Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பாலே டான்ஸர், ராணுவ அதிகாரி, தொலைக்காட்சி தொகுப்பாளினி... சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே இவர்!

 

ஜின் ஸிங்
PC: Faguowenhua.com

சைனீஸ் டேட்டிங்’ (Chinese Dating) என்கிற அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, சீனாவில் மிகவும் பிரபலம். பெற்றோர்கள் தங்கள் மகன்களுடன் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குச் சில பெண்களை அறிமுகப்படுத்துவார்கள். தனக்கு ஏற்ற பெண்ணை ஒருவர் தேர்ந்தெடுப்பார். அதுபற்றி பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்கப்படும். 

 

'இந்தப் பெண் மிகவும் வயதானவள்போல தெரிகிறார்', 'அந்தப் பெண் எங்கள் குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியில் உதவவேண்டும்', 'மற்ற இனத்துப் பெண்கள் எங்கள் குடும்பத்துக்கு ஒத்துவராது' - இப்படிப் பல ஆணாதிக்க மற்றும் பிற்போக்கான கருத்துகளை வெளிப்படையாகக் கூறுவார்கள். இதுதான் நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சிக்கு சீனாவில் எதிர்ப்புகளும் ஆதரவுகளுமாக உள்ளன. இந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளராக வருபவர், அத்தனையையும் தாங்கி நிறுத்துகிறார். 

'இவ்வளவு பிற்போக்குத்தனமாக நிகழ்ச்சி நடத்துகிறீர்களே' என்ற விமர்சனத்துக்கு, “இன்னும் இந்தச் சீன சமூகத்தில் இவ்வளவு பிற்போக்குத்தனங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். இங்கே ஒருவர் ஒரு பெண்ணை விரும்பலாம். ஆனால், திருமணம் என வரும்போது, அந்த ஆணின் பெற்றோர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். நம் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகளையே நிகழ்ச்சியில் காட்டுகிறேன்” என்று அதிரடியாக விளக்கம் கூறுகிறார். அவருக்கு சீனாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள். இது, அவரின் தெளிவான பேச்சுக்கும் மொழிநடைக்கும் மட்டும் சேர்ந்த கூட்டமல்ல; அவரின் வாழ்க்கையும் சாகசம் நிறைந்தது. 

1967-ம் ஆண்டு, சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஷின்யங் என்ற இடத்தில் ஆணாகப் பிறந்தவர், ஜின் ஸிங் (Jin Xing). நான்கு வயதிலேயே தனக்குள் மாற்றம் நிகழ்வதை உணர்கிறார். ஆணின் இயல்பிலிருந்து மாறுபட்ட உணர்வுகள். அதனைச் சரியாக வெளியில் சொல்லத் தெரியவில்லை. பாலே நடனத்தில் அங்கே அவரை மிஞ்ச ஆளில்லை. அந்தக் காலத்தில், சீன ராணுவத்தில் பாலே நடனம் மற்றும் அக்ரோபாடிஸ் (Acrobatics) மிகமுக்கியப் பயிற்சியாகக் கருதப்பட்டது. அதனால் பாலே நடனத்தில் ஆர்வம்கொண்ட ஜின்னை, சீன ராணுவப் பயிற்சியில் ஒன்பது வயதில் சேர்த்துவிட்டார்கள். அங்கே கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கூடவே குழந்தைகள் மீதான வன்முறையும் நடந்தேறியது. சரியாக நடனம் ஆடாவிட்டால், பலத்த அடி கிடைக்கும். 

ஜின் ஸிங்ஆனால், ஜின் ஸிங் பாலே நடனத்தில் திறமை பெற்றிருந்ததால், சீனா முழுவதும் பிரபலமானார். ரஷியன் பாலே, சீன ஒபேரா, நடனம் மற்றும் அக்ரோபடிக்ஸ் நேர்த்தியாகச் செய்தார். அதேசமயம், ஒரு ராணுவ வீரராக, துப்பாக்கிகள் கையாளவும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தவும் கற்றிருந்தார். இப்படி 10 ஆண்டுகள் ராணுவப் பயிற்சியில் ஜின்னின் வாழ்க்கை கடந்தது. அவரின் திறமைக்கு ராணுவத்தில் பதவி உயர்வும் கிடைத்தது. ஆனால், ஜின்னின் கவனம் முழுவதும் கலை சார்ந்த தேடலில் இருந்தது.

இந்த நடனத்தை மேலும் முறைப்படி பயில்வதற்காக, நியூயார்க்கில் உதவித்தொகை கிடைக்கும் என்று தெரியவர, அதற்கான முயற்சியில் இறங்கினார். அதற்கு முட்டுக்கட்டையாக நின்றார், அவருக்குப் பாலியல் தொல்லை அளித்த ராணுவ மேலதிகாரி. ஜின்னை ஓரினச் சேர்க்கையாளர் என்று நினைத்து, அவருக்குத் தொல்லைகள் கொடுத்தார். ராணுவப் பயிற்சியிலிருந்தும் விடுவிக்க மறுத்தார். 'தான் ஓரினச் சேர்க்கையாளரல்ல; மீறி தவறாக நடந்தால் மேலிடத்தில் புகார் அளிப்பேன்' என்று ஜின் மிரட்டியதும், அந்த ராணுவ பயிற்சி முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

சீனாவில் ஜின் ஸிங் ஒரு பிரபலம்; சிறந்த நடனக் கலைஞர். ஆனால், நியூயார்க் நகரம்

அவரை சராசரி மனிதராகவே கருதியது. இது அவருக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. காலையில் நடனப் பள்ளி, இரவில் பணத்துக்காக வேலை. ஜின்னுக்கு மிகவும் சவாலான நாள்கள் அவை. இந்தத் தனிமையும் தன்னம்பிக்கையும்தான் ஜின் ஸிங்கின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாகியது. அப்போதுதான், தன்னைப் பற்றியும், தன் அடையாளத்தைப் பற்றியும் அதிகமாகச் சிந்தித்தார் ஜின். 

இதுபற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், “நியூயார்க் நகர வாழ்க்கையில்தான், நான் யார் என்பதை தேடத் தொடங்கினேன். நான் எப்போதுமே ஒரு பெண்ணாக உணர்த்திருக்கிறேன். ஆனால், அதனை வெளிக்காட்டவில்லை. ஒருவேளை நான் ஓரினச் சேர்க்கையாளரோ என்றும் நினைத்ததுண்டு. அப்படிப்பட்ட நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். ஆனால், நான் அப்படியல்ல என்பதை உணர்ந்தேன். நான் ஒரு பெண். நான் முழுவதும் பெண்ணாகவே மாற விரும்பினேன். உடல் ரீதியாகப் பெண்ணாக மாறவேண்டும் என்று முடிவெடுக்கவே ஒன்பது வருடங்கள் யோசித்தேன். ஆனால், நான் எடுத்தது மிகச் சரியான முடிவு'' என்கிறார். 

ஜின் ஸிங்

PC: hollywoodreporter.com

அமெரிக்காவில் நடந்த பல பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, விருதுகளைக் குவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, சிறிது காலம் பணியாற்றினார். சீனாவில் ஒரு நடனப் பள்ளி அமைத்தார். 1995-ம் ஆண்டு, அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறத் தயாரானார். 'அது உங்களுக்கு அவ்வளவு சுலபமல்ல. சிகிச்சைக்குப் பிறகு நடக்க முடியாமலும் போகலாம்' என்று மருத்துவர்கள் சந்தேகமாகச் சொன்னார்கள். 

16 மணி நேர அறுவை சிகிச்சை. “நான் எப்போதும் பெண்ணாக மாறவே விரும்பினேன். அதற்காகக் கால்களை இழக்கவேண்டும் என்று நினைத்ததில்லை. தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால், எனக்கு எப்போதும் நல்ல உடல்பலம் இருந்தது. அதுதான் என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டது” என்று தன் வலிமிகு தருணங்களை விவரிக்கிறார் ஜின் லிங். 

தொடர்ந்து செய்த உடற்பயிற்சிகளால் ஒரு வருடம் கழித்து, மீண்டும் மேடை ஏறினார். அதுவரை, ஒரு ஆண் நடனக் கலைஞனாக பிரபலமாகியிருந்தவரை, பெண் கலைஞராக மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். மனம் நெகிழ்ந்தார் ஜின். தன் வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்க, மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். 2005-ம் ஆண்டு, ஜெர்மன் தொழிலதிபரான ஹின்ஸ்-கிர்ட் ஒடிமன் (Heinz-Gerd Oidtmann) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 

சீனத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிக்கு, நடுவராகப் போட்டியாளர்களைக் கடுமையாக விமர்சனம் செய்வார் ஜின். ‘விஷம்கொண்ட நாக்கு’ என்று சீன மக்கள் அவரை விமர்சித்தார்கள். “ஒருவர் ஒரு கலையை முறையாக வெளிப்படுத்தாவிட்டால், அப்படி விமர்சனம் செய்வதில் தவறில்லை” என்று கூறுவார் ஜின். தன் கணவருடன் ஒரு நடனப் போட்டியில் கலந்துகொண்ட ஜின், அவர் சரியாக ஆடவில்லை என்று மேடையில் விமர்சித்தது சீனா முழுவதும் வைரலானது. 

 

கடந்த இரண்டு வருடங்களாக, ’The JinXing Show' என்ற இவரின் நிகழ்ச்சிக்கு சீனாவில் பல கோடி ரசிகர்கள். இவரைச் சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே என்றே அழைக்கின்றனர். அதற்கு அவர், “எப்போதாவது நான் ஓப்ராவைச் சந்தித்துப் பேசுவேன். ஆனால், என்னை எந்தவொரு வரையறைக்குள்ளும் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. என் உலகம் மிகப்பெரியது” எனக் கம்பீரமா கூறுகிறார் ஜின் ஸிங்.

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பருவநிலை மாற்றத்தால் உணவின்றி தவிக்கும் கரடிகள்

பருவநிலை மாற்றத்தால் ஆர்டிக் பிரதேசத்தில் போதிய உணவின்றி பனிக்கரடிகள் அவதிப்பட்டு வருகின்றன.

  • தொடங்கியவர்

“நம்புங்க… பூமி தட்டையானதுதான்!” - சீரியஸாக சொல்கிறார்கள் இவர்கள்

 
 

சென்ற வார இறுதியில் (பிப்ரவரி 3) நடந்த கூத்து இது. "மேட்" மைக் ஹ்யுக்ஸ் ("Mad" Mike Hughes) என்று அழைக்கப்படும் அந்த மனிதர் கலிஃபோர்னியா பாலைவனத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் அவரைத் தூக்கி கொண்டு செல்ல ராக்கெட் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அட, உண்மைதான்! அவரின் லட்சியமே பூமி தட்டையானது என்பதை நிரூபிப்பதுதான். இதற்காக அவர் எந்த எல்லைக்கும் போக தயார். உதாரணமாக, அன்றைக்கு, ராக்கெட் ஒன்றில் தன் உடலைக் கட்டிக்கொண்டு விண்ணில் பறந்து கீழே இருக்கும் பூமியை படம் பிடிக்கும் முயற்சியில்தான் அவர் இறங்கியிருந்தார். அவரின் இந்தச் சாகசத்தை நேரடியாக ஒளிபரப்ப ஓர் இணையத் தொலைக்காட்சியும் தயார் நிலையில் காத்திருக்கிறது. எண்கள் தலைகீழாக எண்ணப்படுவது முடிந்து, பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் ராக்கெட் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. "மேட்" மைக் ஹ்யுக்ஸ் “இதோ இப்ப ரெடி ஆயிடும்!” என்று ஏதோ ‘ஸ்டார்டிங் ட்ரபிள்’ உள்ள ஸ்கூட்டர் போல அந்த ராக்கெட்டை டீல் செய்தார். எந்த முன்னேற்றமும் இல்லை. முயற்சி கைவிடப்பட்டது.

"மேட்" மைக் ஹ்யுக்ஸ்

 

Photo Courtesy: Gene Blevins/Los Angeles Daily News/SCNG/Zuma

இது அவரின் முதல் முயற்சியல்ல. இதற்கு முன்னரே பல முறை இப்படிச் செய்ய போகிறேன் என்று களமிறங்கி இதே போல தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறார். அந்தத் தோல்விகளை கூடத் தாங்கி கொள்ளலாம். இந்த ராக்கெட் கொண்டு பூமி தட்டையானதுதான் என்று அவர் நிரூபிக்க முயல்வதையும் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்காக இவர் தயார் செய்திருக்கும் இந்த ராக்கெட் எத்தனை அடி வரை மேலே போகும் என்று கேட்டால் 1800 அடிகள் (550 மீட்டர்) என்று கூலாக சொல்கிறார். அவ்வளவு அடிகள் மட்டுமே மேலே போய் படம் எடுக்க எதற்கு இந்த ராக்கெட் அலப்பறைகள் எல்லாம்? ஒரு உயரமான கட்டடத்தில் ஏறினால் போதாதா? இந்தக் கேள்விக்கு எல்லாம் "மேட்" மைக் ஹ்யுக்ஸ் அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. அவரிடம் மட்டுமல்ல, அவர் இருக்கும் அமைப்பான ‘ஃபிளேட் எர்த் சொசைட்டி’யிடமும் (Flat Earth Society) பதில் இல்லை. அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் பூமியின் வடிவம் குறித்து முன் வைக்கப்படும் கேள்விகளை அவர்கள் தவிர்க்கவே நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பூமி தட்டையானதுதான். கோள வடிவம் கிடையாது.தட்டையான பூமி

நாம் நடக்கும் போது பூமி சமப்பரப்பாகதானே இருக்கிறது? நிலத்தை ஒரு சமமான இடமாகத்தானே நாம் எப்போதும் உணர்கிறோம்? அப்போது பூமி என்ற நம் வாழ்விடமும் தட்டையானதுதானே? இதுதான் அவர்களின் வாதம். இதற்கு எதிர்வாதமாக நாசா போன்ற விண்வெளி நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் அரசு சார்ந்த நிறுவனங்கள் வெளியிடும் பூமியின் படங்களை முன்வைத்தால், அதை ஏற்க இவர்கள் தயாராக இல்லை. இது விண்வெளியில் இருந்து எடுத்த படம். அங்கே இருந்து பார்க்கும் போது நம் பூமி பூகோள வடிவம்தான் என்றால், “எங்கே போட்டோஷாப் செய்தீர்கள்?” என்பார்கள். இது இன்று நேற்று தொடங்கிய நம்பிக்கை இல்லை. 1800களின் மத்தியில் சாமுவேல் ரோபோதம் என்ற ஆங்கில எழுத்தாளர், பூமியின் வடிவம் இப்படியெல்லாம் இருக்கலாம் என்று சில படைப்பு விளக்கங்களை முன்வைத்தார். அவர் கூறியதில் ஒரு வடிவம்தான் இந்தத் தட்டையான பூமி. ஆனால், 1950களில்தான் இந்த ‘ஃப்ளாட் எர்த் சொசைட்டி’ ஒரு சங்கமாக நிறுவப்பட்டு, உறுப்பினர்கள் இணைந்தனர். இன்றும் சமூக வலைதளங்கள் மூலம் இவர்களின் கருத்துக்கள் பரப்பப்பட்டு மக்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தச் சங்கத்தின் கணக்குப்படி, 2009ம் ஆண்டு முதல் வருடத்திற்கு 200 புதிய உறுப்பினர்கள் விடாமல் இணைந்து வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

 

 

 

The Outer Limits GIF

 

via GIPHY

சரி, அறிவியல் அறிவு வளராத காலகட்டத்தில் இப்படி ஒரு கூட்டம் இருந்திருக்கலாம். இப்போதுமா இப்படி இருப்பார்கள்? ஒருவேளை இவர்கள் வேண்டுமென்றே இதைச் செய்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இதற்கென்று ஒரு பிரத்தியேக இணையதளம், ஆராய்ச்சிக் கட்டுரைகள், விளக்கப்படங்கள் என்று முழு வீச்சுடன் இப்போதும் செயல்படுவதை பார்த்தால், இவர்கள் மிகவும் சீரியஸான மனிதர்களாகத்தான் உணரப்படுகிறார்கள்.

அப்படியென்றால், இவர்களைப் பொறுத்தவரை பூமி என்பது எப்படி இருக்கிறது?

பூமி என்பது ஒரு வட்டமான வில்லை. அதன் நடுவில் ஆர்டிக் பிரதேசம் இருக்க, ஓரங்களில் அன்டார்டிகா மற்றும் அதன் 150 அடி உயர மலைகள் இருக்கின்றன. இந்த மலைகள்தான் நம்மைப் பூமியின் ஓரத்திலிருந்து கீழே விழாமல் தடுக்கின்றன. இந்த மலைகளை ஏறி இறங்கினால், நாம் பூமியிலிருந்து கீழே விழுந்து விடுவோம். இதை தடுக்கத்தான் நாசா போன்ற நிறுவனங்கள் வேலை செய்கின்றன. நாதன் தாம்சன் என்ற ‘ஃபிளேட் எர்த் சொசைட்டி’ ஆதரவாளர் ஒருவர், கடந்த மே மாதம், ஸ்டார்பக்ஸ் ஒன்றில், நாசா விஞ்ஞானி ஒருவரைச் சந்தித்ததாகவும், போதையில் அவர் நிறைய உண்மைகளைக் கசியவிட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சில நாட்களில் அந்த வீடியோ யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

ஃபிளேட் எர்த் சொசைட்டி புத்தாண்டு வாழ்த்து

Photo Courtesy: tfes.org

இரவு, பகல் என்பது வில்லை வடிவில் இருக்கும் பூமிக்கு எப்படி நிகழ்கிறது?

வில்லை வடிவில் இருக்கும் பூமியின் மேல், சூரியன் மற்றும் சந்திரன் கோள வடிவில் இருக்கின்றன. பூமியிலிருந்து 4,828 கிலோமீட்டர்கள் உயரத்தில் இவை இரண்டும் இருப்பதாகவும், 5000 கிலோமீட்டர்களுக்கு மேலே நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். 24 மணி நேரங்களை அட்டவணை போட்டு பிரித்து பூமிக்கு இவையெல்லாம் வெளிச்சம் கொடுப்பதாக கூறுகின்றனர். சரி, கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்றால், Anti-Moon என்று ஒன்று இருப்பதாகவும், அதுதான் கிரகணத்தின் போது, சூரியன் மற்றும் சந்திரனையும் மறைப்பதாகவும் விளக்கம் கூறி தலை சுற்ற வைக்கின்றனர்.

தட்டையான பூமி

இதை விடக் கொடூரமான நம்பிக்கை என்னவென்றால், புவியீர்ப்பு விசை என்ற ஒன்று இல்லை என்றும், வில்லை வடிவ பூமி ஒரு நொடிக்கு 32 கிலோமீட்டர்கள் தொடர்ந்து மேலே பறந்து கொண்டிருப்பதாகவும் கூறி சிரிப்பை வரவழைக்கின்றனர். அப்படியென்றால், விமானங்களை நேர்கோட்டில் செலுத்தி இலக்கை அடைவதைப் பற்றி கேட்டால், நம்மிடம் இருக்கும் GPS கருவிகள் அனைத்தும் போலி என்றும், அதை வைத்து விமான ஓட்டிகளை ஏமாற்றுகிறார்கள் என்று கூறி எதிர்வாதம் செய்பவர்களை டயர்டு ஆக்குகின்றனர். அதைவிட, ஐக்கிய நாடுகள் சபையின் லோகோவை சுட்டிக்காட்டி, அதில் பூமி வில்லை வடிவில் தட்டையாக இருப்பதாகவும், அவர்களுக்கு அந்த உண்மை தெரியும் என்றும் கூறுகின்றனர். இது வெறும் சாம்பிள்தான். நீங்கள் அறிவியல் ரீதியாக என்ன கேள்வி வைத்தாலும், அதற்கு விடையாகப் பல புதிய விஷயங்களை, தங்களுக்குச் சாதகமான கணக்குகளைக் கண் முன்னே நிறுத்துகிறார்கள். இவர்களின் கருத்தை பரப்ப வேறு, ஓர் இணையதளம், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் என்று  நிறுவி தினமும் போஸ்ட் போடுகிறார்கள். அவர்கள் கூறும் மேலும் பல சுவாரஸ்ய கோட்பாடுகளை நீங்கள் அங்கே தெரிந்து கொள்ளலாம்.

 

இவர்களின் சொசைட்டிக்கு நம் தமிழகத்தில் இருந்து யாரேனும் உறுப்பினர்கள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கேஷவ் மஹராஜ்... இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் போட்டோ எடுக்கப் போராடியவன் இன்று தென்னாப்பிரிக்க வீரர்! #HBDKeshav

 
 

1992-93 ம் ஆண்டு, இனவெறி முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்தும்விதமாக தென்னாப்பிரிக்காவுடன் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது எடுக்கப்பட்ட படம் அது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அந்த வெளிறிய புகைப்படத்தை கிரண் மூரே தன்னுடைய செல்போனில் இன்றும் வைத்துள்ளார். அவருடைய கோட், தோளில் தொங்கிக்கொண்டிருக்க, வெறும் கால்களோடு நீல நிறச் சட்டையும் குட்டி டிரவுசரும் அணிந்திருந்த ஒரு குட்டிப்பையனோடு எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அந்தச் சிறுவன் இன்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்!

கேஷவ் மஹராஜ்

 

27 வயதில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரராக வளர்ந்துள்ள கேஷவ் மஹராஜ், இன்று தென்னாப்பிரிக்காவின் ஒரே இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் எடுத்த 35 ரன், அந்த அணி முன்னிலை பெறுவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய அணியுடனான மிக முக்கியத் தொடருக்குத் தேர்வானதே மிகப்பெரிய விஷயம். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அவர் எடுத்த ஐந்து விக்கெட்டுகளே, இந்திய அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் இவரை எடுப்பதற்கு முக்கியமான காரணம். 

அந்தப் புகைப்படத்தை வாங்கியவர், கேஷவின் தந்தை ஆத்மானந்த். ஒப்பந்தத் தொழிலாளரான தன்னுடைய கொள்ளுப்பாட்டன் பிறந்த மண்ணான இந்தியாவின் கிரிக்கெட் வீரர்களோடு தன் மகன் விளையாடியதை எண்ணி பூரிப்படைந்துள்ளார். அந்த மஞ்சள் நிறமேறிய புகைப்படத்துக்குப் பின்னால், கிரிக்கெட் மீது தீராத விருப்பம்கொண்ட ஓர் அப்பாவும், அவர் மேற்கொண்ட தியாகங்களும், தன் மகனுக்குள் விதைத்த கனவுகளும்தான் பசுமையாகத் தெரிகின்றன.

அந்தப் புகைப்படம் எடுத்தபோதே மஹராஜின் கைகளைத் தொட்டு, ``இவன் மிகப்பெரிய கிரிக்கெட் வீரன் ஆவான்" என்று சொல்லியிருக்கிறார் மூரே. ``கேஷவ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2016-ம் ஆண்டில் களமிறங்கியபோது அவர் இந்தப் புகைப்படத்தை எனக்கு அனுப்பி அந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார். நெடுநாள்களாக நாங்கள் மற்றொருவருடைய குடும்பத்தாரோடு நல்லுறவு பாராட்டி வருகிறோம்” என்றார் மூரே.

கேஷவ் மஹராஜ்

இந்த முப்பது வருட நட்புறவு என்பது, அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. தற்செயலாக நடந்த பல நிகழ்வுகள், விதி என்று எல்லாம் ஒன்றிணைந்துதான் இவர்களுக்கு இந்த நட்பை அளித்திருக்கிறது. அதன் பிறகுதான் அவர் குழந்தை கேஷவ்வின் உள்ளங்கைகளைப் பார்த்து ஆருடம் கூறியது நடந்தேறியிருக்கிறது. பன்மைத்துவத்தைப் புதிதாக அங்கீகரித்து அதைக் கொண்டாடிய தென்னாப்பிரிக்கா, கடைசியாக சர்வதேசப் போட்டிகளைச் சொந்தநாட்டில் கண்டுகளிக்க முடியும் என உற்சாகம்கொண்டது. பலகட்ட அங்கீகாரங்களுக்குப் பிறகு, அன்று இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் விளையாட முடிந்தது. 

``விமான நிலையத்திலிருந்து எங்களுக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த கார்களில் நாங்கள் நின்றுகொண்டே வந்தோம். எங்களைத் தொட்டுப்பார்த்தால் போதும் என எண்ணுபவர்கள்கூட இருந்தார்கள். எங்கு சென்றாலும் எங்களுக்கு மக்கள் நன்றி கூறினார்கள்” என நினைவுகூர்கிறார் மூரே. இந்தியாவிலிருந்து வந்திருந்த விருந்தினர்களோடு நேரம் ஒதுக்க வேண்டும், கிரிக்கெட் பற்றி உரையாட வேண்டும் என எண்ணியிருந்தார் ஆத்மானந்த். அவர் மட்டுமல்ல, இந்தியர்கள் அதிகம் வாழும் டர்பன் நகரமும் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு விதி வேறு சில திட்டங்களை வைத்துக்காத்திருந்தது. 

``என்னுடைய நண்பர் அஜய் குப்தா, ஒரு மாலுமி. அவருடைய தாத்தா, இந்தியாவுக்காகக் கிரிக்கெட் விளையாடியவர். அவர் அவ்வப்போது டர்பன் வந்து செல்வார். அதிர்ஷ்டவசமாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கு வந்தபோது அவர் என் வீட்டில் இருந்தார். அவருக்குத் தெரிந்தவர்கள் யாராவது அணியில் இருக்கிறார்களா என்றும், அவர்களை நான் சந்திக்கலாமா என்றும் நான் அவரைக் கேட்டேன். அவர் பிரவீன் ஆம்ரேவைக் குறிப்பிட்டுச் சொன்னார். அவர்கள் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என நான் நினைக்கின்றேன். ஒருவேளை நான் ஆம்ரேவைச் சந்தித்தேன் என்றால், நான் அவருடைய பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று அவர் கூறினார்” என்கிறார் ஆத்மானந்த்.

கேஷவ் மஹராஜ்

ஆனால், இவருக்கு ஆம்ரேவை அணுகுவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அப்போதுதான் ஆத்மானந்துக்கு இரண்டாவது முறையாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. ஆத்மானந்தின் `பெரிய புள்ளி’ உறவினர் ஒருவர், அந்தத் தொடரின் ஸ்பான்சரான நியூ ரிபப்ளிக் வங்கியின் முக்கிய வாடிக்கையாளரில் ஒருவராக இருந்திருக்கிறார். டெஸ்ட் தொடருக்கு முன்பாக, ஸ்பான்சர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆத்மானந்தின் உறவினரும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், மீண்டும் `அதிர்ஷ்டவசமாக’ அவருக்குத் தவிர்க்க முடியாத வேலை வந்துசேர்ந்தது. 

``அவரால் செல்ல முடியவில்லை. நான் கிரிக்கெட் விளையாடுவேன் என்பதால், விருந்துக்கு அவர் எனக்கு அழைப்புவிடுத்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக அதற்குச் சம்மதித்தேன். சென்றவுடன் நான் முதலில் செய்த காரியம், ஆம்ரேயிடம் சென்று அஜய் குப்தாவைப் பற்றிக் கூறி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். தொடர்புகள் சற்று இலகுவாகின. நான் அப்போதுதான் கிரணையும் முதன்முதலாகச் சந்தித்தேன். சச்சின் டெண்டுல்கரோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு, அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்றும் அதை நான் பத்திரமாக வைத்துள்ளேன்” என்று கூறும் அவர், அப்போது ஏழு வயது நிரம்பிய தன்னுடைய மகள், முகம்மது அஸாருதீனுடன் எடுத்த புகைப்படத்தையும் பத்திரமாக வைத்துள்ளார். 

கேஷவ் மஹராஜ்

அதன் தொடர்ச்சியாக, அவர் வேறு சில நிகழ்வுகளுக்கும் அழைக்கப்பட்டார். அப்போதுதான் அவர் மூரேவைச் சந்தித்து வீட்டுக்கு அழைப்புவிடுத்துள்ளார். 1992-ம் ஆண்டின் கோடையில் நடந்த பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் கேஷவின் எதிர்காலத்தை வடிவமைத்தது என்று கூறுகிறார் அவர். ``எங்கள் குடும்பம் அப்போது மிகப்பெரிய மனிதர்களுடன் தொடர்பில் இருந்தது. எனக்கு அது விதியா என்று தெரியவில்லை. ஆனால், கேஷவுக்கு வழி திறந்துவிட்டது” என்கிறார் அவர். 

நன்றாக உடை அணிந்த கிரிக்கெட் வீரரோடு வெறுங்காலுடன் நிற்கும் ஒரு குட்டிப்பையனின் புகைப்படம், கூறுவதற்கு ஆயிரம் ஆயிரம் கதைகளை வைத்திருக்கும். ஆனால், அந்தப் புகைப்படங்கள் பூட்டிய பெட்டிக்குள் நினைவுகளாக முடங்கிக்கிடக்கும். கேஷவ் மஹராஜ் - இதற்கு விதிவிலக்கு. தான் பார்க்க நினைத்தவர்கள் இருந்த இடத்துக்கு, தானும் முன்னேறிவிட்டார். இந்த முன்னேற்றம் அசாத்தியமானதல்ல என்றாலும், அனைவருக்கும் சாத்தியமானதும் அல்ல. கனவுகளை உயிர்ப்பிக்க காலத்தோடு போட்டியிடுபவனால் மட்டுமே முடியும். கேஷவ் அப்படிப்பட்டவன்!

 

ஹேப்பி பர்த்டே கேஷவ் மஹராஜ்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

WR_20180209010827.jpeg

யார் அழகு....! செடியில் பூத்துள்ள மலர்கள் அழகா... அமர்ந்திருக்கும் நான் அழகா என கேட்கிறதோ இந்த பச்சை கிளி.

  • தொடங்கியவர்
‘மன்னித்தலே நெருக்கத்தை உருவாக்கும்’
 

image_c8ef6b60a6.jpgஉறவுகள், எங்கள் வம்ச விருத்திக்கான நிறைவைத் தந்து, பிணைப்புகளைத் தொடரச் செய்கின்றன. என்றும் எங்களைச் சார்ந்த எவரையும் வெறுப்பதோ, ஒதுக்குவதோ ஒத்துக்கொள்ள இயலாத உண்மை. எனினும், மனித உறவுகள் நூல்இழைபோல் ஆகக்கூடாது. கண்ணாடி போல் உடைந்து நொறுங்கவும் ஆகாது.

மனஸ்தாபத்தால் ஏற்படும் பிரிவு, சில சமயங்களில் நிரந்தரமான பிளவாகவும் கூடும். நூல்இழை அறுபடாமல், அதன் இறுக்கத்தை வலுவாக்குவது மனிதர் ஒவ்வொருவரின் கடனாகும். உடைந்து போன கண்ணாடியை முன்னர் இருந்ததுபோல் ஒட்டி, பழைய உருவத்தை வழங்குதலும் சிரமம்தான்.

தப்பான அபிப்பிராயங்களும் ஆணவப்போக்கும் உறவுகளை இழக்கச்செய்ய அனுமதிக்கக்கூடாது. மன்னித்தலே உறவுகளில் நெருக்கத்தை உருவாக்கும்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: பெப்ரவரி 09
 

1825: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் கல்லூரி வாக்குகளில் பெரும்பான்மையைப் பெறாததால் செனட் சபை உறுப்பினர்கள் ஜோன் குயின்ஸி அடம்ஸை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

1849: புதிய ரோம குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1900: டேவிஸ் கிண்ண டென்னிஸ் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

1942: இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்க யுத்த தந்திரோபாயம் குறித்து அமெரிக்காவின் முக்கிய படைத் தலைவர்கள் முதல் தடவையாக சந்தித்துப் பேசினர்.

1950: அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள ஊழியர்களில் சுமார் 200 பேர் கம்யூனிஸ்ட்டுகளாக இருப்பதாக செனட் சபை உறுப்பினர் ஜோசப் மெக்கர்;தி கூறினார்.

1959: உலகின் முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஆர்-7 சேம்யோர்க்கா, ரஷ்யாவினால் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

1965: தென் வியட்நாமுக்கு தாக்குதல்படைகளை அமெரிக்கா அனுப்பியது.

1969: போயிங் 747 விமானம் சோதனையிடப்பட்டது.

1991: லித்துவேனியாவில் சுதந்திரத்திற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர்.

1996: ஐரிஷ் குடியரசு இராணுவம், தனது 18 மாத யுத்த நிறுத்த உடன்பாட்டினை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

 

http://www.tamilmirror.lk/

 

கைப்பந்து போட்டி கண்டுபிடிக்கப்பட்ட நாள் (பிப்.9- 1895)

 

கைப்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் (volleyball) என்பது ஒரு அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தைத் தட்டி எதிர்ப்பக்கம் அனுப்பும் விளையாட்டு ஆகும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். சமதளம், பெரும்பாலும் உள் அரங்கில் விளக்குகள் ஒளியில் ஆடப்படும் விளையாட்டு. களத்தின் நடுவில் வலையும், அதன் இரு புறமும் 3 அடியில் ஒரு கோடும் போடப்பட்டிருக்கும். எந்த வீரரும் அந்தக்

 
கைப்பந்து போட்டி கண்டுபிடிக்கப்பட்ட நாள் (பிப்.9- 1895)
 
கைப்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் (volleyball) என்பது ஒரு அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தைத் தட்டி எதிர்ப்பக்கம் அனுப்பும் விளையாட்டு ஆகும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

சமதளம், பெரும்பாலும் உள் அரங்கில் விளக்குகள் ஒளியில் ஆடப்படும் விளையாட்டு. களத்தின் நடுவில் வலையும், அதன் இரு புறமும் 3 அடியில் ஒரு கோடும் போடப்பட்டிருக்கும். எந்த வீரரும் அந்தக் கோட்டைத் தாண்டி வலையருகில் கால் வைத்தாலோ, வலையில் உடலின் எந்தப் பகுதியாவது பட்டாலோ, தப்பாட்டமாக (Foul) கருதப்படும். வலையின் மேல்மட்ட உயரம் ஆண்களுக்கு 2.43 மீட்டராகவும், பெண்களுக்கு 2.24 மீட்டராகவும் இருக்கும்.

முழங்கை வரையிலும், விரல்களாலும் பந்தை தட்டி மேலெழும்பச் செய்யலாம். எழும்பிய பந்தை எதிரணி பக்கம்  உள்ளங்கையால் அடிக்கலாம். ஒருவர் தொடர்ந்து ஒரு முறைக்கு மேல் பந்தை தட்டக் கூடாது. பந்து தங்கள் பக்கம் வந்ததும் மூன்று தட்டுதலுக்கு மிகாமல் எதிரணி பக்கம் திருப்பியனுப்ப வேண்டும்.

பந்தை முதலில் தட்டுதல் 'சர்வீஸ் (தொடக்க வீச்சு)' எனப்படும். இது எல்லைக் கோட்டிற்கு வெளியே இருந்து வலையில் மோதாமல் எதிரணியினரின் பகுதிக்கு செலுத்த வேண்டும். எதிரணி பக்கத்தில் இருந்து வரும் பந்தை வலை அருகிலேயே (blocking) தடுத்தாடல் எனப்படும். *வாலிபால் விளையாட்டு அமெரிக்க விளையாட்டு பயிற்சியாளர் வில்லியம் மோர்கன் என்பவரால் 1895-ல் உருவாக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் 1964-ம் ஆண்டு வாலிபால் இரு பாலருக்குமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. பீச் வாலிபால் எனும் கடற்கரையில் ஆடும் வாலிபால் ஆட்டத்தில் ஒரு அணிக்கு இருவர் மட்டுமே ஆடுவார்கள். 1940-களில் அமெரிக்காவில் ஆடப்பட்ட இந்த வகை தற்போது பல நாடுகளிலும் பரவி, ஒலிம்பிக்கில் 1996-ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது.

 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

தவறான நேரத்தில் சரியாக க்ளிக் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் போட்டோ கலக்ஷன்!

 

நாம் நம்மை மறந்து எதாவது வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, நமக்கே தெரியாமல் ஏடாகூடமாக போட்டோ எடுத்துவிடுவார்கள். அப்படி ஒரு போட்டோ எடுத்ததே நமக்கு தெரியாது. சில நாள் கழித்து அதை நமது வாட்ஸ்அப் க்ரூப் அல்லது ஃபேஸ்புக் வாலில் டேக் (Tag) செய்து அலப்பறைய கூட்டும் போதுதான்... அடச்சே! இதோ எப்போத் எடுத்தானுங்க என்று தலையில் அடித்துக் கொள்வோம்.

கண்ட இடங்களில் நோண்டுவதில் இருந்து ஏதாவது பெண்ணை வெறிக்க, வெறிக்க சைட் அடிப்பது வரை பல வகைகளில் நாம் இப்படி சிக்க வாய்ப்புகள் இருக்கிறது. சாதாரண மக்களாக இருந்தால் பர்சனலாக ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் அது ஷேராகும். இதுவே அவர்கள்பிரபலங்களாக இருந்துவிட்டால்... எந்த காலத்திலும் அழிக்க முடியாதபடி வரலாற்று நிகழ்வாக மாறிவிடும்.

இப்படியாக நமது இந்திய வீரர்களின் சில வேடிக்கையான புகைப்படங்களும் க்ளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு தான் இது!

All Image Source: Google

 
டைட்டானிக் போஸ்!

டைட்டானிக் போஸ்!

சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், இருவரும் திருமணம் ஆவதற்கு முன் ஒன்றாக டைட்டானிக் போஸ்டர் முன் ரொமாண்டிக் போஸ் கொடுத்த போது க்ளிக்கப்பட்ட புகைப்படம்.

Image Source: Google

டிச்சு பண்ணக் கூடாது!  

டிச்சு பண்ணக் கூடாது!

ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பளைய டச்சு பண்ணலாம்... ஆனா, இந்த மாதிரி இடத்துல டிச்சு பண்ணக கூடாதுன்னு தெரியாதா இர்பான் பதான்... உயரத்த பார்த்தா... டிச்சுக்கு உள்ளான அந்த பயப்பக்கி நம்ம இஷாந்த் ஷர்மா மாதிரி இல்ல இருக்கு.

Image Source: Google

 

அது ஒரு காலம்...  

அது ஒரு காலம்...

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் நல்ல பேட்ஸ்மேன்களுக்கு அது ஒரு கனாக்காலம், தம்பி இஷாந்த் ஷர்மா பந்தை தூக்கி கொண்டு ஓடி வந்தாலே பந்தை பவுண்டரிக்கு விரட்டுவார்கள். அப்படி ஒரு பந்தை ஆஸ்திரேலிய வீரர் பவுண்டரிக்கு அடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்த போது, தரையில் படுத்து பந்தை வேடிக்கை பார்த்த இஷாந்த்.

Image Source: Google

 

பல் டாக்டர் கிட்ட போங்க பங்கு!  

பல் டாக்டர் கிட்ட போங்க பங்கு!

இனிமேல் இந்த அற்புத காட்சியை காண வேண்டும் என்றால், யூடியூப் பக்கமாக தான் ஒதுங்க வேண்டும்.

ஆத்தா... நீ உம்மட காட்டுல தனியா உட்காந்து எத்தன நேரம் வேணாலும் தனியா சிரி ஆத்தா... என்று கவுண்டமணி கூறுவது போல தான்... அப்பா சாமி... நெஹ்ராவின் இந்த வெற்றி களிப்பு வேறு ரகம்.

நெஹ்ரா பந்தில் அவுட்டான சூழலை காட்டிலும், இந்த வேற லெவல் ரியாக்ஷனை காண்பது தான் மிகவும் கடினம்!

Image Source: Google

 

எங்கிட்டயேவா...  

எங்கிட்டயேவா...

புற்று நோயை ஓட, ஓட விரட்டிய பிறகு... கொக்காணி காட்டி சிரிக்கும் யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் கேலியான நபர் யுவராஜ் சிங் தானாம். தன்னை சுற்றி இருக்கும் நபர்களை வம்பிழுத்துக் கொண்டே இருப்பார் என்று கூறுவதுண்டு. ஆனால், இடைப்பட்ட காலத்தில் இவர் ஒருமாதிரி என்ற கருத்தக்களும் உலாவந்தன.

Image Source: Google

 

தேனீக்கள்!  

தேனீக்கள்!

இந்தியாவின் ஒரு டெஸ்ட் போட்டியின் நடுவே தேனீக்கள் மைதானத்திற்குள் தாக்குதல் நடத்த, போட்டி நடுவர், பேட்ஸ்மேன், ஃபீல்டர்கள் உட்பட அனைவரும் குப்புறப்படுத்து தற்காத்துக் கொண்ட போது க்ளிக்கியப்படம்.

Image Source: Google

 

இனிமே பேசுவியா...  

இனிமே பேசுவியா...

டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்ட போது யுவராஜ் சிங் மற்றும் கெயில் கேலி செய்து நக்கலடித்துக் கொண்ட போது, தனது பேட்டால்.... யுவராஜை அடிக்க கெயில் விரட்டிய போது க்ளிக்கியப்படம்.

Image Source: Google

மசாஜோ!  

மசாஜோ!

தொடரை வென்று பதக்கத்துடன் யுவராஜ் மீது ஏறி உட்கார்ந்து களைப்பாறும் தோனி.

Image Source: Google

 

கங்கம் டான்ஸ்!  

கங்கம் டான்ஸ்!

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை வென்ற பிறகு பரிசளிப்பு விழாவில் கோப்பை வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது, வெற்றி மகிழ்ச்சியில் முன்னாடி வந்து கங்கம் டான்ஸ் ஆடி மகிழ்ந்த விராட் கோலி.

Image Source: Google

 

அல்டிமேட்!  

அல்டிமேட்!

இந்திய வீரர்கள் வசமாக மாட்டிய படம் என்றால் அது இதுதான். ஒரு ரசிகர் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருக்கும் போது, அருகே சச்சின் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கு... உத்தப்பா, தினேஷ் கார்த்திக், யுவராஜ் மூவரும் அந்த பெண்ணை வேறு கோணத்தில் பார்த்து ஜொள்ளு விட்ட தருணம்.

Image Source: Google

 

மீண்டும் யுவராஜ்!  

மீண்டும் யுவராஜ்!

யுவராஜ் உண்மையிலே கோபக்காரரோ, பொறாமை கொண்டவரோ இல்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த புகைப்படம். ஒரு கட்டத்தில் யுவராஜ் தனக்கு கேப்டன் பொறுப்பு கிடைக்கவில்லை என்று அணியில் சில வீரர்களுடன் சரியாக நடந்துக் கொள்ளவில்லை என்று அரசல்புரசலாக செய்திகள் எல்லாம் வெளியாகின.

ஆனால், எல்லா வீரர்களுடனும் அவர் நட்புடனும், அதிக நகைச்சுவை உணர்வுடனும் தான் பழகியுள்ளார். இதோ! ரெய்னா பழத்தை ஊட்ட அதை வேடிக்கையான பாவனை வெளிப்படுத்தி உண்ணும் யுவராஜ்!

Image Source: Google

 

கான் பாவம்யா!  

கான் பாவம்யா!

இப்படியும் சில படங்கள் எசக்க பிசக்காக க்ளிக்கப்படுவதுண்டு. ஆவுட் கேட்டு அம்பயரிடம் முறையிட, அம்பயரும் விரலை தூக்கு அவுட் கொடுத்து விட்டார். ஆனால், படம் எடுக்கப்பட்ட கோணம் தான் கொஞ்சம் சிக்கலாகி போய்விட்டது.

ஆனா, பர்ஃபெக்ட் க்ளிக் இது!

Image Source: Google

 

அவனா நீ...  

அவனா நீ...

விண்டேஜ் தோனி! டெஸ்ட் போட்டியின் பயிற்சி நேரத்தின் போது சக வீரருடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டு தனது சட்டையை பிடுங்கிக் கொண்டு ஓடும் தோனி.

என்னதான் இருந்தாலும், தலயோட அந்த ஹேர்ஸ்டைல் போல வேற எந்த ஹேர்ஸ்டைலும் வராதுல... தல தலைதான்...!

https://tamil.boldsky.com/

  • தொடங்கியவர்

இரு கால்களும் இல்லாமல், விளையாட்டுத் துறையில் ஜொலித்தவரின் வெற்றிக் கதை! - #MotivationStory

 
 

கதை

`முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?’ - மிகச் சாதாரணமாக ஒரு காலத்தில் நம்மூரில் புழங்கிய பழமொழி இது. கால்கள் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளியால் மரம் ஏற முடியாது... அவனால், விரும்பிய தேனை எடுக்க முடியாது, ருசிக்க முடியாது என்பது இதன் பொருள்.  சரி... நடப்புக் காலத்துக்கு வருவோம். இரண்டு கால்களையும் இழந்த ஒருவரால் தடகள வீரராக முடியுமா? அதாவது, ஆங்கிலத்தில் `Athlete’ என்று சொல்வார்கள். அது சாத்தியமா? சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறது ஜெரால்டு மெட்ரோஸ்-ன் (Gérald Métroz) கதை. 

 

ஸ்விட்சர்லாந்திலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமம் செம்பிராஞ்சர் ( Sembrancher). அந்த கிராமத்தில், 1962-ம் ஆண்டு பிறந்தார் ஜெரால்டு மெட்ரோஸ். வீட்டுக்குப் பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன். ஜெரால்டுக்கு அப்போது இரண்டு வயது. தத்தித் தத்தி நடக்கும் வயது. எதையும் மோதிப் பார்த்துவிடுகிற, அறிந்துகொள்ளத் துடிக்கிற பச்சை மண் பருவம். நெருப்பைத் தொட்டால் சுடும், பனிக்கட்டியைத் தொட்டால் விரல்கள் சில்லிடும்... என அறிந்துகொள்கிற பருவம். ரயிலும் அந்தக் குழந்தைக்கு ஒரு விளையாட்டாகிப் போனது; அதுவே வினையாகவும் ஆனது. வீட்டில் பெற்றோரும் மற்றோரும் கண்டுகொள்ளாத ஒரு தருணத்தில் குழந்தை ஜெரால்டு அருகிலிருக்கும் தண்டவாளத்துக்கு அருகே போனது; சரியாக அதே நேரத்தில் வந்தது ரயில். 

ஜெரால்ட்

Pic Courtesy : GeraldMetroz

தண்டவாளத்துக்கு நடுவே மாட்டிக்கொண்ட குழந்தை ஜெரால்டின் இரண்டு கால்களும் துண்டாகிப்போனது; கிட்டத்தட்ட இடுப்புக்குக் கீழே வெட்டிப்போட்டுவிட்டது ரயில். அதே நேரத்தில், குழந்தையின் உயிருக்கு எதுவும் ஆபத்து நேரவில்லை. ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது ரயில். விபத்தில் சிக்கிய ஜெரால்டை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள். எப்படியோ உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள்; கால்கள் போனது, போனதுதான்.   

கொஞ்சம் வளர்ந்ததும் ஜெரால்டு மரக்கால்களைப் பொருத்திக்கொண்டு நடக்கப் பழகினார். சின்ன வயதிலிருந்தே, தன் சக சிறுவர்களைப்போல் ஆடி, ஓடி விளையாட வேண்டும் என்கிற தீராத ஆர்வம் ஜெரால்டுக்கு. விளையாட்டு... அதன் மேல் அவருக்கு அப்படி ஓர் ஈர்ப்பு, பிரியம், வெறி.. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அளவுக்கு விளையாட்டை நேசித்தார் ஜெரால்டு. கால்கள் இல்லையென்றால், விளையாட முடியாதா என்ன? இந்த எண்ணமே அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. செயலிலும் இறங்கினார். 
அவருடைய பத்தாவது வயதில் தன் செயற்கைக் கால்களுடன் ஹாக்கி விளையாட்டில் ஒரு கோல்கீப்பராகக் களமிறங்கினார். அதேபோல் `வீல்சேர் பேஸ்கெட்பால்’ (Wheelchair basketball) என்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் கலந்துகொண்டு சாதனை படைத்தார். சுவிட்சர்லாந்து அணி வெற்றிபெற முக்கியக் காரணமாகவும் இருந்தார். கடினமான வாழ்க்கையை நிர்வகிக்கப் பழகிக்கொண்டார் ஜெரால்டு. தனக்குக் கால்கள் இல்லை, தான் உடல் ஊனமானவன் என்பதை மறக்கக் கடுமையாக முயற்சி செய்தார். 

பேஸ்ட்கட் பால்

அப்போது ஜெரால்டுக்கு 25 வயது. கனடாவுக்குக் கிளம்பினார்... மன உறுதியோடு. வீல்சேர் டென்னிஸில் (Wheelchair Tennis) விளையாடக் கடுமையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருடைய உழைப்பு வீண் போகவில்லை. நான்கு முறை `சுவிட்சர்லாந்து சாம்பியன்’ பட்டம்; 1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த பாரா ஒலிம்பிக் விளையாடுகளில் விளையாடத் தேர்வு. இரு கால்களையும் இழந்த ஒரு மனிதர் தடகள விளையாட்டுகளில் இவ்வளவு சாதனைகளைப் படைப்பதென்பது அபூர்வம். 

ஜெரால்டு ஒரு வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் மேனேஜராகப் பின்னாளில் வலம்வந்தார். சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். தன் வாழ்க்கையைப் பற்றி அவரே ஒரு புத்தகம் எழுதினார். தான் ஒரு மாற்றுத்திறனாளி என்கிற எண்ணம் அவருக்கு இல்லவே இல்லை. பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்தார். பிரமாதமான உரைகளை நிகழ்த்தினார். 

டென்னிஸ்

தன் உடல் குறைபாட்டை முழுவதுமாக உணர்ந்து, அதை அப்படியே ஏற்றுக்கொண்டும் இருந்தார். அதே நேரம், தடகளத்தில் தன் முத்திரையைப் பதிக்க வேண்டும் என்றும் விரும்பினார். அதை செய்தும் காட்டிவிட்டார். உற்சாகம், ஊக்கம், தன்னம்பிக்கை இருந்துவிட்டால் யாரும், எந்தச் சாதனையையும் புரியலாம் என்பதற்கு ஜெரால்டு மெட்ரோஸின் கதை மிகச் சிறந்த உதாரணம்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தக் கடிகாரத்தில் 12 மணியானால் உலகம் அழிந்துவிடும்… இப்போது அதில் மணி 11:58 #DoomsdayClock

 
 

டைம்பாம்கள் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சினிமாக்களில் 10, 9, 8, 7, 6,.... என எண்கள் தலைகீழாக எண்ணப்படுவதும், அதற்குள் அதைச் செயலிழக்க வைக்க ஹீரோ சாகசங்கள் பல புரிவதும், விறுவிறுப்பாகக் காட்சிகளை நகர்த்தி விடும். மூன்று நிமிடங்கள், இரண்டு நிமிடங்கள் இருக்கும் போதே அதைச் செயலிழக்க வைக்காமல், கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்று, கடைசி பந்தில் சிக்ஸர் தூக்கும் தோனி போல, இறுதியாக ஒரு நொடி இருக்கும்போது மட்டுமே வெடிகுண்டைச் செயலிழக்க வைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு டைம்பாம்தான் இந்த அழிவின் கடிகாரம் எனப்படும் ‘டூம்ஸ்டே கிளாக்’  (Doomsday Clock). என்ன அந்த வெடிகுண்டின் நேரம் முடிந்தால் ஒரு கட்டத்தை தகர்க்கும். இந்த அழிவின் கடிகாரம் 12 மணியைத் தொட்டால், உலகம் முழுவதும் அடுத்த நொடி அழிந்திருக்கும் என எடுத்துக் கொள்ளலாம்.

Doomsday Clock

 

ஆம். அது ஒரு கடிகாரம்தான். என்ன... ‘இருக்கிறது. ஆனால் இல்லை’ ரகத்தைச் சேர்ந்தது, அவ்வளவே! அழிவின் கடிகாரம் என்னும் இது, உண்மையில் ஓர் உருவகம். ஒரு குறியீடாக மட்டுமே பார்க்கப்படும் இது, நமக்குப் பூமியின் அழிவைக் குறித்து எச்சரிக்கை மணி அடிக்கிறது. அணு ஆயுதப் போர், புவி வெப்பமயமாதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித இனம் பாதிப்படைதல் என்ற மூன்று விஷயங்கள் எப்போதெல்லாம் பூதாகரமாகி உலக அரங்கில் தலைப்புச் செய்தியாக, ஒரு விவாதப் பொருளாக இருக்கிறதோ, அப்போதெல்லாம், இதன் முள் நள்ளிரவை நோக்கி மெல்ல மெல்ல நகரத் தொடங்கும். இதை யார் இயக்குகிறார்கள், இதுவரை எத்தனை முறை இதன் முற்கள் நகர்ந்திருக்கின்றன என்றெல்லாம் பார்க்கும் முன், இதன் வரலாற்றைப் பார்த்து விடுவோம்.

யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கப்பட்டது?

1947ம் ஆண்டு. Bulletin of the Atomic Scientists (அணு விஞ்ஞானிகளின் பத்திரிகை) என்ற பத்திரிகையை நடத்தி வந்த விஞ்ஞானிகள், அப்போதைய சோவியத் யூனியன் அணு ஆயுதங்களை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சி நடத்துவதைக் கண்டு அஞ்சினர். ஓர் ஆயுதம் உருவாக்கப்படுவது எதற்கு? எதிரிகளைத் தாக்கத்தானே? அப்படி அணு ஆயுதம் கொண்டு இந்த உலகம் தாக்கப்பட்டால் பேரழிவு ஏற்படுமல்லவா? எனவே, ஆயுதம் உருவாக்கப்பட்ட நாளன்றே நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம், அப்படி ஒரு பேரழிவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதானே? அதையே அவர்களும் முன்மொழிந்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாடும் அணு ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கும் போது அந்த அழிவு நாள் நம்மை மேலும் நெருங்குகிறது என்ற எண்ணம் உருவாகாமல் இல்லை. அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த அழிவின் கடிகாரத்தின் முக்கியப் பணி.

இதை உருவாக்கிய அணு விஞ்ஞானிகள் இந்த அழிவு நாளை நள்ளிரவுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். காரணம், நள்ளிரவு நேரம்தான் பொதுவாக எல்லோருக்கும் பயம் ஏற்படுத்தக் கூடியது. இந்தக் கடிகாரம் என்ற ஒன்று உருவகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே அணு ஆயுதம் என்பது புழக்கத்தில் இருப்பதால், கடிகாரத்தின் நேரமானது எப்போதும் நள்ளிரவிற்கு மிக அருகிலேயே இருக்கிறது. உலக நிகழ்வுகளின் அடிப்படையில், அதன் சிறிய முள் எப்போதும் 11 மணியைத் தாண்டியே நிற்க, நிமிட முள் மட்டும் 12க்கு மிக அருகில் வரை சென்று கபடி ஆடிக் கொண்டே இருக்கின்றது. நிறுவப்பட்டது முதல் இந்த அழிவின் கடிகாரம் எந்தெந்த நேரங்களைக் காட்டியது எனப் படத்தில் காணலாம்.

1947-2018 வரை கடிகாரம் காட்டிய நேரங்கள்

அழிவின் கடிகாரத்தில் தற்போது மணி என்ன?  

1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது, அணு ஆயுதங்கள் குறித்த ஆராய்ச்சியில் சோவியத் யூனியன் இருந்ததால், அப்போது மணி 11:53. அதாவது நள்ளிரவிற்கு இன்னும் 7 நிமிடங்கள். அதன் பிறகு, அவ்வப்போது நடக்கும் முக்கிய அணு ஆயுதப் போர் குறித்த நிகழ்வுகளின் அடிப்படையில், பெரிய முள் மட்டும் இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. 1952ம் ஆண்டின் இறுதியில், அமெரிக்கா, முதன்முதலாக தெர்மோ நியூக்ளியர் கருவியைச் சோதனை செய்ததால், 1953ம் ஆண்டின் தொடக்கத்தில் கிலி ஏற்படுத்தும் விதமாக, கடிகாரம் 11:58 என்று காண்பித்தது. அதாவது நள்ளிரவிற்கு இன்னும் இரண்டே நிமிடங்கள்! 1974ம் ஆண்டு இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்திய போதும், 1965ல் இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் நிகழ்ந்த போதும், இதன் முற்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.Doomsday Clock

2017ம் ஆண்டு ட்ரம்ப் பதவியேற்ற போது, நள்ளிரவிற்கு இன்னமும் இரண்டரை நிமிடங்கள் என்று காண்பித்தது. இதனிடையே, ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர்கள் அணு ஆயுதங்கள் ஏவும் பட்டனை அழுத்திவிடுவேன் என்று மாறி மாறிப் பொறுப்பின்றி பேசி வருவதாலும், அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் புவி வெப்பமயமாகி கொண்டு வருவதாலும், தற்போது, கடிகாரத்தில் கூடுதலாக அரை நிமிடம் குறைந்து மணி 11:58ல் நிற்கிறது. அதாவது, இன்னும் இரண்டு நிமிடத்தில் உலகம் அழியும் என்ற உருவகச் செய்தியை சொல்லி, அது நம்மை எச்சரிக்கை படுத்துகிறது. கிட்டதட்ட, 65 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 2018ம் வருடம்தான், அழிவின் கடிகாரம் 11:58 என்ற அபாயகரமான நேரத்தைக் காண்பித்திருக்கிறது. இது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மிக மோசமான காலகட்டம் என்பதை வெளிப்படையாகவே அந்தக் கடிகாரம் நமக்குக் கூறுகின்றது.

அணு ஆயுத அழிவு மட்டும்தானா?

முதலில் அணு ஆயுதத்தால் ஏற்படப்போகும் அழிவு குறித்து மட்டும் எச்சரிக்கை செய்ய இது நிறுவப்பட்டது. அதாவது அந்தக் கடிகாரத்தின் முள் நகர வேண்டுமென்றால், அதற்கு அணு ஆயுதப் போர் மட்டுமே காரணியாக இருக்க முடியும். ஆனால், பின்னாளில், மேலும் சில வழிகளில் மனிதக் குலத்திற்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதை உணர்ந்தனர். இதனால், 2007ம் ஆண்டு புவி வெப்பமயமாதல், அணுக்கழிவு, மனிதக் குலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அறிவியல் முயற்சிகள் எனக் கூடுதல் அளவுருக்கள் (Parameters) சேர்த்துக் கொள்ளப்பட்டன.  

அணு ஆயுதப் பேரழிவு

உலக அரங்கில் இதற்கு மதிப்பு எப்படி?

‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock) என்ற இந்த 'இருக்கு - இல்லை' கடிகாரம், ஓர் அணு ஆராய்ச்சி பத்திரிகையால் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டாலும், இன்று வரை அதற்கு உலக அளவில் தனி மதிப்பு உண்டு.

“இதைப் பார்க்கும் போது எல்லாம் அணு ஆயுதங்கள் குறித்த பயமும், அது உலகையே அழித்துவிடும் என்ற எண்ணமும் உலகத் தலைவர்கள் அனைவருக்கும் தோன்றுகிறது. இதற்காகவே, பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட அணு ஆயுதங்கள் தவறாக கூட வெடித்து விடக் கூடாது என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர்” என்று பல்வேறு அமைப்புகள் இதை வரவேற்றுள்ளன.

ஒரு சில அமைப்புகள், “இந்தக் கடிகாரம் எப்படிச் செயல்படுகிறது, எதை வைத்து இந்த அணு விஞ்ஞானிகள் முற்களை நகர்த்துகிறார்கள் என்பதே புரியவில்லை. நள்ளிரவிற்கு மிக அருகிலேயே முற்களை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த மனித இனத்தையும் எப்போதும் பயத்திலேயே வைத்திருப்பது எப்படி நன்மை பயக்கும் என்பதே புரியவில்லை” என்று காரசாரமாக எதிர் கருத்து பேசுகின்றன. அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. உங்கள் கருத்து என்னவென்று பதிவு செய்யலாமே?

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்து போலீஸுக்குத் தண்ணி காட்டிய பொம்மைப் புலி... 45 நிமிட காமெடிக் கதை!

 
 

காக்கிச் சட்டை தமிழ்த்திரைப்படங்களில் அடிக்கடி உச்சரிக்கிற வசனம் “ஸ்காட்லாந்து போலீஸுக்கு அடுத்து நாங்கதான்”. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் காவல்துறை ஸ்காட்லாந்து. ஆனால் அவர்களையே கதற வைத்திருக்கிறது ஒரு புலி, இல்லை பொம்மைப் புலி….

24 வயது புரூஸ் க்ரப் ஸ்காட்லாந்தின் அபர்டன்சயர் மாகாணத்தில் பீட்டர்ஹெட் என்கிற பகுதியில் மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறார். அங்குப் பல பசுக்கள் கர்ப்பமாக இருந்தன. அவற்றின் நடவடிக்கைகளைக் கவனிக்க கடந்த 6 தேதி இரவு பண்ணைக்கு வந்தவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. காரணம் பண்ணைக்குப் பக்கத்தில் பெரிய புலி ஒன்று படுத்திருந்தது. 

 

ஸ்காட்லாந்து போலீஸ் புலி

PHOTO CREDIT : UKCOPHUMOUR  

 புலியைப் பார்த்தவருக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. புலி பண்ணைக்குள் புகுந்துவிடுமோ என்கிற பயம் அதிகரிக்க ஸ்காட்லாந்தின் நார்த் ஈஸ்ட் காவல்துறைக்கு போன் செய்துவிட்டார். காவல்துறை புலி என்றதும் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்குக் கிளம்பியது. வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பீட்டர் ஹெட் பரபரப்பாகிறது. துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஆறு கார்களில் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள் போலீஸார். சம்பவ இடத்தைத் துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கிறார்கள். புலி படுத்திருப்பது உறுதிசெய்யப்படுகிறது. 

புலி பொம்மை

PHOTO CREDIT : UKCOPHUMOUR  

புரூஸ் க்ரப்பிடம் விசாரணை நடக்கிறது. பக்கத்தில் இருக்கிற தேசியப் பூங்காவிலிருந்து ஏதேனும் விலங்கு தப்பித்துச் சென்றிருக்கிறதா என விசாரிக்கிறார்கள். சில துப்பாக்கிகள் புலியின் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருக்கின்றன. சுமார் 45 நிமிடங்கள் புலியின் அசைவுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் புலியிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது. புலியின் நடவடிக்கையில் சந்தேகமான காவல்துறை புலியை நெருங்க ஆரம்பிக்கிறார்கள். பதற்றத்தோடு பக்கத்தில் போனவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கே படுத்திருந்தது புலி அல்ல, பொம்மைப் புலி. ஒட்டு மொத்தக் குழுவும் கொலைவெறியோடு புலி என்று போன் செய்த புரூஸ் க்ரப் பக்கம் திரும்புகிறார்கள். புரூஸ் க்ரப் சரக்கடித்திருக்கிறாரா எனச் சோதனை செய்கிறார்கள். ஆனால் அவர் “என் பண்ணையில் 200 பசுக்கள் கர்ப்பமாக இருக்கின்றன. அவை எப்போது வேண்டுமானாலும் குட்டி போடலாம், ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன், இப்படியான சூழ்நிலையில் எப்படிக் குடிக்க முடியும்  எனச் சொல்கிறார். யார் பொம்மைப் புலியை இங்கே கொண்டு வந்து வைத்தது என்கிற கோணத்தில் விசாரித்தார்கள். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 

ஸ்காட்லாந்த்து

PHOTO CREDIT : UKCOPHUMOUR  


இவ்வளவு காவல்துறை அதிகாரிகள் வந்தும் 45 நிமிடங்களுக்குப் பிறகே அது பொம்மை எனக் கண்டுபிடிக்க முடிந்தது. புரூஸ் க்ரப் என்ன செய்வார். அவர் செய்தது சரி எனச் சொல்லிவிட்டு காவல்துறை பொம்மைப் புலியைப் பறிமுதல் செய்து எடுத்துச் செல்கிறார்கள். 
 
அடுத்தநாள் நார்த் ஈஸ்ட் காவல்துறையின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கத்தில் “சம்பவம் நடந்தது உண்மைதான். நல்ல நோக்கத்திற்காகத்தான் அந்தத் தகவல் சொல்லப்பட்டது. கடினமான சூழ்நிலைகளில் மக்களைப் பாதுகாப்பதே எங்களின் பணி, இந்தமாதிரியான சூழ்நிலையையும் நாங்கள் கருத்தில்கொண்டு துரிதமாகச் செயல்படுவோம்” எனப் பதிவிடுகிறார்கள். 

 

புலியைப் பார்த்து பயப்படாமல் இருந்தால் அப்புறம் புலிக்கு என்ன மரியாதை?

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரோஸ் டே, ப்ரபோசல் டே, கலர் கோட்ஸ்... வேலன்டைன்ஸ் டே வெரைட்டி! #ValentinesDay

 
Chennai: 

'ஃபீல் மை லவ்'னு எப்போதும் தனிமையிலேயே லவ்விக்கொண்டிருக்கும் ஒன் சைடு லவ், 'நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்'னு தூங்காம லவ் புராணம் பாடும் புது லவ் ஜோடி, 'போடா போடி'னு ஓயாம சண்டை போட்டுக்கொள்ளும் ஃபைட்டர் ஃபிஷ் லவ் ஜோடி, '60 ஆகிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு. ஆனாலும், லவ் ஜோடிதான்' என என்றும் பதினாறு நினைப்பில் மிதக்கும் வயதான கப்புள், இப்படி லவ் ஜோடிகள்ல பலவிதம் இருக்கு. அனைத்துக் காதல் ஜோடிகளும் ஆரவாரமா கொண்டாடும் 'காதலர் தினம்' வரப்போகுது.  #ValentinesDay

ரோஸ் டே, ப்ரபோசல் டே, கலர் கோட்ஸ் இப்படி ஏகப்பட்ட கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும் காதலர் தினத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் காதலர்களைவிட, குறிப்பிட்ட சில தொழில் முனைவோருக்குதான் டபுள் கொண்டாட்டம். ஃபிளாஷ் மாப், சர்ப்ரைஸ் ப்லான்னர்ஸ், கேண்டில் லைட் டின்னர் என தற்போது ட்ரெண்டாகிக்கொண்டிருக்கும் காதலர் தின ஸ்பெஷல் ஐட்டம்களும் ஏராளம். இப்படிச் செய்வதெல்லாம் என்னவோ இப்பொழுது ரூல்ஸாகவே மாறிவிட்டது. 'எவ்ளோ விலை ஏத்தினாலும், காதலிக்கு பிடிச்சதை வாங்கிக் கொடுக்க நம்மகிட்டதான வரணும்'னு சர்ர்ர்ர்ருனு விலை ஏத்திக் காசு பார்க்கும் பிசினஸ் பட்டியல் இதோ.

 

Valentines Day


பொக்கே:
காதலின் சின்னமாக ரோஜா மலரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத குறை ஒன்றுதான். மற்றபடி காதலர் தினம் என்றாலே ரோஜா மலர்கள் கட்டாயம் இருக்கும். அதிலும் ஒவ்வொரு நிறத்துக்குப் பின்னால் விதவிதமான கதைகளும் உண்டு. சிவப்பு ரோஜா ஆழமான காதலை உணர்த்துவதற்கு, பிங்க் ரோஜா நன்றியைக் கூறுவதற்கு என்று அனைத்து நிற ரோஜாக்களுக்கும் வெவ்வேறு கதைகளைக் கட்டி விற்பனையைச் சூடு பிடிக்க வைத்திருக்கிறார்கள் வியாபாரிகள். 'என்ன பாஸ் நீங்க! உங்க அன்பான காதலிக்கு ஒரு ரோஸ் மட்டும் போதுமா? இந்தாங்க பாஸ் இந்த பொக்கேவைக் கொண்டுபோய் கொடுங்க. அசந்துடுவாங்க அண்ணி'னு தொழிலாளியின் சர்க்கரை சொற்களில் மயங்கி கை நிறைய பூங்கொத்தை வாங்கிக்கொண்டு போவான் காதலன். அதுசரி, மலருக்கு மயங்காத பெண்கள் இருக்கலாம். ஆனால், இதனால் லாபம் ஈட்டாத வியாபாரிகள் இல்லை.

Roses


கார்ட்ஸ் :
புறாக்கள் மூலம் காதலைத் தெரிவித்த காலம் முதல் வாட்ஸ்அப்பில் GIF படங்களை அனுப்பிக் காதலை வெளிப்படுத்தும் காலம் வரை, காதலை நேரில் சொல்லத் தயங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்படிப்பட்டவர்களுக்காகவே 'நாங்க இருக்கோம்'னு கைகளைக் கூப்பி கூப்பிடுகிறது 'கிரீட்டிங் கார்ட்ஸ்'. லவ் ப்ரபோசல் கார்ட், மெகா சைஸ் கார்ட், மியூசிக் கார்ட், பாப் அப் கார்ட்ஸ் என்று ஏராளமான டிசைன்களில் கிரீட்டிங் கார்ட்ஸ் சந்தையில் கொட்டிக்கிடக்கிறது. e - cards போல நவீன ரக கார்டுகள் வந்தாலும், நம் கைப்பட எழுதிக் கொடுக்கும் கார்டுக்கு என்னிக்குமே தனி ரெஸ்பான்ஸ்தான். இதனால் தொழில்முனைவோர்களின் ரெஸ்பான்ஸும் ஆஹா ரகம். கூலான ரொமான்டிக் வரிகளுடன் சமகால வடிவமைப்புகளில் அன்பைப் பொழிய வைக்கும் கிரீட்டிங் கார்ட்ஸ் வாழும் காலம் பிப்ரவரி.

Greeting Cards


கேக்ஸ், சாக்லேட்ஸ் :
பிறந்தநாள், திருமண நாள், பதவி உயர்வுன்னு தொட்டதுக்கெல்லாம் கேக் சாக்லேட்னு மேற்கத்திய வழக்கங்களைத் தீவிரமாகப் பின்பற்றி வரும் நாம், காதலர் தினத்தை மட்டும் விட்டுவைப்போமா? இதற்கும் கேக், சாக்லேட்ஸ் என்று பட்ஜெட் நீளும். அதிலும் ஐசிங் கேக், லேயர் கேக், சீஸ் கேக்னு ஏகப்பட்ட வெரைட்டி. காதலியை இம்ப்ரஸ் பண்ண நம்ம பையனும் 'அண்ணே! இங்க இருக்கிறதுலயே பெஸ்ட் கேக் வேணும். எவ்ளோ காஸ்ட்லியா இருந்தாலும் பரவாயில்ல' எனக் காதல் வேகத்தில் சொல்ல, அதே வேகத்தில் விலையும் ஏறும். 'சோ ஸ்வீட்! சோ க்யூட்!'னு நாலு வார்த்தைக்காக நாலாயிரம் ரூபாய் தொலைந்த கதை.

Cakes and Chocolates


டெடி பியர் :
7 இல்லை 70 கழுதை வயசானாலும் இந்த டெடி பியரை கட்டிப்பிடிச்சுத் தூங்கும் பழக்கம் பெண்களை விட்டுப் போகிற வரைக்கும் டெடி பியர் வியாபாரம் பிச்சிக்கும். அதுலயும் விதவிதமான சைஸ், மெட்டிரியல், கலர்ஸ்ன்னு எத்தனை வெரைட்டிஸ்னு யாராலும் சொல்லவே முடியாத அளவுக்குக் குவிந்துள்ளன. காதலியை மகிழ்விக்க காதலன் எடுக்கும் முயற்சிதான் எத்தனை. கடைகடையாய் ஏறி இறங்கி, இறுதியில் 'காதலர் தினத்துக்குனு ஸ்பெஷலா இறக்குமதியான டெடி பியர் சார்'னு சொன்ன அடுத்த நொடி பில்லிங் செக்‌ஷன்ல பக்கா பாக்கிங்ல உட்கார்ந்திருக்கும், காதலியின் உயரம் அளவு நீண்டிருக்கும் டெடி பியர்.

Teddy Bear


ரெட் டிரஸ் :
விண்டோ ஷாப்பிங்னு நெனச்சுட்டுப் போனாலே கை நிறைய பேக்குடன் வீடு திரும்பும் பெண்களுக்கு, 'காதலனை வசீகரிக்க ஸ்பெஷல் டிரஸ் டிஸ்கவுன்ட்டில்' என்ற விளம்பர அறிவிப்பைப் பார்த்தால் சும்மா விடுவார்களா. புடவையிலிருந்து மேற்கத்திய பால் டிரஸ் வரை அனைத்திலும் சிவப்பு மற்றும் பிங்க் நிறங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் உடைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும் மாதம் இது.

Red Dress

இதுவே காதலர் தினத்தின் சிறந்த உடையென நம் மனதில் பதித்து விடுகிறார்கள் வியாபாரிகள். நாமும் சற்றும் யோசிக்காமல் பட்டென்று இரண்டு டிரெஸ் பார்சல் செய்துவிடுகிறோம். ஆடைகளின் மீது உள்ள ஆசையோ... காதலனைக் கவர்வதற்காக முயற்சியோ! ஆக மொத்தத்தில் இதனால் கடைக்காரர்களுக்கு இல்லை வீழ்ச்சி!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

ஜித்-சிறுத்தை சிவா இணையும் `விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங்கை பிப்ரவரி கடைசிக்குத் தள்ளிவைத்திருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க வடசென்னைப் பின்னணியில் இருக்கப்போகிறதாம். படத்துக்கு யுவன்தான் இசை என்று சொல்லப்பட்டதில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். அனிருத் அல்லது சாம் சி.எஸ் இசையமைக்கலாம்! ட்யூன் மாறுது!

p36a_1517900538.jpg


பிரமாதமான கதைகளாகப் பார்த்துப் பார்த்து நடித்துக்கொண்டிருக்கிறார் அக்‌ஷய்குமார். சானிடரி நாப்கின்களில் புரட்சி செய்த அருணாச்சலம் முருகானந்தத்தின் கதையைச் சொல்லும்  `பேட்மேன்’ படம் வெளியாகும் நிலையில், அடுத்து அவர் நடிக்கும் படம் `கோல்ட்.’ இது 1948-ல் இந்தியா முதன்முதலாக ஒலிம்பிக்கில் ஒரு சுதந்திர நாடாகத் தங்கம் வென்ற கதையைச் சொல்லும் படமாம்! படத்தை இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். சூப்பர் அக்‌ஷய்!


டிப்பிலிருந்து ஒரு குட்டி ப்ரேக் எடுத்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவருக்கும் மைக்கேல் கோர்சேல் என்பவருக்கும் காதல் என்று ஊரெல்லாம் கிசுகிசுக்க... ‘`என்னோட கல்யாணத்தை எனக்காக நீங்க யாரும் ப்ளான் பண்ணாதீங்க... இப்போதைக்கு எனக்கு அந்த ஐடியா இல்லை’’ என அப்பாவைப்போலவே பளிச் என பதில் சொல்லியிருக்கிறார். இப்படி நடிகையாக உச்சத்தில் இருக்கிற காலத்தில் இந்த ஓய்வு அவசியமா என்கிற கேள்விக்கு ‘`எனக்கு சின்ன ஓய்வு தேவை, என்னுடைய வாழ்க்கையை மறு ஒருங்கிணைப்பு செய்ய. இப்போ ஓய்வு முடிஞ்சது. சீக்கிரமே எனக்குப் பிடிச்ச வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பேன்’’ என்கிறார் ஸ்ருதி. பிரேக் எடு... கொண்டாடு!

p36b_1517900549.jpg


தான் விளையாடிய 50 போட்டிகளிலும் தோல்வியே கண்டிராதவர் குத்துச்சண்டை வீரர் ஃப்ளாய்ட் மேவெதர். சென்ற ஆண்டு யுஎஃப்சி சாம்பியன் கோனர் மெக்ரிகோரை வென்றபிறகு குத்துச்சண்டைப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இப்போது MMA என்கிற கலப்பு தற்காப்புக்கலைப் போட்டிகளின் வழி மீண்டும் சண்டைகளுக்குத் திரும்ப இருப்பதாக அறிவித்திருக்கிறார்! இந்த முறை வேறு ரிங்... வேறு மாதிரியான சண்டை இருக்கும். இருந்தாலும் இங்கும் மேவெதர் வெளுத்துக்கட்டுவார் என்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். வா ராஜா வா!

p36c_1517900567.jpg


மலஹாசனின் இந்தியன்-2 படத்தின் `மாயா மச்சிந்த்ரா’ நயன்தாராதான். முதல்முறையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேர்வதில் செம சந்தோஷத்தில் இருக்கிறார் நயன்தாரா.


துப்பறிவாளராக நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. ‘குற்றப்பயிற்சி’ என்கிற படத்தில் ப்ரைவேட் டிடெக்டிவ்வாக நடிக்கிறார் த்ரிஷ். இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளரான ரஜனி பண்டிட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது த்ரிஷாவின் கேரக்டர். படத்தை இயக்கவிருப்பவர் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த வெர்னிக். த்ரிஷா டிஷ்யூம்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

தென்கொரியாவில் துவங்கியது குளிர்கால ஒலிம்பிக்

பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கிடையே பிரமாண்டமான முறையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தென்கொரியாவில் தொடங்கியது..

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: பெப்ரவரி 10
 

1258: பாக்தாத் நகரம் மொங்கோலியர்களிடம் வீழ்ச்சியடைந்தது.

1763: பாரிஸ் உடன்படிக்கையின் மூலம், கனடாவின் கியூபெக் பிராந்தியத்தை இங்கிலாந்துக்கு பிரான்ஸ் விட்டுக்கொடுத்து.

1840: பிரிட்டனின் விக்டோரியா மகாhணியார் இளவரசர் அல்பர்ட்டை திருமணம் செய்தார்.

1846: இந்தியாவில் முதலாவது ஆங்கில சீக்கிய யுத்தம் நடைபெற்றது. ஆங்கிலேயேர் வெற்றி பெற்றனர்.

1870: நியூயோர்க்கில் வை.எம்.சி.ஏ. அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1952: இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.

1962: சோவியத் யூனியனினால் கைது செய்யப்பட்ட அமெரிக்க உளவு விமான விமானியும்; அமெரிக்காவினால் கைது செய்யப்பட்ட சோவியத் உளவாளி ருடோல்வ் ஆபெல்லும் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.

1996:  கெரி கஸ்பரோவை ஐ.பி.எம். டீப் புள10 கணினி முதல் தடவையாக செஸ் போட்டியில் தோற்கடித்தது.

2005: பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸும் கமீலா பார்க்கரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பிரித்தானிய அரசகுடும்பம் அறிவித்தது.

2009: ரஷ்யாவின் கொஸ்மோஸ் 2251 செய்மதியும் அமெரிக்காவின் இரிடியம் 33 செய்மதியும் விண்வெளியில் தற்செயலாக மோதி சிதறின.

http://www.tamilmirror.lk/

 

 

 

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/ameerfaj

`நியூஸ்’ஐப் பார்த்து நியூஸ் தெரிஞ்சுகிட்ட காலம் போய் இப்ப `மீம்ஸ்'ஐப் பார்த்து நியூஸ் தெரிஞ்சுக்கிறோம்!

facebook.com/Balaganesh Kandasamy

இங்க இருக்க எல்லோருமே ரைட்டர், ரீடர், எக்கனாமிஸ்ட், ஆக்டிவிஸ்ட், மூவி ரிவ்யூவர், மியூசிக் அட்மிரர், சோசியாலஜிஸ்ட், சோசியல் ஜஸ்டிஸ் மெயின்டெய்னர், நியூமராலஜிஸ்ட், அண்டர் டேக்கர் அப்டின்னு நிமிஷத்துக்கு ஒரு ரோல் பண்ணிட்டு பாவம் அந்த ராம சுப்பிரமணியனை மட்டும் ஏன் சும்மா அடிக்கறீங்க அப்டின்னு நான் கேக்கலைங்க.... அய்யாச்சாமி கேட்டிங்!!

twitter.com/taraoffcl

மனைவிகளுக்கும் மனிதாபிமானம் உண்டு... சமையலறையில் கத்திகள் இருந்தும் பூரிக்கட்டைகளையே எடுக்கிறார்கள்.

twitter.com/HAJAMYDEENNKS

ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாம் இப்ப வாட்ஸ்அப் குரூப்லதான் ஒற்றுமையா இருக்காங்க!

p102a_1517997668.jpg

twitter.com/Aruns212

என் பிரண்டு ஸ்விட்ச் ஆஃப் ஆன போன்ல பேசிட்டு இருக்கானே, என்னடானு  பார்த்தால், போன் பேட்டரி குறையாம இருக்க பிரைட்னஸ் 0% வெச்சிருக்கானாம் #அடேய்

twitter.com/thoatta

அமைக்கப்படும், எடுக்கப்படும், கொடுக்கப்படும், மேற்கொள்ளப்படும்.. யப்பா டேய் எத்தனை `படும்'டா, ஏற்கெனவே 4 வருசமா ரொம்பவே பட்டுக்கிட்டுதான் இருக்கோம் #budget2018

facebook.com/Vignesh T

ஞாயிறு கமகமக்குது. மற்ற நாள்களின் மதியங்கள் மண்டை வழியாகவும் ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டும் மூக்கு வழியாகவும் உணரப்படுகிறது.

twitter.com/Thaadikkaran

நண்பன் ரொம்ப நாள் கழிச்சு கால் பண்ணும்போது ``என்னடா விசேஷமா?’’ எனக் கேட்பது  அனிச்சைச்  செயலாகி விட்டது!

twitter.com/Aruns212

திங்கள்கிழமை கிடைக்கும் சில அற்ப சந்தோஷங்களில் ஒன்று, முந்தைய நாள் சிக்கன் குழம்பு, இன்றைய காலை தோசைக்குக் கிடைப்பது!

p102b_1517997683.jpg

twitter.com/Piramachari

உங்கள் அம்மா பேச்சை இன்னமும் நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் நீங்கள்தான் #ராகுல்

உங்கள் அப்பா பேச்சை இன்னமும் நீங்கள் மீறிக்கொண்டிருந்தால் நீங்கள்தான் #அகிலேஷ்

யார் பேச்சையும் கேட்கவில்லை என்றால் நீங்கள்தான் #மோடி.

யாரும் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் நீங்கள் #ஓபிஎஸ், எடப்பாடி

twitter.com/mufthimohamed1

மிக்ஸியின் மறுபெயர் அலாரம்!

twitter.com/amuduarattai

மளிகைக் கடைக்காரரிடம், காசு கொடுத்துக் கறிவேப்பிலை வாங்கும்போதே, நமக்கும் கடைக்காரருக்குமான அந்நியோன்யம் குறைந்துபோனது.

twitter.com/Kozhiyaar

முடி மறைத்த தலையை இப்பொழுது மூடி மறைக்க வேண்டியுள்ளது! #முடி உதிர்வு

twitter.com/madurai_jinna

``அப்பா சட்டையை மாட்டினால்., வெளியே கிளம்புகிறார் என்று அர்த்தம்’’ என்பதே இறைவன் குழந்தைக்குச் சொல்லித் தரும் முதல் பாடம்! #மகளதிகாரம்

p102c_1517997699.jpg

twitter.com/yugarajesh2

மேட்சுக்கு முன்னாடி பிட்ச் ரிப்போர்ட் சொல்லுறதும், மேரேஜுக்கு முன்னாடி பொண்ணைப் பத்திச் சொல்லுறதும் ஒண்ணுதான் #எப்போதும் ரெண்டுமே சொன்ன மாதிரி இருக்கப்போறது இல்லை.

twitter.com/VKtwitz_Vicky

வங்கியில் செல்போன் உபயோகிக்காதீர் என்ற வாசகம் வாடிக்கையாளருக்கு மட்டும்தான்போல!

twitter.com/aysha_yusuff

நாக்கு ரொம்பக் கொழுத்துப் போயிடுச்சி... டூத் பேஸ்ட்லகூட உப்பு, காரம் இருந்தாதான் பல்லு விளக்கவே தோணுது!

twitter.com/sendil__

வயது முதிர்வதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் , பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை!

twitter.com/urs_priya

குழந்தையா இருந்தப்ப தட்டித் தட்டித் தூங்கவெக்க ரொம்பக் கஷ்டப்படறோம்... வளர்ந்தப்புறம் தட்டித் தட்டி இவங்களை எழுப்பறதுக்குள்ள... உஸ்ஸ்...மிடில!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

``தேசியக் கொடியை நன்றாகப் பிடியுங்கள்!`` - இந்திய ரசிகையை நெகிழவைத்த அஃப்ரிடி

 
 

கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் சேவாக், அப்ரிடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்ற டி20 போட்டி சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நேற்று நடைபெற்றது. 

afiridi_14045.jpg

 

இதில் சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணியை ஷாகித் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. பிரபல வீரர்கள் விளையாடுவதால் போட்டியைக் காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வந்திருந்தனர். போட்டி முடிந்ததும், அப்ரிடி அருகிலிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தார். அப்போது, இந்திய ரசிகை ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினார். உடனே கையில் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியை மடக்கிவைத்து செல்ஃபி எடுக்கத் தொடங்கினார்.

இதைக்கண்ட அவர் தேசியக்கொடியை நன்றாகப் பிடியுங்கள் என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் அப்ரிடியின் இந்த நடவடிக்கையைக் கண்டு வியந்தனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இந்திய தேசியக்கொடிக்கு மரியாதை கொடுத்ததற்காக அப்ரிடிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் உலகில் பரமவைரிகளாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் கருதப்பட்டாலும், இருநாட்டு வீரர்களும் தங்களுக்குள் பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொள்வதும், மரியாதை செய்துகொள்ளும் நிகழ்வும் அவ்வப்போது நடப்பதுண்டு.

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலகின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த சுவாரயஸ்மான தகவல்கள் குறித்த சிறப்பு தொகுப்பு

  • தொடங்கியவர்

காதல் செய்வோம்: 40 நாடுகளில் ஒரு காதல் சுற்றுலா!

 

 
collage-2018-02-09jpg

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதற்கு ஓர் உதாரணமாகியிருக்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த ஷ்யாம் - அன்யா தம்பதி. ஷ்யாம் இந்தியர்; அன்யா உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். காதலர்களான இவர்கள் தம்பதியான பிறகு எல்லோரையும்போல் வீடு, வேலை என்று டெல்லியில் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். விடுமுறை நாட்களில் பல நாடுகளுக்குப் பயணம் சென்றாலும், பணி நிமித்தமாக மீண்டும் அவர்கள் டெல்லிக்குத்தான் வந்தார்கள். ஆனால், அவர்கள் மனம் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான வாழ்க்கையை விரும்பவில்லை.

விளைவு, இருவரும் உலகம் முழுவதும் 40 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்தார்கள். ஆனால், அவர்களின் முந்தைய பயணத்துக்கும் இந்த லட்சியப் பயணத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அவர்கள் செல்லும் நாடுகளைச் சுற்றிப் பார்த்த பின்னர், அங்கிருக்கும் நினைவுச் சின்னம், பிரபலமான இடத்தில் முத்தமிட்டபடியே ஒளிப்படம் எடுத்துக்கொள்வது என முடிவெடுத்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று ஷ்யாம் - அன்யா தம்பதியின் லட்சியப் பயணம் டெல்லியிலிருந்து தொடங்கியது. பாஸ்போர்ட்களின் பின்னணியில் முத்தமிட்டுக் கொள்ளும் ஒளிப்படத்துடன் பயணத்தைத் தொடங்கினர். அங்கிருந்து சிங்கப்பூர், இந்தோனேசியா, ஜப்பான், சீனா, மங்கோலியா என்று உலகை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். தற்போது வியட்நாமில் இருக்கிறார்கள். புதிய இடங்களுக்குச் செல்ல வேண்டும், உலகின் வெவ்வேறு இன மக்களுடன் பழக வேண்டும், தரமான உணவைச் சாப்பிட வேண்டும், ஒரே இடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடக் கூடாது என்பது மட்டுமே இந்தத் தம்பதியின் தாரக மந்திரமாக இருந்தது.

40 நாடுகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் டெல்லிக்குத்தான் திரும்ப வேண்டும் என்றாலும், இந்த லட்சியப் பயணம் அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அத்தியாயமாக அமையும் என்பது நிச்சயம். உலகப் பிரசித்தி பெற்ற இடங்களில் முத்தமிட்டுக்கொள்வது இந்தத் தம்பதிக்குச் சாதாரணமாக இருந்தாலும், அங்கிருக்கும் மத நம்பிக்கை, மக்களை எந்த வகையிலும் மனதளவில் புண்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சென்ற இடங்களில் இவர்களுக்குச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

உதாரணமாக, சிங்கப்பூர் என்றாலே சிங்கத்தின் தலையில் இருந்து கொட்டும் தண்ணீர் வரும் இடம்தான் ஞாபகத்துக்கு வரும். அங்கு நின்றுகொண்டு துரியன் பழத்தை கையில் ஏந்தியபடி இந்த ஜோடி முத்தமிட்டுக்கொண்டது. மருத்துவக் குணம் கொண்ட துரியன் பழம், மிகவும் வாடை வீசும். ஆனால், சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் 500 டாலர் அபராதம் விதிக்கப்படும். எனவே, அங்கிருக்கும் ஒரு பழக்கடையில் துரியன் பழத்தை வாங்கிய இந்த ஜோடி, அதனை மிகவும் கவனமாக பாலித்தீன் பையில் போட்டு லட்சிய ஒளிப்படத்தை எடுத்துக்கொண்டது.

பழமையும் புதுமையும் இரண்டறக் கலந்த ஷாங்காய் நகரில் ஒரு வானுயர்ந்த கட்டடத்தின் மீது அமர்ந்திருந்தபோது, கண்கள் முன்பாக தெரிந்த காட்சியை ஒரு பாரம்பரிய விசிறியில் ஓவியமாக வரைந்தது ஷ்யாம் - அன்யா தம்பதி. பின்னர், அதே இடத்தில் நின்றுகொண்டு அந்த விசிறிக்கு பின்பாக முத்தமிட்டுக் கொண்டு தங்கள் நினைவுகளைப் பத்திரப்படுத்தினர்.

இதேபோல் டோக்கியோவில் ஷிபுயா, மங்கோலியாவில் கோபி பாலைவனம் எனப் பல இடங்களில் முத்த ஒளிப்படங்களை எடுத்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் இவர்கள் உலகப் பயணத்தை நிறைவு செய்யப்போகிறார்கள். அதுவரை உலகின் ஒவ்வொரு நாட்டிலும் முத்தமிடப்படி தங்கள் நினைவுகளை இவர்கள் ஒளிப்படமாகத் சுட்டுத்தள்ளவும் போகிறார்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
இதுதான் விதியா?
 

image_8ea66e58ea.jpgவிதி என்ற சொற்பதத்தில் பல்வேறுபட்ட விளக்கங்களைப்  பலரும் கூறுகிறார்கள். ஒருவருக்கு அதிர்ஷ்டம் வந்தால் அது அவர் விதி என்பார்கள். அதேபோல் ஒருவருக்கு எதிர்பாராத இழப்புகள் வந்தாலும் விதி என்று சொல்லிவிடுவார்கள்.

ஆனால், சுயவிதி என்றும் ஒரு விதியை மனிதன் ஏற்படுத்துகிறான்.பெரு முயற்சி செய்து, தன்னை உயர்த்துவதும், எதுவுமே செய்யாமல் சோம்பலால் ஏற்படும் துன்பங்களும் மனிதன் தன்னாலேயே ஏற்படுத்தும் சுயவிதிதான்.

கெட்ட செயல்களைச் செய்து, அதன் விளைவுகளை அனுபவிக்கும்போது,“எனது விதியைப் பார்த்தீர்களா” எனப் புலம்பும் பேர்வழிகளின் போக்கு நியாயமானதா?ஆனால் எமது வாழ்வில் ஏற்படும் நல்லவைகள் கெட்டவைகளின் முழுக்காரணம் எதுவெனப் புரிவதில்லை. இதுதான் விதியா?

  • தொடங்கியவர்

லண்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் (பிப்.11 1826)

 
அ-அ+

லண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1,30,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது 1826-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1809 -ராபர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்றார். 1814 - நார்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது. 1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது. 1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம்

 
 
லண்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் (பிப்.11 1826)
 

லண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1,30,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது 1826-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1809 -ராபர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்றார். 1814 - நார்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.

1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.

1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.

1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

1929 - இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.

1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.

1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.

1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1964 - சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.

1964 - சீனக் குடியரசு (தைவான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.

1968 - இஸ்ரேல்- ஜோர்டான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது. 1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.

1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.

1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.

1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.

1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005 - ஜெர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

2008 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

 

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

சீன காவல்துறையின் 'பிக்பாஸ்' கண்ணாடி... ஓட முடியாது ஒளியவும் முடியாது!

 

தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது என்பது காவல்துறையினருக்கு சற்று சிக்கலான வேலைதான். பேருக்குத்தான் தலைமறைவே தவிர வெளியே ஜாலியாக ஷாப்பிங் போய்விட்டு ஊர் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எடுத்துக்காட்டுக்கு இங்கே ஒருவர் ஏதாவது ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டு வெளிமாநிலத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டால் அந்த மாநில காவல்துறையினருக்குத் தெரியவா போகிறது என்ற தைரியத்தில் வெளியில் சுற்றிக்கொண்டிருப்பர். இந்த மாநில காவல்துறை அந்த மாநில காவல்துறையினருக்கு தகவல் சொல்லி விசாரிக்க ஆரம்பிக்கும் போது குற்றவாளி அந்த இடத்தைக் காலி பண்ணி ஒரு வாரம் ஆகியிருக்கும்.

குற்றவாளி

 

இப்படி ஒரு பெரிய மக்கள்தொகை கொண்ட இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் ஒருவரின் முகத்தை அடையாளம் காண்பது என்பது சற்று கடினம்தான். அதிலும் குற்றவாளிகள் அடிக்கடி தோற்றத்தை மாற்றிக்கொண்டு இருக்கும் பொழுது இன்னும் சிரமமான விஷயம், கண்ணுக்கு முன்னால் நடந்து போனால் கூட காவல்துறையினரால் கண்டுபிடிக்கமுடியாது. இது போன்ற  சமயங்களில் கை கொடுப்பது நவீனத் தொழில்நுட்பம்தான். அதற்காக சீன காவல்துறை தற்பொழுது அறிமுகப்படுத்தியிருப்பது ஸ்மார்ட் கண்ணாடிகள்.

இந்தக் கண்ணில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது

CCTV கேமரா கண்காணிப்பு

பாதுகாப்பிற்காக நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சீனாவை மிஞ்ச வேறு ஆட்கள் கிடையாது. உலகத்திலேயே அதிகம் CCTV கேமரா கண்காணிப்பை கொண்ட நாடு சீனாதான். கிட்டதட்ட 170 மில்லியன் கேமராக்களைப் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்துகிறது.  சமீப காலமாக பாதுகாப்பை அதிகரிக்க CCTV கேமராக்களில் facial recognition என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் படம்பிடிக்கும் பொதுமக்களின் முக அமைப்பை உணர்ந்து அவற்றை ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களோடு ஆராயும். இந்த மொத்த செயல்பாடும் நொடிகளுக்குள் நடைபெற்றுவிடும். யாராவது சந்தேகப்படும்படியான நபர்கள் தென்பட்டால் எச்சரிக்கை செய்யும். CCTV கேமராவைப் பயன்படுத்தி மக்களை கண்காணிப்பது நல்ல முறைதான் என்றாலும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. CCTV கேமராவால் இடம் விட்டு இடம் நகர்வது சாத்தியமில்லை என்பதால் எல்லா பரப்பையும் கண்காணிக்க முடியாது.

காவல்துறையின் ஸ்மார்ட் கண்ணாடி

அதற்குத் தீர்வாக, ஒவ்வொருவரும் அணிந்துகொள்ளும் வகையிலான ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது சீன காவல்துறை. இதை எந்த இடத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். இதைப் பயன்படுத்துவதால் ஒருவருக்கு எந்த வித சிரமமும் ஏற்படுவதில்லை. சாதாரண மூக்குக் கண்ணாடி போலவே அணிந்து கொள்கிறர்கள். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளிலும் facial recognition என்ற தொழில்நுட்பம் இருக்கிறது. பீஜிங்கைச் சேர்ந்த LLVision Technology என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்தக் கண்ணாடியின் மூலமாக தற்பொழுது ஒரு லட்சம் மனிதர்களின் முகங்களை அடையாளம் காணமுடியும். அதுவும் ஒருவரின் முகத்தை ஆராய்வதற்கு வெறும் நூறு மில்லி செகண்ட்களே நேரம் எடுத்துக்கொள்கிறது.

 

ஹெனான் மாகாணத்தின் ஷெங்ஸோ நகரின் ரயில் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்மார்ட் கண்ணாடி வழங்கப்பட்டிக்கிறது. இதன் மூலம் ஏழு முக்கிய குற்றவாளிகளை இதன் மூலமாக கண்டுபிடித்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருமே காவல் துறையால் தேடப்பட்டு வந்தவர்கள். இது தவிர போலியான அடையாள அட்டையை பயன்படுத்திய 26 பேரும் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் சீனா சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவுத்திறன் மற்றும் மேம்பட்ட கண்காணிப்புக் கருவிகளை அதிகமாக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. 2020-ம் ஆண்டில் சீனாவில் இருக்கும் CCTV கேமராக்களின் எண்ணிக்கை 600 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

“என் வாழ்வின் மோசமான நாள்கள்!” மேரி க்யூரி பற்றி நமக்குத் தெரியாதவை #WomenInScienceDay #RememberingMarieCurie

 
 

பிப்ரவரி 11, அறிவியல் துறையில் இருக்கும் பெண்களுக்கான நாள். பெண்கள் அறிவியல் துறையில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டதே இந்த நாள். இன்று, நாம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான நபர், மேரி க்யூரி. முதல் நோபல் பரிசு வாங்கிய பெண், முதல்முறையாக இயற்பியல் மற்றும் வேதியியல் என இரண்டு துறைகளில் நோபல் பரிசு வென்றவர். கதிர்வீச்சுத் துறையில் இவருடை பணி மகத்தானது எனச் சிறு வயதில் படித்தவையெல்லாம் அறிவியல் அறிஞர் குறிப்பில் இருப்பவை. அவற்றையெல்லாம் தாண்டி, மேரி க்யூரியைப் பற்றி அறியவேண்டிய விஷயங்கள் எண்ணற்றவை.

மேரி க்யூரி

 

1867-ம் ஆண்டு அரசியல் கொதிப்பில் இருந்த போலாந்தில் பிறந்தவர், மரியா ஸ்கௌடவ்ஸ்கி என்கிற மேரி. போலந்து அப்போது ரஷ்ய அரசின் கீழ் இருந்தது. போலந்து பற்றாளரான தந்தையால், ரஷ்ய உயர் அதிகாரிகளிடம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அது நிறையப் பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டிருந்தது. ஆனால், மேரியை உருக்குலைத்தது அந்தப் பொருளாதார நெருக்கடிகள் அல்ல; 11 வயதில் தாய் மற்றும் மூத்த சகோதரியின் மறைவுதான். 

15 வயதில் பள்ளிப் படிப்பை கோல்டு மெடலுடன் முடித்திருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் பெண்கள் நேரடியாகக் கல்லூரிகளில் சென்று கல்வி கற்க தடை இருந்தது. எனவே, தன் மற்றொரு சகோதரியுடன் போலந்து இளைஞர்களுக்காக, குறிப்பாகப் பெண்களுக்காகவே தலைமறைவாகச் செயல்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தார்கள். ஒருவருக்கொருவர் கல்விக்கு உதவுவதாக ஒப்பந்தமும் போட்டுக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒரு வீட்டிலும் நிறுவனத்திலும் டியூஷன் எடுத்தார் மேரி. 

டியூஷன் எடுக்கப்போன இடத்தில் மேரிக்கு காதல் மலர்ந்தது. ஆனால், அவர்களுக்கு இடையில் இருந்த ‘வகுப்பு’ பிரித்தது. இருவரும் மோசமான வலியை அனுபவித்தார்கள். “இவை தான் வாழ்வின் மோசமான நாள்கள்” என்று தான் எழுதிய கடிதங்களில் விவரித்திருந்தார். மேரியின் காதலர் கேசிமிர் சுராவ்ஸ்கி, பின்னாளில் உலகம் அறிந்த கணித அறிஞரானார். பல காலம் வார்சாவில் இருக்கும் மேரி க்யூரியின் சிலையின் அருகே வெறித்தப் பார்வையுடன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.   

பாரிஸில் கணவருடன் வசித்துவந்த சகோதரி எவ்வளவு அழைத்தும் போகாமல், இரண்டு வருடம் வேலை பார்த்து, படிப்பு செலவுக்கான பணத்தைச் சம்பாதித்த பின்னரே, பாரிஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். ஒரு வழியாக 27 வயதில் அறிவியல் அறிஞராக வேலை பார்க்கத் தொடங்கினார். அப்போது, நண்பர் ஒருவரால் அறிமுகமானார், பியேர் க்யூரி. முதலில் ஆராய்ச்சிகூடத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆரம்பத்தில், பியேரின் காதலை மேரி ஏற்கவில்லை. போலந்துக்கே திரும்பிவிட வேண்டும் என்பதுதான் மேரியின் எண்ணமாக இருந்தது. ஆனால், போலந்துக்குத் திரும்பமுடியவில்லை. ஒருவழியாக 1895-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். தன்னுடைய திருமண உடையையே பல காலமாக ஆராய்ச்சிகூட உடையாக மேரி அணிந்திருந்தர்.

மேரி க்யூரி - பியேர் க்யூரி

பியேர் க்யூரிக்கும் மேரி க்யூரிக்கும் குழந்தைப் பிறந்தது. இருவரும் கதிர்வீச்சுக் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவந்தார்கள். கதிர்வீச்சு ஆபத்தானது என்பதை அறிந்திராத அந்தக் காலத்தில், இருவரும் எந்த பாதுகாப்பும் இல்லாமலேயே பணியைத் தொடர்ந்தார்கள். அவர்களுடைய கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் வெளியிட்டார்கள். தன் சொந்த நலனையோ, பணத்தையோ முக்கியமானதாகக் கருதவில்லை. 

மேரி க்யூரி“கனிமங்களில் மிகக்குறைந்த அளவிலேயே ரேடியம் கிடைப்பதால், அது மிகவும் விலை உயர்ந்தது. அதிலிருந்து தீர்க்கக்கூடிய வியாதிகள் அதிகம் என்பதால், அதனை உருவாக்குவதில் இருக்கும் லாபம் அதிகம். எனவே, எங்களுடைய கண்டுபிடிப்பை வெளியிடுவதன் மூலம், எங்களுக்குப் பிறகு எங்களுடைய குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான பணத்தை இழக்கிறோம். இன்னும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவருடைய வாதத்தின்படி, எங்கள் கண்டுபிடிப்புக்கான உரிமையை பெற்றிருந்தால், ரேடியத்துக்கான தனியான நிறுவனத்தை உருவாக்கி நிறைய ஆராய்ச்சி செய்திருக்க முடியும். இப்போது அனுபவிக்கும் பல சிக்கல்களை அனுபவிக்காமல் இருந்திருப்போம். ஆனால், இன்னும் நான் என்ன செய்திருக்கிறேனோ அதனைச் சரி என்று நினைக்கிறேன்” என்று 1921-ம் ஆண்டு குறிப்பிடுகிறார் மேரி க்யூரி. 

மேரி க்யூரியின் பார்வை மிகவும் விசாலமானது என்றாலும், அவர் பெண்ணாகவே பிறந்ததற்காக அனுபவித்த சிக்கல்கள் ஏராளம். சொல்லப்போனால், 1903-ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கொடுப்பதாகவே இல்லையாம். அந்த கமிட்டியில் இருந்த ஒருவர், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். மிகவும் போராடி, மேரி க்யூரிக்கு விருது வாங்கிக்கொடுத்தார். 

மேரி க்யூரியின் கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்ததும், மேரிக்கு பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் அந்தப் பல்கலைக்காகத்தின் முதல் பெண் பேராசிரியர். ஆனாலும், அவர் பிரான்சில் பிறக்காதவர் என்பதால், பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என பிரெஞ்ச் அறிவியல் அகாடமியில் நுழைய அனுமதி இல்லை என எண்ணற்ற புரளிகள். மேரியுடன் வேலைப் பார்க்கும் ஒருவருடன் தொடர்பு இருப்பதாகப் பத்திரிகைகள் எழுதின. மேரி கணவரை இழந்தவர், அந்த ஆண் திருமணமானவர் என்றாலும், மேரி மீதுதான் செய்தித்தாள்கள் சேற்றை வாரி இறைத்தன. சிலர் அவருடைய வீட்டுக்கு வெளியே திரண்டு அவரின் குழந்தைகளை தாக்கும் வரை சென்றனர். அகதியைப்போல நண்பர்கள் வீடுகளில் குடியேறினார் மேரி. அதற்காகக்கூட அசராதவரை அசைத்துப் பார்த்த சம்பவமும் நடந்தது. 

மேரி இரண்டாம் முறையாக நோபல் பரிசு பெறும்போது, பிரச்னை கிளம்ப வாய்ப்பு இருக்கிறது. அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில், ஏதேனும் காரணம் சொல்லி வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். 

”இந்தப் பாரிசு ரேடியம் மற்றும் பொலொனியமில் என் கண்டுபிடிப்புக்காகக் கொடுக்கப்படுவது. என் சொந்த வாழ்வுக்காக இல்லை. தனிப்பட்ட வாழ்வுச் சார்ந்த ஒன்று இதில் தாக்கத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதில் அளித்தார். 

ஆனாலும், மன அழுத்தத்தினாலும், கிட்னி பிரச்னையாலும் பாதிக்கப்பட்டு பல காலம் வெளி உலகத்தில் தலைகாட்டாமல் இருந்தார். அதன்பின்னும் ரேடியம் நிறுவனம் ஒன்றை உருவாக்குதல், உலகப் போரில் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் இணைந்து ரேடியோலஜி சேவைகளை வழங்குதல் எனத் தொடர்ந்து இயங்கியவர், 1934-ம் ஆண்டில் ஒரு கர்வீச்சு விபத்தில் இறந்துபோனார். 

அவருடைய உடை, புத்தகங்கள், உடைமைகளில் கதிர்வீச்சுத் தன்மை இருக்க வாய்ப்பிருப்பதால், தனியாகவே வைத்துப் பாதுகாக்கப்பட்டன. 1890-ம் ஆண்டில் அவருடைய ஆராய்ச்சிகூடத்தில் இருந்த நோட்டுப் புத்தகங்கள், பேப்பர்கள் எல்லாம் பிரான்ஸ் தேசிய நூலகத்தில் பத்திரமாக பூட்டிவைக்கப்பட்ன. 

மேரி க்யூரி தன் வாழ்வின் பல்வேறு தடைகளைத் தாண்டி வந்த ஃபீனிக்ஸ் பறவை. கதிர்வீச்சுத் துறையில் அவருடைய தன்னலமில்லாத பங்களிப்பு, பல நோய்களுக்கான குறிப்பாக கேன்சருக்கு மருந்தாகி உள்ளது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

'பேசும் கண்கள்‘ - பிபிசி தமிழ் நேயர்களின் 'கண்கள்' புகைப்படங்கள்!

 

 

மோகன், பாண்டிச்சேரி மோகன், பாண்டிச்சேரி அமுதா ஹரிஹரன் அமுதா ஹரிஹரன் அரவிந்த் ரெங்கராஜ், திருச்சி அரவிந்த் ரெங்கராஜ், திருச்சி வினோத், கோவை வினோத், கோவை மதிவாணன் கனகசபை, கனடா மதிவாணன் கனகசபை, கனடா இக்வான் அமீர், சென்னை இக்வான் அமீர், சென்னை சூர்யா, ஈரோடு சூர்யா, ஈரோடு பூபதி பிரதீபன், யாழ்ப்பாணம் பூபதி பிரதீபன், யாழ்ப்பாணம் தி.சோழவேந்தன், கள்ளக்குறிச்சி nதி.சோழவேந்தன், கள்ளக்குறிச்சி வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி விஜயராஜ், திருப்பூர் விஜயராஜ், திருப்பூர் சதீஷ் குமார், திருச்சி சதீஷ் குமார், திருச்சி

 

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847)

 
அ-அ+

தாமஸ் ஆல்வா எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன். இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார்.

 
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847)
 
தாமஸ் ஆல்வா எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன். இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880-ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார்.

https://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.