Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகின் முதலாவது பாதசாரிகள் கடவுப்பாதை எது தெரியுமா?

உலகிலேயே முதன் முறையாக பாதசாரிகள் பாதைக்காக 1940களில் சட்டம் இயற்றியது பிரிட்டன் அரசு. பிபிசி பெட்டகத் தொடரின் இந்த வார வரிசையில், அது பற்றிய பிரத்யேக காட்சிகளை இங்கே காணலாம்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சென்னையின் கானாவில்கூட சுராங்கனியின் தாக்கம் இருக்கிறது! #RIPCeylonManohar

 
 

"சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ...
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்குத்தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாள்...!"- மறக்கமுடியுமா இந்தப் பாடலை? இலங்கையின் 'பாப் மாஸ்ட்ரோ' என்றழைக்கப்பட்ட சிலோன் மனோகரின் குரல் 70-களில் தமிழகத்தையும் இலங்கையையும் ஒரே நேரத்தில் வசியப்படுத்தி வைத்திருந்த மாயக்குரல். இலங்கைக்கே உரிய பாரம்பர்ய இசையான 'பெய்லா' (Baila) என்ற இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து ஃபியூஷன் இசையை உலகுக்குத் தந்தவர்தான் சிலோன் மனோகர். இன்றும் இவரின் பெய்லாக்களைத்தான் கோவாவில் வாழும் போர்ச்சுக்கீசியர்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் திரிகிறார்கள். (பெய்லா என்ற இசைவடிவம் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தது. ஆப்பிரிக்க காஃபிர்கள் இலங்கைக்கு 1630களில் அடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். அவர்கள் மூலம் உருவானதுதான் பெய்லா இசை. சிங்களம் கலந்த ஆப்பிரிக்க வரிகளில் பாடுவதை பெய்லா என்று அழைத்தனர்.)

சிலோன் மனோகர்

 

மனோகர் பெய்லாவில் தமிழைப் புகுத்த மட்டும் செய்யவில்லை. பாப் இசையையும் பிசைந்து பல மெட்டுகளை உருவாக்கினார். அதில் ஒன்றுதான் கொலவெறி ஹிட். ஆம்... இவர் உருவாக்கிய ஃபியூஷன் பாடல் 'சுராங்கனி சுராங்கனி.. சுராங்கனி' பாடலை பாடாதவர்களே இருக்க முடியாது. தமிழ்நாட்டின்... நம் சென்னையின் கானாவில்கூட சுராங்கனியின் தாக்கம் இன்றும் இருக்கிறது. சுராங்கனியின் எளிமையான மெட்டுதான் இன்றுவரை உலகம் முழுவதும் பாப்புலர். அந்தப் பாடலை மட்டும் மனோகர் இந்தி உட்பட 8 மொழிகளில் பாடி இருக்கிறார். அத்தனை மொழிகளிலும் அது ஹிட். தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் இப்பாடலை பாடி நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் பாடி நடித்திருக்கிறார். மனோகர் இலங்கையில் பிறந்தவர்தான் என்றாலும் தமிழரான அவர் தமிழ்நாட்டில் பிரபலமாக திகழ்ந்தார்.

1970ல் அவர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த 'நல்நண்பர்கள்' என்ற இசைக்குழு அந்நாள்களில் இலங்கையை மொழிபேதம் கடந்து ஒன்றிணைத்து வைத்திருந்தது. அதற்கு முன்பே 'பாசநிலா' என்ற இலங்கையில் தயாரான தமிழ்ப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். அவர் நடித்த 'வட காற்று' என்ற தமிழ்ப்படம் இலங்கை அரசின் ஜனாதிபதி விருதினைப் பெற்றது. ஹிப்பி ஹேர் ஸ்டைலும், பிரெஞ்சு தாடியும், கணீர் குரலும் அப்போது இவரால் ஏக பாப்புலர். பல கல்லூரி மாணவ மாணவிகள் இவர் ஸடைலுக்கும் குரலுக்கும் மயங்கிக் கிடந்தார்கள். மனோகரின் பெற்றோர்களும் இசையார்வம் உள்ளவர் என்பதால் இயல்பிலேயே தமிழிசையைக் கேட்டு பாட ஆரம்பித்தவர் மனோகர்.

பள்ளி நாள்களில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி இசையில் உருவான பல பாடல் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டு பாடி பள்ளியில் பாப்புலராக இருந்தார். கல்லூரிக் காலத்தில் தமிழகத்தில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் முதன்முதலாகப் பாடினார். பாடி பில்டரான மனோகர் பல முறை ஆணழகன் பட்டம் வென்றிருக்கிறார்.

இலங்கையில் அவர் பாடிய சுராங்கனி பாடலுக்கு இந்தியாவில் இருக்கும் மவுசைக் கண்டு சென்னைக்குக் குடியேறினார். இளையராஜாவேகூட இவர் அனுமதி பெற்று 'அவர் எனக்கே சொந்தம்' என்ற ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த படத்தில் மலேசியா வாசுதேவன், ரேணுகாவை வைத்து 'சுராங்கனி' மெட்டில் ஒரு பாடலை கம்போஸ் செய்து சேர்த்திருந்தார். பாலிவுட்டிலும் ஆஷா போன்ஸ்லே 'சுராங்கனி கமால் கரேகி' என்ற பாடலை இதே மெட்டில் 'பரமாத்மா' என்ற படத்தில் பாட, மனோகரின் ஒற்றை மெட்டு உலக மெட்டாக... மொட்டாக மலர்ந்தது. சுராங்கனி இசைத் தட்டுகள் இங்கும் ஹிட்டடிக்க மீடியாக்களில் அவர் முகம் வெளியானது. வித்தியாசமான சிகையலங்காரம், கம்பீரமான தோற்றத்தைப் பார்த்து பல தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், முதல் படமாக 'டூபான் மெயில்' என்ற தெலுங்குப் படம்தான் ரிலீஸானது. அப்படத்தில் ஒரு சர்வதேச கடத்தல்காரனாக நடித்திருந்தார்.

மலையாளத்தில் சந்திரகுமார் இயக்கத்தில் 'தடவரா' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக நடித்தார். 'மாமாங்கம்', 'சக்தி', 'கழுகன்' எனப் பல படங்களில் நடித்து பாப்புலரானார். அப்போது கேரளாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் ஜெயனுடன் 'ஆவேசம்' 'கோளிளக்கம்' படங்களிலும் வில்லனாக நடித்தார். 'கோளிளக்கம்' படப்பிடிப்பின்போது சென்னை இருங்காட்டுக்கோட்டையில் தன் கண்முன்னால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நண்பனும் நடிகரருமான ஜெயன் இறந்துவிட, திரையுலகை விட்டே மனம் வெறுத்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்தார். லண்டனுக்கு ஜாகை மாற்றிக் கொண்டவர் பி.பி.சி-யில் 9 வருடங்கள் வேலை பார்த்தார். பாடுவதற்காக சென்னைக்கு வந்து மீண்டும் மலையாளம், தமிழ் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். 

தமிழில் மட்டும் குரு, காஷ்மீர் காதலி, ராஜா நீ வாழ்க, காட்டுக்குள்ளே திருவிழா, உலகம் சுற்றும் வாலிபன், நீதிபதி, லாரி டிரைவர் ராஜாகண்ணு, தீ, ஜே.ஜே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சில தமிழ் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். அண்மைக்காலமாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். சென்னையிலிருக்கும் அவர் வீட்டில் தன் 73வது வயதில் நேற்று உயிரிழந்தார். 

 

மனோகருக்கு மனைவியும், கலா மேரி, செல்வ மேரி என்ற மகள்களும் டங்ஸ்டன் பாபு என்ற மகனும் உள்ளனர். சிலோன் மனோகர் மறைந்தாலும் அவரின் 'ஃபியூஷன் பெய்லா' சுராங்கனி காலாகாலத்துக்கும் நம் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

https://www.vikatan.com

 

 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வானிலிருந்து வந்தது அது
 
 

 

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குர்கான் எனும் மாவட்டத்திலுள்ள கிராமத்தில், உறைந்த நிலையில், விமானத்திலிருந்து விழுந்த மனித கழிவுகளை, வேற்றுக்கிரக வாசிகளின் பரிசு என்று நினைத்து, வீடுகளுக்குக் கொண்டுச் சென்ற கிராமத்தவர்கள், பின்னர் உண்மை தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குர்கானில் பசில் பூர் பாத்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பீர் யாதவ். அவர், கோதுமை வயலொன்றை சொந்தமாக வைத்துள்ளார்.

நேற்று, வயலில் இறங்கி வேலை பாரத்துக் கொண்டிருருந்தபோது, தன்னுடைய வயலை நோக்கி, வானிலிருந்து பாறையொன்று வருவதைக் கண்டுள்ளார்.  இதன்போது அதிர்ச்சியடைந்த அவர், தன்னை சுதாகரித்துக்கொள்வதற்கு முன்னர், அந்தப் பாறை, அவரது வயலுக்குள் விழுந்துள்ளது.

வானில் இருந்து விழுந்த பொருள் ஏவுகணையா?, வெடிகுண்டா? அல்லது விண் கற்களா? எனத் தெரியாமல், அவர் தடுமாறி நின்றிருந்துள்ளார். உடனே,  இது குறித்து ஊர் தலைவர் சுக்பீர் சிங்குக்கு அறிவித்துள்ளார். அதையடுத்து, இந்த விவகாரம், காட்டுத்தீ போன்று, கிராமம் முழுவதும் பரவியுள்ளது.

அந்த பாறை போன்ற பொருளை சுற்றி கூட்டம் கூடியது. அது என்னவாக இருக்கும் என, பெரியவர்கள் ஆளுக்காள் கலந்துரையாடி வந்தனர். அது வெள்ளை நிறத்தில் இருப்பதால், நிச்சயம் வேற்றுக்கிரகவாசிகளின் பரிசாகவே இருக்கும் என்று, கிராமத்திலுள்ளவர்கள் நினைத்தனர். இன்னும் சிலர், இது ஒரு அரிய வகை தாது பொருள் என்றும் வானிலிருந்து வந்த பொருளாக இருக்கலாம் என்றும் கூறினர்.

எனினும், மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் என்னவென்று தெரிந்துவிடும் என்று ஒருவர் கூறவே, கிராம மக்களில் சில பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். பின்னர் அதிகாரி ஒருவர் தலைமையில், வானிலை மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அந்தப் பொருளின் சில துகள்களை தடயவியல் துறைக்கு அனுப்பினர்.

ஆய்வு முடிவுகள், இன்று வெளியானது. அதைக் கேட்டதும், மக்கள் அதிர்ச்சியடைந்து முகத்தை சுளித்துவிட்டனராம்.

வானிலிருந்து விழுந்த பொருளுக்கு பெயர் ப்ளூ ஐஸ் என்று பெயர் என்றும், அப்படியென்றால் உறைந்த நிலையில் வைக்கப்படும் மனிதக் கழிவுகள் என்று கூறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாறை வந்து விழுந்தவுடன், அதிலிருந்த சில துண்டுகளை எடுத்து, வயல் சொந்தக்காரரான ராஜ்பீரின் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்துள்ளனர். மனித கழிவுதான் அது என்று தெரிந்ததும், அதை எடுத்து எறிவதற்கு, ராஜ்பீரின் வீட்டார் பதறியடித்து ஓடியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

தலைமை ஆசிரியரை மிரளவைத்த மாணவன் அனுப்பிய லீவ் லெட்டர்! வைரல் வீடியோ

 
 

பள்ளி நாள்களில் விடுமுறையின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருப்போம். விடுமுறைக்காக ஆசிரியர்களிடம் நாம் கூறிய பொய்கள் சில சமயம், நமக்கு சந்தோஷத்தையும் சிலசமயங்களில் தண்டனையையும் பெற்றுக்கொடுத்திருக்கும். 

Pakistan_15292.jpg

 

Photo: Twitter/ShehzadRoy

அந்தவகையில், ஒரு நாள் விடுப்புக்காக பாகிஸ்தான் பள்ளி மாணவன் ஒருவனின் வித்தியாசமான விண்ணப்பம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன வித்தியாசமாக அந்த மாணவன் செய்தான் என்று கேட்கிறீர்களா. கோர்வாலா பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன், தலைமையாசிரியருக்கு எழுதியுள்ள விடுமுறை விண்ணப்பத்தைப் பாடலாகப் பாடியுள்ளார். அந்தப் பாடலில் விடுமுறை விண்ணப்பத்தில் உள்ள புள்ளி, கமா உள்ளிட்ட நிறுத்தற்குறிகளையும் சேர்த்து அந்த மாணவன் பாடியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகரும் மனித உரிமை ஆர்வலருமான ஷெஷாத் ராய் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர். ``தயவுசெய்து அவருக்கு விடுமுறை கொடுங்கள்’’ என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை ராய் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவைப் பகிர்ந்துவரும் நெட்டிசன்களும் அந்தச் சிறுவனுக்கு விடுமுறை அளிக்கும்படி தலைமையாசிரியரைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

1939: சிலி பூகம்­பத்­தினால் 28,000 பேர் பலி

வரலாற்றில் இன்று…. 

ஜனவரி – 24

 

varalaru2-copy-1.jpg41 : ரோம் நாட்டின் கொடுங்கோல் மன்னன் கலி­குலா படு­கொலை செய்­யப்­பட்டான். அவ­னது மாமன் குளோ­டியஸ் புதிய மன்­ன­னாக முடி சூடினான்.

1679 : இங்­கி­லாந்தின் இரண்டாம் சார்ள்ஸ் மன்­னரால் நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது.

1835 : பிரே­ஸிலில் அடி­மைகள் கிளர்ச்­சியில் ஈடு­பட்­டனர். 50 வரு­டங்­க­ளுக்குப் பின் அங்கு அடிமை முறை ஒழிக்­கப்­ப­டு­வ­தற்கு இக்­கி­ளர்ச்சி அடித்­த­ள­மாக அமைந்­தது.

1857 : தெற்­கா­சி­யாவின் முத­லா­வது முழு­மை­யான பல்­க­லைக்­க­ழ­க­மான கல்­கத்தா பல்­க­லைக்­க­ழகம் திறக்­கப்­பட்­டது.

1887 : அபி­சீ­னியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்­தா­லி­யர்­களைத் தோற்­க­டித்­தனர்.

1897 : சுவாமி விவே­கா­னந்தர் சிக்­கா­கோ­வி­லி­ருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்தார். யாழ். இந்துக் கல்­லூ­ரியில் பிர­மாண்­ட­மான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

1908 : சார­ணிய இயக்­கத்தை பேடன் பவல் ஆரம்­பித்தார்.

1918 : கிற­கோ­ரியின் நாட்­காட்டி ரஷ்­யாவில் பெப்­ர­வரி 14 முதல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என அறி­விக்­கப்­பட்­டது.

1924 : ரஷ்­யாவின் பெட்­ரோ­கிராட் நகரம் லெனின்­கிராட் என பெயர் மாற்­றப்­பட்­டது.

1927 : திகில் திரைப்­பட மன்னர் ஆல்­பிரட் ஹிட்ச்கொக் தனது “த பிளெஷர் கார்டன்” என்ற தனது முத­லா­வது திரைப்­ப­டத்தை வெளி­யிட்டார்.

1939 : சிலியில் இடம்­பெற்ற 8.3 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்­தினால் சுமார் 28,000 பேர் உயி­ரிழந்­தனர்.

1943 : இரண்டாம் உலகப் போர்: அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரித்­தா­னிய பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் தமது கச­பி­ளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்­டனர்.

1966 : எயார் இந்­தியா விமானம் ஒன்று பிரான்­ஸுக்கும் இத்­தா­லிக்கும் இடையில் வீழ்ந்­ததில் 117 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1972 : இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன ஜப்­பா­னிய படை­வீ­ர­னான சொயிச்சி யாக்கோய் என்­பவன் குவாம் காடு ஒன்றில் இருந்த நிலையில் கண்டு­பி­டிக்­கப்­பட்டார்.

1978 : கொஸ்மொஸ் 954 என்ற சோவியத் செய்­மதி பூமியின் வளி­மண்­ட­லத்துள் எரிந்து அதன் பகு­திகள் கன­டாவின் வட­மேற்குப் பிர­தே­சத்தில் வீழ்ந்­தன.

1984 : முத­லா­வது அப்பிள் மெக்­கின்டொஷ் கணனி விற்­ப­னைக்கு வந்­தது. இரு தினங்­க­ளுக்­குமுன் இக்­க­ணனி கால்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றின் போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

1986 : வொயேஜர் 2 விண்­கலம் யுரேனஸ் கிர­கத்தின் 81,500 கிமீ தூரத்­துக்குள் வந்­தது.

magazine-prison-copy.jpg1990 : சந்­தி­ரனை ஆராய்­வ­தற்­கான விண்­க­ல­மொன்றை ஜப்பான் ஏவி­யது. சோவியத் யூனியன், அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்­த­தாக சந்­தி­ரனை ஆராய்­வ­தற்கு விண்­கலம் அனுப்­பிய முதல் நாடா­கி­யது ஜப்பான்.

1993 : துருக்­கிய ஊட­க­வி­ய­லா­ளரும் எழுத்­தா­ள­ரு­மான ஊகுர் மும்க்கு, அங்­காரா நகரில் இடம்­பெற்ற கார் குண்­டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்டார்.

1996 : ரஷ்­யா­வுக்­காக உளவு பார்த்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட நிலையில் போலந்துப் பிர­தமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பத­வியைத் துறந்தார்.

2007 : சூடா­னி­லி­ருந்து 103 பய­ணி­க­ளுடன் சென்ற விமானம் நடுவானில் கடத்தப்பட்டது.

2011 : மொஸ்கோ விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால், 35 பேர் பலியானதுடன், 180 பேர் காயமடைந்தனர்.

2012 : மகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையிலான மோதலில் 31 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

மற்றவர்களை எடை போடுவதில் நீங்கள் கில்லியா? - இந்தக் கதையைப் படியுங்கள்! #MotivationStory

 
 

கதை

`ஒருவரைப் பற்றியோ, ஒரு விஷயத்தைப் பற்றியோ நன்கு ஆராய்ந்து தெரிந்துகொள்ளாமல் ஒரு முடிவுக்கு வருவது வேடிக்கையானது.’ - இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் `ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் முன்னாள் வெளியீட்டாளரும், பிரபல தொழிலதிபருமான மால்கம் ஃபோர்ப்ஸ் (Malcolm Forbes). தொழிலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்குமே இது பொருந்தும். கவர்ச்சிகரமாக தொலைக்காட்சியில் வெளியாகும் விளம்பரத்தைப் பார்த்து, அந்தப் பொருள் தரமானது என நம்பிவிடுகிறோம். ஓர் ஆளைப் பார்த்து, அவரின் நடவடிக்கைகளைப் பார்த்து சட்டென்று அவர் குறித்த ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஒருவரைக் குறித்து இப்படியெல்லாம் எடைபோடுவது சரிதானா? வேற்று நபர்களைவிட்டுவிடுவோம். நம் குடும்பத்தில் இருப்பவர்கள், நெருங்கியவர்கள், நண்பர்கள் மேலேயேகூட பல நேரங்களில் நமக்கு தப்பான அபிப்ராயம் வந்துவிடுகிறது. ஆராயாமல், நன்கு தெரிந்துகொள்ளாமல் யாரைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வருவது எவ்வளவு தவறு என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை.

 

நம் ஊரில் மட்டுமல்ல... பல வெளிநாடுகளிலும் இளைப்பாறல் தரும் இடங்களாகப் பூங்காக்கள் இருக்கின்றன. முதியவர்கள், குதித்தாடும் குழந்தைகள், குடும்பப் பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வரும் நடுத்தர வயதினர், காதலர்கள்... எனப் பெரும்பாலானவர்களுக்கு பூங்காக்கள் பொருத்தமான இடம். அது, லண்டனிலிருக்கும் ஒரு பார்க். முதியவர் ஒருவர் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு அங்கே அடிக்கடி வருவார். அவளுடன் கதைகள் பேசுவார். விளையாடுவார். அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்வார்.

ஆப்பிள்

அன்றைக்கு அந்த முதியவர் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு அங்கே வந்திருந்தார். அவள் கையோடு எடுத்து வந்திருந்த பந்தைக் கொண்டு இருவரும் சிறிது நேரம் விளையாடினார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகிலேயே சாலை இருந்தது. சற்று தூரத்தில் வண்டியில்வைத்து ஒருவர் ஆப்பிளை விற்றுக்கொண்டு போவதை அந்தச் சிறுமி பார்த்தாள். உடனே, ``தாத்தா... எனக்கு ஆப்பிள் வேணும்’’ என்று சொல்லி, ஆப்பிள் வண்டியைக் கைகாட்டினாள்.

முதியவர் ஆப்பிள் வியாபாரியைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டார். அவர் நின்றதைப் பார்த்துவிட்டு, பேத்தியை அழைத்துக்கொண்டு சாலைக்குப் போனார். முதியவர் தன் கோட் பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தார். அன்றைக்கு அவர் அதிகமாகப் பணம் எடுத்து வந்திருக்கவில்லை. ஆனால், அவரிடமிருந்த பணம் இரண்டு ஆப்பிள்களை வாங்கப் போதுமானதாக இருந்தது. இரண்டு ஆப்பிள்களை வாங்கி, தன் பேத்தியிடம் கொடுத்தார்.

பேத்தி ஆப்பிள்களை வாங்கிக்கொண்டாள். கைக்கு ஒன்றாக, இரண்டையும் பிடித்துக்கொண்டாள். ஆப்பிள்காரர் நகர்ந்ததும் முதியவர் பேத்தியிடம் கேட்டார்... ``கண்ணு... ரெண்டு ஆப்பிள் இருக்கே... ஒண்ணு நீ சாப்பிடுவியாம். இன்னொண்ணைத் தாத்தாவுக்குத் தருவியாம்.’’

இதைக் கேட்ட அடுத்த கணம் அந்தச் சிறுமி ஒரு கையிலிருந்த ஆப்பிளை ஒரு கடி கடித்தாள். முதியவருக்கு இதைப் பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் அடுத்துப் பேச வருவதற்குள் அந்தச் சிறுமி மற்றொரு கையிலிருந்த ஆப்பிளையும் கடித்துவிட்டாள். பெரியவருக்குக் கோபம் முட்டிக்கொண்டு வந்தது. பேத்திக்கு மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், தன்னிடமிருப்பதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற குணம் எப்படி இல்லாமல் போனது என்று வேதனைப்பட்டார். பேத்தியைத் தன் மகள் இப்படி பேராசைக்காரியாக வளர்த்திருக்கிறாளே என்கிற வருத்தம் வந்தது. அவர் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்துபோனது.

தாத்தா - பாட்டி

அப்போது பேத்தி தன் இடது கையிலிருந்த ஆப்பிளை நீட்டினாள்... ``தாத்தா இதைச் சாப்பிடுங்க... இதுதான் நல்லா ருசியா, இனிப்பா இருக்கு. உங்களுக்குத்தான் இனிப்புப் பிடிக்குமே!’’

முதியவர் பேச்சிழந்து போனார். பேத்தியை வாரியணைத்து முத்தங்கள் பொழிந்தார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

-68 டிகிரி வெப்பநிலையில் இங்கு வாழ்க்கை எப்படி நடக்கிறது?

  • தொடங்கியவர்

மருமகனிடம் சாதுர்யமாகப் பதில் சொன்ன வின்ஸ்டன் சர்ச்சில்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

 
 

வின்ஸ்டன் சர்ச்சில்

 

ஃது ஒரு காட்டுவழிப் பாதை. அந்தப் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார் ஃப்ளெமிங் என்ற விவசாயி. எல்லா மனிதருக்கும் சோறுபோடும் விவசாயியின் நிலைமை என்பது காலம் முழுவதும் காட்டுவழிப் பயணத்தையும், நடைப்பயணத்தையும் கொண்டதாகத்தானே இருக்கும். அதுதான் விவசாயியின் தலைவிதி என்று எழுதியிருக்கும்போது யாரால் அதை மாற்ற முடியும்? 

 

ஃப்ளெமிங்கின் பயணமும் அதுதான்... அவர் சென்றுகொண்டிருந்த அந்தக் காட்டுவழிப் பாதையில் ஒரு சதுப்பு நிலத்தின் புதைகுழியில் பணக்காரச் சிறுவன் ஒருவன் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். ஆம், இன்றைய விவசாயிகள் சிக்கியிருக்கும் புதைகுழிகளைப்போலவே அவனும் நன்றாகச் சிக்கியிருந்தான். அதைப் பார்த்த ஃப்ளெமிங், பதறியடித்தபடியே அங்கு ஓடினார். காயம்பட்டவர்களுக்குத்தானே வலியின் அருமை புரியும்; கல்லடிப்பட்டவர்களுக்குத்தானே வேதனை தெரியும். எப்போதும் விவசாயிகள் தங்கள் உயிரைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அதனால்தான் இன்று விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. 

ஃப்ளெமிங்கும் அந்த எண்ணத்தில்தான் அந்தச் சிறுவனைக் காப்பாற்ற ஓடினார்; தன்னால் முடிந்த உதவியைச் செய்து அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார். ஓர் உயிரை மீட்ட சந்தோஷத்தில் அவருடைய மனம் சிறகடித்தது. அதிலும், நாளைய உலகத்தை மாற்றப் பிறந்த ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதில் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார். இதனையறிந்து அந்தச் சிறுவனின் தந்தை பதறிப்போய் ஓடிவந்தார். பையனைக் கண்ட சந்தோஷத்தில் அவரும் அமைதியானார். 

பிறகு, சுயநினைவுக்கு வந்த சிறுவனின் தந்தை... ஃப்ளெமிங்கிடம், “என் மகனைக் காப்பாற்றிய உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்... எவ்வளவு கேட்டாலும் தருகிறேன்; வாங்கிக்கொள்ளுங்கள்” என்கிறார் மிகவும் பரிதாபமாக. பசியுடனும், பட்டினியுடனும் வாழும் விவசாயிக்கு இருக்கும் மற்றொரு குணம் நேர்மைதானே; உதவி செய்வதற்கு பணம் எதற்கு என்ற எண்ணத்தில் வாங்க மறுக்கிறார் ஃப்ளெமிங். ஆனாலும், அந்தப் பணக்காரத் தந்தை விடுவதாக இல்லை. தொடர்ந்து வற்புறுத்துகிறார். ஒருவழியாகப் பணத்தை வாங்காமல் வேறொரு கோரிக்கையை அவரிடம் வைக்கிறார் ஃப்ளெமிங். 

“தன் மகனைப் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வாருங்கள்” என்பதே அந்தக் கோரிக்கை. ஒப்புக்கொள்கிறார் பணக்காரர். அவருடைய உதவியால் ஃப்ளெமிங்கின் மகன் நன்றாகப் படித்து, பின்னாளில் மருத்துவராகிறார்; மருத்துவத் துறையில் ‘பென்சிலின்’ என்ற மருந்தைக் கண்டுபிடிக்கிறார்; அவர் (அலெக்சாண்டர் ஃப்ளெமிங்)  கண்டுபிடித்த அந்த மருந்துமூலம் நிமோனியா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுகிறார். அவரும் உயிர் பிழைக்கிறார். அப்படி உயிர் பிழைத்தவர் வேறு யாரும் அல்ல... முன்பு, புதைகுழியில் சிக்கிய அதே பணக்காரச் சிறுவன்தான். முதலில் விவசாயி மூலம் காப்பாற்றப்பட்ட அந்த நபர், இப்போது விவசாயியின் மகன் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், இன்றோ அரசும் விவசாயிகளைக் காப்பாற்றுவதாக இல்லை; விவசாயிகளும் மற்றவர்களைக் காப்பாற்றும் நிலையிலும் இல்லை. இப்படி விவசாயக் குடும்பத்தின் மூலம் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்த நபர்தான் பின்னாளில் இங்கிலாந்தில் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்

“நம்பிக்கை இல்லாதவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள கஷ்டத்தைக் காண்கிறான்; நம்பிக்கை உள்ளவன் ஒவ்வொரு கஷ்டத்திலும் உள்ள வாய்ப்பைக் காண்கிறான்” என்ற நம்பிக்கை விதையை இங்கிலாந்து நாட்டு மக்கள் மனதில் விதைத்து அவர்களுடைய நட்சத்திரமாக ஜொலித்தவர் சர்ச்சில். அவர், ஒருமுறை முக்கியமான வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது... அவருடைய மருமகன், “உலகிலேயே மிகப்பெரிய ராஜதந்திரி யார்” என்று வினவுகிறார். தன் மருமகன் எந்த நேரமும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் இயல்புடையவர் என்பதை நன்றாகத் தெரிந்துவைத்திருந்த சர்ச்சில், மருமகன் கேட்ட கேள்விக்கு “முசோலினி” என்று பதில் சொல்கிறார்.  ஆச்சர்யமுற்ற மருமகன், “என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்... அப்படியென்றால், நீங்கள் தாழ்ந்தவரா” என்று மறுபடியும் வினா தொடுக்கிறார். அதற்கு சர்ச்சில், “தொணத்தொணவென்று எப்போதும் பேசிக்கொண்டிருந்த அவருடைய மருமகனைச் சுட்டுக்கொன்றார் முசோலினி. என்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே” என்று அமைதியாகப் பதில் சொன்னாராம். 

பேச்சாளர்; எழுத்தாளர்; ஓவியர்; பத்திரிகையாளர்; போர் வீரர்; அமைச்சர்; பிரதமர் எனப் பன்முகங்களைக் கொண்ட வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் பெருமையை உலகறியச் செய்தவர். “வெற்றி என்பது இறுதியானது அல்ல... தோல்வி என்பது மரணத்துக்குரிய செயல் அல்ல... அதுவே, வெற்றிகளின் எண்ணிக்கையைத் தொடர்வதற்கான துணிவாகும்” என்று சொன்ன இங்கிலாந்தின் பிதாமகன் சர்ச்சிலின் நினைவு தினம் இன்று.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

ரோம் பெண்ணுக்கு பயோனிக் கை பொருத்தி பரிசோதனை

பயோனிக் ஹேன்ட் எனப்படும், நவீன செயற்கை இயந்திரக் கைகள், முதன் முறையாக ரோம் நகரில் உள்ள பெண்ணுக்கு பொருத்தி பரிசோதிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

காஞ்சிப் பட்டு, மைசூர் பட்டு, கட்வால் புடவை... கைத்தறி ஆடைகளில் அப்படி என்ன வித்தியாசம்?!

 
 
 

காஞ்சிபுரம் பட்டு, போச்சம்பள்ளி, மைசூர் சில்க் என ஏகப்பட்ட பட்டு வகைகள் இந்தியா முழுவதும் உள்ளன. `ஒவ்வொன்றுக்கும் அப்படி என்ன வித்தியாசம்?' என்பது பலரின் கேள்வி. இந்தியாவின் கைத்தறி ஆடைகள் உலகத்தரம் வாய்ந்தவை. கைத்தறித் தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும்விதமாக ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கொண்டாடப்படுகிறது. பழங்கதைகள், நம்பிக்கைகள், அடையாளச் சின்னங்கள், கற்பனைக் கதைகள் போன்றவற்றை ஆடைகளில் நெய்து, பல்வேறு நிறங்களிலும் டிசைன்களிலும் தரமாகத் தரப்படுகிறது. முன்பைவிட பேட்டர்ன் மற்றும் டிசைன்களில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும், கைத்தறிக்கான தனித்தன்மை மட்டும் என்றைக்குமே மாறாது. தென்னிந்தியாவின் கைத்தறி ஆடைகளின் சிறப்பம்சங்கள் இங்கே...

கைத்தறி ஆடைகள்

 

இக்கட் (Ikkat) :

ஆந்திர மாநிலத்தின் பிரபலமான கைத்தறி வகைகளில் ஒன்றான இந்த இக்கட், ஒருவிதமான சாயமிடும் நுட்பம். முழு நீளத் துணியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நூல்களைக் கட்டி, பிறகு சாயத்தில் முக்கி எடுக்கும் முறை `Tie and Dye' எனப்படும். இக்கட் டிசைனும் இப்படித்தான் உருவாகிறது. Tie and Dye, பட்டிக் (Batik) போன்ற நுட்பங்களில், நெய்த துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இக்கட்டில் துணிக்குப் பதிலாக நூற்கண்டு பயன்படுத்தப்படுகிறது. மொத்தமான நூற்கண்டை மெல்லிய நூல்களைக்கொண்டு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கட்ட வேண்டும். பிறகு இதை சாயத்தில் முக்கி எடுக்க வேண்டும். மெல்லிய நூல்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் சாயம் ஊடுருவியிருக்காது. பிறகு அந்த நூல்களை அவிழ்த்து வேறு சில இடங்களில் கட்டி சாயத்தில் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்த பிறகே அனைத்து நூல்களையும் பிரித்து ஆடையாக நெய்ய வேண்டும். இவ்வாறு உற்பத்தியாகும் ஆடை `இக்கட்' ஆடைகள் எனப்படும். சென்ட்ரல் ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ஜப்பான் (கசூரி என்பார்கள்) ஆகிய நாடுகளில் இக்கட் டிசைன்களை அதிகம் தயாரிக்கிறார்கள். போச்சம்பள்ளி பட்டுப்புடவைகள் இந்த இக்கட் நுட்பத்தில்தான் தயாராகின்றன.

இக்கட் புடவை

கட்வால் :

தெலங்கானா மாநிலத்தின் புவியியல் குறியீடாக அறியப்படும் கட்வால் புடவைகளை, `SICO புடவை'கள் என்றும் கூறுவர். காட்டனால் நெய்யப்படும் இந்தப் புடவையின் பார்டர் மட்டும் பட்டால் ஆனவை. பலவிதமான கோயில், சிற்பம் எனப் பதிக்கப்படும் இந்தப் புடவை, ஏராளமான நிறங்களில் கிடைக்கும். காட்டன் மற்றும் பட்டின் இணைப்பால் உருவான கட்வால் புடவைகளின் பார்டர் மெல்லிய அளவு முதல் அகன்ற அளவு வரை கிடைக்கும். விலையும் அதற்கேற்றது.

கட்வால் புடவை

காஞ்சிபுரம் புடவைகள் :

தமிழ்நாட்டின் பெருமைகளையும் கலாசாரங்களையும் ஆடைகளில் நெய்து, பட்டு சாம்ராஜ்ஜியத்தில் முதல் இடம் வகிக்கிறது காஞ்சிபுரப் புடவைகள். உலகளவில் தரமான பட்டைக்கொண்டு தயார்செய்யப்படும் ஒரே ஆடை இந்தக் காஞ்சிபுரம் பட்டாடை. கல்யாணம் முதல் காதணி விழா வரை பட்டு என்றாலே காஞ்சிபுரம்தான். முழுக்க முழுக்க பட்டால் ஆனவை இந்தப் புடவைகள். நேர்த்தியாக நெய்யப்படும் இந்தப் பட்டின் பளபளக்கும் ரகசியத்துக்குக் காரணம் `மல்பெர்ரி' புழுக்கள். கோல்டு மற்றும் சில்வர் நூல்களால் பின்னப்படும் இந்தப் புடவை, `கஸ்டமைஸ்டு' அதாவது வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப எந்தவித டிசைன்களிலும் நெய்து தரப்படும்.

காஞ்சிபுரம் புடவை

மைசூர் சில்க்:

100 சதவிகிதம் தரமான பட்டு மற்றும் தூய்மையான கோல்டு ஜரி கொண்டு நெய்யப்படும் பட்டு, மைசூர் பட்டு. திப்புசுல்தான் ஆட்சியில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த மைசூர் சில்க். மகாராஜா கிருஷ்ணராஜ் வாடியார் IV, 32 பவர் ஹாண்ட்லூம்களை சுவிட்சர்லாந்திலிருந்து வரவைத்து, இந்திய இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட முதல் பட்டாடை என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொள்ள காரணமாக அமைந்தார். இதன் தரமான பண்பு, ஆடையின் ஆயுட்காலத்தைக் கூட்டுவதுதான். பாரம்பர்ய மைசூர் புடவைகளில் வெறும் ஜரி டிசைன் மட்டுமே இருக்கும்.

மைசூர் சில்க்

 

தற்போது பேய்ஸ்லி (Paisley - Mango Design), பூக்கள் போன்ற டிசைன்களையும் கொண்டு உற்பத்தியாகிறது. மைசூர் புடவைகள், காஞ்சிபுரப் புடவைகளைவிட ஷிம்மர் (Shimmer) அதாவது பளபளக்கும் தன்மை குறைவானது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

 
 

குடிநீர்

ஆற்று நீரையும் குளத்து நீரையும் கையில் அள்ளிக் குடித்த காலம் இருந்தது. இயற்கை நமக்கு அளித்த கொடை அது. ஆனால், இன்றைக்கு நிலைமை வேறு. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படும் தண்ணீர்கூட மாசுபட்டதாகத்தான் இருக்கிறது. இயற்கைச் சூழல் பெரும்பாலான இடங்களில் மாசுபட்டிருப்பதால், நீரை எங்கிருந்து பெற்றாலும் அதை சுத்திகரித்த பின்பே அதை நம்மால் அருந்த முடிகிறது. எனவேதான் குடிநீர் சுத்திகரிப்பு என்பது இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது. 

 

மனிதர்கள்தான் கிடைக்கும் தண்ணீரை சுத்திகரிக்க செயற்கையான கருவிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இயற்கையில் நீர் சுத்திகரிப்பு என்பது இயல்பாகவே நடக்கிறது. மண்ணில் இருக்கும் நீர் ஆவியாகி மழையாய் மீண்டும் பூமிக்கு வருவதைக்கூட  இயற்கையின் தண்ணீர் சுத்திகரிப்புக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தாவரங்களுக்கு நீர் தேவைப்படுவதும், அதன் இலைகளில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் விளைவால் நீர் ஆவியாதல் நடைபெறும். மிகப்பெரிய காடுகளில் இந்த ஆவியாதல் நிகழ்வு பெரிய அளவில் நடைபெறும். அதுவும் மழைக்காடுகளில் நிலவும் காலநிலையால் ஆவியாதலால் உருவாகும் வெண்ணிற மேகங்களையும்கூட பார்க்க முடியும். இயற்கையின் இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து நீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை வீட்டுக்குள்ளேயே உருவாக்கியிருக்கிறார் பிரதிக் கோஷ் என்ற இளைஞர்.

தாவரங்கள் வளர்ப்போம் குடிநீர் பெறுவோம்...

குடிநீர் சுத்திகரிப்பு கருவி

மத்தியப் பிரதேசம்தான் பிரதிக் கோஷின் சொந்த ஊர். லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான 'ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்'-டில் படிக்கும்போதுதான் இந்த வடிவமைப்பை உருவாக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியிருக்கிறது. குடிநீரை சுத்திகரிக்க அதிகம் செலவாகிறது, அதில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படியிருந்தும் தூய்மையான குடிநீர் கிடைப்பது கடினமாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், இறுதியாண்டு புராஜெக்ட்டாக இதை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கருவியை வெற்றிகரமாக செயல்பட வைத்து பல்கலைக்கழத்தில் இருப்பவர்களை அசத்தியிருக்கிறார். இதன் வடிவமைப்பும் இது செயல்படும் விதமும் மிகவும் எளிமையானது. குழந்தைகள்கூட இதன் செயல்பாட்டை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இயற்கையின் ஆவியாதல் நிகழ்வே இந்தக் கருவியின் அடிப்படை. இதன் மூலமாக செலவே இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறலாம். இந்தக் கருவிக்கு 'ட்ராப் பை ட்ராப்' என்று பெயர் வைத்திருக்கிறார் பிரதிக் கோஷ்.

கருவி

ஒரு சாதாரண மனிதனின் உயரமே இருக்கக்கூடிய இந்தக் கருவியில் ஒரு கண்ணாடிக்குடுவைதான் பிரதானமான பகுதி. அதற்குள்ளே செடிகள் வளர்வதற்கான இடம் இருக்கிறது. வெளியில் சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்றுவதற்காக ஒரு குழாய் இருக்கிறது. கண்ணாடிக்குடுவைக்குள்ளே ஆவியாகும் நீரை வெளியே கொண்டுவந்து சேகரிக்கவும் ஒரு அமைப்பு கொடுக்கப்பட்டிக்கிறது. ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கு ஒளி தேவைப்படும் என்பதால், கருவிக்கு வெளியே ஒரு விளக்கு பொருத்தப்பட்டிக்கிறது. சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்றிவிட்டுக் காத்திருந்தால் போதும் சில மணி நேரங்களில் ஒரு கோப்பை அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உருவாக்கிவிடும் இந்தக் கருவி. இதன் மூலமாக 24 மணி நேரத்தில் இரண்டு முதல்  மூன்று கப்கள் வரை நீரை பெற முடியும். இதை ஒருவர் வீட்டில் பயன்படுத்தும்பொழுது சுத்தமான குடிநீர் மட்டுமின்றி புத்துணர்ச்சியும் கிடைக்குமாம்.

பெரிய அளவிலான திட்டம்


அசுத்தமான நீரில் இருக்கும் நைட்ரேட்கள், தீங்கு விளைவிக்கும் கன உலோகங்கள், பாக்டீரியாக்கள் மற்றும் குளோரின் போன்றவற்றை இந்தக் கருவி நீக்கிவிடும் என்று கூறுகிறார் பிரதிக் கோஷ். இந்தக் கருவியை உருவாக்க அதிகம் செலவு செய்ய தேவையிருக்காது என்பதும் இயற்கையாகவே தாவரங்கள் தன்னைதானே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், இந்தக்  கருவிக்கு பெரிய அளவில் பராமரிப்பும் தேவையிருக்காது என்பதும் இதன் மிகப்பெரிய வசதி என்று கூறுகிறார் பிரதிக். இதைப் பெரிய அளவில் செயல்படுத்தும் திட்டத்தையும் தயாராக வைத்திருக்கிறார். எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வரலாம், அதற்கு இது தொடக்கப்புள்ளியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பிரதிக் கோஷ். நல்ல தொழில்நுட்பம்தான் என்றாலும் இது வெற்றியடைவதற்கான சாத்தியம் பற்றி சிலருக்கு சந்தேகம் எழும்தானே, அதற்கும் அவரிடம் ஒரு பதில் இருக்கிறது.

 

'சிறு சிறு நீர்த்துளிகள் சேர்ந்துதான் கடல் உருவானது'

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

காஷ்மீர் காதலி திரைப்படம்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
’உன்னை நீ உருவாக்கு’
 

image_bd8e8c3c6e.jpgகாலத்தை உணர்த்துபவன் காலன். மனிதன் உயிர் பிரிந்த பின்னர்தான், அவன் இறப்பின் வலியை உணர்கின்றான். அதாவது தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் உற்றார், உறவினர்களின் மரணம் மூலம் துன்பத்தின் அதியுச்ச நிலையைத் தெரிந்து கொள்கின்றான்.  

ஆனால், இந்த உணர்வு கொஞ்ச நாளில் மரணம் என்பதை மறந்து அது தமக்கு வராதது போல் நடந்துகொள்கின்றார்கள்.  

“உனது காலம் கரைந்து செல்கின்றது. நான் வந்து உன்னை மீட்பேன். அப்போது உனக்குள்ள உலக உறவைத் துண்டித்தவனாவேன். மனிதனைத் துன்பங்களில் இருந்து மீட்கும் பணி என்னுடையதுதான். வழங்கப்பட்ட காலம் முடிவதற்குள் முடிந்தவரை உலக நிலையாமையை உணர்ந்து, உன்னை நீ உருவாக்கு; அதனால், இந்தப் புவனி, நலன் பெறட்டும். இதுதான் இறைவன் ஆன்மாக்களுக்கு விடுக்கும் வேண்டுகோளுமாகும். 

வாழ்க்கையின் உண்மையை உணர்ந்தவனுக்கு மரணம் பயமுறுத்தும் ஒரு விடயமேயல்ல.

 

 

  • தொடங்கியவர்

1971 : இடி அமீன், உகண்டாவின் ஜனாதிபதியானார்

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 25

 

1498 : போர்த்­துக்­கீச நாடுகாண் பயணி, வாஸ்­கோட காமா தென்­கி­ழக்கு ஆபி­ரிக்­காவை அடைந்தார்.

1755 : மொஸ்கோ பல்­க­லைக்­க­ழகம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

idi-amin-340x400.jpg1881 : தோமஸ் ஆல்வா எடிசன், அலெக்­சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரி­யண்டல் டெலிபோன் கம்­பெனி என்ற நிறு­வ­னத்தை ஆரம்­பித்­தனர்.

1882 : வேல்ஸ் இள­வ­ர­சர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் இலங்­கைக்கு வந்­தனர்.

1890 : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நெல்லி பிளை எனும் பெண் தனது 72 நாள் உலகம் சுற்றும் பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக முடித்துக் கொண்டார்.

1917 : டேனிஷ் மேற்­கிந்­தியத் தீவுகள் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு 25 மில்­லி­யன்­க­ளுக்கு விற்­கப்­பட்­டது.

1918 : போல்­ஷெவிக் ரஷ்­யா­விடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக யுக்ரைன் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.

1919 : நாடு­களின் அணி (லீக் ஒவ் நேசன்) நிறு­வப்­பட்­டது.

1924 : முத­லா­வது குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா பிரான்ஸில், ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்­ப­மா­னது.

1942 : இரண்டாம் உலகப் போர்: தாய்­லாந்து ஐக்­கிய அமெ­ரிக்கா மீதும், ஐக்­கிய இராச்­சியம் மீதும் போரை அறி­வித்­தது.

1949 : சீனக் கம்­யூ­னிஸ்­டு­களின் படைகள் பெய்ஜிங் நக­ரினுள் நுழைந்­தன.

1949 : இஸ்­ரேலில் இடம்­பெற்ற முத­லா­வது பொதுத் தேர்­தலில் டேவிட் பென்-­கூ­ரியன் பிர­த­ம­ரானார்.

1955 : ஜேர்­ம­னி­யு­ட­னான போர் நிலையை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தாக சோவியத் ஒன்­றியம் அதி­கா­ர­பூர்­வ­மாக போரை நிறுத்­தி­யது.

1971 : உகண்­டாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் மில்ட்டன் ஓபோட்டே ஜனா­தி­பதிப் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டு இடி அமீன் ஜனா­தி­ப­தி­யானார்.

1971 : இந்­தி­யாவின் 18 ஆவது மாநி­ல­மாக இமா­சலப் பிர­தேசம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

1981 : மா ஓ சே துங்கின் மனைவி ஜியாங் கிங்­குக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இது பின்னர் ஆயுள் தண்­ட­னை­யாகக் குறைக்­கப்­பட்­டது.

1986 : தேசிய எதிர்ப்பு இயக்­கத்­தி­னரால் உகண்டா அர­சாங்கம் கவிழ்க்­கப்­பட்­டது.

1994 : நாசாவின் கிள­மென்டைன் விண்­கலம் சந்­தி­ரனை நோக்கி ஏவப்­பட்­டது.

1995 : ஜோசப் வாஸ் அடி­களார் பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரால் முத்­திப்­பேறு பெற்­ற­வ­ராக அறி­விக்­கப்­பட்டார்.

1998 : கண்டி தலதா மாளி­கையில் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தலில் 8 பேர் கொல்­லப்­பட்டு 25 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

1999 : கொலம்­பி­யாவில் ஏற்­பட்ட 6.0 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்­தினால் 1,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

2004 : ஒப்­போர்ச்­சு­னிட்டி விண்­ணு­ளவி செவ்வாய் கிர­கத்தின் தரையில் இறங்­கி­யது.

2005 : இந்­தி­யாவின் மகா­ராஷ்­டிரா மாநி­லத்தில் மந்­தி­ரா­தேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சன­நெ­ரி­சலில் சிக்கி பெண்கள், சிறார்கள் உட்­பட 258 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2006 : சூரியக் குடும்­பத்­திற்கு வெளியே பால் வெழியின் நடு­வில் பூமியில் இருந்து 21,500 : 3,300 ஒளி­யாண்­டுகள் தூரத்தில் ழுபு­OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

2009 : முல்­லைத்­தீவில் ராம­நா­த­புரம் பகு­தியில் உள்ள கல்­மடு குளத்தின் அணை விடு­தலைப் புலி­களால் உடைக்­கப்­பட்­டது.

2010 : எத்­தி­யோப்­பிய விமா­ன­மொன்று மத்­திய தரைக்­க­டலில் வீழ்ந்­ததால் விமா­னத்­தி­லி­ருந்த 90 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

2013 : வெனி­சூ­லாவில் சிறைச்­சா­லை­யொன்றில் ஏற்­பட்ட கல­வ­ரத்­தினால் 50 பேர் பலி­யா­ன­துடன் மேலும் 120 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஒரு சிறந்த நிர்வாகியாக என்னென்ன தகுதிகள் வேண்டும்? - எடுத்துச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! #MotivationStory

 

கதை

`ங்கே அன்பு இருக்கிறதோ, அங்கேதான் வாழ்க்கை இருக்கிறது’ - தெளிவாகச் சொல்லியிருக்கிறார் மகாத்மா காந்தி. பல ஆண்டுகளை பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பாகக் கழித்து சுக வாழ்க்கை வாழும் நம்மில் பலர் அந்த நேசத்தின் அருமையை உணர்வதில்லை. பெற்றோர், நம் குடும்ப உறுப்பினர், நம் மீது பிரியமுள்ள யாரோ ஒருவரால்தான் இந்த வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. நாம் எல்லோருமே யாரோ ஒருவர் நம் மேல் காட்டும் அன்பின் பொருட்டுத்தான் வளர்கிறோம், வாழ்கிறோம், அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கிறோம். இந்த அருமையை, அன்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் தாங்கள் சார்ந்த துறையில் மேலே மேலே உயர்கிறார்கள். மற்றவர்களையும் அரவணைத்துச் சென்று உயரவைப்பார்கள். ஒரு சிறந்த நிர்வாகியாக மிளிர வேண்டும் என்கிற லட்சியம் உள்ளவர்கள் அவசியம் புரிந்துவைத்திருக்கவேண்டிய உண்மை இது. அதை உணர்த்தும் கதை ஒன்று உண்டு.

 

நேர்முகத்தேர்வு

நியூயார்க்கில் உள்ள ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில், மேலாளர் பணி காலியாக இருந்தது. அதை அறிந்து இளைஞன் ஒருவன் விண்ணப்பித்திருந்தான். அவனுடைய கல்வித் தகுதி பிரமிக்கத்தக்கதாக இருந்தது. பட்ட மேற்படிப்பு வரை அவன் வாங்கிய மதிப்பெண்களே அவன் யார் என்று எடுத்துச் சொல்லப் போதுமானதாக இருந்தது. அவன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டான். நேரடியாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடன் ஒரு நேர்காணல் இருந்தது. அதில் தேறிவிட்டால் அவனுக்கு வேலை உத்தரவாதம். அந்த நாளும் வந்தது. 

நிர்வாக இயக்குநர், அவனுடைய சான்றிதழ்களையெல்லாம் பார்த்தார். அவருக்கு முழு திருப்தி. மெதுவாக பேச்சை ஆரம்பித்தார். ``படிக்கும்போது உனக்கு ஸ்காலர்ஷிப் ஏதாவது கிடைச்சுதா?’’ 

நேர்முக தேர்வு

``இல்லை சார்’’ என்றான் இளைஞன். 

``உன்னோட அப்பாதான் கஷ்டப்பட்டு உன்னைப் படிக்கவெச்சாரா?’’ 

``இல்லை சார். எனக்கு ஒரு வயசு நடக்கும்போதே அப்பா இறந்து போயிட்டார். அம்மாதான் என்னைப் படிக்கவெச்சாங்க.’’ 

``உங்க அம்மா எங்கே வேலை பார்க்கறாங்க?’’ 

``அவங்க ஒரு சலவைத் தொழிலாளி சார். துணிகளை வாங்கிட்டு வந்து வீட்டுலேயே துவைச்சுக் குடுப்பாங்க.’’ 

இதைக் கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டார். ``சரி... உன் கைகளை நீட்டு’’ என்றார். இளைஞன் புரியாமல் தன் இரு கைகளையும் நீட்டினான். அவனுடைய கைகள் வழுவழுவென்று, பளபளப்பாக, எந்த மாசு, மருவும் இல்லாமல் சுத்தமாக இருந்தன. 

இப்போது அடுத்த கேள்வி. ``உன் அம்மா துணி துவைக்கும்போது நீ எப்போவாவது அவங்களுக்கு உதவி செஞ்சிருக்கியா?’’ 

``எங்கம்மா அதுக்கு விடவே மாட்டாங்க. `உனக்கு எதுக்கு இந்த வேலை... போய் படிக்கிற வேலையைப் பாரு. பாடத்தையெல்லாம் படிச்சி முடிச்சிட்டீன்னா, வேற புத்தகங்களை எடுத்துப் படி’னு சொல்லிடுவாங்க. அதோட, என்னைவிட என் அம்மா ரொம்ப ஸ்பீடா துணி துவைப்பாங்க சார்.’’ 

துணி துவைத்தல்

``சரி... எனக்காக ஒரு உதவி செய்வியா?’’ 

``சொல்லுங்க சார்.’’ 

``இன்னிக்கி வீட்டுக்குப் போ. போனதும் உன்னோட அம்மாவோட கைகளை உன் கைகளால் கழுவி விடு. நாளைக்கு வந்து அந்த அனுபவம் எப்படி இருக்குனு எனக்குச் சொல்லு.... சரியா?’’ 

அவர் எதற்கு இப்படிச் சொல்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனாலும், ``சரி’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான். அந்த நிறுவன வேலை என்பது ஓர் அரிய வாய்ப்பு. அவனைப் போன்ற இளைஞர்கள் மேலே மேலே உயர இந்த வேலை ஒரு வலுவான களம். இந்த யோசனையோடு வீட்டுக்கு வந்தான். அம்மாவிடம், ``அம்மா... இங்கே வாயேன்... ஒரு விஷயம்...’’ என்று அழைத்தவன், அம்மாவின் கைகளைக் கழுவ வேண்டும் என்கிற விருப்பத்தைச் சொன்னான். 

அம்மாவுக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம். ஆனாலும், மகிழ்ச்சியோடு அதற்கு ஒப்புக்கொண்டார். குளியலறைக்கு அம்மாவை அழைத்துப் போய், அவருடைய கைகளை சோப்புப் போட்டுக் கழுவ ஆரம்பித்தான் இளைஞன். அடுத்த கணம் அவன் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் அந்தக் கைகளில் விழுந்தது. சுருங்கிப்போன, ஆங்காங்கே சிராய்ப்புகளுடனிருந்த, கரடு முரடான அம்மாவின் கையை அப்போதுதான் அவன் பார்க்கிறான். சில சிராய்ப்புகளில் சோப் படும்போது, ``மெதுவாப்பா... எரியுது’’ என்றார் அம்மா. 

கைகள்

`இந்தக் கைகள்தான் தினமும் ஊரார் துணியைத் துவைத்துப் போட்டு, சம்பாதித்து, என் ஸ்கூல் ஃபீஸைக் கட்ட உதவியது. இதிலுள்ள சிராய்ப்புகளும் காயங்களும் என் பட்டப்படிப்புக்கும், எதிர்காலத்துக்கும் அம்மா உழைத்ததற்காகக் கிடைத்தப் பரிசுகள்...’ இப்படியெல்லாம் அவன் யோசனை நீண்டது. துவைத்து முடித்தான். அன்றைக்கு அம்மாவை அவன் வேலை செய்யவிடவில்லை. அம்மா தடுத்தும் கேட்காமல், வீட்டிலிருந்த துணிகளையெல்லாம் அவனே துவைத்துப் போட்டான். அன்றைக்கு இரவு அம்மாவும் அவனும் சாப்பிட்டுவிட்டு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

அடுத்த நாள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவனை விசாரித்தார். அவன் நடந்ததைச் சொன்னான்... ``சார்... என் அம்மா இல்லாம நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாதுங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். எங்கம்மாவுக்கு துவைக்க உதவி செஞ்சபோதுதான் அது எவ்வளவு கஷ்டமான வேலைனு புரிஞ்சுது. இப்போ எனக்கு குடும்பம்னா என்ன அதன் மதிப்பு என்ன, உறவுகளின் மதிப்பு எல்லாம் புரியுது...’’ 

``என் மேனேஜருக்கு இதெல்லாம்தான் இருக்கணும்னு நான் எதிர்பார்த்தேன். மத்தவங்களோட கஷ்டம் புரிஞ்ச, மத்தவங்களுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் உள்ள, பணம் சம்பாதிக்கறது மட்டுமே லட்சியம்னு இல்லாத ஓர் ஆள்தான் என் மேனேஜரா இருக்கணும். நீ எப்போ வேணாலும் வேலையில சேர்ந்துக்கலாம்ப்பா...’’ 

***  

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Brille

 

ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவ அடையாளம் கொண்ட, புகழ் பெற்ற செங்கை ஆழியான் அவர்களின் பிறந்தநாள் இன்று.

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள்,வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் தனது சிறப்பு முத்திரை பதித்து வந்திருந்தவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகியிருந்தார்.

நினைந்துகொள்கிறோம் ஈழத்தின் எழுத்தின் அற்புதப்பெருமகனை

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

பாகுபலி ஜோடி சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்பதுதான் தெலுங்கின் காரசார கிசுகிசு. ஆனால், இதை அவசர அவசரமாக பிரபாஸும், அனுஷ்காவும் மறுக்கிறார்கள். ‘`நானும் பிரபாஸும் நல்ல நண்பர்கள். நிச்சயமாகத் திருமணம் செய்துகொள்ள மாட்டோம்’’ என்கிறார் அனுஷ்கா. ஆனால், விராட் கோலி - அனுஷ்கா போல திடீரெனத் திருமணம் செய்துகொள்வார்கள் எனக் கிசுகிசுக்கிறது ஆந்திர மீடியா. அங்கேயும் இங்கேயும் அனுஷ்கா!

p56a_1516700785.jpg

மிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகும் ‘ஸ்ட்ரீட் லைட்ஸ்’ படத்தைத் தானே தயாரித்து நடித்துக்கொண்டிருக்கிறார் மம்முட்டி. `மௌனம் சம்மதம்’ பட பாணியில் இந்தப்படம் இருக்கும் என்கிறது மம்முட்டி டீம். படத்தை இயக்கவிருப்பவர் விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாம்தத். சேட்டன்ஸ் ஆன் ஃபயர்

விஜய் - மோகன் ராஜா கூட்டணி மீண்டும் இணையலாம். `வேலைக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மோகன் ராஜாவுக்குப் பார்ட்டி கொடுத்திருக்கிறார் விஜய். அப்போது அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்க ராஜாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம் விஜய். அடுத்து `தளபதி’க்கான கதை தயாரிக்கும் வேலைகளில் இறங்குகிறார் ராஜா. வேலாயுதம் சீஸன் 2

ஐ.பி.எல் ஏலத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகம். இரண்டு வருட தடைக்குப் பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் எப்படியிருக்கும் என்பதில்தான் எல்லோரின் கவனமும். தோனி, சென்னை அணிக்கே வந்துவிட்ட நிலையில் கையில் 47 கோடி ரூபாய் மட்டுமே வைத்துக்கொண்டு பழைய அணியை மீட்க ஏலத்தில் போராடவிருக்கிறது சென்னை. அஷ்வின், ரெய்னா, டுவெய்ன் ப்ராவோ, டு ப்ளெஸ்ஸி, பிரென்டன் மெக்கல்லம் ஆகியோர்தான் சென்னையின் முதல் டார்கெட். விசில் போடணும் பாய்ஸ்!

னடா அதிபர்  ஜஸ்டின் ட்ரூடுதான் உலகத்தமிழர்களின் வைரல் நாயகன். `இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என கனேடிய ஆக்ஸண்ட்டில் ட்ரூடு பொங்கல் உரை நிகழ்த்தியதோடு, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, மஞ்சள் துண்டு எனத் தமிழர் உடையில் விழாவில் கலந்துகொள்ள, தமிழர்களிடையே பிரபலமானார் ட்ரூடு. அனேகமாக அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டிலும் ட்ரூடு கலந்துகொள்ளுவார் என எதிர்பார்க்கலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர்!

ன் திருமணத்துக்கு வந்த பரிசுப்பொருள்களை ஏலத்தில் விட இருக்கிறார் சமந்தா. சமீபத்தில் நடைபெற்ற சமந்தா-நாகசைத்தன்யா திருமணத்தில் ஏகப்பட்ட பரிசுகள் குவிந்தன. அது அத்தனையையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் சமந்தா இவற்றை ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தைத் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழைக்குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்தவிருக்கிறாராம். சூப்பர் சமந்தா!

p56b_1516700816.jpg

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இது கம்பேக் ஆண்டு. 2018-ல் மட்டும் 16 படங்கள் யுவனின் இசையில் வெளிவரவிருக்கின்றன. இதில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளிவரவிருக்கும் `இரும்புத்திரை’ படம் யுவன் இசையமைக்கும் 125-வது திரைப்படம். மீண்டும் தனுஷுடன் மாரி-2, செல்வராகவனுடன் சூர்யா படம் என, பிரிந்தவர்கள் மீண்டும் இணைகிறார்கள். மாரி-2 படத்துக்காக நீண்ட நாள்களுக்குப் பிறகு அப்பா இளையராஜாவையும் பாடவைத்திருக்கிறார் யுவன்! வா ராஜா... வா வா!

p56c_1516700839.jpg

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சிக் குள்ளேயே கொடிபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா கோட்டாவான 3 எம்.பி-கள் தேர்ந்தெடுப்பில் கெஜ்ரிவால் தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார் என்பதுதான் கோபத்துக்குக் காரணம். மூன்றில் ஒரு எம்.பி பதவியை ஆம் ஆத்மி கட்சிக்காரருக்குக் கொடுத்த கெஜ்ரிவால் இரண்டு எம்.பி பதவிகளைக் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத தன் சொந்த ஊர்க்காரருக்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் கொடுத்துவிட `கெஜ்ரிவாலும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான்’ எனப் புலம்புகிறார்கள் ஆம் ஆத்மியன்ஸ். கெஜ்ரிவால் கணக்கு

ஏ.ஆர்.ரஹ்மான் தன் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவு. `இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ஆர். ரவிக்குமார், சிவகார்த்திகேயனிடம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை சொல்ல, ``இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும், அவரிடம் கேட்டுப்பாருங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார் சிவா. உற்சாகமான ரவிக்குமார், ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்க்க, ரஹ்மான் ``நான் உங்களுடைய முதல் படத்தைப் பார்க்கவேண்டும்’ என டிவிடி கேட்க, படம் பார்த்தவர் உடனே, சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணிக்கு ஓகே சொல்லியிருக்கிறார். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

அறிவுஜீவிகள் சூழ் வாழ்வு முதல் கடைசி கடிதம் வரை...நவீனத்துவ எழுத்தில் உருக்கிய வெர்ஜீனியா வூல்ஃப்!  #VirginiaWoolf

 
 

வெர்ஜீனியா
PC: Wikipedia

ழுதுவது என்பது செக்ஸ் வைத்துக்கொள்வது போன்றது; முதலில், காதலுக்காகச் செய்வீர்கள்; பிறகு, நண்பர்களுக்காகச் செய்வீர்கள்; அதன்பின், பணத்துக்காகச் செய்வீர்கள்!'

 

'ஒரு பெண் எழுதவேண்டுமெனில், அவளுக்கென்று ஓர் அறை, கொஞ்சம் பணம் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும்!' - கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி எழுதுவது என்பது அத்தனை சுலபமானதல்ல. அதிலும் ஒரு பெண் எழுதுவதை நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், லண்டனில் பிறந்த வெர்ஜீனியா வூல்ஃப் (Virginia Woolf) எழுதினார். அந்தப் பெண்ணின் பேனாவிலிருந்து வழிந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் பெண்களின் ஆழ்மனத்தில் புதைத்துகிடந்த கவலை, மனப்போராட்டம், கேள்விகளுக்கு விடையாக இருந்தன. 

வெர்ஜீனியாஇருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களில் முக்கியமானவர், வெர்ஜீனியா வூல்ஃப். 1882-ம் ஆண்டு, லண்டனில் கின்சிங்கடன் (Kenginston) என்ற இடத்தில் பிறந்தார். வசதியான படிப்பறிவுள்ள குடும்பத்தில் பிறந்தவருக்கு வாசிப்பு மற்றும் சிந்தனை திறன் இயல்பிலேயே இருந்தது. ஆனால், மன அழுத்தங்களும் சோகங்களும் நிறைந்ததாகவும் வெர்ஜீனியாவின் வாழ்க்கை இருந்தது விசித்திரமானது. 

1895-ம் ஆண்டு தாயின் இறப்பு, வூல்ஃப்பை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. 1904-ம் ஆண்டு தந்தையும் இறந்துவிட, தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளானார். சிறுவயதிலிருந்தே எழுதத் தொடங்கிய வெர்ஜீனியாவின் முதல் கட்டுரை, டிசம்பர் 1904-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து, டைம்ஸ் லிட்ரரி சப்ளிமென்ட் (Times Literary Supplement) என்ற இலக்கிய விமர்சனப் பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தார். எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் வட்டம் சூழ வளர்ந்தார். பிரபல எழுத்தாளரான ஈ.எம்.பாஸ்டர் (EM Foster), பொருளாதார நிபுணர் ஜெ.எம்.கியேஸ் (J.M.Keyes), எழுத்தாளர் லிட்டன் ஸ்ட்ராசே (Lytton Strachey) என அமைந்த இவரின் நண்பர்கள் கூட்டத்தை, ‘புலோன்ஸ்பர்க் குழு’ (Bloomsburg Group) என்று அழைப்பார்கள். முற்போக்கு சிந்தனை, பாலியல் சுதந்திரம் பற்றி விவாதிக்கும் தீவிர குழுவாகச் செயல்பட்டார்கள். வெர்ஜீனியாவின் கூர்மையான எழுத்துக்கு இந்தக் குழுவும் முக்கியக் காரணம். 

வெர்ஜீனியா

1912-ம் ஆண்டு, லியோனர்டு என்ற எழுத்தாளரை மணந்தார் வெர்ஜீனியா. அவருடன் சேர்ந்து தொடங்கிய 'ஹோகர்த் பிரஸ்' மூலம், உலகப் புகழ்பெற்ற டி.எஸ்.இலியட், அண்டன் செகோவ் மற்றும் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டனர். ஒருவரின் மனம் சார்ந்து நடக்கும் விஷயங்களையும், வெளி உலகையும் ஒருங்கிணைத்து எழுத்தின் மூலம் வெளிப்படுத்தியவர் வெர்ஜீனியா. நவீனத்துவ இலக்கியத்தை, ஒரு பெண்ணின் பார்வையில் வலிமையாக வடிவமைத்தவர். இவரின் முதல் நாவலான, தி வயோஜ் அவுட் (The Voyage Out), 1915-ம் ஆண்டு வெளியானது. தன்னைச் சுற்றியுள்ள அறிவுஜீவி குழுவையே மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் இது. இந்தக் கதையில் வரும் கிளாரிசா டாலோவே (Clarissa Dalloway) என்ற நடுத்தர வயது பெண்மணியின் வாழ்க்கையை மையப்படுத்தி, மிஸஸ் டாலோவே (Mrs.Dalloway) என்ற நாவலை எழுதினார். இது பெண்ணியம் பற்றி வெளிப்படையாகப் பேசியது. 1970-ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் எழுந்த பெண்ணியப் புரட்சிக்கு இவரின் எழுத்தும் முக்கியப் பங்கு வகித்தது. 
முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையே, இவர் எழுதிய நாவல்கள் வெளியாகின. பெண்ணியவாதம் பேசிய இவரின் எழுத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எழுத்துகளால் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வெர்ஜீனியா, வாழ்நாள் முழுவதும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். 1941 மார்ச் 28-ம் தேதி, ஒஸி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தன் கணவருக்கு எழுதிய கடைசி கடிதத்தில், 'நான் மீண்டும் மன அழுத்தத்தில் தவிக்கிறேன் என்பது உறுதி. மீண்டும் அந்தக் கொடூர நாள்களை என்னால் அனுபவிக்கமுடியாது என்று நினைக்கிறேன். எனக்குத் தொடர்ந்து சில குரல்கள் கேட்டுக்கொண்டிருக்கிறது. உங்களின் வாழ்க்கையை நான் இனியும் கெடுக்க விரும்பவில்லை. நாம் மற்ற தம்பதியர்களைவிடவும் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

அவரது 136-வது பிறந்தநாளையொட்டி, கூகுள் இன்று டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

https://www.vikatan.com

 

 

 

  • தொடங்கியவர்

அன்று டிராவிட்... இன்று புஜாரா... இந்திய கிரிக்கெட்டின் புதிய சுவர்! #HappyBirthdayPujara

 
 

2015, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இருவரும் தலா ஒவ்வோர் ஆட்டத்தில் ஜெயித்திருக்க, நடந்த 3-வது போட்டி இந்த இரு அணிகளுக்கும் முக்கிய ஆட்டமாக அமைந்தது. சீரியஸைக் கைப்பற்றும் நோக்கோடு இரு அணிகளும் முழு வேகத்தோடு களமிறங்கின. இந்தியா பேட்டிங். சடசடவென விக்கெட்டை இழந்த இந்திய அணி, 119 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தது. ஒரு முனையில் புஜாரா மட்டும் போராடிக்கொண்டிருந்தார். அதற்குப் பிறகு வந்த கோலியோடு 50 ரன், ரோகித் ஷர்மாவோடு 55 ரன், நமன் ஓஜாவுடன் 54 ரன் என, குட்டிக்குட்டிப் பார்ட்னர்ஷிப்கள் அமைத்தார். 8-வது விக்கெட்டில் களமிறங்கிய அமித் மிஷ்ராவோடு இவர் போட்ட கூட்டணி, ஆட்டத்தைப் புரட்டிப்போட்டது. இறுதியில் 312 ரன்னைக் குவித்து கம்பீரமாக நிமிர்ந்தது இந்திய அணி. இன்னிங்ஸின் முடிவில் 145 ரன்னைக் குவித்த புஜாரா, தன் விக்கெட்டை இழக்காமல் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பினார்.

2018, ஜனவரி 24 (நேற்று), ஜோகன்னஸ்பர்க். இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட். ஓப்பனர்கள் கே.எல்.ராகுல், முரளி விஜய் இருவரும் சொற்ப ரன்களில் அவுட். கேப்டன் கோலியுடன் பார்ட்னர்ஷிப். முதல் செஷனில் மோர்கல், பிலாண்டர், ரபாடா, பெலுக்வாயா, எங்கிடி ஐந்து பேரும் ஸ்விங், Seam, பெளன்ஸ் என மிரட்டுகிறார்கள். அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில், குட் லென்த்தில் விழும் பந்தைத் தப்பித் தவறி தொட்டால் கூட, எட்ஜாகி விடும். கதை கந்தலாகி விடும். ஒவ்வொரு பந்தையும் கோலி நிதானமாக எதிர்கொண்டார். கோலியை விட புஜாரா பல மடங்கு நிதானம். ஆம், 54-வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானம் ரொம்ப முக்கியம். காத்திருப்பு மிக மிக அவசியம். புஜாராவுக்கு காத்திருக்கவும் தெரியும், அதேநேரத்தில்  ஒரு பெளலர் தவறு செய்யும்போது அவரைத் தண்டிக்கவும் தெரியும். நேற்று பிலாண்டர் பந்தில் அடுத்தடுத்து அவர் அடித்த இரண்டு பவுண்டரிகளைப் பார்த்தாலே தெரியும். சூழ்நிலைக்கேற்ப பேட் செய்யும் ஆபத்பாந்தவன் அவர்.  

 

மொத்த அணியும் தடுமாறும்போது டிராவிட் மட்டும் நிலைத்துநின்று கடைசி ஆளாக பெவிலியன் வருவதைப் பார்த்துப் பழகிப்போன இந்திய ரசிகனுக்கு இது ஆச்சர்யம். டிராவிட் போல் இனி ஒருவன் கிடைப்பானா என்ற இந்திய ரசிகர்களின் ஏக்கத்தை சற்றே தீர்த்தார் சத்தேஷ்வர் புஜாரா - The new wall of Indian cricket! அவரது பிறந்த நாளான இன்று, அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்...

புஜாரா

அரவிந்த் புஜாரா - ரீமா புஜாரா தம்பதிக்குப் பிறந்தவர் சத்தேஷ்வர் புஜாரா. மூன்று வயது இருக்கும்போது இவரது மாமா ஒரு பேட்டை இவருக்கு கிஃப்ட்டாக வழங்கினார். வீட்டில் அதை வைத்து விளையாடிக்கொண்டிருக்கையில் கேண்டிடாக புஜாராவின் அண்ணன் மகன் இவரை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதுதான் இவரின் டர்னிங் பாயின்ட். புஜாராவின் அப்பாவும் கிரிக்கெட் வீரர் என்பதால், அந்தப் புகைப்படத்தைப் பார்க்கையில் இவர் பேட்டைப் பிடிக்கும் ஸ்டைலில் ஒருவித புரொஃபஷனல் டச்சைப் பார்த்திருக்கிறார். அவரை கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்தார்  புஜாராவின் அம்மா. அப்பாவின் தலைமையில் தன்னுடைய கிரிக்கெட் பயணித்துக்கு பிள்ளையார் சுழி போட்டார் புஜாரா.

இவரது பயிற்சிப் பாதையில் கடுமையான பல பயிற்சி முறைகளை மேற்கொண்டு, சிறு வயது சந்தோஷங்களையெல்லாம் தியாகம் செய்தார் புஜாரா. விடுமுறையே கிடையாது. காலையில் 5 மணிக்கு எழுந்து பயிற்சியை ஆரம்பிக்கும் புஜாரா, பயிற்சியை முடித்துவிட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும். பள்ளியை முடித்துவிட்டு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு, சரியாக இரவு 9 மணிக்கு தூங்கச் சென்றுவிட வேண்டும். விடுமுறை நாள்களிலும் புஜாரா பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதுவே புஜாராவின் தந்தை இவருக்கு விதித்த கட்டளை. அதுவும்போக ஹோலி கொண்டாடுவது, தீபாவளிக்கு வெடி வெடிப்பது, கர்பா கொண்டாட்டம் போன்ற வட இந்திய பண்டிகைகளைக் கொண்டாடி மகிழும் சந்தோஷங்களையும் கிரிக்கெட் மீதான காதலால் விட்டுக்கொடுத்தார். படிப்பிலும் புஜாராதான் ஸ்கூல் டாப்பர். இப்படியே மெள்ள மெள்ள தன் திறமைகளை மெருகேற்றி, அண்டர்-19 ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் மைதானத்தினுள் காலடி எடுத்துவைத்தார். அதில் இவர் வெளிப்படுத்திய ஆட்டம், இந்திய அணியில் விளையாட வித்திட்டது. 2010, 2011 ஆகிய ஆண்டுகள் புஜாராவுக்கு சிறப்பான ஆண்டாக அமையாவிட்டாலும், 2012-ம் ஆண்டு இவருக்கு மிகச் சிறந்த வருடமாக அமைந்தது.

புஜாரா

2012, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், முதல் போட்டி... இந்திய அணி பேட்டிங். ஆட்டத்தின் ஆரம்பமே அட்டகாசமாக அமைந்தது. சேவாக்-புஜாரா கூட்டணி, 90 ரன்னைக் குவித்தது. 5-வது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த யுவராஜ்-புஜாரா கூட்டணி, 150 ரன்னைக் குவித்து இந்திய அணியை வலுவான இடத்தை அடையச்செய்தது. ஆட்டத்தின் முடிவில் 521 ரன்னைக் குவித்து, இங்கிலாந்து அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, 206 ரன்னைக் குவித்து, தன் விக்கெட்டையும் இழக்காமல் இருந்தார். 191 ரன்னுக்கே சுருண்ட இங்கிலாந்து அணியைத் தொடர்ந்து விளையாடச் செய்தது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸிலும் திணறிய இங்கிலாந்து அணி, 91 ரன் என்ற ஈஸியான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணியை அபாரமாக வென்றது இந்திய அணி.

புஜாராவின் 50-வது பெஸ்ட் போட்டி... இந்த ஆட்டம், புஜாராவுக்கு கொஞ்சம் ஸ்பெஷலான ஆட்டமாக அமைந்தது. 2017-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டம் அது. டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. 56 ரன்னுக்கு தவான் ஆட்டமிழக்க, ராகுலோடு ஜோடி சேர்ந்த புஜாரா, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு 53 ரன்னைக் குவித்தார். அதற்குப் பிறகு ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த புஜாரா, இன்னிங்ஸின் முடிவின் 217 ரன் குவித்துத் தவித்துக்கொண்டிருந்த இந்திய அணியை சேஃபர் ஜோனுக்கு அழைத்துவந்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் 133 ரன் குவித்து, இந்திய வீரர்கள் பட்டியலில் தான் விளையாடிய 50-வது ஆட்டத்தில் சதம் அடித்த 7-வது வீரர் என்ற பெருமையோடு பெவிலியன் திரும்பினார். இதுபோல் நிலைத்துநின்று விளையாடி, இந்திய அணியைக் கரைசேர்த்த போட்டிகள் ஏராளம்.

புஜாரா

சாதனைகள் :

* முதல் தரப் போட்டிகளில் கிரிஸ் ரோஜர்ஸுக்குப் பிறகு, ஒரே வருடத்தில் 2,000 ரன்னைக் கடந்திருக்கிறார். இந்தச் சாதனையைச் செய்த இரண்டாவது வீரர் புஜாரா.

* குறைந்த ஆட்டங்களில் 1,000 ரன்கள் குவித்த இந்திய அணியின் இரண்டாவது வீரராக ஜொலித்து, 2013-ம் ஆண்டில், வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதைப் பெற்றார்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து நாள்களுமே பேட்டிங் செய்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையும் புஜாராவுக்கு உள்ளது. 

 

* 2017-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் குவித்த இரட்டைச்சதம், சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மென் பட்டியல் வரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றியது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் மிகவும் ஆபத்தான பூனை

  • தொடங்கியவர்
 
Tamil_News_large_1945894-1.jpg

‘குளோனிங்’- குரங்கு உருவாக்கம்!!

 

 

குளோனிங் முறையில் குரங்குகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ள சீன விஞ்ஞானிகள் மனிதர்களையும் குளோனிங் மூலம் உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
சீனாவின் ஷாங்காய் பகுதியை சேர்ந்த விஞ்ஞானிகள்.

குளோனிங் முறையில், இரண்டு குரங்குகளை உருவாக்கியுள்ளனர். ஒன்று உருவாக்கப்பட்டு 8 வாரங்களாகிறது. மற்றொன்று 6 வாரங்களாகிறது. அவற்றிற்கு ஜோங் ஜோங் மற்றும் ஹூவா ஹூவா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

குளோனிங் முறையில் ‛டாலி’ என்ற ஆடு உருவாக்கப்பட்ட முறையை பின்பற்றி, இந்த குரங்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், போத்தல் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

குரங்குகளை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், குளோனிங் முறையில் குரங்குகளை உருவாக்கப்பட்டது, மனிதர்களுக்கு உருவாகும் நோய்களுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், மனிதர்களைக் குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான சாத்தியத்தையும் கொண்டு வந்துள்ளது. மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான தடைகள் உடைக்கப்பட்டு விட்டன. பல தடைகள் உடைக்கப்பட்டு விலங்குகள் உருவாக்கப்பட்டதன் மூலம், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும், மருத்துவதுறைக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். குளோனிங் முறையில் உருவாக்கப்படும் விலங்குகள் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும். பல புதிய மருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முன்னர் அவற்றை இந்த விலங்குகளில் பயன்படுத்திப் பார்க்க முடியும். இன்னும் நிறைய குரங்குகள் உருவாக்கப்பட உள்ளன எனக் கூறினர்.

 

201801251314399334_Chinese-scientists-haW020180125312349141839.jpg

 
 
 
 
Camels-disqualified-in-a-beauty-contests

ஒட்டகங்களுக்கு அழகிப் போட்டி!!

சவுதி அரேபியாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஒட்டகங்களுக்கான அழகிப் போட்டி இந்த முறையும் களைகட்டத் தொடங்கியுள்ளது.

சவுதி அரேபியாவில் மன்னர் அப்துல் அஜீஸ் பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஒட்டக விழாவானது இந்த முறையும் மிக சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதன் ஒருபகுதியாக 57 மில்லியன் டொலர் பரிசுத் தொகை கொண்ட ஒட்டகங்களுக்கான அழகிப் போட்டியும் நடைபெற்றது. போட்டியில் முதற்பரிசை வெல்லும் ஒட்டகத்துக்கு 30 மில்லியன் டொலர் பரிசுத்தொகை வழங்கப்படும்.

சவுதி பாலைவனத்தில் பிரத்தியேகமாக எழுப்பப்பட்டிருக்கும் அரங்கில் ஒட்டகங்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்களைக் கண்டுகளிக்க சுமார் 3 லட்சம் மக்கள் குவிந்துள்ளனர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இதனிடையே போட்டியில் கலந்து கொண்ட 12 ஒட்டகங்களை விதி மீறல் தொடர்பாக தடை செய்துள்ளனர். கடந்த முறை வெளியிட்ட அறிக்கையின் படி, போட்டியில் கலந்து கொள்ளும் ஒட்டகங்களுக்கு போதை மருந்து கொடுப்பது, அதன் உடலில் வர்ணம் பூசுவது, முடிகளை மழிப்பது உள்ளிட்டவைகளை அனுமதிக்க முடியாது எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

GettyImages-900260692_1516812894702_1256camellos001-kadG-739x455@El-Norte.jpg

636496525432590587-AFP-AFP-VE61P.jpg

9360212-3x2-700x467.jpg

http://newuthayan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 26
 

1500: வின்சென்ட் பின்ஸோன் என்பவர் பிரேஸிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியரானார்.

1531: போர்த்துகலின் லிஸ்பன் நகரில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பலி.

1788: பிரித்தானிய தளபதி தலைமையில் அவுஸ்திரேலியாவுக்கு  முதல் தொகுதி  கைதிகளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் தற்போதைய சிட்னி துறைமுகப் பகுதியை அடைந்தன. இத்தினம் அவுஸ்திரேலிய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

1930: இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 26 ஆம் திகதியை பூரண சுவராஜ் தினமாக பிரகடனப்படுத்தியது.  20 வருடங்களின்பின் இந்தியா குடியரசாகியது.

1934: ஜேர்மன் - போலந்து மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1950: இந்தியா குடியரசாகியது. ராஜேந்திர பிரசாத் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1958: ஜப்பானிய கப்பலொன்று கவிழ்ந்தால் 167 பேர் பலி.

1965: இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப்பட்டது.

1980: இஸ்ரேல் - எகிப்து மோதல் தவிர்ப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.

1992:அமெரிக்க நகரங்களை ரஷ்யாவின் அணுவாயுதங்கள் இலக்குவைப்பதை ரஷ்யா நிறுத்தும் என அந்நாட்டு ஜனாதிபதி பொரிஸ் யெல்டசின் அறிவித்தார்.

1998: வெள்ளை மாளிகை பணிப்பெண் மோனிகா லுவின்ஸ்கியுடனான தகாத உறவுகள் வைத்திருந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மறுத்தார். 8 மாதங்களின்பின் அவர் இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

2001: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி.

2004: ஆப்கானிஸ்தானின் புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் கையெழுத்திட்டார்.

2006: வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தொலைத்தந்தி மூலமான தனது சேவைகளை நிறுத்திக்கொண்டது.

http://www.tamilmirror.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.