Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
கைதி மீது வந்த காதல்- திருமணத்தில் நிறைவு
 

image_3086bc3917.jpgசிறைச்சாலை வரலாற்றிலே விசித்திரமான திருமணம் ஒன்று இன்று(7) மெகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

30 வருடம் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள  39 வயதான கைதி ஒருவரை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பெண் உறுப்பினர் ஒருவர் இன்று சிறைச்சாலைக்குள் திருமணம் செய்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான சமீலா என்ற குறித்த பெண் உறுப்பினர் 3 வருட போராட்டத்துக்குப் பின்னர் கைதியான தனது காதலனை இன்று கரம் பிடித்துள்ளார்.

தனது காதலனின் விடுதலைக்காக தான் போராட வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,சிறைச்சாலை அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்துவதாகவும், அவரது விடுதலை தொடர்பில் போராட தனக்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும்,முடிந்தால் திருமண சான்றிதழைக் காட்டுமாறும் அதிகாரிகள் தனக்கு கூறியதாகவும் சமீலா தெரிவித்துள்ளார்.

image_58e27402f8.jpg

இதனை சவாலாக ஏற்றுக்கொண்டு குறித்த பந்துல என்ற கைதியை திருமணம் முடிக்க சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரிய போதும் தமது திருமணத்திற்காக கடந்த 3 வருடங்கள் போராடி இறுதியில் சிறைச்சாலைகள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனை சந்தித்துள்ளார்.

இறுதியில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தமது திருமணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துக்கொடுக்குமாறு அமைச்சர் கடிதம் மூலம் உத்தரவிட்டதையடுத்து இன்று தமது திருமணம் நடைபெற்றதாக சமீலா தெரிவித்துள்ளார்.

எனினும் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது தனது உறவினர்களுக்கோ,தன்னை அலங்கரிக்க வந்த பெண்ணிற்கோ ஊடகவியலாளர்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. என்றும் தனது திருமணத்தை புகைப்படமெடுத்த திருமண பதிவாளரை குறித்த புகைப்படத்தை அழிக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் சமீலா தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் போதும் தனது கணவருக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது அணிவிக்கப்படும் ஆடையையே அணிய அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சிறையில் உள்ளவர்களும் மனிதர்களே என வாசகம் சிறைச்சாலை சுவர்களில் எழுதப்பட்டுள்ள நிலையில் அதற்கு கீழே சிறையில் உள்ள அதிகாரிகள் மனிதர்களல்ல என எழுத வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தன்னுடைய கணவன் வெளிக்கடையில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றை நேரில் கண்ட சாட்சி என்றும்,இதன் காரணமாகவே அவர் சிறைச்சாலையில் அதிகம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும்,அடிக்கடி அநுராதபுரம்,குருவிட்ட சிறைகளுக்கு மாற்றப்படுவதாகவும்,அநுராதபுரத்திலிருந்து மெகசீன் சிறைக்கு தனது கணவர் பஸ்ஸில் அழைத்துவரப்படும் போது பஸ்ஸில் அவருக்கு இருப்பதற்கு ஆசனம் கூட வழங்கப்படுவதில்லை என்றும் சமீலா தனது உள்ளக்குமுறல்களை கொட்டியுள்ளார்.

image_1c27d5c6e6.jpg

http://www.tamilmirror.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

டிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, பவன் கல்யாணுடன் `அஞ்ஞாதவாசி’, சூர்யாவுடன் `தானா சேர்ந்த கூட்டம்’ எனப் பெரிய ஹீரோக்கள் பெரிய படங்கள் என அடுத்தடுத்து நடித்துக்கொண்டிருக்கும் கீர்த்தி, பைரவாவுக்குப் பிறகு மீண்டும் விஜய்யோடு ஜோடி சேர்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் விஜய் படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் ஹீரோயின். வர்லாம் வர்லாம் வா!

p35a_1512457874.jpg

ஹைதராபாத்தில் நடந்துமுடிந்த உலகளாவிய தொழில்முனைவோர் மாநாட்டின் ஹைலைட்டே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகளும், அரசியல் ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப்தான். ஒட்டுமொத்த இந்தியாவும், இவான்காவைக் கவனிக்கத் தொடங்கிவிட்டது. சமூக வலைதளங்களில், `கவர்ச்சியானவர், அழகானவர், சக்திவாய்ந்தவர், அவர் கலந்துகொண்டதால் ஹாலிவுட்டும் அரசியலும் கைகோத்ததுபோல் இருந்தது’ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். இவான்கா பக்கம் சாஞ்சுட்டாய்ங்க!

p35b_1512457893.jpg

`பத்மாவதி’ பட சர்ச்சைகளுக்கு நடுவே இன்னொரு படமும் திரையிடலுக்காகத் திண்டாடிக் கொண்டிருந்தது. அந்தப்படம் சனல் சசிதரன் இயக்கிய `செக்ஸி துர்கா’. ‘ஒளிவு திவசத்தே களி’ இயக்குநரின் அடுத்த படம். ஏற்கெனவே பல்வேறு சர்வதேசப் படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைக் குவித்த படம் இது. இந்த ஆண்டு கோவா உலகத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், படத்தின் பெயரில் இந்துக்கடவுளான துர்காவோடு செக்ஸி இருப்பதால் அதைத் திரையிடக் கூடாது என இந்து அமைப்பினர் தடைகோரினர். திரையிடலுக்குத் தடையும் விதிக்கப்பட்டது. பிரச்னை நீதிமன்றம் செல்ல, நீதிமன்றம், திரைப்பட விழாவில் தாராளமாகத் திரையிடலாம் என அனுமதி கொடுத்தது. ஆனால், இப்போது சென்சார் போர்டு படத்திற்குக் கொடுத்த சான்றிதழைத் திரும்பப் பெற்றுள்ளது. சினிமானாலே பஞ்சாயத்துதான்!

ந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை திரைப்படமாகிறது. `சூர்மா’ என்கிற இந்தப்படத்தில் பஞ்சாப் நடிகர் தில்ஜித் நாயகனாகவும் டாப்ஸி நாயகியாகவும் நடிக்கின்றனர். 2006 உலகக் கோப்பையின்போது ரயில்பயணம் ஒன்றில் சந்தீப் சிங்கிற்கு எதிர்பாராதவிதமாக குண்டடிபட்டது. அதனால், அவரால் உலகக் கோப்பையில் கலந்துகொள்ள முடியாமல் போனது, வலிமிகுந்த அந்தக் காலகட்டம்தான் படத்தின் கரு! பயோபிக்தான் ஹிட்டு!

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக அறிமுகமாகும் படம் `தடக்.’ மராத்தியில் வெளியாகி இந்தியா முழுக்க சக்கைப்போடு போட்ட ‘சாய்ரட்’ படத்தின் இந்தி ரீமேக் இது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கோடு சூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ஷசாங்க் கெய்தாய். ஸ்ரீதேவியின் வாரிசுக்கு ஒட்டுமொத்த பாலிவுட்டும் வாழ்த்து மழை பொழிந்துகொண்டிருக்கிறது. கலக்கு கண்ணு!

p35c_1512457912.jpg

யக்குநராகும் ஆசை இருக்கிறதாம் ஆண்ட்ரியாவுக்கு! ``ரொம்பநாள் திட்டமெல்லாம் இல்லை. திடீரெனத் தோன்றியதுதான். சீக்கிரமே இயக்கப்போகிறேன். ஃபெமினிஸம், கேபிடலிஸம் என எந்த இஸங்களும் இல்லாத ஸ்வீட் அண்ட் ஹேப்பி எண்டிங் ரொமான்டிக் காமெடி!’’ என்கிறார் ஸ்வீட்டி. வெல்கம் ஏஞ்சல்.

p35d_1512457997.jpg

றைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பாக எழுதிய கடைசிப் பாடல் இன்னும் வெளியாகவில்லை. ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் புதிய படத்தில்தான் முத்துக்குமாரின் கடைசிப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. இசைப்புயலின் மரியாதை!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ‘கலர்ஸ் சேனல்’ கல்யாண வேட்டைக்கு முன்  மூன்றே மாதத்தில் இந்தப்படம் டேக் ஆஃப் ஆகி லேண்ட் ஆகிவிடுமாம்.  ‘பக்கா ஸ்கிரிப்ட். சிம்பிள் பட்ஜெட். செம கல்ட் மூவி மச்சி!’ என, பார்ப்பவர்கள் எல்லோரிடமும் கண்ணடித்துச் சிரிக்கிறார்  ஆர்யா. சாயிஷா கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கும் இந்தப்படத்தின் இயக்குநர் யார் தெரியுமோ..? `ஹரஹரமகாதேவகி’ புகழ்  சந்தோஷ் ஜெயக்குமார். அச்சச்சோ கூட்டணி.

மெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் மிராபாய் சானு. ரியோ ஒலிம்பிக்கில் சந்தித்த தோல்விக்குப் பிறகு தொய்வாக இருந்தவருக்கு இந்தப் பதக்கம் பெரிய ஊக்கம் கொடுத்திருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு முன்பு மல்லேஸ்வரிதான் கடைசியாக உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காகப் பதக்கம் வென்றிருந்தார். அவருக்குப் பிறகு மிராதான். வெயிட்டு வெயிட்டு!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இந்த ஆண்டின் சிறந்த நபர்: செல்ஃபி குரங்கு நரூட்டோ

 
7TH-SELFIE1jpg

வித்தியாசமான புகைப்படங்கள் எப்போதுமே புகைப்படக் கலைஞரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்ந்துவிடும். ஆனால், அப்படியே தலைகீழாக ஒரு சம்பவம் நடந்தது. ஒரு புகைப்படம் அந்த புகைப்படக்காரரைவிட புகைப்படத்தில் இருந்தவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

புகழின் உச்சிக்கு சென்றவர் வேறு யாருமில்லை ஒரு குரங்கு. செல்ஃபியில் அழகாக புன்னகை பூத்திருந்த கருங்குரங்கு. கடந்த 2011ம் ஆம் ஆண்டு இந்தோனேசிய ஜாவா காடுகளில் டேவிட் ஸ்லேட்டரின் கேமராவால் பதிவாகியிருந்த கருங்குரங்கு ஒன்றின் செல்ஃபி புகைப்படமே அது.

ஸ்லேட்டர் வைத்திருந்த தானியங்கி கேமராவை நரூட்டோ தற்செயலாக இயக்க அதில் அதன் சிரித்த முகம் பதிவானது. டேவிட் ஸ்லேட்டர் கேமராவில் பதிந்த அந்த செல்ஃபி புகைப்படம் 5 கோடிக்கும் அதிகமானோரால் பகிரப்பட்டது. பின்னாளில் இந்த புகைப்படம் சார்ந்த காப்புரிமை பிரச்சினைகள் சில எழுந்து ஓய்ந்தன.

தற்போது அந்த செல்ஃபி குரங்கு மீண்டும் பிரபலமாகியிருக்கிறது. காரணம், பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பின் இந்த ஆண்டுக்கான (2017-க்கான) சிறந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதே

இது குறித்து பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள விளக்கத்தில், நரூட்டோ என்ற அந்த கருங்குரங்கை நாங்கள் கவுரவித்திருக்கிறோம். அதன் வெகுளித்தனமான சிரிப்பு, நரூட்டோ ஏதோ 'ஒன்றல்ல' யாரோ 'ஒருவர்' என உணரவைத்தது. அதற்காகவே நரூட்டோவை இந்த ஆண்டுக்கான பீட்டாவின் சிறந்த நபராக தேர்ந்தெடுத்துள்ளோம், எனத் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

“கணவருடன் சண்டை வரும்!” இவான்கா ட்ரம்பை எச்சரிக்கும் யூ-டியூப் ஜோதிடர்

 
 

இவான்கா ட்ரம்ப்

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிக்கும், டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும், 7வது இடத்துல சனி பாக்குறதுனால இந்தியா சனி கிரகத்துக்கு ராக்கெட் விடும்னு ஜோதிடர்களை அதிகம் பார்க்க முடியும். அப்படி ஒரு ஜோதிடர்தான் இப்போது இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப் பற்றி கணித்து மாஸ் காட்டியுள்ளார். ஒரு கரும்பலகையில் கட்டம் போட்டு இவான்கா வாழ்க்கையைப் பற்றி கணித்துச் சொல்லி இணையத்தில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

 

வேணு சுவாமி எனும் ஹைதராபாத் ஜோதிடர் பிரபலங்களைக் கணிப்பதில் நிபுணராம். குறிப்பாகப் பெண் பிரபலங்களுக்கு பல ஜோதிட கணிப்புகளை வழங்கி தன் யூ-டியூப் சேனலில் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வரிசையில் இவரது கையில் கிடைத்திருக்கும் தற்போதைய சென்சேஷன் ட்ரம்ப் மகள் இவான்கா. 

இவாங்கா ட்ரம்ப்பின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை வைத்து அவருடைய எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லி இருக்கின்றார். 

ஒரு வீடியோவில் நல்ல மஞ்சள் வேட்டி – சட்டை சகிதம், ஒரு கரும்பலகையில் இவான்காவின் ஜாதகத்தை வரைந்து கட்டம் கட்டி சொல்கிறார். ட்ரம்புக்கும் இவான்காவுக்குமான உறவு, அவரது தந்தையின் திருமணங்கள், இவான்காவின் மண வாழ்க்கை, குழந்தைகள், பொதுவெளி, உடல்நலம் என எல்லாப் பிரிவிலும் இவான்கா ஜாதகத்தை எடுத்து அலசியிருக்கிறார். 

சில வியக்கத்தக்க, ஆச்சர்யமான சற்று அதிர்ச்சியான கணிப்புகளைத் தருகிறார். அவற்றில் சில 

* அவருடைய வேலைபளு காரணமாக அவருக்கு முதுகுவலி ஏற்படும். அதிக பயணம் மேற்கொள்வார். 

* தம்பதியர் மத்தியில் சலசலப்புகள் ஏற்படும். திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2021இல் சில பிரச்னைகள் ஏற்படும். அதனால் இவான்கா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 2009ம் ஆண்டு ட்ரம்ப் மகளுக்குத் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

* ட்ரம்ப் அதிபராக இவான்காவின் ஜாதகம்தான் காரணம் இல்லையென்றால் ட்ரம்ப் அதிபராகவே ஆகியிருக்கமாட்டார் என்கிறார்.

இதற்கு முன்பு, இவர் நாகசைதன்யா – சமந்தா திருமணம், எதிர்கால தெலுங்கு முதலமைச்சர்கள், அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் சர்ச்சை, ரேவந்த் ரெட்டியின் அரசியல் பிரவேசம் என்று கணிக்க முடியாத பல செய்திகளைக் கணித்துக் கூறியவராம்.

இவான்கா ட்ரம்ப்பின் ஹைதராபாத் வருகைக்குப் பிறகு, அவருடைய ஜாதகம் குறித்து ஆழமான ஆராய்ச்சிகளைச் செய்து இந்தக் கணிப்புகளைக் கூறியுள்ளாராம்.

 

 

 

இவான்கா ட்ரம்ப்புக்கு இதெல்லாம் தெரியுமா பாஸ் என்று இணையத்தில் ஜோதிடருக்கு பதில்கள் வந்தாலும், இவரது வீடியோக்கள் வைரல் ரகம்தான். தேடிக் கண்டுபிடித்து இவரை தொடர்பு கொண்டால் ஒரு ஜோதிடம் கணித்துச் சொல்ல நான்காயிரம் என்கிறார் இந்த ட்ரெண்டிங் ஜோதிடர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வெறுங்காலுடன் ஓடுவதால் ஏதும் நன்மைகள் உண்டா... அறிவியல் சொல்வது என்ன?

 
 

வெறுங்காலுடன் ஓடுவது

இயற்கையிலிருந்து விலகி இயந்திர வாழ்க்கைக்குள்  நுழைந்துவிட்டோம். பல பாதிப்புகளுக்குப் பின்னர், மீண்டும் இப்போது இயற்கையைத் தேடிப் போவதை தவிர நம்மிடம் வேறு எந்த வழியும் இல்லை. இயற்கையாக உருவான அனைத்தும் மனிதனுக்கு நன்மை பயக்கும் விதமாகவே உள்ளன. அப்படித்தான் நமது பூமியும். துறவிகள் மற்றும் சித்தர்கள் காலணிகள் அணியாமல் நடந்திருப்பதை அறிவோம். ஆனால், அவர்கள் ஏன் அப்படி வெறுங்காலுடன் நடக்க வேண்டும்? ‘அந்தக் காலத்தில் செருப்புகள் இல்லையாம்’ என மொக்கைப் போடாமல் யோசித்துப் பாருங்கள்.

 

இந்த ஆன்மிக செயலின்  பின்னால் ஏதேனும் அறிவியல் ஒளிந்திருக்குமோ? 

ஆம். காலணிகள்  அல்லது காலுறைகள் எதுவும் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடப்பதன் பெயர் தான் (Earthing /Grounding)  புவி தொடுப்பு அல்லது மண் அணைத்தல்.
       
வெறும் காலுடன் நடந்து செல்லும்போது நமது உடலுக்கு என்ன நிகழ்கிறது?

ஒரு மொபைலுக்கு எப்படி ரீசார்ஜ் செய்கிறோமோ, அதேபோல் பூமியிலிருந்து வரும் கதிர்வீச்சு நமது உடலை ரீசார்ஜ் செய்கிறது. இப்படி வெறும் காலுடன்  தரையில் நடப்பது மூலம், தரையில் இருந்து  கால்கள் மூலமாக பெரிய அளவிலான எதிர்மறை  எலக்ட்ரான்கள் உறிஞ்சப்படுகின்றன. பூமியைப் போலவே, நமது உடலும் அந்த எதிர்மறை எலக்ட்ரான்களை உள்ளேயே  வைத்துக்கொள்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், இதைப் பற்றிய ஓர் ஆய்வானது  சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலம் என்ற  பிரிவில்  "Earthing " எனும் தலைப்பில் வெளியானது. இந்தப் பயிற்சி பலநாள் பட்ட நொதித்தல் நோய்களுக்கு புத்துயிரூட்டும் சிகிச்சையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.

ரப்பர்  மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட  காலணிகள் மின்கடத்தாப் பொருளாக செயல்படுகிறது . எனவே, இவை பூமியில் இருந்து  கிடைக்கும் எலக்ட்ரான்களைத்  தடை செய்கிறது.  

வெறுங்காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
    
      1. ஆய்வுகளின்படி  ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
   
      2.  இதயத் துடிப்பை சீராக்குகிறது.
 
      3.   பல நாள்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு  ஒரு தொடர்பு உண்டு என்று நவீன அறிவியல் கருதுகிறது. இந்தப் பயிற்சியின்  மூலம்                     வீக்கம் குறைக்கப்படுகிறது.  

      4. பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு.

      5.  நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது.
        
      6.  மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
       
      7. போதுமான எலக்ட்ரான்கள்  உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

      8. பூமியிலிருந்து நாம் பெறும் எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்  விளைவுகளை ஏற்படுத்தும். இவை நமது உடலை வீக்கத்திலிருந்தும், பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முன்னேயும் பாதுகாக்கும். 

      9. வயது முதிர்ச்சி அடைதலையும் குறைக்கிறது. 

இதன்பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது காலணிகள் இல்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். புல்தரை, கான்கிரீட், மணல் என அனைத்துமே எதிர்மறை எலக்ட்ரான்களைத் தருகிறது.

 இந்தப் பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களிலேயே உடலில்  ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D போலவும், தண்ணீரீலிருந்து கிடைக்கும் மினரல் போலவும், பூமியிலிருந்து பெறப்படும் எலக்ட்ரான்களும் முக்கியம். 

 

 இப்பொழுது யோசித்துப் பாருங்கள்,  வெறும்காலுடன் தரையில் எப்போது, தினமும் எவ்வளவு நேரம்  நடக்கிறீர்கள்?

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பலவீனத்தை பலமாக மாற்றும் வித்தை கற்க என்ன தேவை? - வாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை #MotivationStory

 
 

கதை

`ருவரின் மனப்பான்மை பலவீனமாக இருந்தால், அவருடைய குணமும் பலவீனமாக மாறிவிடும்’ என்கிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இழப்புகள் மனிதர்களுக்குத் தவிர்க்க முடியாதவை. நெருக்கமானவர்களைப் பறிகொடுத்தல், வியாபாரம் நொடித்துப்போவது, விபத்துகளில் உடல் உறுப்புகளை இழப்பது... என மனித வாழ்வில் இழப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவமனான மனநிலை வாய்த்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர், சாதனை படைப்பதும் உண்டு. இழப்பை, இழப்பாகக் கருதாத மனநிலை வாய்த்தால்தான் சாதனை சாத்தியம். அதோடு தங்களின் பலவீனத்தை பலமாக மாற்றும் வித்தை அவர்களுக்குக் கைவர வேண்டும். ஒருவேளை உங்களின் மிகப்பெரிய பலவீனமே பலமாக மாறலாம் என்பதை தெளிவுபடுத்தும் கதை இது.

 
 

அந்தச் சிறுவனுக்குப் பத்து வயது. ஜூடோ கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவனின் தீராத ஆசை. இத்தனைக்கும் அவன் இருந்தது ஜப்பானின் பெரிய நகரம் ஒன்றில். ஜூடோவுக்குப் பேர் போன நாடு. அவன் இருந்த ஊரிலும் ஜூடோ கற்றுத்தரப் பல பள்ளிகள் இருந்தன. ஒன்றே ஒன்றுதான் ஜூடோ கற்றுக்கொள்ள அவனுக்குத் தடையாக இருந்தது. ஒரு வருடத்துக்கு முன்னர் அவனுக்கு நடந்த கார் விபத்து. அதில், அவன் தன் இடது கையைப் பறிகொடுத்திருந்தான்.

சிறுவனின் தாய், ஜூடோ பள்ளிகளை அணுகினார். `இரு கைகள் இல்லாமல் ஜூடோவா..? அது மிகச் சிரமம்’ என்பதே பதிலாகப் பல பள்ளிகளில் கிடைத்தன. ஒரு பள்ளியில் மட்டும் ஜூடோ மாஸ்டர் சிறுவனைச் சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால், வயதில் முதிர்ந்தவராக இருந்தார். எப்போது வர வேண்டும், எவ்வளவு நேரம் பயிற்சி, கட்டணம் எவ்வளவு... அனைத்தையும் சிறுவனின் தாயிடம் சொன்னார்.

ஜூடோ

அடுத்த நாள்... சிறுவன், குரு சொன்ன நேரத்துக்கு ஜூடோ பள்ளிக்குப் போனான். அவர் கற்றுக் கொடுத்த பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தான். மூன்று மாதங்கள் முடிந்தன. நல்ல பயிற்சிதான்... என்ன... அவனுடைய குரு அவனுக்கு அது வரை ஜூடோவில் ஒரே ஒரு அசைவை, நுட்பத்தைத்தான் கற்றுத் தந்திருந்தார்.

ஒருநாள் குருவிடமே கேட்டுவிட்டான்... ``மாஸ்டர்... எனக்கு ஜூடோவுல ஒரே ஒரு நுட்பத்தை மட்டும்தான் கத்துக் குடுத்திருக்கீங்க... வேற எதுவும் கத்துத் தர மாட்டீங்களா?’’

``உண்மைதான். ஜூடோவுல இந்த ஒரே ஒரு நுட்பம் மட்டும்தான் உனக்குத் தெரியும். ஆனால், இதை மட்டும்தான் நீ அவசியம் தெரிஞ்சிருக்கணும்.’’ அதற்குப் பிறகு குரு பேசவில்லை. `நீ போகலாம்’ என்பதுபோலத் தலையை அசைத்தார். சிறுவன் தன் பயிற்சிக்குத் திரும்பினான். மேலும், பல மாதங்கள் கழிந்தன. அப்போதும் மேற்கொண்டு அவனுக்கு ஜூடோவில் வேறு எந்த நுட்பத்தையும் குரு கற்றுத் தரவில்லை.

உள்ளூரில் ஒரு ஜூடோ போட்டி. அதில் கலந்துகொள்ள பள்ளியின் சார்பாக அந்தச் சிறுவனின் பெயரையும் கொடுத்திருந்தார் மாஸ்டர். சிறுவன் தன் அம்மாவிடம் வந்து விஷயத்தைச் சொன்னான். அம்மா, மகனைக் கட்டியணைத்துக்கொண்டார். தானும் போட்டியைக் காண வரப்போவதாகச் சொன்னார். சிறுவனுக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். அவன் பள்ளியில் பல மாணவர்கள், ஜூடோவில் பல நுட்பங்களைக் கற்றறிந்தவர்கள். அவனுக்குப் பல மாதங்களாகப் பயிற்சியளிக்கப்பட்டிருந்தாலும், அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு நுட்பம்தான். இதைவைத்துக்கொண்டு போட்டியில் ஜெயிக்க முடியுமா?

பயிற்சி

ஒரு கையை வைத்துக்கொண்டு அவனால் ஜூடோ போட்டியில் பங்கேற்க முடியுமா? போட்டியில் அவனுக்கு அடி எதுவும் படாமல் இருக்க வேண்டுமே என்கிற பயம் அம்மாவுக்கு. போட்டி தினம் வந்தது. அந்தச் சிறுவன் பங்கேற்ற முதல் போட்டி... அவன்தான் ஜெயித்தான். கூட்டம் அதிசயத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. குரு கற்றுக்கொடுத்த ஒரே ஒரு ஜூடோ நுட்பத்துக்கு இவ்வளவு சக்தியா? சிறுவன் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தான். இரண்டாவது போட்டி... அதிலும் அந்தச் சிறுவனுக்கே வெற்றி. மூன்றாவது..? அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கே அவன் தகுதியாகிவிடுவான். மூன்றாவது போட்டி, கூட்டம் மொத்தமும் மூச்சுவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தது. அதிலும் அவன் ஜெயித்துவிட்டான். கூட்டம் எழுப்பிய ஆராவாரமும் கைதட்டலும் அடங்க வெகு நேரமானது.

இறுதிப் போட்டி நடக்கும் நாள் வந்தது. சிறுவனின் எதிர்ப் போட்டியாளன் ஆஜானுபாகுவாக இருந்தான். அவனுக்கு முன்னால் சிறுவன் குட்டி ஆடுபோலத் தெரிந்தான். சிறுவனால் அவனை எதிர்த்து நின்று வெற்றிபெற முடியுமா? போட்டியை நடத்தும் நடுவர், சிறுவனின் குருவிடம் வந்தார்.

``இந்தப் பையன் பாவம் ஐயா.. வேணாம். போட்டியிலிருந்து அவனை விலகச் சொல்லிடுங்க. அவன்கூட இவன் மோதினா, பலமா அடிவிழக்கூட வாய்ப்பு இருக்கு’’ என்று சொல்லிப் பார்த்தார்.

``பரவாயில்லை. ரெண்டு பேரும் மோதட்டும்’’ என்று சொல்லிவிட்டார் குரு.

போட்டி ஆரம்பமானது. இரண்டுமுறைதான் அந்தச் சிறுவன் தடுமாறினான். மூன்றாம் முறை வெற்றி பெற்றுவிட்டான். அந்த ஆண்டு, அந்த நகரத்தில் நடந்த ஜூடோ டோர்னமென்ட்டில் அந்தச் சிறுவன்தான் சாம்பியன்.

அடுத்த நாள் சிறுவன், தன் குருவிடம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேவிட்டான். ``குருவே.. நீங்க கத்துக்குடுத்த ஒரே ஒரு நுட்பத்தைவெச்சுக்கிட்டு நான் எப்பிடி ஜெயிச்சேன்?’’

தனித்திறமை

``நீ ஜெயிச்சதுக்கு ரெண்டு காரணம்தான். ஜூடோவுல எதிராளியைத் தூக்கி வீசியடிக்கிற வித்தையிலேயே கஷ்டமான ஒண்ணுல நீ மாஸ்டராகிட்டே. இன்னொண்ணு, அந்த நுட்பத்தை உன் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும்போது எதிராளி உன் இடது கையைத்தான் இழுக்க முடியும். அது சாத்தியமில்லை. அதனாலதான் நீ ஜெயிச்சே!’’

 

தன் பலவீனத்தை பலமாக மாற்றித் தந்த குருவை நெகிழ்ச்சியோடு வணங்கினான் சிறுவன்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985

 
 
 

இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 
 
 
 
சார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985
 
இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
 
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
 
* 1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. * 1881 - ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் ரிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர். * 1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர். * 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹாங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர். * 1941 - பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது. * 1941 - பசிபிக் போர்: சீனக் குடியரசு ஜப்பான் மீது போரை அறிவித்தது.
 
* 1941 - பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு ஜப்பான் மற்றும் ஜெர்மனி மீது 1910-ல் இருந்து ஜப்பான் வசமிருந்த கொரிய மக்கள் சார்பாக போரை அறிவித்தது. * 1941 - இரண்டாம் உலகப் போர்: வேக் தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக போர் தொடுத்தது. * 1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
 
* 1942 - பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர். * 1949 - சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது. 

http://www.maalaimalar.com

சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென முடிவெடுக்கப்பட்ட நாள்: 8-12-1991

 

சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி 1991-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி முடிவெடுத்தனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1953 - அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார். * 1963 - மேரிலாதில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில்

 
 
 
 
சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென முடிவெடுக்கப்பட்ட நாள்: 8-12-1991
 
சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி 1991-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி முடிவெடுத்தனர்.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
 
* 1953 - அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார். * 1963 - மேரிலாதில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் கொல்லப்பட்டனர். * 1966 - கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஆயிஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர். * 1969 - கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 93 பேர் கொல்லப்பட்டனர். * 1972 - சிக்காகோவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் கொல்லப்பட்டனர். * 1980 - பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார். * 1982 - சூரினாமில் ராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
 
* 1985 - சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. * 1987 - பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணம் செய்த பெருவின் கால்பந்து அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர். * 1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர். * 1998 - அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 
 

 

twitter.com/iindran

எல்லா தோசையும் கல்லுலதான் ஊத்துறோம். அப்புறமேன் கல் தோசைய மட்டும் கல் தோசைங்குறோம்... ஏன்னா... நம்ம மண்ணோட பண்பாடு!

twitter.com/Piramachari

ஹோட்டலில், முதல் ரவுண்ட் டிபன் முடிந்தவுடன், `என்னாங்க நீங்கவேணா ஒருசெட் பூரியோ சப்பாத்தியோ வாங்கிக்குங்க’னு பொண்டாட்டி சொன்னா, அதுல ஒரு பீஸ் அவங்களுக்குத் தேவைப்படுதுனு அர்த்தம்!

twitter.com/chithradevi_91

ராஜா இசை இனிது ரகுமான் இசை இனிது என்பார் செல்போனில் சேலரி க்ரெடிட்டட் மெசேஜ் இசை கேளாதார்..:)

P100a_1512545399.jpg

twitter.com/Rathikagenius

அவசரமாக விரையும் எல்லா ஆம்புலன்சுகளும் அரசு மருத்துவமனையை மட்டும் கண்டும் காணாததுபோல் கவனமாகக் கடந்துவிடுகின்றன!

twitter.com/thoatta

ஜி.எஸ்.டி குறைப்பு, மாட்டிறைச்சி அனுமதின்னு எல்லாத்தையும் வாபஸ் வாங்குற மாதிரி, திரும்ப பழைய 1000/500 செல்லும்னு சொல்லிடாதீங்கய்யா!

twitter.com/udaya_Jisnu

ஃபேனுக்குக் கீழதான் தூங்குவேன்னு அடம் பிடிச்சவங்களையெல்லாம், ப்ளக் பாயின்ட்கிட்ட இடம் கிடைச்சாலே போதும்னு நினைக்க வைத்த பெருமை, ஆண்ட்ராய்டு மொபைல்களையே சேரும்.

twitter.com/Thaenmittai1910

இனிமேல் வாய் பேசாது, கைதான் பேசும் என்பது ட்விட்டர்க்குப் பொருந்தும்.

twitter.com/Ashok_Apk

வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் கெஸ்ட் ரோலா  வந்துட்டுப் போகுது...

twitter.com/Maga_raja

‘செவனேனு அமைதியா இருக்கறவனை பேசுடா பேசுடா’னு சொல்றாய்ங்க. ‘நல்லா பேசிக்கிட்டிருக்கிறவனை கொஞ்ச நேரமாச்சும் அமைதியா இருடா’னு சொல்றாய்ங்க.

p100b_1512545413.jpg

twitter.com/Vinithan_Offl

ஒருவன் எப்படி இருந்தாலும் அவனைக் குறைச்சு எடை போடாதது - `வெயிட் மெஷின்.’

twitter.com/HAJAMYDEENNKS

மோடி மாதிரி போஸ் கொடுங்கன்னு இனி மணமக்களைக் கேட்கலாம் கேமராமேன்!

twitter.com/amuduarattai

பந்தியில் வைத்த ஸ்வீட்டை வேண்டாமெனச் சொல்லிவிட்டு, பக்கத்து இலைக்காரர் சாப்பிடுவதை வெறித்துப் பார்ப்பவருக்கு சுகர் பேஷன்ட் என்று பெயர்.

twitter.com/Thaadikkaran

புல்லட் மேல உட்கார்ந்து வண்டி ஓட்டும் போது கெத்தாய் இருப்பதும் அதற்கு லோன் அடைக்க செத்து செத்துப் பிழைப்பதுமாய் வாழ்க்கை..!

twitter.com/Piramachari

நேரம் போகவில்லை என்றால், வீட்டுக்காரம்மாவிடம் உங்க ஊர் எல்லாம் ஒரு ஊரானு மட்டும் கேளுங்க!

அன்றைய பொழுது போய்விடும்.

இருவரும் ஒரே ஊராக இருந்தால்...

உன் குடும்பம் இருக்கேனு மட்டும் ஆரம்பிங்க, வேறு ஏதும் சொல்ல வேண்டாம்!

p100c_1512545439.jpg

twitter.com/mekalapugazh

இந்தப் பன்னிரண்டு ராசிக்காரர்களின் பலனில் முதல் வரியைப் படிக்கும்போது...நாட்டில் அயோக்கியர்களே இல்லை என்று தோன்றுகிறதே!

twitter.com/mufthimohamed1

ஆலுமா டோலுமானு பாடிட்டே போயி சாப்பிட உக்காந்து சட்டிய திறந்தா உப்புமா! வாழ்க்கைல எவ்வளவு ஏமாற்றம்!

twitter.com/Kozhiyaar

மகன் பள்ளியில் அதிக குறும்பு செய்கிறார் என்று அழைப்பு வரும்போது, கொஞ்சம் வருத்தமாகவும், நல்ல வேளை நாம் படிக்கும் போது கைபேசி வசதியெல்லாம் இல்லை என்று நிம்மதியாகவும் இருக்கிறது!

twitter.com/navi_n

நார்மலாக கணவன் கெட்டவன். நண்பர்களுடன் சேர்ந்தால் அக்கூட்டத்தில் கணவன் மட்டுமே நல்லவன். #பெண்கள் லாஜிக்

twitter.com/iindran

லைன்ல நின்னு, பஸ்ல ஏறி, ஜன்னல் சீட்டைப் பிடிச்சு, ஹப்பாடானு பெருமூச்சு விட்டு உக்காந்து வண்டி நகரும் போதுதான்... உச்சா வர்ற மாதிரி இருக்கும். டிஸைன்.

p100d_1512545461.jpg

twitter.com/ifauxsysa

வெயில் ஜாஸ்தியா இருக்கு... பிரசாரத்துக்கெல்லாம் வர முடியாது... வேணா எலெக்ஷனை கோவால வைங்க - சிம்பு4CM

twitter.com/mrithulaM

தன்னிடம் நடந்துகொள்ளும் முறையை மட்டுமே வைத்து, தந்தையைச் சிறந்த ஆணென்று கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கிவிடுகிறார்கள் மகள்கள்.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

விண்வெளியில் பீட்சா கிடைக்குமா? (காணொளி)

விண்வெளியில் பீட்சா கிடைக்காது. ஆனால் பீட்சா செய்யலாம். அதெப்படி சாத்தியம் என்கிறீர்களா? பெப்பரோனி மற்றும் ஆலீவ்ஸ்களோடு காஸ்மிக் கதிர்களில் சுவையும் சேர்க்கப்பட்ட சுவாரஸ்யமான பீட்சா செய்முறையை வீடியோவில் பாருங்களேன்.

  • தொடங்கியவர்

தாய்லாந்து கதை: வாசனையைத் திருட முடியுமா?

 

 
6chsujstory1jpg

தாய்லாந்து நாட்டின் மிகவும் பழமையான கிராமம் ‘பன் தா சோவன்’. அங்கு வசித்த பூன் நாம் மிகவும் ஏழ்மையானவர். நகரத்தில் வசிக்கும் உறவினரைச் சந்திக்கக் கிளம்பினார். பகல் முழுவதும் கால்கடுக்க நடக்க வேண்டியிருந்தது.

அவரது மனைவி, சாதம் மட்டும் கொடுத்து அனுப்பியிருந்தார். வசதி இல்லாததால் காயோ, குழம்போ கொடுத்து அனுப்பவில்லை.

ஒரு செல்வந்தர் வீட்டைக் கடக்கும்போது கமகமவென்று கறிக் குழம்பு வாசனை வந்துகொண்டிருந்தது. உடனே பூன் நாம்க்குப் பசி எடுத்தது. அந்த வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் அமர்ந்து, வசனையைப் பிடித்தபடியே பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டார்.

திருப்தியாகச் சாப்பிட்டு முடித்ததும் செல்வந்தர் வீட்டுச் சமையல்கார அம்மாவிடம், குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அவரும் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.

”அம்மா, நீங்கள் பிரமாதமாகச் சமைப்பீர்கள் போலிருக்கிறது! வாசனையே அருமையாக இருந்தது. அந்த வாசனையைப் பிடித்துக்கொண்டே வெறும் சாதத்தை வேகமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டேன். இல்லை என்றால் ஒரு வாய் சாதம் கூடச் சாப்பிட்டிருக்க முடியாது. உங்களுக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார் பூன் நாம்.

சமையல்கார அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த நேரம் செல்வந்தர் சாப்பிட வந்தார். அவருக்கு உணவு பரிமாறினார்.

“என்னம்மா, குழம்பு கூட சரியா வைக்கத் தெரியலை. இதை எப்படிச் சாப்பிடுவது?” என்று கோபப்பட்டார் அந்தச் செல்வந்தர்.

”ஐயா, நான் வழக்கம்போல் நன்றாகத்தான் சமைத்தேன். நம் வீட்டு வாசலில் ஒருவர் கறிக்குழம்பின் வாசனையைப் பிடித்துக்கொண்டு, அவரது சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதனால்தான் இந்தக் குழம்பில் ருசி குறைந்துவிட்டது போலிருக்கிறது” என்று தயங்கியபடிச் சொன்னார் சமையல்கார அம்மா. இதைக் கேட்ட செல்வந்தர் மிகவும் கோபம் அடைந்தார்.

வேலைக்காரரை அழைத்து, உடனே பூன் நாம்மை அழைத்துவரச் சொன்னார். சிறிது நேரத்தில் பூன் நாம் செல்வந்தர் முன் நின்றார்.

6chsujstoryjpg
 

“என் அனுமதி இல்லாமல் கறிக் குழம்பின் வாசனையைப் பிடித்திருக்கிறாய். அப்படி என்றால் வாசனையைத் திருடிவிட்டாய். அதனால் குழம்பின் ருசி குறைந்துவிட்டது. அதற்குரிய நஷ்ட ஈடு கொடு” என்று கேட்டார் செல்வந்தர்.

”ஐயா, நான் திருடவில்லை. வாசனை தானாகவே என்னிடம் வந்தது. நான் ஏழை. நஷ்ட ஈடு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை” என்றார் பூன் நாம்.

உடனே நியாயம் கேட்பதற்கு, கிராமத் தலைவரிடம் அழைத்துச் சென்றார் செல்வந்தர். நடந்ததைக் கேட்டறிந்தார்.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார் கிராமத் தலைவர். பிறகு, பூன் நாம்மிடம் இருந்த ஒரே ஒரு செப்பு நாணயத்தை எடுத்து, கிண்ணத்தில் போடச் சொன்னார்.

’அடடா! அந்தச் செப்பு நாணயம் எனக்குதான்!’ என்று நினைத்தார் செல்வந்தர்.

”பூன் நாம், உன் நாணயத்தை எடுத்துக்கொள். செல்வந்தரே, வாசனைக்குப் பதிலாக இந்தக் கிண்ணத்தில் உள்ள தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டுக்கும் சரியாகிவிட்டது” என்றார் கிராமத் தலைவர்.

கூடியிருந்த மக்கள் கிராமத் தலைவர் சொன்ன தீர்ப்பைக் கேட்டுப் பாராட்டினார்கள். செல்வந்தர் தலைகுனிந்தார்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மற்றவர்கள் மனஅழுத்தம் குறைக்கும் பாரதிபாஸ்கரின் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைப்பது எது? #LetsRelieveStress

 
 

பாரதிபாஸ்கர்... குடும்ப உறவுகள் தொடங்கி உலகளாவிய பிரச்னைகள் வரை எல்லாவற்றைப் பற்றியும் அழகாக விவரிக்கும் ஆற்றல்பெற்றவர். பட்டிமன்றப் பேச்சாளர், முன்னணி வங்கி ஒன்றின் துணைத் தலைவர், குடும்ப நிர்வாகி என மூன்று குதிரைகளில் செம்மையாகப் பயணம் செய்பவர். ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்காக அவர் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து அவர் இங்கே விவரிக்கிறார்... 

பாரதிபாஸ்கர்

 

''ஸ்ட்ரெஸ், இன்னைக்கு எல்லாருக்கும் இருக்கு, எல்லாத் துறைகள்லயும் இருக்கு. `டென் டு ஃபைவ் ஜாப்’னு சொல்றோம். ஆனா, எல்லாராலயும் 5 மணிக்குக் கிளம்ப முடியுதா? நிச்சயம் முடியாது. இருக்கிற வேலைகளையெல்லாம் முடிச்சிட்டு கிளம்பும்போது மணி ஆறு அல்லது ஆறரை ஆகியிருக்கும். 

பாரதிபாஸ்கர்

ஆபீஸைவிட்டு வெளியில வந்து பார்த்தா, ரோட்டுல ஒரே டிராஃபிக் ஜாம். என்ன பண்ண முடியும்? வீடு வந்து சேர ஏழு மணி, ஏழரை மணி ஆகலாம். அதுவும் வேலைக்குப் போகிற பெண்களாக இருந்தா, அதன் பிறகுதான் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரணும். இரவு டிபன் செய்யணும். அதுவரைக்கும் சேர்ந்த பாத்திரங்களையெல்லாம் துலக்கிவைக்கணும்.

திரும்பக் காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும். றெக்கைக்கட்டிப் பறக்கணும். குறிப்பா பெண்களுக்கு இரண்டு மடங்கு ஸ்ட்ரெஸ். `தினமும் யோகா பண்ணுங்க, தியானம் பண்ணுங்க’னு சொல்றோம். அது எல்லாருக்கும் சாத்தியமா என்ன? 'அவ்வைசண்முகி' மாதிரி வேலை வேலைனு இருக்கிற நிலைமையில இதை நம்மால எப்படி யோசிக்க முடியும்? ஆனா இந்தச் சூழலிலிருந்து ஒருநாளின் சில மணித்துளிகள் விலகி இருந்து, நமக்கே நமக்குனு பிடிச்ச செயல்களைச் செய்யலாம். 

பாரதிபாஸ்கர் தனது குழந்தைகளுடன்

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்கும். பாடுறது, பாட்டுக் கேட்பது, வாக்கிங் போவது, ஓவியம் வரையறது, பள்ளித் தோழிகளைச் சந்தித்து மனம்விட்டு உரையாடுவது, ஷாப்பிங் செய்வது, கோயில்களுக்குப் போய் வருவதுனு அவரவருக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்தால் மனம் லேசாகிடும். 

என்னைப் பொறுத்தவரை பட்டிமன்றம், மேடைப்பேச்சு, கலந்துரையாடல்,  விழா நிகழ்ச்சிகளுக்குப் போய் பேசுவது ரொம்பப் பிடிக்கும். எந்தத் தலைப்பு கொடுத்தாலும் சின்ன வயசுலேர்ந்தே பேசி வந்ததால், என்னால் பேச முடியும். நிறைய நூல்களை வாசிப்பேன். எந்த அளவுக்கு வாசிப்பு இருக்கிறதோ, அதைவைத்துதான் அழகாகவும் ஆழமாகவும் பேச முடியும். வித்தியாசமான சம்பவங்கள், கதைகள், சாகசங்கள், வாழ்க்கை நிகழ்வுகள் இவற்றையெல்லாம் நாம் கவனிப்பதுகூட நமக்கு ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீஃப்தான்.

பாரதிபாஸ்கர் தனது குடும்பத்தினருடன்

அதுக்குத் தகுந்த மாதிரி ஆபீஸ் வேலைகளை நேரம் ஒதுக்கி அட்வான்ஸாகவே செய்துவிடுவேன். வீடு, ஆபீஸ், பட்டிமன்றம் மூன்றையும் தனித்தனியாக கம்பார்ட்டைஸ் பண்ணி வெச்சிடுவேன்.

எவ்வளவு கடினமான நாளாக இருந்தாலும், இரவில் ஒரு அரை மணி நேரமாவது 80-களில் இளையராஜா இசையமைத்த பாடல்களைக் கேட்காமல் தூங்க மாட்டேன். அப்படிக் கேட்கும்போது நமது மனம் நாம் மகிழ்ச்சியாக இருந்த பள்ளி நாள்கள், கல்லூரி நாள்கள் என நம்மைக் கொண்டுபோய் அங்கே சேர்த்துவிடும். அந்த நினைவுகள் நம் மனதை லேசாக்கிவிடும்; நம்மை இளமையாகவும் ஆக்கிவிடும்'' என்றவரிடம் உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் பற்றிக் கேட்டோம்.

 

``உடற்பயிற்சி யோகா என்றெல்லாம் கிடையாது. தினமும் ரெகுலராக வாக்கிங் போய்விடுவேன். சாப்பாட்டைப் பொறுத்தவரை `பசித்து புசி’ங்கிறதுதான். எப்பேர்ப்பட்ட விருந்தாக இருந்தாலும், பசி எடுக்காமல் சாப்பிட மாட்டேன். வீட்டுச் சமையல் என்றால், நம் பாரம்பர்ய சமையல்தான் பிடிக்கும். குறிப்பாக அவியல் கண்டிப்பாக அதில் இடம்பிடிக்கும். இப்போதுதான் மெள்ள சிறுதானிய உணவு வகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க ஆரம்பித்திருக்கிறேன்’’ என்கிறார் பாரதி பாஸ்கர்.  

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

'ஜிமிக்கி கம்மல்' பாடல்: 2017 யூ-டியூப் டிரெண்டிங்கில் 2வது இடம்

 

 
jimikkikammaljpg
இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜிமிக்கு கம்மல் பாடலுக்கு ஆடிய நடனம் 2017-ம் ஆண்டில் யூடியூப்  டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'Velipadinte Pusthakam' படத்தில் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிய நடனம் கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியுப் தளத்தில் பதிவேற்றப்பட்டது முதல், அது இந்திய அளவில் பிரபலமானது.

 
இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜிமிக்கு கம்மல் பாடலுக்கு ஆடிய நடனம் 2017-ம் ஆண்டில் யூடியூப்  டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய குழுவினரோடு இப்பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது 2017-ம் ஆண்டில் யூடியூப் டிரெண்ட் ஆன வீடியோக்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தற்போதுவரை இந்த வீடியோவை 18 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோ பதிவில், நடனம் ஆடிய ஷெரில், சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இயேசுவின் ஓவியத்தை சாதனை விலை கொடுத்து வாங்கிய சவுதி இளவரசர்

 

இயேசுவின் ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்கி, சர்வதேசத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான்!

6_Salvetor.JPG

உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்ஸி வரைந்த இயேசுவின் ஓவியமான ‘சல்வேட்டர் முண்டி’ என்ற ஓவியம் அண்மையில் ஏலத்தில் சாதனைத் தொகைக்கு விற்பனையானது. இதை, மொஹமட் பின் ஃபர்ஹான் அல்-சவுத் என்ற இளவரசர் 450 மில்லியன் டொலருக்கு வாங்கியிருந்தார்.

எனினும் உண்மையில் அந்த ஓவியத்தை அல்-சவுத் மூலமாக சவுதியின் இளவரசர் மொஹமட் பின் சல்மானே வாங்கியிருப்பதாக அமெரிக்க புலனாய்வுத் துறையைச் சுட்டிக்காட்டி ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இவ்வோவியம் அபுதாபியின் லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சல்வேட்டர் முண்டி என்ற இந்த ஓவியம் கி.பி. 1500ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது என்றும் லியனார்டோ டாவின்ஸியின் இறுதிப் படைப்பு என்றும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் இது வெறும் நகல் ஓவியமே என்று கூறப்பட்டுவந்தபோதும் இறுதியாக, அது டாவின்ஸியால் வரையப்பட்டதே என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள்!'' - #metoo- வுக்கு டைம்ஸின் அங்கீகாரம்

 
 

பாலியல் வன்முறை

யாரிப்பாளரின் அறைக்குள் அழைக்கப்படும் புதிய நடிகை, ஆள் இருக்கும்போது ஹோட்டல் அறையைச் சுத்தம் செய்யும் பணிப்பெண், மேனஜர் மட்டுமே இருக்க அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் என யாருக்கும் எந்த நேரத்திலும் பாலியல் வன்முறை நிகழலாம் என்ற உண்மை தெரிய வரும்போது பெரிய அதிர்ச்சியாக இருக்கும். ஒருவேளை தனது ஏதோ ஒரு செய்கை அவரை அப்படி நினைக்கவைத்ததோ என்ற குற்றஉணர்வு பெண்ணின் கழுத்தை நெருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்கு 'இது அவர்களுடைய தவறு இல்லை' என்பதைப் பதியவைக்க முயற்சி செய்துள்ளது 'டைம்ஸ்' பத்திரிகை. 

 

ஒவ்வொரு வருடமும் 'பர்சன் ஆஃப் தி இயர்' என்ற பட்டத்தை போப், ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் போன்ற தனிப்பட்ட நபர்களுக்கே கொடுத்துவந்த டைம்ஸ் பத்திரிகை, இந்தமுறை, பாலியல் வன்முறையிலிருந்து மீண்டு வந்தவர்களையும், நடந்ததை 'உடைத்துப் பேசியவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளது டைம்ஸ் பத்திரிகை.டைலர் ஸ்விஃப்ட்

அக்டோபர் மாதம், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்ட்டன் பற்றி முதலில் வெளிப்படையாக உடைத்துப் பேசிய ஹாஷ்லே ஜுட், தன்னைப் பாலியல்ரீதியாக சீண்டிய டிஜேவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர், சிஇஓ-வுக்கு எதிராகப் புகார் அளித்த முன்னாள் ஊபர் பொறியாளர், ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பெண், ஓர் அலுவலகத்தில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்ட்டாக இருந்த பெண், ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பறிக்கும் வேலையைச் செய்யும் பெண் எனப் ‘பாலியல் வன்முறைகளுக்கு எதிராக’ குரல் கொடுத்த இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை ஓரிடத்தில் சந்திக்கவைத்துள்ளது டைம்ஸ். 

இவர்கள் வெவ்வேறு வயது, மொழி, இனம், மதம். அதிலும் இருவர் ஆண்கள். வின்ஸ்ட்டனுக்கு எதிரான விவாதத்தைத் தொடங்கிய ஜூட் முதல் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் வேலை பார்க்கும் இசபெல் வரை, அனைவருக்குமான ஒற்றுமை பாலியல் சீண்டலும் அதற்கு எதிரான சீற்றமும். ஹோட்டல் அறையில் தன்னைப் பாலியல் ரீதியாகச் சீண்டிய வின்ஸ்ட்டனிடமிருந்து தப்பிவந்த ஜூட், தன் அப்பாவிடம் தொடங்கி, பலரிடமும் இதுகுறித்து பகிர்ந்தபோது சந்தித்த அதிர்ச்சி.

டெர்ரிதன்னிடம் பாலியல்ரீதியாக நடந்துகொண்ட டிஜேவைப் பற்றி புகார் தெரிவித்தார் பிரபல பாடகி, டைலர் ஸ்விஃப்ட். வேலையிலிருந்து நீக்கப்பட்ட அந்த டிஜே, ஒரு மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். பதிலுக்கு டைலர் ஸ்விஃப்டும் ஒரு டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடந்தார். அந்த டிஜேவின் வழக்கறிஞர் டைலரை நோக்கி அத்தனை மோசமான கேள்விகளை முன்வைத்தபோதும், ‘நான் தவறு செய்திருப்பதாக நீங்கள் என்னை நம்பவைக்க முயல்கிறீர்கள். ஆனால், ஒருபோதும் அது நடக்காது’ என்று அசால்ட்டாக சொல்லியிருக்கிறார் டைலர். “என்னைப் போன்ற ஒருவருக்கே இந்த நிலை என்றால், புதிதாகத் துறைக்கு வரும் இளம் பெண்களின் நிலை என்ன ஆகும்” என்று கேட்கிறார் டைலர் ஸ்விஃப்ட். 

தன் மனைவி முன்னிலையிலேயே தன்னைப் பாலியல்ரீதியாக சீண்டிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரைப் பற்றி ட்விட்டரில் வெளிப்படுத்தினார் அமெரிக்க நடிகர், டெர்ரி க்ரியூஸ். “இங்கு அனைவரும் பாதிக்கப்பட்டவர்களையே கேள்வி கேட்கிறார்கள். நீ அவனை அங்கேயே ஏன் அடிக்கவில்லை என்கிறார்கள். தவறு செய்தவனைத்தானே ஏன் செய்தாய் என்று கேட்க வேண்டும்? அவன் அப்படி நடந்துகொண்டது தவறு இல்லையா? இனி அதை மாற்றுவோம். இனி பாதிக்கப்பட்டவரை கேள்வி கேட்கக் கூடாது. குற்றம் செய்தவரைப் பற்றி பேசத் தொடங்குவோம்” என்கிறார் டெர்ரி. 

 

ஊபர் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்த பெண், அந்த நிறுவனத்தில் உள்ள பலர்மீது பாலியல் வன்முறை பற்றி எழுதிய ஒரு பிளாக் பதிவு அதிரவைத்தது. சக பணியாளர் முதல் சி.இ.ஓ வரை வேலையைவிட்டுப் போகவைத்தது. இப்படியாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலுக்கு எதிராகத் துணிச்சலாக நின்றவர்களைச் சிறப்பித்துள்ளது டைம்ஸ்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நகைச்சுவைக் கதைகளின் நாயகன்... பாக்கியம் ராமசாமி நினைவலைகள்!

 
 

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை எழுத்துக்கென்று தனி இடம் இருக்கிறது. வஞ்சப்புகழ்ச்சி, சிலேடை உள்ளிட்ட உத்திகளில் அங்கதம் தமிழ் இலக்கியத்தில் ஆதி முதலே பயணித்து வருகிறது. பாரதிக்குப் பின் எழுச்சிபெற்ற உரைநடையில் நகைச்சுவை மிளிர எழுதிய எழுத்தாளர்கள் பலர். ஆர்.மகாதேவன் எனும் தேவன் உருவாக்கிய ‘தும்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தை மறக்க முடியாது. அவர் ஏராளமான நகைச்சுவைக் கதைகளை எழுதினார். அவரைத் தொடர்ந்து பலரும் எழுதினார்கள். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் ஜ.ரா.சுந்தரேசன் எனும் இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி. 

பாக்கியம் ராமசாமி

 

சேலம் பகுதியைச் சார்ந்த பாக்கியம் ராமசாமி, குமுதம் பத்திரிகையில் பணியாற்றியவர். இவர் உருவாக்கிய அப்புசாமி - சீதாப்பாட்டி கதாபாத்திரங்கள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவை ததும்பும் கதைகளை எழுதினார். பொதுவாக, அனைவரின் வீடுகளில் இருக்கும் தாத்தா, பாட்டிகளைப் போலத்தான் அப்புசாமியும் சீதாப்பாட்டியும். ஆனால், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டே இருப்பவர்கள்போலக் கதைகளை அமைப்பார். விவரணைகளைத் தவிர்த்து, காட்சிகளாகவே கதையைக் கொண்டுசெல்வார். 

அப்புசாமி - சீதாப்பாட்டி

ஒரு காட்சியின் உரையாடலில் அப்புசாமியின் குரல் மேலோங்குவதுபோல இருந்தால், அடுத்த காட்சியில் சீதாப்பாட்டியின் குரல் மேலோங்கும். ஒருவரையொருவர் வார்த்தைகளால் வாரிக்கொள்வதுதான் மைய இழை. அதை வைத்துக்கொண்டு தொடர்கதை, நாவல்களில் புகுந்து விளையாடினார் பாக்கியம் ராமசாமி. இருவரின் உரையாடலில் அதிகம் ஆங்கிலம் புழங்கும். அப்புசாமி - சீதாப்பாட்டி இடம்பெற்ற சின்னச் சின்னக் கதைகளையும் இவர் எழுதினார். அதில் ஒரு கதையில், புகழ்பெற்ற எழுத்தாளர் அப்புசாமியைப் பார்க்க வருவார். ரொம்பவும் சம்பாத்தியம் பெற்ற எழுத்தாளரா.... என்கிற உரையாடல் வரும். அப்புசாமி, அந்த எழுத்தாளரைப் பார்த்து, 'நீர் என்ன ஒரு எழுத்துக்கு ஒரு பைசா வாங்குவீரா..." என்பார். அவரோ பதறியபடி, "அவ்வளவு ரூபாய்... எப்படி?" என்பார். அதற்கு அப்புசாமியோ, "பாத்திரத்தில் பெயர் பொறிப்பவரே அவ்வளவு வாங்குகிறாரே" என்று வாருவார். 

கதைகளைப் போலவே அவர் எழுதும் கட்டுரைகளிலும் நகைச்சுவை உலவும். உடல் குண்டாவது பற்றிய கட்டுரை ஒன்றை இப்படி முடிக்கிறார். "தான் சாப்பிட்ட பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசைபோடுகிறது. அதைப்போல், மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லியாகவே இருக்கக்கூடும்!"

பாக்கியம் ராமசாமி முழு வீச்சில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நகைச்சுவை கதைகளின் முடிசூடா மன்னராக விளங்கினார். 'அப்புசாமியும் 1001 இரவுகளும்' நூல் புகழ்பெற்றது. தொழில் நுட்ப மாற்றம் நிகழ்ந்தபோது, http://www.appusami.com எனும் இணையத்தில் இயங்கி வந்தார். இதில் அவரது பல கதைகள் படிக்க கிடைக்கின்றன. 

பாக்கியம் ராமசாமிக்கு இசையின் மீது தனி ஆர்வம் உண்டு. அவரின் கதைகளில் அது வெளிப்படும். அப்புசாமியைப் போலவே சீதாப்பாட்டிக்கும் சபாக்களில் பொன்னாடை கிடைப்பதைப் பார்த்து, பொறாமைப்படும் கதை ஒன்றை எழுதியிருப்பார்.  'அப்புசாமி - சீதாப்பாட்டி இசைக் கூடல்' எனும் அமைப்பை, இசைக்கலைஞர்களைக்கூட உருவாக்கினார். சமூகப் பணிகள் செய்வதற்கு 'அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை' எனும் அமைப்பை உருவாக்கினார். இறுதி வரை எழுதியும் இயங்கிக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.

தமிழ் இலக்கிய உலகுக்குச் சிரிப்பை அள்ளித் தந்த ஜ.ரா.சுந்தரேசன் நேற்று (டிசம்பர் 7) உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரின் கதைகள் படிக்கும் காலம் வரை அவரும் வாழுவார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

விண்வெளியில் மிதக்கும் குப்பைகளால் செயற்கைகோள்களுக்கு ஆபத்து

விண்வெளியில் மிதக்கும் குப்பைகளால், முக்கியமான செயற்கைக்கோள்கள் சேதமடைதல் மற்றும் தொலைத்தொடர்பில் இடையூறு ஏற்படும் ஆபத்து உள்ளது.

  • தொடங்கியவர்

இதைவிட கிரிக்கட்டை கலாய்க்க ஒருத்தன் பிறந்துதான் வரனும்.

  • தொடங்கியவர்

ஆசியாவின் கவர்ச்சிப் பெண்ணாகினார் பிரியங்கா சோப்ரா..

 

Priyanka-Chopra-Wallpaper.jpg
ஹிந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ப்ரியங்கா சோப்ரா, ஹொலிவுட்டுக்கு சென்று கலக்கி வரும் நிலையில், ஆசியாவின் கவர்ச்சிக் பெண்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

.லண்டனின் ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவில் உள்ள கவர்ச்சியான 50 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் தீபிகா படுகோனே. இந்த முறை அவரை பின் தள்ளி பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்திருக்கிறார். TV நடிகை நித்யா சர்மாவுக்கு 2-வது இடமும், தீபிகாவுக்கு 3-வது இடமும் கிடைத்திருக்கிறது.
அலியாபட் 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். 5-வது இடம் பாகிஸ்தான் நடிகை மாஹிரா கானுக்கு கிடைத்துள்ளது. இது பற்றி கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, “ஆசியாவின் கவர்ச்சி மங்கையாக தேர்ந்து எடுக்கப்பட்டது. மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி”என தெரிவித்துள்ளார்.

pirianka.jpg

Priyanka-Chopra-.jpeg

priyanka-chopra.jpgPriyanka-Chopra1.jpg

 

http://globaltamilnews.net

  • தொடங்கியவர்

விளையாட்டுச் செய்திகளை விடாமல் சேகரிக்கும் சங்கரன்

 

 

 

sankaran1JPG

விளையாட்டு ஆவணத்திலிருந்து..

sankaran2JPG

விளையாட்டு ஆவணத்திலிருந்து..

sankaran3JPG

விளையாட்டு ஆவணத்திலிருந்து..

sankaran4JPG

விளையாட்டுச் செய்திகள் ஆவணத்துடன் சங்கரன்

 

தங்களைப் பற்றிய ஆவணங்களைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதே சிலருக்கு முடியாத காரியம். ஆனால், விளையாட்டுத் துறை சம்பந்தமாக கடந்த 32 ஆண்டுகளாக தினசரி மற்றும் பருவ இதழ்களில் வந்த முக்கியச் செய்திகள் அனைத்தையும் திரட்டி ஆவணமாக வைத்திருக்கிறார் 91 வயதான டி.சங்கரன்.

 

32 ஆண்டு கால ஆவணம்

பொள்ளாச்சி நகர்மன்ற (ஆண்கள்) பள்ளியில் 1955-ல் தொடங்கி முப்பது ஆண்டுகள் உடற்கல்வி இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர் சங்கரன். பணி ஓய்வுக்குப் பிறகும் இவருக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் விடவில்லை. அதனால், விளையாட்டு சம்பந்தமான முக்கிய நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் இவர், கடந்த 32 ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியான முக்கியமான விளையாட்டுச் செய்திகளை சேகரித்து ஆவணமாக்கி வருகிறார்.

அப்படி, கிரிக்கெட், பேட்மிட்டன், டென்னிஸ், சதுரங்கம் என விளையாட்டுக்கள் சம்பந்தப்பட்ட 61 ஆவணத் தொகுப்புகள் இப்போது இவர் வசம் உள்ளன. கிரிக்கெட் ஜாம்பவான்களான நவாப் பட்டோடி, சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கிர்மானி உள்ளிட்டவர்களைப் பற்றிய முக்கியச் செய்திகள் இவரது ஆவணத்தில் இருக்கின்றன.

 

தரம் பிரிக்கத் தெரியவேண்டும்

இதுமட்டுமல்லாது, பழங்கால நாணயங்கள் தொடங்கி அண்மையில் வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயம் வரைக்கும் சேகரித்து வைத்திருக்கிறார் சங்கரன். பல்வேறு நாடுகளின் பழைய, புதிய கரன்சிகளும் இவரது களஞ்சியத்தில் இருக்கின்றன. விளையாட்டு பற்றி பேசினால் உற்சாகமாகி விடும் சங்கரன், பிஷன் சிங் பேடியின் சுழற்பந்து வீச்சிலிருந்து விராட் கோலியின் பேட்டிங் வரை அசராமல் தடதடக்கிறார்.

ஆவண தொகுப்பு பற்றிப் பேசியபோது, “பணியில் இருக்கும் போதே எங்கள் பள்ளி மாணவர்கள் பற்றிய விளையாட்டுச் செய்திகளை எல்லாம் வெட்டி எடுத்து ஆவணப்படுத்துவேன். அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. பத்திரிகை செய்திகளில், எது முக்கியமான செய்தி, எந்தச் செய்தி எதிர்காலத்தில் வரலாறாகப் பேசப்படும் என்பதை எல்லாம் தரம் பிரிக்கத் தெரியவேண்டும். அத்தகைய செய்திகளைத்தான் நான் வெட்டி எடுத்து தனியாக பைண்டிங் செய்து வைத்திருக்கிறேன்” என்றார் சங்கரன்.

 

தற்கொலை எண்ணம் வராது

“இந்த வயதிலும் இப்படியெல்லாம் மெனக்கெட்டு ஆவணப்படுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “ விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கும் அர்பணிப்போடு விளையாடுபவர்களுக்கும் தான் இதன் அருமை தெரியும். பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகளாக வருகின்றன. பள்ளிகளில் விளையாட்டுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காததே இதற்கெல்லாம் காரணம். விளையாட்டில் கவனம் செலுத்தும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் இருக்காது. அதனால் அவர்களுக்கு தற்கொலை எண்ணமெல்லாம் வராது.

 

சிறப்பு மதிப்பெண்

விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோரிக்கை வைத்தேன். அதை பரிசீலிப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. ஆனால், இன்று வரை பரிசீலிக்கவில்லை. நமது பிள்ளைகளை விளையாட்டின் பக்கம் ஈர்க்க வேண்டுமானால், கேரளத்தைப் போல 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில், விளையாட்டுத் தகுதிக்கென சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும். அப்படி சலுகை மதிப்பெண் பெற்றுத் தருவதற்கு தொடர்ந்து நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார் சங்கரன்.

தங்களைப் பற்றிய ஆவணங்களைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதே சிலருக்கு முடியாத காரியம். ஆனால், விளையாட்டுத் துறை சம்பந்தமாக கடந்த 32 ஆண்டுகளாக தினசரி மற்றும் பருவ இதழ்களில் வந்த முக்கியச் செய்திகள் அனைத்தையும் திரட்டி ஆவணமாக வைத்திருக்கிறார் 91 வயதான டி.சங்கரன்.

 

32 ஆண்டு கால ஆவணம்

பொள்ளாச்சி நகர்மன்ற (ஆண்கள்) பள்ளியில் 1955-ல் தொடங்கி முப்பது ஆண்டுகள் உடற்கல்வி இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர் சங்கரன். பணி ஓய்வுக்குப் பிறகும் இவருக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் விடவில்லை. அதனால், விளையாட்டு சம்பந்தமான முக்கிய நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் இவர், கடந்த 32 ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியான முக்கியமான விளையாட்டுச் செய்திகளை சேகரித்து ஆவணமாக்கி வருகிறார்.

அப்படி, கிரிக்கெட், பேட்மிட்டன், டென்னிஸ், சதுரங்கம் என விளையாட்டுக்கள் சம்பந்தப்பட்ட 61 ஆவணத் தொகுப்புகள் இப்போது இவர் வசம் உள்ளன. கிரிக்கெட் ஜாம்பவான்களான நவாப் பட்டோடி, சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கிர்மானி உள்ளிட்டவர்களைப் பற்றிய முக்கியச் செய்திகள் இவரது ஆவணத்தில் இருக்கின்றன.

 

தரம் பிரிக்கத் தெரியவேண்டும்

இதுமட்டுமல்லாது, பழங்கால நாணயங்கள் தொடங்கி அண்மையில் வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயம் வரைக்கும் சேகரித்து வைத்திருக்கிறார் சங்கரன். பல்வேறு நாடுகளின் பழைய, புதிய கரன்சிகளும் இவரது களஞ்சியத்தில் இருக்கின்றன. விளையாட்டு பற்றி பேசினால் உற்சாகமாகி விடும் சங்கரன், பிஷன் சிங் பேடியின் சுழற்பந்து வீச்சிலிருந்து விராட் கோலியின் பேட்டிங் வரை அசராமல் தடதடக்கிறார்.

ஆவண தொகுப்பு பற்றிப் பேசியபோது, “பணியில் இருக்கும் போதே எங்கள் பள்ளி மாணவர்கள் பற்றிய விளையாட்டுச் செய்திகளை எல்லாம் வெட்டி எடுத்து ஆவணப்படுத்துவேன். அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. பத்திரிகை செய்திகளில், எது முக்கியமான செய்தி, எந்தச் செய்தி எதிர்காலத்தில் வரலாறாகப் பேசப்படும் என்பதை எல்லாம் தரம் பிரிக்கத் தெரியவேண்டும். அத்தகைய செய்திகளைத்தான் நான் வெட்டி எடுத்து தனியாக பைண்டிங் செய்து வைத்திருக்கிறேன்” என்றார் சங்கரன்.

 

தற்கொலை எண்ணம் வராது

“இந்த வயதிலும் இப்படியெல்லாம் மெனக்கெட்டு ஆவணப்படுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “ விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கும் அர்பணிப்போடு விளையாடுபவர்களுக்கும் தான் இதன் அருமை தெரியும். பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகளாக வருகின்றன. பள்ளிகளில் விளையாட்டுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காததே இதற்கெல்லாம் காரணம். விளையாட்டில் கவனம் செலுத்தும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் இருக்காது. அதனால் அவர்களுக்கு தற்கொலை எண்ணமெல்லாம் வராது.

 

சிறப்பு மதிப்பெண்

விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோரிக்கை வைத்தேன். அதை பரிசீலிப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. ஆனால், இன்று வரை பரிசீலிக்கவில்லை. நமது பிள்ளைகளை விளையாட்டின் பக்கம் ஈர்க்க வேண்டுமானால், கேரளத்தைப் போல 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில், விளையாட்டுத் தகுதிக்கென சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும். அப்படி சலுகை மதிப்பெண் பெற்றுத் தருவதற்கு தொடர்ந்து நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார் சங்கரன்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சித்தர் குகைகள், மூலிகை அருவிகள், 70 கொண்டை ஊசிகள்... கொல்லிமலை எனும் மர்மதேசம்! `ஊர் சுத்தலாம் வாங்க'

 
 

WhatsAppImage2017-12-02at5_(1)_19193.jpg

 

டிசம்பர் என்றாலே பாபர் மசூதி, வெடிகுண்டு, சுனாமி, ஜெயலலிதா மரணம் என்று எத்தனை சோகங்கள்! `இந்த மாதம் அப்படி ஏதும் அசம்பாவிதம் நேர்ந்துவிடக்கூடாது’ என்று என்னை மாதிரி நாத்திகர்களையே கடவுளிடம் வேண்டவைப்பதுதான் டிசம்பர் மாத டிசைன். ஆனால், இந்த டிசம்பர் மாதம், என் காதல்களை எல்லாம் தாண்டி நினைவில் நிற்கும் என நினைக்கிறேன். காரணம், கொல்லிமலை ட்ரிப்.

விஷால், தேர்தல் அதிகாரியிடம் கெஞ்சும் வீடியோ மீம் ஒன்றைப்  பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், ஆசிரியரிடம் இருந்து பீப் மெசேஜ். `கொல்லிமலை ட்ரிப்... என்னாச்சு?’

அடடா! ரூம், போட்டோகிராபர் என்று அவசரம் அவசரமாக ஸ்கெட்ச் போட்டேன். சில நேரங்களில் அவசரமும் அவசியமும்தான் வாழ்க்கையை போரடிக்காமல் வைத்துக்கொள்கிறது. தூக்கமே வரவில்லை.

`சம்முவம்... எட்றா வண்டியை’ என்று எனக்கு நானே நாட்டாமையாக மாறி, காலையில் ஒரு மாருதி காரைக் கிளப்பினேன். ‘Meet me @ Trichy...’ என்று ஒரு ஹோட்டல் பெயரைக் குறிப்பிட்டு, போட்டோகிராபருக்கு ஒரு மெசேஜ். `நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலைக்குப் போக, திருச்சிக்கு எதுக்கு வரச் சொல்றான் இந்த ஆளு’ என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் நினைப்பது எனக்குக் கேட்டுவிட்டது. நீங்கள் நினைப்பது ஒரு வகையில் சரிதான்.

சென்னையிலிருந்து கொல்லிமலை செல்பவர்களுக்கு கிட்டத்தட்ட மூன்று வழிகள். வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் வழியாக நாமக்கல் செல்வது ஒன்று. விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் வலதுபுறம் திரும்பி கள்ளக்குறிச்சி வழியாக ஆத்தூர் டச் பண்ணிவிட்டு நாமக்கல் போவது மற்றொரு ரூட். வேலூருக்கு முன்பே இடதுபுறம் திரும்பி ஆரணி, திருக்கோவிலூர் வழியாகவும் ஒரு ரூட் சொன்னது ஜிபிஎஸ். ஆனால், எப்படியும் நாமக்கல் போக வேண்டும். இதுவே திருச்சிக்காரர்களுக்கு என்றால் ரொம்ப ஈஸி. ஏனென்றால், நான் டூர் கிளம்பியதே லேட். திருச்சியில் தங்கிவிட்டுக் கிளம்பினால், டென்ஷன் ஃப்ரீ என்று நினைத்ததுதான் இதற்குக் காரணம்.

கொல்லிமலை

வழக்கம்போல, செங்கல்பட்டு வரை டிராஃபிக் பெப்பே காட்டியது. ஸ்டீரியோவை ஆன் செய்து இளையராஜா பாட்டு போட்டேன். பயணத்துக்கும் இளையராஜாவுக்கும் ஆரம்ப காலங்களில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. திருச்சிக்குப் பக்கத்தில் ஏதோ ஒரு டோல் தாண்டும்போது, `நீங்க வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?’ என்ற போட்டோகிராபரின் மெசேஜுக்கு, `எட்டு இளையராஜா பாட்டு' என்று ரிப்ளை செய்தேன். (உபயம்: `வலைபாயுதே' )

ஆட்டுக்கு தாடி மாதிரியும் நாட்டுக்கு கவர்னர் மாதிரியும் இந்த டோல்கேட்டுகள். நெடுஞ்சாலைக்குத் தேவைதானா என்றொரு சந்தேகம், எனக்கு ரொம்ப நாளாக இருக்கிறது. (தெரிந்தவர்கள் கமென்ட் செய்யலாம்.) நல்ல சாலை இருந்தால்தான் பயணம் ஸ்மூத்தாக இருக்கும். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கரடுமுரடான ரோடுகளுக்கும் டோல் பில்லை கலெக்ட் செய்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில டோல்களில், இலங்கை கிரிக்கெட் டீம்போல் தகிடுதத்தமெல்லாம் பண்ணுகிறார்கள். விழுப்புரம் டோல்கேட்டில், என் பில்லை செக் செய்தேன். வேறு ஏதோ ஒரு கார் நம்பர் இருந்தது. இறங்கி சண்டை போட்ட பிறகு, வேறு பில் தந்தார்கள். இன்னொரு டோலில், கார் நம்பர் என்கிற இடத்தில் இரண்டு கார்களையே நிறுத்திவிடலாம்போல் காலி இடம்தான் இருந்தது. பிறகு நயமாக விசாரித்தேன். அதாவது, சில தனவான்களுக்கு டோல்களில் நிற்பதற்கு நேரமெல்லாம் இருக்காது. பில்லை வாங்கக்கூட நேரமில்லாத அவர்கள், விட்டுச்செல்லும் பில்களை இப்படிக் கைமாற்றிவிடுவது நடப்பதாகத் துப்பறிந்தேன். ஒருசிலர், டெம்ப்ளேட் பில்லெல்லாம் ரெடி பண்ணி வைத்துக்கொள்வதாகவும் சொன்னார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், வெளியூர் நம்பர் பிளேட்கொண்ட கார்களில் பயணம் செய்பவர்களுக்கு, டோல் பில் என்பது மிகவும் முக்கியம். MH ரிஜிஸ்ட்ரேஷன் கார் வைத்திருந்த என் நண்பர், டோல் பில் இல்லாததால், நெடுஞ்சாலை RTO-வில் 50,000 ரூபாய் வரை தண்டம் அழுதார்.

திருச்சியில் நன்றாகத் தூங்கினேன். புகைப்பட நிபுணர் உற்சாகமாகக் கிளம்பினார். வழக்கம்போல பிரேக்ஃபாஸ்ட்டை ஸ்லோவாகவே முடித்து, லேட்டாகத்தான் கிளம்பினேன். ஸாரி, கிளம்பினோம். முசிறி, தொட்டியம் வழியாக கார் பறந்தது. மதியம் வந்திருந்தது. `பசிக்குது பாஸ்’ என்பதுபோல வயிற்றைத் தடவி குறிப்பால் உணர்த்தினார் புகைப்பட நிபுணர். `அட, லன்ச் வந்திடுச்சு!’ வேலைன்னு வந்துட்டா வேலைக்காரனாக மாறிவிடும் என்னைப் பற்றித் தெரிந்துதான், அவர் ஞாபகப்படுத்தியிருப்பார். நெடுஞ்சாலையில் செல்பவர்கள் ஹோட்டல்களில், மோட்டல்களில் நுழைந்து தண்டம் அழுவதைவிட, நல்ல ஆப்ஷன் சொல்கிறேன். `மண்பானைச் சமையல்' என்று போர்டு தென்பட்டால், தைரியமாக உள்ளே நுழையலாம். நாமக்கல் செல்லும் பாதை முழுக்க மண்பாண்டச் சமையல் குடிசைகள் ஏராளம். அதுவும் அசைவப் பிரியர்களுக்கு சிக்கன், மட்டன், மத்தி மீன் குழம்பு என்று மத்தியான சாப்பாடு, செ`மத்தியான’ சாப்பாடுதான். நீங்களே ஒரு நாட்டுக்கோழியைத் தேர்ந்தெடுத்து சூப், குழம்பு, வறுவல் எனப் பொறுமையாக உண்டு கழித்துவிட்டுச் செல்லலாம். `ஜிஎஸ்டி-தான் குறைஞ்சிடுச்சே’ என்பவர்களுக்கு, நல்ல ரெஸ்டாரன்ட்களும் இருக்கின்றன.

கொல்லிமலை

நாட்டுக்கோழி ஏப்பம் வந்தது. அடுத்து, சேந்தமங்கலம் என்றோர் ஊர் வந்தது. பஸ்ஸில் வருபவர்களுக்கு சரியான ஆப்ஷன், சேந்தமங்கலம். நாமக்கல் அல்லது  சேந்தமங்கலத்திலிருந்து பேருந்து வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சேந்தமங்கலம் தாண்டி 15 கி.மீ-க்கு முன்பாகவே மொத்த மலையும் தெரிய ஆரம்பிக்கிறது.

கார்களில் வருபவர்களுக்கு ஒரு டிப்ஸ். தமிழகத்தில் செம ட்ரிக்கான மலைப்பாதையைக் கொண்டது கொல்லிமலை. எத்தனை வளைவு நெளிவுகள்... ஏற்ற இறக்கங்கள்! கொண்டை ஊசி என்பது, கொல்லிமலைக்குத்தான் பொருந்தும். `இப்போதான் கார் வாங்கிப் பழகிட்டிருக்கேன். அப்படியே கொல்லிமலைக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம்'னு என்று யாராவது நினைத்திருந்தால், சேந்தமங்கலத்திலேயே `யூ-டர்ன்’ அடித்துவிடுங்கள். வாகனம் ஓட்டப் பழகுவதற்குச் சரியான இடம் அல்ல கொல்லிமலை. இங்கு, நீங்கள் ஒருமுறை பாதுகாப்பாக கார் ஓட்டிவிட்டால், உங்களைப்போல திறமையான ஓட்டுநர் எவரும் இல்லை.

செக்போஸ்ட் இருந்தது. எம்.எல்.ஏ-க்கள் இல்லாத கூவத்தூர் ரிசார்ட் மாதிரி காலியாகவே இருந்தது. ``கீழே வருவதற்கு டைமிங் உண்டா’' என்று விசாரித்தேன். ``அப்படி ஏதும் இல்லை'' என்றார்கள். காரவள்ளியிலிருந்து மலைப்பாதை ஆரம்பித்தது. சும்மா இல்லை; மொத்தம் 70 கொண்டை ஊசிகள். 4 மீட்டருக்கு மேற்பட்ட செடான் கார் என்றால், அதன் டர்னிங் ரேடியஸ் மலைத்திருப்பங்களில் பத்தாது. ட்ரக், பஸ் போன்ற பெரிய வாகனங்கள், கொல்லிமலை அடிவாரமான காரவள்ளி வரைதான் அனுமதிக்கப்படுகின்றன. சில 100/150 சிசி பைக் ரைடர்கள் திணறிக்கொண்டிருந்தார்கள். நான், சில இடங்களில் ரிவர்ஸ் வருவது, அப்புறம் மேலேறுவது என பழக்கமாக்கிக்கொண்டேன். மலைச் சாலைகளில் ஏறும் வாகனங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழக டிரைவர்கள் இதில் கவனமாக இருந்தது வியப்பு! இறங்கும்போது, இது எனக்கும் பொருந்தும். தயவுசெய்து, மலையில் மேலேறுபவர்களுக்கு வழிவிடுங்கள்.

கொல்லிமலை

பரீட்சைக்குப் போகும் மாணவனின் மனநிலையில் இருந்தேன். அபூர்வமான மூலிகைகள், குள்ளர் குகை, சிறுதானியங்கள், மூச்சு முட்டும் மூலிகை அருவிகள் என கொல்லிமலையைப் பற்றி ஏற்கெனவே கூகுள் செய்திருந்தேன். கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1,300 மீட்டர் உயரம் என்றார்கள். மலை உச்சியிலிருந்து பார்த்தால், பச்சை பச்சையாக இச்சையைத் தூண்டியது மொத்த அழகும். சாயங்காலத்துக்குள்  70 கொண்டை ஊசிகளையும் தாண்டியிருந்தேன்.

செம்மேடு வந்திருந்தது. இதுதான் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். அழகிய பள்ளத்தாக்கிலிருந்து எட்டிப்பார்ப்பதுபோல இருந்தது ஊர். இந்தக் கிழக்குத்தொடர்ச்சி மலையில் வெயிலுக்கு என்ட்ரி போர்டே இருக்காதுபோல! செம குளிர். பழைய ஹாலிவுட் படங்களில் வரும் வின்டேஜ் கிராமம்போல இருந்தது. ஒன்றிரண்டு ஹோட்டல்கள், ஒரே ஒரு பஸ் ஸ்டாண்ட், அதில் ஒரே ஒரு பஸ் நின்றது. ``இதான் கடைசி பஸ்’’ என்றார்கள். ஊரில் ஏதோ ஒரு வாசம் அடித்துக்கொண்டே இருந்தது. மனித மணம் குறைவு என்பதால், மாசுக்குறைபாடே இல்லாமல் இயற்கை மணத்துடன் நிறைந்திருந்தது செம்மேடு.

கொல்லிமலை

கொல்லிமலைக்கு சீஸன் டைம் என்ற ஒன்றே கிடையாது. எனவே, சுற்றுலாவாசிகள் தங்குவதற்கு எப்போதுமே பிரச்னை வந்ததே இல்லையாம். ரூம் விசாரித்தேன். என்னைப் போன்ற முன்ஜாக்கிரதைப் பேர்வழிகளைப் பார்த்து, `போயா லூஸு' என்பதுபோல பல்லிளித்தன காலியாக இருந்த சில காட்டேஜ்கள். நான், ஏற்கெனவே ரூம் புக் செய்திருந்தேன். 600-லிருந்து 1,500 வரை ரூம்கள்  கிடைக்கின்றன. செம்மேட்டில் இருந்த `வசந்த மாளிகை’ எனும் ஹோட்டலில் குளிரக்குளிர பரோட்டாவைப் பிய்த்துப்போட்டு, ரூமில் தஞ்சம் புகுந்தோம்.

திடீரென இரவில் கண்விழித்தேன். கனவில் கொல்லிப்பாவை வந்தது. நான் ஸ்டேட் போர்டு என்பதால், பள்ளியில் கொல்லிப்பாவை பற்றிப் படித்தது ஞாபகம் வந்திருக்கலாம். மற்றபடி CBSE மாணவர்களுக்கு பாரி, ஓரி, கொல்லிப்பாவை எல்லாம் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. `பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்று ரஜினிக்கு முன்பே, பள்ளி வயதிலேயே எனக்கு பன்ச் டயலாக் சொல்லி மிரட்டியது கொல்லிமலைதான். `இங்கே போறவங்களை எல்லாம் அந்தக் கொல்லிப் பேய் கொன்னுடுமாம்’ என்று பயமுறுத்தி இருந்தார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. இங்குள்ள மூலிகைகளைக் காப்பதற்காக சித்தர்கள் செய்த ட்ரிக்.

கொல்லிமலை

மறுநாள் ரெஃப்ரெஷ்மென்ட், அதே வசந்த மாளிகையில்தான். வழக்கம்போல, குளு குளு தோசை. வல்வில் ஓரி எனும் மாவீரன் ஆண்ட இடம் கொல்லிமலை. ஒரே அம்பில் யானை, புலி, கலைமான், பன்றி, உடும்பு என்று  ஐந்து விலங்குகளைப் பதம்பார்த்த வில்லாளன். மலைப்பாதையில் வல்வில் ஓரி பற்றி ஓவியம் வரைந்திருந்தார்கள். இங்கே, ஓரிக்குத் திருவிழாகூட நடக்கிறது. செம்மேட்டின் நடுவில் ஓரிக்குச் சிலை வைத்திருக்கிறார்கள். ஊர்க்காரர் ஒருவரிடம் விசாரித்தேன். ``ஆகஸ்ட் மாதம்தான் முடிஞ்சது’’ என்று எனக்காக நிஜமாகவே வருத்தப்பட்டார்.

அப்படியே வலதுபுறத்தில் வண்டியைத் திருப்பினேன். ``ஏதோ வியூ பாயின்ட் இருக்குன்னு சொன்னாங்களே...’' என்று விசாரித்தேன். சீக்குப்பாறை, சேளூர், கோயிலூர் என மூன்று வியூ பாயின்ட்களைக் காட்டினார்கள். பில்லரிலிருந்து பார்த்தால், சில ஆயிரம் அடிகளுக்குப் பரந்துவிரிந்து மனதைக் கொள்ளைகொண்டது கொல்லிமலை அடிவாரம். குழந்தைகளைக் கூட்டிச் செல்பவர்கள், ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பு ஏதும் இல்லை.

கொல்லிமலையில் ரொம்ப ஃபேமஸ், அரப்பளீஸ்வரர் ஆலயம். 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலை அந்தக் காலத்தில் எப்படிக் கட்டியிருப்பார்கள் என்று கோயிலைச் சுற்றிச்சுற்றி வந்து இன்ஜினீயர்போல யோசித்தேன். `டைம் மெஷின் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்’ எனத் தோன்றியது. ராசிபுரத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு, அரப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து சுரங்கப்பாதை ஒன்று அந்தக் காலத்தில் கட்டியதாகச் சொல்கிறார்கள். ``இன்னும்கூட இருக்கு!’’ என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னார் ஒரு முண்டாசுப் பெருசு. அருவியில் குளிக்க, மலை ஏற என்பதைத் தாண்டி அரப்பளீஸ்வரர் கோயிலுக்காகவே சில பக்தர்கள் கொல்லிமலைக்கு மலையேறுகிறார்கள்.

 

கொல்லிமலை

`ஹிஸ்டரி, கோயில்னா நமக்கு அலர்ஜிங்க’ என்பவர்களுக்காகவே இருக்கிறது ஆகாச கங்கை அருவி. 140 அடி உயரத்தில் ஆகாசத்திலிருந்து கொட்டுவதுபோல இருப்பதால், இதற்கு `ஆகாச கங்கை அருவி' என்று பெயர். இந்த அருவிக்கும் சீஸன் இல்லையாம். `வெச்சா பரட்டை; சிரைச்சா மொட்டை’ என்பதுபோல  சில அருவிகள், சில நேரங்களில் `கரகாட்டக்காரன்' சண்முக சுந்தரம்போல ஓவராகப் பொங்கும்; பல நேரங்களில் கோவணத் துணிபோல தொங்கும். ஆகாச கங்கை அப்படி அல்ல. திருமண வீட்டில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி எந்நேரமும் வேலைபார்த்துக்கொண்டே இருக்கும் தந்தைபோல, 24/7 விழுந்துகொண்டே இருக்கிறது ஆகாச கங்கை. 

`நோ பெய்ன்; நோ கெய்ன்’ என்பதுபோல, ஆகாச கங்கையை அசால்ட்டாக அடைய முடியாது. வாசலில் இருக்கும் அரப்பளீஸ்வரர் கோயிலில் காரை பார்க் செய்துவிட்டு, குளிர் தோசை செமிக்கும் அளவுக்கு 1,200 படிகள் இறங்கித்தான் ஆகாச கங்கையில் தஞ்சமடைந்தேன். பாதி படியிலேயே சிலர், எதிர்க்கட்சிக்காரர்களிடம் அடிவாங்கிய வண்டுமுருகன்போல சுருண்டுகிடந்தார்கள். ``இறங்கும்போது ஒண்ணும் தெரியமாட்டேங்கு; ஏறும்போது மூச்சு வாங்குதுடே!’’ என்றார் ஒரு குடும்பத் தலைவர். திருநெல்வேலியில் இருந்து வந்திருப்பார்கள் என்று நான் நினைத்தது சரியாக இருந்தது. ``எங்கூர்ல தாமிரபரணி ஆத்துல குளிக்கிறகணக்கா சுகமாத்தாம் இருக்கு. ஆனா, ஏற முடியலை பார்த்துக்கிடுங்க!’’ என்றார். இவர்களுக்காகவே, மேலே கோயில் வாசலில் சிற்றருவி ஒன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். அடம்பிடிப்பவர்களை ‘வாக்கிங் அட் ஓன் ரிஸ்க்’ என்று எச்சரித்துதான் அனுப்புகிறார்கள்.

கொல்லிமலை

அய்யாற்றிலிருந்து விழும் அருவி நீரைத் தலைக்கு வாங்கினால், ‘தொம் தொம்’ என ஆசீர்வசிப்பதுபோலவே இருக்கிறது. 300 அடி என்றார்கள். எனக்கு நிறைய அடி விழுந்தது. அண்ணாந்து மேலே பார்த்தேன். ‘ஆகாச கங்கைனு சரியாகத்தான் பேர் வெச்சிருக்காங்க’ என்று நினைத்துக்கொண்டேன்.

அருவியை ஒட்டினாற்போல சருகுகளில் சறுக்கியபடி லேசாக நடந்துபோனால், ஒரு குகை தெரிந்தது. பாம்பாட்டிச் சித்தர் குகை என்றார்கள். சித்தர்கள் காலத்தில் இந்தப் பாம்பாட்டிச் சித்தர் ரொம்ப ஃபேமஸ்போல. அவர் இந்தக் குகையில் தங்கியிருந்ததால், அவர் பெயரையே இந்தக் குகைக்கு வைத்துவிட்டார்கள். ‘மனிதர் உணர்ந்துகொள்ள’ என்று சவுண்டு விட்டுப் பார்த்தேன். `குணா' குகைபோல எக்கோ அடித்தது.

`குள்ளர் குகை' என்றோர் இடத்தைக் காண்பித்தார்கள். காமெடியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. அந்தக் காலத்தில் குள்ளர்கள் இருந்ததாகவும், இதுதான் அவர்களின் வீடாக இருந்தது என்றும் சொன்னார்கள்.

மறுபடியும் 1,200 படி மேலே ஏறுவதற்கு வார்ம்-அப் செய்துகொண்டேன். இந்த முறை நான் வண்டுமுருகன் ஆனேன். ``வேற ஏதும் அருவி இருக்கா?’’ என்று விசாரித்தேன். `மாசிலா அருவி' என்று ஓர் அருவியைக் காட்டினார்கள். தான் வரும் வழியெல்லாம் இருக்கும் மூலிகைகளைக் கட்டியணைத்து, அவற்றின் சிறப்புகளைத் தன்னிலடக்கி, ஸ்படிகம் போன்ற தண்ணீரைத் தரும் அருவி என்பதால், மாசிலா அருவி. ஆகாச கங்கைபோல பிரமாண்டமாக இல்லை என்றாலும் அருவிக்கான வசீகரத்துக்குக் குறைவில்லை.  தண்ணீர்ப் பஞ்சத்தில்தானே அடிக்கடி குளிக்கக்கூடாது? அருவிக்கு இது பொருந்தாது. மீண்டும் அருவிக் குளியல். தலை நனைக்கும்போதே ஆனந்தமாக இருந்தது. ஒரு மகிழ்ச்சியான விஷயம் - ஆகாச கங்கைபோல, படிகளெல்லாம் இறங்கி மூச்சுவாங்க வேண்டியதில்லை. இது தவிர, வாண்டுகளுக்கு என்று ஓர் ஆப்ஷன் இருக்கிறது. `நம்ம அருவி'. வீட்டில் குழாயைத் திருக்கிவிட்டால் தண்ணீர் விழுமே... அதுபோல செல்லமாக விழுவதுதான் நம்ம அருவியின் ஸ்பெஷல். இதற்கு சீஸன் உண்டு. கோடைக்காலங்களில் ‘கிணறு காணாமல்போன’ கதையாக, அருவியையே தேடவேண்டியிருக்கும் என்றார்கள். 

கொல்லிமலை

`போட்டிங் போனா தேவலாம்’ என்று மனசு சொல்லியது. வாசலூர்ப்பட்டி என்கிற இடத்தில் போட்டிங் சவாரிக்கு ஆள் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். ரொம்ப மலிவாக இருந்தது. 50 ரூபாய்தான் கட்டணம் வாங்கினார்கள். செம ஜாலியாக இருந்தது. சின்ன ஏரியில் ஆபத்தே இல்லாத வாத்துப் படகில் மிதந்தபடி போனேன்.  சில இடங்களில் போட்டிங் போனால் டெரராக இருக்கும். இந்த போட்டிங், `தடால்’ என தண்ணீருக்குள் டைவ் அடிக்க வேண்டும்போல இருந்தது. `நீச்சல் தெரிஞ்சா பயமே தேவையில்லை’ என்று யாரோ தைரியமூட்டியதுதான் காரணம். ஏரியும் அவ்வளவாக ஆழமில்லை.

கொல்லிமலை

கொல்லிமலை, வாழவந்தி நாடு, வளப்பூர், அரியூர், தின்னனூர், குண்டூர், சேளூர், தேவனூர், ஆலந்தூர், குண்டுனி, திருப்புலி, எடநாடு என்று 16 நாடுகளைக்கொண்ட கொல்லிமலையில், 20,000-த்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள்.

அரிய மூலிகைகளின் புதையலாக இருப்பதால்தான், மற்ற அருவிகளைவிட கொல்லிமலை அருவிகளுக்கு ஒரு மதிப்பு. ஜோதிப்புல், ஆளை மறைக்கும் ஆதள மூலிகை, ஆயுளைக் கூட்டும் தினை, ராகி, வரகு என ஏகப்பட்ட சிறுதானியங்கள் கொல்லிமலையில் விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள் மலைவாழ் மக்கள். ஆதள மூலிகையைப் பற்றி ஓர் அதிசயம் சொன்னார்கள். இந்த மூலிகையின் இலையைக் கிள்ளி, அதிலிருந்து வரும் பாலுடன் கரும்பூனையின் முடியைப் போட்டு, செம்புப் பாத்திரத்தில் சுடவைத்து, மலைத்தேன் கொண்டு பிசைந்து, உருண்டையாக்கி, செப்புத் தகடு இந்திரத்தினுள் மூடி, வாயில் போட்டு அதக்கினால்... யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையலாம் என்றார்கள். கேட்கும்போதே மூச்சு முட்டியது... கண்ணைக் கட்டியது!

கொல்லிமலையில் ஓர் ஆச்சர்யம் - சமதளத்தில் பயிரிடப்படுவதைப்போல, இந்த மலைக் கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது. அதற்கான சீதோஷ்ணநிலைதான் இதற்குக் காரணம். ஓர் இடத்தில் மிளகு புரொடக்‌ஷன் நடந்துகொண்டிருந்தது. நாம் சூப்பர் மார்க்கெட் மற்றும் அண்ணாச்சி கடைகளில் வாங்கும் பாக்கெட் மிளகு, தேர்டு குவாலிட்டி என்கிற உண்மை அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. ``இதைச் சவைச்சுப் பாருங்க’’ என்று இனிப்பாகப் பேசி காரமான ஒரு குறுமிளகைக் கொடுத்தார், ஓர் அக்கா. ஃபர்ஸ்ட் குவாலிட்டிபோல. கண்கள் வியர்க்க ஆரம்பித்தன. அரைக்கிலோ 250 ரூபாய்க்கு ஃபர்ஸ்ட் குவாலிட்டியை பேக் செய்து கொண்டோம்.

கொல்லிமலை

இது தவிர அன்னாசிப்பழம், பலா, வாழை, மரவள்ளிக்கிழங்கு, ஏலக்காய், தேன் என வழியெங்கும் விளைவித்துக்கொண்டிருந்தார்கள். கொல்லிமலை மொத்தம் 250 ச.கி.மீதான் என்பதாலும், முட்டை வடிவில் இருக்கும் என்பதாலும்  நீங்கள் எங்கு காணாமல்போய் அலைந்தாலும், உங்கள் கார் தானாகவே செம்மேட்டில்தான் வந்து நிற்கும். கன்னாபின்னாவென சந்து பொந்துகளுடன் ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ‘ரூட் மாறிடுச்சோ’ எனக் கவலைப்பட வேண்டியதில்லை.

ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டைமில் லன்ச் முடித்தோம். டூர் முடித்துவிட்டு வந்தது தெரியாமல், ``சார், கார் வேணுமா? டவேரா சார்... 6 பேர் சார்... 6 இடம் சுத்திக் காண்பிக்கிறோம்... 1,700 ரூபாய்தான் சார். உங்களுக்காக கம்மி பண்ணிக்கலாம் சார்’’ என்று சுற்றிவளைத்தார்கள் கைடுகள். பஸ்களில் வருபவர்களுக்கு இவர்கள்தான் சரியான ஆப்ஷன். நாம் கார் கஸ்டமர்கள் என்பதைத் தெரிந்துகொண்டதும், அவர்கள் முகம் வாடியது. நல்ல கஸ்டமர்கள் கிடைக்க வேண்டிக்கொண்டேன்.

செம்மேட்டிலிருந்து மலை இறங்க ஆரம்பித்தேன். மலை ஏறும்போது கனவுகளைச் சுமந்து ஏறியவன், இப்போது நினைவுகளைச் சுமந்து இறங்கிக்கொண்டிருந்தேன்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர் ஹோமை வியாரவல்லா பிறந்த தினம்: டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

 
 
photopng

கோப்புப் படம்: கூகுள் வெளியிட்ட டூடுல்

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரான ஹோமை வியாரவல்லா பிறந்த நாளையொட்டி கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

ஹோமை வியாரவல்லா குஜராத்திலுள்ள நவ்சாரி பகுதியில், 1912ம் ஆண்டு டிசம்பர் 9-தேதி பார்சி குடும்பத்தில் பிறந்தார். அதன் பிறகு மும்பையிலுள்ள சேவியர் பல்கலைகழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

கணவர் மானக்‌ஷா மூலம்தான் புகைப்படத்துறை ஹோமைக்கு அறிமுகமாகியுள்ளது.

1942ம் வருடம் டெல்லிக்கு குடி பெயர்ந்த இவர் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீசஸில் பணிபுரிந்தார்.

இந்தக் காலக்கட்டங்களில் மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் பிரபலமான புகைப்படங்களை எடுத்தார் ஹோமை.

ஒரு நல்ல புகைப்படம் என்பது காலம், கோணம், ஒருங்கமைப்பு ஆகியவற்றை பொறுத்து அமையும் என்பதில் ஹோமை நம்பிக்கை கொண்டிருந்தார்.

தி இந்து (ஆங்கிலம்) அளித்த நேர்காணல் ஒன்றில் ஹோமை பேசும்போது, "ஒரே நேரத்தில் ஒரு புகைப்படத்தை எடுக்க 15 பேர் உள்ளனர். அனைவருக்கும் புகைப்படம் எடுப்பதில் தனித்தனியான பாணி இருக்கும். ஆனால் அவர்களில் ஒருவரே சரியான நிகழ்வை சரியான கோணத்தில் எடுப்பார்" என்றார்.

ஹோமை வியாரவல்லா பணியைப் பாராட்டி இந்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இவ்வாறு புகைப்படத் துறையில் பெண்கள் பலருக்கும் முன்னோடியாக விளங்கிய ஹோமை வியாரல்லா 2012-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரான ஹோமை வியாரவல்லா பிறந்த நாளையொட்டி கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

ஹோமை வியாரவல்லா குஜராத்திலுள்ள நவ்சாரி பகுதியில், 1912ம் ஆண்டு டிசம்பர் 9-தேதி பார்சி குடும்பத்தில் பிறந்தார். அதன் பிறகு மும்பையிலுள்ள சேவியர் பல்கலைகழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

கணவர் மானக்‌ஷா மூலம்தான் புகைப்படத்துறை ஹோமைக்கு அறிமுகமாகியுள்ளது.

1942ம் வருடம் டெல்லிக்கு குடி பெயர்ந்த இவர் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீசஸில் பணிபுரிந்தார்.

இந்தக் காலக்கட்டங்களில் மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் பிரபலமான புகைப்படங்களை எடுத்தார் ஹோமை.

ஒரு நல்ல புகைப்படம் என்பது காலம், கோணம், ஒருங்கமைப்பு ஆகியவற்றை பொறுத்து அமையும் என்பதில் ஹோமை நம்பிக்கை கொண்டிருந்தார்.

தி இந்து (ஆங்கிலம்) அளித்த நேர்காணல் ஒன்றில் ஹோமை பேசும்போது, "ஒரே நேரத்தில் ஒரு புகைப்படத்தை எடுக்க 15 பேர் உள்ளனர். அனைவருக்கும் புகைப்படம் எடுப்பதில் தனித்தனியான பாணி இருக்கும். ஆனால் அவர்களில் ஒருவரே சரியான நிகழ்வை சரியான கோணத்தில் எடுப்பார்" என்றார்.

ஹோமை வியாரவல்லா பணியைப் பாராட்டி இந்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இவ்வாறு புகைப்படத் துறையில் பெண்கள் பலருக்கும் முன்னோடியாக விளங்கிய ஹோமை வியாரல்லா 2012-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

http://tamil.thehindu.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

வெள்ளத்தில் பிறந்த காதல் (காணொளி)

  • தொடங்கியவர்
 
ஏலத்தில்  விடப்பட்ட கிராமம்!!
 
 

ஏலத்தில் விடப்பட்ட கிராமம்!!

கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆல்வின் என்ற கிராமம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் யூரோக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் பல கட்டிடங்கள் உள்ள நிலையில் வயதான 20 நபர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிறன்று கிராமத்தின் நுழைவாயிலில் முழு கிராமத்தையே ஒரு லட்சத்து 25 ஆயிரம்யூரோக்களுக்கு ஏலத்தில் விடுவதாக விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது இக்கிராமத்தை சுற்றியுள்ள இடங்களில் இளைஞர்களுக்கு ஹிட்லர் பயிற்சி அளித்தாராம்.

 ஜேர்மனி ஒன்றாக இணைந்தபோது 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்ததாகவும் 1991 ஆம் ஆண்டு Coal Briquette Plant மூடப்பட்டபோது பலரும் வேலைக்காக கிராமத்தை விட்டு வெளியேறியதாகவும் Andreas Claus என்ற மேயர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிராமத்தைக் காலி செய்துவிட்டு மேற்கு ஜேர்மனி நோக்கி சென்ற இளைஞர்கள் மீண்டும் திரும்பிவரவில்லை என 1945ஆம் ஆண்டில் இருந்து வசித்து வரும் பீற்றர் என்பவர் தெரிவித்துள்ளார்.

http://newuthayan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விலங்குகளை வேட்டையாடும் மனித மிருகம்! #AnimalTrafficking -

 
 

"காசு எதையும் செய்யும் என்றால் அந்தக் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்" என்றொரு சினிமா வசனம் வரும். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு உலகம் முழுக்க நடக்கும் விலங்குகள் கடத்தல்கள். உயிரோடு இருக்கும் காண்டாமிருகத்தின் கொம்புகளைத் துடிதுடிக்க வெட்டுவதில் ஆரம்பித்து தேவாங்கின் பல்லை உயிரோடு பிடுங்குவது வரை ஹிட்லர் காலத்துச் சித்ரவதைகள் எல்லாம் இப்போது விலங்குகளுக்குச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 

புலி, யானை, காண்டாமிருகம், பாம்பு, தேவாங்கு, எறும்புத் தின்னி, தவளை, பூச்சிகள், ஆமைகள், மீன்கள், பறவைகள் என ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு சந்தை இருக்கிறது. லட்சங்களில் ஆரம்பித்து கோடிகளில் விலை  நிர்ணயிக்கப்படும் விலங்குகள் எல்லாம் அழிந்து வரும் உயிரினங்களின் முதன்மைப் பட்டியலில் இருப்பவை. உலகெங்கிலும் செயல்படும் கறுப்புச் சந்தைகள் விலங்குகள் கடத்தலை மறைமுகமாக உலகமயமாக்கி வருகிறது. இந்தக் கடத்தல் உலகின் இப்போது ஹாட் பாம்பு விஷம் கடத்தல்.

 

விலங்கு கடத்தல்

சம்பவம் 1:
2016-ம் ஆண்டும் அக்டோபர் மாதம். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் பெலகோபா பகுதியில் பாம்புகள் கடத்தப்படுவதாக வனத்துறைக்குத் தகவல் வருகிறது. சோதனைச்சாவடியில் தேடுதலைத் தீவிரமாக்குகிறார்கள். அப்போது அங்கே வந்த 3 பேரிடம் விசாரிக்க, அவர்கள் பையில் குங்குமப்பூ இருப்பதாகச் சொல்கிறார்கள். உள்ளே, கண்ணாடிக் குவளையில் குங்குமப்பூக்கள் மணக்கின்றன. இருந்தும் சந்தேகம் குறையாமல் குவளைகளைத் திறந்த வனத்துறைக்கு அதிர்ச்சி. உள்ளே இருந்தது பாம்பு விஷம். கைப்பற்றப்பட்ட விஷத்தின் இந்திய மதிப்பு 250 கோடி. சர்வதேச சந்தையில் 2000 கோடி. 2000 கோடியை அப்படி அசால்ட்டாக எடுத்துச் செல்வார்களா?. ஆம் என்கிறார்கள் சர்வதேச விலங்கு ஆர்வலர்கள். உங்களுக்குத் தெரியுமா, வானில் பறக்கும் ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பாம்பாவது கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.


சம்பவம் 2:
மே 10 2017. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மேற்கு வங்க மாநிலம் மல்டா நகரத்துக்கு WB-59-A-5762 எண் கொண்ட பேருந்தில் தங்கம் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைக்கிறது. உடனடியாக களத்தில் இறங்கிய வீரர்கள் கசல் புனியட்புர் சாலையில் காத்திருக்கிறார்கள். தவுலத்பூர் என்கிற கிராமத்தில் பேருந்தை மடக்கி சோதனை செய்ததில் லக்கேஜ் பகுதியில் கிடந்த கறுப்பு நிற பையை போலீஸ் கைப்பற்றியது. தங்கம் என நினைத்து சோதனை செய்ததில் உள்ளே இருந்தது 1.170 கிலோ பாம்பின் விஷம். மூன்று ஜார்களில் கடத்தியிருக்கிறார்கள். அந்த மர்மப் பையை சோதனை செய்ததில் அதன் அடையாளங்கள் பிரான்சில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பிரான்சிலிருந்து கடத்திவரப்பட்ட அந்த விஷம் பங்களாதேஷ் வழியாகக் கடத்தப்பட்டது தெரியவந்தது. ஜாடி மற்றும் அதன் உள்ளடக்கங்கள் மல்டாவில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதன் இந்திய மதிப்பு 100 கோடி. பூட்டான் மற்றும் நேபாளத்தில் விஷம் கொண்ட ஒரு  ஜாரை எல்லைதாண்டி கடத்துவதற்கு ரூ.1 லட்சம் வரை கடத்தல்காரர்கள் தருவதாகப் பிடிபட்ட நபர்கள் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

வேறெந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் வருடத்துக்கு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷம் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியாவின் எல்லையில் 50 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதால், சிலிக்கூரி நகரம் தரைவழி கடத்தலுக்கு முக்கியப் பங்காற்றுகிறது. நேபாளத்துக்கும் பூட்டானுக்கும் இடையேயான எல்லைகளைக் கடந்துசெல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. இதனால் சர்வதேச நிலத்தடி நடவடிக்கைகளுக்கு மேற்குவங்க எல்லைகளைப் பயன்படுத்துகிறார்கள். தரைவழியாக எளிதில் கடத்திவிடலாம் என்பதால் கடத்தல்காரர்கள் இந்திய பங்களாதேஷ் எல்லையையும் குறி வைத்திருக்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்பு மண்ணுளிப் பாம்புக்கு இந்திய அளவில் மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதாகத் தகவல் பரவியது. இருக்கிற தொழிலையெல்லாம் விட்டுவிட்டு இரவுப் பகலாக ஒரு கும்பல் மண்ணுளிப் பாம்பை தேடித் திரிந்தது. “மாப்ள என்கிட்ட ஒரு பார்ட்டி இருக்கு. ஒரு பீஸுக்கு (மண்ணுளி) 30 லட்சம். எங்க இருந்தாலும் புடிச்சிட்டு வந்திரு மாப்ள” இப்படிப் படித்தவர் படிக்காதவர் என எல்லோரையும் சில காலம் அலைய வைத்தது மண்ணுளிப் பாம்பு. ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து கோடி வரை விலை போவதாக அதைத் தேடியவர்கள் பிடிபட்டதும் சொல்லியிருக்கிறார்கள். மண்ணுளிப் பாம்பினால் எந்தப் பயனுமில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் மண்ணுளிப் பாம்புதான் முன்னிலையில் இருக்கிறது. 

பாம்புகளின் விஷம்தான் பாம்புக் கடிக்கு மருந்தாக உலகம் முழுவதும் பயன்பட்டு வருகிறது. நல்லப் பாம்பு, கண்ணாடி விரியன், கட்டை விரியன், சுருட்டைப் பாம்பு ஆகிய நான்கு பாம்புகளின் விஷத்தையும் சரிவிகித அளவில் கலந்து விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட விஷமுறிவு மருந்தைத் தேர்ந்தெடுக்கப்படுகிற குதிரைகளுக்குச் செலுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தப்பட்டிருக்கும் விஷத்துக்கு எதிர் மருந்தை (ANTIBODIES) குதிரையின் உடல் தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும். விஷ முறிவு (ANTIVENOM) குதிரையின் உடலில் உற்பத்தி செய்யப்பட்டவுடன் குதிரையின் எடையில் ஒரு சதவிகிதம் என்கிற கணக்கில் குதிரையின் ரத்தம் எடுக்கப்படும். விஷமுறிவு திரவம் பிரித்தெடுக்கப்பட்டபின், எடுக்கப்பட்ட அளவுக்கான ரத்தம் உடனடியாக குதிரைக்குச் செலுத்தப்படும். உலக அளவில் எல்லா நாடுகளிலும் விஷமுறிவு மருந்து தயாரிக்க இந்தமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. 

பாம்பு

பாம்பு விஷயத்தில் பல கடுமையான சட்ட திட்டங்கள் அமலில் இருக்கின்றன. விஷம் கொண்ட பாம்புகளிலிருந்து விஷமில்லா பாம்புகள்வரை எல்லாப் பாம்பு இனங்களும் பாதுகாக்கப்பட்ட பட்டியலில்தான் இருக்கிறது. இன்றைய தேதியில் பாம்பு விஷம் உலகமெங்கும் தேவைப்படுகிற முக்கியமான வணிகப் பொருளாக கறுப்புச் சந்தை முதலாளிகள்  உருவாக்கி வைத்திருக்கிறார்கள். உலக அளவில் இந்தியாவில்தான் விஷ முறிவுக்கான பாம்புகள் அதிகமாக இருக்கின்றன. பாம்புகள் பிடிப்பதற்கும் விஷம் எடுப்பதற்கும் தொழில் நுட்பங்கள் எதுவும் தேவையில்லாததால் எளிதாகப் பாம்பைப் பிடித்து விஷம் எடுத்துவிடுகின்றனர். சட்ட விரோதமாகப் பாம்புகளைப் பிடிப்பதால் விஷம் எடுத்த பிறகு அவற்றைக் காடுகளில் மீண்டும் விடுவதில்லை. மாறாக அப்பாம்புகளைக் கடத்தல்காரர்கள் கொன்று வீசி விடுகிறார்கள்.   

 

பாம்பின் விஷம் மருத்துவப் பயன்பாடு என்பதைக் கடந்து போதைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிராம் பாம்பின் விஷத்தைத் திரவமாகவோ பவுடராகவோ தனி நபர் ஒருவர் வைத்திருப்பது சர்வதேச அளவில் சட்டத்துக்குப் புறம்பான செயலாக சர்வதேச விலங்குகள் நலவாரியம் அறிவித்திருக்கிறது. உலக அளவில் பாம்பு விஷம் வைத்திருந்து பிடிபட்டவர்கள் எல்லோருமே ஸ்லீப்பர் செல்கள்தான். உண்மையில் கடத்தலுக்கு மூளையாகச் செயல்படுகிற ஒருவரைக் கூட உள்ளூர் போலீஸும் சரி உலக போலீஸும் சரி இதுவரை கைதுசெய்யமுடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய சிக்கல்.  இவர்களைக் கண்டுபிடித்து கைதுசெய்யாத வரை எல்லாக்கடத்தலும் சர்வசாதாரணமாக நடந்துகொண்டே இருக்கும் என்கின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 09
 

1971: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐ.நா.வில் இணைந்தது.

1973: வட அயர்லாந்து நிர்வாகத்திற்காக சபையொன்றை ஏற்படுத்துவது தொடர்பாக பிரித்தானிய, அயர்லாந்து பிரதமர்கள் மற்றும்வட அயர்லாந்து பிரதிநிதிகள் சன்னிங்கிளேட் நகரில் வைத்து ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.

 

Ähnliches Foto   Ähnliches Foto

1987: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக் கெட்டிங்கிற்கும் பாகிஸ்தான் நடுவர் ஷாகூர் ராணாவுக்கும் இடையில் மைதானத்தில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றதால் டெஸ்ட் போட்டி தடைப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றின் போது நடந்த மிகப் பரபரப்பான வாக்குவாதமாக இச்சம்பவம் கருதப்படுகிறது.

1992:அமெரிக்கப் படையினர் சோமாலியாவில் தரையிறங்கினர்.

1993: ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் திருத்தி முடிக்கப்பட்டது.

2006 :மொஸ்கோவில் போதைப் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட தீவிபத்தினால் 45 பெண்கள் பலி.

http://www.tamilmirror.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.