Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12513970_669070443195501_632796867002829

12524067_669070576528821_627041438662206

12489412_669070749862137_561899084922883

மனதால் சுவைக்கலாம்!

முழுக்க முழுக்க சாக்லேட்டால் செய்யப்பட்ட சிற்பங்கள்!

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

துண்டிக்கப்பட்ட தலையும் , உடலும் இணைந்தன!

 

பிரான்ஸில் இருந்த 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து கடவுளான துண்டிக்கப்பட்ட ஹரிஹரர் சிலையின் தலைப்பகுதி ,கம்போடியாவிலிருந்த அதன் உடல்பகுதியுடன் இணைக்கப்பட்டது.
கம்போடியா,  ஃபினாம் பென்னில் உள்ள தேசிய அருங்காட்சியத்தில் நேற்று நடந்த விழாவில், இந்நிகழ்வு நடைபெற்றது.

statue_vc1.jpg

இந்த ஹரிஹரன் சிலையானது, இந்துக் கடவுளான சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய 2 தெய்வங்களின் பிரதிபலிப்பாக ஆங்கோரியக் கலாசாரத்தில் கூறப்படுகிறது. கம்போடியா பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தபோது, இந்துக் கடவுளான ஹரிஹரருடைய உடலற்ற தலையானது 1880-ம் ஆண்டு,  ஃப்நாம் டா மலையில், பிரஞ்சு அதிகாரி ஏட்டியென் அய்மோனியரால் கண்டுபிடிக்கப்பட்டு, பின் பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டது.

statue_vc2.jpg

அதன் பின்னர் கம்போடியா மக்கள் பிரெஞ்ச் மியூசியத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க , ஹரிஹரருடைய சிலையின் தலைப்பகுதியை, பிரெஞ்ச் மியூசியம் முதல் முறையாக திருப்பி தர சம்மதித்தது. இப்படி ஒரு சம்மதம் கிடைத்தது ,இந்த நூற்றாண்டிலேயே இதுதான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த உடலற்ற தலையானது, கம்போடியாவின் கெமர் கலையின் வெளிப்பாடுதான் என பிரான்ஸ் அரசிடம் ஒப்புதல் வாங்கி, ஹரிஹரரின் தலை மற்றும் உடலை இணைக்க ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வைக்காண, கம்போடியா - ஃபினாம் பென் அருங்காட்சியகத்தில் மக்கள் திரளாக குழுமியிருந்தனர்.

"இது ஒரு சரியான பொருத்தமா இருக்கும்" என ஃபியான் பென் பாதுகாப்பு அருங்காட்சியகத்தின் துணை இயக்குனர் -சியா சொஹீட்  கூறியுள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

இன்று அன்று | 22 ஜனவரி 1970: பிரம்மாண்ட விமானம்!

 
indru_2706065h.jpg
 

விமானப் பயணத்தின் பிரம்மாண்டத்தை உணர்த்தியது ‘ஜம்போ ஜெட்’ என்று செல்லமாக அழைக்கப்படும் போயிங் ரக விமானம்தான்.

300-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் விதத்தில் மிகப் பெரிய அளவிலான விமானம் அது. அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘போயிங் 747’ எனும் விமானம், 1970 ஜனவரி 22-ல் முதன்முதலில் வானில் பறந்தது.

நீண்ட தொலைவுக்கு அதிகப் பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் பெரிய அளவிலான விமானத்தை உருவாக்கும் திட்டம் 1960-களில் அமெரிக்க விமான நிறுவனங்கள் மத்தியில் உருவானது.

பல நிறுவனங்கள் இதுதொடர்பான யோசனைகளை முன்வைத்தன. இறுதியில் போயிங் நிறுவனமே அதைச் செயல்படுத்தியது.

இதற்கு முன்பு, 1958-ல் போயிங் 707 எனும் விமானம்தான் அளவில் பெரியதாக இருந்தது. அந்த விமானத்தைவிட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு பெரியது இவ்விமானம். இதைவிடவும் பெரிய விமானங்கள் தற்போது வந்துவிட்டன என்பது வேறு விஷயம்!

tamil.thehindu

  • தொடங்கியவர்

தாயின் உடலுக்கு நடனம் ஆடி அஞ்சலி செலுத்திய மகள்; மிருணாளினி சாராபாய் இறப்பில் உருக்கம்!

 

ஆமதாபாத்: பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் உடலுக்கு அவரது மகள் மல்லிகா சாராபாய் நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினார்.

mirunalini%20600%201.jpg

பிரபல நடனக் கலைஞரும், மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் மனைவியுமான மிருணாளினி சாராபாய், குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நேற்று மரணம் அடைந்தார்.  97 வயதான அவர், உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட மிருணாளினி சாராபாய், சிறிது நேரத்தில் மரணமடைந்தார்.

mirunalini%20600%202.jpg

சென்னையில் பிறந்த மிருணாளினி சாராபாய் பரதநாட்டியம், கதகளி ஆகியவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற அவருக்கு மல்லிகா சாராபாய் என்ற மகளும், கார்த்திகேய சாராபாய் என்ற  மகனும் உள்ளனர்.

தாயைப் போலவே தேர்ந்த நடனக்கலைஞரான மல்லிகா சாராபாய்,  தன் தாயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது உடலருகே நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினார். அந்தக்காட்சி உருக்கமாய் இருந்தது.

vikatan.

  • தொடங்கியவர்

வங்கம் தந்த சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 10 சுவாரஸ்யமான விஷயங்கள்

 

இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன். வரலாற்றை அலைக்கழிக்கும் ஓர் அழியா சரித்திரம் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினம் இன்று. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய தலைவலியாய் விளங்கிய, இந்திய இளைஞர்களின் கனவாய் வாழ்ந்த இந்த சிங்கம் வங்கத்தில் உதித்த தினம் இன்று. இவரது மரணம் வேண்டுமானால் சர்ச்சைக்குள்ளானதாக இருக்கலாம், ஆனால் இந்திய சுதந்திரத்திற்கான இவரது முழக்கங்களும் போராட்டங்களும் அழியாப்புகழ் பெற்றவை. நேதாஜி என்ற ஒற்றைச் சொல்லை சொன்னால் ஒவ்வொருவரின் ரத்த நானங்களும் துடிப்பது எதனால், ஆங்கிலேயர்கள் இந்த ஒற்றை மனிதனைப் பார்த்து அரண்டது எதனால்? ஏன் இவருக்கு மட்டும் அப்படியொரு தனித்துவம்?இதோ…

netaji-nehru.jpg

ஐ.சி.எஸ் பதவியை உதரினார்:

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ் தேர்வில், இந்திய அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தார் சுபாஷ். மிகப்பெரிய பதவி.. சர்க்கார் உத்தியோகம்… ஆனால் அவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மான்டேகு பிரபுவிடம் அளித்தார் சுபாஷ். மதிப்புமிக்க பதவியை உதரித்தள்ளிய அவரைப் பார்த்து, “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று அவர் கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது” என்று சொல்லி அவருக்கே அதிர்ச்சயளித்தார்.


சிறையிலிருந்தே சீறினார்:

1924ம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி. அந்த மோசமான சிறையிலேயே அவரை முடக்க நிணைத்தது ஆங்கில அரசு. ஆனால் அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாரே வெற்றி வாகை சூடினார் போஸ். அதுதான் வங்க மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை. இந்த வெற்றி தான் ஆங்கில அரசின் கூரிய பார்வையை போஸின் பக்கம் திருப்பியது. தங்களது தடங்கல்கள் அத்தனையையும் மீறி ஒருவரால் சிறையிலிருந்து வெல்ல முடிகிறது என்றால், இவர் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிரிட்டிஷ் அரசை உணர வைத்தது அந்த வெற்றி.

 

Subhash-Chandra-Bose-02.jpg


விடுதலையை நிராகரித்தார்:     

மாண்டலே சிறையில்,போஸ் அவர்கள் காச நோயால் அவதிப்பட, அனைவரும் அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டம் செய்தனர். அவரது உயிர் ஆபத்தான நிலையை எட்டியதால் இரண்டு நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்ய நினைத்தது பிரிட்டிஷ் அரசு. ஒன்று, சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும் என்பது. சுபாஷின் தாய், சகோதரர் உட்பட அனைவரும், அவர் விடுதலை ஆனால் போதும் என்று நினைத்திருக்க, “நான் ஒன்றும் கோழையல்ல மன்னிப்புக் கேட்க. என்னை என் நாட்டுக்கள் வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்? இந்த நிபந்தனைகளை என்னால் ஏற்க முடியாது” என்று சொல்லி விடுதலையாக மறுத்துவிட்டார் சுபாஷ். மரணத்தின் பிடியிலும் மங்காமல் ஒலித்த அந்த சிங்கத்தின் கர்ஜனைக்கு அரசாங்கம் அரண்டுதான் போனது.

தி கிரேட் எஸ்கேப்:

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்கக் ஒரு நிகழ்வு தான் காரனம். வீட்டுச் சிறையில் பயங்கர கண்கானிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயனம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். சுபாஷைக் காணவில்லை என நாடே அல்லோலப்பட, ஜெர்மனியிலிருந்து சுபாஷ் அவர்கள் முழங்க, மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என்று ஜப்பான்,இத்தாலி போன்ற நாடுகளே இவரை வியந்து போற்றின. உலகின் தலைசிறந்த எஸ்கேப்களில் சுபாஷின் பெயருக்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

 

Netaji%20Subhas%20Chandra%20Bose%20and%2


ஹிட்லரிடம் முறைப்பு:

ஜெர்மனியில் ஹிட்லரை சுபாஷ் அவர்கள் சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட, அதை எதிர்த்துப் பேசிய போஸ், அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார். “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்” என்று மொழிப்பெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக அப்படி ஒருவர் பேச, சுபாஷின் திராணியை நினைத்து வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள்.


தீர்க்கதரிசி:

1938 குஜராத் காகிரஸ் மாநாட்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது முதல் உரையை வாசித்தார் சுபாஷ். “ஆங்கிலேய அரசு பிரித்தாலும் சூட்சியை இங்கு அமுல்படுத்தும். நம் தேசத்தை சுக்குநூறாக உடைக்கும். நாம் ஒற்றுமையோடு அதை எதிர்த்து வெல்ல வேண்டும்” என்று கூறினார். எது நடக்கக்கூடாது என்று அவர் நினைத்தாரோ, அதுவே ரத்தமும் சதையும் சிதற இந்நாட்டில் அரங்கேறியது. ஆங்கில அரசின் ஒவ்வொரு அசைவும் எப்படி இருக்கும் என்று நன்கு அறிந்தவர் போஸ் அவர்கள்.


ஜெய் ஹிந்த்:

இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும் ‘ஜெய் ஹிந்த்’ சுலோகத்தை முதல் முதல் பயன்படுத்தியவர் நேதாஜி தான். இந்த வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் நமக்குள் எழும் அந்த தேசப்பற்று தான் அம்மாபெரும் மனிதனுக்கு நம் காணிக்கை.


ரத்தம் தா..சுதந்திரம் தருகிறேன்..

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் சுபாஷ் சந்திர போஸ். ஒவ்வொரு இளைஞனையும் தனது சீறிய பேச்சால் சுதந்திரப் போரில் பங்குபெறச் செய்தார். “ரத்தம் கொடுங்கள். நான் சுதந்திரம் தருகிறேன்” என்ற சுபாஷின் பேச்சு ஒவ்வொரு இளைஞனையும் தட்டி எழுப்பியது. இந்திய தேசிய ராணுவத்தில் சுபாஷின் ரத்தம் பாய்ச்சப்பட, அது ஆங்கிலேயரின் இந்தியப் படையிலும் பாய்ந்தது. இனி இந்திய ராணுவத்தை நம்ப முடியாது என்பதால் தான், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறியது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

11-Interesting-Facts-About-Netaji-Subhas


கடலுக்கு அடியிலும் சீற்றம்:

சுபாஷின் சீற்றம் தரையில் மட்டும் வெளிப்படவில்லை. அது கடல்,கரை,காற்று,மலை அனைத்தையும் கடந்து நின்றது. ஜப்பான் சென்று இந்திய சுதந்திரப் போருக்கு ஆயத்தமாக விரும்பிய சுபாஷ், ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக சுமார் மூன்று மாதம் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார். எங்கும் விமானங்கள் குண்டுகள் வீசி வந்த இரண்டாம் உலகப் போர் சமயம் இப்படி மூன்று மாத காலம், உயிரைத் துட்சமாய் மதித்து அவர் செய்த இப்பயணம் உலக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றது.


தமிழகத்துடனான தொடர்பு:

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில், லட்சுமி அம்மையார் படைத்தளபதியாக இருந்தது நாம் அறிந்ததே. அதுமட்டுமல்லாது, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவிடமும் நல்ல உறவைக் கொண்டிருந்தார் நேதாஜி. 1949ல் கமுக்கத்தில் நடந்த ஒரு மாநாட்டில், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் சரியான தருனத்தில் வருவார். என்னோடு நேரடியான தொடர்பில் இருக்கிறார்” என்று கூறீயிருந்தார் பசும்பொன் ஐயா. இவரே பார்வேர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


வேண்டாம் பாரத ரத்னா:

1992ம் ஆண்டு இறந்தவர்களுக்குத் தரப்படும் ‘போஸ்துமஸ்’ முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. “எங்கள் தலைவர் எப்போது இறந்தார்?அவர் மரணம் உண்மையில்லை” என்று கூறி பலரும் அவ்விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போஸின் குடும்பமும் அவ்விருதை ஏற்க மறுத்தது. தங்கள் தலைவனின் மரணத்தை பல ஆண்டுகள் ஆனபின்னும் கூட சிலர் ஏற்க மறுத்தனர். இதுதான் சுபாஷுக்கான மரியாதையை.

வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இந்திய சுதந்திரத்தையே நினைத்துக்கொண்டிருந்த ஒரு மாமனிதனை நாம் ஒரு நொடியும் மறக்கக் கூடாது. அதுவே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை. அதற்கு முன்னாம் இந்த பாரத ரத்னாவெல்லாம் தூசிற்குச் சமம். அவரது சாம்பல் தைவானின் வானத்திலோ, ஜப்பானின் கோவிலிலோ இல்லை இமையமலையின் பனிகளிடையோ…எங்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவர் பேசிச் சென்ற சொல் ஒவ்வொன்றும் சுவாசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் நாசியிலும் கலந்திருக்கிறது. அதை நாம் பரசாற்ற உரக்கச் சொல்வோம் ‘ஜெய் ஹிந்த்!’+

.vikatan

  • தொடங்கியவர்

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பார்த்ததும்
திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..

12507199_1114958415211598_81459717533801

  • தொடங்கியவர்

 

சார்லி சாப்ளின் & சிறுவன் இணைந்து கலக்கும் செம கலக்கல் நகைச்சுவை காணொளி ...

  • தொடங்கியவர்

பெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா? ரிக்-அதர்வண வேதங்கள் சொல்லும் உண்மை என்ன?

 

அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தனி மனிதன் தொடங்கி, உலக நாடுகள் வரை எவ்வளவு வளர்ச்சி பெற்று முன்னேறியிருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில், அதன் உண்மை தன்மையை அறிய முடியாமல் இன்னும் வெற்றிடமாகத்தான் நாம் உள்ளோம். அப்படி ஏராளமான மர்மங்களும், திகில் கிளப்பும் அமானுஷ்யங்கள் நிறைந்த இடமுமாகத்தான் 'பெர்முடா முக்கோணம்' இன்று வரை திகழ்கிறது.

வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில், ஒரு முக்கோணப் பகுதியாக காட்சி அளிக்கும் இந்த பகுதி, சாத்தானின் முக்கோணம் என்றும் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியை கடந்துச் சென்ற ஏராளமான விமானங்களும், கப்பல்களும் மர்மான முறையில் காணாமல் போயிருக்கின்றன. அவை அனைத்தும் என்ன ஆனது என்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க எந்த வான தூதனும் இதுவரை இறங்கி வரவில்லை.

bermudatriangle.jpg


காணாமல்போன பட்டியலில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானங்களும், கப்பல்களும் ஏராளம். அதி நவீனத்தையே பெரிதும் நம்பியிருக்கும் அமெரிக்கா, இந்த கடல் பகுதியில் பல மர்மங்கள் மறைந்திருப்பதை இன்று வரை மறுத்துதான் வருகிறது. ஆனாலும், காணாமல்போகும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் குறித்த செய்திகள் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இதனிடையே வேற்று கிரக உயிரினங்கள் மற்றும் கண்களுக்கு புலப்படாத ஜீவராசிகள் இப்பகுதியில் வசிப்பதாக வெகு ஜன மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இங்கு நிகழக்கூடிய எந்த மாயங்களையும் இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

மேலும், இப்பகுதியில் மிகப்பெரிய பிரமிடு மறைந்திருப்பதாகவும்  எல்லோரும் நம்புகிறார்கள். அதனால், இப்பகுதியில் மேலே பறக்கக்கூடிய எல்லாவற்றையும் கீழே இழுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.

கடல் வழியாக உலகை சுற்றி வலம் வருகையில், பெர்முடா முக்கோணத்தின் அருகே கடந்துச் செல்லும்போது திசைக் காட்டும் கருவிகள் தாறுமாறாக சுழன்றதாகவும், பயமுறுத்தும் வகையில் விநோதமான வெளிச்சங்கள் தோன்றியதாகவும் அதனால், வேறு வழியாக கப்பலை திரும்பி விட்டதாகவும் அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் தெரிவித்திருக்கிறார். மேலும்,  'நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்' உள்ள பகுதி என்றும், 'தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள்' எனவும் இப்பகுதியை அவர் 1492-ம் ஆண்டு வர்ணித்துள்ளார்.

 

12596237_930735550315727_2111414282_n.jp


இந்த கடல் பகுதியில் கடந்த 500 வருடங்களாக ஏராளமான கப்பல் மற்றும் விமானங்கள் மாயமானாலும், அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது, மறுபக்கம் அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டும் வருகிறது.

1909-ம் ஆண்டு சொகுசு படகு மாயமாகி உள்ளது.

1945-ம் ஆண்டு டிசம்பரில் ஃப்ளோரிடாவில் இருந்து கிளம்பிய அமெரிக்கா விமானம், 120 கி.மீ தூரம் வரை சென்று, பிறகு மாயமானது.
 
1948- ம் ஆண்டு 27 பயணிகளுடன் ஒரு கப்பல் மாயமாகி உள்ளது.
1951-ம் ஆண்டு 53 பயணிகளை அழைத்துச் சென்ற கப்பல் மாயமானது.

இப்படி தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக மாயமானதால், எல்லோருடைய பாதுகாப்பையும் கருதி, இப்பகுதியில் கப்பல் மற்றும் விமானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆதி காலம் தொட்டு பாதுகாத்து போற்றப்பட்டு வந்த இந்து மதங்களின் தர்ம சாஸ்திரமாக கருதப்படும் நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகிய இரண்டு வேதங்களில்  'பெர்முடா முக்கோணம்' பகுதியில் நடைபெறும் நிகழ்வை போன்றே, பல அரிய தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

ராமாயணம்:

* 'பெர்முடா முக்கோணம்' இடத்தை பற்றிய செய்திகள் போன்றே, ராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் கடல் பகுதியில், 'சிம்ஹிகா' என்ற அசுர பலம் பொருந்தியவள் கடலில் இருந்ததாகவும், அவளின் மேல் பகுதியில் பறக்ககூடிய எந்த பொருளையும் தன் வசம் ஈர்க்ககூடிய சக்தி படைத்தவளாகவும் திகழ்ந்ததாக ராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

ரிக் வேதம்:

* 23 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மிக தெளிவாக 'பெர்முடா முக்கோணம்' போன்ற ஒரு பகுதியைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. 

* 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே 'பிரமாண்ட புராணத்தில்' இதுபோன்ற பகுதியை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 

* பூமியில் இருந்து உருவான கிரகம்தான் செவ்வாய். அதனால்தான், பூமியின் மகன் ( son of bhumi) என்று சொல்கிறோம். அல்லது குஜா (kuja) என்றும் சொல்லப்படுகிறது. 'கு'  என்றால் பூமி, 'ஜா' என்றால் பிறந்தவன் என்பது அதன் பொருள். இது சமஸ்கிருதத்தில் சொல்லப்படும்  வார்த்தை.

* ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள 'அஸ்ய வாம்ஸய  என்னும் சூக்தத்தில் பூமியில் இருந்துதான் செவ்வாய் கிரகம் பிறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி பிறந்த செவ்வாய் கிரகம், பூமியை விட்டு தனியாக பிரிந்து சென்றபோது, முக்கோண வடிவத்தில் பூமி மீது காயம் ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட பூமியில், தேவர்களின் மருத்துவர்களாகிய அஸ்வினி குமாரர்கள் இரும்பை காய்த்து ஊற்றி, அவ்விடத்தை சரி செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதனால், பூமி சற்று சாய்ந்து சுமார் 23 1/2  டிகிரி அளவுக்கு சாய்வான நிலையை அடைந்துள்ளது.  

* பூமி சாய்வாக உள்ள பகுதியில்தான், இயற்கையாக இரும்பினால் உருவாக்கப்பட்ட காந்த ஈர்ப்பு சக்தியானது, எந்த பொருளையும் தன் வசம் ஈர்த்துக்கொள்கிறது. அத்துடன் அதிகளவு பனிமூட்டமும், உச்சக்கட்ட குளிர்ச்சியும் இப்பகுதியில் நிலவுகிறது.

* அதேபோல்தான் பூமியிலிருந்து, நிலவும் உருவாகி பிரிந்து சென்றுள்ளது. 

geuu_02_img0437.jpg



அதர்வண வேதம்:

* அதர்வண வேதத்தில் பல அறிய கற்கள் மற்றும் பவளங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 'தர்பை கல்' என்னும் பகுதி, பெர்முடா முக்கோணத்தில் நிகழும் மாயையை ஒட்டியே அமைந்துள்ளன.
 
*  'தர்பை கல்' என்பது, உயர் அடர்த்தி கொண்ட நியூட்ரான் நட்சத்திரமாகும். இது மிக குறுகிய வடிவம் கொண்டது. இது ஒரு சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்தான கல்லாகும். 

* இந்த கல் உள்ள பகுதி, உயர்ந்த ஈர்ப்பு விசைகொண்ட ஒரு நிலமாக பார்க்கப்படுகிறது.  இதற்கு ஈர்ப்பு விசை சக்தி அதிக அளவில் இருப்பதால்,  தர்பை கல்லின் மேல் பகுதியில் செல்லும் எந்த பொருளையும்  கீழ் நோக்கி ஈர்க்ககூடிய அதிக சக்தியை பெற்றுள்ளது.

* இந்த 'தர்பை கல்'லிருந்து  வெளிப்படும் எந்திர காந்த ஈர்ப்பு அலைக்கற்றையானது, ஒரு கம்பியில்லாத கருவியிலிருந்து, இன்னொரு கருவிக்கு செல்லும்போது, எதிர்படும் அந்த அமைப்பு முழுவதுமாய் தோற்றுப்போய் பழுதடைந்து விடும்.

* 19-வது காண்டம், 4-வது மந்திரமான 28 -வது சூக்தத்தில் என்ன சொல்லப்படுகிறது என்றால், 'ஏ தர்பை கல்லே! எழக்கூடிய எதிரிகளை தாங்கள் ஈர்த்து, எங்களை காப்பாற்றுங்கள்' என கூறப்பட்டுள்ளது. அதனால், இந்த கல்லில் இருந்து வெளிப்படும் சக்தியானது,  புதிதாக உருவாகக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும்,  அடிப்படையிலேயே அழித்து விடும் ஆற்றல் படைத்து விடுகிறது.

dnews-hurricanekatrina-hero.jpg


* இந்த தர்பை கல்லிற்கு, தண்ணீரில் இருக்கும்போது, அதிக ஈர்ப்பு விசை கிடைக்கிறது. 

* 7-ம் மந்திரத்தில், சொல்லப்படுவது என்ன என்றால், தயிர் எப்படி உறைகிறதோ அதுபோல், தர்பை கல்லானது, எதிர்படும் அனைத்தையும் உறைய செய்து, அதன் உண்மை தன்மையை அழித்து எரித்து விடும் ஆற்றல் உடையதாக சொல்லப்படுகிறது.

* நவீன அறிவியல்படி, அந்த கல், சிவப்பு வண்ணத்தில் இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்திற்கு இணையாக திகழ்வதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.  இப்பகுதியில் மீத்தேன் அதிகமாக இருப்பதாலும், மீத்தேன் குமுழ்கள் அதிகமாக சுரப்பதாலும்தான் கப்பல் மற்றும் விமானத்தை தன் பக்கம் ஈர்த்துகொள்கிறது.

இவை எல்லாம் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டுள்ள 'தர்பை கல்' செயல்பாடுகளாக இருப்பது போலவே, பெர்முடா முக்கோணத்திலும் இருக்கிறது.

நவீன அறிவியல்படி செவ்வாய் கிரகம் முக்கோண வடிவத்தில் இருப்பதாகவும், அங்கு மீத்தேன் மற்றும் மீத்தேன் குமிழிகள் அதிகமாக சுரப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு பல நதிகள் இருந்து வற்றியதற்கான சுவடுகள் காணப்படுவதாகவும் நாசா கண்டறிந்துள்ளது.

தற்போதையை நவீன உலகில், 'பெர்முடா முக்கோணம்' பற்றிய தகவல்களை நாசா இப்போது ஒவ்வொன்றாக கண்டறிந்து வந்தாலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்களின் முந்தைய வேத காலம் என்று சொல்லப்படும் ரிக் வேதத்திலும், இறுதியான வேதமான அதர்வண வேதத்திலும் மற்றும் புராணங்களிலும் மிக தெளிவாக நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது பிரமிப்பாகதான் இருக்கிறது.

மூத்தோர் சொல் அமிர்தம் என்று அவ்வையார் சொன்னதுபோல், நமது முன்னோர்கள் சொன்னது அனைத்தும் உண்மையே என்று இதுபோன்ற விஞ்ஞான முடிவுகள் இந்து மதத்தின் சிறப்புகளை மேலும் தெளிவுப்படுத்துகிறது. 

http://www.vikatan.com/news/world/57965-secreat-behind-bermuda-triangle.art

  • தொடங்கியவர்

12628561_974770025905025_374583712834747


முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் கிரெக் ரிட்ச்சியின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

ஆஸ்கரை வெல்லுமா இந்த அமேசான் காட்டின் கதை?!

 

ஸ்கர் விருதுகளுக்கான போட்டி சூடுபிடிக்க துவங்கிவிட்டது. வழக்கம்போல, உலகின் பல பகுதிகளில் இருந்து, பல கலைப்படைப்புகள் ஆஸ்கரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் முதன்முறையாக கொலம்பிய சினிமா ஒன்று ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியிருக்கிறது. கொலம்பிய நாட்டில் இருந்து முதல்முறையாக ஒரு இயக்குநர்,  சினிமா ஆர்வலர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறார் ஒரே படைப்பில் அத்தனை பேரையும் கவனிக்க வைத்த அந்த இயக்குனர் சிரோ கியூரா.

அமேசான் காடுகள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும் ? சிலருக்கு அரியவகை மூலிகைகள் கிடைக்குமிடம் என தோணலாம். சிலருக்கு ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அதன் பெருமைகள் நினைவுக்கு வரலாம். இயற்கை ஆர்வலர்களுக்கு, அழிந்து வரும் இயற்கையின் பொக்கிஷம் என்ற கோபம் கூட இருக்கலாம். இதெல்லாம் தற்போது நாம் வாழும் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட ஞாபகங்கள். மொத்த உலகத்திற்கும், அமேசான் என்றால், அதன் பொதுப்புத்தியில் இருக்கின்ற விஷயங்கள் இவ்வளவுதான்.

 

 

  • தொடங்கியவர்

12573098_957673117613215_764259927605175

தனது தந்தை விளையாடுவதை பார்த்து ரசிக்கும் டேவிட் வார்னரின் மகள்..

  • தொடங்கியவர்
 
 
 
Vikatan EMagazines Foto.
 

10 செகண்ட் கதைகள் - வரம்

''பக்தா... உன் பக்தியை மெச்சினேன்.

என்ன வரம் வேண்டும்?''

''கடவுளே... நீங்க எனக்கு வரம் தந்தீங்கன்னு சொன்னா, ஒரு பய நம்ப மாட்டான். அதனால

ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?''

vikatan

  • தொடங்கியவர்
வலைபாயுதே V 2.0
 
 

 

facebook.com/karthikeyan.maddy: எதிர் வீட்டு வாசல்ல பழைய TVS-XL ஒன்று நின்றது. அந்த வீட்டம்மா என்னைக் கூப்பிட்டு, `வண்டி உன்னுதா, ஏன் இங்கே நிறுத்தியிருக்கே?’னு கேட்டாங்க. `என்னுது இல்லீங்க’னேன். ரொம்பக் கோவமா, `எவன் இங்கே நிறுத்தினது? ஆணியை எடுத்து பஞ்சர் ஆக்குறேன் பார்’னு கத்திட்டுப் போவுது. அந்த வீட்டு வாசலை மறைச்சுக்கூட அந்த வண்டி நிக்கலை. அது ஓரமாத்தான் நிக்குது. என்ன மாதிரி மனோபாவம் இது? ரொம்பத் தூரம் பயணம் பண்றவங்க களைப்பாற, வீட்டுவாசல்ல திண்ணைவெச்சு வீடு கட்டினவங்க தானே நாம?

twitter.com/podhigaichelvan: மாட்டை அவிழ்த்துவிட்டா, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ்காரங்க பிடிச்சிட்டு வந்து தொழுவத்துல கட்டுவாங்க # அடேய்... அதான்டா ஜல்லிக்கட்டு!

twitter.com/teakkadai: விஷாலுக்கு எந்த ஏரியாவுல மார்க்கெட் இருக்கோ இல்லியோ, கே டி.வி-யில் இருக்கு. வாரம் ஒரு படம் போட்டுடுறாய்ங்க!

twitter.com/withkaran: பசங்க யாராவது ஆக்ஸிடென்ட்ல செத்தாலே `குடி போதையா?’னு கேட்கிற அளவுக்கு நாடு போயிருச்சு!

p108a.jpg

twitter.com/meenammakayal: ஆயிரம் `ஐ லவ் யூ’-க்கள் சொல்லாத அர்த்தத்தை, அழுதுகொண்டே சொல்லும் ஒரே ஒரு `ஐ ஹேட் யூ’ உணர்த்திவிடுகிறது!

twitter.com/deebanece: கரும்பை வாங்கிக்கிட்டு எல்லாரும் ‘ஏவுகணை’ மாதிரி போயிட்டு இருக்கானுங்க. அடேய்... படக்குனு திரும்பாதடா!

twitter.com/venkatesh6mugam: பாரில் இருந்து வரும் ஆணும், பார்லரில் இருந்து வரும் பெண்ணும் ஒரு `மிதப்போடு’தான் வெளியே வருகிறார்கள்!

twitter.com/kaviintamizh: எந்தப் புராணக் கதையும் இல்லாமல் வாழ்வியலோடு ஒன்றியிருப்பதே பொங்கல் மீதான ஈர்ப்புக்குக் காரணம்!

twitter.com/settaikaaran: தமிழில் பேசத் தடைபோடும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நாம பொங்குறதும் ஒருவகையில் அபத்தம்தான்!

twitter.com/g_for_Guru: பர்த்டே பார்ட்டியில் ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கிறப்ப, பிரிக்க முடியாத மாதிரி பேக் பண்ணிக் குடுங்கப்பா, அங்கேயே பிரிச்சு அங்கேயே அடிச்சுக்குதுங்க!

p108b.jpg

twitter.com/isai_: அதிகாலையில் பேசிக்கொள்ள அவ்வளவு இருக்கிறது ஆலமரப் பறவைகளுக்கு!

twitter.com/ikrthik: வாடகை வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் கடந்துவந்திருப்பார்கள், ‘இது நம்ம வீடு இல்லையாப்பா?’ எனும் பிள்ளைகளின் ஏக்கக் குரல்களை!

twitter.com/Oorodi: ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்புன்னா, அது அலாரம்ல இருக்கும் ஸ்னூஸ் ஆப்ஷன்தான்!

twitter.com/Gnanakuthu: `பூலோகம்’ படத்தை இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாகப் போடும்போது வரும் விளம்பரங்கள், பகடியாக இருக்கும்தானே!

facebook.com/sharasithara: `ஏன்... மெசேஜ்கூட பண்ண மாட்டியா?’ என்ற ஒரு பிரேக்அப்பும், `ஏன் எப்பப் பார்த்தாலும் மெசேஜ் பண்ணிக்கிட்டே இருக்க?’ என்ற ஒரு பிரேக்அப்பும் என தலா இரு எக்ஸ்ட்ரீம்களையும் நீங்கள் கடந்துவிட்டால், எந்த ரிலேஷன்ஷிப்புக்கும் நீங்கள் தயாராகிட்டீங்கனு அர்த்தம்!

p108d.jpg

facebook.com/vinayaga.murugan.7: அசைவம் சாப்பிடாவிட்டால் என் போன்ற ஆட்களுக்கு கை, கால் நடுங்கும்; மன உளைச்சல் அதிகரிக்கும். கோழிக்கறி வாங்க கடைக்குச் சென்றால், இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் கோழி, ஆட்டுக்கறி விற்கும் கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளார்கள். வீட்டுக்கு வரும் வழியில் சப்வே, மெக்டி, கேஎஃப்சி, ஸ்டார் ஹோட்டல் பார்கள் எல்லாம் திறந்திருப்பதைப் பார்த்தேன். இப்படி எல்லாம் நடந்துக்கச் சொல்லி யாரு உங்களுக்குச் சொன்னாங்க? அவர் ஏதோ பத்து குறள்களில் மீன், மது சாப்பிடாதீங்கனு சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா, நூற்றுக்கும் மேலான குறள்களில் அரசு எப்படி நடக்க வேண்டும், ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார். இதை எல்லாம் சொன்னால், என் மேலே அவதூறு வழக்கு போடுவாங்க!

p108c.jpg

facebook.com/pichaikaaran: லைக்ஸ், கமென்ட்ஸ் பற்றி கவலையின்றி, பெண்கள் அவரவர் வாசல்களில் ஓவியம்போல கோலமிட்ட சிரத்தை வியப்பை அளித்தது. தோழிகள், சகோதரிகள், அம்மா, மகள்கள் என டீம் ஸ்பிரிட்டில் வீட்டு வாசல்கள் அழகாகிக் கொண்டிருந்தன.

ஒரு வீட்டு வாசலில் மிகப் பெரிய அழகுக் கோலம் இட்டு அதைச் சுற்றி பெரிய வட்டமாகக் கோலத்திலேயே வரைந்திருந்தார்கள். காம்பஸ் (கவராயம்) போன்ற எந்தக் கருவியும் இல்லாமல் எப்படி இதை வரைகிறார்களோ?

எப்போது வேண்டுமானாலும் அழியலாம் எனத் தெரிந்தும்கூட இவ்வளவு உழைப்பைக் கொட்டும் அன்னைகளுக்கும் சகோதரிகளுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

vikatan.

  • தொடங்கியவர்

நேதாஜி 25

 

 

சுபாஷ் சந்திரபோஸ்... இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். தன் மரணத்தையே மர்மமாக்கியவர். அவரது வாழ்க்கையின் திறந்த பக்கங்களில் இருந்து...

*ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ் - பிரபாவதி தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்!

*கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ். அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அது!

*"லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவகர்கள் எனது ஷூக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்ததுதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாகஅமைந் தன!"-ஐ.சி.எஸ். தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி!

*ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்!

*சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். 'ஸ்வராஜ்' என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார்!

*'குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!' என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்!

p86a.JPG

*'நான் தீவிரவாதிதான். எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை!' - 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழங்கினார்!

*போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸுக்கு 'நேதாஜி' என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். 'மரியாதைக்குரிய தலைவர்' என்பது அர்த்தம்!

*ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி. காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!

*1939-ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்த காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து

*உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த, நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்ததுதான் 'ஃபார்வர்டு பிளாக்' கட்சி!

*பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17 அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு, கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை 'Great Escape ' என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!

*ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி. 'இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்!' என்று ஹிட்லர் கை குலுக்க, 'வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்!' என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!

*திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா. ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றதுதான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு!

p86b.JPG*ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த 'இந்திய சுதந்திர அரசு' என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும்விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!

*'இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!' - இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது. 1944-ல் 'ஆசாத் ஹிந்த்' வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை, 'தேசப் பிதா' என்று முதன்முதலில் அழைத்தார். 'ஆசாத் ஹிந்த்' என்றால் 'சுதந்திர இந்தியா' என்று பொருள்!

*காந்திக்கும் போஸுக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை 'தேசப் பிதா' என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை 'தேச பக்தர்களின் பக்தர்' என்று அழைத்தார்!

*சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவ ரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக் கப்பட்டது!

*தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்தி ரமாக 'ஜெய் ஹிந்த்...' அதாவது, 'வெல்க பாரதம்' என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி. அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன்பிள்ளை என்ற தமிழர்!

*பர்மாவில் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், 'இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!'

*ஒரே ஒருமுறை மதுரைக்கு வந்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். 'அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!' என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி!

*பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!

*1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு 'ஷாஹீத்' (தியாகம்) மற்றும் 'ஸ்வராஜ்' (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளுநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்... கர்னல் லோகநாதன்!

*டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, "இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!" என்றார். உடனே நேதாஜி, "சுதந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்" என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!

*1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள்வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!

*'ஒரு இந்தியனின் புனித யாத்திரை' இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை. 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். 'என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்' என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!

vikatan.

  • தொடங்கியவர்

12572992_998217980251388_339882870439224

  • தொடங்கியவர்

1 லட்ச ரூபாய்க்கு 'வாட்டர் ப்ரூஃப்' புடவை! - முதல் கஸ்டமர் ஆன மாநில முதல்வர்!

 

அரசியல், எலெக்சன், கட்சி - இதையெல்லாம் தாண்டி ‘பரபர’ மூடிலும் பளபளவென்று ஜாலியாக இருப்பவர் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா.

கட்சிப் பொதுக் குழுக்களில் கலந்து கொள்வதைவிட கடைத் திறப்பு போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் சித்தராமைய்யாவுக்கு. அண்மையில் ஒரு புடவைக் கடைத் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றவர், அந்தப் புடவைக் கடைக்கு முதல் கஸ்டமரும் ஆகியிருப்பதுதான் இப்போது கர்நாடக ஸ்பெஷல்.

karnataka_1.jpg

கர்நாடக மாநிலம் தவாங்கீர் என்னும் இடத்தில், ‘கர்நாடகா சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்’ எனும் புடவைக் கடையைத் திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் சித்தராமைய்யா.

ஷோரூமைத் திறந்துவைத்துவிட்டு, ‘கடையில் என்னப்பா ஸ்பெஷல்?’ என்று வழக்கம்போல் ஜாலி மூடில் விசாரித்திருக்கிறார்.

அப்போது ‘வாட்டர் ப்ரூஃப்’ என்னும் புடவை பற்றித் தகவலறிந்தவர், ‘‘உண்மையிலேயே இது நனையாதுல்ல?’’ என்றபடி, ஒரு லிட்டர் குடிநீரை புடவையில் ஊற்றினாராம். என்ன ஆச்சர்யம்!

பந்துபோல, புடவையில் தண்ணீர் உருண்டு விளையாடியது. ஒரு சொட்டு நீர்கூட புடவையில் இறங்காததைக் கண்டு வியந்தவர், ‘‘மழையில தைரியமா இதைப் போட்டுக்கிட்டுப் போகலாம். என் மனைவிக்கு இது ஒண்ணு பேக் பண்ணிடுங்க!’’ என்று, வரியோடு 1,09,385 ரூபாய் பில் செட்டில் செய்துவிட்டு, பார்சலோடு கிளம்பி விட்டார்.

முதல்வரின் இந்த பர்ச்சேஸுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்த ‘வாட்டர் ப்ரூஃப்’ புடவைக்கு, இப்போது கர்நாடகாவில் செம டிமாண்டாம்!

vikatan

  • தொடங்கியவர்

12509913_668653189903893_125215482559515

12592547_668653186570560_588132802169213

12509322_668653193237226_555291228196032

இந்த பிரமாண்டமான சிங்கம், ரெட்வுட் மரத்தில் செதுக்கப்பட்டது. சீனாவின் வூஹான் (Wuhan) நகரில் உள்ள Fortune Plaza Times Square கட்டடத்தின் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிங்கச் சிற்பத்தைச் செதுக்க, 20 பேர் சேர்ந்து மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறார்கள்.

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

30 மினிட்ஸ் வொர்க் அவுட்ஸ்

 

 

 

 

தினமும், காலை எழுந்தவுடன் 30 நிமிடங்கள் நம் உடலுக்கு என ஒதுக்கி, எளிய உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதோடு மன அழுத்தம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை வராமலும் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்களும் உடற்பயிற்சியாளர்களும். ஆனால், என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்வது என யோசிப்பவர்களுக்கு, வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பயிற்சிகளைத் தந்திருக்கிறோம் இங்கே...

p10b.jpg

உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன்பு, கீரின் டீ அல்லது ஆப்பிள் ஜூஸ் எடுத்துக்கொள்வது நல்லது. தூங்கி எழுந்தவுடன் உடல் தசைகள் இறுக்கமாக இருக்கும். எனவே, அவற்றை முதலில் தளர்த்துவது அவசியம்.

தசைகளைத் தளர்த்தும் பயிற்சிகள்: வலது கையைத் தோள்பட்டை அளவுக்கு உயர்த்தி, விரல்களை இடது கையால் பின் பக்கம் தள்ள வேண்டும். இதே போல், இடது கைக்கும் செய்ய வேண்டும். இது முழங்கை மற்றும் பைசெப்ஸ் தசைகளைத் தளரவைக்கும்.

p11a.jpg

dot3%282%29.jpgஇடது கையை மடக்கி, காதுக்குப் பின் பக்கம் எடுத்துச் சென்று, வலது கையால் வலது பக்கம் அழுத்த வேண்டும். இதனால், ட்ரைசெப்ஸ் தசைகள் லேசாகும்.


p11b.jpg

dot3%282%29.jpgஇடது காலை பின் பக்கமாக மடக்கி, கையால் பிடித்து, தொடைத் தசைகள் விரிவதை உணரும்படி அழுத்த வேண்டும்.

dot3%282%29.jpgவலது கையை மடக்கி, இடது காதில்வைத்து வலது பக்கம் லேசாக அழுத்தம் தரும்போது, கழுத்துப் பகுதி தளரும்.

dot3%282%29.jpgநேராக நின்று இரு கைகளால் கால் பெரு விரலைத் தொட முயற்சிக்க வேண்டும். இதன் மூலம், பின்னங்கால் தசைகளின் இறுக்கம் லேசாகும்.

dot3%282%29.jpgசற்று சாய்வான பரப்பில் இடது காலைவைத்து, உடலை முன்பக்கம் தள்ள வேண்டும். இதேபோல, அடுத்த காலுக்கும் செய்ய வேண்டும். கெண்டைக்கால் இதனால் தளர்வடையும்.

இந்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை இன்னொரு கை,காலுக்கும் செய்தபின்,  உடல் வலுவுக்கான பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்.


வுட் சாப்பர்: காலை சற்று அகலமாக விரித்து, கைகளைக் கோத்தபடி நிற்க வேண்டும். இடுப்பை வளைத்தபடி, முதுகை வளைக்காமல் கைகளைக் கீழே கொண்டுசெல்ல வேண்டும். பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல, 10-20 முறை செய்ய வேண்டும். நடுவில் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு, 2-3 முறை இப்படிச் செய்யலாம்.

p12a.jpg

பலன்கள்: வயிறு மற்றும் மார்புத் தசைகள் வலுப்பெறும்.


சைட் கிக்: படத்தில் உள்ளபடி நின்று, முதலில் இடது காலை இடுப்பு அளவுக்கு உயர்த்தி உதைக்கவும். 15 முறை செய்த பின்னர் வலது காலால் உதைக்கவும்.

p12b.jpg

பலன்கள்: இடுப்புப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைத்து, கொழுப்பு ஏறாமல் பார்த்துக்கொள்ளும்.


டம்பிள் ஷோல்டர் பிரஸ்: இரண்டு கிலோ டம்பிள்ஸை இரு கைகளிலும் எடுத்து, தோள்பட்டை அருகில் வைத்தபடி நிற்க வேண்டும். இப்போது, கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டையும் இடித்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, 10 முறை செய்ய வேண்டும்.

p13a.jpg

பலன்கள்: தோள்களுக்கு நல்ல வலு கிடைக்கும்.


டம்பிள் பைசெப்ஸ்: இரு கைகளிலும் தனித்தனியே டம்பிள்ஸை எடுத்துக்கொள்ள வேண்டும். இடுப்பு அளவுக்கு உயர்த்திய நிலையில் இருக்கட்டும். முதலில், வலது கையை மடக்கி, தோள் வரை உயர்த்தி, இறக்க வேண்டும். பின்னர், இதேபோல இடது கைக்கும் செய்ய வேண்டும். 10-15 முறை செய்ய வேண்டும்.

p13b.jpg

பலன்கள்: கைத்தசைகள் வலுப்பெறும். புஜங்கள் முறுக்கேறும்.


டம்பிள் ஓவர்ஹெட் எக்ஸ்டென்ஷன்: நேராக நிற்க வேண்டும். ஒரு டம்பிளை தலைக்குப் பின்பாக இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ள வேண்டும். பின் கைகளை உயர்த்தி, கை மூட்டை முன் பின் அசைக்க வேண்டும். இதை 10 முறை செய்ய வேண்டும்.

p13c.jpg

 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

"சத்தியவான் சாவித்திரி " கதையினை வில்லிசை மூலம் சொல்கின்ற போது சின்னமணி அவர்கள் அழுதழுது நடித்து இசையோடு கதையை சொல்லும் காட்சி. கதையோடு ஒன்றி அதனுள் நுழைந்து உருகி உருகி நடிக்கும் போது பார்ப்போரை கட்டிப் போட்டுவிடுகிறார்

  • தொடங்கியவர்

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை ‪#‎தமிழரின்‬ 100வது பிறந்தநாள் ?????

இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது சொந்த ஹொட்டலில் அவர் தனது 100 வது பிறந்த நாளை கொண்டாடினார்.
கனடாவின் டொரேண்டோவில் வசித்து பார்த்திபன் மனோகரன் என்பவர் அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த போது கேப்டன் பதியை பேட்டி கண்டார்.


பிரிட்டிஷ் அரச விமானப்படையில் பணியாற்றிய முதல் இலங்கை தமிழர் உட்பட அவர் மேற்கொண்ட சகாகசங்கள், தனது வாழ்க்கையில் மைல் கற்களாக அமைந்தவை பற்றி அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.


கேள்வி - உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை, எப்படி நீங்கள் இறுதியாக பிரி்ட்டிஷ் விமானப்படையின் விமானியாக தெரிவு செய்யப்பட்டீர்கள் என்று கூறுங்கள்?


பதில் - நான் சிறுவனாக இருக்கும் போது முதலில் ஆனந்த கல்லூரியில் படித்தேன். பின்னர் மானிப்பாய் மற்றும் யாழ் இந்து கல்லூரிகளில் எனது கல்வியை தொடர்ந்தேன். எனது 20 வயதின் ஆரம்பத்தல் நான் எனது வாழ்க்கை அர்த்தமுள்ள எதனையும் செய்யவில்லை. இதனால் எனது பெற்றோர் என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினர்.
எனக்கு தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், நான் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் அரச விமானப்படையில் இணைந்தேன்.
1941 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச விமானப்படைக்கு இலங்கையை சேர்ந்த 18 பேர் தெரிவு செய்யப்பட்டு, பயிற்சிக்காக இங்கிலாந்தின் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனது பெயரும் சீ.கே. பதி என மாறியது. முதலில் இங்கிலாந்தின் ஸ்காப்ரோ, அதன் பிறகு மேலதிக பயிற்சிகளுக்காக கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். நான் மாத்திரமே அந்த குழுவில் இருந்த ஒரே தமிழன்.
கனடாவில் மனிடோபா நீபாவாவில் எமக்கு முதல் பயிற்சிகள் வழங்கப்பட்டன. எனது பயிற்சியின் போது ஒரு முறை கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி உயிரத்தில் எனது விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போனது. அது கருமையான இருள் நான் வெற்றிகரமான விமானத்தை தரையிறக்கினேன் எனது பயிற்சியாளர் என்னை பாராட்டினார்.
எமக்கான பயிற்சிகள் மனிடோபாவின் கார்பரி பிரதேசத்திற்கு மாற்றப்பட்டது. நான் விமானம் ஓட்டும் பரீட்சையில் தோற்றினேன். பரீட்சையில் ஒரு புள்ளியில் தோல்வியடைந்தேன். ஆனால், நான் பறப்பதை கைவிட விரும்பவில்லை. வயிற்று உபாதை காரணமாக வைத்தியரிடம் சிகிச்சை பெற்றேன்.
பரீட்சையில் தோல்வியடைந்தது குறித்து எது கட்டளை அதிகாரி கேள்வி எழுப்பினார், மீண்டும் பரீட்சைக்கு தோற்றிய பின்னர், பயிற்சிகளுக்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டேன். இப்படி சந்தர்ப்பத்தை எவருக்கும் வழங்க மாட்டார்கள். அங்கு எவரும் பெறாத அதிக்கூடிய புள்ளிகளை நான் பரீட்சையில் பெற்றேன். இந்த செய்தி இலங்கை பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன.


கேள்வி- பிரிட்டிஷ் அரச விமானப்படை விமானியாக உங்கள் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?


எனது பரீட்சைகளின் பின்னர் இரண்டாம் உலக போரில் போர் விமான விமானியாக நான் இங்கிலாந்து திரும்பினேன். நான் ஓட்டிய விமானம் உலக போரில் பல தாக்குதல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது. பிரான்ஸ் கடற்பகுதியில் வைத்து ஜேர்மனிய நீர்மூழ்கி கப்பல் மீது இந்த விமானத்தில் இருந்து குண்டு வீசப்பட்டது எனக்கு நினைவிருக்கின்றது. போர் முடிந்தவுடன் வடக்கு இங்கிலாந்தில் கரையோர பாதுகாப்பு படையில் பணியில் அமர்த்தப்பட்டேன்.
இதனையடுத்து இலங்கை திரும்பிய நான் ஏயார் இந்தியாவில் இணைந்து 27 வருடங்கள் பணியாற்றினேன். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் போர் காலத்தில் பணியாற்றியதற்காக 1944 ஆம் ஆண்டு எனக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
நீங்கள் தலையெழுத்தை நம்புவீர்களா? என கேப்டன் பதி பார்த்திபனிடம் கேட்கிறார்.


கேள்வி - ஓரளவுக்கு நீங்கள் எப்படியானவர்?


பதில் - நான் தலையெழுத்தை முழுமையாக நம்புகிறேன் ஏன் தெரியுமா. பிரிட்டிஷ் அரச விமானப்படையில் இந்தியாவை சேர்நத விஜேந்திர குமார் என்ற எனக்கு நெருங்கிய நண்பர் இருந்தார். பயிற்சிகளின் போது நாங்கள் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். அவர் டோன்காஸ்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நான் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.
பயிற்சிகள் முடிந்து நான் லண்டன் திரும்பிய போது, விஜேந்திர குமார், போரில் ஈடுபடும் விமானங்களை நிரல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
போர் நடைபெற்ற போது அவர் பயணித்த விமானம் உட்பட அனைத்து விமானங்களை ஜேர்மனி சுட்டு வீழ்த்தியது. நான் முதல் முறையாக விமான ஒட்டும் பரீட்சையில் வெற்றிப்பெற்றிருந்தேன். இலங்கையில் இருந்து 18 பேர் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் இணைத்து கொள்ளப்பட்டனர். இவர்களில் எட்டு பேர் விமானி பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டனர். இவர்களின் இரண்டு பேர் பரீட்சையில் தேர்ச்சி பெறவில்லை என்பதுடன் பயிற்சிகளின் போது இறந்து போயினர். மேலும் மூன்று ஜேர்மனியால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் இறந்தனர். ஒருவன் மாத்திரமே திரும்பி வந்து உயிருடன் வாழ்ந்து வருகிறேன். இதற்கு எப்போதும் நான் நன்றி உடையவனாக இருப்பேன்.


கேள்வி - அந்த காலத்தில் பிரித்தானியாவின் கீழ் பணியாற்றியது எப்படி இருந்தது?. நீங்கள் இலங்கையர் என்பதால், வித்தியாசமாக கவனித்தார்களா?


பதில் - எப்போதும் அல்ல. நன்றாக மரியாதை கொடுத்து எம்மை கவனித்தனர். குறிப்பாக கனேடிய மக்கள் உலகில் மிக சிறந்த மக்கள். இறுதி நாட்கள் அனைத்து உங்களை சார்ந்தது. உலகம் என்பது கண்ணாடி போன்றது. நீங்கள் சிரிக்கும் போது அது சிரிக்கும். நீங்கள் முகத்தை சுளித்தால், அதுவும் சுளிக்கும். இவை அனைத்தும் பிரதிபலிப்பு.


கேள்வி- உங்களது மிகப் பெரிய சாதனை எனது என கருதுகிறீர்கள். நீண்டகாலமாக விமானியாக இருந்த உங்களுக்கு எது மிகவும் மறக்க முடியாத தருணம்


அந்த நேரத்தில ஜெட் விமானத்தில் பறந்த முதல் இலங்கையன் நான். நான் இணைந்து கொண்ட போது எமது பயிற்சிகளுக்காக அமெரிக்க போயிங் விமானங்களை அனுப்பி வைத்தது. போயிங் விமானங்களில் சிறந்த விமானிகள் எனக்கு பயிற்சியளித்தனர். எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இது எனது மிகப் பெரிய சாதனையாக கருதுகிறேன்.
இந்திய - சீன போரின் போது இந்திய துருப்புகளுடன் தளங்களுக்கு பயணித்துள்ளேன். அத்துடன் காஷ்மீர் இணைப்பு தொடர்பான விடயம் குறித்து சேக் அப்துல்லாவை சந்திக்க இந்திய பிரதமர் நேருவுடன் ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு பயணித்துள்ளேன்.


கேள்வி - நீங்கள் பிரதமர் நேருடன் பேசினீர்களா? அவர் என்ன கூறினார்?


பதில் - பிரதமர் நேரு விமானிகள் அமரும் இடத்தில் என்னுடன் அமர்ந்திருந்தார். நாங்கள் பொதுவான காலநிலை பற்றி பேசினோம்.


கேள்வி - எயார் இந்தியாவில் பணியாற்றிய பின்னர், நீங்கள் எஙகு சென்றீர்கள்?.


பதில் -நான் ஓய்வுபெற்ற பின்னர், எயார் சிலேனில் பணிப்புரிந்தேன். அத்துடன் திருகோணமலையில் ஹொட்டல் ஒன்றையும் ஆரம்பித்தேன். அதில் இன்னும் நிலையாக இருக்கின்றேன். எனது இரண்டு மகன்மாருக்கு நான் பயிற்சிகளை வழங்கினேன். அவர்கள் சிங்கப்பூர் எயார்லைன்ஸில் இணைந்து கொண்டதுடன் கேப்டன்களாக உயர்ந்தனர். எனது ஒரு மகன் ஒய்வுபெற்றுள்ளார். இவர் ஹொட்டலை பொறுபேற்று நடத்துகிறார். இறுதியில் நான் அவுஸ்திரேலியாவுக்கு சென்றேன். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் சேவையாற்றியதற்காக எனக்கு அங்கு கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது.


கேள்வி - ஏன் நீங்கள் ஹொட்டல் நடத்த விரும்புகிறீர்கள்?.


எனக்கு வீடு இருக்கவில்லை. குறிப்பாக எனது பெற்றோர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிய பின்னர், எனது தாய் நாட்டில் எனக்கு ஏதாவது இருக்க வேண்டும் என்று கருதினேன். திருகோணமலை நிலாவெளியில் நான் ஒரு காணியை வாங்கினேன். அது கடலும் காடுமாக இருந்தது. அங்கு ஹொட்டலை நிர்மாணித்தேன். அந்த ஹொட்டலுக்கு புளோரினா என்று எனது மகளின் பெயரை சூட்டினேன்.
சிவில் போர் நடைபெற்ற போது இராணுவத்தினர் கைப்பற்றி கொண்டாதால், எனது ஆடம்பர வீட்டில் நான் சரியான மகிழ்ச்சியை அனுபவிக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்தத்தில் இந்த ஹொட்டலும் பாதிக்கப்பட்டது. ஹொட்டல் மீண்டும் எமது கைக்கு கிடைத்த பின்னர், அதன் பெயரை பாம் பீச் ஹொட்டல் என்று மாற்றினோம் .20 வருடங்களுக்கு மேலான காலத்திற்கு பின்னர் இங்கு திரும்பி வந்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.


கேள்வி - யாழ்ப்பாணம் உடுவிலில் உள்ள வைரவர் கோயிலுடன் நீங்கள் மிகவும் நெருங்கி பணியாற்றி வருகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு அந்த கோயிலுக்கும் அப்படி என்ன முக்கியத்துவம் பெறுகிறது?.


பதில் - எனக்கு 8 வயதாக இருக்கும் போது கோயிலுக்கு வலது புறமாக நான் நடந்து சென்றேன். அப்போது வெளியில் இருந்து வந்த வெளிச்சத்தால் சூழப்பட்டேன். அந்த வெளிச்சம் நான் சிறுவனாக இருந்த போது விபரிக்க முடியாத காரணத்திற்கான உறுதியை எனக்கு கொடுத்தது. அது எனது வாழ்க்கையில் ஏதோ ஒரு சிறந்ததை செய்துள்ளது. அதுவே அந்த கோயில் எனது அன்புக்குரியதாக மாறியுள்ளது.
நான் எப்போதும் வாழ்க்கையின் தெளிவாக பக்கத்தை பார்ப்பவன். நான் அங்கீகாரத்தை நம்பவில்லை. மனிதகுலத்திற்கும் ஆலயத்திற்குமான சேவையை மாத்திரமே நான் நம்புகிறேன். நான் வேறு எதனையும் விட மதிப்பையும் நேர்மையையும் வணங்குகிறேன். நான் சிறுவனாக பட்டங்களை பறக்கவிட்ட பின்னர், இந்த உலகில் மிகப் பெரிய விமானங்களை பறக்கவிட்டேன். எனது வாழ்க்கை மிகவும் சாகசம் நிறைந்தது. கனடாவில் எனது பாகம் என்னை மனிதனாக்கியது. ஒரு பிரச்சினையை உடனடியாக தீர்த்து விட்டால், எதிர்காலத்தில் அதிக நேரத்தை சேமிக்கலாம் என்ற பழமொழியை நான் நம்புகிறேன். இதுதான் எனது வாழ்க்கை கதை. மீண்டும் எனது வீட்டுக்கு வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.


கேள்வி உங்களால் தற்போதும் விமானங்ளை ஒட்டுச் செல்ல முடியுமா?.


பதில்- தற்போது நான் கார் ஒட்டுகிறேன். கட்டாயம் என்னால், தற்போதும் விமானத்தை ஒட்ட முடியும். அதில் சந்கேம் இல்லை.

12573848_955232321221206_875688172797729

12510453_955232354554536_843699741013714

12565622_955232387887866_547048361254215

12592327_955232421221196_767721508773079

முகநூல்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12592241_1060480967344026_36977996708509

ஜனவரி 24: தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று..

இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

 

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள் - பெற்ற உள்ளம் !

''என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுப் போகும் மகனுக்குத் தெரியவே கூடாது, அவனை நான் பக்கத்துத் தெருவில் உள்ள அநாதை ஆசிரமத்தில் இருந்துதான் தத்தெடுத்தேன் என!''

 
 
Vikatan EMagazines Foto.
விகடன்
  • தொடங்கியவர்

அழியாத தடங்கள் 2015: பேரழிவின் மேலாண்மை

 

 
சித்தார்த், யூனுஸ்
சித்தார்த், யூனுஸ்

உலக அளவில் 1991 முதல் 2000 வரை நடந்த பேரழிவுகளில் 83 சதவீதம் ஆசியாவைத்தான் தாக்கியுள்ளது. ஒட்டுமொத்த ஆசியாவிலும் பேரழிவுகளால் பலியானவர்களில் 24 சதவீதம் இந்தியர்கள்தான். ஆசியாவின் வெள்ளம் மற்றும் புயல்களின் தாக்குதல்களில்கூட 60 சதவீதம் பாதிக்கப்பட்டது இந்தியாதான்.

இந்தியாவின் நிலப்பரப்பில் 58.6 சதவீத ம் பூகம்பங்கள் ஏற்படும் அபாயமுள்ள பகுதி.

இந்தியாவில் 4 கோடி ஹெக்டேர்களில் வெள்ளங்களும் ஆற்று மண்ணரிப்புகளும் ஏற்படுகின்றன. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 12 சதவீதம்.

மொத்த நிலப்பரப்பில் சுமார் எட்டு சதவீதம் புயல்களின் தாக்குதல்களுக்கு ஆளாகிறது. 68 சதவீதமான விளைநிலங்கள் வறட்சியின் பாதிப்புக்கு ஆட்படக்கூடியவை. மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகள் பேரழிவுகளாக உள்ளன.

இந்தியாவுக்கு 7,516 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதி. அதில் 5,700 கி.மீ. நீளமுள்ள பகுதி புயல்களும் சுனாமிகளும் தாக்குவதற்கு வசதியான இடத்தில் உள்ளது. அரபிக் கடலைவிட வங்காள விரிகுடாவில் 5 மடங்கு வரை அதிகமானமான புயல்கள் உருவாகின்றன.

இந்தியாவில் எட்டு வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 17 மாநிலங்களில் உள்ள 169 மாவட்டங்களில் பலவிதமான பேரிடர்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பேரழிவின் அனுபவம்

ஒடிஷாவில் 1999-ல் புயல் வீசியது. 2001-ல் குஜராத்தில் பூகம்பம் ஏறத்தாழ 20 ஆயிரம் பேரைக் கொன்று 1 லட்சத்து 67 ஆயிரம் பேரைக் காயப்படுத்தி 4 லட்சம் வீடுகளை நொறுக்கியது. இந்தியப் பெருங்கடலில் 2004-ல் ஏற்பட்ட சுனாமி 14 நாடுகளைப் பாதித்தது. 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிகமாகப் பாதிக்கப்பட்டது.

மேலாண்மை வரலாறு

ஆங்கிலேயர்கள் பஞ்சங்களை சமாளிக்க விதிமுறைகளையும் கையேடுகளையும் உருவாக்கினார்கள். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் விஷவாயுக் கசிவு 1984-ல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ல் உருவானது.

சுனாமியின் அனுபவத்துக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட விவாதத்தால் 2005-ல் இந்தியாவும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை உருவாக்கியது.

வெள்ளம் வரலாம் என்று முன்னதாக அறிவிப்பது இந்தியாவில் 1958-ல் ஆரம்பித்தது. இன்று 14 மாநிலங்களிலும் டெல்லியிலும் 166 முன்னறிவிப்பு மையங்கள் உள்ளன. பள்ளிப் பாடத்திட்டத்தில் பேரழிவு மேலாண்மையும் சேர்க்கப்பட்டுள்ளது.

rain_volunteers1_2696411a.jpg

tamil.thehindu
 
  • தொடங்கியவர்

 

எத்தனையோ சண்டைகளை பார்த்திருக்கின்றோம் ஆனால், உடும்பு சண்டையை எங்காவது பார்த்திருக்கின்றீர்களா?

அதுவும் பரபரப்பாக வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் வீதியில், எதையும் சட்டை செய்யாமல் இரண்டு உடும்புகள் பயங்கரமாக மோதிக் கொள்ளும் காட்சியை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

இல்லை என்பவர்களுக்காத்தான் இந்த வீடியோ. இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்ட இடம் எதுவென்று தெரியவில்லை. இருந்தாலும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தீயாக பரவி வருகின்றது.

.tamilmirror

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12439502_10153212926210163_3705977181914

12510379_10153212926235163_8674387541971

1910516_10153212926385163_42523824157530

12552766_10153212926410163_2028182538671

12510227_10153212926405163_4212774176909

12509799_10153212926490163_3649857337042

12552890_10153212926570163_6990856601931

10173704_10153212926565163_7911270230662

பனியில் நனையும் லிதுவேனியா: புகைப்படக் கவிதை
----------------------------------------------------------------------------------
லிதுவேனியாவைச் சேர்ந்த கரோலிஸ் ஜனுலிஸ் பனிக்காலத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்தப் படங்களை எடுத்திருக்கிறார்.

குளிர்காலம் துவங்கியதும் லிதுவேனியாவின் கிராமப்புறங்கள் பனியால் மூடப்பட்டிருப்பதை ஜனுலிஸ் புகைப்படங்கள் காட்டுகின்றன.

எவ்வளவு கடுமையான குளிராக இருந்தாலும் குளிர்காலம் தனக்குப் பிடித்திருப்பதாகவே கூறுகிறார் ஜனுலிஸ்.

டிசம்பர் மாத இறுதியிலும் ஜனவரி மாதத் துவக்கத்திலும் லிதுவேனியாவில் வெப்பநிலை மைனஸ் 15த் தொடும்.

லித்துவேனியாவின் கிராமப்புறங்களைத் தவிர, தலைநகர் வில்நியஸையும் ட்ரோன்கள் மூலம் படம்பிடித்திருக்கிறார் ஜனுலிஸ்.

BBC

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.