Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நுண்ணறிவில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய இந்திய சிறுவன்

28chskoboy

தாய் திவ்யாவுடன் மெகுல் கார்க்

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட மென்ஸா அமைப்பு, மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நுண்ணறிவுத் திறன் தேர்வை நடத்தி வருகிறது. இதில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தனர்.

மென்ஸா அமைப்பு அண்மையில் நடத்திய தேர்வில் பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியான வோகிங்ஹாம் நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் மெகுல் கார்க் 162 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

அவரது தாயார் திவ்யா கூறியபோது, “கடந்த ஆண்டு எனது மூத்த மகன் துருவ் கார்க் (13) மென்ஸா போட்டியில் 162 மதிப்பெண்கள் பெற்றான். அண்ணனை பின்பற்றி தம்பியும் இந்த ஆண்டு 162 மதிப்பெண்களை பெற்றுள்ளான்” என்று தெரிவித்தார். மெகுலின் தந்தை கவுரவ் கார்க் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனில் குடியேறினார்.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிரித்து வாழ வேண்டும் - பிபிசி தமிழ் நேயர்களின் 'அழகு' புகைப்படங்கள்!

 

ஆனந்த குளியல் - எல். யாசர் அராஃபத், திருப்பூர்

மழலையின் சிரிப்பில் - வே. சசிக்குமார், கோவை

ஈரோடு காய்கறி சந்தையில் - ஜி.குருராஜன், ஈரோடு

 

 

அன்னையின் புன்னகையில் - ரோஹிணி பாலசுப்ரமணியன், உக்கடம்

சிரிப்புகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்... - ந. கண்ணதாசன்

 

 

தாத்தாவின் அரவணைப்பில் - ஜோஷ்வா ஜேக்கப் ஜாக்சன், சென்னை

 

 

சுமையிலும் புன்னகை - ராதிகா ராஜேந்திரன்

 

திகட்டாத மழலை சிரிப்பு - ஆ. வள்ளி செளத்திரி, சென்னை

ஆயிரம் மொழிகள் பேசும் அழகு சிரிப்பு - ஆர். சுரேஷ்குமார், கோவை

 

தங்கையின் ஆனந்த சிரிப்பு - கிஷோர் குமார்

டி. சதீஷ் குமார்

மழையில் கொண்டாட்டம் - நித்தீஷ் சுந்தரம்

http://www.bbc.com

 

 

  • தொடங்கியவர்

1940: ஜப்­பா­னிய ரயில் விபத்தில் 181 பேர் பலி!

வரலாற்றில் இன்று..

ஜனவரி – 29

 

1595 : ஷேக்ஸ்­பி­யரின் ரோமி­யோவும் ஜூலி­யட்டும் நாடகம் முதன் முத­லாக அரங்­கே­றி­யது.

1676 : மூன்றாம் பியோதர் ரஷ்­யாவின் மன்­ன­னாக முடி சூடினார்.

1814 : நெப்­போ­லியன் போன­பார்ட்டின் பிரெஞ்சு இரா­ணுவம் பிரியென் நகரில் இடம்­பெற்ற சமரில் ரஷ்­யாவை வெற்றி பெற்­றது.

Ajikawaguchi_derail_1940-Varalaru.jpg1819 : பிரித்­தா­னி­ய­ரான ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்­கப்­பூரில் தரை­யி­றங்­கினார்.

1834 : அமெ­ரிக்­காவில் தொழி­லா­ளர்­களின் கிளர்ச்­சியை அடக்­கு­வ­தற்கு இரா­ணு­வத்தை பயன்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி அன்ட்ரூ ஜக்ஸன் உத்­த­ர­விட்டார்.

1863 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் இடாகோ மாநி­லத்தில் பெயார் ஆற்­ற­ருகில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் ஷோஷோன் பழங்­கு­டி­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற சமரில் பல நூற்­றுக்­க­ணக்­கான பழங்­கு­டிகள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1886 : ஜேர்­ம­னி­ய­ரான கார்ல் பென்ஸ், பெற்­றோ­லினால் இயங்கும் முத­லா­வது மோட்டார் வாக­னத்­துக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

1916 : முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்­ம­னி­யரின் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னது.

1929 : சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி, துருக்­கியை அடைந்தார்.

1940 : ஜப்­பானின் ஒசாக்­காவில் 3 ரயில்கள் ஒன்­று­ட­னொன்று மோதி வெடித்­ததில் 181 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1944 : இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கொனி­யூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இரா­ணு­வத்­தி­ன­ரினால் பெண்கள், குழந்­தைகள் உட்­பட ஏறத்­தாழ 38 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1989 : தென்­கொ­ரி­யா­வுடன் ஹங்­கேரி ராஜ­தந்­திர தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யது. தென்­கொ­ரி­யா­வுடன் ராஜ­தந்­திர உற­வு­களை ஏற்­ப­டுத்­திய முதல் கிழக்கு ஐரோப்­பிய நாடு ஹங்­கேரி ஆகும்.

1996 : இத்­தா­லியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்­பரா மாளி­கை­யான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்­தது.

1996 : பிரான்ஸின் அணு­வா­யுத பரி­சோ­த­னைகள் முடி­வ­டைந்­த­தாக ஜனா­தி­பதி ஜக் சிராக் அறி­வித்தார்.

2001 : இந்­தோ­னே­ஷி­யாவில் ஜனா­தி­பதி அப்துல் ரஹ்மான் வாஹிட்­டுக்கு எதி­ராக ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

2005 : 1949ஆம் ஆண்­டிற்குப் பின்னர் முதற்­த­ட­வை­யாக, சீனாவின் பெரு­நி­லப்­ப­ரப்பில் இருந்து வர்த்­தக விமானம் ஒன்று தாய்­வானை சென்­ற­டைந்­தது.

2015 : எம்.எச்.370 விமானம் காணமல் போன சம்­பவம் ஒரு விபத்து எனவும் அதி­லி­ருந்த அனை­வரும் உயிரிழந்துள்ளதாக கருதப்படுவதாகவும் மலேஷிய அரசு பிரகடனப்படுத்தியது.

2017 : கன­டாவின் கியூபெக் சிற்றி நகரில் பள்­ளி­வா­ச­லொன்றில் இடம்­பெற்ற துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் 6 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 19 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory

 
 

தன்னம்பிக்கை கதை

`ங்கள் கோபத்துக்காக நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள்; உங்கள் கோபத்தாலேயே நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.’ - இது கௌதம புத்தரின் வைரமொழி. ஒரேயொரு கணத்தில் சுர்ரென்று கோபம் மூக்கின் மேல் வந்து உட்காரும்போது, விளைவுகளை நாம் யோசிப்பதில்லை; எதிரே இருப்பவர் யார், எவர் என்று பார்ப்பதில்லை. அதனால் ஏற்படுகிற இழப்பு எவ்வளவு பெரியது என்று கணக்குப்போடுவதில்லை. கோபம் எதிராளியைப் பாதிப்பதில்லை; தன்னையேதான் பாதிக்கும். இந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை.

 

மேற்கத்திய நாடுகளில் ஒரு நல்ல பழக்கம் உண்டு. பரிசளித்தல்... ஆங்கிலத்தில் `Gift-giving' என்பார்கள். பிறந்தநாள், திருமண நாள், பண்டிகைகளுக்கு மட்டுமல்ல... சின்னச் சின்ன வெற்றிகளை, நிகழ்வுகளைக்கூடக் கொண்டாடும்விதமாகப் பரிசு கொடுப்பார்கள். அது பிரியத்தின் வெளிப்பாடு. `நீ ஒரு முக்கியமான காரியத்தை, வெற்றிகரமாகச் செய்திருக்கிறாய். அதற்கு என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு அளிக்கப்படுவது. தன் மேல் மற்றவருக்கு இருக்கும் அன்பை, நேசத்தை, அக்கறையைப் புரிந்துகொள்ள பரிசு உதவும். ஆனால், ஒரு பரிசு ஓர் இளைஞனின் வாழ்க்கையையே மாற்றிவிட்ட விநோதக் கதை இது.

லண்டனில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார்.  அவருக்கு ஒரே மகன். கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தான். தினமும் கல்லூரிக்குப் போகும் வழியில் கார்களை விற்கும் ஒரு பெரிய கடையைப் பார்ப்பான். அங்கே ஒரு ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ் கார் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஒருநாள் அந்தக் கடைக்குப் போய் கார் டீலரிடம், அந்த ஸ்போர்ட்ஸ் காரின் விலையை விசாரித்தான். அடுத்தநாள் தன் அப்பாவிடம் சொன்னான்... ``அப்பா... நான் டிகிரி வாங்கிட்டேன்னா என்ன தருவீங்க?’’

``என்ன வேணும்?’’

``ரெண்டு தெரு தாண்டி ஒரு கார் டீலர் கடை இருக்கில்ல... அங்கே ஒரு ஸ்போர்ட்ஸ் கார் புதுசா வந்திருக்கு. வாங்கித் தருவீங்களா?’’

``முதல்ல நல்லா படிச்சு, டிகிரியை வாங்கு. அப்புறம் பார்க்கலாம்.’’ அப்பா மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் போய்விட்டார். 

இளைஞன் பரீட்சையில் பாஸாகிவிட்டான். அப்பா, எப்படியும் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கித் தந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தான். பட்டமளிப்பு விழா நடக்கும் நாளும் நெருங்கியது. அன்று காலை அப்பா  அவனை அழைத்தார். அவர் எந்த அளவுக்கு அவனை நேசிக்கிறார் என்பதைச் சொன்னார்; அவன் நன்கு படித்து பட்டம் வாங்கியதற்காக அவர் பெருமைப்படுவதாகச் சொன்னார். பிறகு அவனுக்கு ஒரு பரிசைக் கொடுத்தார். இளைஞன் ஆவலோடு, அதே நேரத்தில் சிறிது ஏமாற்றத்துடன் மேலே சுற்றியிருந்த வண்ணத் தாளைப் பிரித்தான். அதன் உள்ளேயிருந்தது புத்தம் புதிய ஒரு பைபிள் புத்தகம். அதன் மேல் அவன் பெயர் தங்க எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது.  

பைபிள்இளைஞன் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் அந்த பைபிள் புத்தகத்தை மேஜை மேல் போட்டான். ``இவ்வளவு பணம் சம்பாதிச்சு என்ன செய்யப் போறீங்க... எனக்கு ஒரு கார் வாங்கிக் குடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க... போயும் போயும் ஒரு பைபிளைப் போய் வாங்கித் தந்திருக்கீங்களே...  நீங்களுமாச்சு, உங்க பணமுமாச்சு...’’ என்றுவிட்டுக் கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான். அப்பா, கோபம் தீர்ந்து மகன் திரும்பி வருவான் என்று காத்திருந்தார். அவன் வரவேயில்லை. லண்டனைவிட்டே கிளம்பிவிட்டான்.

நண்பர்களின் உதவியுடன் வேறோர் ஊருக்குப் போனான். ஒரு தொழில் தொடங்கினான். அதில் வெற்றி பெற்றான். அவனுக்கென்று ஒரு வீடு, குடும்பம் எல்லாமும் ஆனது. ஆனால், என்ன காரணமோ அப்பாவைப் பார்க்கவே தோணவில்லை. மனைவி, அவன் அப்பா என்ன ஆனார் என்று பார்த்துவிட்டு வரக் கூடாதா என அடிக்கடி நச்சரிக்க ஆரம்பித்தாள். அவனுக்கும் அவர் நினைவு மெள்ள மெள்ள வாட்ட ஆரம்பித்தது. ஒரு நாள் ஊருக்குக் கிளம்பிப் போய் அப்பாவைப் பார்க்க முடிவு செய்தான். அதற்கான ஏற்பாடுகளில் அவன் இறங்கியபோது அவனுக்கு ஒரு தந்தி வந்தது... ஒரு சட்ட அலுவலகத்திலிருந்து!

அந்தத் தந்தியில் அவனுடைய தந்தை இறந்துவிட்டதாகவும், அவர் தன் சொத்து முழுவதையும் அவன் பெயரில் எழுதிவைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இளைஞன் ஆடிப்போனான். அப்பாவை நினைத்துக் கதறியழுதான். ஊருக்குக் கிளம்பினான்.

புத்தக அலமாரி

வீட்டுக்குள் நுழைந்ததுமே அவனுடைய பழைய நினைவுகள் அவனைப் பாடாகப்படுத்த ஆரம்பித்தன. அப்பா, தனக்குப் பரிசாகக் கொடுத்த பைபிள் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான். அது, அப்பாவின் அலமாரியில் பத்திரமாக இருந்தது. ஆசையோடு அதை எடுத்துத் தடவிப் பார்த்தான். கண்ணீரோடு மெள்ள ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினான். ஓர் இடத்தில் அப்பா தன் சிவப்புப் பேனாவால் ஒரு பைபிள் வசனத்தை அடிக்கோடிட்டிருந்தார். அது, மத்தேயு 7:11-ல் இருந்த வசனம்... `தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாக இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருள்களைத் தரத் தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அல்லவா?’

புத்தகம் அறிவு திறவுகோல்

அந்த வசனத்தை அவன் வாசித்துக்கொண்டிருக்கும்போதே, பைபிளின் பின் அட்டையிலிருந்து ஒரு சாவி நழுவிக் கீழே விழுந்தது. அவன் அதை எடுத்துப் பார்த்தான். அது ஒரு கார் சாவி. மெள்ள பைபிளின் கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தான். அதில் ஒரு ரசீது இருந்தது... அது முன்பொரு காலத்தில் அவன் பார்த்துவைத்திருந்த கார் டீலர் கடையின் ரசீது. ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வாங்கியதற்கான ரசீது அது... அவன் பட்டம் வாங்கிய அதே தேதி. காருக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதற்கு சாட்சியாக கடையின் சீலும், டீலரின் கையெழுத்தும் அதில் இருந்தன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு

ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவுபடத்தின் காப்புரிமைALAMY

ஒரு குண்டு கூட சுடப்படாத போதிலும், அடுத்த வாரம் 9,942 சதுர அடியுள்ள தனது நிலப்பகுதியை ஸ்பெயினிடம் பிரான்ஸ் ஒப்படைக்கும். ஆனால், ஆறு மாத காலத்தில் இந்த இடத்தைத் தானாக பிரான்ஸிடம் ஸ்பெயின் ஒப்படைக்கும். 350 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த நடைமுறை குறித்து கிறிஸ் போக்மென் விளக்குகிறார்.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இடையே இயற்கையான எல்லையாக பீடாசோ நதி உள்ளது. இரண்டு நாடுகளைப் பிரித்து இந்த நதி பாய்ந்தோடுகிறது.

இந்த நதியில் இருந்து பார்த்தால், பிரான்ஸ் பக்கம் தொழில்துறை கிடங்குகளும், ஸ்பெயின் பக்கம் குடியிருப்புகளும் தெரியும்.

பீடாசோ நதியின் நடுவே, ஃபிஸான் என்ற தீவு அமைதியாகவும், மரங்களால் சூழப்பட்டும் இருக்கிறது. 1659ல் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக ஒரு பழைய நினைவுச்சின்னமும் இங்கு உள்ளது. ஆனால், இந்த தீவை கண்டுபிடிப்பது சுலபமல்ல.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே நடந்த நீண்ட கால போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்த தீவில் தான் 1659-ம் ஆண்டு இரண்டு நாடுகளும் மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது இந்தத் தீவு நடுநிலை மண்டலமாக இருந்தது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு

பேச்சுவார்த்தையின் முடிவாக, பைரனீஸ் ஒப்பந்தம் எனும் அமைதி ஒப்பந்தம் இரு நாடுகள் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், ஒரு அரச திருமணத்துடன் நடந்தது. பிரான்ஸ் மன்னர் லூயிஸ் XIV, ஸ்பெயின் மன்னர் பிலிப் IV-யின் மகளை அப்போது திருமணம் செய்துகொண்டார்.

நடுநிலை மண்டலமாக இருந்த ஃபிஸான் தீவு இரு நாடுகளாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி 1 முதல் ஜுலை 31 வரை இத்தீவு ஸ்பெயின் அரசின் கீழ் இருக்கும். மீதி காலம் பிரான்ஸ் அரசின் கீழ் இருக்கும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சான் செபாஸ்டியன் என்ற ஸ்பெயின் நகரத்தின் கடற்படை தளபதி மற்றும் பயோன் என்ற பிரான்ஸ் நகரத்தின் கடற்படை தளபதி இந்த தீவின் ஆளுநர்களாக இருக்கிறார்கள்.

இந்த ஃபிஸான் தீவு, 200மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய தீவு. எப்போதாவது இந்த தீவினை பார்க்க பார்வையாளர்கள் அழைக்கப்படுவார்கள்.

இந்த தீவுக்கு குறைந்த முன்னுரிமையே அளிக்கப்படுகிறது. மணல் அரிப்பு ஏற்படுவதால், கடந்த இரண்டு நூற்றாண்டில் தனது பாதியளவை இத்தீவு இழந்துவிட்டது.

ஆனால், தீவின் பாதுகாக்க பணத்தைச் செலவிட இரண்டு நாடுகளும் விரும்பவில்லை.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஆப்பிள் டு ஹவர்கிளாஸ்... பெண்களின் உடலமைப்புக்கு ஏற்ற உடைகள்!

 
 
Chennai: 

ஒல்லிபெல்லி பெண்கள் முதல் உடல் சற்று பருமனான பெண்கள் வரை அனைவருக்கும் ஆடை வாங்கும் பொழுது மனதில் எழும் ஒரே கேள்வி, "இந்த டிரஸ் எனக்கு ஃபிட் ஆகுமா? இல்ல ரொம்ப ஒல்லியா/குண்டா தெரிவோமா?" என்பதுதான். இப்படி கேள்விகளோடு இருக்க இனி அவசியமில்லை. உங்களின் உடலமைப்பு என்னவென்று உங்களுக்கு தெரிந்திருந்தால் போதும், நீங்களும் ஆகலாம் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்.

பெண்களின் உடலமைப்பு

 


பெண்களின் உடலமைப்பை நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். அவை ஆப்பிள், பியர் (Pear), ஹவர்கிளாஸ் மற்றும் செவ்வகம். மேலும் இவற்றை, மெல்லிய செவ்வகம், தடித்த செவ்வகம், முழு ஹவர்கிளாஸ் என உட்பிரிவுகளாகவும் பிரிக்கலாம். உங்களின் உடலமைப்பை அறிந்து அதற்கேற்றவாறு உடைகளை தேர்ந்தெடுக்க உதவும் கைடு இங்கே


ஆப்பிள் உடலமைப்பு :
பெண்களின் மார்பளவு மற்றும் இடையளவு வைத்துதான் உடலமைப்பின் வித்தியாசங்களை வகைப்படுத்தமுடியும். அந்த வகையில், உங்கள் இடையளவு, தோள்ப்பட்டையை விட குறுகியிருந்தால், நீங்கள் ஆப்பிள் உடலமைப்பை கொண்டவர்கள். உடலை ஒத்தியிருக்கும் ஆடைகள், அதிக லேயர்களுடைய ஸ்கர்ட் அல்லது ஃபுல் டிரஸ் வகைகள், ஸ்ட்ரெயிட் கட் பேன்ட், இடுப்பில் பெல்ட் கட்டப்படும் ஆடை வகைகள், கிமோனோ ஸ்லீவ்ஸ் போன்றவை உங்களுக்கான பக்கா சாய்ஸ். ஸ்கின்னி பேன்ட், ஹய் நெக், அடர்த்தியான நிறங்கள், கனமான வேலைப்பாடுகள் நிறைந்த டாப் வகைகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது சற்று உங்களைப் பருமனாக காண்பிக்கும். ஆப்பிள் உடலமைப்பினை கொண்ட ஏஞ்சலினா ஜோலி, சோனம் கபூர், கரீனா கபூர் போன்ற பிரபலங்களின் ட்ரெண்டை பின்பற்றலாம்.

கரீனா கபூர்


பியர் உடலமைப்பு :
ஆப்பிள் உடலமைப்பின் எதிர்மறையான உடலமைப்பு இந்த பியர் வடிவம். இவர்கள் குறுகிய தோள்பட்டையும், அகன்ற இடையையும் பெற்றிருப்பர். அதிகபட்சப் பெண்கள் இந்த உடலமைப்பில்தான் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு 'ஃபிட் அண்ட் ஃப்ளார்' அதாவது, தோளிலிருந்து இடை வரை உடலை ஒத்தியும், இடையிலிருந்து பாதம் வரை தளர்வான அமைப்பையும் கொண்ட ஆடைகள் மிகவும் ஏற்றது. ஸ்லீவ்லெஸ், Off -Shoulder , V -நெக், கழுத்துப் பகுதிகளில் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸ் வகைகள், அடர்த்தியான வண்ண ஆடைகள், ஃப்ளார் ஸ்கர்ட், ஸ்கின்னி ஜீன்ஸ் போன்றவை பியர் உடலமைப்பின் சரியான ஆடை வகைகள். இவர்கள் இலியானா, ரிஹானா, ஜெனிஃபர் லோபஸ், சோனாக்ஷி சின்ஃஹா ஆகியோரின் ஃபேஷனைப் பின்பற்றலாம்.

இலியானா


செவ்வகம் :
பொதுவாக செவ்வகம் உடலமைப்பைக் கொண்டவர்கள் ஒல்லியான தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். தோள்பட்டை முதல் இடை வரை ஒரே அளவைப் பெற்றிருப்பார்கள். அதிக வேலைப்பாடுகள் நிறைந்த டாப் வகைகள் உங்களைக் கொஞ்சம் பருமனாகக் காண்பிக்கும் மாயையை உருவாக்கும். ஷார்ட் அல்லது ஃபுல் ஸ்கர்ட், ஹய் பூட்ஸ், முழு நீல கவுன் வகைகள், ஸ்வீட் ஹார்ட் நெக் போன்றவை இவர்களுக்கு ஏற்ற உடைகள். உடலை ஒத்தி அணியும் ஆடை வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மெல்லிய தேகம் கொண்டிருப்பதால், அது ஆண் உடலமைப்பின் மாயையை உண்டாக்கும். இவர்கள் அனுஷ்கா ஷர்மா, டெய்லர் ஸ்விஃப்ட், கல்கி கோச்செலின் போன்றவர்களின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்களைப் பின்பற்றலாம்.

அனுஷ்கா ஷர்மா


ஹவர் கிளாஸ்:
ஹவர் கிளாஸ் உடலமைப்பினைப் பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு அத்தனை வகை ஆடைகளுமே மிகக் கட்சிதமாகப் பொருந்தும். செவ்வக உடலமைப்பைபோல் இவர்களின் தோள்பட்டையும் இடையும் ஒரே அளவைக் கொண்டிருந்தாலும், மிகக் குறுகிய வெய்ஸ்ட் கொண்டவர்கள் இவர்கள். எனவே, இவர்களுக்கு பெல்ட் அணியப்படும் ஆடை வகைகள், Wrap ஆடைகள், பெப்லம் ஆடைகள், உடலை ஒத்தியிருக்கும் ஆடைகள் முதலியவை சரியான தேர்வு.

பிரியங்கா சோப்ரா

 

 
 

மெல்லிய வேலைப்பாடு முதல் கனமான வேலைப்பாடுகள் வரை எல்லா விதமான ஆடைகளும் ஹவர் கிளாசுக்கு பொருந்தும். ஹவர் கிளாஸ் உடலமைப்பினைக் கொண்ட பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், கத்ரினா கெய்ஃப், மலைக்கா அரோரா கான், மெர்லின் மான்ரோ போன்றவர்களின் ஃபேஷனைப் பின்பற்றலாம். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பறக்கும் விமானத்தில் திருமணம் நடத்தி வைத்த பாப்பரசர்

பாப்­ப­ரசர் முதலாம் பிரான்சிஸ் பறக்கும் விமா­னத்தில் ஒரு தம்­ப­திக்கு திரு­மணம் நடத்தி வைத்­துள்ளார்.

தென் அமெ­ரிக்க நாடான சிலிக்கு கடந்த வாரம் பாப்­ப­ரசர் விஜயம் மேற்­கொண்டார். இவ்­வி­ஜ­யத்­தின்­போது கடந்த 18 ஆம் திகதி சிலியின் இகுயிக் நக­ரி­லி­ருந்து தலை­நகர் சான்­டி­யா­கோவை நோக்கி பாப்­ப­ர­சரின் விமானம் பறந்து கொண்­டி­ருந்­த­போது இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது.

pope.jpg

41 வய­தான கார்லோஸ் சியுஃ­பர்டி மற்றம் 39 வய­தான பௌலா போடெஸ்ட் ஆகி­யோ­ருக்கே இவ்­வாறு பாப்­ப­ரசர் திரு­மணம் செய்­து­வைத்தார்.

இத்­தி­ரு­மண ஜோடி­யினர் இரு­வரும் விமான  ஊழி­யர்­க­ளாவர். ஏற்­கெ­னவே கணவன் மனை­வி­யாக வாழும் இவர்­க­ளுக்கு பிள்­ளை­களும் உள்­ளனர்.

2010 ஆம் ஆண்டு சான்­டி­யாகோ நகரில் ஏற்­பட்ட பூகம்­பத்தில் இவர்­களின் தேவா­லயம் கடு­மை­யாக சேத­ம­டைந்­ததால் சம்­பி­ர­தா­யபூர்வமான திரு­மண வைபவம் இரத்துச் செய்­யப்­பட்­ட­தாக இத்­தம்­ப­தி­யினர் தெரி­வித்­தனர்.
இது குறித்து அவர்கள் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறு­கையில், ‘நாங்கள் இரு­வரும் கணவன், மனைவி என பாப்­ப­ர­ச­ரிடம் கூறினோம். எமக்கு இரு மகள்கள் உள்­ளனர் எனவும் எமக்கு பாப்­ப­ர­சரின் ஆசிர்­வாதம் தேவை எனவும் தெரி­வித்தோம்” என்­றனர்.

“உங்­க­ளுக்கு நான் திரு­மணம் செய்து வைக்க வேண்டும் என விரும்­பு­கி­றீர்­களா” என பாப்­ப­ரசர் கேட்டார். நாம் “ஆம்” என பதி­ல­ளித்தோம்” என்­றனர்.

pope-2.jpg

லத்தாம் எயார்லைன்ஸ் நிறு­வ­ன­த்தின் தலைவர் இக்­னே­சி­யோவும் அவ்­வி­மா­னத்தில் இருந்தார். திரு­மண சான்­றி­தழில் பாப்­ப­ரசர், ஆயர் ஒருவர், இக்­னே­ஷியோ மற்றும் மண­மக்கள் கையெ­ழுத்­திட்­டனர்.

பறக்கும் விமா­னத்தில் பாப்­ப­ரசர் ஒருவர் திரு­மணம் நடத்தி வைத்­தமை இதுவே முதல் தட­வை­யாகும்.
மண­ம­க­ளான பௌலா போடெஸ்ட் இது தொடர்­பாக கூறு­கையில், “விமான­மொன்றில் பாப்­ப­ர­சரால் திரு­மணம் நடத்தி வைக்­கப்­ப­டு­வது அரி­ய­தொன்­றாகும்” என்றார்.

“நீங்கள் திரு­மண வைப­வங்­களை நடத்தி வைப்­பீர்­களா என பாப்­ப­ர­ச­ரிடம் கேட்டேன். “ஆம், அவ்­வப்­போது நடத்தி வைப்பேன். 40 ஜோடிகளுக்கு நான் திருமணம் நடத்தியுள்ளேன். ஆனால், பறக்கும் விமானமொன்றில் திருமணம் நடத்தி வைத்ததில்லை என பாப்பரசர் தெரிவித்தார் எனவும் பௌலா போடெஸ்ட் கூறினார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

தங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம்

ஓர் அமெரிக்க அதிபரோ அவரது மனைவியோ வெள்ளை மாளிகையின் அறைகளை அலங்கரிக்க அருங்காட்சியகங்களில் ஓவியங்களை கடனாகக் கேட்பது பொதுவான விஷயம். ஆனால், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். அப்படி ஒரு ஓவியத்தைக் கடன் கேட்டபோது நியூயார்க் அருங்காட்சியகம் சொன்ன பதில் திரும்பிப் பார்க்க வைப்பதுடன், அந்த ஓவியத்தை அந்த அருங்காட்சியகம் எவ்வளவு மதிக்கிறது என்பதைக் காட்டியது.

அதிபர் டொனால்டு டிரம்ப்

நியூயார்க்கின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் உள்ள 'வான் கோஹ்' என்னும் ஓவியரின் 'பனி படர்ந்த நிலம்' ஒன்றைக் காட்டும் ஓவியத்தை கடனாக தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார் டிரம்ப். இந்தக் கோரிக்கையை அந்த அருங்காட்சியகம் நிராகரித்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தியில் வான் கோஹ் வரைந்த 'பனி படர்ந்த நிலம்' ஓவியத்தை கொண்டு வெள்ளைமாளிகையை அலங்கரிக்க முடியாமல் போனதற்கு அருங்காட்சியகம் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் குகென்ஹெய்ம் அருங்காட்சியகம், வேண்டுமானால் ''இத்தாலிய ஓவியர் மௌரிசியோ கேட்டலன் செய்த 18 கேரட் தங்கத்தாலான கழிவறையை வெள்ளை மாளிகைக்கு தரத் தயாராக இருக்கிறோம்'' என தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

தங்கத்தாலான கழிவறை

வாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படி, கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகை விடுத்த வேண்டுகோளுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் நான்சி ஸ்பெக்டர் பதிலளித்தார்.

'' இந்த ஓவியமானது அருங்காட்சியகத்தின் தான்ஹவுசர் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருப்பதாலும் மிக அரிதான நிகழ்வைத் தவிர மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல தடை இருப்பதாலும் இதனை வெள்ளை மாளிகைக்கு கடனாக தரமுடியாது'' என அவர் எழுதியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

வான் கோஹ் வரைந்த 'ஓவியம்படத்தின் காப்புரிமைGUGGENHEIM Image captionவான் கோஹ் வரைந்த ஓவியம்

இந்த 1888 ஆம் ஆண்டைச் சேர்ந்த வான் கோஹ் ஓவியமானது உரிமையாளர்களின் அனுமதியுடன் அருங்காட்சியகத்தின் துணை நிறுவனங்களில் காட்சிப்படுத்தப்படும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

''மௌரிசியோ கேட்டலன் செய்த தங்கக் கழிவறையானது மிகவும் மதிப்புமிக்கது. உடையக்கூடியது. இருப்பினும் இதனை நிறுவுவது மற்றும் பத்திரமாக உபயோகப்படுத்துவது குறித்து அனைத்து விதமான வழிகாட்டுதல்களையும் நாங்கள் வழங்குவோம்'' என நான்சி ஸ்பெக்டர் எழுதியுள்ளார்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

புற்றுநோய் சிகிச்சைக்கு கழுதைகள் உதவுமா?

வடக்கு அயர்லாந்தில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான இளையோருக்கு கழுதைகள் உதவியுடன் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • தொடங்கியவர்

உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு (Photos)

 

 

உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு (Photos)
 

இந்தியாவைச் சேர்ந்த உலகின் குள்ளமான பெண் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்துள்ளார்.

இந்தியாவின் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள பெண் ஜோதி ஆம்கே (25) உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

இதேபோன்று, துருக்கியைச் சேர்ந்தவர் சுல்தான் கோசென் (36) 8 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். உலகின் மிக உயர்ந்த மனிதரான இவரையும் ஆம்கேவையும் தங்களது நாட்டிற்கு வரும்படி எகிப்து அழைப்பு விடுத்தது.

எகிப்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி வாரியம் விடுத்த அழைப்பினை ஏற்று இருவரும் அங்கு சென்றனர்.

ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்துள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டில் உலகின் உயர்ந்த மனிதரானார் கோசன். உலக வரலாற்றில் 8 அடி மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நபர்களில் உயிருடன் இருக்கும் ஒரே நபர் இவர் தான். பிட்யூட்டரி சுரப்பியினால் அவர் அதிக வளர்ச்சியுடன் காணப்படுகிறார்.

இதேபோன்று, அகண்டிரோபிளேசியா என மருத்துவ உலகில் அழைக்கப்படும் குறைபாட்டு நோயினால் குள்ள வடிவத்தினை ஆம்கே பெற்றுள்ளார். அவர் 2 வயது குழந்தையின் சராசரி அளவை விட உயரம் குறைந்தவராகக் காணப்படுகிறார்.

இவர்கள் இருவரும் ஒன்றாகத் தோன்றிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

 

Tallest man and shortest woman 4Tallest man and shortest woman 3Tallest man and shortest woman 2

 

http://newsfirst.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘உடன் கைப்பற்றிக் கொள்வீர்களாக’
 

image_4af2b68194.jpgஎந்தெந்த நற்பண்புகள் எமக்கு வேண்டுமென மனதாரக் கருதுகின்றீர்களோ, அவற்றை உடன் கைப்பற்றிக் கொள்வீர்களாக! இதில் காலதாமதம் எதற்கு?

அதேசமயம் எவை, எவைகள் எல்லாம் துர்க்குணம் எனத் தெரிந்ததுமே, சற்றென அக்கணமே அடியோடி அகற்றிடுக.

மதுப்பழக்கம், புகைத்தல், பொறாமை,பொய்பேசுதல், பிறர்பொருள் மீது மோகம் கொள்வது போன்றவை கெட்ட குணம் எனத் தெரியாதா?

அதனை ஏன் பலரும் விட்டுவிட மனமின்றி, அந்தத் துன்பச் சுழலுக்குள்  இருக்கின்றார்கள்? என்ன சுகத்தை இதன் மூலம் பெறப்போகின்றார்களோ?

எமக்குப் பின்னர் பல தலைமுறைகள் உருவாகப்போகின்றன. இவர்களுக்கு நீங்கள் வழங்கும் வெகுமதிகள் என்ன என்பதை ஒவ்வொருவரும் தத்தமக்குள்  கேட்டுத் தெரிந்து கொள்வார்களாக.

விசங்களை வழங்குவதா? அமிர்தத்தைக் கொடுப்பதா? இலாப நட்டம் அவரவர் சிந்தையையும் செய்கையையும் பொறுத்ததே.  

  • தொடங்கியவர்

1948 : மகாத்மா காந்தி சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 30

 

1648 : நெதர்­லாந்­துக்கும் ஸ்பெயி­னுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்­பந்தம் உடன்­பா­டா­கி­யது.

1649 : இங்­கி­லாந்தின் முதலாம் சார்ள்ஸ் மன்னன் தூக்­கி­லி­டப்­பட்டார்.

1649 : இரண்டாம் சார்ள்ஸ் தன்னை இங்­கி­லாந்து, ஸ்கொட்­லாந்து, அயர்­லாந்து ஆகி­ய­வற்றின் மன்­ன­னாக அறி­வித்தார். எனினும் எவரும் அவரை மன்­ன­னாக அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

varalaru-30-01-2017.jpg1820 : எட்வர்ட் பிரான்ஸ்ஃபீல்ட், அந்தார்டிக்­காவில் தரை­யி­றங்­கினார்.

1835 : ஐக்­கிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி அண்ட்ரூ ஜக்ஸன் கொலை முயற்­சியில் இருந்து தப்­பித்தார்.

1889 : ஆஸ்­தி­ரி­யாவின் இள­வ­ரசர் ருடோல்ஃப் தனது காத­லி­யுடன் இறந்து கிடக்கக் காணப்­பட்டார்.

1933 : அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்­ம­னியின் அதி­ப­ராக (சான்ஸ்லர்) பத­வி­யேற்றார்.

1943 : இரண்டாம் உலகப் போர்: உக்­ரேனில் லேத்­திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயி­ரக்­க­ணக்கில் நாஸி­களால் கொல்­லப்­பட்­டனர்.

1945 : இரண்டாம் உலகப் போரின்­போது பால்ட்டிக் கடலில் ஜேர்மன் அக­தி­க­ளுடன் சென்­று­கொண்­டி­ருந்த வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பய­ணிகள் கப்பல் சோவியத் நீர்­மூழ்கிக் கப்­ப­லினால் தாக்­கப்­பட்­டதில் அதில் பயணம் செய்த சுமார் 9,500 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1948 : இந்­திய தேசப்­பிதா மகாத்மா காந்தி நாதுராம் கோட்­சே­யினால் டில்­லியில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

1956 : அமெ­ரிக்க கறுப்­பின மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல்­கொ­டுத்த மார்ட்டின் லூதர் கிங்கின் வீட்டின் மீது குண்­டு ­வீ­சப்­பட்­டது.

1959 : டைட்­டானிக் போன்றே மூழ்­க­டிக்­கப்­பட முடி­யாத கப்பல் என கரு­தப்­பட்ட ஹான்ஸ் டெஹடோவ்ட் எனும் கப்­பலும் தனது முதல் பய­ணத்தில் பனிப்­பா­றையில் சிக்கி மூழ்­கி­யது. அதில் பயணம் செய்த 95 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

1964 : தென் வியட்­நாமில் ஜெனரல் நியுவென் கான், இரா­ணுவப் புரட்சி மூலம் ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.

1972 : வட அயர்­லாந்தில் விடு­தலைப் போராட்ட ஊர்­வ­லத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்­கிய இராச்­சிய துணை இரா­ணு­வத்­தி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

1972 : பொது­ந­ல­வாய அமைப்­பி­லி­ருந்து பாகிஸ்தான் வில­கி­யது.

1994 : பீட்டர் லேக்கோ சது­ரங்க ஆட்­டத்தில் உலகின் வயதில் குறைந்த (14) கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

2000 : கென்­யாவின் விமானம் ஒன்று அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஐவரி கோஸ்ட் அருகில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
2003: ஒரு பாலினத் திருமணத்தை பெல்ஜியம் சட்டபூர்வமாக்கியது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

காயம்பட்ட கன்றுக்குட்டி! உருகவைத்த தாய்ப்பசுவின் செயல்

 
 

காயமடைந்த கன்றுக்குட்டியைக் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால் தாய்ப்பசு ஓடிவந்த காட்சி நெகிழ வைக்கிறது.

தாய் பசு

 

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 25-ம் தேதி இரண்டு மாத கன்றுக்குட்டிக்கு காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளது. இதைப் பார்த்த தாய்ப்பசு கூச்சல் எழுப்பி வீட்டுக்குள் இருந்தவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. பசுவின் உரிமையாளர் கன்றுக்குட்டியை வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கன்றுக்குட்டி அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தின் பின்னாலேயே தாய்ப்பசு மூச்சிரைக்க ஓடிச் சென்ற காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கால்நடை மருத்துவனையைச் சென்றடையும்வரை வாகனத்தைப் பின் தொடர்ந்துள்ளது தாய் பசு. இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். கடந்த வியாழன் (25.1.2018) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்றுக்குட்டி, ஞாயிறு (28.1.2018) அன்றுதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. அதுவரை மருத்துவமனை வாசலிலேயே தாய் பசு நின்றுகொண்டிருந்ததாம்! 

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மண்ணை எதிர்பார்க்காதே... தங்கத்தை எதிர்பார்! ஷிவ்கேராவின் மூன்று நம்பிக்கைக் கதைகள்! #MotivationStory

 
 

ஷிவ் கேரா பீகாரில் பிறந்தவர். பல தன்னம்பிக்கை நூல்களை எழுதியவர். இவரது 'உங்களால் வெல்ல முடியும்' எனும் நூல் பல மொழிகளில் வெளியாகி, மில்லியன் கணக்கில் விற்பனையாகி பெரும் சாதனை புரிந்தது. தன்னம்பிக்கை சொற்பொழிவாளராக உலகையே வலம் வருபவர். இவரது நூல்கள் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்குப் பெரும் மனமாற்றத்தைத் தரவல்லவை. அவர் கூறிய மூன்று குட்டிக்கதைகள் உங்களை உற்சாகப்படுத்த..! 

 

 

ஷிவ் கேரா

 சிறுவன் டேவிட்டும் அசுரன் கோலியாத்தும் 

 ஒரு கிராமத்தில், ஓர் அரக்கன் இருந்தான். அவன் பெயர் கோலியாத். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கொடுமைப்படுத்தி வந்தான். ஒருநாள், டேவிட் என்ற 17 வயதுச் சிறுவன் தனது சகோதரர்களைப் பார்க்க வந்தான். 

சகோதரர்கள் அரக்கனுக்கு அஞ்சிக் கிடப்பதைக்கண்டு, ''நீங்கள் எல்லோரும் ஏன் கிளர்ந்தெழுந்து அரக்கனோடு போராடக் கூடாது? என்று  கேட்டான். அவனது சகோதரர்கள் திகிலடைந்துப் போய், ''அவன் மிகப் பெரியவனாக இருப்பதால் அவனை அடித்து வீழ்த்துவதென்பது முடியாத காரியம் என்பது உனக்குத் தெரியாதா?'' எனக் கேட்டனர். 

டேவிட்டோ, ''அதுதான் இல்லை! அவன் ஒன்றும் அடிக்க முடியாத அளவுக்குப் பெரியவன் இல்லை. ஆனால், அடித்தால் தவறாமல் அடிபடக்கூடிய அளவுக்குப் பெரியவன்'' என்று கூறினான். சொன்னபடியே அவன் கவண்கல்லைக் கொண்டே கோலியாத்தை வீழ்த்தினான். 

அதே அரக்கன்தான், ஆனால், 'மாத்தியோசி' கண்ணோட்டம். வெற்றிக்கு இந்த மாறுபட்ட கண்ணோட்டம் மிகவும் தேவை.

பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடி

தங்கத்தைத் தேடி...

ஸ்காட்லாந்து நாட்டுச் சிறுவனாக இருந்தபோதே அமெரிக்கா வந்த ஆண்ட்ரூ கார்னேஜி முதலில் மிகமிகச் சாதாரண வேலைகளைச் செய்யத் தொடங்கினார். இறுதியில், அவர் அமெரிக்காவின் மாபெரும் இரும்புத் தயாரிப்பாளர்களில் ஒருவராக ஆனார்.

ஒரு சமயத்தில், 43 கோடீஸ்வரர்கள் ஒன்றாகச் சேர்ந்து அவருடன் வேலை செய்து வந்தார்கள்.  ஒருவர் கார்னேஜியிடம், ''நீங்கள் எப்படி ஆட்களைத் திறமையாக கையாள்கிறீர்கள்?'' என்று கேட்டார். 

''ஆட்களைக் கையாள்வது என்பது தங்கத்தை வெட்டி எடுப்பதைப்  போன்றது. ஓர் அவுன்ஸ் தங்கத்தைப் பெற டன் டன்னாக மண்ணை அகற்ற வேண்டும். ஆனால், தோண்ட ஆரம்பித்துவிட்டால், நீங்கள் மண்ணை எதிர்பார்த்துத் தோண்ட மாட்டீர்கள்;  மாறாக தங்கத்தை எதிர்பார்த்தே தோண்டுவீர்கள்'' என்று பதிலளித்தார் ஆண்ட்ரூவ் கார்னேஜி.

வெற்றி

சிலர் எப்போதும் குறையைத்தான் பார்ப்பார்கள் !

ஒரு சமயம், ஒரு வேட்டைக்காரன் நீர் மேல் நடக்கும் நாயை வாங்கி வந்தான். அந்த நாயின் செயலை அவனால் நம்ப முடியவில்லை. 

தனது நண்பர்களிடம் தனது புதிய நாயைக் காட்டிப் பெருமையடிக்கலாம் என்று எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டான். ஒரு நாள் அவன் தனது நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு வாத்து வேட்டைக்குச் சென்றான்.  அவர்கள் சில வாத்துகளைச் சுட்டனர். 

தாங்கள் சுட்டுக் கொன்ற அந்தப் பறவைகளை ஓடிப்போய் எடுத்து வருமாறு, அந்த வேட்டைக்காரன் தனது நாய்க்கு ஆணையிட்டான். அந்த நாய் நீரின்மேல் ஓடி ஓடிப் பறவைகளைக் கொண்டுவந்த வண்ணம் இருந்தது. 

வேட்டைக்காரன் அந்த அதிசய நாயைப் பற்றி, நண்பன் ஏதாவது சொல்ல மாட்டானா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வந்தவன் வாயையே திறக்கவில்லை. அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவன் தனது நண்பனிடம், ''எனது நாயை கவனித்தாயா?'' என்று கேட்டான். 

அதற்கு அவனது நண்பனோ, ''ஆமாம்,  உன் நாய்க்கு நீந்தத் தெரியவில்லை'' என்று பதிலளித்தான்.

தன்னம்பிக்கை

இப்படிப்பட்ட மனிதர்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். பாராட்டுவதற்கு பரந்த மனோபாவம் வேண்டும். அதை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்?

 

மகாத்மா காந்தியின் புகைப்படங்களில் பெரும்பாலானவற்றில் மக்கள் படை சூழவே அவரைப் பார்க்கமுடியும். பெரும்பாலும் காந்தியுடன் புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவராலும் அறியப்பட்ட பிரபலங்களாகவே இருப்பார்கள். உதாரணமாக, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், கஸ்தூர்பா காந்தி என பட்டியல் நீளும்.

மகாத்மா காந்தி

காந்தியுடன் புகைப்படத்தில் காணப்படும் சிலரைப் பற்றி பொதுவாக யாருக்கும் தெரியாது. அவர்களில் சிலரைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியுடன் நெருக்கமாக இருந்த ஒரு சில பெண்களைப் பற்றி பார்க்கலாம். காந்தி இந்த பெண்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அவர் காட்டிய வழியிலேயே தங்கள் வாழ்வை நடத்தியவர்கள்.

1. மெடெலீன் ஸ்லேடு (எ) மீராபென் (1892-1982)

மீராபென்படத்தின் காப்புரிமைVINOD KUMAR

பிரிட்டிஷ் அட்மிரல் சர் எட்மண்ட் ஸ்லேட் என்பவரின் மகள் மெடெலீன். ஜெர்மனை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் பீத்தோவனின் மிகப்பெரிய ரசிகை மெடெலீன்.

பீத்தோவனின் இசை மீது கொண்ட பேராவலில் அவரைப்பற்றியும், இசையைப் பற்றியும் எழுதிய எழுத்தாளர் மற்றும் பிரஞ்சு அறிஞர் மற்றும் எழுத்தாளர் ரோமன் ரோலண்டின் எழுத்துக்களையும் விரும்பி படித்தார். ரோலண்ட் இசையைப் பற்றி மட்டுமல்ல அகிம்சையை போதித்த காந்தியைப் பற்றிய வாழ்க்கை சரிதத்தையும் எழுதினார்.

காந்தியின் வாழ்க்கை வரலாறை படித்த மெடெலீன், அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரை கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டார். இந்தியாவுக்கு வந்து காந்தியின் ஆசிரமத்தில் வசிக்க விருப்பம் கொண்டார்.

மதுவை ஒதுக்கினார், விவசாயம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார், சைவ உணவுக்கு மாறினார். 'யங் இந்தியா' என்ற காந்தியின் பத்திரிகையையும் படிக்க ஆரம்பித்தார். அக்டோபர் 1925இல், அவர் மும்பை வழியாக அகமதாபாத்தை அடைந்தார்.

காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

காந்தியுடனான முதல் சந்திப்பிற்கு பிறகு மெடெலீன் சொன்னார், "நான் அங்கு வந்தபோது, வெண்ணிற இருக்கையில் இருந்து மெலிந்த உருவம் கொண்ட ஒருவர் என்னை நோக்கி வந்தார். அவர் தான் 'பாபு' என்று எனக்கு தெரியும். ஒரு தெய்வீக சக்தியின் முன் நிற்பதை உணர்ந்தேன்.

மகிழ்ச்சியும், பக்தி உணர்வும் என்னில் தோன்றின. நான் பாபுவின் பாதங்களில் சரணடைந்துவிட்டேன். பாபு என்னை தூக்கிவிட்டு சொன்னார், 'நீ என் மகள்'.

மெடெலீன் காந்தியை சந்தித்த நாள் முதல் அவர்கள் இருவருக்கும் இடையில் பவித்திரமான உறவு உண்டானது. மெடெலீன், 'மீராபென்' என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

2. நிலா க்ராம் குக் (1972-1945)

காந்தி ஆசிரமத்தில் உள்ளவர்கள் நிலாவை 'நாகினி' என அழைக்கிறார்கள். தான் உண்மையில் கண்ணனின் கோபிகை என்று நம்பிய நிலா, மௌண்ட் அபுவில் ஆன்மீக குருவுடன் வாழ்ந்தார்.

மீராபென்படத்தின் காப்புரிமைGETTY IMAGES, VINOD KUMAR

அமெரிக்காவில் பிறந்த நிலாவுக்கு மைசூர் இளவரசர் மீது காதல் ஏற்பட்டது.

1932ஆம் ஆண்டில், பெங்களூரில் இருந்து காந்திக்கு கடிதம் எழுதிய நிலா, அதில் தீண்டாமை தொடர்பாக குறிப்பிட்டிருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு இப்படித்தான் தொடங்கியது.

அடுத்த ஆண்டு, அதாவது பிப்ரவரி 1933ல், யர்வடா சிறைச்சாலையில் மகாத்மா காந்தியை சந்தித்தார் நிலா. காந்தியின் சொற்படி சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற நிலா சில நாட்களிலேயே அங்கு இருப்பவர்களுடன் நெருக்கமானார்.

தாராளவாத கருத்தியலை கொண்ட நிலாவுக்கு ஆசிரமம் போன்ற அமைதியான இடத்தில் வசிப்பது கடினமாக இருந்தது. அங்கு இருக்கமுடியாமல் ஒருநாள் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். பின்னர், அவர் கிருஷ்ணர் வாழ்ந்த பிருந்தாவனத்தில் இருந்தார்.

அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட அவர், இஸ்லாம் மதத்தை தழுவினார். குரானை மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சரளா தேவி சௌத்ரானி (1872-1945)

உயர் கல்வி பயின்ற சரளா தேவி, பார்ப்பதற்கே மிகவும் மென்மையானவர். மொழி, இசை மற்றும் எழுத்தாற்றலில் வல்லவரான சரளா வங்கமொழிக் கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் நெருங்கிய உறவினர்.

சரளா தேவி சௌத்ரானிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES, VINOD KAPOOR

லாகூரில், காந்தி சரளாவின் வீட்டில் தான் தங்கியிருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்தனர். சரளாவின் கணவர் சுதந்திர போராட்ட வீரர் ராமபூஜ் தத் சௌத்ரி. அவர் சிறையில் இருந்தார்.

சரளாவை தனது 'ஆன்மீக மனைவி' என்று காந்தி கூறினார். இந்த உறவின் காரணமாகவே தனது திருமணம் முடிவுக்கு வரவில்லை என்று நம்புவதாக காந்தி பிறகு கூறினார்.

காந்தியும், சரளாவும் காதியை ஊக்குவிக்கும் பிரசாரத்திற்காக லாகூரிலிருந்து தற்போதைய இந்தியாவுக்கு வந்தார்கள். காந்தியின் நெருங்கிய நண்பர்களுக்கும் சரளாவுடனான காந்தியின் உறவு பற்றி தெரிந்திருந்தது. உரிமையுடன் பழகும் சரளாவின் குணம், விரைவிலேயே காந்தியை அவரிடமிருந்து விலகச் செய்தது.

அதன்பிறகு சிறிதுகாலம் இமயமலையில் தனியாகவே வாழ்ந்து இறந்துபோனார் சரளா.

4. சரோஜினி நாயுடு (1879-1949)

இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர் சரோஜினி நாயுடு.

சரோஜினி நாயுடுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

விடுதலை போராட்டத்தில் காந்தி கைது செய்யப்பட்ட பிறகு உப்பு சத்தியாக்கிரகத்திற்கு தலைமை தாங்கியவர் சரோஜினி நாயுடு. சரோஜினியும், காந்தியும் முதன்முதலில் லண்டனில் சந்தித்தனர்.

சரோஜினி இந்த சந்திப்பைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: "குள்ளமான ஒருவர், வழுக்கை தலைகொண்ட ஒருவர் தரையில் கம்பளி விரிப்பின் மீது அமர்ந்து ஆலிவ் எண்ணெயில் சமைத்த தக்காளியை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். உலகின் பிரபலமான தலைவரின் இந்த நிலையை பார்த்து நான் மகிழ்ச்சியுடன் சிரித்தேன்.

அதை பார்த்த அவர் என்னிடம், 'நீங்கள் தான் திருமதி. நாயுடுவாக இருக்கமுடியும். வேறு யாரும் இப்படி பயமற்றவர்களாக இருக்க முடியாது, வாருங்கள், என்னுடன் உணவு உண்ணுங்கள். "

காந்தியின் விருந்தோம்பலுக்கு பதிலளித்த சரோஜினி, "என்ன ஒரு மோசமான வழி இது?" என்று சொன்னாராம்.

சரோஜினி மற்றும் காந்தி இடையிலான உறவு இப்படித்தான் தொடங்கியது.

5.இளவரசி அம்ருத் கெளர் (1889-1964)

ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் இளவரசி அம்ருத் கெளர். பஞ்சாபில் கபூர்தாலாவின் அரசர் சர் ஹர்னம் சிங்கின் மகள் அம்ருத் கெளர்.

இளவரசி அம்ருத் கெளர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES, VINOD KAPOOR

இங்கிலாந்தில் கல்வி பயின்ற இளவரசி அம்ருத் கெளர், காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் காந்தியின் மிகச் சிறந்த அறப்போராளிகளில் ஒருவராக கருதப்படுபவர்.

கெளர் 1934இல் காந்தியை முதன்முதலாக சந்திப்பின் பின்னர், காந்திக்கும் இளவரசி அமிருத் கெளருக்கும் இடையே நூற்றுக்கணக்கான கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. உப்பு சத்தியாக்கிரகம் மற்றும் 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போதும் இளவரசி அமிருத் கெளர் சிறைவாசத்தையும் அனுபவித்தார்.

இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர் இளவரசி அமிரித் கெளர்.

இளவரசி அம்ருத் கெளருக்கு காந்தி எழுதும் கடிதங்களில், 'என் அன்புக்குரிய பைத்தியமே, என்றும் புரட்சிக்காரி' என்றும் குறிப்பிடுவார். கடிதத்தின் இறுதியில் 'சர்வாதிகாரி' என்றும் குறிப்பிடுவார் காந்தி.

6. டாக்டர் சுஷிலா நய்யார் (1914-2001)

பியரேலாலின் சகோதரி சுசீலா. மஹாதேவ் தேசாய்க்கு பிறகு, காந்தியின் செயலாளராக பணிபுரிந்த பியாரேலால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர்.

சுஷிலா நய்யார்படத்தின் காப்புரிமைVINOD KAPOOR

தாயின் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகும் இந்த அண்ணனும், தங்கையும் காந்தியை வந்து பார்த்தார்கள். பிறகோ, காந்தியிடம் தன் பிள்ளைகளை செல்ல வேண்டாம் என்று தடுத்த அந்த தாயே காந்தியின் தீவிர ஆதரவாளராகவும் மாறினார்.

மருத்துவ படிப்புக்கு பிறகு சுஷிலா, காந்தியின் பிரத்யேக மருத்துவர் ஆனார். வயது முதிர்ந்த காந்தியை மனு மற்றும் ஆபா தோள்களில் கைத்தாங்கலாக அழைத்து வருவார்கள். அவர்களைத் தவிர சுஷிலாவும் காந்தியை கைதாங்கலாக அழைத்துவருவார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கஸ்தூர்பா காந்தியுடன் சேர்ந்து போராடிய சுசீலாவும் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

பூனாவில் கஸ்தூர்பா காந்தியின் கடைசி நாட்களில் அவருடன் இருந்தார் சுஷிலா. பிரம்மச்சார்ய சோதனைகளில் காந்தி ஈடுபட்டபோது அதற்கு சுஷிலாவும் உதவி செய்தார்.

7. அபா காந்தி (1927-1995)

பிறப்பில் வங்காளியான அபாவின் திருமணம் காந்தியின் பேரன் கனு காந்தியுடன் நடைபெற்றது.

அபா காந்திபடத்தின் காப்புரிமைVINDO KAPOOR

காந்தியின் பிரார்த்தனை கூட்டங்களில் அபாவும் கலந்து கொண்டு பக்திப் பாடல்களை பாடுவார். 1940களில் எடுக்கபப்ட்ட மகாத்மா காந்தியின் பல புகைப்படங்களை எடுத்தவர் கனு.

காந்தியின் நவகாளி யாத்திரையின்போது அபாவும் அவருடன் சென்றிருந்தார். நாடு முழுவதிலும் வன்முறைகள் பரவியது. அப்போது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக சென்ற காந்தியுடன் அபாவும் சென்றார்.

காந்தியின் இறுதிக் கணங்களிலும் அபா அவருடன் இருந்தார். நாதுரம் கோட்ஸே காந்தியை சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்தவர் அபா.

8. மனு காந்தி (1928-1969)

மிக இளம் வயதிலேயே காந்தியிடம் வந்துவிட்டார் மனு. காந்தியின் தூரத்து உறவினரான மனுவை பேத்தி என்றே அழைப்பார் காந்தி.

மனு காந்திபடத்தின் காப்புரிமைVINOD KAPOOR, GETTY

காந்தியின் நவகாளி யாத்திரையின்போது அபா மட்டுமல்ல, மனுவும் அவருடனே இருந்தார். உடல் பலவீனப்பட்ட காந்தி நடப்பதற்கு தோள் கொடுத்து உதவி செய்வார் மனு.

மகாத்மா காந்தியின் பாதையில் மல மூத்திர கழிவுகளை அவரது சில விரோதிகள் வீசியபோது, காந்தியுடன் சேர்ந்து, கையில் விளக்குமாற்றுடன் அவற்றை சுத்தம் செய்தவர்கள் மனுவும் அபாவும்.

காந்தியின் மனைவி கஸ்தூர்பாவின் இறுதி நாட்களில் அவருக்கு சேவை செய்தவர்களில் மனுவும் ஒருவர்.

மகாத்மா காந்தியின் கடைசி சில ஆண்டுகள் எப்படி கழிந்தன என்பது பற்றிய குறிப்புகள் மனுவின் நாட்குறிப்பில் இடம்பெற்றிருக்கிறது.

 

http://www.bbc.com

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen

இந்திய தேசபிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று

  • தொடங்கியவர்

 

சிறுத்தையிடம் இருந்து தப்புவது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நவீனன் said:

சிறுத்தையிடம் இருந்து தப்புவது எப்படி

இதை மிருகங்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பது?

  • தொடங்கியவர்

'ஃபிரிடா' ஸ்ருதி, 'பியூட்டி பீஸ்ட்' ஓவியா, 'மர்லின்' நிக்கி, 'சிண்ட்ரெல்லா' பிந்து..! - 'Once upon a time' வாவ் ஷுட்

 

2015-ல் ரியல் லைஃப் ஜோடிகள் மற்றும் ரீல் லைஃப் ஜோடிகளை வைத்து கார்த்திக் ஸ்ரீனிவாசன் எடுத்த காலண்டர் ஷூட் இணையத்தில் வைரலாய் வட்டமடித்தது. அதேபோல் இந்த வருடமும் ஒரு வைரல் கான்செப்ட்டோடு வந்திருக்கிறார் செலிபிரிட்டி போட்டோகிராஃபர் கார்த்திக் ஸ்ரீனிவாசன். ஜனவரி 27-ஆம் தேதி இவர் வெளியிட்ட காலண்டர் ஷூட் போட்டோக்கள்தான் தற்போது இணையத்தில் டாப் ட்ரெண்டிங். இந்த போட்டோஷூட் ஐடியா குறித்தும், அதன் சுவாரஸ்யங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம்.

கார்த்திக் ஸ்ரீனிவாசன்

 

’’2016 மற்றும் 2017 காலண்டர் ஷூட்டை சென்னை வெள்ளம் மற்றும் டிமானிடைசேஷன் காரணமாக என்னால் பண்ணமுடியவில்லை. 2013-லிருந்து நான் பண்ணவேண்டும் என்று நினைத்த 'once upon a time' என்ற கான்செப்ட்டை இந்த வருடம் ஷூட் செய்திருக்கிறேன். இந்த கான்செப்ட்டின் நோக்கமே, ஹாலிவுட்டின் சில ஐகானிக் ஷாட்ஸை ரீகிரியேட் பண்றதுதான். ஹாலிவுட்டில் பிரபலமான சினிமா ஹீரோயின்ஸ் மற்றும் சில பிரபலமான சினிமா கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நினைவூட்டும் சில ஷாட்ஸை என்னுடைய கற்பனையையும் கலந்து இந்த போட்டோஷூட்டை செய்திருக்கிறேன். 

இந்த ஷூட்டிற்காக ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், ஓவியா, பிந்துமாதவி, ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி கல்ராணி, ரெஜினா, டாப்ஸி என எல்லோரும் முழு ஈடுபாடோட கலந்துகிட்டாங்க. இவங்ககிட்ட நான் இந்த கான்செப்ட்டை சொன்னதும் ரொம்ப ஆர்வமாகிட்டாங்க. அதனாலையே ஒருநாள் முழுக்க எனக்காக நேரம் ஒதுக்கி இந்த ஷூட்டை முடிச்சுக்கொடுத்தாங்க. 

ஸ்ருதிஹாசன்

 

* ஃபிரிடா காலோ (frida kahlo) என்ற மெக்சிக்கோ நாட்டு ஓவியரோட தோற்றத்தை ஸ்ருதிஹாசன் பண்ணியிருக்காங்க.  இந்த கான்செப்ட்டைப் பற்றி ஸ்ருதியிடன் சொன்னதும், 'அதிகமா மேக்கப் இல்லாமல் இயல்பாக இருக்கிற கேரக்டரை வைத்து ஷூட் பண்ணலாம்’னு சொன்னாங்க. அதனால், நான் ஸ்ருதிக்கு ஃபிரிடா காலோ கேரக்டரைக் கொடுத்தேன். நல்ல அவுட்புட் வரணும்னு அவங்களே முழு ஈடுபாடோட பண்ணாங்க. போட்டோவைப் பார்த்துட்டு ரொம்பவே ஆச்சரியப்பட்டாங்க. ஃபிரிடா காலோவோட இரண்டு கெட்டப்களை வெச்சு ஸ்ருதிஹாசனுக்குப் பண்ணினேன்.

காஜல்

 

*  ’விண்டேஜ் லுக்கை வைத்து உங்களுக்கு ஷூட் பண்ணலாம்’ என்றதும் காஜல் உடனே ஓகே சொல்லிட்டாங்க. காஜலுக்கு நடிகை பியான்கா ஜாகர் (Bianca Jagger) கேரக்டர் கொடுத்தேன். முதலில் காஜல் அகர்வால் போர்ஷனை ப்ளாக் அண்ட் வொயிட்டாகப் பண்ணலாம் என்ற ஐடியா இருந்தது. பிறகு, விண்டேஜ் லுக்கைக் கலரில் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கலரிலேயே ரெடி பண்ணிட்டோம். 

ஓவியா

 

* ஓவியாவுக்கு பியூட்டி அண்ட் த பீஸ்ட் (Beauty and the Beast) படத்தோட கான்செப்ட் கொடுத்தேன். அந்தப் படத்தில் ரோஸ்தான் முக்கிய கான்செப்ட். அதை வைத்தே ஓவியாயோட போர்ஷனை எடுத்தோம். ஓவியாவோட ஷூட் பண்றது ஒரு வொர்க் பண்ற ஃபீலே வராது. ஸ்டுடியோவுக்குள்ளே பாட்டு கேட்டுக்கிட்டு, பார்ட்டி மூடுலேயே போஸ் கொடுப்பாங்க. அவங்கக்கூட வொர்க் பண்றதே செம ஜாலியா இருக்கும்.

நிக்கி கல்ராணி

 

* மர்லின் மன்றோவோட ஃபேமஸான போட்டோவை உலகத்துல யார்கிட்ட காட்டுனாலும் பல பேர் சரியாச் சொல்வாங்க. அப்படி ஒரு ஃபேமஸான போஸை நிக்கி கல்ராணியை வெச்சுப் பண்ணினோம். டாப் டு பாட்டம் அப்படியே பண்ணாம, சில மாற்றங்கள் மற்றும் என்னுடைய கற்பனைகளை சேர்த்துப் பண்ணினேன். 

டாப்ஸி

 

* டாப்ஸிகிட்ட இந்த கான்செப்ட்டைப் பற்றிச் சொல்லும்போதே, அவங்களா கேட்டு வாங்கின கதாபாத்திரம்தான் ஆட்ரி ஹெப்பர்ன் (Audrey Hepburn). இவங்க Breakfast at Tiffany's என்ற ஃபேமஸான படத்தில் நடித்த நடிகை. இவங்களை மாதிரியே காஸ்ட்டியூம்ஸ் ரெடிபண்ணி டாப்ஸியை ஷூட் பண்ணினோம். டாப்ஸியை வெச்சே queen of spain லுக்ல இன்னொரு ஷூட்டும் பன்ணினேன். ஒரு அரண்மணை ஆர்ட் கேலரிக்குள்ள ராணி நிக்கிற மாதிரி ஒரு கான்செப்ட்ல அது இருக்கும். 

பிந்து மாதவி

 

* சிண்ட்ரெல்லா கேரக்டரை நல்ல உயரமான நடிகையை வைத்துப் பண்ணலாம்னு நினைச்சிட்டிருந்தேன். அப்போதான் பிந்துமாதவி இந்த ஷூட்டிற்குள்ளே வந்தாங்க. அவங்களை வெச்சு சிண்ட்ரெல்லா அண்ட் helen of troy படத்தில் வர்ற ராணி கதாபாத்திரம்னு இரண்டு கேரக்டர் பண்ணினேன். 

ஐஸ்வர்யா ராஜேஷ்

.

* ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வர்ற டஸ்கி லுக் நடிகையா ஐஸ்வர்யா ராஜேஷை ஷூட் பண்ணினேன். பெரும்பாலான நடிகைகள் தன்னோட கலரைக் குறைத்துக்காட்ட விரும்பமாட்டார்கள். நான் ஐஸ்வர்யாவிடம் இந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு செட் ஆகும்னு சொன்னவுடன், எதுவுமே சொல்லாம ஓகே சொன்னாங்க. அவங்களோட லுக்கும் ரொம்ப பிரமாதமா வந்திருக்கு.

கேத்ரின் தெரசா

 

* Moulin Rouge படத்தில் கேசினோவுக்கு முன்னாடி நிற்கிற ஹீரோயின் லுக் மாதிரி கேத்ரின் தெரசாவிற்குப் பண்ணினேன். அந்த ஹீரோயின் கொடுத்த முகபாவனை மாதிரியே கேத்ரின் ரொம்ப இன்வால்வ் ஆகிப் பண்ணினாங்க. 

ரெஜினா

 

* ரெஜினாவை வைத்து கிளியோபாட்ரா மற்றும் டைட்டானிக் கான்செப்ட்டில் ஷூட் செய்தேன். இந்த கான்செப்ட்டில் தமன்னா அல்லது ரெஜினாவை வைத்துதான் ஷூட் செய்யவேண்டும் என்று முன்னரே நினைத்தேன். தமன்னா விருப்பமாக இருந்தாலும், கால்ஷீட் கிடைக்கவில்லை. அப்போது ரெஜினா கால்ஷீட் கிடைத்ததால், இந்த ஷூட் சிறப்பாக முடிந்தது.

 

கடந்த 27-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து அதில்தான் இந்த காலண்டரை ரிலீஸ் செய்தேன். நான் இந்த காலண்டர் ஷூட்டை எந்த லாபத்துக்காகவும் பண்ணலை. 500 காலண்டர் பிரிண்ட் செய்து அதை இலவசமாக் கொடுத்துள்ளேன். இந்த ஷூட்டிற்காக யாரும் பணம் வாங்கவே இல்லை. எல்லோரும் என்மேல வைத்திருந்த நட்பிற்காக ஒருநாள் ஒதுக்கி இந்த ஷூட்டை முடித்துக்கொடுத்தார்கள். ரொம்பநாளாக எனக்குள் இருந்த ஆசை, இந்த போட்டோஷூட்டால் நிறைவேறியது’’ என்று ’once upon a time’ போட்டோ ஷூட்டின் சுவாரஸ்யங்களைச் சொல்லிமுடித்தார் கார்த்திக் ஸ்ரீனிவாசன்.

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

51 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்ட 2067ஆம் ஆண்டிற்கான ஆடைகள்

2067-ஆம் ஆண்டில் அணியக் கூடிய நவீன உடைகளை, அரை நூற்றாண்டுக்கு முன்பே பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தனில்

 
 
DSC_0564.jpg?resize=800%2C533  DSC_0572.jpg?resize=800%2C533DSC_0589.jpg?resize=800%2C533 
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் நினைவு தினம்.

இவரது இயற்பெயர் கண்ணுசாமி. முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயரைப் பெற்றுக்கொண்டார்.

Bild könnte enthalten: 1 Person, machen Sport, Text und im Freien

உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திரம் மிட்செல் ஸ்டார்க்கின் பிறந்தநாள்.

2015 உலகக்கிண்ணத் தொடரில் கலக்கிய ஸ்டார்க் தொடரின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவாகியிருந்தார்.
Happy Birthday Mitchell Starc

  • தொடங்கியவர்

குடும்பக்கதை
கணவன் மனைவி காதல் கலாட்டா கடி

  • தொடங்கியவர்

1996 : இலங்கை மத்­திய வங்­கியின் மீது குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது

வரலாற்றில் இன்று

ஜனவரி – 31

 

1606 : இங்­கி­லாந்து மன்னன் முதலாம் ஜேம்­ஸுக்கு எதி­ரா­கவும் நாடா­ளு­மன்­றத்­துக்கு எதி­ரா­கவும் சதி முயற்­சியில் இறங்­கி­ய­மைக்­காக கய் ஃபொக்ஸ் என்­பவர் தூக்­கி­லி­டப்­பட்டார்.

1747 : பால்­வினை நோய்­க­ளுக்­கான முத­லா­வது மருத்­துவ நிலையம் லண்­டனில் லொக் மருத்­து­வ­ம­னையில் நிறு­வப்­பட்­டது.

1876 : அனைத்து இந்­தியப் பழங்­கு­டி­க­ளையும், அவர்­க­ளுக்­கென அமைக்­கப்­பட்ட சிறப்பு இடங்­க­ளுக்கு செல்­லு­மாறு ஐக்­கிய அமெ­ரிக்க அரசு உத்­த­ர­விட்­டது.

varalaru-31-01-2017-copy.jpg1891 : போர்த்­துக்­கலை குடி­ய­ர­சாக்­கு­வ­தற்­கான கிளர்ச்சி ஏற்­பட்­டது.

1915 : முதலாம் உலகப் போரில் ரஷ்­யா­வுக்கு எதி­ராக ஜேர்­மனி பாரி­ய­ளவு நச்சு வாயுவைப் பயன்­ப­டுத்­தி­யது.

1937 : சோவியத் ஒன்­றி­யத்தில் ட்ரொட்ஸ்கி ஆத­ர­வ­ாளர்கள் 31 பேர் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

1943 : 2 ஆம் உலகப் போரின்­போது ஜேர்­ம­னிய இரா­ணு­வத்தின் உயர் அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான பீல்ட் மார்ஷல் பிரெட்ரிக் பௌலஸ் சோவியத் படை­க­ளிடம் சர­ண­டைந்தார்.

1944 : இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் வச­மி­ருந்த மார்ஷல் தீவு­களில் அமெ­ரிக்கப் படைகள் தரை­யி­றங்­கின.

1946 : யூகோஸ்­லா­வி­யாவில் சோவியத் முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­பட்டு அந்­நாடு பொஸ்­னியா ஹேர்­ச­கோ­வினா, குரோ­ஷியா, மக்­கெ­டோ­னியா, மொண்­டெ­னே­குரோ, சேர்­பியா மற்றும் சில­வே­னியா என ஆறு குடி­ய­ர­சு­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டது.

1958 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வெற்­றி­க­ர­மான முத­லா­வது செய்­மதி எக்ஸ்­பு­ளோரர் 1 விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.

1961 : நாசாவின் மேர்க்­கு­ரி-­ரெட்ஸ்டோன் 2 விண்­கலம் ஹாம் என்ற சிம்­பன்சி ஒன்றை விண்­ணுக்குக் கொண்டு சென்­றது.

1968 : வியட்நாம் போரில் வியட் கொங் படைகள், சாய்கொன் நகரில் அமெ­ரிக்க தூத­ர­கத்தை தாக்­கின.

1968 : அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக – நவுறு, பிர­க­டனம் செய்­தது.

1980 : குவாத்­த­மா­லாவில் ஸ்பெயின் தூத­ரா­லய முற்­று­கையில் 39 பேர் உயி­ருடன் தீயிட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

1995 : மெக்­ஸி­கோவின் பொரு­ளா­தா­ரத்தை ஸ்திரப்­ப­டுத்­து­வதற்­காக 2000 கோடி டொலர் கடன் வழங்­கு­வ­தற்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்டன் அனு­ம­தித்தார்.

1996 : கொழும்பில் இலங்கை மத்­திய வங்­கியின் மீது தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தலில் 86 பேர் கொல்­லப்­பட்டு 1,400 பேர் வரை படு­கா­ய­ம­டைந்­தனர்.

2000 : அமெ­ரிக்­காவில் பசுபிக் சமுத்­தி­ரத்தில் விமா­ன­மொன்று வீழ்ந்­ததால் 88 பேர் பலி­யா­கினர்.

2009 : கென்­யாவில் எண்ணெய் கசி­வொன்­றை­ய­டுத்து இடம்பெற்ற தீவிபத்தில் 113 பேர் உயிரிழந்தனர்.
2010: உலகில் 200 கோடி டொலர் வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘அவதார்’ பெற்றது.
2013: மெக்ஸிகோவில் 214 மீற்றர் உயரமான கட்டடமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 33 பேர் உயிரிழந்தனர்.

 

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சிறந்தது எது? - ஒரு நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory

 
 

உன்னை அறிந்தால்

`பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சிறந்தவை உதவும் கரங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் அன்னை தெரஸா. நம் வாழ்க்கையில், எத்தனையோ நல்லவர்களின் கைகள் நமக்கு உதவிபுரிந்திருக்கும். அவற்றில் சிலவற்றை அறிந்திருப்போம்; பலவற்றை அறிந்திருக்கவே மாட்டோம். பிறரின் உதவியோ, ஆதரவோ இல்லாமல் ஒரு தனிமனித சாதனை என்பது சாத்தியமே இல்லாதது. சாதனைக்கு மட்டுமல்ல... பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளாமல், பிறரின் ஆதரவு இல்லாமல் வாழ்க்கை ஓரடிகூட நகராது என்பதே யதார்த்தம். பிறருக்கு உதவி செய்ய நீளும் கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள்; அழியாப் புகழ் பெறுகிறார்கள். பிரபல பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜேன் பேதரவ்ஸ்கி (Ignacy Jan Paderewski), போலந்தின் பிரதமராகவும் இருந்தவர். அவர் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கதை உதவும் கரங்களின் மகிமையை எடுத்துச் சொல்லும் கதை.

 

அந்தப் பெண்மணிக்கு இசையின் மீது அப்படி ஓர் ஆர்வம். ஆனால், வாழ்க்கைச் சூழல் முறைப்படி அவரை இசையைக் கற்றுக்கொள்ளவிடாமல் செய்துவிட்டது. தனக்குக் கிடைக்காத இசைப் பயிற்சி, தன் மகனுக்காவது வாய்க்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே அவன் பியானோ கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். அவனும் ஈடுபாட்டோடு கற்றுக்கொண்டிருந்தான். வகுப்புகளுக்கு மட்டுமல்லாமல், அவ்வப்போது அவனை இசை நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்வது அந்தப் பெண்மணியின் வழக்கம். அப்போதுதான் அவனுக்கும் இசைமீது ஒரு பிடிப்பும் ஆர்வமும் ஏற்படும் என நம்பினார் அந்தப் பெண்மணி.

இசை

அன்றைக்கு அந்தப் பெண்மணியும் அவர் மகனும் ஒரு பியானோ இசை நிகழ்வுக்குப் போயிருந்தார்கள். அந்த அரங்கில் அன்றைக்குஇக்னேஸி பேதரவ்ஸ்கி கதை பியானோ வாசிக்க இருந்தவர் இக்னேஸி பேதரவ்ஸ்கி. டிக்கெட் வாங்கிக்கொண்டு இருவரும் உள்ளே போய் அமர்ந்தார்கள். நிகழ்ச்சி தொடங்க இன்னும் நேரமிருந்தது. அந்தப் பெண்மணியின் பக்கத்து இருக்கையில் இன்னொரு பெண் வந்து அமர்ந்தார். அவர் இவருடைய தோழி. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து வெகுநாள்களாகியிருந்தன. மகிழ்ச்சியில் ஒருவர் கையை இன்னொருவர் பற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மகன் இருக்கையைவிட்டு நழுவி எங்கேயோ போவதை அந்தப் பெண் கவனிக்கவில்லை.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கான மணி ஒலித்தது. அப்போதுதான் அந்தப் பெண்மணி தன் மகன் இருக்கையில் இல்லாததை கவனித்தார். அதற்குள் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. திரை விலகியது. மேடையில் விளக்குகள் ஒளிர்ந்தன. எதிரே, மேடைக்கு நடுவே பேதரவ்ஸ்கியின் பிரமாண்டமான பியானோ. அதற்கு முன்னால்... அந்தப் பெண்மணியின் மகன் அமர்ந்திருந்தான். அந்தப் பெண்மணி முகம் சிவக்க, அவனைத் திட்டுவதற்காக வாயைத் திறந்தார். அதற்குள் அந்தச் சிறுவன் தனக்குத் தெரிந்ததை பியானோவில் தட்டுத் தடுமாறி வாசிக்க ஆரம்பித்திருந்தான். ``ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...’’ கூட்டத்தில் லேசாக சலசலப்பு எழுந்தது. அந்தப் பெண்மணி தன் மகனை அழைத்துச் செல்வதற்காக மேடையை நோக்கி வேகமாகப் போனார். 

                                                                                                                                                                                                              Photo Courtesy: Wikipedia

சிறுவன்

 

அப்போது அந்தச் சிறுவனுக்குப் பின்னால் வந்து நின்றார் பேதரவ்ஸ்கி. ``குட்... எந்திரிக்காதே... வாசிச்சுக்கிட்டே இரு...’’ என்று அவனை ஊக்கப்படுத்தினார். பிறகு அவனை நோக்கிக் குனிந்தார். சிறுவனின் இடது கை விரல்களை பியானோவின் சரியான இடங்களில் வைத்து வாசித்தார். பிறகு அவனுடைய வலது கை விரல்களைப் பிடித்து அவற்றையும் சரியான கீபோர்டு கட்டைகளில் பதித்தார். இருவரும் இணைந்து பியானோ வாசித்துக்கொண்டிருந்தார்கள். அந்த இசை மேதையும், ஒரு கற்றுக்குட்டிச் சிறுவனும் சேர்ந்து வாசித்த இசை அரங்கையே திக்குமுக்காடச் செய்துகொண்டிருந்தது. கூட்டம் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் பியானோ இசையில் மயங்கிக்கிடந்தது. பாடல் முடிந்ததும் அரங்கம் அதிர எழுந்த கரவொலி விண்ணை முட்டியது.

 

 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.