Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person
 

.

#எப்பவுமே ட்ரைவிங் பண்டறச்சே நான் போன் வந்தா அட்டென்ட் பண்டறதில்ல...

#புது நெம்பர்...

கால் ஃபுல் ரிங் வந்து கட்டாயிடிச்சி...

வண்டிய லெஃப்ட்ல அணைச்சி நிப்பாட்டி யார் கால்ன்னு பார்க்க போன ஆன் பண்ண எடுத்தன்...

ஆனா... அதுக்குள்ள அதே நெம்பர் கால்...

"ஏங்க... நான் தான் பேசறன்...
போன்ல பேலன்ஸ் இல்ல... பக்கத்து வீட்டு விமலாக்கா போன்லேர்ந்து பேசுறன்..."

சொன்னவள் பேச ஆரம்பிச்சா...

லைட்டா அழுதா...

என்கிட்ட மன்னிப்பு கேட்டா...

அழும் போதே,

'இனிமே வாழ்நாள் முழுசும் உங்கள்ட்ட சண்டையே போட மாட்டேன்'னு சொன்னா...

' இனிமே நீங்க என்ன சொன்னாலும் கவனிப்பன்...'

'என்ன சொன்னாலும் கேட்பேன்'னு சொன்னா...

எனக்கு மனசு ஒரு மாதிரியாவ...

என்ன சொல்ட்றதுன்னே தெரியாம திகைச்சி நிக்க...

அமைதியாக இருந்த என்கிட்ட...

"தெரியும் இன்னும் உங்களுக்கு என்மேல உள்ள கோவம் போயிருக்காதுதான்... உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்புடித்தான் இருப்பன்..."

பேசியவ...'சரிங்க... நான் வைக்கிறன்...'ன்னு போன வச்சிட்டா...

நான் அப்புடியே ரொம்ப உணர்வுப்பூர்வமா கேட்டுட்டே இருந்தேன்...

ரொம்ப பிரமாதமா இருந்துச்சி அந்த உணர்வு...

பத்து டிஜிட் நம்பர்ல ஏதோ ஒரு நம்பர மாத்தி போட்டுர்க்கா...

ஆனா...

யாரோட மனைவின்னு தெரில...

'ம்ம்... அவன் குடுத்து வச்சவன்...'

 

FB இல் படித்தது

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
பகல் பெரஹெரா...
 

image_c54fbef4ac.jpgimage_13b21eb2d2.jpgimage_b1e28caadf.jpgimage_aee4cb306c.jpgimage_b78710b421.jpgimage_918d3bab8e.jpgimage_fc5be9da09.jpgமொஹொமட்  ஆஸிக்

 

வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்த  கண்டி  ஸ்ரீ  தலதா  மாளிகை எசல பெரஹெராவின்  இறுதி  நாளான இன்று,  பகல் பெரஹெரா  கண்டி  ஸ்ரீ செல்வ விநாயகர்  ஆலயத்தில், இன்று மாலை ஆரம்மானது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை இங்குக் காணலாம்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்
   
 

samanta (1) samanta (2) samanta (3) samanta (4) samanta (5) samanta (6) samanta (7) samanta (8) samanta (9) samanta (10) samanta (11) samanta (12) samanta (13)

சமந்தா

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'காகிதங்கள், அட்டைகள், கம்பிகள்' - இவற்றை கொண்டும் ஆடை அலங்காரம்!

 
அற்புதமான அலங்கார அணிவகுப்புக்கு தயாரிப்புபடத்தின் காப்புரிமைINSANE TROUPE

மேற்கிந்தியத் தீவுகளின் ஆண்டிகுவாவில் செயிண்ட் ஜான்ஸ் நகரில் வண்ணமயமான கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு பழைய கடையில் கலைஞர்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

கோந்து, கத்தரி, மெல்லிய துணிகள் போன்ற பல பொருட்களை வைத்திருக்கும் அவர்கள், பாரம்பரிய சோக்கா இசைக்கு ஏற்றவாறு நடனமாடி அலங்கார அணிவகுப்பில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

அற்புதமான அலங்கார அணிவகுப்புக்கு தயாரிப்புபடத்தின் காப்புரிமைINSANE TROUPE

ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இந்த திருவிழாவில் வண்ணமயமான ஆடைகள் அணிந்து அழகாக சிங்காரித்துக் கொண்டு, தலைநகர வீதிகளில் ஊர்வலமாக செல்வார்கள்.

ஆண்டுதோறும் நடைபெறும் கார்னிவல் ஊர்வலத்திற்கு முன்பே, கடைகளும், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு, ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் தையல் கலைஞர்களுக்காக திறந்துவிடப்படும்.

அற்புதமான அலங்கார அணிவகுப்புக்கு தயாரிப்புபடத்தின் காப்புரிமைCOURTESY: MUSEUM OF ANTIGUA & BARBUDA

இந்த அலங்கார அணிவகுப்பில் மக்களின் கவனத்தை ஈர்க்க அனைவரும் பெரும் முயற்சியில் ஈடுபடுகின்றனர், கடுமையாக உழைக்கின்றனர்.

இது அறுபதாவது ஆண்டு அலங்கார அணிவகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான அலங்கார அணிவகுப்புக்கு தயாரிப்புபடத்தின் காப்புரிமைMUSEUM OF ANTIGUA & BARBUDA

200 ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்ற ஆண்டிகுவா மக்கள் அதை கொண்டாடுவதற்காக வீதிகளில் இறங்கினார்கள்.

காலப்போக்கில் கொண்டாட்டத்தின் உத்வேகம் அதிகரித்து, திருவிழா மாபெரும் நிகழ்வாக மாறியது.

அற்புதமான அலங்கார அணிவகுப்புக்கு தயாரிப்புபடத்தின் காப்புரிமைINSANE TROUPE

இந்த ஊர்வலமானது ஆடை அணிகலன்களின் ஈர்ப்பு மையமாகிவிட்டது. 1957-இல் முதன்முறையாக இந்தக் ஊர்வலம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் ஆடைகள் மிகவும் நீண்டதாகவும், எடை அதிகமானதாகவும் இருப்பதாக கூறும் ஆடை வடிவமைப்பாளர் கால்வின் சவுத்வெல், தற்போது அவை மெலிதாகவும், சாதாரணமாக அணியக்கூடியதாகவும் மாறிவிட்டதாக கூறுகிறார்.

ஆடை வடிவமைப்பாளர் கால்வின் சவுத்வெல்படத்தின் காப்புரிமைGEMMA HANDY Image captionஆடை வடிவமைப்பாளர் கால்வின் சவுத்வெல்

ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் அலங்கார அணிவகுப்பின் தாக்கம் இங்கும் எதிரொலிக்கிறது. ஆடைகள் ரியோ டி ஜெனிரோவை மாதிரியாகக்கொண்டே இங்கு ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன.

ஆனால் ஆண்டிகுவாவில் பராம்பரிய ஆடைகளுக்கென்று பிரத்யேக இடம் உள்ளது. ஒரு ஆடையை தயார் செய்ய பல தினங்களாகும்.

அற்புதமான அலங்கார அணிவகுப்புக்கு தயாரிப்புபடத்தின் காப்புரிமைMARIO TAMA/GETTY IMAGES

ஆடைகளை தயாரிப்பதற்கு வண்ணமயமான மின்னும் காகிதங்கள், அட்டைகள், கம்பிகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது மென்பட்டு, சரிகை, வண்ணமயமான சிறகுகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

"ஆடை வடிவமைப்புக்கு சுமார் ஆறு மாதங்கள் பிடிக்கின்றன" என்கிறார் சவுத்வெல்.

அற்புதமான அலங்கார அணிவகுப்புக்கு தயாரிப்புபடத்தின் காப்புரிமைMARIO TAMA/GETTY IMAGES

சவுத்வெல் சொல்கிறார், "உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இந்த ஆடைகளுக்கு தேவையான சிறகுகள் அமெரிக்கா, சீனா, டிரினிடாட் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள அனைத்துப் பொருட்களும் உள்நாட்டை சேர்ந்தவை".

"இந்த ஆடைகள் எங்கள் தனித்தன்மையை பிரதிபலிக்கிறது. ஆண்டிகுவாவின் புகழ்பெற்ற மெல்லிய பருத்தி பயன்படுத்தப்படுகிறது. எங்கள் கலையும், பாரம்பரியமும் நீடித்து நிலைக்கவேண்டும் என்று முயற்சிக்கிறோம்" என்கிறார் சவுத்வெல்.

சவுத்வெல் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த அலங்கார அணிவகுப்பில் பங்கேற்கிறார்.

அற்புதமான அலங்கார அணிவகுப்புக்கு தயாரிப்புபடத்தின் காப்புரிமைMARIO TAMA/GETTY IMAGES

மற்றொரு ஆடை வடிவமைப்பாளர் ஹென்றி சொல்கிறார், ஆடைகள் உருவாக்குவதில் 80 சதவிகிதம் கைவேலைப்பாடுகள். அதிலும் ஆடைகளில் சிறகுகள் தைப்பது ஒரு தனிப்பட்ட கலை.

ஆடைகளுக்கு மெருகேற்றுவதற்காக, அணிகலன்களும் அவற்றில் சேர்த்து தைக்கப்படுவதாக ஹென்றி சொல்கிறார்.

அற்புதமான அலங்கார அணிவகுப்புக்கு தயாரிப்புபடத்தின் காப்புரிமைMARIO TAMA/GETTY IMAGES

வண்ணங்களின் அழகான இந்த அலங்கார அணிவகுப்பு வண்ணமயமாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர் ரோஜர் பெரி சொல்கிறார். ஆவலைத் தூண்டும் அலங்கார அணிவகுப்பை பார்க்க அனைவரும் தயாராகவே இருக்கின்றனர்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

 

உலகின் வினோதமான ரயில் பயணம்(காணொளி)

இந்த ரயில் பாதையின் இருபுறமும் கண்ணிவெடிகள் குறித்த எச்சரிக்கை பலகைகளை காணலாம்!

  • தொடங்கியவர்
‘இயற்கைக்குக் கோபம்வரும்’
 

image_88bf717356.jpgபிரபஞ்சத்தின் மகா இரகசியங்களையும் புரிந்து கொள்ள விழையும் மனிதன், தன்னோடு பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமானியனின் நியாயபூர்வமான தேவைகளையும் அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.

மனித இதயங்களில் தேங்கியிருக்கும் துன்பங்களைக் கண்டறிந்து ஆறுதலூட்டுவதே இந்த முழு உலகையும் பலப்படுத்த வல்லது என உணர்வீர்களாக.

நேயமும் பகை கருதா நெஞ்சும் அரவணைக்கும் மாண்பும் இணைந்தால் பூமியில் அதிர்வும் இயற்கை அனர்த்தமும் எரிமலைக் குமுறல்களும் சமுத்திரச் சீற்றங்களும் நிறுத்தப்பட்டு விடும்.

மாந்தர் இணையாது விட்டால், இயற்கைக்குக் கோபம்வரும். நாங்கள் பெருமூச்சு விட்டால், சுற்றாடல் அசுத்தமாகி விடும்.

சந்தோசங்களே, எங்களைச் சாதனை செய்யத் தூண்டுகின்றன. தனிமை எனும் சோகத்தில், சுவர்களுக்குள் அடைபட்டால், ஆன்மாவின் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிடும். அனைவரிடமும் நேயம் கொண்டால்  பன்மடங்கு பலம் பெருகும். அதுவே பரம ஆனந்தம்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 09
 

article_1439104005-Atomic.jpeg1173: இத்தாலிய பைஸா கோபுர நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டது.

1942: இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்த மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார்.

1945: ஜப்பானின் நாகசாசி நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. 74,000 பேர் பலியாகினர்.

1965: மலேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது.

1974: அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் காரணமாக ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் ராஜினாமா செய்தார். ஜெரால்ட் போர்ட் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1991: யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000Mம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

2006: திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

பிரியாவிடை பெற்றது; சைகை மொழியில் பேசிய மனிதக் குரங்கு

சான்டெக் மனிதக் குரங்குபடத்தின் காப்புரிமைREUTERS Image captionசான்டெக் தனது கடைசி காலங்களில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது

சைகை மொழியைக் கற்றுக்கொண்ட முதல் மனிதக் குரங்குகளின் ஒன்றான, 39 வயதான ஒராங்குட்டான் வகை குரங்கு ஒன்று, அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் மரணமடைந்துள்ளது.

சான்டெக் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ஒராங்குட்டான், டென்னசியில் உள்ள ஒரு மானுடவியாளருடன் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தபோது அவரின் அறையைச் சுத்தம் செய்யவும், புதிய கருவிகளை உருவாக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டதோடு, அருகில் உள்ள ஒரு துரித உணவகத்தின் வழியையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தது.

அது தன் கடைசி ஆண்டுகளை, அதற்கு இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கழித்தது.

பிறருடன் மிகவும் பிணைந்திருக்கும் தன்மை கொண்ட சான்டெக் இல்லாமல் போனது தங்களுக்கு ஒரு இழப்பு என்று மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறப்புக்கான காரணம் என்ன?

"வட அமெரிக்காவின் வயது முதிர்ந்த ஒராங்குட்டான் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று", என்று மிருகக்காட்சி சாலையின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அதன் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 35 வயதைக் கடந்தாலே ஒராங்குட்டான் குரங்குகள் முதிர்ந்தவையாக கருதப்படுகின்றன.

ஜார்ஜியாவில் உள்ள எர்க்ஸ் நேஷ்னல் பிரைமேட் ரிசர்ச் சென்டரில் (Yerkes National Primate Research Center) பிறந்த சான்டெக், டென்னசி பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் லின் மைல்ஸுடன் வசிக்க அனுப்பி வைக்கப்பட்டது.

'கல்லாரிக்குச் சென்ற மனிதக் குரங்கு' (The Ape Who Went to College) என்று சான்டெக் குறித்து 2014-ஆம் ஆண்டு ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக்கொண்ட மிகச் சில மனிதக் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று.

பரிச்சயம் இல்லாத நபர்களுடன் சைகை மொழியில் பேச வெட்கப்பட்ட சான்டெக், தங்களிடம் பேச சத்தம் எழுப்புதல் மற்றும் கைகளில் சைகை செய்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

"தன்னை நன்கு அறிந்தவர்களிடம் பேசுவதில் சிறப்பான வழிகளைக் கையாண்ட சான்டெக் ஒரு தனித்துவம் மிக்க ஆளுமை," என்று கூறியுள்ள அந்த மிருகக்காட்சி சாலையின் துணைத் தலைவர் ஹெலே மர்ஃபி, "சான்டெக் எங்களுடன் 20 ஆண்டுகள் வாழ்ந்தது எங்களுக்கு ஒரு பெருமிதம்," என்று கூறியுள்ளார்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

''என் காதல் கணவரின் மனது கோடிகளுக்குச் சமம்!" - 2000 கோடி சொத்தை காதலுக்காக துறந்த பெண்

 

காதலுக்கு சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் தெரியாது என்கிற கூற்றை நிரூபிக்கும் வகையில் தனக்குச் சொந்தமான 2000 கோடி ரூபாய் சொத்தை தூக்கி எறிந்துவிட்டு தன் காதலனை கரம் பிடித்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ. 

காதல் - ஏஞ்சலின்

மலேசியாவில் டாப் 50 பணக்காரர்களுள் ஒருவர் கோ கே பெங். பல்வேறு நட்சத்திர விடுதிகளுக்குச் சொந்தக்காரர் மற்றும் பங்கு வர்த்தகத்தில் இவருடைய கம்பெனியின் பங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவருடைய நான்காவது மகள்தான் ஏஞ்சலின். ரோஸி ஆன் ஃபயர் என்கிற பொட்டீக் வைத்திருக்கிறார் ஏஞ்சலின். இதிலென்ன பெரிய ஆச்சர்யம் என்பவர்களுக்கு... தன் கடையின் வருமானத்தில் பாதியை ரோட்டோரத்தில் இருக்கும் குழந்தைகளின் படிப்பு, ஆடை போன்றவற்றுக்காக செலவு செய்கிறார் ஏஞ்சலின். பணக்கார குடும்பத்தில் பிறந்தவருக்கான அடையாளத்தை எப்போதும் தன் நண்பர்களிடம் அவர் காட்டமாட்டார் என்பதுதான் அவருடைய ஸ்பெஷல்.

ஏஞ்சலின்

எளிமையான வாழ்க்கையை கடைபிடித்த ஏஞ்சலின் இங்கிலாந்தில் படித்தபோது தன்னுடைய கிளாஸ்மேட்டான ஐடிடிஹா பிரான்சிஸுடன் நட்பு ரீதியாக பழகியிருக்கிறார். அவருடைய எளிமையும், அன்பும் ஏஞ்சலினை ஈர்க்க காதலில் விழுந்திருக்கிறார். இருவரும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கரீபியன் தீவைச் சேர்ந்தவரான பிரான்சிஸ், டேட்டா சயின்டிஸ்டாக வேலை பார்க்கிறார். பேஷன் டிசைனரான ஏஞ்சலினுக்கு காதலரின் நடவடிக்கை அத்தனையும் பிடித்துப் போக தன் காதலைப் பற்றி தன் தந்தையுடன் முறையாக விவாதித்திருக்கிறார். ஆனால், பெரும் பணக்காரரான கோ பெங், தனக்கு வரப்போகும் மருமகன் சாதாரண வேலையில் இருப்பதைக் காரணம் காட்டி காதலுக்கு ரெட் சிக்னல் காட்டியிருக்கிறார். 

பெற்றோரின் பேச்சைக் கேட்டாகவிட்டால் தனக்கு வரப்போகும் கோடிக்கணக்கான சொத்தை இழக்க வேண்டியதிருக்கும் என்று ஏஞ்சலினுக்குத் தெரியும். அதையும் மீறி தன் காதலரை கைப்பிடித்திருக்கிறார் ஏஞ்சலின்.  

ஏஞ்சலின்

 

திருமண மெருகும், சந்தோஷமும் முகத்தில் குடிகொள்ள காதலருடன் தான் பயணிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, “என் தந்தையின் எண்ணம் தவறானது என்று நினைக்கிறேன். எனக்குப் பணம் முக்கியமில்லை. பணம் எதிர்மறையான எண்ணங்களை தான் உண்டாக்கும். பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். கோடிக்கணக்கான சொத்தை இழந்ததில் எனக்கு வருத்தமேதும் இல்லை. இனி என் சொத்தைப் பற்றி நான் நினைக்கப் போவதும் இல்லை. எங்கள் திருமணம் மிகக் குறைந்த செலவில் எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் பெம்ப்ரோக் கல்லூரியிலுள்ள தேவாலயத்தில் இனிதே நடைபெற்றது. இப்போது நானும் என் கணவரும் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்திருக்கிறோம். கோடிக்கணக்கான சொத்தைவிட என் காதலரின் மனம், அன்பு பல மடங்கு பெரியது. அவர் என்னோட இருக்கிறார். நான் அவரோடு  இருக்கிறேன். இதைவிட வேறென்ன வேண்டும். நாங்கள் இணைந்து வாழ்வதே பெரிது... பணமல்ல'' என்ற அவருடைய சென்டிமென்டான போஸ்ட் பல ஆயிரம் லைக்ஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, steht und Text

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரருமான ஹமில்டன் மசகட்சாவின் பிறந்தநாள்
Happy Birthday Hamilton Masakadza

  • தொடங்கியவர்

செல்ஃபி மோகம் கொண்டவர்களுக்காக புதிய செயலி!

 
செல்ஃபி மோகம் கொண்டவர்களுக்காக புதிய செயலி!
 

தற்காலத்தில் செல்ஃபி மோகம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில், செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை கனடாவைச் சேர்ந்த வோட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, “சிறந்த செல்ஃபிக்களை எடுப்பதற்கு இந்த செயலி கற்றுக்கொடுக்கும் என்கிறார்கள். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கெமராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது.

சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவும். ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்களின் முகங்கள் குறித்து 360 டிகிரி கோணத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம், பயனாளர்கள் மிகச்சிறந்த செல்ஃபிக்களை எடுக்க முடியும். செல்ஃபி எடுத்தபிறகு, அவற்றை எடிட் செய்யும் செயலிகளுக்கு மத்தியில், இந்த செயலி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். இந்த செயலி மூலம் நீங்கள் செல்ஃபி எடுக்கும்போது கமரா கோணம், முகத்தின் அளவு, ஒளி கிடைக்கும் திசை உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பெறலாம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறான சிறந்த அனுபவத்தைத் தரக்கூடிய இந்தச் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

வெள்ளத்தில் மிதந்த கார்... மீட்கப்பட்டவரின் திக்திக் நிமிடங்கள்!

 
 

வெள்ளம், flood

அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான டெக்சாஸ், கடந்த சில நாள்களாக வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அங்கு பெய்துவரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இதனால், டெக்சாஸ் மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ஒருவர் மீட்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெக்சாஸின், சான் ஆன்டோனியோ பகுதியில் தனது அலுவலகத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் வெள்ளத்தில் சிக்கினார். மழை நீரில் அவர் கார் பழுதாகி நின்றபோது நீரின் அளவு ஓர் அடியாக இருந்தது. சிறிது நேரத்திலேயே வெள்ளநீர் காரைச் சூழ்ந்தது. ஒருகட்டத்தில் தான் தப்பிப்பதற்காக காரின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துகொண்டார் அந்த நபர். கார் முழுவதும் தண்ணீரில் மூழ்கத் தொடங்க... சம்பவ இடத்துக்கு விரைந்தனர் மீட்புப் படையினர். காரின் மேல் சுமார் 45 நிமிடத்துக்கும் மேலாக உயிருக்குப் போராடிய அந்த நபரை மீட்பதற்கு எடுக்கப்பட்ட இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இறுதியாக, தீயணைப்பு வாகனத்தில் இணைக்கப்பட்ட நீளமான இரட்டை ஏணி, காரின் மேற்கூரை அருகே நிலை நிறுத்தப்பட்டது. அதன் உதவியால், வெள்ளத்தில் சிக்கிய அந்த நபர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.  

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
சர்வதேச ஆதிவாசிகள் தினம்...
 

image_e12e49396a.jpgimage_6e07def776.jpgimage_32ede57ec4.jpgimage_9d3ac82e55.jpgimage_7a5308f27a.jpgimage_c0fed8cbb4.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20300KBimage_d532853942.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20300KBimage_4bc966ae77.jpgimage_d06df0386a.jpgபாலித ஆரியவன்ச

சர்வதேச ஆதிவாசிகள் தினத்தையொட்டி பதுளை, மஹியங்கனையில் விசேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே எத்தோ தலைமையில், மஹியங்கனை, தமன கொடபகினியவிலுள்ள ஆதிவாசிகளின் கிராமத்திலேயே, இந்நிகழ்வு நடைபெற்றது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

இதுதான் ஓவியாவின் புது லுக்..!

 

புது லுக்கில் நடிகை ஓவியா

பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை நடிகை ஓவியா வெளியேறினார். இதையடுத்து, அவர் என்ன செய்கிறார், எங்கு இருக்கிறார்? என்ற பல கேள்விகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், ஓவியா தனது புது லுக்கை ரிவீல் செய்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தவரைக்கும் ஒவ்வொரு வாரமும் ஓவியா எவிக்‌ஷனுக்குத் தேர்வு செய்யப்பட்டாலும், ரசிகர்களின் ஏகபோக ஆதரவால், தொடர்ந்து காப்பாற்றப்பட்டார். அவர், பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களால் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து மருத்தவரிடம் ஆலோசனை பெற்றார். இதையடுத்து, அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக் பாஸில் பங்கேற்றதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் ஓவியாவுக்குக் கிடைத்தனர். இந்நிலையில், தனது புது லுக்கை வெளியிட்டுள்ளார் ஓவியா.

 

ஹாலிவுட் நடிகை நடாலி டார்மர் முதல், நம்மூர் அக்ஷ்ரா ஹாசன் வரை பலர் இப்போது ஓவியா வைத்திருக்கும் இந்த ஹேர்ஸ்டைலை  வைத்து இருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன் சென்னை, சிட்டி சென்டரில் காணப்பட்ட ஓவியா, அதற்குள் வேறொரு கெட்டப்பில் காட்சியளிக்க ஆரம்பித்திருக்கிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தமிழர்கள் வாழ்ந்து வரும் அதிசய தீவு

 

தமிழர்கள் பிரித்தானியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள் என நாம் அறிவோம்.

ஆனால், நம்மில் பலரும் அறியாத கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் மொரிசியஸ் அருகே ரியூனியன் என்ற தீவில் இன்றும் பல லட்சம் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த தீவின் மொத்த பரப்பளவே 2500 கி.மீட்டர் சதுர அடிகள் தான்.

2012-ன் மக்கள் தொகை கணக்களவு படி இந்த தீவில் ஏறத்தாழ 8.4 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சம் பேர் தமிழர்கள் என கூறப்படுகிறது.

 

பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இத்தீவில் மக்கள் தற்போது மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

ஆனால் 180 ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரி பிரான்ஸுக்கு அடிமையாக இருந்தது. அப்போது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியிலிருந்து ஏஜண்டுகள் மூலம் பலர் ரியூனியன் தீவுக்கு கரும்பு தோட்ட பணியில் ஈடுபட அழைத்து செல்லப்பட்டனர்.

இங்கு ஆரம்ப காலத்தில் அடிமைகளாக இருந்த தமிழர்கள் பிறகு பிரான்ஸ் குடியுரிமை கிடைத்த பின்னர் கவுரவமாக நடத்தப்பட்டனர்.

இங்கு வாழ்ந்து வரும் தமிழர்கள் தைப்பூசம், பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

http://news.lankasri.com/

  • தொடங்கியவர்

ரொமேனிய நகரங்களுக்கு உணவைத்தேடி வரும் கரடிகள்

  • தொடங்கியவர்

உருகாத ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்

 


உருகாத ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்
 

உருகாத ஐஸ்கிரீமை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பொதுவாக ஐஸ்கிரீமை குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும்போதே உருகி வழிய ஆரம்பித்துவிடும்.

இதனால், ஐஸ்கிரீமை வேகமாக சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.

இந்த சிக்கலில் இருந்து விடுபடும் விதமாக, ஜப்பானில் கனா ஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருகாத ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்துள்ளனர்.
அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப 3 மணி நேரம் ஆனாலும் இந்த ஐஸ்கிரீம் உருகாது.

இந்த தகவலை ‘தி டைம்ஸ்’ பத்திரிகை வௌியிட்டுள்ளது.

ஐஸ்கிரீம் மீது முடி உலர்த்தும் கருவி மூலம் வெப்பமான காற்றை விஞ்ஞானிகள் 5 நிமிடங்கள் வீசச் செய்தும் ஐஸ்கிரீம் உருகவில்லை.

பாலிபினால் என்ற திரவத்தை விஞ்ஞானிகள் ஐஸ்கிரீமில் ஊசி மூலம் செலுத்துகின்றனர்.

அந்த திரவம்தான் ஐஸ்கிரீமை உருகாமல் தடுக்கிறது என்று கனா ஜவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஐஸ்கிரீம் சாக்லெட், வெனிலா, ஸ்ட்ராபெர்ரி ஆகிய நறும ணங்களில் வருகிறது.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

அரிசோனாவில் உலகின் மிகப்பெரிய ரோஜா செடி

 


அரிசோனாவில் உலகின் மிகப்பெரிய ரோஜா செடி
 

உலகிலேயே மிகப்பெரிய ரோஜா செடி அரிசோனாவில் உள்ள டம்ப்ஸ்டோனில் இருக்கிறது.

இந்த ரோஜா செடியின் அடிப்பாகம் 12 அடி அகலம். 9 ஆயிரம் சதுர அடி தூரத்திற்குக் கிளை பரப்பியிருக்கிறது.

1885 ஆம் ஆண்டில் நடப்பட்ட இந்தச் செடிக்கு 132 வயது என்றாலும், இன்றும் வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கிறது.

1884 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்றி கீயும் அவருடைய மனைவி மேரியும் அமெரிக்கா வந்தனர்.

அழகான பூக்கள் நிறைந்த தங்களின் ஸ்காட்லாந்து தோட்டத்தை நினைத்து ஏங்கினார் மேரி.

ஸ்காட்லாந்துக்குக் கடிதம் எழுதினார். ஒரு பெட்டி நிறைய செடிகளும் விதைகளும் அரிசோனாவுக்கு வந்து சேர்ந்தன.

மேரியின் பக்கத்து வீட்டுக்காரர் அமெலியா ஆடம்சனுக்கும் நட்புக்காக ஒரு ரோஜா செடியைப் பரிசாக அளித்தார் மேரி.

இருவரும் செடிகளைத் தங்கள் தோட்டத்தில் நட்டனர்.

அரிசோனா பாலைவனப் பிரதேசம் என்பதால் அங்கே ரோஜா போன்ற செடிகள் வளர வாய்ப்பில்லை என்று அதுவரை கருதப்பட்டு வந்தது.

ஆனால், ரோஜா செடி செழித்து வளர்ந்ததோடு மட்டுமின்றி, உலகின் மிகப் பெரிய ரோஜா செடி என்ற பெயரையும் பெற்றுவிட்டது.

1920 ஆம் ஆண்டு அந்த வீட்டிற்கு ஜேம்ஸும் எதெல் மசியாவும் குடிவந்தனர். அப்போதே ரோஜா மிகப் பெரிய செடியாகக் கிளை பரப்பியிருந்தது.

செடியின் வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் இந்தத் தம்பதியர், உலோகக் கம்பிகளை ஆங்காங்கே வைத்தனர். இதற்குப் பிறகு செடி மேலும் பெரிதாக வளர ஆரம்பித்தது.

1993 ஆம் ஆண்டு ஜான் ஹிக்ஸ், ‘உலகின் மிகப் பெரிய ரோஜா மரம்’ என்று குறிப்பிட்டு, இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று அறிவித்தார்.

1937 ஆம் ஆண்டு ராபர் ரிப்ளே, ரோஜாவைப் பார்ப்பதற்காக சென்றார். பிரமித்துப் போனார். அவர் மூலம் ‘உலகின் மிகப் பெரிய ரோஜா செடி’ என்ற கின்னஸ் சாதனையும் எளிதாகக் கிடைத்துவிட்டது.

இன்றுவரை இந்த சாதனையை வேறு எந்த ரோஜா செடியும் முறியடிக்கவில்லை.

ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் வரை ஆறு வாரங்கள் ரோஜாக்கள் பூக்கின்றன.

இந்த நிகழ்வை ஒரு விழாவாக நடத்தி வருகிறார்கள்.

 

 

546970c93e74f315f7224426231f2587

6930145983_191b532823_b

World's Largest Rose Bush Tombstone

http://newsfirst.lk

  • தொடங்கியவர்
கனிவு இல்லாவிடின், அது காதலே அல்ல!
 

image_de64246188.jpg“என் காதலர் ரொம்பவும் நல்லவர்; மென்மையானவர். அவரது பலம், ஆளுமை எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல, அவரின் பலவீனமும் என்னைச் சந்தோசப்படுத்தும். ஏனெனில், இந்தப் பலவீனம், குழந்தைத்தனமானது. இதில் களங்கம் இல்லை; இயல்பானது.”

ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து, புரிந்து கொண்டால், காதல் வாழ்வில் மேடு, பள்ளம் என எதுவுமே இல்லை. ஒருவரை ஒருவர் தாங்கும்போது, சுமைகள் கூடச் சுகமானதுதான். கனிவு இல்லாவிடின், அது காதலே அல்ல!

சர்வாதிகாரிகளையும் காதல் விட்டு வைப்பதில்லை. எனக்கு, நீதான் வேண்டும் என்று அவர்களையே சொல்ல வைத்த கதைகள், பல உண்டு. இரும்பையும் பஞ்சாக்கும். அதே சமயம், அச்சம் கொண்டவர்களையும் வீரமாக்கும் சஞ்சீவி. இது ஒரு போதையும் அல்ல. காதல், வாழ்வைச் செழிக்க வைக்கும் புனித யாத்திரை.

அது சரி! இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் நான், இளம் பெண் அல்ல; எங்களுக்கு பேரன், பேத்திகள் உண்டு. காதலில் ஏது முதுமை? முன்னர் இருந்த காதலைவிட இப்போது பலமடங்கு.  

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஓகஸ்ட் – 10

 

1519 : போர்த்துக்கேய கடலோடி ஆய்வாளர் மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர ஸ்பெய்னின் செவில் நகரில் இருந்து புறப்பட்டன.


1675 : ரோயல் கிறீன்விச் விண்வெளி கண்காணிப்பகத்துக்கான அடிக்கல் லண்டனில் நடப்பட்டது.


1680 : அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் ஸ்பானிய குடியேறிகளுக்கு எதிராக புவெப்லோக்களின் கிளர்ச்சி ஆரம்பமானது.


varalru1776 : அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடன செய்தி லண்டனை சென்றடைந்தது.


1792 : பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.


1809 : குவிட்டோ (தற்போதய ஈக்குவாடோரின் தலைநகர்) பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக பிரகடனம் செய்தது.


1904 : ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.


1913 :  பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொன்டெனேகுரோ, கிறீஸ் ஆகிய நாடுகள் புக்காரெஸ்ட் நகரில் சமாதான உடன்பாட்டுக்கு இணங்கின.


 1944 : இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.


1990 : மகெலன் விண்கலம் வெள்ளி கிரகத்தை  அடைந்தது.


2000 : உலக மக்கள் தொகை 6 கோடியை கடந்தது.


2001: அங்கோலாவில் பயணிகள் ரயில் ஒன்றின் மீதான தாக்குதலில் 252 பேர் உயிரிழந்தனர். 


2003 : ரஷ்ய விண்வெளி வீரர் யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் புரிந்த முதலாவது மனிதரானார். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்த மலென்சேன்கோவுக்கும் அமெரிக்காவில் இருந்த திமித்ரிவாவுக்கும் இடையில் திருமணம் நடைபெற்றது.


2012 : தென் ஆபிரிக்காவின் பேர் நகருக்கு அருகில் சுரங்கத் தொழிலாளர்களின் பாரிய வேலைநிறுத்தம் ஆரம்பமாகியது.


2014 : ஈரானின் தெஹ்ரான் நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால், அதிலிருந்த 48 பேரில் 39 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

"இது ஹாலுசினேஷன் அல்ல... இன்ஸ்பிரேஷன்!" ட்ரம்ப்பின் பிக்பாஸ் சீக்ரெட் #MorningMotivation

 

ட்ரம்ப்

நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாக கூறிக்கொண்டிருப்பதுதான் ஹாலுசினேஷன்...ஆனால் நடந்த சில விஷயங்களில் இருந்து வெறும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் அது இன்ஸ்பிரேஷன். ஒரு நாளில் ஒரு மனிதர் வெறும் பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த  மனிதர் எப்படிப்பட்ட ஒரு நிலையில் இருப்பார் என்று நினைத்துப்பார்க்க தோன்றுகிறதா? அவர் அமெரிக்க அதிபராக இருக்கிறார். ஆம். பல கிண்டலுக்கு ஆளாகும் டொனால்ட் ட்ரம்ப்பின் தினசரி நடவடிக்கைகள் கட்டாயம் ஏதோ ஒரு நேரத்தில் நம் வாழ்க்கைக்குத் தேவைப்படும்.

அதிபர் ட்ரம்புக்கு அவரது வார் ரூம் அமைப்பு மூலம் தினசரி காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் 20 முதல் 25 பக்கங்களை கொண்ட ஒரு ஃபைல் கொடுக்கப்படும் அதில் ட்ரம்ப்பை பற்றிய பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே இருக்கும்.

முன்னதாக தினசரி ஆறு மணிக்குத் வார் ரூம் தனது வேலையை துவங்கும்.  ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பதிவுகளை ஒருங்கிணைக்கும். இதில், வெள்ளை மாளிகை இமெயில்கள், ட்விட்டுகள், செய்திகள் மற்றும் இன்டர்வியூ ட்ரான்ஸ்கிரிப்டுகள் அடங்கும்.

இதனைக் கொண்டு ஃபைல்களைத் தயாரித்து காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் ஓர் அறிக்கையை வழங்கும். இந்த இரண்டு அறிக்கைகளும் அதிபரின் பார்வைக்குச் செல்லும்.  முன்னாள் தலைமை அதிகாரி ரெயின்ஸ் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஸ்பைசர் இருவரும் இந்தத் தகவல்களைக் கொண்டு 20 - 25 பக்க அறிக்கையைத் தயார் செய்வார்கள். அதனை, காலை 9:30 மணிக்கு ட்ரம்பிடம் அளிப்பார்கள். இதில், வெறும் பாசிட்டிவ் செய்திகளும், ட்ரம்பின் புகழ்பாடும் செய்திகளும் மட்டுமே இடம்பெறும். நெகட்டிவ் விஷயங்கள் தவிர்க்கப்படுமாம். ட்ரம்பைக் கெத்தாகக் காட்டும் புகைப்படங்கள், டி.வி ஷோக்கள் மட்டுமே இதில் இடம்பெறும்.

ட்ரம்ப்

தன்னைப்பற்றிய நெகட்டிவ் செய்திகளை தவிர்த்துவிட்டு எப்படி முன்னேற முடியும் என்றாலும். ஒருவர் தனது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போதும் சரி, தோல்வியின் பிடியில் சிக்கித் தவிக்கும் போதும் சரி. நெகட்டிவ் விஷயங்கள் நம்மை மேலும் கீழே அழுத்தும். அந்த நேரத்தில் பாசிட்டிவ் விஷயங்களை தவிர வேறு எதையுமே நாம் கவனிக்கவில்லை எனில் நாம் தோல்வியிலிருந்து எளிதில் மீள முடியும்.

காலையில் ஒரு வேலையை நெகட்டிவ் மனநிலையோடு துவங்கிப் பாருங்கள் அன்றைய நாளில் அந்த வேலை கண்டிப்பாக முடியாது. அப்படியே முடிந்திருந்தாலும் அது சிறப்பானதாக இருந்திருக்காது. ஆனால் நம் மீது நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் பாசிட்டிவாக ஒருநாளை துவங்கி பாருங்கள் அன்றைய நாளின் வேலை சுலபமாக முடியும்.

 

ட்ரம்ப் மீதான விமர்சனம், மீம்ஸ்கள் இவற்றை ட்ரம்ப் கவனிப்பதில்லை. இதையெல்லாம் கவனித்தால் அவரால் அன்றைய நாளை அதிபராக சிறப்பாக துவங்க முடியாது என அவர் நம்புகிறார். இது அவருக்கு நல்லதோ, கெட்டதோ... தோல்வியின் பிடியில் சிக்கி இருக்கும், அல்லது வெற்றிக்காக போராடும் ஒருவர் ட்ரம்பிடம் இருந்து இந்த ஒரு விஷயத்தை பின்பற்ற வேண்டும். உங்களது பாசிட்டிவை மட்டும் 100 சதவிகிதம் பின் தொடருங்கள். நெகட்டிவ் எண்ணங்களை தவிருங்கள்.  அப்படி  பாசிடிவ் எண்ணங்களோடு இருந்தாலே போதும், அமெரிக்க ஜனாதிபதி ஆகிறோமோ இல்லையோ ஆஃபீஸில் அதிபதி ஆகலாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிம் கார்டுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கு பாஸ்! #HowItWorks

 
 

'மனிதர்களின் நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு, மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதே போதுமானதாக இருக்கிறது' என்பது ட்விட்டர் மொழி. பிரியமானவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும், பிடிக்காதவர்களிடம் இருந்து விலகியிருக்கவும் தற்போதெல்லாம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனே நமக்குப் போதுமானதாக இருக்கிறது. போனில் வரும் சில அழைப்புகள் நம்மை மகிழ்ச்சியுறச் செய்யும்; சில அழைப்புகள் ஆத்திரமூட்டும்; சில அழைப்புகள் அன்பை பரிமாறும்; சில அழைப்புகள் பயத்தை உண்டாக்கும். இப்படி இத்தனைவிதமான உணர்ச்சிகளை செல்போனுக்குள் இருந்து, நமக்கு கடத்தும் சிம் கார்டுகள் எப்படி இயங்குகின்றன தெரியுமா?

SIM Card

Subscriber Identification Module (SIM) என்பதன் சுருக்கம் தான் சிம்.  சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு என சிம் கார்டுக்கு தமிழ் அகராதி அர்த்தம் சொல்கிறது. தற்போது மினி, மைக்ரோ, நானோ என்றெல்லாம் பல சைஸ்களில் மொபைல் போனில் உள்ள சிம் ஸ்லாட்டுக்கு ஏற்ப இவை பயன்படுத்தப்படுகின்றன. 1991-ம் ஆண்டில் முனிச் நகரில் இயங்கும் Giesecke & Devrient என்ற நிறுவனம்தான் முதன்முதலாக சிம் கார்டை உருவாக்கியது. அப்போது கிரெடிட் கார்டு போன்று இருந்த சிம் கார்டின் அளவு, அதன்பின் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது விரல் நுனி அளவுக்கு சுருங்கிவிட்டது. இதனால் மற்ற உதிரிபாகங்களுக்கான இடவசதியும் ஏற்பட்டது.

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம் போன்களுக்குத்தான் பொதுவாக சிம்கள் தேவைப்படுகின்றன. சர்வதேச கார்டு உற்பத்தியாளர்கள் அமைப்பின் தகவலின்படி, இன்றைய தேதியில் 700 கோடிக்கும் அதிகமான டிவைஸ்கள், செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு மட்டும் சுமார் 540 கோடி சிம்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன.

Various types of SIM Cards - சிம் கார்டு

சிம் கார்டின் பின்புறம் சிறிய சிப் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். இந்த சிப்பில் தான் நெட்வொர்க் தொடர்பான தகவலும், சந்தாதாரரின் விவரங்களும் சேமிக்கப்படும். சிம் கார்டு இல்லாமல் ஜி.எஸ்.எம் போனால் மொபைல் நெட்வொர்க்குடன் தொடர்பு கொள்ளமுடியாது. மனிதனின் கைரேகை போல இந்த சர்வதேச தனித்தன்மை வாய்ந்த எண்ணானது ஒவ்வொரு சிம் கார்டுக்கும் வேறுபடும். இதன்மூலம், ஒவ்வொரு சிம் கார்டையும் உலகின் எந்த மூலையிலும் தனியாக இனம் காண முடியும். அதேபோல, ஒவ்வொரு சிம் கார்டிலும் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய வகையில், Authentication Key, கார்டு லாக் ஆனால் அதை அன்லாக் செய்யக்கூடிய PUK எண் போன்ற விவரங்கள் இருக்கும். இவை தவிர்த்து, உள்ளூர் நெட்வொர்க் பற்றிய தற்காலிகத் தகவல், குறுஞ்செய்திகள் மற்றும் தொடர்பு எண்களையும் கூட சேமித்துக்கொள்ளும் வகையில் தற்போது சிம் கார்டுகள் கிடைக்கின்றன.

SIM

சிம் கார்டை மொபைல் போனில் செலுத்தியதும், அதில் உள்ள சர்வதேச தனித்தன்மை வாய்ந்த எண்ணையும் (IMSI),  Authentication Key-யையும் மொபைல் போன், நெட்வொர்க்கை அக்சஸ் செய்வதற்காக அருகே உள்ள டவருக்கு ரெக்வெஸ்ட் ஒன்றை அனுப்பும். இரண்டையும் நெட்வொர்க் பரிசோதித்து, என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவலை சிம் கார்டுக்கு சரிபார்க்க அனுப்பும். இத்தகவலை சிம் கார்டு சரியாக டிகிரிப்ட் செய்த பின்னர்தான் நெட்வொர்க்கிடமிருந்து வயர்லெஸ் சிக்னல் கிடைக்கும். பொதுவாக புதிதாக சிம் கார்டை மொபைல் போனில் செலுத்தியதும், இதனால்தான் சிக்னல் கிடைக்க சிறிது தாமதமாகிறது (சிக்னல் கிடைக்க எப்போதுமே கொஞ்சம் காத்திருக்கனும் பாஸ்!). ஒரு மொபைலிலிருந்து மற்றொரு மொபைலுக்கு மாற்றும்போதும், இதே வேலைதான் நடைபெறுகிறது. e-Sim (Embedded SIM) என்றழைக்கப்படும் SIM-கள் தான் எதிர்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. டிவைஸிலேயே பொருத்தப்பட்டு வரும் இதை, சிம் கார்டைப்போல மாற்றமுடியாது. ஆனால், மொபைல் மேலும் மெலிதாக மாற இந்த முறை உதவும் எனக்கூறப்படுகிறது.

 

கம்மி விலைக்கு... ஏன் சிலநேரத்துல இலவசமாகவே கிடைக்குற சிம் கார்டுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கு பாஸ்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

’மாயவன்’ படத்தின் ட்ரெய்லர்..!

 
 

மாயவன்

தயாரிப்பாளராக இருந்த சி.வி.குமார் இயக்குநர் அவதாரம் எடுத்து ’மாயவன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், ஜாக்கி ஷெராப், லாவண்யா, கே.எஸ்.ரவிகுமார், டேனியல் பாலாஜி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். 

 

 

 
  • தொடங்கியவர்

சோம்பேறிகளைத்தான் பில் கேட்ஸ் தேடுவார்... ஏன் தெரியுமா? #WorldLazyDay

 

சோம்பேறி

"கடினமான வேலைகளை செய்து முடிப்பதற்கு ஒரு சோம்பலான மனிதனையே நான் தேடுவேன். ஏனென்றால், அவனால் மட்டுமே அந்த வேலையை செய்துமுடிப்பதற்கு எளிமையான வழியைக் கண்டுபிடிக்க முடியும்” - இப்படிச் சொல்வது உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸ்.

8.30க்கு அம்மா வந்து, “டேய் மணி பாத்தியா?  9 மணிக்கு போகணும் என்றதும்” 30 நிமிடங்களிலேயே எல்லாவற்றையும் முடித்துவிட்டு கல்லூரியிலோ அலுவலகத்திலோ ஆஜர் ஆகிறவர்கள்தான் நம்மில் அதிகம். தன்னை யாராவது வந்து எழுப்பும் வரையிலும் காத்திருக்கும் தன்மை, தனக்கான வேலைகளைக்கூட பிறர் செய்துமுடிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். இவர்களைத்தான் உலகம் சோம்பேறிகள் என்கிறது.

அனைத்துக்கும் ஒரு தினம் வைத்து கொண்டாடும் இந்த உலகம், சோம்பலை மட்டுமா விட்டு வைக்கும்? உலக சோம்பல் தினம் ஆகஸ்ட் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சோம்பேறிகளுக்கான தினம் என்பதால் இதையும் அவர்கள் ஆர்பாட்டமாய் கொண்டாடுவதில்லை என்பது வேறு விஷயம்.

சோம்பல்  என்பது என்ன?         

"சோறு கண்ட இடம் சொர்க்கம்
திண்ண கண்ட இடம் தூக்கம்" 

என்பது பழமொழி. சோம்பேறிகள் பொதுவாக சொகுசு வாழ்க்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் எந்தச் சிந்தனையும் இல்லாமல், தூங்குவதிலேயே பாதி நேரத்தைக் கழிப்பார்கள். கனவு காண்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. சோம்பேறித்தனம் என்பது நம் ஆற்றலை மழுங்கடிக்க செய்யும் செயல் என விளக்கம் சொல்கிறார்கள்.
    
வாரம் முழுவதும் வேலை செய்யும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையில் எந்த வேலையும் செய்யாமல் உண்பது, உறங்குவது என வீட்டிலேயே இருந்துவிடுவார். அதையே  ஒருவர் தினமும் செய்தால் "தண்டச்சோறு ", "சோம்பேறி" என்ற பெயர் கிடைக்கும். 
       
ஓடிக்கொண்டிருக்கும் நீர் ஓரிடத்தில் சிறிது நாள்கள் தேங்கிவிட்டால் பாசி பிடித்துவிடும். ஓடும் கடிகாரம் வெகு நாள்களாக வேலை செய்யாவிட்டால் அதனால் பலன் என்ன? ஒரு வேலையை உங்களிடம் சொல்லும்போது, எதுவும் செய்யாமல் எனக்கு அசதியாக இருக்கிறது? எனக்கு இதையெல்லாம் செய்யத் தெரியாது? உடலில் உற்சாகமே இல்லை? என் உடலில் செய்வதற்குரிய சக்தி இல்லை என்று கூறுபவர்களா நீங்கள்? இதுவே வேலை செய்யாமல் இருப்பதற்கு சோம்பல்காரர்கள் சொல்லும் சாக்கு.

lazy day

சோம்பலை போக்க சில எளிய வழிகள்:

சோம்பல் என்பது ஒரு வியாதியல்ல. சோம்பலை,  சில எளிய வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் மாற்றிவிடலாம். 
        
1. உடற்பயிற்சி:  தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி  செய்வது மிகவும் நல்லது. இது உடலை சுறுசுறுப்பாக மாற்ற உதவும். (இதெல்லாம் ஒரு வழியாங்க எனக் கேட்க வேண்டாம். சோம்பலை விரட்ட நினைத்தால் செய்துதான் ஆக வேண்டும்)

2.ஊக்கம்:  சோம்பலில் இருந்து விடுபட ஊக்கமளிப்பது போன்ற வசனங்களை சொல்லிக்கொள்ளுங்கள். Never... Ever... give up.... 

3. ஒரே வேலையை செய்துகொண்டிருப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும். எனவே, பிடித்தமான விஷயங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.

4.உணவு முறையை மாற்றிக்கொள்ளுங்கள். அதிகப்படியான கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

 

சோம்பேறிகள் என்று அழைக்கப்படுபவர்கள் உண்மையில் சோம்பேறிகள் அல்ல, அவர்கள் சோம்பல் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.