Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நரகத்தின் வாயிலில் ஒரு கடைசிக் கதறல்... மரத்தவளையின் வாயில் பாம்பு! #Viral

 

பாம்பு, தவளையை விழுங்குவதைப் பல முறை நேரிலும் தொலைக்காட்சியிலும்  பார்த்திருக்கிறோம். சில நாள்களாக இணையத்தில் தவளை ஒன்று பாம்பை விழுங்குவதுபோல ஒரு புகைப்படம் சுற்றி வருகிறது. எல்லாம் முடிந்து மரணித்துப் போகிற ஓர்  உயிரினத்தின் கடைசி குரல் எப்படி எல்லாம் ஒலிக்கும், விடுதலையின் கடைசி கட்டப் போராட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த மரத்தவளைப் புகைப்படம் ஒரு சாட்சியாக இருக்கிறது.   

கடந்த வார இணைய  வைரலாக இருந்தது இந்தப் புகைப்படம். தவளை ஒன்று  பாம்பை விழுங்குகிறது. தவளை வாயில் பாம்பின் தலை மட்டும் வெளியில் இருக்க உடல் முழுதும் தவளைக்குள்  சென்றுவிடுகிறது. பாம்பின் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்டது இந்தப் படம்.  இந்தப் புகைப்படம் உண்மையா என்கிற ரீதியில் உலகெங்கும் விவாதங்களும் நடந்துவருகின்றன.

 

மரத்தவளை


இந்தப் புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது. கடந்த வாரம் ரெட்டிட் இணையதளத்தில் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. பாதுகாப்பு உயிரியலாளர் மற்றும் தேசிய புவியியல் ஆர்வலர் ஜோடி ரவுலி என்பவர் புகைப்படத்தில் இருக்கிற தவளை ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கக் கூடிய பசுமை மரத்தவளை (GREEN TREE FROG) என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.  விழுங்கப்பட்ட பாம்பு கடும் விஷம் கொண்ட பிரௌன் வகை பாம்பு எனக் கண்டறியப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட  இந்தப் புகைப்படம் எந்த மாதிரியான சூழ்நிலையில் எடுக்கப்பட்டது, எங்கு எடுக்கப்பட்டது, யாரால் எடுக்கப்பட்டது என்கிற எந்தத் தகவலும் இப்பொழுது வரை தெரியவில்லை.

ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா நாடுகளில் பசுமை மரத் தவளை, வெள்ளை மரத் தவளை, டம்பி மரத்  தவளை என மூன்று வகையான தவளைகள் இருக்கின்றன. தவளை இனத்தின் முக்கிய இனம் பசுமை மரத் தவளை இனம். மரப்பொந்துகளிலும் பாறைகளுக்கு அடியிலும் வாழ்கிற மரத்தவளைகள் இரவு நேரத்தில் இரையைத் தேடி வெளியே வரும். மரத்தவளைகள்  புழு பூச்சிகள் கரையான் எனச் சிறிய வகை உயிரினங்களை உணவாகக் கொள்கின்றன. சமயத்தில் பாம்புகளையும் உண்ணும் பழக்கமுடையவை. பல மருத்துவ குணங்கள் இருக்கிற இந்தத் தவளை இந்தோனேசியா விலங்குகள் சந்தையில் அதிக டிமாண்டில் விற்பனையாகிற பட்டியலில் இருக்கிறது. பாங்காக்கில் இருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிற இத்தவளைகளைப் பாதுகாப்பு பட்டியலில் வைத்துக் கண்காணித்துவருகிறது ஆஸ்திரேலியா அரசு.

மரத்தவளை

 

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப எல்லா தவளை இனங்களும் தனது உடலின் வெப்பநிலையைத் தகவமைத்துக்கொள்ளும். தோல் மூலம் சுவாசிக்கும் தன்மை, அமினியாட்டிக் திசுவால் சூழப்பட்ட கருவைப் போன்ற பண்புகளைத் தவளை கொண்டுள்ளதால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மோசமான மாற்றங்களை இவற்றால் தாங்கிக்கொள்வது கடினம். அதனால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களால், தவளைகளின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் தவளை முக்கிய இரைக்கொல்லிகளாக உள்ளன. ஒரு தவளை மூன்று மாதங்களில் சுமார் 10,000 பூச்சிகளை உணவாகச் சாப்பிடும். பறவைகள், பாம்புகள், என சில உயிரினங்களுக்குத் தவளைகள் உணவாகின்றன. காலம் மாறும் காட்சிகள் மாறும் என்கிற இயற்கையின் அடிப்படையில் இப்போது பாம்புகள் தவளைகளுக்கு உணவாக இருக்கின்றன. வல்லவனுக்கு வல்லவன் பாம்பாகவும் இருக்கலாம். தவளையாகவும் இருக்கலாம்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

''பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது பாவமா?''- கேட்கும் காஷ்மீர் பெண்கள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தாங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், ஆர்வம் குறித்து பேசுகின்றனர்.

  • தொடங்கியவர்

வடகொரியாவில் 1069 ரோபோக்கள் ஒன்றாக சேர்ந்து அசத்திய நடனம்!

 

வடகொரியாவில் மேற்கொண்ட தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 1069 ரோபோக்கள் ஒரே நேரத்தில் நடனமாடின.

ஒலிபரப்பான பாடல்களுக்கு ஒரே மாதிரி நடனம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் மூலம் வடகோரியா கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

வடகொரியாவில் 1069 ரோபோக்கள் ஒன்றாக சேர்ந்து அசத்திய நடனம்!

இச்சாதனையை இவான் முஸ்க் என்ற   அறிவியலாளர் நிகழ்த்தியுள்ளார்.

குறித்த ரோபோக்கள்  தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொண்டு புதுபுது ஸ்டைலில் நடனம் ஆடின.

வடகொரியாவில் 1069 ரோபோக்கள் ஒன்றாக சேர்ந்து அசத்திய நடனம்!

'எந்திரன்' சினிமா படத்தில் நிறைய சிட்டி 'ரோபோ'க்கள் ஒன்றாக சேர்ந்தும், பிரிந்தும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

அது தற்போது உண்மையாகவே நடந்துள்ளது.

இதன் மூலம் வடகொரியா கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

 

ஓராண்டு நீடித்த அரசு முறை துக்கம்!

தாய்லாந்தின் மறைந்த மன்னருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, தலைநகர் பாங்காக்கில் பெருமளவிலான மக்கள் குழுமி வருகின்றனர். ஐந்து நாள் இறுதி நிகழ்வுகள், மிக நுட்பமாக திட்டமிடப்பட்டன. சுமார் பத்து கோடி டாலர் செலவானது.

  • தொடங்கியவர்

பிரேசிலில் 245 பேர் பாலத்தின் மேலிருந்து ஒரே நேரத்தில் குதித்து ஊஞ்சலாடி சாதனை

 


பிரேசிலில் 245 பேர் பாலத்தின் மேலிருந்து ஒரே நேரத்தில் குதித்து ஊஞ்சலாடி சாதனை (Video)
 

பிரேசிலில் 245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது.

 

இப்போட்டியில் சாகச விரும்பிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் அவர்கள் புதிய முயற்சியிலும் ஈடுபட்டனர்.

245 பேர் இணைந்து பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர்.

பாலத்தில் இருந்து ஒரே நேரத்தில் கீழே குதித்து ஊஞ்சல் ஆடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாகசப்போட்டி முடிந்தவுடன் சிலர் பாலத்தில் அடியில் உள்ள நீருக்குள் குதித்தனர், மீதி பேர் பாலத்திற்கு மேலே ஏறினர், இந்த சாகசப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் இது கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்டதாக கூறினர்.

201710231624250491_1_brazilll._L_styvpf

http://newsfirst.lk

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ பிறந்த தினம்: 1881 அக்டோபர் 25-ந்தேதி

ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் மற்றும் சிற்பியான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பாப்லோ பிக்காசோ 1881-ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 25-ந்தேதி) பிறந்தார்.

 
 
 
 
புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ பிறந்த தினம்: 1881 அக்டோபர் 25-ந்தேதி
 
ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் மற்றும் சிற்பியான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பாப்லோ பிக்காசோ 1881-ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 25-ந்தேதி) பிறந்தார்.

பாப்லோ பிக்காசோ ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20-ம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக ‘கியூபிசம்’ என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.

பிக்காசோ, ஹென்றி மாட்டிசு, மார்செல் டச்செம்ப் ஆகிய மூவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெகிழி ஓவியத்தில் புரட்சி செய்த உலகின் தலை சிறந்த ஓவியர்கள் ஆவார்கள். ஓவியம், சிற்பம், அச்செடுத்தல் மற்றும் செராமிக் ஓவியங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிகோலியவர்கள். அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப் படுத்தியவர் பிக்காசோ ஆவார். இவர் தனது 93-வது வயதில் காலமானார்.

1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி ஸ்பெயின் நாட்டிலுள்ள மலகா (Málaga) என்னுமிடத்தில் ஜோச் ரூயிசு பால்சுகா - மரியா பிக்காசோ தம்பதியருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார். பிக்காசோவினுடைய குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.

பிக்காசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார். தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார். பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிக்காசோ நன்கு கற்றுக்கொண்டார்.

1891-ல் பிக்காசோவினுடைய குடும்பம் கொருணா என்ற பகுதிக்குக் குடிபெயர்ந்தது. நான்கு ஆண்டுகள் பிக்காசோவின் தந்தை அங்குள்ள ஓவியப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அங்குதான் தனது மகனின் முடிவுறாத புறா ஓவியத்தைக் கண்ணுற்றார். அது புதிய பாணியைக் கொண்டிருந்தது. மேலும் அபொக்ரைபா என்ற கதையைத் தழுவியதாகவும் இருந்தது. 13 வயதே ஆன தனது மகனின் ஓவியத் திறமையைக் கண்ட ரூயிஸ் மிகுந்த வியப்புக்குள்ளானார்.

பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.

நீலக் காலம் (1901-1904): இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. ஸ்பெயினில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.

ரோஜா நிறக் காலப்பகுதி (1904-1906): இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் ரோஜா நிறச் (pink) சித்திரங்கள் ஆகும். இளைஞர்கள், தலைமுடி வாரும் பெண், நீச்சல் வீரர்கள், குடும்பம், வானர மனிதர்கள் என்பன இக்கால கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களாகும்.

ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909): ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.

பிகாசோவின் வாழ்வையும் படைப்புக்களையும் குறித்து சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிக சிறப்பு வாய்ந்த திரைப்படம் ‘த மிஸ்டரி ஆஃப் பிக்காசோ’ ஆகும். இது 1955-ம் ஆண்டு வெளியாகியது. பிகாசோவை நேரடியாக ஓவியங்கள் வரையச் செய்து அதனை திரைப்படமாக்கினார்கள். ஓவியங்களை திரைப்படமாக்குவது என்பதில் இத்திரைப்படம் முன்மாதிரியாகவுள்ளது.

1996-ல் சுர்வைவிங் பிக்காசோ எனும் திரைப்படம் ஜேம்ஸ் ஐவரி இயக்கத்தில் இஸ்மாயில் மெர்சன்ட் தயாரிப்பில் வெளியானது. இதில் ஆண்டனி ஹாப்கின்ஸ் பிகாசோவாக நடித்திருந்தார். ‘த மான் அண்ட் ஹிஸ் வோர்க்’ என்ற படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது.

பப்லோ பிக்காசோ தன் தொண்ணூறாவது பிறந்த நாளை பொதுமக்களுடன் கொண்டாடினாராம். தொண்ணூறு வயதிலும் அவரின் தூரிகை காயவில்லை. அந்த 90-வது பிறந்தநாள் விழாவில் கடந்த ஒரு மாதத்தில் தான் வரைந்த எட்டு ஓவியங்களை பாரிஸ் ஜாவர் அருங்காட்சிக்கு வைத்து அசத்தினாராம் பிகாசோ. தொண்ணூறு வயதிலும் அயராது உழைத்து நம்பிக்கையுடன் சாதனைப்பட்டியலை நீளச்செய்தவர் பிக்காசோ. அதனால் தான் வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் பிகாசோ.

இவர் தனது 93-வது வயதில் காலமானார். அவரது உடல் பிரான்ஸின் தெற்கில் உள்ள வாவெனார்கஸ் கிராமத்தில் உள்ள செட்யூ என்ற இடத்தில் உள்ள அவரது ஸ்டுடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

குவர்னிகா: இது பிக்காசோவால் வரையப்பட்ட பிரபல ஓவியமாகும். முதலாம் உலக மகா யுத்தத்தில் குவர்னிகா நகருக்கு குண்டு வீசப்பட்டதை மையமாகக் கொண்டு இது வரையப்பட்டது. கொலாச் சித்திர வேலைப்பாட்டை பயன்படுத்தி இதனை அலங்காரம் செய்திருந்தார். யுத்தத்தின் கொடூரத்தன்மை, தனிமை, புலம்பல் ஆகிய வெளிப்பாடுகள் இச்சித்திரத்தின் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 

 

சிங்கப்பூர் ஏர்லைன்சின் முதல் இரட்டை அடுக்கு விமானம் சேவையை தொடங்கியது (அக். 25, 2007)

4 என்ஜின் கொண்ட ‘ஏர்பஸ் ஏ380‘ என்ற மிகப்பெரிய இரட்டை அடுக்கு விமானம் 2005ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இந்த விமானத்தை நிறுத்துவதற்காக பல்வேறு விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன.

 
சிங்கப்பூர் ஏர்லைன்சின் முதல் இரட்டை அடுக்கு விமானம் சேவையை தொடங்கியது (அக். 25, 2007)
 
4 என்ஜின் கொண்ட ‘ஏர்பஸ் ஏ380‘ என்ற மிகப்பெரிய இரட்டை அடுக்கு விமானம் 2005ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இந்த விமானத்தை நிறுத்துவதற்காக பல்வேறு விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன.

இந்த விமானத்தை வாங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2007ம் ஆண்டு அக்டோபர் 25-ம்தேதி அதன் முதல் சேவையை தொடங்கியது.

சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு புறப்பட்டுச் சென்ற முதல் விமானத்தில் பயணம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

இதேநாளில் நடந்த பிற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

2001 - விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.

1936 - ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பேர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.

1945 - இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.

1971 - ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீன குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1991 - யூகோஸ்லாவிய ராணுவம் சிலவேனியாவில் இருந்து முற்றிலும் வெளியேறியது.

2000 - இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். 

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்
‘தகாத நட்புகளை விலக்கி விடுக’
 

image_adb97c0074.jpgஜாக்கிரதையாக இரு என்பதன் அர்த்தம், வீட்டுக்குள் முடங்கி, ஒடுங்கிக் கிடப்பது அல்ல; இந்த உலகில் எல்லாமே நடக்கும். நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பிட முடியாது. அதுசரி, அப்படியாயின் எப்படி நாம் ஜாக்கிரதையாக இருப்பது ஐயா? 

தகாத நட்புகளை விலக்கி விடுக. அறிமுகமில்லாத நபர்களுடன் அதிகம் பேசற்க. பேசும் வார்த்தைகளில் வரைமுறையுண்டு.  

நன்றாகப் பழகிய நண்பர்கள், பெரியோர்களிடம் மட்டும் மனம்விட்டுப் பேசினால், நெஞ்சில் பாரம் குறையும். அதனை விடுத்துப் பொது இடங்களில், நாவடக்கம் அவசியமானது. இக்காலத்து அரசியல் அப்படியிருக்கிறது. மதில்களுக்கும் செவிஉண்டு.  

கண்டபடி உண்ணற்க; சுகாதாரம் பேணுக! கல்வி என்பது அறிவை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் வளர்ப்பதாகும். ஒழுக்க நெறிகளே எம்மைக் காப்பாற்ற வல்லது. எளிமையாக நேர்மையுடன் வாழ்ந்தால் இடையூறு வாழ்க்கையில் ஏது? 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 26

 

1640 : ஸ்கொட்­லாந்­துக்கும் இங்­கி­லாந்து முதலாம் சார்ள்ஸ் மன்­ன­னுக்கும் இடையில் சமா­தான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

1776 : அமெ­ரிக்கப் புரட்­சிக்கு ஆத­ரவு திரட்டும் நோக்கில் பெஞ்­சமின் பிராங்­கிளின் பிரான்ஸ் புறப்­பட்டார்.

park-chung-hee-1-313x400.jpg1859 : பிரிட்­டனின் வேல்ஸ் பிராந்­திய கடற்­ப­கு­தியில் றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்­ததில் 459 பேர் இறந்­தனர்.

1876 : இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையே ரயில் சேவையை ஆரம்­பிப்­ப­தற்­கான தீர்­மானம் பிரித்­தா­னிய அர­சரால் மேற்­கொள்­ளப்­பட்­டது.

1905 : சுவீ­ட­னிடம் இருந்து நோர்வே சுதந்­திரம் பெற்­றது.

1917 : முதலாம் உலகப் போர்: இத்­தாலி கபொ­ரேட்டொ என்ற இடத்தில் ஜேர்­மனி மற்றும் ஆஸ்­தி­ரியா நாடு­க­ளுடன் மோதி கடும் தோல்­வியைத் தழு­வி­யது.

1917 : முதலாம் உலகப் போர்: பிரேஸில் போரில் குதித்­தது.

1947 : இந்­தி­யா­வுடன் காஷ்­மீரை இணைப்­ப­தற்கு காஷ்மீர் மகா­ராஜா சம்­ம­தித்தார்.

1947 : ஈராக்­கி­லி­ருந்து பிரித்­தா­னிய இரா­ணுவம் வெளி­யே­றி­யது.

1955 : ஆஸ்­தி­ரி­­யா­வி­லி­ருந்து கடைசி கூட்­டுப்­படை துருப்­புகள் வெளி­யே­றின. ஆஸ்­தி­ரியா அணி­சேரா நாடாக தன்னை அறி­வித்­தது.

1956 : ரஷ்ய இரா­ணுவம் ஹங்­கே­ரியை முற்­று­கை­யிட்­டது.

1977: பெரி­யம்மை நோய் தாக்­கிய கடைசி நோயாளி சோமா­லி­யாவில் அடை­யாளம் காணப்­பட்டார். உலக சுகா­தார அமைப்பு இத்­தி­னத்தை பெரி­யம்­மையின் கடைசி நாளாக அறி­வித்­தது.

1979 : தென் கொரிய ஜனா­தி­பதி பார்க் சோங்-ஹீ, இரா­ணுவத் தள­பதி கிம் ஜே-கியூ என்­ப­வனால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1984 : “பேபி ஃபே” (ஸ்டெஃபானி ஃபே) எனும் அமெ­ரிக்க குழந்­தைக்கு பபூன் என்ற மனிதக் குரங்­கி­லி­ருந்து பெறப்­பட்ட இதயம் பொருத்­தப்­பட்­டது. இச்­சத்­தி­ர­சி­கிச்­சையின் பின் இக்­கு­ழந்தை 21 நாட்கள் உயிர் வாழ்ந்­தது.

1994 : ஜோர்­தானும் இஸ்­ரேலும் சமா­தான ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டன.

1995 : பலஸ்­தீன இஸ்­லா­மிய ஜிஹாட் இயக்­கத்தின் தலைவர் ஃபாதி ஷக்­காகி, மால்­டாவில் உள்ள விடுதி ஒன்றில் இஸ்­ரே­லியன் மொசார்ட் அமைப்­பி­னரால் கொல்­லப்­பட்டார்.

2000 : ஐவரி கோஸ்ட்டின் ஜனா­தி­பதி ரொபேர்ட் கூயெய் பத­வி­யி­றக்­கப்­பட்டு லோரெண்ட் குபாக்போ புதிய ஜனா­தி­ப­தி­யானார்.

2001 : ஐக்­கிய அமெ­ரிக்கா “அமெ­ரிக்க தேசப் பற்று சட்­டத்தை” நிறை­வேற்­றி­யது.

2002 : மொஸ்­கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்­னியா தீவி­ர­வா­திகள் மூன்று நாட்­க­ளாகப் பிடித்து வைத்­தி­ருந்த பணயக் கைதிகள் விவ­காரம் முடி­வுக்கு வந்­தது. 150 பணயக் கைதி­களும் 50 தீவி­ர­வா­தி­களும் கொல்­லப்­பட்­டனர்.

2003 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் இடம்­பெற்ற தீயில் 15 பேர் கொல்­லப்­பட்டு 250,000 ஏக்கர் மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்­தன.

2014 : ஆப்­கா­னிஸ்­தானில் 2002 ஆம் ஆண்டிலிருந்து நிலைகொண்டிருந்த பிரித்தானிய படைகள் அங்கிருந்து வாபஸ் பெற்றன.

2015 : ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட 7.5 ரிச்டர் பூகம்பத்தினால் 398 பேர் உயிரிழந்ததுடன், 2,536 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

இசை எங்கிருந்து வருகிறது தெரியுமா? - நம்பிக்கை குட்டிக் கதை #FeelGoodStory

பெரிய சாதனைகள் புரிவதற்கு முதலில் தேவை தன்னம்பிக்கை’ - அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson). `என்னால் எதையும் செய்ய முடியும்’ என்கிற தன்னம்பிக்கை உள்ளவர்களால்தான் இமயமலையின் உச்சியில் ஏற முடிகிறது; வியாபாரமோ, இலக்கியமோ... தாங்கள் சார்ந்த துறையில் உச்சம் தொட முடிகிறது; வாழ்க்கை முழுக்க எதிர்ப்படும் சவால்களையெல்லாம் துணிவோடு எதிர்கொள்ளும் திராணி கிடைக்கிறது. அப்படி, தன் தன்னம்பிக்கையின் அருமையை ஓர் இசைக் கலைஞன் உணர்ந்துகொண்ட கதையைப் பார்க்கலாமா?

உன்னை அறிந்தால்

 

அது ஓர் அரங்கம். ஆங்கிலத்தில் `ஓபரா ஹவுஸ்’ (Opera House) என்று சொல்வார்கள். இசைக்குழுவினரின் (Orchestra) கச்சேரிகளையும், தனி இசை நிகழ்வுகளையும் நிகழ்த்துவதற்கான பிரத்யேக அரங்கம் அது. உட்கார இருக்கை இல்லையென்றாலும் பரவாயில்லை, நின்றுகொண்டேகூடப் பார்ப்போம் என்பதுபோல அரங்கின் மூலை, முடுக்குகளில்கூட நெருக்கியடித்துக்கொண்டு நின்றிருந்தார்கள் ஜனங்கள். அன்றைக்குப் பிரபல வயலின் கலைஞர் ஒருவரின் இசை நிகழ்வு அங்கே நடைபெறவிருந்தது. அவருக்காகத்தான் கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. அவர் வயலின் மேதை நிக்கோலோ பாகானினி (Niccolo Paganini).

வயலின்

நிக்கோலோ பாகானினி... இத்தாலியைச் சேர்ந்த பிரபல வயலின் கலைஞர். `நவீன வயலின் தொழில்நுட்பத்தின் தூண்களில் ஒருவர்’ என்று போற்றப்படுபவர். மயங்கவைக்கும் அவருடைய வயலின் இசைக்குப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள். இசை நிகழ்வு ஆரம்பிக்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. பாகானினி தன் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தார். கண்ணாடியில் தன் முகத்தைப் இசை நிகழ்ச்சிபார்த்துக்கொண்டார். கலைந்திருந்த தலைமுடியைச் சீர்ப்படுத்திக்கொண்டார். தன் மேல் கோட்டை எடுத்து அணிந்துகொண்டார். ஒரு நிமிடம் கண்ணை மூடி அப்படியே நின்றார். அன்றைக்கு அவர் வாசிக்கத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இசைக்குறிப்புகளை, பிரதானமாக அவர் இசைக்கவேண்டிய இசையை நினைவுபடுத்திக்கொண்டார். பிறகு, தன் வயலினை எடுத்தார். மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

மேடையை நெருங்கும்போது உள்ளுக்குள் ஏதோ உறுத்தல். `என்ன இது... ஏதோ தவறாகப்படுகிறதே!’ என யோசிக்க ஆரம்பித்தார். ஏதோ நினைவுக்கு வந்தவராக தன் கையில் இருந்த வயலின் பெட்டியைப் பார்த்தார். அதிர்ந்துபோனார். அவர் கையிலிருந்தது அவருடைய வயலின் அல்ல; வேறொரு வயலின். அதற்குள், அரங்கத்துக்குள் பாகானினி வருவதற்கான அறிவிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மக்களின் ஆரவாரம் அரங்கத்தைத் தாண்டி ஒலித்தது. `ஐயோ... என்னுடைய மதிப்புக்குரிய வயலின் எங்கே? அது இல்லாமல் இன்றைக்கு எப்படி இந்த இசை நிகழ்வை நிகழ்த்துவேன்?’ லேசாகக் கலக்கம் அவரைத் தொற்றிக்கொண்டது. பாகானினி போற்றிப் பாதுகாத்துவைத்திருந்த வயலின் பிரபல வயலின் தயாரிப்பாளர் கார்னரி (Guarneri) என்பவரால் தயாரிக்கப்பட்டது. `இன்று என்னால் சரியாக இந்த நிகழ்வை நிகழ்த்த முடியுமா?’ என்று தனக்குத் தானே ஒருமுறை கேட்டுக்கொண்டார்.

முடியும் என்ற தன்னம்பிக்கை வார்த்தை

ஆனால், பாகானினிக்கு அன்று வேறு வழியிருக்கவில்லை. அந்த வயலினை வைத்துத்தான் அவர் இசை நிகழ்வை நிகழ்த்தியாக வேண்டும். அதற்குள் அரங்கத்தின் திரை உயர்ந்துவிட்டது. பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். பாகானினி தன்னம்பிக்கையை வரவழைத்துக்கொண்டார். பார்வையாளர்களுக்கு வந்தனம் சொன்னார். தன் கையிலிருந்த வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அதுவரை தான் கற்றுவைத்திருந்த இசையை, தன் திறமை அத்தனையையும் பயன்படுத்தி வயலினில் இசைக்க ஆரம்பித்தார். அன்று மேடையில் நிகழ்ந்தது மாயாஜாலம். அவரின் வயலின் இசையில் கூட்டம் சொக்கிப்போய்க் கிடந்தது. இசை நிகழ்வு முடிந்ததும், பார்வையாளர்கள் அத்தனைபேரும் பாகானினிக்கு மரியாதை செலுத்தும்விதமாக, எழுந்து நின்று கைதட்டினார்கள். `பாகானினியின் வாழ்நாளில் அப்படி ஓர் இசை நிகழ்வை அவர் நிகழ்த்தியதில்லை’ என்பது அத்தனைபேரின் கருத்தாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து, தன் டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினார். அங்கே அவரின் உறவினர்களும் நண்பர்களும் அவரை வாழ்த்தக் காத்திருந்தார்கள். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார்...  “அற்புதமான இசை நிகழ்வு பாகானினி... இதுவரை இப்படி ஒரு வயலின் இசையை நான் கேட்டதே இல்லை. எப்படி உங்களால் இப்படி ஓர் இசையைத் தர முடிந்தது?’’

தன்னம்பிக்கை  உணர்த்தும்  குட்டிக் கதை

பாகானினி மெதுவான குரலில் சொன்னார். “நன்றி நண்பா, என் இசைப் பயணத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை இன்று நான் கற்றுக்கொண்டேன். இன்று வரை என் வயலினில்தான் இசை இருந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றுதான் இசை, எனக்குள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அதுதான் இந்த நிகழ்ச்சி அருமையாக அமைந்ததற்கான காரணம்.’’

 

அன்றைக்கு அவருக்குத் தன் வயலின் இல்லையென்றாலும், வேறொரு வயலினைக் கொண்டு இசைக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை இருந்தது. அதனால்தான் அவரால் அற்புதமான ஓர் இசை நிகழ்வை நிகழ்த்த முடிந்தது. தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை அல்ல... நம்மை வாழ்க்கையில் மேலே மேலே உயர்த்திச் செல்ல உதவும் ஏணி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

WWE ல் இந்தியர்கள்

WWE-ல் இந்தியர்கள்: ஆண் பிரிவில் தி கிரேட் காலி, பெண் பிரிவில் கவிதா WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த போட்டியில் போட்டியிட உள்ள முதல் இந்திய பெண் கவிதா தேவி. குடும்ப வரம்புகளை உடைத்து தனது கனவுக்காக பல போராட்டங்களை நடத்திவரும் கவிதாவை பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

நியூ மெக்ஸிகோவில் எப்போதும் கேட்கும் வினோத சத்தம்... டாவ்ஸ் ஹம் பற்றித் தெரியுமா? #TaosHum

 

எவ்வளவு பெரிய நகரமாக இருந்தாலும் இரவின் கட்டுப்பாட்டில் வரும்போது, பூச்சிகளின் சத்தத்தைத் தவிர ஒரு விதமான மயான அமைதியைப் பெற்று விடுவதும் இயல்புதான். ஆனால், நியூ மெக்ஸிகோவில் இருக்கும் டாவ்ஸ் நகர் இந்த விஷயத்தில் சற்றே வித்தியாசப்படுகிறது. இரவு பகல் பாராது அங்கு கிலியூட்டும் நிகழ்வு ஒன்று நிற்காமல் நடந்து வருகிறது. எப்போதும் ஒலிக்கும் அந்த 'ஹம்ம்ம்ம்ம்’ என்ற சத்தம். ‘டாவ்ஸ் ஹம்’ என்று அழைக்கப்படும் இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு வீரியம் கொண்டதாய் இருக்கிறது.

டாவ்ஸ் நகரம்

 

Photo Courtesy: Billy Hathorn

வட-மத்திய நியூ மெக்ஸிகோவில் உள்ள டாவ்ஸ் நகரம் ஜூலியா ராபர்ட்ஸ், டென்னிஸ் ஹாப்பர் போன்ற பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களை வழங்கிய பெருமை உடையது. விவரம் அறியாதவர்களுக்கு அது ஒரு சிறிய, நல்ல முறையில் கட்டமைக்கப்பட்ட, கலை சமூகம் வாழும் இடம். ஆனால், அங்கிருக்கும் இரண்டு சதவீத மக்களுக்கு அந்த இடம் ஒரு நரகம். அந்த ஒலி, இடைவிடாது ஒலிக்கும் அந்த ஒலி அவர்களுக்கு மட்டுமே கேட்கிறது. அச்சத்தில் ஆழ்த்திவிடுகிறது. இது ஒரு மன நோய் எனத் தொடங்கி, பூமியின் நிலா அதிர்வு, மிலிட்டரி ஆராய்ச்சிகள் நடக்கிறது என அடுக்கடுக்காகப் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால், அங்கேயே நிரந்தரமாகக் குடியிருக்கும் பலரும் இது சாத்தானின் சத்தம் என்கிறார்கள். எது உண்மை, அறிவியல் ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன?

டாவ்ஸ் ஹம்மின் தன்மை

உடற்கூறியல் மற்றும் உடலியக்கவியல் பேராசிரியர் ஸ்டீவன் ஐயனூச்சில்லி இது குறித்து விளக்குகிறார். “டாவ்ஸ் நகரில் இருக்கும் இரண்டு சதவீத மக்களுக்கு மட்டும் கேட்கிறது இந்த வினோத சத்தம். இந்த விசித்திர ஹம்ம்ம்ம் சத்தம் அல்லது சலலப்பு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. தலைக்குள் ரீங்காரம் இடும் இது தலைவலி தொடங்கி, பதற்றம், அச்சம் எனப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது எங்கிருந்து ஒலிக்கிறது, எது இந்தச் சத்தத்தை ஏற்படுத்துகிறது என்பது மர்மமாகவே உள்ளது. இரவு பகல் பாராமல், இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பாதிப்புகளை இந்த ஒலி ஏற்படுத்தி வருகிறது.”

உடல் அல்லது மனதின் பாதிப்பா?

இதற்கிடையில் முதலில் இது காதில் ஏற்படும் ஒருவகை பாதிப்பால் கேட்கிறது என நினைக்கப்பட்டது. மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் சத்தம்போல இருக்கும் இது ஒரு வித உடல் குறைபாடுதான் என்று அழைக்கப்பட மிக முக்கிய காரணம், இது ஒரு சாரருக்கு மட்டுமே கேட்கின்றது என்பதுதான். இந்த ஒலியும் ஒரேவகையைச் சார்ந்ததாக இருந்தாலும் ஒருவருக்கு அதிகமாகவும் மற்றொருவருக்கு குறைவாகவும் கேட்பதாக அறியப்பட்டது. அதாவது, ஒரு சிலருக்கு இது ஒரு பொருட்டே இல்லை, ஒரு சிலருக்கு இது கொடூரமான தண்டனை! இது குழப்பத்தை ஏற்படுத்தியது. நோய் என்றால் ஒலியின் அளவும் மாறுபடுமா என்ன?

டாவ்ஸ் நகரம்

Photo Courtesy: Bobak Ha'Eri

பேராசிரியர் ஸ்டீவன் அவர்களின் கருத்துபடி, “இதன் தன்மை மாறுபட்டாலும், ரீங்காரம் இடைவெளி இல்லாமல் எல்லோருக்கும் கேட்கிறது. ஒரு சிலரை தற்கொலைக்குக்கூட தூண்டியுள்ளது இந்த ‘டாவ்ஸ் ஹம்’. சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அந்தப் பிராந்தியத்தில் நிகழும் நில அதிர்வு மாற்றங்களால் இருக்கலாம். கான்ஸ்பிரசி தியரி பேசுபவர்கள், இது குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகள் எனவும் அமெரிக்க மிலிட்டரி ஆராய்ச்சிகளால் இந்தத் தவறு நிகழ்கிறது எனவும் கூறுகின்றனர். ஒலியை ஆயத்தமாகப் பயன்படுத்துவது நிறைய முறை நிகழ்ந்துள்ளது எனவும் சுற்றி இருக்கும் பாலைவனத்தில் யாரும் நுழைய முடியாத இடத்தில் இவ்வகை ஆராய்ச்சிகள் நடக்கின்றன எனவும் எச்சரிக்கின்றனர்.

 

மக்களின் நம்பிக்கை என்ன?

இது இப்படியிருக்க அங்கு இருக்கும் வயதானவர்கள் வேறு கதை சொல்கின்றனர். நவாஜோ (Navajo) அப்பாச்சீ (Apache) மற்றும் ஹோப்பி (Hopi) போன்ற மூதாதையர்களின் கைங்கரியம் என்கின்றனர். அதாவது, இது இறந்தவர்களின் குரல்கள் எனவும், மரணித்ததால், அந்தப் புறத்தில் இருந்து நம்மை அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள் எனவும் நம்புகிறார்கள். மற்றொரு குழுவின் கூற்றுபடி, தொன்மையான அமெரிக்கர்கள் வாழ்ந்த பகுதி இந்த நியூ மெக்ஸிகோ. அவர்களின் கலாசாரபடி, இது பூமி நம்முடன் பேசும் நிகழ்வு என்று நம்புகிறார்கள். ஆனால், இந்த ஒலி நின்றபாடில்லை. அங்கு இருந்தவர்கள் இதற்குப் பயந்தே இடம்பெயர வேண்டிய சூழல்கூட ஏற்பட்டுள்ளது. இன்றும் அந்த ஒலி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எங்கேயோ ஏதோ ஒரு மூலையிலிருந்து யாருக்கும் புலப்படாத ஒரு செயல்முறையில் தன் பணியைச் செய்துகொண்டுதான் வருகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

35p1.jpg

* கோஹ்லியின் ஜெர்ஸிக்குப் பின்னால் பெரிய சென்ட்டிமென்ட் இருக்கிறது. தொடர்ந்து 18-ம் எண் ஜெர்ஸியைப் பயன்படுத்திவருகிறார் கோஹ்லி. சச்சின், தோனி ஆகியோர் தங்களது ராசியான எண்களை ஜெர்ஸியாகப் பயன்படுத்த கோஹ்லி தனது அப்பா இறந்தநாளான 18-ம் தேதியை நினைவுப்படுத்தும்விதமாக அதை பயன்படுத்துகிறார். சென்ட்டிமென்ட் கேப்டன்!


35p2.jpg

* பஞ்சாப், கேரளா என இரு மாநிலங்களிலும் இடைத்தேர்தலில் கிடைத்தவெற்றியில் செம உற்சாகத்தில் இருக்கிறார் ராகுல்காந்தி. வெற்றிப் பரிசாக விரைவில் காங்கிரஸ் தலைவராகப் பதவி உயர்வும் பெற இருக்கிறார். ``கடந்த மூன்று மாதங்களில் ராகுல் காந்தியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின்  எண்ணிக்கை 24 லட்சத்தில் இருந்து 38 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதில் இருந்தே இளைஞர்களுக்கான ஆதரவு ராகுலுக்கு உயர்ந்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம்’’ என காங்கிரஸ் உற்சாகம் பொங்கச் சொல்ல, ``மோடிக்கு மூன்றரை கோடி ஃபாலோயர்ஸ் இருக்காங்கப்பா’’ எனக் கலாய்க்கிறது பாஜக! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!


35p3.jpg

* பிரபல ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது ஏஞ்சலீனா ஜோலி துவங்க பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் சொன்னதுதான் கடந்தவாரத்தின் வைரல். ஆனால் ஹார்வி மாதிரி இந்தியாவில் பலர் இருக்கிறார்கள் என அதிரவைத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. ‘’செக்ஸ் என்பதைவிட பெண்களை அடக்கும் பவரைத்தான் ஆண்கள் இதன்மூலம் சாதிக்க விரும்புகிறார்கள். சினிமாத்துறையில் வாய்ப்புத்தேடிவரும் நடிகைகளிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வது இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபற்றி புகார் கொடுக்க யாரும் முன்வருவதில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் பிரியங்கா. உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்!


* டாஸ்மாக் வருமானம் குறைந்ததே இந்த ஆண்டு தீபாவளின் நல்ல செய்தி. ஒவ்வொரு ஆண்டும் டார்கெட் வைத்து கோடிகளைக் குவிக்கும் டாஸ்மாக்கின் விற்பனை இந்த ஆண்டு 8 சதவிகிதம் குறைந்துள்ளது. அக்டோபர் 17, 18 தேதிகளில் மட்டும் தமிழகம் முழுக்க டாஸ்மாக் மூலம் 244 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறது தமிழக அரசு. இது கடந்த ஆண்டைவிட 21 கோடி ரூபாய் குறைவு என்பதே ஆறுதல் செய்தி. குடியை மறப்போம்!


35p4.jpg

* திருமணமான நடிகை களிலேயே முதல்முறையாக கையில் ஐந்து படங்களுடன் செம பிஸியாக இருக்கிறார் சமந்தா. சாவித்ரியின் பயோபிக்கான `மஹாநதி’, `ரங்கஸ்தலம் 1985’, `இரும்புதிரை’, தியாகராஜா குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’, சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் என சமந்தாவைச் சுற்றிலும் ஷூட்டிங்தான். ‘’எக்காரணத்தைக் கொண்டும் நடிப்பை விட்டுவிடாதே என சொல்வதே என் கணவர்தான். அதனால் சினிமாவுக்கு எப்போதுமே பிரேக் இல்லை.’’ என்கிறார் சமந்தா! சூப்பர் ஜோடி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் : காற்று இல்லாத இடம் உண்டா?

shutterstock76571035%20Converted

பூமியில் காற்று இல்லாத இடமே கிடையாது. கெட்டியான பாறைக்குள் காற்று கிடையாதுதான். ஆனால் நீங்கள் பாறையில் ஆழமான துளை போட்டால் அல்லது சுரங்கம் தோண்டினால் அதற்குள் முதலில் நுழைவது காற்றாகத்தான் இருக்கும்.

ஒரு பாட்டிலில் சர்க்கரை இருக்கிறது. சர்க்கரை மொத்தத்தையும் ஒரு தட்டில் கொட்டிய பிறகு, அதை நாம் காலி பாட்டில் என்கிறோம். அது காலி பாட்டில்தான். ஆனால் அதற்குள்ளாகக் காற்று இருக்கிறது. காலி டின், காலி தம்ளர் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். ஒரு தம்ளரிலிருந்து தண்ணீரைக் கொட்டும் போதே அதற்குள் காற்று புகுந்துகொள்கிறது. இதில் காற்று மிகவும் அவசரம் காட்டும்.

மளிகைக் கடையில் காணப்படும் பெரிய எண்ணெய் டின்னில் எண்ணெய் இருக்கிற வரையில் உள்ளே காற்று கிடையாது. அந்த டின்னின் திறப்பு வழியே பெரிய டிரம்மில் எண்ணெயை ஊற்ற முற்படும்போது காற்று அவசர அவசரமாக அந்த டின்னுக்குள் நுழைய முயலும். எனவேதான் டின்னிலிருந்து எண்ணெயானது குபுக் குபுக் என்று விட்டு விட்டு வெளிப்பட முற்படும். அந்த டிரம்மின் வாய் பெரியதாக இருந்தால் பிரச்சினை இல்லை.

ஆனால் வாய் சிறியதாக இருந்தால் எண்ணெய் வெளியே சிந்துவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே வியாபாரிகள் எண்ணெய் டின்னின் திறப்புக்கு நேர் எதிர்ப்பக்கத்தில் சிறிய ஓட்டை போட்டுவிட்டு எண்ணெயை டிரம்மில் ஊற்றுவர். அந்தச் சிறிய ஓட்டை வழியே காற்று உள்ளே செல்லும்போது டின்னின் திறப்பு வழியே எண்ணெய் சீராகத் தொடர்ந்து வெளிப்படும். அதாவது டின்னுக்குள் காற்று நுழைய நீங்கள் தனி வழி ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறீர்கள்.

காற்று இல்லாத இடத்தை நாம் செயற்கையாக உண்டாக்கினால்தான் உண்டு. அப்படி ஏற்படுத்துவது மிகவும் கடினம். உங்கள் வீட்டில் கிட்டத்தட்ட காற்று இல்லாத இடம் ஒன்று இருக்குமானால் அது தெர்மாஸ் பிளாஸ்க். இந்தக் குப்பி இரண்டு சுவர்களால் ஆனது. இந்த இரண்டு சுவர்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட காற்றே இல்லை. இந்த பிளாஸ்குக்கு வாக்குவம் பிளாஸ்க் என்ற பெயரும் உண்டு.

வாக்குவம் (vacuum) என்றால் காற்றில்லாத வெற்றிடம் என்பது பொருள். வெற்றிடம் வழியே வெப்பம் செல்லாது. எனவேதான் இப்படியான வெற்றிடக் குப்பியில் ஊற்றி வைக்கப்படும் காபி போன்ற சூடான பானம் வெகு நேரம் ஆறுவதில்லை. இப்படிக் குப்பியில் சூடான பொருள் மட்டுமன்றி, ஐஸ் கட்டி அல்லது மிகக் குளிர்ந்த பொருளையும் வைத்திருக்கமுடியும்.

shutterstock464221706

எவாஞ்சலிஸ்டா டாரிசெல்லி

ஆரம்பக் காலத்தில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் பல்புகளில் கிட்டத்தட்ட வெற்றிடம் இருந்தது. பின்னர் ஆர்கான் போன்று விசேஷ வாயுக்கள் அடங்கிய பல்புகள் தயாரிக்கப்பட்டன. சோடியம் ஆவி, பாதரச ஆவி நிரப்பப்பட்ட பல்புகளும் பின்னர் வந்தன.

தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட வகையில் பொருட்களைத் தயாரிக்க வெற்றிட நிலைமைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கொள்கலத்தின் உள்ளே இருக்கிற காற்றை விசேஷ பம்பு கொண்டு அகற்றி சீலிட்டு, வெற்றிட நிலைமையை உண்டாக்குகிறார்கள். அப்படியான வெற்றிடம் கூட நூற்றுக்கு நூறு வெற்றிடமாக இருப்பது கிடையாது. கி.பி 1643-ம் ஆண்டில் எவாஞ்சலிஸ்டா டாரிசெல்லி என்ற இத்தாலிய விஞ்ஞானி இப்படி வெற்றிடம் அமைந்த பாரோமீட்டர் என்ற கருவியைத் தயாரித்தார்.

பூமியில் மேலும் மேலும் உயரே செல்லும்போது காற்றின் அடர்த்தி குறைகிறது. சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் கிட்டத்தட்ட காற்றே கிடையாது. ஆனாலும் அது முற்றிலும் வெற்றிடம் அல்ல. கிரகங்கள், நட்சத்திரங்கள் இடையிலான இடைவெளியானது அண்டவெளி எனப்படுகிறது. அண்டவெளி கூட முற்றிலும் வெற்றிடம் அல்ல.

ஏனெனில் அங்கு ஒரு கன மீட்டரில் சில ஹைட்ரஜன் அணுக்கள் (வாயு) இருக்கலாம். எந்த வித வாயுவும் இல்லாத இடம்தான் நூற்றுக்கு நூறு வெற்றிடம். எனவே இயற்கையில் முழுமையான வெற்றிடம் என்பது கிடையாது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

சுற்றுலாப் பயணிகளை கவரும் நிலாவெளி புறாமலை

  • தொடங்கியவர்

93 வயதில் நீச்சலில் உலக சாதனை படைக்கும் பெண்

பிரேசிலை சேர்ந்த 93 வயதாகும் நோரா ரோநாய் என்னும் இப்பெண், தனது வாழ்க்கையில் பாலின பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், ஆனால் அது தனது இலக்குகளை அடைவதில் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டதாகவும் கூறுகிறார்.

  • தொடங்கியவர்

ஆர்மேனியாவில் ஆயுள் சிறை; கரடிகளின் கண்ணீர் கதை

ஆர்மேனியாவில் கரடிகளைக் காட்சிப்படுத்தும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரித்தானியத் தொண்டு நிறுவனம் ஒன்று முயற்சி செய்து வருகிறது.

11_Bear7.jpg

கரடிகளை அவற்றின் சிறு வயதிலேயே பிடித்து வந்து கூண்டுக்குள் அடைத்து வைப்பதை பெரும்பாலான ஆர்மேனிய நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

11_Bear6.jpg

உணவகங்கள், பேருந்து நிறுத்தங்கள், வர்த்தக நிறுவனங்கள் எனப் பல இடங்களிலும் கரடிக் கூண்டுகளை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

எனினும், கரடிகளுக்கான உணவை அதன் உரிமையாளர்கள் வழங்குவதில்லை. பார்வையாளர்கள் கொடுக்கும் அல்லது மிச்சசொச்ச உணவுகளை உண்டே வாழ வேண்டிய சூழலில் இந்தக் கரடிகள் இருக்கின்றன.

11_Bear5.jpg

சுதந்திரம் என்றால் என்ன என்றோ, கரடியின் பலம் மற்றும் அதன் வாழ்க்கை முறை என்றால் என்னவென்றோ அறியாமல் ஆயுள் முழுவதும் கூண்டுக்குள்ளேயே இருந்து உயிரை விடும் கரடிகளும் உண்டு.

11_Bear4.jpg

தற்போது, இந்தக் கரடிகளை விலைக்கு வாங்கி அவற்றைக் காட்டில் விடும் முயற்சியை ‘சர்வதேச விலங்குகள் மீட்பகம்’ என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

ஒவ்வொரு கரடிக்கும் நான்காயிரம் யூரோக்கள் என்ற விகிதத்தில் செலவிட்டு அவற்றை இந்த நிறுவனம் மீட்டு வருகிறது.

அவற்றுக்கு புனர்வாழ்வளித்து மீண்டும் காட்டில் கொண்டு போய் விட இந்த நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது.

11_Bear3.jpg

என்றபோதும், வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை கூண்டுகளிலேயே கழித்துவிட்ட கரடிகளில் சில, காட்டுச் சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றன.

11_Bear2.jpg

இதனால், சுமார் 75 ஆயிரம் யூரோக்கள் செலவில், ஒரு பெரு நிலப்பரப்பை வாங்கி கரடிகளை சுதந்திரமாக விடும் திட்டத்தை அமுல்படுத்த மேற்படி நிறுவனம் முயற்சித்து வருகிறது.

11_Bear1.jpg

“நாற்றமெடுக்கும் தண்ணீரில் நின்றுகொண்டு, எச்சில் உணவுகளை உண்டு, சிறு கூண்டுக்குள்ளேயே வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கரடிகள், சில சமயங்களில் கடும் எரிச்சலில் அதன் தலையை மரத்திலோ, நிலத்திலோ தொடர்ச்சியாக மோதி தனக்குத் தானே தண்டனை தருவதைக் கண்டிருக்கிறேன். அது காண்பதற்கே மிகக் கொடுமையானது” என்று, மேற்படி நிறுவனத்தின் இயக்குனர் அலன் நைட் தெரிவித்துள்ளார்.

11_Bear.jpg

11_Bear8.jpg

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஹிட்லரை முத்தமிட்ட பெண் - பாதுகாப்பு அதிகாரி பதவி நீக்கம் !!

 

ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை பெண் ஒருவர் முத்தமிட்ட காணொளி  ஒன்று, இணையத்தில் வெளியாகி பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகின்றது.

 ஹிட்லரை   முத்தமிட்ட   பெண் -  பாதுகாப்பு   அதிகாரி   பதவி நீக்கம் !!

கார்லா டி வ்ரீஸ் என்பவர் அமெரிக்க விளையாட்டு வீராங்கனை ஆவார்.

1936ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இவர் கலந்துகொண்டார். அப்போட்டியின் பிரதம விருந்தினராக ஹிட்லர் பங்கேற்றார்.

அப்போது,  ஹிட்லரிடம் 'ஒட்டோகிராப்' வாங்கவென அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார் கார்லா. எனினும்,  ஹிட்லரை நெருங்கிய அவர்,  திடீரென அவரை முத்தமிட முயன்றார்.

ஹிட்லரை   முத்தமிட்ட   பெண் -  பாதுகாப்பு   அதிகாரி   பதவி நீக்கம் !!

இதைச் சிறிதும் விரும்பாத ஹிட்லர் கார்லாவைக் கையால் தடுத்தார். முதல் முயற்சி தோற்றபோதும் இரண்டாவது முறையாகவும் சற்று நெருங்கி ஹிட்லரை முத்தமிட முயன்றார் கார்லா. இதன்போது அவர் ஓரளவு வெற்றிபெற்றார்.

ஆனால், அதையும் தடுத்த ஹிட்லர், அன்றைய தினமே தனது பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரை பதவி நீக்கம் செய்தார்.

இருந்தபோதிலும்,  ஹிட்லரை முத்தமிட்ட பெண் என்ற பெருமையை கார்லா பெற்றுக்கொண்டார்.

https://news.ibctamil.com

 

  • தொடங்கியவர்

கடல் நீரில் மூழ்கும் முன் தப்பிக்க முயலும் பனாமா தீவு

பனாமாவின் தீவுகளில் ஒன்றான கார்ட்டி சுக்டப்பில் வசிக்கும் மக்கள் அங்கு அதிகரித்து வரும் கடல்நீர் மட்டம் மற்றும் தொடர்ந்து மாறி வரும் வானிலையால் அச்சமடைந்துள்ளனர். ஆனால், இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் மற்ற தீவுகளை போன்றல்லாமல், இத்தீவு மக்கள் அந்த அபாயத்திலிருந்து தப்பிப்பதற்குரிய திட்டத்தை வைத்துள்ளனர்.

  • தொடங்கியவர்

இலங்கையில் அங்குள்ள தமிழ் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரபல இயக்குனர்

 

 

 

பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்தவர் ராஜமௌலி. இப்படத்திற்காக கடின உழைப்பை வெளிப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

அடுத்த படம் தொடங்குவதற்குள் ஓய்வில் இருக்கும் அவர் இலங்கை சென்றுள்ளார். அங்கு இருக்கும் தமிழ் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

இந்த தகவலை அவரே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார், அதோடு ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

Bild könnte enthalten: 15 Personen, Personen, die lachen, Personen, die stehen, Himmel, Gras, im Freien und Natur

Local Tamil Cricket team in Galle, Srilanka. Had fun playing with them.

  • தொடங்கியவர்
‘அன்பை உட்புகுத்தினால் இதயம் ஈரமாகும்’
 

image_c1a8bd39d3.jpgநெஞ்சத்தில் எண்ணங்கள் மிகையானால், ஆத்மாவின் ஏகாந்த நிலை கபளீகரமாகின்றது. 

நிர்வாணநிலை என்பது, வஸ்திரங்களைக் களைந்த நிலை அல்ல! மனதை நிர்மலமாக, ஆசைகளைத் தகர்த்து வைத்திருக்கும் நிலைதான் பரிபூரண நிர்வாணநிலையாகும்.  

தேகத்தை உடைகொண்டு மூடுவதுபோல், மனிதர்களில் பலர், உள்ளத்தையும் பூட்டிவைத்திருக்கிறார்கள். எனக்குத் திறந்த மனது என்று சொல்பவர்கள், அடுத்தவரின் அந்தரங்கங்களை மட்டும், விஸ்வரூபமாக்கி, நடுத்தெருவில் சத்தமிட்டுக் குரைக்கின்றார்கள். இரும்பு உருகினாலும் இவர்கள் மனம் உருகாது. சதா நெஞ்சை நஞ்சாக்கிய வண்ணமே வாழ்வார்கள். 

சுதந்திரமாக, ஏகாந்தமாக உன்னை ஆக்கு என ஞானிகள் பகர்வார்கள். அன்பை மட்டும் உட்புகுத்தினால் இதயம் ஈரமாகும். உலகம் ஏகாந்தமாகத் தெரியும். பார்வை விசாலமாகும்.  

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 27

 

939 : இங்­கி­லாந்தின் மன்­ன­ராக முதலாம் எட்மண்ட் முடி சூடினார்.

1275 : நெதர்­லாந்தின் ஆம்ஸ்­டர்டாம் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1795 : ஸ்பானியக் குடி­யேற்­ற­நா­டு­க­ளுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யே­யான எல்­லை­களை வரை­ய­றுக்கும் உடன்­ப­டிக்கை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் ஸ்பெயி­னுக்கும் இடையில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1806 : பிரெஞ்சுப் படை­யினர் ஜேர்­ம­னியின் பேர்லின் நக­ரினுள் நுழைந்­தனர்.

ayub3-240x400.jpg1807 : பிரெஞ்சு ஸ்பானியப் படைகள் போர்த்­துக்­கலைக் கைப்­பற்­றின.

1810 : முன்னாள் ஸ்பானியக் குடி­யேற்ற நாடான மேற்கு புளோ­ரி­டாவை ஐக்­கிய அமெ­ரிக்கா தன்­னுடன் இணைத்துக் கொண்­டது.

1870 : 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்ஸ் நகரில் இடம்­பெற்ற போரில் பிரஷ்­யா­விடம் சர­ண­டைந்­தனர்.

1891 : ஜப்­பானில் 8.0 ரிச்டர் அளவு பூகம்பம் ஏற்­பட்­டதில் 7000 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.

1904 : நியூயோர்க்கில் முத­லா­வது சுரங்க ரயில் பாதை திறக்­கப்­பட்­டது. இதுவே ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மிகப் பெரிய சுரங்கப் பாதை ஆகும்.

1924 : சோவியத் ஒன்­றி­யத்தில் உஸ்பெக் சோவியத் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.

1953 : தெற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஈமியு ஃபீல்ட் என்ற இடத்தில் டோட்டெம் 2 என்ற பிரித்­தா­னிய அணு­வா­யுதச் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

1958 : பாகிஸ்தான் முத­லா­வது ஜனா­தி­பதி இஸ்­காண்டர் மிர்ஸா, இரா­ணுவப் புரட்சி ஒன்றில் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்டு ஜெனரல் அயுப் கான் ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.

1961: நாசா நிறு­வனம் தனது முத­லா­வது சட்டர்ன் 1 விண்­க­லத்தை விண்­ணுக்கு ஏவி­யது.

1961 : மௌரிட்­டா­னியா, மொங்­கோ­லியா ஆகி­யன ஐ.நாவில் இணைந்­தன.

1962 : கியூபா ஏவு­கணை நெருக்­கடி: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் விமானம் ஒன்று கியூ­பாவில் சுட்டு வீழ்த்­தப்­பட்­டது.

1971 : கொங்கோ குடி­ய­ரசு சயீர் எனப் பெயர் மாற்­றப்­பட்­டது. (1997 இல் மீண்டும் அதன் பெயர் கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசு என மாற்­றப்­பட்­டது.)

1979 : செயின்ட் வின்சென்ட் கிரெ­னேடின்ஸ் ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுதந்­திரம் பெற்­றது.

1981 : சோவியத் நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்று சுவீ­டனின் கிழக்குக் கரையில் மூழ்­கி­யது.

1982 : யாழ். சாவ­கச்­சேரி பொலிஸ் நிலையம் விடு­தலைப் புலி­களால் தாக்­கப்­பட்­டது.

1991 : துருக்­மெ­னிஸ்தான், சோவியத் ஒன்­றி­யத்­திடம் இருந்து சுதந்­திரம் பெற்­றது.

1991 : போலந்தில் 1936 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் முதற்­த­ட­வை­யாக சுதந்­தி­ர­மான தேர்­தல்கள் இடம்­பெற்­றன.

1999 : ஆர்­மீ­னி­யாவில் நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பிர­தமர் வஸ்ஜென் சர்­ஜி­ஸியன் உட்­பட 8 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2005 : பாரிஸில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு வன்முறைகள் ஆரம்பமாகின.

2007 : கொங்கோவில் பெருவெள்ளம் காரணமாக 30 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

‘4 மினிட் மைல்’... ஓடு... ஓடிக்கொண்டே இரு! நன்னம்பிக்கை கதை #FeelGoodStory

 
 

கதை

ற்றவர்கள், `முடியாது’ என நினைக்கும் ஒன்றைச் செய்து முடிப்பது சாதனையாளர்களுக்கு மட்டுமே சாத்தியம். அதற்கு அவர்களுக்குத் தேவைப்படும் ஒரே ஆயுதம்... நம்பிக்கை! உலகமே அதுவரை `இது சாத்தியமில்லை’ என நினைத்திருந்த ஒன்றைச் செய்து சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரு தடகள வீரரின் கதை... அல்ல... வரலாறு இது! 

 

கதை

லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் பெரிய நகரம் ஹாரோ (Harrow). அதுதான் ரோஜர் பேனிஸ்டர் (Roger Bannister) பிறந்த ஊர். பேனிஸ்டரின் அப்பா சாதாரண கூலித் தொழிலாளர். பள்ளிப் படிப்பைப் படிக்கவைக்கவே மிகவும் சிரமப்பட்டார். ஆனால், பேனிஸ்டருக்கு மருத்துவம் படிக்கவேண்டும், ஒரு மருத்துவராக லண்டனில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்று ஆசை. அதே நேரத்தில் தன் குடும்பத்தால் நிச்சயம் தன்னை மருத்துவம் படிக்கவைக்க முடியாது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், தன்னிடம் இருக்கும் ஒரு திறமை மருத்துவம் படிக்கக் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கை பேனிஸ்டருக்கு இருந்தது. அது... ஓட்டம்! 

பேனிஸ்டருக்கு ஓடுவது பிடிக்கும். அதிலும் அதிவேகமாக விரைகிற ஒரு ட்ரெயினோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடுவது என்றால் அலாதிப் பிரியம். பத்து வயதில் ஆரம்பித்த அந்தப் பழக்கத்தின் மீதான ஈடுபாடு வயதாக ஆக அதிகமானதே தவிர, குறையவில்லை. ஒரு ட்ரெயின் தண்டவாளத்தில் விரைந்துகொண்டிருக்கும். அதை ஒட்டிய சாலையில் பேனிஸ்டர் ஓடிக்கொண்டிருப்பார். பார்க்கிறவர்களுக்கு `இந்தப் பையன் என்ன லூஸா, ஏன் இப்படி ஓடுகிறான்?’ என்று தோன்றும். அவர் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை; அக்கம் பக்கத்தில் எதையும் பார்க்கவில்லை; யார் என்ன சொல்வார்களோ என்று யோசிக்கக்கூட இல்லை... அந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயினை முந்திவிட வேண்டும் என்கிற இலக்கு மட்டும்தான் அவருக்கு. ஓடிக்கொண்டே இருந்தார் பேனிஸ்டர். 

ஓடு - கதை

பள்ளிப் படிப்பு முடிந்தது. பேனிஸ்டர் நினைத்தது நடந்தது. ஓட்டத் திறமைக்காகவே அவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஸ்காலர்ஷிப் கொடுத்து, மருத்துவம் படிக்கத் தன் கதவுகளை விரியத் திறந்துவிட்டது. அங்கே அவரின் ஓட்டத் திறமைக்குப் பல வாய்ப்புகள்... அத்தனையிலும் பிரகாசித்தார். அது, 1948-ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகள் நடந்துகொண்டிருந்த நேரம். பேனிஸ்டர் அந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அந்தப் போட்டியை உற்று கவனித்ததில், அடுத்த ஒலிம்பிக்கில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட்டது. 

1952-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்து சார்பாகக் கலந்துகொண்டார் பேனிஸ்டர். எப்படியும் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பேனிஸ்டர் வெற்றி பெறுவது நிச்சயம் என ஒட்டுமொத்த இங்கிலாந்தே எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சில குளறுபடிகள்... ஷெட்யூல் மாற்றப்பட்டது... பேனிஸ்டரின் வழக்கமான ஓய்வு நேரம் பாதிக்கப்பட, நான்காவது இடத்துக்குத்தான் அவரால் வர முடிந்தது. 

கதை - ஓடு

அடுத்த இரண்டு மாதங்கள்... நரகவேதனை தந்த காலம் பேனிஸ்டருக்கு! ஓடுவதைத் தொடர்வதா, விட்டுவிடுவதா என்கிற மிகப் பெரிய கேள்வி. ஒலிம்பிக்கில் தோற்றுவிட்டுத் திரும்பிய பின்னர் ஏற்பட்ட கேலிப் பேச்சுகள், அவமானங்கள் பேனிஸ்டரைத் துளைத்தெடுத்தன. அதனாலேயே அதை விட்டுவிடலாம் என்கிற எண்ணம். அதே நேரத்தில், `ஓட்டத்தை விடாதே! அதுதான் உன்னை உலகமறியச் செய்யும்’ என உள்ளே ஒலித்த குரலை அவரால் அலட்சியம் செய்ய முடியவில்லை. `சரி... ஓடுவோம்’ என முடிவெடுத்தார். ஆனால், அந்த ஓட்டம் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இருக்க வேண்டும் என்கிற வெறி பிறந்தது... அதற்காக அவர் கையில் எடுத்த அந்த ஓட்டம், `4 மினிட் மைல்!’ (4 Minute Mile). 

அதுவரை ஒரு மைல் தூரத்தை யாரும் 4 நிமிடங்களுக்குள்ளாக ஓடிக் கடந்ததில்லை. உலக அளவில், `அது சாத்தியமில்லை’ என்பதே பொதுக் கருத்தாக இருந்தது. `மனித உடல் அதற்குத் தகுதி வாய்ந்ததல்ல. அதற்காக முயற்சி செய்தால் நுரையீரல் வெடித்து, மரணம்கூட ஏற்படலாம்’ என்பது மருத்துவ நிபுணர்களின் கூற்று. ஆனாலும், சிலர் 4 நிமிடங்களுக்குள் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடந்துவிட முயற்சி செய்துகொண்டுதான் இருந்தார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் லேண்டி (John Landy). பேனிஸ்டரும் அந்த முயற்சியில் இறங்கினார். பயிற்சி... இடைவிடாத, கடுமையான பயிற்சி. அது மட்டும்தான் அவருடைய அத்தியாவசியத் தேவையாக அன்றைய தினங்களில் இருந்தது. 

கதை - ஓடு... ஓடிக்கொண்டே இரு

அது, 1954-ம் வருடம், மே மாதம், 6-ம் தேதி. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஓட்டப் பந்தய மைதானம். ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். `4 மினிட் மைல்’ சாதனை நிகழுமா என்கிற எதிர்பார்ப்பு அத்தனை பேர் முகத்திலும். அன்றைக்கு அந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை என்றால், ஆஸ்திரேலியாவின் ஜான் லேண்டி அதைச் செய்துவிடுவார் என்று நினைத்தார் பேனிஸ்டர். வெற்றி... அதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அன்று காலையிலிருந்தே தட்பவெப்ப நிலை சரியாக இல்லை. காலையில் பலத்த காற்று; மாலையில் மழை! காற்றும் சேர்ந்து சுழன்றடித்துக்கொண்டிருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படவில்லை பேனிஸ்டர். ஓட்டம் ஆரம்பமானது. ட்ராக்கில் இறங்கி ஓட ஆரம்பித்தார்.

 

அந்தப் போட்டியில் ஆறு பேர் கலந்துகொண்டார்கள். பேனிஸ்டருடன் பிரேஷர் (Brasher) என்பவரும் முன்னணியில் இருந்தார். இருவரும் மாறி மாறி முந்திக்கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக பேனிஸ்டர் ஓடும் வேகம் கூடியது. கிட்டத்தட்ட பறந்தார் என்றுகூடச் சொல்லலாம். அன்றைக்கு `4 மினிட் மைல்’ ஓட்டத்தில் பேனிஸ்டர் ஒரு மைல் தூரத்தைக் கடந்த நேரம், 3:59.4. அது உலக சாதனை. நினைத்ததைச் சாதித்துவிட்டார் பேனிஸ்டர். எத்தனையோ பேர் சாத்தியமில்லை என நினைத்ததை சாத்தியமாக்கினார். வரலாறு படைத்தார். இப்போதும் நிறையபேர் `4 மினிட் மைல்’ பந்தயத்தில் புதிய சரித்திரம் படைக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் பேனிஸ்டர்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

குரலுக்காக கொல்லப்படும் ஜாவா குயிலினங்கள்

இந்தோனேஷியாவின் ஜாவாவிலுள்ள பாடும் பறவைகளை வனவிலங்குச் சந்தையில் பலரும் வாங்குவதால் அவை அழிவின் விளிம்பில் உள்ளன. இனிமையான குரலுக்காக இவற்றை வீட்டில் வளர்க்க விரும்புபவர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதால் இவை காடுகளில் கண்ணி வைத்து பிடிக்கப்படுகின்றன. இது உடனடியாக தடுக்கப்படாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் இவற்றின் சில இனங்கள் முற்றாக அழிந்துவிடும் ஆபத்து இருக்கிறது.

  • தொடங்கியவர்

ஐரோப்பாவில் அமையவிருக்கிறது முதலாவது கடலுக்கடியிலான உணவகம்!

 

ஐரோப்பாவில் முதலாவது கடலுக்கடியிலான உணவகம் ஒன்று கட்டுவதற்கான எண்ணம் தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நோர்வேயின் கடற்பாங்கான பிரதேசமாகிய பாலி கிராமத்தில் உள்ள ஒரு கடற் சூழலில்தான் இது அமைக்கப்படவிருக்கிறது.

Under என அழைக்கப்படும் இந்த உணவகம் imaginative Snohetta எனும் நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ளதோடு, 36 அடி அகலமான கண்ணாடி சாளரத்தினையும் கொண்டதாக அமையவிருக்கிறது.

ஐரோப்பாவில் அமையவிருக்கிறது முதலாவது கடலுக்கடியிலான உணவகம்!

கடல் வாழ்வுக்கான ஆராய்ச்சி மையமாகவும் இது விளங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனை வடிவமைக்க திட்டமிட்டிருக்கும் Snohetta, இதுபற்றிக் குறிப்பிடுகையில், ”இது கடலின் ஒரு பகுதியாக விளங்கும். கடல் படுகையில் 5 மீட்டர்வரை நேரடியாகவே ஓய்வெடுக்கும் அம்சத்தினையும் கொண்டிருக்கிறது.

22854521_1604726072919669_618508630_n.jpg?oh=6adf8e0a517b3cc003aac0092c10333f&oe=59F59777

இங்கு வருபவர்கள் பயப்படத்தேவையில்லை. சுவர்கள் ஒரு அடி தடிமனாக அமைக்கப்படுவதால் உறுதியானதாக இருக்கும் என நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐரோப்பாவில் அமையவிருக்கிறது முதலாவது கடலுக்கடியிலான உணவகம்!

குறித்த உணவகம் 80 தொடக்கம் 100 வரையான விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு 13அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்ட சாளரத்தினூடாக கடல் உயிரினங்களைப் பார்வையிடுவதற்கான வசதியினையும் கொண்டதாக காணப்படும்.

ஒவ்வொன்றாக கீழ் நோக்கிச் செல்லத்தக்க மூன்று மாடிகள் இதனுள் காணப்படும். முதலாவது மாடி, விருந்தினர்களின் மேலாடைகளை களைந்து வைப்பதற்காகவும் இரண்டாவது மாடி மதுபான நிலையமாகவும் விளங்கும்.

ஐரோப்பாவில் அமையவிருக்கிறது முதலாவது கடலுக்கடியிலான உணவகம்!

அதற்கு அடுத்ததாக கீழே அமைந்துள்ள கட்டம்தான் உணவகமாக காணப்படும். அங்கேதான் பாரிய கண்ணாடிச் சாளரத்தினூடாக கடல்வாழ் உயிரினங்களைப் பார்ப்பதற்கான வசதி காணப்படுகிறது. உணவகத்தில் கடல் உணவுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

உணவகத்தின் வெளிப்புறமான சில பகுதிகள் கடல்வாழ் ஆராய்ச்சிகளுக்காக திறந்த நிலையில் காணப்படும். கடல் ஆராய்ச்சிகளுக்காக வருபவர்கள் கடல் மீன்களுக்கு ஒளிச் சமிக்கைகள்மூலம் பயிற்சியளிக்கமுடியுமா என்பதை ஆராய்வார்கள்.

உணவகத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த வருடம் பெப்ரவரியில் ஆரம்பித்து 2019ஆம் ஆண்டு பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில் நிறைவுறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் அமையவிருக்கிறது முதலாவது கடலுக்கடியிலான உணவகம்!

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Sportler und Text


இலங்கை கிரிக்கெட்டின் ஒரு பெருமைமிகு அடையாளம் சங்காவுக்கு இன்று பிறந்தநாள்.

Happy Birthday Kumar Sangakkara

சேர்.டொனால்ட் பிராட்மனுக்குப் பின்னர் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும், உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும்,
இலங்கையின் மிகச்சிறந்த கண்ணியமான, கனவான் தன்மை மிக்க அற்புத கிரிக்கெட் வீரருமான அண்மையில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்ற குமார் சங்கக்கார அவர்களுக்கு இனிய பிறந்த வாழ்த்துக்கள்.

உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள சங்கா ICC மக்கள் தெரிவு விருதை இரு தடவை தன் வசப்படுத்திய பெருமைக்குரியவரும், பல சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவரும் ஆவார்.

சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ள சங்கா இன்னமும் உலகளாவியரீதியில் பல்வேறு தொழில்சார் லீக் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடிவருகிறார்.

Bild könnte enthalten: 1 Person, machen Sport, Baseball und im Freien

Sangakkara

https://www.facebook.com/icc/videos/1785094784842943/?hc_ref=ARSte-0D1LT65yhXGQB1f--5uEgRr_YFlRnnKuFibWy4D9i-qqf6L9Qw2VFlvyVIZkE&pnref=story

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.