Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பேசும் படம்: கடலோரக் கவிதைகள்

2%20Napier%20Bridge

சென்னைக் கூவத்தை அழகாகக் காட்டும் நேப்பியர் பால விளக்கொளி.

 

4%20Kovalam%20Sunrise

ஜொலிக்கும் சூரியனும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் கடலும். இடம்: கோவளம் கடற்கரை.

       
 
6%20Kanyakumari

ஆழிக்கு அழகு சேர்க்கும் தடங்கள், இடம்: கன்னியாகுமரி.

 

 

10%20Pambam%20Railtrack

வானம் காட்டும் வர்ணஜாலத்தில் ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.

 
13%20The%20long%20straight%20road

நீலமும் கருமையும் சந்திக்கும் தனுஷ்கோடி.

 

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கண்ணழகி, நடிப்பு ராட்சசி, பாடி ஷேமிங்குக்கு பதிலடி...ஹாட்ஸ் ஆஃப் நித்யா மேனன்! #HBDNithyaMenen

 
 

'சுருட்டை முடியையும், திராட்சை கண்களையும் கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தவர், நித்யா மேனன். நடிப்பில் ராட்சசி. தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர். 

நித்யா மேனன்

 பிறந்தது கேரளாவில். பல நடிகைகளை இன்டர்வியூ எடுக்க நினைத்து ஜர்னலிசம் படித்தாராம்... ஆனால், தானே இன்டர்வியூ எடுக்கும் நிலைக்குச் சென்றது இவருடைய சக்சஸ் சீக்ரெட். 

'ஹனுமன்' என்கிற ஆங்கில தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய மீடியா பயணத்தின் முதல் புள்ளியை தொடங்கினார் நித்யா.

பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும்போது, டூரிஸம் மேகஸினில் இவர் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத்தான் 'ஆகாஷா கோபுரம்' படத்தில் மோகன்லாலுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது நித்யாவுக்கு. 'அல மோடலைன்டி’ படத்துக்காக நந்தி விருது வாங்கிய சமயத்தில் தான் தமிழ் படங்களில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

நித்யா மேனன்

மிழில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தன்னை தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனவர் 'மெர்சல்' படத்தின் 'ஐஸ்'ஸாக அனைவரின் நெஞ்சத்திலும் உறைந்தார். இதுவரை நித்யா நடித்துள்ள எந்த கதாபாத்திரமும் ஒரே சாயலில் இருக்காது. ஏனெனில், புதியதாக ஒவ்வொன்றையும் தேடி, முயன்று அதில் வெற்றி அடைவதுதான் இவருடைய பலம்.

 ''ஒன்றுக்கும் ஆகாத விஷயங்களைப் பற்றி மக்கள் பேசுவதை நான் விரும்பவில்லை. அவைகளை ஊக்கப்படுத்துகிற விஷயங்களின் நடுவில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. சமூக வலைத்தளத்தைப் பொறுத்தவரை எனக்கான ஒரு பாதையை நான் உருவாக்கி வைத்திருக்கிறேன். அதில் மட்டுமே பயணிக்கிறேன்'' என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

'ஓகே கண்மணி' படத்தில் ஈரமான கண்கள், குண்டு கன்னம், சுருள் முடி ... பார்க்கிற நமக்கும் அவரின் உற்சாகத்தைக் கடத்தியிருப்பார். திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சமூக வலைத்தளத்தில் விவாதங்களை உண்டாக்கியது. அப்போது, 'திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதில் தவறேதும் இல்லை. திருமணம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் உரிமையை இளைஞர்களிடம் கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்வதால் பிரச்னைகள் உருவாகிப் பிரியக்கூட நேரிடலாம். எனினும், இந்த உறவில் குழந்தை பிறந்தால் பிரச்சனைகள் வரும்' என தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நித்யாவுக்கு லைக்ஸ், ஷேர்ஸ் குவிந்தது.

நித்யாமேனன்

டிகைகளின் உடல்வாகு விஷயம் எப்போதும் விவாதங்களுக்கு உட்படும். ஸ்லிம், ஃபிட் என்கிற எல்லையை உடைத்து 'நான் இப்படித்தான்... என் உடலை யாருக்காகவும் குறைக்க முடியாது. உடல் பருமனா, ஆரோக்கியமா என்றால்... ஆரோக்கியம் என்றுதான் சொல்வேன். என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. என்னைப் பற்றிய கமெண்ட்ஸ் என்னை ஒன்றும் செய்யாது'' என்று தன் முடிவில் உறுதியாக நின்றவர்.

'ஒகே கண்மணி' பட ரிலீஸின் போது, இந்தப் படத்தில் நடித்த போது மணிரத்தினத்திடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் என ஒரு கேள்வியை நித்யாவிடம் முன்வைக்கிறார்கள். 'கண்டிப்பாக நான் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டுமா..? ஐ லவ் மணி சார். அதற்காக நான் அவரிடமிருந்து இதை கற்றுக் கொண்டேன் என்றெல்லாம் கூற முடியாது. ஒவ்வொருவரும் ஒருவித தடைகளை சந்திக்கும்போது அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். அப்படியான தடைகளை ஓகே கண்மணியில் நான் சந்திக்கவில்லை. 'காஞ்சனா 2' பட 'கங்கா' கதாபாத்திரத்தில் நடிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில், மாற்றுத்திறனாளியாக  நடிப்பது சற்று சிரமமான விஷயம்தான்'' எனத் திறமையாக பதிலளித்தார்.

நித்யா மேனன்

துறுதுறு நடிகை ஒருபக்கமென்றால், மறுபக்கம் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரி. ஏஆர் ரகுமானின் இசையில் பாடியதுதான் இவருடைய பொக்கிஷமான  வாழ்நாள்  நினைவுகளில் ஒன்றாம். ஒவ்வொரு முறைப் பாட்டு பாடும்போதும் தனக்குள் ஒரு அமைதியையும், மகிழ்ச்சியையும் உணர்வதாகக் கூறியிருக்கிறார். உங்களுக்கு மட்டுமல்ல நித்யா, எங்களுக்குள்ளும் உங்களது குரல் மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.

'இதுவரை என்னுடைய எல்லா முடிவுகளையும் என் மனத்தின் விருப்பத்திற்கு ஏற்பவே எடுத்துள்ளேன். யாரையும் போட்டியாளராக நினைத்ததேயில்லை'' என்கிற பளீச் ஸ்டேட்மென்டில் உணர்ந்து கொள்ளலாம் நித்யாவை.

மேக்கப் என்பது நடிகைகளுக்கு மிகவும் முக்கியம் என்கிற பிம்பத்தையும் தகர்த்தெறிந்து இருக்கிறார். நடிகை ரோகிணியின் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'அப்பாவின் மீசை' படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார்.

தார்த்தமாக தன் கதாபாத்திரத்தைத் திரையில் பிரதிபலிக்கத் துடிக்கும் நித்யாவுக்கு இன்று பிறந்த நாள்.

ஹாப்பி பர்த்டே நித்யா..!

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

 

அழகான நீச்சல் தடாகம்

  • தொடங்கியவர்

உள்ளத்தை கொள்ளையடிக்கும் 'பிரதிபலிப்புகள்' - பிபிசி நேயர்களின் புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

 

பிரதிபலிப்புசுபான் .பீர் முஹம்மது அபு தாபி

பிரதிபலிப்பு

ராகுல் சுந்தர், வேளச்சேரி

பிரதிபலிப்புரோகிணி.பா, ஈரோடு

பிரதிபலிப்பு

காந்தி சங்கர், புதுச்சேரி

பிரதிபலிப்பு

பகத் முகமது, கல்முனை

பிரதிபலிப்பு

ஈஸ்வரமூர்த்தி, திருவல்லிக்கேணி

பிரதிபலிப்பு

வினோத் கண்ணன், திண்டுக்கல்

 

பிரதிபலிப்புராகவ்ப்ரசன்னா.எல், நங்கநல்லுர்

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

பறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யார்?

 
 

பறவைக்கூட்டம்

நமது ஊரில் இருக்கும்  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். வருடத்தின் குறிப்பிட்ட சில மாதங்களில் வேடந்தாங்கலைத் தேடி பறவைகள் படையெடுத்து வரும். அவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வருபவை. வடஅமெரிக்க கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் கனடா முதல் சைபீரியா வரை உலகின் பல இடங்களில் இருந்தும் பல்வேறு வகை பறவைகள் அங்கு வருகின்றன. இதில் பெரும்பாலானவை இனப்பெருக்கத்திற்காக வருபவை, சிலவை வேறு எங்கோ செல்லும் வழியில் இங்கே சில காலம் தங்கிச் செல்பவை. எது எப்படியாக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வேறு இடத்திற்கு வழி தவறாமல் வந்து சேர்கின்றன. இப்படிப் பல வருடங்களாக இந்த விஷயம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது, அதில் வேடந்தாங்கல் என்பது சிறிய உதாரணம்தான் உலகம் முழுவதிலுமே பல இடங்களில் பறவைகளின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது.

பறவைகளின்பாதை தவறுவதில்லை

பறவை

வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கும் போது அவை இலக்கின்றி பறந்து திரிவதைப் போல தோன்றினாலும் உண்மையில் அவை அப்படிப் பறப்பதில்லை. அவைகளுக்குத் தெரிந்த வழியில்தான் பறந்து செல்கின்றன. எந்த ஒரு பறவையாக இருந்தாலும் காலையில் இரை தேடிச் செல்லும் பின்பு மாலையில் சரியாக தனது இடத்தை அடைந்து விடும். பழக்கப்பட்ட இடங்களில் இருப்பதுதான் இப்படிச் சரியான பாதையைக் கண்டுபிடிக்கின்றன என்பதில்லை. எடுத்துகாட்டாகப் புறாப் பந்தயத்தில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் சென்று பறக்க விடப்படும் புறாக்கள் சில நாட்களில் வளர்க்கப்படும் இடங்களுக்கு வந்து சேர்ந்து விடும்.வானில் பறக்கும்போது திசையைச் சரியாக அறிந்துகொண்டால் மட்டுமே ஒரு பறவையால் சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் இந்த விஷயத்தில் பல வருடங்களாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரிய குழப்பம் உண்டு. 'பறவைகள் எப்படிச் சரியான வழியைக் கண்டுபிடிக்கின்றன'? அது மட்டுமின்றி  பூமியின் திசையை எப்படி அறிந்து கொள்கின்றன என்பது போன்ற விஷயங்கள் பல வருடங்களாகவே மர்மமாக இருந்து வந்தது.

திசையைக் கண்டுபிடிக்க உதவும் பூமியின் காந்தப்புலம்

https_%2F%2Fblogs-images.forbes.com%2Ftrபார்வையில் காந்தப்புலன்

 

பூமியைச் சுற்றி காந்தப்புலம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பூமியின் இந்த காந்தப்புலன் பல வகைகளில் உதவிகரமாக இருக்கிறது. பல வருடங்களாகவே காம்பஸ் எனப்படும் திசைகாட்டியின்  உதவியுடன் மனிதர்கள் திசைகளை அறிந்து வந்திருக்கிறார்கள். பறவைகளும் கூட திசைகளை அறிவதற்குப் பூமியின் காந்தப்புலத்தை பயன்படுத்தக்கூடுமோ என்ற சந்தேகம் பல வருடங்களாக இருந்துவந்தது. எனவே அதைச் சார்ந்து  அவற்றின் மூளைக்குள் திசைகாட்டி இருக்கிறது, அதன் இறக்கைகளில் இருக்கும் இரும்புதான் திசையைக் கண்டறிய உதவுகிறது என்பது போன்ற கருத்துக்கள் பல வருடங்களாகவே கூறப்பட்டு வந்தன. இறுதியாகப் பறவைகள் எப்படி திசையை சரியாகக் கண்டறிகின்றன என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் ஜீப்ரா பின்ச் ( zebra finche) மற்றும் யூரோப்பியன் ராபின் ( European robin) என்ற இரண்டு வகை பறவைகளில் நடத்திய தொடர்ச்சியான  ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்  Cry4 என்ற புரதம்தான் அவைகளுக்குத் திசையை கண்டறிவதற்கு உதவியாக இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.  கண்களின் ரெட்டினா பகுதியில் இருக்கும் இந்த  Cry4  புரதம் கிரிப்டோகுரோம் என்ற வகையைச் சேர்ந்தது, இது தாவர வகைகள் மற்றும் விலங்குகளில் காணப்படும் வழக்கமான புரதமாக இருக்கிறது. இந்தப் புரதம் ஒளி உணர் தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்தப் புரதம் கண்களில் இருப்பதால் பறவைகளும் பார்வையின் மூலமாகவே பூமியின் காந்தப்புலத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. இந்தப் புரதம் சிரிகார்டியன் ரிதத்திலும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. பறவைகள் இடம்பெயரும் காலகட்டத்தில் இந்தப் புரதம் பறவைகளுக்கு அதிகமாகச் சுரப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967

 
அ-அ+

அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1953 - வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" (House of Wax) -ஐ வெளியிட்டது 1959 - மெர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது

 
 
 
 
போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967
 
அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1953 - வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" (House of Wax) -ஐ வெளியிட்டது 1959 - மெர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது. 1991 - ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

1992 - முன்னாள் பனாமா அதிபர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது. 1999 - நைஜர் அதிபர் இப்ராகிம் மைனசாரா படுகொலை செய்யப்பட்டார். 2003 - ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

 

 

வார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியான நாள்: ஏப்.9- 1953

 
அ-அ+

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாண (3டி) திரைப்படம் ஹவுஸ் ஆப் வக்ஸ் என்ற படத்தை 1953-ம் ஆண்டு ஏப்.9-ந்தேதி வெளியிட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. * 1940 - இரண்டாம் உலகப் போர்: நார்வே மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது. 1947 - டெக்சாஸ்

 
 
 
 
வார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியான நாள்: ஏப்.9- 1953
 
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாண (3டி) திரைப்படம் ஹவுஸ் ஆப் வக்ஸ் என்ற படத்தை 1953-ம் ஆண்டு ஏப்.9-ந்தேதி வெளியிட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. * 1940 - இரண்டாம் உலகப் போர்: நார்வே மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது. 1947 - டெக்சாஸ், ஒக்லகோமா மற்றும் கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் கொல்லப்பட்டனர். 970 பேர் காயமடைந்தனர். 1948 - ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா? - விளக்கும் கதை #MotivationStory

 
 

தன்னம்பிக்கை கதை

`திர்மறையான சூழ்நிலையா... அதை நேர்மறையான சூழலுக்குத் திருப்பப் பாருங்கள்!’ - இப்படி ஒருமுறை குறிப்பிட்டார் பல சாதனைகளைப் புரிந்த, பிரபல பேஸ்கெட்பால் விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan). விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இது பொருந்தும். பல நேரங்களில் நம் சோர்வுக்கு, மனக் குழப்பத்துக்கு, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, தோல்விகளுக்குக் காரணமாக இருப்பவை நம் நெகட்டிவ் எண்ணங்களே! பாசிட்டிவ் அணுகுமுறைக்குத்தான் பலம் அதிகம். `நல்லதே நினை, நல்லதே நடக்கும்’ என்பது வெறும் வாக்கியமல்ல. நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய வேதம். நமக்கு நடப்பதெல்லாம் மோசமானதாகவே இருக்கட்டும்... அவற்றையும் பாசிட்டிவான கோணத்தில் பார்த்தால், `எல்லாம் நன்மைக்கே...’ என்று எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும்? அந்த நிறைவை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அதை எடுத்துச் சொல்லும் கதை இது. 

அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். அது இரவு நேரம். மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியிருந்தது. கடந்த வருடம் ஏப்ரல் தொடங்கி, மார்ச் மாதம் வரை அவருக்கு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பார்த்தார். நினைக்க நினைக்க சோகம் கவ்விக்கொண்டது. மேசைக்கு முன்பாக அமர்ந்தார். ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டார். அவற்றையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தார்... 

எழுதுதல்

* எனக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதில் என் பித்தப்பையை அகற்றிவிட்டார்கள். 

* அறுவைசிகிச்சை காரணமாக நான் பல நாள்களுக்குப் படுக்கையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது. 

* எனக்கு 60 வயது நிறைவடைந்தது. எனக்குப் பிரியமான வேலை, என் முதுமை காரணமாக என்னைவிட்டுப் போனது. 

* சுமார் 30 ஆண்டுகளாக வேலை பார்த்த பப்ளிஷிங் நிறுவனத்திலிருந்து நான் வெளியேறினேன். 

* அதே ஆண்டில், அதே நேரத்தில்தான் பிரியத்துக்குரிய என் தந்தை இறந்து போன துயரமும் நிகழ்ந்தது. 

* என் மகனுக்கு ஒரு விபத்து நடந்ததும் கடந்த ஆண்டில்தான். அதனாலேயே அவனுடைய மருத்துவப் படிப்புக்கான தேர்விலும் தோற்றுப் போனான். 

* கால்களில் அடிபட்டதால், என் மகன் கால்களை அசைக்க முடியாமல் பல வாரங்களுக்குப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். 

* விபத்தில் மகனுக்கு அடிபட்டதோடு, என்னுடைய காரும் மிக மோசமாகச் சேதமடைந்திருந்தது. 

இதையெல்லாம் எழுதிவிட்டு, கடைசியாக அவர் இப்படி எழுதினார்... `கடவுளே... இது மிக மோசமான வருடம்.’ 

குறிப்பெடுத்தல்

எழுத்தாளரின் மனைவி, அந்த அறையின் வாசலில் வந்து நின்று எட்டிப் பார்த்தார். கணவர் சோகம் கவிந்த முகத்தோடு ஏதோ யோசனையிலிருப்பதைக் கவனித்தார். அவர் மேசைக்கு முன் அமர்ந்து ஏதோ எழுதுவதும் தெரிந்தது. அவர் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தார். 

அன்றைக்கு இரவு கணவர் உறங்கச் சென்ற பிறகு, அந்த அறைக்குள் நுழைந்தார். கணவர் எழுதிய குறிப்பு மேசை மேலேயே இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஒரு கணம் யோசித்தார். இன்னொரு பேப்பரை எடுத்து சில குறிப்புகளை எழுதினார். தன் கணவர் எழுதியிருந்ததை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தான் எழுதிய பேப்பரை வைத்தார். வெளியேறினார். 

அடுத்த நாள் காலை, அந்த எழுத்தாளர் அந்த அறைக்குள் நுழைந்தார். மேசையில் தன் குறிப்புக்குப் பதிலாக வேறொன்று இருப்பதைக் கண்டார். எடுத்துப் படித்தார். அதில் இப்படி எழுதியிருந்தது... 

* பல வருடங்களாக எனக்கு பயங்கர வலியைத் தந்துகொண்டிருந்த பித்தப்பையை அகற்றி, அதற்கு விடை கொடுத்தேன். 

* என்னுடைய 60-வது வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் என் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். 

* இனி என் நேரத்தை அமைதியான முறையில் கழிப்பேன். இனி, எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் நினைத்ததை எழுத எனக்கு இப்போது அதிக நேரமிருக்கிறது. 

* என் தந்தை தன்னுடைய 95-வது வயதில், இறுதிவரை யாரையும் சார்ந்து வாழாத அற்புதமான அந்த மனிதர், எந்தப் பிரச்னையுமில்லாமல் இயற்கை எய்தினார். 

* கடந்த வருடம்தான் கடவுள், என் மகனுக்குப் புதிதாக ஒரு வாழ்க்கையைக் கொடுத்தார். 

* என் கார் சேதமடைந்துபோனது. அது பரவாயில்லை, என் மகனுக்குப் பெரிதாக எதுவும் ஆகாமல், காலில் அடியோடு தப்பித்தானே... அது போதும். 
 
இந்தக் குறிப்புகளுக்குக் கீழே இப்படி எழுதியிருந்தது. `ஆக, கடவுளின் அளப்பரிய கருணை என் மேல் விழுந்த இந்த வருடம் நல்லவிதமாகக் கடந்துபோனது. நன்றி கடவுளே!’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தில் இருந்தா மொத்தமா வாங்கலே!

 

 

சென்னை முழுதும் விசில்கள் பறந்துகொண்டிருக்கின்றன. ‘தல’ தோனி திரும்ப வந்துவிட்டார். சென்னைp114a_1522819749.jpg சூப்பர் கிங்ஸ் அணியும் தான். இது சி.எஸ்.கே வெர்ஷன் 2.0!

முதல் சீசனிலேயே இறுதிப்போட்டி வரைக்கும் முன்னேறி ரன்னர் - அப் ஆகி கெத்து காட்டிய யெல்லோ ஆர்மி. எட்டு ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியன், நான்கு முறை ரன்னர் - அப் என வெளுத்துக்கட்டி, தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் ஃபேவரைட் ஆனது சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் வரலாறு.

ஐபிஎல் போட்டிகளில் எத்தனையோ அணிகள் இருந்தாலும், சென்னை அணி எப்போதும் ஸ்பெஷல்தான். இந்த அன்புக்கு வெறும் வெற்றிகள் மட்டுமே காரணம் இல்லை; வீரர்களின் உற்சாகம், கலகலப்பு, வசீகரம், ரசிகர்கள் மேல் காட்டுகிற மரியாதை என நிறைய உண்டு.

மற்ற அணிகள் எல்லாம் போட்டியில் வெற்றி பெற்ற உடனே ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்து ஷாம்பெய்ன் பாட்டிலோடு கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், சென்னை அணி எப்போதும் மொத்த கிரவுண்டையும் சுற்றி வந்து ரசிகர்களுடன் அதைக்  கொண்டாடுவார்கள். இந்த மரியாதைதான் சென்னை அணியின் மிகப்பெரிய பலம்.

சென்னை ஆடும் போட்டிகளில் எல்லாம் எப்போதுமே  வேற  லெவல் என்டர்ட்டெயின்மென்ட் நிச்சயம் இருக்கும். ஸ்டேடியத்துக்குள் புகுந்தால் வெறும் கிரிக்கெட்டை மட்டும் காண முடியாது. திருவிழாக்கொண்டாட்டமாக இருக்கும்.

ஒருபுறம் டிரம்ஸ் சிவமணி அரங்கம் அதிர அதிரடி வாத்தியங்களால் வெடிகிளப்புவார். மெக்கல்லம், பிராவோ, பொலிஞ்சர், ரெய்னா என அதிரடிப் பட்டாளங்கள் களத்தில் சிக்ஸர்களால் டெம்போ கூட்டுவர். சென்னை ஆடுகிற போட்டிகள் எல்லாம் கானா கச்சேரிகள் போல் அமர்க்களமாக இருக்கும்.

p114b_1522819772.jpg

கேட்ச் பிடித்தால், விக்கெட் வீழ்த்தினால் பிராவோ ஆடும் இடுப்பு டான்ஸ் சென்னை மக்களால் மறக்கமுடியாத மலரும் நினைவுகள்! வீரர்களே இப்படிக் கொண்டாடும்போது, ரசிகர்கள் அதை எப்படிக் கொண்டாடுவார்கள்? சேப்பாக்கம் எப்படி இருக்கும்?

மைதானத்தில் மட்டுமன்று, வெளியேயும் சேட்டைகளுக்குப் பஞ்சமிருக்காது. தமிழ்ப்பட வசனங்கள் பேசுவது, பாடல்கள் பாடுவது, வேஷ்டி கட்டி ஆட்டம் போடுவது, விசில் அடிக்கக் கற்றுக்கொள்வது எனத் தமிழக கேரக்டர்களாகவே மாறிப்போயிருப்பார்கள் சூப்பர் கிங்ஸின் வெளிநாட்டு வீரர்கள். `பாட்ஷா’ பட வசனத்தை ‘தல’ தோனி சொல்வதைப் பார்ப்பதெல்லாம், சென்னை ரசிகனுக்கு  மெர்சல் மொமன்ட்ஸ்.

சி.எஸ்.கே ரசிகர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகள் மோசமானதாக இருந்தது. சென்னை அணியின் செல்லப்பிள்ளைகள் எல்லாம் வெவ்வேறு அணிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டிருந்தனர். ஐபிஎல்லில் பழைய சுரத்து இல்லை. சொல்லப்போனால் ஒட்டுமொத்த ஐபிஎல்லின் டிஆர்பியும்கூட குறைந்துபோனது! குஜராத் அணியில் ரெய்னா ஆடுகிறார், புனே அணிக்குத் தோனி ஆடுகிறார்...  மகிழ்ச்சி இல்லை. சென்னை ரசிகர்கள் சென்னை ரசிகர்களாகவே சி.எஸ்.கே-வுக்காகக் காத்திருந்தனர்.

இரண்டு ஆண்டுகளாக சென்னை ரசிகர்கள் அனைவரும் சொன்னது ஒன்றே ஒன்றுதான், “வீ ஆர் வெயிட்டிங்!”

இதோ இப்போது புதிய அணி. புதிய வீரர்கள் என அடுத்த சீசனுக்குத் தயாராகிவிட்டது சி.எஸ்.கே. அதே பழைய கலாட்டா, அதே பழைய கொண்டாட்டம் என ரெண்டு வருஷத்துக்கு முன்னால் எப்படிப் போனதோ அதே கபாலியாக வந்து நிற்கிறது சி.எஸ்.கே! 

இந்தமுறை ஆல் நியூ அணி. அஷ்வின் இல்லை, மெக்கல்லம் இல்லை. ஆனால் ஹர்பஜன், இம்ரான் தஹிர், முரளி விஜய், வாட்சன் என மிரட்டலான புதியவர்கள் வருகிறார்கள்.

திரும்பி வந்திருக்கும் சி.எஸ்.கேவை ஏற்கெனவே நூற்றுக்கணக்கான வீடியோக்களால் இணையத்தில் வரவேற்கத் தொடங்கி விட்டது சமூகவலைதள யெல்லோ ஆர்மி! ஹர்பஜனின் தமிழ் ட்விட்டுகள்தான் இன்று மீம் கிரியேட்டர்களின் முதல் சொத்து.

திரும்பிவந்திருக்கும் சென்னை அணியைப் பார்க்க, போட்டி நாள் வரையெல்லாம் காத்திருக்கப் பொறுமை இல்லாமல், மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்க்கவும் உற்சாகப்படுத்தவுமே 10,000 பேர் குவிந்துவிட்டனர். இதுதான் சென்னை அணி மீது தமிழ் இளைஞர்கள் வைத்திருக்கும் நேசம்.

காரணம், இது மற்ற அணிகளைப் போல் வெறும் கிரிக்கெட் அணி இல்லை, இது உணர்வு!

போட்ரா விசிலை!


ரசிகைகளின் விசில்

ஃபாத்திமா : “ரெண்டு வருஷமா சென்னை டீம் இல்லாம என்னமோ மாதிரி இருந்துச்சு. இப்போ ரிட்டர்ன் ஆயிருக்கிறது செம ஹேப்பி. எப்போதுமே சி.எஸ்.கே, ஃபேன்ஸுக்கு நல்லா மரியாதை கொடுக்கற டீம். அதுதான் அவங்களோட ஸ்பெஷல். இந்த முறையும் ஹர்பஜன், தாஹிர் பண்றதெல்லாம் ரொம்ப எமோஷனலா செம்மயா இருக்கு. இதுதான் சிஎஸ்கே!”

சினேகா : “தாரைதப்பட்டை கிழியப்போகுது. ரெண்டு வருஷமா ஐ.பி.எல் பாக்கவே பிடிக்கல. தல ஃபைனல் ஆடினப்பக்கூட பெருசா சந்தோஷம் இல்ல. இப்போ செம எனர்ஜெடிக்கா இருக்கு. ஏழு மேட்சையும் ஸ்டேடியத்தில் பாக்கப்போறேன். முதல் மேட்ச்சை மும்பைல போய்ப் பாக்கவே இங்க ஒரு கூட்டம் ரெடி ஆயிடுச்சு!”


‘யெல்லோ மேன் சரவணன்’

உடலெல்லாம் மஞ்சள் நிறம் பூசிக்கொண்டு, தோனியின் பெயரை எழுதிக்கொண்டு கேலரியில் கொண்டாடித்தீர்க்கும் ‘யெல்லோ மேன்’  சரவணன், தோனியின் நம்பர் ஒன் ரசிகர். இவர் குழந்தைக்குப் பெயர் வைத்ததே கேப்டன் கூல்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிகாரபூர்வ ரசிகர் மன்றத்தையும் பதிவு செய்துள்ளார். “ரெண்டு வருஷம் சென்னை டீம் இல்லாதது யாரோ சொந்தக்காரங்க இறந்துபோனது மாதிரி இருந்துச்சு” என்று எமோஷன் ஆகிறார். இந்த கம்பேக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கொண்டாடவேண்டும் என்று சஸ்பென்ஸாகப் பல திட்டங்கள் தீட்டிவருகிறார். ஆனால், தன் அடையாளமான அந்த மஞ்சள் பெயின்ட்டிங்கோடுதான் இம்முறையும் களம் காணப்போகிறார்.


செலிபிரிட்டி விசில்

சிவகார்த்திகேயன் :  “தோனி திரும்ப வர்றார் என்பதே செம மாஸ் மொமன்ட். எப்படியாவது போட்டிகளை ஸ்டேடியத்தில் போய்ப் பார்க்க முயற்சி பண்ணுவேன்.  சூப்பர் கிங்ஸும், தோனியும் திரும்ப வர்றதைப் பாக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கேன்!”

பிரேம்ஜி: “நிறைய பேர் சி.எஸ்.கே.வுக்காகப் பாட்டுப் பாடி ரிலீஸ் பண்ணிட்டிருக்காங்க. நானும் சி.எஸ்.கே.வுக்காக ஒரு பாட்டுப் பாடியிருக்கேன். ரெண்டு வருஷம் கழிச்சு விளையாட வர்றதால பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. நிச்சயமா தல தோனி சென்னையை ஜெயிக்கவைப்பார்!”

விஷ்ணு விஷால்: “தமிழ்நாட்டுப் பசங்களுக்கு இது ஒரு திருவிழா. ஹர்பஜன் சிங், வாட்சன்னு சில நல்ல ப்ளேயர்ஸ் சென்னை டீமுக்கு வந்திருக்காங்க. சென்னையில் நடக்குற முதல் மேட்சை கண்டிப்பா நான் நேர்ல போய்ப் பார்ப்பேன். தோனி இப்போ நல்ல ஃபார்ம்ல இல்லைனாலும், அவர் சென்னையை எப்போதும் கைவிட்wடதில்லை. நம்பிக்கையோட காத்திருக்கோம்”

p114c_1522820090.jpg

விக்ராந்த் : “சி.எஸ்.கே திரும்பி வந்திருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் தோனி வெறியன்.  சி.எஸ்.கே மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமா இருக்கு. அஸ்வின் இல்லாதது வருத்தம்தான். ஆனா, தோனி அதை ஃபில் பண்ணிடுவார். அதுமட்டுமில்லாமல். டிஎன்பிஎல் மூலமா ஜெகதீசன் மாதிரி ப்ளேயர்ஸ் உள்ளே வந்திருக்கிறது நல்ல விஷயம். அவங்களுக்கு என்னோட வாழ்த்துகள். தோனியோட ஆட்டத்தைப் பார்க்க எல்லோர் மாதிரி நானும் வெயிட்டிங். முதல் மேட்ச்ல என்னை ஸ்டேடியத்துல பார்க்கலாம். கம் ஆன் சி.எஸ்.கே..!”

பரத் : “ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் திரும்ப யெல்லோ ஜெர்சியைப் பார்க்கப் போறோம்னு நினைக்கும்போது வர்ற சந்தோஷத்துக்கு அளவே இல்லைனுதான் சொல்லணும். அந்த அளவுக்கு டீமை மிஸ் பண்ணேன். தோனி டீமுக்கு வர்றார். இவர் இல்லைனா டீமே இல்லை. இந்த சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் டீம்ல இல்லைன்ற வருத்தம் எனக்கு மட்டுமில்ல, ஒட்டுமொத்த சி.எஸ்.கே ரசிகர்களுக்கும் இருக்கும்”
 
வெங்கட் பிரபு : “இந்த டீம் பயங்கரமான டீம். தோனி மறுபடியும் கேப்டன் ஆயிருப்பதுதான் ஸ்பெஷல். கண்டிப்பா இந்த டைம் சி.எஸ்.கேதான் ஜெயிக்கும். சென்னையில நடக்கற மேட்ச்களை ரசிகர்களோட போய் என்ஜாய் பண்ணப்போறேன்!”

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படங்கள்

 

 
08CHLRDMIRABAICHANU

India's Saikhom Mirabai Chanu competes in women's 48kg Weightlifting final at the Commonwealth Games in Gold Coast, Australia, Thursday, April 5, 2018. Mirabai won gold medal in her category and set the new Commonwealth Games and Games record. (AP Photo/Manish Swarup)

கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

 

08CHLRDKASHMIR

காஷ்மீர் மாநிலம் லால் சௌக் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் ஐந்து பேர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். அதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்க முயன்ற காவல் துறையினரை நோக்கி கல்லெறியும் மாணவிகள்.

 

08CHLRD38KILLED

2014-ல் ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 38 இந்தியத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஒருவரது சடலத்தை பார்த்து அவருடைய தாயும் உறிவினர்களும் கதறியழுத காட்சி.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

`Mercury' படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

 
 

Mercury

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா, ரம்யா நம்பீசன் சனத், தீபக் பரமேஷ் நடித்திருக்கும் படம் 'Mercury'. இந்தப் படத்தின் டீஸர் ஏற்கெனவே வந்திருந்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரும் வந்திருக்கிறது. அதில், ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடைபெறுவதால் தமிழ்ப் படங்கள் எதுவும் ரிலீஸாகாமல் இருந்து வருகிறது. ஆனால், இந்தப் படம் எந்த மொழியையும் வைத்து எடுக்காமல் சைலன்ட் மூவியாகக் கார்த்திக் சுப்பராஜ் எடுத்திருப்பதால், 'Mercury' படத்தை வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யும் பிளானில் இருக்கிறார்கள். 

 

  • தொடங்கியவர்

14 நாள்கள்

 
 

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

 

நிறபேதத்தால் பாதிக்கப்பட்ட வயலாவுக்கு இன்று அளிக்கப்பட்ட அங்கீகாரம் முதல் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிராக முழங்கும் சுட்டி யொலண்டாவுக்குக் கிடைத்த வரவேற்பு வரை கடந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்! 

p12a_1522685575.jpg

அன்று அநீதி... இன்று கௌரவம்!

மெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினப் பெண் ரோசா பார்க்ஸ், ஆங்கிலேயர்களுக்காகப் பேருந்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து நகர மறுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்துக்கு ஒன்பது ஆண்டுகள் முன்பே, கனடாவில் அத்தகைய செயலைச் செய்த பெண்மணி வயலா டெஸ்மண்ட். 1946-ம் ஆண்டு நோவா ஸ்காட்டியா நகரின் ரோஸ்லாண்ட் திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்றார் வயலா. ஆங்கிலேயருக்குச் சிறப்பு இருக்கைகளும், கறுப்பினத்தவருக்குச் சாதாரண இருக்கைகளும் ஒதுக்கப்பட்டிருந்த இரட்டை அமர்வு வழக்கம் பற்றி அறியாமல் சிறப்பு இருக்கையில் அமர்ந்தார் வயலா.  அதனால் அவரைக் கைது செய்யச் சொல்லி திரையரங்கு உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்தார். கூடுதல் கட்டணமான ஒரு சென்ட்டைத் தர வயலா முன்வந்தபோதும், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. `ஆங்கிலேயர் மட்டும்’ பகுதியில் அமர்ந்ததற்காக, வரி ஏய்ப்பு செய்தார் என்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் 32 வயதான வயலா. அவருக்கு வழக்கறிஞரும் மறுக்கப்பட 26 டாலர் அபராதம் விதித்தது நீதிமன்றம். 1965-ம் ஆண்டு மறைந்தும் போனார், காஸ்மெட்டிக் கம்பெனி ஒன்றை நடத்திய வயலா.

அவரின் சகோதரியான வாண்டா ராப்சன் 2003-ம் ஆண்டு முதல் வயலா குறித்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த ஆண்டு சாதனைப் பெண்களின் படங்கள் கொண்ட டாலர் நோட்டுகளை வெளியிடுவது என்று முடிவு செய்த கனடா அரசு, தகுந்த பெண்களைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது. ஏறத்தாழ 26 ஆயிரம் பெண்களின் படங்களும் அவர்கள் செய்த சாதனைகளின் பட்டியல்களும் குவிந்தன. 461 பெண்கள் முதல்கட்டமாகத் தேர்வாகி, அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் வயலா. அரச குடும் பத்துப் பெண்கள் தவிர வேறு எந்தப் பெண்ணின் தனித்த படமும் இதுவரை கனடா டாலரில் இடம்பெறவில்லை. முதன்முறையாக கனடா டாலர் நோட்டில் தனித்து இடம்பெறும் முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை மரணத்துக்கு 50 ஆண்டுகளுக்குப்பின் பெறுகிறார் வயலா. பத்து டாலர் புதிய நோட்டின் வடிவமைப்பை வெளியிட்ட அவரின் 73 வயது தங்கை வாண்டாவுக்கோ அத்தனை பெருமை முகத்தில்!

தங்கை உடையாள்!


p12b_1522685601.jpg

மறைத்து வைக்காதீர்கள் மனநலச் சிக்கல்களை!

சி
ல ஆண்டுகளுக்கு முன் என்.டி.டி.வி-யில் தனக்கு நேர்ந்த மனச் சோர்வு மற்றும் மன அழுத்தம் குறித்து விரிவாகப் பேட்டி தந்தார் இந்தி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன். தொடர்ந்து மனநலம் பற்றி பேசியும் எழுதியும்வரும் தீபிகா, `லிவ்-லவ்-லாஃப் ஃபவுண்டேஷன்’ என்னும் அமைப்பை உருவாக்கி, மன அழுத்தம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார். மனநலம் பற்றி வெளிப்படையாகத் தன் மனதில் இருந்ததைப் பேசியதுதான் சிறந்தது என்று கூறியிருக்கும் தீபிகா, இதுபோன்ற பிரச்னைகளை நம்பகமானவர்களிடம் பகிர்ந்துகொள்வது நல்லது என்றும் தெரிவித்திருக்கிறார். தீபிகாவின் ஃபவுண்டேஷன் நாடு முழுக்க நடத்திய ஆய்வுகளின் தொகுப்பை வெளியிட்டு சமீபத்தில் பேசிய தீபிகா, “இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் சொந்த அனுபவங்கள் மூலம் இப்போது என்னைச் சுற்றியிருப்பவர்களின் எண்ணங்கள், உணர்ச்சிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் மனநலம் பற்றிய புரிதலை ஓரளவுக்கு லிவ்-லவ்-லாஃப் ஃபவுண்டேஷன் ஏற்படுத்தி இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.

“டிப்ரஷன் பற்றி வெளிப்படையாகப் பேசுவது கடினமாக இல்லை. ஆனால், எனக்கு என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தது. புரிந்ததும் பாதிப் பயணம் முடிந்துவிட்டதை உணர்ந்தேன். மீதிப் பயணம் சிகிச்சையில் கழிந்தது. அதைப் பற்றி பேசியதுதான் நான் செய்ததில் சிறந்ததாகக் கருதுகிறேன். இப்போது மிக இலகுவாக உணர்கிறேன்” என்று கூறியிருக்கும் தீபிகா, “இதுபோன்ற மனநலச் சிக்கல்களை நெருங்கியவர்களிடம் பகிர்வதில் தவறில்லை. அவர்கள் நம்மை மதிப்பிட மாட்டார்கள். அப்படியே செய்தாலும் அதில் தவறு ஏதும் இல்லை. உடல்நலக் கோளாறு போலத்தான் இதுவும் என்ற தெளிவு நமக்கு வேண்டும். மிக முக்கியமாக, இது போன்ற பிரச்னைகள் சாதாரணமானவை, அனைவருக்கும் வரக்கூடியவை, சரியாகிவிடுமென்ற நம்பிக்கை நமக்கு மிகவும் முக்கியம்” என்றும் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார். “நானும் டிப்ரஷனைச் சந்தித்திருக்கிறேன்; அதிலிருந்து மீண்டும் இருக்கிறேன். எனவே, மனம் தளர வேண்டாம்” என்று தெம்பூட்டியிருக்கிறார் தீபிகா!

முகமும் அழகு... மனசும் அழகு!


p12c_1522685622.jpg

கொல்கத்தாவின் பெண்கள் படை!

கொ
ல்கத்தா நகரின் காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார், `ஷீ பட்ரோல்’ என்ற இருசக்கர வாகனங் களில் பயணித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்புப் படைக்காக நேர்காணல் நடத்தி பெண்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். நகரின் முக்கியப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செய்யப்போகும் 20 பேர் கொண்ட சிறப்புப்படைப் பெண்கள் குழு, தேவைப்படும் இடங்களில் போதுமான பாது காப்பையும் உதவியையும் பெண்களுக்கு வழங்கும்.

2014-ம் ஆண்டு முக்கிய இடங்களில் பெண் காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தெருக்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இவர்களது நியமனம் இருந்தது. கொல்கத்தா நகரில் ஏற்கெனவே மொத்தம் எட்டு மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.

இந்த சிறப்புக் காவல் படைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் பெரும்பாலும் சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருக்கும் காவல் துறை துணை ஆய்வாளர்கள். வாகனம் ஓட்டத் தெரிந்த இவர்களுக்கு அரசுப் பணிக்கெனப் புதிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். இப்போது உள்ள 113 உதவி ஆய்வாளர்கள், 131 துணை உதவி ஆய்வாளர்கள் மற்றும் 444 கான்ஸ்டபிள்களில் இருந்து இந்த `ஷீ பட்ரோ’லுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. காவல் நிலையம் செல்லத் தயங்கும் பெண்களுக்கும் இந்த ரோந்துக் காவல் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்ம ஊருக்கு இதெல்லாம் வராதா ஆப்பிசர்ஸ்?!


p12d_1522685646.jpg

மனித உயிர்களைக் காப்பாற்ற மாபெரும் போராட்டம்!

`ஐ
ஹேவ் எ ட்ரீம்' என்று தொடங்கிய உரை மூலம் உலக மக்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்த அமெரிக்க கறுப்பின மக்கள் உரிமைப் போராளியான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை நாம் அறிவோம். அவரின் பேத்தியான ஒன்பது வயது சுட்டிப் பெண் யொலண்டா ரினி கிங் அமெரிக்கத் தலைநகரில் மார்ச் 24 அன்று துப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிரான `மார்ச் டு சேவ் அவர் லைவ்ஸ்’ என்ற போராட்டக் களத்தில் எழுச்சிமிகு உரை நிகழ்த்தியிருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவையே உலுக்கிய பார்க்லேண்ட் ஷூட்டிங் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் துப்பாக்கி கலாசாரம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்கப் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மார்ச் 24 அன்று இதுபோன்ற 800 பேரணிகள் உலகெங்கும் நடைபெற்றன. ஏறத்தாழ இருபது லட்சம் மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந்தப் போராட்டம், அமெரிக்க வரலாற்றிலேயே வியட்நாம் யுத்தத்துக்கு எதிரான போராட்டத்துக்குப் பின் நடைபெற்ற மிகப்பெரிய எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய யொலண்டா, `என் தாத்தாவுக்கு ஒரு கனவு இருந்தது. தன் நான்கு குழந்தைகளும் அவர்களது நிறத்தால் இல்லாமல் குணத்தால் அளவிடப்பட வேண்டும் என்று விரும்பினார்' என்றார். `எனக்கும் ஒரு கனவு இருக்கிறது. போதும், பொறுத்தது போதும். துப்பாக்கிகளற்ற உலகம் நமக்கு வேண்டும்... அவ்வளவே!' என்று முழங்கியவர், `இந்த நாடு முழுக்க போற்றும் தலைமுறையாக நாம் இருப்போம்' என்றார். யொலண்டாவின் அத்தையும் மார்ட்டின் லூதர் கிங்கின் மகளுமாகிய பெர்னிஸ் கிங், தன் ட்விட்டர் பதிவில், கிங் குடும்பத்தின் எண்ணத்தையே தன் மருமகள் யொலண்டா பிரதிபலித்ததாகவும், அவரைக் கண்டு பெருமிதம்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

துப்பாக்கிக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் பூக்கள்!


p12e_1522685665.jpg

உரிமைப் போராளிக்கு உயரிய விருது!

மா
ர்ச் 23 அன்று மறைந்த வழக்கறிஞரும் சமூகப் போராளியுமான அஸ்மா ஜஹாங்கீருக்கு அந்நாட்டின் உயரிய விருதான `நிஷான்-இ-பாகிஸ்தான்' விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது பாகிஸ்தான் அரசு. 66 வயதான அஸ்மா கடந்த மாதம் திடீர் மாரடைப்பால் காலமானார். மரணத்துக்குப் பின் இந்த உயரிய கௌரவம் அஸ்மாவுக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானின் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்திய அஸ்மா, பாகிஸ்தானின் மனித உரிமைகள் கவுன்சில் நிறுவனர்களில் ஒருவர். அடிக்கடி ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கித்தவித்த பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார் அஸ்மா. 1980-களில் அதிபர் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர் இவர். அதேபோல, பர்வெஸ் முஷாரஃபின் ராணுவ ஆட்சியிலும் சிறை சென்றார்.

தன் பள்ளிப் பருவத்தில், முறையான தேர்தல் இல்லாமல் பள்ளி மாணவர் தலைவியை நியமித்த நிர்வாகத்தை எதிர்த்து 1960-களில் எழுந்த கலகக் குரல் அஸ்மாவுடையது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் வழக்குகளை முன்னெடுத்துப் போராடியவர். அரசு பயங்கரவாதத்தால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவர். பாகிஸ்தானில் நடைபெற்ற கௌரவக் கொலைகளுக்கு எதிரான இவரது முன்னெடுப்பின் காரணத்தால்,
2003-ம் ஆண்டு பெண்கள் தங்கள் திருமணத்தை, ‘வாலி’ என்ற, ஆண் உறவினர்களது அனுமதி இன்றி, சொந்த விருப்பத்தின்பேரில் செய்துகொள்ளும் வகையில் திருமண சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அஸ்மா இருக்கும் வரை கொண்டாடப்பட்டாரோ இல்லையோ, மரணத்துக்குப் பின் விருது, மரியாதை என அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

சாதனைப் பெண்மணி  இருந்த வரை அருமை தெரியலையே! 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மாயமான நாள்: ஏப்.10- 1963

 

ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1919 - மெக்சிகோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 
128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மாயமான நாள்: ஏப்.10- 1963
 
ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1919 - மெக்சிகோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1963 - ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.
1972 - வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.
1979 - டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1984 - ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1985 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1991 - இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.
1992 - லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு ராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
1998 - அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.
2002 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
2006 - இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

 

 

டைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912

 

டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.

 
 
 
 
டைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912
 
டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1815 - இந்தோனேசியாவில் டம்போரா எரிமலை வெடித்து சிதறியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.
1821 - கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
1826 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
1848 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
1864 - முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.
1868 - அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப்படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டனர்.
1869 - கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.
1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

நீங்கள் வாழ்வதற்காகச் செலவழிப்பவரா, செலவழிப்பதற்காக வாழ்பவரா? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
 

கதை

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ஜாக் மா (Jack Ma) ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார்... ``பணத்தைச் சம்பாதிப்பதைவிட, அதைச் செலவழிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.’’ இதை விளையாட்டாகச் சொன்னாரா, உண்மையைத்தான் சொன்னாரா என்று ஆராய்வது ஒருபுறமிருக்கட்டும். பணம் படைத்தவர்களுக்கு வேண்டுமானால், செலவழிப்பது கடினமாக இருக்கலாம். இல்லாதவர்களுக்கு, கஷ்டப்பட்டு பொருளீட்டுபவர்களுக்கு அவர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுமே அர்த்தமுள்ளவை; அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமானவை. பல நேரங்களில் எவ்வளவு ஆடம்பரமாகச் செலவழிக்கிறோம் என்பது நமக்கே தெரிவதில்லை. `உனக்கும் கீழே உள்ளவர் கோடி’ என்கிற கண்ணதாசனின் தத்துவமொழிகள் பல நேரங்களில் நமக்கு நினைவுக்கு வருவதில்லை. ஆனால், அந்த சுயநினைவு (Conscious) ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம். அதைச் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கதை. 

அது ஒரு காலை நேரம். கணவர் காபி குடித்தபடி தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி அவரருகே வந்தார். கணவர் நிமிர்ந்துப் பார்த்தார். 

``ஏங்க... எப்பவும்போல ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு டிரெஸ் போடுறது, அழுக்குக்கூடையில வீசுறதெல்லாம் ரெண்டு நாளைக்கு வேணாம்.’’

``ஏன்?’’ 

``நம்ப தேவியம்மா ரெண்டு நாளைக்கு ஊருக்குப் போறாங்களாம்...’’ 

பீட்சா

தேவியம்மா என்று அவரின் மனைவி குறிப்பிட்டது, அவர்கள் வீட்டுப் பணிப்பெண்ணை. வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருந்தது. 

``எங்கே போறாங்களாம்?’’ 

``ஊர்ல இருக்குற அவங்களோட மகளையும் பேத்தியையும் பார்க்கப் போறாங்களாம்.’’ 

``அப்பிடியா... சரி... நான் ஞாபகத்துலவெச்சுக்குறேன்...’’ 

``அப்புறம் இன்னொரு விஷயம்... அவங்களுக்குப் பணம் ஏதாவது குடுத்துவிடணுமே...’’

``ஏன்... அதான் தீபாவளி, பொங்கலுக்கெல்லாம் போனஸ் குடுக்குறோமே..!’’ 

``அது இருக்கட்டும். அவங்க பாவம் ஏழ்மையானவங்க, வீட்டு வேலை செஞ்சு பிழைக்கிறவங்க. ஊருக்குப் போறப்போ அவங்ககிட்ட கொஞ்சம் பணம் இருந்தா தாராளமா செலவழிப்பாங்கல்ல? அதுனாலதான் நாம ஏதாவது பணம் குடுத்தா அது அவங்களுக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்.’’ 

``இப்போல்லாம் நீ ரொம்ப இரக்கப்பட ஆரம்பிச்சிட்டேப்பா... சரி, பணத்துக்கு என்ன பண்ணுவே?’’ 

``அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. இன்னிக்கி நைட் பீட்சா வாங்கிச் சாப்பிடலாம்னு 500 ரூபா எடுத்துவெச்சிருந்தோம்ல... அதை தேவியம்மாவுக்குக் குடுத்துடலாம்.’’ 

``பிரமாதம்...’’ என்று சொல்லி சிரித்தார் கணவர். 

பணம்

*** 

மூன்று நாள்களுக்குப் பிறகு அந்த முதிய பணிப்பெண் வேலைக்குத் திரும்பினார். வீட்டிலிருந்த உரிமையாளர் அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். ``அப்புறம்... ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா... ரெண்டு நாள் எப்படிப் போச்சு?’’ 

``எல்லாரும் நல்லா இருக்காங்க சார்... ரெண்டு நாள் எப்பிடிப் போச்சுன்னே தெரியலை. பேத்தியும் பொண்ணும் விடவே மாட்டேன்னுட்டாங்க. நான்தான் எப்படியோ சமாதானப்படுத்திட்டு வந்து சேர்ந்தேன். அதுலயும் அம்மா ஒரு ஐநூறு ரூபா பணம் குடுத்துவிட்டாங்களா... அது ரொம்ப உதவியா இருந்துச்சு.’’ 

``அந்தப் பணத்தை என்ன பண்ணுனீங்க?’’ 

அந்த மூதாட்டி ஒரு கணம் யோசித்தார்... ``பேத்திக்கி 150 ரூபாய்க்கு ஒரு கவுன் எடுத்தேன். அவளுக்கு 40 ரூபாய்க்கு ஒரு பொம்மை; என் பொண்ணு வீட்டுக்குப் பலகாரம் வாங்கிட்டுப் போனது ஒரு 40 ரூபா. ஊர்ல குலசாமி கோயிலுக்கு 50 ரூபா வரிப்பணம் குடுத்தேன். என் பொண்ணுக்கு கண்ணாடி வளையல் வாங்கினது 25 ரூபா... அப்புறம் என் மருமகனுக்கு பெல்ட்டு ஒண்ணு 50 ரூபாய்க்கு வாங்கினேன். மிச்சமிருக்குற காசையெல்லாம் என் பேத்திக்கி நோட்டு புத்தகம், பென்சில், பேனா, கலர் பென்சில்னு வாங்கிக் குடுத்துட்டேன் சார்...’’

பிட்சா

 

பதிலைக் கேட்டு அயர்ந்து போனார் அந்த வீட்டு உரிமையாளர். ஒரு பீட்சா வாங்கும் பணத்தில் இவ்வளவு செய்யலாமா? அவருக்கு அன்றைக்கு ஓர் உண்மை புரிந்தது... `வாழ்வதற்காகச் செலவழிக்கலாம், செலவழிப்பதற்காக வாழக் கூடாது.’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நீரூற்று... இல்ல இல்ல எரிமலை வெடிப்பு... வைரல் ஆன 1969-ன் புகைப்படம்!

 

பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் கடலுக்கு நடுவே ஆரஞ்சு நிறத்தில் குமிழ்களால் நிறைந்த நீருற்று போன்ற ஒளிப்படத்தை யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் கணக்கெடுப்பு மையம் (U.S. Geological Survey) தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற வாரம் பதிவிட்டது. பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கும் வகையில் த்ரோபேக் தர்ஸ்டே (Throwback Thursday #TBT) எனும் ஹேஷ்டேகில் இந்த ஒளிப்படத்தைப் பகிர்ந்திருந்தது USGS. உண்மையில் அது ஆரஞ்சுக் குமிழ்களாலான நீருற்று இல்லை. அது ஒரு எரிமலை வெடிப்பு. 48 ஆண்டுகளுக்கு முன்பு ஹவாய்த்தீவின் கிலாயூ எரிமலையில் (Kilauea Valcano) ஏற்பட்ட வெடிப்பு. 

ஹவாய்த்தீவானது சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற அளவுக்கு எரிமலைகளுக்கும் பெயர் பெற்றது. பெரியத்தீவான ஹவாய்த்தீவை சுற்றிலும் எரிமலைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றான கிலாயூ எரிமலை 24 மே, 1969-ல் வெடிக்கத் தொடங்கியது. அதன் மாக்மாவும் எரிமலைக்குழம்பும் எரிமலையில் இருந்து வெடித்துத் திரண்டு ஓடின. ஆனால் மற்ற எரிமலைகளைப் போல அல்லாமல் ஒரே சீராக வெடித்து வழிந்து ஓடின. அதனால் கிலாயூ எரிமலையைத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஆரஞ்சுக்குமிழ்களாலான நீருற்று போன்று காட்சி தந்தன. அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இப்போது வைரல் ஆகியுள்ளது. எரிமலை முகட்டில் இருந்து மாக்மாவும் எரிமலைக்குழம்பும் சீராக வழிந்தோடியதால்தான் இந்தத் தோற்றம் கிடைத்ததும் என்றும் இப்படி ஒரு சீரான எரிமலை வெடிப்பு அரிதாகத்தான் நிகழக்கூடியது எனவும் எரிமலைகளைக் கண்காணிக்கக்கூடிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

24 மே, 1969-ல் தொடங்கிய எரிமலை வெடிப்பு ஜூலை 22, 1974 வரை நீண்டது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள், சரியாக சொல்லப்போனால் 1774 நாள்கள் எரிமலை வெடிப்பு தொடர்ந்து நிகழ்ந்தது. அப்போது, அதிக நாள்கள் தொடர்ந்து எரிமலை வெடிப்பை ஏற்படுத்திய நிகழ்வு இதுதான். ஆனால் இந்தச் சாதனையை அடுத்த 9 வருடங்களில் வெடிக்க ஆரம்பித்த 'புஒ' எரிமலை முகப்பு (Pu‘u ‘Ô‘ô eruption) கைப்பற்றிக்கொண்டது. 1983-ல் வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலை இன்று வரை அணையாமல் இருக்கிறது. ஆனால், இதைவிட கிலாயூ எரிமலையில் ஏற்பட்ட வெடிப்புதான் இன்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கிறது. அதற்குக் காரணம் புகைப்படத்தில் பார்ப்பதுபோல அப்போதைய நாள்களில் இந்த எரிமலை வெடிப்பை பொதுமக்கள் பலரும் தூரத்தில் இருந்து பயமில்லாமல் கண்டு களித்திருக்கிறார்கள். படத்தில் நாம் பார்ப்பதுபோல எரிமலையில் இருந்து வழிந்தோடிய எரிமலைக்குழம்புகள் கடலுக்குப் போகவில்லை அதற்குக் கீழே நிலப்பரப்பு இருக்கிறது. ஆனால், கடல் மட்டத்தில் அது மட்டும் தனியாக இருப்பது போன்ற தோற்றம் புகைப்படத்தை இன்னும் அழகாக்கியுள்ளது. 

எரிமலை வெடிப்பு

ஐந்து வருடங்களாக கிலாயூ எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு மௌனா உலு வெடிப்பு (Mauna Ulu Eruption) என்றும் அறியப்படுகிறது. இப்படியான தொடர்ச்சியான எரிமலை வெடிப்பு கடந்த 2,200 ஆண்டுகளில் நிகழ்ந்ததே இல்லை என்கின்றனர் எரிமலை ஆய்வாளர்கள். ஐந்து வருடங்களில் ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பின் மூலம் 350 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிமலைக் குழம்பு வெளியாகியது. இது ஏறக்குறைய 1,40,000 ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் குளங்களின் கொள்ளளவு. அதன்பின் ஏற்பட்ட 'புஒ' எரிமலை வெடிப்புகூட இவ்வளவு சீராகவும் மக்கள் பார்ப்பதற்கு ஏதுவாகவும் இருக்கவில்லை. 

ஒரு எரிமலையானது வெடிக்க ஆரம்பித்தப் பிறகு அதன் எரிமலைக்குழம்புகள் பல அடி உயரத்துக்கும் செல்லக்கூடியது. ஏறக்குறைய 500 மீட்டர் உயரத்துக்குக்கூட செல்லும். அதற்கு நேர் எதிராக பத்து, இருபது மீட்டர் உயரத்துக்குக்கூட செல்லும். மௌனா உலு வெடிப்பில் 12 எரிமலை ஊற்றுக்கும் மேற்பட்ட வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏறக்குறைய 70 மீட்டர் அளவுக்கு எரிமலைக்குழம்பு உயர்ந்து வழிந்தோடியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் எரிமலைக்குழம்பு 20 மீட்டர் உயரத்துக்கு உயர்ந்துள்ளது. 

 

எரிமலை வெடிப்பு என்றாலே ஆக்ரோஷமான, பயத்தை ஏற்படுத்தக்கூடிய பிம்பங்கள்தான் நம்மிடையே இருக்கின்றது. ஆனால், எரிமலை வெடிப்பைப் பற்றிய அழகியலான ஒரு பிம்பத்தை இந்தப் புகைப்படம் நமக்குத் தருகிறது. இப்போதும் ஹவாய்த்தீவானது ஆரஞ்சு அலர்ட் எனப்படும் பதற்ற சூழ்நிலையில்தான் இருக்கிறது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

'ஒற்றைக் குழந்தை என்று வருந்தாதீர்கள்... இதை ஃபாலோ செய்யுங்கள்!' #WorldSiblingDay

 
 

ன்று (மார்ச் 10) உலக உடன்பிறந்தோர் தினம். ஒரு வீட்டில் ஏழு குழந்தைகள், ஆறு, நான்கு என்பது சுருங்கி இரண்டு என்பதாகி... தற்போது ஒரு குழந்தை என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம். பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் பொருளாதார நெருக்கடி, பார்த்துக்கொள்ள ஆள் இல்லா நிலை, நிலையில்லா வேலை ஆகியவற்றை மனதில் கொண்டு ஒன்றே போதும் என்கிற மனநிலைக்குப் பெரும்பாலான பெற்றோர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இரண்டு பேர் இருக்கும் வீட்டில் ஷேரிங்கில் ஆரம்பித்து ஸ்நாக்ஸ் வரை ஒவ்வொன்றுக்கும் சண்டை வருதல் இயல்பு. அதன் மூலமே, அன்பும், விட்டுக்கொடுத்தலும் கற்று வந்தவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.

குழந்தை

 கடைசிக் காலத்தில் எனக்குப் பிறகு உனக்குன்னு ஒருத்தன்/ஒருத்தி இருக்கா. எதாவது பிரச்னைன்னா அவள்/அவன் பாத்துப்பா என்று பெற்றவர்கள் சொல்லி வளர்த்தார்கள். அதில் உண்மையும் உண்டு. தற்போது காலம் ஒற்றைக் குழந்தை என்பதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது... எனவே, இருக்கும் ஒற்றைக் குழந்தையை ராஜா, செல்லம் என்று கொஞ்சிக்கொண்டிருக்கிறோம். அது சரிதானா... அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர் ஜெயந்தினி.

ஜெயந்தினி''ஏன் இரண்டு குழந்தைகள் அவசியம்?'' 

 ''மனக்கஷ்டம், சந்தோஷம், விட்டுக்கொடுத்தல் என வாழ்வின் கடைசி காலம் வரை துணை என்கிற ஒன்றுக்காகவே இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். நிஜமாகவே நல்ல விஷயம்தான். நாம் நம் பிரச்னை, பொருளாதாரம், பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்று நம்மை மட்டும் சிந்தித்தே பல முடிவுகளை எடுக்கிறோம். நம் சந்ததிகளுக்கு உறவுகளையும், அன்பையும் கொடுக்க இரு குழந்தைகள் அவசியம் தேவை, இந்த உலகத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தை என்பது... ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் மட்டுமே பெற்று வளார்க்க வேண்டிய விஷயம். சில விஷயங்களை இழந்தால் தப்பில்லை நம் பிள்ளைகளுக்காக'' என்ற மருத்துவர் ஒற்றைக் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் வளர்ப்பு விஷயத்தில் எதைக் கடைப்பிடிக்கலாம் என்பது பற்றி பேசினார்.

''இந்தக் காலத்தில் நாம் நம் பிள்ளைகளை தெருவிலோ அல்லது அப்பார்ட்மென்ட் தரை தளத்திலோ விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் நாலு சுவர் எனும் வீட்டுக்குள்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டும், இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விளையாடுவார்கள். விளையாட ஆள் இல்லை என்றால், இரு குழந்தைகள் மட்டும் விளையாடுவார்கள். அதனால், ஒற்றைக் குழந்தை வைத்திருப்பவர்கள் மற்ற குழந்தைகளோடு அதிக நேரம் விளையாட, பேச, குதூகலிக்க விடுங்கள். அதே சமயம்... 

குழந்தை

'' 'நீ தான் எங்கள் இளவரசன், நீ தான் எங்கள் இளவரசி' என்கிற ரேஞ்சில் அதீத செல்லத்தைக் கொடுக்காதீர்கள். இரண்டு பேர்தான் சம்பாதிக்கிறோமே, பிள்ளை கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கலாம் என்கிற தவற்றை செய்யாதீர்கள்.  'நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்' என்கிற எண்ணம் பிள்ளைகள் மனதில் வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு பிள்ளைகள் இருந்தால்தான் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையைக் குழந்தையிடம் வளர்க்க முடியும் என்பதில்லை.ஒற்றைக் குழந்தைகள் இருக்கும் வீட்டில்... இன்று அப்பாவுக்குப் பிடித்த பூரி டிபன் செய்து நாம் மூவரும் ஷேர் செய்யலாம்... நாளைச் செல்லத்துக்கு பிரியாணி, நாளை மறுநாள் அம்மா செல்லத்துக்கு இட்லி என்று அன்பாக, அழகாக ஷேரிங் என்பதைக் குழந்தை மனதில் பதிய வையுங்கள்.

 அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இட்லியும், பூரியும் பிடிக்கும் என்பதை உங்கள் பிள்ளைகள் மனதில் பதிய வையுங்கள். உங்கள் குழந்தை அதிகம் தொடாத பொம்மைகளை, அவர்களிடம் கொடுத்த அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி குழந்தைகளிடமோ அல்லது நடைமேடையில் குடும்பம் நடத்துபவர்களிடமோ தரச் சொல்லுங்கள். மெதுவாக அவர்கள் மனதில் விசேஷ தினங்களின்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்குங்கள்.

கிட்ஸ்

 

அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மை, பெரியவர்களை மதிக்க வேண்டும், கஷ்டம் என்பது என்ன... என்பதை உணர வையுங்கள். வீட்டில் ரோஜாப் பூக்கள் வாங்கி ஒன்று உனக்கு, இன்னொன்று வீட்டில் வேலைப் பார்க்கிற அக்காவுக்கு என்று, அவர்கள் கையாலேயே அதை கொடுக்கச் சொல்லலாம். பண்டிகைகளுக்கு டிரெஸ் வாங்கும்போது உங்கள் அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டியின் குழந்தைக்கும் ஒரு ஃபிராக் வாங்கி, அதை உங்கள் மகள் கையாலேயே செக்யூரிட்டியிடம் கொடுக்கச் சொல்லலாம். சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போகும்போது கட்டாயம் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அந்த வீட்டில் இருக்கிற ஒற்றைக் குழந்தையுடன் உங்கள் பிள்ளை சேர்ந்து விளையாடுவதன் மூலம், ஒரு உடன்பிறவாத அக்காவோ, தங்கையோ கிடைக்கலாம்.''

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

''உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை'' - விவேகானந்தர் |

  • தொடங்கியவர்

உலகின் வயதான மனிதர்: ஆரோக்கியத்தின் ரகசியம் - 112 வயதிலும் ‘இனிப்பு’

 

 
guinnesjpg

இன்று காலை ஜப்பானில், மாசாஸோ நொனாகா வீட்டுக்கே சென்று உலகின் வயதான மனிதருக்கான பட்டயத்தை வழங்கி கௌரவித்தது கின்னஸ் | படம்: கின்னஸ் வேல்ர்ட் ரிக்கார்ட்ஸ்

ஜப்பானைச் சேர்ந்த 112 வயதுமிக்க, பழுத்த மனிதரான மசாஸோ நொனாகா, உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தால்  அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது ஆரோக்கியத்தின் ரகசியத்துக்குக் காரணம் இனிப்புப் பலகாரங்களும் வெந்நீர் குளியலும்தான் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

நொனாகா 1905 ஜூலை 25ல் பிறந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்ப்புத்துவக் கொள்கை ( தியரி ஆப் ஸ்பெஷல் ரிலேடிவிடி) கண்டுபிடித்த சில மாதங்களுக்கு முன்ம்புதான் அவர் பிறந்தார்.

ஜப்பானில் உள்ள வடக்குத் தீவு ஹொக்காய்டோவில் உள்ள அவரின் வீட்டுக்கே வந்து 'கின்னஸ் வேர்ல்ட் ரிக்காட்ஸ்' அமைப்பு வழங்கிய உலகின் வயதான மனிதர் என்ற சான்றிதழை இன்று காலை அவர் பெற்றுக்கொண்டார்.

நூற்றாண்டைக் கடந்த மனிதர் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு சூடான நீரூற்று குளியல் விடுதியையும் நடத்திவருகிறார்.

''அவர் செல்வதற்கு ஒரு சக்கர நாற்காலி தேவை. அதேநேரம் அவர் நல்ல நிலையில் இருக்கிறார்'' என்கிறார் யூகோ நொனாக்கா, அவரது பேத்தி.

நொனாகாவின் பேத்தி மேலும் கூறுகையில், அவர் ஜப்பானிய அல்லது மேற்கத்திய எந்தவகையான இனிப்புகளையும் சாப்பிடுவதில் விருப்பம் கொண்டவர். ஒவ்வொருநாளும் செய்தித்தாள்களை அவர் வாசித்துவிடுவார். அடிக்கடி வெந்நீர் குளியலில் மூழ்கிவிடுவார். என்றார் ஏஎப்பியிடம்ஹொகாய்ட்டோ தீவில் அஷோரோ நகருக்கு அருகே வசிக்கும் நொனாக்கோவுக்கு 7 சகோதரர்கள் ஒரு சகோதரி ஆகியோர் இருக்கின்றனர்.

அவர் 1931ல் ஹட்சுனோ என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 குழந்தைகள் என்கிறது 'கின்னஸ் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ்'.

உலகின் வயதான மனிதர் என்று இதற்குமுன் அறிவிக்கப்பட்டிருந்த ஸ்பெயினைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கோ நனேஸ் ஆலிவெரா என்பவர் கடந்த பிப்ரவரியில் தனது 113 வயதில் காலமானதை அடுத்து அந்தப் பட்டத்தை அதிகாரப்பூர்வமாக நொனாக்கா பெற்றுள்ளார்.

கின்னஸ் வேர்ல்ட் ரிக்கார்டு தற்போது உலக அளவிலான சாதனைக்காக அதற்கு பொருந்திவரும் போட்டியாளர்களை தொடர்ந்து தேடி விசாரித்து வருகிறது.

ஜப்பானில் மட்டும் கிட்டத்தட்ட 100 வயதைக் கடந்தவர்கள் 68,000 பேர் உள்ளதாக கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

புதுப்பிக்கப்பட்ட கணினி இசை தொழில்நுட்பம்

கணினி இசைக் குறிப்புகள், 1948-ம் ஆண்டில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டன.

  • தொடங்கியவர்

கிரிக்கெட் வறுவல், சோயா கறி, பாசி எண்ணெய்...இவை தாம் எதிர்கால உணவுகள்!

 
 

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகை 900 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எனில், உணவுத் தேவை இன்று இருப்பதிலிருந்து 70% உயரும். ஆனால், அவ்வளவு உணவைத் தயாரிக்க ஏற்ற வளங்கள் நமக்கு இருக்கிறதா? பதில் ``இல்லை" என்பதுதான். 

கடந்த 2014ம் ஆண்டிலிருந்து ``மோல்டு" (Mold) எனும் வலைதளம் மற்றும் பத்திரிகையைத் தொடங்கினார் லின் யீ யுவான் (Lin Yee Yuan). எதிர்கால உணவுகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டும், அது குறித்த கட்டுரைகளை எழுதிக்கொண்டும் வருகிறார். சமீபத்தில், யுவான் ஆராய்ச்சியின் அடிப்படையில் நமக்கான எதிர்கால உணவுகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது ``நேஷ்னல் ஜியாக்ரபி" (National Geography) நிறுவனம். இனிவரும் காலங்களில் இந்த உணவுகள் உலகின் பெரும்பகுதிகளில் பிரதான உணவாக இருக்கக் கூடும் என்று அது கூறியுள்ளது. 

1. கிரிக்கெட் பூச்சி :

ஆம்... பூச்சிகள்தான் எதிர்காலத்தின் பிரதான உணவாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, பல மேற்குலக நாடுகளில் கிரிக்கெட் பூச்சியைக் கொண்டு உருவாக்கப்படும் பொடிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை மாவாக அரைத்தும் பல இடங்களில் சாப்பிடுகிறார்கள். கிரிக்கெட் பூச்சியைக் கொண்டு இந்தோனேசியாவில் ``ரெம்பெயக்" (Rempeyek) என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. தாய்லாந்தில் ``சிங் ரிட்" (Ching Rit) எனும் வறுவல் சமைக்கப்படுகிறது. ஆனால், இன்றைய நிலையில் இவையனைத்தும் உலகின் சில பகுதிகளில்தான் உணவாக இருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் இது உலகம் முழுக்க முக்கிய உணவாக இருக்கும்.

எதிர்கால உணவுகள் - கிரிக்கெட் பூச்சி

மாட்டிறைச்சியில் இருப்பதை விட புரதமும் (Proteins), நுண் பொருள்களும் (Micro Nutrients) கிரிக்கெட் பூச்சியில் அதிகமாக இருக்கின்றன. இன்றைய நிலையில், கிரிக்கெட் பூச்சி உணவுகளின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், எதிர்காலங்களில் அதன் விலை பெருமளவு குறையும் என்று சொல்லப்படுகிறது. கிரிக்கெட் பூச்சிகளை வளர்க்கும் பண்ணைகள் சில இன்று அமெரிக்காவில் இருக்கின்றன. எதிர்காலங்களில் இந்தப் பண்ணைகள் உலகம் முழுக்க பெரும் வியாபாரமாக மாறும். கிரிக்கெட் பூச்சி பல வகைகளில் உணவாக இருக்கும்.

2. ``கேர்ன்ஸா" கோதுமை:

அமெரிக்காவின் கான்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் ``லேண்ட் இன்ஸ்டிட்டியூட்" (Land Institute) அதிக மகசூலைக் கொடுக்கும், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு கோதுமைப் பயிரை உருவாக்கினார்கள். அதற்குப் பெயர் ``கேர்ன்ஸா" (Kernza). 
வழக்கமாக கோதுமைப் பயிர்கள் ஒரு வருடம் வரை மட்டுமே வாழும். ஆனால், கேர்ன்ஸா 5 வருடங்கள் வரை மகசூலைக் கொடுக்கும் திறன்கொண்டது. அதேபோல், 10 அடி நீளம் வரைப் போகும் ஆழமான வேர்களையும் கொண்டது. 

கோர்ன்ஸா கோதுமை - எதிர்கால உணவுகள்

இது இன்னும் பரவலாகப் பயிர் செய்யப்படாவிட்டாலும் கூட, இதன் தன்மையின் அடிப்படையில் பார்க்கும் போது, எதிர்காலத்தில் இந்த கோதுமைதான் உணவிற்கான முக்கியப் பயிர் வகையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

3. சைவ மாமிசம்!:

சைவ மாமிசம் - எதிர்கால உணவு

மாமிசத்துக்காக அதிக கால்நடைகளை வளர்ப்பதுதான் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கான (Green House Gas Emission) முக்கிய காரணியாகச் சொல்லப்படுகிறது. மேலும், மக்கள் தொகை பெருமளவு இருக்கும்பட்சத்தில், அதற்கு இணையாக கால்நடைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது சற்று கடினமான விஷயம். எனவே, பட்டாணி, சோயா போன்றவைகளிலிருந்து அதே சுவையைக் கொண்டு வரும் ``சைவ மாமிசங்களை" உருவாக்க முடியும். அது எதிர்காலத்தில் ஒரு முக்கிய உணவாக இருக்கும். 

4. பாசி எண்ணெய், பாசி வெண்ணெய்:

பாசி எண்ணெய், வெண்ணெய்

எதிர்காலத்தில் எண்ணெய்க்குப் பெரும் பஞ்சம் ஏற்படலாம். அப்போது, பாசியிலிருந்து (Algae) எண்ணெய் எடுக்கும் நிலை ஏற்படும். பாசியிலிருந்து எண்ணெய், வெண்ணெய் எடுக்கும் ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்துக்கொண்டேயிருக்கின்றன. 

5. பண்ணைக் கோழிகள்:

பண்ணைக் கோழிகள்

இன்றே அதுதான் நிலைமையாக இருக்கிறது. எதிர்காலத்தில் பண்ணைகளில் ஊசியிடப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வளர்க்கப்படும் கோழிகள் மட்டும்தான் கிடைக்கும். 

எதிர்கால உணவுகள்

 

``இன்று நல்ல, ஆரோக்கியமான உணவுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். நாளை உணவுக்கே நாம் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும். இந்த உணவுகள் எல்லாம் முக்கிய உணவாக இருக்கலாம். ஆனால், இன்றே நாம் மண் வளத்தைக் காப்பாற்றினால் மட்டும்தான் இது கூட சாத்தியமாகும். இல்லையென்றால், மனித இனம் பெரும் பஞ்சத்தை சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கிறது" என்று எச்சரிக்கிறார் லின் யீ யுவான்.  

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘தர்மம் வீணாக அனுமதித்தலாகாது’
 

image_e4d5c7df33.jpgஇரக்கப்படுதலென்பது, மானுடநெறி. இது, தர்மத்தின் ஓர் அங்கமுமாகின்றது. இத்தகைய இரக்க உணர்வுள்ளோரை ஏமாற்ற விளைவோர், பாவ ஆத்மாக்களாகின்றனர். 

பொய்யுரைத்து, நடித்து, வருவோரை நம்பவைத்து ஏமாற்றுவது, தற்போது சகஜமாகிவிட்டது. சில பேர்வழிகள், தங்கள் துயரக்கதைகளைச் சொல்லிச் சொல்லியே, பிறரிடம் பொருள் கோருகின்றனர்.

ஆனால், அவர்கள் சொல்வதில் பெரும்பாலானவை, கற்பனை கலந்த நெடும்தொடர் என்பதை, இரக்கம் மிகுந்தவர்கள் கவனத்திற்கொள்வதுமில்லை.

துன்பப்பட்டவர்களைத் தாங்குதல், மேலான கைங்கரியமாகும். ஆனால், தர்மம் - சேரும் இடத்தில் சேர வேண்டும். பற்பல காரணங்களைக் காட்டிப் பணம் சேகரிக்கும் கூட்டம் அதிகரித்துவிட்டது.

இணையத்தளங்களிலும் இந்த சூது நடக்கின்றது. கொடுக்கும் முன்னர், இதைப் பெறுவதற்கு வருபவர் யாரெனத் தெளிந்துகொள்வது நல்லது. எக்காரணம் கொண்டும், தர்மம் வீணாக அனுமதித்தலாகாது.

ஏதிலிகளுக்காக இரங்குபவர்கள், இயன்றளவு வழங்குங்கள்.  

  • தொடங்கியவர்

விளையாட்டு வர்ணனை வானொலியில் ஒலிபரப்பான நாள்: ஏப். 11- 1921

 
அ-அ+

விளையாட்டை நேரில் கண்டறிய முடியாதவர்களுக்கு வானொலி மூலம் அதன் வர்ணனையை கேட்கும் வகையில் 1921-ம் ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி முதன்முறையாக வானொலி வர்ணனை செய்யப்பட்டது இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர்

 
 
 
 
விளையாட்டு வர்ணனை வானொலியில் ஒலிபரப்பான நாள்: ஏப். 11- 1921
 
விளையாட்டை நேரில் கண்டறிய முடியாதவர்களுக்கு வானொலி மூலம் அதன் வர்ணனையை கேட்கும் வகையில் 1921-ம் ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி முதன்முறையாக வானொலி வர்ணனை செய்யப்பட்டது

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.
* 1899 - ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.
* 1905 - ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
* 1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.
* 1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனேசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
* 1957 - பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.
* 1965 - ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.
* 1970 - அப்போலோ 13 ஏவப்பட்டது.
* 1979 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.
* 1981 - தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.
* 1987 - இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.
* 2002 - வெனிசுலாவில் அதிபர் ஹியூகோ சாவெசிற்கெதிராக ராணுவப் புராட்சி இடம்பெற்றது.
* 2007 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
* 2012 - இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

 

 

மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபாய் பிறந்த தினம்: ஏப்.11- 1869

 
அ-அ+

இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபாய்

 
 
 
 
மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபாய் பிறந்த தினம்: ஏப்.11- 1869
 
கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்.

இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபாய். இவரது தாய் மொழி குஜராத்தி.

1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார். கணவர் மேல்படிப்பிற்காக 1888-ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார்.

காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத்தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர். கணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார்.

1897-ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.

இந்தியா வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913-ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்.

காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 1915-ல் இந்தியாவிற்கு திரும்பியபின் இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார். சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார்.

சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார்.

இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

போதும் என்ற மனோபாவம் ஏன் தேவை? - வாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை #FeelGoodStory

 

உன்னை அறிந்தால்

`இந்த அருமையான வாழ்க்கையை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி கடவுளே! வேண்டிய அளவுக்கு இந்த வாழ்வை நாங்கள் நேசிக்காமல் இருந்திருந்தால், அதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள்’ - பிரபல அமெரிக்க எழுத்தாளர் காரிசன் கெய்லர் (Garrison Keillor) சொன்ன அற்புதமான வாசகம் இது. துயரச் சம்பவங்கள், உடல்நலக் கோளாறுகள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள்.. எத்தனையோ இன்னல்கள் இருந்துவிட்டுப் போகட்டும்; வாழ்க்கையின் மேல் மனிதர்களுக்குத் தேவை திருப்தி... `இது போதும்’ என்கிற மனோபாவம். இந்த வரம் வாய்க்காதவர்கள் எதையெதையோ தேடி ஓடினாலும், எத்தனையோ உயரங்களைத் தொட்டிருந்தாலும் ஏதுமில்லாதவர்களே! `போதும் என்ற மனம்’ ஏன் வேண்டும்... அது அள்ளித்தரும் பரவச அனுபவம் எப்படியிருக்கும் தெரியுமா? எடுத்துச் சொல்கிறது இந்தக் கதை. 

அது பிரேசிலில் இருக்கும் சின்னஞ்சிறு கடற்கரை கிராமம். ஒருநாள் அந்த ஊருக்கு ஏதோ வேலையாக ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். காலை நேரம். கடற்கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது கடலிலிருந்து, கரையை நோக்கி சிறு படகு ஒன்று வந்தது. அதில் ஒரு மீனவர் இருந்தார். படகு நெருங்க நெருங்க அந்த மீனவர் சில பெரிய மீன்களைக் கடலில் வலைவீசிப் பிடித்திருந்தார் என்பதையும் தொழிலதிபர் தெரிந்துகொண்டார். மீனவர் கரையில் இறங்கியதும், தொழிலதிபர் அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்; சரளமாக, நெடுநாள் பழகியவர்போல் பேச ஆரம்பித்தார். ஒரு தொழிலதிபருக்கான முக்கியமான தகுதியே சரளமாகப் பேசுவதுதானே! 

கதை

``இந்த மீன்களையெல்லாம் பிடிக்கிறதுக்கு உங்களுக்கு எவ்வளவு நேரமாச்சு?’’ 

``அதைக் கேட்குறீங்களா... ரொம்ப இல்லை ஒன்றரை மணி நேரமாச்சு...’’ 

``இன்னும் கொஞ்ச நேரம் கடல்லயே இருந்து மீன் பிடிச்சிருந்தீங்கன்னா, இதைவிட அதிகமா மீன்கள் கிடைச்சிருக்கும்ல?’’ 

``உண்மைதான். ஆனா, இப்போ நான் பிடிச்சிருக்குற மீன்களே எனக்கும் என் குடும்பத்துக்கும் போதுமானது.’’ 

``சரி... ஒரு நாள் காலையில எந்திரிச்சதுலருந்து நீங்க வழக்கமா செய்யுற வேலைகள் என்னென்ன?’’ 

``காலையில சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடியே எந்திரிச்சிடுவேன். அப்புறம் மீன் பிடிக்க கடலுக்குள்ள போயிடுவேன். கொஞ்சம் மீன் பிடிப்பேன். அதை மார்க்கெட்ல வித்துட்டு வீட்டுக்குப் போவேன். என் குழந்தைகளோட விளையாடுவேன். மத்தியானம் என் மனைவியோட ஒரு குட்டித் தூக்கம் போடுவேன். சாயந்திரம், என் நண்பர்களோட சேர்ந்து காபி ஷாப், விருந்துனு போவேன். கித்தார் வாசிக்கிறது, பாட்டுப் பாடுறது, டான்ஸ் ஆடுறதுனு பொழுது போயிடும்...’’ 

மீனவர் சொன்னதை கவனமாகக் கேட்டார் அந்த தொழிலதிபர். ``நான் ஒண்ணு சொல்றேன்... கேட்குறீங்களா?’’ 

``நான் பிசினஸ் மேனேஜ்மென்ட்ல முனைவர் பட்டம் வாங்கினவன். மிகச் சிறந்த வெற்றியாளராக நீங்க உருவாக என்னால உதவ முடியும்...’’ 

``சொல்லுங்க...’’ 

``இந்த நிமிஷத்துலருந்து மீன் பிடிக்கப் போகும்போது, எவ்வளவு அதிகமா கடல்ல இருக்க முடியுமோ இருங்க. எவ்வளவு மீன்களைப் பிடிக்க முடியுமோ பிடிங்க. அதை வித்துக் கொஞ்சம் பணம் சேர்த்துடுங்க. அப்புறம் அந்தப் பணத்தைக் கொண்டு இதைவிட பெரிய படகை உங்களால வாங்க முடியும். அதிகமான மீன்களையும் உங்களால பிடிக்க முடியும். ரொம்ப சீக்கிரத்துல இன்னும் சில படகுகளை உங்களால வாங்க முடியும். நீங்களே சொந்தமா ஒரு கம்பெனியை ஆரம்பிக்கலாம். டின்ல மீனை அடைச்சு விக்கிற கம்பெனியில இப்போ நல்ல லாபம் கிடைக்குது. அதை ஆரம்பிக்கலாம். நிறையா பணம் சேர்ந்ததும், இந்தச் சின்ன ஊரை விட்டுட்டு சாவோ பாவ்லொ (Sao Paulo) நகரத்துக்கு இடம்பெயரலாம். அங்கேயே உங்க கம்பெனியோட ஹெட் ஆபிஸைவெச்சுக்கிட்டு, உங்க கம்பெனியின் பல கிளைகளை ஊர் ஊருக்குத் திறக்கலாம்...’’ 

கதை

இப்போது மீனவர் கேட்டார்... ``அதுக்கப்புறம்?’’ 

``அதுக்கப்புறம் என்ன... ஒரு ராஜா மாதிரி உங்க சொந்த வீட்ல வாழலாம். நேரம் நல்லா இருந்துச்சுன்னா, உங்க கம்பெனியை ஒரு பொது நிறுவனமாக உருவாக்கி, அதனோட ஷேர்களை ஷேர் மார்க்கெட்லகூட விடலாம். அப்புறமென்ன... நீங்க பெரும் பணக்காரராகிடுவீங்க...’’ 

``அதுக்கப்புறம்?’’ 

``அதுக்கப்புறம்... நீங்க பெரிய வெற்றியாளரா வலம்வந்துட்டு ஒரு நாள் ஓய்வு பெறுவீங்க. இந்த மாதிரி ஏதாவது ஒரு சின்ன கிராமத்துக்குக் குடி போவீங்க. காலையில சீக்கிரம் எந்திரிச்சி கடலுக்குள்ள போய் கொஞ்சம் மீன் பிடிக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்து குழந்தைகளோட விளையாடலாம். மத்தியான உங்க மனைவியோட ஒரு குட்டித் தூக்கம் போடலாம். சாயந்திரம் ஆகிடுச்சுன்னா உங்க நண்பர்களோட சேர்ந்து காபி ஷாப், விருந்துனு போகலாம். அப்புறம் கித்தார் வாசிக்கிறது, பாட்டுப் பாடுறது, டான்ஸ் ஆடுறதுனு பொழுது போயிடும்...’’ 

 

மீனவர் இப்போது குழப்பமடைந்தவரைப்போல அந்தத் தொழிலதிபரைப் பார்த்தார்... ``இப்போ நான் அதைத்தானே செஞ்சுக்கிட்டு இருக்கேன்?’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பல எதிர்ப்புகளை மீறி நேற்றைய IPL போட்டியில் கருப்பு உடை அணிந்த பிரபலம் யார் தெரியுமா?

 

நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் என்பதால் அவர்கள் விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் தவறாமல் ஆஜராகிவிடுவார்.

பரபரப்பாக இன்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணியின் ஸ்கோரை சென்னை அணி கடைசி ஓவரில் சேஸ் செய்து த்ரில் வெற்றி பெற்றது.

அப்போது நடிகர் ஷாருக் கொஞ்சமும் முகத்தில் சோகத்தை காட்டாமல் எழுந்து நின்று சென்னை அணியை பாராட்டும் விதத்தில் கைதட்டினார். இதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அது மட்டுமின்றி தோனியின் மனைவி சாக்ஷி அருகில் அமர்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த ஷாருக் தோனி மகள் ஸிவாவுடன் எடுத்துகொண்ட ஒரு புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg

 

625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg

http://www.cineulagam.com

  • தொடங்கியவர்

இந்தக் கப்பலில் கேப்டன் உள்பட யாருமே கிடையாது! - உலகின் முதல் தானியங்கி கப்பல்

 
 

கப்பல்

மனிதர்கள் பல காலமாக கடல்வழிப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். தொலைவில் இருக்கும் இடங்களுக்குப் பயணம் செய்வதற்கும் வணிகர்களுக்கும் கடல்வழிப் போக்குவரத்தே முதலில் பயன்பட்டது. தற்பொழுது கடலில் பயணம் செய்பவர்கள் குறைவுதான் என்றாலும் சரக்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் கடல்வழிப் போக்குவரத்தே  அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. அளவில் பெரிய பொருள்களை மற்ற போக்குவரத்தின் மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது கடல் வழிப் போக்குவரத்தே பொருத்தமானதாக இருக்கிறது. கடல்வழிப் போக்குவரத்தில் செலவும் மிகக்குறைவு. ஆகவேதான் உலக அளவில் சரக்குப் போக்குவரத்து என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது .

யாரா பெர்க்லேன்ட்

கடல்வழிப் போக்குவரத்தில் பயன்படுவது சரக்கு கப்பல்கள்தாம். தொடக்கத்தில் காற்றின் சக்தியைப் பயன்படுத்தி பாய்மரத்தால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த கப்பல்கள், அதன் பிறகு நிலக்கரி, டீசல் இன்ஜினால் இயங்கும் வகையில் மாற்றம் பெற்றன. தொழில்நுட்ப அளவில் அணு சக்தியில் இயங்கும் வகையில் கூட கப்பல்கள் தற்பொழுது பயன்பாட்டில் இருக்கின்றன. தொழில்நுட்பத்தில் இவ்வளவு வளர்ச்சியடைந்து விட்ட போதிலும் கூடக் கப்பல்களில் பல காலமாக மாறாத ஒரே விஷயம் மனிதர்கள்தாம். எவ்வளவுதான் கப்பல்கள் நவீனமடைந்து விட்டாலும் கப்பல்களை இயக்குவதற்கு மனிதர்களின் உதவி அவசியமான ஒன்றாக இருக்கிறது. தற்பொழுது அந்த நிலை மாறப்போகிறது. கூடிய விரைவிலேயே மனிதர்களின் உதவியின்றி இயங்கக்கூடிய கப்பலை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது நார்வேயைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.

கப்பல்

நார்வேயைச் சேர்ந்த யாரா (Yara) என்ற நிறுவனம் இந்தக் கப்பலை தயாரிக்கவுள்ளது. இரசாயன பொருள்கள் தயாரிக்கும் இந்த நிறுவனம் தானியங்கிக் கப்பலை கட்டமைப்பதற்கு $25 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிடவுள்ளது. யாரா பெர்க்லேன்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள ( Yara Birkeland) இந்தக் கப்பலின் மொத்தச் செலவில் மூன்றில் ஒரு பங்கை நார்வே அரசு கடந்த 2017-ம் ஆண்டிலேயே வழங்கிவிட்டது. சரக்கு கொண்டுசெல்லப்படும் வகையில் உருவாக்கப்படும் இந்தக் கப்பல் 260 அடி நீளம் கொண்டது. இந்தக் கப்பலின் சிறப்பு தானியங்கி என்பது மட்டுமல்ல இது முழுக்க மின்சாரத்தைப் பயன்படுத்தி மட்டுமே இயங்கும் என்பதும்தான். இந்தக் கப்பலை இயக்குவதற்கு மின்சார மோட்டர்கள் பயன்படுத்தப்படும் அதற்குச் சக்தி அளிப்பதற்காக பேட்டரிகள் இதில் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கப்பல் சராசரியாக 11 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அதிகபட்சமாக 19 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. வசதிகள் எல்லாமே அருமை; ஆனால், கடலில் மனிதர்கள் இல்லாமல் எப்படி இந்தக் கப்பல் இயங்க முடியும்? அதை யார் வழி நடத்துவார்கள் என்ற குழப்பம் பலருக்கு எழக்கூடும். அதற்காக காங்ஸ்பெர்க் ( Kongsberg) என்ற மற்றொரு நிறுவனத்துடன் கைகோத்திருக்கிறது இந்தக் கப்பல் நிறுவனம் .

இந்த நிறுவனம் கடல் வழி போக்குவரத்தில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டது . இந்த நிறுவனத்தின் வழிகாட்டும் அமைப்புகள் தானியங்கி கப்பலுக்கு வழிகாட்டும். அது தவிர இந்தக் கப்பலில் பல வழிகாட்டும் கருவிகள் இருக்கின்றன. 2019-ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் இந்தக் கப்பலில் தற்காலிகமாக மனிதர்கள் இருப்பார்கள். கப்பல் எப்படிச் செயல்படுகிறது, அதில் இருக்கும் குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டறிவதற்கு மட்டுமே அவர்கள் இருப்பார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து 2020-ம் ஆண்டில் மனிதர் உதவியின்றி முழுவதும் தானியங்கி முறையில் செயல்படத்துவங்கும். இந்தத் தொழில்நுட்பம் கடல்வழிப் போக்குவரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் இந்தத் தானியங்கி கப்பல் மூலமாகச் சரக்கு வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளது யாரா.

 

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ஒரே கிராமத்தில் வசிக்கும் நூறுக்கும் அதிகமான உயரக் குறைபாடுடைய மனிதர்கள்

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள கரக் நகரில் சுமார் நூற்று ஐம்பது முதல் இருநூறு பேர், உயரம் குன்றி காணப்படுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.