Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஒரு பந்து, ஒரு shot - ஆனால் வலித்தது மூன்று பேருக்கு.. அது எப்படி?

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது?

  • தொடங்கியவர்
1974 : பாரிஸ் நகரில் விமான விபத்தினால் 346 பேர் பலி!
 

வரலாற்றில் இன்று.....

மார்ச் - 03

 

677varalaru.jpg1575 : இந்­தி­யாவின் முக­லாயப் பேர­ரசர் அக்பர், வங்­காளப் படை­களைத் தோற்­க­டித்தார்.

 

1857 : பிரான்ஸூம் ஐக்­கிய இராச்­சி­யமும் சீனா­வுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்­தன.

 

1878 : ஓட்­டோமான் பேர­ரசின் கீழ் பல்­கே­ரியா சுதந்­திரம் பெற்­றது.

 

1913 : அமெ­ரிக்­காவின் வொஷிங்டன் நகரில் வாக்­க­ளிப்பு உரிமை கோரி ஆயி­ரக்­க­ணக்­கான பெண்கள் ஊர்­வலம் சென்­றனர்.

 

1918 : முதலாம் உலகப் போரில் ரஷ்­யாவின் பங்­க­ளிப்பை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஜேர்­மனி, ஆஸ்­தி­ரியா மற்றும் ரஷ்யா ஆகி­யன உடன்­பாட்­டிற்கு வந்­தன.

 

1933 : ஜப்­பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் பூகம்பம் மற்றும் சுனாமி கார­ண­மாக 3,000 பேர் வரையில் இறந்­தார்கள்.

 

1938 : சவூதி அரே­பி­யாவில் பெற்­றோ­லிய எண்ணெய் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

1939 : மும்­பை­யில், மகாத்மா காந்தி ஆதிக்­க­வா­தி­க­ளுக்கு எதி­ராக உண்­ணா­நோன்பை ஆரம்­பித்தார்.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் புரூம் என்ற நகரில் ஜப்­பானின் பத்து போர் விமா­னங்கள் குண்டுத் தாக்­கு­தலில் ஈடு­பட்­டதில் நூற்­றுக்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டனர்.

 

1943 : இரண்டாம் உலகப் போர்: லண்­டனில் விமானக் குண்­டுத்­தாக்­கு­தலின் போது சுரங்க ரயில் நிலை­யத்தில் ஒதுங்­கிய 173 பேர் நெரி­சலில் சிக்கி இறந்­தனர்.

 

1966 : பிரித்­தா­னிய போயிங் 707 பய­ணிகள் விமானம் ஒன்று ஜப்­பானின்  ஃபியூஜி மலையில் விபத்­துக்­குள்­ளா­னதில் 124 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1969 : நாசாவின் அப்­பலோ 9 விண்ணில் ஏவப்­பட்­டது.

 

1971 : இந்­திய – பாகிஸ்தான் போர் ஆரம்­ப­மா­னது.

 

1974 : பிரான்ஸின் பாரிஸ் நகரின் அருகில் துருக்­கிய விமானம் ஒன்று வீழ்ந்து மோதி­யதில் அதில் பயணம் செய்த 346 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆத­ர­வாக லத்­வி­யாவின் 74 சத­வீத மக்­களும் எஸ்­தோ­னி­யாவின் 83 சத­வீத மக்­களும் வாக்­க­ளித்­தனர்.

 

2005 : ஸ்டீவ் பொசெட் என்­பவர், விமா­ன­மொன்றை எங்கும் நிறுத்­தாமல், மீள் எரி­பொருள் நிரப்­பாமல் தனி­யாக உலகை சுற்றிவந்த முதல் மனிதரானார்.

 

2013 : பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 45 பேர் உயிரிழந்ததுடன் 180 பேர் காயமடைந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மரணத்தின் பிடியில் இருக்கும் பாடகியின் கடைசி முத்தம்- உருகிய பாடகர்

புற்றுநோய் காரணமாக விரைவில் மரணம் அடைய உள்ள தனது மனைவி குறித்து இணையபக்கத்தில் கணவர் எழுதியுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

US%20Woman%20death.jpg

அமெரிக்காவை சேர்ந்த பாடகர்களான ஜோய் மற்றும் ரோரி தம்பதியினர் ஏராளமான பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். இசை துறையில் பாரிய விருதான கிராமி விருதுக்கும் இந்த தம்பதியினர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோய் ஃபீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது நோயை குணப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது வாழ்வின் இறுதிகட்டத்தில் உள்ளார் ஜோய்.

இதுகுறித்து அவரது கணவர் ரோரி தனது வலைபக்கத்தில் எழுதியுள்ளதாவது, எனது மனைவி தற்போது தூங்கவுள்ளார். அவரது உடல் விரைவில் தனது செயல்களை நிறுத்திவிடும். இன்று காலை அவரை பரிசோதித்த செவிலியர் ஜோய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

தனது மகளின் 2வது பிறந்த நாளை பார்ப்பதற்காக மட்டுமே இத்தனை நாட்களாக காத்திருந்த ஜோய், மகள் இண்டியானாவின் பிறந்தநாள் முடிந்ததையடுத்து தற்போது அவர் நித்திரையடைய உள்ளார்.


ஒரு கடைசி முத்தம் என இது குறித்து எழுதியுள்ள ரோரி, மரணமடைவது குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும் நான் விரும்பிய அனைத்தையும் செய்துவிட்டேன். நான் விரும்பிய வாழ்க்கையையே வாழ்ந்துள்ளேன் என ஜோய் கூறியதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12771849_995051057210255_122439296873849

பிரபல ஹொலிவூட் நடிகை ஜெசிக்கா பீல்லின் பிறந்தநாள்.
Happy Birthday Jessica Biel

  • தொடங்கியவர்

ஒவ்வொரு நாட்டு பாராளுமன்றங்களில் நடந்த அதிரடி WWE சண்டை காட்சிகளின் தொகுப்பு ..பாருங்க அப்படியே ஷாக் ஆகிடுவீங்க ....

  • தொடங்கியவர்

வேலைக்கார பணிப்பெண் மாடலான கதை- டெல்லியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்!

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி,  தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த,  வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மாடலாக தேர்ந்தெடுத்து அசத்தியுள்ளார்.

madel%20gril%20delhi.jpg

டெல்லியில் மன்தீப் நாகி தனது தோழியை பார்க்க சென்ற போது, கமலா-வை (பெயர் மாற்றம்) பார்த்துள்ளார். இதையடுத்து அவரை தனது புதிய ஆடைகளை பிரபலப்படுத்த மாடலாக பயன்படுத்தலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றியுள்ளது. 2 குழந்தைகளுக்கு தாயான கமலா, தன்னை மாடலாக அழைப்பதை கேட்டு ஆச்சர்யமடைந்துள்ளார்.

இது குறித்து வடிவமைப்பாளர் மன்தீப் நாகி கூறுகையில், எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மாடலை எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கமலா இருந்தார். நான் முதலில் என் ஆசையை கமலாவிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார். பின்னர் அவர் மாடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார். தான் அணியப் போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.

madel%20gril%20delhi%201.jpg

அதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மாடலிங்கிற்கு தயாரானார். இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம். அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம். முதலில் கேமராவை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார்.

எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மாடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த மாடலிங் சூட்டிங் மூலம் கமலா வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை என்னால் முழுவதுமாக கூற இயலாது. ஆனால் அவர் இந்த மாடலிங் அனுபவத்தை எளிதில் மறக்கமாட்டார் என கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

12768226_995039753878052_803669944008526

அழகிய ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாள்.
Happy Birthday Shraddha Kapoor

 

  • தொடங்கியவர்

'பொம்மனாட்டியை தொட்டுப் பேசி நடிக்கிறாளே... !' - ஹரிதாஸ் - விகடன் தியேட்டர் வீடியோ

ரிதாஸ் ....40களின் மத்தியில் 3 தீபாவளிகளை தாண்டி ஓடிய சாதனை திரைப்படம். தமிழ்த்திரையுலகில் இன்றும் பேசப்படும் சாதனை திரைப்படம்.

தமிழத்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் - முதல்கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி  இணைந்து நடித்த இந்த படம்,  தியாகராஜபாகவதரின் மாஸ்டர் பீஸ். இளைஞர்களுக்கு நல்ல மெசேஜ் சொன்ன இத்திரைப்படத்தில்தான் அக்கால இளைஞர்களுக்கு பிடித்த பல 'விஷயங்கள்' இடம்பெற்றன.

இயக்குனர் சுந்தர்ராவ் நட்கர்னியின் சாதுர்யம் அது. படத்தில் இடம்பெற்ற 'மன்மத லீலையை வென்றார் உண்டோ...' என்ற பாடல் அடுத்த 10 வருடங்களுக்கு அந்நாளைய இளைஞர்களுக்கு தேசிய கீதமாக இருந்தது.

ஹரிதாஸ் படத்தை அன்றைய நாளில் விகடன் 'ஃபர்ஸ்ட் லுக் குழு' சுடச்சுட விமர்சனம் செய்திருந்தால் எப்படியிருந்திருக்கும்...? கற்பனையை நிஜமாக்கிப்பார்த்தோம். இதோ உங்களுக்காக ஹரிதாஸ் இப்போது,  விகடன் ஃபர்ஸ்ட் லுக் விமர்சன குழுவினரால் பிரஸ்தாபிக்கப்படுகிறது... வந்தனம்..

vikatan

  • தொடங்கியவர்

701958_995056290543065_76950755104773672

நடிகை வரலக்ஷ்மி (வரு) சரத்குமாரின் பிறந்தநாள்.
துடிப்பான வரு அண்மையில் தாரை தப்பட்டையில் நடிப்பிலும் கலக்கியிருந்தார்
Happy Birthday Varu Sarathkumar

  • தொடங்கியவர்

மார்ச் 3: 1923 ஆம் ஆண்டு இதேநாளில்தான் டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

12805799_685943614841517_315546485597139

  • தொடங்கியவர்

விலங்குகள் மனிதர்களாக மாறும் தருணம் (நெகிழ்ச்சி வீடியோ )

லகில் மனிதர்கள் மட்டுமே தனித்து வாழ்ந்து விட முடியுமா? இயற்கை படைத்த பிற உயிரினங்களோடு சேர்ந்த வாழ்வதுதான் இறைவன் படைத்த நீதி.  காடுகளும், வனவிலங்குகளும் இல்லாத பூமியில் மனிதர்களும் அருகித்தான் போவார்கள். காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு உலகெங்கும் வனவிலங்கு பாதுகாப்பு நாளாக இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
       

ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஜேன் குட்ஆல் என்ற பிரிட்டன் பெண், கொரில்லா குரங்குகள் மறுவாழ்வு மையம் ஒன்றை ஏற்படுத்தி நடத்தி வருகிறார்.  காடுகள் அழிக்கப்பட்டு, அதனால் பரிதவிப்புக்குள்ளாகும் கொரில்லா குரங்குகளை மீட்டு சிகிச்சை அளித்து அவற்றை மீண்டும் காட்டுக்குள் விடுவதுதான் ஜோன் குட் ஆல் நடத்தும் கொரில்லா பாதுகாப்பு மையத்தின் முக்கிய பணி. கடந்த 2013-ம் ஆண்டு காட்டில் மெலிந்த நிலையில் கிடந்த, சிம்பென்சியை மீட்டு, அதனை ஜேன் குட் ஆல் குழுவினர் சிகிச்சையளித்து, காப்பாற்றினர். அதற்கு வூண்டா என்றும் பெயரிட்டனர்.

பின்னர் அதனை சின்டாசோலு  வனப் பகுதிக்கு கொண்டு சென்று விடும் பணியை மேற்கொண்டனர். நீண்ட நாட்களாக மக்களுடன் பழகியதால், வூண்டாவால் மீண்டும் காட்டு வாழ்க்கைக்கு சகஜமாக வர முடியவில்லை.காட்டை பார்த்து மிரண்டு போனது.  சிகிச்சை அளித்ததுடன் தனது பணி முடிந்து விட்டதாக ஜேன் கருதவில்லை. வூண்டா காட்டு வாழ்க்கைக்கு தன்னைத் தயார் படுத்திக்கொள்ளுமா? என்று பின்னாலேயே சென்று தாய்மை உணர்வுடன் கண்காணிக்கிறார். மரங்களில் வூண்டா அமர்ந்து பழங்களை சாப்பிடுவதை பார்த்து ஜேன் மகிழ்கிறார்.

வூண்டா மீண்டும் காட்டுக்குள் செல்லும் போது , ஜேன் குட் ஆலிடம் காட்டிய  பாசத்தையும்  பரிவையும் விளக்கும் வீடியோதான் இது.

vikatan

  • தொடங்கியவர்

இணையத்தை கலக்கிக்கொண்டு இருக்கும் ‪#‎விஜய்ஆண்டனியின்‬ ‪#‎பிச்சைக்காரன்‬ படத்தின் வித்தியாசமான ‪#‎பிரமோ‬

  • தொடங்கியவர்

வலைபாயுதே V 2.0

 
சைபர் ஸ்பைடர்

 

facebook.com/nelsonxavier08: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக, ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் சென்னையில் தரமான சாலைகள் போடப்பட்டன. செயற்கை வெள்ளத்துக்குப் பின்னர், இரண்டு மாதங்களுக்கு முன்னர் மீண்டும் அதே இடத்தில் தரமான சாலைகள் போடப்பட்டன. நேற்று இரவு பார்க்கிறேன். தரமான சாலைகள் போடப்பட்ட அதே சாலைகளில் மீண்டும் தரமான சாலைகள் புதிதாகப் போடப்படுகின்றன. இந்தியாவிலேயே, ஏன் ஆசியாவிலேயே மாதத்துக்கு ஒருமுறை ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தரமான சாலைகள் போடப்படுவது தமிழ்நாட்டில் மட்டும்தான் எனக் கூறிக்கொண்டு...

p16b.jpg

facebook.com/Lara Dutta: விளையாட்டும்... நடிப்பும் (கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவுடன் நடிகை லாரா தத்தா)

twitter.com/VignaSuresh: அர்த்த ராத்திரியில் தெர்மக்கோல் நறுக்கிக் கொண்டிருக்கிறேன். பெற்றோரை டிசைன் டிசைனாக டார்ச்சர் செய்வது பற்றி சி.பி.எஸ்.சி பள்ளிகள் நன்கு அறியும்!

twitter.com/indra_siva: `வாழ்க்கையில எல்லாமே சரியா நடக்குது’னு கொஞ்சம் சந்தோஷப்படுறதுக்குள்ள, அடுத்த EMI வந்துருது!

twitter.com/meenammakayal: பிள்ளையின் பிறந்த நாளே... அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறந்த நாள்!

twitter.com/sudhansts: வாழ்க்கையில பழம்தின்னு கொட்டையைப் போடலாம்னு பார்த்தா, வாழைப்பழத்தைக் கையில குடுத்துட்டுப் போயிடுறாரு கடவுள்!

p16a.jpg

twitter.com/indirajithguru: பையில் இருந்த சிகரெட் காணாமல்போகும் வரை, மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்த விஷயம் பல தந்தைகளுக்குப் புரிவது இல்லை!

twitter.com/Baashhu: இப்பல்லாம் குழந்தைகள்கூட பேசிப் பழகவே பயமா இருக்கு. எருமை மாடு மாதிரி இருக்க, ஒரு பலூன்கூட ஊதத் தெரியாதாங்கிற ரேஞ்சுலதான் நம்மள டீல் பண்ணுதுக!

twitter.com/thoatta: வந்தவங்களை `பத்திரமா வீட்டுக்குத் திரும்பிப்போங்க’னு சொல்றதுக்கு ஒரு கோடி ரூபாய் செலவுல ஒரு மாநாடு... வாட் கேப்டன்?? :-/

twitter.com/hanihoney53: ஓசி சோறுனாகூட இவ்வளோ சந்தோஷம் வரலே, ஓசி WiFi-ன்னா மட்டும் அவ்வளோ சந்தோஷம்!

twitter.com/writercsk: மிடில் க்ளாஸ் என்பது, பொருளாதார நிலை அல்ல; அது ஒரு மனநிலை!

twitter.com/i_Soruba: `சாப்ட்டியா, கிளம்பிட்டியா, வீடு சேர்ந்தியா?’னு ரெகுலரா வர்ற கால்ஸ் வந்தா கடுப்பாவும், வராட்டி பயமாவும் இருக்கு!

twitter.com/su_boss2: `கேப்டன், யார்கூட கூட்டணி வைக்கப் போறார்?’னு எதிர்பார்த்துட்டு இருக்கிறவனைவிட, என்னென்ன காமெடி பண்ணப்போறார்னு எதிர் பார்த்துட்டு இருக்கிறவன்தான் அதிகம்!

p16c.jpg

twitter.com/teakkadai: வேறு எந்தக் கணத்தையும்விட என்னைத் தோல்வியாளனாக உணர்வது, பிள்ளைகளை அடித்து முடித்த மறுகணம்தான்!

twitter.com/withkaran: ஒருத்தர் காலை தெரியாம மிதிச்சுட்டா, உடனே தொட்டுக் கும்புடுற பழக்கம் மட்டும் இன்னும் போகவே இல்லை!

twitter.com/MrElani: சன் மியூசிக்குக்கு கால் பண்ணி, `என் மாமா பொண்ணு சரிதாவுக்கு ஒரு ஹாய் சொல்லிடுங்க’னு சொல்றான், ஏன்டா... அதை நீயே கால் பண்ணி சொல்ல முடியாதா?

facebook.com/nelsonxavier08: இந்தியாவில் தூய்மையான நகரம் என்பது, சாலைகளிலும் வீதிகளிலும் கண்ணுக்குத் தெரியும் குப்பைகளை எல்லாம் கூட்டி, கண்ணுக்குத் தெரியாத இடத்தில் கொண்டுபோய் மொத்தமாகக் கொட்டிவிட்டு வருவது என்றறிக!

facebook.com/vinayaga.moorthy.5070: நம்ம பத்திரிகைகளும் விஜயகாந்தும் சேர்ந்து, மக்கள் மனசுல `பாகிஸ்தான்’னாலே எதிரியா நினைக்கவெச்சுட்டாங்க. பாகிஸ்தான் மக்களை எதிரியாவே பார்க்கிறவங்க, அவங்க வாழ்க்கையில ஒரு பாகிஸ்தானியைக்கூட சந்திக்காதவங்களா இருப்பாங்க!

vikatan

 

  • தொடங்கியவர்
2009 : சூடான் ஜனாதிபதியை கைதுசெய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது
 

வரலாற்றில் இன்று......

பெப்ரவரி-04

 

678varalaru.jpg1275 : சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.

 

1351 : சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.

 

1493 : கடலோடி கொலம்பஸ் பஹாமஸ் மற்றும் ஏனைய கரிபியன் தீவுகளை அடைந்தபின் மீண்டும் போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனுக்குத் திரும்பினார்.

 

1519 : ஹேர்னான் சோர்ட்டேஸ் மெக்ஸிகோவில் தரையிறங்கினான்.

 

1665 : இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
1793 : பிரெஞ்சுப் படைகள் நெதர்லாந்தின் கீர்ட்ரூடென் பேர்க் நகரைக் கைப்பற்றினர்.

 

1810 : பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது.

 

1813 : நெப்போலியனுடன் போரிட்ட ரஷ்யப் படைகள் ஜேர்மனியின் பேர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.

 

1882 : பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.

 

1894 : ஷங்காயில் ஏற்பட்ட பெரும் தீயில் ஆயிரக் கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.

 

1899 : அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 

1908 : அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.

 

1917 : ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.

 

1931 : இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

 

1945 : இரண்டாம் உலகப் போரின்போது பின்லாந்து நாசி ஜேர்மனி மீது போரைத் தொடுத்தது.

 

1945 : எலிஸபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) இராணுவத்தில் வாகன செலுத்துனராக இணைந்தார்.

 

1959 : ஐக்கிய அமெரிக்காவின் பயணியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.

 

1964: கனேடிய விமானமொன்று ஜப்பானின் டோக்கியோ விமான நிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் 64 பேர் பலியாகினர்.

 

1970 : பிரெஞ்சு நீர்மூழ்கியொன்று கடலுக்கடியில் வெடித்ததால் 57 படையினர் உயிரிழந்தனர். 

 

1977 : ருமேனிய தலைநகர் புகாரெஸ்ட்டில் இடம்பெற்ற பூகம்பத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.

 

1980 : ரொபர்ட் முகாபே ஸிம்பாப்வேயின் முதலாவது கறுப்பின பிரதமரானார்.

 

1994 : கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.

 

2001 : லண்டனில் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.

 

2001 : போர்த்துக்கலில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

 

2006 : பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.

 

2007 : நாடாளாவிய ரீதியான தேர்தலில் இணையத்தளம் மூலம் வாக்களிப்பு இடம்பெற்ற முதல் நாடாகியது எஸ்டோனியா. 

 

2009 : மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை கைது செய்வற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. 

 

2015 : யுக்ரைனில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

 

www.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தனது காதல் துணையை தேடுவதற்கு 4,400 மைல்கள் தூரம் பயணிக்கும் தும்பி

 

31C5FF4500000578-3473122-image-a-6_14569

சிறிய தும்பியானது தனக்குரிய காதல் துணையைத் தேடுவதற்காக கண்டங்களுக்கிடையே 4,400 மைல்கள் தூரம் பயணிப்பதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது.

அமெரிக்க ருத்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தும்பிகளின் மரபணுக்களை ஆய்வுக்கு உட்படுத்திய ஆய்வாளர்கள் ,ஒன்றரை அங்குல நீளம் மட்டுமே கொண்ட மேற்படி தும்பிகள் தமக்குப் பொருத்தமான துணையொன்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் வரை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியங்களுக்கிடையே நெடுந்தூரப் பயணத்தை மேற்கொள்வதாக கூறுகின்றனர்.

 

அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலம், தென் அமெரிக்கா, கிழக்கு கனடா, ஜப்பான், கொரியா மற்றும் ,இந்திய பிராந்தியங்களில் காணப்படும் தும்பிகளை ஆய்வுக்குட்படுத்திய போது அவை மரபணு ரீதியில் ஒரே சந்ததிக்குரியவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

virakesari

  • தொடங்கியவர்

நாயும் பூனையும் ஒன்றாக திரிவதைப் பார்த்திருப்பீங்க... புலியும் சிங்கமும் ஒன்றாக சுற்றித் திரிவதைப் பார்த்ததுண்டா?
ஜார்ஜியாவில் உள்ள விலங்குகள் சரணாலயத்துக்கு போனால் அங்கு கரடி, சிங்கம் மற்றும் புலி இவை மூன்றும் நட்பாகப் பழகும் காட்சி அனைவரையும் வியக்கவைக்கிறது.
கரடியின் பெயர் பாலூ (Baloo), சிங்கத்தின் பெயர் லியோ (Leo), புலியின் பெயர் ஷேர் கான் (Shere Khan). இந்த மூன்று விலங்குகளும் 15 வருடங்களாக ஒற்றுமையாக இருப்பது ஆச்சர்யமான விஷயதானே. இந்த அதிசயத்தைக் காண அதிக அளவில் சுற்றுலாபயணிகள் இங்கு வருகிறார்கள்.

12803037_686023898166822_124505512074061

10259896_686023901500155_581768821721746

7778_686023894833489_6800907271904310013

12801663_686023938166818_559933236413423

12806183_686023934833485_214982340940418

  • தொடங்கியவர்
ஹொலிவூட்டிலும் பொலிவூட்டிலும் கலக்கும் பிரியங்கா சோப்ரா
 

153324765665.jpgஇந்த வாரத்தில் பொலி­வூட்­டிலும் ஹொலி­வூட்­டிலும் நடிகை பிரி­யங்கா சோப்ரா கலக்­கு­கிறார்.

 

அமெ­ரிக்­காவில் கடந்த ஞாயிறு இரவு (இலங்கை நேரப்­படி திங்கள் காலை) நடை­பெற்ற 88 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில், விரு­தொன்றை கைய­ளிப்­ப­தற்கு தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருந்த பிரி­யங்கா சோப்ரா, தனது ஆடை அலங்­கா­ரத்தால் பல­ராலும் பாராட்­டப்­பட்டார்.

 

லெப­னானைச் சேர்ந்த ஆடை வடி­வ­மைப்­பாளர் சுஹைர் முராத் வடி­வ­மைத்த ஆடையை இவ்­ வி­ழாவில் பிரி­யங்கா சோப்ரா அணிந்­தி­ருந்தார். இதன்­போது அவர் அணிந்­தி­ருந்த ஆப­ர­ணங்­களின் பெறு­மதி 8 இலட்சம் டொலர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

 

ஒஸ்கார் விழாவில் பிரி­யங்கா சோப்ரா கலந்­து­கொண்­டதை தொலைக்­காட்­சியில் பார்த்த நடிகர் கமல்­ஹாசன், பிரி­யங்கா தன்­னம்­பிக்­கை­யு­டனும் அழ­கா­கவும் தென்­ப­டு­கிறார் என டுவிட்­டரில் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இவ் ­வி­ழாவில் சிறந்த பிலிம் எடிட்­டிங்­கிற்­கான விருதை “மெட்மெக்ஸ் : ப்யூரி றோட்” படத்தின் எடிட்டர் மார்­கரெட் சிக்­ஸ­லிடம் பிரி­யங்கா சோப்ரா கைய­ளித்தார்.

 

இம்­ முறை ஒஸ்கார் விழாவின் செங்­கம்­பள ஆடை (ரெட் கார்பெட் ட்ரெஸ்) தொடர்­பான கூகுள் தேடலில் பிரி­யங்கா சோப்ரா இரண்­டா­வது இடத்தில் இருந்தார் என கூகுள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. (முத­லி­டத்தில் நடிகை அமெ­ரிக்க நடிகை ஒலீ­வியா வைட் இருந்தார்.)

 

1533201_01_2016_9_53_17Jai_Gangaajal_Priஒஸ்கார் விருது வழங்­கலின் பின்னர் நடை­பெற்ற விருந்து வைப­வத்தில் வெள்ளி நிறத்­தி­லான ஆடை­யுடன் பிரி­யங்கா சோப்ரா பங்­கு­பற்­றினார். 

 

ஒஸ்கார் விழா­வுக்கு பிரி­யங்கா அழைக்­கப்­பட்­டமை தொடர்­பாக ஒஸ்கார் விழா ஏற்­பாட்­டா­ளர்கள் பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்பர் என நம்­பலாம்.  

 

இம்­ முறை ஒஸ்கார் விழா தொடர்­பான கூகுள் தேடல் மிக அதி­க­ரித்­தி­ருந்த நாடு­களில் இந்­தி­யாவும் ஒன்­றெனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

அதே­வேளை பொலிவூட் திரை­யு­லகம் தொடர்­பான சர்­வ­தேச கவ­னத்தை ஈர்ப்­ப­தற்கும் பிரி­யங்கா உத­வி­யுள்ளார். 

 

பே வோட்ச்சில் பிரி­யங்கா

ஒஸ்கார் விருந்­து­ப­சார நிகழ்வில் கலந்­து­கொண்­டபின் ஓய்­வெ­டுப்­ப­தற்கு பிரி­யங்­கா­வுக் கு வாய்ப்பு கிடைக்­க­வில்லை. அந்­நி­கழ்வின் பின் அவர் உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யேறி அமெ­ரிக்­காவின் மியாமி நக­ருக்குச் செல்­வ­தற்­காக விமானம் ஏறினார். 

 

மியா­மியில் பே வோட்ச் தொலைக்­காட்சித் தொட­ருக்­கான படப்­பி­டிப்பில் பிரி­யங்கா கலந்­து­கொண்டார்.

 

பே வோட்ச் படப்­பி­டிப்பில், தி ரொக் என வர்­ணிக்­கப்­படும் நடிகர் ட்வென் ஜோன்­ஸ­னுடன் பிரியங்கா சோப்ரா தோன்றும் படங்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 

 

உலகில் ஏரா­ள­மான நாடு­களில் ஒளி­ப­ரப்­பான பே வோச்சின் புதிய தொடரில் பிரி­யங்கா நடிப்­பது அவரின் செல்­வாக்கை மேலும் அதி­க­ரிக்கும். 

 

15332quantico.jpg

 

ஏற்­கெ­னவே அமெ­ரிக்க தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பாகும் குவான்­டிகோ தொடரில் எவ்.பி.ஐ. பொலிஸ் அதி­கா­ரி­யாக பிரி­யங்கா சோப்ரா நடித்து வரு­கிறார். குவான்­டிகோ தொடரின் புதிய அத்­தி­யாயம் நாளை மறு­தினம் ஒளி­ப­ரப்­பா­க­வுள்­ளது. 

 

“குவான்­டிகோ படப்­பி­டிப்­பு­க­ளுக்­காக கன­டாவின் மொன்ட்­ரியல் நக­ருக்கும் பே வோட்ச் படப்­பி­டிப்­புக்­காக அமெ­ரிக்­காவின் மியாமி நக­ருக்கும் மாறி மாறி நான் பறந்து கொண்­டி­ரு­க்கிறேன்” என பிரி­யங்கா சோப்ரா தெரி­வித்­துள்ளார்.

 

பிரி­யங்கா பொலிவூட் படம் இன்று

அமெ­ரிக்கத் தொலைக்­காட்சித் தொடர்­களில் கால்­ப­தித்­துள்­ளதால் பிரி­யங்கா மறந்துவிடவில்லை.

 

15332Untitled-6.jpg

 

அவர் பிரதான வேடத்தில் நடித்த 'ஜெய் கங்காஜல்' எனும் பொலிவூட் திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை வெளி யாகவுள்ளது. பிரகாஷ்ஜா (64) இப் படத்தை இயக்கியுள்ளதுடன் நடித்தும் உள்ளார்.

 

இப் படத்தில் பிரியங்கா சோப்ரா பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

15333_page-02.jpg

metronews.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12828317_995800563801971_448067620759114

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை வீரர் கெவின் ஓ பிரையனின் பிறந்தநாள்

Happy Birthday Kevin O'Brien

  • தொடங்கியவர்

ஆடி காரில் பிச்சை எடுக்கும் அசத்தல் பிச்சைக்காரர் (வீடியோ)

 

ங்கிலாந்தில் பிச்சைக்காரர் ஒருவர் ஆடி காரில் வந்து பிச்சையெடுத்து செல்லும் வீடியோ வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

England%20beggar%20Audi%20car.jpg

இங்கிலாந்தை சேர்ந்த மாத்யூ பிரிண்டொன் என்பவர் கார்ன்வாலில் உள்ள நியூகுவே பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார். தினமும் தனது வளர்ப்பு நாய் ஹசில்லுடன் வரும் இவர்,  அங்குள்ள சாலைகளில் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிச்சையெடுத்து விட்டு விலையுயர்ந்த ஆடி காரில் அவர் புறப்பட்டு செல்லும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு பிச்சையளித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவருக்கு உணவு மற்றும் பணம் அளித்துள்ளது பெரும் ஏமாற்றமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.



இதற்கிடையே இந்த வீடியோ வெளியானதால் தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மாத்யூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள வீடியோவை நான் பார்க்கவில்லை. இந்த கார் எனது பாட்டி எனக்கு அன்பளிப்பாக கொடுத்தது. தற்போது அந்த கார் என்னிடம் இல்லை. தொலைந்துபோய்விட்டது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் என்னிடம் தெரிவித்தனர். மேலும், எனக்கு பணம் அளிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நியூகுவே பகுதி காவல்துறையினர் கூறுகையில், "மாத்யூ ஒரு காலத்தில் வசதியாக இருந்திருக்கலாம். எனினும் அவரது பரம்பரை சொத்துகளை அவர் செலவழித்திருக்கலாம். தற்போது அவர் பணம் இல்லாமல் சாலையில் பிச்சையெடுத்து வருகிறார். இந்த வீடியோ வெளியானதில் இருந்து அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

vikatan

  • தொடங்கியவர்

12794675_995816240467070_850183535403388

நடிகை கமலினி முகர்ஜியின் பிறந்தநாள்
Happy Birthday Kamalini Mukherjee

  • தொடங்கியவர்

குதூகல ரகசியம் குழி நண்டில் இருக்கு!!!

 

ச்சைப் பசேல் என்று நீண்டு வளர்ந்து நிற்கும் நெற்பயிர்களும், கீரை, கொடி, செடி வகை பச்சையங்களும் மட்டுமே விவசாயம் என்றில்லை. விவசாயிகளின் உற்ற தோழனாகவும், பறவைகளின் உணவாகவும், பண்ணைகளில் வளர்த்தெடுக்கப்படும்போது வணிகச் சந்தையின் தங்கமாகவும் நண்டு இனம் இருக்கிறது. மருத்துவக் குணம் வாய்ந்த உணவு நண்டு என்று சொன்னால், அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அடுத்த வினாடி விஞ்ஞான உலகம், சொன்னவர் மீது பாயும். இதனாலேயே இதுபோன்ற பல மருத்துவப் பொக்கிஷங்கள் வெளியில் தெரியாமலே அழிந்து விடுகின்றன.

இன்றளவிலும் தீராத காய்ச்சல், ஜன்னி, ஒற்றைத் தலைவலி, நெஞ்சுச்சளி, தாம்பத்திய வாழ்க்கையில் நாட்டம் இல்லாமை போன்றவைகளுக்கு கழனி நண்டை நசுக்கி, அதில் மிளகு சேர்த்து ரசம் வைத்துக் கொடுக்கும் பழக்கம் வட மாவட்ட மக்களிடமும், வடசென்னை வாசிகளிடமும் இருக்கிறது. அதில் நல்ல முன்னேற்றமும், தீர்வும் கிடைப்பதால்தான் பலநூறு ஆண்டுகளாக 'கை வைத்திய' குறிப்பில் நண்டுப் பிடியாக இந்த மருத்துவ முறைகள் இருந்து வருகின்றன.

agri%20600%2011.jpg

குளுவான்நண்டு, தேங்காநண்டு, நீலக்கால் நண்டு, கடல்நண்டு, ஆற்று நண்டு, வயல்நண்டு, கழனிநண்டு, குட்டைநண்டு, சேற்று நண்டு என்று இந்திய நீர்நிலைகளில் வகைப்படுத்தப்பட்ட நண்டினம் மட்டுமே ஆயிரத்தை தாண்டி நிற்கிறது. பயிர்களை காக்க (?) தெளிக்கப்படும் ரசாயன உரங்களாலும், மருந்துகளாலும் வயல்நண்டுகளும், கழனி நண்டுகளும், ஓடை நண்டுகளும் கொஞ்சங் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இன்னுமோர் கால் நூற்றாண்டில் அதன் அடையாளங்கள் மியூசியங்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கும் எனலாம்.

குட்டை நண்டுகளும், ஆறு, ஏரி நண்டுகளும் ஆறு, ஏரி, குட்டைகள் அழிந்து போன காரணத்தால் அவைகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. சேற்றுப் பகுதிகளோ, குளம் பகுதிகளோ அடையாளத்துக்கும் இல்லை என்பதால், இப்போது தப்பித்திருப்பது, மணல் கொள்ளைகளால் தன்னுடைய பரப்பளவை இழக்காமல் இருக்கும் கடல்பகுதி நண்டுகளே. புரதம், மாவுச்சத்து, தாமிரம், கந்தகம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், அயோடின், விட்டமின் பி மற்றும் சி ஆகியவை நிறைந்து இருக்கும் உணவுப்பொருள் நண்டினமாக மட்டும்தான் இருக்க முடியும். கடலுணவில் 20 சதவீதம் நண்டினமாகத்தான் இருக்கிறது.

கடல் நண்டின் ஓடுகளில் இருந்துதான் பக்கவாதம் போக்கும் மருந்து தயாரிப்பும், பேக் பெய்ன் எனப்படும் முதுகுத்தண்டு வலி நிவாரண மருந்தும் நம் மூதாதையர்களால் தமிழ் மருந்தாகக் கையாளப்பட்டுள்ளது. மிக அண்மையில்தான் இதை (மட்டும்) ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டு அவர்களும் நண்டுபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சையின்போது கறுப்பு நிறத்தில் ஒரு நூலைக் கொண்டு டாக்டர்கள் தையல் போடுவதை பார்த்திருப்பீர்கள். அந்த நூலின் பெயர் "கைட்டின்". நண்டின்  ஓட்டில் இருக்கும் பசை போன்ற சதைப் பகுதியைக் கொண்டே இது தயாரிக்கப்படுகிறது. காயம்பட்ட பகுதி நாளடைவில் கூடியதும் தையல் பிரிக்க வேண்டிய அவசியம் பெரும்பாலும் இருப்பதில்லை. அந்த தையல் நூல் மனித உடலோடு, தசையோடு இயைந்து அப்படியே ஒன்றாகிக் கொள்ளும்.

crab%20600%201.jpg

சிறு சிறு இடங்களை குட்டை போன்றும், பண்ணைகள் போன்றும்  உருவாக்கி முறைப்படி நண்டுகளை பராமரித்து விவசாய எண்ணத்தோடு வளர்த்தெடுத்தால் மூன்றுமுதல் ஆறுமாத காலத்துக்குள் பாக்கெட்டில் பணம் நிரம்பி வழியும். நீர்நிலைகளை யாரும் அழிக்காமல் பார்த்துக் கொண்டால் இந்த நண்டினங்கள் அங்கே தானாகவே வளரும். அங்கு வசிக்கும் மக்களுக்கு பணத்தை விட உயர்ந்த விலை கொண்ட ஆரோக்கியம் தானாகவே வளரும். இந்த கட்டுரையின் தலைப்புக்குள் நான் வந்தால் மட்டுமே கட்டுரை நிறைவு பெறும் என்றாலும், நண்டினம் குறித்து ஒரு விழிப்புணர்வை பரவச் செய்வது மிகவும் நல்லது என்பதால் அதை செய்துள்ளேன்.

குழிநண்டு கதை

கடற்கரையின் மணற் பகுதிகளில் நடக்கும் போது நம் கண்முன்னே குடுகுடுவென குதித்தோடும் (சிறு மணல் வீட்டில் குடியேறும் நண்டானது, இவள் கண் பார்த்து மீனென்று திண்டாடுது.... பாடலையும், ரிக்‌ஷாக்காரன் படக் காட்சியையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்) நண்டுகளும், வெளியிலேயே வராமல் ஏதாவது பாதுகாப்பான ஒரு இடத்தைப் பார்த்து தங்கிவிடும் நண்டுகளும்தான் குழி நண்டுகள் எனப்படுகின்றன.

crab%20600%202.jpg

குறிப்பிட்ட நாளில் (வண்டு கொழுத்தால் வளையில் தங்காது, என்ற சொற்றொடர் வந்ததும் இந்த குழி நண்டுகளின் குணாதியசத்தைக் கொண்டுதான்) இனப் பெருக்கத்துக்காக இந்த நண்டுகள்,  பவுர்ணமி நாளின் ஏதாவது ஒரு பொழுதில்  கும்பல் கும்பலாக அந்த பாதுகாப்பு அரண்களை விட்டு வெளியே வருகின்றன. வெளியில் வருகிற இந்த இன நண்டுகள் அப்போது குடுகுடுவென ஓடுவது இல்லை. ஏதோ, போதைக்குள் ஆட்பட்டது போல மெல்லவே நடக்கும். அப்போது இவைகளை சாதாரணமாக பிடித்துக் கொள்ளலாம். வெள்ளை வெளேர் என்ற நிறத்தை மட்டுமே கொண்டிருக்கும் இந்த நண்டுகள்,  இன்றளவும் மீனவ மக்களின் ஆரோக்கியத்துக்கு ஒரு அடையாள சான்றாக இருக்கின்றன.

வயாக்ராவை தோற்கடிக்கும் வீரியத்தை மனித உடலுக்கு ஆண்-பெண் பாகுபாடு இல்லாமல் கொடுப்பதோடு 'இரு பாலின' மலட்டுத் தன்மைக்கும்  இந்த நண்டின உணவு  தீர்வாக இருக்கிறது என்கிறார்கள்.

ஆமாம், என்ன கேட்டீங்க? நண்டை பிடிக்கும் போது கொடுக்கினால் கவ்வி பிடித்து விடாதா என்றுதானே....?  சில தீர்வுகளை நோக்கிப் போகும் போது சில தியாகங்களை செய்துதானே ஆகவேண்டும் (இனிப்பான செய்தியைச் சொல்லட்டுமா, இந்த நண்டுகளுக்கு கொடுக்கே இருக்காது... ஹவ்வ்வ்வ்வ்.... )

vikatan

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

டெக்னாலஜி... டெக்னாலஜி!

p62_1.jpg

`கண்டேன் சீதையை...’ என்ற ஹனுமனிடம், `வாட்ஸ்அப்ல பிக்சர் அனுப்பறதுக்கு என்ன?' என அலுத்துக்கொண்டார் ராமர்!

 - பர்வீன் யூனுஸ்

ஆட்டம்... அதிரடி!

p62_2.jpg

தனக்காக அமைக்கப்படும் கடுமையான ஃபீல்டிங்கைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான், அடுத்த பாலில் ரன்அவுட் ஆக பெட்டிங் புக்கிகளிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்த அந்த அதிரடி பேட்ஸ்மேன்! 

- தினேஷ் சரவணன்

திருடன்

p62_3.jpg

``சார்... சார்... அடிக்காதீங்க. செத்துடப்போறான்’’ என பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி, கூட்டிப்போய் திருடனிடம் மாமூல் வாங்கினார் போலீஸ்!

- பெ.பாண்டியன்

ஏட்டு சுரக்காய்

p62_4.jpg

``ஏம்பா... நம்ம மாட்டுக்கொட்டகைக்குப் போட ஆயிரம் கீத்து வேணும்... நீ ஐந்நூறு வாங்கிட்டு வந்திருக்கே?” என்று அப்பா சொன்னதும் தலைகுனிந்தான் சிவில் இன்ஜினீயர் குணா!

- தங்க.நாகேந்திரன்

பிழைப்பு

p62_5.jpg

``ஸ்கூல், காலேஜ்னு எதுக்கும் போகாம ஊர் சுத்திக்கிட்டு இருந்தான். ஒரு காலேஜ் ஆரம்பிச்சுக் கொடுத்தோம். வசூல் பண்ணிக்கிட்டு ஒழுங்கா இருக்கான்’’ என்றார் அரசியல்வாதி, மகனைப் பற்றி தன் நண்பரிடம்!

 - கி.ரவிக்குமார்

துர்நாற்றம்

p62_6.jpg

``யோவ்... பக்கத்துலயே பொது கட்டணக் கழிப்பிடம் இருக்குல... அங்க போகாம இங்க வந்து அடிக்கிறியே...’’ என ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க, ``சரிதான் போய்யா... அதுக்குள்ள மனுஷன் நுழைவானா?’’ என்றார் வந்தவர்!

- சாய்ராம்

துணிச்சல்காரன்

p62_7.jpg

நான்காவது மாடி தீப்பற்றி எரிந்தது. வேடிக்கை பார்த்த மக்களில் ஒருவன் மட்டும் துணிச்சலாக ஏறி, விதவிதமாகப் படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பினான்!

- திருச்சி ப.முத்துக்குமார்

பலூன்

p62_8.jpg

திருவிழாவில் தொலைந்துபோன சிறுவனின் கையில் பத்திரமாக இருந்தது பலூன்!

- விகடபாரதி

விழா... வழங்குவோர்...

p62_9.jpg

ஊர்த் திருவிழா பார்த்து முடித்ததும், தாத்தாவிடம் கேட்டனர் குழந்தைகள்... ``சூப்பர் தாத்தா... இதை எப்போ மறுபடியும் டி.வி-யில காட்டுவாங்க?’’

- கி.ரவிக்குமார்

ருசி

p62_10.jpg

``நியூயார்க்ல இட்லி, சாம்பார்லாம் கிடைக்குதும்மா’’ என்றான், சென்னையில் இருந்தவரை பர்கர் சாப்பிட்ட மகன்!

vikatan

  • தொடங்கியவர்

12778686_995800090468685_622116572146469

தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டரல் கலினனின் பிறந்தநாள்.
Happy Birthday Darryl Cullinan

  • தொடங்கியவர்

தடைதனை உடைத்து வெளிவர தயாராகிறது உலக நாயகன் கமல்ஹாசனின் இலட்சிய படைப்பு "மருதநாயகம்" பாடல் - வீடியோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.