Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு உண்மையிலேயே பலன் உண்டா? - யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் கதை! #MotivationStory

 
 

unnai arinthal

‘நமது நல்ல செயல்களைவிட, நமது பாவங்கள் வெகு எளிதாக மற்றவர்களுக்கு நினைவுக்கு வந்துவிடும்’ - இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் கிரேக்க தத்துவ மேதை டெமாக்ரட்டீஸ் (Democritus). வாழும் காலத்தில் மனிதர்களுக்கு நினைவுக்கே வராத பொன்மொழி இது. அதனால்தான் நல்லதைச் செய்வதை விட்டுவிட்டு நம்மில் பெரும்பாலானவர்கள் தான், தன் சுகம் என்று வேறேதோ ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். மனிதர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிவதில்லை... நாம் செய்யும் நல்ல செயல்கள் ஒருபோதும் வீணாவதில்லை. `அந்தச் செயல்களால் என்ன கிடைத்துவிடப் போகிறது?’ என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவை திரும்பிவரும்... உங்கள் வாழ்க்கையிலேயே நீங்கள் எதிர்பார்த்திராத மிகச் சிறந்த வெகுமதியாக!  அதை எடுத்துச் சொல்லும் எளிமையான கதை இது!

 

அந்தச் சிறுவன் ஓர் அனாதை. அம்மாவும் அப்பாவும் நோய்வாய்ப்பட்டு இறந்துபோயிருந்தார்கள். மேல்நிலைப் பள்ளியில் படிக்கவேண்டிய வயது. ஆனால் படிக்கவைக்கவோ, உதவவோ யாருமில்லை. அவன் தன் சித்தி வீட்டில் தங்கியிருந்தான். வீட்டில் இருப்பவர்கள் ஏவும் வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பான். அந்த ஊரில் முக்கியமாக ஒரு பெரும் பிரச்னை இருந்தது... தண்ணீர் பிரச்னை. குடிக்க, சமைக்க, துணி துவைக்க, குளிக்க... உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் தண்ணீரை ஊருக்கு வெளியேயிருந்த ஓர் ஓடையிலிருந்துதான் எடுத்து வரவேண்டியிருந்தது. 

கதை

அந்தச் சிறுவன்தான் அந்த வீட்டிலிருந்த அத்தனை பேரின் தேவைக்கும் நீர் கொண்டு வருவான். பல முறை நடக்கவேண்டியிருக்கும். சலிக்காமல், அலுக்காமல் கொண்டு வருவான். ஆனால், அவனுக்கு வீட்டில் நல்ல பெயர் இருந்ததே இல்லை... `உதவாக்கரை’, `வெட்டிப்பயல்’, `ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை’ என்றெல்லாம் திட்டுவார் அவன் சித்தி. சமயத்தில் அவனுக்கு அடிகூட விழும். அதையெல்லாம் பொறுத்துக்கொள்வான் அந்தச்  சிறுவன். அவன் ஓர் இரக்க சுபாவி. யாரையும் குறை சொல்ல மாட்டான்; உதவி வேண்டுபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய ஓடுவான்.

ஊருக்கு வெளியேயுள்ள ஓடையில் தண்ணீர் எடுப்பதற்காக அவன் அதிகாலையிலும் மாலை நேரத்திலும் ஓடவேண்டியிருந்தது. அதைக்கூட அவன் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருந்தான். ஆனால், அவனுடன் வருவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். அவன் தனியாகத்தான் போகவேண்டியிருக்கும். ஆனால், இப்படிக் கடுமையான வேலையை இவன் செய்துகொண்டிருக்க, அந்த வீட்டிலிருந்த சித்தியின் பிள்ளைகளுக்கோ எளிமையான வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஒருநாள் அந்தச் சிறுவன் பானையில் தண்ணீர் பிடித்துக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தான். ஒரு மரத்தடியில் யாரோ ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்தான். அவரருகே போய், தண்ணீர்ப் பானையை இறக்கிவைத்துவிட்டு உட்கார்ந்தான். அவர், அவனையும் தண்ணீர் பானையையும் பார்த்தார்... ``தம்பி ரொம்ப தாகமா இருக்கு... கொஞ்சம் தண்ணி கொடேன்...’’ என்று கேட்டார். சிறுவன் யோசிக்கவேயில்லை. அவன் ஒரு மண் கோப்பை வைத்திருந்தான். அதைக்கொண்டு அவருடைய தாகம் தீருமளவுக்குத் தண்ணீர் கொடுத்தான். பிறகு கிளம்பி தன் வழியே நடந்தான். வழியில் இன்னொரு பெண்மணியைப் பார்த்தான். அவரும் `தாகமா இருக்கு தம்பி’ என்றார். சிறுவன் அவருக்கும் நீர் கொடுத்தான். 

வாழ்க்கைக் கதை

அவன் வீட்டுக்கு வந்தபோது, கொண்டு வந்த தண்ணீர் பானையில் பாதி காலியாகவிருந்தது. சித்திக்கு பானையைப் பார்த்ததும் ஆத்திரமான ஆத்திரம். `தண்ணீர் ஏன் குறைந்தது?’ என விசாரித்தாள், கேட்டாள்... அவனை அடித்து துவம்சம் செய்தாள். `நாளைக்கு இதே மாதிரி தண்ணி குறைஞ்சுது... உன்னை வெட்டி பொலிபோட்டுடுவேன்’ என்று மிரட்டினாள்.

இரண்டு நாள்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கழிந்தது. அன்றைக்கு அந்தச் சிறுவன் ஓடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் முனகியபடி படுத்திருப்பதைப் பார்த்தான். அந்த ஆளை நெருங்கிப் போய்ப் பார்த்தான். அவர் மேலெல்லாம் காயங்கள்... எங்கேயோ விழுந்து எழுந்திருந்து வந்திருந்தார். அவரைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது.

அந்த மனிதர் இரைஞ்சும் குரலில், ``கொஞ்சம் தண்ணி குடு தம்பி...’’ என்று கேட்டார். அவர் இருந்த கோலத்தையும், அவருடைய குரலையும் அவனால் புறக்கணிக்க முடியவில்லை. பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். அவர் ஆவல் தீர மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிப் பருகினார். அன்றைக்கு வீட்டில் சித்தி அவனை அடித்துத் துவைத்துவிட்டார். “கண்டவங்களுக்கெல்லாம் தண்ணி குடுப்பியா... குடுப்பியா...’’ கேள்வியைத் தொடர்ந்து அடி விழுந்தது. அந்தச் சிறுவன் மௌனமாக அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை. அந்தச் சிறுவன் வீட்டிலிருந்தான். யாரோ கதவைத் தட்டினார்கள். சித்திதான் போய்க் கதவைத் திறந்தார். வெளியே, அந்தச் சிறுவன் முதல் நாள் பார்த்திருந்த அந்த மனிதர், உடலெங்கும் காயம்பட்டிருந்தவர், நின்றுகொண்டிருந்தார். அவர் புதிதாக அந்தப் பகுதிக்கு வந்திருந்த தபால்காரர். ``தம்பி... உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு... நேத்து அடிபட்டிருந்ததால என்னால அதை எடுத்துட்டு வந்து உனக்குக் கொடுக்க முடியலை. சாரி...’’ என்று தன் கையிலிருந்த தபாலை நீட்டினார். சிறுவன் வாங்கிக்கொண்டான்.

அது, அவன் மேல்நிலைப் பள்ளியில் படிக்க உதவித்தொகை சேங்க்‌ஷனாகியிருந்ததற்கான கடிதம். அவன் எப்போதோ அதற்காக விண்ணப்பித்து, அதை மறந்தும் போயிருந்தான். அந்தத் தபால்காரர், அந்தக் கடிதத்தோடு, அவருக்கு சரியான தருணத்தில் தண்ணீர் கொடுத்து, அவரைக் காப்பாற்றியதற்காக கணிசமான ஒரு தொகையையும் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தார். சிறுவன் அசந்துபோனான். 

கதை - தண்ணீர்

 

அதற்கு முதல் நாள் மட்டும் சிறுவன் அவருக்குத் தண்ணீர் கொடுத்து உதவியிருக்காவிட்டால், அந்த தபால்காரர் இறந்துபோயிருந்திருப்பார். சிறுவனுக்கான ஸ்காலர்ஷிப் கடிதம் அவனிடம் வந்து சேராமலேயே போயிருந்திருக்கும்!

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டோனியின் பாராட்டை பெற்ற 2 1/2 வயது குழந்தை

 

 

சென்னையைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை அற்புதமாக கிரிக்கெட் விளையாடுவதால் ’இளம் குழந்தை கிரிக்கெட்டர்’ எனும் அங்கீகாரத்தை பெற்றதோடு, இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் பாராட்டையும் பெற்று அசத்தியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த முருகன்ராஜ்- சுபத்ரா தம்பதியரின் இரண்டரை வயது மகன் சனுஷ் சூர்யதேவ்.

இச்சிறுவன் நெகிழி பந்துகளில் தொழில்முறை கிரிக்கெட் வீரரைப் போல கிரிக்கெட் விளையாடுகிறார். சனுஷ், நெகிழி பந்து விளையாட்டில் ‘Drive' ஷாட்டுகளை அற்புதமாக ஆடுகிறார்.

இதன் மூலம், India Book of The Records-யின் ‘Young Child Cricketer' எனும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். மேலும், சமீபத்தில் இந்திய அணி வீரர் மகேந்திர சிங் டோனியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் சனுஷ்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

சனுஷ், ஐந்து மாத குழந்தையாக இருக்கும்போதே பொம்மைகளுக்கு பதிலாக பந்துகளை வைத்து விளையாடியதாகவும், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் அவரின் தந்தை முருகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

http://news.lankasri.com

  • தொடங்கியவர்
மதுபான ஆலையை பாதுகாத்து வரும் காவல் வாத்ததுகள்
  • தொடங்கியவர்
  • ஒரு மீன் 36.45 மில்லியன் யென்!!
06-1515233582-japanfish4-600x430.jpg

ஒரு மீன் 36.45 மில்லியன் யென்!!

 

கலைப் பொருள்கள் அல்லது ஏதேனும் தேசிய தலைவர்கள் பயன்படுத்திய பொருள்கள் தான் கோடி ரூபாவுக்கு ஏலம் போகும் என்று எண்ணத்தினை இன்றோடு மறந்து விடுங்கள்.

ஜப்பானில் பன்னாட்டு சுஷி ரெஸ்டாரண்டின் உரிமையாளர்,  ப்ளூஃபின் டுனா என்ற மீனை 36.45 மில்லியன் ஜப்பானிய யென் என்ற விலைக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.

இது முதல் முறை அல்ல ஜப்பானின் மிகவும் பிரபலமான ட்சுக்ஜி மீன் சந்தையில் கடந்த ஆண்டு 72 மில்லியன் யென் மற்றும் 2013- ஆம் ஆண்டு 155 மில்லியன் யென் என இங்கு மீன் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன.

ப்ளூஃபின் டுனா பெசிபிக் கடலில் கிடைத்த இந்த ப்ளூஃபின் டுனா மீன் 405 கிலோ எடை இருந்ததாகவும், இதனை 36.45 மில்லியன் யென் கொடுத்து ஒண்டியார வாங்கியிருப்பது தான் ஜப்பானின் சமுக வலைதளங்களில் செய்தியாக உள்ளது.

 
 

06-1515233610-japanfish1.jpg06-1515233591-japanfish3.jpg

http://newuthayan.com

  • தொடங்கியவர்

“ஓர் இலை சாப்பாடு செய்ய ஐந்துநாள் ஆகும்” - க்ளே மினியேச்சர் இன்ஜினீயர் ஷில்பா

 
 

 

மினியேச்சர் உணவு

 
Chennai: 

ழகாக விரிக்கப்பட்டிருக்கும் தலைவாழை இலையில், கூட்டு, பொரியல், சாதம், ஸ்வீட், ஊறுகாய், உப்பு... இதனுடன் வெற்றிலை பாக்கு. நீங்கள் பசியோடு இருந்தால், நாவில் சப்புக்கொட்ட உடனே சாப்பிட அமர்ந்துவிடுவீர்கள். ஆனால், எறும்புகளுக்கே சாப்பிட முடியாத அளவு உணவே அது. கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கும் இவை அனைத்தும், க்ளேவால் செய்யப்பட்ட மினியேச்சர் படைப்புகள். இன்ஸ்டாகிராமில் அந்தப் படங்களைப் பார்த்ததும் ஆச்சர்யம். படைப்புகளில் அப்படியொரு நேர்த்தி. யாருப்பா இந்தக் கலைஞர்? 

ஷில்பா மித்தா

“என் பேரு ஷில்பா. சென்னைப் பொண்னு. சவுண்டு இஞ்ஜினீயரிங் படிச்சுட்டு அந்த ஃபீல்டு ரிலேட்டானா வேலைக்குப் போக இருந்தேன். ஆனால், விளையாட்டா ஆரம்பிச்ச க்ளே வொர்க் அதில் முழுசா இயங்க வெச்சுடுச்சு. ஒருநாள் பொழுதுபோக்கா க்ளேவில் பர்கர் செய்தேன். ரொம்ப அழகா இருந்தது. கிராஃப்ட் வொர்க் ரொம்ப அழகா பண்ணும் அன் அம்மாவுக்கு நான் செய்தது ரொம்ப புடிச்சுப்போய் பாராட்டினாங்க. தொடர்ந்து ஒண்ணு ஒண்ணா செய்ய ஆரம்பிச்சேன். பலரும் பாராட்டி உற்சாகப்படுத்த ஃபுல் டைமா மினியேச்சர் டிசைன் பண்ண ஆரம்பிச்சுட்டேன்'' என குஷியாகப் பேசுகிறார் ஷில்பா. 

மினியேச்சர் இட்லி

''எங்க வீட்டுல பல வருஷங்களா கொலு வைக்கிறோம். சின்ன வயசிலிருந்து அதைப் பார்த்து பழகினதால் நுணுக்கமான கலைகள்மீது ஆர்வம் வந்துச்சு. கொலு ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே வேலைகளை ஆரம்பிச்சுடுவோம். ஒவ்வொரு பொம்மையையும் பார்த்துப் பார்த்து வாங்குவோம். கடைகளில் வாங்கும் பொம்மைகள் தவிர, நாங்களே செய்த பொம்மைகளும் கொலுவை அலங்கரிக்கும். அதைப் பார்க்கிறவங்க பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷம் எங்களுக்குக் கூடுதல் உத்வேகம். நான் மினியேச்சர் பண்ண ஆரம்பிச்சதும், குறிப்பாக எந்த விஷயத்தில் ஃபோகஸ் பண்ணலாம்னு யோசிச்சேன். உணவுப் பண்டங்கள்மீது ஆர்வம் வந்துச்சு. இட்லி, வடை, பிரியாணி, இடியாப்பம்னு விதவிதமா மினியேச்சர் செய்ய ஆரம்பிச்சேன். 2011-ம் வருஷத்திலிருந்து மினியேச்சர் டிசைன் செய்யறேன். ஆனாலும் இதன்மூலம் முதல் 5 வருஷம் வருமானம் இல்லை. வீட்டில் அப்பப்போ ரைடு விழும். 'சவுண்டு இஞ்ஜினீயரிங் படிப்புக்கு நல்ல வேகன்ட் இருக்கு. அதைவிட்டுட்டு இப்படி கஷ்டப்படணுமா?'னு பலரும் சொல்வாங்க. ஓர் இடத்துல அமைதியா உட்கார்ந்து தவம் மாரி ஒரு பொருளை வடிவமைக்கிறதில் கிடைக்கும் சந்தோஷம் வேற எதிலும் கிடைக்காதுங்க'' - என்கிற ஷில்பாவுக்கு பலம் சேர்ப்பது அவர் அம்மா உஷா. 

மினியேச்சர் பிரியாணி

“அம்மாவின் கலை ஈடுபாடுதான் நான் மினியேச்சரில் கவனம் செலுத்தினபோது சப்போர்ட்டா இருக்கவெச்சது. என் க்ளே உருவங்களுக்கு அவங்கதான் வண்ணம் கொடுப்பாங்க. உணவு சம்பந்தமான மினியேச்சர் பண்றது ரொம்பவே கஷ்டம். அதிலும் அரிசி பண்றது பெரிய வேலை. ஒவ்வொரு அரிசியையும் நுணுக்கமா செய்யணும். ஓர் இலை சாப்பாடு செட் செய்ய ஐந்து நாள் ஆகும். கடுகு, கறிவேப்பிலை, உப்பு எனப் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கும். என் படைப்புகளைப் பார்க்கும் யாருமே இது க்ளேவில் பண்ணினதுனு அவ்வளவு சீக்கிரத்தில் ஒத்துக்கக் கூடாது. என் உழைப்புக்கு இப்போ நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. நல்ல விலை கொடுத்து வாங்கறாங்க. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் நல்ல வரவேற்பு. நம்ம ஊரில் மினியேச்சருக்கு வரவேற்பு குறைவுதான். வெளிநாடுகளில் பெரிய வரவேற்பு இருக்கு. அதிலும், நம் பாரம்பர்ய விஷயங்களை ரொம்பவே லைக் பண்றாங்க. அது என் உழைப்புக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுக்குது. இன்னும் கொடுக்கும்'' என நம்பிக்கையுடன் பேசுகிறார் ஷில்பா.

 

நம் பாரம்பர்ய தானிய வகைகளையும் க்ளேவில் செய்து அசத்த வேண்டும் என்பது ஷில்பாவின் இலக்கு. அரிசியை வடிவமைப்பது போல அதுவும் பெரிய சவால்தான். ஆனால், நிச்சயம் ஷில்பா அதைச் செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்டது. மினியேச்சரில் அசத்தும் ஷில்பாவுக்கு மெகா சைஸில் ஒரு பூங்கொத்து!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தம்!  - பிறந்தநாள் பகிர்வுகள்

 
 

IMG-20180116-WA0085_2_00209.jpg

இன்று, எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள். மக்கள் திலகம் என்று சினிமாவிலும் புரட்சித்தலைவர் என்று அரசியலிலும்  சிறப்புப் பெயர்கள் அவருக்கு வழங்கப்பட்டாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களால் உண்மையான உள்ளன்புடன் சூட்டப்பட்ட 'வாத்தியார்' என்ற பெயர்தான் இன்றுவரை அழியாப் புகழுடன் நிலைத்தும் நீடித்துமிருக்கிறது.இந்தப் பகிர்வு, அவருடைய சினிமா, அரசியல் சாதனைகளைப் புள்ளிவிவரங்களுடன் சொல்வதில்லை. இது ஒவ்வொரு எம்.ஜி.ஆர் தொண்டனின் இதயத்தோடும் நெருக்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது.

தமிழர்களின் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் நிறைவுபெறுகின்றன. இது, பல வருடங்களாகவே தொடர்ந்துவரும் நிகழ்வாக இருக்கிறது. கிராமப் புறங்களில், அதிலும் தென்மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களில், மார்கழி மாதத்தில் தெருவுக்குத் தெரு உள்ள சிறு கோயில்களில் ஸ்பீக்கர் கட்டி அதிகாலையிலும் மாலையிலும் பக்திப் பாடல்கள் போடுவது வழக்கம். மார்கழி மாதம் முடிந்ததும் அதைக் கழற்றிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் சொல்லிவைத்தது போல் ஒரு மாறுதல் நடந்தது. அதாவது, மார்கழி மாதம் முதல் தேதி அன்று கட்டப்படும் அந்த ஸ்பீக்கர்கள், ஜனவரி 17-ம் தேதி முடிந்ததும்தான் கழற்றப்படும்.

 
 

'திருடாதே பாப்பா திருடாதே' என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பார். 'நான் ஆணையிட்டால்..அது நடந்துவிட்டால்' என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை டானிக் ஊற்றிக்கொண்டிருப்பார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று இளைஞர்களுக்கு  உற்சாக  உரம் போடுவார். கிராமம் முழுக்க அன்றைக்கு எம்.ஜி.ஆரின் குரலாக டி.எம்.சௌந்தர்ராஜன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். விவரம் அறிந்தவர்களுக்குத்தான் அது டி.எம்.எஸ். குரல். ஆனால்,கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றைக்கும் அது எம்.ஜி.ஆரின் குரல்தான். சினிமா பாடல்கள்மூலம் வாழ்வியலை சாமானியர்களுக்குக் கற்றுத்தந்தவர் எம்ஜிஆர். அதனால்தான், அவரை தங்களது மூச்சுக்காற்றாகக் கருதிய பாமர மக்கள் அவருக்கு, 'வாத்தியார்' என்று செல்லப் பெயர் சூட்டினார்கள்.

எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத மற்றொரு 'சிறப்பு' எம்.ஜி.ஆருக்கு மட்டுமே இருக்கிறது. பொதுவாக, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளின்போது, அந்தக் கட்சியினர் ஊரின் முக்கிய இடத்தில் போட்டோ வைத்து மலர்தூவி, புகழ்பாடுவார்கள். எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் ஒவ்வொரு தொண்டரின் வீட்டுக்கு முன்பாகப் புகைப்படம் வைத்து , ஸ்பீக்கர் கட்டி அவரது புகழ் பாடுவார்கள். தவிர, அவரவர் வசதிக்கேற்ப பானகமோ,அன்னதானமோ வழங்குவார்கள். சினிமா, அரசியல் என்ற இரட்டைக் குதிரையில் சவாரிசெய்து உச்சம் தொட்டவர் எம்.ஜி.ஆர். இங்கு குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் இன்றைக்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சென்னையில் அப்படி எல்லாம் நடப்பதில்லை என்பவர்கள், ஒரு ரவுண்டு வடசென்னை பக்கம் போய் பார்த்துவிட்டு வாருங்கள்!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி பார்த்திருக்கிறீர்களா?

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு வீரர்களை ஓட வைத்த முரட்டு காளைகள்( புகைப்படத்தொகுப்பு)

சேலம் மாவட்டத்தில் உள்ள கூலமேடு, சின்னம்மநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகள் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் ஆவேசமாக கலந்துக்கொண்ட காளைகள், மாடுபிடி வீரர்களை விரட்டின. அதன் புகைப்படத்தொகுப்பு.

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 18
 

1520: டென்மார்க் அரசர் இரண்டாம் கிறிஸ்டியன், அசுடென் ஏரியில் நடைபெற்ற சமரில் சுவீடன் படைகளை தோற்கடித்தார்.

1535: பெரு நாட்டின்தலைநகர் லிமா ஸ்தாபிக்கப்பட்டது.

1778: ஜேம்ஸ் குக், ஹவாய் தீவுகளை முதன்முதலில் கண்ட ஐரோப்பியர் ஆனார்.

1788: இங்கிலாந்திலிருந்து 736 குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த 11 கப்பல்களில் முதலாவது கப்பல் அவுஸ்திரேலியாவை அடைந்தது. இதுவே அவுஸ்திரேலியாவில் முதலாவது ஐரோப்பிய குடியேற்றமாகும்.

1886: நவீன கள ஹொக்கி விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

1896: எக்ஸ்றே இயந்திரம்  முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்பட்டது.

1911: அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். பென்சில்வேனியா கப்பலில் இயூஜின் பி. இளை எனும் விமானம் இறங்கியது. கப்பலொன்றில் விமானமொன்று இறங்கியமை இதுவே முதல் தடவை.

1944: 3 வருடகாலம் ஜேர்மனியின் நாஸி படைகளின் முற்றுகையிலிருந்து லெனின்கிராட்டை சோவியத் படைகள் விடுவித்தன.

1950: அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில்இடம்பெற்ற விமான விபத்தில் 50 பெர் பலி.

1974: இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான ஒப்பந்தம் மூலம் யோம் கிபூர் யுத்தம் முடிவுக்கு வந்தது.

1976: லெபனானின் பெய்ரூத் நகரில் லெபனான் கிறிஸ்தவ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1000 இற்கும் அதிகமானோர் பலி.

1977: சிட்னியில் இடம்பெற்ற ரயில் விபதித்ல் 83பேர் பலி. இதுவே அவுஸ்திரேலியாவின் மிக மோசமான ரயில் விபத்தாகும்.

1995: 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.

1997: போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர், அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.

2002: சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

2003: கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.

2005: உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ 380 பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2007: மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் ஜெர்மனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
 

உன்னை அறிந்தால்

வாழ்க்கை மிகக் குறுகியது. அதன் ஒவ்வொரு கணத்துக்கும் நாம் மரியாதை செலுத்தியாக வேண்டும்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஓரான் பாமுக் (Orhan Pamuk). இந்த அண்டப் பெருவெளியில், ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில், ஒரு கிரகத்தில், அதில் ஒரு கண்டத்தில், அதில் ஒரு நாட்டில், அதில் ஒரு பகுதியில், அதில் ஓர் ஊரில் மிகச் சில வருடங்கள் மட்டுமே வாழ்கிற நாம் வாழ்க்கை எவ்வளவு சிறியது என்று நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மை நேசிக்கிறவர்களுக்காக நம்மால் எவ்வளவு நேரத்தைச் செலவிட முடியுமோ, அவ்வளவு நேரத்தைச் செலவிடுவதுதான் நாம் வாழும் வாழ்க்கைக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். அதிலும் நம் பெற்றோர்கள் நமக்காகவே வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்தோம், எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கிறோமா? அதன் அவசியத்தை உணர்த்தும் கதை இது. 

 

வாழ்க்கை

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரம். ஊரின் புறநகர்ப் பகுதியில் அவர் இருந்தார். அவர் ஒரு பிஸினஸ்மேன். சதா பம்பரமாகச் சுழலும் வாழ்க்கை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தாலும், இன்னும் அதில் மோட்டார் பொருத்தவில்லையே எனக் கோருகிற அவசர வாழ்க்கை. அன்றைக்கு அவருடைய அம்மாவுக்குப் பிறந்தநாள்... அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது. அது ஒரு காலை நேரம். தன் காரை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தூரத்திலிருந்த பூக்கடைக்குப் போனார். கடையில் அம்மாவுக்குப் பிடித்த பூக்களைத் தேர்ந்தெடுத்தார். அவற்றைக் கொத்தாக, அழகாக பேக் செய்து தன் அம்மாவுக்கு அனுப்பச் சொல்லி, முகவரியை எழுதிக் கடைக்காரரிடம் கொடுத்தார். அவருடைய அம்மா அந்த ஊரிலிருந்து முந்நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தார்.

பூங்கொத்து


`ஒரு நல்ல காரியத்தை முடித்துவிட்டோம்’ என்ற மனநிறைவோடு கடையிலிருந்து வெளியே வந்தார். வாசல் நடைபாதையில் ஓர் இளம்பெண் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவளருகே போனார். 

``என்னம்மா ஆச்சு... ஏன் இங்கே உட்கார்ந்திருக்கே?’’ என்று கேட்டார். 

``ஒண்ணுமில்லை சார். என் அம்மாவுக்குக் குடுக்குறதுக்காக எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ வேணும். ஒரு ரோஜாவின் விலை ரெண்டு டாலராம். என்கிட்ட இருக்குறது ஒரு டாலர். அதான் எப்பிடி வாங்குறதுனு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன்.’’ 

``அவ்வளவுதானே... வா என்கூட...’’ அந்த பிஸினஸ்மேன் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு திரும்பக் கடைக்குள் போனார். தன் பணத்திலேயே அவள் கேட்ட ரோஜாப்பூவை வாங்கிக் கொடுத்தார். அந்தப் பெண்ணுக்கு மகிழ்ச்சியில் முகமே பிரகாசமாக மாறியிருந்தது. இருவரும் வெளியே வந்தார்கள். அவர் தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தார். அலுவலகத்துக்குச் செல்ல அவருக்கு இன்னும் நேரமிருந்தது. 

ரோஜாப்பூ

``சொல்லும்மா... உன் அம்மாவைப் பார்க்க நீ எங்கே போகணும்? நானே உன்னை டிராப் பண்ணிடுறேன்...’’ 

``ரொம்ப தூரம் இல்லை சார். பக்கத்துலதான்...’’ 

``அப்பிடின்னா கார்ல ஏறு.’’ அவர் கார் கதவைத் திறந்துவிட்டார். அந்தப் பெண் பின்பக்க இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவள் வழிகாட்ட, அவர் காரை ஓட்டிக்கொண்டு போனார். சற்று நேரத்தில் அந்தப் பெண் இறங்கவேண்டிய இடம் வந்தது. அது ஒரு கல்லறைத் தோட்டம். அந்தப் பெண் இறங்குப்போது சொன்னாள்... ``ரொம்ப நன்றி சார். இன்னிக்கி என் அம்மாவோட நினைவு நாள். அவங்களுக்கு ரோஜான்னா உசுரு. அவங்களுக்குப் பிடிச்ச ரோஜாவை இன்னிக்காவது அவங்க கல்லறையில வைக்கணுமில்லையா? அதுதானே நியாயம்...’’ 

 

அவருக்கு யாரோ தலையில் அடித்தது மாதிரி இருந்தது. காரைத் திருப்பிக்கொண்டு, பூக்கடைக்குப் போனார். அவர் ஆர்டர் செய்திருந்த பூக்களை வாங்கிக்கொண்டார். முந்நூறு மைல் தொலைவில் அவருடைய அம்மா இருக்கும் ஊரை நோக்கிக் காரை விரைவாக ஓட்ட ஆரம்பித்தார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: பேலும் குகை

 

 
17CHSUJBELUM
 

ஆதி மனிதர்கள் மழை, விலங்குகள், இருட்டு போன்றவற்றிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள குகைகளில் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கான சான்றுகள் குகைகளில் உள்ள ஓவியங்களில் இருந்தும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. நூற்றுக்கணக்கான குகை வாழ் இடங்கள் இந்தியாவில் இருந்தாலும் சில குகைகள் அவற்றின் காலத்தாலும், அமைப்பாலும் குறிப்பிடத்தக்கவை. அவற்றில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பேலும் குகை முக்கியமானது.

   
17CHSUJBENUMCAVES

இந்தியத் துணைக்கண்டத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய குகையும் சமவெளியில் அமைந்துள்ள மிக நீளமான குகையும் இதுதான்! இது நிலத்தடி நீரோட்டங்களால் அமைந்த இயற்கையான குகை. குவார்ட்ஸ் மற்றும் கறுப்பு சுண்ணாம்புக்கல்லால் ஆனது. குகையின் கூரைகளில் கூம்பு வடிவ அமைப்புகள் காணப்படுகின்றன.

கி.மு. 4500-ல் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை இங்கிருந்து கண்டெடுத்துள்ளனர். மிகப் பழமையான குகையாக இருந்தாலும், வெளி உலத்துக்கு நீண்ட காலம் தெரியவில்லை. உள்ளுர் மக்களுக்கு மட்டும் இதைப் பற்றித் தெரிந்திருக்கிறது.

கி.பி 1884-ல் பிரிட்டிஷ் நிலவியல் ஆய்வாளர் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட், பேலும் குகையைக் கண்டறிந்தார். அதற்குப் பிறகும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டும் இடமாகப் பயன்படுத்தினர்.

1992-ல் டேனியல் கெபார் என்ற ஜெர்மனியர் தலைமையிலான குழுவினர், இந்தக் குகையைப் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து, இதன் மகத்துவத்தை உலகறியச் செய்தனர். நாராயண ரெட்டி, சலபதி ரெட்டி ஆகியோர் எடுத்த தொடர் முயற்சியின் பலனாக, 1999-ல் ஆந்திர அரசு இதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது.

2002-ம் ஆண்டிலிருந்து ஆந்திரா வின் முக்கியமான சுற்றுலாத் தலமானது. 3.5 கி.மீ. நீளம் கொண்ட பேலும் குகையில் 1.5 கி.மீ. நீளம் வரையே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன் புத்த, ஜைன துறவிகள் தங்கவும் தியானம் செய்யவும் உதவியாக இருந்திருக்கிறது இந்தக் குகை. புத்தத் துறவிகள் பயன்படுத்திய பொருட்களை இங்கிருந்து எடுத்து அருகில் உள்ள அனந்தபூர் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். 150 அடி ஆழத்தில் சிறிய நீர்வீழ்ச்சி இங்கே இருக்கிறது.

17CHSUJBELUMCAVE
 

இதைப் பாதாள கங்கை என்கிறார்கள். குகைக்குள் சில இடங்கள் சமதரையாக உள்ளன. சில இடங்களைக் கடக்க மிக குறுகிய வழியே உள்ளது. வெளியிலிருந்து பார்க்கும்போது சிறிய குகையாகக் காட்சியளித்தாலும், 90 அடி இறங்கியவுடன் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.

குகைக்குள் ஒளி விளக்குகளும் மின் விசிறிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. குகை முழுவதும் இயற்கையாக பலவித உருவங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.

17CHSUJBENUMCAVES1

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் இதுதான்! (Exclusive Deals)

.
 

ஒவ்வொரு வைரமும் தனித்தன்மை வாய்ந்தது. அதிக விலை கொடுத்து வாங்கும் வைர நகைகளை, சரியாகத் தேர்ந்தெடுக்க, இந்த 5 டிப்ஸ் உங்களுக்கு நிச்சயம் உதவும்!

வைரத்தின் வெட்டு (CUT): சரியாக வெட்டப்பட்ட வைரம் தன்னுடைய ஒவ்வொரு முகப்பிலும் ஒளியை எதிரொலித்து மின்னும். மாறாக ஆழமாக அல்லது அகலமாக வெட்டப்பட்ட வைரத்தில் ஒளி பக்கவாட்டிலோ, கீழ்ப் புறத்திலோ வெளியேறி பார்ப்பதற்கு சற்று டல்லாக இருக்கும். மேலும் வைரத்தின் வெட்டுதான் அதன் வடிவத்தைத் தீர்மானிக்கிறது. வட்டம், ஓவல், சதுரம், மரகதம், பியர், பிரின்சஸ், கோமேதகம் அல்லது குஷன் வடிவங்கள் மிகப்பிரபலம்.

 

brilliant_image_1_17389.jpg

இத மறந்துடாதீங்க! - வைரம் வாங்கும்போது அதை கையில் எடுத்துப் பாருங்க, வானவில்லின் வண்ணங்களை உங்களால் காண முடிந்தால் அது நல்ல வைரம்தான். உங்க ஜுவல்லர்கிட்ட வேற ‘கட்’களையும் காண்பிக்கச் சொல்லி பாருங்க.

தெளிவு (கிளாரிட்டி): 10 முறை பெரிதுபடுத்திப் பார்த்து, அதில் உள்ள சிறு கீறல்கள் வடுக்கள், எண், வகை, நிறம் மற்றும் அளவுகளைப் பொறுத்து அதற்கு ஒரு தெளிவு அளவீடு கொடுக்கப்படும் (Clarity Grade). இதில் கீறல்களே இல்லாத அரிய வகை “குறையில்லா” வைரங்கள் விலை அதிகமாக இருக்கும்.

இத மறந்துடாதீங்க! - வைரத்தோட அழகுல மயங்கிடாம, வேற வேற கிளாரிட்டி உள்ள வைரங்களை பார்த்து முடிவு பண்ணுங்க!

நிறம் : பேன்சி வண்ணங்கள் கொண்ட வைரங்கள் மிகவும் அரிதானவை. பச்சை, நீளம், மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, மற்றும் மிகவும் அரிதாகக் கிடைக்கும் சிவப்பு வண்ணத்திலும் கிடைக்கிறது. இந்த அரிய வகை வண்ணங்களை உடைய வைரங்கள் வண்ணத்தின் அடர்த்தியால் மதிப்பிடப்படும்.

brilliant_image_3_17592.jpg

இத மறந்துடாதீங்க! - இந்த வைரங்களைக் காண்பதற்கும், அணிந்து பார்ப்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளதாக இருக்கும். அதனால், வைரம் வாங்கும்போது, நீங்கள் வாங்கப்போகும் வைரத்தை கைகளில் எடுத்து வைத்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

கேரட்: வைரத்தைப் பொறுத்தவரை, பெரிதான வைரங்கள் அரிதானவை. (அதாவது, ஒரு காரட் வைரத்துக்கு, அதே வண்ணம், கிளாரிட்டி மற்றும் கட் கொண்ட இரண்டு 1/2 காரட் வைரங்களைவிட மதிப்பு அதிகம்.)

இத மறந்துடாதீங்க! - வைரங்கள் வெட்டப்படும் விதத்தைப் பொறுத்து, அவை பெரிதாகத் (அல்லது சிறியதாக) தெரியும். அதனால், பெரிய வைரத்தைப் பார்த்தவுடன் வாங்குற முடிவுக்குப் போயிடாதீங்க!

விலை: விலையுயர்ந்த பொருட்களை வாங்கும்போது விலைய பார்க்கக்கூடாதுன்னு சொன்னா நம்பாதீங்க. செய்கூலி, சேதாரம், சில்லறை விற்பனை செலவுகள்னு ஒரு இடத்துல குறைச்சு ஒரு இடத்துல அதிகப்படுத்துவாங்க. 

இத மறந்துடாதீங்க! - “பிரில்லியன்ட் கட் கோல்ட் & டைமண்ட் ஜுவல்லரி” மொத்த வியாபாரம் செய்வதாலும், நகைகளை சொந்தமாகத் தயாரிப்பதாலும், நேரடியாக அவர்களிடமே வாங்குவதாலும் சுமார் 40% குறைந்த விலையில் கொடுக்க முடிகிறது. இதனால் பல ஆயிரம் ரூபாய்கள் குறைகிறது.

brilliant_image_2_17141.jpeg

“பிரில்லியண்ட் கட்டின்” நகைகள் கைவினை நகைகளைக் காட்டிலும் 50% இலேசானதாகவும், வலுவானதாகவும் இருக்கிறது.நகையின் மாதிரி முன்கூட்டியே காண்பித்து, சம்மதம் பெறுவதால், வாங்குபவர்களுக்கும் முழு திருப்தி உண்டாகிறது. 

நீங்க வைர நகை வாங்கப் போகும்போது மேலே சொன்ன டிப்ஸுடன், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நகை வகைகளை இருப்பில் வைத்துள்ள  “பிரில்லியன்ட் கட் கோல்ட் & டைமண்ட் ஜுவல்லரி” யின் வேப்பேரி அலுவலகத்திற்குச் சென்று, நகைகளைப் பற்றிய சந்தேகங்களை நேரிலேயே தீர்த்துக்கொள்ளலாம். உங்கள் மனதுக்குப் பிடித்த வைரத்தை ஆன்லைனில் தேர்வு செய்து குறைந்த விலையிலும் வாங்கலாம்! 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 
 

 

p114b_1516194539.jpg

twitter.com/DAnandaRaj
பண்டிகை நாளில் அதிகமா உழைச்சது டீவி ரிமோட்டாதான் இருக்கும்.

twitter.com/HAJAMYDEENNKS
நியாயமாகப் பார்த்தால் போகிப் பண்டிகைக்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் பொருள்களைத்தான் முதல்ல வெளியே அள்ளிப் போடணும்...!

twitter.com/Kozhiyaar
தமிழகத்தில் ‘தற்காலிகம்’ என்பதே நிரந்தரமாகிக்கொண்டு வருகிறது!

twitter.com/HAJAMYDEENNKS
தமிழகத்தில் எடப்பாடி அரசால் வளர்ந்தது H.ராஜாவின் வாய் மட்டுமே...!

facebook.com/Karthikeyan Maddy
என்னாங்கடா... ஒரு பத்துக்கிலோ ஏறிட்டேன். அதுக்காண்டி ஒருத்தரு,

என்ன தம்பி போன வருசம் டான்சு மாஸ்டர் மாதிரி இருந்த. இந்த வருசம் ஸ்டன்ட்டு மாஸ்டர் மாதிரி ஆயிட்டங்குறாரு.

என் தம்பி, 4 வயசுதான் ஆவுது ... அண்ணனப் பாத்தா இடும்பன் சாமி மாதிரி இருக்குங்குறான்.

நேத்து தியேட்டருல என் ஒய்ப்புகிட்ட ஒரு அம்மா, பாப்பா உங்க அண்ணன்கிட்ட சொல்லி எனக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் குடும்மாங்குது.

கடைசில என்னய பெத்த அம்மாவே, என்னடா யமுனா சீரியல்ல வர ஈட்டி பாபு மாதிரி இருக்கங்குது.

ராஜபாட்டைங்குறது என்ன, மன்சூரலிகான்ங்குறது என்ன?  இருங்கடா… இன்னிக்கு எடுக்குறேன்டா சபதம். இன்னிக்கு படையல் சாப்பாட்ட மட்டும் சாப்ட்டுட்டு, நாளைலேர்ந்து எண்ணி ஏப்ரல் மாசத்துக்கு அப்றம் பாருங்கடா... கொறச்சிட்டு வந்து வெச்சிக்கிறேன்.

p114aa_1516194566.jpg

twitter.com/withkaran
முன்னவிட இப்ப மக்கள் அதிக ஆர்வமா பொங்கல் வைக்கிறாங்க... அதிகமா கோயில் போறாங்க... பெரியார் புக்கு அதிகம் விக்குது... டாஸ்மாக்ல கூட்டம் கூடிட்டே போகுது...

twitter.com/Kozhiyaar
‘வரும்பொழுது ஒரு கிலோ ‘சீரக சம்பா’ வாங்கிட்டு வாங்க’ன்னு‌ போன் வருது!

இன்னிக்கு எந்தச் சமையல் நிகழ்ச்சிய பார்த்தாங்களோ?!

ஐயோ, இப்பவே தொண்டையக் கவ்வுதே!

twitter.com/Kadharb32402180
ஏண்ணே, கலர் கலரா டிரஸ் போட்டு பாதயாத்திரை போறீங்களே, ஐயப்பனுக்கா, முருகனுக்கா..?

யோவ், நாங்களே பொங்கலுக்கு பஸ்சு கிடைக்காம  ஊருக்கு நடந்து  போறோம்யா...

p114a_1516194589.jpg

twitter.com/sultan_Twitz
வெளிநாட்டில் இருந்து “அடுத்த மாதம் ஊருக்கு வாரேன்னு” சொல்ற மாதிரி... நம்ம ஊருல ஆளுக்காளு அடுத்த மாதம் “அரசியலுக்கு வாரேன்னுட்டு” சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..!

twitter.com/sThivagaran
ஒவ்வொரு கொண்டாட்டத்தின் முடிவிலும் ஏதோ ஒரு துன்பம் எஞ்சியிருக்கிறது. பொங்கலில் அது பானை கழுவுவதாய் இருக்கிறது!

twitter.com/Kadharb32402180
குழந்தைக்கு 40 ரூபாய்க்கு ஒண்ணுமே இல்லாத கிண்டர்ஜாய் வாங்கிக் குடுத்துட்டு, கரும்புக்குப் பேரம்பேசற சமூகத்தில்தான் வாழ்கிறோம்.

twitter.com/ashoker
அன்னிக்குக் கூட்டம் இதே நாள்ல ரிலீசான தூள் படத்துலதான் நின்னுச்சு. ஆனா, அன்பே சிவம்தான் தமிழ்சினிமா வரலாற்றுல நின்னுச்சு.
#15YearsOfAnbeSivam

p114_1516194628.jpg

facebook.com/Karl Max Ganapathy
நீ பஸ்ஸ புடிச்சி, ஆட்டோவ புடிச்சி, வெளியீட்டு விழாவுக்குப் போயி அங்க சில பல போட்டோ புடிச்சி பேஸ்புக்ல போட்டு, இலக்கியத்த வளர்த்தது இருக்கட்டும். விழாவுக்குப் போனியே... அந்த புத்தகத்தை வாங்குனியா இல்லையா, அத சொல்லு.

twitter.com/HAJAMYDEENNKS
டிவியில ஒரே நாளில் பல படங்களைப் பார்த்துவிடலாம் என்பதுதான் இன்றைய பண்டிகைக்காலக் கொண்டாட்டங்கள்..!

twitter.com/SKTWTZ
பண்டிகைக் காலங்களில் சந்தோஷம் நிரம்பி வழியுதோ இல்லையோ வாட்ஸப்பில் வாழ்த்துகள் நிரம்பி வழிகின்றன!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory

 
 

கதை

‘வன்முறையின் மிக மோசமான வடிவம்தான் வறுமை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் மகாத்மா காந்தி. இயற்கையும் அதன் வளங்களும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது: அப்படியிருந்தும் பல கோடிப் பேர் இந்த உலகில் ஏழ்மையில் வாழ்வது மற்றவர்கள் அவர்கள் மேல் செலுத்திய வன்முறையல்லாமல் வேறு என்ன? இது விவாதிக்கப்படவேண்டிய பெரும் பிரச்னை. இது ஒருபுறம் இருக்கட்டும். வாழ்க்கையை நாம் எப்படி அணுகுகிறோம், எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நாம் ஏழையாக வாழ்கிறோமா, பணக்காரராக வாழ்கிறோமா என்பதும் அமையும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது `சே... என்னடா வாழ்க்கை!’ என்கிற சலிப்பு ஏற்படாத மனிதர்கள் நம்மில் வெகுக் குறைவு. உண்மையில், பணக்காரர்களாக வாழ்கிறவர்களெல்லாம் பணக்காரர்களா... ஏழைகளாக வாழ்கிறவர்களெல்லாம் ஏழைகள்தானா? இதற்கு புது விளக்கம் தரும் கதை ஒன்று உண்டு.

 

ஐரோப்பிய நாடுகளில் குழந்தை வளர்ப்பில் சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளைத் தனியறையில் வளர்ப்பார்கள்; ஒழுங்கு நடவடிக்கைகளில் கண்டிப்பாக இருப்பார்கள்; பல விஷயங்களை வலிந்து திணித்துக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சிப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் அந்தப் பணக்காரர். இங்கிலாந்திலிருந்தார். தன் 10 வயது மகன் தாங்கள் வாழும் வசதியான வாழ்க்கையை அறிந்திருக்கிறான். ஏழைகளின் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது, சிரமமானது என்று அவன் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அவனை ஒருநாள் சற்று தூரத்திலிருந்த கிராமங்களுக்கும், விவசாயப் பண்ணைகளுக்கும், ஏழைகள் அதிகம் வாழும் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றார்.

நட்சத்திரங்கள்

இரண்டு நாள்களுக்கும் மேலாக, இரவும் பகலும் ஏழைகள் வசிக்கும் பகுதிகளில், விவசாயப் பண்ணைகளில் அப்பாவும் மகனுமாகச் சுற்றி வந்தார்கள். பிறகு வீட்டுக்குக் கிளம்பினார்கள். வரும் வழியில் அப்பா கேட்டார்... ``என்னப்பா இந்த ட்ரிப் எப்படியிருந்துச்சு?’’

``பிரமாதம்ப்பா.’’

``அந்த ஏழை மக்கள் எப்படி வாழுறாங்கனு பார்த்தியா?’’

``பார்த்தேனே...’’

``அப்படின்னா சொல்லு... இந்தப் பயணத்துல நீ என்ன கத்துக்கிட்டே?’’

விளக்குகள்

பையன் சொல்ல ஆரம்பித்தான்... “நாம ஒரே ஒரு நாய் வளர்க்கறோம். அதையும் சங்கிலியில கட்டிப்போட்டுவெச்சிருக்கோம்; அவங்களோ அஞ்சாறு நாய்களை வளர்க்கறாங்க... அதுங்களை சுதந்திரமா உலவவிட்டிருக்காங்க. நம்ம தோட்டத்துக்கு நடுவுல சின்னதா ஒரு நீச்சல்குளம் இருக்கு; அவங்க குளிக்கிறதுக்கு ஒரு ஆறே இருக்கு... அதுவும் ஒரு முடிவே இல்லாம பெருசா, நீளமா நீண்டுகிட்டே போகுது. நம்ம தோட்டத்துல ராத்திரியில எரியவிடுறதுக்கு இறக்குமதி செஞ்ச அழகழகான லாந்தர் விளக்குகளைவெச்சிருக்கோம்; அவங்களுக்கு வானத்துல நட்சத்திரங்கள் இருக்கு. நம்ம வீட்டுக்கு முன்னாடி சின்னதா முற்றம் இருக்கு; அவங்களுக்கு முன்னால இருக்குற நிலமோ அந்தத் தொடுவானம் வரைக்கும் விரிஞ்சு, பரந்திருக்கு. நாம நமக்கான குட்டி நிலத்துல வாழுறோம்; அவங்களுக்கோ நம்ம கண்ணுக்கெட்டின தூரத்தையும் தாண்டி நிலமிருக்கு. நாம நமக்காக வேலை பார்க்க வேலைக்காரங்களைவெச்சிருக்கோம்; அவங்க மத்தவங்களுக்காக வேலை பார்க்குற சேவையைச் செய்யறாங்க. நாம நமக்கான உணவை விலை கொடுத்து வாங்குறோம்; அவங்க அவங்களுக்கான உணவை அவங்களே வளர்த்து, அறுவடை செஞ்சுக்கறாங்க. நம்மையும் நம்ம சொத்துகளையும் காப்பாத்திக்க நாம வீட்டைச் சுத்தி சுவர் எழுப்பிவெச்சிருக்கோம்; அவங்க அவங்களைக் காப்பாத்திக்க நண்பர்களை வெச்சிருக்காங்க...’’

பையன் சொல்லிக்கொண்டே போக, அப்பா வாயடைத்துப் போனார்.

அப்பா - மகன்

 

கடைசியாகப் பையன் சொன்னான்... “நாம எவ்வளவு ஏழைங்கனு எனக்குக் காண்பிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா!”*

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்: 19-1-1903

 
அ-அ+

ஐக்கிய அமெரிக்கா- இங்கிலாந்துக்கு இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாளாகும். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து அன்டெஸ்சைக் கடந்தது.

 
 
 
 
அமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்: 19-1-1903
 
ஐக்கிய அமெரிக்கா- இங்கிலாந்துக்கு இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாளாகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து அன்டெஸ்சைக் கடந்தது.
 
* 1829 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தாவின் பவுஸ்ட் பகுதி 1 பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது. * 1839 – பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனி ஏமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.
* 1853 – ஜூசெப்பே வேர்டியின் ஆப்பெரா இல் ட்ரவடோர் ரோமில் பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது.
 
* 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜார்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது.


* 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மில் ஸ்பிரிங்ஸ் சண்டையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தனது முதல் பெரிய தோல்வியை பெற்றது.
 
* 1899 – ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.
 
* 1917 – லண்டனில் ஆயுதக் கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.
 
* 1920 – அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத்தில் சேறுவதிற்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றியது.
 
* 1927 – பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.
 
* 1937 – ஹோவார்ட் ஹியூஸ் லாஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூயார்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 நொடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.
 
* 1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கினர்.
 
* 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர். *
 
1949 – கூபா இசுரேலை கண்டுகொண்டது.


* 1966 – இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
* 1981 – ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
* 1983 – நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.
 
* 1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது.
 
* 1993 - வேதி ஆயுத உடன்படிக்கை (CWC) கையொப்பமிடப்பட்டது.
 
* 1993 - ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நட்டத்தை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வேறொரு நிறுவனம் இந்த அளவில் நட்டம் அடைந்ததில்லை.


* 1997 – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார்.
 
* 2006 – சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.
 
* 2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.
 
* 2007 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஓஷோ பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, வருகை தந்தார்..! ஓஷோ நினைவுகள்

 
 

'ஓஷோ பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, பூமிக்கு வருகை தந்தார்' என்றே அவரது நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவர் என்று புகழப்படும் ஓஷோ தனது பொன்மொழிகளாலும், தத்துவக் கதைகளாலும் புகழப்படுபவர். ' நீ நீதான், உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை' என்று மனிதர்களிடையே நம்பிக்கைகளை விதைத்தவர் ஓஷோ.

ஓஷோ

 

இவர் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் குச்வாடா என்ற நகரில் 1931-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் நாள் பிறந்தார். ஓஷோவின் உண்மையான பெயர் சந்திரமோகன் ஜெயின் என்பதே. இவர் 1970-களில் பகவான் ரஜினீஷ் என்ற பெயரால் வளர்ச்சியடைந்த தியான முறைகளை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். எதையுமே துறக்க வேண்டியதில்லை, மனதை மட்டும் கட்டுப்படுத்தினால் போதுமானது என்ற இவரது புதிய முறையிலான தத்துவங்கள் உலகெங்கும் பரவி பல சீடர்களை உருவாக்கியது.

அமெரிக்காவில் குடியேறி ஆசிரமத்தை அமைத்து ஒரு புதிய தத்துவ உலகை அங்குள்ள மக்களிடையே உண்டாக்கினார். உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே இருந்த பாசாங்கு சடங்குகளைக் கண்டித்து விழிப்பு உணர்வை உருவாக்கினார். இதனால் பல சச்சரவுகளை அவர் சந்தித்தார். ஓயாத அவரது தத்துவ பிரசாரங்களை ஒருவாறாக முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார். 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதியன்று மாலை 5 மணியளவில் இயற்கையோடு இணைந்து காலமானார் ஓஷோ.

ரஜினீஷ்

 

உலகெங்கும் அதிர்ச்சியலைகளை உருவாக்கிய அவரது மரணமும் மர்மமாக விமர்சிக்கப்பட்டது. தத்துவ உலகின் நவீன சிற்பி என்று புகழப்படும் ஓஷோ மறைந்த தினம் இன்று தான். 'மரணத்தில் இருந்து என்னை தப்புவிக்க செய்யாதீர்கள்; நான் அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்' என்று கூறியவாறே உயிரை விட்ட ஓஷோ, தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களுக்கு ஒரு தலை சிறந்த ஆசான். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

``என் கணவருக்கு டஃப் கொடுக்கதான் சமைக்க ஆரம்பிச்சேன்!” - ‘மெட்ராஸ் சமையல்’ ஸ்டெபி

 
 

சமைப்பது அனைத்துப் பெண்களுக்கும் பிடித்த விஷயம். ‘பார்த்துப் பார்த்து ருசியா சமைச்சாலும் வீட்டுல ஏதாச்சும் குறை சொல்றாங்க. எப்படித்தான் திருப்திப்படுத்தறதுனே தெரியலை' என்கிற புலம்பலும் இங்கே அதிகம். அவங்க எல்லாம் விசிட் பண்ணவேண்டிய யூடியூப் சேனல், 'மெட்ராஸ் சமையல்'. ஒவ்வொரு சமையலையும் அழகுத் தமிழில் கத்துக்கொடுக்கிறார், ஸ்டெபி. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் மணம் மாறாமல் பேசும் ஸ்டெபியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். 

'madras samayal' steffi

 

“என் சொந்த ஊர் நாகர்கோவில். படிச்சது ஹாஸ்டலில். சனி, ஞாயிறு விடுமுறையில்தான் வீட்டுக்குப் போவேன். அப்போ அம்மாவோடு சேர்ந்து சமைப்பேன். அதுக்கு மேலே சமையலில் ஆர்வம் இருந்ததில்லே. படிப்பு முடிஞ்சு மூணு வருஷம் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. கல்யாணத்துக்கு அப்புறம் கணவருடன் அமெரிக்கா வந்துட்டேன். இங்கே தனிமையால் ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சது. கணவருக்காக விதவிதமா சமைக்க ஆரம்பிச்சேன். அவரைச் சாப்பாட்டு விஷயத்தில் அடிச்சுக்க முடியாது. டேஸ்ட்டில் சின்னக் குறையையும் சரியா கண்டுபிடிச்சுடுவார். அப்படி அவர் எந்தக் குறையும் கண்டுபிடிக்கக்கூடாதுனு சவாலா செய்ய ஆரம்பிச்சேன்.

'மெட்ராஸ் சமையல்' ஸ்டெபி

ஒருநாள் 'நீ நல்லா சமைக்கிறே. உன் சமையலை மத்தவங்களுக்கும் சொல்லிக்கொடுக்கலாமே'னு சொன்னார். எனக்கும் சும்மாவே இருக்கிறதுக்கு உருப்படியா ஏதாவது பண்ணலாமேனு தோணுச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சோம். தமிழ்நாட்டின் எல்லா ஊரைச் சேர்ந்தவங்களும் சென்னையில் இருப்பாங்க. அதேமாதிரி எல்லாச் சமையலும் இருக்கும்னு 'மெட்ராஸ் சமையல்' எனப் பெயர் வெச்சோம்'' என நீளமான இன்ட்ரோ கொடுத்துவிட்டு தொடர்கிறார் ஸ்டெபி. 

மெட்ராஸ் சமையல் ஸ்டெபி

“ஆரம்பத்துல வியூஸ் பெருசா இல்லே. போகப்போக நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு வியூஸ் கிடைச்சது. இப்போ எங்க சேனலை இரண்டரை லட்சம் பேர் பார்க்கிறாங்க. அந்த அளவுக்கு மக்களுக்கு என் சமையல் பிடிச்சிருக்குனு நினைக்கிறப்போ மனசு றெக்கை கட்டி பறக்குது. சமையலில் மட்டும் அக்கறை காட்டாமல் என்னுடைய சமையல் அறை மீதும் அதிக அக்கறை காட்டுவேன். சமைக்குற இடத்தை அழகா வைக்குறதுக்காக நிறைய கஷ்டப்படுவேன். விதவிதமா பார்த்துப்பார்த்து ஒவ்வொரு சாமான்களையும் வாங்குவேன். என்னுடைய ஒவ்வொரு சமையல் வீடியோவிலும் என் சமையல் அறை வித்தியாசமா இருக்குற மாதிரி பார்த்துப்பேன். ஒரு சமையலை ஒருமுறைக்கு ரெண்டு முறை ரிகர்சல் செய்து பார்ப்பேன். எனக்கு திருப்தியானதுக்கு அப்புறம்தான் மறுபடியும் ஆரம்பிச்சு வீடியோவாக எடுப்பேன். ஒரு வாரத்தில் ரெண்டு நாள் வீடியோ. அடுத்த ரெண்டு நாள் எடிட். அப்புறமா அப்ளோடு பண்ணுவேன். 

மெட்ராஸ் சமையல் ஸ்டெபி

 

சமைக்கிறதை போஸ்ட் பண்றதோடு நிறுத்திடாமல், வியூவர்ஸ் கேட்கும் ரெசிப்பிகளையும் சொல்லித்தரேன். என் அம்மா, மாமியார், ஃப்ரண்ட்ஸ் மூலமும் தெரியாத பல மெனுவைக் கத்துக்கிறேன். வீடியோ எடுக்கிறதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை செய்து பார்க்கிறதால் நிறையப் பொருள்கள் வாங்கவேண்டியிருக்கும். என் கணவர் 'அதைப் பற்றியெல்லாம் யோசிக்காதே. உன் பேஜ் பலருக்கும் பயன் கொடுக்குது. நல்ல நல்ல சமையலை சொல்லிக்கொடுத்துட்டே இரு'னு உற்சாகப்படுத்துவார். இந்த பேஜ் மூலம் வரும் வருமானம் சமையல் பொருள்கள் வாங்கவே சரியா இருக்கும். ஆனாலும், எனக்குத் தெரிஞ்சதை நாலு பேருக்குச் சொல்லிக்கொடுக்கும் சந்தோஷம், மனசுக்கு நிறைவு கொடுக்குது. இதுக்குக் காரணமான என் கணவருக்கும் குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் நன்றி'' என்று நெகிழ்கிறார் ஸ்டெபி.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இலங்கை, தென்னாப்பிரிக்கா காசுகள்: சேதுக்கரையில் கண்டெடுத்த அரசு பள்ளி மாணவர்கள்

 

 
18marafisouthafrira-coin

1941 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா பென்னி காசு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளை ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றை விடுமுறை நாள்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

18marafistud-pathselvam

மாணவர் பாதசெல்வம்.

பாண்டியர், சோழர், டச்சுக்காரர் கால காசுகளை ஏற்கெனவே கண்டெடுத்து சேகரித்துள்ள அவர்கள், தற்போது இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேயா நாடுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகளை கண்டெடுத்துள்ளனர்.

இது பற்றி ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே. ராஜகுரு கூறியதாவது :

திருப்புல்லாணியுடன் வெளிநாட்டு தொடர்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்கள் ராமாயாண காலத்துடன் தொடர்புடையவை. சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் முன்னோர் காலத்திலேயே இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்வார்கள். மேலும், வைகையின் கிளை ஆறான கொற்றக்குடி ஆறு, திருப்புல்லாணி வழியாகச் சென்று சேதுக்கரையில் கடலில் கலக்கிறது. இதனால் இந்தக் கடலோரம் பழங்காலக் காசுகள் கிடைப்பதுண்டு.

ஆங்கிலேயர் ஆட்சியில், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. புனித நீராட இலங்கையில் இருந்து மக்கள் இங்கு வந்துள்ளனர். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு வேலைக்காகச் சென்று திரும்பி வந்தபோது, அங்குள்ள காசுகளை கொண்டு வந்துள்ளனர்.

திருப்புல்லாணி இந்திரா நகரைச் சேர்ந்த பாதசெல்வம் என்ற எட்டாம் வகுப்பு மாணவர், இலங்கை சதம் காசுகளை சேதுக்கரையிலும், தென்னாப்பிரிக்கா பென்னி காசை திருப்புல்லாணியிலும் கண்டெடுத்துள்ளார்.

 

18marafistudent-visali

மாணவி விசாலி.

இலங்கை தாளிப்பனை காசுகள்

இலங்கை காசு 1 சதம் ஒன்றும், அரை சதம் இரண்டும் கிடைத்துள்ளன. இவை கி.பி. 1901, 1912, 1926-ம் ஆண்டுகளைச் சேர்ந்தவை.

இவற்றின் ஒரு பக்கத்தில் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின் மார்பளவு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் தாளிப்பனை மரம் உள்ளது. அதன் அருகில் காசின் மதிப்பு தமிழிலும், சிங்களத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில் அரை என்னும் பின்னம் பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் உள்ளதைப் போன்ற தமிழ் எண்ணுருவில் உள்ளது. தாளிப்பனை இலங்கையில் அதிகம் காணப்படும் பனை மர வகை ஆகும். இவை வட்டவடிவ செப்புக் காசுகள் ஆகும்.

 

தென்னாப்பிரிக்கா பென்னி

1 பென்னி காசு தென்னாப்பிரிக்கா ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்தபோது, கி.பி. 1941-ல் ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் வெளியிடப்பட்டது. இதில் மன்னர் மற்றும் பாய்மரக் கப்பலின் படங்கள் உள்ளன. இது பெரிய அளவிலான வட்டவடிவ வெண்கலக் காசு ஆகும்.

18marafimalayacoin

1943 ஆம் ஆண்டு மலேயா காசு.

 

 

மலேயா சென்ட்

திருப்புல்லாணியைச் சேர்ந்த விசாலி என்ற பத்தாம் வகுப்பு மாணவியின் பாட்டனார் குப்பு, இந்திய விடுதலைக்கு முன், மலேசியா பினாங்குக்கு வேலைக்காக சென்று திரும்பி வந்தபோது 1 சென்ட் காசை அங்கிருந்து கொண்டு வந்துள்ளார். இதை இம்மாணவி வீட்டில் இருந்த பழைய பெட்டியில் தேடி எடுத்துள்ளார்.

18marafisrilanga-coins

1901, 1912, 1926 ஆண்டுகளைச் சேர்ந்த இலங்கை தாளிப்பணை காசுகள்.

இது ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1943 இல் வெளியிடப்பட்டது. சதுர வடிவத்தில் உள்ள இதன் முனை வட்டமானது. வெண்கலக் காசு. ‘கமிஷனர்ஸ் ஆப் கரன்சி மலேயா’வால் இது வெளியிடப்பட்டுள்ளது. பினாங்கு தற்போதைய மலேசியாவின் ஒரு மாநிலமாக உள்ளது, என்றார்.

வரலாற்றின் ஆதாரமாக இந்த காசுகள் உள்ளன. இப்பகுதிகளில் கிடைக்கும் காசுகளை தேடிக் கண்டறிந்து சேகரிக்கும் பணியை மாணவர்கள் செய்து வருவதன் மூலம், நமது வரலாற்றை வெளிக்கொண்டு வரும் அரிய பணியையும் அவர்கள் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
உலகின் சமீபத்திய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு
  • தொடங்கியவர்

முகத்தை அழகாகக் காட்டும் செல்போன் செயலி: வடகொரியாவில் அறிமுகம்

 
வட கொரியாவின் முதல் பியூட்டி ஆஃப் அறிமுகம்படத்தின் காப்புரிமைDPRK TODAY

தங்களது முகங்களை வித்தியாசமான வடிவங்களில் பார்க்க உதவும் "பியூட்டி ஆப்" எனப்படும் முகத்தை அழகாக்கி காட்டும் செயலி முதல் முறையாக வட கொரியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முகத்தை அழகாக்கி காட்டும் கைபேசி செயலிகள் உலகம் முழுவதும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கம்யூனிச நாடான வட கொரியாவில் முதல் முறையாக போம்ஹயங்கி 1.0 (ஸ்பிரிங் சென்ட்) என்ற "பியூட்டி ஆப்" திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்காக வெளியிடப்படுகிறது.

வட கொரிய செய்தி நிறுவனமான டிபிஆர்கே டுடேவின் செய்தியின்படி, இந்த செயலியானது அதன் பயன்பாட்டாளர்களுக்கு "எந்த விதமான ஒப்பனை யுக்திகள் தங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை செயலியிலுள்ள வேறுபட்ட தெரிவுகளை பயன்படுத்தி தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலியை உருவாக்கிய கேயான்ஹங் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தங்களது செயலி "வட கொரிய பெண்களிடமிருந்து மிகவும் நல்லவிதமான கருத்துகளை பெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

"நீங்கள் அழகாவதை நீங்களே பார்ப்பீர்கள்" என்று அந்த செயலியின் முன்னோட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியாவின் முதல் பியூட்டி ஆஃப் அறிமுகம்படத்தின் காப்புரிமைARIRANG-MEARI

வட கொரியாவில் சட்டவிரோதமாக பார்க்கப்படும் தென் கொரிய நாடகங்களின் விளைவாக நாட்டில் சரும பராமரிப்பு மற்றும் அழகு சார்ந்த விடயங்களில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது சோலை தலையிடமாகக்கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான டெய்லி என்கே,.

வட கொரியாவில் இரண்டு அதிகாரப்பூர்வ தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அந்நாட்டின் எல்லையை கடந்து உள்ள உலகின் மற்ற பகுதிகளை தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ தொடர்பு கொள்வதென்பது தொழில்நுட்பரீதியாக அந்நாட்டில் சாத்தியமில்லை.

மாறாக, உலகளாவிய அளவில் கிடைக்கக்கூடிய செய்தி, தகவல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான வளர்ந்து வரும் உள்நாட்டு சந்தை உள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் பல்வேறு கணினி இயங்குதளங்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் "சாக்கர் பியர்ஸ் பாட்டில்" என்னும் முப்பரிமாண கால்பந்து விளையாட்டை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அமெரிக்க ராணுவத்தினரை எதிரிகளாக கொண்ட "ஹன்டிங் யாங்கீ" என்னும் விளையாட்டும் மிகவும் பிரபலமானது என்கிறது சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்னும் பத்திரிக்கை.

வட கொரியாவின் முதல் பியூட்டி ஆஃப் அறிமுகம்படத்தின் காப்புரிமைAFP

வட கொரியா தனக்கென பிரத்யேக கையடக்க கணினிகளையும், உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதள பதிப்பையும், 35 இலட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களையும் கொண்டுள்ளதென ஜப்பானின் நிக்கி செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வட கொரியா மற்ற நாடுகளிலிருந்து ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையிலுள்ள ஓட்டைகளைத் தவறாக பயன்படுத்தி சீனாவிலிருந்து கைபேசி மற்றும் மற்ற மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதால், அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடுகளினால் அதன் அளவை சரியாக வரையறுக்க இயவில்லை.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

தனிமையில் வாடுவோர் நலன் காக்க தனி அமைச்சகம் உள்ளது எந்த நாட்டில்?

 

தனிமையில் வாடுவோர் பிரச்சினையை தேசியப் பிரச்சினையாகக் கருதி அதைக் கையாள தனி அமைச்சகத்தையே உருவாக்கிய நாடு எது தெரியுமா? அங்கே தனிமையில் வாடுவோர் எந்தப் பிரிவினர், ஏன் தெரியுமா?

  • தொடங்கியவர்

முதல் அதிகாரபூர்வமான கூடைப் பந்தாட்ட போட்டி மசாச்சூசெட்டில் இடம்பெற்ற நாள்: 20-1-1892

 
முதல் அதிகாரபூர்வமான கூடைப் பந்தாட்ட போட்டி மசாச்சூசெட்டில் இடம்பெற்ற நாள்: 20-1-1892
 
கனடாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் நகரில் வாழ்ந்த முனைவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் 1891-ல் இந்த விளையாட்டு பிறந்தது. பின்னர், 1892ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி அதிகாரபூர்வமான ஆட்டம் நடைபெற்றது.

இன்றை நாள் வட அமெரிக்காவில் மிகப்பெரிய கூடைப்பந்தாட்டச் சங்கமும் உலகில் மக்கள் செல்வாக்கு மிகுந்த கூடைப்பந்தாட்டச் சங்கமும் ஆக என்.பி.ஏ. காணப்படுகிறது. ஐரோப்பாவின் கூடைப்பந்தாட்டச் சங்கங்களில் ஐரோலீக் மிகப்பெரியதும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்ததும் ஆகும். சீனக் கூடைப்பந்தட்டச் சங்கம், ஆஸ்திரேலிய தேசியக் கூடைப்பந்தாட்டச் சங்கம், தென்னமெரிக்கச் சங்கம் உலகில் வேறு சில குறிப்பிட்டதாக்க கூடைப்பைந்தாட்டச் சங்கங்கள் ஆகும்.

"ஃபீபா", அல்லது பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணிஎன்பது உலகில் மிகப்பெரிய பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். இச்சங்கத்தில் என்.பி.ஏ. மற்றும் ஆஸ்திரேலியாவின் கூடைப்பந்துச் சங்கம் தவிர பல்வேறு தேசிய கூடைப்பந்துச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கம் பல நாடுகளிலுள்ள கூடைப்பந்தாட்ட வழக்கங்களையும் சட்டங்களையும் உருவாக்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு பன்னாட்டு போட்டியை ஃபீபா ஒழுங்குபடுத்தி நடத்துகிறது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. 1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார். 1969 - முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1981 - ரொனால்ட் ரீகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது. 1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.

1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது. 1992 - பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 2001 - பிலிப்பைன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

அதிபராக ட்ரம்ப்பின் ஓராண்டு செயல்பாடுகள் எப்படி?- அமெரிக்கச் சுட்டிகளின் ஜாலி கமென்ட்ஸ்#Viral Video

 
 

Kids

அமெரிக்க அதிபராக, ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி பொறுப்பேற்றார். இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்துள்ளார். முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் தடைவிதித்தது, வடகொரியாவுடன் வார்த்தை மோதல், ஹெச்.1பி விசா கட்டுப்பாடுகள், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது என ட்ரம்ப் எடுத்த முடிவுகள் ஒவ்வொன்றும் அதிரடிதான். 

 


இந்நிலையில், அமெரிக்க அதிபராக ட்ரம்பின் ஓராண்டு செயல்பாடுகள் எப்படி என அமெரிக்காவைச் சேர்ந்த குட்டிக் குழந்தைகளிடம் ஏ.பி.சி என்ற சேனல் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளிடம் ருசிகரமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள், முழித்தபடி வெகுளியாகப் பதில் அளிக்கிறார்கள். 

பேட்டியில் வரும் கருப்பினச் சிறுமி, ட்ரம்ப்பின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை. குறிப்பாக, அவர் மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டப் போவதாக அறிவித்திருப்பது பிடிக்காத விஷயம் என்று தெரிவிக்கிறார். வடகொரியாவுடன் மோதலை கடைப்பிடிப்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று இன்னொரு சிறுவன் கூறுகிறான். ஒருசில குழந்தைகள், ட்ரம்பின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுகிறார்கள். ட்ரம்ப் என்றால் முதலில் எது நினைவுக்கு வரும் என்ற கேள்விக்கு, அவருடைய  விரல்களும் ஆரஞ்சு நிற முகமும் நினைவுக்கு வரும் என்று ஒரு சிறுவன் சொல்கிறான். வீடியோவில் பேசும் குழந்தைகளின் உடல் மொழிகளும் அவர்கள் அளிக்கும் முகபாவனைகளும் ரசிக்கும்படி உள்ளன. இந்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம்... நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! ஊர் சுத்தலாம் வாங்க

 

 

athirappally

புரூஸ்லினா அடிக்கணும்; கமல்னா நடிக்கணும்; பாம்னா வெடிக்கணும்; காதலினா அணைக்கணும்; அருவினா..... குளிக்கணும்! ஆனால், ஓர் அருவி மட்டும் இதுக்குச் சரிப்பட்டு வராது. அது - அதிரப்பள்ளி. (Athirappally) "அப்புறம் என்னாத்துக்கு அங்க போகணும்" என்று இந்தக் கட்டுரையை முழுதாகப் படித்த பிறகும் உங்களுக்குத் தோன்றினால், உங்களுக்கு கவுன்சலிங் தேவை. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி எனும் இடத்தில் உள்ள அதிரப்பள்ளியில், சுனாமியில் ஸ்விம்மிங் போடுறவங்களாலகூட குளிக்க முடியாது என்பதுதான் ஸ்பெஷல். ஆனால், தினசரி அதிரப்பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கை, நம் தமிழ்நாடு டாஸ்மாக் வாடிக்கையாளர்களைவிட அதிகம்.

"நீங்க வந்தா மட்டும் போதும்" என்று சொல்லும் 'சிவாஜி' ரஜினிபோல், 'பார்த்தா மட்டும் போதும்' எனும் மயக்க நிலைக்கு நம்மைத் தள்ளுவது அதிரப்பள்ளி அருவியின் அம்சம். 'நெருப்பில்லாமல் புகைகிறது அருவி' என்று வைரமுத்து ஒரு கவிதை பாடியது, அதிரப்பள்ளிக்குப் பொருந்தும். வெள்ளையாகப் புகையும் அருவி மட்டும் இதற்குக் காரணமில்லை; அதிரப்பள்ளிக்குச் செல்லும் அதிரிபுதிரி ரூட்டும் ஒரு காரணம். 'பில்ட்-அப்பை விட்டுட்டு ரூட்டைச் சொல்லுய்யா' என்று பேட் வேர்ட்ஸில் நீங்கள் திட்டுவது கேட்கிறது. 

சில காட்டு வழிகள் போல் ஒன்வே இல்லை. அதிரப்பள்ளிக்கு சில பல ரூட்கள் வெவ்வேறு திசையிலிருந்து இருக்கின்றன. கொச்சியிலிருந்து ஒரு பாதை உண்டு. இது 72 கி.மீ. எர்ணாகுளத்திலிருந்து கேரள நெடுஞ்சாலையில் அங்கமாலி தாண்டி வலதுபுறம் அதிரப்பள்ளிக்குச் செல்ல ஓர் அருமையான ரூட் இருக்கிறது. கேரளா போய்த்தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லை; தமிழ்நாட்டிலிருந்து பொள்ளாச்சி, வால்பாறை, சோலையார் வழியாகவும் அதிரப்பள்ளிக்கு ஒரு க்ளீஷேவான ரூட் இருக்கிறது. நான் இதைத்தான் தேர்ந்தெடுத்திருந்தேன். 

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை வழியாக அதிரப்பள்ளி போவதுதான் என் திட்டம். அதிரப்பள்ளியின் அழகைப் பற்றி ஏற்கெனவே பல கவிஞர்கள் வர்ணித்துத் தள்ளியிருந்ததை பல பிளாக்குகளில் வாசித்தது நினைவுக்கு வந்தது. 'Stop Wishing; Start Doing' என்று எனக்கு நானே வெறியேற்றிவிட்டுக் கிளம்பினேன். காலையில் ஆழியாரில் குரங்குகளோடு குரங்காய் ஒரு செல்ஃபி. அப்படியே ஆழியார் செக்போஸ்ட்டில் நுழைந்தபோது, வழக்கம்போல காரை சும்மானாச்சுக்கும் செக்கிங் பண்ணினார்கள். எதுவும் சிக்கவில்லை. 'எங்க? எதுக்கு? என்னைக்கு ரிட்டர்ன்? இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா? வேற யாரும் இல்லையா? கேமரா இருக்கா?' என்று மனைவியைவிடக் கேள்வி கேட்டார்கள். இங்கே 4 மணி வரைதான் என்ட்ரிக்கான அனுமதி கிடைக்கும். பெண்கள், குழந்தைகள் என ஃபேமிலியாக வந்தவர்களுக்கு மட்டும் செக்கிங் கிடையாது. ஆனால் மனைவியுடன் மட்டும் வந்தால், திருமண சர்ட்டிஃபிகேட்டெல்லாம் கேட்பார்கள் போல! தமிழ்நாடு ஃபாரஸ்ட் டூரிஸம் கடமை வியக்க வைத்தது.

Athirappally

 

அதிகபட்சம் மாலை 4.30-க்குள் ஆழியார் செக்போஸ்ட்டில் கையெழுத்திடுவதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். போகும் வழியிலேயே இடதுபுறம் அருமையான ஒரு வியூ பாயின்ட்டில் யானைகள் கும்பலாக மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு படத்தில் ஓப்பனிங் சாங்கே நம்மை உற்சாகமாக்கிவிட்டால், மொத்தப் படத்தையும் பார்க்க ஆர்வமாகி விடுவோமே... அதுபோல் அதிரப்பள்ளி டூர் இன்னும் வெறியேற்றியது. குழந்தைகள் கார்ட்டூனை ரசித்துப் பார்ப்பதுபோல், யானையார்களைத் தூரத்திலிருந்து பார்ப்பது செம ஃபன்னாக இருந்தது.

சிலருக்கு மலைப் பாதையில் காரில் செல்லும்போது தலைச்சுற்றல், வாந்தி, கூடவே பேதி எல்லாமே வான்டட் ஆக வண்டி ஏறும். இதற்கு 'Motion Sickness' என்று பெயர். கார் நகரும்போது தெரியும் காட்சிகளை பேலன்ஸ் செய்ய முடியாமல் மூளை திணறுவதுதான் 'மோஷன் சிக்னெஸ்'. இதற்கு ஒரு சரியான தீர்வு இருக்கிறது. டிரைவருக்குப் பக்கத்துச் சீட்டில் அமர்ந்து, பக்கவாட்டில் வேடிக்கை பார்க்காமல் நேராக ரோட்டைப் பார்த்தபடி பயணித்தால்... வாந்திக்கு வாய்ப்பிருக்காது. காரில் இருக்கும் ரப்பர், லெதர் வாசனையும் இன்னொரு காரணம். மலையில் செல்லும்போது, ஏ.சி போடாமல் கதவைத் திறந்துவிட்டு காட்டின் வாசனையை நுகர்வதுகூட நல்ல தீர்வு தரும்.

மலையேறும்போது, வாந்திக்கு இறங்குகிறீர்களோ இல்லையோ, குரங்கு அருவியில் இறங்கிக் குதூகலிக்க மறக்காதீர்கள். குரங்கு அருவியில் குளிக்க 30 ரூபாய் கட்டணம். இதில்கூட ஒரு ட்ரிக்கைக் கையாள்கிறது தமிழ்நாடு டூரிஸம். எப்படியென்றால், கீழே செக்போஸ்ட்டிலேயே குரங்கருவிக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதுதான் ரூல். உள்ளூர்க்காரனுக்குத்தானே ஊருணியின் ஆழம் தெரியும். என்போன்ற வெளியூர்வாசிகளுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குரங்கு அருவிக்குத் தாவிச்சென்ற என்னை மடக்கிப் பிடித்தனர் செக்யூரிட்டிகள். 

''சார், டிக்கெட்டு?''
''எவ்வளவு? இந்தாங்க... டிக்கெட் குடுங்க!''
''கீழேதான் எடுக்கணும் சார்.''
''எனக்குத் தெரியாதே.. யாரும் சொல்லவே இல்லையே!''
''கீழே போர்டு போட்டிருக்குமே.. பார்க்கலையா? போய் டிக்கெட் எடுத்துட்டு வந்துடுங்க!''
''திரும்பவும் அரைமணி நேரம் கீழே இறங்கிப் போய் எடுத்துட்டு வரணுமா?''
''உங்க கஷ்டம் புரியுது. 50 ரூபாய் குடுங்க.. உள்ளே போய் ஜாலியா குளிச்சுட்டு வாங்க! அப்புறம், காரை லாக் பண்ணிடுங்க! குரங்குங்க தொல்லை அதிகம்!''

இப்படிப்பட்ட ஆஃபரை அறிவித்து, 'படித்துறை பாண்டி'போல் கலெக்ஷன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். 'போர்டுல எழுதியிருக்கே... பார்க்கலையா' என்று அந்த செக்யூரிட்டி சொன்னதை நினைவுபடுத்தி, டூர் முடியும்போது பார்த்தேன். நாளிதழ்களில் 'Classifieds' பகுதிக்கு விளம்பரம் கொடுப்பதுபோல் தேடித் தேடிப் படித்தேன். கிட்டப் பார்வை, தூரப் பார்வை எதுவும் இல்லாத எனக்கே படிப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. இந்த 50 ரூபாய் சிக்கல், குரங்கு அருவி அமைந்திருக்கும் அழகைப் பார்த்தால் மறந்து போகிறது. பைக்கின் டூயல் எக்ஸாஸ்ட்போல், இரண்டாக ஸ்ப்ளிட் ஆகி விழுகிறது குரங்கு அருவி. இலியானா இடுப்புபோல் ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக ஒரு பக்கம் விழுந்து கொண்டிருந்த அருவியில் தலை கொடுத்தேன். குரங்கருவிக் குளியல் கிறங்கடித்தது. 

Athirappally

 

40 கொண்டை ஊசிகள். ஏதோ ஒரு கொண்டை ஊசி வளைவில் நின்று கீழே பார்த்தேன். அழகாக வளைந்து அம்சமாக ரயில் பூச்சி போல் நெளிந்திருந்தது பாதை. வழிநெடுக வரையாடுகள், சாலையில் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. வால்பாறையில் சிறுத்தைகள் அதிகம் என்றார்கள். அதைவிட யானைகள் அதிகம் என்றார்கள். தேயிலைத் தோட்டத்தில் மூன்று பெண்களை மிதித்து அழிச்சாட்டியம் பண்ணிய யானைகளைப் பற்றிய நியூஸ் ஒன்றைப் படித்த ஞாபகம் வந்து 'டர்' அடித்தது. "ஆனையைப் பார்த்தா வயித்த நிரப்ப முடியாதே தம்பி" என்றார் ஒரு தேயிலை தேவதை.

வால்பாறையில் ஸ்டே. இங்கே குட்டிக் குட்டி காட்டேஜ்கள், 700-ல் இருந்து 1,500 வரை செம சீப் அண்ட் பெஸ்ட்டாகக் கிடைக்கின்றன. சாதாரண வீட்டை காட்டேஜ்களாக மாற்றி வாடகைக்கு விடுகிறார்கள். கையைக் கடிக்காத விலையில் என்போன்ற 'யூத்!(!)'களுக்கு வால்பாறை ஒரு வரப்பிரசாதம்தான். என் நண்பன் ஒருவன், 7 பேர் கொண்ட கும்பலுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்குத் தங்கிய கதையெல்லாம் சொல்லி வெறுப்பேற்றியிருக்கிறான். வால்பாறையில் இரண்டு நாள் தங்கி சுற்றிப் பார்க்க எக்கச்சக்க இடங்கள் உண்டு. பாலாஜி கோயில், எரச்சிப்பாறை நீர்வீழ்ச்சி, சின்னக் கல்லார் அணை, நீரார் அணை, வெள்ளை மலை, சோலையார் அணை, மயிலாடும் பாறை, சூஸைடு பாயின்ட், நல்லமுடி பூஞ்சோலை, கூழாங்கல் ஆறு, அக்காமலை புல்வெளி என்று எத்தனை இடங்கள்! டாக்ஸி பிடித்தீர்கள் என்றால், ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள். இரண்டு நாள் கவரேஜில் மொத்தத்தையும் என்ஜாய் பண்ணலாம். 

 

Athirappally

 

வால்பாறைக்கு ஒரு சேப்டர் எல்லாம் போதாது. என் டார்கெட் இப்போது, அதிரப்பள்ளி மட்டுமே! 'இன்னொரு நாள் உன்னை வெச்சுக்குறேன்' என்று வால்பாறைக்கு 'Vengeance' வைத்துவிட்டுக் கிளம்பினேன். சோலையார் அணை வழியாகத்தான் அதிரப்பள்ளிக்குப் போக வேண்டும். மொத்தம் 85 கி.மீ. மூன்றரை மணி நேரம் ஆகும். வழியில் எங்காவது ரிலாக்ஸுக்கு இறங்கினீர்கள் என்றால், காரில் ஏறும்போது செக் செய்துவிட்டு காரைக் கிளப்புங்கள். அட்டைப் பூச்சி இருக்கலாம். போகும்போது 'நார்னியா' படத்தில் வரும் 'Beaver' போன்ற குட்டி விலங்கு பார்த்தேன். செம அழகு. 

சோலையார் அணை தாண்டி 7 கி.மீ-ல் ஒரு டிஃபன் கடை தெரிந்தது. இட்லி பார்சல் வாங்கிக் கொண்டேன். கேரளா செக்போஸ்ட்டில், ''பிளாஸ்டிக்குக்கு என்ட்ரி தரில்லா'' என்று கவரோடு இட்லியைப் பிடுங்கிக் கொண்டார்கள். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விஷால் போல் அவமானமாக இருந்தது. கேரளாவில் பிளாஸ்டிக் கவர்கள், வாட்டர் பாட்டில்கள் எல்லாவற்றுக்கும் தடை. அதையும் மீறிக் கொண்டுபோனால், அடுத்த செக்போஸ்ட்டில் இதே ஐட்டங்களைக் காண்பிக்க வேண்டும். 

 

Athirappally

 

 

இங்கே 6 மணி முதல் மாலை 4 மணி வரைதான் அனுமதி. "காரிலின்னு பொறத்தே இறங்காருதே.... மிருகங்கள்னு ஆகாரம் கொடுக்காருதே..." என்று ரசீதில் நேரம் போட்டுத்தான் அனுப்புகிறார்கள். 50 கி.மீ. பயணம். அதிகபட்சம் இரண்டரை மணி நேரம். அதற்குள் வளச்சல் செக்போஸ்ட்டில் கையெழுத்துப் போட வேண்டும். 2 மணி நேரத்தைக் கடத்திவிட்டு மொக்கையாக 2,000 காரணங்கள் சொன்னாலும், பல்க்காக 2,000 ரூபாய் அபராதம் கட்ட நேரிடலாம்.

அதிரப்பள்ளி சாலை அத்தனை அற்புதமாக இருந்தது. திடீரென இரு பக்கமும் பசுமை, மொட்டையாக வந்த காடு, சரேலென உயர்ந்து நின்ற மரங்கள், திடும்மென மேடு, ஷார்ப் பெண்டுகள், ஊழல் இல்லாமல் கட்டப்பட்ட அச்சமுறுத்தும் பாலங்கள் என்று கமல் போல் எத்தனை கெட்-அப்! சில நேரங்களில் சூரிய வெளிச்சம்கூட விழவில்லை. நான் சாலையின் இருபக்கமும் பார்த்துக் கொண்டே காரோட்டினேன். அதிரப்பள்ளி சாலையில் அனிமல்ஸ் பார்க்க விரும்புபவர்கள் - செக்போஸ்ட் கேட்டைத் திறந்ததும், அதாவது 6 மணிக்குக் கிளம்புங்கள். அல்லது மாலை 4 மணி.

பட்டப்பகலில் அனிமல்ஸ் எல்லாம் ஊருக்குள் போயிடுதுங்க போல! குணச்சித்திர நடிகர்கள் மாதிரி எப்போதாவது சாலையில் ஹாய் சொன்ன மந்திகள், மான்கள், அணில்கள் பார்த்தேன். வால்பாறையோடு சரி; யானைகள் எல்லாம் யு-டர்ன் அடித்து டாப்ஸ்லிப் பக்கம் போயிருக்கலாம். நான் யானை நினைப்பாகவே பயணித்தேன். 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பதுபோல், எனக்குக் கறுப்பாக எதைப் பார்த்தாலும் யானையாகவே தெரிந்தது. சில பைக் ரைடர்கள் மென்மையாகக் குத்திய பனிக்காற்றை முகத்தில் வாங்கியபடி ஜாலி ரைடு போனார்கள். காரில் காட்டில் பயணம் போகும்போது இளையராஜா, ஏஆர் போன்ற மேதைகளுக்கு லீவு விட்டு விடுங்கள். காட்டுக்கென்று ஓர் இசை இருக்கிறது. கதவைத் திறந்து விட்டால் 100 இளையராஜா, 50 ஏஆர் ரஹ்மான்களுக்கு இணையாக இசை கேட்கிறது. 

 

Athirappally

 

 

வளச்சல் செக்போஸ்ட்டில், சரியான நேரத்துக்குள் ஜாமீன் வாங்கிய கைதிபோல் சைன் போட்டேன். அதிரப்பள்ளி அருவிக்கும் சேர்த்து இங்கேயே டிக்கெட் எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். (வால்பாறை டூரிஸம்... நோட் பண்ணுங்க!) கடைகளில் விழாக்காலங்களில் ஆஃபர் தருவதுபோல் அதிரப்பள்ளிக்கு ஆஃபர் என்று இந்த வளச்சல் அருவியை வைத்துக் கொள்ளலாம். உள்ளே குழந்தைகளுக்கான பார்க்கில், குழந்தைகள் தெளிந்த நீரோடைபோல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உயிரோட்டமாக இருந்தது. அதைத் தாண்டினால், ஒரு நிஜ நீரோடை. அதைவிட உயிரோட்டமாக இருந்தது. இதுதான் வளச்சல் என்றார்கள். அருவி என்றால், இதிலாவது குளிக்கலாம் என்று நினைத்தேன். குட்டி சுனாமி மாதிரி 'குய்'யென்ற சத்தத்துடன் வழிந்தோடிக்கொண்டிருந்தது வளச்சல். இந்த வளச்சல் பகுதிதான் வன விலங்குகள் வளமையாக வாழ வழி வகுக்கிறது என்றார்கள். கால்கூட நனைக்க முடியாதபடி பாதுகாப்பு வளையம் போட்டிருந்தார்கள். செல்ஃபிக்கள் மட்டும் எடுத்துக்கொண்டேன்.

 

Athirappally

 

 

மறுபடியும் காட்டுப் பயணம். இந்த முறை யானை பார்த்தே விட்டேன். ATM மெஷினில் பணம் எண்ணும் சத்தம் கேட்கும்போது ஒரு சந்தோஷம் வருமே... யானைகள் கிளையை முறிக்கும் சத்தம் எனக்கு அதற்கு இணையாக இருந்தது. தேங்க்ஸ் டு அதிரப்பள்ளி.

 

Athirappally

 

 

திடீரென வாகன இரைச்சலும், மனித நடமாட்டமும் தெரிந்தது. அதிரப்பள்ளி வந்துவிட்டதற்கான அறிகுறி. அதிரப்பள்ளியில் பார்க்கிங் இடத்துக்குப் பஞ்சமே இல்லை. கக்கத்தில் தோல் பையைச் செருகிக்கொண்டு, நாக்கைத் தடவி எச்சில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் எந்த அண்ணாச்சிகளும் இங்கே இல்லை. கிட்டத்தட்ட கி.மீ கணக்கில் காடு முழுக்க நெடுஞ்சாண்கிடையாக கார்களை பார்க் பண்ணியிருந்தார்கள். குழந்தைகளுக்குத் தலையைத் துவட்டும் தாய்மார்கள், ஈர உடம்பில் தங்கள் குல்ஃபிகளோடு செல்ஃபி எடுத்த காதலன்கள், கட்டுச்சோற்றைப் பிரித்து நம் நாக்கில் எச்சில் ஊறவைத்த கூட்டுக் குடும்பம் - எல்லாமே 'சொல்வனம்' கவிதைப் பகுதிக்கான விஷுவல்ஸ்.

'ஹோ'வென பேரிரைச்சல். அதிரப்பள்ளிதான் அலறியது. காரிலிருந்தே மரங்களின் கிளைகளினூடே அதிரப்பள்ளியின் அழகைப் பார்த்தேன். நெருப்பே இல்லாமல் புகைந்து கொண்டிருந்தது அதிரப்பள்ளி. சுற்றிலும் வெள்ளைப் புகைமூட்டமாய் 'திக்' என்று மனதுக்குள் அதிர்ந்தது. ஆனாலும் 'எப்படா போவோம்' என்றிருந்தது. வீக் எண்ட் என்பதால், திமுதிமுவெனக் கூட்டம். அருவிக்குப் பக்கத்தில் யாரையும் விடாமல் கயிறு கட்டி அத்தனை பாதுகாப்பாய் வைத்திருந்தார்கள் அதிரப்பள்ளியை. ஒரு வகையில் நமக்கும் இதுதான் பாதுகாப்பு. 

கயிற்றையொட்டி நின்று அதிரப்பள்ளியை ரசித்தேன். இயற்கையின் பிரம்மாண்டம் குளிர்ச்சியோடு செல்லமாய் முகத்தில் அறைந்தது. சரிதான்; குளிக்கவெல்லாம் தேவையில்லை. சும்மா நின்றாலே, மூஞ்சியில் உடம்பில் மனதில் உடையில் சாரல் அடித்து நனைத்து விடுகிறது. டிரெஸ் சேஞ்ஜ் பண்ணியே ஆக வேண்டும்போல! ஏதோ ஸ்பா ட்ரீட்மென்ட் எடுத்ததுபோல் இருந்தது. எதுவுமே அனுபவிக்காத வரைதான் அதன் மீது ஆர்வம் இருக்கும் என்பது சரிதான். அதேநேரம், குளிப்பதற்கு இங்கே வேறு ஒரு ஆப்ஷன் இருந்ததை அப்போதுதான் நான் உணர்ந்தேன். இடது ஓரம் கெட்டிக் கிடந்த நீரோடையில், குடும்பம் குடும்பமாய்க் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றுக்குள் மீன்கள் 'கிச்சு கிச்சு' மூட்டின. தண்ணீர் கம்மியாக இருப்பதால், குழந்தைகள்கூட கும்மியடித்துக் குளித்து என்ஜாய் பண்ணினார்கள். 

அதிரப்பள்ளி அருவியைக் கீழே இருந்தும் பார்க்கலாம். கிட்டத்தட்ட அரை கி.மீட்டர் கீழே ட்ரெக்கிங் போய் மேலே அண்ணாந்து பார்த்தேன். அந்தக் கணம் என்னை ஏதோ ஒரு மகிழ்ச்சியான தியான நிலைக்குக் கொண்டு சென்றது. உலகின் ஒட்டுமொத்த மழையும் ஒன்றாக ஒரே இடத்தில் பொழிந்தால், எத்தனை தடிமனாக இருக்கும்! அதுபோல் இருந்தது அருவி. கர்நாடகா 'ஜோக் நீர்வீழ்ச்சிக்குப்' பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி. ஆனால் அகலத்தில் இதுதான் முதல் இடம். கிட்டத்தட்ட 260 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கும் தண்ணீர், மாவுத் துகள்களாய்ச் சிதறி எழுந்து சிரித்தபடி ஓடுகிறது. நாலு தூத்தலுக்கே நானூறு கவிதைகள் பாடும் கவிஞர்கள், அதிரப்பள்ளியைப் பார்த்தால் நிச்சயம் சும்மா விடமாட்டார்கள்! 'இந்தியாவின் நயாகரா' என்று இதைச் சொல்வது சரிதான். அருவி நீரின் அந்த ஆக்ரோஷமான, சந்தோஷமான தாண்டவத்தை மணிக்கணக்கில் நின்று ரசித்தேன். அலுக்கவே இல்லை. என்னைப்போல் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். கண்ணை மூடித் திறந்து பார்த்தால், சுற்றி வானவில் வளையம் தெரிந்தது. 

 

Athirappally

 

 

இதன் பெரிய வரலாற்றை சின்ன நீரோடைபோல் சொல்கிறேன். கு(றி)ளித்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட 145 கி.மீ நீளம் கொண்ட சாலக்குடி நதி, ஆனைமலை மலையிலிருந்து ஆரம்பமாகிறது. அமைதியின் சொரூபமாக சாலக்குடி நதியிலிருந்து வரும் நீர், அதிரப்பள்ளியில் தாண்டவம் ஆடிவிட்டு, வளச்சல் காடு வழியாகப் பயணித்து, பெரியாற்றில் இணைந்து, அரபிக் கடலில் கலக்கிறது. 

இந்தப் பிரம்மாண்டத்தைத்தான் நிறைய சினிமாவில், கேமராவுக்குள் கொண்டுவந்திருப்பார்கள் ஒளிப்பதிவாளர்கள். 'புன்னகை மன்னன்' படத்தில் கமலும் ரேகாவும் தற்கொலை செய்வது அதிரப்பள்ளி அருவியில்தான். 'குரு' படத்தில் 'வெண்மேகம் முட்ட முட்ட' பாடி உலக அழகி ஆடும் இடம் சாட்சாத் அதிரப்பள்ளியேதான். இது தவிர ராவணன், பையா, பேராண்மை என்று பல படங்கள் விஷுவலாக அழகாக வந்ததற்குக் காரணம் - அதிரப்பள்ளியாக இருக்கலாம். 

Athirappally

 

சாலக்குடிக்கும் அதிரப்பள்ளிக்கும் இடையே ஒரு சில டூரிஸ்ட் ஸ்பாட்டுகள் இருந்தன. குறிப்பாய் பட்டர்ஃபிளை பார்க் மற்றும் தீம் பார்க். அதிரப்பள்ளியில் தங்குவதற்கு நிறைய ரெஸார்ட்கள், ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. சில ரெஸார்ட்கள், ஓடை ஓரத்தில் அமர்ந்திருக்கின்றன. பார்த்தாலே தங்க வேண்டும் போல் இருந்தது. நிறைய பேர் அருவியைத் தரிசித்துவிட்டு, அப்படியே தலை துவட்டிக் கிளம்பி விடுகிறார்கள். நானும் இப்போது அந்த ரகம்தான். வேறு வழியில்லாமல்தான் கிளம்பினேன். திரும்பவும் வந்த வழியே போய், இரண்டு மணி நேரத்துக்குள் கேரளா செக்போஸ்ட்டில் கையெழுத்துப் போட வேண்டிய பெரிய டாஸ்க் எனக்கு இருக்கிறது.

 

நெருப்பில்லாமல் புகைந்த அதிரப்பள்ளி, அந்தக் கணத்திலிருந்து என் மனதிலும் ஒரு புகைச்சலை எழுப்பித் தொலைத்து விட்டது. 'இந்த அருவிக் கரையோரம் ஒரு வாழ்க்கை வாய்த்தால் எப்படி இருக்கும்!'

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: வன ஊர்வலம்!

 

 
Sunset

ஒளிப்படங்கள்: க. செங்கதிர்வாணன், வனப் பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர், திருச்சி.

ஆரம்பம்: கடந்த ஓராண்டாகத்தான் ஒளிப்படங்கள் எடுத்து வருகிறேன்.

           
Gaur
 

ஆர்வம்: எனக்கு மலையேற்றம் மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. அப்படிச் சென்றபோது, நான் கண்டு வியந்த இயற்கைக் காட்சிகளையும் வன உயிரினங்களையும் ஒளிப்படங்கள் எடுப்பதில் அலாதி ஆர்வம். இரவில் மேகக்கூட்டம் குறைந்த பகுதியில் பால்வெளி மண்டலத்தை ஒளிப்படங்கள் எடுக்கவும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

Indian%20Elephants
 

கேமரா : கேனான் இஓஎஸ் 700டி

Lonely%20Tree
 
Mighty%20Mountains
 
indian%20giant%20squirrel

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.