Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12729279_987042418011119_912968162710004

உலகின் மிகச்சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான மைக்கேல் ஜோர்டானின் பிறந்தநாள்
Happy Birthday Michael Jordan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

வாங்க... பேசலாம்!

p88_1.jpg

`நீங்கள் டயல்செய்த எண்ணைச் சரிபார்க்கவும்’ என்ற பேச்சொலியை டெளன்லோடு செய்து காலர் ட்யூனாக வைத்துக்கொண்டான், ஊரெல்லாம் கடன் வாங்கியிருந்த சிலம்பரசன்!

- எஸ்கா

அரசியல்

p88_2.jpg

``கூட்டணிக்காக நான் யாரிடமும் கையேந்த மாட்டேன்!’’ - ஆவேசமாகப் பேட்டியளித்த தலைவர், தனித்து நிற்பதற்காக ஆளும் கட்சியிடம் ஆல்ரெடி பெட்டி வாங்கியிருந்தார்!

- பாப்பனப்பட்டு வ.முருகன்

பந்தயம்

p88_3.jpg

முயல், மொபைல் அலார்மை பத்தாவது முறையாக ஸ்நூஸ் செய்து, பின் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தபோது, ஆமை ஃபினிஷிங் லைன் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தது!

vikatan

  • தொடங்கியவர்

12698383_987041898011171_689723391428017

அழகு நடிகை சதாவின் பிறந்தநாள்.
Happy Birthday Sadha

  • தொடங்கியவர்

ஷாருக்கானின் “ஃபேன் ஆன்தம்” பாடல் வீடியோ

  • தொடங்கியவர்

12715723_987091214672906_919611964106106

இப்போதைய சூப்பர் ஹிட் கலக்கல், கலகலப்பு கதாநாயகன்
தொடர்ந்தும் வெற்றித் திரைப்படங்களுடன் கலக்கும் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள்.

Happy Birthday SivaKarthikeyan

கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் தந்த வெற்றி, சிவகார்த்திகேயனின் உயர்வு.

  • தொடங்கியவர்

Wishing Paris Hilton a very happy birthday!

  • தொடங்கியவர்

நாய்கள் மீது பாசம் காட்டும் டோனி

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனிக்கு நாய்கள் மீது கொள்ளை பிரியம். இவர் வீட்டிலும் நாய்களை வளர்த்து வருகிறார். அவ்வப் போது டோனியும், அவரது மனையும் நாய்கள் மீதான பாசத்தை டுவிட்டரிலும் பகிர்ந்து கொள்வர். இந்நிலையில் சமீபத்தில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் மைதான பாதுகாப்பிற்காக 24 நாய்கள் பயன்படுத்தப்பட்டன.

01dhoni3

இதில் சிறப்பாக பயிற்சி தரப்பட்ட 6 வயது ’பிரின்ஸ்’ (இளவரசர்) என்ற நாயை டோனிக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனிடம் நீண்ட நேரம் விளையாடி மகிழ்ந்துள்ளார் டோனி. பின்னர் அதை தனக்கு வழங்குமாறு டோனி கேட்டுள்ளார். இதை மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த அஜய் ஷிர்கேயும் ஏற்றுக் கொண்டார்.

mahi12oct

 

ஆனால் போட்டி முடிந்து பிறகு கிளம்பும் அவசரத்தில் நாயை மறந்து விட்டார் டோனி. ஐபிஎல் தொடரில் புனே அணியின் தலைவராக இருக்கும் டோனி, மீண்டும் அங்கு செல்லும் போது அந்த நாயை கேட்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் நாய்கள் பாதுகாப்பு பிரிவின் தலைவரான கிஷோர் நாவார் கூறுகையில், டோனி ’பிரின்ஸ்‘ வசிப்பதற்கு தகுந்த இடத்தை அமைத்து கொடுப்பாரா என்று தெரியவில்லை. எனவே அது இங்கு இருப்பதே சிறந்தது. டோனிக்கு பிரின்ஸை வழங்க வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

onlineuthayan

  • தொடங்கியவர்

12734062_987048001343894_816881860944633

அண்மைக்காலத்தில் இங்கிலாந்தின் குறிப்பிடத்தக்க சகலதுறை வீரராகக் கலக்கி வரும் அடேல் ரஷிடின் பிறந்தநாள்
Happy Birthday Adil Rashid

  • தொடங்கியவர்

12742781_679917802110765_547167362244131

  • தொடங்கியவர்
2004: ஈரா­னிய ரயில் தீ விபத்தில் 295 பேர் பலி
2016-02-18

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 18

 

668Untitled-3.jpg1229: புனித ரோம் பேர­ரசின் மன்னன் இரண்டாம் பிரெ­டெரிக் எகிப்­திய மன்னன் அல் - கமீல் உடன் 10 ஆண்டு போர் நிறுத்­தத்­துக்கு உடன்­பட்டான்.

 

1478:  இங்­கி­லாந்தின் நான்காம் எட்­வேர்ட்­டிற்கு எதி­ராக சதி முயற்­சியில் இறங்­கி­ய­தற்­காக அவ­னது சகோ­தரன் ஜோர்ஜ்  தூக்­கி­லி­டப்­பட்டான்.

 

1797: பிரித்­தா­னி­யர்­களால் ட்ரினிடாட் தீவு கைப்­பற்­றப்­பட்­டது.

 

1865: அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: வில்­லியம் ஷேர்மன் தலை­மை­யி­லான கூட்டுப் படைகள் தென் கரோ­லி­னாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொளுத்­தினர்.

 

1911: முத­லா­வது அதி­கா­ர­பூர்­வ­மான விமான அஞ்சல் சேவை இந்­தி­யாவின் அல­கா­பாத்தில் ஆரம்­ப­மா­னது. 23 வயது விமா­னியான ஹென்றி பெக்கெட் சுமார் 6500 கடி­தங்­களை 13 கி.மீ. தொலை­வி­லுள்ள நைனி எனும் இடத்தில் விநி­யோ­கித்தார்.

 

1930: கிளைட் டொம்பா ஜன­வ­ரியில் எடுத்த புகைப்­ப­டங்­களை ஆராய்­கையில் புளூட்­டோவைக் கண்­டு­பி­டித்தார்.

 

1932: சீனக் குடி­ய­ர­சிடம் இருந்து மன்­சூ­கு­வோவின் விடு­த­லையை ஜப்பான் மன்னர் அறி­வித்தார்.

 

1957: நியூஸிலாந்தில் முதல் தட­வை­யாக சட்­டபூர்வமான மரண தண்­டனை நிறை­வேற்­ற­பப்ட்­டது.


1957 : கென்­யாவின் கிளர்ச்சித்  தலைவர் டெடான் கிமாத்தி பிரித்­தா­னிய குடி­யேற்ற அர­சினால் தூக்­கி­லி­டப்­பட்டார்.


1969: அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற விமான விபத்தில் 35 பேர் உயி­ரி­ழந்­தனர். 


1959 : நேபா­ளத்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டது.


1965 :  ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து காம்­பியா, சுதந்­திரம் பெற்­றது.


1979 : தெற்கு அல்­ஜீ­ரி­யாவில் சகாரா பாலை­வ­னத்தில் முதற் தட­வை­யாக பனி மழை பெய்­தது.


2001: இந்­தோ­னே­ஷி­யாவில்  இன வன்­மு­றைகள் ஆரம்­பித்­தன. இதனால் சுமர் 500 பேர் பலி­யா­ன­துடன் ஒரு இலட்சம் பேர் இடம்­பெ­யர்ந்­தனர்.


2003:  தென் கொரி­யாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்­பட்ட தீயில் சிக்கி சுமார் 200 பேர்  உயி­ரி­ழந்­தனர்.


2004 : ஈரானில் இரா­சா­யனப் பொருட்­களை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று தீப்­பற்­றி­யதில் சுமார் 200 மீட்புப் பணி­யா­ளர்கள் உட்­பட 295 பேர் பலி­யா­கினர். 


2007 : டில்­லியில் இருந்து பாகிஸ்­தா­னுக்குச் சென்­று­கொண்டு இருந்த 'சம்­ஜ­வுதா அதி­க­வேக ரயிலில்  குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர்.


2014: யுக்ரைனின் கீவ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதலில் 76 பேர் உயிரிழந்தனர்.

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=668#sthash.vdKuB9XJ.dpuf
  • தொடங்கியவர்

ஒபாமாவின் ப்ளாக்பெரி...!

 

obama350.jpgலகின் பாதுகாப்பான மனிதர்களில் ஒருவரான அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தும் மொபைல் போன் பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். பலக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் மொபைல் எந்தளவு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ளாக்பெரி

மற்றவர்கள் ப்ளாக்பெரி பயன்படுத்தி இன்று மற்ற கருவிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்றும் ப்ளாக்பெரியை பயன்படுத்தி வருகின்றார்.

தேசிய பாதுகாப்பு மையம்

ஒபாமா பயன்படுத்தும் ப்ளாக்பெரி கருவியானது அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டு, தேசிய பாதுகாப்பு மையம் உருவாக்கியதாகும்.

செக்யூர் வாய்ஸ்

தேசிய பாதுகாப்பு மையம் உருவாக்கிய கருவியை ப்ளாக்பெரி நிறுவனம் பிரத்யேக பாதுகாப்பு மென்பொருளான செக்யூர்வாய்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

குறுந்தகவல்

எவ்வித சூழ்நிலையிலும் யாராலும் ஹேக் செய்ய முடியாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ள ப்ளாக்பெரி கருவியில் கேம், செல்பீ கேமரா மற்றும் குறுந்தகவல் உள்ளிட்ட அம்சங்கள் கிடையாது.

என்க்ரிப்ஷன்

பாதுகாப்பு காரணங்களுக்காக அடிப்படை அம்சங்கள் வழங்கப்படவில்லை என்றாலும், உலக தரம் வாய்ந்த என்க்ரிப்ஷன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கை

ஒபாமாவின் ப்ளாக்பெரி கொண்டு அதிகபட்சம் 10 பேரிடம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். இதில் துணை அதிபர் ஜோ பிடென், ஒபாமாவின் தலைமை அதிகாரி மற்றும் அவரது தனிப்பட்ட ஆலோசகர்கள் அவரது மனைவி மிட்செல் ஒபாமா மற்றும் ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் அடங்குவர்.

இணைப்பு

ஒபாமாவின் ப்ளாக்பெரி கருவியானது குறிப்பிட்ட பாதுகாப்பான கட்டுப்பாட்டு கருவியுடன் மட்டுமே இணைக்கப்பட முடியும். இது ஐ.எம்.ஈ.ஐ நம்பர்களை முடக்க பயன்படுத்தப்படுகின்றது. இதனால் யாரும் கருவியை ஹேக் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயணம்

இதனால் ஒபாமா எங்கு சென்றாலும் அவருடன் இந்த கருவியும் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டு கருவி

இந்த கட்டுப்பாட்டு கருவி அதிபரின் வீடு மற்றும் அவர் பயணம் செய்யும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இது அதிகம் பாதுக்காப்பானதாகும்.

vikatan

  • தொடங்கியவர்

12671803_987589111289783_479427177883646

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்ச்சாளர் ஃபில் டெஃபெரைட்டாஸ் பிறந்தநாள்.
Happy Birthday Phil Defreitas

  • தொடங்கியவர்

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

 

poen%20slat%20leftttt.jpgபிளாஸ்டிக்.. ஒரு காலத்தில் வரமாக இருந்த இதன் தன்மைகள், பயன்பாடுகள் எல்லாமே இன்றைய பூமிக்கு சாபமாக மாறியிருக்கிறது. நீங்கள் இருக்கும் இடத்தினை கொஞ்சம் சுற்றிப்பாருங்கள். பிளாஸ்டிக் எந்த அளவிற்கு உங்களை சூழ்ந்திருக்கிறது என்பது தெரியும். நமது நிலத்தை பாதித்திருக்கும் இந்த பிளாஸ்டிக் குப்பைகள், புவியின் நீர்ப்பரப்பிலும் குவிந்துவருகின்றன.

2014 ம் ஆண்டு மொத்தம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கின் அளவு, 311 மில்லியன் டன்கள். இதுவே 2050 ல் 1124 டன்களாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை என்றாலும் கூட, அதிகரித்து வரும் இதன் பயன்பாடுகள் கடலையும் மாசுபடுத்தி வருகிறது.
இதுதொடர்ந்தால், 2050 ல் கடலில் மீன்களின் எடையை விட, குவிந்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது உலக பொருளாதார மன்றம்(WEF).

இன்று பசிபிக் பெருங்கடலில், கலந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டுமென்றால் 79,000 ஆண்டுகள் வேண்டுமாம். ஆனால் இன்னும் 5 ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடல் முழுவதும் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றப்போகிறேன் என அறிவித்திருக்கிறார் 21 வயதாகும், நெதர்லாந்தை சேர்ந்த போயன் ஸ்லாட். இன்று உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் இளம் தொழிலதிபர். உலகின் முன்னணி பத்திரிகைகள் கொண்டாடும், சுற்றுசூழல் ஆர்வலர். ஸ்லாட்டின் இந்த திட்டத்தை 2015 ன் சிறந்த 25 கண்டுபிடிப்புகள் வரிசையில் இடம்கொடுத்து கௌரவித்தது டைம் பத்திரிகை. 2014 ல் இதற்காக, ஐக்கியநாடுகள் சபையின் சார்பில், ‘சாம்பியன் ஆப் தி எர்த்’ ஆக தேர்வு செய்யப்பட்டார்.எப்படி இதை செய்யப்போகிறார் ஸ்லாட்?
 
எப்போது ஆரம்பித்தது இந்த பிரச்சினை?


கடந்த நூற்றாண்டில் இருந்தே, அதிகரித்து வந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடுகள், இந்த நூற்றாண்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்றைக்கு தொட்டதெற்கெல்லாம் பிளாஸ்டிக் என்ற நிலையில், அதன் மட்காத கழிவுகளை நிலத்தில் கொட்டி மண்வளத்தை கெடுத்தது போல, கடல்வளத்தையும் கெடுத்திருக்கிறோம். நாம் எங்கோ எப்போதே ஒரு மூலையில் வீசி எறிந்த, பிளாஸ்டிக் கப் கூட, இன்றைக்கு ஏதாவது ஒரு கடலில் மிதந்துகொண்டிருக்கலாம். சாலைகளில் எரியும் பிளாஸ்டிக் குப்பைகள், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகள் மூலம் கடைசியாக கடலை வந்தடைகிறது. இத்துடன் பெரும் தொழிற்சாலை கழிவுகளும் உலகம் முழுக்க, கடலிலேயே கொட்டப்படுகின்றன. அத்தனை பெரிய கடலில் எத்தனை குப்பைகள் வீசினாலும் அது செரித்துக்கொள்ளும் என்ற மனப்பான்மை காரணமாக, பல கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன.

poen%20slat%20600%2033.jpg

இப்படி நிமிடத்திற்கு ஒரு கன்டெய்னர் அளவு பிளாஸ்டிக் கடலில் இன்று கலக்கிறது. இப்படி வருடத்திற்கு 80 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கடலை வந்தடைகிறது. தற்போது உலகம் முழுக்க இருக்கும் மொத்த கடல் பரப்பில் குறைந்தது 5.25 ட்ரில்லியன் துண்டுகள் பிளாஸ்டிக்காவது கடலில் மிதக்கும் என்கின்றன ஆய்வுகள். ஆனால் இந்த குப்பைகள் எப்படி மண்ணில் மட்காமல் இருக்கிறதோ, அதைப்போலவே கடலிலும் நிரந்தரமாக தங்கிவிடும்.

இவை யாரை பாதிக்கின்றன?

“முதலில் பாதிக்கப்படுவது கடல்வாழ் உயிரினங்களே.. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் விதவிதமான நிறங்களில் இருக்கின்றன. எனவே இதனை உணவு என நினைத்து பெரும்பாலான பறவைகள் உண்டு விடுகின்றன. ஆல்பட்ராஸ் பறவைகள், ஆமைகள், மீன்கள் என எல்லாமே இவற்றை உண்டு விடுகின்றன. இப்படி வருடந்தோறும் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இந்த பிளாஸ்டிக் மாசினால் இறந்துபோகின்றன. அதே போல, பிளாஸ்டிக்கிற்கு இன்னொரு தன்மை உண்டு. புற்றுநோயை உண்டாக்கும் PCB,DDT போன்ற கடலில் மிதக்கும் வேதிப்பொருள்களையும் கிரகித்துக்கொள்ளும்.

இந்த  விஷமேறிய பிளாஸ்டிக் பொருட்களை முதலில் சிறிய மீன்கள் உண்டு விடும். பின்னர் சிறிய மீனை உணவாகக்கொள்ளும் பெரிய மீன்களின் வயிற்றிற்கும் இந்த வேதிப்பொருட்கள் செல்லும். பின்னர் கடைசியாக மீன்களை உண்ணும் மனிதர்களின் வயிற்றிற்கு இந்த வேதிப்பொருட்கள் வந்துசேரும். இப்படி நாம் வீசிய டன் கணக்கான பிளாஸ்டிக் நம்மிடமே திரும்ப வந்து சேருகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளினால், வருடந்தோறும் பல நாடுகள் தங்கள் கடற்கரைகளை சுத்தம் செய்ய நிறைய செலவு செய்கிறது. சுற்றுலா வளம் பாதிக்கப்படுகிறது. இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதை தடுத்தாலும் கூட, இதுவரைக்கும் கடலில் இருக்கும் குப்பைகளே, மிகப்பெரிய ஆபத்தானது” என்கிறார் ஸ்லாட்.

poen%20slat%20600%2033333333333.jpg

எப்படி உருவானது இந்த திட்டம்?

இந்த திட்டத்தை 16 வயதிலேயே யோசித்திருக்கிறார் ஸ்லாட். “2011 ல் நான் கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருக்கும் ஒரு கடலில் நீந்தும் போதுதான் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தேன். நான் கடலுக்கடியில் பார்த்த மீன்களின் எண்ணிக்கையை விட, பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. உடனே நிறைய பேரிடம் இது குறித்து கேட்டேன். அனைவரும் பிளாஸ்டிக் நம்மை எதுவும் செய்யாது. அது அப்படியே கடலில்தான் இருக்கும் என்றார்கள். இப்படியே சேர்ந்துகொண்டே போனால் என்னாவது என்று அப்போதுதான் யோசித்தேன்.

என்னுடைய பள்ளியில் அறிவியல் புராஜெக்டாக கடலில் பிளாஸ்டிக் சுத்திகரிக்கும் திட்டத்தை கண்டுபிடித்து காட்சிக்கு வைத்தேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. பின்னர் டெல்ஃப்ட் பல்கலைக்கழத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நிறைய பேராசியர்களிடம், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களை அறிந்துகொண்டேன். அதன்படி, 2020 ல் கடலில் மொத்தம், 7.25 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கும். இவற்றின் எடை, 1000 ஈபிள் டவர்களுக்கு நிகரானது.

இத்தனை கழிவுகள் நமக்கு உணவளிக்கும் கடலில் மிதந்துகொண்டிருக்கின்றன என அறிந்ததும், கொஞ்ச கொஞ்சமாக என்னுடைய தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொண்டே வந்து, 2013 ல் இதனை வெறும் சொல்லாக மட்டுமில்லாமல் செயலாக மாற்ற வேண்டுமென என்னுடைய கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டு, “The Ocean Cleanup” என்னும் அமைப்பை உருவாக்கினேன்.” என்கிறார் ஸ்லாட்.

poen%20slat%20600%204.jpg

எப்படி சுத்தம் செய்யப்போகிறார்?

கடல்களில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் தேங்கியிருப்பது கடல் சுழல்களில்தான். அதாவது கடலின் நீரோட்டம் வட்டவடிவமாக ஒரே இடத்தினை, பெரிய பரப்பளவில் சுற்றிவரும். இந்த இடமானது சுழல் அல்லது சுழி எனப்படும். உலகில் கண்டங்களுக்கிடையே, மொத்தம் 5 கடல் சுழிகள் இருக்கின்றன. அதில் அதிகம் குப்பைகள் சேர்வது வட பசிபிக் சுழியில்தான். இதனைதான் 2020 ல் சுத்தபடுத்தவிருக்கிறார் ஸ்லாட். தற்போதைய தொழில்நுட்பங்களை கொண்டு, கடல்களில் கப்பலை எடுத்துக்கொண்டு போய், வலைவீசி எல்லா பிளாஸ்டிக்கையும் அள்ளிவிட முடியும். ஆனால் அதற்காகும் செலவு பலகோடிகள்.

அதைவிட, இந்த உலகின் மொத்த கடலையும் சுத்தம் செய்ய, எத்தனை மனிதர்கள் வலைவீச வேண்டும்? என்பதை கற்பனை செய்துபாருங்கள். அதே போல, இன்னும் நிறைய தொழில்நுட்பங்கள் பிளாஸ்டிக்கை அகற்ற கண்டுபிடிக்க பட்டாலும், அவை செலவு மிகுந்தவை.  பூமி முழுக்க, பரந்துவிரிந்திருக்கும் கடலை சுத்தம் செய்ய இயலாதவை.

ஆனால் ஸ்லாட்டின் தொழில்நுட்பம் ‘கடல் தன்னைத்தானே சுத்தகரித்துக்கொள்ளும் முறை’. கடலின் சுழியில், ஓடும் நீரோட்டத்தின் நடுவில், V வடிவில் நீளமான பிளாஸ்டிக் தடுப்புகள் ஏற்படுத்தப்படும். இவை அசையாதவாறு, கடலின் அடிமட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். இந்த சுழியினுள் மிதந்துவரும் பிளாஸ்டிக் குப்பைகள், இந்த தடுப்புகளால் தடுத்து நிறுத்தப்படும். அதே சமயம் கடல்வாழ் உயிரினங்களுக்கு, தடுப்பாக இல்லாமல், நீருக்கு அடியில் வழிவிடும். இப்படி கடலின் நீரோட்டம் ஒரு சுற்று முடியும் தருவாயில் அதில் மிதக்கும் மொத்த பிளாஸ்டிக்கும் , V வடிவ தடுப்பின் மையத்தில் தேங்கியிருக்கும்.

poen%20slat%20600%201.jpg

பின்னர் கப்பலை எடுத்துக்கொண்டு போய், எளிதாக இவற்றை அள்ளிக்கொண்டு வந்துவிடலாம். கடலில் மிதக்கும் 80 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் நிலப்பரப்பின் வழியாகவே கடலில் கலக்கிறது. இவற்றையும் தடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் புதிய கழிவுகள் கடலில் சேராமல் இருக்கும். ஏற்கனவே சோதித்துப்பார்த்த இந்த தொழில்நுட்பம் வெற்றியடையவே, இந்த திட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றனர் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
 
எவ்வளவு செலவு ஆகும்?

இந்த திட்டம் மொத்தத்திற்கும் ஆகும் செலவு  2 கோடி மட்டுமே. முதலில் இந்த திட்டத்தினை பல தொழிலதிபர்களிடம், கொண்டு சேர்த்திருக்கிறார் ஸ்லாட். ஆனால் யாரும் உதவி செய்வதாக இல்லை. இதற்கிடையே, 2012 ல் இந்த திட்டம் பற்றி புகழ்பெற்ற, TEDx டாக்கில் உரையாற்ற யூ-டியூபில் வைரல் ஆனார் ஸ்லாட். பின்னர் பலரும் நன்கொடைகள் அளிக்க, தற்போது தேவையான பணம் சேர்ந்துவிட்டது என அறிவித்திருக்கிறார்.

ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பையை அகற்ற ஆகும் செலவு வெறும், 4.5 டாலர்கள்தான். இந்த முறையின் படி, பசிபிக்கின் பாதிக்கழிவுகளை, இன்னும் 10 ஆண்டுகளில் நீக்கிவிடலாம். அதே போல, பிளாஸ்டிக்கின் கெட்ட தன்மையாக இருந்த, வேதிப்பொருள்களை கிரகிக்கும் திறன் தற்போது, நன்மை அளிக்கும் என்கிறார் ஸ்லாட். காரணம் கடலில் இருக்கும் பெரும்பாலான வேதிப்பொருட்களை இந்த பிளாஸ்டிக் குப்பைகள் கிரகித்துக்கொள்ளும். அவற்றை நாம் நீக்கிவிட்டால், வேதிப்பொருள்களும் நீங்கிவிடுமே!

poen%20slat%20600%202.jpg

இதையெல்லாம் விட, இன்னோரு யோசனைதான் சபாஷ் போட வைத்திருக்கிறது. நாம் தற்போது பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் 5 சதவீதம் கூட, முழுமையாக மறுசுழற்சிக்கு செல்வதில்லை. ஆனால் இப்படி கடலில் இருந்து எடுக்கும், டன் கணக்கான பிளாஸ்டிக் குப்பைகளை ஆடைகளாக, பொருட்களாக மறுசுழற்சி செய்வதன் மூலம், 5 லட்சம் மில்லியன் டாலர்கள் வருமானமும் பெறமுடியும் என அறிவித்துள்ளார் ஸ்லாட். எனவே இது வணிகரீதியாகவும் வெற்றியடையும் தொழில்நுட்பம். இந்த பணத்தைக்கொண்டு, மேலும் சுற்றுசூழல் சீரமைப்புக்கு செலவிடலாம்.

100 சதவீதம் சாத்தியமா?

இந்த திட்டத்தைக்கொண்டு, 99.85 சதவீதம் கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை நாம் அகற்றலாம் என்கிறார் ஸ்லாட். ஆனால் “இவை கடலின் மேல்பகுதியில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே, சுத்தம் செய்யும். கடலின் அடி ஆழத்தில் எண்ணற்ற, குப்பைகள் இருக்கின்றன. அதே போல கண்ணுக்கு தெரியாத, சிறிய துகள்கள் எக்கச்சக்கமாக இருக்கும்போது, அவற்றை இந்த தொழில்நுட்பம் என்ன செய்யும் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் சிலர். “பெரிய பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிவிட்டலே, சிறிய துகள்கள் படிவதும் தடுக்கப்படும்.கடலின் அடி ஆழத்தில் இருக்கும் பிளாஸ்டிக் எண்ணிக்கையை விட, மேற்பரப்பில் இருக்கும் குப்பைகளின் அளவு அதிகம்” என அவர்களுக்கு பதில் அளிக்கிறார் போயன் ஸ்லாட்.

poen%20slat%20600%2022.jpg

தற்போது தன்னுடன், 25 பணியாளர்களையும், 100 க்கும் மேற்பட்ட, தன்னார்வலர்களையும் கொண்டு, திட்டத்தினை கொஞ்சம் கொஞ்சமாக சோதித்து, குறைகளை மேம்படுத்திவருகிறார்.  2020 ல் ஸ்லாட் செய்யப்போகும் பிரம்மாண்ட, பசிபிக் கடல் சுத்திகரிப்பை உலகம் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த கட்டுரை உங்களை திருப்திப்படுத்தியிருந்தால்  போயனின் முயற்சிக்கு நீங்களும் உதவலாம். இதற்காக நீங்கள் நெதர்லாந்து செல்லத்தேவையில்லை. கடைக்கு செல்லும்போது, கடைக்காரர் பிளாஸ்டிக் கவர் கொடுத்தால் அதை வாங்காமல் வந்தாலோ, அதனை அசட்டையாக சாலையில் வீசாமல் இருந்தாலோ, கூட போதும். போயனுக்கு மட்டுமல்ல, கடலன்னைக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகவும் அது இருக்கும்!

vikatan

  • தொடங்கியவர்

செல்ஃபி எடுத்து குட்டி டால்பினை சாகடித்த மக்கள் (வீடியோ)

 

ர்ஜென்டினாவில் கடந்த வாரம் செல்ஃபி எடுத்தே ஒரு குட்டி டால்பினை பொதுமக்கள் சாகடித்துள்ளனர்.

      
கடற்கரை அருகே தாயுடன் இந்த குட்டி டால்பின் வந்துள்ளது. அப்போது அதனை பிடித்து தண்ணீருக்கு வெளியே வைத்து நீண்ட நேரம் செல்ஃபி எடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த குட்டி டால்பின் இறந்து போனது. பிரான்சிஸ்கானா ரகத்தை சேர்ந்த இந்த டால்ஃபின் அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படும்.

vikatan

  • தொடங்கியவர்

12742334_680259988743213_430352851038833

பிப்ரவரி 18: இத்தாலிய ஓவியர் மைக்கலாஞ்சலோ நினைவு நாள் இன்று.

இவரின் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

  • தொடங்கியவர்

கெட்ட கொழுப்பை சுத்தமாக நீக்கும் நுண்ணிய புதுக்கருவி..
 

  • தொடங்கியவர்

அனகோண்டாவிடம் கடி வாங்கிய ஷேன் வார்ன்! (வீடியோ)

 

ஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஷேன் வார்ன்,  சவால் நிறைந்த ரியாலிட்டி ஷோவில் கடைசி கட்டமாக அனகோண்டா பாம்பிடம் கடி வாங்க வேண்டும்.

அதன்படி அனகோண்டா அடைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் ஷேன் வார்ன் தனது தலையை விட்டார். அப்போது அந்த பாம்பு,  ஷேன் வார்னேவை பதம் பார்த்து விட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

vikatan

  • தொடங்கியவர்

டெட் பூல் (DEAD POOL) சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?

 

நீண்டநாட்களுக்கு பிறகு சூப்பர் பவர் மேன் கான்செப்டில் வெளிவந்துள்ள ஹாலிவுட் படம் டெட் பூல். அமேரிக்கா முதல் இந்தியாவரை எல்லா நாடுகளிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. டெட் பூல் படத்தின் சூப்பர் பவர் மேன் நம்ம சென்னைக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என நம்ம நெட்டிசன்ஸ் கான்செப்ட் பிடித்து போட்டோஷாப்  செய்து வருகின்றனர்.   டெட்பூல் நாயகன் சென்னை வரும் நம்ம பசங்க சொல்வதை எப்படி செய்து காட்டுகிறார் என பார்ப்போம்.

டெட் பூல் -  சோஷியல் நெட்வொர்க்கையே கலகலக்க வைக்குற கேப்டன் நீங்கதானா ?

1.விஜயகாந்த் - ஓடுற ட்ரெயின்ல இப்பிடியெல்லாம் குதிச்சு வரக்கூடாது ஒகே வா? ஆஆங்.

12715237_948341271927871_645539928485257


2.   டெட் பூல் -  அண்ணனுக்கு ஒரு சமோசா போடுறா

12524068_948341625261169_493850854175207


3. 'சென்னை ஸ்பெஷல்' ஆட்டோ சவாரி

12728948_948341341927864_524862031143149

டெட்பூல் -  சென்னை ஃபுல்லா அம்மா ஸ்டிக்கர் ஒட்டி வச்சுருக்காங்களே! யாருப்பா அது எனக்கே பாக்கணும் போல இருக்கே!


4. எம்.ஜி.ஆர் சமாதில கடிகார சத்தம் கேட்குதான்னு சொல்லணும்!

12688298_948341398594525_441739318392337

டெட் பூல் -  ஹை டூட்ஸ் !!!  நான் டிக்...டிக்...டிக்  சத்தம் கேக்க போறேன்.


5.   டெட் பூல்  -  அந்தபக்கம் மட்டும் பெரிய தட்டுல தர்றாங்க எனக்கு மட்டும் ஏன் சின்ன கப்?

12715256_948341455261186_714100814133691


6.டெட் பூல் - எவனாவது  வெள்ள நிவாரண பொருளில் ஸ்டிக்கர் ஒட்டுனீங்கனா கைமா தான்.

12715579_948341515261180_250495139027264


7. டெட் பூல் - தலைவா!!!!!!!!!!!!!!!!!!!

12743739_948341568594508_284573263126142

8.  டெட் பூல் - உங்க சூப்பர் ஸ்டார் என்ன விட ஸ்டெயிலா ?

12715657_948341541927844_151256479066464

9. டெட்பூல் - தகிட! தகிட! வாடா என் மச்சி வாழக்கா பச்சி!

12745958_948341328594532_726691254508199

10.  டெட்பூல் - சரக்கு இல்லாம சென்னையா ?

12742390_948341731927825_690185124945140

 - பு.விவேக் ஆனந்த்

 

 
 
VIKATAN
  • தொடங்கியவர்
என்னது! ஆண்களின் உடையை பெண்கள் இப்படியும் அணியலாமா?

வீடியோ

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

dot1.jpg பரிணீதி சோப்ரா சமீபத்தில் நடித்த படங்கள் எல்லாம் சொதப்பல். வாய்ப்பு இல்லாமல் தவித்தவர், பப்ளி உடம்பை ஸ்லிம்மாக மாற்றி,  ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்த... விரைவில் தொடங்கவிருக்கும், `தூம்-4' படத்துக்கு பரிணீதியை டிக் அடித்திருக்கிறார்கள். `கடைசியில், எனக்கான படத்தை நானே கண்டுபிடிச்சுட்டேன்' என ட்விட்டரில் ஸ்மைலி தட்டியிருக்கிறார் பியூட்டி. வெல்கம் பேக்!

p75a.jpg

dot1.jpg  தனது 40-வது பிறந்த நாளை, குடும்பத்தினருடன் மாலத்தீவில் கொண்டாடியிருக்கிறார் அபிஷேக் பச்சன். அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யா, சகோதரி ஸ்வேதா என, குடும்பத்தினர் அனைவரும் கப்பலில் செல்லும்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில், `கூட்டுக் குடும்பத்தின் கடல் பயணம்' எனப் பகிர்ந்திருக்கிறார் அமிதாப். `வாழ்க்கை ஒரு பயணம். நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் கைகோக்கையில் அது இன்னும் அழகாகிறது' என்கிறார் அபிஷேக். #தட், `எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' மொமன்ட். 

p75b.jpg

  `பாகுபலி’யில் சிவகாமியாக மிரட்டல் பார்வையில் வசீகரித்த ரம்யா கிருஷ்ணன், மீண்டும் அதிரடியாக வருகிறார் `ருத்ராக்‌ஷா' எனும் தெலுங்கு படத்தில். இயக்கப்போவது ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி. நான்கு புதுமுக நடிகர்களுடன் சமந்தாவும் நடிக்கும் இந்தப் படத்தில், ரம்யா கிருஷ்ணனுக்கு பேய் வேடமாம். கணவர் இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நடிக்கும் படம் என்பதால், எதிர்பார்ப்பு கூடுகிறது. #வயசானாலும், உங்க அழகும் ஸ்டைலும் ஆஹா!

dot1.jpg  விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த `குயின்', இந்தியா முழுக்க செம ஹிட். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்  ஆகும் இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனை  இயக்குவது நடிகை ரேவதி. இரண்டு மொழிகளிலும்  வசனம் எழுதுவது சுஹாசினி. ஹீரோயின் யார் என்ற சஸ்பென்ஸ் மட்டும் தொடர்கிறது.  குயிக்கா சொல்லுங்க... `குயின்' யாருங்க?

dot1.jpg  `இந்தியாவில் நடக்கவிருக்கும் T-20 உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி வெல்ல வாய்ப்புகள் அதிகம்' எனச் சொல்லி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். `அணியில் நெஹ்ரா, ஹர்பஜன், யுவராஜ் என சீனியர்கள் திரும்பியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். சீனியர்களும் இளம் வீரர்களும் கலந்து இருக்கும் சீரான, வலிமையான அணியாக இருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடினார்கள். எனவே, நாம் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது' என்கிறார் சச்சின். இந்தியாவுக்கு ஒரு கோப்பை பா.....ர்சல்.

p75c.jpg

dot1.jpg  இன்னும் முதல் படமே வெளிவரவில்லை. அதற்குள் விக்ரம் பிரபுவுடன் ஒரு படம், சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இன்னொரு படம் என இரண்டு படங்களில் புக் ஆகிவிட்டார் மஞ்சிமா மோகன். `அச்சம் என்பது மடமையடா' டீஸருக்குக் கிடைத்த வரவேற்பில் பொண்ணுக்கு மவுசு எகிறிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டரில் பல அக்கவுன்ட்களில் மஞ்சிமாதான் இப்போது டி.பி. அழகு பொண்ணு, வாம்மா கண்ணு!

dot1.jpg  சரப்ஜித் சிங், அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த விவசாயி. 1990-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு
22 ஆண்டுகள் சிறையில் இருந்தார். `அவர் குற்றமற்றவர்’ எனக் கருணை மனு அளிக்கப்பட்டும் அது நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்தும்போனார். இந்தியாவே பேசிய சரப்ஜித்தின் இந்த வாழ்க்கை, இப்போது பாலிவுட்டில் படமாகிறது. சரப்ஜித் சகோதரியின் பார்வையில் இருந்து சொல்லப்படும் இந்தக் கதையில், சரப்ஜித்தாக ரன்தீப் ஹௌடாவும் அவரது சகோதரியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்கிறார்கள். படத்துக்காக 28 நாட்களில் 18 கிலோ எடை குறைந்து, மெலிந்துபோன ரன்தீப்பின் புகைப்படத்தை படத்தின் இயக்குநர் ஓமுக் குமார் வெளியிட, அவரது ஈடுபாட்டுக்கு பாலிவுட்டே பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டிருக்கிறது. ஒரு கைதியின் டைரி!

p75d.jpg

dot1.jpg  மலர் டீச்சர் இஸ் பேக்! `பிரேமம்' படத்துக்குப் பிறகு, `இனி நடிக்க மாட்டேன்' என வெளிநாடு சென்ற சாய் பல்லவி, இப்போது மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் படத்தின் நாயகி. மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் சாய் பல்லவி நடித்த ‘கலி’ படம் ரிலீஸுக்கு ரெடி.  கடந்த வாரம் ‘கலி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாக, மறுபடியும் பற்றிக்கொண்டது மலர் டீச்சர் காய்ச்சல்!  மலரே நின்னை காணான் திருநாள்!

dot1.jpg  சென்ற வருடம் கூகுள்.காம் டொமைனையே ஒருவர் விலைக்கு வாங்கியது பரபரப்பானது. கூகுளின் செக்யூரிட்டியை உடைத்து, சான்மே வேத் என்பவர் கூகுள் டொமைனை வெறும் 12 டாலருக்கு வாங்கினார். உடனே சுதாரித்த கூகுள், சில நிமிடங்களில் அந்தப் பரிவர்த்தனையை கேன்சல் செய்து, 12 டாலரைத் திரும்பத் தந்தது. தங்கள் குறையைச் சுட்டிக்காட்டிய சான்மேவுக்கு கூகுள் அப்போது வெளியே சொல்லப்படாத ஒரு பெரும்தொகையை சன்மானமாக வழங்கியது. அது எவ்வளவு என இப்போது அறிவித்திருக் கிறார்கள். கூகுளின் எண் வடிவமான 6006.13 டாலரை முதலில் வழங்கி இருக்கிறார்கள். பின், அதை இரட்டிப்பாக்கினார்களாம். அனைத்தையும் அறக்கட்டளைக்குத் தந்துவிட்டார் சான்மே. கூகுளையே விலைக்கு வாங்கி, அதுக்காக பரிசு வாங்கி, அதை தானம் வழங்கி... செம, செம சான்மே!

 p75e.jpg

dot1.jpg   ஆஸ்கர் விருது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் குழுவில் இடம்பெற்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. பிப்ரவரி 28-ம் தேதி நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பிரியங்காவைப் பார்க்கலாம். பொதுவாக உலக அளவில் பிரபலமான முகங்களையே இதற்காகத் தேர்வுசெய்யும் ஆஸ்கர் அமைப்பு, `குவான்டிகோ' சீரியல் மூலம், அமெரிக்க மக்களின் மனதை வென்றதால், முதல்முறையாக இந்தியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. வெல்டன் பிரியங்கா!

vikatan

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

சொல்வனம்!

அறகழூர் அப்பத்தா

காதுத் தண்டட்டிகள்
தோள்களில் குலுங்க
பச்சை குத்திய கரங்களின்
நரம்புகள்
பாம்புகளாய்ப் புடைக்க
வெற்றிலை இடித்து
வெறும் வாயில் குதப்பி
எதிர்ப்படும் எச்சிலை
இரு விரல்கொண்டு
லாகவமாய்
திண்ணையில் அமர்ந்தபடி
தெரு நடுவில் துப்பும்
அறகழூர் அப்பத்தா
தன் எண்பதாம் வயதின்
இறுதியில் இறந்துபோனாள்
ஒரு நாள்.
கிராமத்தின் ஆவணமாய்
இருந்த அவளோடு சேர்ந்து எரிந்து
சாம்பலோடு சாம்பலாயின
சொற்கள் தெறிக்கும்
சொலவடைகளும்
கணக்கில் அடங்காத
கதைப் பாடல்களும்.

vikatan

  • தொடங்கியவர்

12743975_987573047958056_891615476945224

மின்கலத்தை உருவாக்கியவரும் மீதேன் வாயுவைக் கண்டுபிடித்தவருமான இத்தாலிய விஞ்ஞானி அலெசான்றோ வோல்ட்டாவின் பிறந்த நாள்.

இவர் மின்துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி விஞ்ஞானிகளில் ஒருவர் என்பதையும் பெருமையுடன் நினைவுபடுத்துவோம்.

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு பிரமாண்டமான இசை கச்சேரியை பார்த்து இருக்கமாட்டீர்கள் ..

  • தொடங்கியவர்

என்னது... வாழைப்பழத்திலும் ரசாயனமா..?

 

ழங்களில் பல வகைகள் இருந்தாலும்... தமிழர்களுக்கு பழம் என்றாலே அது வாழைப்பழம்தான். கோவில் பூஜைகள், படையல்கள், விசேஷங்கள், விருந்து உபசரிப்புகள் முதல் சினிமா காமெடி வரை அனைத்திலும் வாழைக்கு முக்கிய இடமுண்டு. அந்தளவுக்கு நம் வாழ்வியலோடு ஒன்றிப்போயிருக்கிறது, வாழைப்பழம்.  அத்தகைய சிறப்புமிக்க வாழைப்பழத்தை பழுக்க வைப்பதற்கு வியாபாரிகள் கையாளும் யுக்தி அதிர்ச்சியடைய வைக்கிறது.

முன்பு கடைகளில் பழுக்காத வாழைத்தாரை தொங்க விட்டிருப்பார்கள். அவை கொஞ்சம் கொஞ்சமாகப் பழுக்கத் தொடங்கும். பழுக்கப் பழுக்க விற்பனை நடக்கும். அதிகளவில் தேவைப்பட்டால் அரிசி அண்டாவுக்குள் போட்டு பழுக்க வைப்பார்கள். நொச்சி இலை போன்ற வெப்பமூட்டும் இலைகளைப் போட்டு காற்று புகாத வண்ணம் மூடி பழுக்க வைபார்கள். ரொம்ப அரிதாக சாம்பிராணி புகை மூட்டம் போட்டும் பழுக்க வைப்பார்கள். இப்படி இயற்கையாகப் பழுக்க வைக்கும்போது ஒரே சீராக பழங்கள் பழுக்காது. அந்த விஷயத்தை முன்பு நாம் பொருட்படுத்தவும் மாட்டோம்.

bananavc1.jpg



தற்போது உணவுப் பழக்கவழக்கங்களிலும் புகுந்த நாகரீகம், வர்த்தக யுக்திகள் போன்றவை வாழைப்பழங்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரே அளவிலான வீரிய திசு வளர்ப்பு வாழைகள், ஒரே நிறம், ஒரே போல பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் என அதிலும் நவீனத்தைப் புகுத்தி விட்டார்கள். ஆரம்பத்தில், காற்றுப் புகாதவாறு அடைக்கப்பட்ட அறைகளில் பழங்களை அடுக்கி வைத்து... எத்திலீன் வாயுவை புகுத்தி பழுக்க வைக்கும் முறையைக் கையாள ஆரம்பித்தனர். அதற்கு அடுத்த கட்டமாக, தற்போது, 'எத்திஃபான்' என்ற ரசாயனத்தை தண்ணீரில் கலந்து அதில் வாழைக்காய்களை முக்கி எடுத்து பழுக்க வைக்கிறார்கள்.

'அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்துள்ளது' என்று வியாபாரிகள் சொன்னாலும்... இயற்கையாக நடக்க வேண்டிய விஷயத்தை செயற்கையாக நடக்க வைப்பது தவறல்லவா. 'தோலை உரித்துத்தானே சாப்பிடுகிறோம்' என்று நியாயம் சொல்லப்பட்டாலும், வாழைப்பழத்தை நாம் கழுவிக் கையாள்வதில்லையே. பழத்தின் தோலை உரிக்கும்போது அதில் படிந்துள்ள ரசாயனம் நம் கைகளில் படும். அதில்லாமல், காம்புகளில் உள்ள வெடிப்புகள் மூலமாக இந்த ரசாயனம் பழத்துக்குள் புகுந்து விடவும் வாய்ப்புண்டு.

பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட உணவாகக் கொடுத்து வரும் வாழைப்பழத்திலும் ரசாயனம் கலக்கலாமா? அனுமதிக்கப்பட்ட அளவில்தான் பயன்படுத்துகிறோம் என்று சொன்னாலும் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் விஷம் விஷம்தானே..!

இயற்கையாக விளைவிக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை. இயற்கையாக பழுக்க வைத்தாவது விற்பனை செய்யலாமே...?    

வாழைப் பழங்களில் ரசாயனம் பூசும் நடைமுறைகள் கீழே இருக்கும் வீடியோவில்..!

செய்தி, வீடியோ: தே. தீக்‌ஷித்

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.