Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

ரயில் இடிப்பதற்குமுன் கடைசி நொடியில் மீட்கப்பட்ட பெண்

 

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில், ரயில் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக ரயில் தண்டவாளத்திலிருந்து பெண் ஒருவர் மீட்கப்படும் காட்சி.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாலஸ்தீனத்தை பிரிப்பதென ஐ.நா. முடிவு எடுத்த நாள்: 29-11-1947

1947-ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது.

 
பாலஸ்தீனத்தை பிரிப்பதென ஐ.நா. முடிவு எடுத்த நாள்: 29-11-1947
 
1947-ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது.

எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது. இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948-க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.

பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948-ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இவான்கா ட்ரம்ப்பின் மிடுக்கான ஃபேஷன் சென்ஸ்!

 
 
Chennai: 

இவான்கா ட்ரம்ப்பின் வருகையால் ஹைதராபாத் நகரம் களைகட்டியுள்ளது. வரலாறு காணாத பாதுகாப்பு, பிரமாண்ட இரவு விருந்து என படுபிஸியாக இருக்கும், இவான்காவின் பன்முகச் செயல் திறன்களைப் பற்றிய தொகுப்பு இது...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் முன்னாள் செக் (Czech) / அமெரிக்க மாடல் இவானா இருவருக்கும் பிறந்தவர்தான் இவான்கா. சிறு வயதிலிருந்தே விடுதியில் தங்கிப் படித்த இவான்கா, சொந்தமாகச் சம்பாதிக்க வேண்டும் என முடிவெடுத்து தேர்வுசெய்தது மாடலிங் துறையை. தனது 14-ம் வயதில் மாடலிங் துறைக்கு வந்த இவான்கா, 16-ம் வயதிலேயே அழகிப் போட்டியைத் தொகுத்து வழங்கும் அளவுக்கு முன்னேறினார். எனினும், தன் தந்தையின் ரியல் எஸ்ட்டேட் தொழில்மீது நாட்டம்கொண்ட இவான்கா, வேறு நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் அதற்கான பயிற்சியை மேற்கொண்டார். முறையான பயிற்சிக்குப் பின்னரே தன் தந்தையுடன் `ட்ரம்ப் அமைப்பில்' இணைந்து, ரியல் எஸ்டேட் தொழிலில் வரலாறு காணாத லாபத்தை ஈட்டிக்கொடுத்தார்.

 

இதுமட்டுமல்ல, மாடலிங் அனுபவத்தால் ஆடை வடிவமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தினார். இதன் விளைவாக, `இவான்கா ட்ரம்ப்' எனும் ஆடை தர அடையாளத்தைப் பதித்திருக்கிறார். இதில் ஆண்-பெண் இருவருக்குமான ஆடைகள், உதிரிப் பாகங்கள், நகைகள், காலணிகள் என அனைத்தும் கிடைக்கும். தன் மகள் வடிவமைத்த உடைகளில் டொனால்டு ட்ரம்ப்பை அதிகம் காணலாம். 

இவான்கா, ஓர் எழுத்தாளரும்கூட. `தி ட்ரம்ப் கார்ட்: பிளேயிங் டு வின் இன் வொர்க் அண்ட் லைஃப் (The Trump Card : Playing to win in work and life)' எனும் புத்தகத்தை 2009-ம் ஆண்டு வெளியிட்டார். இது அந்த ஆண்டின் அதிகம் விற்பனையான புத்தகங்களுள் ஒன்று. அரசியலையும் விட்டுவைக்கவில்லை இவான்கா. அரசியலில் தடம் பதித்த தன் தந்தைக்கு, அனைத்து வகையிலும் உதவியாளரும் ஆலோசகருமாக இருந்தார். தன் தந்தைக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார். ட்ரம்ப்பின் வெற்றிக்கு ஒருவகையில் தன் மகளும் காரணம் என்பதனால், `வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்' என மகுடம் சூட்டிக்கொண்டார். 

மாடல், எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், தொழிலதிபர், அரசியல்வாதி எனப் படபடவெனப் பறக்கும் இவான்கா, தன்னை ஃபேஷன் ஐகானாகவும் பதியவைக்கத் தவறவில்லை. சாதாரணமாக வீட்டில் அணியும் உடைகளிலிருந்து ஓய்வு நாள்கள், விழாக்கள், மாநாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இவான்காவின் ஆடைகள் அனைத்தும் அசத்தல் கலெக்‌ஷன். சமீபத்தில் இந்தியா வந்த இவான்கா, கறுப்பு நிற கணுக்கால் அளவுடைய பேன்ட் மற்றும் அழகிய எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த `பிளேஸர்' (Blazer) எனப்படும் மேல்சட்டையை அணிந்து `ஸ்மார்ட் லுக்' தொழிலதிபர் போல காட்சியளித்தார். 

இவான்கா

ஹவர்கிளாஸ் (Hourglass) உடலமைப்பைப் பெற்றிருக்கும் இவான்காவுக்கு அனைத்து வகையான உடைகளும் கட்சிதமாகப் பொருந்தும். அவற்றுள் இணையதளத்தில் `வாவ்' சொல்லவைத்த சில புகைப்படங்களின் பட்டியல் இதோ.

சமீபத்தில் முடிந்த அமெரிக்காவின் `தேங்க்ஸ் கிவ்விங்' நாளன்று இவான்கா, பிஸ்தா கிரீன் அச்சிட்ட ஸ்கர்ட் மற்றும் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து தன் மகளுடன் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படம் டாப்.

இவான்கா Thanksgiving

குயின் மாக்ஸிமாவுடன் இணைந்து இருக்கும் இந்தப் புகைப்படத்தில், இவான்கா `செல்ஃப் பேட்டர்ன் (Self Pattern) பிளேஸர் சூட் (Blazer Suit) அணிந்து, பணியிட உடைக்கு புதிய தோற்றத்தைக் கொடுத்திருப்பார்.

with Queen Maxima

`பெண்களுக்கான இரவு' எனக் குறிப்பிட்டிருந்த இந்தப் புகைப்படத்தின் தலைப்புக்கு ஏற்ப, அவருக்கே உரித்தான சிவப்பு நிற `ஆஃப் ஷோல்டர் ஃபுல் டிரெஸ் (Off - Shoulder Full Dress )' அணிந்து இவான்கா அழகிய இளவரசித் தோற்றத்தில் மிளிர்கிறார்.

Holiday

ஃபிட் அண்ட் ஃப்ளார் (Fit and Flare), அதாவது இடையளவு ஆடை அளவொத்திருந்தும், இடைக்குக் கீழ் ஃப்ளீட்களைக் கொண்டு விரிந்த வடிவமைப்பைக்கொண்ட உடையையே அதிகம் தேர்வுசெய்யும் இவான்கா, தனது மகளின் பள்ளி இறுதி நாளன்று எளிமையான கறுப்பு மற்றும் பீச் நிற ஃபிட் அண்ட் ஃப்ளார் உடையில் புன்னகைக்கும் படம் அழகின் உச்சகட்டம்.

with her daughter

 

இவான்கா, தான் பங்குபெறும் நிகழ்ச்சிகளுக்கேற்ப உரையாடல்களை மட்டுமல்ல, உடைகளையும் நேர்த்தியாகத் தேர்வுசெய்கிறார் என்பது இவரின் செயல்பாடுகளின் மூலம் தெரிகிறது. இவரை முன்மாதிரியாக வைத்து, பல பெண்கள் இவரைப்போல் ஆடைகளை அணிகின்றனர் என்று ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல திறன்களை உள்ளடக்கியிருக்கும் இவான்காவின் நற்செயல் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு டம்ளர் பாலின் விலை என்ன? - நெகிழ்த்தும் சிறுவனின் கதை #MotivationStory

 
 

`ரக்கம் என்பது ஒரு மொழி. அதை, ஒரு பார்வைக் குறைபாடு உள்ள ஒருவரால் பார்க்க முடியும், செவித்திறன் குறைபாடு உள்ள ஒருவரால் கேட்க முடியும்’ என்கிறார் எழுத்தாளர் மார்க் ட்வைன் (Mark Twain). பயிரின்பால் இரக்கம் கொண்டதால்தான் வள்ளலாரை இன்றைக்கும் நாம் கொண்டாடுகிறோம். ஆதரவற்றோரையெல்லாம் தன் பிள்ளைகளாகக் கருதி கருணை காட்டியதால்தான் அன்னை தெரஸா உலக மக்களின் நினைவுகளில் நீங்காமல் இருக்கிறார். எறும்பிடம்கூட இரக்கம் காட்டுபவரை இறைவன் என்கிறார்கள் சான்றோர். `சரி... யார், எவர் என்று தெரியாமலேயே ஒருவருக்கு மனமாரச் செய்யும் உதவியால் நமக்கு என்ன நன்மை, பிரயோசனம்?’ நிச்சயம் உண்டு என்கிறது காலம். ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது, நாம் செய்யும் நல்லவற்றுக்கும் உண்டு. வாழும் காலத்திலேயே அதற்கான பலனை அனுபவித்தவர்களைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறது வரலாறு. அமெரிக்காவில் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் ஒரு கதை அந்த உண்மையைத்தான் வெகு அழுத்தமாகச் சொல்கிறது.

சிறுவனின் கதை

 

அது ஒரு மாலை நேரம். அந்தச் சிறுவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கலாம். பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிவிட மாட்டான். அவனுக்கு வேலை இருந்தது. பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும்; பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வாங்க வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். அதற்காக பகுதி நேரமாக வேலை செய்தே ஆக வேண்டும். வேலை... வீடு வீடாகப் போய் ஏதாவது ஒரு பொருளை விற்கும் வேலை. மாலை செய்தித்தாள், பால் புட்டி, ரொட்டி, கேக்குகள்... என விற்பதற்கு பல பொருள்கள் இருந்தன. வீட்டிலேயே இருக்கும் முதியோர், பெண்மணிகள் என அவற்றை வாங்குவதற்கும் ஆள்கள் இருந்தார்கள். சில நேரங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். கொண்டுபோன பொருள்கள் எல்லாம் விற்றுப் போகும். பொருள்களை விற்றதற்கு ஈடாக அவனுக்குக் கணிசமாகப் பணமும் கிடைக்கும். அன்றைக்கு ஏனோ விற்பனை வெகு சுமார்.

காலையில் சாப்பிட்டிருந்தான். பசி, வயிற்றைக் கிள்ளியது. சூரியன் வெகு வேகமாக மறையத் தொடங்கியிருந்த நேரம் அது. அவன் பையிலும் பெரிய தொகை எதுவும் இல்லை. சில்லறைக் காசுகள்தான் இருந்தன. அதைக் கொண்டு அவனால் வயிறார எதையும் வாங்கிச் சாப்பிட முடியாது. என்ன செய்யலாம்? அவன் ஒரு முடிவுக்கு வந்தான். `அடுத்து நுழைகிற வீட்டில் எதையும் விற்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தயங்காமல், வெட்கப்படாமல் சாப்பிடுவதற்கு எதையாவது கேட்டு வாங்கிவிட வேண்டும்.’

உன்னை அறிந்தால்

 

அடுத்த வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். பல நேரங்களில் நம் எதிர்பார்ப்பு ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். அந்தச் சிறுவன் விஷயத்தில் அன்றைக்கு அதுதான் நடந்தது. அந்த வீட்டில் ஒரு வயதான மூதாட்டியை அவன் எதிர்பார்த்திருந்தான். கதவைத் திறந்ததோ ஓர் இளம் பெண். அழகான இளம் பெண். அவளைப் பார்த்ததும் அவனுக்கு கூச்சம் வந்துவிட்டது.

பால்

`சாப்பிட ஏதாவது கிடைக்குமா?’ என்று கேட்பதற்கு பதிலாக, ``குடிக்கக் கொஞ்சம் தண்ணி வேண்டும்’’ என்றான்.

இளம்பெண், சிறுவனைப் பார்த்தாள். அவன் முகம் வாடியிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அவன் அகோரப்பசியில் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.

``உள்ளே வா, இப்படி உட்கார்’’ என்று ஒரு நாற்காலியைக் காட்டினாள். சமையலறைக்குப் போனவள், கையில் ஒரு பெரிய டம்ளருடன் திரும்பி வந்தாள். அது நிறையப் பால் இருந்தது. அதை அவனிடம் நீட்டினாள். அவனும் வாங்கிக்கொண்டான். மெதுவாக பாலைக் குடித்து முடித்தான்.

``இந்தப் பாலுக்கு நான் எவ்வளவு தர வேண்டும்?’’ என்று கேட்டான்.

``இதற்கு நீ காசு எதுவும் தர வேண்டாம். `இரக்கப்பட்டு செய்யும் ஒரு காரியத்துக்குக் காசு வாங்கக் கூடாது’ என்று என் அம்மா சொல்லித் தந்திருக்கிறார்’’ என்றாள் அந்தப் பெண்.

``அப்படியா... நன்றி’’ என்று சொல்லிவிட்டு அந்தச் சிறுவன் திரும்பிப் போனான்.

***

சில வருடங்கள் கழிந்தன. அந்த இளம்பெண் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தாள். அவள் வளர்ந்ததுபோல அவள் உடலில் ஒரு நோயும் வளர்ந்திருந்ததுதான் வருத்தப்படக்கூடிய விஷயம். ஊரில் இருந்த மருத்துவர்களால் அந்தப் பெண்ணுக்கு வந்தது என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அருகிலிருக்கும் நகரின் பெரிய மருத்துவமனைக்கு அவளைக் கொண்டுபோகச் சொல்லிப் பரிந்துரைத்தார்கள்.

படுக்கையில் இளம்பெண்

அங்கே அவளைப் பரிசோதித்த டாக்டர்கள், கன்சல்டேஷனுக்காக டாக்டர் ஹோவர்டு கெல்லி (Howard Kelly) என்பவரிடம் அனுப்பிவைத்தார்கள். அந்தப் பெண் அவருடைய இடத்துக்கு வந்தாள். டாக்டரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தாள். அவளுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டுகள் அடங்கிய ஃபைல் டாக்டரிடம் போனது. ஃபைலைப் பிரித்தவர், அந்தப் பெண்ணின் பெயரைப் பார்த்தார். உடனே எழுந்து, கதவைத் திறந்து வெளியே அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தார். அவளை உள்ளே வரச் சொன்னார்.

அவளுடைய ரிப்போர்ட்டுகளையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்தார். அவளைப் பரிசோதித்தார். அவளை உள்நோயாளியாக உடனே அனுமதிக்கச் சொல்லி நர்ஸிடம் சொன்னார். அந்தப் பெண்ணை சிறப்பு கவனம் எடுத்துக் கவனித்துக்கொண்டார். டாக்டர் ஹோவர்டு கெல்லியின் முயற்சி வீண்போகவில்லை. இரண்டு மாதங்களிலேயே அந்தப் பெண்ணின் நோயைக் கண்டுபிடித்து, சரிசெய்துவிட்டார்.

அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் நாள் நெருங்கியது. அவள் உடலளவில் தேறிவிட்டாளே தவிர, மனதளவில் கொஞ்சம் சோர்ந்து போயிருந்தாள். அவள் சிகிச்சை பெற்றது பெரிய மருத்துவமனையில்... அவளுக்கு சிகிச்சை கொடுத்தவர் புகழ்பெற்ற ஒரு டாக்டர். மருத்துவ சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகளுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்குமோ என அவள் பயந்துபோயிருந்தாள். அவளுக்குச் செய்யப்பட்ட சிகிச்சைகளுக்கான பில்லை, டாக்டரின் அப்ரூவலுக்காக அனுப்பிவைத்தது மருத்துவமனை நிர்வாகம்.

டாக்டர் ஹோவர்டு கெல்லி பில்லைப் பார்த்தார். அதன் கீழே ஓரத்தில் இப்படி எழுதினார். `இந்த பில்லுக்கான முழுத்தொகையும் செலுத்தப்பட்டுவிட்டது... ஒரு டம்ளர் பாலுடன்!’ அதற்குக் கீழே `ஹோவர்டு கெல்லி’ என்கிற தன் கையெழுத்தையும் போட்டிருந்தார்.

ஹாவர்டு கெல்லி

 

குறிப்பு: அமெரிக்காவில் புகழ்பெற்ற `Glass of Milk' என்ற இந்தக் கதையைக் கட்டுக்கதை; ஹோவர்டு கெல்லர் இளம் வயதில் வேலை எதுவும் செய்யவில்லை; அப்படி ஒரு பெண் இவருக்கு ஒரு டம்ளர் பாலெல்லாம் கொடுக்கவில்லை... என்றெல்லாம் வாதிடுபவர்களும் உண்டு. அது, உண்மைச் சம்பவமோ, கதையோ... இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் டாக்டரைப் போன்றவர்களும், பசியோடு வரும் சிறுவனுக்கு உணவிடுபவர்களும் உலகெங்கிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்! #Tardigrade

 
 

டார்டிக்ரேட்

இந்தப் பிரபஞ்சம் ஆச்சர்யத்திற்கும் அதிசயத்திற்கும் குறைவில்லாதது. நமக்கு தெரியாமல் ஏராளமான விடுகதைகளை இந்தப் பூமி தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான உயிரினம் தான் டார்டிக்ரேட் (Tardigrade)
 
இதில் அப்படி என்ன ஆச்சர்யம் என்று கேட்கீறீர்களா? மனிதனால் வாழ முடியாத மிக மோசமான சூழ்நிலைகளையும் இந்த உயிரினம் சமாளித்து வாழ்ந்துவிடும்.

 

சொல்லப்போனால் மனித இனம் முழுவதும் அழிந்து போகும் பேராபத்து வந்தாலும் இந்த உயிரினம் தப்பி பிழைத்து வாழ்ந்துவிடும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. 1973 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சார்ந்த ஜோகன் ஆகஸ்ட் இப்ராஹிம் கோஷி என்பவர்தான் இந்த உயிரினத்தைக் கண்டறிந்து அதற்கு டார்டிக்ரேட் என்ற பெயரையும் சூட்டினார். இதற்கு மெல்ல நகரும் இயல்புடைய உயிரினம் என்பது பொருள். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த இத்தாலியைச் சார்ந்த லஸ்சரோ ஸ்பிள்ளன்சி என்பவர் 1976 ஆம் ஆண்டு இந்த உயிரினத்தின் தனித்தன்மையைக் கண்டறிந்தார்.
 
பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் இந்த டார்டி கிரேட்களுக்கு பிடித்த இடம் வண்டல் படிவுகள் நிறைந்த நீர்நிலையின் அடிப்பகுதிதான். இந்த உயிரினத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியால் மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். இதன் அளவு 0.05 முதல் 1.2 மி.மீ தான். வெயிலோ, குளிரோ கொஞ்சம் அதிகமானால் நாம் படாதபாடு படும்போது  இவை -200 டிகிரி செல்சியஸ் குளிரையும், 148.9 டிகிரி  செல்சியஸ் வெப்பத்தையும் இயல்பாக கடந்துவிடும் திறனுடையவை.
 
அதோடு மட்டுமல்லாமல் மிகுந்த அழுத்தம் மிக்க பகுதிகளிலும், எதுவும் இல்லா வெற்றிடத்திலும் வாழ்ந்து வரும் இந்த உயிரினங்கள் கதிர்வீச்சாலும் கூட எந்த பாதிப்பும் அடைவதில்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியத்திற்குரியது. மனித உடல் எதிர்கொள்ளும் x-ray கதிர்களைப் போல 1000 மடங்கு வீரியமிக்க கதிர்களை எதிர்கொள்ளும் திறனுடையவை இவை. ஒருவேளை இந்தக் கதிர்வீச்சு அதன் டி.என்.ஏ களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதனை அந்த உயிரினமே சில நாள்களில் சரி செய்து கொள்ளும்.
 
டார்டி கிரேட்டில் இருக்கும் DSUP என்றழைக்கப்படும் பாதுகாப்பு புரதம் கதிர்வீச்சிலிருந்தும், செல்கள் உலர்தலிலிருந்தும் பாதுகாப்பதால் இவை மனித செல்களை x-ray கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படலாம். இந்த டார்டி கிரேட் புரதம் செலுத்தப்பட்ட செல்கள் சாதாரண செல்களை விட 40% அதிக எதிர்ப்பு வினையாற்றுவதாக கண்டறியப்பட்டுளன.

டார்டிக்ரேட்

 


 
இவற்றில் இருக்கும் ஜீனோம்களில் 17.5% விலங்கினத்தை சாராத பிற வகையினத்தை (தாவர, பூஞ்சை, பாக்டீரியா வகையினம்) சார்ந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவை விலங்கினத்தை சார்ந்தவையாக இருப்பினும் இந்த மாறுபட்ட ஜீனோம்க்கு காரணம் "கிடைமட்ட ஜீன் பரிமாற்றம்" என்கிறார்கள்.  
 
இவற்றின் இனப்பெருக்க முறை கொஞ்சம் வித்தியாசமானது. பெரும்பாலான டார்டி கிரேட் வகையினங்கள் புதிய சந்ததிகளை தோற்றுவிக்க துணைகளை தேடுவதில்லை. பார்த்தினோஜெனிக் முறையில் தனி உயிரியே கருமுட்டைகளை உருவாக்கிவிடுகின்றன. இருப்பினும் சில வகையினங்களில் ஆண், பெண் கருத்தரிப்பு முறையும் இருக்கிறது.
 
சில சமயங்களில் இந்த டார்டி கிரேட்கள் கிரிப்டோபையோசிஸ் என்னும் இறப்பு நிலையை அடைந்து விடுவது உண்டு. அப்பொழுது அவை தன் உடலை சுருக்கி நீரற்ற நிலையை அடைந்தாலும், மீண்டும் நீர் கிடைத்தவுடன் தன் இயல்பு நிலையை சில மணி நேரங்களிலே பெற்றுக் கொள்ளுமாம். இவை வாழும் நீரில் ஆக்சிஜனே இல்லா நிலை இருந்தாலும் தன் ஆக்சிஜன் தேவையை கூட குறைத்துக் கொள்ளும்.
 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

பாகிஸ்தானில் இந்து பெண்ணாக இருப்பது அவ்வளவு சுலபமா?

கலை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவியான உஜாலா ஹயாட், பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் என்றால் மக்கள் எவ்வாறு பழகுகின்றனர், இந்துக்கள் குறித்த பார்வை என்ன என்பதை தெரிந்து கொள்ள, இந்துவை போல பொட்டு வைத்து கொண்டு பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்தார். உஜாலா தனது பயணத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தை இந்த காணொளியில் பகிர்ந்துக் கொள்கிறார். இந்த காணொளியை தயாரித்தவர் பிபிசியின் பாகிஸ்தான் செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி.

  • தொடங்கியவர்

தன்னம்பிக்கை நாயகன்: ‘ஒரு கால்’ பந்தாட்டக்காரனின் கதை!

 

 
24CHDKNHEYIYI

ந்த கோலை அவர் அடித்த போது பலரும் நம்பவில்லை. காரணம், அவருக்கு இருந்தது ஒற்றைக் கால் மட்டும்தான்!

   

உடலில் வேறு எந்த உறுப்பில் அடிபடுவது அல்லது வேறு எந்த உறுப்பையும் இழப்பதைவிடவும் கொடுமையானது, காலை இழப்பது. ஏனென்றால், அது உங்களின் நகர்வை முடக்கிப் போட்டுவிடக் கூடிய ஒன்று. ஆதியிலிருந்து நகர்ந்து கொண்டே இருக்கும் மனிதர்களின் கால்களை வெட்டிவிட்டு, அவர்களை ஒரே இடத்தில் இருக்கச் சொன்னால், அதைவிட நரகம் வேறில்லை!

சீனாவைச் சேர்ந்த 21 வயது ஹி யீயீ, அந்த நரகத்திலிருந்து வெளியே வர விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த பாதை… கால்பந்து. ‘எக்ஸிபிஷன் மேட்ச்’ ஒன்றில், ஒற்றைக் காலால் அவர் கால்பந்து விளையாடும் காட்சி சமீபத்தில் யூடியூப்பில் வெளியானது. அதற்கு இடப்படும் லைக்குகள் ‘ஸ்டில் கவுண்ட்டிங்…!’

சிறுவனாக இருந்தபோதே யீயீ கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார். 2008-ம் ஆண்டு, அவருடைய விளையாட்டைக் கண்டு ஆச்சரியமடைந்த பிரெஞ்சு நாட்டுக் கால்பந்து வீரர் ஒருவர், அவரது திறமையை மெருகூட்ட நினைத்தார். யீயீ, அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள பிரான்ஸுக்குச் செல்லத் தயாராக இருந்த நேரம், இடியாக இறங்கியது அந்த வலி!

24CHDKNHEYIYI%202
 

யீயீக்கு, 12 வயதிலிருந்தே காலில் ஆஸ்டியோசார்கோமா எனும் நோய் இருந்துவந்தது. அதாவது, கால் எலும்பில் ஏற்படும் வலி. பரிசோதித்துப் பார்த்ததில், அது எலும்புப் புற்றுநோய் என்று தெரியவந்தது. பிரான்ஸுக்குச் சென்று பயிற்சி பெற்று, கால்பந்தாட்ட வரலாற்றில் தடம் பதிக்கக் காத்திருந்த யீயீ, தனது இடது காலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

‘கால்தானே போயிற்று. கால்கள் இல்லையே!’ என்று தன்னம்பிக்கையுடன் எழுந்துவந்தார் யீயீ. கைகள் இரண்டிலும் ஊன்றுகோலின் உதவியுடன், மீண்டும் கால்பந்தாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.

மீண்டும் தன்னால் கால்பந்தாட்ட மைதானத்தில் பந்தைத் துரத்தி ஓட முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த யீயீக்கு, இன்னொரு விதத்தில் தடங்கல் ஏற்பட்டது. அது, போட்டிக்காக நடத்தப்படும் ‘புரொஃபெஷனல்’ கால்பந்து விளையாட்டுகளில் பங்கேற்க அவர் அனுமதிக்கப்படவில்லை.

அதற்காக அவர் மனம் தளரவில்லை. ‘அமெச்சூர்’ கால்பந்தாட்டப் போட்டிகளில் அவர் பங்கேற்றார். அந்தப் போட்டிகளில், இவர் மட்டும்தான் மாற்றுத்திறனாளி! ஆரம்பத்தில், அவர் சந்தித்த அவமானங்கள் ஏராளம். ஆனால், மனம் தளராமல் பந்தைத் துரத்திக் கொண்டேயிருக்கிறார் யீயீ.

24CHDKNHEYIYI%203
 

“தப்பித் தவறி என்னுடைய ஊன்றுகோல்கள் இதர விளையாட்டு வீரர்களைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே, நான் மலிவு விலை ஊன்றுகோல்களைப் பயன்படுத்துகிறேன். காரணம், அப்படியே தப்பித் தவறி, இதர வீரர்களின் கால்கள் எனது ஊன்றுகோலில் பட்டுவிட்டால், ஊன்றுகோல்தான் உடையுமே தவிர, வீரர்களின் கால்களுக்குப் பாதிப்பு ஏற்படாது!” என்று சொல்கிற யீயீயை, அவருடைய ரசிகர்கள் ‘சிறகொடிந்த தேவதை’, ‘மேஜிக் பாய்’ என்றெல்லாம் புகழ்கிறார்கள்.

இந்தச் சின்ன வயதில், இப்படி ஒரு இழப்பிலும் எப்படி இவரால் துணிந்து நிற்க முடிகிறது?

“வீட்டில் உட்கார்ந்துகொண்டு புலம்பாதீர்கள். வாழ்க்கையை பாஸிட்டிவ் ஆகப் பாருங்கள். உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு நமது புன்னகையைப் பரிசளிப்பது நலமாக இருக்குமில்லையா?” என்ற இவர், உண்மையான விளையாட்டு வீரராகிறார், தன்னம்பிக்கையின் அழ‘கால்!’

கால்பந்தாட்டத்தைக் காண

 

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நகைச்சுவைப் புயல், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று...

நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி கலைவாணர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்க்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர்.

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்து தன் முதல் படமான சதி லீலாவதியில் தன் காமெடி ட்ராக்கை தானே எழுதிக்கொண்டார் கலைவாணர். தன் படங்களின் மூலம் சீர்திருத்த கருத்துகளை இயல்பாக மக்களிடம் கொண்டு சேர்த்தார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் குரல் கொடுத்தார். திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துகள் எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் நகைச்சுவை முத்திரைக்கு சான்று.

கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர் என்.எஸ்.கே. ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று. சொன்னபடியே கலைவாணர் நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
 
 
  • தொடங்கியவர்

`உங்கள் கார் கீலெஸ் என்ட்ரி மாடலா' அரை நிமிடத்தில் உங்கள் கார் திருடப்படலாம்!

 
 

எத்தனையோ கார் திருட்டுச் சம்பவங்களை யாராவது சொல்லிக் கேட்டிருப்போம், தினசரி நாளிதழ்களில் படித்திருப்போம். ஆனால், இப்பொழுது நீங்கள் படிக்கப்போகும் கார் திருட்டுச் சம்பவத்தை நிச்சயம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்தச் சம்பவம் நடந்தது இங்கிலாந்தில் இருக்கும் ஒரு மாகாணமான மேற்கு மிட்லான்டின் (West Midlands) சொலிஹல் நகரத்தில். அந்த மாகாண காவல்துறை வெளியிட்டிருக்கும் ஒரு கார் திருட்டுச் சம்பவத்தின் வீடியோ காட்சி கார் வைத்திருக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

 car

 

கார் திருட்டு என்றால் காரின் கதவை உடைத்தோ, அல்லது கள்ளச்சாவி உபயோகித்து திருடுவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த வீடியோவில் திருடர்கள் செய்வது வேற லெவல் திருட்டு. கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது மூன்று நபர்கள். மூன்று பேரில் ஒருவன் திருடர்கள் வந்த காரை ஒட்டிவந்தவன். அந்த வகையில் பார்த்தால் இந்தத் திருட்டில் ஈடுபட்டது வெறும் இரண்டு நபர்கள்தான். திருடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு வசதிகள் அதிகம் இருக்கும் விலை உயந்த கார். வீடியோவில் தென்படும் நபர்கள் இருவரும் ஒரு காரிலிருந்து இறங்குகிறார்கள். அவர்களின் கையில் ஒரு கருவியை வைத்திருக்கிறார்கள். ஒருவன் காரின் அருகில் நின்றுகொள்ள மற்றொருவன் வீட்டுக் கதவின் அருகில் அந்தக் கருவியை கொண்டு செல்கிறான். அடுத்த சில நொடிகளில் கார் அன்லாக் செய்யப்பட்டதன் அறிகுறியாக விளக்குகள் ஒளிர்கின்றன. ஒருவன் காரின் கதவைத் திறந்து உள்ளே சென்று காரை ஸ்டார்ட் செய்த அடுத்த சில நொடிகளில் இரண்டு கார்களும் கேமராவின் கண்களில் இருந்து மறைகின்றன. அவர்கள் காரில் இருந்து இறங்கும்பொழுது மணி  01:01:36 கார் அன்லாக் ஆகும் பொழுது மணி 01:02:02 இரண்டுக்கும் இடைப்பட்ட நேரம் 26 நொடிகள். அரை நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் காரை திருடுவது சாத்தியமான ஒன்றா?.

 

திருடர்களின் கையில் இருந்த அந்தக் கருவிதான் இந்த கேள்விக்கான விடை. காரை திருடுவதற்கு அவர்கள் பயன்படுத்தியது "ரிலே பாக்ஸ்" (Relay Box) என்னும் கருவியை. இதனைப் பயன்படுத்தி  "கீலெஸ்" கார்களை ஒரு நிமிடத்துக்குள் அன்லாக் செய்துவிட முடியும். கீலெஸ் கார்களில் சாவிக்குப் பதிலாக ஒரு ரிமோட் கொடுக்கப்பட்டிருக்கும். ரிமோட்டில் இருக்கும் ஒரு எலெக்ட்ரானிக் சிப்பில் கார் தொடர்பான தகவல்கள் பதியப்பட்டிருக்கும். ரிமோட்டை இயக்குவதன் மூலமாக காரை லாக் அல்லது அன்லாக் செய்யவோ இயக்கவோ முடியும். காருக்கும், ரிமோட்டுக்கும் உள்ள தொடர்பு என்பது வயர்லெஸ் முறையில் நடைபெறும். ஒவ்வொரு ரிமோட்டும் அந்தந்த காருக்கான தனித்துவமான  சிக்னல்களை உருவாக்கும். ஒரு ரிமோட்டின் சிக்னலை வேறொரு காருக்குப் பயன்படுத்த முடியாது. ஆனால், இதுபோன்ற திருட்டில் ஈடுபடுபவர்கள் ரிலே பாக்ஸ்களைப் பயன்படுத்தி அந்தக் காருக்கான சிக்னல்களை உருவாக்கிவிடுகிறார்கள் .

இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் இரண்டு ரிலே பாக்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ரிலே பாக்ஸ் காரின் அருகே இருக்க மற்றொரு கருவி வீட்டுக்குள் இருந்து வெளியாகும் சிக்னலை கண்டறிய பயன்படுகிறது. கிடைத்த அந்த சிக்னலை காரின் அருகே இருக்கும் ரிலே பாக்ஸுக்கு அனுப்பியவுடன் கார் அன்லாக் செய்யப்படுகிறது. இதுபோன்ற கார் திருட்டுகள் ஏற்கெனவே இருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கான நேரம் அதிகமாக இருந்த காரணத்தால் குறைவாகவே நிகழ்ந்துவந்தன. தற்பொழுது நவீனமாக்கப்பட்டிருக்கும் புதிய கருவிகள் நேரத்தைக் குறைப்பதால் கார் திருட்டுகளும் அதிகரித்திருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். கார் திருடர்களின் இலக்கு விலை உயர்ந்த கார்கள்தான், அதுபோன்ற கார்களில்தான் "கீலெஸ்" வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது அவர்களுக்கு ஒரு வகையில் சாதகமாகிவிடுகிறது.

கார் லாக்

 

"தாட்செம் அங்கீகாரம் பெற்ற "ஸ்டீயரிங் லாக்" மற்றும் காரின் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவியைப் பொருத்துமாறும் மக்களை அறிவுறுத்தியுள்ளோம். அதேவேளையில் காருக்கான பாதுகாப்பு மென்பொருளை உடனுக்குடன் அப்டேட் செய்யும்படி டீலர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்கிறார் மேற்கு மிட்லான்ட் காவல்துறையைச் சேர்ந்த மார்க் சில்வெஸ்டர் எனும் அதிகாரி. தொழில்நுட்பங்கள் ஒரு வேலையை எளிதாக்கினாலும் அவற்றில் இருக்கும் சிக்கல்கள் ஏராளம் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்திக்கொண்டேதான் இருக்கின்றன.

https://www.vikatan.com

 

சாவியை பயன்படுத்தாமல் சொகுசு காரை திருடும் திருடர்கள்

  • தொடங்கியவர்

பலாசோ முதல் கிராப் டாப் வரை... டீன்ஸ் விரும்பும் இண்டோ - வெஸ்ட்ர்ன் காம்போ!

 
 
Chennai: 

பெண்களுக்கு, புதுமையான ஆடைகள் எவ்வளவு வந்தாலும் போதாது. கல்லூரிக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் காலையில் தினமும் மனதில் எழும் கேள்வி, `இன்னிக்கு என்ன டிரெஸ்?'. இதற்கு விடை தேடி அலமாரியில் இருக்கும் 100 உடைகளையும் கலைத்துவிட்டுச் சொல்வது, `சே..! ஒரு டிரெஸ்கூட நல்லாயில்லை!'. ஆண்களைவிட பெண்களுக்குப் பல்வேறு நிறம், பேட்டர்ன், துணி எனப் பல வெரைட்டிகள் இருந்தும் புதுமையைத்தான் விரும்புகிறார்கள் இந்தக் காலத்து `டீன்ஸ்'. அவர்களுக்காகவே நிறைய ஆடைகள் மார்க்கெட்டில் குவித்துள்ளனர் நம் நாட்டு ஆடை வடிவமைப்பாளர்கள். தற்போது பல கல்லூரிப் பெண்கள் விரும்பி வாங்குவது `ஃப்யூஷன்' (Fusion) எனப்படும் இண்டோ-வெஸ்டர்ன் உடைகளைத்தான். இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் பாரம்பர்ய ஆடைகளை ஒன்றாக்கி, புது வடிவத்தைக்கொடுப்பதுதான் இண்டோ-வெஸ்டர்ன் உடைகள். சந்தையில் களம் இறங்கியிருக்கும் (Fashion) கல்லூரிப் பெண்களுக்கான ஃபியூஷன் ஆடைகளைப் பற்றி பார்ப்போமா...

குர்த்தா டிரெஸ்:

 

குர்த்தா, இந்தியப் பெண்கள் அனைவரும் அணியும் உடை. குர்த்தாவுடன் சல்வார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்றவற்றை மேட்ச் செய்து அணிவது வழக்கம். முற்றிலும் இந்திய உடையாக இருக்கும் இந்தக் குர்த்தாவில் சிறு மாற்றங்களைச் செய்தால், இண்டோ - வெஸ்டர்ன் உடை. உதாரணமாக, சைடு கட் (side cut) ஏதுமின்றி அனார்கலி வகையான குர்த்தாவை மட்டும் அணிந்து, அதனுடன் டேங்க்லர்ஸ், லெதர் காலணிகளை மேட்ச் செய்தால், ஃப்யூஷன் குர்த்தா தோற்றத்தைக் கொடுக்கும். இதைக் கல்லூரிப் பெண்கள் முதல் பணிக்குச் செல்லும் பெண்கள் வரை அனைவரும் அணியலாம். விலையும் மிகக் குறைவு.

இண்டோ-வெஸ்டர்ன் #Fashion

அனார்கலி வகைபோல நீளமான குர்த்தாவும் ட்ரெண்ட். கணுக்கால் அளவு நீண்டிருக்கும் குர்த்தாவின் மையத்தில் பிளவை அமைத்தால், அது `சென்டர் ஸ்லிட் லாங் குர்த்தா'. இதனுடன் லெக்கிங்ஸ் அல்லது ஜீன்ஸ் மேட்ச் செய்து, கலர்ஃபுல் வளையல்கள் மற்றும் மேட்சிங் சாண்டல் காலணிகளை அணிந்தால் எளிமையான இண்டோ-வெஸ்டர்ன் தோற்றத்துக்குச் சொந்தமாகலாம்.

இண்டோ-வெஸ்டர்ன்  #Fashion

இதே நீள குர்த்தாவின் இரு பக்கங்களிலும் `ஸ்லிட்' அமைத்து அதற்கு மேட்சாக `லாங் ஸ்கர்ட்' எனப்படும் மாக்ஸி அணிந்தால், குர்த்தா ஸ்கர்ட் என்றாகிவிடும். சாண்ட்பாலி (Chandbali), வளையல், தட்டையான காலணிகள் எனச் சாதாரண அணிகலன்களே இதற்கான பக்கா ஜோடி.

இண்டோ-வெஸ்டர்ன்

பலாசோ :

சட்டைகளுக்கு எப்போதும் ஜீன்ஸ், பேன்ட் என மேற்கத்திய ஆடையின் சேர்க்கையையே பின்பற்றிய நாம், தற்போது நம்முடைய தேடல் நம் பாரம்பர்ய முத்திரைகளைக்கொண்டிருக்கும் பலாசோ பக்கம் திரும்பியுள்ளது. எண்ணற்ற டிசைன்களிலும் நிறங்களிலும் கிடைக்கும் இந்த பலாசோவின் சரியான ஜோடி `கிராப் டாப்'. குர்த்தா, ஷர்ட் மற்றும் டீஷர்ட்களையும் அணியலாம். கல்லூரிப் பெண்களிடம் அதீத வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த உடையுடன் ஜிமிக்கி, பிரேஸ்லெட், ஹீல்ஸ் போன்றவற்றை அணிந்து ட்ரெண்ட் செட் செய்யலாம்.

இண்டோ-வெஸ்டர்ன்  #Fashion

தோத்தி பேன்ட் :

பலாசோவின் பிளீட்களை (Pleat) அதிகப்படுத்தி நம் நாட்டு ஆண்களின் வேட்டி வடிவத்தைப்போல் டிசைன் செய்ததுதான் தோத்தி பேன்ட். கிராப் டாப், ஷர்ட், குர்த்தா போன்றவற்றை இதனுடன் அணியலாம். மேலும் காதில் வளையம், மெல்லிய பிரேஸ்லெட், தட்டையான காலணிகளை அணிந்து கலக்கல் கல்லூரிப் பெண் தோற்றதைப் பெறலாம்.

இண்டோ-வெஸ்டர்ன்

புடைவையுடன் கிராப் டாப் :

புடைவை என்றாலே பிளவுஸ்தான் என்பதை மாற்றி, தற்போது ட்ரெண்டில் இருப்பது கிராப் டாப் (துப்பாக்கியில் காஜல் அணிந்திருந்தது). பழகிப்போன பிளவுஸ் ட்ரெண்டை உடைத்து சந்தையில் அதிகம் விற்பனை ஆவது கிராப் டாப்கள். பிளெய்ன் புடைவைக்கு ஏற்றதுபோல் அச்சிட்ட கிராப் டாப் ஏராளம். ஒரே ஒரு டாப் இருந்தால் போதும், மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து தனித்தன்மையை உலகறியச் செய்யலாம்.

#Fashion

 

ஐந்நூறு ரூபாய் முதல் கிடைக்கும் இந்த வகையான இண்டோ-வெஸ்டர்ன் உடைகள், கல்லூரிப் பெண்கள் மட்டுமல்ல, அனைத்துப் பெண்களும் எளிதில் வாங்கக்கூடியவையே. இப்போதே ஷாப்பிங் லிஸ்ட் தயார்செய்து இண்டோ-வெஸ்டர்ன் காஸ்ட்யூமை உங்கள் வசமாக்கிக்கொள்ளுங்கள்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

லட்சக்கணக்கான இளம்பெண்கள் கல்விபெற உதவும் கல்வியாளர்

வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் குழந்தை மணமகள்கள் அதிக அளவில் இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது. இந்தியாவில் 10-14 வயதிற்குட்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் பள்ளிக்கு செல்வதில்லை. இந்நிலையில், பெண் குழந்தைகளை திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பாமல், பள்ளிக்கு அனுப்புங்கள் என்று பெற்றோருக்கு வழிகாட்டி, 1.5 இலட்சம் பெண் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பியுள்ள தன்னார்வலர் குறித்த காணொளி.

  • தொடங்கியவர்
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க
 

வரலாற்று ரீதியாக நாம் காணும் புகைப்படங்களில் பெரும்பாலானவை, உலகை புரட்டிப்போட்ட பெரும் நிகழ்வுகள், பெரும் தலைவர்கள், உலக போர்கள், அசம்பாவிதங்கள் போன்றவையாகத் தான் இருக்கும். ஆனால், நாம் கண்டு ரசித்த, பெரிதும் படித்து அறிந்த வரலாற்று பக்கங்களின் பின்புறத்தில் நடந்த சிறிய சிறிய விடயங்கள், சிறிய சிறிய மகிழ்ச்சிகள், இழப்புகள் போன்றவையும் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன.

ஆனால், அதைக் காணத்தான் யாருக்கும் நேரமுமில்லை. அதைக் காட்டவும் தற்போது யாருமில்லை. இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த போது,  மக்கள் வசிக்கும் நகர் பகுதிகளில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களின் காரணத்தால், பெரும் விஷத்தன்மை, காற்றில் கலந்ததால், பிரிட்டன் மக்கள் நாள் முழுக்க மாஸ்க் அணிந்து வாழ்ந்த நாட்களை நாம் அறிவோம். ஆனால், அதே இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, மக்கள் அதை எப்படி கொண்டாடினார்கள் என்பதை நாம் யாரும் கண்டிருக்க மாட்டோம்.

இரண்டாம் உலகப்போரை, ஒருசில நாடுகளின் தலைவர்கள் மட்டும் தான் விரும்பினார்களே தவிர, உலக மக்கள் அல்ல. இந்தப் போரின் காரணத்தால், எந்தப் பாவமும் அறியாத பலர், தங்கள் உயிரை, குடும்பங்களை பரிதாபமாக இழந்தனர்.

image_ea4a2a81f8.jpg

இதோ! 1945இல், இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததை, அமெரிக்காவின் நியூயார்க் மக்கள், கிழிந்த காகித துண்டுகளின் குவியலின் இடையே அமர்ந்து, கொண்டாடிக் கொண்டிருந்த போது எடுத்த படம் இது.

image_d4f4fec129.jpg

கருளா கட்டையை கையில் எடுத்து சுத்திதான் சாகசம் செய்ய வேண்டும் என்றில்லை. அதன் மேல் ஏறி நின்றும் சாகசம் செய்யலாம் என, அந்தக் காலத்து ஆணழகர்கள் பயன்படுத்திய கருளா கட்டையின் மீது ஏறி நின்று சாகசம் செய்யும் சர்கஸ் யானை.

image_5e5a4f4cde.jpg

Pinocchio எனும் கார்டூன் நாடகத்துக்காக டிஸ்னியில் பணிபுரிந்து வந்த அணிமேட்டர்கள், நீர் பபிள்ஸ்களை எப்படி அனிமேட் செய்யலாம் என,  ஆலோசித்து வந்த போது எடுக்கப்பட்ட படம்.

image_47b2d43623.jpg

பில் பாக்ஸ்டன் (Bill Paxton) எனும் அமெரிக்க நடிகரின் புகைப்படம். இது 1963இல் ஜே.எப். கென்னடி பேசிக் கொண்டிருந்த போது எடுத்தப்படும். இந்தப் படத்தின் சிறப்பு இதுவல்ல. இந்த நாளில் தான், கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

image_da37282ca8.jpg

1994இல், நெல்சன் மண்டேலாவின் வருகையையொட்டி, அவருக்காக வைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரசாரப் பதாகையின் கம்பம் மீது ஏறி, அவருக்கு தங்களது ஆதரவை அளிக்க மக்கள் கூடிய போது எடுக்கப்பட்ட படம்.

image_8e7f086678.jpg

1903இல், இமாலய ஆற்றை கடந்து செல்ல, மாட்டின் தோலைக் கொண்டு செயப்பட்ட படகில் பயணிக்க தயாராகிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படம்.

image_a046cbeee3.jpg

அரசர் நான்காம் ஹென்றியின் தலை என நம்பப்பட்டு வரும் மண்டை ஓடு.  1930களில், அருங்காட்சியகத்தில் வைத்திருந்த போது எடுக்கப்பட்ட படம்.

image_3fbb7447d6.jpg

ரஷ்யாவின் தீயணைப்பு படை வீரர்கள். அவரவருடைய தீயணைப்புக் கருவி மற்றும் பாதுகாப்பு உடையுடன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படம்.

image_f7b3addea5.jpg

தங்களுக்கு மதுபானம் வேண்டும் என்று கூறி, ஆண்கள் பலரும் பேரணியாக சேர்ந்து We Want Beer என, பதாகைகள் ஏந்தி 1931இல் போராட்டம் செய்த போது எடுத்தப்படம்.

image_c7902a7c59.jpg

ஜெர்மனியைச் சேர்ந்த ஏழடி உயருமுள்ள இராணுவ வீரருடன், பிரிட்டிஷ் இராணுவ வீரர் - 1944 எடுக்கப்பட்ட படம்.

image_3a4ba39bae.jpg

உலகெல்லாம் தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளம் வைத்திருந்த ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோ, 1944இல் கலிபோர்னியாவில் அமைந்திருந்த Van Nuys factory-இல் பணிபுரிந்து வந்த போது எடுக்கப்பட்ட படம்.

image_649b37bd74.jpg

1980களில் திரைப்படங்களின் முடிவில் டைட்டில் கார்டு எப்படி உருவாக்கப்பட்டு ஓட்டப்பட்டது என்பதை காண்பிக்கும் படம்.

image_c58897fc85.jpg

1967இல் சுவீடனில் வாகனம் ஓட்டுவதை இடது புறத்தில் இருந்து வலது புறமாக மாற்றிய போது, சாலையில் ஏற்பட்ட குழப்பங்களின் போது எடுக்கப்பட்ட படம். 

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி! வீடியோ

 
 

மேற்கு வங்கத்தில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை, யானை  தூக்கிப்போட்டு பந்தாடியதில் அந்த நபர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

மேற்கு வங்க மாநிலத்தில் லத்தாகுரி வனம் காட்டுயானைகள் அதிகம் வாழும் பகுதியாகும். அந்த வழியாகத் தேசிய நெடுஞ்சாலை சென்று வருகிறது. சம்பவத்தன்று ஜெய்பாகுரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் யானை கடந்து போகட்டும் என வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அப்போது சாதிக் என்ற இளைஞர் வாகனத்திலிருந்து கீழே இறங்கி தொலைவில் நின்றபடி யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இதைப் பார்த்து மிரண்டுபோன யானை வேகவேகமாகச் சாதிக்கின் அருகே ஓடிச்சென்று அவரைத் தூக்கிப்போட்டு பந்தாடியது. காலால் மிதித்ததில் சாதிக் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

செல்ஃபி எடுப்பதில் தீவிரமாக இருந்ததால், யானை பின்னால் வேகமாக ஓடி வருவதை சாதிக் கவனிக்கவில்லை. செல்ஃபி ஆசை அவருடைய உயிரைப் பறித்துள்ளது. இந்தக் காட்சிகளை ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகப் பரவி வருகிறது. சாதிக் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்
‘நீதியை வளைத்தால் நாடு அழிவை நோக்கி ஓடும்’
 

image_849ec9438e.jpgபேச்சு உரிமை என்பது, இன்று அரசியல் தலைவர்களுக்கு மட்டும் உரியது போலுள்ளது. அதிலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு இந்த உரிமை இருப்பது சந்தேகம்தான். 

சாதாரணமானவர்கள் தங்களது உரிமைகள் எதுவெனத் தெரியாமல் இருக்கின்றார்கள். 

மிகவும் முன்னேற்றமடைந்த ஜனநாயக வல்லரசுகளின் தலைவர்கள், சின்னத்தப்புச் செய்தாலும் கூட, மக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. எந்தவித அச்சமும் இன்றி, அந்தத் தப்புகளை விஸ்வரூபமாக்கி அவர்களது பதவிகளுக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். 

மன்னிக்க முடியாத தவறுகளைச் செய்யும் தலைவர்களைத் தண்டனை பெற வைக்க எவருமே பயப்படுவதுமில்லை. ஒரு நாடு சிறப்புற அமைய, நீதித்துறை வைராக்கியமான துணிச்சலும் இருக்க வேண்டும். நீதியை வளைக்க நினைத்தால் அந்த நாடு அழிவை நோக்கி ஓடும். 

  • தொடங்கியவர்

1872 : உலகின் முத­லா­வது சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்டி நடை­பெற்­றது.

வரலாற்றில் இன்று….

நவம்பர் – 30

 

1700 : சுவீ­டனின் 12 ஆம் சார்ள்ஸ் தலை­மையில் 8.500 இரா­ணு­வத்­தினர் எஸ்­தோ­னி­யாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படை­களை வென்­றனர்.

1718 : நோர்­வேயின் பிரெட்­ரிக்ஸ்டன் கோட்டை முற்­று­கையின் போது சுவீடன் மன்னர் 12 ஆம் சார்ள்ஸ் இறந்தார்.

1782 : அமெ­ரிக்கப் புரட்சிப் போர்: ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு இடை­யி­லான ஆரம்ப சமா­தான உடன்­பாடு பாரிஸில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

varalru-30-11-2016.jpg1803 : ஸ்பானி­யர்கள் லூசி­யா­னாவை பிரான்­ஸிடம் உத்­தி­யோ­கபூர்வமாக கைய­ளித்­தனர். பிரான்ஸ் இப்­பி­ர­தே­சத்தை 20 நாட்­களின் பின்னர் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு விற்­றது.

1806 : நெப்­போ­லி­யனின் படைகள் போலந்து தலை­நகர் வோர்­ஸோவைக் கைப்­பற்­றின.

1853 : ரஷ்யப் பேர­ரசின் கடற்­படை வட துருக்­கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்­டோமான் பேர­ரசின் படை­களைத் தோற்­க­டித்­தன.

1872 : உலகின் முத­லா­வது சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்டி ஸ்கொட்­லாந்­துக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் ஸ்கொட்­லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடை­பெற்­றது.

1908 : அமெ­ரிக்­காவின் பென் சில்­வே­னியா மாநி­லத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்­பட்ட வெடி­வி­பத்தில் 154 பேர் கொல்­லப்­பட்­டனர்.
1939 : சோவியத் படைகள் பின்­லாந்தை முற்­று­கை­யிட்டு குண்­டு­களை வீசின.

1962 : பர்­மாவைச் சேர்ந்த யூதாண்ட், ஐ.நா.வின் 3 ஆவது பொதுச் செய­ல­ராகத் தெரி­வானார்.

1966 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து பார்­போடஸ் சுதந்­திரம் பெற்­றது.

1967 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து தெற்கு யேமன் சுதந்­திரம் பெற்­றது.

1967 : சுல்­பிகார் அலி பூட்டோ, பாகிஸ்தான் மக்கள் கட்­சியை ஆரம்­பித்தார்.

1981 : ஜெனீ­வாவில் ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் சோவியத் பிர­தி­நி­திகள் ஐரோப்­பாவில் நிலை­கொண்­டுள்ள நடுத்­தர ஏவு­க­ணை­களைக் குறைக்க பேச்­சு­வார்த்­தையை ஆரம்­பித்­தனர்.

1995 : 1990 ஆம் ஆண்டு ஆரம்­பித்த வளை­குடாப் போர் உத்­தி­யோ­கபூர்வமாக முடி­வுக்கு வந்­தது.

2004 : இந்­தோ­னே­ஷி­யாவில் இடம்­பெற்ற விமான விபத்தில் 26 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2012 : கொங்­கோவில் சரக்கு விமா­ன­மொன்று வீடு­க­ளுக்கு மேல் வீழ்ந்­ததால் விமா­னத்­தி­லி­ருந்த 6 பேரும் தரை­யி­லி­ருந்த 26 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

2013 : கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சியொன்றின் போது ஏற்பட்ட தீயினால் சுமார் 200 கண்டுபிடிப்பு பொருட்கள் தீக்கிரையாகின.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

கைவிரித்த பள்ளிகள்... கைகொடுத்த யூடியூப்! - ஒரு பெண்ணின் சாதனைக் கதை #MotivationStory

 
 

கதை

`ருபோதும் பின்வாங்காதீர்கள். எதையும் முயற்சி செய்து பாருங்கள். உங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அத்தனையையும் செய்து, நீங்கள் நினைத்ததை அடையப் பாருங்கள். மன உறுதி மட்டும்தான் எதையும் சாதிக்கும் ஆற்றலைத் தரும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் சார்லஸ் சிம்மன்ஸ் (Charles Simmons). சரி, லட்சியத்தை, இலக்கை அடைய முயற்சிக்கலாம்தான். ஆனால், சாதனைகளுக்கு அல்ல... சில வேலைகளுக்குக்கூட அடிப்படையான திறன்கள் நமக்குத் தேவையாக இருக்கின்றன! கையிருந்தால்தான் வரைய முடியும்; கால்களிருந்தால்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள முடியும். பறப்பதற்கு பறவைக்கு சிறகு எவ்வளவு அவசியமோ அப்படி, நம் உடல் உறுப்புகள் ஒத்துழைத்தால்தான் சில பணிகளைக்கூட நம்மால் செய்ய முடியும். இந்த ஆதாரம் இல்லாதவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை. அந்த நிலையிலும்கூட இலக்கை நோக்கி விடா முயற்சியோடு விரைகிறவர்களைப் பார்த்து நாம் ஆச்சர்யப்படுகிறோம், `சபாஷ்...’ என மனதாரப் பாராட்டுகிறோம். அப்படிப் பாராட்டப்படவேண்டிய ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா ரூயிஸ் (Jessica Ruiz). அவர் கதை கொஞ்சம் கலங்கவைப்பது, வியக்கவும் வைப்பது!

 

ஜெசிக்கா

இப்போது அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள, பிலடெல்பியாவில் வசிக்கிறார் ஜெஸ்ஸிகா ரூயிஸ். அவர் ஒரு ஒப்பனைக் கலைஞர். அவரிடம் மேக்கப் செய்துகொள்ளப் போனால், மற்ற ஒப்பனைக் கலைஞர்களிடம் கிடைக்காத ஓர் அனுபவம் கிடைக்கும். மற்றவர்கள், உங்கள் முகம், புருவம், கண் இமைகள் எல்லாவற்றையும் ஒப்பனை செய்ய தங்கள் இரு கைகளையும் பயன்படுத்துவார்கள். ஜெஸ்ஸிகா, தன் வாயில் பிரஷ்ஷைக் கவ்விப் பிடித்துக்கொண்டு, அதைக்கொண்டு மேக்கப் போட்டுவிட ஆரம்பிப்பார். நம்ப முடியவில்லையா? இதுதான் உண்மை. முழுநேர ஒப்பனைக் கலைஞரான ஜெஸ்ஸிகா, திருமணம், ஃபேஷன் ஷோ... என எந்த நிகழ்வாக இருந்தாலும், இந்த முறையைத்தான் பயன்படுத்துவார். காரணம், பிறக்கும்போதே அவருக்கிருந்த ஒரு உடல்நலப் பிரச்னை... `ஆர்த்ரோகிரிபோசிஸ்’ (Arthrogryposis) என்று மருத்துவத்தில் இந்த நோயைக் குறிப்பிடுவார்கள். இதன் காரணமாக, பிறவியிலேயே அவரால் தன் கைகளை இயக்கவோ, அசைக்கவோ முடியாது. ஆனால், சிறு வயதிலிருந்தே ஒப்பனைக் கலைஞராக வேண்டும் என்கிற தீராத வேட்கை அவருக்கு இருந்தது.

பள்ளியில் படிக்கும்போதே சக மாணவ, மாணவிகளின் சீண்டல் தாங்க முடியாததாக இருந்தது. இளைத்தவன் என்றாலே சிலருக்கு பரிகாசம் செய்யத் தோன்றும். அப்படி சிலர் ஜெஸ்ஸிகா படித்த பள்ளியில் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் தன் இயலாமையைக் கேலி செய்வதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. யோசித்து யோசித்து அவர்களை எதிர்கொள்ள ஒரு முடிவுக்கு வந்தார். ஒருநாள் அவர்கள் வரும் நேரத்தில், வகுப்பறையில் தன் இடத்தில் அமர்ந்திருந்தார் ஜெஸ்ஸிகா. அவரிடம் ஒரு குட்டி மேக்கப் பாக்ஸ் இருந்தது. இடது கைக்கருகில் மஸ்காரா, ஐலைனர் இரண்டையும் வைத்துக்கொண்டு, தன் தலையைத் தாழ்த்தி, முகத்தை அவற்றுக்கு அருகே கொண்டு போய் தனக்குத் தானே புருவங்களிலும், கண்களிலும் மேக்கப் போட்டுக்கொண்டார். இதைப் பார்த்ததும் அவர்கள் அசந்து போனார்கள்.

அவர்களில் ஒரு பெண் ஜெஸ்ஸிகாவின் அருகே வந்து இப்படிச் சொன்னார்... ``இப்போ உன் முகம் பளிச்னு ரொம்ப அழகா இருக்கு.’’ அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த நண்பர்களுக்கு, ஜெஸ்ஸிகாவின் மேல் இருந்த பார்வை மாறியது. இதனால் முழுப் பிரச்னையும் தீர்ந்துவிடவில்லை என்றாலும், ஜெஸ்ஸிகாவுக்கு வாழ்க்கையில் புதிதாக ஒரு ஜன்னல் திறந்தது; மேக்கப்பின் மேல் ஆர்வம் கூடியது.

கதை

ஜெஸ்ஸிகா பத்தாவது கிரேடு படிக்கும்போது இன்னொரு சம்பவம் நடந்தது. அவருடைய தோழி ஒருவர் பட்டமளிப்பு (அமெரிக்காவில் இதையும் `Graduation' என்றுதான் குறிப்பிடுகிறார்கள்) தினத்தன்று வந்தார். ``எனக்கு மேக்கப் போட்டுவிடேன்’’ என்றார். அந்தத் துறையில் அதீத ஈடுபாடு இருந்தாலும், ஜெஸ்ஸிகா அப்போது மேக்கப்பில் ஃபவுண்டேஷன் போடுவதற்கெல்லாம் பழகியிருக்கவில்லை. கண்கள், உதடுகளுக்கு மட்டும் மேக்கப் போடுவார். அதை அந்தப் பெண்ணுக்குச் செய்துவிட்டார். விழா முடிந்தது. அந்தப் பெண்ணின் தாய் ஜெஸ்ஸிகாவிடம் வந்தார். ``இன்னிக்கி என் பொண்ணு பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்காம்மா. ரொம்ப தேங்க்ஸ்’’ என்று கைகொடுத்துவிட்டுப் போனார். உச்சி குளிர்ந்துபோனது ஜெஸ்ஸிகாவுக்கு.

எந்தத் துறையில் சாதிக்க வேண்டுமென்றாலும், அதற்கான அடிப்படைகளை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். படிப்பு முடிந்ததும், பல மேக்கப் ஸ்கூல்களுக்கு விண்ணப்பம் போட்டார் ஜெஸ்ஸிகா. எல்லா பள்ளிகளிலும் அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. `வாயில பிரஷ்ஷைப் பிடிச்சுக்கிட்டு மேக்கப் போடுறதா? அது சுகாதாரக் கேடு’ என்றன சில பள்ளிகள். ஒரு பள்ளியில் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாரானது... ஒரு நிபந்தனையோடு! மேக்கப் பயிற்சிக்கு `அவருடைய மாடலை அவரே அழைத்து வர வேண்டும்... தினமும்.’ அதுவும் சாத்தியப்படவில்லை. ஒரு பள்ளியில் அவர் கண்ணுக்கு எதிரிலேயே விண்ணப்பத்தைக் கிழித்துப் போட்டார்கள். உடன் வந்திருந்த அவர் சகோதரியைப் பார்த்து, `உன் தங்கச்சியை வேணும்னா சேர்த்துக்குறோம்’ என்றார்கள்.

18 வயது... அந்த வயதில் மிகப் பெரும் மனஅழுத்தத்துக்கு ஆளானார் ஜெஸ்ஸிகா. மேக்கப் உலகில் சாதிக்க வேண்டும் என்கிற வேட்கை அப்படியே கைநழுவிப் போய்விடுமோ என்கிற வேதனை அவரை அரித்தெடுத்தது. தானே மேக்கப் போடக் கற்றுக்கொள்வது என முடிவு செய்தார் ஜெஸ்ஸிகா. ஆனால், எப்படி? அதுதான் அவருக்குப் புரியாத புதிராக இருந்தது. வாயால் மேக்கப் போட சொல்லித் தருவதற்கு யாராவது ஆசிரியர் வருவாரா என்ன? அப்போதுதான் யூடியூபில் ஒரு மேக்கப் நிகழ்ச்சியைப் பார்த்தார். தேடத் தேட மேக்கப் கற்றுக்கொடுக்கும் பல வீடியோக்கள் அதில் கொட்டிக் கிடந்தன. அவற்றைப் பார்த்துப் பார்த்து கற்றுக்கொண்டார். கற்றுக்கொண்டதை தன் தங்கைக்குச் செய்து அழகு பார்த்தார். யூடியூபைச் செல்லமாக, `யூடியூப் பல்கலைக்கழகம்’ என்றுதான் அழைக்கிறார் ஜெஸ்ஸிகா. ஒருகட்டத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப்பிலிருந்து திருமணத்துக்கான மேக்கப் வரை அனைத்திலும் ஜெஸ்ஸிகா கில்லியாகிவிட்டார்.

விருப்பப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் இலவசமாக மேக்கப் போட்டார். வாய்மொழியாக அவருடைய திறமை அக்கம்பக்கத்தில் பரவியது. வாடிக்கையாளர்கள் சேர ஆரம்பித்தார்கள். புகழ் பரவ, தன் ஃபேஷன் ஷோவில் பங்கேற்பவர்களுக்கு மேக்கப் போடும் அளவுக்கு முன்னேறிவிட்டார் ஜெஸ்ஸிகா. `அவமானம், பள்ளிகளின் நிராகரிப்பு அனைத்தையும் தாண்டிய வெற்றி நிகழ்வு அது’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் அவர்.

ஜெஸ்ஸிகா ரூயிஸ்

 

வாயால், ஒருவருக்கு மேக்கப் போட்டுவிடுவது அத்தனை சாதாரண காரியமல்ல. வாடிக்கையாளருக்கும் அவருக்கும் வெறும் 3 இன்ச் இடைவெளிதான் இருக்கும். அவர் மனம் கோணாமல், சிறப்பாக ஒப்பனை செய்துவிட வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை அவர் தேடி வருவார். சவாலான, போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில், தன் மன உறுதியையும் திறமையையும் மட்டுமே நம்பி இறங்கியிருக்கிறார் ஜெஸ்ஸிகா. அவருடைய ஊக்கத்துக்கு மனமார ஒரு வாழ்த்துச் சொல்லலாம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

காபி கல்லீரலுக்கு நல்லதா? என்ன சொல்கிறது ஆய்வு?

மிதமான காபி அருந்துவது பாதுகாப்பானது என்றும், அதுபோல, ஒரு நாளைக்கு மூன்று, நான்கு கோப்பைகள் காபி அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது என்று, அண்மைய ஆய்வறிக்கை விவரித்துள்ளது. இது பி.எம்.ஜெ. சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரம், அதிகப்படியான காபிகளை கர்ப்பக் காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்வது உடல்நலத்திற்கு தீங்கானது, என்கிறது இந்த ஆய்வறிக்கை

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

னுஷுடன் நடித்த `எனை நோக்கி பாயும் தோட்டா’, `ஒருபக்க கதை’ என இரண்டு படங்கள் கமிட் ஆகி அதுவே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஏற்கெனவே பாலா இயக்கும் வர்மாவில் இவர்தான் ஹீரோயின் எனக் கிசுகிசுக்கிறார்கள். அதற்குள்ளாகவே இப்போது அடுத்த படத்தில் புக் ஆகியிருக்கிறார் மேகா ஆகாஷ். அதர்வா நடிக்கும் அடுத்த படத்தில் மேகாதான் ஹீரோயினாம்! மோஸ்ட் வான்டட்!

p36a_1511778600.jpg

சாய்னாவை சாம்பியனாக்கியவர் கோபிசந்த். அவர் வீட்டிலேயே ஒரு பாட்மின்டன் சாம்பியன் தயாராகிவிட்டார். அவர் மகள் காயத்ரி கோபிசந்த் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். காயத்ரிக்கு இப்போது வயது வெறும் 14தான். மகளின் வெற்றியைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவரை அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயார் செய்துகொண்டிருக்கிறார் கோபிசந்த்! புலிக்குப் பிறந்தது...!

ந்தியக் கப்பல்படையின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்  ஷுபாங்கி ஸ்வரூப். கப்பற்படைக் கமாண்டரின் மகளான ஷுபாங்கியைத்தவிர, அஸ்தா ஷேகல் என்ற டெல்லியைச் சேர்ந்த பெண்ணும், ரூபா என்ற பாண்டிச்சேரிப் பெண்ணும், சக்தி மாயா என்ற கேரளத்தைச் சேர்ந்தவரும் ஆபீஸர்களாகப் பயிற்சி பெற்றுப் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். வெல்கம் கேர்ள்ஸ்!

விரைவில் தமிழில் கால்பதிக்கவிருக்கிறது ‘கலர்ஸ் டிவி.’ இதற்காக ஆர்யாவை வைத்துப் புதுமையான சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தியில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் நடிகை ராக்கி சாவந்திற்கு சுயம்வரம் ஷோ நடத்தி மாப்பிள்ளை தேடியது போல. தமிழில் ஆர்யாவுக்கு மணமகள் தேடவிருக்கிறார்கள்! அப்பாடா... ஆர்யா செட்டில்டு!

p36b_1511778627.jpg

டுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக் கால்பந்துப்போட்டியில் கலந்துகொள்ளும் 32 அணிகள் இறுதியாகிவிட்டன. இந்தமுறை கத்துக்குட்டி அணிகளான மொராக்கோ, பனாமா தகுதிபெற்றுள்ளன. 2010-ல் ரன்னர் அப், 2014-ல் மூன்றாவது இடம் பிடித்த நெதர்லாந்து தகுதிச்சுற்றின் இரண்டாம் சுற்றுக்குக்கூட முன்னேறவில்லை. ஆனால் பெரிய ஷாக், இத்தாலி தகுதி பெறமுடியாமல் வெளியேற்றப்பட்டதுதான்! இதையடுத்து அந்த அணியின் முன்னணி வீரர்கள் பலரும் அணியைவிட்டு விலகியுள்ளனர். இத்தாலிக்கே அல்வா கொடுத்துட்டாங்களே! 

வதார் படத்தின் அடுத்த நான்கு பாகங்களை ஒட்டுமொத்தமாக இயக்கிக்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். 2020-ல்தான் இரண்டாம்பாகம் ரிலீஸ். சமீபத்திய பேட்டி ஒன்றில் `ஏன் இவ்வளவு நீண்டநாள் படப்பிடிப்பு’ என கேமரூனிடம் கேட்டபோது, ``இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடலுக்கடியில் நடப்பதுபோலப் படமாக்கப்படுவது பெரிய சவாலாக இருக்கிறது, இதற்காக நடிகர்களை ஆறுமாதங்கள் அன்டர்வாட்டரில் நடிப்பதற்காகப் பயிற்சி செய்யவைக்க வேண்டியிருந்தது. மோஷன் கேப்சரிலேயே புதுவிதத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் படமாக்கல் தாமதமாகிறது’’ என்று சொல்லியிருக்கிறார்! மாஸா வாங்கஜி!

p36d_1511778672.jpg

தீபிகா படுகோன் நடித்திருக்கும் ‘பத்மாவதி’ படம் தொடர்பான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வெளியாகுமா இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் இந்த சர்ச்சைக்குரிய கதையை 1963-லேயே தமிழில் திரைப்படமாக்கி இருக்கிறது கோடம்பாக்கம்! `சித்தூர் ராணி பத்மினி’ என்கிற இந்தப்படத்தில் ராஜா ராணாவாக சிவாஜி கணேசன் நடிக்க, ராணி பத்மினியாக வைஜெயந்தி மாலா நடித்திருந்தார். டெல்லி மன்னன் அலாவுதின் கில்ஜியாக மிரட்டியவர் எம்.என். நம்பியார். இதுவரை வேறு எந்த மொழியிலும் ராணி பத்மினியின் கதை வெளிவந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது! நம்ம முன்னோர்கள்னாலே கெத்துதான்!

p36e_1511778695.jpg

டிகராகிவிட்டார் கெளதம் வாசுதேவ் மேனன். `கோலி சோடா-2’ ல் வில்லனாக நடித்துக்கொண்டிருப்பவர், அடுத்ததாக `தீவிரம்’ என்கிற படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் அவருக்குக் காவல்துறை அதிகாரி வேடமாம். ஆல் தி பெஸ்ட் கெளதம்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இராக்கில் பிரபலமாகி வரும் ”பைக்கர்ஸ் குழு”

இராக்கில் மோட்டார் சைக்கிள்கள், விளையாட்டை விட தற்கொலை குண்டுகளாக பயன்படுத்தப்பட்டதுதான் அதிகம், என்ற கருத்து உள்ளது. அந்த எண்ணத்தை மாற்றும் முனைப்புடன், "இராக் பைக்கர்ஸ்" மோட்டார் சைக்கிள் ஆர்வலர் குழு ஒன்று, தங்களின் தேசிய கொடியை வாகனங்களில் கட்டிக் கொண்டு, நாடு முழுவதும் பயணம் செய்து ஆக்கப்பூர்வமாக ஊக்கமளித்து வருகிறது.

  • தொடங்கியவர்

இவான்கா டிரம்ப் மற்றும் மோடியை வரவேற்ற 'மித்ரா' ரோபோவை உருவாக்கிய தமிழன்! #VikatanExclusive

 

உலகத் தொழில்முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் (முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட) உருவான மித்ரா எனும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோதான் இவான்கா ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்றது. பல அமெரிக்க, இந்திய அதிகாரிகளுக்கே இடமில்லாத மேடையில் கம்பீரமாக சிறப்பு விருந்தினர்களோடு மேடையை வலம் வந்தது மித்ரா. 

மித்ரா ரோபோ

 

மித்ரா வாடிக்கையாளர்களோடு உரையாடும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஓர் இந்திய ரோபோ. இந்த ரோபோவை தயாரித்த இன்வென்டோ நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். இன்வென்டோ நிறுவனத்தின் மித்ரா ரோபோவுக்கான விற்பனை பிரிவு தலைவர் கவுந்தின்யா பன்யம் பேசுகையில்,

''இந்த ரோபோ இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ. எங்கள் நிறுவனத்தின் சிஇஓ பாலாஜி விஸ்வநாதன்தான் இந்த ரோபோ உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். திருச்சியைச் சேர்ந்த இவர் மதுரை தியாகராஜ கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தவர். யுனிவர்சிட்டி ஆஃப் மரிலாண்டில் செயற்கை நுண்ணறிவு பற்றியும், பாப்சன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும் படித்தவர். ஆரம்பக் காலத்தில் இஸ்ரோவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுடன் டிஆர்டிஓ-வில் பணியாற்றியவர். ரோபோட்டிக்ஸ் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உருவாக்கியதுதான் இன்வென்டோ நிறுவனம். மித்ரா வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்புகொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. வங்கிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கி அசத்துகிறது. கனரா வங்கி மற்றும் பெங்களூரு PVR சினிமாஸ் போன்ற இடங்களில் தற்போது இந்த ரோபோ பயன்பாட்டில் உள்ளது. 

மித்ரா ரோபோ

முழுக்க முழுக்க ஹியுமனாய்டு ரோபோவாக வடிவமைக்கப்பட்டுள்ள மித்ரா, முகத்தை வைத்து ஒருவரை அடையாளம் காணுவது, குரல் மூலம் அடையாளம் காணுவது போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோவின் தானியங்கி நகரும் அமைப்பும், கமென்டுகள் மூலம் ஆப்பரேட் செய்யும் வசதியும் இதன் தனித்தன்மைகளாகக் கருதப்படுகிறது. இந்த ரோபோவை மிகப்பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நாங்கள் உலகத் தொழில்முனைவோர் மாநாட்டை நடத்தும் ஈவன்ட் மேனஜர்களோடு தொடர்பில் இருந்தோம். அவர்களிடம் இந்த ஐடியாவைக் கூறியதும் மித்ராவின் அறிமுகம் பிரதமர் முன் நடைபெற்றது. 

ஆரம்பத்தில் எங்களது சவால் என்பது இதற்கான சந்தையை இந்தியாவில் உருவாக்குவதாகத்தான் இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு இது கஸ்டமைஸ்டு தயாரிப்பாக இருக்கும். இதனை விற்பனைக்கும், வாடகைக்கும் வழங்குகிறோம். வாடிக்கையாளர்களின் தேவையைப் பொருத்து கட்டணம் அமையும். வாடகைக்கு 30 ஆயிரம் ரூபாயிலிருந்து இந்த ரோபோ கிடைக்கிறது. பிரதமரின் டிவிட்டர் பக்கத்தில் எங்கள் ரோபோவுடன் பிரதமர் இருந்த புகைப்படம் இடம்பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். மித்ரா இந்திய ரோபோ சந்தையில் புதிய சாதனைகளைப் படைக்கும்" என்றார்.

 

எந்திரன் படத்தில் வருவது போல இந்த ரோபோ நன்றாகப் புகைப்படம் எடுக்கும், டிஜேயாக செயல்படும், ட்விட் செய்யும் என்கிறார்கள் இன்வென்டோ அணியினர். தற்போது பெரிய திருமணங்களிலும், பிறந்தநாள் விழாக்களிலும் மித்ரா இடம்பெறுகிறதாம். எங்கயாவது டூர் போய் செல்ஃபி எடுக்கக் கூட ஆள் இல்லன்னா கூட்டிட்டு போலாமா என்று கேட்டால். ”பீஸ் ப்ரோ” எனக் கூடவே வரும் அளவுக்கு மித்ரா ஸ்மார்ட். புதிய மனிதா வீட்டுக்கு வா!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இலங்கையின் மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு)

இலங்கையின் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் புயல் காற்று மற்றும் மழை வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை புகைப்படங்களாக வழங்குகிறோம்.

இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு) இலங்கை மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு)

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

நகைச்சுவை டாக்டர்!

 

kalaivanarjpg

திரைப்படங்களில் கலைவாணர்

kalaivanar%201jpg

கலைவாணர்

 
 

இந்தக் காலம், அந்தக் காலம் என்றில்லாமல் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான கருத்துகளைத் தருவதுதான், காலங்கள் கடந்தும் நிற்கும். அப்படித் தருபவரை, தந்தவரை... காலம் உள்ளவரைக்கும் பேசிக்கொண்டே இருப்பார்கள்; புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். அவற்றுக்குச் சொந்தக்காரர்.. என்.எஸ்.கிருஷ்ணன்.

தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து ஆளுமையையும் வள்ளல் தன்மையையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம், இன்னமும். அதற்கும் முன்னதாக மூன்றெழுத்துக்காரராகவும் மிகப்பெரிய வள்ளலாகவும் திகழ்ந்தவர் என்.எஸ்.கே.

இந்தியாவின் கடைக்கோடி அல்லது இந்தியாவின் ஆரம்பமுனை என்று சொல்லும் குமரி நாகர்கோவிலில் பிறந்தவர் என்.எஸ்.கே. இந்த வேலைதான் என்றில்லாமல் எல்லா வேலைகளையும் பார்த்தபடி சிறுவயதைக் கழித்தார். இயல்பாகவே வந்த பாட்டும் பேச்சும், வில்லுப்பாட்டுக் கலைஞராக இவரை முதலில் அடையாளம் காட்டியது. அந்த வில்லுப்பாட்டில்... தேசப்பற்று, ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவை வலியுறுத்தப்பட்டன. ஆனால், தேசப்பற்றையும் ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் சொன்னால் சிரித்துவிடுவார்களே... என்று யோசித்த என்.எஸ்.கே. ‘நாமளே சிரிக்கச் சிரிக்கச் சொல்லிப்புடுவோம்’ என்று நகைச்சுவையாகவே அனைத்தையும் சொல்லத் தொடங்கினார்.

இன்றைக்கு நகைச்சுவைப் பஞ்சம், நகைச்சுவையே இல்லை, மனதில் நிற்கும்படியாகவோ நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியாகவோ காமெடி இல்லை என்று அலுத்துச் சலித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அக்மார்க் காமெடிக்கு இன்றைக்கும் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார் என்.எஸ்.கே.

ஒருமுறை, முக்கியமான பிரபலத்தின் வீட்டுக்கு கலைவாணரும் அவர் மனைவி டி.ஏ.மதுரமும்  சென்றிருந்தனர். அவர்களை வரவேற்றவர்கள், ‘என்ன சாப்பிடுறீங்க... காபியா, டீயா, கூல்டிரிங்க்ஸா, ஹார்லிக்ஸா...’ என்று அடுக்கிக் கொண்டே போக... கலைவாணர் சொன்னார்... ‘டீயே மதுரம்’ என்று! அந்த வீடே குலுங்கிச் குலுங்கிச் சிரித்தது.

சினிமாவுக்கான கதை பண்ணுவதில் கில்லாடி. அப்படிக் கதை பண்ணினால் அதில் சமூக அவலங்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் இருக்கும். பெண்ணடிமைத்தனத்தை குத்திக் காட்டுவார். விஞ்ஞான வளர்ச்சியை ஏற்க வேண்டி வலியுறுத்துவார். அதேசமயம்... தேசத்தின் மீது பக்தி தேவை என்பதை உணர்த்துவார். நடிப்பார். வசனம் எழுதுவார். பாடுவார் என பன்முகங்கள் கொண்ட வித்தகர் என்.எஸ்.கிருஷ்ணன்.

குதிரை வண்டியில் பயணம் செய்தபடி ஒரு விழாவுக்குச் சென்றார். அங்கே பேசும்போது, ‘குதிரைவண்டிக்காரர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஏன்னா... அவங்கதான் ‘முன்னுக்கு வா, முன்னுக்கு வா’ன்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க  என்றார். விழா நடத்தியவர்கள் உணர்ந்து சிரித்த சிரிப்பு, அந்த ஊருக்கு கலைவாணர் வந்திருப்பதற்கு கட்டியம் கூறியது போல் இருந்தது.

காந்திஜியின் தனிமனித ஒழுக்கம் இவரை ஈர்த்த, பாதித்த ஒன்று. அதனால் பக்தியைப் பரப்பி வந்த வில்லுப்பாட்டுக் காலத்தில், காந்தியின் தேசியத்தையும் ஒழுக்கத்தையும் பரப்பினார் என்.எஸ்.கே. 1949-ம் வருடம், நாகர்கோவிலில், காந்தி நினைவு ஸ்தூபியை, தன் சொந்த செலவில் இருந்து, கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் செலவில் எழுப்பினார். விழாவுக்கு அப்போதைய முதல்வர் குமாரசாமி ராஜாவையும் பேரறிஞர் அண்ணாவையும் இன்னும் பலரையும் அழைத்திருந்தார். அண்ணாவின் மீது பற்று கொண்டிருந்ததால், அவரின் பேச்சை, நிறைய ஊர்களுக்கு அழைத்துச் சென்று பரப்பினார். இதனால் ஏற்பட்ட சலசலப்பைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை. இங்கே இன்னொரு விஷயம்... ஆசியாவிலேயே காந்திஜிக்கு, நினைவு ஸ்தூபி அமைத்த முதல் மனிதர் கலைவாணர் தான்!

ஆன்மிகத்துக்காக நந்தனார் என்று நாடகம் போட்ட காலம். இவர் கிந்தனார் என்று நாடகம் போட்டார். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வாலிபன், படிப்பதற்காக சென்னைக்குச் செல்வான். ‘நீயெல்லாம் ஆடுமாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று ஆசிரியர் அவனைத் திட்டி அனுப்புவார். ஆனால் அவனோ, நன்றாகப் படித்து, பள்ளிக்கல்வித் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை கிடைத்து, அதே ஊருக்கு, அவன் படித்த பள்ளிக்கே வருவார். ரயில்வே ஸ்டேஷனில் அந்த ஆசிரியர், அப்படியே தன் மாணவனை நெஞ்சாரத் தழுவிக் கொள்வார். கல்வியின் முக்கியத்துவத்தையும் தாழ்ந்ததாகச் சொல்வோர், உயர்ந்தோராவதற்குக் கல்விதான் அடிப்படை என்பதையும் அப்போதே வலியுறுத்தி கதை பண்ணியிருப்பார். அதேபோல், காந்தி மகான், வள்ளுவம், புத்தன் சரித்திரம் என இவரின் நாடகங்கள் அனைத்துமே வீரியமானவை; விதைகளாக இருந்து வளர்ந்தவை.

’கலைவாணரின் கருத்துகளைக் கேட்டு, உள்வாங்கி, பல்லாயிரக்கணக்கானோர் இன்றைக்கு முன்னுக்கு வந்திருக்கிறார்கள் என்று அண்ணா, இவரைப் புகழ்ந்திருக்கிறார். நண்பரும் ஒருவகையில் உறவினருமான, ப.ஜீவானந்தம் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தார் கலைவாணர். ஆனாலும் அண்ணன் என்று கலைவாணர் ஜீவானந்தத்தை அழைத்தார்.

சென்னை மயிலாப்பூரில் இருந்த நடராஜன் கல்விக்கழகம் எனும் அமைப்பு, இவருக்கு கலைவாணர் எனும் பட்டம் சூட்டி, இன்றைக்கும் சரித்திரத்தில் அந்த அமைப்பு இடம்பிடித்துவிட்டது. பம்மல் சம்பந்த முதலியார் இந்தப் பட்டத்தை வழங்கினார்.

சேலம், நாமக்கல் அருகே உள்ள தாரமங்கலத்தில் அண்ணாவின் படத்தைத் திறந்து வைத்ததுதான் கலைவாணரின் கடைசி நிகழ்ச்சி. அதேபோல், கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்ததுதான் அண்ணாவின் கடைசி நிகழ்ச்சி.

அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்த மண்டபத்தை, விரிவுபடுத்தி, புதுப்பித்து, பிரமாண்ட மண்டபமாக்கி, அதற்கு கலைவாணர் அரங்கம் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி. அதேபோல், நாகர்கோவிலில் கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர்.

கூத்தாடிகள், பபூன்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட நகைச்சுவை நடிகர்களுக்கு இன்றைக்கு மிகப்பெரிய அங்கீகாரமும் கெளரவமும் மரியாதையும் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவரே கலைவாணர்தான். இவர்தான்... தன் இயல்பாலும் இயல்பான நகைச்சுவையாலும் மக்களிடத்தில் அப்படியொரு பெயரைச் சம்பாதித்தார். இந்த இடம்... இன்று வரை திரையுலகில் நிரப்பப்படவே இல்லை.

அதேபோல், என்.எஸ்.கே. வீட்டில் எப்போதும் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும். பந்தி பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒருநாளைக்கு, குறைந்தபட்சம் ஐம்பது எண்பது பேராவது சாப்பிடுவார்களாம்.

பன்முக வித்தகர், சமூக, பொருளாதார, மனித நேயமிக்க கருத்துகளைப் பரப்பியவர் என்பதையெல்லாம் கடந்து தர்மசிந்தனையாளர் அவர். நல்ல ஆத்மா என்று இவரைப் புகழ்கிறார்கள்.

‘வள்ளல்’ எனும் குணத்தை வளர்க்க முடியாது. அது... பிறவிக்குணம். இந்தப் பிறவி... கலைவாணர் எனும் வள்ளலை, பண்பாளரை, மனித நேயமிக்க நல்லாத்மாவை நமக்கு வழங்கியிருக்கிறது. அதேபோல், தன் கலையின் மூலமாகவும் ஊருக்கு நல்லது சொன்ன நாகரீகக் கோமாளி அவர். அதனால்தான் அவர் இன்றைக்கும்... என்றைக்கும் கலைவாணர்!

கலைவாணரின் பிறந்த நாள் (நவம்பர் 29-ம் தேதி) இன்று. அந்த மகா கலைஞனை, நல்ல மனிதனைப் போற்றுவோம்; வணங்குவோம்; அவர் வழி நடப்போம்!

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரு நபரின் வயிற்றிலிருந்து 263 நாணயங்கள், 100 ஆணிகள் உட்பட 7 கிலோகிராம் உலோகங்கள் மீட்பு

இந்­தி­யாவைச் சேர்ந்த நபர் ஒரு­வரின் வயிற்­றி­லி­ருந்து 263 நாண­யங்கள், 100 ஆணிகள் மற்றும் பல உலோ­கப்­பொ­ருட்­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர்.

coins-2.jpgமத்­திய பிர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த 35 வய­தான மக்சுத் கான் எனும் நபரின் வயிற்­றி­லி­ருந்தே இப்­பொ­ருட்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. இவர் நாண­யங்கள் மற்றும் உலோ­கங்­களை உட்­கொள்­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­தவர் என மக்சுத் கானின் குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

மத்­திய பிர­தே­சத்தின் சட்னா நக­ரி­லுள்ள சஞ்சய் காந்தி வைத்­தி­ய­சா­லையில் இச்­சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. அப்­போது மக்சுத் கானின் வயிற்­றி­லி­ருந்து 263 நாண­யங்கள், 100 ஆணிகள், பல சவர அல­குகள் (பிளேட்) ஆகி­யன அகற்­றப்­பட்­டன. இவற்றின் மொத்த எடை சுமார் 7 கிலோ­கி­ராம்கள் ஆகும்.

இச்­சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்ட மருத்­துவக் குழா­முக்கு தலைமை தாங்­கிய டாக்டர் பிரியங்க் சர்மா இது தொடர்­பாக கூறு­கையில்,  கடு­மை­யான வயிற்று வலி கார­ண­மாக, அவர் வைத்­தி­ய ­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

அவரை நாம் பரி­சோ­தித்­த­போது நாண­யங்கள், ஆணிகள் ஆகி­யன அவரின் வயிற்­றி­லி­ருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்தோம். எனது வாழ்க்­கையில் இவ்­வா­றான ஒரு நோயா­ளியைக் கண்­டமை இதுவே முதல் தடவை” என்றார்.

சார­தி­யாக பணி­யாற்­றிய மக்சுத் கான், தனது வாடிக்­கை­யா­ளர்கள் கொடுக்கும் நாண­யங்­களை விழுங்கி வந்­த­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். மன அழுத்­தத்­துக்­குள்­ளான நிலையில் மக்சுத் கான் இவ்வாறு நாணயங்களை விழுங்கியிருக்கலாம் என தாம் எண்ணுவதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

coins.jpg

http://metronews.lk

  • தொடங்கியவர்
‘காதல் வாழ்க்கையே மேன்மையானது’
 

image_24001cc49f.jpgஅழகான அப்பாவி இளைஞன் அவன். எல்லோரும்தான் காதலிக்கிறார்களே, நானும் ஏன் காதலிக்கக்கூடாது என்ற ஆசையால் பல இளம் பெண்கள் பின்னால் சுற்றிப் பார்த்தான். ஒன்றும் பலிக்கவில்லை. வெறுத்துப் போனான்.

இறுதியில் தாய், தந்தை சொன்ன பெண்ணையே மணம் முடிக்கச் சம்மதித்தான். மணமேடையில்தான் மணப்பெண்ணைப் பார்த்தவன், அதிர்ந்து போனான். அத்தனை கொள்ளை அழகு தேவதை அவள்.

அன்று தனிமையில் இருக்கும்போது, மணமகளிடம் ஆர்வமாகக் கேட்டான், “என்னை எதற்கு மணம் செய்யச் சம்மதித்தாய்” என்றான். அதற்கு அவளோ, “அம்மா அப்பா எனக்கு நல்லதைத்தான் செய்வார்கள். அதனால் சம்மதித்துவிட்டேன்” என்றாள். அதற்கு அவன், “என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா” எனக் கேட்க அவள், வெட்கத்துடன் தலை குனிந்தாள். காதல் இனிமையானது; காதல் வாழ்க்கையே மேன்மையானது. 

  • தொடங்கியவர்

உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1 #WorldAidsDay

 
 

டிசம்பர் 1-ம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தின’மாக எதிர்கொள்கிறோம். 

எய்ட்ஸ் தினம்

 
 

1988-ம் ஆண்டில் இருந்து உலக சுகாதார நிறுவனம், டிசம்பர் 1-ம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தினம்’ என அனுசரித்து வருகிறது. `உலக அளவில் 3 கோடியே 67 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி பாதிப்போடு வாழ்கிறார்கள்; அவர்களில் 18 லட்சம் பேர் குழந்தைகள்’ என்கிறது, 2015-ம் ஆண்டுக்கான ஒரு புள்ளிவிவரம். அதே 2015-ம் ஆண்டில்தான் 11 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி இறந்துபோயிருக்கிறார்கள்.

வருவாயில் பின்தங்கிய மற்றும் நடுத்தர நாடுகளில்தான் பெரும்பான்மையானோர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு, இந்தியாவில் ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 21 லட்சம்; எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் இறந்தவர்கள் 68,000 பேர். இதில் கொடுமை என்னவென்றால், உலகில், ஹெச்.ஐ.வி பாதிப்போடு வாழ்கிறவர்களில் 40 சதவிகிதத்தினருக்கு, தங்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பதே தெரியாது என்பதுதான்.

 

ஒரு தினத்தை நினைவுபடுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும். மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றையச் சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்பு உணர்வு. இந்த ஆண்டு, இந்த தினத்துக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டிருப்பது, "ஆரோக்கியத்துக்கான உரிமை” என்பதுதான். முறையான விழிப்பு உணர்வுடன் செயல்படும்போது கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.