Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்கான ஐந்து வழிகள்

99259241affiliatelinks976jpg

அமெரிக்காவில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசிக்கும் பிரபல யூடியூப் காணொளிப் பதிவரான இவான் எடிங்கர் யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான ஐந்து வழிகளைப் பட்டியலிடுகிறார்.

1. ஆட்சென்ஸ்

யூடியூப் பதிவர்கள் பணம் சம்பாதிப்பதற்கான முதல் வழியே விளம்பரங்கள்தான்.

ஆனால், மாறிவரும் சூழலும் யூடியூபில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் விளம்பர வருமானத்தின் அளவு குறைவதற்குக் காரணமாகியுள்ளன.

நீங்கள் யூடியூபில் ஒரு காணொளியை பார்ப்பதற்கு முன்பு வரும் விளம்பரத்தைத்தான் இவான் இங்கு குறிப்பிடுகிறார்.

ஒரு குறிப்பிட்ட காணொளியில் விளம்பரமானது ஒவ்வொரு ஆயிரம் முறை பார்க்கப்படும்போதும் அதை பதிவேற்றியவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அதாவது சில விடயங்களை அடிப்படையாக கொண்டு ஒன்று முதல் ஐந்து டாலர்கள் வழங்கப்படும்.

தற்சமயம் இந்தத் தொகை குறைந்து வருவதுடன், விளம்பரம் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை யூடியூப் எடுத்துகொள்வதாக இவான் கூறுகிறார்.

உங்களின் ஒரு காணொளி பத்து இலட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு வருமானமாக சுமார் 64,000 ரூபாய் முதல் 3,20,000 ரூபாய் கிடைக்கும் என்று இவான் விளக்குகிறார்.

2. பாட்ரியான்

99258011gettyimages-170939619jpg

பாட்ரியான் என்பதன் மூலம் யூடியூப் பதிவர்கள் பணம் ஈட்டுகின்றனர்.

இவான் பாட்ரியானை, "இணைய வெகுமதிப் பெட்டி" என்று குறிப்பிடுகிறார்.

"உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ யூடியூபில் காணொளியை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். ஆனால், உங்களுக்கு உண்மையிலேயே பிடிக்கிறதென்றால் அதற்கு நீங்கள் உங்களால் இயன்ற தொகையை குறிப்பிட்ட ஒரு காணொளிக்கென ஒருமுறையோ அல்லது அதை பதிவேற்றியவருக்கு மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையையோ அளித்து உதவிக்கரம் நீட்டலாம்."

அவ்வாறு உதவிக்கரம் நீட்டுபவர்களுக்கென யூடியூப் பதிவாளர்கள் ஒரு தனிப் பக்கத்தை பராமரித்து அதன் மூலம் பிரத்யேக காணொளிகளை அவர்களுக்கு வழங்குகிறார்கள்.

எனவே, இதுபோன்ற வழிமுறைகளை கையாள்வதன் மூலமாகவும் யூடியூபில் பணம் சம்பாதிக்கலாம்.

3. இணைப்புகளைப் பதிவிடல்

இது குறிப்பாக பேஷன் மற்றும் அழகுக் கலை சார்ந்த தயாரிப்புகளுக்கு மிகவும் பொருந்தக் கூடியது. அதாவது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு பற்றி யூடியூபில் காணொளி பதிவேற்றும் ஒருவர் அதன் விளக்கவுரையில் அது சார்ந்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் இணைப்புகளை பதிவிடுவார்.

"அவர்கள் தங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதுடன், அதற்காக 5-20% பணத்தையும் பெறுகின்றனர்."

இவ்வாறு கிடைக்கும் பணமானது, நீங்கள் காணொளியின் மூலம் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு அந்நிறுவனம் கூறும் நன்றி போன்றதாகும்.

அதாவது, குறிப்பிட்ட யூடியூப் பதிவரின் கணக்கின் விளக்கவுரையிலோ அல்லது சுயவிவர பக்கத்திலோ இருக்கும் இணைப்புகளை பயனர் ஒருவர் சொடுக்கி அத்தயாரிப்பை வாங்கும் பட்சத்தில் அதன் மூலம் பணம் ஈட்டப்படுகிறது.

4. பொருள் விற்பனை

98763304pa-23747880jpg

காட்சியில் தெரியும் பதாகைகள், கைப்பட்டைகள், சட்டைகள், கைபேசி உறைகள் போன்றவை எல்லாமே யூடியூப் பதிவாளர்கள் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளாகும்.

5. தயாரிப்பு சார்ந்த விளம்பர காணொளி

தற்போதெல்லாம் தயாரிப்பு சார்ந்த விளம்பரங்களின் மூலம்தான் யூடியூப் பதிவர்கள் பெரும்பாலும் பணம் ஈட்டுவதாக இவான் கூறுகிறார்.

இதன்படி, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதற்கு காணொளியை தயாரிக்குமாறு கேட்கும். அதற்கு, பிரதி பலனாக அதிகளவிலான பணம் யூடியூப் பதிவர்களுக்கு வழங்கப்படும்.

"சாதாரண விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் பணத்தை விட பன்னிரண்டு மடங்கு அதிகமான மாத வருவாயை இது கொடுக்கும். இது கேட்பதற்கு அசாதாரணமாக தோன்றினாலும், இது உண்மைதான்."

"என்னுடைய நண்பர் லூக் என்பவருக்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து 20,000 பவுண்டுகள் மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைத்தது" என்று கூறுகிறார் இவான்.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! - #MotivationStory

 

கதை

`ம்மிடம் மாற்றத்தை உருவாக்குவது ஆசிரியர்தானே தவிர, வகுப்பறை அல்ல’ என்று சொல்லியிருக்கிறார் ஆங்கில எழுத்தாளரும் கவிஞருமான மைக்கேல் மோர்புர்கோ (Michael Morpurgo). பள்ளி நாள்களை நாம் அசைபோடும்போதே நமக்குள் அழுத்தமாக வந்துவிழும் உருவம் நமக்குப் பிடித்த ஆசிரியராகத்தான் இருப்பார். ஆசிரியர் நமக்கு நல்ல முறையில் சொல்லிக் கொடுத்த ஒரு பாடம் வாழ்நாளெல்லாம் நம் நினைவுக்கு வரும். எல்லோருக்குமே பள்ளி நாள்களும், அங்கே கற்றுக்கொண்ட மறக்க முடியாத பாடங்களும் நிச்சயம் நினைவில் நிற்கும். ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியை ஒருவர் நடத்திய இரு பாடங்கள், அவை உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்களை விவரிக்கிறது இந்தக் கதை.

 
 

அது ஒரு பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் நிறைந்திருந்த அறை. நாளின் முதல் வகுப்பு. மாணவர்கள் வகுப்பு ஆசிரியை வருவதற்காகக் காத்திருந்தார்கள். அன்றைக்கு ஏனோ அவர் வருவதற்கு தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. ஆசிரியர் இல்லாத வகுப்பறை அதகளம்தானே... அதுதான் அங்கும் நடந்துகொண்டிருந்தது. மாணவர்கள், உரத்தக் குரலில் பேசி, சிரித்துக்கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும், சிலர் பொருள்களை வீசியபடியும் இருந்தார்கள். ஆசிரியை வந்தார். வகுப்பு கப்சிப்பென அடங்கிப்போனது.

அந்த ஆசிரியை மிக மென்மையானவர். அதிர்ந்த குரலில் பேச மாட்டார். மாணவர்களை அரவணைத்துச் செல்வார். வெறும் பாடங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை எளிமையாக உணர்த்துவதில் வல்லவர். உள்ளே வந்தவர், வகுப்பறையை ஒரு நோட்டம்விட்டார். பிறகு, போர்டில் எழுத ஆரம்பித்தார்.

வகுப்பறை

1 x 5 = 3

2 x 5 = 10

3 x 5 = 15

4 x 5 = 20

5 x 5 = 25

6 x 5 = 30

7 x 5 = 35

8 x 5 = 40

9 x 5 = 45

10 x 5 = 50

இந்த வாய்ப்பாட்டை எழுதி முடித்துவிட்டு, மாணவர்களைப் பார்த்தார். பல மாணவர்களின் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. அவர்களில் ஒரு மாணவனைக் கூப்பிட்டார். ``உங்களுக்கெல்லாம் ஏன் சிரிப்பு வருது...’’

``அது வந்து...’’

``பயப்படாம சொல்லு...’’

``இல்லை டீச்சர்... இது ரொம்ப எளிமையான வாய்ப்பாடு. நீங்களே மத்த எல்லாத்தையும் சரியா எழுதியிருக்கீங்க... ஆனா, `1 x 5 = 3’னு எழுதியிருக்கீங்களே... தப்பு இல்லையா?’’

``தப்புதான். காரணத்தோடதான் அப்பிடி எழுதினேன். நாம ஆயிரம் விஷயத்தை சரியா செஞ்சிருப்போம். அதையெல்லாம் இந்த உலகம் கவனிச்சாலும் மறந்துடும். ஏதோ ஒண்ணைத் தப்பா செஞ்சிருப்போம். அதை ஞாபகத்துலவெச்சிருந்து கேள்வி கேட்கும். அதனால முடிஞ்சவரைக்கும் தப்பு செய்யாம இருக்கப் பாருங்க.’’

***

இன்னொருநாள்... அதே வகுப்பறை. ஆசிரியை மாணவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கொரு பலூன் கொடுத்தார். ஒரு மார்க்கர் பேனாவால், ஒவ்வொரு பலூனிலும் அவரவருடைய பெயரை எழுதச் சொன்னார். மாணவர்கள் அப்படியே செய்தார்கள். எல்லா பலூன்களையும் சேகரித்து, பள்ளி உதவியாளரை அழைத்து வேறோர் அறையில் கொண்டுபோய் போடச் சொன்னார் ஆசிரியை.

சிறிது நேரம் கழித்து ஆசிரியை சொன்னார்... ``இப்போ எல்லாரும் பலூன் இருக்குற ரூமுக்குப் போங்க. உங்க பேரை எழுதிவெச்சீங்கள்ல... அந்த பலூனைப் பார்த்து எடுத்துட்டு வாங்க... அஞ்சு நிமிஷம்தான் டைம்.’’

மாணவர்கள் அந்த அறைக்கு ஓடினார்கள். ஆனால், அந்த 50 மாணவர்களில் ஒருவரால்கூட தங்களுடைய பலூனை 5 நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலாக, கூச்சலும் குழப்பமும்தான் எழுந்தன. ஆசிரியை விசில் ஊத, எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.

``சரி... இப்போ மறுபடியும் அந்த ரூமுக்குப் போங்க. யாருக்கு எந்த பலூன் கிடைக்குதோ, அதுக்கு உரிய மாணவனைக் கூப்பிட்டுக் குடுங்க. 5 நிமிஷம் டைம்...’’ என்றார் ஆசிரியை.

மாணவர்கள் மறுபடியும் ஓடினார்கள். கையில் ஒரு பலூனை எடுத்ததும் ஒருவன், `சுரேஷ்...’ என்று கத்தினான். சுரேஷ் வந்து பலூனை வாங்கிக்கொண்டான். இன்னொருவன். `பிரகாஷ்’ என்றான். பிரகாஷ் வந்து வாங்கிக்கொண்டான். நான்கு நிமிடங்களுக்குள் அவரவர் பலூன் அவரவர் கைகளில் இருந்தது. எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.

வகுப்பு

 

ஆசிரியர் சொன்னார்... ``இந்த பலூனைப் போலத்தான் நம்ம வாழ்க்கையிலயும் நடக்குது. நாம் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை சுத்தி எங்கெங்கேயோ தேடுறோம். அது எங்கே இருக்குன்னுதான் யாருக்கும் தெரியறதில்லை. நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவரிடம்தான் இருக்குது. மத்தவங்களோட மகிழ்ச்சி நம்மகிட்ட இருக்குது. மத்தவங்களுக்கு நீங்க சந்தோஷத்தைக் குடுத்தீங்கன்னா, உங்களோட சந்தோஷமும் உங்களுக்கு மத்தவங்ககிட்டருந்து கிடைச்சே தீரும்.’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பின்புறமாக சுற்றும் லாரி - வைரல் காணொளி.

  • தொடங்கியவர்

விபரீத வேலை... பிரத்யேக உடை... விவசாயிக்குத் தோள் கொடுக்கும் கழுதை!

 
 

தன்னுடைய உதவிக்கு எவையெல்லாம் பயனுள்ளதாக இருக்குமோ அவற்றையெல்லாம் தனக்குச் சாதகமாக மாற்றுவதில் மனிதன் படுகில்லாடி. குதிரையில் ஆரம்பித்து யானை, மாடு, ஒட்டகம், கழுதை எனப் பல விலங்குகளை தன்னுடைய பயன்பாட்டுக்கு லாகவமாக பயன்படுத்திக்கொண்டான். இன்னும் அந்த விலங்குகளை எப்படியெல்லாம்  பயன்படுத்தலாம் என யோசித்தவனின் 21-ம் நூற்றாண்டின் வினோத கண்டுபிடிப்பு  “BEEKEEPING DONKEY” 

BEEKEEPING DONKEY

 


மானுவல் ஜூராசி வியரா என்பவர் பிரேசில் நாட்டில் உள்ள இடதிரா என்கிற ஊரில் வசித்துவருகிறார். அங்கிருக்கிற மக்களின் முக்கியத் தொழிலாக தேனீ வளர்ப்பு இருந்துவருகிறது. தேனீ வளர்ப்பின் மூலம் வருகிற தேனை தள்ளுவண்டி போன்ற ஒரு வண்டியில் தேனை சேகரித்து விற்பனை செய்துவருகிறார். இருபது பேர் அவருடைய தேனீ பண்ணையில் பணிபுரிந்துவருகின்றனர். 

ஜூராசி வியரா தன்னுடைய வீட்டில் “போனிகோ” எனப் பெயரிட்ட ஒரு  கழுதையை வளர்த்துவருகிறார். அவருடைய பண்ணையில் பணிபுரிகிற ஒரு சிலர் “இந்தக் கழுதையை தேன் சார்ந்த ஏதாவது ஒரு வேளையில் பயன்படுத்தலாமே என யோசனை சொல்கிறார்கள். இரண்டொரு நாள் கழித்து கழுதைக்கான ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக சொல்கிறார். அதாவது தேனீ வளர்க்கும் இடத்தில் இருந்து தேனை சேகரிக்கக் கழுதையை பயன்படுத்தப்போவதாகச் சொல்கிறார். ஆனால் அவரோடு பணி புரிகிறவர்கள், "கழுதையை எப்படிப் பயன்படுத்த முடியும்? தேனீ இருக்கிற இடத்துக்கு கழுதை வரநேர்ந்தால் தேனீக்கள் கொட்டுமே!” எனச் சந்தேகப்படுகிறார்கள். 

BEEKEEPING DONKEY

 

பத்து நாள்கள் இடைவெளியில் தேனீ இருக்கிற பண்ணைப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு வினோதமான விலங்கு வருவதைத் தோட்டத்தில் இருக்கிறவர்கள் பார்க்கிறார்கள். உடன் ஜூராசி வியரா வருவதையும் பார்க்கிறார்கள். சற்று கூர்ந்து கவனித்ததில் ஜூராசி வியராவுடன் வருவது அவருடைய  கழுதை போனிகோ  என்பதை உணர்கிறார்கள். “கழுதையைப் பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாதா என்கிற ஒரு கேள்வி எழலாம்” அவர்கள் குழம்பிப் போவதற்கும் ஒரு காரணம் இருந்தது. 

ஏனெனில், தேனீக்கள் இருக்கிற பகுதிக்கு எந்த விலங்குகளும் செல்வதற்குப் பயப்படும். காரணம் கூட்டமாக சேர்ந்து தேனீக்கள் கொட்ட ஆரம்பித்துவிடும். தேனீக்களின் சத்தமே பல விலங்குகளை அச்சமடையச் செய்யும். ஆப்ரிக்கா நாடுகளில் யானைகளிடமிருந்து பயிர்களை காக்கத் தேனீ வேலி என்கிற முறை இப்போதும் வழக்கத்தில் இருந்துவருகிறது. அப்படியான ஒரு பகுதிக்கு போனிகோவை ஜூராசி வியரா அழைத்து வந்திருந்தார். அதுவும் சேகரிக்கிற மொத்த தேனையும் வீட்டுக்குச் சுமந்து செல்ல கழுதையைப் பயன்படுத்துவதற்காக அழைத்துவந்திருந்திருந்தார்.  

கழுதையின் உடல் முழுமைக்கும் பிரத்யேக உடை தயாரித்து அதைக் கழுதைக்கு அணிவித்திருந்தார். தலையிலிருந்து வால் பகுதி வரைக்கும் கழுதையின் உடல் மறைக்கப்பட்டிருந்தது. கழுதையின் முகப்பகுதிக்கு வலை போன்ற ஒரு துணியைப் பயன்படுத்தியிருந்தார். கழுதையின் எந்த உடல் பாகத்தையும் தேனீக்கள் தீண்டாத வண்ணம் அந்த உடை தயாரிக்கப்பட்டிருந்தது. 

கழுதை


உடையைத் தயாரிக்க 15 நாள்கள் ஆனது எனக் கூறும் ஜூராசி வியரா, 2014-ம் ஆண்டிலிருந்து தேன்  சேகரிக்கக் கழுதையைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கிறார். முதல்முறை அந்த உடையை போனிகோவுக்கு அணிவிக்கும்பொழுது அந்த உடை அதற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது; அந்த உடை அணிவித்ததற்காக எந்தத் தடையும் தெரிவிக்கவில்லை என்கிறார். மூன்று வருடங்களாகத் தேனீ சேகரிப்பில் இருக்கிற போனிகோ உலகின் முதல் தேன் சேகரிக்கும் விலங்கினம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. 

 

தேனீ பண்ணையில், போனிகோ சீருடை அணிந்து ஜூராசி வியராவுடன் ஒய்யாராமாய் நடந்துவருவதைப் பார்க்கும்போது, நிலவில் விண்வெளி வீரர்கள் நடப்பதைப் போலவே இருக்கிறது; அந்த அழகிலும், மிடுக்கிலும்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பிரிட்டனில் ஆண்டுதோறும் வீணடிக்கப்படும் 10 மில்லியன் டன் உணவுப் பொருட்கள்

உணவுக் கழிவுகள் - உலகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் முக்கியமானது. பிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன. இதையடுத்து, உணவை வீணாக்காமல் தடுக்க வலியுறுத்தும் பிரசாரங்கள் அங்கு பரவலாக காணப்படுகின்றன.

  • தொடங்கியவர்

சாய்ந்தது ஏன்... நிமிர்ந்தது எப்படி... பைசா கோபுரத்தின் சுவாரஸ்யங்கள்!

 
 

பைசா கோபுரம்

இத்தாலியின் பைசா கோபுரத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரு கட்டடம் சாய்ந்தாலும் பல நூறு ஆண்டுகளாக கீழே விழவில்லை என்றால் அது ஆச்சர்யம்தானே. ஆனால், நாம் இதுவரை அது ஏன் சாய்ந்தது, சாய்ந்தும்கூட இன்னும் ஏன் கீழே விழவில்லை என்று யோசித்ததுண்டா?

 

அந்தக் கதையை நீங்கள் கேட்டால் பைசா கோபுரத்தின் சோகத்தைத் தாண்டிய சரித்திரம் புரியும் .

முதலில் பைசா கோபுரம் என்று ஒன்று அமைக்கப்பட்டது பைசா நகரில் உள்ள ஓர் ஆலயத்துக்கு மணிகூண்டு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காகதான். 

1173-ம் ஆண்டு இந்தக் கோபுரம் கட்டுவதற்கான அடித்தளம் போடப்பட்டது. இதற்கான வடிவமைப்பைத் தந்தவர்கள் Guglielmo மற்றும் Bonanno Pisano என்பவர்கள். முதல் இரண்டு தளங்களை அமைக்கும் வரை எந்த விபரீதமும் பெரிதாக இல்லை. 1178-ம் ஆண்டு மூன்றாம் தளம் கட்டி முடிவடையும் நிலையில்தான் கட்டடம் ஒருபுறமாக சாய்வதை முதன் முதலாகக் கண்டறிந்து இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தபோதுதான் செய்த தவறு புரிந்தது. இந்த பைசா கோபுரம் கட்டப்பட்ட இடம் களிமண் கலவை நிறைந்த இடம். சாதாரணமாக களிமண்ணில் கடினப்படும் தன்மை குறைவு என்பதால் அதன் உறுதித்தன்மையும் குறைவு. இது தெரியாமல் களிமண் இருக்கும் இடத்தில் கட்டடம் கட்டியது மட்டுமல்லாமல் அடித்தளமும் வெறும் 3 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே அமைக்க, கட்டடத்தின் எடையைத் தாங்காமல் மண் சரிய கட்டடமும் ஒரு புறமாய் சாய்வது தெரியவந்தது. இதனை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் விழித்த பொறியாளர்கள் களிமண் இறுகும் வரை காத்திருப்போம் என்று காத்திருந்திருக்கிறார்கள். அந்த ’வெயிட்டிங் டைம்’ கிட்டத்தட்ட 100 வருடங்கள். மீண்டும் ஏதோ ஒரு நம்பிக்கையில் 1272-ம் ஆண்டு மேலும் 4 தளங்களை அமைக்கும் முயற்சியில் இறங்க இந்த முறை சோதனை போர் வடிவில் வந்தது. 1284-ம் ஆண்டு நடந்த மேலோரியா போர் கோபுர கட்டுமானத்தைப் பாதித்தது. எல்லா பிரச்னைகளையும் தாண்டி ஒரு வழியாய் 1372-ம் ஆண்டு மணிக்கூண்டில் மணி நிறுவப்பட்டது. 200 வருட போராட்டம் இதோடு முடிந்தது என்று நினைத்தால் அதுதான் இல்லை. 19-ம் நூற்றாண்டு மத்தியில் மீண்டும் கோபுரம் சரிய ஆரம்பிக்க 800 டன் எடையை சரியும் திசைக்கு எதிர் திசையில் கொடுத்து சமன் செய்தார்கள் கட்டடப் பொறியாளர்கள். ஆனால், மீண்டும் உலகப் போர் குறுக்கிட பைசா கோபுரத்தின் நிலைமை கவலைக்குள்ளானது. அமெரிக்கா, இத்தாலியில் இருக்கும் பெரும்பாலான கட்டடங்களைத் தகர்த்துத் தள்ள அதிலும் தப்பிப் பிழைத்து நின்றது இந்த பைசாவின் சாய்ந்த கோபுரம். இதற்கு பின்புதான் இத்தாலி பைசா கோபுரத்தின் பெருமையை உணர்ந்து அதனை எப்படி சரிய விடாமல் தடுப்பது என்று மூளையைப் போட்டுக் கசக்க ஆரம்பித்தார்கள்.

எப்படியோ ஒரு வழியாக 1987-ம் ஆண்டு யுனெஸ்கோவின் பெருமையையும் இந்தக் கோபுரம் தேடிக்கொண்டுவிட்டது. ஆனாலும் பைசா கோபுரத்தின் சோகம் தீர்ந்தப்பாடில்லை. கணினி வடிவமைப்புகள் அதிகபட்சம் 5.44 டிகிரி வரை சாயும் பட்சத்தில் கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கணக்கிட்டுச் சொல்ல, 1990-ம் ஆண்டு 5.5 டிகிரி சாய்ந்த பைசா கோபுரத்தைக் கண்ட இத்தாலிய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் கோபுரத்தை மூடிவிட்டது. வருடத்துக்கு 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிடும் இந்த பைசா கோபுரம் 1990-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மூடிதான் வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை கீழே விழுந்துவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதாலே பைசா கோபுரம் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் மூடப்பட்டே இருந்தது.

Pisa tower

60 மீட்டர் கட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுப்பட்ட இந்த கோபுரம் ஒரு புறம் 55.86 மீட்டரும் மற்றொரு புறம் 56.67 மீட்டரும் இருந்தது. இதில் 56.67 மீட்டர் இருக்கும் பைசா கோபுரத்தின் பக்கவாட்டில் மண்ணைப் பறித்து எடுத்ததன் மூலம் சாய்ந்து இருந்த கட்டடத்தின் கோணம் சிறிது குறைக்கப்பட்டது. அதாவது 1990 களில் 5.5 டிகிரி என்ற கோணத்தில் சாய்ந்திருந்த கட்டடம் 2001-ம் ஆண்டில், இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் மூலம், 3.99 டிகிரி எனக் குறைக்கப்பட்டது. மூடி வைக்கப்பட்டிருந்த பைசா கோபுரம் ஒருவழியாக பார்வையாளர்கள் வசதிக்காக 2001-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டது. 

சரித்திரம் படைக்க வலிகள் பல கடக்க வேண்டும் என்பது பைசா கோபுரத்துக்கும் பொருந்தும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ஜெ. சிகிச்சை வீடியோ- பத்திரமா பாத்துக்கோங்க!

 

 
jayalalithajpg

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல் வெளியிட்டார். இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

P Kathir Velu

       

நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருங்கள். உடம்பையும் உறவுகளையும் பத்திரமா வச்சுக்குங்க. அதிகாரத்தின் உச்சம் ஒன்று படுக்கையில் நோய்மையில் ஒரு குழந்தைபோல் குலைந்து கிடைப்பதைப் பார்க்க நோகுகிறது.

H Umar Farook

ஜெ., வீடியோ அதிகாரப்பூர்வமானது இல்லை: அப்பல்லோ. - சரி நீங்க வெளியிட வேண்டியது தானே ?

Banu Rękä T R

இப்பவும் அரசியல் ஆதாயத்துக்காக தானே இந்த வீடியோ வெளியீடு..?

Karuppusamy

ஜெ. மருத்துவமனையில் பழச்சாறு அருந்தும் வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. காது சவ்வு குறித்த கவலை உங்களுக்கு இருந்தால் இரண்டு நாட்களுக்கு செய்தி சேனல்கள் பக்கம் யாரும் போகாதீர்கள்.

Sathiya Rasu

ஜெ. அப்பல்லோவில் 2-வது மாடியில் இருந்ததாக சொன்னார்கள். அங்கே தென்னை மரம் இருக்கா?.. #நமக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது?

Mano Red

ஜூஸ் வீடியோ இருக்கட்டும். இட்லி சாப்பிட்ட வீடியோ வந்தால்தான் நம்புவோம்.

Arivazhagan Kaivalyam

அப்போலோ மருத்துவமனையின் வடிவமைப்பையும், அதன் அவசர மருத்துவப் பிரிவு அமைந்திருக்கும் இடத்தையும் அறிந்தவர்கள் இந்தக் காணொளி சில ஆண்டுகளுக்கு முன்பு வேறெங்கோ எடுக்கப்பட்டது என்பதை அறிவார்கள். சாளரங்கள் அற்ற முழுதும் அடைக்கப்பட்ட அப்போலோவின் ICU வின் பின்னணியில் தென்னை மரங்கள் எல்லாம் தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.

இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு அறைகள் முற்றிலும் சுவர்கள் சூழப்பட்டவை, தவிர இந்தக் காணொளியில் இருக்கும் ஜெயாவின் முக அமைப்புக்கும், அவர் அப்போலோவுக்குள் செல்வதற்கு முன்பு ஊடகங்களில் காட்சியளித்த முக அமைப்புக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கிறது.

1
 

பா. வெங்கடேசன்

தமிழக மக்கள் ஓராண்டாக எவ்வளவோ மன்றாடி ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட வீடியோவைக் கேட்டனர்.இவ்வளவு காலம் அதை வெளியிடாதவர்கள் தற்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெல்வதற்கு இதனை வெளியிடுகிறார்கள். தங்களின் வெற்றிக்காக ஜெ. சிகிச்சை வீடியோவை வெளியிடுபவர்கள் தங்களை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஜெ.வை ஏன் கொன்றிருக்கக் கூடாது?

Nelson Xavier

மருத்துவமனையில் ஜெ. உயிரோடு இருந்தார் என்பதை நிரூபிக்க அல்ல, கடந்த 25 ஆண்டுகால அதிமுக உண்மையில் யாரால் இயக்கப்பட்டது, இவ்வளவு காலம் யாரிடம் இருந்திருக்கிறது, இப்போதும் யார் கைகளில் இருக்கிறது என்பதை தொண்டர்களுக்கு சொல்ல முயல்கிறது இந்த வீடியோ!

உண்மையில் கட்சி அரசியல் என்பது போராடி அதிகாரத்திற்கு வருவதில்ல. அதிகாரத்தை எப்போதும் தன்வசமே வைத்திருப்பது.

Umanath Selvan

அம்மாவுடன் சின்னம்மா இல்லை. இது ஃபேக் வீடியோ என சொல்ல இது ஒரு காரணம் போதாதா?

Muhammed Mydeen

ஜெயலலிதா வீடியோ வெளியீடு- மிகவும் மோசமான அரசியல் யுக்தி...

ஜெயலலிதா மீது உண்மையிலேயே ஒரு பரிதாபம் தோன்றுகிறது. மக்கள் எப்போதும் கம்பீரமாகக் கண்ட ஒரு முதல்வரை இப்படி ஒரு கோலத்தில் பார்க்க மனம் வரவில்லை.

ஆனந்த்குமார் சித்தன்

இது போயஸ் தோட்டம் அல்லது கொடநாட்டில் உள் சிகிக்சையில் இருந்த வீடியோவாக மட்டுமே இருக்க வாய்ப்பு.. அப்பல்லோவுக்கு வரும் முன்பே இது எங்காவது எடுக்கப்பட்டு இருக்கலாம்.

Kadanganeriyaan Perumal

யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்...

Vini Sharpana

பொன் முட்டையிடும் வாத்தை யாரும் கொல்லவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுக்கு சப்போர்ட் செய்ததற்கான காரணம் இதுதான். அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இடையில் சசிகலாவையே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்றார் தினகரன்.

அப்பல்லோ ரெட்டி சசிகலா சொல்வதைக் கேட்பாரா? அதிகார பலம், ஆட்சி பலம் கொண்ட மத்திய அரசின் பேச்சைக் கேட்பாரா? யாருக்கு செல்வாக்கு அதிகம்? ஜெ. மரணத்தில் பாஜகவையும் விசாரிக்க வேண்டும்.

2
 

Mohammed Khan

வீடியோ ரிலீஸ்...

இன்னும் ஒரு வாரத்துக்கு பூராப் பேரும் Forensic Scientists ஆ தான் அலைவாங்க.

Mugil Siva

ஒருவேளை முழு நீள வீடியோ தமிழ் ராக்கர்ஸில் வெளியாகுமோ?

Raj Mohan

இன்று வீடியோ வெளியிட்டது அரசியல்தான், ஆனால் தேர்தல் வீதிமீறல் இல்லையே.

மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS

வீடியோ க்ளியரா இல்லையாம், சவுண்ட் இல்லையாம்,ஜெ. வீடியோவை பார்க்கலையாம்..

அடப்பாவிகளா, அதுக்காக மருத்துவமனையில நோயாளியை வச்சு ஷூட்டிங்கா நடத்த முடியும்?

SKP Karuna @skpkaruna

தேர்தலுக்கு முந்தைய நாள் தனது துருப்புச் சீட்டை வெளியிடும் தினகரனின் சல்லித்தனம் கூட புரிகிறது.

ஜெ. பழரசம் அருந்தும் காட்சி தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் கமிஷன் கருதும் லாஜிக்தான் புரியமாட்டேங்குது? எந்த விதிப்படி இது தவறாகும்?

பால பாரதி

வீடியோ உண்மையா? இத்தனைநாள் கழித்து ஏன் வெளியிட்டார்கள்? பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? எப்படி இறந்தார் என தமிழிசை ஏன் கேட்கிறார்.?

ஆஸ்பத்திரி வரும்போதே அவருக்கு சுயநினைவு இல்லை என சிலநாட்களுக்கு முன்னால் அப்பல்லோ சொல்லவேண்டிய அவசியம் என்ன? இவர்தானே தீபாவளி கொண்டாட வீட்டுக்குக் கிளம்பலாம் என அறிவிப்பை அப்போது செய்தார்.

எங்களுக்கும் அதிமுகவுக்கும் சித்தாந்தரீதியாக ஒற்றுமை இருக்குனு பாஜக தலைவர் வெங்கைய்யா நாயுடு ஏன் கூறினார்?

மிகக் கேவலமானது தமிழ்நாட்டு அரசியல்தானா?

3
 

ஹைக்கூ காதலன் @BakkarSiddiq

"ஜெ. ஜெயலலிதா என்னும் நான் துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன் என்று என் கல்லறையில் எழுதுங்கள்! "

Lekha @yalisaisl

வெளியுலகத்துக்கு தன்னை எப்பவும் அழகா, நேர்த்தியா வெளிப்படுத்திக்க விரும்பியவர் ஜெயலலிதா. அரசியல் ஆதாயத்துக்காக அவரது பர்சனல் வீடியோக்களை வெளியிடுவது துளியளவும் அவருக்கும் அவர் மரணத்திற்கும் மதிப்பளிக்காத செயல். Feeling sorry for her!

sudha @itsjsudha

அம்மா பொது இடங்கள்ல வரும்போது அவங்க பாதம்கூட தெரியா.து இப்படி அலங்கோலமா வெளியிட எப்படி மனசு வந்தது...?

Gokul

தன் இறப்பை வைத்தே தன் கட்சிக்காரர்கள் பிற்காலத்தில் அரசியல் செய்வார்கள் என்று அவங்களே நினைத்து இருக்க மாட்டாங்க!

Srinivasan J

ஜெ. வீடியோ பக்கம் நம் கவனத்தைத் திசை திருப்பி விட்டு அங்கு ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்வார்கள் என்று அவதானிக்கிறேன்!

குருபிரசாத் தண்டபாணி

அது அம்மாவோ இல்லையோ,

உண்மையோ பொய்யோ,

ஆனா, அதைப் பார்த்ததிலிருந்து ஓர் இனம்புரியா அழுத்தம் ஆழ்மனதில் நெருஞ்சி முள்ளாய்.

வாசுகி பாஸ்கர்

இதை நியாயமாக தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. வித்யாசாகர் ராவ் மேற்பார்வையில் அனைத்துமே சுமுகமாக நடப்பதாக நாம் நம்ப வைக்கப்பட்டோம். ஆதாரம் கேட்ட கலைஞரை கரித்துக் கொட்டினார்கள்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப, விமர்சிக்க பாஜவுக்கு எந்த தார்மீக பொறுப்பும் கிடையாது. எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது உட்பட, வெங்கையா மேற்பார்வையில் அனைத்தும் நடப்பதாக சூழல் உருவாக்கப்பட்ட போது, எச்.ராஜாவும், தமிழிசையும் தினகரனை கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?

jayalalithajpg
 

Arul Ezhilan

ஜெயலலிதாவின் வீடியோவை தினகரன் அணியின் வெற்றிவேல் வெளியிட்டது முழுமையான கருத்துச் சுதந்திர வெளிப்பாடாகும். இது தேர்தல் விதிமுறைகளுக்கோ, அல்லது ஆறுமுகச்சாமி விசாரணைக் கமிஷனின் நடைமுறைகளிலே தலையிடுவதோ இல்லை.

இரா எட்வின்

அப்பல்லோவில் என்ன நடந்தது என்பதை அப்பல்லோ நிர்வாகம் இப்போதாவது வெளியிட வேண்டும். வெளியிட வைக்க வேண்டிய தனது பொறுப்பினை நீதித்துறை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘அறம் அசுர சக்தியைவிட மேலானது’
 

image_3eabcffe67.jpgஇனப்பற்று என்பது, தான் சாராத இனத்தைக் குறிவைத்து அடிப்பது என்றே கருதிச் செயற்படும் பேரினவாதத் தலைவர்கள், இன்னமும் உலக யதார்த்த அரசியல் ஞானம் அற்றவர்கள்தான்.  

எங்களை அறியாமலே பலகோடி அவதானக் கருவிகள் எங்கள் நடத்தைகளைக் கண்காணிக்கின்றன. ‘நான் எதுவும் செய்வேன், எவரும் சொல்ல முடியாது’ என்பது போன்ற, சில துஷ்டர்களின் நடவடிக்கைகள் சில காலம் மறைக்கப்படலாம். ஆனால் நவீன உலகில் இந்த மாயச்சதிகள் எடுபடாது.  

பதவிகள், திடீரெனச் சேர்ந்த அடாத வரவுகள்போல், தங்கள் கண்முன்னே கரைந்து போவதைக் கண்டும்கூட, மாயப்படுக்கையிலேயே, புரண்டு படுக்கின்றார்கள்  

பாவங்களைப் போக்குவதைப் பின்னர் கவனிப்போம். இப்போது செய்வதைத் தொடர்ந்து செய்வோம் என எண்ணினால், அறம் அவர்களை ஒதுக்கி விடும். அறம் அசுர சக்தியைவிட மேலானது. 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 21
 

1913: உலகில் முதல் தடவையாக குறுக்கெழுத்துப்போட்டி நியூயோர்க் வேர்ல்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான்  - தாய்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1967: உலகில் முதலாவது இதய மாற்று சத்திர சிகிச்சைக்குள்ளான லூயிஸ் வாஷ்கன்ஸி, 18 நாட்களின்பின் தென்னாபிரிக்காவில் காலமானார்.

1968: சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அப்பலோ பயணச் சோதனைகளில் முதல் தடவையாக (அப்பலோ 8) மனிதர்களை ஏற்றிச்சென்ற விண்கலம் ஏவப்பட்டது.

1969: நியூயோர்க்கில் ஓரினப் பாலியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது.

1969: சகல விதமான இனப் பாகுபாட்டையும் ஒழிக்கும் சாசனத்தை ஐ.நா. அங்கீகரித்தது.

1988: லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்ட பான் அமெரிக்கன் விமானம் ஸ்கொட்லாந்தின்  லொக்கர்பீ எனும் இடத்திற்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது குண்டுவெடித்து சிதறியதால் 270 பேர் (தரையிலிருந்த 11 பேர் உட்பட) கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் லிபிய பிரஜைகள் இருவர் தொடர்புபட்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து பிரிட்டன் - லிபிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக முறுகல் நிலவியது.

1992: நெதர்லாந்து விமானமொன்று பாரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 56 பேர் பலி.

1995: பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2007: பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50பேர் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?

 
கூகுள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும்.

உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம்.

''நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்''

தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது.

ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும்.

எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம்.

மை ஆக்டிவிட்டியை அழிப்பது

ஒவ்வொரு முறை நீங்கள் கூகுளில் தேடும்போதும், அந்தத் தேடலை கூகுள் உங்களது கணக்குடன் தொடர்புபடுத்தி வைக்கிறது.

ஜி மெயில் உள்பெட்டியில் தேடுவது, இணையத்தில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்வது என நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது பதிவிட்டுக்கொள்ளும்.

இத்தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ''மை ஆக்டிவிட்டி (My activity)'' எனும் தளத்தில் இருக்கும். நீங்கள் இங்குதான் செல்ல வேண்டும்.

கூகுள்படத்தின் காப்புரிமைCAPTURA DE PANTALLA

குறிப்பிட்ட பக்கங்களையே, குறிப்பிட்ட ஒரு நடவடிக்கையையோ அழிக்க வேண்டும் என்றால், தேடல் செயல்பாட்டைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பக்கத்தைத் தேடி அழிக்கலாம். அல்லது கொடுக்கப்பட்ட தேதி வரம்புவரை, தேர்வு செய்யப்பட்ட அல்லது அனைத்துப் பக்கங்களையும் அழிக்கலாம்.

இப்படி அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை கூகுளிடம் இருந்து வரும். ஆனால் உண்மையில், உங்கள் தேடல் வரலாறை அழிப்பது, உங்கள் கூகுள் கணக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

யூடியூபில் உங்கள் செயல்பாடு அனைத்தையும் அழிப்பது

யூடியூபில் நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதையும், எதை தேடுகிறீகள் என்பதையும் கூகுள் பின்தொடர்கிறது.

ஆனால், இதையும் எளிதாக அழித்துவிடலாம். இடது பக்கம் மெனுவில் உள்ள ஹிஸ்டரியை க்ளிக் செய்து, ''அனைத்து தேடுதல் வரலாறு'' மற்றும் '' அனைத்து பார்வை வரலாறு'' என இரண்டையும் க்ளிக் செய்யவும். இப்படி தேர்வு செய்தபின் அழிக்கலாம்.

கூகுள்படத்தின் காப்புரிமைYOUTUBE

உங்களைப் பற்றி விளம்பரதாரர்கள் தெரிந்திருப்பதை அழிப்பது

கூகுள் உங்களைப் பற்றி தெரிந்துகொள்வதுடன், விளம்பரதாரர்களுக்கும் உங்களை பற்றிய தகவல்களைக் கொடுக்கிறது.

அதனால்தான் உங்கள் தேடல் வரலாற்றுடன் பொருந்தக்கூடிய விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி காண்கிறீர்கள்.

ஆனால் கவலைப்படாதீர்கள் - விளம்பரதாரர்களுக்கு என்ன தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டறியலாம்.

கூகுள்படத்தின் காப்புரிமைGOOGLE - MARK SHEA

இதை பார்ப்பதற்கு கூகுள் கணக்குக்குள் லாகின் செய்து, தனிப்பட்ட தகவல் & அந்தரங்க உரிமை (Personal info & privacy) பக்கத்திற்குச் செல்லவும்.

பிறகு ஆட்ஸ் செட்டிங் (Ads Settings) ஆப்ஷனுக்கு சென்று, மேனேஜ் ஆட்ஸ் செட்டிங் (Manage ads settings) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இதை நீங்கள் செயலிழக்க செய்வதன் மூலம், உங்களைப் பற்றி கூகுள் வைத்துள்ள தகவல்கள் தொடர்பாக விளம்பரங்கள் வராது. விளம்பரமே வராமல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை.

கூகுள்படத்தின் காப்புரிமைGOOGLE - MARK SHEA

உங்கள் இருப்பிட வரலாற்றை அழிப்பது

நீங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தால், உங்கள் தொலைபேசியுடன் நீங்கள் சென்ற இடங்களின் பட்டியலை கூகுள் வைத்திருக்கும்.

கூகுள்படத்தின் காப்புரிமைGOOGLE - MARK SHEA

கூகுள் மேப்ஸ் பக்கத்தில் இருந்து இத்தகவல்கள் அனைத்தையும் அழிக்கவேண்டுமானால் நீங்கள் இந்தப் பக்கத்துக்குச் செல்லவேண்டும்.

லோகேஷன் டிராக்கிங்கை ஆப் செய்யவும், முழு வரலாற்றையும் அழிக்கவும், குறிப்பிட்ட நாளுக்கான அல்லது நேரத்துக்கான வரலாற்றை அழிக்கவும் முடியும். கழிவுக்கூடை ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பயணத்துக்கான பதிவை மட்டும்கூட அழிக்கமுடியும்.

http://www.bbc.com/tamil/

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

சாய் பல்லவி குஷியோ குஷி. தெலுங்கில் ரெட் கார்ப்பெட் வரவேற்பு கிடைத்துள்ளதால் பொண்ணு கன்னம் பன்னு மாதிரி ஆகிவிட்டது. வருண் தேஜோடு நடித்த ‘ஃபிடா’ காட்டுத்தனமாய் ஹிட்டடிக்க அடுத்தடுத்து அல்லு அர்ஜூன், ராம் சரண் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தமிழில் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் நடிக்கும் `கரு’ அங்கு ‘கனம்’ என்று டப்பிங் செய்யப்பட்டுள்ளதால் ரிலீஸுக்கு முன்பே பொண்ணு டபுள் ஹேப்பி. இங்கிட்டு வாங்க மலர் டீச்சர்!

p35a_1513581055.jpg

ன்ஷிகாதான் குறும்படங்களின் கதாநாயகி. வெள்ளித்திரை நடிப்புக் கிடையே கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் குறும்படங்களில் ஆர்வமாக நடித்துவருகிறார்.``இன்றைய குறும்பட இயக்குநர்கள் யார் எப்படி விஸ்வரூபமெடுப்பார்கள் என்று சொல்ல முடியாது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் அவ்வளவு இன்ட்ரெஸ்ட்டிங்காக இருக்கிறது. அவர்கள்தான் நாளைய இயக்குநர்கள்’’ என ஃபீலாகிறார் தன்ஷிகா! பக்கா ப்ளானிங்!

p35b_1513581073.jpg

பாலிவுட்டே அனுஷ்கா - விராட் கோலி காதல் திருமணத்தை வாழ்த்தியபோது ஒருவர் மட்டும் வாழ்த்தவில்லை என்று கிசுகிசுக்கிறார்கள். அவர் நம்ம தீபிகா படுகோன்தான். ரன்வீர் சிங்குடன் தற்போது டேட்டிங்கில் இருக்கும் தீபிகா, ஒரு காலத்தில் அனுஷ்காவுக்கு செம பெஸ்ட்டியும்கூட. ரன்வீரால் இருவருக்குள்ளும் தோன்றிய விரிசல் இன்றும் தொடர்வதும் வாழ்த்துச் செய்தி மிஸ் ஆகக் காரணமாம். தற்போது ஷாரூக்கானோடு அனுஷ்கா நடிக்கும் படத்தில் தீபிகா கேமியோ ரோலில் வருகிறார். அங்கேயும், ஷூட்டிங் இடைவேளையில் அனுஷ்காவுடன் பேசிக்கொள்ளவில்லையாம் தீப்ஸ். வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்!

 p35c_1513581093.jpg

விவசாயம்தான் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் கதைக்களம். கீர்த்தி சுரேஷ் தவிர பாலிவுட்டில் இருந்து இன்னொரு ஹீரோயினும் படத்துக்குள் இறக்குமதியாகிறார். ‘ஏர்’, ‘கலப்பை’ என விவசாய வெப்பன்தான் படத்தின் தலைப்பாக இருக்குமாம்! ஜெய் கிஸான்!

p35d_1513581116.jpg

ஹாலிவுட்டின் `பிட்ச் பெர்ஃபெக்ட்-3’ படம்தான் அமெரிக்க யூத்களின் லேட்டஸ்ட் சென்சேஷன். பெண்கள் பட்டாளம் நடித்த முதல் இரண்டு படங்களும் சக்கைப்போடு போட மூன்றாம் பாகம் சமீபத்தில் ரிலீஸாகியிருக்கிறது. 3-ம் பாகத்தில் என்ன ஸ்பெஷல் என்றால் ஆண்களே இல்லை. கதையிலும் வழக்கமான கேர்ள்ஸ் படமென்றால் காதல், கசமுசா என ஸ்க்ரிப்ட் போகுமல்லவா..! அப்படி ஏதுமில்லாமல் பெண்கள் இசைக்குழுவின் சாகசப் பயணமே மொத்தப் படமும். சிரிக்க சிரிக்க காமெடியோடு இதைச் சொன்னதால் படம் செம ஹிட். படத்தில் நடித்த பெண்கள் அனா கென்ட்ரிக், ரெபல் வில்ஸன், ப்ரிட்னி ஸ்னோ, அனா கேம்ப், ஹெய்லீ ஸ்டெய்ன்ஃபீல்டு என எல்லோருக்கும் எக்கச்சக்க வாய்ப்புகள் குவிகிறதாம்! ஹாலிவுட் அருவிகள்!

p35e_1513581127.jpg

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

“நிதியில்லைப்பா..!” - கைவிரிக்கும் அமெரிக்கா... என்ன ஆகும் சர்வதேச விண்வெளி நிலையம்?

 
 

சர்வதேச விண்வெளி நிலையம்

பூமியின் கடற்பரப்பிலிருந்து 330-450 கிலோமீட்டர் உயரத்தில் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station - ISS). மனிதர்கள் வசிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெரிய செயற்கைக் கோள் பூமியின் கீழ் வட்டப்பாதையில் மணிக்கு 27,724 கிலோமீட்டர் வேகத்தில் பயணம்செய்து ஒரே நாளில் 15.54 முறைகள் தன் நீள்வட்டப்பாதையை முழுவதும் சுற்றிவருகிறது. மற்ற கோள்களை விட பூமிக்கு மிக அருகிலேயே இருப்பதால், அவ்வப்போது இதை சாதாரண கண்கள் கொண்டே வானில் பார்க்கலாம். பல அழுத்தப்பட்டத் தொகுதிகள், வெளிப்புறத் தட்டுகள், சோலார் தகடுகள் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இது ரஷ்யாவின் புரோட்டோன் மற்றும் சோயுஸ் ராக்கெட்டுகள், மற்றும் அமெரிக்காவின் ஸ்பேஸ் ஷட்டில்கள் கொண்டு விண்ணில் 1998ம் ஆண்டு முதல் சிறிதுசிறிதாக விண்ணில் ஏவப்பட்டது. 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 ஆண்டுகளாக இங்கே ஆராய்ச்சியாளர்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

 

இந்தச் சர்வதேச விண்வெளி நிலையம் உலகின் ஐந்து முன்னணி விண்வெளி நிறுவனங்களான அமெரிக்காவின் நாசா (NASA), ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் (Roscosmos), ஜப்பானின் JAXA, ஐரோப்பாவின் ESA மற்றும் கனடாவின் CSA போன்றவற்றின் ஆராய்ச்சிகளை நடத்திக்கொள்ளப் பயன்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி ரஷ்ய சுற்றுப்பாதை பிரிவு (ROS), மற்றொரு பகுதி ஐக்கிய அமெரிக்க சுற்றுப்பாதை பிரிவு (USOS) என்று பிரிக்கப்பட்டாலும், வெவ்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல நாடுகள் இதைப் பயன்படுத்தி வருகின்றன. இவ்வாறு பல நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பயன்படுத்தி வந்தாலும், நாசாதான் அதிக அளவில் அதன் பராமரிப்பிற்காக நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 1985 முதல் 2015ம் ஆண்டு வரை மட்டும் நாசா அமெரிக்கா அரசு மூலம் 58.7 மில்லியன் டாலர்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்காகச் செலவு செய்துள்ளது. 2010ம் ஆண்டின் போது இதன் மதிப்பு 72.4 பில்லியன் டாலர்களாக ஆகிப்போனது. ரஷ்யா 12 பில்லியன், ஐரோப்பா மற்றும் ஜப்பான் தலா 5 பில்லியன், கனடா 2 பில்லியன் என்று மற்ற நாடுகளின் டாலர் கணக்கு இருக்கிறது.

சர்வதேச விண்வெளி நிலையம்

இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா, இன்னும் 10 ஆண்டுகளில், அதாவது 2024ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்காகக் கொண்டுவரப்பட்ட நிதி ஒதுக்கும் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகத் தெரிவித்தது. அதன் பிறகு, நாசாவிற்கு எனப் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் நிதி மட்டும் தொடரும் என்றாலும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து வாய் திறக்கவில்லை. சமீபத்தில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், நாசாவிற்கும் அதன் சந்திரன், செவ்வாய் மற்றும் அதைத் தாண்டிய ஆராய்ச்சிகளுக்கும் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார். அவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு என்று எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒருவேளை, நிதி எதுவும் கிடைக்காத பட்சத்தில், இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மூடு விழாதான் நடத்தவேண்டியிருக்கும். ஏனென்றால், மற்ற நாடுகள் அளிக்கும் நிதியைவைத்து அவ்வளவு பெரிய சர்வதேச விண்வெளி நிலையத்தை நிச்சயம் பராமரிக்க முடியாது.

சர்வதேச விண்வெளி நிலையம்

Photos Courtesy: NASA

ஒருவேளை, நாசா தனக்கு அரசு அளிக்கும் நிதியிலிருந்து ஒரு பெரிய தொகையை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தியாகம் செய்தால், அதன் பணிகள் தொடரலாம். ஆனால், அப்படிச் செய்தால், நாசாவின் தற்போதைய கனவான செவ்வாய் கிரகம் தாண்டிய பயணம் நிஜமாகவே கனவாகிப் போய்விடும். ஒருவேளை, நாசா நிதி ஒதுக்க முடிவு செய்தாலும், அதை அனுமதிக்கும் உரிமை காங்கிரஸின் விஞ்ஞானம், விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்தின் ஹவுஸ் கமிட்டி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பலரின் விருப்பம் செவ்வாய் தாண்டிய பயணம்தான் என்றாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தால் நிறையப் பயன்கள் உண்டு. அந்த இடம் தற்போது விண்வெளி தாண்டி பயணம் செய்ய விரும்புபவர்களுக்குப் பயிற்சியளிக்க ஏதுவான இடம். மைக்ரோ கிராவிட்டி எனப்படும் ஜீரோ கிராவிட்டி அங்கு இருப்பதால், பயிற்சி வகுப்புகள் எடுக்க இதுதான் சரியான இடமாக இருக்கும்.

 

எனவே, ஒப்பந்தம் முடிந்தபின்பு இதற்கு மூடுவிழா நடத்தாமல், எலான் மஸ்க் அவர்களின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அல்லது விர்ஜின் கலாக்டிக் போன்ற நிறுவனங்களுக்குக் கொடுத்துவிட்டால், அவர்கள் அதைப் பராமரிக்கலாம். எப்படியிருப்பினும், தற்போது முடிவு எடுக்க வேண்டியது நாசாவும், காங்கிரஸூம்தான்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஸ்விட்சர்லாந்தில் பரவசப்படுத்தும் ரோப் கார் பயணம்

ஸ்விட்சர்லாந்தில் உலகின் செங்குத்தான மலைப் பகுதியில், பரவசப்படுத்தும் ரோப் கார் பயணம்

  • தொடங்கியவர்

ஜிமிக்கி கம்மல் ஷெரில், பத்மாவதி தீபிகா, சங்கர் கௌசல்யா - 2017-ன் வைரல் பெண்கள்! #2017Rewind

 
 

மாத இறுதி நாள்களில் மிகுந்திருக்கும் பணத்தை எண்ணுவது, ஸ்வைப் செய்த க்ரெடிட், டெபிட் கார்டுகளின் பில்களை ஆராய்வதுமாகக் கழியும். அதுவே வருட இறுதியாக இருந்தால்... அந்த வருடத்தில் நமக்குச் சாதகமாக நடந்தது முதல் பாதகமாக போய் முடிந்தது வரை அத்தனையையும் நினைவுக்குக் கொண்டு வருவோம். இந்த வருட மிக முக்கியமான நிகழ்வுகளில் தோன்றிய முக்கால்வாசி பெண்கள் எளிய மனிதிகள். இந்த வருட வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த பத்து பெண்களைப் பற்றிய தகவல்கள் ரீவைண்டு...

கௌசல்யா சங்கர்

 

கௌசல்யா - டாப் 10 பெண்கள்கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக சங்கர் ஜாதி வெறியர்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். தாக்குதலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார் சங்கரின் மனைவி கௌசல்யா. சங்கர் குடும்பமே என் குடும்பம் என்கிற தீர்க்கத்தோடு சங்கர் வீட்டில் வசித்து வந்தார் கெளசல்யா. இதற்கிடையில் தற்கொலை முயற்சி, அதன்பிறகான கவுன்சிலிங்குகுப் பிறகு புதுமனிதியாக மாறினார் கெளசல்யா. அரசு வேலை, நடை, உடை பாவனை, பேச்சு என தன்னை மாற்றிக்கொண்டதோடு, தன் அன்பு கணவரின் கனவுகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இந்த வருடம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கும், சங்கர் ஆணவக்கொலை வழக்கில் தொடர்புடைய கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. சமூகப் போராட்டம் தாண்டி சட்டப்போராட்டத்திலும் முன் நின்று, இந்த வருடத்தின் தலைப்புச் செய்திகளில் தவிர்க்க முடியாதவராகியிருக்கிறார்.

அனிதாடாக்டர் அனிதா - டாப் 10 பெண்கள்

சென்ற கல்வியாண்டில் தன் மருத்துவக் கனவை நிறைவேற்றத் துடித்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா. தேர்வு முடிவில் 1,176 மதிப்பெண்கள் பெற்றவருக்கு இடியாய் இறங்கியது நீட் தேர்வு முடிவு. உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். மத்திய மாநில அரசுகளின் பந்து மாற்றிப் போட்டு விளையாட்டில் பாழானது அனிதாவின் வாழ்க்கை. விளைவு செப்டம்பர் ஒன்றாம் தேதி தற்கொலை செய்துகொண்டார் அனிதா. அவரின் மரணம் ’நீட்’ தேர்விற்கு எதிராகத் தமிழக அளவில் மிகப்பெரிய எழுச்சியைக் கல்லூரி, பள்ளி மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் ஏற்படுத்தியது.

ஓவியாஓவியா - டாப் 10 பெண்கள்

படங்களுக்காக ரூம் போட்டு யோசித்திருந்தால்கூட சினிமா டயலாக்ஸ் நேஷனல் டிரெண்டிங்கில் வந்திருக்காது. ஆனால், தான் யோசிக்காமல் பேசிய டயலாக்குகளால் ரசிகர்கள் மத்தியில் 'ஓவர் நைட் ஒபாமா' ஆனார் நடிகை ஓவியா. 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவில் தொடர் கலாய்ப்புகளுக்கு ஆளாகிக்கொண்டிருந்த ஓவியாவின் தொடர் இயல்புத்தன்மையோ, இயல்பான நடிப்போ 'ஓவியா ஆர்மியைக் கட்டமைக்கும்' அளவுக்குத் தமிழக இளைஞர்களை உசுப்பிவிட்டிருந்தது. ஓவியா கேரக்டர் அனாலிசிஸ், ’ஓவியா பொன்மொழிகள்’ என்று இந்த வருடம் தவிர்க்க முடியாத ஆன்லைன், ஆஃப்லைன் டாப்பிக்கானவர் ஓவியா.

ஜிமிக்கி கம்மல் ஷெரில்ஜிமிக்கி கம்மல் ஷெரில்

’வெளிப்படிண்டே புஸ்தஹம்’ என்கிற படத்தின் பெயர் தெரியாதவர்களுக்கெல்லாம், ‘எண்டம்மேட ஜிமிக்கி கம்மல்’ பாடல் நிச்சயம் பரிச்சயம். ’ஓணம்’ கொண்டாட்டத்திற்காக கேரளாவிலுள்ள ’பி’ (பிசினஸ்) ஸ்கூலைச் சேர்ந்த மாணவர்கள், அவர்கள் ஆசிரியர் ஷெரிலுடன் அந்தப் பாடலுக்கு ஆட, ஆட்டம் கண்டது இளைஞர் பட்டாளம். வீடியோ வியூஸ் மில்லியனைத் தொட்டது. அதில் ஆடிய ஷெரிலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைக்க, எல்லா இடமும் ‘ஜிமிக்கி கம்மல்’ தான். எதுகை மோனையாக உச்சரிப்பு வருகிறது என்கிற ஒரே காரணத்துக்காக அமெரிக்க டிவியின் தொகுப்பாளர் 'ஜிம்மி கேமல்லை'யும் ’விடாது கருப்பு’ என்று கருத்து சொல்லவைத்ததது ஜிமிக்கி கம்மல்!

வளர்மதி - டாப் 10 பெண்கள்வளர்மதி

நெடுவாசல் கதிராமங்கலத்தில் நடைபெற்று வந்த போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரச்சாரங்களைக் கொடுத்ததற்காக இந்த வருடம் ஜூலை 13 ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இதழியல் மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். சில நாள்களிலேயே அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. செப்டம்பர் மாதம் அவர் மீதான குண்டர் சட்டம் ( செப்டம்பர் 7) நீக்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியில் வந்தபிறகும் போராட்டங்களின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் மாணவி வளர்மதி.

ஹதியா

ஹதியாகேரளாவைச் சேர்ந்த அகிலா தமிழகத்தில் படிக்கும் போது, சக தோழியின் மதம் மீதான ஈடுபாடு காரணமாக 'மதம் மாறி' ஹதியாவானார். இது அவருடைய குடும்பத்தினருக்கு பிடிக்காத நிலையில், மேட்ரிமோனி மூலமாக இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஹதியாவுக்கு நடந்த திருமண ஏற்பாடு நடக்க... இது 'லவ் ஜிஹாத்' என்று ஹதியாவின் தந்தை வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையில் ஹதியாவுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது கேரள உயர் நீதிமன்றம். வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார் ஹதியா. 'என் உயிருக்கு ஆபத்து' என்று வீட்டுச் சிறையிலிருந்த அவர் பேசிய வீடியோ பெரிய போராட்டங்களைக் கிளப்ப, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஹதியாவின் கணவர். 'என் விருப்பப்படியே மதம் மாறினேன்... யாரும் கட்டாயப்படுத்தவில்லை' என்றார். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தற்போது சேலத்தில் உள்ள கல்லூரியில் டீன் கண்காணிப்பில் தன் படிப்பைத் தொடர்ந்து வருகிறார் ஹதியா.

சைரா வாசிம்சைரா வாசிம்

'தங்கல்' பட நாயகி சைரா வாசிம் கடந்த 10-ம் தேதி டெல்லியிலிருந்து மும்பை சென்றபோது, விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த தொழில் அதிபர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக, அழுதுகொண்டே இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்தார். இந்த வீடியோ வைரலானது. சைரா வாசிமின் வயது 17 என்பதால், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். உடனே, சமூக வலைத்தளத்தில் உள்ளவர்கள் 'சைரா தனக்கு நடந்ததை ஏன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார், உடனடியாக சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கோ, அந்த ஸ்பாட்டிலோ தெரியப்படுத்தியிருக்கலாமே' என்ற கேள்விக்கணைகளை வீச ஆரம்பித்தார்கள். இதுபோன்ற கமெண்டுகளுக்கு எதிராக மும்பை காவல்துறை ’விக்டிம் ஷேமிங்’ என்ற ஹேஷ்டேகில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதற்கும், சாதாரண நபருக்கு நடந்திருந்தால் காவல்துறை இப்படி ஒரு ட்வீட் செய்திருப்பார்களா என்று கேட்டது வேறு ரகம்.

மனுஷி சில்லார்மனுஷி சில்லர்

108 நாடுகளைச் சேர்ந்த அழகிகளுக்கு நடுவே, 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி சீனாவின் சன்யா நகரில் நடைபெற்றது. இதில் இறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, கென்யா மற்றும் மெக்சிகோ நாட்டு அழகிகள் தேர்வாகினர். இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட, உலகிலேயே எந்த வேலைக்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு, ’தாய்மை’ என்று பதிலளித்தார். 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தையும் வென்றார். 20 வயதான மனுஷி சில்லர் ஒரு மருத்துவமாணவி. மீண்டும் படிப்பினை தொடர விரும்புவதாகக் கூறி இருக்கிறார். இதுவரை நான்கு பெண்கள் ஏற்கனவே உலக அழகிப் பட்டம் வாங்கி இருந்த நிலையில், 17 வருடங்கள் கழித்து மனுஷி சில்லர் வாங்கியிருக்கிறார். ’இது பெருமையா’ என்று உலக அழகிப் போட்டியின் பின் செயல்படும் சர்வதேச சந்தையை சுட்டிக்காட்டிப் பேசுபவர்களின் விமர்சனங்களும் இருக்கத் தான் செய்கிறது.

தீபிகா படுகோன்தீபிகா படுகோனே

இந்த வருடம் முழுவதுமே தொடர்ந்து ட்ரெண்டு ஆனவர் தீபிகாதான். தீபிகாவின் முதல் ஹாலிவுட் பட ரிலீஸ், ரன்வீருடனான காதல் பற்றி கிசுகிசு, ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை பெற்றது, பத்மாவதி பட சர்ச்சை என தொடர்ந்து பத்திரிகையின் முதல் பக்கத்திலேயோ கடைசி பக்கத்திலேயோ இடம்பெற்றுக்கொண்டிருந்தார்.

 

பிவி சிந்துபிவி சிந்து

 

பிவி சிந்துவுக்கு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மைல் கல். அதன்பிறகான அவருடைய வெற்றி ஒவ்வொன்றும் சரித்திரத்தில் இடம்பெற்றவை. பிஎம்எஃப் மகளிர் ஒற்றை பாட்மின்டன் போட்டியில் வெள்ளி பதக்கம், கொரியா ஓப்பன் தொடரைக் கைப்பற்றிய முதல் இந்திய என்கிற பெருமை என்று இந்த வருடத்தில் அடித்து ஆட ஆரம்பித்தார் சிந்து. இவரை மேலும் கெளரவப்படுத்த நினைத்த ஆந்திர அரசு, கிருஷ்ணா மாவட்டத்துக்கான டெபூட்டி கலெக்டராக சிந்துவை நியமித்திருக்கிறது. வெல்டன் கேர்ள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட்! ஜேர்மனிய லிப்ட் நிறுவனத்தின் முயற்சி!

 

காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட்! ஜேர்மனிய லிப்ட் நிறுவனத்தின் முயற்சி!

ஜேர்மனியில் உள்ள உலகின் மிகப்பெரிய லிப்ட் தயாரிப்பு நிறுவனமானது புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக லிப்ட் ஆனது கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் கேபிள் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்டை இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.

இந்த லிப்டானது காந்த சக்தி மூலம் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இது மேலே, கீழே மற்றும் பக்கவாட்டில் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பக்கவாட்டில் திரும்பி லிப்டை நகர்த்தி கொண்டு செல்லும். இதன் மூலம் ஒரு கட்டிடத்திலிருந்து அதனை ஒட்டியுள்ள மற்றொரு கட்டிடத்திற்கும் செல்ல முடியும்.

புதியதாக வடிவமைக்கப்பட்ட இந்த லிப்ட் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரே நேரத்தில் எத்தனை லிப்ட்களை வேண்டுமானாலும் இந்த காந்த வழித்தடத்தில் இயக்க முடியும். இதன் மூலம் கட்டிடங்களில் லிப்ட்க்கான இடத்தை வடிவமைப்பதை எளிதாக்க முடியும்.

ஆனால் இதன் விலை மிகவும் அதிகம் எனவும் 2020 ஆம் ஆண்டு பெர்லினில் உள்ள கட்டிடத்தில் இந்த லிப்ட் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/taraoffcl

காதலைச் சொல்லிவிட்டு பதிலுக்குக்கூடக் காத்திருப்போம்... ஆனால், மொபைல் சார்ஜ் போட்டு இரண்டு நிமிடம்கூடப் பொறுத்திருக்க முடியவில்லை... #இன்னுமா_ஃபுல்_ஆகல

twitter.com/azam_twitz

ரோட்டில் விழுந்துகிடப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள்தான் என்று எண்ணிவிடக் கூடாது. ஒருவேளை  “Low sugar” பேஷன்டாகக்கூட இருக்கலாம்!

p104a_1513667084.jpg

twitter.com/mekalapugazh

பாஜகவுக்கு அபாய மணி ஒலித்திருக்கிறார் ராகுல், குஜராத் மக்களுடன் சேர்ந்து.

twitter.com/Kozhiyaar

நம்ம பயலுக அடிச்சி பிடிச்சி வேலைல சேருவது காசு சம்பாதிக்கிறதுக்கு இல்ல, கல்யாணம் பண்ணிக்கிறதுக்குத்தான்!

facebook.com/வசு மித்ர

என் அகராதியில் பலி என்பது களப்பலியாகவும் வீரமரணம் என்பது சம்பளத்துக்கு சாவதுமாகிறது.

facebook.com/பா.மீனாட்சி சுந்தரம்

குஜராத்ல ஜெயிச்சிட்டாங்க அடுத்து என்ன சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கோ தெர்லயே

twitter.com/Kadharb32402180

ராஜஸ்தானுக்கு திருட்டுக் கும்பலைப் பிடிக்க 3 பேர் போறாங்க. மெயின் ரோட்டுல ஹெல்மெட் இல்லாம வர்றவனைப் பிடிக்க 6 பேர் ரவுண்டு கட்டி நிக்குறாங்க... வாழ்க தமிழக போலீஸ்!

twitter.com/HAJAMYDEENNKS

ஆண்களுக்குத் தொப்பை இருப்பது பிரச்னை அல்ல... அதை மறைப்பதுதான் பிரச்னை...!

twitter.com/Surya_BornToWin

தமிழக பா.ஜ.க அலுவலகத்துல வெடி வெடிச்சி கொண்டாடுறாங்க! கடைசி வரைக்கும் இப்படி பக்கத்து வீட்டுக் கல்யாணத்துக்கே பக்க வாத்தியம் வாசிக்க வேண்டியதுதான்!

p104b_1513667101.jpg

twitter.com/iaaruran

ஆண்கள் அழுவதில்லை, உடைந்து போவார்கள்...

twitter.com/Saranya_twit

உன்னுடைய எல்லாச் செயலுக்கும் எவன் “ஆமாம்”போடுகிறானோ அவனே இறுதியில் உனக்கு “நாமம்” போடுவான்...

twitter.com/thoatta

சீமான் பேசறதை மனப்பாடம் பண்ணி,  விஜய் டிவி க.போ.யாருல ஸ்டேண்டப் காமெடின்னு சொல்லி பர்ஃபாமன்ஸ் செஞ்சா, சேம்பியனாகிடலாம்.

twitter.com/kumarfaculty

உலகின் முதல் கண்ணாடி தண்ணீர்...!

twitter.com/Kozhiyaar

ஒரு வயசுக்கு மேல உயிர்பயம் இருக்காது!
உயிரோடு இருப்பதுதான் பயமாக இருக்கும்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: துயரத்தின் சாட்சி

 

 
shutterstock208230595

ஜாலியன்வாலா பாக் என்றதும் அந்தத் துயரமான சம்பவம்தான் நம் நினைவுக்குவரும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்ற இடம் இது. 'பாக்' என்றால் தோட்டம் என்று பொருள். ஜாலியன்வாலா பாக் 6.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள மிகப் பெரிய தோட்டம். இது பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில், உலகப் புகழ்பெற்ற பொற்கோயிலுக்கு அருகில் இருக்கிறது.

   

பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித்சிங்கிடம் பணிபுரிந்த சர்தார் ஹிமத்சிங் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் இது. அவர் குடும்பம் 'ஜல்லா' என்ற கிராமத்திலிருந்து வந்ததால் ’ஜாலியன்வாலா பாக்’ என்று பெயர் பெற்றது.

தோட்டத்தைச் சுற்றி குறுகிய நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் பிரதான நுழைவாயிலைத் தவிர, மற்ற வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பிரதான வாயிலுக்கு ஒரு குறுகலான சந்து வழியாகத்தான் வரவேண்டும். உள்ளே வந்தால் மிகப் பெரிய அழகான தோட்டம். இதில் சுதந்திரப் போராட்டக் கூட்டங்களும் திருவிழாக்களும் நடைபெற்றுவந்தன. மற்ற நாட்களில் குழந்தைகள் விளையாடும் இடமாக இருந்தது.

shutterstock342292676
 

சீக்கியர்களின் மிகப் பெரிய அறுவடைத் திருவிழாவான 'பைசாகி' நடைபெற்றுக்கொண்டிருந்தது. திருவிழாவுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். சில மாதங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த ரௌலட் சட்டத்தால், நாடே கொந்தளித்துக்கொண்டிருந்தது. விசாரணை இல்லாமலேயே யாரையும் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்பதுதான் அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம். குறிப்பாக பஞ்சாப், வங்காள மக்கள் அந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

பஞ்சாப் தலைவர்களை ஆங்கிலேய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தது. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் கோபமடைந்தனர்.

ஏப்ரல் 13, 1919-ம் ஆண்டு. திருவிழாவைக் கொண்டாடுவதற்குப் பொதுமக்கள் ஒன்று கூடியிருந்தனர். அப்போது ஜெனரலாக இருந்த எட்வர்ட் டயர், முன்னறிவிப்பு இன்றி ராணுவத்தை வைத்து துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தினார். பத்து நிமிடங்களில் 1650 குண்டுகள் சீறிப் பாய்ந்தன. மக்கள் பயந்து, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து, சிறிய நுழைவாயில் வழியாக வெளியே செல்ல முடியாமல் இடிபாடுகளில் சிக்கி மடிந்தனர். துப்பாக்கிக் குண்டுகளுக்கு பயந்து 120 பேர் அங்கிருந்த கிணற்றில் குதித்து இறந்தனர். மகிழ்ச்சியான அறுவடைத் திருவிழா, துயரத்தில் முடிந்தது.

shutterstock446843389

ஆங்கிலேய அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை 379 என்று கூறியது. ஆனால் 1500க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது.

பண்டிட் மதன் மோகன் மாளவியா அந்த இடத்தை தேசிய நினைவுச் சின்னமாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அமெரிக்கக் கட்டிடக்கலை நிபுணர் பெஞ்சமின் போல்க் நினைவுச் சின்னத்தை எழுப்பினார்.

தற்போது ஜாலியன்வாலா பாக்கில் பசுமையான செடிகளுக்கும் புற்களுக்கும் நடுவே 30 அடி உயரத்தில் நினைவுச் சின்னம் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. நான்கு பக்கங்களிலும் கற்களாலான லாந்தர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது 'சுதந்திரச் சுடர்' என்று அழைக்கப்படுகிறது. நடுவில் அசோகச் சக்கரமும் அதன் கீழ் ’உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக' என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சுவர்களில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகளின் அடையாளங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. பலரை விழுங்கிய கிணற்றை, வலையுடன் கூடிய சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாத்துவருகின்றனர்.

shutterstock672355846
 

ஜாலியன்வாலா பாக் ஒளிப்படங்களும் பத்திரிகைச் செய்திகளும் ஓர் அறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 50 நிமிடங்களுக்கு நடக்கும் ஒளி - ஒலி காட்சியை அவசியம் காண வேண்டும்.இன்று அமைதியாக இருக்கும் இந்த இடம், கடந்த கால சுதந்திரப் போராட்ட வரலாற்றின் வலியை அழுத்தமாகச் சொல்கிறது.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘எல்லோரிடமும் எதையும் பேசமுடியாது’
 

image_297c8015a0.jpgஎந்த ஒரு விடயத்தையும் நாம் சொல்லும்போது, அதைக் கேட்பவர்கள் “அது சரியானதுதான்” என்று ஆமோதிப்பது சுலபமானது. ஆனால், அதே விடயத்தை ஒருவர், “தவறு” என்று சொன்னால், அதனை நிரூபிப்பது கடினமானது.

விதண்டாவாதம் புரிபவர்களிடம், பேசி வெல்லவே முடியாது. இத்தகையவர்கள் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பிரகிருதிகளே.

நாங்கள் சொல்லும் கருத்தை நிரூபிக்க, தகுந்த தகவல்களைத் திரட்டி, வழங்க வேண்டும்.

ஒருவருக்கு ஏற்பட்ட நோயின் வலியின் தாக்கம் அவருக்குத்தான் தெரியும்.

நெஞ்சத்தில் ஏற்படும் மனவேதனையை, அதைக் கரிசனையுடன் எல்லோரும் கேட்பது நடவாத விடயம்.

ஆனால், கருணையும் அன்பு உள்ளமும் கொண்டவர்களுக்கே, மற்றவர் துன்பம் தெரியும். எல்லோரிடமும் எதையும் பேசமுடியாது.

  • தொடங்கியவர்

1915 : மலே­ஷி­யா­வி­லுள்ள இலங்கை தமி­ழர்­களின் நிதி­யு­த­வி­யுடன் வாங்­கப்­பட்ட விமானம் பிரித்­தா­னிய விமா­னப்­ப­டைக்கு அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்­டது.

வரலாற்றில் இன்று….

டிசம்பர் – 22

 

1790 : துருக்­கியின் இஸ்­மாயில் நகரை ரஷ்­யாவின் சுவோரவ் என்­ப­வர் கைப்­பற்­றினார்.

 

1807 : வெளி­நா­டு­க­ளு­ட­னான வர்த்­தகத் தொடர்­பு­களை நிறுத்தும் சட்­ட­மூலம் ஐக்­கிய அமெ­ரிக்­காவில் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

1845 : பஞ்­சாபில் ஃபெரோ­சிஷா என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் பிரித்­தா­னியப் படைகள் சீக்­கி­யர்­களைத் தோற்­க­டித்­தனர்.

varalaru-top-only.jpg1851 : இந்­தி­யாவின் முத­லா­வது சரக்கு ரயில் உத்­த­ராஞ்சல் மாநி­லத்தில் ரூர்க்கீ நக­ரத்தில் சேவையில் ஈடு­பட்­டது.

1915 : மலே­ஷி­யாவின் இலங்கைத் தமி­ழர்­களின் நிதி உத­வியால் வாங்­கப்­பட்ட விமானம் பிரித்­தா­னிய வான்­ப­டைக்கு அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டது. இவ்­வி­மா­னத்­துக்கு “யாழ்ப்­பாணம்” என பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது.

1937 : லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொது­மக்­க­ளுக்­காகத் திறந்­து­வி­டப்­பட்­டது.

1942 : இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்­ப­தற்­கென வீ-–2 ஏவு­க­ணை­களை உற்­பத்தி செய்ய ஹிட்லர் உத்­த­ர­விட்டார்.

1944 : இரண்டாம் உலகப் போர்: வியட்­நாமில் ஜப்­பா­னிய ஆக்­கி­ர­மிப்­புக்­கெ­தி­ராக வியட்நாம் மக்கள் இரா­ணுவம் அமைக்­கப்­பட்­டது.

1963 : லக்­கோ­னியா என்ற டச்சுக் கப்பல் போர்த்­துக்­கலில் மூழ்­கி­யதில் 128 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1989 : ஒரு வார சண்­டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்­யூ­னிச ஆட்­சி­யா­ள­ரான நிக்­கலாய் செய்­செஸ்­குவை வீழ்த்தி ருமே­னி­யாவின் ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.

1989 : கிழக்கு ஜேர்­ம­னி­யையும் மேற்கு ஜேர்­ம­னி­யையும் பேர்­லினில் பிரித்த “பிராண்­டன்பேர்க் கதவு” 30 ஆண்­டு­களின் பின்னர் திறந்து விடப்­பட்­டது.

1990 : மார்ஷல் தீவுகள், மைக்­கு­ரோ­னீ­சியா கூட்டு நாடுகள் ஆகி­யன சுதந்­திரம் அடைந்­தன.

2001 : ஜனா­தி­பதி ஹமீட் கர்ஸாய் தலை­மை­யி­லான இடைக்­கால அர­சாங்­கத்­திடம் ஆப்கானிஸ்­தானின் ஆட்­சி­ய­தி­காரம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

2001 : பிரான்ஸின் பாரிஸ் நக­ரி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் மியாமி நகரை நோக்கி பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணம் செய்த பிரித்­தா­னி­ய­ரான ரிச்சர்ட் றீட், தனது பாதணிக்குள் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டின் மூலம் விமானத்தை தகர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

2016 : சிரியாவின் அலேப்போ நகரை அந்நாட்டு அரச படைகள் மீளக் கைப்பற்றின.

http://metronews.lk

  • தொடங்கியவர்

அதோ அந்தப் பறவைப் போல வாழ வேண்டும்

 

 
richards

லகில் விந்தையான மனிதர்களுக்கு அளவே இல்லை. விலங்குகள் மீதான பாசத்தால், சிலர் விந்தையான விபரீதமான செயல்களைக்கூட செய்பவர்கள் உண்டு. அப்படி விசித்திரமான செய்கையால் உலக அளவில் பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் இங்கிலாந்தில் பிரிஸ்டல் நகரில் வசிக்கும் டெட் ரிச்சர்ட்ஸும் ஒருவர்.

இவர் ஒரு பறவைப் பிரியர். பறவையின் மீது அளவற்ற பிரியத்தால், தனது தோற்றத்தையே பறவை போல மாற்ற முடிவு செய்தவர். இதற்காக இவர் முதலில் தனது முகத்திலும் புருவங்களிலும் பறவைகளைப் போல் பச்சை குத்திக்கொண்டார்.

richi

அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, ஓரிரு நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை மூலம் தனது காதுகளையும் அகற்றிக்கொண்டார். அடுத்து தனது மூக்கையும் பறவைகளைப் போல் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அதுவும் கிளிகள் என்றால், இவருக்கு கொள்ளைப் பிரியம். அதனால், பறவை அலங்காரங்களில் கிளி அலங்காரத்துக்கு இவர் முன்னுரிமை அளிக்கிறார். “பறவைகளுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். என்னுடைய கிளி அலங்காரத்தைப் பார்த்து என்னை பலரும் ‘டெட் பேரட்மேன்’ என்றே அழைக்கிறார்கள்.

எனக்கு உறவினர்கள் இருந்தாலும், என்னுடைய குடும்பம் பறவைகள்தான்” என்று பறவைப் புராணம் பாடுகிறார் 57 வயதான டெட் ரிச்சர்ட்ஸ்.

இதுவரை உடலில் 110 பறவை டாட்டூகளையும், முகத்தில் 56 வித்தியாசமான வளையங்களையும் பொருத்திக்கொண்டு பறவையைப்போலவே காட்சியளிக்கிறார் இந்தப் பறவைப் பிரியர்!

 

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

'கொஞ்சும் நாய்கள், கொலையும் செய்யும்'... உலகை அதிரவைத்த பிட்புல் இன நாய்!

 

வீடுகளில் வளர்க்கப்படுகிற செல்லப்பிராணிகளில் முக்கியமானது நாய். குடும்பத்தில் ஒருவராகவே பல வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் நாய்கள்குறித்த ஒரு கதை நிச்சயம் இருக்கும். ஏனெனில், நாய்கள் குறித்த நிகழ்வுகள் எல்லாம் நெகிழவைப்பவை. சில மட்டுமே பதற வைப்பவை அதிலொன்றுதான் இந்த சம்பவம். 

அமெரிக்காவின் கோகிலேன்ட் வர்ஜீனியா மாகாணத்தில், பெத்தானி ஸ்டீஃபன்ஸ் என்ற 22 வயதுடைய பெண் வசித்துவருகிறார். அவர் அங்கிருக்கிற போக்ஸ்மோர் என்கிற குதிரை இனவிருத்தி செய்யும் ஒரு பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் இரண்டு பிட்புல் வகை நாய்களை வளர்த்துவந்தார். அவற்றுக்கு முறையே டோங்கா மற்றும் போக்மென் எனப் பெயரிட்டிருந்தார்.

 

டிசம்பர் 12-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பெத்தானி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி வுட்லாண்ட் என்கிற இடத்தில் பெத்தானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. முக்கியமாக, முகம் மற்றும் கழுத்துப்பகுதி சிதைந்த நிலையில் இருந்தது. உடல் கைப்பற்றப்பட்ட அன்றைய நாளில் பெத்தானியின் இறப்புகுறித்து எந்த அறிவிப்பையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.

பிட்புல்

பெத்தானியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வற்புறுத்தலின் பெயரில் பெத்தானி இறந்த நான்கு நாள்கள் கழித்து வெர்ஜீனியா காவல்துறை, இறப்புகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது. அதில், இறப்பு குறித்து சொல்லப்பட்ட தகவல் 'பகீர்' ரகமாக இருந்தது.  அதாவது, பெத்தானி இறப்பு திட்டமிட்டோ, மனிதர்களாலோ நடந்தது அல்ல. அவருடைய இரண்டு நாய்களுமே பெத்தானியை கொன்றிருக்கின்றன. நகர ஷெரிப்  ஜேம்ஸ் அக்னியூ கூறும்போது ”உடல் கைப்பற்றப்பட்ட அன்று பெத்தானியின் இடுப்புப் பகுதியை அவருடைய இரண்டு நாய்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அதை நானும் என்னுடைய மற்ற அதிகாரிகளும் நேரடியாகப் பார்க்க நேரிட்டது.  இறந்த பெத்தானியின் குடும்பத்தை மனதில் வைத்தே இந்த இறப்பு குறித்து அறிவிக்காமல் இருந்தோம். ஆனால், அதன்பிறகான தொலைபேசி அழைப்புகள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்போது செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தோம்” என்றார். 

புல் வகை நாயும் டெர்ரிஸ் வகை நாயும் சேர்ந்த கலப்பின நாய்தான் பிட்புல். நம்மூரில் நடத்தப்படும் சேவல் சண்டைகளைப் போல ஐக்கிய நாடுகளில் இந்த நாய்களைப் பயன்படுத்தி பிட்புல் சண்டைப்  போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1835-ம் ஆண்டு பிட்புல்லை பயன்படுத்தி போட்டிகள் நடைபெறுவதற்கு  அமெரிக்கா  மற்றும் பிரிட்டன் நாடுகள் தடைவிதித்தன. ஆனாலும், இப்போது வரை சட்டத்துக்குப் புறம்பாக பிட்புல் சண்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  பிட்புல் நாய்கள் அடிப்படையில் மூர்க்க குணம் கொண்டவை. இவ்வகை நாய்களை ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்குப்  பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைகளுக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதால் இவ்வகை நாய்களை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை. 

பிட்புல்

1996-ம் ஆண்டு பிட்புல் குறித்த பயத்தைப் போக்குவதற்கும் அதை வீடுகளில் வளர்க்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்த 'San Francisco Society for the Prevention of Cruelty to Animals' என்கிற அமைப்பு, பிட்புல் என்கிற பெயரை செட் பிரான்சிஸ் டெர்ரிஸ் எனப் பெயர் மாற்றியது. பெயர்மாற்றப்பட்ட பிறகான காலத்தில் 60-க்கும் அதிகமான பிட்புல் நாய்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் பூனைகளைக் கொன்றுவிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டதால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. 2004-ம் ஆண்டு நியூயார்க்கில் செயல்படும் 'Center for Animal Care and Control' என்கிற அமைப்பு பிட்புல்லின் பெயரை நியூ யார்கிஷ் என மாற்ற முயற்சி செய்தது. ஆனால், மக்களின் எதிர்ப்பால் அதுவும் கைவிடப்பட்டது. 

இங்கிலாந்திலும் வேல்ஸ்லிலும் 'டேஞ்சரஸ் டாக்ஸ்' என்னும்  சட்டம் அமெரிக்க பிட்புல் டெரியர்ஸின் உரிமையையும், மற்ற மூன்று இனங்களையும் சேர்த்து தடைசெய்தது. இந்த நாய்களின் இனப்பெருக்கம், விற்பனை மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றையும்  தடைசெய்திருக்கிறது. இது மட்டுமல்லாது ஐந்து சர்வதேச விமானநிறுவனங்கள் பிட்புல் நாய்களை விமானத்தில் கொண்டு செல்லத் தடைவிதித்திருக்கின்றன. பாதுகாப்பு கருதியே பிட்புல் நாய்களைத் தடை செய்திருப்பதாக எல்லா நிறுவனங்களும் கூறியிருக்கின்றன. 

 

கொல்லப்பட்ட பெத்தானி ஸ்டிபனுடைய தோழி பிட்புல் நாய்கள் பற்றி கூறியது “கொலை செய்கிற அளவுக்கு அவை மோசமான நாய்கள் அல்ல; அவை, முத்தங்களால் நம்மை கொல்லக்கூடியவை” என்றார். எதற்காக நாய்கள் பெத்தானியைக் கொன்றன என்கிற விசாரணை நடந்துவருகிறது. 

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இணையத்தில் வைரலான சாமானியர்கள்!

bill%20young

விடைபெற இருக்கும் 2017-ம் ஆண்டைத் திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும் வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்கள் முதல் செய்தித்தளங்களைவரை ஆதிக்கம் செலுத்தி, கவனத்தை ஈர்த்த வைரல் தருணங்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் இணைய நட்சத்திரங்களும் பலர் இருக்கின்றனர். இப்படி இணையம் மூலம் இந்த ஆண்டு புகழ்பெற்ற சில சாமானியர்களின் சுவாரசியமான கதை:

கேட்டது கிடைத்தது

   

அமெரிக்கப் பள்ளி மாணவரான வால்டர் வில்கர்சன் இந்த ஆண்டு இணைய சாதனையாளராக மகுடம் சூட்டிக்கொண்டிருக்கிறார். ட்விட்டரில் வெளியிட்ட குறும்பதிவு ஒன்றுக்கு அதிக ரீட்விட்கள் பெற்றதுதான் அவரது சாதனை. 34 லட்சத்துக்கும் மேல் ரீட்விட்களை குவித்திருந்தார். இதன்மூலம், ஆஸ்கர் செல்ஃபிக்காக அதிக ரீட்விட் பெற்றிருந்த ஹாலிவுட் நட்சத்திரம் எல்லென் டிஜெனரஸ் சாதனையை அவர் முறியடித்தார்.

walter%20wilcorson

ரீட்விட் என்பது ட்விட்டரில் வெளியாகும் ஒரு குறும்பதிவை மற்றவர்களும் தங்கள் டைம்லைனில் மறுபதிவிடுவதாகும். பொதுவாக, கவனத்தை ஈர்க்கும் குறும்பதிவுகளுக்கு நூற்றுக்கணக்கில் ரீட்விட்கள் கிடைத்தாலே பெரிய விஷயம். அபூர்வமாகவே சில குறும்பதிவுகள் லட்சக் கணக்கில் பகிரப்படும். பெரும்பாலும் செல்வாக்குமிக்க பிரபலங்களுக்கே இது சாத்தியம். அப்படி இருக்க, வில்கர்சனுக்கு இது எப்படிச் சாத்தியமானது?

உண்மையில் அவர் எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை. ட்விட்டர் மூலம் ஒரு கோரிக்கை வைத்தார். ‘எனக்கு இலவச சிக்கன் நக்கெட் உணவு வேண்டும், அதற்கு உதவுங்கள்’ என்பதுதான் அது. இந்தக் கோரிக்கை ட்விட்டுக்கு லட்சக்கணக்கில் ரீட்விட் செய்யப்பட்டது புரியாத புதிர்தான். ஆனால், நடந்தது இதுதான்.

வில்கர்சனுக்கு ஆண்டு முழுவதும் சிக்கன் நக்கெட் இலவசமாகக் கிடைத்தால், எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. உடனே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனத்தை ட்விட்டர் மூலம் அணுகி, ஓராண்டு இலவச சிக்கன் நக்கெட்டுக்கு எத்தனை ரீட்வீட் தேவை எனக் கேட்டிருக்கிறார். நிறுவன தரப்பில் 1.8 கோடி ரீட்வீட் பெற வேண்டும் என பதில் வந்திருக்கிறது. வில்கர்சன் அதிகம் யோசிக்காமல், வேண்டு கோள் வைத்தார்.

அதாவது, இதை ரீட்வீட் செய்தால், எனக்கு நக்கெட் கிடைக்கும், எனவே பகிருங்கள் எனக் கேட்டிருந்தார். பத்து பேருக்கு மேல் பகிரப்போவதில்லை என நினைத்து விளையாட்டாகத்தான் இந்தக் கோரிக்கையை வைத்தார். ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் ரீட்விட்கள் குவிந்தன. விரைவிலேயே இந்த எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு சாதனையாகி, அவருக்கு இணைய புகழை தேடித்தந்தது. ‘நக்கெட் ஆசாமி’ எனும் புகழையும் பெற்றுத் தந்துள்ளது. 1.8 கோடியை அவரால் தொட முடியாவிட்டாலும், இந்தச் சாதனைக்காக அந்த நிறுவனம் அவருக்கு ஓராண்டுக்கு நக்கெட்டுக்கான கூப்பன்களைப் பரிசளித்துள்ளது.

பிபிசி தந்தை

நக்கெட் வாலிபராவது கோரிக்கை வைத்து வைரல் புகழ் பெற்றார். ஆனால், தென் கொரியா பேராசிரியர் ராபர்ட் கெல்லி பேட்டி கொடுத்து இணைய நட்சத்திரமாகி இருக்கிறார். உண்மையில் கெல்லி பேட்டியின்போது ஏற்பட்ட இடையூறால் பிரபலாமானார். எல்லாம் பிள்ளைகளின் அன்புத்தொல்லையால் வந்த இடையூறு.

தென்கொரியாவில் அந்நாட்டு அதிபருக்கு எதிரான கண்டனத் தீர்மான விவகாரம் உச்சத்தில் இருந்தது. அப்போது பிபிசி தொலைக்காட்சி கெல்லியுடன் ஸ்கைப் வழியே உரையாடிக்கொண்டிருந்தது. கெல்லி தனது அறையிலிருந்து தென்கொரிய அரசியல் சூழலை அலசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது 4 வயது மகள் உள்ளே நுழைந்து கெல்லியின் கையைப் பிடித்து இழுத்தாள். பேராசிரியர் கெல்லி சங்கடத்தை வெளிக்காட்டாமல் கேமராவைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார். அதற்குள் அவரது ஒரு வயது மகனும் வாக்கரை தள்ளியபடி உள்ளே வந்தான். குழந்தைகளால் அவர் தத்தளித்துக்கொண்டிருக்க, நல்லவேளையாக கெல்லியின் மனைவி உள்ளே வந்து பிள்ளைகளை அழைத்துச்சென்றார்.

robert%20kelly
 

இந்தக் காட்சி அப்படியே கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி, அனைவராலும் ரசிக்கப்பட்டது. பேராசிரியரின் கடமையும் பிள்ளைகளின் அன்புத் தொல்லையும் சேர்ந்து இந்த வீடியோவை வைரலாக்கியதோடு, அவருக்கு ‘பிபிசி டாட்’ எனும் பட்டப்பெயரையும் பெற்றுத்தந்தது.

இன்ஸ்டாகிராம் புதல்வி

பிரிட்டனைச் சேர்ந்த பைலட் ‘பில் யங்’ இன்ஸ்டாகிராம் நட்சத்திரமாகி கவனத்தை ஈர்த்தார். பைலட்டாக உலகம் முழுவதும் பறக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த பில் யங் ஒரு நல்ல ஒளிப்படக் கலைஞரும்கூட. விமானத்தில் பறக்கும் நகரங்களில், தான் தங்கும் ஓட்டல்களில் காணப்படும் தரைவிரிப்புகளை எல்லாம் கிளிக் செய்து இன்ஸ்டாகிராமில் பகிரும் பழக்கம் உள்ளவர். அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் அவருக்கு அதிக ஆதரவில்லை. 83 பேரே அவரைப் பின்தொடர்ந்தனர். இது குறித்து அவர் கவலைபட்டதும் இல்லை.

ஆனால், அவருடைய மகள் ஜில்லுக்கு இது ஒரு பெரும் குறையாக இருந்தது. அப்பாவின் படங்கள் எல்லாம் அற்புதமாக இருந்தும் அதிகமானவர்கள் அவற்றை ரசிக்கவில்லையே என ஏங்கினார். எப்படியும் அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைரலாக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

இந்த எண்ணத்தை ட்விட்டர் பக்கம் மூலம் ஒரு வேண்டுகோளாக வைத்தார். ‘கிறிஸ்துமசுக்கு நான் விரும்புவதெல்லாம், அப்பாவின் இன்ஸ்டாகிராம் தரைவிரிப்பு பக்கம் வைரலாக வேண்டும் என்பதுதான். தயவுசெய்து இதை நிகழ்த்திக் காட்ட உதவுங்கள்” என்று ட்வீட் செய்து, அதனுடன் அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் இணைந்திருந்தார்.

அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரத்தில் அவரது அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடருவோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தைத் தொட்டது. இதைப் பத்திரிகைகள், இணைய தளங்கள் செய்தியாக வெளியிட, பில்லின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு மேலும் ஆதரவு பெருகியது. அடுத்த சில நாட்களில் லட்சங்களைத் தொட்டது. இதனால், அப்பாவும் மகளும் திக்குமுக்காடிப்போயினர்.

இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோயர்களைப் பெற்றவர்கள் பலர் இருந்தாலும், ஒரே ஒரு ட்வீட்டால் லட்சக்கணக்கான பாலோயர்களைப் பெற்றது பைலட் பில் மட்டும்தான். அதற்கு அவர் ஆசை மகளுக்குதான் நன்றி கூற வேண்டும்.

shopping%20list
 

ஷாப்பிங் லிஸ்ட்

இந்தியாவில் இளம் தம்பதி உருவாக்கிய ஷாப்பிங் லிஸ்ட்டால் இணையம் அறிந்த தம்பதியாக மாறினர். கணவர்களில் பலர் வீட்டு வேலையில் மனைவிகளுக்கு உதவும் வழக்கம் உள்ளவர்கள்தான். ஆனால், அந்த வேலைகளில் சொதப்புவதுதான் பல கணவர்களது பழக்கம். ஐ.டி. ஊழியரான இரா கோவல்கரின் கணவரும் இந்த ரகம்தான். இரா, கணவரை மார்கெட்டுக்கு அனுப்பியபோது, காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என விரிவாக வழிகாட்டும் குறிப்புகளைக் காகிதத்தில் எழுதிக்கொடுத்தார். இந்தக் குறிப்புச்சீட்டை அவர் ட்விட்டரில் பகிர, பலரும் இதை ரசித்து மகிழ்ந்தனர். இந்தக் குறும்பதிவு ட்விட்டரில் பேசப்பட்டு, இரா கோவல்கர் தம்பதியை இணைய நட்சத்திரமாக்கியது.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

10/10 பத்துக்குப் பத்து!

 

 

52p1_1512470367.jpg

வாங்கிய பொருள்

வாணி போஜன், நடிகை

“என் ரொம்ப நாள் ஆசை, கனவு எல்லாமே சொந்தமா ஒரு கார் வாங்கணும் கறதுதான். அந்த ஆசை சமீபத்திலதான் நிறைவேறியது. அக்டோபர் 28 என் பிறந்த நாள்... அன்னிக்கு ‘ஹோண்டா சிட்டி’ மெட்டாலிக் பிளாக் கலர் கார் வாங்கினேன். முதன்முறையா நானே அந்தக் காரை டிரைவ் பண்ணி, ஃபேமிலியோட கோயில் களுக்குப் போயிட்டு வந்தேன். மனசுக்கு ரொம்பத் திருப்தியா இருந்தது.”


52p2_1512470384.jpg

பிடித்த படம்

மிஷா கோஷல், நடிகை

“எப்பவும் எனக்கு ரொம்பப் பிடிச்சது ‘Baby’s day out’ ஆங்கிலப் படம்தான். படம் பார்க்கறப்போ நானும் குழந்தைதான். படத்தில் ஒரு குட்டிக் குழந்தையை மூணு பேரு சேர்ந்து கடத்திடுவாங்க. அதற்கப்புறம் நடக்கறதெல்லாம் செம காமெடி. இதுவரை பத்து தடவைக்கு மேல அந்தப் படத்தைப் பார்த்திருப்பேன். இன்னிக்குப் பார்த்தாலும்கூட செம ஜாலியா இருக்கும். அவ்ளோ டென்ஷனும் கரைஞ்சு மனசு கூலாகிடும்.”


52p3_1512470400.jpg

ரசித்த இசை

ஹரிணி, பாடகி

“எனக்கு வெஸ்டர்ன் சாங்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதுலயும் செலீனா கோமஸ்  பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவங்க குரல்ல எந்தப் பாடலையும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். குறிப்பா, `It Ain't Me’ ஆல்பம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஆல்பத்துல பாடல் வரிகள் சூப்பரா இருக்கும். இசையும் கவிதையும் சங்கமிக்கும்போது அதில் மயங்காமல் இருக்க முடியுமா, என்ன?''


52p5_1512470508.jpg

வாங்கிய பரிசு

திவ்யா கிருஷ்ணன், தொகுப்பாளினி

“நாங்க ‘ஸ்ரீஆரோக்கியா டிரஸ்ட்’னு  ஓர் அமைப்பை நடத்திட்டு வர்றோம். அதன்மூலம் நிறைய உதவிகள் செய்றோம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் என் சேவைகளைப் பாராட்டிய முன்னாள் மேயர் சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர் எழுதிய சில புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில்  எனக்குப் பொன்னாடைப் போர்த்தி கௌரவப்படுத்தினாங்க.”


52p4_1512470422.jpg

கடைப்பிடிக்கும் பழக்கம்

ரித்விகா, நடிகை

“தினமும் தவறாம கடைப்பிடிக்கும் பழக்கம்னா... அது உடற்பயிற்சிதான். காலையில் எழுந்ததும் வார்ம் அப் பண்ணுவேன். அடுத்து  யோகா, மூச்சுப் பயிற்சி செய்வேன். கண்களை ஆரோக்கியமா வெச்சுக்கவும் சில பிரத்யேகமான பயிற்சிகளைச் செய்வேன்.

உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சப்போ, சில சிரமங்கள் இருந்தன. ஆனா, நாள் தவறாமல் செய்துவர என் உடலும் மனமும் ஆரோக்கிய மானதை உணர முடிஞ்சது. அதுக்கப்புறம்தான் எனக்கே என் மேல நம்பிக்கை வந்துச்சு. நீங்களும் செஞ்சுப் பாருங்களேன்!”


52p6_1512470533.jpg

பிடித்த புத்தகம்

தமயந்தி, எழுத்தாளர்

“எனக்கு எமிலி டிக்கின்சனின் ஆங்கிலக் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும். தமிழ்ல நிறைய புத்தகங்களைப் பிடித்தாலும், என்னைப் பிரமிக்க வெச்சது பிரபஞ்சனோட ‘சந்தியா’ நாவல்தான். சந்தியாவோட வாழ்க்கைப் பயணம் அவ்வளவு சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும். அவளுடைய நேர்மையான குணம், திருமணம் மீதான பார்வை எல்லாமே நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியவை; பேசப்பட வேண்டியவை. நீங்களும் படிச்சுப் பாருங்க... உங்களுக்கும் பிடிக்கும்.”


52p7_1512470556.jpg

சென்ற இடம்

சரண்யா சுந்தர்ராஜ், நடிகை

“நான் சமீபத்தில் லண்டன் போயிட்டு வந்தேன். அப்ப அங்கே வசந்த காலம் ஆரம்பம். லண்டன் சாலைகள், ஆப்பிள் மரங்கள், வானுயர்ந்த கட்டடங்கள்...  இப்படி எல்லாமே ரொம்பப் பிடிச்சிருந்தது. அங்கிருந்த ஆப்பிள் மரங்களிலிருந்து பழங்களைப் பறிச்சு சாப்பிட்ட தெல்லாம் ஆஸம் மொமெண்ட். எனக்கு நடக்குறதுனா ரொம்பப் பிடிக்கும். லண்டன் சாலைகளில் நல்லா ஆசைதீர நடந்தேன். திரும்பி வர்ற மனசே இல்லாமல்தான் இங்கே வந்தேன்.

இங்கே வந்ததும் நான் நடிக்கிற சீரியலுக்காக கொடைக்கானலுக்குப் போக வேண்டியிருந்தது. லண்டனுக்கு இணையா கொடைக்கானல் குளிரும் அவ்வளவு ஜில்லுனு இதமா இருந்தது. கொடைக்கானலில் வழக்கமாக எல்லாரும் போகும் இடங்களுக்குப் போகவே கூடாதுனு முடிவு பண்ணி, மலைவாழ் மக்கள் வாழும் கிராமம், கோயில்னு நேரம் கிடைச்சப்ப எல்லாம் கிளம்பி போய்ட்டு வந்தேன். அங்கே வனபத்ர காளியம்மன்னு ஒரு கோயில் இருக்கு. பழைமை மாறாமல் அவ்ளோ அழகாயிருக்கு. மிஸ் பண்ணக் கூடாத இடம் அது!”


52p8_1512470585.jpg

தீராத ஆசை

ஆதிரா பாண்டிலட்சுமி, திரைப்படக் கலைஞர்

“எனக்குச் சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகிடுச்சு. கல்யாணமானதும் துபாய்க்குப் போயிட்டதால என் அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணினேன். அங்கே என்னால அம்மாவைப் பிரிஞ்சிருக்கவே முடியலை. அப்படியே காலம் ஓடிடுச்சு. ஒருகட்டத்துல அம்மாவைப் பார்க்கணும்னே அங்கேயிருந்து பறந்து இந்தியாவுக்கு வந்தேன். அதுக்குள்ள அம்மாவுக்கு கேன்சர் வந்துடுச்சு. அம்மா, பால் கொழுக்கட்டை சூப்பரா செய்வாங்க. எனக்கு அதை செஞ்சுத் தரச் சொல்லி கேட்கணும்னு ரொம்ப ஆசையா நினைச்சிட்டிருந்தேன். அவங்களே ‘எனக்கு உடம்பு சரியானதும் உனக்குக் கொழுக்கட்டை செஞ்சி தரேன்மா’னு சொன்னாங்க. சொல்லி இருபது நாள்கள்ல என்னை விட்டுட்டுப் போய்ட்டாங்க. ஆனா, இப்பவும் அவங்க அன்புக்காக ஏங்கிட்டிருக்கேன். அவங்க செஞ்சு தரும் பால் கொழுக்கட்டை மீது இன்னும் தீராத ஆசை இருக்கு. ஆனா, இதெல்லாம் நிறைவேறாதே...”


52p9_1512470601.jpg

மறக்க முடியாத அனுபவம்

பிரியங்கா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

“ஒரு நிகழ்ச்சிக்காக எங்க டீமோடு சேர்ந்து பாரீஸ் போயிருந்தேன். அங்கே டிஸ்னிலாண்ட் தீம் பார்க்குக்குப் போனோம். அமேஸிங் ப்ளேஸ். அத்தனை விளையாட்டுகளையும் விளையாடணும்னு கொள்ளை ஆசை. ஆனா, அதுக்கான நேரம் இல்லாததால் முக்கியமான விளையாட்டுகளை மட்டும் விளையாடினோம். ரொம்ப உயரமாக இருந்த ஒரு ரோலர் கோஸ்டரில் ரைடு போகலாம்னு சீட் பெல்ட் போட்டுக்கிட்டு கடவுளை வேண்டிக்கிட்டு உட்கார்ந்துட்டேன். ஸ்டார்ட் ஆனதுதான் தெரியும்... அதுக்கப்புறம் பயத்துல கத்தோ கத்துனு கத்தி செமயா என்ஜாய் பண்ணினேன். அதுவும் தலைகீழா சுத்தும்போது... அம்மாடியோவ், செம அனுபவம்!”


52p10_1512470619.jpg

நெகிழ்ந்த நிமிடம்

பாரதி பாஸ்கர், பேச்சாளர்

“ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக டெல்லி போயிருந்தேன். இரண்டரை மணி நேரம் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நடந்தது. நான் மேடையில் இருந்தவாறே ஒரு விஷயத்தை கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒரு மகன் தன்னுடைய மாற்றுத்திறனாளித் தாயை அந்த நிகழ்ச்சிக்காக அழைத்து வந்திருந்தார். நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது அந்த அம்மாவின் அவசரத் தேவைக்காக அவரை அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தப் பையனை அழைத்துப் பேசினேன். அவர் என்னிடம், ‘எங்கம்மா உங்ககிட்ட பேச ஆசைப்படுறாங்க’னு சொன்னார். அந்த அம்மா ரொம்ப வயதானவர். உடல்நிலை சரியில்லாமலும் இருந்தார். ‘உங்கப் பேச்சை ஒருதடவையாவது நேர்ல கேட்கணும்னு ஆசைப்பட்டேன். அதை என் மகன்கிட்ட சொன்னவுடனே கூட்டிட்டு வந்துட்டான். இப்ப என் ஆசை நிறைவேறிடுச்சுமா’னு என் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னார். என் தலைமீது கைவைத்து ‘நீண்ட காலம் நீங்க வாழணும். இதே மாதிரி சந்தோஷமா, நல்லா பேசணும்’னு சொன்னாங்க. ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.''

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.