Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

விஸ்வநாதன் ஆனந்த்... சதுரங்கத் தமிழன்... 64 கட்டங்களின் எவர்கிரீன் ராஜா! #HBDVishy

 
 

2003-ம் ஆண்டு FIDE  (World Chess Federation) உலக செஸ் கூட்டமைப்பு நடத்திய போட்டியில் வென்று `உலகின் அதிவேக சதுரங்க வீரர்' என்ற பட்டத்தை, 34 வயதுடைய வீரர் ஒருவர் பெறுகிறார். இந்திய நாட்டின் தெற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த அந்த வீரருக்கு விருது கிடைத்தது, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக அளவில் கோலோச்சிவந்த செஸ் விளையாட்டில், ரஷ்யர் அல்லாத ஒருவர் இத்தகைய சிறப்பை அடைந்ததன் ஆச்சர்யம் அது. 14 வயதில் இந்திய செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்தான் அந்த வீரர். `புத்திக்கூர்மையுடைவர்களின் விளையாட்டு' எனச் சொல்லப்படும் செஸ் விளையாட்டுப் போட்டியில், தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்; செஸ் உலகின் எவர்கிரீன் ராஜா!

விஸ்வநாதன் ஆனந்த்

 
 

மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், சிறு வயதிலிருந்தே கூர்மையான நினைவாற்றல்கொண்டவர். இதை உணர்ந்த அவரது தாயார் ஆறு வயதிலிருந்தே அவருக்கு செஸ் விளையாட்டைக் கற்றுக்கொடுத்தார். சென்னை எழும்பூரில் உள்ள `டான் போஸ்கோ' பள்ளியில் படித்த விஸ்வநாதன் ஆனந்தை, செஸ் விளையாட்டை முறையாகக் கற்றுக்கொடுக்கும் `டால்' என்ற செஸ் கிளப்பில் சேர்த்தார். அதன் நீட்சிதான், விஸ்வநாதன் ஆனந்த 14 வயதில் இந்திய செஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 1984-ம் ஆண்டில் தன் 15-வது வயதில், `INTERNATIONAL MASTER' பட்டத்தை வென்றார். சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்ற இவர், கல்லூரி மாணவராக இருந்தபோதே உலக செஸ் தர வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றார்.

1987-ம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், `உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர்' என்ற பெருமையைப் பெற்றார். பிறகு, 1988-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் `கிராண்ட் மாஸ்டர்’ ஆனார். தொடர் சாதனைகளுக்காக  18 வயதிலேயே பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.

1991-ம் ஆண்டு உலக சதுரங்கப் போட்டிக்கு முதன்முதலாக தகுதிபெற்ற அவர், அந்தப் போட்டியின் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் `அலெக்ஸீ கிரீவை’ வென்றாலும், கால் இறுதிச்சுற்றில் அதே நாட்டைச் சேர்ந்த அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார். அதைத் தொடர்ந்து, 1995-ம் ஆண்டில் அரை இறுதியிலும், 1996-ம் ஆண்டு பி.சி.ஏ உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் இறுதிச்சுற்றிலும், 1997-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்கப் போட்டியில் இறுதிச்சுற்றிலும் தோல்வி கண்ட ஆனந்த், 2000-ம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் `அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

பிறகு, 2007-ம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மீண்டும், தன்னுடைய பெயரை பதிவுசெய்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். அதற்கு அடுத்த ஆண்டும் ஜெர்மனியில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார். 2010-ம் ஆண்டில் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற வேர்ல்ட் செஸ் சாம்பியன்ஷிப்பில்ல, வேஸலின் டோபாலோவை வீழ்த்தி, நான்காவது முறையாக வேர்ல்ட் சாம்பியன் ஆனார். 2012-ம் ஆண்டு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில், இஸ்ரேலின் போரிசு கெல்பண்டை சமன் முறி என்னும் ஆட்டத்தில் வீழ்த்தி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

விஸ்வநாதன் ஆனந்த்

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், பத்ம ஶ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என இந்திய அரசின் அங்கீகாரத்தை இளம் வயதிலேயே பெற்றவர். செஸ் விளையாட்டில் பல்வேறு விருதுகளையும் சாதனைகளையும் கடந்து, உலகெங்கும் செஸ் விளையாடும் பலருக்கும் ரோல்மாடலாக மிளிரும் தமிழன் விஸ்வநாதன் ஆனந்துக்கு இன்று பிறந்த நாள்.

 

வாழ்த்துகள் மாஸ்டர்!

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் : எதையும் தாங்கும் புழு!

 
 
shutterstock523781698

 

அற்பப் புழு’ என்று கூறுவது உண்டு. ஆனால் கண்ணுக்கே தெரியாத மிகச் சிறிய புழு ஒன்று நம்ப முடியாத அளவுக்குப் பல்வேறு திறன்களைப் பெற்றதாக விளங்குகிறது. அதன் பெயர் டார்டிகிரேடு(Tardigrade) அந்தப் புழுவுக்கு நீர்க்கரடி (water bear) என்ற பெயரும் உண்டு.

இந்த நுண்ணியப் புழு கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்கும். கடும் குளிரையும் தாங்கி நிற்கும். கடும் கதிர் வீச்சையும் தாங்கி நிற்கும். இது அன்ன ஆகாரமின்றி பல ஆண்டுகள் ஜீவிக்கும் திறன் கொண்டது. ஏதோ விபரீதம் ஏற்பட்டு பூமியில் உயிரினப் பேரழிவு ஏற்பட்டாலும் டார்டிகிரேடு புழு உயிர் பிழைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது.

எனவேதான் விஞ்ஞானிகள் டார்டிகிரேடு புழுவின் மரபணுக்களை விரிவாக ஆராய்ந்துவருகின்றனர். பலவிதமான பாதக நிலைமைகளையும் இந்தப் புழு எப்படித் தாங்கி நிற்கிறது என்பதை அறிந்துகொண்டால், எதிர்காலத்தில் மனிதன் நீண்ட விண்வெளிப் பயணம் மேற்கொண்டால் அதற்கு உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

கீட்சே என்னும் ஜெர்மன் விஞ்ஞானி 1773-ம் ஆண்டில் முதன் முதலில் இந்தப் புழு பற்றிக் கண்டுபிடித்துக் கூறினார். பின்னர் புழு பற்றி மேற்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் புழு இனம் மலை உச்சிகளிலும் காணப்படுகிறது. கடல்களில் மிக ஆழத்திலும் இதைக் காணமுடியும். சேற்று எரிமலைகளிலும் இது ஜீவிக்கிறது. வெப்ப மண்டலக் காடுகளிலும் உள்ளது. பனிக்கட்டிகளால் மூடப்பட்ட அண்டார்டிகாவிலும் இது உள்ளது.

டார்டிக்ரேடு புழு முழுதாக வளர்ந்த நிலையில் அரை மில்லி மீட்டர் நீளமே உள்ளது. இதற்கு எட்டுக் கால்கள் உண்டு. இந்தப் புழு முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இது மைனஸ் 272 டிகிரி (செல்சியஸ்) குளிரையும் தாங்கி நிற்கும். 150 டிகிரி (செல்சியஸ்) வெப்பத்தைச் சில நிமிட நேரம் தாங்கி நிற்கும். கடல்களில் மிக ஆழத்தில் இருக்கிற கடும் அழுத்தத்திலும் இது பிழைத்து நிற்கும்.

நீர் இல்லாத நிலையில் இது காய்ந்து வெறும் பொடிபோலாகி விடும். அப்போதும் சரி, இது உயிரிழந்து விடுவதில்லை. 30 ஆண்டுகள் இப்படிச் செயலற்ற நிலையில் இருந்து விட்டுப் பின்னர் உகந்த சூழ்நிலைகள் ஏற்பட்டதும் மறுபடி பிழைத்துக் கொள்ளும்

shutterstock671214070%20Convertedcol

கடும் கதிர்வீச்சு தாக்கினால் உயிரினங்களில் பெரும்பாலானவை மடிந்துவிடும். ஆனால் டார்டிகிரேடு புழு அதையும் தாங்கி நிற்க வல்லது. டார்டிகிரேடின் இந்தத் திறனைச் சோதிப்பதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 2008-ம் ஆண்டில் டார்டிகிரேடு புழுக்களை ஆளில்லா விண்கலம் ஒன்றில் வைத்து ராக்கெட் மூலம் உயரே செலுத்தியது. புழுக்கள் 12 நாட்களுக்கு விண்வெளியில் உள்ள கதிர்வீச்சு நிலைக்கு உள்ளாக்கப்பட்டன. பின்னர் கலம் பூமிக்குத் திரும்பியது. புழுக்களை நிபுணர்கள் ஆராய்ந்தபோது விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சினால் அவை பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

விண்வெளியில் உயிரினத்துக்குத் தீங்கான வகையைச் சேர்ந்த புற ஊதாக் கதிர்கள், அவற்றை விட ஆபத்தான எக்ஸ் கதிர்கள், மிகுந்த ஆற்றல் கொண்ட காஸ்மிக் கதிர்கள் முதலியவை உள்ளன. டார்டிகிரேடு புழுக்கள் காமா கதிர்களையும் எதிர்த்து நிற்கும் திறன் கொண்டவை.

இந்தப் புழுக்கள் பின்னர் 2011-ம் ஆண்டிலும் அமெரிக்க விண்வெளி ஓடம் மூலம் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டன.

டார்டிகிரேடு புழுக்கள் ஒன்றைக் காட்டுகின்றன. பூமியில் சாதகமான நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஜீவிக்கும் உயிரினங்கள் எவ்வளவோ உள்ளன. அதே சமயத்தில் விபரீத நிலைமைகளையும் தாங்கி நிற்கும் உயிரினமும் பூமியில் உள்ளது. ஏனெனில் பூமியானது உயிரினத்தின் சொர்க்கம்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பக்த மீரா என்றாலே நினைவுக்கு வரும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முகம்! #MSSubbulakshmiMemories

 
 

எம்.எஸ்.சுப்புலட்சுமி

வரலாற்றில் இடம்பிடித்த பலரின் புகைப்படங்களைக்கூட நாம் பார்க்க முடிந்ததில்லை. ஆனால், அவர்கள் எதேனும் ஒரு கலை வடிவத்தின் வழியே நம்மை வந்தடைந்துவிடுவார்கள். அப்போது, அந்த நடிகர்களின் முகமே வரலாற்று நாயகர்களின் முகமாக நம் மனதில் பதிந்துவிடும். உதாரணமாக, வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரைப் படித்ததுமே திரையில் கர்ஜித்த சிவாஜி கணேசனும் ஒளவை பாட்டி என்றதுமே இனிய குரலுக்குச் சொந்தக்காரரான கே.பி.சுந்தரம்பாள் நினைவுக்கு வருகின்றனர் அல்லவா... அதேபோல, கண்ணனை நினைத்து நெஞ்சை உருக வைக்கும் பாடல்களைப் பாடிய பக்த மீராவின் முகம் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்பதாகவே நமக்குப் பதிந்துவிட்டது.

 
 

1916 -ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் சுப்புலட்சுமி. ஊரின் பெயரும் அம்மாவின் பெயரும் அவரோடு இணைந்துவிட்டது. மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவரின் அம்மா சண்முக வடிவ வீணை வாசிப்பதில் புகழ்பெற்றவர். சுப்புலட்சுமிக்கு அந்தத் திறன் இருந்தது. ஆயினும் பாடல் மீதான ஆர்வமே அதிகம் இருந்தது. தனது சகோதரி வடிவம்பாளுடன் இசைப் பயின்றார். 

சுப்புலட்சுமி 10 வயதில் மரகத வடிவம் எனும் பாடலைப் பாடி, அப்போது புகழ்பெற்றிருந்த இசை நிறுவனவத்தின் வழியே இசைத்தட்டாக வெளிவந்தது. பாடலைக் கேட்டவர்கள் அந்தக் குரலின் இனிமையில் மயங்கினர். பின்னாளில் மிகச் சிறந்த பாடகியாக உருவெடுப்பார் என்பதற்கான முன் அறிவிப்பாக அந்தப் பாடல் அமைந்திருந்தது என்றால் மிகையில்லை. அம்மாவே இவரின் முதல் குரு. பின்னாளில், சேத்தூர் சுந்தரேச பட்டர், செம்மங்குடி சீனிவாச அய்யர் உள்ளிட்டவர்களிடமும் இசை பயின்றார். 

எம்.எஸ்.சுப்புலட்சுமி

1938-ம் ஆண்டு 'சேவா சதனம்' எனும் திரைப்படத்தில் நடித்தும், பாடல்களைப் பாடவும் செய்தார். அதற்குப் பிறகு, வெளியான 'சகுந்தலை' எனும் திரைப்படம்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குத் தனித்த கவனிப்பைத் தந்தது. சாவித்திரி எனும் படத்தில் நாரதராக நடித்தார். 1945 ஆம் ஆண்டு இவர் நடித்த 'மீரா' எனும் படம்தான் இவரின் அடையாளமாக மாறியது. அதில் இடம்பெற்ற 12 பாடல்களில், காற்றினிலே வரும்  கீதம்... எனும் பாடல் இன்றைக்கும் பலரின் விருப்பமான பாடலாக ஒலித்துவருகிறது. படமும் வெற்றிகரமாக ஓடியது. இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இதுவே கடைசிப் படமாகவும் ஆனது. 

1940- சுப்புலட்சுமிக்கும் சதாசிவத்துக்கும் திருமணம் நடந்தது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை வாழ்க்கைக்குப் பெரும் துணையாக அமைந்தவர் சதாசிவம். முற்போக்கு எண்ணம் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். எம்.எஸ்.சுப்புலட்சுமியை மகாத்மா காந்தியைச் சந்திக்க வைத்தவர். அந்தச் சந்திப்பின் காரணமாக கஸ்தூர்பா அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைக் கச்சேரிகளை நடத்தினார். இவர் பாடிய 'வைஷ்ணவ ஜனதே' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' ஆகிய பாடல்களை, காந்தியடிகள் விரும்பி கேட்பார்.

 

எம்.எஸ். சுப்புலெட்சுமி திரைப்படத்தில் நடிப்பதை விட்டாலும் மேடையில் தொடர்ந்து கச்சேரிகள் செய்துவந்தார். புகழ்பெற்றவர்களின் பாராட்டுகளையும் பல்வேறு விருதுகளையும் பெற்றவர் எம்.எஸ்.எஸ். 1974- மகசேசே, 1998-ல் பாரத ரத்னா விருதும் இவரை வந்தடைந்தன. 1997- ஆம் ஆண்டு, கணவர் சதாசிவம் இறந்ததும், தன்னை எங்கும் வெளிகாட்டிக்கொள்ளாமல், பாடாமல் ஒதுங்கிக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இசைப் பறவை இவ்வுலகை விட்டு விலகியது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

Virat Kohli and Anushka Sharma MarriageHappy Married Life!!!

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 12
 

1862: அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது  யாஸு நதியில் யூ.எஸ்.எஸ். கெய்ரோ எனும் கப்பல் பொறிவெடியில் சிக்கி மூழ்கியது. இலத்திரனியல் பொறிவெடி மூலம் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது ஆயுதக் கப்பல் இது.

1901: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடாக முதலாவது வானொலி சமிக்ஞையை மார்கோணி பெற்றார்.

1911: இந்தியத் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1911: பிரிட்டனின் 5 ஆம் ஜோர்ஜ் மனர், இந்தியாவின் மன்னராகவும் பதவியேற்றார்.

1940: பிரிட்டனின் ஷீபில்ட் நகரில்  ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சினால் பிரிட்டனில் 70 பேர் பலி.

1942: கனடாவின் நியூபவுண்லாந்தில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட  தீயினால் சுமார் 100 பேர் பலி.

1963: பிரிட்டனிடமிருந்து கென்யா சுதந்திரம் பெற்றது.

1979: கொலம்பியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 259 பேர் பலி.

1985: கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 256 பேர் பலி.

2000: ஜோர்ஜ் புஷ், அல் கோர் ஆகியோருக்கிடையிலான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சர்ச்சை தொடர்பாக அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

ஒரு மனிதருக்கு 31 யானைகள் செலுத்திய அஞ்சலி! #FeelGoodStory

 

உன்னை அறிந்தால்

சில நினைவுகள் மறக்க முடியாதவை; எப்போது நினைத்தாலும் உயிர்ப்போடு இருப்பவை; இதயத்தைத் தொடுபவை’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல பிசினஸ்மேன் ஜோசப் பி வ்ரித்லின் (Joseph B. Wirthlin). அதுபோன்ற நினைவுகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும். ஒரு பெரிய பிரச்னை, ‘தலை மேல் கத்தி’ என்பார்களே... அதுபோன்ற ஆபத்து... நம்மை அதிலிருந்து காப்பாற்றுகிறார் ஒருவர். அவரை, அந்த உதவியை நம்மால் மறக்க முடியுமா? அதற்காகக் காலம் பூராவும் அவருக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருப்போம். `நன்றி செலுத்துதல்’ குணம் நமக்கு மட்டுமானதல்ல... எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒன்று. ஒரு பேராபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிய மனிதருக்கு நன்றி செலுத்த, யானைகள் கூட்டமாக நடந்துசென்ற கதை கொஞ்சம் நெகிழ்ச்சியானது. பார்க்கலாமா?

 

யானை

அது, 2012-ம் ஆண்டு. அந்த அபூர்வமான நிகழ்வு நடந்தது, தென்னாப்பிரிக்காவில்! ஒன்று, இரண்டல்ல... மொத்தம் 31 யானைகள். எல்லாம் சேர்ந்து ஒரு பயணம் நடத்தின. விஷயம் வேறு ஒன்றுமில்லை. அந்த யானைகளுக்குப் பிரியமான ஒரு மனிதர் இறந்துபோனார். அவருக்கு நன்றி செலுத்துவதாக யானைகள் எல்லாம் ஒரு பெண் யானையின் தலைமையில் ஒன்று சேர்ந்தன. சரி... அவற்றுக்கு எப்படி அவர் இறந்துபோன விவரம் தெரியும்? இதற்கு இயற்கையைக் கையைக் காட்டுவதைத் தவிர வேறு பதிலில்லை. மனிதர்களைவிட யானைகளுக்கு கூர்மையான அறிவும் புலனுணர்வும் உண்டு. தங்களையும் பல விலங்குகளையும் காப்பாற்றிய ஹீரோ அவர் என்று யானைகள் நம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கைதான், லாரன்ஸ் அந்தோணி (Lawerence Anthony) என்ற பிரியத்துக்குரிய அந்த மனிதர் இறந்துபோனதை அவற்றுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

லாரன்ஸ் அந்தோணி, எழுத்தாளர், சூழலியலாளர், யாத்ரீகர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் 1950-ம் ஆண்டு பிறந்தார். அவருடைய தாத்தா காலத்தில் அவரின் குடும்பம் இங்கிலாந்திலிருந்து சுரங்க வேலையின் பொருட்டு ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்திருந்தது. லாரன்ஸ் அந்தோணியின் தந்தை இன்ஷூரன்ஸ் வேலை செய்துகொண்டிருந்தார். அந்தோணி, ஜாம்பியா, மாலாவி, ஜூலுலேண்ட்... என ஆப்பிரிக்காவின் பல ஊர்களில் வளர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவைப்போலவே இன்ஷூரன்ஸ் வேலை செய்தார். கூடவே ரியல் எஸ்டேட் பிசினஸும் செய்துகொண்டிருந்தார்.

அவர் இருந்தது அடர்ந்த காட்டுப்பகுதி. ஒருமுறை ஒன்பது யானைகள் கொண்ட குழுவை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றி, பத்திரமாகக் காட்டுக்குள் அனுப்பிவைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அது மட்டும் நடக்கவில்லையென்றால், அவை வேட்டையாடப்பட்டு, இறந்துபோயிருக்கும். அதுதான் அவர் வாழ்க்கையில் மிக முக்கியமான புள்ளி. அன்றைக்கு யானைகளை காட்டுக்குள் போகச் சொல்ல, தன் உடல்மொழியையும் குரலையும் பயன்படுத்தினார். அந்த அனுபவத்தை மையமாக வைத்துத்தான் பின்னாளில் `எலிஃபென்ட் விஸ்பரர்’ (Elephant Whisperer) என்ற நூலாக எழுதினார். அது விற்பனையில் சக்கைபோடுபோட்ட `பெஸ்ட் செல்லர்’ புத்தகம்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யானைகளுக்கு, மனிதர்களால் எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்க ஆரம்பித்தார். பல யானைகளையும், விலங்குகளையும் காப்பாற்றினார். யானைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்தார். அவற்றில் முக்கியமான ஒரு சம்பவமும் உண்டு. 2003-ம் ஆண்டு அமெரிக்கா, ஈராக்மீது படையெடுத்தபோது, பாக்தாத் நகரில் இருந்த ஜூ-வில் இருந்த விலங்குகளைக் காப்பாற்ற ஓடினார். அந்த ஜூ, மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே மிகப் பெரியது. அங்கே சுமார் 700 விலங்குகள் இருந்தன. அமெரிக்கா குண்டு வீசியதில், 35 மட்டுமே உயிர்பிழைத்திருந்தன. கூண்டுகளில் தண்ணீரும் உணவும் இல்லாமல் கிடந்த அந்த விலங்குகளில் சிங்கம், புலி, கரடி போன்றவையும் அடக்கம். அமெரிக்க எதிர்ப்பையும் மீறி, தைரியமாக அவற்றைக் காப்பாற்றினார். 2012, மார்ச் மாதம் லாரன்ஸ் அந்தோணி இறந்துபோனார்.

லாரன்ஸ் அந்தோணி

காட்டில் இரண்டு குழுக்களாக அந்த யானைகள் பிரிந்திருந்தன. தாங்கள் நேசித்த, தங்களை நேசித்த ஒரு மனிதரின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவை அமைதியாக, அந்த மனிதரின் வீடு நோக்கி நடந்தன. தென்னாப்பிரிக்காவில் இருந்த லாரன்ஸ் அந்தோணியின் வீட்டுக்கு அவை 12 மைல் தூரம் நடந்தே சென்றன. வழியில் எந்த மனிதரையும் அவை கவனிக்கவில்லை. மனிதர்கள்தான் இவற்றைக் கவனித்தார்கள். கூட்டமாக, துளிச் சத்தமில்லாமல் இவை எங்கே போகின்றன என்று ஆச்சர்யப்பட்டார்கள்; சிலர் பின்தொடர்ந்தார்கள்.

31 யானைகளும் வரிசையாக, ஒரே சீராக நடந்தன. தங்கள் நண்பருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்கிற ஒரே எண்ணம் மட்டும்தான் அவற்றுக்கு இருந்திருக்க வேண்டும். அந்தோணியின் வீட்டை அடைந்ததும், அமைதியாகச் சுற்றி நின்றுகொண்டன. அந்த யானைகள் வீட்டை ஏதாவது செய்துவிடுமோ, தங்களைத் தாக்கிவிடுமோ என்று அங்கிருந்த சிலர் பயந்தார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. இரண்டு பகல், இரண்டு இரவுப் பொழுதுகள்... அந்த யானைகள் துளி புல்லைக்கூடச் சாப்பிடாமல் அங்கேயே இருந்தன. பிறகு, மிக அமைதியாக தங்கள் காடு நோக்கித் திரும்பிச் சென்றன.

அவை போன பிறகு, அந்தோணியின் மனைவி, ஃபிரான்கோய்ஸ் மால்பி (Francoilse Malby) சொன்னார்... “இதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு எந்த யானையும் வந்ததில்லை. இதுங்களுக்கு எங்க வீடு எப்படித் தெரியும்னு ஆச்சர்யமா இருக்கு.”

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

விராட்-அனுஷ்கா காதல் திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு) #VirushkaWEDDING

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் நேற்று (திங்கட்கிழமை) திருமணம் செய்துகொண்டார். திருமண விழாவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் தொகுப்பு இது.

விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைTWITTER விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமை@ANUSHKASHARMA விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைTWITTER விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைTWITTER விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைTWITTER விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைTWITTER விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைTWITTER விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமை@IMVKOHLI விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைTWITTER விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைTWITTER விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமை@VIRATCREW விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைTWITTER

 

http://www.bbc.com/

திருமண பந்தத்தில் இணைந்தனர் விராட்கோலியும் அனுஷ்காவும்

இந்திய அணியின் தலைவர் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

25353509_10208647949750889_1831927203_o.

இத்தாலியில் உள்ள டஸ்கனி  நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகின.

25360742_10208647948990870_1726015835_n.

இது தொடர்பில் விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் மற்றும் இன்ஸ்டர்கிராம் பக்கங்களில் திருமணம் தொடர்பில் பதிவிட்டிருந்தனர்.

25323982_10208647948550859_1877440694_n.

கடந்த வாரமே இருவரும் இத்தாலியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில் நேற்று திருமணம்  முடிந்ததாக தெரிகிறது. 

25323267_10208647949470882_417275746_n.j

இந்த திருமணத்தில் பொலிவுட் நடிகர் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

25323198_10208647949830891_275006742_n.j

கடந்த 2013 ஆம் ஆண்டு ‛ஷம்பு விளம்பரம் ஒன்றில் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. 

25289371_546756385684327_786696712167409

விராட் கோலி பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை காண அனுஷ்கா ஷர்மா விளையாட்டு மைதானங்களுக்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் சில காலம் இருவரும் பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் இருவரும் பிரியவில்லை என்றும் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகின.

25286960_10208647948670862_852736010_n.j

இந்நிலையில், இத்தாலியில் உள்ள டஸ்கனி  நகர விடுதியில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

25286913_10208647949230876_553637772_n.j

எதிர்வரும் 21 ஆம் திகதி டில்லியிலுள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

25276248_10208647950070897_1055655410_n.

24993096_546756415684324_750731396336771

 

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

உயிரை பற்றி அஞ்சாமல் காட்டுத்தீயிலிருந்து முயலை காப்பாற்றிய நபர்!

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும் இடத்தின் வழியே வாகனத்தில் சென்ற ஒருவர், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு முயலை காப்பாற்றுவது படம்பிடிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

‘ஆறு பால்ல ஆறு சிக்ஸ்... அதான் யுவராஜ் சிங்!’ - பிறந்தநாள் பதிவு #HappyBirthdayYuvi

 
 

மிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இன்று பிறந்தநாள் கொண்டாடுவது போல், கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டாரும் அமைதியாக தன் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார். அவர்தான் யுவராஜ் சிங். சாதனையாளர்கள் கடந்து வந்த பாதையில் அங்கொன்று இங்கொன்றுமாக முட்கள் இருப்பது வழக்கம். ஆனால் இவர் கடந்து வந்ததே மண்ணுக்குப் பதில் முட்களால் விரிந்திருந்த பாதையில்தான். அதைப் பற்றிய ஒரு சின்ன ரீவைண்டு! 

கொஞ்சம் தங்கம் மாதிரி மொறைச்சா சிங்கம் மாதிரி :

 
 

யுவராஜ் சிங்

இவரின் பெயரைச் சொன்னவுடன் பலருக்கும், இவர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியதுதான் நினைவுக்கு வரும். இங்கிலாந்துடன் ஆடிய அந்த ஆட்டத்தில் ஃப்ளின்டாப்  இவரை வம்பு இழுக்க, அதுக்கு அடுத்த ஓவரில் தேவையில்லாமல் மாட்டிக்கொண்டவர் ஸ்டுவார்ட் ப்ராட். அன்று இவர் ஆடிய மைதானத்தில் ஒருதுளி மழையில்லை. ஆனால் இவரின் பேட்டில் இருந்து இடிச்சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.  இளம் வீரராக, இந்திய அணியில் நுழையும்போது இவரிடம் எத்தகைய வெறி இருந்ததோ, அதே வெறியை பல ஆண்டுகளாக தக்கவைத்திருக்கிறார். சிக்கலான நேரங்களில் யுவராஜ் கை கொடுத்திருக்கும் ஆட்டங்களைப் பட்டியல் எடுத்துப் பார்த்தால், லிஸ்ட் அடிஷனல் ஷீட்டைத் தாண்டும். அதேபோல் ட்ரெஸிங் ரூமில் இவர் செய்யும் சேட்டைகளுக்கும், ரகளைகளுக்கும் அளவே இருக்காது. மேட்ச் தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி யுவராஜ் ட்ரெஸிங் ரூமில் இருந்தால் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது. களத்திலும் ரகளையாக பல தில்லாலங்கடி வேலைகள் பார்ப்பார். கெட்ட பையன் சார் இந்த யுவராஜ்!

உலக நாயகன் :

2011 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய கடைசி லீக் ஆட்டத்தில் எல்லோரும் சொதப்ப, தனி ஆளாக நின்று விளையாடி சதம் அடித்து அணிக்கும் நம்பிக்கை ஊட்டியதோடு, இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். அன்று இரவு... மூச்சுத் திணறல், இரத்த வாந்தி, மயக்கம் இவை அனைத்தும் ஒன்றாக வர `ஏதோ பெரிய பிரச்னை வரப்போகிறது' என இவரின் ஆழ்மனம் எச்சரித்திருக்கிறது. தோனியும், சச்சினும் ஓய்வெடுக்கும்படி அறிவுரைத்தார்கள். `வெறும் ஃபுட் பாய்ஸன்தான் ஒண்ணும் பிரச்னை இல்ல' என சொல்லி உலகக் கோப்பையை கைப்பற்ற, அடுத்த ஆட்டத்தில் களமிறங்கினார். அப்போது யுவராஜிடமிருந்த கான்ஃபிடன்ஸ் தோனிக்கு நம்பிக்கையளிக்க அவரும் தடுக்கவில்லை. காலிறுதியில் இந்தியா... ஆஸ்திரேலியாவுடன் மோதிய அந்த ஆட்டத்தில், பல உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்த அவர்களின் வெற்றிநடையை முடித்து வைத்தது இந்திய அணி. 

ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங்.  அடுத்ததாக அரையிறுதிப் போட்டியில் எதிர்பாராத விதமாக டக் அவுட் ஆனார் யுவி. இருப்பினும் இந்திய அணியை சச்சினின் ஆட்டம் தூக்கிவிட, 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இலங்கைதான் எதிராளி. பவுலிங்கில் எதிர்பார்த்த எபெக்ட் கிடைக்காமல் போக, ஓபனிங் ஆர்டர் பேட்டிங்கிலும் சொதப்பல். தோல்வியை நோக்கி பயணித்த இந்திய அணியை காப்பாற்றிய ஹீரோக்கள் கவுதம் காம்பீரும் தோனியும்! இறுதியாக 'India lift the World Cup after 28 years' என தழுதழுக்கும் குரலில் ரவிசாஸ்திரி அறிவித்தபோது மைதானத்தில் தோனியுடன் இருந்த இன்னொருவர் யுவராஜ். பெவிலியனில் இருந்து மைதானத்தை நோக்கி ஆனந்தக்கண்ணீரோடு நடை போட்ட சச்சினை, அள்ளித் தழுவினார் யுவராஜ். எதையோ சாதித்த வெறி அவர் கண்களில் தெரிந்தது. அந்த சாதனைக்குக் கிடைத்த பரிசு, உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது. 

விழாநாயகன் :

ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டனாக யுவி விளையாடிக்கொண்டிருந்த சமயம். மீண்டும் தலை சுற்றல், இரத்த வாந்தி, மூச்சுத் திணறல் போன்றவை யுவராஜை வதைக்க ஆரம்பித்தன. பதட்டத்தில் யுவராஜை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் அவரது பெற்றோர்கள். பரிசோதனையின் முடிவில், யுவராஜின் நுரையீரலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. தனது மகனுக்கு இப்படி நிகழ்ந்துவிட்டதே என்ற ஒரு கவலை ஒருபக்கம், அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும்போது இப்படி நிகழ்ந்தவிட்ட வருத்தம் ஒரு பக்கம். விஷயம் தெரிந்த யுவராஜும் நொறுங்கிப்போனார். இந்திய அணியின் சாதனைப் பயணத்தில் தனது பங்கும் இருக்க வேண்டுமென்று நினைத்த யுவராஜ், அணியில் யாரிடமும் சொல்லாமல் இங்கிலாந்து டூருக்கு ரெடியானார். ஆனால் புற்றுநோய் தீவிரமாக தொங்கியதால் மூன்று டெஸ்ட் மேட்ச்களில் மட்டுமே அவரால் ஆட முடிந்தது. இதற்குப் பிறகும் சிகிச்சையை தாமதித்தால் சிக்கலாகிவிடும் என்று டாக்டர்கள் அறிவுரை சொல்ல, 2011 நவம்பரில் சிகிச்சைக்குத் தயாராகினார் யுவி. “ட்ரீட்மென்ட்டுக்கு அப்புறம் ஏன் உடல்நிலை எப்படி இருக்கும்னு தெரியல, ஆனா நான் கண்டிப்பா இந்திய அணிக்கு மறுபடியும் விளையாடுவேன்” என்ற வார்த்தைகளை மட்டும் சச்சின் உள்பட தன் நெருக்கமானவர்களுக்கு  சொல்லிவிட்டு சிகிச்சைக்கு அமெரிக்கா பறந்தார். 

யுவராஜ் சிங்

ஐந்து மாதங்கள் கடுமையான சிகிச்சை. மொட்டைத்தலையுடன் இவரின் புகைப்படம் அந்த சமயத்தில் வைரலானது. அதைப் பார்த்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட இரக்கமும், கனிவான வார்த்தைகளும் யுவராஜுக்குப் பிடிக்கவில்லை. மாறாக `யுவி... யுவி...' என்று கூட்டத்தின் உற்சாக குரல்களையே எதிர்பார்த்த அவர், மீண்டும் மைதானத்தில் கால் பதிக்க வந்தார். ஆனால் அவரிடமிருந்த நம்பிக்கை அவருக்கு கை கொடுத்ததைப்போல், அவரின் உடல்நிலை கைகொடுக்கவில்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி மெதுவாக பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். அது காலப்போக்கில் வெறித்தனமான பயிற்சியாக மாறியது. பயிற்சிக்கானப் பயன், 2012 துலீப் டிராஃபியில் பிரதிபலித்தது. அந்தத் சீரியஸின் முடிவில் 208 ரன்களைக் குவித்து, `ஐ எம் பேக்' என்று மக்களுக்கு உணர்த்தினார். 

மீண்டும் சறுக்கல் :

யுவராஜ் சிங்

 

இந்திய அணியில் இடம்பெறுவது சிக்கலாக இருந்த நேரம் அது. இருப்பினும் மீண்டும் இடம்பிடித்தார் யுவி. பாராட்டுக்குரிய ஆட்டம் இவரிடமிருந்து வெளிப்படவில்லை என ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இவரை அணியை விட்டு நீக்குமாறு கொந்தளித்தனர். விமர்சனங்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல், விளையாட்டில் மட்டுமே கவனமாக இருந்தார். ஓரிரு ஆட்டங்களில் சிறப்பு ரக ஆட்டம், ஓரிரு ஆட்டங்களில் சுமார் ரக ஆட்டம் என அணியில் உள்ளே - வெளியே நிலையில் இருந்தார் யுவராஜ். ஆனால் நம்பிக்கையில் குறைவில்லை. கேன்சர் சிகிச்சைக்கு செல்லும் முன் எந்தளவு நம்பிக்கை இருந்ததோ, அதே அளவு நம்பிக்கைதான் அப்பொழுதும் இருந்தது. அதன் பின் நடந்த ஆஸ்திரேலியா தொடர், ஆசிய தொடர், உலகக்கோப்பை, ஐ.பி.எல் டி-20 போன்ற தொடர்களில் தொடர்ந்து தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தன் ஃபார்மை மீட்டெடுத்தார். ``நீ என்ன வேணாலும் சொல்லிக்க, என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு'' என தன் மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு அவர் சொல்லாமல் சொல்லிய பதில் இது.  தோனியின் கேப்டன்ஷிப் வெற்றிகரமாக தொடர உதவியதில் இவருக்கும் பெரும் பங்குண்டு. ஆரம்ப பேட்ஸ்மென்கள் சொதப்பிய பல ஆட்டங்களில், `என்னைத் தாண்டி என்  டீம் மிடில் ஆர்டரை தொடு பார்ப்போம்' என மிரட்டிய யுவராஜ் களம்கண்டு கொஞ்ச காலமாகிறது. ஆனாலும் நம்பிக்கையை தளரவிடாமல் 'யுவி' யுவி' என்ற கோஷத்தை மீண்டும் கேட்க காத்திருக்கிறார். அந்தக் கோஷத்தைக் கேட்டபடி அவர் பறக்கவிடும் பந்துகளை பிடிக்க, பெவிலியனில் உட்கார்ந்திருக்கும் ரசிகனும் காத்திருக்கிறான். இரண்டும் சீக்கிரமே நடக்கும் என யுவராஜைப் போலவே நம்புவோம். 'நீ கீழே விழுறது பிரச்னையில்லை. அங்கேயே விழுந்து கிடந்தாதான் பிரச்னை' என தன் வாழ்க்கை மூலம் நம்பிக்கையூட்டும் யுவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

https://www.vikatan.com

 

  • தொடங்கியவர்

நியூ இயர் செல்ஃபி... இத்தாலி ரகசியம்... கோலி - அனுஷ்கா காதல் கல்யாண கதை! #VirushkaWEDDING

 
 

‘இங்கிலாந்துக்கு விளையாடச் சென்றிருக்கிறீர்கள் விராட்... காதலிக்க அல்ல, 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோற்றதற்கு முக்கியக் காரணம் அனுஷ்கா ஷர்மா... விராட் - அனுஷ்கா உறவு முறிந்தது' இப்படி, பல செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் கோலி - அனுஷ்கா. இத்தாலியில் திருமணம், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு, பிரமாண்ட அலங்காரங்கள், பார்ட்டி என கோலாகலமாக முடிந்தது திருமணம். 

கோலி

 
 

2008-ம் ஆண்டு அனுஷ்கா ஷர்மாவின் முதல் படம் வெளியாகிறது. அதே வருடம்தான் விராட் கோலியும் தனது முதல் சர்வதேசப் போட்டியில் களமிறங்குகிறார். ஒரே வருடத்தில் இன்னிங்ஸைத் தொடங்கியவர்கள், அனுஷ்கா படம் வெளியான நாளில் இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கியுள்ளனர். 

2013-ம் ஆண்டு ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் முதல்முறையாக ஒன்றாகத் தோன்றினார்கள். இந்த விளம்பரத்திலிருந்து இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி கேப்டனாக்கப்பட்டார். அப்போது ஹைதராபாத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியைக் காண வந்திருந்த அனுஷ்கா ஷர்மா அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி பேட்டை உயர்த்தி ஃப்ளையிங் கிஸ் அடித்தது எல்லாம் பாலிவுட்டை மிஞ்சும் லவ்ஸ்!

2015-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை அரை இறுதியில் மோசமாகத் தோற்றதற்கு 15 வீரர்களைத் தவிர்த்து அனுஷ்கா ஷர்மாவைக் கைகாட்டினார்கள் ரசிகர்கள். களத்தில் உணர்ச்சிவசப்படும் விராட், அமைதியாக இருந்தார். இதற்கிடையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் கணக்கு அன்ஃபாலோ செய்யப்பட்டது, இருவருக்குமிடையேயான உறவு முறிந்தது என்ற விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம் என விளக்கமளிக்கப்பட்டது.

2016-ல், விராட் - அனுஷ்கா இருவரும் பொதுவெளியில் சகஜமாக கைகோத்து சுற்றினர். யுவராஜ் சிங் திருமணம், விருது வழங்கும் விழா எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் விராட் - அனுஷ்கா ஜோடியைப் பார்க்க முடிந்தது. 2016-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் தோல்வியடைந்தது. ஆனாலும், தொடர் நாயகன் விராட்தான். இந்த முறையும் அனுஷ்கா விமர்சிக்கப்பட, கொதித்தெழுந்தார் கோலி. `ஷேம்' என்ற ட்வீட் மூலம் ஒற்றை வார்த்தையில் விமர்சகர்களை விளாசினார். அதுதான் 2016-ம் ஆண்டின் மிகச்சிறந்த இந்திய ட்வீட்டாக இடம்பிடித்தது.

விராட்Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity pic.twitter.com/OBIMA2EZKu

 Virat KohliVerifizierter Account @imVkohli
 
 

Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivityCen5iI6W8AARUfV.jpg

 

‘2017-ம் ஆண்டு புத்தாண்டை அனுஷ்காவுடன் கொண்டாடுகிறேன்' என்று வெளியிட்ட புகைப்படம், தெறி வைரல். 2017-ம் ஆண்டு ஜனவரியில் `விராட் கோலி-அனுஷ்கா திருமணம்!' என வதந்தி கிளம்பியது. ``அப்படியெல்லாம் ஒன்றுமில்லை'' என்று ஆஃப் செய்தார் கோலி.

Today we have promised each other to be bound in love for ever. We are truly blessed to share the news with you.This beautiful day will be made more special with the love and support of our family of fans & well wishers. Thank you for being such an important part of our journey. pic.twitter.com/aobTUwMNAK

Today we have promised each other to be bound in love for ever. We are truly blessed to share the news with you.This beautiful day will be made more special with the love and support of our family of fans & well wishers. Thank you for being such an important part of our journey.DQxnbQKUQAA0XRR.jpg

 

 

 

தற்போது இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது. இத்தாலிக்குக் கோலியின் நண்பர்களுக்கும் முக்கியப் பிரபலங்களுக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. `இந்த முறை திருமணம்தான்' என்று செய்திகள் வலம்வந்தன. டிசம்பர் 11-ம் தேதி மாலை 6 மணிக்கெல்லாம் அதிகாரபூர்வ தகவல்களுடன் கோலி - அனுஷ்கா திருமணப் படங்கள் வெளியாகின. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார் கோலி!

Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity pic.twitter.com/OBIMA2EZKu

 

கோலியைவிட 188 நாள்கள் வயதில் பெரியவர் அனுஷ்கா ஷர்மா! ‘அடுத்த சச்சின்’ என வர்ணிக்கப்படும் விராட், இல்லற வாழ்க்கையிலும் சச்சின் ஸ்டைலைப் பின்பற்றுகிறார். “திருமணமானவர்கள் க்ளப்பில் இணைந்ததற்கு வாழ்த்துகள்” என்கிறார் ரஹானே. சச்சின் வாழ்த்துகிறார். அனுஷ்கா ஷர்மா - விராட் கோலியின் திருமணத்தை ட்விட்டர் ‘விருஷ்கா திருமணம்' என்ற ஹேஷ்டேக்குடன் உலக அளவில் ட்ரெண்டாக்குகிறது.

 

வாழ்த்துகள் விருஷ்கா!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘கெட்ட பய சார் இந்த காளி!’ - ரஜினியின் மாஸ் பன்ச்கள் #HBDRajini

 
 

‘சுனாமி’ என்ற ஆழிப்பேரலைத் தாக்குதல் உலகம் முழுக்கப் பல காலங்களாக இருந்தாலும், சென்னையை சுனாமி தாக்கியபோதுதான் அந்த வார்த்தையே இங்கு பிரபலமானது. அதேபோல, பன்ச் வசனங்கள் பல காலங்களாக தமிழ் சினிமாவில் பல நடிகர்களால் பேசப்பட்டுவந்தாலும், அதை ரஜினிகாந்த் பேசும்போதுதான் அதற்கு `பன்ச் டயலாக்' என்றே பெயர் வந்தது. அதிலும் `பாட்ஷா' படத்தில், “நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்னா மாதிரி!" என அவர் உச்சரிக்கும் பன்ச் வசனம், ரசிகர்களால் பரபரப்பாக உச்சரிக்கப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் “நேனு ஒக சாரி செப்த்தே வந்த சாரிலு செப்பினட்டே!" என்ற வசனத்தை உச்சரிக்கும்போது அந்த வார்த்தைகளுக்கே உரிய பளீர் பரபரப்பு நெருப்பாகத் தெறிக்கும்!

ரஜினிகாந்த்

 
 

‘16 வயதினிலே' படத்தில் பரட்டை கேரக்டரில் நடித்த ரஜினிகாந்த், காந்திமதியைக் கலாய்த்தபடி கிண்டல் செய்துவிட்டு, முடிவில் “இது எப்படி இருக்கு?" எனக் கேட்டு நக்கலடிப்பதும், அவரைப் பார்த்து கவுண்டமணி சொல்லும் “பத்தவெச்சிட்டியே பரட்ட..!" என்ற இந்த இரண்டு வசனங்களும் இன்றளவும் ஃபேமஸ்! “இது எப்படி இருக்கு?!" என்ற வசனத்தை, பிற்காலத்தில் வந்த `வீரா' என்ற படத்தில் “ஹவ் இஸ் இட்?" என்று ரஜினியே பயன்படுத்தினார்.

அதேபோல, `மூன்று முகம்' படத்தில், “தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாத்தான் தீ பிடிக்கும். இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்!" என்று நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த், மீசை துடிக்கச் சொல்லும்போது தியேட்டரில் கைதட்டல் மழை! அதேபோல், `குரு சிஷ்யன்' படத்தில் ரஜினிகாந்த் சொல்லும் “நான் சொல்றதத்தான் செய்வேன்... செய்றதத்தான் சொல்வேன்!" என்ற டயலாக்கைப் போலவே தி.மு.க-வின் பிரசார வசனமும் “செய்வதைச் சொல்வோம்... சொல்வதைச் செய்வோம்!" என இருந்தது வரலாறு.

‘முள்ளும் மலரும்' படத்தில் ரஜினி பேசிய “கெட்ட பய சார் இந்தக் காளி!" என்ற வசனம், தற்போது சந்தானத்தின் நகைச்சுவையில் எடுத்தாளப்படும் அளவுக்கு இன்றளவும் பவர்ஃபுல்லான வசனம்! `மாப்பிள்ளை' படத்தில் தனது தொடக்கக் கால நடிகையான ஶ்ரீவித்யாவின் மருமகனாக நடித்த ரஜினிகாந்த் “அத்தை, நீங்க தமிழ்நாட்டுக்கே ராணி மாதிரி... நான் தமிழ்நாட்டுக்கே... எதுக்கு விடுங்க, எல்லாருக்கும் தெரியும்!" என்றெல்லாம் பேசத் தொடங்கியபோது ரசிகர்களைக் குஷிப்படுத்துவது என்றில்லாமல், அரசியலுக்கான வசனமாகவும் அவரது ரசிகர் உலகம் பார்க்கத் தொடங்கியது. ஜெயலலிதாவோடு மோதலைத் தொடங்கியதும் அவருக்கு எதிரான அரசியல் பன்ச் டயலாக்குகளைப் பட்டவர்த்தனமாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

ரஜினிகாந்த்

‘உழைப்பாளி' படத்தில் “நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு..?" என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிக்கும்போது தியேட்டரே அதிரும்! `படையப்பா' படத்தை பன்ச் டயலாக்குகளுக்காகவே நடித்த படம்னு சொன்னாலும் மிகையல்ல. அதில் வரும் நீலாம்பரி கேரக்டர் யார் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படியிருந்ததால்தான் பெண்ணியத்துக்கு எதிரானதாகக் கருதக்கூடிய, “அதிகமா கோபப்படுற பொம்பளையும், அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!" என்ற வசனமும், ``பொம்பளைன்னா பொறுமை வேணும்! அவசரப்படக் கூடாது! .................. .............. ............. மொத்ததுல பொம்பளை பொம்பளையா இருக்கணும்!" என்ற நீளமான வசனம் தமிழ் பாரம்பர்யப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை  எடுத்துரைக்கும் வசனமாக ரசிகர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ரஜினிகாந்த்அரசியலுக்காகவே எழுதப்பட்ட வசனங்கள் என்றால், தனிப்பட்டியலே போடலாம். அதில் முக்கியமான சில, “என் வழி... தனி வழி!" 
“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா, கைவிட மாட்டான்! கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான்!". “நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, எப்ப வரணுமோ அப்ப கரெக்டா வருவேன்!"
“கண்ணா... பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம், சிங்கிளாத்தான் வரும்!"

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு வலுக்கத் தொடங்கியதுமே, பன்ச் வசனம் இல்லாமல் இவரது படமே கிடையாது என்ற சூழலுக்கு வந்தது. இவர் ஒரு படத்தைத் தொடங்கியதுமே அந்தப் படத்தில் என்னென்ன பன்ச் வசனங்கள் இடம்பெறும் என்று போட்டிகளே நடத்தப்பட்டன! அதன் நீட்சியாக, `கபாலி' படத்தை புரொமோட் பண்ணும்போது, ‘பன்ச் வசனங்களே இல்லாத ரஜினிகாந்த் படம்!' என்று அறிவிக்கும் அளவுக்கு பன்ச் டயலாக்குகள், ரஜினி படங்களோடு பின்னிப்பிணைந்தன.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரின் பிம்பம், அவரது ரசிகர்கள் நிலையிலும், தமிழக மக்கள் மத்தியிலும் சற்றும் மவுசு குறையாமல் இருக்கிறது என்றால், பன்ச் டயலாக்குகளின் பலமும் ஒரு காரணம் என்பதை ரசிகர்கள் நன்கு அறிவர்.

 

ரஜினிடா!

https://www.vikatan.com

Bild könnte enthalten: 4 Personen, Text

 
 
Happy Birthday #RajiniKanth
தமிழ் திரையுலகின் நிரந்தர #SuperStar ரஜினிகாந் இன்று தனது 67வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

1975 இல் அபூர்வ ராகங்களில் ஆரம்பித்தார் தன் திரை வாழ்க்கையை.
அடுத்த வருடம் வெளிவரவுள்ள 2.0 வரை ரசிகர் எதிர்பார்ப்பு இவரைத் தொடர்கிறது.
மொழிகள் கடந்து தன் ரசிகர் பலத்தைக் கொண்டவர்
தமிழக ரசிகர் மனங்களில் "தலைவர்" என்று வாழ்பவர்
தமிழ் சினிமாவின் Style என்ற வார்த்தையின் அகராதி
வசூலில் வேட்டையாடும் சாதனைச் சக்கரவத்தி.
நடிப்பின் சிகரம் இவர் சிறப்பின் உச்சம்!

மூன்று தலைமுறைகள் கடந்து நிற்கும் சாதனை மிகுந்த சகாப்த நாயகனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 

பேசும் படங்கள்: அவர் வந்துட்டார்னு சொல்லு.. போஸ்டர்ல!

 
 
r8jpg

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் குவிந்தனர்.

ரஜினி வாழ்க, தலைவா வாழ்க, வருங்கால முதல்வரே வாழ்க என்று பலவிதமான கோஷங்களை எழுப்பினர்.

   

ரஜினிகாந்த் ஊரில் இல்லை அவரது வீட்டினருகே அனுமதிக்க முடியாது என போலீஸ்காரர்கள் கூறியும் ரசிகர்கள் சமாதானமடையவில்லை. காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி போயஸ்கார்டன் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மற்றும் ரஜினி வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் குவிந்த ரசிகர்களின் கூட்டம் தொடர்பான புகைப்படத் தொகுப்பு.

r1jpg

தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் இல்லம்.

r3jpg

கூட்டம் வருவதற்கு முன்னாள் அலர்ட் ஆக வேண்டும். அதிகாலையிலே தயாரான போலீஸ்காரர்கள்.

r4jpg

நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்..

 
r6jpg

மூன்று முகங்கள்..

r16jpg

கொடி எல்லாம் தயார்.. நீங்க அறிவிச்சா மட்டும் போதும்..

r13jpg

வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே..

r15jpg

தோளில் ஏறிப்பார்த்தாகூட தலைவரு தெரியமாட்டாராம்.. ஊர்லையே இல்லையாம்.. போலீஸ்காரர் விளக்குகிறார்.

r9jpg

நம்பிக்கைதான் வாழ்க்கை..

r11jpg

கொட்டு முரசே.. போர்.. போர்.. | படங்கள்: எல். சீனிவாசன்

http://tamil.thehindu.com/

r11jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் 75 சதவிகித எரிமலைகள் இங்கேதான் உறங்குகின்றன... என்ன காரணம்? #PacificRingOfFire

 
 

லகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று, இந்தோனேஷியாவில் அமைந்திருக்கும் பாலித் தீவு. எப்போதும் சுற்றுலா சார்ந்த செய்திகளில் மட்டுமே அடிபட்டுக்கொண்டிருந்த இந்தத் தீவின் பெயர் தற்போது மற்றொரு விஷயத்துக்காக முக்கியச் செய்திகளில் இடம்பெற்றுவருகிறது. இதற்கு காரணம், அகங் எரிமலை. 

இந்தோனேஷியா

 
 

கடந்த 54 ஆண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்த இந்த எரிமலை, இந்த ஆண்டு சீற்றம் கொள்ளத் தொடங்கியது. செப்டம்பர் மாதத்தில் இருந்தே இந்த எரிமலையிலிருந்து சாம்பல் புகையும், வித்தியாசமான ஒலிகளும் வெளிவரத்தொடங்கிவிட்டன. உச்சமாக கடந்த நவம்பர் மாதம் அதிகளவில் கரும்புகை வெளியேறியது. சிறிய அளவில் வெடிக்கவும் செய்தது. உடனே சுதாரித்த இந்தோனேஷிய அரசு, எரிமலையைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அங்கிருந்து சுமார் ஒரு லட்சம் மக்களை உடனடியாக வெளியேறச் சொன்னது. ஆனால், விவசாயம், கால்நடைகள், வீடுகள் அனைத்தையும் விட்டுவிட்டு உடனே வெளியேறமாட்டோம் என நிறையபேர் வெளியேறவில்லை. சிலபேர் மட்டுமே அரசு அமைத்த சிறப்பு முகாம்களுக்குச் சென்றனர்.

அகங் எரிமலை

கடவுளின் கையில்!

தற்போது மெதுவாக சீறிக்கொண்டிருக்கும் இந்த அகங் எரிமலை, இந்தோனேஷியாவின் உயர்ந்த மலைகளில் ஒன்று. கடைசியாக இது வெடித்த வருடம் 1963. அப்போது சுமார் 1100 பேருக்கும் மேலானோர் இந்த விபத்தால் உயிரிழந்தனர். எரிமலை வெடிப்பு என்பது அபூர்வமான இயற்கை சீற்றங்களில் ஒன்று என்றாலும், இந்தோனேஷியாவுக்கு அது புதிதல்ல. காரணம், இந்தோனேஷியாவின் புவியியல் அமைப்பு.

உலகிலேயே, எரிமலைகள்... அதுவும் உயிருடன் இருக்கும் எரிமலைகள் அதிகம் இருக்கும் நாடு இந்தோனேஷியாதான். தீவுக்கூட்டங்களால் ஆன நாடான இந்தோனேஷியாவில் இருப்பது மொத்தம் 139 எரிமலைகள். இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 258 மில்லியன். இதில் 69 மில்லியன் மக்கள், அதாவது 30 சதவிகிதம் மக்கள், எரிமலையில் இருந்து 30 கி.மீ. தூரத்துக்குள்தான் வசிக்கின்றனர். எனவே, எரிமலைகள் என்பது இவர்களின் வாழ்வோடு இணைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் மக்கள், அரசு எச்சரிக்கை விடுத்தும்கூட வெளியேறாமல் இன்னும் வீடுகளில் இருந்து கடவுளை வேண்டிக்கொண்டிருக்கின்றனர். 1963-ம் ஆண்டு நடந்த எரிமலை விபத்தின்போது சுமார் 1100 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தின்போது தப்பிப்பிழைத்தவர்கள் இன்னும் இதே மலையின் அடிவாரங்களில்தான் வசித்துவருகின்றனர். அவர்கள்தான் இந்தத் தலைமுறை மக்களுக்கு வழிகாட்டிகள்.

இந்தோனேஷிய பெண்

எரிமலை வெடித்தால் என்ன ஆகும்?

எரிமலை வெடிப்பின்போது லாவா எனப்படும் நெருப்புக் குழம்பு மட்டும் வெளிவருவதில்லை. நிலநடுக்கம், விஷவாயு, பாறைகள் சிதறுவது என எல்லாம் கலந்ததுதான் எரிமலைச் சீற்றங்கள். 1963-ல் அகங் எரிமலை சீற்றத்தில் இருந்து தப்பித்தவர்கள் இதே நினைவுகளைத்தான் பகிர்ந்துகொள்கின்றனர். "பல கிலோமீட்டர் தூரத்துக்குப் பாறைகள் சிதறிவந்து எங்கள் மேல் விழுந்தன. எரிமலைக் குழம்பு ஒருபக்கம் ஓடியது. நச்சுவாயுக்கள் கரும்புகையாக எங்களைச் சூழ்ந்துகொண்டன" என்கிறார் பாலி தீவில் வசிக்கும் முதியவர் ஒருவர். 
சரி... இப்போது இந்த எரிமலை வெடித்தால் என்ன ஆகும்? மேலே அவர் விவரித்த அதே காட்சிகள்தான். ஆனால், வெடிக்கும்வரை எதனையும் உறுதியாகக் கூறமுடியாது என்கின்றனர் இந்தோனேஷிய அதிகாரிகள். காரணம், எரிமலை சீற்றத்தின் அளவைப் பொறுத்தே அதன் பாதிப்பும் இருக்குமாம். எனவே, இந்த மலை சிறிய அளவில் மட்டுமே சீறும்பட்சத்தில் அதிக பாதிப்பில்லை. 

இந்தோனேஷிய எரிமலை

பசிபிக் ரிங் ஆப் ஃபயர் (Pacific Ring of fire)

எரிமலை வெடிப்பும், நிலநடுக்கமும் இந்தோனேஷியாவுக்கு மட்டுமல்ல. பசிபிக் ரிங் ஆப் ஃபயரில் இருக்கும் எல்லா நாடுகளுக்குமே அச்சுறுத்தல்கள்தான். அது என்ன பசிபிக் ரிங் ஆப் ஃபயர்? பசிபிக் கடலில், தென்அமெரிக்காவின் சிலி முதல் நியூசிலாந்து வரைக்கும் இடைப்பட்ட பிரதேசம்தான் ரிங் ஆப் ஃபயர் என அழைக்கப்படுகிறது. சிலியில் இருந்து நியூசிலாந்து வரைக்கும் இருக்கும் நேரடியான பாதை அல்ல இது. தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி, வடஅமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், தெற்காசியத் தீவுகள் ஆகிய இடங்களின் எல்லைகளை எல்லாம் தொட்டுவிட்டு, நியூசிலாந்தில் வந்து முடிகிறது பசிபிக் ரிங் ஆப் ஃபயர். வரைபடத்தில் பார்த்தால் ஒரு வளையம் போல தோன்றும், சுமார் 40,000 கி.மீ தூரப் பிரதேசம். இந்த பூமியில் இருக்கும் இயற்கையின் அதிசயங்களில் அல்லது புதிர்களில் ஒன்று. 

Mount Agung

இந்தப் பிரதேசத்தில் இருக்கும் நாடுகளுக்கு நிலநடுக்கமோ, எரிமலை வெடிப்போ புதியவை அல்ல. உலகின் பெரும்பாலான எரிமலைகள் துயில்கொள்வதே இங்கேதான். பூமியில் இருக்கும் எரிமலைகளில் 75 சதவிகித எரிமலைகள் இந்த பசிபிக் ரிங் ஆப் ஃபயரில்தான் அமைந்திருக்கின்றன. உலகில் ஏற்படும் பெரிய அளவிலான நிலநடுக்கங்களில் 90 சதவிகித நிலநடுக்கங்கள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன. இப்படி புவியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, அதே சமயம் சவாலான ஒரு பரப்புதான் பசிபிக் ரிங் ஆப் ஃபயர். இந்தளவுக்கு புவியியல் ஆச்சர்யங்கள் இங்கே நடைபெறக் காரணம், இந்தப் பகுதியில் இருக்கும் புவிஅடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் காரணம்.

எப்படி பசிபிக் ரிங் ஆப் ஃபயர் உருவானது?

பசிபிக் ரிங் ஆப் ஃபயர்

Credits: USGS

நிலப்பரப்புக்கு அடியில் இருக்கும் கடல் தட்டுகளும், புவி தட்டுகளும் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. அப்படி நகரும்போது ஏற்படும் உராய்வுகளால்தான் நிலநடுக்கங்கள் உருவாகின்றன. இந்த நிகழ்வு கடலின் அடிப்பகுதியில் நடக்கும்போது, கடலின் கீழ்ப்பரப்பில் அகழி போன்று பள்ளம் உருவாகும். இந்நிகழ்வால்தான் கடலுக்கடியில் பூகம்பம் ஏற்படுகிறது. தட்டுகள் ஒன்றோடொன்று நகரும் பகுதிகள் அதிகம் இருக்கும் இடம்தான் இந்த பசிபிக் ரிங் ஆஃப் பயர். இதனால்தான் இந்தப் பகுதியில் இருக்கும் நாடுகளில் எப்போதும் நிலநடுக்கம் உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. சிலி, மெக்சிகோ, அமெரிக்கா, இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து போன்ற நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் உருவாகவும் இதுதான் காரணம் என்கின்றனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தப் பூமியில் மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையேயான புதிர் விளையாட்டில், மனிதன் விடுவிக்காத புதிர்கள் இப்படி இன்னும் நிறையவே இருக்கின்றன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சனி பெயர்ச்சி பலன்கள்... வடிவேலு ஸ்டைல்..:grin:

  • தொடங்கியவர்

எஸ்.எம்.எஸ். 25 - எப்போதும் ராஜா!

 
 
 
smscol

எஸ்.எம்.எஸ். சேவை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது வாட்ஸ்அப் யுகமாக இருந்தாலும், எஸ்.எம்.எஸ். சேவையின் முக்கியத்துவம் இன்னமும் குறையவில்லை. ஸ்மார்ட்போன் தலைமுறையினருக்கு அது சற்று அந்நியமாக இருந்தாலும்கூட, வளரும் நாடுகளிலும் கிராமப்புறப் பகுதிகளிலும் இன்னமும் தகவல் தொடர்புக்கான எளிய வழியாக எஸ்.எம்.எஸ். இருக்கிறது. இன்றைய இமோஜிகளுக்கும் சித்திர எழுத்துக்களுக்கும் இந்தக் குறுஞ்செய்தி சேவைதான் முன்னோடி. எஸ்.எம்.எஸ். சேவை வெள்ளி விழாவைக் கொண்டாடும் நிலையில், அதன் வரலாற்றையும் வளர்ச்சியையும் திரும்பிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

 

அந்த நாள் எஸ்.எம்.எஸ்.

   

1992 டிசம்பர் 3 அன்றுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்பப்பட்டது. அது ஒருவழிச் செய்தி என்பது மட்டுமல்ல, கம்ப்யூட்டரில் இருந்தே அந்த எஸ்.எம்.எஸ். அனுப்பிவைக்கப்பட்டது என்பதும் ஆச்சர்யமான விஷயம். அப்போது வோடபோன் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த நீல் பாப்வொர்த் என்பவர்தான் தன்னுடைய சக பொறியாளரான ரிச்சர்டு ஜார்விஸுக்கு உலகின் முதல் எஸ்.எம்.எஸ். செய்தியை அனுப்பினார். ஜார்விஸ் வைத்திருந்த ஆர்பிட் போனில் அதைப் பெற்றுக்கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ எனும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே அந்தச் செய்தியில் இருந்தன.

சரித்திரப் புகழ் பெற்ற அந்தச் செய்திக்கு ஜார்விஸ் உடனே பதில் அனுப்பவில்லை. ஏனெனில், அப்போது செல்போன்களில் அந்த வசதி இல்லை. எஸ்.எம்.எஸ். வடிவில் செய்திகளை மட்டுமே பெற முடிந்தது. முதல் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பிய நீல் பார்ப்வொர்த், வெள்ளி விழா பரபரப்புக்கு நடுவே இந்த நிகழ்வை நினைவுகூரும்போது, “1992-ல் எம்.எம்.எஸ். அனுப்பிய போது டெக்ஸ்ட் செய்வது இந்த அளவுக்குப் பிரபலமாகும் என்றோ இமோஜிகளைப் பயன்படுத்தும் மெசேஜிங் சேவைகளுக்கு வழிவகுக்கும் என்றோ நினைக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தன் பிள்ளைகளிடமே அண்மையில்தான், தான் முதல் எஸ்.எம்.எஸ். அனுப்பிய பெருமையைப் பற்றிக் கூறியதாக கூறும் பாப்வொர்த், “அந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி மொபைல் வரலாற்றில் முக்கிய தருணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில் அந்த வாழ்த்துச் செய்தியை அவர் தற்போதைய இமோஜியுடன் சேர்த்து அனுப்பியிருக்கிறார்.

Papworth

நீல் பார்ப்வொர்த்   -  © Vodafone Group

 

 

எஸ்.எம்.எஸ். பிரம்மாக்கள்

முதல் எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்பியவர் பாப்வொர்த் என்றாலும், அதன் பிரம்மா எனும் பெருமைக்கு உரியவர் பின்லாந்தைச் சேர்ந்த பொறியாளரான மேட்டி மக்கோனென் (Matti Makkonen) என்பவர்தான். 1984-ல் இவர்தான் முதன் முதலில் செல்லுலார் வலைப்பின்னல் வழியே செய்திகளை அனுப்பிவைப்பதற்கான கருத்தாக்கத்தை முன்வைத்தார். ஆனால், மக்கோனென் ஒருபோதும் தன்னை எஸ்.எம்.எஸ். கண்டுபிடிப்பாளர் என மார்தட்டிக்கொண்டதில்லை. பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கும் பழக்கம் இல்லாத மெக்கோனென், சில ஆண்டுகளுக்கு முன்பு அபூர்வமாக அளித்த பேட்டியில், ‘இது ஒரு கூட்டுக் கண்டுபிடிப்பு’ என்று கூறியிருக்கிறார். அது உண்மைதான். எம்.எம்.எஸ்.-ன் அடிநாதமாக விளங்கும் 160 எழுத்துகள் எனும் கட்டுப்பாட்டை முதலில் முன்வைத்தவர்கள் ஜெர்மனி பொறியாளர்களான பிரிதெல்ம் ஹில்லேபிராண்ட் மற்றும் பெர்னார்டு ஹிலேபார்ட் (Friedhelm Hillebrand and Bernard Ghillebaert ).

1993-ல் நோக்கியா நிறுவனம் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி பெறும் வசதியை அறிமுகம் செய்தது. அப்போது விற்பனை செய்யப்பட்ட நோக்கியா போன்களில் குறுஞ்செய்தி வருகையை உணர்த்தும் பீப் ஒலி மிகவும் பிரபலம். அதன் பிறகு மெல்ல குறுஞ்செய்தி பிரபலமானது. 1999-ல் தான் பல்வேறு செல்போன் சேவைகளுக்கு இடையே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி அறிமுகமாகி இந்த சேவை பரவலானது.

 

சுருக்கெழுத்துகள்

எஸ்.எம்.எஸ். செய்திக்கு 160 எழுத்துகள் எனும் கட்டுப்பாடு இருந்தாலும், அதுவே பின்னர் நவீன யுகத்துக்கான புதிய சுருக்கெழுத்து மொழியைக் கொண்டுவந்தது. வார்த்தை சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதற்காக, ஆங்கில எழுத்துகளைச் சுருக்கி பயன்படுத்தும் வழக்கமும் அறிமுகமானது. இன்று இவை பலவகையான இமோஜிகளாகப் பரிணமித்துள்ளன.

SMS%2025
 

சுருக்கெழுத்து மூலம் மொழிப் பயன்பாட்டில் புதுமைகளைக் கொண்டுவந்ததைவிட, தகவல் பரிமாற்றத்தில் இவை ஆற்றும் பங்கு போற்றத்தக்கது. குறிப்பாகப் பேரிடர் காலங்களில் எஸ்.எம்.எஸ். செய்தி மூலம் மீட்புப் பணிகள், நிவாரணப்பணிகள், கிராமப் புறங்களில் மருத்துவ சேவைத் தகவல்கள், அரசு திட்டத் தகவல்களை மக்களிடம் கொண்டுசெல்ல உதவுகிறது. உலகின் பல பகுதிகளில் மீனவர்களுக்கு மீன் விலையை செல்போனில் தெரிவிப்பது, விவசாயத் தகவல்களைக் கொண்டுசேர்க்கவும் எஸ்.எம்.எஸ். வசதியே கைகொடுத்திருக்கிறது. இப்படி எஸ்.எம்.எஸ். சார்ந்த பல முன்னோடி முயற்சிகளைக் கூறலாம்.

பல்க் மெசேஜிங் வசதி ஒரு பக்கம் மார்க்கெட்டிங் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டாலும், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத கிராமப்புறப் பகுதிகளில் செய்திகளைக் கொண்டுசேர்ப்பதற்கான இதழியல் வாகனமாகவும் எஸ்.எம்.எஸ் இருந்துள்ளது. இவ்வளவு ஏன், எஸ்.எம்.எஸ். பிரபலமாகத் தொடங்கிய காலத்தில் எஸ்.எம்.எஸ். கதைகள், நாவல்கள்கூடப் புழக்கத்துக்கு வந்தன. குறிப்பாக ஜப்பானில் இந்த வகை நாவல்கள் மிகப் பிரபலமாக இருந்தன.

இவற்றை எல்லாம் பழங்கதைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. சாதாரன செல்போன்கள் புழக்கத்தில் இருக்கும் பல பகுதிகளில் இன்னமும் எஸ்.எம்.எஸ். தான் ராஜா. அங்கெல்லாம் தகவல் பரிமாற்றத்துக்கு இதைவிட்டால் வேறு சிறந்த வழியில்லை. வளரும் நாடுகளில் இப்போதும்கூட எஸ்.எம்.எஸ். சார்ந்த புதுமையான சேவைகளை உருவாக்கி வருகின்றனர். அதனால்தான் ட்விட்டர் , வாட்ஸ்அப் எனப் புதுப்புது சேவைகள் பல வந்தாலும், எஸ்.எம்.எஸ். சேவைக்கான தேவை இன்னும் குறையாமலேயே இருக்கிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வித்தியாசமான விருந்துபசாரம்!

 

கனரக வாகன உற்பத்தி நிறுவனமான ‘கொமட்ஸு’வின் தலைவர், தனது வாழ்க்கையின் பிரியாவிடை விருந்துபசாரத்தை நெகிழ்ச்சியான முறையில் கொண்டாடினார்.

6_Konatsu.JPG

கொமட்ஸு கனரக நிறுவனத் தலைவர் சட்டோரு அன்ஸாக்கி. எண்பது வயதான இவர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. சிகிச்சை எடுத்துக்கொண்ட போதும் அது தந்த பக்கவிளைவுகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, சிகிச்சைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, எஞ்சியுள்ள சில நாட்களை எளிமையாகவும் இயல்பாகவும் கழிக்க விரும்பினார். அதற்கு முன், தனது எண்பது ஆண்டு கால வாழ்க்கையில் தான் சந்தித்த முக்கியமான நபர்களைச் சந்தித்து அவர்களுடன் நன்றி பாராட்ட விரும்பினார்.

இதற்காக, கடந்த மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருந்தார். அதன்படி, நேற்று (11) திங்களன்று டோக்கியோவில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் இந்த நன்றி நவிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவரது வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் உள் அலங்கார வேலைப்பாடுகள் அமைந்திருந்தன. அவரது நண்பர்கள், ஆசிரியர்கள், தொழில் துறை நண்பர்கள் என சுமார் ஆயிரம் விருந்தினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பெரும்பாலானவர்களுடன் கைகுலுக்கி தனது நன்றியைத் தெரிவித்தார் சட்டோரு.

இதையடுத்து, வயதான வசதியுடையவர்கள் பலரும் இதேபோன்ற நிகழ்வை நடத்த விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

சேட்டை என்றால் இதுதான் சேட்டை

  • தொடங்கியவர்

திரும்பத் திரும்பத் தோல்வியைத் தழுவியவர் கார்ட்டூனிஸ்டாக வெற்றி பெற்ற கதை! #MotivationStory

 
 

கதை

தோல்வியாளர்கள் தோல்வியை எதிர்பார்க்கிறார்கள்; வெற்றியாளர்கள் தோல்வியை மறந்துவிடுகிறார்கள்’ என்கிறார் முன்னாள் அமெரிக்க ஃபுட்பால் கோச் ஜோ கிப்ஸ் (Joe Gibbs). ஒரு வகையில், உலகம் வெற்றியாளர்கள் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறது; அவர்களைத்தான் கொண்டாடுகிறது; அவர்களைத்தான் பல விஷயங்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறது. எத்தனையோ வெற்றிகளை வாரிக்குவித்தவர்கள்கூட ஆரம்பத்தில் சில தோல்விகளையாவது எதிர்கொண்டிருந்திருப்பார்கள். அதற்காகவே பல ஏளனங்களுக்கும், ஏச்சுப் பேச்சுகளுக்கும் ஆளாகியிருப்பார்கள். ஒரு மாபெரும் வெற்றி, அந்த அவமானங்களையெல்லாம், பென்சிலால் வரைந்த கோட்டை அழிரப்பரால் அழிப்பதுபோல, எளிதாக அழித்துவிடும். ஸ்பார்க்கியின் கதை அப்படிப்பட்டதுதான். வாழ்க்கையில் தோல்வி ஒன்றையே வெகு காலத்துக்குப் பரிசாக வாங்கியவரின் கதை!

 

சார்லஸ் ஷூல்ஸ்

1922-ம் ஆண்டு, அமெரிக்காவின் மின்னேசோட்டா (Minnesota) மாகாணத்தில் பிறந்தார் சார்லஸ் ஷூல்ஸ் (Charles Schulz). இதுதான் அவர் இயற்பெயர். அவருடைய மாமா ஒருவர், காமிக்ஸ் புத்தகம் ஒன்றில் வரும் ஒரு குதிரைப் பாத்திரத்தின் செல்லப் பெயரால் `ஸ்பார்க்கி’ (Sparky) என்று அழைத்தார். நாளாவட்டத்தில் அதுவே பெயராக சார்லஸுக்கு நிலைத்துவிட்டது. அப்பா ஜெர்மனியைச் சேர்ந்தவர். அம்மா நார்வே நாட்டுக்காரர். வீட்டுக்கு ஒரே பிள்ளை ஸ்பார்க்கி. வளர்ந்ததெல்லாம் செயின்ட் பால் (Saint Paul) நகரில்.

ஸ்பார்க்கிக்கு வரைவதில் கட்டுக்கடங்காத ஆர்வம் இருந்தது. வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குட்டியை விதம்விதமாக படம் வரைந்து தள்ளுவார். ஓவியத்தில் இருந்த ஆர்வத்தில் கொஞ்சமாவது படிப்பில் இருக்க வேண்டாமா? ஸ்பார்க்கி படிப்பில் கொஞ்சம்கூட சூட்டிகை இல்லை. பள்ளியில் எட்டாவது கிரேடு படிக்கும்போதே அத்தனை பாடங்களிலும் ஃபெயில். ஹைஸ்கூலில் படித்தபோது, இயற்பியல் பாடத்தில் அவர் வாங்கிய கிரேடு ஜீரோ. லத்தீன் பாடம், அல்ஜீப்ரா, ஆங்கிலம் அத்தனையிலும் முட்டை. விளையாட்டிலும் பெரிய அளவுக்கு அவர் வெற்றியாளராக இல்லை. பள்ளியின் கோல்ஃப் டீமில் போய்ச் சேர்ந்தார். அந்த ஆண்டு ஒரு முக்கியமான போட்டி நடந்தது. பள்ளியின் சார்பாகக் கலந்துகொண்டார். அதில் வெற்றி பெற்றிருந்தால், அது அவருடைய டீமுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அதிலும் தோல்வி!

`ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்களை மனிதர்கள் விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து விலகிப் போகிறார்கள் அல்லது தள்ளியே நிற்கிறார்கள். தன் இளமைக்காலம் முழுக்க ஸ்பார்க்கி, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவராகவே வளர்ந்தார். மற்றவர்கள் அவரை விரும்பவில்லை என்பது ஒருவேளை பொய்யாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர் மேல் அக்கறை எடுத்துக்கொள்ள யாருமே இல்லை. பள்ளிக்கு வெளியே இருக்கும்போது, வகுப்புத் தோழர்களில் ஒருவர்கூட ஸ்பார்க்கியைப் பார்த்து `ஹலோ’கூடச் சொன்னதில்லை. ஆண் தோழர்கள் கிடக்கட்டும்... ஸ்பார்க்கிக்கு ஒரு மாணவிகூட தோழி கிடையாது. ஆக நட்பு என்கிற விஷயத்திலும் ஸ்பார்க்கிக்குத் தோல்வியே! இந்த விலகல் தன்மைக்கு அவரும் ஒரு காரணம்தான். எங்கே நம்மைப் பார்த்துச் சிரித்துவிடுவார்களோ, கேலி செய்வார்களோ என்கிற பயம் அவருக்குள் இருந்தது.

ஸ்பார்க்கி ஒரு தோல்வியாளர்... இது வகுப்புத் தோழர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஏன்... அவருக்கேகூடத் தெரிந்திருந்தது. அந்தப் பழிச்சொல்லோடு வாழ அவர் பழகிக்கொண்டார். `ஒரு விஷயம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால், அப்படித்தான் நடக்கும்’ என்கிற யதார்த்தத்துக்கு அவர் பழகிக்கொண்டார். எது எப்படியிருந்தாலும், ஸ்பார்க்கிக்கு ஒன்றே ஒன்று மிக மிக முக்கியமானது... அது, ஓவியம் வரைவது. தான் வரையும் ஓவியங்கள் மேல் அவர் அபார நம்பிக்கை கொண்டிருந்தார். அவற்றைப் பார்த்து யாருமே அவரைப் பாராட்டவில்லை, ஒரு சின்ன ஷொட்டுக்கூட அவருக்குத் தரவில்லை. அதைப் பற்றி அவருக்குக் கவலையும் இல்லை. தனிமையில் தான் வரைந்த ஒவ்வொரு ஓவியத்தையும் பார்த்துப் பார்த்து, தனக்குத் தானே பெருமைப்பட்டுக்கொண்டார்.

தூரிகை

தோல்வி விடாமல் அவரைத் துரத்தியபடி இருந்தது. ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. வருடா வருடம் பள்ளியின் சார்பாக ஒரு ஆண்டு மலர் கொண்டு வருவார்கள். அதில் வெளியிடுவதற்காக தன் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பிவைத்தார். `சாரி... பிரசுரிக்க முடியாது’ என்று ஆசிரியர் குழுவிலிருந்து திருப்பியனுப்பிவிட்டார்கள். தன் ஓவியங்களைத் தூக்கியெறிந்ததுபோல உணர்ந்தாலும், தன் திறமையை நினைத்து தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டார் ஸ்பார்க்கி. அந்தக் கணத்தில்கூட ஓவியராக வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு மேலோங்கியிருந்தது.

வாழ்க்கை நினைத்ததுபோலெல்லாம் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பதில்லை. ஸ்பார்க்கி விஷயத்திலும் அது நடந்தது. 1943-ம் ஆண்டு, அவருடைய அம்மா டேனா (Dena) புற்றுநோய் பாதித்து இறந்து போனார். அம்மாவின் மரணம் அவரை உலுக்கிவிட்டது. ஸ்பார்க்கி அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். அங்கும் அவருடைய துரதிர்ஷ்டம் விரட்டத்தான் செய்தது. `50 காலிபர் மெஷின் கன்’ டீமில் பணி. போரில் ஈடுபட்டிருந்தபோது, ஒரே ஒருமுறைதான் அவருக்குத் தன் துப்பாக்கியை எடுத்துச் சுடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதும் அவரால் சுட முடியவில்லை... துப்பாக்கியில் குண்டுகளை நிரப்ப மறந்திருந்தார். நல்லவேளையாக எதிராளி அதற்கு முன்பாகவே சரணடைந்திருந்தான்.

1945-ம் ஆண்டு ராணுவப் பணியை முடித்துக்கொண்டு மின்னேப்போலிஸ் (Minneepolis) நகரத்துக்குத் திரும்பினார். சில பத்திரிகைகளின் சின்னச் சின்ன வேலை... எதுவும் திருப்திகரமாக இல்லை. பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்தார். அவர்கள் சில சாம்பிள் ஓவியங்களை அனுப்பச் சொன்னார்கள். வெகு கவனமாக வரைந்து அனுப்பினார் ஸ்பார்க்கி. அதுவும் நிராகரிக்கப்பட்டது. அவர் ஒரு தோல்வியாளர் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம்.

ஆனால் தான் தோல்வியாளர் என்பதை ஏற்றுக்கொள்ள ஸ்பார்க்கி தயாராக இல்லை. தன் சொந்தக் கதையையே கார்ட்டூனாக வரைய முடிவு செய்தார். அந்தக் கதையில் வரும் சிறுவன் அவரைப்போலவே எல்லாவற்றிலும் தோற்றுப்போகும் ஒருவனாக இருந்தான். அந்த கதாபாத்திரத்துக்கு `சார்லி பிரௌன்’ என்று பெயர் வைத்தார். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். அந்தச் சிறுவனின் வடிவில் எல்லோரும் தங்கள் வாழ்க்கையைப் பார்த்தார்கள். சார்லி பிரௌன் கதாபாத்திரத்தை `பிரியத்துக்குரிய தோல்வியாளன்’ (Loveable Loser) என்று அழைத்தார்கள். அந்தக் கதாபாத்திரம் உலகப் புகழ்பெற்ற ஒன்றாக மாறிப்போனது. பலமுறை தோல்விகளைத் தழுவிய, திரும்பத் திரும்ப நிராகரிக்கப்பட்ட ஸ்பார்க்கி மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டாக, வெற்றியாளராக, அவர் இயற்பெயராலேயே `ஓவியர் சார்லஸ் ஷூல்ஸ்’ என்று அடையாளம் காணபப்ட்டார்.

ஓவியம்

 

அவருடைய புகழ்பெற்ற `பீனட்ஸ்’ (Peanuts) காமிக் பட வரிசை (Comic Strips) பெரும் புகழை அவருக்குத் தேடித் தந்தது. அவருடைய ஓவியங்கள் புத்தகங்கள், டீஷர்ட்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் என பலவற்றில் இடம்பிடித்தன. `வாழ்க்கை நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு வழியைக் காட்டத்தான் செய்கிறது... தோல்வியாளர்களுக்கும்கூட’ என்கிற வாக்கியம் எத்தனை உண்மை என்பதை ஷூல்ஸின் கதை நமக்குச் சொல்கிறது. அவருடைய `பீனட்ஸ்’ காமிக் பட வரிசை, அக்டோபர் 2, 1950-ம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 13, 2000-ம் ஆண்டு வரை வெளியானது! காமிக்ஸ் வரலாற்றில் ஷூல்ஸின் சாதனை மலைக்கவைப்பது. மொத்தம் 17,897 காமிக் பட வரிசைகளை வரைந்திருந்தார் ஷூல்ஸ். 75 நாடுகளில், 355 மில்லியன் மக்கள் அவருடைய காமிக் படங்களை பார்த்து ரசித்திருக்கிறார்கள். அவை 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 13

1577 : – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்­கி­லாந்தின் பிளை­ம­வுத்தில் இருந்து தனது உல­கத்தைச் சுற்­றி­வரும் பய­ணத்தை ஆரம்­பித்தார்.

1642 : – ஏபெல் டாஸ்மான் நியூஸி­லாந்தை அடைந்தார்.

SaddamSpiderHole.jpg1888 : – யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற சூறா­வ­ளியில் பலத்த சேதம் ஏற்­பட்­டது.

1937 : – சீனாவின் நான்கிங் நகரம் ஜப்­பா­னி­ய­ரிடம் வீழ்ந்­ததை அடுத்து அங்கு பல பொது­மக்கள் கொல்­லப்­பட்டும், பாலியல் வதைக்கும் உள்­ளாக்­கப்­பட்­டனர்.

1941 : – இரண்டாம் உலகப் போர்: ஹங்­கேரி, ருமே­னியா ஆகி­யன ஐக்­கிய அமெ­ரிக்கா மீது போரை அறி­வித்­தன.

1943 : – இரண்டாம் உலகப் போர்: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் – 710 போர் விமா­னங்கள் ஜெர்­ம­னி யின் “கீல் நகர் மீது தாக்­கு­தலை நடத்­தின.

1949 : – இஸ்­ரேலின் சட்­ட­சபை நாட்டின் தலை­ந­கரை ஜெரு­சலேம் நக­ருக்கு மாற்ற முடி­வெ­டுத்­தது.

1959 : – மக்­கா­ரியோஸ் சைப்­பி­ரசின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யானார்.

1972 : – அப்­பல்லோ 17 விண்­வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்­தி­ரனில் இறங்­கினர். 20ஆம் நூற்­றாண்டில் சந்­தி­ரனில் இறங்­கிய கடைசி மனி­தர்கள் இவர்­களே.

260px-Kofi_Annan.jpg1974 : – மோல்ட்டா குடி­ய­ர­சா­னது.

1981 : – போலந்தில் இரா­ணுவ ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

1996 : – ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லா­ள­ராக கோஃபி அனான் தெரிவு செய்­யப்­பட்டார்.

2001 : – இந்­திய நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தலில் தீவி­ர­வா­திகள் உட்­பட 15 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2003 : – ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அவ­ரது சொந்த ஊரான திக்­ரித்­துக்கு அருகே அமெ­ரிக்கப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

2004 :- முன்னாள் சிலி சர்­வா­தி­காரி அகுஸ்டோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

2006 : – பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

 

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

`ஒரு பொய்யாவது சொல் கண்ணே..!’ பாணியில் பாடல்மூலம் இணைந்த தம்பதி! #ViralVideo

 
 

திரைப்படங்களில், பிரிந்த குடும்பம் ஒன்று சேர பாடல்கள் உதவுவதுபோல, க்ளைமாக்ஸ் காட்சி அமைத்திருப்பார்கள். திரைப்படப் பாணியில் உத்தரப்பிரதேசத்தில், ”நா சீக்ஹா ஜினா டெரி பினா” என்னும் இந்தி பாடல், பிரிந்த குடும்பம் மீண்டும் இணைய வழிவகுத்துள்ளது.

viral video
 

 

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்கள் சமரசம் பேசி அவர்களைச் சேர்த்துவைக்க முயன்றனர். ஆனால்,  கணவன் மனைவி இடையே பிரச்னை பூதாகரமானதுதான் மிச்சம். இரண்டு மாதமாக நீடித்த பிரச்னை, காவல்நிலையம் வரை பஞ்சாயத்துக்குச் சென்றுவிட்டது. கணவன்மீது மனைவி உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் போலீஸ் சம்மன் அனுப்பியது.

காவல்நிலையத்தின் குடும்ப நலப் பிரிவு (family counselling centre), அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்தது. ஆனாலும், மனைவியின் கோபம் தீரவில்லை. அப்போதுதான் அந்த எதிர்பாராத காட்சி அரங்கேறியது. தன் மனைவியைப் பார்த்து அந்தக் கணவர்  இந்திப் பாடல் ஒன்றை சோகமாக பாடத் தொடங்கினார். ``நா சீக்ஹா ஜினா டெரி பினா” என்று அவர் பாடிய பாடலுக்கு ‘உன்னைவிட்டுப் பிரிந்து வாழ நான் இன்னும் கற்றுகொள்ளவில்லை’ என்று அர்த்தம். பாடலைக் கேட்ட மனைவி, மனம்உருகி அழுதுகொண்டே தன் கணவரை அணைத்துக்கொண்டார். காவல்நிலையத்தில் தம்பதி ஒன்று சேர்ந்ததையடுத்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.  இந்தக் காட்சியை அங்கிருந்த காவலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, வைரலாகிவிட்டது. இந்தச் சம்பவம், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. ஆனால், இப்போது வரை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இந்த வீடியோ பகிரப்பட்டுவருகிறது.

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தோனி Vs பாண்ட்யா! - ரன்னிங் ரேஸில் வென்றது யார் தெரியுமா?

 
 

இந்தியா-இலங்கை அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி மொகாலியில் நடந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தோனி
 

 

இந்நிலையில் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் இளம் வீரர் ஹார்திக் பாண்ட்யாவுக்கும் இடையே 100 மீட்டர் ஓட்ட பந்தயம் போட்டி நடக்கிறது. அதாவது,  36 வயதான தோனி 24 வயதான  பாண்ட்டியாவுடன் ஓட்ட பந்தயத்தில் ஓடுகிறார்.  இறுதியில் தோனி பந்தயத்தில் வெற்றி பெறுகிறார். ஹார்திக் பாண்ட்யாவைவிட தோனி  12 வயது மூத்தவர். ஆனாலும் பிட்னஸிலும் வேகத்திலும் தோனியை பாண்ட்டியாவால் மிஞ்ச முடியவில்லை. தல தோனி ஃபிட்னசிலும் 'தல' தான் என்று நிரூபித்துள்ளார்!

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகம் எங்கும் விற்கிறது... தமிழ்ப் பெண்ணின் ஓவியங்கள்!

 

 

‘`சுயம்புவாக ஓவியம் கற்றேன். இன்று வெளிநாடுகளிலும் என் ஓவியங்கள் விற்பனை யாவது மிகவும் சந்தோஷமாகயிருக்கிறது’’ என்கிறார் பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப் பெண் வித்யா விவேக். தன் கலைநயமிக்க ஓவியங்களால் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துவரும் 36 வயது பெண்மணி; இரண்டு பெண் குழந்தைகளின் தாய். சித்திரமும் கைப் பழக்கம் என்பதை நிரூபித்து வருபவரிடம் பேசினோம்.

40p1_1512451217.jpg

``நீலகிரியில் பிறந்தேன். சிறு வயதிலிருந்தே பொழுதுபோக்காக ஓவியங்கள் வரைவேன். அதற்கான பயிற்சி எதுவும் பெறவில்லை. என்றாலும், நான் வரையும் ஓவியங்கள் கலை நேர்த்தியுடன் மிளிர்வதாக அனைவரும் குறிப்பிட்டுச் சொல்வார்கள். தந்தையின் மத்திய அரசுப் பணி காரணமாக மும்பைக்குக் குடிபெயர்ந்தது எங்கள் குடும்பம்.

40p2_1512451234.jpg

எம்.பி.ஏ, பி.இ முடித்தபிறகு என் திருமணம் முடிந்தது. நானும் கணவரும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்தோம். குழந்தை பிறந்த பிறகு முழுநேரமாகச் சித்திரம் வரைவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

என் படைப்புகளைச் சமூக வலைதளங் களில் பதிவிட்டபோது நிறைய பாராட்டுகள் கிடைத்தன. 2012-ம் ஆண்டு குடும்ப நண்பர் ஒருவர் பணம் கொடுத்து என் ஓவியங்களை வாங்கியபோது தான் இந்தப் படைப்பு களின் மதிப்பு எனக்கே தெரியவந்தது. என் மாமியார், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் உற்சாகப்படுத்த, பாரம்பர்ய மற்றும் நவீன ஓவியங்களில் கவனம் செலுத்தினேன். இந்தியாவில் பல நகரங்களிலும் வெளி நாடுகளிலும் ஓவியக் காட்சி களில் கலந்துகொண்டு என் ஓவியங்களைப் பார்வைக்கு வைத்தேன். இயற்கைக் காட்சிகள், புராண, இதிகாச, ஆன்மிகக் கதாபாத்திரங்கள் மற்றும் தெய்வ உருவங்களை வரைவதிலும் தேர்ச்சி பெற்றேன்.

40p3_1512451251.jpg

என் ஓவியங்கள் தொடர்ந்து விற்பனையாகி, நல்ல வருமானம் வரத் தொடங்கியது. இப்போது அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன். குழந்தை களுக்கு ஓவியப் பயிற்சி வகுப்புகள் எடுப்பதுடன், பல கருத்தரங்கங்களில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறேன். சுயம்புவாக நான் கற்ற ஓவியம், இன்று என்னை வெற்றியாளராகவே மாற்றியுள்ளது.

புடவை, துப்பட்டாவில் கைவேலைப் பாடுகள் செய்ய, அதையும் பலரும் போட்டி போட்டு வாங்கினர். வணிக இணையதளங் களின் மூலமாகவும் அவற்றை விற்பனை செய்கிறேன். திருமணம், குழந்தை என்றான பின்னரும், வேலையைவிட்ட பின்னரும், எந்தத் தேக்கமும் இல்லாமல் வாழ்க்கையைப் பரபரப்பாக வைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!”

வண்ணங்கள் தெளிக்கின்றன வித்யாவின் பேச்சில்!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டில் ஹீரோவான இளைஞர்... வைரல் ஆன புகைப்படம் சொல்வது என்ன?

 
 

அக்டோபர் மாதம், அமெரிக்காவில் இருக்கும் லாஸ் வேகாஸ் நகரில் மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.  இசை விழா ஒன்றுக்காக 22000க்கும் அதிகமான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். அப்போது, அருகிலிருந்த ஹோட்டலிலிருந்து ஸ்டீஃபன் பேடாக் (Stephen Paddock) என்பவன் கூட்டத்தை நோக்கி சராமரியாக சுட்டான். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஸ்டீஃபனால் 59 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.  அந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அப்போது வைரல் ஆனது.

வைரல்

 

அந்தப் புகைப்படத்தில், பெண் ஒருவரின் மீது பாதுகாப்பு கேடயமாயிருந்து, குண்டுகள் படாமல் ஓர் இளைஞர் காப்பாற்றுகிறார். அந்த இளைஞர் அந்தப் பெண்ணின் கணவனாகவோ அல்லது பாய் ஃப்ரெண்டாகவோ இருக்க வேண்டுமென அப்போது சமூக வலைதளங்களில் அவரைப் பாராட்டி நிறைய எழுதப்பட்டது. அவரைப்  பற்றிய தகவல்கள் பின்னர் வெளியாகின. அவர் பெயர் மேத்யூ கோபோஸ்  (Matthew Cobos). அவர் ஒரு ராணுவ வீரர்.

மேத்யூவும் அந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அவருடன் அவர் தங்கையும் இன்னும் சில நண்பர்களும் சென்றிருந்தார்கள். 
மேத்யூ, ராணுவத்தில் பயிற்சி பெற்றவர் என்பதால் எப்படி மனிதக் கேடயமாக செயல்பட்டு ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. மேலும், ஆபத்து காலத்தில் பெண்களையும் குழந்தைகளையும் முதலில் காப்பாற்ற வேண்டுமென்பதை அந்த நெருக்கடிச் சூழலிலும் மேத்யூ மறக்கவில்லை. 

மேத்யூ அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மட்டும் செய்யவில்லை. அப்போது, அவர் கண்களை தனது கைகளால் மூடிக்கொண்டார். சுற்றியும் சடலங்கள். உயிர் பயத்தில் ஓடும் ஆயிரக்கணக்கானோர். இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்தால், அது பற்றிய நினைவுகள் வாழ்நாள் முழுவதும் அந்தப் பெண்ணுக்கு தொல்லை தரலாம். மீண்டும் அன்றாட வாழ்க்கைக்கு அந்தப் பெண்ணால் திரும்ப முடியாமலே போகலாம். அதனால், அந்தப் பெண்ணின் கண்களை மேத்யூ மூடிக்கொண்டார். எந்தச் சூழலிலும் பதற்றமடையாமல், எதிரிகளிடமிருந்து அமெரிக்கர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ராணுவத்தின் அத்தனை கடமைகளையும் விடுமுறையிலிருந்தபோதும் செய்த மேத்யூவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதுமட்டுமல்ல; அந்தப் பெண்ணைக் காப்பாற்றி ஒரு காருக்குப் பின் மறைவாக வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு உதவப் போயிருக்கிறார் மேத்யூ. தனது பெல்ட்டை எடுத்து, குண்டு பாய்ந்தவர்கள் உடலிலிருந்து ரத்தம் அதிகம் வெளியேறாமல் இருக்க கட்டுப் போட்டிருக்கிறார். இன்னொருவர் உடலில் குண்டு துளைத்த இடத்தில் தனது விரலால் அடைத்து ரத்தப்போக்கை குறைத்திருக்கிறார்.

மேத்யூ

Getty imagesஐ சேர்ந்த புகைப்படக்காரர் டேவிட் பெக்கர் என்பவரும் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார். மக்கள் அங்குமிங்கு ஓடுவதைப் பார்த்திருக்கிறார். ஆனால், என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியவில்லை. இந்தச் சம்பவங்களைப் பதிவு செய்வது ஒரு புகைப்படக்காரரின் கடமை என எண்ணியதால், அவர் ஓடாமல் படங்கள் எடுத்திருக்கிறார். அவைதாம் நமக்கு மேத்யூஸை அடையாளம் காட்டியிருக்கிறது.

 

மேத்யூ, கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர். ஹவாய் மாகாணத்தில் அமெரிக்க ராணுவ வீரராக பணிபுரிந்துவருகிறார். இந்தச் சம்பவத்துக்கு பிறகு மேத்யூஸுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள். அமெரிக்க அரசு அவருக்கு ஏதும் உயரிய பரிசும் கெளரவமும்கூட கொடுக்கலாம். நமக்கு மேத்யூவும் டேவிட் பெக்கரும் சொல்லியிருப்பது ஒன்றுதான். எந்தச் சூழ்நிலையிலும் நம் கடமையைச் செய்யத் தவறக்கூடாது, உங்கள் கடமை எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

இது 'ரஜினி' ஸ்டெயில்

நடிகர் ரஜினிகாந்தின் 67ஆவது பிறந்த நாளான இன்று, பிபிசியைச் சேர்ந்த பிற மாநிலத்தவர்கள் தங்களுக்கு பிடித்தமான ரஜினி ஸ்டைலை பிபிசி தமிழ் நேயர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்கள்.

  • தொடங்கியவர்

33 வருடமாக, ஒரு மரத்தைக் காக்கப் போராடும் பெண்!

'வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்' என்பதை, நாம் அடிக்கடி காதில் கேட்டிருக்கிறோம். ஆனால், ஒரு மரத்துக்காக வீடு கட்டியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோமா! 

IMG-20171207-WA0003_14175.jpg

 


ஆம், கடலூர் தேவனாம்பட்டினத்தில் பவானி என்ற பெண்மணி, 33 வருடங்களாகத் தன் வீட்டுக்குள்ளேயே ஒரு பெரிய வேப்பம் மரத்தை வளர்த்து, அதை தெய்வமாக வழிபட்டுவருகிறார். 'சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளில்தான் இப்படி வீட்டுக்குள் மரம் வளர்ப்பார்கள் என்பதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால், இங்கு நேரடியாகவே அதைப் பார்க்க முடிகிறது' என்று பலர் ஆச்சர்யத்துடன் அம்மரத்தைப் பார்க்கிறார்கள்.

IMG-20171207-WA0004_14514.jpg
    

அம்மரம் குறித்து பவானி, "நான், இங்கு கல்யாணம் பன்னிகிட்டு வந்து 33 வருஷம் ஆகுது. கல்யாணம் முடிந்து சில மாதங்களுக்குள்ளேயே எனக்கு கடுமையான காய்ச்சல். அதற்காக ஏறாத ஆஸ்பத்திரி இல்ல. செய்யாத வைத்தியம் இல்ல. இதுக்காக எவ்வளவோ பணத்தை செலவழிச்சோம். ஆனால், காய்ச்சல் சரியாகவில்லை. என்னன்னு தெரியலைன்னு டாக்டர்களும் கைவிரிச்சிட்டாங்க. அப்போ, இந்த வேப்பம் மரம் சின்ன கன்னு. ஒரு நாள் இரவு, நான் கும்பிடும் காளி மீது பாரத்தைப் போட்டுவிட்டு, இந்த வேப்பங்கன்னில் நாலு இலையைப் பறிச்சு வாயில் போட்டுகிட்டு, அப்படியே இந்த வேப்பங்கன்னுக்கு பக்கத்திலேயே சாஞ்சிட்டேன். அப்போதான் திடீர்ன்னு, நான் கும்பிடும் காளியாத்தா சின்ன புள்ளையாக என் பக்கத்தில் வந்து என்னை எழுப்பி, "உனக்கு ஒண்ணும் ஆகாது. நான் பார்த்துக்கிறேன். நீ கவலை இல்லாமல் தூங்கு" என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள். அவள் சொன்ன மாதிரியே எனக்கு காய்ச்சல் சரியாச்சு. டாக்டர் கைவிரிச்ச என்னை அந்த ஆத்தாள்தான் காப்பாத்தினாள். அன்னையிலிருந்து, இந்த மரம்தான் எல்லாமே எனக்கு. அதன்பிறகு, வருஷங்கள் ஓடுச்சு. எனக்கு குழந்தைககள் பிறந்தாங்க. வருமானத்துக்கு எந்தக் குறையும் இல்ல. குடும்பமும் நல்லா இருக்கு. இங்கு மெத்தை வீடு கட்டணும். இந்த மரத்தை வெட்டிடலாம் என்று பிள்ளைகள், கொத்தனார், ஊர்க்காரங்க எல்லாம் சொன்னாங்க. அதற்கு நான் சம்மதிக்கவேயில்லை. என் உயிரே போனாளும் இந்த மரத்தை வெட்ட விடமாட்டேன். எனக்கு, அப்படிப்பட்ட வீடே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகுதான், இந்த மரத்தை நடுவில் வைத்து சுத்தி வீடு கட்டிட்டாங்க. 33 வருஷமா இதைப் பாதுகாத்துகிட்டு வருகிறேன்" என்றார்.

 

காரணம் எதுவாக இருந்தாலும் காக்கப்படுகிறது மரம்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சென்னையில் உள்ள உணவகத்தில் உணவு பரிமாறும் ரோபோக்கள்

robots-2.jpg

சென்னையில் உள்ள உணவகத்தில்   உணவு பரிமாறுவது வாடிக்கையாளர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.     சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ‘ரோபோட்’ என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்கள்  உணவு பரிமாறுவனவான   செயல்படுகின்றன. இதற்காக இந்த உணவகத்தின் உரிமையாளர் சீனாவில் இருந்து 4 ரோபோக்களை இறக்குமதி செய்துள்ளார்.

உணவகத்தில் உள்ள மேசையில் பொருத்தப்பட்டுள்ள ஐ-பாட் மூலம் வாடிக்கையாளர்கள் உணவை ஓர்டர் செய்யலாம். அது டிரன்ஸ்மீட்டர் மூலமாக சமையல் அறைக்கு செய்தி சென்றடையும். அதை கண்ட சமையல் காரர்கள் சமைத்து அதனை ரோபோட்டின் கையில் உள்ள தட்டில் வைத்து அனுப்புவர். அது உணவை வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும்.

ரோபோட்டில் பொருத்தப்பட்டுள்ள சென்சர்கள் மூலம் அவை வாடிக்கையாளர்களை சென்றடையும். ரோபோவானது வாடிக்கையாளர் வாசலில் வரும் போதே அவர்களை வரவேற்று மேசையில் அமர வைக்கும்.  வாடிக்கையாளர்களை நினைவில் கொண்டு மீண்டும் உணவகத்திற்கு வந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும், உணவகத்தில் உள்ள ரோபோக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் மனிதர்கள் உணவு பரிமாறி பார்த்த வாடிக்கையாளர்க்கு ரோபோர்ட் உணவு கொடுப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதனால் இந்த உணவகம் மிகவும் பிரபலமடைந்து வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது

robo.jpgrobot-7.jpgrobots.jpg

 

 

http://globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.