Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவருக்காக டூடில் வெளியிட்ட கூகுள்!

 
 

கூகுள் நிறுவனம் இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷியைக் கெளரவிக்கும் விதமாக டூடில் வெளியிட்டுள்ளது. 

கூகிள் டூடில்

 

ஆனந்தி கோபால் ஜோஷி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். இன்று அவருக்கு 153 -வது பிறந்தநாள். இந்த நாளில் அவரை நினைவுகூரும் விதமாக கூகுள் அவருக்குச் சிறப்பு டூடில் வெளியிட்டுள்ளது. இதனை பெங்களூரைச் சேர்ந்த காஷ்மிரா சரோதி என்பவர் வடிவமைத்துள்ளார். 

1865 -ம் ஆண்டு மார்ச் மாதம் 31 -ம் தேதி பிறந்த ஆனந்திக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. அவரைத் திருமணம் செய்துகொண்டவர், திருமணத்துக்குப் பின்னரும், மனைவியின் படிப்பை தொடர ஊக்கப்படுத்தினார். அதன் காரணமாக பெனிசில்வேனியாவில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று 19 வயதில் நாடு திரும்பியுள்ளார். 

 

இந்தியாவிலும் பெண்களுக்கென்று தனி மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவு. 19 -வது நூற்றாண்டிலே புரட்சிப் பெண்ணாக வாழ்ந்த இவர் தனது 21 -வது வயதில் காசநோயால் காலமானார். இன்றைய பெண்கள் கல்விக்கு ஆனந்தி தொடக்க புள்ளியாக இருந்தார் என கூகுளும் அவரை நினைவு கூர்ந்துள்ளது. 

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பேசும் படம்: ஒளி விளையாட்டு

 

 
 
Blackdrongo-Velachery
Chennai-Marina-Lighthouse

விளக்கொளியில் சென்னை கலங்கரை விளக்கம்.

Palavanthangal
Pelican-Inflight-Pallikaranai
RailwayBridge-Cauveryriver-Trichy
Rameswaram-Pambanbridge
Tiruvanaikovil
cbe

ரம்மியமாகக் காட்சியளிக்கும் கோவை மேற்குத் தொடர்ச்சி மலை.

chennai%20mrc%20nagar
chennai%20panikalam
coimbatore

ரம்மியமாகக் காட்சியளிக்கும் கோவை மேற்குத் தொடர்ச்சி மலை.

flight%20landing
moon%20and%20flight
 
 
 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமானது எப்படி?

முட்டாள்கள்

இன்று ஏப்ரல் 1- ஆம் தேதி. முட்டாள்கள் தினம். நம் சக நண்பர்களை, உறவினர்களை முட்டாளாக்க நாம் ஏதேதோ திட்டமிட்டு இருப்போம். சில முயற்சிகள் செய்து ஏமாற்றி இருப்போம். ஏன் ஏமாற்றமும் அடைந்திருப்போம்?

சரி... எதற்காக ஏப்ரல் 1 - ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது? அதன்பின் உள்ள காரணங்கள் என்ன?

இதன்பின் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பிரதானமானது இரண்டு. அவற்றை மட்டும் இங்கு பகிர்கிறோம்.

சேவல் - நரி கதை:

முட்டாள்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜெஃப்ரி என்ற ஆங்கில கவிஞர் ஒருவர், 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய சேவல் நரி கதைதான் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுவதற்கு காரணம் என்கிறார்கள்.

சேவல் நரியிடம் பொய் சொல்லி, அதனிடமிருந்து தப்பும் என்பதாக அந்த கதை இருக்கும். நேரடியாக, ஏப்ரல் 1 என்று அந்த கதையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், 'Syn March began' என்று அக்கதையில் வரும், இதனை மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து 32 வது நாள் என்பதாக புரிந்துக் கொண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதியைதான் அவர் குறிப்பிட்டார் என்றனர்.

இதனால்தான் மார்ச் 1 ஆம் தேதி முட்டாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.

முட்டாள் மீன்கள்:

முந்தைய கதை நரி, சேவல் சம்பந்தப்பட்டது என்றால், இந்த கதை மீன்கள் சம்பந்தப்பட்டது.

முட்டாள்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த கதை உருவாகிய இடம் ஐரோப்பா.

ஃப்ரான்ஸ் நாட்டு ஓடைகள் மற்றும் ஆறுகளில் ஏப்ரல் மாதத்தில் நிறைய மீன்கள் கிடைக்கும். அதனை சுலபமாக பிடிக்க முடியும். மக்கள், அந்த மீன்களை முட்டாள் மீன்கள் என்று அழைத்தனர். பின் இந்த நாளில், அப்பகுதி மக்கள் தங்களுக்குள் ஏமாற்றி விளையாட தொடங்கினர்.

இதுதான் கண்டங்கள் தாண்டி பரவி முட்டாள்கள் தினம் ஆனது.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: மைக்க அத்வானிஜி கிட்ட கொடுங்க

 

 
memes%2016
memes%2012
memes%2014
memes%2017
memes%2018
memes%2019
memes%2020
memes%2021
memes%2022
memes%203
memes%204
memes%208
memes%205

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மனித இனத்தையே இல்லாமல் செய்ய வல்ல தேனீக்களின் அழிவு..! #HoneyBee

 
 

தேனீ

எங்கு பார்த்தாலும் வாடி வறண்ட செடிகள், விரிசல் விழுந்து இப்பவோ அப்பவோ என்று மரங்கள் இழுத்துக் கொண்டிருக்கின்றன. புதியதாக எந்த மரங்களையுமே காணோம். ஆங்காங்கே ஒன்றிரண்டு செடிகளும் புற்களுமே செழிப்பாக வளர்கின்றன. உலகின் கடைசி விலங்கையும் அடித்துக் கொன்று தின்றுகொண்டிருந்தார்கள், உடலில் எலும்பைத் தவிர வேறெதுவும் இல்லாத ஒரு சிலர். அது தான் கடைசி விலங்கு, இனி சாப்பிட மாமிசம் கூட கிடைக்காது. மனித மாமிசத்தைத் தவிர. அதையும் சில பகுதிகளில் தொடங்கிவிட்டனர். சைவ உணவு உண்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தாகிவிட்டது. ஒரு கிலோ தக்காளியின் விலை ஒரு லட்சம் ரூபாய். உலகின் ஒவ்வொரு மனிதனும் வாரத்திற்கு ஒருவேளை சாப்பிடுவதற்கே உணவைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். செயற்கை மகரந்தச் சேர்க்கை மூலம் வளர்க்கப்படும் தாவரங்கள் தாராளமாக அனைவருக்கும் வாரி வழங்கும் அளவிற்கு இல்லை. கொத்துக் கொத்தாக பஞ்சத்தால், பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இது கற்பனையல்ல. நிஜத்தில் வரும் காலத்தில் நிகழக்கூடியவை. உலகின் கடைசித் தேனீ அழியும்போது நமது நிலை இதுதான். அளவில் மிகச்சிறிய தேனீக்கள் சூழலுக்கும், தாவரங்களின் பசுமைக்கும் இன்றியமையாதது. ஒரு விதையை விதைத்து அதற்குத் தேவையான உரங்களைப் போடுங்கள், தேவையான நீரைத் தாருங்கள். ஆனால் அவற்றைத் தேனீக்கள் அண்டாத வகையில் பாதுகாத்து வையுங்கள். அத்தாவரத்தின் வளார்ச்சி நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நமக்குத் தேவையான பூக்களோ, பழங்களோ மேலும் அவற்றை வளரச் செய்வதற்குத் தேவையான விதைகளோ எதையுமே அது தராது.

செடிகள் கருத்தரிப்பதற்கும், பல்கிப் பெருகுவதற்கும் மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டும். அது இரண்டு முறைகளில் நடைபெறும். சுய மகரந்தச் சேர்க்கையில் ஒரே செடியில் பிறக்கும் ஆண் பூக்கள் அதே செடியின் பெண் பூக்களுக்குத் தனது மகரந்தத் துகள்களை அனுப்பி கருத்தரிக்கச் செய்கிறது. இது உலகின் மொத்த தாவரங்களில் சிலவற்றிலேயே நடைபெறும். ஆனால், பெரும்பாலான செடிகள் அயல் மகரந்தச் சேக்கை மூலமே வம்சவிருத்தி அடைகின்றன. அதாவது, ஒரு செடியில் இருக்கும் ஆண் மலரின் மகரந்தத் துகள்களை வேறொரு செடியின் பெண் மலருக்குத் தந்து கருத்தரிக்கச் செய்வது. செடிகளால் நகர முடியாதல்லவா, அதனால் அவற்றுக்குப் பூச்சிகள் உதவுகின்றன. அவை ஆணின் வித்துக்களைச் சுமந்துசென்று பெண் மலரிடம் சேர்க்கிறது. இவ்வாறு செய்பவற்றைப் பூந்து சேர்ப்பிகள் (Pollinators) என்று அழைப்பார்கள். இந்தப் பணியில் பங்கெடுப்பதில் 90% பணியாளர்கள் தேனீக்கள் தான்.

தேனீக்கள் அழிந்துவிட்டால், இந்தப் பணி முழுவதும் நிறைவடையாமல் ஸ்தம்பித்துவிடும். உலகப் பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் சுமார் 250,000 தாவர வகைகள் கருத்தரிப்பதற்குத் தேனீக்களைச் சார்ந்து தான் இருக்கின்றன. மகரந்தச் சேர்க்கை நிகழாமல் இனப்பெருக்கம் நிகழுமா, உணவுப் பொருள்கள் தான் கிடைக்குமா?

பிறகு இந்த அயல் மகரந்தச் சேர்க்கை செய்யவேண்டியது மனிதர்களின் கடமையாகிவிடும். இந்தப் பணிச் சுமையைத் தாங்குவது எளிதான காரியமல்ல. அதனால் அதன்மூலம் கிடைக்கும் உணவுப்பொருள்களின் விலையும் தாறுமாறாக உயரும். 100இல் 99 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். உணவுப் பஞ்சம் மனித இனமே அழியக்கூடிய நிலைக்கு ஏற்படும். உலகப் பொருளாதாரமே முடங்கிவிடும். உணவைத் தேடுவதே பிரதான வேலையாகிவிடும். சுய மகரந்தச் சேர்க்கையில் வளரும் தாவரங்களில் உணவைத் தேடிக்கொள்ளும் நிலைக்கு நமது உணவுப் பழக்கம் பழகுவதற்குள் உலகின் பாதி மக்கள் தொகையை இழந்துவிடுவோம். ஆடைப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் பருத்தி இல்லாமலே ஆடை உடுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம். 

இன்ஃபொஇகிராபிக்ஸ்

அட இதையெல்லாம் இப்ப எதுக்குப்பா சொல்லிகிட்டு இருக்க? தேனீக்களுக்கு இப்ப என்ன குறை வந்துடுச்சு?

கடந்த 20 வருடமாகச் சிற்றுயிர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வடக்கில் பஞ்சாபில் இருந்து தெற்கில் கேரளா வரையிலும், மேற்கில் மகாராஷ்டிராவில் இருந்து மேற்கில் திரிபுரா வரையிலும் அனைத்து மாநில விவசாயிகளும் அவர்களது பகுதிகளில் தேனீக்களின் வரத்து முன்பிருந்ததைவிட குறைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தேனீ என்றில்லை, தேனீ இனத்தைச் சேர்ந்த எந்த வகையும் பெருமளவில் வருவதில்லை என்று அஞ்சுகிறார்கள். அரிசி, கோதுமை போன்றவற்றில் சுய மகரந்தச் சேர்க்கையே நடைபெற்றாலும் அவற்றை மட்டுமே உண்ணமுடியாது. காய் மற்றும் கனி வகைகளின் உற்பத்தி இவற்றின் வருகை பாதிப்பால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று வருந்துகிறார்கள்.

தேனீக்களின் வருகை ஏன் குறைகிறது?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகளவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால் பெரும்பாலான நாடுகள் ரசாயன உரங்களின் மூலம் அதீத உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். பின்னாளில், அவர்களது வியாபார வெறி அதை வைத்துப் பணத்தில் புரள நினைத்த வியாபாரிகளின் பேராசை அதை உலகம் முழுக்கப் பரவச் செய்தது. இன்று விவசாயம் என்றால் ரசாயன உரமின்றி சாத்தியமில்லை என்ற நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.

நிலைமை இப்படியிருக்க, பெண் மலர்களைக் கருத்தரிக்கச் செய்வதற்கு மகரந்தத் துகள்களை ஆண் மலரில் சேகரிக்கும் தேனீக்கள் அவற்றோடு ரசாயனத்தையும் உட்கொள்கின்றன. தொடக்கத்தில் அவற்றின் உணர்கொம்பு திறனை இழப்பதால் மணங்களை நுகரும் திறனை இழந்து மலர்களைக் கண்டடைய முடியாமல் தவிக்கின்றன. பிறகு, அந்த ரசாயனம் அவற்றின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால் தசைகள் முடக்கப்பட்டு இறந்துவிடுகின்றன.

அவற்றின் மகரந்தச் சேர்க்கைத் தாவரங்களைச் சார்ந்து வாழும் தாவர உண்ணிகள் உணவின்றி அழியத்தொடங்குவதில் இருந்து உணவுப் பொருள்களின் உற்பத்தி பாதிப்பது, உலகளவில் பஞ்சம், புது மரங்கள் வளராமல் போவதாலும் இருக்கும் மரங்களும் அழிந்துபோவதாலும் நீர்த்தேக்கச் செயல்பாடுகள் நிகழாமல் நன்னீர் பற்றாக்குறை ஏற்படும். நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும்.

 

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்து சங்கிலித் தொடரில் பின்னிப்பிணைந்து வாழும் வகையில் அமைத்திருக்கிறது இயற்கை. அதன் படைப்பில் அனைத்தும் செழித்து வாழ்வதற்கு அது வகுத்தளித்த பாதையில் இருந்து பிறழ்ந்து சென்றது மனித இனம். அந்த ஒரு இனத்தின் பிறழ்வு உலகின் இயக்கத்தையே ஆபத்திற்கு உள்ளாக்கிவிட்டது.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

'வாழ்வின் வண்ணங்கள்' - பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

 

கபிலன்

கபிலன்

அருண் குமார்

அருண் குமார்

சுடலைமணி, தூத்துக்குடி

சுடலைமணி, தூத்துக்குடி

ஜோஸ்வால், கன்னியாகுமரி

 

ஜோஸ்வால், கன்னியாகுமரி

அருண் குமார், சேலம்

 

அருண் குமார், சேலம்

முத்துவேல், ஓசூர்

 

முத்துவேல், ஓசூர்

நரேன் கிருஷ்ணா

நரேன் கிருஷ்ணா

சூர்யா, சென்னை

சூர்யா, சென்னை

சரண் குமார், ஓசூர்

சரண் குமார், ஓசூர்

 

 

பீர் முகமது, அபுதாபி

பீர் முகமது, அபுதாபி

சுரேஷ் வெங்கடகிருஷ்ணன், சென்னை

சுரேஷ் வெங்கடகிருஷ்ணன், சென்னை

காந்தி சங்கர், புதுச்சேரி

காந்தி சங்கர், புதுச்சேரி

 

 

ஏ.ஏ.எம். அஷாட், இலங்கை

ஏ.ஏ.எம். அஷாட், இலங்கை

வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி

வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

முட்டாள்கள் தினத்துக்காக எமிரேட்ஸ் வேடிக்கையாக வெளியிட்ட புகைப்படங்கள்

 

ஏப்ரல் ஒன்றாம் தேதியை முன்னிட்டு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் வேடிக்கையாக ஒரு செய்தியை தெரிவித்து உள்ளது.அதாவது விமானத்தில் பறக்கும்போது, வானத்தின் ரம்மியத்தை ரசிக்கும் வகையிலான புதிய விமானத்தை இயக்கவுள்ளதாக,அந்த செய்தி அமைந்துள்ளது.

முட்டாள்கள் தினத்துக்காக எமிரேட்ஸ் வேடிக்கையாக வெளியிட்ட புகைப்படங்கள்

ஏப்ரல் ஃபூல் செய்வதற்கான  இந்த வேடிக்கையான செய்தி தொடர்பில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் 3 புகைப்படங்களை, வானத்தின் அழகை விமானத்தில் இருந்தே ரசிக்கலாம் என பதிவினை இட்டுள்ளது.

முட்டாள்கள் தினத்துக்காக எமிரேட்ஸ் வேடிக்கையாக வெளியிட்ட புகைப்படங்கள்

2020 ஆம் ஆண்டிலிருந்து போயிங் விமானம் அறிமுகம் இருக்கும் எனவும்  பயணிகளுக்காக இந்த விமானத்தில் நீச்சல் குளம், விளையாட்டுக் கூடம், உடற்பயிற்சி கூடம், பூங்கா ஆகியவையும் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதியை முன்னிட்டு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் வேடிக்கையாக தெரிவித்திருந்தாலும்

முட்டாள்கள் தினத்துக்காக எமிரேட்ஸ் வேடிக்கையாக வெளியிட்ட புகைப்படங்கள்

இவாறான வசதிகள் கொண்ட விமான பயணங்களுக்கு விரைவில் சாத்தியம் இருப்பதாக பலரும் தமது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

உலக குழந்தைகளின் புத்தக நாள்: ஏப்.2- 1967

 
அ-அ+

1967-ம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் (International Board on Books for Young People-IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 
 
உலக குழந்தைகளின் புத்தக நாள்: ஏப்.2- 1967
 
1967-ம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் (International Board on Books for Young People-IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. 1. புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல். 2. குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளைக் கொண்டாடும் முன்முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பு, ஒவ்வோராண்டும் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியத்தின் வெவ்வேறு நாட்டுப் பிரிவிற்கு வழங்கப்படும். அந்நாடு அவ்வாண்டிற்கான கொண்டாட்டக்கருத்தை முடிவு செய்து, தன்நாட்டின் சிறந்த எழுத்தாளரை அழைத்து உலகக் குழந்தைகளுக்கு அவ்வாண்டிற்கான செய்தியை எழுதவும் நன்கறியப்பட்ட ஓவியரை அழைத்து அவ்வாண்டிற்கான சுவரொட்டியை வடிவமைக்கவும் செய்யும். அந்த செய்தியும் சுவரொட்டியும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு புத்தகங்கள், படித்தல் ஆகியவற்றின் மீதான ஆர்வம் வளர்த்தெடுக்கப்படும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
 
* 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர். * 1902 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.

* 1902 - ரஷ்ய பேரரசின் உள்நாட்டமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
 
* 1930 - ஹைலி செலசி எதியோப்பியாவின் மன்னராக முடி சூடினார்.
 
* 1972 - நடிகர் சார்லி சப்ளின் 1950-களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்ட பின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார்.
 
* 1975 - வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
 
* 1975 - கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும்.
 
* 1982 - போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டினா முற்றுகையிட்டது.

* 1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
 
* 1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
* 2007 - சாலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை விளைவித்தது.
 
* 2007 - ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

`பாசிட்டிவ் சிந்தனை விற்பனைக்கு... விலை 4 கிளிஞ்சல்கள்!’ - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
 

கதை

`வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். அதிலும் நேர்மறையான விஷயங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள்’ என்று குறிப்பிடுகிறார் அமெரிக்க ராக் பேண்ட் இசைக்கலைஞர் மாத் கேமரூன் (Matt Cameron). பாசிடிவ்வான அணுகுமுறைக்கு ஒரு சக்தி உண்டு. அது தொடர்புடையவருக்கு மட்டுமல்ல... அடுத்தவருக்கும் நன்மை செய்யும். நேர்மறைச் சிந்தனையுள்ளவர்கள், வாழ்க்கையை அதன் அர்த்தம் உணர்ந்து வாழ்கிறவர்கள். அவர்களைச் சுற்றியிருக்கும் பாசிட்டிவ் அதிர்வலைகள் பிறரையும் தொற்றிக்கொள்ளும். இவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள்; எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்பவர்களாக இருப்பார்கள். யாரோ ஒருவர் செய்யும் ஒரு சின்ன பாசிட்டிவ் செயல்பாடு, எதிர்கால சந்ததியினருக்கு பலத்தையும், வாழ்வின் மீது பிடிப்பையும், மற்றவர்களின் மேல் நம்பிக்கையையும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையையும் தருமா? நிச்சயம் தரும். அதை உணர்த்துகிறது இந்தக் கதை. 

 

`கார்மெல் பை தி ஸீ’ (Carmel by the sea)... அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருக்கும் ஒரு சிறு கடற்கரை நகரம். அது ஒரு மாலை நேரம். அன்று விடுமுறை நாள். ஓர் ஆறு வயதுள்ள சிறுவனும், அவனுடைய தங்கையும் மதியம் நான்கு மணிக்கே கடற்கரைக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்கு அங்கே முக்கியமான வேலையிருந்தது. கடற்கரையோரமாகச் சேரும் கிளிஞ்சல்களைப் பொறுக்கிச் சேகரிக்கும் வேலை. அண்ணன், தங்கையை ஓரிடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு கிளிஞ்சல்களைச் சேகரிக்க ஆரம்பித்தான். பார்த்துப் பார்த்து எடுத்தான். அவனுக்கு நல்லதாக, சிறந்ததாகத் தோன்றிய கிளிஞ்சல்களை மட்டும் எடுத்து தன் கால்சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான். ஒரு மணி நேரம் ஆனது. `இன்றைக்கு இது போதும்’ என்று தோன்றிய பிறகு, அவன் தங்கையை அழைத்துக்கொண்டான். இருவரும் கடற்கரையைத் தாண்டி கடைவீதி வழியாக நடந்தார்கள். 

கொஞ்ச தூரம் நடந்த பிறகுதான் சிறுவ்ன், தன் தங்கை உடன் வராததை கவனித்தான். திரும்பிப் பார்த்தான். அவள், ஒரு கடையின் முன்னால் நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். சிறுவன் தங்கையின் அருகே போனான். அவள் அந்தக் கடையில் காட்சிக்குவைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மையையே ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். சிறுவனும் பார்த்தான். மிக அழகான பொம்மை அது. 

``உனக்கு இந்த பொம்மை வேணுமா?’’ 

அண்ணன் - தங்கை

அவள் `ஆமாம்’ என்பதுபோலத் தலையசைத்தாள். சிறுவன் யோசிக்கவேயில்லை. ஒரு பெரிய மனிதனைப்போல அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். அவளை அழைத்துக்கொண்டு அந்த பொம்மைக் கடைக்குள் நுழைந்தான். இதையெல்லாம் கடையின் கண்ணாடி வழியாக அதன் உரிமையாளர் பார்த்துக்கொண்டேயிருந்தார். சிறுவன் நேராக அந்த பொம்மையிருக்கும் இடத்துக்குப் போனான். அதை எடுத்தான். அவளிடம் கொடுத்தான். சிறுமியின் முகம் முழுக்கப் பரவசம். அவள் அந்த பொம்மையை ஆவலோடு அணைத்துப் பிடித்துக்கொண்டாள். கடை உரிமையாளர் ஒரு பெரிய மனிதனைபோல் நடந்துகொள்ளும் அந்தச் சிறுவனையே வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். 

சிறுவன் இப்போது கவுன்ட்டரின் அருகே வந்தான். ``சார், இந்த பொம்மையோட விலை என்ன?’’ என்று கேட்டான். 

கடைக்காரர் புன்னகையோடு கேட்டார்... ``உன்னால எவ்வளவு கொடுக்க முடியும்?’’ 

சிறுவன், கடற்கரையில் ஓடி ஓடி சேகரித்த கிளிஞ்சல்கள் அத்தனையையும் தன் கால்சட்டைப் பையிலிருந்து எடுத்து கவுன்ட்டர் மேஜையின் மேல் வைத்தான். அந்தக் கடைக்காரர், அந்த கிளிஞ்சல்களை எடுத்து கரன்ஸி நோட்டுகளை எண்ணுவதுபோல ஒவ்வொன்றாக எண்ண ஆரம்பித்தார். 

``ரொம்பக் குறைவா இருக்கா?’’ - சிறுவன் கேட்டான். 

``இல்லை, இல்லை... அந்த பொம்மையோட விலையைவிட ரொம்ப அதிகமா இருக்கு. மிச்சத்தை உன்கிட்டயே குடுத்துடுறேம்ப்பா...’’ என்றவர், நான்கே நான்கு கிளிஞ்சல்களை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். சிறுவன், மகிழ்ச்சியோடு கிளிஞ்சல்களை வாங்கி தன் கால்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான். தங்கையை அழைத்துக்கொண்டு கடையைவிட்டு வெளியே போனான். 

கிளிஞ்சல்கள்

இதையெல்லாம் கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரும் ஆச்சர்யத்தோடு கவனித்துக்கொண்டிருந்தார். அவர் கடை உரிமையாளரின் அருகே வந்தார். ``சார்... விலை அதிகமுள்ள அந்த பொம்மையை வெறும் நாலு கிளிஞ்சலுக்கு வித்திருக்கீங்களே...’’ என்றார். 

 

கடை உரிமையாளர் சிரித்தபடி சொன்னார்... ``ஆமா, நமக்கு இது வெறும் கிளிஞ்சல்கள். ஆனா, இந்த வயசுல அந்தப் பையனுக்கு பணம்னா என்னனு புரிஞ்சுக்க முடியாது. ஆனா, வளர்றப்போ புரிஞ்சுக்குவான். பணத்துக்கு பதிலா கிளிஞ்சலைக் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கினது அவன் ஞாபகத்துக்கு வர்றப்போ, நானும் அவன் நினைவுக்கு வருவேன். அப்போ அவனுக்கு இந்த உலகம் முழுக்க நல்ல மனுசங்க இருக்காங்கனு தோணும். அவனும் பாசிட்டிவ் எண்ணத்தை வளர்த்துக்குவான். அவ்வளவுதான்...’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்ணீரும் புன்னகையும்: படிப்பதற்காகத் தடை பல கடந்து...

 

 
 
01CHLRDMARVIA
01CHSRSPARVATHI
01chsrsmarvia
01chsrspak
Hotline
 
 
 
 

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜஹன்தப் அஹ்மதி, 18 வயதில் திருமணமான பின்னர்தான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு பல்கலைக்கழகத்தில் சேர அவருக்கு ஆசை. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காகத் தன் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தேர்வெழுதினார். அதை ஒளிப்படமாக எடுத்தார் பேராசிரியர் நசிர் குஸ்ராவ். அவர் மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கல்வியறிவு அவசியமில்லாதவர்களாகவும் இரண்டாம்தரக் குடிமக்களாகவும் பார்க்கப்படும் ஆப்கன் பெண்கள் அனைவர் மத்தியிலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வாயிலாக இந்த ஒளிப்படம் பரவியது. தற்போது 25 வயதாகும் அஹ்மதி, மூன்று குழந்தைகளுக்குத் தாய்.

விவசாயப் பணிகளைச் செய்துவருகிறார். இந்த ஒளிப்படத்தைப் பார்த்த பல பெண்கள் அஹ்மதியின் படிப்புக்காகப் பண உதவி செய்ய முன்வந்துள்ளனர். அஹ்மதிக்கு மருத்துவராகும் ஆசை உள்ளது. இந்த நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக மலைப் பாதைகள் வழியாக நடந்தும் பேருந்திலும் தலைநகர் காபூலுக்கு வந்திருந்தார். ஆப்கன் யூத் அசோசியேஷன் சார்பில் நடத்தப்படும் ‘GoFundMe’ பிரச்சாரம் மூலம் 14 ஆயிரம் டாலர் கல்வி நிதி இவருக்காக இதுவரை திரண்டுள்ளது. 39 சதவீதக் குடிமக்கள் வறுமையில் வாழும் ஒரு நாட்டில் படிப்பதற்காக நிறைய சிரமங்களைச் சுமக்கும் அஹ்மதிக்குக் கிடைத்திருக்கும் இந்த உதவி நல்லதொரு மாற்றத்துக்கான தொடக்கம்.

வன்முறை புகாருக்கு ஹாட்லைன்

குடும்ப வன்முறை, தீ வைப்புக் குற்றங்கள் போன்றவை குறித்துப் புகார் செய்வதற்காகச் சர்வதேசக் குற்றத்தடுப்பு பாதிக்கப்பட்டவர் நல அறக்கட்டளை (இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் கிரைம் ப்ரிவென்ஷன் அண்ட் விக்டிம் கேர்) தேசிய அளவில் இலவசத் தொலைபேசி உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையை ஜெர்மன் நாட்டு அதிபர் ப்ராங் வால்டர் ஸ்டீன்மியர் தொடங்கிவைத்தார். பாதிக்கப்படும் பெண்களுக்கு உளவியல் ஆலோசனை, சட்ட விழிப்புணர்வு, தகவல் சேவை போன்றவை தொலைபேசி வழியாக வழங்கப்படும். இதற்கான எண்கள் 044-43111143 மற்றும் 18001027282. “குடும்ப வன்முறையில் பெண்கள் தீவைக்கப்படும் சம்பவங்களில் 90 சதவீதக் குற்றங்கள் விபத்துகளாகப் பதிவுசெய்யப்படுகின்றன” என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த ஸ்வேதா ஷங்கர். சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் தீவைப்புக் காயங்களுடன் கடந்த ஆண்டு 800 பெண்கள் வந்துள்ளனர்.

பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் பேராசிரியர் அடுல் ஜோஹ்ரியை இடைநீக்கம் செய்யக் கோரி மாணவர்களும் ஆசிரியர் அமைப்பினரும் சேர்ந்து எதிர்ப்புப் பேரணி நடத்தினர். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரைப் பெண் போலீசார் தாக்கியதாகவும் ஆண் அதிகாரி அத்துமீறியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது ஒளிப்படக் கருவியும் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான கோஹினூர், திருநங்கை மார்வியா மாலிக்கைச் செய்தி வாசிப்பாளராக நியமித்துள்ளது. பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் இவர். மூன்று மாதப் பயிற்சிக்குப் பிறகு கடந்த வாரம் பணியில் சேர்ந்தார். இதழியல் பட்டதாரியான மார்வியா, மாடலாகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானிலும் திருநங்கைகளின் வாழ்க்கை யாசகம், நடனமாடுவது, பாலியல் தொழில் போன்றவற்றோடுதான் கழிகிறது. தனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பணி திருநங்கையர் வாழ்வில் மேம்பாடு ஏற்படுத்துவதாக இருக்கும் என்று பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மார்வியா மாலிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் அமைச்சரவை, சமீபத்தில்தான் திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் உலகம்

 

'எவையெல்லாம் இயல்பு நிலையிலிருந்து விலகியவையாக அறியப்படுகின்றதோ, அவையே தனித்துவமானவை" பார்த்தவுடன் இருபது வயது என மதிப்பிடத்தக்க வகையிலான தோற்றம், சாதாரணவர்களை விடவும் ஒருவித வசீகரம், புதியவர்களை கண்டதும் கண்களில் மிரட்சியுடனும் ஆவலுடனும் நெருங்குகிறார்கள், பின் விலகிப்போகிறார்கள், சத்தமாக பாடுகிறார்கள், உடனே நிறுத்துகிறார்கள், குதூகலிப்புடன் சிரிக்கிறார்கள்... நிச்சயமாக அது வேறு உலகம் தான்! மென்ஹன்டி ஸ்கூல், விசேட தேவையுடையோர் பாடசாலை.

DSC_4054.JPG

ஒட்டிசம் மற்றும் டவுன் சின்ரோம் ஆகிய உளநல மற்றும் மூளை வளர்ச்சி குன்றல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தானாக இயங்கும் திறனையும், கல்வியையும் வழங்கும் வகையில் களுபோவில சுஜாதா மாவத்ததையில் இயங்கும் பாடசாலையே மென்ஹன்டி ஸ்கூல். பாடசாலைக்குரிய பாரிய கட்டடங்கள், ஆடம்பரம் ஏதுமின்றி மனதுக்கு நெருக்கமான வகையிலான வீட்டுச்சூழல், பொறுமையோடு ஆதரவாக கற்பிக்கும் ஆசிரியர்கள், அவரவர் தனித்திறனை இனங்கண்டு ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு என விசேட தேவையுடையோரின் நலன்கருதி செயற்படும் மென்ஹன்டி ஸ்கூல் மனதில் நிலைக்கிறது.

எப்போதும் சிரிப்புடனும், குதூகலத்துடனும் இருகின்ற ஒட்டிசம் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடைய அந்த மாணவர்கள் ஜீவனற்ற ஓர் கட்டடத்தை ஆசீர்வதிக்கப்பட்ட உலகிற்கு நிகராக உணரச்செய்கிறார்கள். குறைபாடுடையவர்கள் என அவர்களை உலகம் கணிக்கின்ற போதும் சாதாரணர்களை விட ஆச்சரியப்படத்தக்க வகையிலான திறன்கள் தம்மிடம் நிறைந்திருப்பதை ஒவ்வோர் நிமிடமும் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் எப்போதும் இருகின்ற அந்த கபடமில்லாத சிரிப்பு அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணச்செய்கின்றது.

DSC_4010.JPG

உலககாவிய ரீதியிலே மார்ச் மாதம் 21 ஆம் திகதி உலக டவுன் சின்ரோம் தினமாகவும், ஏப்ரல் 2 ஆம் திகதி ஒட்டிசம் விழிப்புணர்வு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் ஒரு மனிதனின் பிறப்பின் போதே ஏற்படத்தக்க குறைபாடுகளாக இனங்காணப்பட்டுள்ளது. 

DSC_4041.JPG

இக்குறைபாடுகள் தொடர்பில் மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்ற போதும், விசேட தேவையுடையோர் தொடர்பிலான புரிதல் சாதாரண மக்களை எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளது என்பது கேள்விக்குறியான விடயமே! மேற்குலக நாடுகள் இப்புரிதல் நிலையிலே பல படிகள் முன்னேறியுள்ள போதும், இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் விசேட தேவையுடையோர் பற்றிய போதியளவிலான தெளிவும், புரிதலும் இல்லை என்பதே நிதர்சனம்.

DSC_4011.JPG

ஒட்டிசம், டவுன் சின்ரோம் போன்ற பிறப்பியல் குறைபாடுகள் வெறும் குறைபாடுகளே அன்றி, அவை நோய்கள் அல்ல என்கிற தெளிவு பெரும்பாலானோரிடம் இல்லை. சாதாரண மனிதர்களிடமுள்ள கோபம், பொறாமை, சந்தேகம், சுயநலம் போன்ற குறைகளை போல ஒட்டிசம், டவுன் சின்ரோம் போன்றவையும் இயல்பில் ஏற்படுகின்ற குறைபாடுகளேயாகும். எம்மிடமுள்ள கோபம், பொறாமை போன்ற குறைபாடுகளை முறையான பயிற்சி, கட்டுப்பாடு என்பவற்றின் மூலம் நிவர்த்திக்க முடியும் என நம்புகின்றோம்.

DSC_3995.JPG

அவ்வாறே ஒட்டிசம் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைப்பதோடு, அவர்களுக்கான முறையான வழிகாட்டல்கள், பயிற்சிகளின் மூலம் அவர்களின் குறைபாட்டின் வீரியத்தை குறைக்க முடியும் என்கிறது மருத்துவம். முறையாக நெறிப்படுத்துவதன் மூலம் அவர்களை சுயமாக இயங்கச்செய்ய முடியும் என்கிறார் மென்ஹன்டி ஸ்கூலின் முகாமைத்துவ பொறுப்பாளர் கிறிஸ்டின். சக மனிதரின் அன்பும், உதவியும் அவசியம் என்கிற நிலையிலுள்ள ஒட்டிசம், டவுன் சின்ரோம் குறைபாட்டாளர்களை சமூகத்திலிருந்து ஒதுக்காது அரவணைப்பது ஒவ்வொருவரினதும் சமூகப்பொறுப்பாகும்.

 

உலக டவுன் சின்ரோம் தினம், உலக ஒட்டிசம் விழிப்புணர்வு தினம் போன்றவற்றை வெறும் தினங்களாக மட்டும் நோக்கும் பழக்கத்திலிருந்து மீள்வோம். அவற்றின் நோக்கமும், தாற்பரியமும் அறிய முற்படுவோம். பிறப்பியல் குறைபாடுடையோரும் உடலும், உணர்வுகளும் நிறைந்த மனிதர்கள் என்பதை மனதிலிருத்தி செயற்படுவோம். அவர்களுக்காய் அன்பின் விதையை உலகெங்கும் விதைப்போம்!

http://www.virakesari.lk

விழிப்புணர்வு நாள்    World Autism Awareness Day

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

ஏப்ரல் 2, 1792 - அமெரிக்காவின் நாணயமான டாலர் அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று.
#வரலாற்றில்_இன்று

  • தொடங்கியவர்

ஒரு கோப்பை சந்தோஷம்!

 

 
coffe%20cupp

எல்லா விஷயங்களிலுமே ஏதாவது புதுமையை விரும்புகிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள். அதற்கு காபி கப்புகளும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் காபி கப்புகளிலும் இளைஞர்களை ஈர்க்கும் புதுமையான டிசைன்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆன்லைனில் விதவிதமான கப்புகள் விற்பனைக்காகக் குவிந்துகிடக்கின்றன. அவற்றில் இளைஞர்களை ஈர்க்கும் கப்புகள் சில:

 

மேஜிக் மேஜிக்

வெப்பத்தைப் பொறுத்து நிறம் மாறும் கப்புகளுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். இந்த வகை கப்புகள், மேற்புறப் பூச்சின் காரணமாக வெப்பநிலை மாற்றத்துக்கு ஏற்ப நிறம் மாறும். இதை ஆங்கிலத்தில் ‘ஹீட் சென்சிடிவ் மேஜிக் கப்’ என்கிறார்கள். ஜில்லான தண்ணீரோ சூடான காபியோ எதுவாக இருந்தாலும் அதன் மேஜிக்கால் கப் நிறம் மாறுவது அத்தனை அழகாக இருக்கும். இந்த வகை கப்புகள் சராசரியாக 450 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகின்றன.

photo%20cup
 

 

திருவாசகம்

தனக்குப் பிடித்த வாசகத்தை கப்புகளில் அச்சேற்றி, அதைப் பார்த்தபடி காபியோ தண்ணீரோ குடிப்பதுதான் இன்றைய இளைஞர்களின் ஸ்டைல். இதை போட்டோ கப் என்கிறார்கள். இந்த வகை கப்புகள் பல டிசைன்களில் கிடைக்கின்றன. வாசகங்களை அச்சிட இடமும் ஒதுக்கிவிடுகிறார்கள். வாசகத்தை அச்சிட விருப்பம் இல்லாவிட்டால் பிடித்த ஒளிப்படங்களையும் அச்சிடலாம். இந்த காபி கப் 300 ரூபாய் முதல் கிடைக்கிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை

 

இத்தாலியில் 1,372 ரோபோட்டுகள் ஒரே இடத்தில் நடனமாடி புதிய கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

 
 
 
 
ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை
 
லண்டன்:

இத்தாலியில் ரோபோட்டுகள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1,372 ஆல்பா 1 எஸ் ரக ரோபோட்டுகள் நடமாடின. இது புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
 
201804021652248941_1_Most-robots-dancing-simulta._L_styvpf.jpg


இதற்கு முன் சீனாவில் 1069 ரோபோட்டுகள் நடமாடியது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இத்தாலி முறியடித்துள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
201804021652248941_2_Alpha-1S_tcm25-519373._L_styvpf.jpg


40 செமீ உயரம் உள்ள இந்த ரோபோட்டுகள் அலுமினியத்தால் செய்யப்பட்டு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளது. இந்த உலகச்சாதனை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. #robotdance

 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

உடல் பருமனை தடுக்க நெதர்லாந்தின் புதிய முயற்சி

நெதர்லாந்தின் இந்த முயற்சியால் அந்நாட்டின் வயதுக்கு மீறிய உடல் எடை உள்ள சிறார்களின் எண்ணிக்கை, பன்னிரண்டு சதவீதம் சரிந்துள்ளது

  • தொடங்கியவர்

1881 – இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ. வே. சு. ஐயரின் பிறந்தநாள்

வரலாற்றில் இன்று….

மார்ச் – 30

நிகழ்வுகள்

1804 – போர்த்துக்கலில் அப்பல்லோ என்ற கப்பல் மூழ்கியதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
1902 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.
1902 – ரஷ்ய பேரரசின் உள்நாட்டமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1930 – ஹைலி செலசி எதியோப்பியாவின் மன்னராக முடி சூடினார்.
1972 – நடிகர் சார்லி சப்ளின் 1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார்.
1975 – வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
1975 – கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும்.
1982 – போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனா முற்றுகையிட்டது.
1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
1984 – ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
2007 – சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2007 – ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

742 – சார்லமேன், பிரெஞ்சு அரசன் (இ. 814)
1618 – பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி, இத்தாலியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1663)
1725 – கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி, எழுத்தாளர் (இ. 1798)
1788 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனியக் கவிஞர் (இ. 1862)
1805 – ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், டென்மார்க்கு கவிஞர் (இ. 1875)
1875 – வில்லியம் டோன், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1942)33-500x303.jpg
1881 – வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ.1925)
1891 – மக்ஸ் ஏர்ண்ஸ்ட், செருமனிய ஓவியர், கவிஞர் (இ. 1976)
1942 – ரோஷன் சேத், இந்திய-ஆங்கில நடிகர்
1969 – அஜய் தேவ்கான், இந்திய நடிகர்
1977 – மைக்கல் பாஸ்பெந்தர், ஐரிய-செருமானிய நடிகர்
1981 – மைக்கல் கிளார்க், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
1982 – டேவிட் ஃபெரர், எசுப்பானிய டென்னிசு வீரர்
1984 – ஷாவ்ன் ரோபர்ட்ஸ், கனடிய நடிகர்

இறப்புகள்

1672 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய மதப்பரப்புனர், பினிதர் (பி. 1654)
1872 – சாமுவெல் மோர்சு, மோர்ஸ் தந்திக்குறிப்பு கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1791)
1933 – கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி, இந்தியத் துடுப்பாளர் (பி. 1872)
2005 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (பி. 1920)
2006 – பி. வி. பார்த்தசாரதி, குமுதம் இதழ் நிறுவனர்
2012 – எம். சரோஜா, நகைச்சுவை நடிகை

http://metronews.lk

  • தொடங்கியவர்
‘நல்ல குணம் கொண்டவர்களுக்கு, முரணான சிந்தனை எழுவதில்லை’
 

image_97a37ef3ba.jpgமனம் விரும்பியதைத்தான் எம்மால் செய்யமுடியும். மனத்துக்கு விரோதமாகச் செய்யப் புகுந்தால், எமக்கு நாமே எதிரியாகி விடுவோம். கொஞ்சம்,  வேறுபாடான நபராகக் காட்டிக்கொள்வார்.  

நல்ல குணாம்சம் கொண்டவர்களுக்கு, எக்கணமும் முரணான சிந்தனை எழுவதில்லை. தற்செயலாக, தெரியாத்தனமாகச் சிறு தவறுகளைச் செய்தாலும் அவர்களுக்கு உறக்கமே வருவதில்லை. தங்களைத் தாமே நொந்து கொள்வார்கள்.  

தங்களின் நல்ல மனத்துக்கு, ஒத்துழைக்கும் காரியங்களை மட்டுமே செய்தால், நிறைவாக இருக்கலாம். 

எதிர்மறைத் துர்க்குணங்கள் எவருக்குமே நன்மை பயக்காது. கெட்டதைச் செய்து, மனதைக் குட்டையில் அமிழ்த்துதல் இழிவானது. 

சதா எழுகின்ற எண்ணங்களை, உரிய முறையில் ஆய்ந்து, தெரிந்து எம்மை நாம் வழிநடத்தச் சுயசிந்தனையை வலுப்படுத்துவோமாக. மனத்தை நற்குணமாக மாற்றுவதே, பெரும் நோக்கமாகும்.

  • தொடங்கியவர்

உலகின் முதல் செல்போன் அழைப்பு மேற்கொள்ளப்பட்ட நாள்: ஏப்ரல் 3, 1973

 
அ-அ+

நகர்ந்துகொண்டே பேசக்கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் செல்போன் என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. செல்போன்களுக்கு

 
 
 
 
உலகின் முதல் செல்போன் அழைப்பு மேற்கொள்ளப்பட்ட நாள்: ஏப்ரல் 3, 1973
 
நகர்ந்துகொண்டே பேசக்கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் செல்போன் என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. செல்போன்களுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பி தொடர்பு தேவையில்லை. உலகின் முதலாவது செல்போன் அழைப்பு நியூயார்க் நகரில் 1973-ஆம் ஆண்டு இதே நாளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இந்த செல்போன்கள் நகர்புறம் முதல் நாட்டுப்புறம் வரை பரவியுள்ளன.  செல்போன்களின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் செல்போன் என்பது ஒரு அந்தஸ்து குறியாக இருந்தபோதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1917 - வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்.

* 1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச்செயலாளரானார்.

* 1933 - நாசி ஜெர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.

* 1948 - தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.

* 1958 - பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடுத்தது.

* 1974 - 13 அமெரிக்க மாநிலங்களில் கடும் சூறாவளி காரணமாக 315 பேர் கொல்லப்பட்டனர். 

 

 

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு நாள்: ஏப்ரல் 3, 1680

 
அ-அ+

பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்தவர். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த இவரது

 
 
 
 
மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு நாள்: ஏப்ரல் 3, 1680
 
பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்தவர். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த இவரது தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர்.

ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கத்திய இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார். ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது.

நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களை யுத்த காரணத்திற்காக பயன்படுத்துதல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார். மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார். அது இறப்பு எண்ணிக்கையையும், வேக தாக்குதல், திடீர் தாக்குதல், ஒருமுகப்பட்ட தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இருந்தது. அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச்சிறிய இராணுவமே இருந்தது. ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது.

அவர் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன, அவர் தம் தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டு கடற்படை கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி வைப்பதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப்பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் "இந்திய கடற்படையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். கடற்புற மற்றும் நிலப்பகுதி கோட்டைகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பதென்பது சிவாஜி மகாராஜின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. கடற்கரை மற்றும் கடல்எல்லைகள் மீதான சிவாஜியின் பாதுகாப்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கத்தையும், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அவர்களின் வர்த்தகத்தையும் தவிர்க்க முடியாமல் தாமதப்படுத்தியது.

இவ்வளவு திறமைவாய்ந்த சத்ரபதி சிவாஜி இரத்தபெருக்கு நோயான இன்டெஸ்டினல் ஆன்த்ரக்ஸினால் இறந்ததாக கூறப்படுகிறது. அவரின் இறுதிச்சடங்கு அவர் மகன் ராஜாராம் மற்றும் மனைவி சோயராபாய் முன்னிலையில் ராஜ்கட்டில் நடைபெற்றது. சிவாஜி மகாராஜின் இறப்பிற்கு பின்னர், அவர் மூத்த மகன் சாம்பாஜியும், சோயராபாயும் பேரரசின் கட்டுப்பாட்டைக் காப்பாற்ற போராடினார்கள். ஒரு சிறிய போராட்டத்திற்கு பின்னர் சாம்பாஜி சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார்.

ஓர் ஏகாதிபத்திய சக்திக்கு எதிரான அவரின் போராட்டத்தினால், இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னரும் தொடர்ந்த இந்திய சுதந்திர போராட்டத்தில் சிவாஜி மகாராஜ் சுதந்திர போராட்டவீரர்களின் ஒரு முன்னுதாரணமாக இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசராக நினைவு கூறப்படுகிறார். மேலும் இந்திய வரலாற்றில் உள்ள ஆறு பொற்காலங்களில் ஒன்றாக அவர் ஆட்சி புரிந்த காலம் போற்றப்படுகிறது. சிவாஜி மகாராஜாவின் ஆட்சி ஒரு வீரம் மிகுந்த, முன்மாதிரியான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மஹாராஷ்டிராவின் பள்ளிக்கூட பாடப்புத்தகங்கள் விளக்குகின்றன, மேலும் அவர் நவீன மராட்டிய தேசத்தின் நிறுவனர் என்றும் கருதப்படுகிறார். ஒரு நீண்டகால மஹாராஷ்டியவாத அடையாளத்தை உருவாக்குவதிலும், அதை பலமான இராணுவ மற்றும் நியாய பாரம்பரியங்களுடன் ஒன்றி கலப்பதற்கும் அவர் கொள்கைகள் கருவியாக இருந்துள்ளன.

ஒரு பிராந்திய அரசியல் உட்கட்சியான சிவசேனா, சிவாஜி மகாராஜிடம் இருந்து முன்னுதாரங்களைப் பெற வேண்டும் என்று கோருகிறது. சிவாஜி மகாராஜை கௌரவிக்கும் வகையில், சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு பொதுத்துறை கட்டிடங்களும் மற்றும் பிற இடங்களும் பெயரிடப்பட்டது போன்றே, மும்பையில் உள்ள உலக பாரம்பரிய இடமான விக்டோரியா டெர்மினஸ் மற்றும் சஹார் சர்வதேச விமான நிலையம் இரண்டும் முறையே சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டன. புதுடெல்லியில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து நிலையத்திற்கும் சிவாஜி மகாராஜின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய கப்பற்படையின் தி ஸ்கூல் ஆப் நேவல் இன்ஜினியரிங் என்பது ஐஎன்எஸ் சிவாஜி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம் என்பது சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஹாலியா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
 

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

"குழந்தையை நீங்கள் சரியாகத்தான் கவனித்துக்கொள்கிறீர்களா?" - அவசியத்தை விளக்கும் கதை! #FeelGoodStory

 
 

உன்னை அறிந்தால்

மெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ஃபல்கம் (Robert Fulghum) பல `பெஸ்ட் செல்லர்’ புத்தகங்களை எழுதியவர். ஒரு கருத்தரங்கில் பேசும்போது இப்படிக் குறிப்பிட்டார்... ``நீங்கள் சொல்வதை குழந்தைகள் கேட்பதில்லை என்பதற்காகக் கவலைப்படாதீர்கள். அவர்கள் எப்போதும் உங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகக் கவலைப்படுங்கள்.’ குழந்தைகளுக்கு பெற்றோர்தான் ஆதர்சம் என்பது பலருக்குப் புரிவதில்லை. எல்லா குழந்தைகளுக்குமே முதல் ரோல்மாடல் அப்பாவாகவோ, அம்மாவாகவோதான் இருப்பார்கள். குழந்தைகள் அவர்களைச் சுற்றி நடக்கிற எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வயதில் அவர்களை பாதிக்கிற விஷயங்கள் ஆழ்மனதில் அப்படியே பதிந்தும் போய்விடுகின்றன. எனவே, பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் மனதில் தவறான எண்ணமோ, கருத்தோ பதிந்து போய்விடாமல் வளர்க்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது. அது ஏன் என்பதை விளக்குகிறது இந்தக் கதை. 

 

கதை

அந்தப் பெண்மணி ஓர் ஆசிரியை. அன்றைக்கு இரவுச் சாப்பாடு முடிந்த பிறகு, வகுப்பு மாணவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விடைத்தாள்களைத் திருத்த உட்கார்ந்தார். அவருடைய கணவர் அவருக்கு எதிரே ஒரு மேசையிலமர்ந்து தன் கையிலிருந்த ஸ்மார்ட்போனை நோண்டிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் போனது. அவர் யதேச்சையாகத் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். கண்களில் நீர் திரள, தன் கையிலிருந்த ஒரு விடைத்தாளையே பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட கணவர் அவரருகே போனார். 

``ஏய்... என்னாச்சு?’’ 

``நேத்து நாலாம் கிளாஸ் படிக்கிற பசங்களுக்கு ஒரு ஹோம்வொர்க் கொடுத்திருந்தேன். `என்னோட ஆசை’னு ஒரு தலைப்புக் கொடுத்து, `என்ன தோணுதோ எழுதிட்டு வாங்க’னு சொல்லியிருந்தேன்...’’ 

``சரி... அதுக்கும் நீ கண்கலங்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ கையிலவெச்சிருக்குற பேப்பர்ல அப்படி என்ன எழுதியிருக்கு?’’ 

``படிக்கிறேன்... கேட்குறீங்களா?’’ 

போன்

தலையசைத்தார் கணவர், ஆசிரியை படிக்க ஆரம்பித்தார். அதில் ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்... ``நான் ஒரு ஸ்மார்ட்போனாகணும்கிறதுதான் என்னோட ஆசை. ஏன்னா, என்னோட அம்மா, அப்பாவுக்கு ஸ்மார்ட்போன் ரொம்பப் பிடிச்சிருக்கு. சில நேரங்கள்ல என்னை கவனிச்சுக்கிறதைக்கூட மறந்துட்டு, போனை அவ்வளவு நல்லா கவனிச்சுக்கிறாங்க. அப்பா ஆபிஸ்லருந்து களைச்சுப் போய் வருவாரு; என்கூடப் பேசுறதுக்கு நேரமில்லைன்னாக்கூட, போன்ல பேசுறதுக்கு அவருக்கு நேரமிருக்கு. அம்மாவும் அப்பாவும் எவ்வளவு பிஸியான வேலையில இருந்தாலும், போன் ஒரு ரிங் அடிச்சாப் போதும், ஓடிப்போய் எடுத்துடுறாங்க; பல நேரங்கள்ல நான் சத்தமாக் கூப்பிட்டாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க. ஸ்மார்ட்போன்ல கேம் விளையாடுறாங்களே தவிர, என்கூட அதிகமா விளையாடுறதில்லை. அவங்க யாரோடயாவது போன்ல பேசிக்கிட்டிருக்கும்போது, எவ்வளவு முக்கியமான விஷயமா இருந்தாலும் நான் சொல்றது அவங்க காதுல விழுறது இல்லை. அதனால, அம்மாவும் அப்பாவும் என்னையும் கவனிக்கணும்கிறதுக்காக நான் ஒரு ஸ்மார்ட்போனா ஆகணும்னு ஆசைப்படுறேன்...’’ 

இதைக் கேட்ட கணவரும் நெகிழ்ந்துதான் போனார். ``சரி... இதை யார் எழுதியிருக்குறது?’’

``நம்ம பையன்தான்.’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

திமிங்கிலத்தின் மூதாதையர் மான்களா...? - ஆச்சர்யமூட்டும் ஓர் ஆராய்ச்சி

 

விலங்குகள் ஆராய்ச்சி

இது நடந்து முப்பது வருடங்கள் இருக்கும். தென்னிந்திய புவியியல் ஆராய்ச்சியாளரான ரங்கா  ராவ் காஷ்மீரின் பழமையான பாறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு விலங்கின் உடல் படிமம் கிடைத்தது. அந்தப் பாறையில் இருந்து சில பற்களையும் மண்டையோட்டுப்  பகுதியையும் சில எலும்புகளையும் மட்டுமே அவரால் பிரித்து எடுக்க முடிந்தது. அதை அவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அது முடிவடையும் முன்னரே சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரது மனைவியின் மூலம் அந்தக் கூறுகளைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர் தெவிசன் அவரது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

 

செயற்பாடுகள் அனைத்திற்குமான அடையாளங்களையும் ஆதாரங்களையும் விட்டுச்செல்வது இயற்கைக்கு வாடிக்கை. அப்படிக் கிடைத்த படிமங்கள் மூலம் நாம் அறிந்த அதிசயங்கள் எண்ணிலடங்காது. ஆயினும் மேன்மேலும் அவள் தனது சாதனைகளைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கிறாள். அந்தப் பறைசாற்றலின் ஒரு பகுதி தான் இந்த மானின் படிமம்.
டார்வினின் ஆராய்ச்சிகளின் படி விலங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவை நாம் எய்தி இருந்ததால், நீர்வாழ் பாலூட்டிகள் முதலில் நிலத்தில் தான் வாழ்ந்திருந்தன என்பதை நாம் ஓரளவு புரிந்துகொண்டோம். ஆனால் கடலில் வேட்டையாடியாக இருக்கும் அவை நிலத்தில் வேட்டையாடிகளாகத் தான் வாழ்ந்தன என்று நினைத்துவிட்டோம். அதனால், நிலத்தில் தாவர உண்ணிகளாக வாழ்ந்த இன்றைய நீர்வாழ் பாலூட்டிகள், வேட்டையாடிகளுக்கு பயந்தே அன்று நீருக்குள் சென்றன என்ற கூற்றை நம்புவதற்குச் சிறிது கடினமாகத் தான் இருக்கும். கடினமாக இருந்தாலும் அது தான் உண்மை.

விலங்குகள் ஆராய்ச்சி

சருகு மான், எலி மான் என்று அழைக்கப்படும் ஒரு மான் இனம் இன்றளவும் ஆப்பிரிக்காவில் உண்டு. அது தன்னை வேட்டையாட வரும் விலங்கிடம் இருந்து தப்பிக்க நீருக்குள் புகுந்துவிடும். சுமார் 4 நிமிடங்கள் வரை நீருக்குள் அதனால் சமாளிக்க முடியும். மிகவும் ஆபத்தான  சூழலில் அதற்கு மேலும் அதனால் சமாளிக்க முடியும். இதன் ஆதி இனத்தில் இருந்து தான் 4.8 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடல்வாழ் பாலூட்டிகள் பிரிந்து சென்றுள்ளன.

ஆம், ரங்கா  ராவ் கண்டெடுத்த படிமங்களை ஆராய்ந்த தெவிசன், அதை எதனோடும்  ஒப்பிட முடியாமல் குழம்பியிருந்தார். அவர் ஒப்பிட்ட அனைத்துமே இன்றைய நில வாழ் நான்கு கால் விலங்குகளோடு. தற்செயலாக அவரது உதவியாளர் அந்த மண்டையோட்டை உடைத்திருக்கவில்லை என்றால் இன்றுவரை நான்கு கால்களும் நீந்துவதற்கு ஏற்ற விரல்களற்ற பட்டையான நீந்தும் துடுப்பு உறுப்பாக மாறியிருக்கலாம் என்று அவர் கற்பனை கூடச்  செய்திருக்க மாட்டார்.

இண்டோஹியஸ் ( Indohiyus) அந்த விலங்கின் பெயர். வளைந்த முதுகுடன் நான்கு கால்களோடு மான் போன்ற முக அமைப்பு கொண்டது. சில கோடி ஆண்டுகளுக்கு முன் அது நிலத்தில் அதுவும் தாவரங்களை உண்ணும் ஹெர்பிவோராகத் ( Herbivore) தான் வாழ்ந்து கொண்டிருந்தது. வேட்டைக்குப்  பயந்து சில சமயங்களில் வேட்டையாடியை ஏமாற்றுவதற்காக நீருக்குள் சென்றுவிடும். காலப்போக்கில் அதன் உடலமைப்பு நீர் நிலம் இரண்டிலும் வாழ்வதற்கு ஏற்றவாறு மாறியது. அதன் தலை எலும்பில் காதுப் பகுதியின் உட்புற எலும்பு, இதற்கு முன் கிடைத்த நீர்வாழ் பாலூட்டி மூதாதைகளின் படிமங்களில் இருந்த அமைப்போடு ஒத்துப்போகவே அவருக்கு ஒரு பொறி தட்டியது. ஏன் இது திமிங்கிலம், டால்பின் போன்ற விலங்குகளுக்கு முந்தையதாக இருந்திருக்கக் கூடாது என்ற கோணத்தில் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் உடல் எலும்புப் பாகங்களில் சில மிகக் கடினமாகவும் சில மிக மென்மையாகவும்  இருப்பதற்கான காரணத்தை அப்போது தான் அவர் புரிந்துகொண்டார். நீர்வாழ் பாலூட்டிகளுக்கு உட்புற எலும்புகள் மிக உறுதியாக இருக்கும்,வெளிப்புற எலும்புகள் மிக மென்மையாக  இருக்கும்.  

அது தாவர உண்ணியாக வாழ்ந்தது என்பதை ஆராய்ந்து புரிந்துகொண்ட அவர், வேட்டையாடிகளுக்கு பயந்து நீர்நில வாழ் உயிரினமாக மாறிய பின் அதன் எலும்பில் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆபத்துகளில் இருந்து தப்பிக்க ஆழத்திற்குச் சென்று ஒழிந்துகொண்ட அவை உணவுக்காக அங்கே இருந்த சிற்றுயிர்களையே சாப்பிடத் தொடங்கி மாமிச உண்ணியாகவும் மாற்றமடைந்தன. இந்தக் கடினமான எலும்புகளோடு நிலத்தில்  விரைவாகச் செயல்பட முடியாது. நிலத்தில் அதன் வேகம் குறைந்திருக்கும். அதே சமயம் நீரில் அதன் செயற்பாடு அதிகரித்திருக்கும். இதன் பிறகே முழுமையான நீர்வாழ் இனமாக இண்டோஹியஸ் மாறியிருக்கும்.

காலப்போக்கில் திமிங்கிலங்களின்  மூதாதையான பாகிசெடிடேவாக (Pakicetidae) வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதிலிருந்து ஆம்புளோசெடிடேவாக ( Ambulocetidae) தனது கால்கள் முழுமையாக மாற்றமடைந்து நீந்துவதற்கு ஏற்றத் துடுப்பு உறுப்புகளோடு, முடிகள் இன்றி வழுவழுப்பான தேகத்தோடு திமிங்கிலமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

மனித அறிவால் மான்களுக்கும் திமிங்கிலத்துக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டினை சிறிதளவும் பொருத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் நமது பார்வை வேறு. இயற்கையின் பார்வை வேறு. அவள் இவ்வுலகின் ஒவ்வொரு உயிருக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறாள். அந்தத் தொடர்பு பற்றி தெரிந்துகொள்ளத் தேடுவதைவிட புரிந்துகொள்ள முயலவேண்டும். அதுவே அவளை அரிக்காமல் அழிக்காமல் வாழ வழிவகுக்கும்.

நிலம் தந்த ஆபத்தில் இருந்து பிழைக்க நீருக்குள் சென்றன திமிங்கிலங்கள். ஆனால் மனிதனால் மாசடையும், குப்பைத் தொட்டியாகும் ஆழ்கடலில் வாழமுடியாத அவை இதற்கு மேல் எங்கே செல்வது என்று தெரியாமல் இயற்கை அன்னையிடம் முறையிட்டு, தனக்கொரு வழிகேட்டு மனிதர்கள் முன்னால் கூட்டம் கூட்டமாகக்  கரைக்கு வந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டு தற்கொலைப் புரட்சி புரிகின்றன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒவ்வொரு 11 நாளுக்கும் ஒரு மொழி அழிகிறது... களத்தில் இறங்கிய கூகுள்!

 

கூகுள்


உலக முழுவதும் கிட்டத்தட்ட 7,000- க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் UN-ன் மதிப்பீட்டின்படி அடுத்த அரை நூற்றாண்டின் இறுதிக்குள் இவற்றில் பாதி மொழிகள் அழிந்து விடும் என்று கூறியுள்ளனர். இந்த அழிவு திடீரென நிகழ்ந்து விடவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக அம்மொழிகள் சிதைக்கப்பட்டு அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் 18 மொழிகள் கண்டிப்பாக அழிந்துவிடும் நிலையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மொழிகளைப் பேச ஒவ்வொரு மொழிக்கும் தலா ஒருவர் மட்டுமே இருக்கிறார் என்று U.N Atlas of Endangered Languages கூறியுள்ளது. இந்த மொழிகளைப் பேசும் அந்த ஒருவர் இறந்து போனால் அந்த மொழியும் அவரோடு இறந்து போய்விடும். அந்த மொழியைக் கடைசியாகப் பேசியவர் அவராகத்தான் இருக்க முடியும். இதுமட்டுமல்லாமல் 574 மொழிகள் `ஆபத்தான நிலையில்' உள்ளது. இந்த மொழிகள் அழியாமல் இருப்பதற்குக் கற்றல் வழிமுறைகளை எளிமைப்படுத்துவது, அந்த மொழியின் மீதான அரசாங்கத்தின் அணுகுமுறை, வயதானவர்கள் தங்களின் மொழி, அவற்றின் முக்கியத்துவம் பற்றிய புரிதலை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த நூற்றாண்டின் இறுதியோடு உலகில் 90 சதவிகிதம் மொழிகள் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மொழியியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு 11 நாள்களுக்கும் ஒரு மொழி புழக்கத்திலிருந்து அழிவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

 

மனித வரலாற்றில் சொல்லப்படாத பல மொழிகள் அழிந்துள்ளன. இருந்தாலும் ஒரு மொழியின் அழிவு எப்படி மனிதனைப் பாதிக்கும் என நீங்கள் கேட்கலாம். மொழி என்பது பிறரோடு தொடர்புகொண்டு பேசுவதற்கு மட்டும் அல்ல ; அவை ஓர் இனத்தின் வரலாறு, கலாசாரம், ஆன்மிகம், அறிவு என அனைத்தையும் தாங்கிக்கொண்டிருக்கிறது. மொழிகள் ஒரு தனிமனிதரின் அடையாளமும் கூட. 
   
இப்படி அழியும் மொழிகள் மெள்ள மெள்ள அவர்களின் சந்ததியினராலேயே மறக்கப்பட்டு பின்னர் வரலாற்றுச் சுவடு கூட இல்லாமல் போவது பெரும் சோகம். இந்த மொழிகளை வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்கப்படாமல் காக்க கூகுள் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. Linguistic diversity என்ற நிறுவனத்துடன் இணைந்து  www.endangeredlanguages.com என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது கூகுள். இந்தத் தளத்தில் உள்ளே சென்று explore பொத்தானை அழுத்தினால் உலக வரைபடம் தோன்றும். இது மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட வரைபடம். இதில் எந்தெந்த நாட்டில் எந்தெந்த இடத்தில் அழியும் நிலையில் மொழிகள் உள்ளன எனப் புள்ளி வைத்துக் காட்டும், அந்தப் புள்ளியினை கிளிக் செய்தால் அந்த மொழியினைப் பற்றிய சில தகவல்கள் தோன்றும். மொழிகளைக் காக்க வேண்டும் என்று ஆர்வம் உங்களுக்கு இருந்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள மொழிகள் பேசுவோர் எவரேனும் பற்றித் தெரிந்தாலோ, அல்லது அந்த மொழியால் எழுதப்பட்ட சிறு குறிப்பு கிடைத்தாலும் அதனை இந்தத் தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அதனை அந்தக் குறிப்பிட்ட மொழி ஆவணங்களுடன் சேர்க்கப்பட்டுவிடும். இனி எத்தனை தலைமுறை வந்தாலும், இப்படி ஒரு மொழி இந்த இடத்தில் பேசப்பட்டு வந்தது எனத் தெரிந்துகொள்ளலாம்.

கூகுள்

 

 கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ போல உலகில் பழைமையான மொழிகள் பல உண்டு. பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று. கிரேக்கம், லத்தீன் மொழிகள் எல்லாம் காலத்தின் போக்குக்கு ஈடு கொடுக்க முடியாமல் அழிந்து விட்ட நிலையில், பல ஆண்டு காலம் எந்த மொழியின் ஆதிக்கத்துக்கும் பணிந்து விடாமல் தழைத்து நிற்பது நம் தமிழ் மொழி. இப்போது அழிவுச் சாயல் தமிழ் மொழி மீது இல்லை. எனினும், காலப் போக்கில் அதன் சாயல் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. இனி வரும் தலைமுறையினருக்கு மொழியை மட்டும் கடத்தாமல், மொழியின் தொன்மையையும் உணர்ச்சிகளோடு சேர்த்துக் கடத்தினால் நிச்சயம் எத்தனை காலம் ஆனாலும் நம் மொழியை அழிவின் பக்கம் செல்லாமல் தடுக்கலாம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

"ஹேய் ஜோயல், நான் மார்ட்டின் பேசுறேன்"... 45 ஆண்டுகளைக் கடந்த உலகின் முதல் மொபைல் கால்

 

மக்கெல்லாம் செல்போன் என்ற விஷயம் அறிமுகமாகி எத்தனை வருடம் ஆகியிருக்கும்... ஒரு பதினைந்து வருடம் அல்லது இருபது வருடம் இருக்குமா ? அதே நேரத்தில் உலகின் முதல் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டு எத்தனை வருடம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்... சரியாக இன்றோடு 45 வருடங்கள் ஆகிறது. மோட்டோரோலா நிறுவனத்தின்  Motorola DynaTAC-தான் உலகின் முதல் செல்போன். 1973-ம் ஆண்டு  இதே போல் ஒரு ஏப்ரல் 3-ம் தேதியன்றுதான் அந்த செல்போனில் இருந்து முதல் கால் செய்யப்பட்டது.

அது நிஜமாவே செங்கல்தான்!

 

Motorola DynaTAC செல்போன்

1940களின் காலகட்டத்திலேயே ஒரு செல்போனை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அமெரிக்காவில் இருந்த பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தது. அந்த வருடத்திலேயே ஒரு நிறுவனம் அமெரிக்க அரசின் தொலைத்தொடர்பு துறையிடம் செல்போன் தயாரிப்பதற்கான அனுமதியைக் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தது. அதற்கடுத்தடுத்த  வருடங்களில் இந்தத்துறையில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை; மோட்டோரோலா தனது ஆட்டத்தைத்  தொடங்கும் வரை. செல்போன் தயாரிக்கும் முயற்சியில் மோட்டோரோலா முழு முயற்சியில் இறங்கியது. 1960-ம் ஆண்டு ஜான் எப் மிட்ஷெல் என்ற பொறியாளர் அந்த நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு அவர் தலைமையிலான குழுவினர் ட்ரான்ஸ்சிஸ்டர்கள் மூலமாக இயங்கும் முதல் பேஜரை கண்டுபிடிக்கிறார்கள்.

 

 

அதைத் தொடர்ந்து  1973-ம் ஆண்டு மார்ட்டின் கூப்பர் என்பவர்தான் முதன் முதலாக கையில் எடுத்துச் செல்லும் வகையிலான செல்போனை உருவாக்கினார். அதுதான்  Motorola DynaTAC.  நம்மில் பலருக்கு செல்போன் என்றாலே உடனே ஞாபகத்துக்கு வரும் பெயர் நோக்கியாவாகத்தான் இருக்கும். அவை நம் கைகளுக்கு வரும்பொழுது, அதன் அளவு கைக்கு அடக்கமாக இருந்தது; அப்படி இருந்துமே அதற்கே நம்மூர்க்காரர்கள்  'செங்கல்' என்று பெயர் வைத்தார்கள். ஆனால் 1973-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மொபைலை நேரில் பார்த்திருந்தால் அதற்கு அந்தப்  பெயர் பொருத்தமாக இருந்திருக்கும். அதன் அளவு பத்து இன்ச், எடை ஒரு கிலோவிற்கும் மேல். அதை ஒரு கையில் வைத்துப் பேசுவதே சற்று கடினமான விஷயம்தான். 10 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 நிமிடம் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்ற அளவிற்குத்தான் அதன் பேட்டரி திறன் இருந்தது. 

மார்ட்டின் கூப்பர்

மார்ட்டின் கூப்பர் எப்படியோ ஒருவழியாக செல்போனை உருவாக்கி விட்டார் . அதை எப்படியாவது பயன்படுத்திப் பார்க்க வேண்டுமே, யாருக்காவது போன் செய்ய வேண்டுமே என்று நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கினார். செல்போனில் கால் செய்ய வேண்டும் என்றால் முதலில் அதற்கு தேவையான கட்டமைப்புகள் வேண்டுமே? உடனே அதற்காக மன்ஹட்டன் பகுதியில்  900- MHz அலைவரிசையைத் தரும் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. அடுத்தது யாருக்காவது போன் செய்து பரிசோதித்துப் பார்ப்பதுதான் மிச்சம். 1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி மன்ஹட்டன் பகுதிக்கு சென்று அவர் நிற்கும் பகுதியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நியூ ஜெர்சியில் அமைந்திருக்கும் பெல் லேப்ஸ் ( Bell Labs) நிறுவனத்தின் தலைமையகத்திற்கு கால் செய்கிறார். நியாயமாகப் பார்க்கப்போனால் மார்ட்டின் மோட்டோரோலா நிறுவனத்திற்குத்தானே கால் செய்திருக்க வேண்டும்? அவர் எதற்காக பெல் லேப்ஸ்க்கு போன் செய்தார்?

அங்குதான் விஷயமே இருக்கிறது. அந்த கால கட்டத்தில் மொபைல் தயாரிக்கும் முயற்சியில் மோட்டோரோலாவுக்கு போட்டியாக இருந்தது இந்த பெல் லேப்ஸ்தான். மார்ட்டின் கூப்பர் அவர்களுக்குப் போன் செய்து சொன்ன விஷயமும் அதுதான், உலகில் முதன்முதலாக செல்போன் மூலமாக நடைபெற்ற முதல் உரையாடலும் அதுதான் " ஜோயல், நான்தான் மார்ட்டின் பேசுகிறேன். நான் எதிலிருந்து பேசுகிறேன்  தெரியுமா? நாங்கள் உருவாக்கிய உண்மையான கையடக்க செல்போனில் இருந்து". அதன் பிறகு அந்த செல்போன் அரசாங்கத்தின் அனுமதியை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு பத்து வருடங்கள் ஆனது.1984-ம் ஆண்டில்தான் Motorola DynaTAC விற்பனைக்கு வந்தது அப்பொழுது அதன் விலை இரண்டு லட்சத்திற்கும் அதிகம். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ஹிட்லர் பிரசாரத்தை முறியடித்த பிபிசி வானொலி சேவை

80 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியின் பிரசாரத்தை முறியடிக்கும் நோக்கில் ஸ்பேனிஷ் மற்றும் போர்ச்சுகீஸ் மொழிகளில் பிபிசி சேவை தொடங்கப்பட்டது.

  • தொடங்கியவர்

1974 – 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் கொல்லப்பட்டனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் 03

நிகழ்வுகள்

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர்.
1885 – விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான செருமனியக் காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார்.
1917 – வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் உருசியா திரும்பினார்.
1922 – ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
1933 – நாட்சி செருமனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1942 – இரண்டாம் உலகப் போர்: பட்டான் தீபகற்பத்தில் சப்பானியப் படையினர் அமெரிக்க மற்றும் பிலிப்பீன்சு படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1948 – தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1958 – பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடுத்தது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973 – உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் என்பவர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பருக்கு மேற்கொண்டார்.111-500x303.jpg
1974 – 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் கொல்லப்பட்டனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.
1975 – பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
1981 – உலகின் முதலாவது பெயரத்தகு கணினி “ஒஸ்போர்ன் 1” சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1982 – போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.
1996 – ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்ஜீரியாவில் தலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

1914 – சாம் மானேக்சா, இந்திய இராணுவத் தலைமைத் தளபதி (இ. 2008)
1924 – மார்லன் பிராண்டோ, அமெரிக்க நடிகர் (இ. 2004)
1934 – குட்டால், சிம்ப்பன்சியைப் பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண்
1954 – க. கிருஷ்ணசாமி, இந்திய மருத்துவர், அரசியல்வாதி
1955 – அரிகரன், இந்தியப் பாடகர்
1961 – எடி மர்பி, அமெரிக்க நடிகர்
1962 – ஜெயபிரதா, இந்திய நடிகை, அரசியல்வாதி
1973 – பிரபுதேவா, இந்திய நடிகர், நடன அமைப்பாளர்
1973 – ஆடம் ஸ்காட், அமெரிக்க நடிகர், இயக்குனர்
1982 – கோபி ஸ்மல்டேர்ஸ், கனடிய நடிகர்
1986 – அமாண்டா பைன்ஸ், அமெரிக்க நடிகை
1989 – திசாரா பெரேரா, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1680 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1630)
1897 – ஜொகான்னெஸ் பிராம்ஸ், செருமானிய இசையமைப்பாளர் (பி. 1833)
1991 – கிரஃகாம் கிரீன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1904)

சிறப்பு நாள்

உலக பத்திரிகை சுதந்திர நாள்

http://metronews.lk

  • தொடங்கியவர்
‘ஒருவர் நிலையை ஏற்றிவைத்தால், பூமி உங்களைப் போற்றும்’
 

image_aed46b2f6e.jpgகல்வி, செல்வம், அறிவாற்றல் மிகுந்தவர்களைப் பார்த்து, பிறர் பொறாமை கொள்வதுண்டு. ஆனால், இவை எதுவுமற்ற ஏழைப் பாமரனைப் பார்த்துப் பொறாமை கொள்பவர்களை என்ன என்பது? 

தினம் ஒருவேளை உண்ணும் ஒருவன், தற்செயலாக ஓரிரு ரூபாய்கள் உழைத்துவிட்டால், போதும் அவனைப் பார்த்து, கிண்டல் செய்யும் வக்கிர நோக்கம் கொண்டவர்கள் கொண்ட பூமி இது. 

“ஆளைப் பார் பரதேசியாகத் திரிந்தவனுக்கு இன்று என்ன வந்துவிட்டது” எனச் சொல்லுபவர்கள், ஏழைகள் வாழவழியின்றி அப்படியே இருக்க வேண்டும் எனக் கருதிக்கொள்பவர்களாவர். 

பணக்காரர்களுக்கு மண்டியிட்டு, பணிவிடை செய்பவர்கள் அந்த அடிமை நிலையில் இருந்து, மீள விரும்பாமல், கஸ்டப்பட்டு வாழும், பாமரர்களை இஷ்டத்துடன் திட்டித்தீர்ப்பார்கள். 

கூரான ஆயுதங்களை விட, குத்திக் கொல்லும் நாக்கை உடைய, வக்கிர புத்திக்காரர்கள், வலு இழந்தவர்களைக் கண்டும் இரக்கம் கொள்ளாதவர்கள். ஒருவர் நிலையை ஏற்றிவைத்தால், பூமி உங்களைப் போற்றும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.