் செய்வதுதான் கனவு!
- அந்தக் கனவை ஒவ்வொருவரும் நனவாக்கும் வகையில் உழைக்கவேண்டும்" என்று முடித்தபோது காதுகேளாத மாணவர்களின் கைதட்டல் அரங்கத்தை நிறைத்தது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

எளியவர்களுக்கும் இறையுணர்வு ஊட்டிய சிவாஜி கணேசன்... பக்திப் பாடல்கள், காட்சிகள்! #SivajiGanesan

 
 

சிவாஜி கணேசன்... உச்சரிக்கும்போதே தனி மரியாதையை ஏற்படுத்தும் பெயர். நடிப்புக்கு இலக்கணம்... இந்திய சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை... நடிப்புக்கலையில் சமுத்திரம்... கலைத்துறை என்றென்றும் ஜொலித்து மின்னும் நட்சத்திரம்... எவரோடும் ஒப்பிடமுடியாத தனித்துவம் வாய்ந்தவர்... என நீளும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் சிவாஜி கணேசன். குழந்தை நட்சத்திரம் முதல் சூப்பர் ஸ்டார் வரை 'சிவாஜி கணேசன்தான் எங்கள் ஆதர்சம்' எனச் சொல்லும் ஒப்பற்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

சிவாஜி கணேசன் 

சிவாஜி, விநாயகப் பெருமான் மீது ஆழ்ந்த பக்திகொண்டவர். திருப்பதி, திருவானைக்காவல், தஞ்சை மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களுக்கும் யானையைப் பரிசாக வழங்கியவர். இவர் வெள்ளித்திரையில் கால்பதிப்பதற்கு முன்னர் நடித்தது நாடகத்தில். திரைத்துறைக்கு வந்த பிறகும்கூட, அவ்வப்போது நாடகத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் நடித்த முதல் நாடகம் `ராமாயணம்.’  அப்போதே அவரின் உயிர்ப்புள்ள நடிப்புத் திறனை வெகுவாகப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் தந்தைப் பெரியார்.

தெலுங்கில் ஒன்பது படங்களிலும், இந்தியில் இரண்டு படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும், 270 தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். இது தவிர, கௌரவத் தோற்றத்தில் 19 படங்களில் நடித்திருக்கிறார். இவரின் பல படங்கள் தமிழ் சினிமாவின் மைல்கற்கள் என்று சொல்லும் அளவுக்குப் பெயர் பெற்றவை.

இவரின் முதல் படமான 'பராசக்தி' 1952-ம் ஆண்டில் வெளியானது. ஆனாலும், இவர் பக்திப் படங்களில் பாதம் பதிக்க ஆறு வருடங்கள் ஆனது. 1958-ம் ஆண்டுதான் முதன்முதலில் 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் நடித்தார் சிவாஜி.

புதிய பறவையில் சிவாஜி 

செவாலியே பட்டம் பெற்றவர். கலைமாமணி விருது, பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, தாதாசாகேப் பால்கே விருது... எனப் பல விருதுகளை தனது நடிப்பால் தன்வசம் ஆக்கியவர் என்று சொல்வதைவிட, இவரின் நடிப்புக்கு மயங்கி அந்த விருதுகள் இவரிடம் வந்து சேர்ந்தன என்று சொல்லலாம். இப்போது சிவாஜி கணேசன் பெயரிலேயே பல விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிவாஜி நடித்த நூற்றுக்கணக்கான படங்களில் பக்திப் படங்கள் தனித்துவமானவை. அப்பர், சுந்தரர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் போன்ற ஆன்மிகப் பெரியவர்களை பாமரர்களும் அறியும்படி செய்தது அவர் நடிப்பின் உச்சம் என்றே சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர், மார்கழி மாத காலை நேரங்களில், சிவாஜி நடித்த `திருவிளையாடல்’, `சரஸ்வதி சபதம்’ ஒலிச் சித்திரங்கள் ஒலிக்காத கோயில்களே இல்லை என்று சொல்லலாம். அவருடைய கம்பீரமான குரல் தூய தமிழை உச்சரிக்கும் அழகே அலாதியானது. அந்தச் சந்தர்ப்பத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தவை பக்திப் படங்களே!

நடிகர் திலகம் நடித்த பக்திப்படங்களின் சில பாடல்களும் காட்சிகளும் இங்கே...

கர்ணாக சிவாஜி

 

* திருவிளையாடல்

1965-ம் ஆண்டு வெளியானது. சிவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் வரும் 'சிவாஜி - நாகேஷ் (புலவர் - தருமி)' காம்பினேஷன் சீன் இன்றும் அனைவரின் ஆல்டைம் ஃபேவரைட். இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, இயக்குநர் ஏ.பி.நாகராஜன், சிவாஜியிடம், ``இந்தக் காட்சியில் உங்களைவிட நாகேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். எனவே, இதை படத்திலிருந்து நீக்கிவிடலாம்’’ என்று கூறினாராம். ``வேண்டாம்! அதுதான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் பரிசு’’ என்று கூறினாராம் சிவாஜி. இதைத்தான் பேசிய எல்லா மேடைகளிலும் சொல்லத் தவறியதில்லை நடிகர் நாகேஷ்.

 


 

* கந்தன் கருணை

1967-ம் ஆண்டில் வெளியானது. `வீரபாகு’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற இவரின் ஸ்டைலிஷான நடை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதது..


 

* சரஸ்வதி சபதம்

இரட்டை வேடம். வித்யாபதி, நாரதர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். `அகர முதல எழுத்தெல்லாம்...’ என்ற பாடல் என்றும் மறக்க முடியாத இனிய கீதம்.

 


 

* திருவருட் செல்வர்

1967-ம் ஆண்டில் வெளியானது. திருநாவுக்கரசர் (அப்பர்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்களைப் பார்த்துவிட்டு, காஞ்சி பெரியவா சிவாஜி கணேசனை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

 


 

* திருமால் பெருமை

1968-ம் ஆண்டில் வெளியானது. பெரியாழ்வார் கதாபாத்திரத்தில் நடித்து இவர் பாடியதாக வரும் 'ஹரி ஹரி கோகுல ரமணா...' பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் பாடல்.

 

 

* சம்பூர்ண ராமாயணம்

1958-ம் ஆண்டில் வெளியானது. பரதன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ராமனாக என்.டி.ராமாராவ் கலக்கியிருப்பார். ஆனாலும், பரதனாக பட்டையைக் கிளப்பியிருப்பார் சிவாஜி கணேசன். 'பரதனை நேரில் கண்டது போலவே இருந்தது' என்று அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ராஜகோபாலாச்சாரி பாராட்டியிருந்தார்.

 


 

* ஶ்ரீவள்ளி

1961-ம் ஆண்டில் வெளியானது. முருகப் பெருமான் கதாபாத்திரத்துக்கும் அப்படியே பொருந்திப் போயிருந்தார் சிவாஜி.

 


 

* கர்ணன்

1964-ம் ஆண்டில் வெளியானது. கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராமாயணத்தில் பரதனாக பட்டையைக் கிளப்பியிருந்தவர், மகாபாரதத்தில் கர்ணனாகக் கலக்கியிருப்பார். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்...' என்ற கர்ணனின் மரணக் காட்சியில் வரும் பாடல் சிவாஜியின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல்.

 

 

 

 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிரிட்டனில் ஆண்டுதோறும் குப்பையில் வீசப்படும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து மதிப்புவாய்ந்த பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கையில் ஒரு நிறுவனம் இறங்கியுள்ளது.

  • தொடங்கியவர்

கானாவில் 'கலகலப்புடன்' மரணச் சடங்குகள்
-----------------------------------------------------------------------------
மேற்கு ஆஃப்ரிக்க நாடான கானாவில், மரணச் சடங்குகளின்போது ஆட்டம் பாட்டம் ஆகியவற்றுடன், இறந்தோரை நல்லடக்கம் செய்யும் நடைமுறை அதிகரித்து வருகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.