Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நான் நலமுடன் உள்ளேன், சமூக வலைதளங்களில் என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் - பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..
#SPBalasubrahmanyam #Singer

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
‘சின்ன ரொட்டி வாங்கும்போதும், மறைமுக வரி’
 

image_6a6e54a7d3.jpgசெய்கின்ற தர்மத்தை பிறர் அறிய வேண்டும் எனக் கருதுவது பூரணமானது அல்ல. 

அரசாங்கத்தின் பணத்தில் மலசல கூடத்தைக்கட்டி, அதன் வாயிலில் தங்களது குடும்பப் படங்களை போட்டு, விளம்பரம் தேடும், அரசியல் தலைவர்களைக் கொண்டது எமது நாடு. 

மிகப்பெரும் மக்கள் நலத்திட்டங்களை எந்தவித ஆடம்பரமும் இன்றி, மேலைத்தேய நாடுகளில் உள்ள தலைவர்கள் செய்து வருகின்றார்கள். மக்கள் சும்மா எதையும் கேட்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே வரி வழங்கும் வள்ளல்கள்.  

ஒரு சின்ன ரொட்டி வாங்கும்போதும், மறைமுக வரிமூலம் பறிக்கப்படுவது மக்களின் பணம்தானே? இப்படியிருக்கப் பெரிய திட்டங்களைச் செய்யாமல் முடக்கிவிட்டு, சாதாரண அற்ப விடயங்களையே சொல்லிக் காட்டுவது, என்ன நியாயம் சொல்லுங்கள். அரசியல் வாதிகள் பலருக்கு வெக்கமும் இல்லை, ரோசமும் இல்லை, மக்கள் பற்றிய கவலையும் இல்லை.  

  • தொடங்கியவர்

கூகுள் தொடங்கப்பட்ட நாள் (செப்.7, 1998)

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயரில் கூகுள் தொடங்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கூகுள்.காம் என பதிவு செய்யப்பட்டது. 1998 செப்டம்பர் 15-ம் நாள் கூகுள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.

 
 
 
 
கூகுள் தொடங்கப்பட்ட நாள் (செப்.7, 1998)
 
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயரில் கூகுள் தொடங்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கூகுள்.காம் என பதிவு செய்யப்பட்டது. 1998 செப்டம்பர் 15-ம் நாள் கூகுள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் கூகுள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத்தளமாக மாறியுள்ளது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

“ ஐ.டி கணினியிலிருந்து குதித்து வயல்வெளிக்குள் புகுந்தேன்!” - இயற்கை விவசாயத்தில் அசத்தும் அர்ச்சனா

 
 

போவோமா ஊர்கோலம்...
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்... பாடும் கானம் நூறும்... 
காலம் யாவும் பேரின்பம்... காணும் நேரம் ஆனந்தம்....   

சின்னத்தம்பி குஷ்பு வரப்பு மேட்டிலும் வயல்காட்டிலும் துள்ளித்திரிந்து பாடும் இந்தப் பாடல் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ஆல்டைம் ஃபேவரைட். சென்னையில் கார்ப்பரேட் நிறுவனத்தின் ஏ.சி அறையில் அமர்ந்து பணிபுரியும் பலருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது கற்பனையில் கிராமத்து வாழ்க்கைக்குப் பறந்து போய்விடுவார்கள். ஆனால், அர்ச்சனாவோ நிஜத்திலேயே கை நிறைய வருமானத்தோடு கூடிய ஐ.டி வேலையை உதறித்தள்ளிவிட்டு விவசாயத்தின் பக்கம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். 

அர்ச்சனா

“சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில பி.இ ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிச்சவ நான். பள்ளிக்காலத்திலேயே எனக்கு கம்ப்யூட்டர்னா அலர்ஜி. புதுசா ஏதாச்சும் படிக்கணும் அதே நேரத்துல பெற்றோர்களோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி பி.இ படிக்கணும்ங்கிற கட்டாயம் இருந்துச்சு. அந்த நேரத்துலதான் அண்ணா யுனிவர்சிட்டியில பி.இ ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிப்பை அறிமுகம் செய்தாங்க. உடனே அதுல போய் சேர்ந்தேன். காலேஜ் படிக்கும்போதே என் நண்பர்களோடு சேர்ந்து கிராமப்புறங்கள்ல ஒரு புராஜெக்ட் பண்ணிட்டு இருந்தோம். என் கணவர் ஸ்டாலின் என் வகுப்புத் தோழன்தான். நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர் சொந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கேயே என்.ஜி.ஓ ஒன்றை ஆரம்பிச்சு ஒரு வருஷம் விருதுநகர்லயே வேலைவாய்ப்பை உருவாக்கத் தொடங்கினோம். 

பள்ளி மாணவர்கள்

அப்பறம் காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம். திருமணத்திற்குப் பிறகு டி.சி.எஸ்ஸில் வேலை. ரெண்டு வருஷம் அக்ரிமென்ட் என்பதால் பல்லைக் கடித்துக்கொண்டு வேலை பார்த்தேன். இதுவும் பெற்றோர்களுக்காதான். டி.சி.எஸ்ல இருந்து வெளியேறி நேரா விருதுநகர் போயிட்டேன். தொடர்ந்து 2 வருஷம் அங்குள்ள தொழில் முனைவோர்களை எல்லாம் நேரில் கண்டறிந்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெருக்கிக்கொடுத்தோம். அதோடு, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, ஊரணிகளை ஏற்படுத்துவது போன்ற பல வேலைகளைச் செய்தோம். விருதுநகரில் இருந்தாலும் கற்றுக்கொள்வதற்கும், என்னுடைய தொடர்புகளை பெருக்கிக் கொள்வதற்கும் சென்னைதான் வசதியாக இருக்கும் என்பதால் 2015 ல் சென்னை வந்தேன். சுற்றுச்சூழல் மீது ஆர்வம் உள்ளவர்கள், அதை மீட்கப் போராடிக் கொண்டிருப்பவர்களை சென்னைதான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது” 

குழந்தைகள்


என்று சொல்லும் அர்ச்சனா தன் மாமனார் விருதுநகரில் சொந்தமாக வீடு கட்ட ஆசைப்பட்டபோது அதை எகோ ஃபிரெண்ட்லியாக கட்ட வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறார்.  மழை நீரானது வீட்டின் உபயோகத்திற்கே பயன்படுமாறும் வீட்டினுள் கிச்சன் கார்டன், மாடித் தோட்டம் போன்றவை இருக்குமாறும் பார்த்துப் பார்த்து அந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். வீட்டிற்குத் தேவையான 50 சதவீத காய் வகைகளை வீட்டிலுள்ளவர்களே உற்பத்தி செய்திருக்கிறார்கள். அப்படி வீட்டுத் தோட்டத்தில் தினமும் விளையும் காய்கறிகளின் புகைப்படங்களை அர்ச்சனா தினமும் பேஸ்புக்கில் அப்லோடு செய்ய, அவருடைய ஐடியா 'வாவ்' என்று புகழப்பட்டிருக்கிறது. சென்னையிலுள்ள நண்பர்கள் பலரும் ஆச்சரியத்தோடு அர்ச்சனாவிடம் வீட்டுத்தோட்டம் அமைப்பது பற்றி கேட்க, அதையே ஏன் பிசினஸாக ஆரம்பிக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. 

'பேஸ்புக்தான் எனக்கு பிசினஸ் பண்றதுக்கான ஐடியாவை கொடுத்தது. உடனே 'மை ஹார்வெஸ்ட்' என்ற பெயரில் மாடித்தோட்டம் அமைப்பது, விசேஷ வீடுகளில் கீரைச் செடிகளை கிப்ட்ஸாக தயார் செய்து கொடுப்பது, பள்ளிகளில் கார்டன் அமைப்பது போன்ற பல வேலைகளை முன்னெடுத்தேன். என்னுடைய ஆசையைப் புரிந்து கொண்டு என் முயற்சிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தார் என் கணவர். இப்படிதான் கணினியிலிருந்து குதித்து வயல் வெளிக்கு வந்தேன்.  இப்போது நான், என் கணவர், அவருடைய அண்ணன் மூன்று பேரும் சேர்ந்து வெற்றிகரமாக இதை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்” என்கிற அர்ச்சனா மை ஹார்வெஸ்ட் மூலமாக தாங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்கிறார். 

மாடித்தோட்டம்

“மை ஹார்வெஸ்ட் மூலமாக முதலில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகள், பஞ்சகாவ்யா தயாரிப்பதற்கான முறைகள், கிச்சனில் வேஸ்ட் ஆகும் பொருள்களை கம்போஸ்ட் செய்வதற்குமான பயிற்சிகளை வீட்டிற்கே போய் சொல்லிக்கொடுக்கிறோம். அதோடு, அன்றாடம் வாட்ஸ் அப் குரூப் மூலமாக உரமிடும் முறை, அறுவடைக்கான சந்தேகங்கள் போன்றவைகளை அப்டேட் செய்கிறோம். 

இரண்டாவதாக, இந்தியாவில் 2 ல் ஒரு பெண்களுக்கு ரத்தசோகை இருப்பதாகவும் அதற்கு கீரைகளை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். அதற்காக கீரைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த கீரை விதைகளோடு கூடிய மை ஹார்வெஸ்ட் பாக்ஸை அறிமுகப்படுத்தினோம். திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்களில் இந்த கிப்ட் பாக்ஸை கொடுத்து வந்திருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தோடு கூடிய உடலநலத்தை பரிசாகக் கொடுத்து அசத்தலாம்.  

இயற்கை விவசாயம்

 

மூன்றாவதாக, பள்ளிகளில் ஆரோக்கிய உணவு பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும் விவசாயத்தில் நம் எல்லோருக்கும் தொடர்பு உள்ளது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தவும் அவர்கள் மூலமே கார்டனை உருவாக்க ஆரம்பித்தோம். அரசுப் பள்ளிகளிலும் ரோட்டரி கிளப் போன்ற பல அமைப்புகளின் ஸ்பான்ஸர் மூலமாக இதைக் கொண்டு செல்கிறோம். மூன்று வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தைப் பற்றிய எந்தப் புரிதலுமே இல்லாத நான் இன்றைக்கு ஆயிரக்கணக்கானவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். நாம் சாப்பிடுற உணவு நம்ம பக்கத்துல இருந்து கிடைக்கணும். அதிலும் நம்ம கண்ணுக்கு முன்னே விளையுற காய்கறிகளை சாப்பிடுறதுக்கு கொடுத்து வைச்சிருக்கணும் இல்லையா. இதைத்தான் நான் எல்லோர்கிட்டயும் சொல்லிட்டு வர்றேன். அதற்கான வரவேற்பும் எல்லா இடங்களிலுமே கிடைக்கிறது.

இனி, காலத்திற்கும் ஐ.டி வேலைதான் போல என்று அன்று நான் முடிவு செய்திருந்தால் சுதந்திரமாக என்னால் செயல்பட்டிருக்க முடியாது. ஆனால், இன்றோ வரப்பு மேட்டிலும் வயல் வெளியிலும் உற்சாகமாகப் பறந்து திரிகிறேன்” என்று சொல்லும்போது அவர் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சி புன்னகையாக உதட்டில் வெளிப்படுவதைக் காண முடிகிறது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பி.பானுமதி

 
07CHRGNBANUMATHI

தென்னிந்திய சினிமாவின் ஆளுமைகளுள் ஒருவரும் 3 முறை தேசிய விருதை வென்றவருமான பி.பானுமதி (P.Banumathy) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் ஓங்கோலுக்கு அருகில் உள்ள தோட்டவரம் என்ற கிராமத்தில் பிறந்தார் (1925). சிறுவயதிலேயே தந்தையிடம் இசை கற்கத் தொடங்கினார். 13 வயதில் ‘வரவிக்ரயம்’ தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாகப் பிரவேசித்தார்.

* முதல் திரைப்படமே வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்தார். தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

* ‘சித்ரபகாவலி’, ‘நல்லதம்பி’, ‘ரத்னகுமார்’, ‘சண்டிராணி’, ‘மலைக்கள்ளன்’, ‘ரம்பையின் காதல்’, ‘அம்பிகாபதி’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘நாடோடி மன்னன்’, ‘அன்னை’ உள்ளிட்ட இவரது படங்கள் குறிப்பிடத்தக்கவை. படங்களில் பின்னணி பாடிய இவர், தனித்துவம் வாய்ந்த தன் குரலால் ரசிகர்களை வசீ கரித்தார். ‘அழகான பொண்ணு நான்’, ‘மாசிலா உண்மைக் காதலே’, ‘பூவாகி காயாகி கனிந்த மரம்’ உள்ளிட்ட இவரது பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஒரு சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்தார். திருமணமான பிறகு தன் கணவருடன் இணைந்து, திரைப்படங்களைத் தயாரித்தார். ‘பரணி ஸ்டுடியோஸ்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் ஸ்டுடியோவையும் உருவாக்கினார்.

* நிறைய சிறுகதைகளையும் எழுதினார். இவரது ‘அத்தகாரி கதலு’ என்ற சிறுகதை சிறந்த சிறுகதைக்கான ஆந்திரப் பிரதேச சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.

* படங்களை இயக்கியும் வந்தார். சுமார் 16 படங்களுக்கு மேல் இயக்கிய பானுமதி, அப்படங்களுக்கான கதை, வசனம், இசை போன்றவற்றையும் தானே கவனித்துக் கொண்டார். இவர் தமிழில் தயாரித்த ‘இப்படியும் ஒரு பெண்’ சிறந்த இசைப்படமாக உலகப் பெண்கள் ஆண்டான 1975-ல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

* ‘பக்த துருவ மார்க்கண்டேயா’ என்ற படத்தை, தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளத்தில் தயாரித்தார். எல்லாக் கதாபாத்திரங் களுக்கும் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை நடிக்க வைத்து, சாதனை புரிந்தார். 1970-ல் ‘பத்துமாத பந்தம்’ படத்தில் முதன் முதலாக பாடலை இயற்றிப் பாடினார்.

* 3 முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது அளித்தது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னை இசைக் கல்லூரியில் 3 ஆண்டுகள் முதல் வராகப் பணியாற்றினார். திரைத்துறையில் இவரது பங்களிப்பு களுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றார்.

* சென்னை சாலிகிராமத்தில் டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்றை நிறுவி, அதன்மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கிவந்தார். லலித் கலா அகாடமியின் உறுப்பினராக 5 ஆண்டுகளும் ஆந்திர சாகித்ய அகாடமியின் உறுப்பினராக 10 ஆண்டுகளும் பணியாற்றினார்.

* நடிகை, பாடகி, எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், சமூக சேவகி எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவரும் சகலகலாவல்லி, அஷ்டாவதானி, பிறவிக் கலைஞர் என்றெல்லாம் போற்றப்பட்டவருமான பி.பானுமதி 2005-ம் ஆண்டு தமது 80-வது வயதில் மறைந்தார்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ரஷ்யாவில் வீட்டிற்கு நடுவே முளைத்த சாலை

பகுதியளவு சேதமடைந்த தன் வீட்டை புதிதாக முளைத்த சாலையில் இருந்து பார்வையிடும் வீட்டு உரிமையாளர்படத்தின் காப்புரிமைREN TV Image captionபகுதியளவு சேதமடைந்த தன் வீட்டை புதிதாக முளைத்த சாலையில் இருந்து பார்வையிடும் வீட்டு உரிமையாளர்

அண்டை நகரத்தில் பணிபுரியும் ரஷ்ய தம்பதிகள், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, அங்கு புதிய சாலை சென்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ரஷ்யாவில் `ஜாவோத் வோஸ்க்ரெசென்ஸ்கி` மாவட்டத்தில் புதிய நெடுஞ்சாலையில் இருக்கும் இடிக்கப்பட்ட வீட்டின் புகைப்படங்கள் ரென் டிவியில் காட்டப்பட்டது. எஞ்சியுள்ள வீட்டின் பகுதியில் யாரும் வசிக்கமுடியாது.

வீட்டு உரிமையாளர்கள் நிரந்தரமாக இங்கு வசிக்கவில்லை. அண்டை நகரான நிஜ்னி நோவ்கோரோட்டில் அவர்கள் பணிபுரிகின்றனர். தங்கள் வீடு இடிக்கப்படுவது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுவதாக ரியா நொவொஸ்டி செய்தி நிறுவனம் கூறுகிறது.

"யாரும் வீட்டை இடிக்கவில்லை" என்று முதலில் கூறிய உள்ளூர் அதிகாரிகள், வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான 'வலெரியா உடாலோவா' வீட்டின் உரிமைக்கான ஆவணங்களை அலுவலகத்திற்கு வந்து காட்டியதும் தங்களது கருத்தை மாற்றிக்கொண்டனர்.

சாலை அமைக்கும் பணி மேற்கொள்வதற்கு முன் ஆய்வு மேற்கொண்டப்போது தவறு நேர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தற்போது கூறுகின்றனர்.

வீட்டின் வழியாக சாலை செல்வதை காட்டும் உள்ளூர் நிர்வாக அலுவலகத்தின் சாலைத்திட்ட வரைபடம்படத்தின் காப்புரிமைREN TV Image captionவீட்டின் வழியாக சாலை செல்வதை காட்டும் உள்ளூர் நிர்வாக அலுவலகத்தின் சாலைத்திட்ட வரைபடம்

புதிய வீடு கட்டுவதற்காக 3.6 மில்லியன் ரூபிள்கள் ($62,000; £48,000) இழப்பீடு கோரும் உடாலோவா, இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்வரை சாலையின் நடுவில் கூடாரம் அமைத்து தங்க திட்டமிட்டிருப்பதாக 'லெண்டா செய்தி வலைதளம்' தெரிவிக்கிறது.

வீட்டின் உரிமையாளர்கள் கோரும் இழப்பீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ள உள்ளூர் அதிகாரிகள், ஒரு வாரத்திற்குள் முடிவை தெரிவிப்பார்கள்.

சீரற்ற சாலையில் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளமுடியாது என்று உள்ளூர் அதிகாரிகள் மறுத்ததால், தங்கள் கிராமச் சாலையை பழுதுபார்க்கும் பணியை வயது முதிர்ந்த பெண்கள் குழு ஒன்று கடந்த வாரம் மேற்கொண்டது அனைவராலும் பாராட்டப்படுவதை ரஷ்ய அரசின் தொலைகாட்சி ஒளிபரப்பியது.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

ஆறுதலாக இருந்த ஐ.பி.எல் சியர்ஸ் கேர்ள்ஸ் இனி இல்லை: ஸ்டார்ஸ்போர்ட்ஸ் அதிரடி

 

ஆறுதலாக இருந்த ஐ.பி.எல் சியர்ஸ் கேர்ள்ஸ் இனி இல்லை: ஸ்டார்ஸ்போர்ட்ஸ் அதிரடி

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்லுக்கு எப்போதுமே மவுசு அதிகம். சில நேரங்களில் கிரிக்கெட் போட்டியே சோடை போனாலும், அந்த கவலையை மறக்க வைத்து விடுபவர்கள் தான் நம் ஐ.பி.எல் நடன மங்கைகள்.

ஆறுதலாக இருந்த ஐ.பி.எல் சியர்ஸ் கேர்ள்ஸ் இனி இல்லை: ஸ்டார்ஸ்போர்ட்ஸ் அதிரடி

ஆனால் இனிமேல் அது போன்ற நடன மங்கைகள் வர மாட்டார்கள் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான அடுத்த 5 வருட உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் ரூ. 16,347 கோடிக்கு பெற்றதுள்ளது.

ஆறுதலாக இருந்த ஐ.பி.எல் சியர்ஸ் கேர்ள்ஸ் இனி இல்லை: ஸ்டார்ஸ்போர்ட்ஸ் அதிரடி

அதே சமயத்தில் இந்த நடன மங்கையர்கள் சம்பளத்தை கேட்டால் வாயடைத்து போவீர்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சியர்ஸ் கேர்ள்ஸாக நடனம் ஆடுபவர்களுக்கு ஒரு போட்டிக்கு 18,000 முதல் 30,000 வரை சம்பளமாக வழங்கப்படுகின்றது. இதுவே அவர்கள் நடனம் ஆடும் அணி வெற்றி பெற்றால் போனஸ் தொகையும் உண்டு.

ஆறுதலாக இருந்த ஐ.பி.எல் சியர்ஸ் கேர்ள்ஸ் இனி இல்லை: ஸ்டார்ஸ்போர்ட்ஸ் அதிரடி

இந்திய பெண்கள் ஆடினால் சம்பளமாக 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை மட்டுமே அளிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

36p1.jpg

 `மெர்சலி’ல் மூன்று விஜய். விவசாயப் போராளி, மருத்துவர், மேஜிக் கலைஞர் என வெரைட்டி கேரக்டர்ஸ். இதில் மேஜிக் கலைஞர் கேரக்டருக்காக மேசிடோனியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மேஜிக் கலைஞர் கோகோ ரீக்யூயமிடம் பயிற்சி பெற்று இருக்கிறார் விஜய். `‘ `மெர்சல்’ பட மேஜிக் உங்களைக் கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்தும். அவர் எதைச் சொல்லிக்கொடுத்தாலும் வேகமாகக் கற்றுக்கொள்கிறார். மேஜிக்கில் எந்த வித அனுபவமும் இல்லாத ஒருவர் இவ்வளவு வேகமாக கற்றுக்கொள்வது ஆச்சர்யமாக இருந்தது’’ என சிலிர்க்கிறார் கோகோ. #லாஜிக் கேட்டா மேஜிக்னு சொல்லிடலாம்!


36p2.jpg

பீலேவைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் ரொனால்டோ. உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்து சர்வதேசப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான் பீலேவை முந்தி ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார் ரொனால்டோ. 144 போட்டிகளில் 78 முறை கோல் போஸ்ட்டுக்குள் கிக் அடித்திருக்கிறார்! #நீ ஆடு ராசா!


36p3.jpg

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட கோகுல்-விஜய்சேதுபதி காம்பினேஷன் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். ஆனால், படம் செம காஸ்ட்லி பட்ஜெட்.  20 கோடி ரூபாய்க்கு மேல் எகிறும் என்கிறார்கள். ‘வனமகன்’ சயீஷாதான் ஹீரோயின். படத்தின் பெயர் `ஜங்கா’. இதன் 60 சதவிகிதப் படப்பிடிப்பு பாரீஸில் நடக்கிறது. மீதி போர்ஷன், சென்னை, தூத்துக்குடியில் நடக்கிறதாம். #ஹேப்பி அண்ணாச்சி!


36p4.jpg

விக்ரம்-ஹரியின் கூட்டணியில் `சாமி-2’ காஸ்ட்டிங் ரெடி. ஹீரோயின் த்ரிஷாவோடு புது கதாநாயகியாக கீர்த்தி சுரேஷும் விக்ரமோடு டூயட் பாட இருக்கிறார். வில்லன்தான் சர்ப்ரைஸ். பாபி சிம்ஹாதான் நடிக்கணும் என விக்ரமே டிக் அடித்திருக்கிறார். செப்டம்பர் 15 முதல் ஷூட்டிங்காம். #வா சாமி... வா சாமி!


பீகாரில் மீண்டும் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று கூடியிருக்கின்றன மாநிலக் கட்சிகள்.  ``பா.ஜ.க-வை விரட்டுவோம்... நாட்டைக் காப்போம்’’ என்கிற முழக்கத்தோடு லல்லுபிரசாத் யாதவ் பாட்னாவில் நடத்திய கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மாநாட்டுக்கு மக்கள் கூட்டம் லட்சங்களில் திரள, அடுத்தநாளே வருமானவரித்துறை இந்தப் பேரணியை நடத்தியதற்கான வரவுசெலவு விபரங்களைக் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, கடுப்பில் இருக்கிறது லாலு தரப்பு. #விடாது கறுப்பு!


 கோலிவுட்டில் சிவகார்த்தியேன்தான் பிளானிங்கில் பக்கா எனப் பெயரெடுத்தவர். ஆனால், அவருக்கே ஒரு சின்னச் சறுக்கல். ‘வேலைக்காரன்’ படத்தை ஆயுதபூஜைக்கு ரிலீஸ் செய்வதுதான் திட்டம். ஆனால், படம் இப்போது டிசம்பருக்குத் தள்ளிப்போயிருக்கிறது. இதனால் ‘கருப்பன்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘அறம்’, `செம’, `பலூன்’ எனப் பல படங்கள் விடுமுறை ரிலீஸுக்குப் போட்டி போடுகின்றன #ட்ரீட் டிசம்பர்ல!


 அரசியல் பன்ச் அடிக்கிற நடிகர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... ஹாலிவுட்டிலும் இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டார்கள். அதிலும் ட்ரம்ப் வந்தபிறகு ஹாலிவுட்டே அரசியல்வுட்டாகிவிட்டது. அர்னால்ட் தொடங்கி லியானார்டோ டி காப்ரியோ வரை ஆளாளுக்கு ட்ரம்பை விமர்சிக்க... இந்த லிஸ்டில் இப்போது இணைந்திருப்பது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற கிம் கர்தாஷியன். ‘`ட்ரம்பைவிட என் நான்கு வயது மகளே நல்ல ஆட்சி தருவாள். ட்ரம்பை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அப்படி இருக்கிறது அவருடைய ஆட்சி’’ என்று கமென்ட் அடிக்க... ஆளாளுக்கு கிம்மை `அரசியலுக்கு வா தலைவி’ என அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! #அரசியல் அழகி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் மிகச் சிறிய ஆளில்லா விமானம் உருவாக்கம் (Photos)


உலகின் மிகச் சிறிய ஆளில்லா விமானம் உருவாக்கம் (Photos)
 
அண்ட்ரொய்ட் சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது 2000 ரூபா செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம்பிடித்து வருகிறது, வீடியோ மற்றும் சினிமா படம் எடுக்கவும், போட்டோக்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர், இருந்தும் ஆளில்லா விமானங்களில் கெமராக்கள் பொருத்தப்படுவதால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்நிலையில் அண்ட்ரொய்ட் சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது 2000 ரூபா செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

அது மிகச்சிறிய அளவிலானது, இதை உள்ளங்கையில் அடக்கமாக வைத்துக்கொள்ள முடியும், இதில் 0.3 எம்.பி. திறனுள்ள கெமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கலாம், இதை புற்தரையிலும் தரையிறக்கலாம். இதில் உள்ள பேட்டரியை 30 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும்.

ss

ddd

http://newsfirst.lk/tamil

  • தொடங்கியவர்

டொலர் நாணயத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடையுடன் நியூ யோர்க் ரயில் நிலையத்தில் நடமாடிய யுவதி: தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளுமாறும் மக்களிடம் கூறினார்

DI0l2QOWAAAweFBநியூ யோர்க் ரயில் நிலை­யத்தில் மொடல் ஒருவர், அமெ­ரிக்க டொலர் நாண­யத்­தாள்­களால் அலங்­க­ரிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­து­கொண்டு நட­மா­டி­ய­துடன் அந்த ஆடை­யி­லி­ருந்து நாண­யத்­தாள்­களை எடுத்­துக்­கொள்­ளு­மாறும் பொது­மக்­க­ளிடம் கோரினார்.


ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த விக்­டோ­ரியா ஸிபோ­லி­டிகிஸ் எனும் மொடலே இவ்­வாறு டொலர்­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை­யுடன் நட­மா­டினார்.


ஏழை­க­ளுக்கு உத­வு­வ­தற்­கா­கவே தான் இவ்­வாறு செய்­த­தாக விக்­டோ­ரியா ஸிபோ­லி­டிகிஸ் தெரி­வித்­துள்ளார். நாண­யத்­தாள்­களால் அலங்­க­ரிக்­கப்­பட்ட ஆடை­யுடன் நான் ரயில் நிலை­யத்­துக்குச் சென்றேன். எதிர்ப்­பட்ட மக்­க­ளிடம், அவர்­க­ளுக்குத் தேவை­யா­னதை எடுத்­துக்­கொள்­ளு­மாறு கூறினேன் என அவர் தெரி­வித்­துள்ளார்.


இவரின் காதலர் நியூ­யோர்க்கில் வசிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. வாழ்க்கை எனக்கு அதிகம் கொடுத்­துள்­ளது. இது ஏழை­க­ளுக்­காக எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்­டிய தருணம் என நான் எண்­ணினேன் என்­கிறார் விக்­டோ­ரியா.


31 வய­தான விக்­டோ­ரியா ஸிபோ­லிடிக்ஸ், பிளே போய் சஞ்­சி­கைக்கும் போஸ் கொடுத்­தவர்.  எளிய மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அமைப்­பொன்றை ஸ்தாபிக்க விரும்­பு­வ­தா­கவும் சில மாதங்­க­ளுக்கு முன்னர் இவர் தெரி­வித்­தி­ருந்தார்.

DI0l2QuXYAA59yN


ஆர்­ஜென்­டீ­னாவில் உள்ளூர் பய­ணிகள் விமா­ன­மொன்றின் விமா­னிகள் அறையில் கவர்ச்­சி­யான செல்பீ படங்­களை பிடித்­துக்­கொண்­டதன் மூலம் பிர­ப­ல­மா­னவர் விக்­டோ­ரியா ஸிபோ­லிடிக்ஸ். விமானம் தரை­யி­றங்கும் தருணம் உட்­பட முழு விமானப் பய­ணத்­திலும் தான் விமானி அறையில் இருந்­த­தாக அவர் தெரி­வித்­தி­ருந்தார்.


இவ்­வி­டயம் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அதி­கா­ரி­களால் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. பின்னர் விக்­டோ­ரியா ஸிபோ­லி­டிக்­ஸுக்கு சுமார் 2 லட்சம் ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­ட­துடன் 18 மாதங்கள் சமூக சேவையில் ஈடு­பட வேண்டும் எனவும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.  குறித்த விமா­னத்தின் விமா­னிகள் மூவரும் வேலை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

VRA-20170906-m06-MED

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

1978 : இரத்­ம­லானை விமான நிலை­யத்தில் ‘எயார்­சிலோன்’ விமானம் குண்­டு­வைத்து தகர்க்­கப்­பட்­டது

வரலாற்றில் இன்று…

செப்டெம்பர் – 07

 

70 : ரோமப் பேர­ரசின் இரா­ணுவம், தள­பதி டைட்டஸ் தலை­மையில் ஜெரு­ச­லேமைக் கைப்­பற்­றி­யது.


1812 : பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லி­யனின் படைகள் ரஷ்­யாவின் முதலாம் அலெக்­சாண்­டரின் படை­களை பர­டீனோ என்ற கிரா­மத்தில் தோற்­க­டித்­தன.


1821 : வெனி­சூலா, கொலம்­பியா, பனாமா மற்றும் ஈக்­கு­வடோர் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய 'கிரான்ட் கொலம்­பியா' குடி­ய­ரசு உரு­வா­னது. சிமோன் பொலீவர் இதன் தலைவர் ஆனார்.


1822 : போர்த்­துக்­கல்­லிடம் இருந்து பிரேஸில் சுதந்­தி­ர­ம­டைந்­தது.


1860 : 'லேடி எல்ஜின்' நீரா­விக்­கப்பல் அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் வாவியில் மூழ்­கி­யதில் 400 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.


varalru1929 : பின்­லாந்தில் 'குரு' என்ற பய­ணிகள் கப்பல் மூழ்­கி­யதில் 136 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1940 : இரண்டாம் உலகப் போர்: பிரித்­தா­னிய மக்­களை அச்­சு­றுத்தும் வகையில் ஜேர்­ம­னி­யினர் லண்டன் நகரில் 300 தொன் கன­வெ­டி­குண்­டு­க­ளையும், 13,000 எரி­குண்­டு­க­ளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்­டு­வீச்சு இடம்­பெற்­றது.


1942 : யுக்­ரைனில் 8,700 யூதர்கள் நாஸி ஜேர்­ம­னி­ய­ரினால் கொலைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­பட்­டனர்.


1943 : அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத்தில் உண­வு­வி­டுதி ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் சிக்­கி 55 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1950 : ஸ்கொட்­லாந்தில் நிலக்­கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்­ததில் 13 பேர் கொல்­லப்­பட்­டனர். 116 பேர் காப்­பாற்­றப்­பட்­டனர்.


1965 : இந்­திய எல்­லை­களில் சீனா தனது படை­களைக் குவிக்கப் போவ­தாக அறி­வித்­தது.


1977 : பனாமா கால்வாய் தொடர்­பாக பனா­மா­வுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் உடன்­பாடு எட்­டப்­பட்­டது. 20 ஆம் நூற்­றாண்டின் இறு­தியில் பனாமா கால்­வாயின் கட்­டுப்­பாட்டை பனா­மா­வுக்குக் கைய­ளிப்­ப­தாக அமெ­ரிக்கா உறு­தி­ய­ளித்­தது.


1978 : இரத்­ம­லானை விமான நிலை­யத்தில் எயார்­சிலோன் நிறு­வ­னத்தின் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்­கப்­பட்­டது. இச்­சம்­ப­வத்தில் உயி­ரி­ழப்பு எதுவும் ஏற்­ப­ட­வில்லை.


1986 : தென் ஆபி­ரிக்­காவின் அங்­கி­லிக்கன் திருச்­ச­பையின் முத­லா­வது கறுப்­பினத் தலை­வ­ராக டெஸ்மண்ட் டூட்டு நிய­மிக்­கப்­பட்டார்.
1986 : சிலியின் அதிபர் ஆகுஸ்டோ பினொச்செ கொலை முயற்சி ஒன்­றி­லி­ருந்து தப்­பினார்.


1988 :  ஆப்­கா­னிஸ்­தானின் முத­லா­வது விண்­வெளி வீரர் அப்துல் அஹாட் மொஹ்மண்ட் சோவி­யத்தின் சோயூஸ் விண்­க­லத்தில் பூமி திரும்­பினார்.


1999: ஏதென்ஸில் இடம்­பெற்ற 5.9 ரிச்டர் அளவு நில­ந­டுக்­கத்­தினால் 143 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1999: இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் யாழ்ப்­பாணம் செம்­ம­ணியில் கொல்­லப்­பட்ட 600 இற்கும் மேற்­பட்ட தமி­ழர்­களின் புதை­குழி விபரம் தெரி­ய­வந்­தது.


2004: சூறாவளி ஐவன், கனடாவைத் தாக்கியதில் 39 பேர் கொல்லப்பட்டு 90 சதவீத கட்டிடங்கள் சேதமாயின.


2005 : எகிப்தில் முதலாவது பல்கட்சி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.


2011 : ரஷ்­யாவில் இடம்­பெற்ற விமான விபத்தில் 43 பேர் உயி­ரி­ழந்­தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்
tkn-09-07-nt-01_06092017_ARR_CMY.jpg

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை முடிவடைந்த நிலையில்,மாட்டு வண்டி உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்கென வைக்கோலை சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாட்டு வண்டிகளில் வைக்கோல் ஏற்றிச் செல்லப்படுவதை படத்தில் காணலாம்.

  • தொடங்கியவர்
‘வழங்காதவனே ஏழை’
 

image_0e42978f26.jpgஉயிர்போகும் முன் உள்ள ஓரிரு வினாடிகளுக்கு முன்னர் கூட, அடுத்த வீட்டுக்காரனுக்கு விட்டுக்கொடுக்காமல், வீம்புடன் சவால் விட்டு, இறக்கின்ற பேர் வழிகள், எதைச் சாதிக்கப் போகின்றார்கள்?  

போன உடல் போனதுதான். உயிருடன் வாழும் வாழ்க்கை, மேலானதாக இருக்கத் தானதருமம் தாராள மனத்துடன் செய்து, எல்லோரையும் அரவணைத்தால்தான் என்ன?   இந்த உடல் களிப்புடன் இருப்பதைவிட, இந்த ஆன்மா உவகை எய்துதலே மேலானது. இது பிறருக்காகச் செய்யும் கைங்கரியங்களினால் பெறுவதாகும்.  

கொடுத்துப் பாருங்கள் அந்த இனிய சுகானுபவம் எப்படி என்பதை உணர முடியும். உலோபிக்கு இந்தக் கொடுப்பனவுகள் இல்லை. 

வழங்காதவனே ஏழை; கொடுப்பவன் கோடி சுகம் காண்கின்றான்.

  • தொடங்கியவர்

அலாரம் அடிச்சாலும் தூங்கறீங்களா? அப்போ இந்த ஆப்ஸ் உங்களுக்குத்தான்!

 
 

"ட்ரிங்ங்ங்ங்ங்”  அலாரம் கிளாக் காலம் முதல் இன்றைய ஸ்மார்ட்போன் காலம் வரைக்கும் எப்போதும்  மாறாத ஒரு விஷயம் இருக்கு. அலாரம் அடிச்சதுமே அதைத் தலையில தட்டி ஆஃப் பன்றது தான் அது.அலாரம் அடித்ததும்  எழுந்துவிட்டாலும் அதுக்கப்புறம் தூங்குற கொஞ்ச நேரம் சொர்க்கம் தான். அலாரமை கண்டுபிடிச்சவன் டெக்னாலஜி தெரிஞ்சவன்; ஸ்னூஸ் பட்டனை கண்டுபிடிச்சவன் சைக்காலஜி தெரிஞ்சவன்னு சொல்லலாம். ஆனால் அந்த கொஞ்ச நேரம் கொஞ்சம் அதிகமாகும் போது பிரச்சினைதான். அலாரம் வச்சும் சீக்கிரம் எந்திரிக்க முடியலையேனு சொல்றவங்களுக்காகவே இந்த ஆப்ஸ்.

I Can't Wake Up! Alarm Clock

alarm apps

பயன்படுத்துவதற்கு மிக எளிதாக  வகையில் வடிவமைக்கப்பட்டிகக்கிறது. இந்த ஆப்பை பயன்படுத்தி உங்க ஸ்மார்ட்போன்ல அலாரம் செட்  பண்ணுனா காலையில அலாரம் அடிக்கும் போது அவ்வளவு சீக்கிரம் snooze ஆப்ஷனை பயன்படுத்த முடியாது. அலாரம் அடிச்சதும் ஆப்ல இருக்குற சின்ன சின்ன புதிர்களை  விடுவித்தால் மட்டுமே அலாரத்தில் இருக்கும் snooze ஆப்ஷனை பயன்படுத்த முடியும். புதிரை சரி செய்துவிட்டு தூங்குவதற்கு கொஞ்ச நேரம் கேட்பதற்கும் ஆப்ஷன் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு அந்த புதிரை விடுவிக்கும் போதே தூக்கம் பறந்திருக்கும்.

ஆப்பை டவுன்லோட் செய்ய


Alarmy

alarm apps


"முடிஞ்சா தூங்கி பாரு" என நேரடியாகவே சவால் விடுகிறது இந்த ஆப். இதில் அலாரம் செட் செய்வதற்கு முன்னால் வீட்டில் இருக்கும் எதாவது ஒரு பொருளின் புகைப்படத்தை எடுத்து அப்லோட் செய்ய வேண்டும். அது ஒரு இடமாகவோ அல்லது ஒரு பொருளாகவோ இருக்கலாம். அடுத்த முறை அலாரம் அடிக்கும் பொழுது அதே இடத்திற்கு சென்று நீங்கள் எதை அப்லோட் செய்தீர்களோ அதை புகைப்படம் எடுத்தால் மட்டுமே அலாரம் அடிப்பதை நிறுத்த முடியும்.(அவசரப்பட்டு கேர்ள் ஃப்ரெண்டு படத்தை அப்லோடு செய்துவிடாதீர்கள்) புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் கணக்கு புதிர் போன்ற வேறு சில ஆப்ஷன்களும் இருக்கின்றன. மேலும் கடந்த நாட்களில் எத்தனை மணிக்கு எழுந்தீர்கள் என்பதை செக் செய்வதற்கு ஹிஸ்டரி வசதியும் இருக்கிறது.

ஆப்பை டவுன்லோட் செய்ய.

Snap Me Up: Selfie Alarm Clock

alarm apps

செல்ஃபி எடுப்பது பிடிக்குமா? அப்போ இந்த ஆப் உங்களுக்குத்தான். இந்த ஆப்ல அலாரம் அடிக்கும் போது கூடவே கேமராவும் ஆன் ஆகும் அப்போ நீங்க கொஞ்சம் வெளிச்சமான இடத்திற்கு போய் ஒரு செல்ஃபி எடுத்தால் போதும் அலாரத்தை நிறுத்தி விடலாம். விருப்பம் இருந்தால் அப்படியே ஒரு குட் மார்னிங் வீடியோவும் எடுத்து வைத்து கொள்ளலாம். கூடவே டைரி எழுதும் வசதியும் இருக்கிறது. நீங்கள் காலையில் எழுந்தவுடன் கண்ணில் பட்டதை எல்லாம் எழுதி வைத்து கொண்டு விரும்பும்பொழுது  மீண்டும் படித்து கொள்ளலாம்.

ஆப்பை டவுன்லோட் செய்ய.

AlarmMon

அலாரம் ஆப்ஸ்


கொஞ்சம் வித்தியாசமாக நம்மை கேம் விளையாட சொல்லி எழுப்புகிறது இந்த ஆப். அலாரம் அடித்தவுடன் இதில் இருக்கும் ஒரு சின்ன கேமை விளையாடி முடிக்க வேண்டும். அப்பொழுதான் அலாரம் அடிப்பது நிற்கும்.நீங்க விளையாடி முடிக்கும் போது திரும்ப தூக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும்.வெவ்வேறு ஒலிகளை அலாரமாக செட் செய்து கொள்ள முடியும். மேலும் அன்றைய நாள் செய்ய வேண்டிய முக்கியமான வேலையை அலாரம் அடிக்கும் பொழுது நினைவு படுத்தும் வசதியும் இருக்கிறது.

 

ஆப்பை டவுன்லோட் செய்ய.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆஷா போஸ்லே: கனவில் இசைக்கும் குரல்

 

 
08chrcjAshaji

செப்டம்பர் 8: ஆஷா போஸ்லே 84-வது பிறந்ததினம்

வட இந்தியாவிலிருந்து வந்த எத்தனையோ இனிய குயில்கள் தமிழ்த் திரையிசையை கவுரவம் செய்திருக்கின்றன. ஆனால் நம் கனவில் வந்து இசைப்பதுபோன்று தனது 84 வயதிலும் இறகால் வருடும் தன் இளமைக் குரலைத் தக்க வைத்திருக்கும் ஒரு கலைஞர் இன்னும் பாடிக்கொண்டிருக்க முடியுமா? அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் இசைப்பதை நிறுத்த மனமில்லாத அந்த முதுபெரும் இசைப்பறவையான ஆஷா போஸ்லேவுக்கு இன்று 84-வது பிறந்ததினம்.

ஆஷாஜி என இசைப் பிரியர்களால் அழைக்கப்படும் போஸ்லேவுக்கு கடந்த பிறந்தநாளின்போது ஒரு கவுரவம் செய்யப்பட்டது. அரை நூற்றாண்டுக்கு முன் அவர் பாடியிருந்த காஷ்மீரி பாடல்களை சர்காத் என்ற தொண்டு நிறுவனம் ஒரு இசை ஆல்பமாக தொகுத்து வெளியிட்டதுதான் அந்த கவுரவம். அதன் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காஷ்மீரி எழுத்தாளர் பிரான் கிஷோர் கால், ஆஷா அன்று காஷ்மீரி பாடல்களைப் பாடியது பற்றி பசுமையாக நினைவு கூர்ந்திருக்கிறார்.

 

விரைவாகக் கற்கும் திறன்

“அது1966-ம் ஆண்டு கோடை காலம். காஷ்மீர் வானொலி நிலையத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீரி கவிஞர்கள் ரசூல் மிர் மற்றும் ஷமஸ் ஃபக்கீர் ஆகியோரின் கவிதைகளைக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான பாடல்களை போஸ்லே பாடினார். 1850-களின் மத்தியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அக்கவிஞர்கள் இருவரும் காதல் கவிதைகளின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள். அப்போது காஷ்மீர் வானொலி நிலையத்தின் அழைப்பை ஏற்று, பேட்டி அளிக்க வந்திருக்கிறார் ஆஷா.

பேட்டி முடிந்தபின் எங்கள் வானொலிக்காக சில காஷ்மீரி பாடல்களைப் பாட முடியுமா என்று கேட்கப்பட்டது. கொஞ்சமும் தயங்காமல் ஒப்புக்கொண்டார். வானொலி நிலையம் செல்லும் முதல்நாள் தாள் ஏரியில் பயணித்த ஆஷா, அங்கே படகோட்டிகள் பேசிக்கொண்டதைக் கேட்டது தவிர, காஷ்மீரி மொழி பற்றி எதுவும் அறியாதவர். ரசூல், ஃபக்கீர் ஆகியோரின் கவிதைகள் சிலவற்றை வானொலி ஊழியர் வாசிக்கக்கேட்டு மராத்தியில் அதனுடைய அர்த்தத்தைக் கேட்டறிந்தவர், விரைவில் ஒலிப்பதிவுக்கு வர ஒப்புக்கொண்டார். சில ஒத்திகைகளிலேயே காஷ்மீரி வார்த்தைகளின் உச்சரிப்புகளைக் கற்றுக்கொண்ட போஸ்லே, எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

ஒவ்வொரு பாடலும் ஒரே டேக்கில் பாடல் பதிவு செய்யப்பட்டன. அந்த இரு பாடல்களின் வழியே காற்றில் கலந்த அவரது குரல் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு எங்கும் அதன் பனிக் காற்றை மேலும் குளிர்வித்தது. ஒலிப்பதிவு முடிந்தவுடன் போஸ்லே தனக்குத் தரப்பட்ட ஊதியத்தை அங்கேயே வாத்தியக் கலைஞர்களுக்குப் பிரித்துக்கொடுக்கச் சொன்னார். ஆஷாவின் குரல் மட்டுமல்ல, அவரது இதயமும் ஈரமுடையது” என்று கூறியிருக்கிறார்.

 

தனித்த சுவடுகள்

காஷ்மீரி என்றில்லை, பத்துக்கும் அதிகமான இந்திய மொழிகளில் சுமார் 12 ஆயிரம் பாடல்களைப் பாடி சாதனை படைத்திருக்கும் ஆஷா போஸ்லே, தமிழில் தனித்த சுவடுகளைப் பதித்திருக்கிறார். 1987-ம் ஆண்டு இளையராஜா இசையில் வெளிவந்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் இடம் பெற்ற ‘செண்பகமே…செண்பகமே…’ பாடல்தான் அவரது தமிழ் அறிமுகப்பாடல். அந்தப் பாடலை ஆண்களையும் லயித்துப் பாடச் செய்தது ஆஷாவின் குரல்.

அதைத் தொடர்ந்து ‘மீரா’ படத்தில் ‘ஓ…பட்டர்பிளை…’, ‘புதுப்பாட்டு’ படத்தில் ‘எங்க ஊரு காதலைப் பத்தி…’, ‘நேருக்கு நேர்’ படத்தில் ‘எங்கெங்கே…எங்கெங்கே...’, ‘இருவர்’ படத்தில் ‘வெண்ணிலா…’, ‘ஹே ராம்’ படத்தில் ‘ நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்…’, ‘சந்திரமுகி’ படத்தில் ‘கொஞ்ச நேரம்… கொஞ்ச நேரம்...’ என ஒரு கால இடைவெளியில் தொடர்ந்து பாடி வந்திருந்தபோதும் தமிழர்களின் காதுகளில் இடைவிடாமல் ரீங்கரித்துக்கொண்டேயிருக்கிறது அவரது தமிழ்க் குரல்.

 

வறுமையை விரட்டிய திறமை

மராத்திய இசை மேதையாகக் கொண்டாடப்படும் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கரின் வாரிசாக மகாராஷ்டிர மாநிலத்தில் கோர் (Goar) எனும் ஊரில் 1933-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் நாள் பிறந்தவர் ஆஷா. இளமையில் வறுமையை எதிர்கொண்ட ஆஷா தனது 9-வது வயதில் தந்தையை இழந்தார். பிழைப்பு தேடி ஆஷா போஸ்லேயின் குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்தது.

மூத்த சகோதரி லதா மங்கேஷ்கருடன் இணைந்து, ஆஷா நாடகங்களில் நடித்தும், பாடல்கள் பாடியும் தன் கலைத்திறமையால் வறுமையை விரட்டத் தொடங்கினார். மராட்டிய மொழியில் ‘மாஜா பல்’ என்ற படத்துக்காக 1943-ம் ஆண்டு திரையிசைப் பின்னணிப் பாடகராக தனது பயணத்தைத் தொடங்கிய ஆஷாவின் சாதனைகள் இந்திப் பட இசை வரலாற்றை நிறைத்துக்கொண்டு நிற்பவை.

 

மண வாழ்க்கை

பாலிவுட்டின் இசைப் பிதாமகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் ஆர்.டி. பர்மனின் முதல் வெற்றிப் படமான ‘தீஸ்ரி மஞ்சில்’ என்ற படத்தில் பாடிய பாடல்கள் பெரும் ஹிட்டடித்தன. ஆர்.டி. பர்மனோடு தொழில் முறையில் தொடங்கிய ஆஷாவின் நட்பு, அவருடன் திருமண உறவாகவும் மலர்ந்தது.

1960 - 1970-களில் புகழின் உச்சம் தொட்டு, 1995-ம் ஆண்டு ரசிகர்களை வசப்படுத்திய ‘ரங்கீலா’ திரைப்படத்தையும் கடந்து மங்காத புகழுடன் வலம் வருகிறார். சாமானிய தமிழ் ரசிகனுக்கு ‘செண்பகமே செண்பகமே’ என்ற ஒரு பாடலே போதும் இந்த இசைக்குயிலை நினைவில் என்றும் நினைவில் நிறுத்திட!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
லைக்ஸ் மழையில் நனையும் ரைசா...
 

image_1c1f88fb86.jpgimage_8553c5eefa.jpgimage_5bcbc7515b.jpgimage_af696c3e1a.jpgமொடலிங்கில் அசத்திவந்த ரைசா, பிக் பாஸ் வீட்டின் மூலமாக பிரபலம் அடைந்துள்ளார். பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தால், திரையில் நடிகை காஜோலைவிட அதிகமான விசில் ரைசாவுக்கு பறந்தது.

ஓரிரு வாரங்களுக்குள் முன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரைசா, முன்பை காட்டிலும் இப்போது, சமூக வலைத்தளங்களில் பிரகாசித்து வருகிறார்.

ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில், அவரது பதிவுகள் அதிகரித்துள்ளன.

விதவிதமாக ஆடைகளை அணிந்து, அதனை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் அவர், இரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைகிறார்.

  • தொடங்கியவர்

ஆபாச படங்களால் மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

 

ஆபாச படங்களால் மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

அமெரிக்காவை சேர்ந்தவர் மாடல் அழகி எல் ஜான்சன். இவருக்கு இன்ஸ்ட்டாகிராமில் மட்டும் 4,50,000 பாலோவர்ஸ் உள்ளனர். அரை குறை ஆடைகள், உள்ளாடைகளில் புகைப்படம் எடுத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

ஆபாச படங்களால் மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

எல் ஜான்சன் தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி உடை அணிந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அது அநாகரீகமாக இருப்பதாகக் கருதி அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியது நிர்வாகம்.

ஆபாச படங்களால் மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

இன்ஸ்டாகிராம் நிர்வாகம் எல் ஜான்சனின் கணக்கை முடக்குவது இது மூன்றாவது முறை ஆகும். முன்னதாக ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது.

ஆபாச படங்களால் மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

எல் ஜான்சன் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக பலரும் இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்தே அவரது கணக்கு முடக்கப்பட்டது.

https://news.ibctamil.com/

  • தொடங்கியவர்

"லஞ்ச் பாக்ஸ் பிசினஸில் 1000 குழந்தைகளுக்கு நல்ல உணவு... 45 பேருக்கு வேலை!’’ - நெகிழும் கிருபா தேவி

 

கிருபா தேவி

ன்று நிலாவைக் காட்டி பால் சோறு ஊட்டிய தாய்மார்கள், இன்று யூடியூபில் ரைம்ஸ் காட்டி சாதம் ஊட்டுகிறார்கள். நிலவைப் பார்த்து குழந்தைகள் சாப்பிட்டபோது, அங்கே ஆயா வடையை மட்டுமே சுட்டுக்கொண்டிருந்தார். இந்த யூடியூப் சேனல்கள் அப்படியா? ஒவ்வொரு ரைம்ஸுக்கு இடையே விதவிதமான ஜங்க் ஃபுட் விளம்பரங்களைக் காட்டி சுண்டி இழுக்கிறது. கார்ட்டூன்களை கதாநாயகர்களாக நம்பும் பிஞ்சுகளுக்கு, விளம்பரத்தில் வரும் உணவு வகைகளும் அப்படித்தானே.

ஒரு பக்கம் விளம்பர மாயை, மற்றொரு பக்கம் பள்ளிக்குச் செல்லும் வேகத்தில் காலை உணவைத் தவிர்ப்பது எனக் குழந்தைகளின் வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான உணவை அவர்களுக்கு எப்படிக் கொடுப்பது எனப் புரியாமல் பெற்றோர்களும் தவிப்பில் இருக்கிறார்கள். இதற்கான தீர்வாக, ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைக் கொண்டுசெல்லும் 'லஞ்ச் பாக்ஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார், சென்னை போரூரைச் சேர்ந்த கிருபா தேவி. 

ஸ்டூடண்ட்ஸ் கேம்ப்

“நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினீயர். என் கணவர் எம்.பி.ஏ முடிச்சுட்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். என் பையன் பெயர் மதி கணேஷ். அவனுக்கு மூணு வயசு இருக்கும்போது சாப்பாடு ஊட்டுறது பெரிய சவாலா இருந்துச்சு. ஆனால், அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கிறவங்க தங்கள் குழந்தைச் சாப்பிட்டால் போதும்னு கடைகளில் விற்கும் ஜங்க் ஃபுட்ஸை வாங்கிக் கொடுப்பாங்க. அதைப் பாக்கிறப்ப மனசுக்குக் கஷ்டமா இருக்கும். இப்படி ரெடிமேடா கிடைக்கிறதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீங்கன்னு அவங்ககிட்ட சொல்வேன். என் பையனும் சாப்பிடாமல் அடம்பிடிக்கிறப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

ஆரம்பத்தில், அவன் ஆசைப்பட்டுக் கேக்கும் பீட்சா, கேக், பர்கர் போன்றவற்றை வீட்டிலேயே ரெடி பண்ணினேன். பீட்சாவில் மல்டி கிரைன்ஸ் தூவியும், மைதா சேர்க்காத கேக், அதில் ஸ்ட்ராபெரி, பைனாப்பிள்னு ஃப்ரூட்ஸை சேர்த்துக் கொடுத்தேன். பீட்ரூட் பர்கர், வெஜிடபுள் இட்லி என வித்தியாசமா செஞ்சுகொடுத்ததும் விரும்பிச் சாப்பிட ஆரம்பிச்சான். இதைப் பக்கத்து வீட்டில் இருக்கிறவங்களுக்கும் சொல்லிக்கொடுத்தேன். அப்போதான் ஏன் இதை ஒரு பிசினஸா பண்ணக்கூடாதுன்னு யோசிச்சு களத்தில் இறங்கினேன்” என்கிறார் கிருபா தேவி. 

ஸ்டூடண்ட்ஸ் கேம்ப்

திருமணத்துக்குப் பிறகு கணவருக்கு உதவியாக வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கிருபா தேவிக்கு, தன் மகனுக்காக தயாரித்த ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளே புதிய பாதையைக் காட்டியுள்ளது. 

“பிசினஸ் பண்ணணும்னு முடிவு பண்ணினதும் எட்டு மாசம் நியூட்ரிஷன் பத்தின ரிசர்ச் பண்ண ஆரம்பிச்சேன். பலரும் என் ஐடியா சரி வராதுன்னு சொன்னாங்க. அப்போதான் என் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச ஒரு செஃப் அறிமுகமானார். அவரோடு சேர்ந்து நியூட்ரிஷனிஸ்ட் கொடுத்த ஐடியாக்களை வெச்சு ஸ்நாக்ஸ், ஃபுட்ஸ் எல்லாம் தயாரிக்க ஆரம்பிச்சேன். மூணு மாசத்துக்குக் குழந்தைகள், ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் என மூன்றாயிரம் பேருக்கு ஃப்ரீயா கொடுத்தேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதும், ஆன்லைன்ல பிசினஸை ஆரம்பிச்சேன். 2013 டிசம்பர் மாசம் 25 லஞ்ச் பாக்ஸோடு ஆரம்பிச்ச இந்த பிசினஸ், இப்போ தினமும் 1000 பாக்ஸ் வரை சேல்ஸ் ஆகுது. 45 பேருக்கு வேலைவாய்ப்பையும் கொடுத்திருக்கேன். 

கிச்சன்

கவிஞர் தாமரை, டி.டி.வி தினகரன் போன்ற பிரபலங்களுக்கும் டாக்டர்ஸ், அட்வகேட்ஸ் எனப் பலரின் வீடுகளுக்கும் என் லஞ்ச் பாக்ஸை டெலிவரி பண்றதை நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. இன்றைய குழந்தைகளுக்கு சத்தான உணவுகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம் என்கிற மன நிறைவும் கிடைக்குது'' என்கிறார் பெருமிதப் புன்னகையோடு. 

கிருபா தேவியின் அடுத்தத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களிடம் நியூட்ரிஷன் குறித்த விழிப்புஉணர்வு முகாமை நடத்துவது, இந்த லஞ்ச் பாக்ஸை குறைந்த விலையில் அவர்களிடமும் கொண்டுபோய்ச் சேர்ப்பது. 

 

நல்ல முயற்சிக்குப் பாராட்டும் பூங்கொத்தும்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, sitzt und Text

 

அறிவுடையார் எல்லாம் உடையார்...! (இன்று உலக எழுத்தறிவு தினம்)

அறிவு ஒரு கூர்மையான ஆயுதம்... அறிவுடையார் எல்லாம் உடையார். அவ்வகையில், எழுத்தறிவுதான் இந்தச் சமூகத்தின் ஆணிவேர் ஆகும். எழுத்தறிவின்மையை, ஒரு குற்றம் என்று கூறியுள்ளார் காந்தியடிகள். இதெல்லாம் எதற்கு இப்போது என யோசிக்கிறீர்களா? இன்று, (செப்-8) உலக எழுத்தறிவு தினம்.

எழுத்தறிவு தினம்!

ஐ.நா. அமைப்பின் அங்கமாகிய யுனிஸ்கோ எழுத்தறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லா உலகை உருவாக்கவும் 1965-ம் ஆண்டு, முதன்முதலில் உலக எழுத்தறிவு தினத்தினை செப்டம்பர் 8-ம் தேதி நடத்தியது. அந்த மாநாட்டில்தான் உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றிய அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1966 செப்டம்பர் 8 முதல் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும் உணரவைப்பதே இந்தத் தினத்தின் நோக்கம்.

எழுத்தறிவின்மை!

ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று கூறப்படுகிறது. உலகின் பலதரப்பட்ட விவரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில், எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எழுத்தறிவு பிரச்னைதான் கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சமூகப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் எழுத்தறிவுப் பெற்றவர்களாக உள்ளனர். இதில் 82 சதவிகிதம் ஆண்களும், 65 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இதன்படி எழுத்தறிவில், கேரளா முதல் இடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. யுனெஸ்கோவின், ‘அனைவரும் கல்வி பற்றிய உலக அறிக்கை’யின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.

எழுத்தறிவின்மையும், பிரச்னைகளும்!

எழுத்தறிவைப் பெறமுடியாததற்கான சமூக நிலை தொடர்பானவைகளில் கவனம் செலுத்தப்பட்டது. வறுமை, ஆரோக்கியமின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஓர் அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்விச் செயல்பாடுகள், அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை வாசிக்க, எழுதத் தெரியாமை என்பதையும் தாண்டி, நாட்டின் பல்வேறு முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரையில், பொருளாதாரம் போன்றவற்றுக்குக் கல்வியே பிரதானம். எனினும், கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம். பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, பேச, கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.

எழுத்தறிவு மிகவும் முக்கியம்!

எழுத்தறிவு, ஒரு தனியாளுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவது. ஆகையால், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவு என்பது உண்ணும் உணவைவிடவும், பார்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது. கல்வியும் எழுத்தும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழவேண்டும். கல்விக்கும் எழுத்துக்களுக்கும் முடிவே கிடையாது...

- ஜெ.நிவேதா

எழுத்தறிவு உடையோர் விகிதாசாரத்தில் உயர் மட்டம் பேணும் இலங்கை

 
On 3 hours ago
எழுத்தறிவு உடையோர்  விகிதாசாரத்தில்  உயர் மட்டம் பேணும்  இலங்கை
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வரு­டா­வ­ரு­டம் செப்­ரெம்­பர் மாதம் எட்­டாம் திகதி உலக எழுத்­த­றிவு தின­மாக கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது. பொது­வாக எழுத்­த­றி­வென்­பது எழு­த­வா­சிக்­கத் தெரிந்து கொண்­டுள்ள திறன் என அர்த்­தப்­ப­டுத் தப்படு­கின்­றது.

இன்று உல­கில் எண்­பது கோடி வளர்ந்­த­வர்­க­ளுக்­கும் ஏழு கோடி சிறு­வர் க­ளுக்கும் எழுத்­த­றிவு கிடை­யாது. இவர்­க­ளுக்­குப்­பா­ட­சா­லை­கள் இல்லை. அல்­லது பாட­சா­லை­க­ளில் கற்­பித்­த­லுக்­குக் கட்­ட­ணம் அற­வி­டு­வ­த­னால் அவர்­க­ளால் பாட­சாலை செல்ல முடி­ய­வில்லை. இவை­மட்­டு­மன்றி இதற்­கு­வேறு பல கார­ணங்­க­ளும் உண்டு.

இலங்­கை­யில் வாழும் மக்­கள் அதிர்ஷ்ட­சா­லி­கள் என்றே கூற வேண்­டும். இங்கு இல­வ­சக்­கல்வி வச­தி­யி­ருப்­ப­தால் எல்­லோ­ரும் பாட­சா­லைக்­குச் செல்ல முடி­கின்­றது.

எழுத்­த­றிவு என்­பது வெறு­மனே எழுத்­துக்­களைத் தெரிந்து கொள்­வது மட்­டு­மல்­ல,­வாழ்க்­கை­யோடு தொடர்­பான சக­ல­வி­ட­யங்­க­ளை­யும் அறிந்து கொள்­வ­தா­கும்.

இதனை ஆங்­கி­லத்­தில் பங்ச­னல்லிற்ரெர்சி (Functional Literacy) என்று கூறு­கி­றார்­கள். இத­னை செய­லாற்­றல் எழுத்­த­றிவு என மொழி­பெ­யர்க்­க­லாம். செய­லாற்­றல் எழுத்­த­றிவு என்­பது, வாழ்க்கை தொடர்­பான விட­யங்­களைத் தொடர்ச்­சி­யாகக் கற்­றுக் கொள்­வ­தா­கும்.

அதா­வது எழுத்­த­றிவு வெறு­மனே பாட­சா­லைக் கல்­வி­யோடு முடிந்து விடு­வ­தில்லை. அது வளர்ந்­த­வர்­கள் வாழ்­வி­லும், குறிப்­பாக கல்­வித்­து­றை­யி­லும் பின்­தங்­கி­யுள்ள சமூ­கத்­தி­ன­ரி­டையே வாழ்­நாள் முழு­வ­தும் நீடித்­தி­ருக்க வேண்­டிய ஒன்­றா­கும்.

எழுத்தறிவை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்க பன்னாட்டு ரீதியில் முயற்சிகள்

worth-writing.jpgwriterwritingpixabaypublicdomain.jpg

உல­கில் வாழும் மக்­க­ளில் 80 கோடிக்கு மேற்­பட்­ட­வர்­கள் அடிப்­படை எழுத்­த­றிவு இல்­லா­த­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எழுத்­த­றி­வற்­ற­வர்­க­ளில் 52 கோடிப் பேர் பெண்­க­ளா­வர்.

1965 ஆம் ஆண்­டுக்கு முன்­னர் வாசித்­த­றி­தல், எழுத்­த­றிவு என்­பவை உல­க­மக்­கள் மத்­தி­யில் பின்­தங்­கிய நிலை­யி ­லேயே இருந்­தது. 1965 ஆம் ஆண்­டுக்குப் பின்­னர் புத்­த­கத்தை நாடு­தல், வாசித்­த­றி­தல், நூல்­நி­லை­ யங்­க­ளைப் பயன்­ப­டுத்­தல், எழுத்­த­றி­வைப் பெற்­றுக் கொள்­ளு­தல் என்­பவை ஒரு மனி­த­னுக்கு முக்­கி­ய­மான தேவை என பன்­னாட்டு ரீதி­யில் உண­ரப்­பட்­ட­தன் கார­ண­மாக, வாசிப்­புத் தி­னம், புத்­த­க­தி­னம், எழுத்­த­றி­வுத்­தி­னம், போன்­ற­வற்றை பன்­னாட்டு ரீதி­யில் அறிவித்து உல­கம் முழு­வ­தி­லும் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

உல­கத்­தில் எந்­த­வொரு மனி­த­னா­வது தமது அன்­றாட வாழ்க்­கை­யில் ஒன்றை அறிந்து கொள்­வ­தற்­கும் அத­னைப் புரிந்து கொள்­வ­தற்­கும் எழுத்து மூலம் தொடர்பு கொள்­வ­தற்­கும் இய­லாத நிலை­யி­லும், வாசித்­த­றிய இய­லாத நிலை­யி­லும் காணப்­ப­டின், அந்த மனி­தன் எழுத்­த­றி­வில்­லா­த­வன் என்றே சமூ­கம் மதிப்­பி­டு­கின்­றது. எழுத்­த­றி­வும், வாசிப்பு அறி­வும் எந்­த­வொரு மனி­த­னுக்­கும் இரண்டு கண்­கள் போன்­றவை.

அடிப்­படை எழுத்­த­றிவை ஒரு சரா­சரி மனி­தன் கற்­றுக் கொள்ள வேண்­டி­ய­தன் அவ­சி­யம்பற்றி மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை உண்­டாக்­கும் வகை­யில் எழுத்­த­றி­வைப் பெற்­றுக் கொள்­ளா­மல் அதனை இழந்­த­வர்­க­ளுக்­கான வளர்ந்த பரா­யத்­தி­ன­ருக்­காக முறை சாராக்­கல்­வித்­திட்­டத்­தின் கீழ் எழுத்­த­றி­வைக் கற்­பிக்­கின்ற நோக்­கத்­து­டன் ஒவ்­வொரு வரு­ட­மும் செப்­ரம்­பர் மாதம் எட்­டாம்­தி­கதி உலக எழுத்­த­றி­வுத் தினம் கடைப் பிடிக்கப்பட்டு வரு­கின்­றது.

எழுத்தறிவு குறித்து நிர்ணயம்

IMG_3197.jpg

எழுத்­த­றி­வைப் பற்றி ஐ.நா.சபை­யின் ஐக்­கி­ய­நா­டு­கள் கல்வி அறி­வி­யல் பண்­பாட்டு நிறு­வ­னம் பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது.

எழுத்­த­றிவு என்­பது பல்­வேறு சூழ்­நி­லை­க­ளு­டன் தொடர்­பு­டைய அச்­சி­டப்­பட்ட அல்­லது எழுத்­தப்­பட்­ட­வற்­றைப் பயன்­ப­டுத்தி அடை­யா­ளம் காண்­ப­தற்­கும், புரிந்து கொள்­வ­தற்­கும் ,விளங்­கிக் கொள்­வ­தற்­கும், ஆக்­கு­வ­தற்­கும், தொடர்பு கொள்­வ­தற்­கும் கணிப்­ப­தற்­கு­மான திற­னைக் குறிக்­கும்.

எழுத்­த­றிவு ஒரு தனி நப­ருக்­குத் தன்­னு­டைய இலக்கை அடை­வ­தற்­கும் தனது அறி­வை­யும் தகு­தி­யை­யும் வளர்த்­துக் கொள்­வ­தற்­கம் பரந்த சமு­தா­யத்­தில் இவற்றை முழு­மை­யா­கப் பற்­று­வ­தற்­கு­மான ஆற்­ற­லைப் பெறு­வ­தற்கு உத­வு­கி­றது.

எந்த மொழி­யி­லும் இல­கு­வான வசன சொற் தொ­டர்­களை எழு­த­வும் ,படிக்­க­வும், தெரி­யாமை எழுத்­த­றி­வின்­மை­யா­கும்’’ என்று ஐ.நா.வின் சாச­னம் எழுத்­த­றி­வின்­மையை வரை­யறை செய்­கின்­றது.
பொது­வாக எழுத்­த­றிவு என்­பது ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, அத­னைக் கேட்­டுப் புரிந்து கொள்­ளக்­கூ­டிய ஆற்­ற­லைக் குறிக்­கும்.

இன்று எழுத்­த­றிவு பல்­வ­கைப்­பட்ட தொடர்­பா­டல் முறை­க­ளைப் பின்­பற்றி ஒரு எழுத்­த­றி­வுள்ள சமூ­கத்­து­டன் இணை­யா­கப் பங்­க­ளிக்­கக்­கூ­டிய ஆற்­றலை வழங்­கு­கி­றது.

உலக மக்கள் மத்தியில் எழுத்தறிவை ஊக்குவிக்க யுனெஸ்கோ நிறுவனம் பங்களிப்பு

1965 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 8ஆம் திகதி ‘தெஷ்ரான்’ நக­ரில் உல­கத்து நாடு­க­ளின் கல்வி அமைச்­சர்­களை ஒன்று கூட்டி மாநா­டொன்­றினை ‘யுனெஸ்கோ நிறு­வ­னம்’ ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

உல­க­ளா­விய ரீதி­யில் எதிர்­கா­லத்­தில் ஒரு பகுதி மனித குலத்­துக்கு எழுத்­த­றி­வின்­மை­யால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்­க­ளுக்­குத் தீர்­வி­னைக் காண வேண்­டும் என்ற வேண்­டு­கோள் அந்த மாநாட்­டில் முன்­வைக்­கப்­பட்­டது.

பன்­னாட்டு கல்­வி­ய­மைச்­சர்­கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பல முக்­கிய தீர்­மா­ னங்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. அவற்­றில், ஒவ்­வோர் ஆண்­டும் செப்­ரெம்­பர் மாதம் 8 ஆம் திக­தியை எழுத்­த­றிவு தின­மாக உலக மக்­கள் கடைப் பிடிக்க வேண்­டும் என முன்வைக்கப் பட்ட பிரேரணை ஏற்­றுக் கொள்­ளப்­பட்டு ஐ.நா.சபை அதனை அங்­கீ­க­ரித்­தது.

1966 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 8 ஆம் திக­தி­யி­லி­ருந்து உல­கி­லுள்ள சகல நாடு­க­ளும் உலக எழுத்­த­றிவு தினத்தை அனுஷ்டித்து வரு­கின்­றன. எழுத்­த­றிவு ஒரு மனி­த­னுக்கு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­ப­தைத் தனி­ம­னி­த­னுக்­கும் பல்­வேறு வகுப்­பி­னர்க்­கும் பிற சமு­தா­யத்­தி­ன­ருக்­கும் எடுத்­து­ரைப்­பதை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­தா­ன­தாக அமைந்த நாளே உலக எழுத்­த­றிவு தின­மா­கும்.

எழுத்­த­றிவு பெறு­வது ஒரு மனி­த­னுக்­கு­ரிய கட்­டாய தேவை­யா­கும். அடிப்­படை மனித உரி­மை­யு­மா­கும். எழுத்­த­றி­ வென்­பது மனித முன்­னேற்­றத்­திற்கு மிக அவ­சி­ய­மான தொன்­றா­கும். எழுத்­த­றிவு என்­ப­தி­லி­ருந்து ஒரு மனி­தன் இன்­றைய நாக­ரிக உல­கில் வில­கி­யி­ருக்க முடி­யாது.

52 ஆண்­டு­க­ளில் எழுத்­த ­றிவு பெற்ற மக்­க­ளைக் கொண்­ட­வை­யாக உலக நாடு­கள் பல காணப்­பட்­டா­லும், வேறு பல நாடு­க­ளில் இடம்­பெற்று வரு­கின்ற உள்­நாட்­டுப் போர்­கள், இன­மோ­தல்­கள், வறுமை, நாடோடி வாழ்க்கை, கல்­வி­யில் அக்­க­றை­யின்மை, அக­தி­க­ளாய் இடம்­பெ­யர்ந்து வேறு­நா­டு­க­ளில் வாழ்­வது, போசாக்­கின்மை பல்­வே­று­பட்ட அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்­குள் அகப்­பட்­டுக் கொள்­ளல் போன்­ற­வற்­றால் உல­கில் 80 கோடி மக்­கள் எழுத்­த­றி­வி­னைப் பெற்­றுக் கொள்­ளா­த­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.

ஒரு மொழி­யில் புரி­த­லு­டன் சரி­யான முறை­யில் உரை­யா­ட­வும், எழு­த­வும் தெரிந்­தவரே எழுத்­த­றிவு பெற்­ற­வ­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார். எழுத்­த­றிவை முழு­மை­யா­கப் பெறு­வ­தற்கு அவர் உயர் கல்­வித்­த­ரா­த­ரம் வரை படித்­தி­ருக்க வேண்­டு­மென்று நிர்­ண­யம் செய்­யப்­ப­ட­வில்லை. தனது மொழி­யில் தெளி­வா­கப் பேச­வும் , வாசிக்­க­வும் , முறை­யாக எழு­த­வும் , கற்­றுக்­கொண்­டாலே ஒரு மனி­தர் தமது அடிப்­படை உரி­மையை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­கின்­றார்.

எழுத்தறிவு பெற வேண்டியது இன்றைய உலகின் அவசியம் மிக்கதொரு செயற்பாடு

எழுத்­த­றிவு பெறு­வது ஒரு­வ­ரின் கட்­டா­யக் கட­மை­யா­கும். ஆயுள் வரை ஒரு மனி­த­னோடு உற­வா­டும் அடிப்­ப­டைக் கல்­வி­யின் இத­ய­மாக இருப்­பது எழுத்­த­றி­வா­கும். படித்­தல், வாசித்­தல் மட்­டும் ஒரு மனி­தனை உயர்த்­தி­வி­டாது. அத­னால் தான் தனி­ந­பர் ஆளு­மை­யி­ல்­இருந்து சமூக மனி­த­வள அபி­வி­ருத்தி மற்­றும் கல்­விச் செயற்­பா­டு­கள் மற்­றும் அதற்­கான சந்­தப்­பங்­கள் யாவும் எழுத்­த­றி­வி­லேயே தங்­கி­யுள்­ளன.

எழுத்­த­றி­வைப் பூர­ண­மா­கப் பெற்­றக் கொண்­ட­வர்­க­ளுக்­குக் கல்வி வாய்ப்­புக்­களை இல­கு­வா­கப் பெற்­றுக் கொள்­ளக்­கூ­டிய சந்­தர்ப்­பங்­கள் கிடைக்­கின்­றன. ஒரு­வர் சமூக பொரு­ளா­தார ரீதி­யில் வளர்ச்சி பெறு­வ­தற்­கும் எழுத்­த­றிவு மிக அவ­சி­ய­மா­கும்.

இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் எழுத்­த­றி­வில் மேன்­மை­யற்­ற­வர்­க­ளாக கூடிய சத­வி­கி­தத்­தி­னர் இருக்­கின்­ற­னர் என்­பதை அண்­மைக்­கால ஆய்­வு­கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. தெற்­கா­சிய நாடு­க­ளோடு ஒப்­பி­டப்­ப­டு­கின்ற போது எழுத்­த­றிவு வீதத்­தில் இலங்கை முத­லி­டத்­திலே இருக்­கின்­றது.

90.8 சத­வீ­த­மான இலங்கை மக்­கள் எழுத்­த­றிவு கொண்­ட­வர்­க­ளாக உள்ளனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

30 ஆண்­டு­க­ளாக இடம்­பெற்ற போர் வேளை­யி­லும் தமிழ் மக்­க­ளின் மீதான எழுத்­த­றி­வுக் கல்வி பாதிக்­கப்­ப­ட­வில்லை. இலங்கை நாட்டு மக்­க­ளின் எழுத்­த­றிவு திருப்­தி­க­ர­மா­கவே காணப்­ப­டு­வ­த­னால் எழுத்­த­றி­வுக்­கல்­விக்கு மேற்­கொண்டு ஊக்­கம் கொடுக்­கப்­பட வேண்­டும்.

எழுத்­த­றிவு பெற்­றால்­தான் ஜன­நா­ய­கத்­தின் உரி­மை­களை நிலை­நாட்­ட­மு­டி­ யம். எழுத்­த­றிவு மூல­மான விழிப்­பு­ ணர்வு அதற்­கான செயற்­பா­டு­கள் ஊக்­கம் என்­பவை நாட்டு மக்­கள் மத்­தி­யில் மேன்­மே­லும் ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும்.

இன்­றைய பெற்­றோர்­கள் தமது குழந்­தை­க­ளின் எழுத்­தாற்­ற­லில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும். இன்­றைய நவீன காலத்­தில் குழந்­தை­கள் சிறு­வர்­கள் மாண­வர்­கள் தொலை­பேசி இணை­யத்­தி­னூ­டா­கத் தங்­க­ளது நேரத்­தைச் செல­வி­டு­வ­த­னால் சிறு­வ­ய­து­க­ளில் எழுத்­த­றி­வுக் கல்­வி­யைப் பூர­ண­மா­கக் கற்­றுக் கொள்ள முடி­யா­த­தொரு சூழ்­நிலை உள்­ளது.

எனவே அவர்­க­ளுக்­கான எழுத்­த­றிவை ஊக்­கு­விக்க வேண்­டும். இன்­றைய எழுத்­த­ றிவு தினத்­தி­லி­ருந்­தா­வது அதற்­காக அக்­கறை காட்­டிச் செயற்­ப­டு­வோம்

  • தொடங்கியவர்
 

‘ தும்மி’த் துணியும் காட்டு நாய்கள்!

ஜனநாயகம் மக்களுக்கானது மட்டுமல்ல --- ஆப்ரிக்க காட்டுநாய்களும் கூட ஜனநாயகமாக சிந்திக்கின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்த அழிவின் ஆபத்திலிருக்கும் இந்த விலங்குகள் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாற மற்ற நாய்களின் கருத்தைக் கேட்க தும்மலைப் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக ஓய்வுக்குப் பின் வேட்டையைத் தொடர்வதா என்பது குறித்து முடிவெடுப்பதில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த அவை தும்மலை பயன்படுத்துகின்றன என்று வேல்ஸில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக் கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

( படங்கள் மற்றும் காணொளி—ஆராய்ச்சியாளர்கள், ஆர்.எச்.வாக்கர், ஏ.ஜே.கிங், ஜே.டபுள்யூ.மக்நஃப் மற்றும் என்.ஆர்.ஜோர்டான்)

  • தொடங்கியவர்

வைரலாகும் கேரள பெண்களின் ஜிமிக்கி கம்மல் நடனம்

 

 
keralaPNG

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டர்கிராம் என அனைத்து சமூக ஊடகங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய கேரள கல்லூரி பெண்கள்  நடனம்.

கேரளாவில் உள்ள ISC  கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'வெலிபாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

 

தற்போது இந்த நடனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

நெடிசன்கள் ஸ்டேடஸ்களாலும், மீம்ஸ்களாலும் இந்த பெண்களின் நடனத்தை தினமும் ட்ரண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழக இளைஞர்கள் பலர் இப்பெண்களின் நடனத்தைக் பகிர்ந்து தமிழ்ப் பெண்களை வம்புக்கிழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யூ டியூப்பில் இந்த வீடியோவை சுமார் 3 கோடிக்கு அதிகமானவர்கள் கண்டிருக்கிறார்கள். 50,000க்கும் அதிகமானவர்கள் விருப்பம் குறியிட்டிருக்கிறார்கள். 1,000க்கு மேற்பட்டவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் (Photos)

 


உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் (Photos)
 

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

அடுத்த ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெறவுள்ளது.

இவரது ஒவ்வொரு நகமும் சுமார் 2 அடி நீளம் உள்ளது.

என் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை நகங்களை வளர்ப்பதற்கே செலவிட்டிருக்கிறேன். 23 ஆண்டுகளுக்கு முன்பு என் தோழியைப் பார்த்துதான் நகங்களை வளர்க்கும் ஆர்வம் வந்தது. ஒரு கட்டத்தில் நகங்களைப் பராமரிப்பதும் வளர்ப்பதுமே என் முழு நேர வேலையாக மாறிவிட்டது. பின்னர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. 23 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன். இன்று சாதனையை எட்டிவிட்டேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி.

என அயன்னா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

நீண்ட நகங்கள் காரணமாக தன்னால் எந்த வேலையையும் தனியாக செய்ய முடியாதுள்ளதாகவும், நகங்களுக்கு பாலிஷ் போடுவதற்கு ஒரு வாரம் எடுக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

nail 1

Ayanna Williams - Longest Fingernails Guinness World Records 2017 Photo Credit: Kevin Scott Ramos/Guinness World Records

http://newsfirst.lk/tamil

  • தொடங்கியவர்

மழையில் நிர்வாண பிராத்தனை ; இணையத்தை கலக்கும் வீடியோ (வீடியோ இணைப்பு)

மலேசியாவில், ஜலான் கம்புங் பாரு என்ற இடத்தில் அமைந்துள்ள சந்தை கட்டிடத்தொகுதியிற்கு அருகாமையில் நபரொருவர் நிர்வாணமாக இறை வழிப்பாட்டில் ஈடுப்படும் காணொளி இணையத்தில் பரவி வருகின்றது.

Local_News_copy.jpg

குறித்த வீடியோவில் நிர்வாணமாக நபரொருவர் கரங்களை மேல் உயர்த்திய வண்ணம் வீதியிற்கு வந்து கடும் மழையில் முழங்கால் இட்டு பிராத்தனை செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.

இவ்வாறு குறித்த நபர் ஏன் நடந்துக்கொண்டார் என தெரியவில்லை. ஆயினும் வாகன நெரிசல் மிக்க அவ்வீதியில் அவர் நிர்வாணமாக பிராத்தனையில் ஈடுப்படும் காட்சி இணையத்தில் பிரசித்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

நீங்கள் மனது வைத்தால் இரண்டு பேரின் இருட்டை விரட்டலாம்! #NationalEyeDonationDay 

 

தேசிய கண் தான தினம் இன்று. கண்கள் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்றால், சிரசுக்கு கண் தான் பிரதானம். இந்தியாவில் சுமார் ஒன்றரைக் கோடி பேர் பிறப்பில் அல்லது விபத்து காரணமாக பார்வைத்திறன் இழந்து தவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறது. இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெறுவதன் மூலம் பார்வையிழந்து தவிக்கும் பெரும்பாலானோருக்கு ஒளியூட்ட முடியும். அப்படியான கண் தானத்தின் தேவையையும் சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 8-ம் தேதி தேசிய கண் தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

கண் தானம்

பார்வை பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர்  'கார்னியா' குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கார்னியா எனும் விழி வெண் படலம் பாதிப்பு அடைந்தவர்களின் கண்களுக்குள், ஒளிக் கதிர்கள் ஊடுருவுவதில்லை. கண்களில் கிருமித்தொற்று,  அடிபடுவது, ஊட்டச்சத்துக் குறைவு, தவறான கண் சிகிச்சை, அதிக ஒளியை பார்ப்பது போன்ற பல காரணங்களால் கார்னியா பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி விட்டு, தானமாக கிடைத்த கண்ணின் கார்னியாப் பகுதியை மட்டும் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.