Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அனுஷ்காவின் பனாரஸ் சேலை, விராட் அணிந்த தங்க பட்டன், பிரதமர் வருகை - விருஷ்கா திருமண வரவேற்பு ஹைலைட்ஸ்! #VirushkaReception

 
 

விருஷ்கா

ந்த ஆண்டு முடியவிருக்கும் நிலையில், ஆன் -லைன் ரசிகர்கள் மிகவும் கொண்டாடியது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம்தான். கடந்த 11ம் தேதி, முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, இத்தாலியில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் நான்கு ஆண்டுகள் காதலித்து வந்தது உலகமறிந்த விஷயம். திருமணம் முடிந்து, இருவரும் ஃபின்லாந்தில் (Finland) ஒரு குட்டி ஹனிமூனுக்குச் சென்று திரும்பினர். இருவரும் ஹனிமூனில் இருக்கும் புகைப்படத்தை, அனுஷ்கா ஷர்மா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சொர்க்கத்தில் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துகொண்டது வைரலானது. 

 

விருஷ்கா


இந்த நிலையில், டெல்லியில் இவர்களின் திருமண வரவேற்பு விழா நேற்று நடந்தது. அங்குள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இருவரின் திருமண வரவேற்பு ஆடைகளை வடிவமைத்தது பிரபல ஆடை வடிவமைப்பாளர் சபயாஷாச்சி முகர்ஜி. அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த பனாரஸ் சேலை குறித்து, சபயாஷாச்சி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனுஷ்கா தன் திருமண வரவேற்பு விழாவில் சிவப்பு நிற பனாராஸ் சேலை அணிய விரும்பினார். இந்தியாவில் மணமகள்கள் ஏதேனும் ஒரு நிகழ்விற்காவது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிய விரும்புவார்கள். தங்கச் சரிகை வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு பனாரஸ் சேலை அணிந்திருந்த அனுஷ்கா தேவதைபோல் காட்சியளித்தார். அந்தச் சேலைக்குப் பொருத்தமான வைர நெக்லஸ் மற்றும் ஜிமிக்கி கம்மல் அணிந்திருந்தார். இந்திய ஆடைகளைப் பிரபலப்படுத்துவதில் பாலிவுட்டிற்கு முக்கியப்பங்கு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில், அனுஷ்கா அணிந்திருக்கும் பனாரஸ் ரக சேலைகளை இந்தியா முழுவதும் பிரபலமாவதற்கு வாய்ப்புண்டு. நன்றி, அனுஷ்கா”, என்று பதிவிட்டிருந்தார்.

விருஷ்கா


அதேபோல், புது மணமகன் தோற்றத்தில் விராட் கோலி, கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ‘பந்த்காலா’ (Bandhgala) என்னும் ஜோத்பூர் ரக கோட்-சூட் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த கறுப்பு நிற சில்க் கோட்டில், 18 காரடிலானா தங்க பட்டன்கள் தைக்கப்பட்டு ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. கறுப்பு கோட்டுக்கு ஏற்ப, வெள்ளை நிற சில்க் குர்தா அணிந்திருந்தார். இந்த ஆடையில் விராட்டை கம்பீரமாகக் காட்டியது, எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பஷ்மீனா ஷால்தான். இந்த ஆடையில், விராட் கோலி ராயல் லுக்கில் இருந்தார் என்றும் சபயாஷாச்சி குறிப்பிட்டிருந்தார்.

இதற்குமுன், இத்தாலியில் நடந்த இவர்களின் திருமணம் ஆடைகளையும் வடிவமைத்தது இவர்தாம். அனுஷ்கா நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், வெல்வட் சேலையும், திருமணத்திற்கு பிங்க், ஆரெஞ்சு நிறம் கலந்த லெஹங்காவும் அணிந்திருந்தார். விராட் பிங்க் நிற குர்தாவை அணிந்திருந்தார்.

விருஷ்கா

டெல்லியில் நடந்த திருமண வரவேற்பு விழாவில், விராட்டும் அனுஷ்காவும் சேர்ந்து நடனமாடியது, ஷிகர் தவானின் நடனம் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. டெல்லியை அடுத்து, மும்பை பிரபலங்களுக்காக வரும் 26ம் தேதி ரிசப்ஷன் விழாவை நடத்தவிருக்கிறார்கள் விராட் - அனுஷ்கா தம்பதி. அதற்காக இன்று காலை இருவரும் மும்பை விமான நிலையத்துக்குச் சென்றடைந்தனர். இருவரையும் மீண்டும் ஒரு முறை திருமண உடையில் பார்க்க, இருவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். மும்பையில் இருவரும் என்ன மாதிரியான உடைகளில் தோன்றபோகிறார்கள் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார் அதை வடிவமைத்த சபயாஷச்சி. மொத்தத்தில் விராட் - அனுஷ்காவின் பிரம்மாண்ட விழாவுக்கு பார்த்துப் பார்த்து உடைகளைத் தேர்வு செய்திருக்கிறார் சபயாஷாச்சி! ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு உடை... அத்தனையும் ஆன்லைனில் ஆண்கள் மற்றும் பெண்களைக் கவர்ந்திழுத்திருக்கிறது.

 

இந்தக் கொண்டாட்டங்கள் முடிந்து, வரும் ஜனவரி 5ம் தேதி, தென்னாப்பரிக்காவில் நடக்கவிருக்கும் இந்தியா-தென்னாப்பரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில், விராட் கோலி  விளையாடவிருக்கிறார்.

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாட்ஸ்அப் கலக்கல்: மல்லையாவுக்கு கொடுத்த கடன்

 
memes%2016
1
12
13
14
15
2
3
4
5
8
9

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

''இந்த 7 மொழிகளைக் கத்துக்கிட்டா உலகத்துல எங்கேயும் பொழைச்சுக்கலாம்!'' - 400 மொழிகள் பேசும் சிறுவன்

 
 

பல மொழிகள் பேசும் சிறுவன்

புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளவற்கே நமக்கு கண்ணைக் கட்டுகிறது. ஆனால், சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மஹமூத் அக்ரம், 400 மொழிகளைக் கற்றிருக்கிறார். மொழிகளின் மீதான ஆர்வத்தால் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டு, இன்னும் இன்னும் என புதிய மொழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார். 

 

"குழந்தைப் பருவத்திலிருந்தே அக்ரம் ரொம்ப சுறுசுறுப்பு. பல நாடுகளில் உளவியல், மொழி ஆராய்ச்சி சார்ந்து வொர்க் பண்ணிட்டிருந்த எனக்கு 16 மொழிகள் தெரியும். வருஷத்துக்கு ஒருமுறை சென்னைக்கு வருவேன். பையன் ஒன்றாம் வகுப்பு படிச்சுட்டிருந்த சமயம், நான் லீவில் வீட்டுக்கு வந்திருந்தேன். கம்யூட்டர்ல டைப் பண்ணிட்டிருந்தப்போ, 'எனக்கும் இங்கிலீஸ் டைப்பிங் சொல்லிக்கொடுங்க'னு கேட்டான். அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தேன். அடுத்த ஆறு மணி நேரத்திலேயே டைப் ரைட்டிங் ஹையர் கிரேட் லெவலுக்கு ஸ்பீடா டைப் பண்ணினான். அதைப் பார்த்து பிரமிச்சுட்டேன். அக்ரமின் திறமையைத் தெரிஞ்சுக்கிட்டது அந்த நிமிஷம்தான்'' என்கிறார் அக்ரமின் தந்தை மொழிப்பிரியன். 

"அடுத்த நாள் அரபிக் மொழியில் டைப் பண்ண கத்துக்கொடுத்தேன். நாலு நாளிலேயே நல்லா டைப் பண்ண ஆரம்பிச்சுட்டான். நான் மறுபடியும் ஃபாரீனுக்குப் போயிட்டேன். 'அடுத்தடுத்த லாங்குவேஜ் கத்துக்கொடுக்காம ஃபாரீனுக்குப் போயிட்டீங்களே'னு போனில் பேசும்போதெல்லாம் கேட்பான். அதனால், இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளைக் கத்துக்க மெட்டீரியலை மெயிலில் அனுப்பினேன். அதையும் முடிச்சுட்டதா சொன்னான். சில கேள்விகளைக் கேட்டு டெஸ்ட் பண்ணினேன். சரியா பதில் சொல்லிட்டு, 'இன்னும் வேற மொழிகள் கத்துக்கணும்'னு சொன்னான். வீட்டுல இன்டர்நெட் கனெக்‌ஷன் கொடுத்து, ஸ்கைப் வழியே சொல்லிக்கொடுத்தேன். எட்டு வயசிலேயே, அவனாக ஆன்லைன்ல சர்ச் பண்ணி படிக்க ஆரம்பிச்சு, ஒரே வருஷத்தில் 200 மொழிகளைக் கத்துகிட்டான்" என நம் கண்களை விரியச் செய்கிறார் மொழிப்பிரியன். 

மொழி

"பையனின் மொழித் திறமையை உலகுக்கு தெரியப்படுத்த 2014-ம் வருஷம் பஞ்சாப்பில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு அழைச்சுட்டுப் போனேன். அங்கே ஒரு நிறுவனத்தின் பெயரை நிகழ்ச்சியினர் 50 மொழிகளில் எழுதச் சொல்ல, அக்ரம் சரியா எழுதினான். 'வேர்ல்டு யங்கஸ்ட் மல்டி லாங்குவேஜ் சயின்டிஸ்ட்' என்கிற அவார்டு கொடுத்தாங்க. தொடர்ந்து நம் நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் விருதுகளையும் பட்டங்களையும் வாங்கினான். 2015-ல் ஐந்தாம் வகுப்பு முடிச்சதுமே, 'எனக்கு ஸ்கூல் போக விருப்பமில்லை. தொடர்ந்து நிறைய மொழிகளைக் கத்துக்கிட்டு, லிங்விஸ்டிக்ஸ் புரொஃபஸர் ஆகணும்'னு சொன்னான். இஸ்ரேல் நாட்டில் இருக்கும் ஒரு லாங்குவேஜ் ஸ்கூல்ல கரஸ்ல படிக்க விண்ணப்பிச்சோம். அவங்களின் ஹிப்ரூ (Hebrew) மொழியை அக்ரம் ஓரளவுக்குத் தெரிஞ்சுவெச்சிருந்ததால், அங்கே படிக்க சீட் கிடைச்சுது. பிறகு, மத்திய அரசின் 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்' மூலமாக இந்திய சி.பி.எஸ்.சி சிலபஸில் இப்போ ஏழாவது படிக்கிறான்" என்கிற மொழிப்பிரியன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கே நிரந்தரமாகக் குடியேறியிருக்கிறார். இப்போது, மொழிப்பிரியனும் மஹமூத் அக்ரமும், ஆன்லைன் வாயிலாக மொழிப் பயிற்சி வகுப்புகளை எடுக்கின்றனர். பள்ளிகளுக்குச் சென்று மொழிப் பயிற்சி குறித்து விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். 

"புதிதாக ஒரு மொழியைக் கற்க எளிய வழிமுறை என்ன?" 

"ஒரு வயசுக் குழந்தை, தன் பெற்றோர் பேசுறதை கூர்ந்து கவனிச்சு அப்படியே திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும். படிப்படியாக தன்னைச் சுற்றி இருக்கிறவங்க பேசறதைக் கவனிச்சு அந்த வார்த்தைகளை மனசுல பதிச்சுக்கும். பிறகு, மத்தவங்க கேள்விக்குப் பதில் சொல்ற அளவுக்கு முன்னேறிடும். மெச்சூரிட்டி வந்ததும் கிராமர்படி பேசும். புதிய மொழியைக் கற்கவும் இதுவே அடிப்படை. எந்த மொழியாக இருந்தாலும் தொடர்ந்து எழுத்து மற்றும் பேச்சு வழியே பயன்படுத்திட்டே இருந்தால்தான் மறக்காது." 

"தொடர்ந்து பல மொழிகளைக் கற்கும் அக்ரமின் அதீத ஆர்வம், எப்போதாவது உங்களுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கா?" 

"பையனின் 8 வயசு வரைக்கும் அந்தப் பயம் எங்களுக்கு இருந்துச்சு. அப்புறம்தான் அவனின் ஐ.க்யூ லெவல் 160 எனத் தெரிஞ்சு, இது பயப்படும் விஷயமில்லேனு பெருமைப்பட்டோம். ஐ.க்யூ லெவலைத் தக்கவெச்சுக்க ஆரோக்கியமான சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுறது, கணிதப் பயிற்சிகளைக் கொடுக்கிறோம். ஞாபகத்திறன், கிரியேட்டிவிட்டி, புரிந்துகொள்ளுதல், யோசித்தல் போன்ற திறன்கள் அக்ரமிடம் அதிகமாக இருக்கு. அதுக்காக, எந்த நேரமும் படிப்பு, பிராக்டீஸ்னே இருக்கறதில்லை. சில மணி நேரத்திலேயே நல்லா புஞ்சுப் படிச்சுடுவான்" என்கிறார் மொழிப்பிரியன். 

சிறுவன் அக்ரம்

"சின்ன வயசுல அப்பா கம்ப்யூட்டர்ல டைப் பண்றதைப் பார்த்ததும், ஃபாண்ட் மாற்றி பல மொழிகளை டைப் பண்ண முடியும்னு தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து ஆன்லைனில் பல மொழிப் பேசும் மக்களின் வீடியோக்களைப் பார்த்தேன். அந்த மொழிகளைக் கத்துகிட்டா, அவங்க பேசுறதைப் புரிஞ்சுக்கலாமேனு கத்துக்க ஆரம்பிச்சேன்" எனப் புன்னகையுடன் பன்மொழி ஆர்வம் குறித்துப் பேசுகிறார் மஹமூத் அக்ரம். 

"ஸ்கூல் போறதை ஏன் நிறுத்திட்டீங்க?" 

"ரெகுலரா ஸ்கூல் போய்கிட்டே, நிறைய மொழிகளைக் கத்துக்க நேரம் கிடைக்கறதில்லை. அதனால், ஸ்கூல் போறதை நிறுத்திட்டேன். ஆனால், கரஸ்ல படிச்சுட்டுதான் இருக்கேன். சில சமயம் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸை மிஸ் பண்ற ஃபீலிங் வரும். பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்ஸ் மற்றும் தம்பி, தங்கையோடு தினமும் விளையாடுவேன்." 

"பல நூறு மொழிகளைக் கத்துக்கும்போது மறதி பிரச்னை வரலையா?" 

"கத்துகிட்ட 400 மொழிகளிலும் டைப் பண்ணுவேன்; படிச்சு எழுதுவேன். இதில், 46 மொழிகளை முழுக்க பேசவும், எழுதவும், படிக்கவும் தெரியும். கற்கும் மொழிகளை டச் விட்டுடாமல் பிராக்டீஸ் பண்றதால், படிச்சது நினைவில் நிற்கும். தினமும் காலையில் 5 - 8 மணி வரை லாங்குவேஜ் கற்க ஒதுக்குவேன். அப்புறம், கரஸ்ல படிப்புக்கான ஆன்லைன் வகுப்பு. அப்போ என் சந்தேகங்களை டீச்சர்ஸ்கிட்டே கேட்டுப் புரிஞ்சுப்பேன்.'' 

"உங்க எதிர்கால லட்சியம் என்ன?" 

"என் குழந்தைப் பருவத்திலேயே திருவள்ளுவர் காலத்து தமிழ் - பிராமி எழுத்துகளைச் சொல்லிக்கொடுத்த பிறகுதான் தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழை அப்பா சொல்லிக்கொடுத்தார். அதனால், சங்க இலக்கியங்கள்மீது எனக்கு ஆர்வம் இருக்கு. நம் சங்க இலக்கிய மொழியை வேற மொழிக்கு டிரான்ஸ்லேட் பண்ற முயற்சியில் கவனம் செலுத்துறேன். இதனால், நம் தமிழ் மொழியின் சிறப்பை பிற மொழிக்காரங்களுக்குப் புரியவைக்க முடியும். எதிர்காலத்துல லிங்விஸ்டிக்ஸ் புரொஃபஸர் ஆகணும். நம் தாய்மொழியைத் தவிர்த்து, ஆங்கிலம், இந்தி, உருது, அரபி, ஸ்பானீஸ், பிரெஞ்சு, சைனீஸ் என ஏழு மொழிகளைக் கத்துக்கிட்டா உலகின் எந்த மூலைக்கும் போய் பிழைச்சுக்கலாம்" என்கிறார் இந்த 400 மொழி வித்தகர். 

 

அசத்துங்க அக்ரம்! 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்
‘பிணைப்புகளின் இறுக்கம் விலக்கப்படக்கூடாது’
 

image_b149adc872.jpgஆழமான அன்பு நிலை, கணவன், மனைவி இரு சாராரிடமும் இருக்க வேண்டும்.

இவர்களில் ஒருவர் தங்களிடையே உறவில் இறுக்கத்தளர்வு ஏற்பட்டால் இருவருமே பாதிப்புக்கு ஆளாகி விடுவர்.

நான், எத்தனை பிரியமாகப் பாசம் கொண்டிருந்தாலும் கூட, என்னைப் என்னைப் புரிந்து கொள்ளவில்லை எனச் சிலர் கவலைப்படுவதுண்டு.

பரஸ்பரம் நம்பிக்கை வைத்துக் கொள்ளா உறவுநிலை தற்காலிகமானது. ஆழமான காதலில் சந்தேகம், காழ்ப்பு, வெறுப்பு உமிழப்படுவதேயில்லை.

ஒருவர் தவறாக நடந்து கொண்டால், எந்தச் சூழலில் அவர் இப்படி நடந்தார், தெரியாமல்தான் அப்படி நடைபெற்றதா எனத் தெளிந்து, பரஸ்பரம் பீறிடும் கோபத்தை ஒடுக்கி, அன்புடன் பேசினால் அத்தனை பிரச்சினைகளும் கழிந்தோடிவிடும்.

களங்கமில்லா அன்பைச் சொரிவதும் அதனை மேம்படுத்துவதும் குடும்பத்தைச் சொர்க்கமாக்கும். எந்தக் கால மாற்றங்களாலும் பிணைப்புகளின் இறுக்கம் விலக்கப்படக்கூடாது. 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 23
 

1947: முதல் தடவையாக ட்ரான்ஸிஸ்டர் செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டது.

1948: சர்வதேச இராணுவ விசாரணை மன்றத்தினால் யுத்தக் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 ஜப்பானியர்கள் டோக்கியோ நகரில் தூக்கிலிடப்பட்டனர்.

1957: அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் கிறேக் வரலாற்றின் மிக இளமையான ( 22 வருடங்கள், 194 நாட்கள்) டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரானார்.

1970: நியூயோர்க் நகரில் உலக வர்த்தக நிலையத்தின் வடக்குக் கோபுரம் 1368 அடி (417) மீற்றர் உயரத்தை அடைந்தது. அக்காலத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக அது விளங்கியது.

1972: மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால்  சுமார் 10,000 பேர்  பலியாகினர்.

1972: சிலியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களின் பின் மீட்கப்பட்டனர்.

1979: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சோவியத் யூனியன் துருப்புகள் கைப்பற்றின.

1990: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக ஸ்லோவேனியாவைச் சேர்ந்த 88 சதவீதமான மக்கள் வாக்களித்தனர்.

2002: ஈராக்கின் மிக் 25 விமானத்தின் மூலம் ஆளில்லா விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. உலகில் ஆளில்லா விமானமொன்று தாக்குதலொன்றில் சம்பந்தப்பட்டது அதுவே முதல் தடவை.

2003: சீனாவில் இயற்கை வாயு அகழ்வுக் களமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 234 பேர் பலி.

2005: அஸர்பைஜானில் ஏற்பட்ட விபத்தினால் 23 பேர் பலி.

2005: சூடானுக்கு எதிராக ஆபிரிக்காவின் சாட் நாடு யுத்தப் பிரகடனம் செய்தது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

117 ஆண்டுகளாக கிறிஸ்தவம் சுமக்கும் ராமநாதபுரம் கப்பல் தேவாலயம்! #Christmas

 

ராமநாதபுரம் சிங்காரத்தோப்பில் கப்பல் போன்ற வடிவில் 117 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது தேவாலயம் ஒன்று. ஆர்தர் ஹீபர் தாமஸ் என்பவர் இறைப்பணிக்காக இந்தியாவுக்குக் கப்பலில் வந்ததன் நினைவாக இங்குள்ள  புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருக்கிறது இந்த தேவாலயம்.

கப்பல் வடிவிலான தேவாலயம் திறப்பு விழாவின் போது.

 

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுருவிடம் பேசினோம்... “கிறித்துவ மதத்தை உலகெங்கும் பரப்ப, கத்தோலிக்க மற்றும் பிராட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த பல இறைப்பணி சபைகள் இருந்தன. போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், டேனியர் காலத்தில் இந்தியாவுக்கு அதிகளவில் வந்த இந்தச் சபையினர்  பல இடங்களில் தேவாலயங்களைக் கட்டியிருக்கிறார்கள். ராமநாதபுரம் சிங்காரத்தோப்பில் உள்ள தேவாலயம்,  எஸ்.பி.ஜி சபையினரால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.

இங்கிலாந்தில் வாம்ஸ்வொர்த் என்ற இடத்தில் கி.பி.1862 -ம் ஆண்டில் பிறந்த ஆர்தர் ஹீபர் தாமஸ், எஸ்.பி.ஜி. (S.P.G - Society for the Propagation of the Gospel) சபையின் கிறித்துவ மத ஊழியத்துக்காக, `எஸ்.எஸ்.மனோரா’ என்ற நீராவிக் கப்பலில் 2.5.1887 அன்று சென்னை வந்தார். சில வாரங்கள் சென்னையில் தங்கியிருந்த பின்னர் அவர் ராமநாதபுரத்துக்கு அனுப்பப்பட்டார். ராமநாதபுரம் சிங்காரத்தோப்பில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.

ஆர்தர் ஹீபர் தாமஸ் நினைவாக கட்டப்பட்ட தேவாலயம்

சென்னையில் ரெல்டன் என்பவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்த அவர், ராமநாதபுரத்திலும் தொடர்ந்து தமிழ் பயின்று வந்தார். அவர் தன் தம்பிக்கு எழுதிய கடிதங்களில், தான் கற்றுக்கொண்ட தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ராமநாதபுரம் பகுதிகளில் கி.பி.1888 பிப்ரவரியில் 110 முதல் 115 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் இருந்ததாகவும், புயல் காரணமாக காலரா பரவி பலர் இறந்ததாகவும், சாயல்குடி பகுதிகளில் அதிகளவு மான்களைப் பார்த்ததாகவும் பதிவுசெய்திருக்கிறார். அப்போதைய ராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி மற்றும் அவர் சகோதரர் தினகர் சேதுபதி ஆகியோருடன் நல்ல நட்புக்கொண்டிருந்தார். இவர் தனது 28-வது வயதில் 2.11.1890 அன்று மலேரியா காய்ச்சலால் ராமநாதபுரத்தில் காலமானார்.  உத்தரகோசமங்கை அருகே வெண்குளத்தில் இவர் பெயரில் ஒரு சர்ச் கட்டப்பட்டிருக்கிறது. `மிகச் சிறந்த மிஷனரி ஊழியர்’ என இவரை கால்டுவெல் புகழ்ந்திருக்கிறார்.

3 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து மரணமடைந்த ஆர்தர் ஹீபர் தாமஸ் நினைவாக 500 பவுண்டு செலவில் ராமநாதபுரத்தில் தேவாலயம் கட்ட இங்கிலாந்தில் இருந்த அவர் நண்பர்கள் முடிவுசெய்தனர். அவர் இந்தியாவுக்கு கப்பல் பயணம் மேற்கொண்டதன் 12-ம் ஆண்டில் இந்த தேவாலயம் உருவாக்கப்பட்டதால், அது ஒரு சிறிய கப்பல் வடிவில் கட்டப்பட்டிருக்கிறது.  இந்த ஆலயம் 28.03.1900 அன்று வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

கப்பல் வடிவம் கொண்ட தேவாலயம் தற்போதைய நிலை

130 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தையும் மழையையும் தாங்கும்விதத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதைக் கட்டுவதற்கு, கடல் சிப்பிகளில் இருந்து பெறப்பட்ட சுண்ணாம்பு மற்றும் இந்தப் பகுதியிலேயே தயாரிக்கப்பட்ட செங்கற்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. கல், தேக்குமரம், ஓடுகள் ஆகியவை  அதிக விலை கொடுத்து வெளியில் இருந்து வாங்கப்பட்டன. காரை அரைக்கும் செக்குகள் மூலம் சுண்ணாம்பு சாந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. தரையிலும் சுவரிலும் சுண்ணாம்புப் பூச்சு பூசி, பின்னர் சோப்புக்கற்களைக் கொண்டு  பளிங்குபோல் மெருகேற்றியிருக்கிறார்கள்.

இதன் வெளிப்புற குவிந்த கூரை அமைப்பும் சுண்ணாம்புப் பூச்சும் உள்ளே குளிர்ச்சியாக இருக்கச்செய்கிறது. மேற்கூரையில் உள்ள ஜன்னல்கள் உள்ளே போதுமான வெளிச்சம் கிடைக்கச் செய்கின்றன. பலிபீடத்தின் முன்பகுதியின் மேற்கூரை, உயரமாக செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. முழுவதும் இந்தியப் பொருள்களைக் கொண்டே இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. பலிபீடத்தில் உள்ள சிலுவை முதலியவை மதுரையில் செய்யப்பட்டுள்ளன. இதன் மணி லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதை போக்சன் என்ற ஆங்கிலேயர் மேற்பார்வையில் உள்ளூர் தொழிலாளர்கள் கட்டியிருக்கிறார்கள்.

 

நூறு ஆண்டுகள் கடந்தும் தாமஸ் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும் இந்தக் கப்பல் வடிவத்திலான தேவாலயம், பிராட்டஸ்டன்ட் கிறித்துவத்தின் பாரம்பர்யம் மற்றும் ஆங்கிலேயர் கால நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது'' என்றார் ராஜகுரு.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நட்ட நடுகாடு, சைலன்ட் மோடு... மர வீடு..! பரம்பிக்குளம் போக தில் இருக்கா? ஊர் சுத்தலாம் வாங்க...

 
 
 

பரம்பிக்குளம்

‘ப்ளீஸ்.. என்னை ஒரு நல்ல அட்வென்ச்சர் ட்ரிப் பண்ற மாதிரி ஓர் இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்க’ என்று நயன்தாரா போல் அப்பாவியாகக் கேட்டால்... ‘சொல்லுங்க, நான் என்ன பண்ணணும்’ என்று விஜய் சேதுபதிபோல் டபுள் மடங்கு அப்பாவியாய் சில டூரிஸ்ட் ஸ்பாட்டுகள் அசடு வழியும். ட்ரெக்கிங், அனிமல் சைட், நைட் கேம்ப் ஃபயர், காம்ப்ளிமென்டரி டின்னர், ஜில் அருவிக் குளியல், போட்டிங், கொஞ்சம் ஆன்மிகப் பழங்கள் என்றால் கோயில் குளங்கள்... இதைவிட டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு வேறென்ன தகுதிகள் வேண்டும் என்றுதான் இதுநாள் வரை இருந்தேன். ‘பரம்பிக்குளம்’ போகும் வரை...

ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக அறிந்திராதபோது, பெயரை வைத்து அர்த்தம் புரிந்து கொள்வோமே... அது மாதிரிதான் 'பரம்பிக்குளம்' என்றால்... ‘ஏதோ பரந்து விரிஞ்ச குளம்போல’ என்று நினைத்தேன். ஆனால், கேரள மாநிலம் டூரிஸத்துக்கு ‘பரம்பிக்குளம்’ எத்தனை முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்ட தருணம் அது. ‘‘கைடு விட்டு எங்கேயும் போகாண்டாம். அனிமல்ஸ் அதிகமாயிட்டுண்டு.. உங்களட சேஃப்டிக்கு ஞாந்தான் ரொஸ்பான்ஸிபிளிட்டியானு’’ என்று பரம்பிக்குளத்தில் ஒவ்வொரு அதிகாரியும் டூரிஸ்ட்டுகளைக் கவனித்த விதம்... ‘இப்பவே இப்படி காடா இருக்கே... அப்போ அந்தக் காலத்தில எப்படி இருந்திருக்கும்’ என்று பரம்பிக்குளக் காடுகள் என்னை டைம் டிராவல் பண்ண வைத்த விதம்... இரவு நான் கேட்ட ஏதோ ஒரு விலங்கின் அலறல் சத்தம்... எல்லாமே இப்போது வரை என் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை மென்று தின்று கொண்டிருக்கின்றன.

இனி ஓவர் டு பரம்பிக்குளம்...

பரம்பிக்குளம்

 

முதலில் ஒரு விஷயம் - கார்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் கைதூக்குங்கள்! உங்களுக்கான ஓர் அம்சமான பேக்கேஜ் இது. ஆர்கே நகர் சுயேட்சை வேட்பாளர்கள்போல் பரம்பிக்குளத்துக்கு வதவதவென பஸ்களை எதிர்பார்க்க முடியாது. எப்போதாவதுதான் பேருந்து வசதி உண்டு. அதுவும் சேத்துமடை எனும் இடத்தில் இருந்துதான். பொள்ளாச்சிதான் இதற்கு சென்டர் பாயின்ட். பொள்ளாச்சியில் நைட் ஸ்டே பண்ணிவிட்டு, காலையில் ஒரு நல்ல எஸ்யூவி-யில் கிளம்பினேன். அதற்கு முந்தைய நாளே பரம்பிக்குளத்துக்கு ஆன்லைனில் ரூம் புக் செய்து கொண்டுவிட்டேன். கொஞ்சம் காஸ்ட்லிதான். ஆனால், டபுள் வொர்த்!

தமிழ்நாடு ஒரு விஷயத்தில் பெருமைகொள்ள வேண்டும். அதாவது, டாப் ஸ்லிப். இந்த டாப் ஸ்லிப்பைத் தாண்டித்தான் பரம்பிக்குளத்துக்குப் போக வேண்டும். காட்டு விலங்குகளைத் தவிர வேறு எந்த அந்நியரும் பரம்பிக்குளத்துக்குள் அத்துமீறி கால் பதித்துவிட முடியாது. டாப் ஸ்லிப்தான் பரம்பிக்குளத்துக்கு இருக்கும் ஒரே வழி.

ஆழியார் அணைக்கட்டில் மாங்காய் கடித்துவிட்டு, ஃபில்டர் காபியை உறிஞ்சிவிட்டு சும்மா ஒரு ரவுண்ட் வந்தேன். அப்படியே யு-டர்ன் அடித்தால், ஆனைமலை. ஆழியாரில் இருந்து இன்னொரு ஷார்ட் ரூட் இருக்கிறது. ஆனால், நான் ஆனைமலையைத் தேர்ந்தெடுத்தேன். காரணம், பரம்பிக்குளத்தில் தின்பண்டங்கள் எதுவும் கிடைக்காது. அதனால், ஏர்போர்ட்டில் இருந்து ஆமைகளைக் கடத்தும் கும்பல் மாதிரி, சில ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை டிக்கிக்குள் பதுக்கிக் கொண்டேன்.

parambikulam

ஆனைமலை, சேத்துமடை, டாப் ஸ்லிப், பரம்பிக்குளம் - இதுதான் ரூட். டாப் ஸ்லிப்பில் தங்கிச் செல்பவர்களுக்கு ஒரு முக்கியமான டிப்ஸ். பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்துவிட்டுத்தான் சேத்துமடையைத் தாண்டவேண்டும். ஏற்கெனவே டாப் ஸ்லிப்பில் தங்கிய அனுபவம் உண்டு. ‘அம்புலி இல்லம்’ என்ற அறைக்கு வாடகை ரூ.4,000 என்றார்கள். பராமரிப்பு, கார் பார்க்கிங், என்ட்ரீ ஃபீஸ் என்று எக்ஸ்ட்ரா 420 ரூபாய் பல்லிளித்தது. ‘‘இதுக்கு மேல சல்லிக்காசு வாங்கமாட்டோம்’’ என்று ‘அபியும் நானும்’ லேடி ஹெட்மாஸ்டர்போல் வாக்குறுதி கொடுத்தார்கள்.

ஆனால், சேத்துமடை செக்போஸ்ட்டில், ‘‘இது ட்ரைபல் வெஃல்பேர் சார். Pay பண்ணியே ஆகணும்’’ என்று 150 ரூபாயும், கேமரா சார்ஜ் 150 ரூபாயும், மேலே ஏறியவுடன் ‘‘கார் பார்க்கிங் சார். இது எருமைப் பாறை ட்ரைபல் வெல்ஃபேருக்காக! இந்தா... பில் பாருங்க’’ என்று 200 ரூபாயும், ‘‘சாப்பாடு நீங்கதான் பார்த்துக்கணும்’’ என்று அதற்கு ஒரு 450 ரூபாயும் என்று கன்னாபின்னாவென ‘பே’ பண்ணச் சொல்லி ‘பெப்பே’ காட்டினார்கள். ‘இன்னும் எத்தனை பேர்தான்டா இருக்கீங்க’ என்று ‘சிவாஜி’ ரஜினியை வைத்து மீம்ஸ் போட்டால் எனக்கு செட் ஆகும். நல்லவேளையாக, அறையில் மின் விசிறி பயன்படுத்தியதற்கு... இரவில் அசமந்தமாய்த் தூங்கியதற்கு... பாத் ரூமில் பல் துலக்கியதற்கு என்று கட்டணங்கள் வசூலிக்கவில்லை என்பதற்காக தமிழ்நாடு டூரிஸத்துக்கு ஒரு ஷொட்டு. ‘இதுக்கு மேல என்ட்ட காசு இல்லடா... என்னை விடுங்கடா’ என்று ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணிபோல் கத்த வேண்டும்போல் இருந்தது.

என் டார்கெட் பரம்பிக்குளம்தான். இங்கே இன்னொரு முக்கியமான விஷயம் - காடுகளில் உள்ள காட்டேஜ்களில் செக்-இன் நேரம் - மதியம் 12 மணி முதல் மறுநாள் காலை 10 மணி. இதை நினைவில் கொள்க! சேத்துமடை செக்போஸ்ட்டில் வழக்கம்போல், ட்ரைபல் வெல்ஃபேர் ஃபீஸும், (150) என்ட்ரி ஃபீஸும் (120) கட்டிவிட்டு மேலேறினேன். இங்கே செக்போஸ்ட்டில் காலை 7 முதல் மாலை 4 மணி வரைதான் அனுமதி.

டாப் ஸ்லிப் வரை ரோடு கன்னாபின்னாவென இருந்தது. ஆனால், அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு இதுபோன்ற சாலைகள்தான் உத்தமம். ரோடு நன்றாக இருந்தால், பறக்கத் தோன்றும். இது விலங்குகளுக்கும் ஆபத்து; நமக்கும் நல்லதில்லை. ‘மச்சி, பரம்பிக்குளம் போறோம். ரூம் போடுறோம்; சரக்கடிச்சுட்டு ட்ரெக்கிங் போறோம்’ என்று நினைத்தீர்கள் என்றால், ஸாரி... உங்களுக்கு வேறு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. இங்கே கடுமையான செக்கிங் உண்டு. பிளாஸ்டிக்குகளுக்கே தடை விதிப்பவர்கள், ஆல்கஹாலை அலோவ் பண்ணுவார்களா என்ன?

parambikulam

டாப் ஸ்லிப்பில் ஒரு சின்ன போட்டோ ஷூட். ரொம்ப நாட்களாக நிறுத்தி வைத்திருந்த யானைச் சவாரியை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். சூர்யா, அஜித், விஜய் என்று வெரைட்டியான நடிகர்களின் பெயரில் யானைகள் சவாரி ஏற்றிக் கொண்டிருந்தன. யானைச் சவாரிக்கும் நீங்கள் முந்த வேண்டும். 10.30 மணி முதல் ஆரம்பிக்கிறது. ஒரு சவாரிக்கு 800 ரூபாய் கட்டணம். 2 பேருக்கும் அதே; 4 பேருக்கும் அதே! ‘‘யானைங்க முகாம்க்குக் கூட்டிட்டுப் போவீங்களா?’’ என்றபோது, ‘‘ஒரு ஆளுக்கு 120 ரூபாய். டூரிஸ்ட் அவ்வளவா இல்லை. 18 பேர் வேன்ல போலாம். மொத்த அமௌன்ட்டையும் நீங்களே குடுத்தீங்கன்னா (அதாவது, 18X120) வண்டியைக் கிளப்பலாம்’’ என்று ஆடி முடிந்தும் ஆஃபர் தந்தார் ஓர் உயர் அதிகாரி. சீஸன் இல்லாத நேரத்தில் இது ஒரு பெரிய பிரச்னை.

டாப் ஸ்லிப் தாண்டினால், ஒன்றரை கி.மீ தொலைவில் வருகிறது பரம்பிக்குளம் காட்டுப்பகுதிக்கான செக்போஸ்ட். கற்களால் செதுக்கப்பட்ட புலி, சிறுத்தை ஆர்ச்சே மிரட்டியது. தமிழ்நாட்டில் அவமானப்பட்ட எனக்கு, கேரள எல்லையில் மயிலிறகால் வருடுவதுபோல் பேசியது ரொம்பவும் ஆறுதலாக இருந்தது. ‘‘எண்ட பூமிக்கு வெல்கம். இந்தாங்க உங்க ரிஸிப்ட். ரைடு உண்டு. கோம்ப்ளிமென்டரி ஃபுட் மூணு வேளையும். ஒரு கைடு கூடவே வொருவாங்க!’’ என்று மலையாளத் தமிழில் பேசினார்.

parambikulamபரம்பிக்குளத்தில் டூர் அடிக்கும்போது, ரூம்களைத் தேர்ந்தெடுப்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. மொத்தம் 6 வகையான ரூம்கள் காட்டினார்கள். 3,000 ரூபாயில் இருந்து 9,500 வரை வாடகை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி. ஒரு பேக்கேஜில், காட்டுக்குள் இரவு சவாரி கூட்டிப் போவார்கள். நம் காரிலேயே கைடுடன் காட்டைச் சுற்றிப் பார்ப்பது இன்னொரு பேக்கேஜ். தூணக்கடவு என்றொரு அணைக்கட்டுக்குப் பக்கத்தில் உள்ள மர வீட்டு பேக்கேஜில், இரவுச் சவாரி - மாலைச் சவாரி, காட்டுவாசிகளின் நடனம், எக்ஸ்பெர்ட்டான கைடுடன் காட்டுக்குள் நடந்தே ட்ரெக்கிங் போவது என்று வெரைட்டி காட்டுகிறார்கள்.

எல்லாவற்றிலும் அல்ட்டிமேட்டான பேக்கேஜ் ஒன்றுண்டு. ‘வீட்டுக்குன்னு ஐலேண்ட் நெஸ்ட்’ எனும் ஆப்ஷன். பரந்து விரிந்த பரம்பிக்குளம் அணையில், படகிலேயே 2 மணி நேரம் பயணித்து, மொட்டைக் காட்டுக்குள் தங்குவது. 4 பேருக்கு 9,500 ரூபாய் கட்டணம் என்றார்கள். உணவு மட்டும் எக்ஸ்ட்ரா செலவு. அடர்ந்த காடு என்பதால், நம் பாதுகாப்புக்கு எப்போதுமே 5 கைடுகள் உடன் இருப்பார்களாம்.

ஏழைக்கேற்ற கடலை மிட்டாய்போல், 3,000 ரூபாய் பேக்கேஜைத் தேர்ந்தெடுத்திருந்தேன். கைடு ஒருவர் உடன் ஏறிக் கொண்டார். குடும்பமாகச் சென்றால், பெண் கைடுகள்தான் வருவார்களாம். அங்கங்கே முளைத்திருந்த சால்ட் தாடியுடன், எப்படிப்பட்ட வழக்கிலும் உள்ளே தள்ளலாம் என்கிற முகவெட்டு எனக்கு. வகையான ட்ரைபல் ஒருவர் கைடாய் மாட்டினார். தோடர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராம். மலையாளத்தில் ஏதோ ஒரு பேர் சொன்னார். ‘‘நிங்கட பேரு நன்னாயிட்டுண்டு’’ என்று நான் சீன் போட்டதை வைத்தே கண்டுபிடித்து விட்டார். ‘‘தமிழா?’’

‘கிங்காங்’, ‘அனகோண்டா’ போன்ற படங்களில், ‘‘அந்தத் தீவுக்கா? அங்க போனவங்க யாரும் திரும்ப வந்ததில்லையே’’ என்று பில்ட்-அப் கொடுப்பார்கள். அந்தளவு இல்லை; அதற்கு இணையாக ஒரு பில்ட்-அப் பரம்பிக்குளத்துக்குக் கொடுக்கலாம். பரம்பிக்குளம் வந்துவிட்டு விலங்குகள் பார்க்காமல் வந்தால், அவர்கள் போன பிறவியில் இதே காட்டில் விலங்குகளாய்ப் பிறந்திருக்கலாம். டாப் ஸ்லிப் வரை, குஸ்காவுக்குள் இருக்கும் பீஸ் போல் ரொம்ப அரிதாகத்தான் காட்டெருமையோ, மானோ, மயிலோ, குரங்கோ, அணிலோ பார்த்தேன். ஆனால், பரம்பிக்குளம் அப்படியல்ல! பொங்கலுக்குள் இருக்கும் மிளகுகள்போல அங்கங்கே யானைக் கூட்டங்கள், காட்டெருமைத் தம்பதிகள், காட்டு அணில்கள், கும்பல் கும்பலாக மான்கள், கீரிப்பிள்ளைகள், கருமந்திகள், காட்டுப் பன்றிகள்... வாவ்! ஒரு காட்டெருமையை செம க்ளோஸ்-அப்பில் நான் புகைப்படம் எடுத்ததைக் கண்டு, எனக்கு நானே பெருமைப்பட்டுக் கொண்டேன். ‘‘குட்டியோட இருந்தாதான் டேஞ்ஜர். குத்திக் கிழிச்சுப்புடும்’’ என்று டிப்ஸ் தந்தார் கைடு. குட்டியோடும் ஒரு காட்டெருமை அம்மாவைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

“சிறுத்தையெல்லாம் உண்டோ?’’ என்றேன். ‘‘புலி, சிறுத்தை, ஜாகுவார் எல்லாமே இவ்விட உண்டு. அதுக்கெல்லாம் லக் வேணும்’’ என்றார் கைடு. 5 மணி வாக்கில், பழங்குடி நடனம் பார்த்தேன். கூடச் சேர்ந்து ஆட ஆப்ஷனும் கொடுத்தார்கள். இருட்ட ஆரம்பித்து விட்டிருந்தது. பகலிலேயே மிரட்டியது பரம்பிக்குளம். இரவில் சொல்லவா வேணும்? செம த்ரில்லிங்காய் இருந்தது. பரம்பிக்குளத்தில் பழங்குடியினரைத் தவிர வேறு யாரும் கால் வைக்க முடியாது. ஊருக்கு... ஸாரி காட்டுக்கு நடுவில் ஒரே ஒரு கடை இருந்தது. பிஸ்கட், பழம் வாங்கிக் கொண்டேன்.

parambikulam

நம் ஊரில் நாய்கள்போல், பரம்பிக்குளத்தில் பன்றிகள் கும்பல் கும்பலாய்த் திரிகின்றன. ‘பன்னி வித்தியாசமா இருக்கே’ என்று செல்ஃபி எடுத்தேன். விசாரித்தால், காட்டுப் பன்றி என்றார்கள். ‘டர்’ அடித்தது. காட்டுப் பன்றிகள் செம ஆபத்து. 5 பன்றிகள் சேர்ந்தால், ஒரு சிறுத்தையைக்கூட விரட்டிவிடுமாம். ‘‘பன்னி கடிச்சிடுச்சுன்னா, ட்ரீட்மென்ட் இங்கே கிடைக்காது. கீழதான் போகணும்’’ என்று எச்சரித்தார் கைடு. அதனால், இரவில் அறையில் இருந்து 300 மீ பயணித்து - சாப்பிடும் இடத்துக்கு வந்தாலும், காரில்தான் வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இரவு சப்பாத்தியும் சிக்கனும் ‘கோம்ப்ளிமென்டரி’ டின்னர் கொடுத்தார்கள். நட்ட நடு காடு; செம சைலன்ட் மோடு; அதில் ஒரு மர வீடு. உள்ளே நான். அனிமல்ஸ் பற்றிய கனவாக வந்து பயமுறுத்தியது. விரட்ட விரட்ட தூக்கம் துரத்துவதுதான் எப்போதும் எனக்கு நேரும். இப்போது தூக்கம் துரத்தப்பட்டது. நள்ளிரவில் எங்கோ ஒரு புலி உறுமிய சத்தம் நன்றாகவே கேட்டது. நடுநடுவே முழித்து பால்கனியில் நின்று அடிக்கடி பார்த்தேன். எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. நான் கண்ணைத் திறந்திருக்கிறேனா... மூடியிருக்கிறேனா? எல்லாமே ஒரே மாதிரிதான் இருந்தது. இருட்டுக்கு மட்டும் அப்படி ஒரு ஸ்பெஷல். என் மர வீட்டுக்குப் பக்கத்தில் திடீரென மின்மினிப் பூச்சிகளாகத் தெரிந்தன. டார்ச் அடித்துப் பார்த்தால், யானைக் கூட்டம்! பயமாகவும், சுகமாகவும் இருந்தது.

 

parambikulam

காலை 7 மணிக்கு வந்து கதவைத் தட்டினார் கைடு. ட்ரெக்கிங் கிளம்பினோம். கும்பலாக மான்கள் மார்னிங் வாக்கிங் போய்க் கொண்டிருந்தன. ‘‘இதெல்லாம் கரடிங்களோட வேலை...’’ என்று ஏதோ சில பள்ளங்களைக் காட்டினார். கரடிகள் இங்கே உணவுப் பொருட்களைச் சேர்த்து வைக்குமாம். ‘‘செந்நாய் இந்தப் பக்கம் போயிருக்கு’’ என்று எதையோ மோப்பம் பிடித்துவிட்டுச் சொன்னார். இரவு கண்ட கனவைவிட பயங்கரமாக இருந்தது. ‘‘புலி, சிறுத்தை, யானைகிட்ட இருந்துகூடத் தப்பிச்சுடலாம். கரடிங்ககிட்டயும் செந்நாய்கிட்டேயும் சிக்கினா கைமாதான்!’’ என்று கிலியூட்டினார் கைடு. கரடியும் செந்நாயும் இரைக்காக நம்மைத் தாக்காது. கடுப்பைக் கிளப்பினால் மட்டும் மனிதர்களைத் தாக்குவது கரடியின் ஸ்டைல் என்றால், பார்த்தாலே போட்டுத் தள்ளும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்களின் ஜீன் செந்நாயினுடையது. சுற்றுலாவாசிகளின் குறும்பால் தாக்க வந்த கரடியிடம் கடிபட்டு, சிகிச்சை எடுத்து உயிர் பிழைத்து, மறுபடியும் வேலையில் சேர்ந்த கைடு ஒருவரைக் காட்டினார் என் கைடு.

ட்ரெக்கிங் முடிந்து போட்டிங். பரம்பிக்குளம் அணை. பெடல் படகிலோ, மோட்டார் படகிலோ போய் என்ஜாய் பண்ணும் விஷயமில்லை. மூங்கில் கழிகளாய் கட்டி, மேனுவலாக பெரிய படகு தயாரித்திருந்தார்கள். ‘‘இதுதான் சார் மூழ்காது. ஆபத்தில்லை’’ என்றார் படகோட்டி. அடுத்து அவர் சொன்ன சேதி, வடிவேலுபோல் படகிலேயே ‘உச்சா’ போய்விடுவேன் என்கிற நிலைக்கு ஆளாகிவிட்டேன். ‘‘குளத்துல லட்சக்கணக்குல முதலைங்க இருக்குது சார்.’’

parambikulam

 

என் மிரட்சியைப் பார்த்துப் புரிந்து கொண்டவராக, ‘‘மனுஷங்களை ஒண்ணும் பண்ணாது சார். அதுக்கு சாப்பிட நிறைய மீன் இருக்கு!’’ என்று தேற்றினார். சமயங்களில் முதலையே முதலையைச் சாப்பிட்டுப் பசியாறிக் கொள்ளுமாம். என் குரல் கேட்டோ என்னவோ, கரையில் ‘சன் பாத்’ எடுத்துக்கொண்டிருந்த முதலை ஒன்று சரேலெனத் தண்ணீருக்குள் பாய்ந்து, நம் படகின் கீழ் சென்றது. கும்மிருட்டில் குண்டூசியைத் தேடுவதுபோல் தண்ணீருக்குள் முதலையைத் தேடினேன். அடுத்த கரையில் யானையார் ஒருவர் குளியல் போட்டுக் கொண்டிருந்தது குட்டியாய்த் தெரிந்தது. ரொம்ப நாட்களாக அவர் இங்கேயே இருப்பதாகவும், கிட்டே போனால் அணையில் நீச்சல் அடித்துத் துரத்துவதாகவும் சொன்னார் படகோட்டி.

Parambikulam

பிரேக்ஃபாஸ்ட் முடித்தபோது, செக்-அவுட் டைமிங் வந்துவிட்டது. மறுபடியும் காரில் பயணம். பரம்பிக்குளத்தில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடம் - ‘கன்னிமரா தேக்கு’. மொத்தமாக 5 பேர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத அளவு தடிமன் கொண்டது. 460 வருடம் பழைமையானது என்று 40 வருடத்துக்கு முன் அறிவிப்புப் பலகை வைத்திருந்தார்கள். அப்படியென்றால், 500 வருட பழசு. கன்னி கழியாத மரம், ஒரு காலத்தில் சீதைபோன்று கற்புக்கரசியாக இருந்த கன்னி எனும் பெண்ணைக் கட்டி வைத்த மரம், தேவதை மரம் என்று ஆளுக்கொரு கதை சொன்னார்கள். ஃபேன்டஸி படம் என்று விளம்பரப்படுத்தி, ரசிகர்களைப் படுத்தி எடுக்கும் சில டைரக்டர்கள், இதைக்கூடப் படமாகப் பண்ணலாம்.

5 கி.மீ போவதற்கு 1 மணி நேரம் ஆனது. அப்படிப்பட்ட கரடுமுரடு காடு. நான் எஸ்யூவியைத் தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம். நீருக்குள்ளே மூழ்கும்போது காதடைத்து அமைதியின் சத்தம் கேட்குமே... அதுபோல்தான் காட்டுக்குள்ளே அமைதி ‘குய்’யென சத்தம் போடும். கன்னிமரா தேக்கு மரத்துக்குப் போகும் வழி அப்படியொரு அமைதி. ‘‘இவ்விட ஒரு புலியோட குகையுண்டு.... உள்ளே விலங்குகளோட எலும்புகளாயிட்டு காணலாம்...’’ என்று புலி கதை சொல்லி கிலியூட்டினார் கைடு. பரம்பிக்குளம் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 40 புலிகள் இப்போது 25-ஆகக் குறைந்திருப்பதாகச் சொன்னார் கைடு. இங்கே காரை விட்டு இறங்கத் தடை; கைடு துணையின்றி நாமாகச் செல்லத் தடை. இப்போதெல்லாம் கோபக்கார யானைகள் கன்னிமராவைச் சுற்றித் திரிவதாகவும் சொன்னார் அவர். இரவு 7.30 மணிக்கு மேல் புலி நடமாடுவதை இங்கே பார்க்கலாமாம். அதற்காகத்தான் ஒரு பேக்கேஜுக்கு இரவு சவாரி ஆப்ஷன் வைத்திருக்கிறது கேரள அரசு. கன்னிமரா தேக்கு, சாதாரண மரம் இல்லை இது. 1994-95-ல் இந்திய அரசால் ‘மஹாவிருக்ஷா புரஸ்கார்’ விருதெல்லாம் வாங்கியிருக்கிறது. கன்னிமரா தேக்கில் செல்ஃபி எடுக்கும்போது, கை நடுங்கியது.

parambikulam

மறுபடியும் 5 கி.மீ-யை ஒரு மணி நேரத்தில் பயணித்தேன். அடுத்து தூணக்கடவு டேம் வந்தோம். இதுவும் கொஞ்சம் டெரரான காட்டேஜ். 6.30 மணிக்கு மேல் ‘ஜங்கிள் புக்’ படத்தில் வருவதுபோல் மொத்தமாக எல்லா விலங்குகளும் இங்கே தண்ணீர் அருந்த வருமாம். காட்டேஜ் பால்கனியில் ஹாயாக கட்டஞ்சாயா உறிஞ்சியபடி, விலங்குகள் தண்ணீர் அருந்துவதைப் பார்க்கலாம் எனும்படி இந்த மரவீட்டை வடிவமைத்திருக்கிறார்கள் இன்ஜீனியர்கள்.

Parambikulam

திடீரென கேரளாவுக்கு நடுவே தமிழ்நாடு வந்தது. இங்குள்ள ‘சர்க்கார்பதி டனல்’ தடை செய்யப்பட்ட ஏரியா என்றார்கள். டனல் வழியைத் தாண்டி ஓர் இடத்தில் ‘குருதிப்புனல்’ கமல்போல் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு சாம்பார் மான் என்னை மிரட்சியாகப் பார்த்தது. ‘‘புலி, சிறுத்தை கடிச்சிருக்கலாம். இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல செத்துடும்’’ என்றார் கைடு. பாவமாய் இருந்தது.

parambikulam

லேசாக மழை தூறியது. இப்போது, தேசியப் பறவைகளும் ஜோசியப் பறவைகளும் ஹாய் சொல்லின. மழை வந்தால் இறகுகள் கனமாகி, பறக்க முடியாமல் கிளைகளில் டேரா போட்டு விடுமாம் மயில்கள். பரம்பிக்குளம் ரிசப்ஷனில், குண்டு குண்டாக இருந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் செக்போஸ்ட் வந்தேன். கிளம்பிச் செல்ல மனசே இல்லை. பேசாமல், திரும்பவும் யு-டர்ன் அடிக்கலாமா என்றுகூட யோசித்துவிட்டேன். நடக்கப் பழகும்போது குழந்தைகள், இறக்கிவிடச் சொல்லி அடம்பிடிக்கும். நடக்கப் பழகியபிறகு தூக்கச் சொல்லி அடம்பிடிக்கும். நானும் அந்த மனநிலையில்தான் இருந்தேன்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

டைட்டானிக் 20 ஆண்டுகள்: மூழ்காத சில நினைவுகள்

 

 
22chrcjTITANIC%2020%20YEARS%201

 

டிசம்பர் மாதம் 19-ம் தேதியுடன் டைட்டானிக் படம் வெளிவந்து இருபது வருடங்கள் நிறைவுபெற்றுவிட்டன. அந்தத் துரதிர்ஷ்டக் கப்பலின் பயணத்தின் மூலம் நம்மைச் சீட்டு நுனியில் மூன்று மணி நேரம் அமரவைப்பது சவாலான காரியம். ஆனால், அதனை நிகழ்த்திக் காட்டியது அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் திரைமொழி ஆளுமைக்குச் சான்று.உண்மைக் கதாபாத்திரங்களுக்கிடையே தன் கற்பனைக் கதாபாத்திரங்களை உலவவிட்டதன் மூலம் இதனை அவர் சாத்தியப்படுத்தியிருப்பார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சில பாத்திரங்களைக் கீழே பார்ப்போம்.

 

மரணத்தைத் தழுவும் முதுமை

பனிப் பாறையில் மோதிய கப்பலைக் கடல் மெல்ல விழுங்க ஆரம்பிக்கும். அந்தப் பரபரப்பான சூழலில் ஒரு முதிய தம்பதி தங்கள் அறையில் அமைதியாகப் படுக்கையில் படுத்திருப்பர். அந்த மூதாட்டியின் விரல்கள் அவர் கணவனின் பத்து விரல்களை இறுகப் பற்றியிருக்கும். அந்த அறைக்குள் கடல் நீர் புகும். அந்த முதியவர் சிரமத்துடன் தலையைச் சற்றுத் திருப்பி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிடுவார். அவர்கள் வாழ்ந்த வாழ்வின் மொத்த திருப்தியையும் அந்த மூதாட்டியின் விழிகளை மூடிய இமைகள் வெளிப்படுத்தும். சில வினாடிகளில் அந்த அறையைக் கடல் தனதாக்கிக்கொள்ளும். சில நொடிகளே படத்தில் வரும் இந்தக் காட்சியை நம்மால் அவ்வளவு எளிதில் கடந்து சென்றிருக்க முடியாது. உண்மையில் நிகழ்ந்தது என்னவென்றால், அவர்களுக்கு உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தது. இருப்பினும், அவர்கள் மனிதாபிமானத்துடன் பிறரைக் காப்பாற்றும் முயற்சியில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றனர். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தன் படைப்புச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவர்கள் காதலுடன் தழுவியவண்ணம் மரணிப்பதாகக் காட்சிப்படுத்தியிருப்பார். விபத்து பரிசளிக்கும் மரணத்தை ஏற்கும் இஸாடர் ஸ்டராஸ், இடா ஸ்டராஸ் முதுமைத் தம்பதி கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை.

 

கப்பல் தலைவன்

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவருக்கு எல்லா வித வாய்ப்புகளும் இருந்தன. இருப்பினும், அந்த விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்றுத் தன்னை மாய்த்து, தன் ஆளுமையைக் கம்பீரமாக நிரூபிப்பார். கப்பல் தலைவன் எட்வர்ட் ஜான் ஸ்மித்தாக நடித்த நடிகர் பெர்நார்ட் ஹில் தோற்றத்திலும் ஜான் ஸ்மித்தை ஒத்திருப்பார். பாத்திரத் தேர்வுக்கான கேமரூனின் மெனக்கெடலுக்கு இது ஓர் உதாரணம். ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்பது சற்று சர்ச்சைக்குரியதாகத்தான் இன்னும் உள்ளது. படமாக்கப்பட்டது உண்மை என்று ஒரே ஒரு நபர் சொல்கிறார். உயிர் பிழைத்த சில பயணிகள் பாதுகாப்பு உடையணிந்து அவர் நீந்தியதைப் பார்த்தாகச் சொல்கிறார்கள். ஒரு சிறுவன் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்தாகச் சொல்கிறான். ஜேம்ஸ் கேமரூன் படத்துக்கு எது வலுச்சேர்க்குமோ அதை எடுத்துக்கொண்டார்.

 

டைட்டானிக் வடிவமைப்பாளர்

தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜேக்கைத் தேடி ரோஸும் ஓடிக்கொண்டிருப்பார். சீக்கிரமாகச் சென்று உயிர் காக்கும் படகில் ஏறிக்கொள்ளுமாறு அவளுக்கு அறிவுறுத்தி சிலுவையின் முன் நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அந்த கேப்டன் கதாபாத்திரம் ஆண்ட்ரூஸ். நேர்ந்த விபத்தின் தாக்கத்தை ஆய்வு செய்தபின் வடிவமைப்பில் இருக்கும் குறைபாடு காரணமாக இந்தக் கப்பல் மூழ்கியே தீரும் என்று அவர் சொல்வார். அது உண்மையில் நிகழ்ந்த சம்பவம். படத்தில் இவரது பாத்திரம் மட்டும்தான் கற்பனையிலிருந்து விலகிநின்று உண்மைக்கும் மிக அருகில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

 

டைட்டானிக் உரிமையாளர்

தனது கப்பலை மிகப் பெருமிதத்துடன் சிலாகித்துப் படம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் கப்பல் உரிமையாளர் புரூஸ் இசஸ்மே. விபத்து நேர்ந்தவுடன் இவர் படகில் உயிர் பிழைத்துக்கொள்வார். இவையனைத்தும் உண்மையான ஒன்றுதான். “இன்று அதிகாலை பனிப்பாறையின் மீது மோதி மிகுந்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய டைட்டானிக் கப்பல் மூழ்கிவிட்டது என்பதை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவை பின்னர்” என்று நியூயார்க் நகரில் இருந்த தனது ஒயிட் ஸ்டார் அலுவலகத்துக்குத் தந்தி அனுப்பியிருப்பார். உயிர் பிழைத்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியில் உழன்று 1937-ம் வருடம் 74-ம் வயதில் மறைந்தார்.

 

தயாரிப்பாளர் தந்த நஷ்ட ஈடு

நிகழப் போகும் ஆபத்தைப் படத்தில் முதலில் வெளிப்படுத்தும் கண்கள் வில்லியம் மெஸ்மாஸ்டர் என்ற கதாபாத்திரத்தினுடையவை. கப்பலின் கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்து பனிப்பாறையை முதலில் இவர்தான் பார்ப்பார். ‘பெண்கள், குழந்தைகள், முதல் வகுப்புப் பயணிகள் மட்டும் படகில் ஏறுங்கள்’ என்று கறாராகக் குரல் கொடுப்பார். பின் பயணிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு சிலரை ஏறிக்கொள்ள அனுமதிப்பார். இறுதியில் திமிறும் கூட்டத்தைச் சமாளிக்க வழியின்றி ஒரு நபரைச் சுட்டுக் கொல்வார். அதன் பின் அடுத்த நொடியே தன்னைத்தானே சுட்டுக்கொண்டு கடலில் விழுவார். அவர் தற்கொலை செய்து கொண்டது உண்மைதான். ஆனால், அவர் லஞ்சம் பெற்றதாகக் காண்பித்தது கற்பனை. அதற்காக அவர் குடும்பத்தாருக்குத் தயாரிப்பாளர் நஷ்ட ஈடு வழங்கியது பின்னர் நடந்தது.

 

அந்த இசைக் குழு

கப்பல் முழுவதும் மூழ்கும்வரை ஒரு இசைக் குழு மனதை உருக்கும் வயலின் இசையை வாசித்துக்கொண்டிருக்கும். இது உண்மையில் நிகழ்ந்த நிகழ்வு. அன்று அவர்கள் இறுதியாகப் பாடிய பாடல் ‘கடவுளுக்கு அருகில், நாங்கள்’ என்பதாகும். அந்த வாத்தியக் குழுவின் தலைவனின் உண்மைப் பெயர் வாலஸ் ஹென்றி ஹார்ட்லி. தன் வருங்கால மனைவியைப் போஸ்டனில் விட்டு விட்டு இவர் தனியாகப் பயணம் மேற்கொண்டிருப்பார். அந்த இசைக் குழுவைச் சேர்ந்த ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.

 

நம் நெஞ்சில் நிலைத்த ஜோடி

ஜேக்கும் ரோஸும் கேமரூனின் மாஸ்டர் ஸ்ட்ரோக். நாயகன் நாயகியாக உலாவரும் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனையானவை. எந்த உறுத்தலுமின்றி உண்மைப் பாத்திரங்களுக்கிடையே உலாவரும் இந்தக் கற்பனைப் பாத்திரங்கள் மூலமாகத்தான் அவர் படத்தை முன்னெடுத்துச் செல்வார். ஜேக் என்ற பெயரில் கப்பலில் நிலக்கரி உடைக்கும் ஒரு தொழிலாளியும் இருந்தார். படம் பார்த்த பலர் அந்தத் தொழிலாளியின் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதன் பிறகுதான் படக் குழு இதுகுறித்து விளக்கம் வெளியிட்டது.

 

மூழ்காத மனிதம்

ஒரு கோர விபத்தின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்படுவதோ சோகத்தில் முடியும் காதலோ நமக்குப் புதிதல்ல. ஆனால், இந்தப் படம் பார்த்ததும் பேசியதும் உணர்த்தியதும் மனிதம் என்ற ஒன்றை மட்டும்தான். இதனால்தான் ‘டைட்டானிக்’ இனம், மொழி கடந்து உலகப் பார்வையாளர்களின் இதயங்களில் இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு mhushain@gmail.com

‘டைட்டானிக்’ படத்தின் பிரதான கதாபாத்திரங்களான ஜேக் - ரோஸைக் கற்பனையாக உருவாக்கினார் இயக்குநர் கேமரூன்.

மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை டைட்டானிக் மூழ்கிய உண்மைச் சம்பவத்துக்கு நெருக்கமானவை.

கப்பலின் கண்காணிப்புக் கோபுரத்தில் பணியாற்றும் வில்லியம் மெஸ்மாஸ்டர் கதாபாத்திரம் லஞ்சம் வாங்குவதுபோல் சித்தரித்த காரணத்துக்காக அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்கினார் கேமரூன்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

குப்பைக்கழிவுக்களாக காட்சியளிக்கும் டுப்ரோவ்னிக் துறைமுக நகரம்

மத்தியதரைக் கடலில் உள்ள மிகவும் பிரபலமான வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா தலங்களில் ஒன்று டுப்ருனோவிக் துறைமுக நகரம். க்ரோஷியாவில் உள்ள பிரம்மாண்டமான சுவர் நகரமாக அறியப்படும் அங்கு, வீசும் பலமான காற்றால் அந்தப் பகுதி, குப்பைக்கூளங்களாக காட்சியளிக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள், கால்பந்துகள், மரத்துண்டுகள் உட்பட பெரும்பாலான குப்பைக்கழிவுகள் அல்பேனியா மற்றும் மாண்டினீக்ரோவிலிருந்து வந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.

  • தொடங்கியவர்

பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டாக்டர் ஆகிறார்…

Priyanka-Chopra-.jpeg?resize=720%2C480

பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பரேலி பல்கலைக்கழகம் கௌரவ கலா பட்டம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.

2000-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றிபெற்ற பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். குவான்ட்டிக்கோ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த பிரியங்கா சோப்ரா யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராகவும் கடமையாற்றி வருகிறார்.

அவரைப் பாராட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் நாளை கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்க உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உத்தரப்பிரதேசம் மாநில நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

Priyanka-Chopra1.jpg?resize=600%2C350

 

Ähnliches Foto

Ähnliches Foto

 

http://globaltamilnews.net

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வண்ணம், வாழ்க்கை, கொண்டாட்டம் - புகைப்படங்களில் இந்தியா

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற சில நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சில நிகழ்வுகள் இதோ.

Hyderabad

ஐதராபாத்தில் டிசம்பர் 19 அன்று நடைபெற்ற உலக தெலுங்கு மாநாட்டின் இறுதி நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்ட நடனம்.

MK Stalin

டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து, டிசம்பர் 21 அன்று ஆ.ராசா மற்றும் பிறர் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

Gujarat 

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்தினம், ராஜ்கோட் நகரில் தயாராகும் காவல் படையினர்.

 

 

ரோபோ

ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் உணவகத்தில் உணவைப் பரிமாற எடுத்துச் செல்லும் ஒரு ரோபோ.

Thackeray பால் தாக்கரே என்று அறியப்படும்

பால் தாக்கரே என்று அறியப்படும் மறைந்த, சிவ சேனா கட்சியின் தலைவர் பால் கேசவ் தாக்கரேயின் வாழ்க்கை வரலாறு இந்தி மற்றும் மராத்தி ஆகிய இரு மொழிகளில் 'தாக்கரே' எனும் பெயரில் படமாகிறது. நவாசுதீன் சித்திக்கி, தாக்கரேவாக நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டத்தை டிசம்பர் 21 அன்று அமிதாப் பச்சன் வெளியிட்டார்.

 

 

பஞ்சாபில் சீக்கிய மத சடங்கு ஒன்றின் போது 'நக கீர்த்தன்' என்ற சமய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

பஞ்சாபில் சீக்கிய மத சடங்கு ஒன்றின் போது 'நக கீர்த்தன்' என்ற சமய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

 

Mumbai

'சல் ரங் தே' (வாருங்கள்.. வர்ணம் பூசலாம்) எனும் ஓவியக் கலைஞர்கள் குழு, நகர்புறச் சேரிகள் பற்றிய எண்ணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மூன்று நாட்களில் 120 சேரி சுவர்களில் வர்ணம் பூச அக்குழு முடிவு செய்தது. டிசம்பர் 21 அன்று மும்பையில் உள்ள அசால்பா பகுதியில் வர்ணம் பூசுபவர்களை கடந்து செல்கிறார் ஒருவர்.

 

Gujarat 

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றத்தைக் கொண்டாடும் சூரத் நகரைச் சேர்ந்த அக்கட்சியின் தொண்டர்கள்.

 

http://www.bbc.com/tamil/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொரியரில் கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள்! #AnimalTrafficking - அத்தியாயம் 4

 
 

தினம் தினம் செய்திகளில் பார்த்தும் படித்தும் சாதாரணமாக கடந்து போகிற “நட்சத்திர ஆமை கடத்தல்” பற்றிய செய்திகள் நமக்குப் பத்தோடு பதினொன்று அவ்வளவே. அதற்கு பின்னால் இருக்கிற அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன்கள் பற்றிய கதைகள் எல்லாம் இதுவரை யாரும் சொல்லாதது... இந்த வார அத்தியாயம் “ஆப்பரேஷன் ஆமை” 

டிசம்பர் 11, 2017 - சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து பாங்காங்கிற்கு புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராக இருந்தனர். ஷாஃபுர் அலி, முகமது தமீம் அன்சாரி ஆகிய இருவரும் பாங்காக் புறப்படவிருந்த விமானத்தில் ஏறச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களது உடைமைகளைச் சோதனை செய்தனர். பாங்காக்கில் இருக்கிற உறவினர்களுக்கு சாக்லேட் கொண்டு செல்வதாக இருவரும் கூறினர். சாக்லேட் பையை ஸ்கேன் செய்ததில் அதில் உயிருடன் நட்சத்திர ஆமைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். உயிருடனிருந்த 210 நட்சத்திர ஆமைகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளின் சந்தை மதிப்பு ரூபாய் 10 லட்சம் என்று கூறப்படுகிறது. மீட்கப்பட்ட நட்சத்திர ஆமைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

 

ஆமை

2016-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஹாங்காங்கிற்கு சுற்றுலாப் பயணியாகச் சென்று திரும்பினார். அவரிடம் விசாரித்த போது, சுங்கத் தீர்வை செலுத்துவதற்கான எந்தப் பொருளும் தன்னிடம் இல்லை எனக் கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். ஆனால், அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சதீஷ்குமாரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மற்றொரு பையைத் திறந்து சோதனை செய்தனர் அதில், சிவப்புக் காது அலங்காரக் கடல் ஆமைகள் ஏராளமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் மொத்தம் 3,019 ஆமைகள் இருந்தன. இதன் மதிப்பு 6 இலட்சத்து 3 ஆயிரத்து 800 ரூபாய். அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, அவர் பலமுறை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பாங்காக் உள்படப் பல நாடுகளுக்குச் சுற்றுலாப் பயணியாகச் சென்று வந்துள்ளதாகத் தெரியவந்தது. இதில் பாங்காக் விலங்குகள் கடத்தலின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நள்ளிரவு 12.30 மணிக்குச் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஹபீஸ் என்பவர், சுற்றுலாப் பயணியாக மலேசியாவுக்குச் சென்று திரும்பினார். அவரை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதனால், அவர் வைத்திருந்த 2 பைகளைச் சோதனையிட்டனர். அதற்குள் சிவப்பு காது ஆமை 400  உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது மிகவும் சிறிய அளவில் இருக்கும்; அலங்கார மீன் தொட்டிகளில் போட்டு வைத்திருப்பார்கள். பெரிய நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களில் வளர்க்கப்படும். இந்த ஆமை இந்தியாவில் ₹1200க்கு விற்பனை செய்யப்படும்.

இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கக் கூடிய நட்சத்திர ஆமைகள் வறண்ட நிலங்களிலும் புதர்க்காடுகளிலும் வசிக்கக் கூடிய தாவர உண்ணிகள். சாதுவான இவ்வகை ஆமைகளை எதற்குக் கடத்துகிறார்கள்? உணவு, மருந்து தயாரிப்புக்காகக் கடத்தப்படும் இந்த ஆமைகள், வீட்டில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் இவை நல்ல விலை போவதால், இந்தியாவில் இவற்றின் கடத்தல் வணிகம் அதிகரித்துள்ளது. சென்னையின் ஆவடிப் பகுதியில் கடத்தலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 2,500 நட்சத்திர ஆமைகள் சமீபத்தில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. விசாரணையில் அவை மருத்துவ தேவைக்காக சீனாவிற்குக் கடத்தவிருந்தது தெரியவந்தது. ஆண்மை விருத்தி, அதிர்ஷ்டம் தொடர்பான நம்பிக்கைகளால் நட்சத்திர ஆமைகள் கடத்தல் சந்தையில் தவிர்க்க முடியாத உயிரினமாக இருந்து வருகிறது.

கடத்தல்

சமீப காலமாக, உலகின் சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், அதிகரித்து வரும் தீய பழக்கவழக்கங்களாலும் மனிதர்களின் இனவிருத்தி மற்றும் ஆண்மைத் தன்மை குறைந்துகொண்டே வருகிறது. அயல்நாடுகளில் இதை ஒருபெரிய குறையாகவே எடுத்துக்கொண்டு அதற்குண்டான தீர்வை பல ஆண்டுகளாகத் தேடி வருகின்றனர். மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம் மீண்டும் இழந்த திறனை பெற முடியும் என நம்பி பல்வேறு மருந்து மாத்திரைகளை முயற்சி செய்தனர். ஆனால் பலனில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட கடத்தல்காரர்கள் விலங்குகளின் உடலில் அந்தச் சக்தி இருக்கிறது, இந்தச் சக்தி இருக்கிறது எனக் கிளப்பி விட ஆரம்பித்தார்கள்.   மலேசியா, சிங்கப்பூர் சீனா, தாய்லாந்து  போன்ற வெளிநாடுகளில் ஒரு கூட்டம் நட்சத்திர ஆமைகளின் ஓட்டிலிருந்து ஆண்மைக்குறைவைப் போக்கும் மருந்தைத் தயாரிக்கிறது.

இந்திய நட்சத்திர ஆமைகளின் ஓடுகளுக்கு மருத்துவக் குணம் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். சீனர்கள்தாம் அதன் ஓட்டினை முதன்முதலாகப் பஸ்பம் ஆக்கி உணவில் கலந்து பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள நட்சத்திர ஆமைகள்தாம் இன்றைய அளவில் உலகிலேயே பிரசித்தி பெற்றவை. அதன்பலனாக இன்றைய அளவில் நட்சத்திர ஆமையின் வர்த்தகத்தை உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் கடத்தல்காரர்கள்.

கடந்த 1990 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில், 2,074 ஆமை கடத்தல்கள் பிடிபட்டுள்ளன என்றும்,  இந்தக் கடத்தல் எண்ணிக்கை 2000 முதல் 2013 காலகட்டத்தில் 20,500 ஆக அதிகரித்துள்ளது என்றும், ஆமை வகைகளில் ஆண்டுக்கு 10,000 முதல் 15,000  ஆமைகள்  இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

நட்சத்திர ஆமைகள் எங்கிருந்து எப்படிக் கடத்தப்படுகின்றன என்கிற ஆய்வில் கிடைத்த தகவல்கள் எல்லாம் மாஸ்டர் ஆப் கிட்டினாப்பிங் தகவல்கள். ஆமைகள் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள், காடுகளில் இருக்கிற மக்களிடம் ஆமைகள் பிடித்துக் கொடுக்க சொல்லி விடுகிறார்கள். மக்களும் குறிப்பிட்ட மாதங்களில்  கிடைக்கிற ஆமைகளை வீடுகளில் குளுமையான இடத்தில் சேகரித்து வைக்கிறார்கள். ஆரோக்கியமான ஒரு ஆமை உணவில்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்கள் கழித்து காடுகளில் மக்களைச் சந்திக்கிற கடத்தல்காரர்கள் அந்த மக்களிடம் 50 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிவருகிறார்கள். 

நட்சத்திர

கடத்தல்காரர்களிடம் 2000 முதல் 3000 ஆமைகள் சேர்ந்ததும் அவற்றைக் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து தொலைதூர இடங்களுக்குக் கடத்தி விடுகிறார்கள். குளிர்சாதன வசதியில் வைத்துக் கடத்தப்படும் ஆமைகளால் அசைய முடியாது என்பது கடத்தலுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் கடத்தலுக்கு கொரியர் சேவையை முக்கியப் போக்குவரத்தாகப் பயன்படுத்துகிறார்கள். ஆமைகளை வாங்குகிறவர்கள் யாரும் விற்பவரை  நேரடியாகச் சந்திப்பதில்லை. கொரியர் கடத்தலில் சம்பந்தப்பட்ட யாரும் நேரில் வர வேண்டிய அவசியமுமில்லை. இந்தக் கடத்தலில் முழுக்க முழுக்க கொரியர் தொடர்பான ஆட்களே உதவியாக இருப்பதால் கடத்தலுக்கான முக்கிய புள்ளிகள் வெளியே தெரிவதில்லை. கொரியர் மூலம் பெறப்படுகின்ற ஆமைகள் சூட்கேஸ் பெட்டிகளின் மூலம் விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது. விமான நிலைய அதிகாரிகளின் கவனிப்பில் சில பெட்டிகள் பத்திரமாகப் பயணித்துவிடுகின்றன. சில மட்டுமே சிக்கிக் கொள்கின்றன.

சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூர், மலேசியா வழி செல்லும் விமான வழித்தடத்திலும்  திருச்சியிலிருந்து இலங்கை வழியாகச் செல்லும் வழித்தடத்திலும் கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள் அதிகம் பறிமுதல் செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் பகுதியிலிருந்து படகுகளில் இலங்கைக்கு ஆமைகள் கடத்துவதும் சமீபத்தில் அதிகரித்திருக்கிறது. தரை, வான், கடல் வழி  எனக் கடத்தப்படும் ஆமைகள் பெரும்பாலும் உயிருடன் இருப்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது. உலக விலங்குகள் கடத்தல் சந்தையில் விற்பனையாகிற 90 சதவிகித நட்சத்திர ஆமைகள் இந்திய ஆமைகள். ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் நட்சத்திர ஆமைகள் உலகின் முக்கியமான பல விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்திய வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி 1990-ம் ஆண்டு முதல் 1999 வரை சர்வதேச நாடுகளில் 8000 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, சீனா, பாங்காங், மலேசியா கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டவை. 

tortoise

 

இந்தியாவில் நட்சத்திர ஆமை பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களின் பட்டியலில் நான்காவது பட்டியலில் இருக்கிறது. அதனால் அதற்கான பாதுகாப்பும் இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது. நட்சத்திர ஆமையை வைத்திருந்தோ கடத்தலில் ஈடுபட்டுக் கண்டுபிடித்தாலோ 25,000 ரூபாய் அபராதமும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்கும். ஆனால் கடத்தல்காரர்கள் அதிகாரிகளிடம் சிக்கினால் லட்சங்களில் லஞ்சம் கொடுத்தே தப்பித்து விடுகிறார்கள். விலங்குகள் தொடர்பான எல்லாக் கடத்தலுக்கும் அதிகாரிகள் துணை இருக்கிறார்கள்  என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர். மாதத்திற்கு நான்கு ஆமை கடத்தல்கள் சென்னை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்படுகின்றன. இங்கிருந்துதான் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது என்பது தெளிவாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. எப்போது இது குறைய ஆரம்பிக்கும் ? 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உருவத்தை கேலி செய்பவர்களுக்கு ஒரு நடிகையின் பதிலடி

பெண்களின் உடல் தோற்றத்தை வைத்து நகைச்சுவை செய்வது வருத்தத்தை அளிக்கிறது என்று கூறும் இந்தத் திரைப்பட நடிகை, அதற்கு எதிராக எடுத்துள்ள முயற்சி என்ன தெரியுமா?

  • தொடங்கியவர்
‘நீங்களே உறுதியான நல்ல மனிதன்’
 

image_25dd5cf9cf.jpgநீங்கள் ஒரு நல்ல செயலை, உங்களுக்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் போது, அதனை மட்டுமே கருத்தில் கொண்டு, பிறசிந்தனைகளை உள்நுழைய விடாமல் பாதுகாத்தால், நீங்களே உறுதியான நல்ல மனிதன்.

சிந்தனைகளைச் சிதறவிட்டால், எக்காலத்திலும் கருமங்களைச் செப்பமாகச் செய்யமுடியாது. வைத்தியர் கத்தியை உடலினுள் வைத்துத் தைத்துவிடுவதும், அவரைச் சுற்றியுள்ள உதவியாளர்களும் கவனம் சிதறித் தவறிழைப்பதும் கொடுமையோ கொடுமை.

எனவே, கூட்டுக்கடமையில் ஈடுபடும்போது, தனித்து ஒருவரை மட்டும் குற்றம் சுமத்துவதும் நல்லது அல்ல; அமைச்சரவையில் அமைச்சர்களின் கூட்டுப்பொறுப்பை, எந்த அமைச்சர்கள் கௌரவப்படுத்துகிறார்கள் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

அவரவர்கள் தங்களது கடமைகளை ஆத்மார்த்த ரீதியில் செம்மையாகச் செய்தால் போதும்.

கடமை செய்தலே பேரானந்தம்; இறைவன் தருவான் பெரும் பேறு.

  • தொடங்கியவர்

மீண்டும் கண்டறியப்பட்ட ஜாவா பன்றி இனம் மிக அசிங்கமானதா?

99341639eabbe185-057a-4e2c-bb74-eea9d99c

உலகின் மிக அரிய வகை மற்றும் மிக 'அசிங்கமானதென கருதப்படும்' பன்றியை முதன்முறையாக விஞ்ஞானிகள் காட்டுப்பகுதி ஒன்றில் படம் பிடித்துள்ளனர்.

வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பின் அச்சுறுத்தலில் இருக்கும் 'ஜவான் வார்டி' என்ற பன்றிக்குட்டிகள், ஏற்கனவே அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது.

இந்நிலையில், இந்தோனீசியா நாட்டில் உள்ள ஜாவா தீவுகளின் காட்டுப்பகுதி ஒன்றில் இந்த உயிரினங்கள் சில தொடர்ந்து வாழ்ந்து வருவதை கேமரா காட்சிகள் தற்போது வெளிப்படுத்தியுள்ளன.

இந்த அரிய விலங்குகளின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதே தங்களது குறிக்கோள் என இதனை கண்டுபிடித்தக் குழு கூறியுள்ளது.

ஜவான் வார்டி பன்றிகள் இன்னமும் உயிரோடிருப்பது தெரிந்து தானும், தன்னுடன் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களும் "மெய் சிலிர்த்து" போனதாக ஆய்வை நடத்திய ஜொஹன்னா ரோட் மர்கொனொ தெரிவித்தார்.

கடைசியாக 2004 ஆம் ஆண்டில் இந்த தாழ்வுநில வனப்பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வு, ஜவான் பன்றிகளின் எண்ணிக்கை "அபாயகரமான அளவில் குறைந்து வருவதை" வெளிப்படுத்தியது.

"பெரும்பாலான அல்லது இந்த பன்றிகளின் இனமே அழிந்திருக்கும் என்ற கவலையில் இருந்தோம்" என பிபிசியிடம் பேசிய ஜொஹன்னா கூறினார்.

மனிதர்களுக்கும் பன்றிகளுக்கும் இடையேயான மோதல்

தடித்த முடி கொண்ட இந்த பன்றிகள் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும், காடுகளின் சூழலை பாதுகாப்பதில் இவ்விலங்குகளின் பங்கு முக்கியமானவை என்கிறார் ஜொஹன்னா. தனக்கான உணவை தேடும் போது, மண்ணை உழுது விதைகளை அவை விதைக்கின்றன.

99341637243419ab-b9fa-40dd-822e-748aa119

விளைநிலங்களாக மாறிய காடுகள்   -  BBC

இன்தோனீஷியாவில், அதிக மக்கள் தொகை கொண்ட ஜாவா தீவுகளின் வெப்பமண்டல காடுகளில், மனித இனத்தின் அழுத்தமும் இவற்றிற்க்கு அதிகமாகி வருகிறது.

விளைநிலங்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியால் ஜவான் பன்றிகள் தங்கள் வாழ்விடத்தை இழந்து வருகின்றன. அதோடு, மனிதர்களுடனான நேரடி மோதல்களுக்கும் இவை ஆளாகின்றன. விளைநிலங்களின் பயிர்களை மேய்வதாக சில வேட்டையாடப்படுகின்றன.

"விளையாட்டு பொழுதுபோக்கிற்காகவும் ஜவான் பன்றிகளை சிலர் வேட்டையாடுவதும் பெரும் பிரச்சனையாக உள்ளதென" கூறுகிறார் ஜொஹன்னா.

99341638a7443f3c-c2f1-41b8-a74d-b59dfca7

ஜாவன் வார்டி பன்றி   -  BBC

ஆய்வு நடத்தப்பட்ட ஏழு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்ருந்த மோஷன் கேமராக்களில், மூன்றில் மட்டுமே ஜவான் வார்டி பன்றிகள் தென்பட்டன.

"இவை இன்னமும் அழியும் அபாய நிலையில் உள்ளதை இது காட்டுகிறது. நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இவை இல்லாமலேயே போய்விடும்" என்று கவலை தெரிவிக்கிறார் ஜொஹன்னா. இது ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் அவர்.

நல்ல செயல்திறன் கொண்ட சில பாதுகாப்பு திட்டங்களை வடிவமைக்க முடிந்தால் ஜவான் பன்றிகள் வாழும் என்கிறார் பிபிசியிடம் பேசிய ஜொஹன்னா. தம்மைப் பொறுத்தவரை அவை அழகானவை என்றும் கூறுகிறார் ஜொஹன்னா.

நம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரம், ஒவ்வொரு செடி, விலங்கு என அனைத்தும் ஒன்றோடு ஒன்று சார்ந்துதான் உள்ளன.

"இதில் ஒன்று பாதிக்கப்பட்டால் கூட, மற்றொன்றும் பாதிக்கப்படக்கூடும். இம்மாதிரியான தொடர் வினையில் என்ன நடக்கும் என்பதை நாம் கணிக்க முடியாது," என்கிறார் அவர்.

http://tamil.thehindu.com/bbc-tamil

  • தொடங்கியவர்

கலையும் கதவும்

 

 
shutterstock146780600

பண்டைய கேரளத்தின் தாழ்ப்பாள் வடிவமைப்பு

விலங்குகளிடமிருந்தும் இயற்கைப் பாதிப்பிலிருந்தும் தற்காத்துக்கொள்ளக் கதவுகள் வந்தன. திருட்டு பயம் வந்தபோதுதான் கதவுகள் பலமுடையதாக மாறின. ஆனால் பிறகு கதவுகள் என்பவை வீட்டைப் பாதுகாப்பதற்கானது மட்டுமானதாக இருக்கவில்லை. கதவுகள் ஒரு காலகட்டத்தை, கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவை. பிரான்ஸில், எகிப்து, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான் என ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு விதமான கதவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதைவிட நம்நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கதவுகள் அமைப்பு முறை வேறுபடுகின்றன. ராஜபுத்திரர்களின் கலையை ராஜஸ்தான் கதவுகளில் பார்க்கலாம். அதுபோல் தமிழ்நாட்டில் செட்டிநாடு வீடுகளின் கதவுகளும் தனித் தன்மை கொண்டவை. நம்முடைய புராணங்களை வெளிப்படுத்துவதுபோல தெய்வச் சிலைகள் கதவுகளின் நிலைகளைச் சுற்றிச் செதுக்கப்பட்டிருக்கும். அதுபோல பூ வேலைப்பாடுகளும் இருக்கும். கேரளக் கதவுகளும் செட்டி நாட்டுக் கதவுகள் போல வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும். இம்மாதிரிக் கலை வண்ணம் கொண்ட கதவுகளின் ஒளிப்படத் தொகுப்பு இது:

   
shutterstock121264858

டெல்லியில் ஒரு வீட்டின் கதவு அமைப்பு

shutterstock20537561

மத்தியப் பிரதேச பாரம்பரிய வீட்டு முகப்பு

shutterstock420492364

மும்பையில் இருக்கும் ராஜஸ்தான் பாணி முகப்பு வீடு

shutterstock579880627

ராஜஸ்தான் கதவு முகப்பு

shutterstock723769876

ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு வீட்டின் முகப்பு

 
shutterstock424695682

திருவனந்தபுரத்தின் பாரம்பரிய வீடு

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

உலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம்

உலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம் என்று அழைக்கப்படும் இந்த 'கிசோம்பா' நடனம் ஆஃபிரிக்காவில் தோன்றியது. இந்நடனம் எந்தத் தருணங்களில் ஆடப்படும் தெரியுமா?

  • தொடங்கியவர்

பல்வேறு உலக நாடுகளிலிருந்து பிபிசி தமிழ் நேயர்கள் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். 

 

போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

ஆஸ்திரேலியாவின் லிஸ்மோரில் சீறிப்பாயும் விமானம் - பரமநாதன் வினோதன்

 

போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் 

இதன் சுகமே தனிதான்! - அல்வசீம் ரிபா

 

 

போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்  சக்கரக் கால்கள்! - சிவகஜன் ஆருடச்செல்வம்

 

 

போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பென்சில்வேனியாவில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமம் - பார்கவ் கேசவன், ஒசூர்

 

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பென்சில்வேனியாவில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமம் - பார்கவ் கேசவன், ஒசூர் எஸ் ஜே எஸ் போட்டோ பிரியன், திரிகோணமலை

எஸ் ஜே எஸ் போட்டோ பிரியன், திரிகோணமலை

 

எஸ் ஜே எஸ் போட்டோ பிரியன், திரிகோணமலை போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

கனடாவில் உள்ள அமைதியான மொரெயின் ஏரியில் பயணத்துக்கு காத்திருக்கும் ஓடங்கள் - எஸ். மனோஹரன்

 

கனடாவில் உள்ள அமைதியான மொரெயின் ஏரியில் பயணத்துக்கு காத்திருக்கும் ஓடங்கள் - எஸ். மனோஹரன் போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

பட்டிப்பொலவில் அமைந்துள்ள ரயில் நிலையம்: எம்.ஆர்.எம் ருஷ்டி, இலங்கை

பட்டிப்பொலவில் அமைந்துள்ள ரயில் நிலையம்: எம்.ஆர்.எம் ருஷ்டி, இலங்கை போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபாவிலிருந்து கழுகுப் பார்வை- மஹேஷ் கிருஷ்ணன் கு.பா.நா

துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபாவிலிருந்து கழுகுப் பார்வை- மஹேஷ் கிருஷ்ணன் கு.பா.நா போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் 

இடுக்கி கல்வாரி மலையை நோக்கி பயணம் - ஜோஷ்வா ஜேகப் ஜாக்சன்

போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் 

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் - ராஜேஷ் மதுசூதனன்

போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

இலங்கை பூநகரி சங்குபிடி பாலத்தில் பீட்டில் கார் - ராபின்சன்

 

சன் போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் 

திரிசூலத்திலிருந்து சென்னை விமான நிலையம் - வினோத் காம்ப்ளி, சென்னை

 

போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்  வருங்கால சுகத்துக்காக இடைக்கால இடையூறு - எம்.ஆர் ராகுல், நாகர்கோயில்

 

 

போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

செயலிகளின் வருகையால் ஓய்ந்துபோன ஆட்டோ தொழில் - வசந்தன் வாசுதேவன், சென்னை

 

 

http://www.bbc.com/tamil

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

செலீனா கோமஸ், ஜஸ்டின் பைபர் திருமண நிச்சயதார்த்தம்?

Selena-Gomaz-1.jpgஅமெ­ரிக்­காவின் பிர­பல பாட­கியும் நடி­கை­யு­மான செலீனா கோம­ஸூக்கும் பிர­பல கனே­டிய பாடகர் ஜஸ்டின் பைப­ருக்கும் இம்­முறை நத்தார் காலப்­ப­கு­தியில் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் நடை­பெ­றக்­கூடும் என தக­வல்கள் வெளியா­கி­யுள்­ளன.

 

25 வய­தான பாடகி செலீனா கோமஸூம் 23 வய­தான பாடகர் ஜஸ்டின் பைபரும் 2009 ஆம் ஆண்டில் முதன்­மு­தலில் சந்­தித்­தனர்.

 

அதன் பின்னர் இவர்கள் இரு­வரும் காத­லிக்க ஆரம்­பித்­தனர். ஆனால், இவர்­களின் காதல் உறவு அதிக காலம் சுமு­க­மா­ன­தாக இருக்­க­வில்லை.

 

justin-1.jpgஇரு­வரும் அடிக்­கடி பிரி­வதும் மீண்டும் இணை­வ­து­மாக இருந்­தனர்.

ஒரு கட்­டத்தில் இவ்­வி­ரு­வரும் எதிரும் புதி­ரு­மா­ன­வர்­க­ளாக மாறினர். ஜஸ்டின் பைபரின் நடத்­தையால் செலீனா கோமஸ் மிகவும் வெறுப்­ப­டைந்­தார்.

 

இவர்­களின் ரசி­கர்­க­ளுக்­கி­டை­யிலும் சமூக வலைத்­த­ளங்­களில் மோதல் ஏற்­பட்­டது.

 

ஆனால், சில மாதங்­க­ளுக்கு முன்னர் ஜஸ்டின் பைபர், செலீனா கோமஸ் ஜோடி மீண்டும் இணைந்­தது.

 

இந்­நி­லையில், இவர்கள் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் நடை­பெ­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எதிர்­வரும் நத்தார் விடு­முறைக் காலப்­ப­கு­தியில், ஜஸ்டின் பைபர் திரு­ம­ணத்­துக்­கான தனது விருப்­பத்தை முறைப்­படி தெரி­விக்­க­வுள்­ள­தாக தகவல் வெளியா­கி­யுள்­ளது.

இதே­வேளை, இவர்கள் மீண்டும் இணைந்­ததை செலீனா கோமஸின் தாயார் விரும்­ப­வில்லை எனக் கூறப்­ப­டு­கி­றது.

 

இது தொடர்­பாக செலீ­னா­வுக்கும் அவரின் தாயா­ருக்கும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­தாகக் கூறப்­பட்ட நிலையில், செலீ­னாவின் தயார் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

அதையடுத்து செலீனாவுக்கு உதவுவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை செலீனா கோமஸின் வீட்டுக்கு ஜஸ்டின் பைபர் சென்றமை குறிப்பிடத்தக்கது.

justin-selena-gigi-zayn-date-ftr.jpg

http://metronews.lk

  • தொடங்கியவர்

மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.

 
 

எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம். 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில்

 
 
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.
 

எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.

1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.

மக்கள் திலகத்தின் திரைத்துறை வெற்றிக்கு பிரபல தயாரிப்பாளர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரும் வசனர்த்தா ஆரூர்தாசும் முக்கிய காரணம் ஆவார்கள். அவரது உடன் பிறந்த சகோதரர் எம்.ஜி சக்கரபாணி என்றாலும், தேவர் அவர்களுக்கு உடன் பிறவா சகோதரர் என்ற அந்தஸ்தை கொடுத்திருந்தார் என்று கூறிப்படுகிறது.

குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

சக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.

நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.

அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.

1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.

இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.

1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.

1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

இத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.

குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த "வள்ளல்" அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி இப்பூவுலகை விட்டு மறையும் வரை ஏழைகளின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த இந்த பொன்மனச் செம்மலை மனிதாபிமானத்தின் மகாத்மா என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஐந்து வயதிலேயே கருவிகளை உருவாக்கத் தொடங்கிய இவரது கருவிகள் என்ன செய்கின்றன தெரியுமா?

  • தொடங்கியவர்

விடைபெறும் 2017: இணையத்தை வளைத்து தேடிய இந்தியர்கள்!

 

 
jallikattu

ணையதளத்தின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துவிட்ட நிலையில், ஒவ்வோர் ஆண்டும் மக்கள் இணையத்தில் எதைத் தேடினார்கள் என்ற விஷயமும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்தியர்கள் 2017-ல் அதிகம் தேடிய விவரங்கள் என்னென்ன?

சினிமா

     

தேடியந்திரங்களில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ள பட்டியலில், சினிமா, கிரிக்கெட் தொடர்பான தகவல்களே அதிகம் தேடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இளைஞர்கள் இந்த விஷயங்களைத்தான் அதிகம் தேடியிருக்கிறார்கள். இதில் ‘பாகுபலி-2’ படத்தைப் பற்றிய தகவல்களைத்தான் ஆர்வத்துடன் சேகரித்திருக்கின்றனர் நெட்டிசன்கள். அடுத்ததாக ‘தங்கல்’, ‘ஹால்ஃப் கேர்ள்பிரெண்ட்’, ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’, அலியா பட் நடித்த ‘பத்ரிநாத் கி துல்ஹானியா’ ஆகிய திரைப்படங்களைப் பற்றியும், அதுதொடர்பான செய்திகளையுமே அதிகம் தேடியிருக்கிறார்கள்.

bahuboli-2
 

பான் கார்டு பரபர

சினிமா, விளையாட்டு மட்டுமல்ல; மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் கூகுளில் அதிக தேடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ‘பான் கார்ட் உடன் ஆதார் நம்பரை இணைப்பது எப்படி?’ என்பதைப் பற்றித்தான் அநேகர் கூகுள் ஆண்டவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதேபோல சரக்கு மற்றும் சேவை வரியைப் (ஜிஎஸ்டி) பற்றிய அதிகமான தேடல்களும் இந்த ஆண்டு கூகுளில் ஹிட் அடித்திருக்கின்றன. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கிறது.

பிட்காயின்

வழக்கமாக இந்திய நெட்டிசன்கள் பங்குச்சந்தை, முதலீடு விஷயங்களைத் தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் காட்டுவது வாடிக்கை. இந்த ஆண்டு அது அதிகமாகியிருகிறது. உபயம், பிட்காயின் என்று சொல்கிறது கூகுள். பிட்காயின் எனப்படும் ‘கிரைப்டோகரன்சி’ (cryptocurrency) பற்றி அறிந்துகொள்ளவே இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி, பிட்காயின் எங்கு கிடைக்கும், பிட்காயின் முதலீடு நம்பகத்தன்மை உடையதா? போன்ற கேள்விகளைக் கேட்டுதான் கூகுள் தேடு பொறியில் அதிகம் முறை கேட்டிருக்கிறார்கள். பிட்காயின் பற்றி எதிர்மறையான செய்திகள் வந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் இந்தியர்கள் அதிகம் கவனம் செலுத்தியிருப்பது ஆச்சரியமளிக்கிறது என்கிறது கூகுள்.

Bitcoins
 

கிரிக்கெட்

ஐ.பி.எல். 10-வது சீசன் நடைபெற்ற காலகட்டத்தில் அதுதொடர்பான செய்திகளைப் படிக்கவும் ஒளிப்படங்களையும் இளைஞர்கள் அதிகம் தேடியிருக்கிறார்கள். சாம்பியன் டிராபி போட்டி நடந்தபோது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய விவரங்களையும் இளைஞர்கள் அதிகம் தேடியிருகிறார்கள்.

சலுகை மேளா

இந்த ஆண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கிய சலுகைகள் இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்த நிலையில், அது இணையத்திலும் எதிரொலித்திருக்கிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் போட்டிபோட்டு கொண்டு சலுகைகள் வழங்கியதால், அது பற்றிய விவரங்களை அறிய அந்த நிறுவனங்களின் தளங்களை இந்தியர்கள் விசிட் அடித்திருக்கிறார்கள். ஒரு நிறுவனம் அறிவித்த, ஸ்மார்ட்ஃபோனை ஆன்லைனில் எப்படிப் பதிவுசெய்து வாங்குவது என்ற கேள்வியும் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது.

ipl
 

கிடுகிடுக்க வைத்த வைரஸ்

இந்தியாவில் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், உலகின் பல வல்லரசு நாடுகளை நடுங்கவைத்த ‘ரான்சம்வேர்’ என்ற கம்ப்யூட்டர் வைரஸ் பற்றிய தேடலும் கூகுளில் ஹிட் அடித்தது. செல்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி போன்ற கேள்விகளும் கூகுள் தேடலில் இந்த ஆண்டு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம்

இவைதவிர, இந்த ஆண்டில் தொடக்கத்தில் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றியும், பீட்டா அமைப்பைப் பற்றிய தகவல்களும் கூகுளில் அதிகம் தேடப்பட்டிக்கின்றன. மார்ச் மாதத்துக்குப் பிறகு பி.எஸ்.-3 வாகனங்களை இந்தியாவில் விற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, பி.எஸ்.-3 வாகனம் என்றால் என்ன? என்ற கேள்வியை ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் கூகுளில் கேட்டதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘காதல் தேவதைகள்’
 

image_6146fd3400.jpgநண்பர்கள் மூவர் திரைப்படம் பார்க்கச் சென்றனர். இவர்கள் சென்ற வழியெங்கும் தத்தமது காதல் தேவதைகள் பற்றி, நேரடியாகப் புகழ்ந்த வண்ணமிருந்தனர். “அவள் இல்லாதுவிடின், எனது பிராணன் என்னைவிட்டுப் போய்விடும்” என்றான் ஒருவன்.

மற்றவனோ, “எனது உடல், உயிர் எல்லாமே அவள்தான்” என்றான். மூன்றாவது பேர்வழி விடுவானா? “உலகில் இப்படி ஒரு பேரழகியை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்” என்றான்.

திரையரங்குக்குள் மூவரும் நுளைந்தனர். தங்களின் முன்வரிசையில் இருந்த ஒருத்தியை இந்த நண்பர்களில் ஒருவன் பார்த்தான். அவள் யாரோ ஒருவனின் தோழில் சாய்ந்தபடி, தன்னை மறந்த நிலையில் இருந்தாள். இதனைக் கண்டவனுக்கத் தலை சுற்றியது. ‘அடிபாவி என்னை  ஏமாற்றி, யாருடன் நீ இருக்கிறாய்’ என மனம் குமுறினான். இது இப்படி இருக்க, மற்றைய இருவரும் அவளைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். இதே யுவதியைத்தான் தங்கள் காதலி எனப்புகழ்ந்திருந்தார்கள். திரைப்படம் முடிந்தது. மூவரும் ஒன்றும் தெரியாதபடி, தங்கள் காதலி பற்றி மீண்டும் புகழ ஆரம்பித்தார்கள்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 25
 

1643: அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு, கிழக்கிந்திய கம்பனியின் கப்டன் வில்லியம் மைனோரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

1926: ஜப்பானிய சக்கரவர்த்தி டாய்ஸோ காலமானார்.

1932: சீனாவில் கான்ஸு நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 275 பேர் பலி.

1968: இந்தியாவின் தமிழ்நாட்டில் சம்பள உயர்வு கோரி போராடிய தலித் மக்கள் 42 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

1977: நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

1989: ருமேனிய ஜனாதிபதி நிகோலோ சௌசெஸ்குவும் அவரின் மனைவி எலினாவும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டு, இரகசிய இராணுவ விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளிகளாக காணப்பட்டதால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1991: சோவியத் யூனியன் ஜனாதிபதி பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் ராஜினாமாச் செய்தார்.

http://www.tamilmirror.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.