Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா ராய் செய்வது யோகாவா, ஜாக்கிங்கா....!

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
26 minutes ago, suvy said:

ஐஸ்வர்யா ராய் செய்வது யோகாவா, ஜாக்கிங்கா....!

 இரண்டும் இல்லை..:unsure:

  • தொடங்கியவர்

நமது பூமி ஒரு கிராமம் ஆனால் எப்படி இருக்கும்?

  • தொடங்கியவர்
2009 : கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டது
 

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 07

 

679kepler-space-telescope--varalaru.jpg1793 : ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறி­வித்­தது.

 

1799 : பிரான்ஸின் முதலாம் நெப்­போ­லி­யனின் படைகள் பலஸ்­தீ­னத்தின் ஜாஃபா நகரைக் கைப்­பற்­றின. அப்­ப­டைகள் கிட்­டத்­தட்ட 2,000 அல்­பே­னி­யர்­களைக் கொன்­றன.

 

1862 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: வட­மேற்கு ஆர்­கன்­சாவில் அமெ­ரிக்கப் படைகள் அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்புப் படை­யி­னரை வென்­றனர்.

 

1876 : அலெக்­சாண்டர் கிரஹம் பெல் தொலை­பே­சிக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

 

1902 : இரண்டாம் போவர் போர்: தென் ஆபிரிக்­காவின் போவர்கள் பிரித்­தா­னி­யர்­க­ளுக்கு எதி­ரான கடைசிச் சமரில் வெற்றி­யீட்­டினர்.

 

1912 : தென் துரு­வத்தை டிசம்பர் 14, 1911 ஆம் திகதி தான் அடைந்­த­தாக நோர்­வேயின் ருவால் அமுன்சென் அறி­வித்தார். வட, தென், துரு­வங்­களை அடைந்த முதல் மனிதர் இவ­ராவார்.

 

1918 : முதலாம் உலகப் போரில் ஜேர்­ம­னி­யுடன் பின்­லாந்து கூட்டுச் சேர்ந்­தது.

 

1936 : லொக்­கார்னோ உடன்­ப­டிக்­கைகள், வேர்­செயல்ஸ் ஒப்­பந்தம் ஆகி­ய­வற்­றிற்கு எதி­ராக ரைன்­லாந்தை ஜேர்­மனி கைப்­பற்­றி­யது.

 

1951 : கொரியப் போரின்­போது, கொரி­யாவில் சீனப் படை­க­ளுக்கு எதி­ராக ஐ.நா. படைகள் தாக்­கு­தலை ஆரம்­பித்­தன.

 

1989 : மக்கள் சீனக் குடி­ய­ரசு திபெத்தின் லாசா பகு­தியில் இரா­ணுவச் சட்­டத்தைப் பிறப்­பித்­தது.

 

1989 : எழுத்­தாளர் சல்மான் ருஷ்தி விவ­கா­ரத்­தினால் ஈரானும் பிரிட்­டனும் ராஜந்­திர உற­வு­களை துண்­டித்­து­க்­கொண்­டன. 

 

1996 : பலஸ்­தீ­னத்தில் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது  நாடா­ளு­மன்றம் அமைக்­கப்­பட்­டது.

 

2006 : இந்­தோ­னே­ஷி­யாவின் ஜகர்த்தா விமான நிலை­யத்தில் தரை­யி­றங்க முயற்­சித்த கருடா எயார்லைன்ஸ் விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்­ததில் 49 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2009 : பிர­பஞ்­சத்­தி­லுள்ள பூமி போன்ற வேறு கிர­கங்­களை கண்­ட­றி­வ­தற்காக கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி வெளிவெளிக்கு அனுப்பப்பட்டது.

 

2014 : ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால பராலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மார்ச் 7: தமிழகத்தை தன் நடிப்பால் மிரட்டிய எம்.என்.நம்பியார் பிறந்த தினம் இன்று..

993548_1085797628145693_5787797813809457

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள் - காணொளி

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வீதியின் இரு மருங்கிலும் தற்போது வெளிநாட்டு பறவைகளை காலை மாலை நேரங்களில் அவதானிக்க கூடியவாறு உள்ளது.

  • தொடங்கியவர்

உல­கெலாம் நிறைந்து விளங்­கு­கின்ற எல்லாம் வல்ல பரம் பொரு­ளான சிவ­பெரு­மா­னுக்­கு­ரிய விர­தங்­களுள் சிறப்­பு­மிக்க விரதம் சிவ­ராத்­திரி விர­த­மாகும். இது மிக்க மகி­மையும் மகத்­து­வமும் நிறைந்து விளங்­கு­வதால் மகா சிவ­ராத்­திரி என்று அழைக்­கப்­ப­டு­கின்­றது.

thumb_large_sivanrathiri.jpg

12809664_10154380448544578_8382909266618

  • தொடங்கியவர்

12794438_997532360295458_298146259326312

நடன இயக்குனர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என்ற பல முகங்கள் கொண்ட கலக்கல் கலைஞர் ராஜு சுந்தரத்தின் பிறந்தநாள்
Happy Birthday Raju Sundaram Master

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மகளிர் தின வரலாறு!

 

Womens%20day300.jpgமார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.

1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை,  உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல்  100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

ஆட்டிசம் - அன்பே மருந்து

12821564_1085916848133771_50260448182753

 

 

ஏன் என் குழந்தை மட்டும் கூப்பிட்டா, என்னைத் திரும்பிப் பார்க்கலை; என் கண்ணைப் பார்த்துப் பேசலை; மற்ற குழந்தைகளோட சேர்ந்து சகஜமா விளையாடலை; காரணமே இல்லாம அடிக்குது; கிள்ளுது; ஏன் இத்தனை முரட்டுத்தனமா நடக்குது?’ என்பன போன்ற கேள்விகள் ஒரு தாய்க்கு இருந்தால் அவரது குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கலாம் என்கிறது மருத்துவம்.

''ஆயிரத்தில் ஒரு குழந்தைதான் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகிறது. ஆனால், எல்லோரும் பயப்படுவதுபோல் ஆட்டிசம் என்பது ஒரு மன நோய் அல்ல. இதை 'மூளை முடக்கு’ என்கிறது மருத்துவம்.

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டெம்பிள் க்ரான்டைன் தன்னைப் பற்றிய சுயசரிதை எழுதும்போது, 'எங்களுக்கு நிறைய அறிவு இருக்கிறது. எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை எங்களால் மிகச் சரியாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதை உங்களுக்குப் புரியவைப்பதற்கான மொழிதான் எங்களுக்குத் தெரியவில்லை’ என்கிறார். இதுதான் நிதர்சனம்.

ஆட்டிசக் குழந்தைகளை உலகம் சம்பந்தப்பட்ட நடைமுறை விஷயங்களுக்குள் கொண்டுவருவதும் பேசவைப்பதும்தான் கடினமே தவிர, அவர்களுக்கு அறிவுத் திறன் அதிகம். காது, மூக்கு, வாய், தொண்டை என உடல் ரீதியாகவும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். பசி, தூக்கம், வலி என்று அத்தனை உணர்வுகளும் உணர்ச்சிகளும் அவர்களுக்கு உண்டு. ஆனாலும் அதை வெளிப்படுத்த வார்த்தைகள் மட்டும்தான் தெரியாது. பேச வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் கொண்டுவந்துவிட்டால், ஆட்டிசம் பாதித்தக் குழந்தைகளை எளிதாக மீட்கலாம்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்க வழக்கங்களை ஒழுங்குப்படுத்த பயிற்சி தரவேண்டும். கம்ப்யூட்டர், டி.வி, செல்போன், லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள் ஆட்டிசம் பாதித்தக் குழந்தைகளுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இதுபோன்ற எலெக்ட்ரானிக் பொருட்கள்மீதுதான் இந்தக் குழந்தைகளுக்கு ஈர்ப்பு அதிகமாக இருக்கும். எனவே கவனமாக இதைத் தவிர்க்க வேண்டும்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு அன்போடு நாம் நெருங்கிப் பழகும்போதுதான் அவர்களும் சகஜமாக நம்மை நெருங்கி வருவார்கள். அதனால், பூங்கா, கடற்கரை, கோயில்... என அவர்களோடு நேரத்தை செலவிடுவது நல்லது.

நீச்சல், ஸ்கேட்டிங், சைக்கிள் ஓட்டுதல் போன்ற விளையாட்டுடன் கூடிய உடற்பயிற்சிகள் அவர்களது உடற்திறனை அதிகப்படுத்தும். தன்னுடைய வேலைகளைச் சுதந்திரமாகத் தானே செய்யக்கூடிய பயிற்சியையும் கொடுக்கும்!'' - நம்பிக்கையோடு சொல்கிறார் ஜான் மில்லர்

ஆட்டிசம் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள்தான். அமெரிக்கர்களின் உணவு முறையும், வாழ்க்கை முறையும்தான் இதற்குக் காரணம். ஒருவரை இன்னொருவர் எப்படித் தொட வேண்டும் என்பதற்குகூட எழுதப்படாத சட்டம் வகுத்திருக்கும் நாடு அது. குழந்தைகளை இடுப்பில்கூடத் தூக்க மாட்டார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரமும் குறைவு. இதன் விளைவு... அவர்களுக்குள் தொடு உணர்வு என்பதே குறைந்துவிட்டது. இந்த வாழ்க்கை முறையைத்தான் இப்போது நாமும் தத்தெடுத்திருக்கிறோம்'' என்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் முறையாகக் கடைப்பிடித்தாலே ஆட்டிசம் பாதிப்புகள் நம்மைத் தாக்காது!
- டாக்டர் விகடன்

‪#‎DoctorVikatan‬

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

dot1%282%29.jpgதீபிகா படுகோன், வின் டீசலுடன் நடித்துவந்த `ட்ரிபிள் எக்ஸ்-3' முடிந்துவிட்டது. அடுத்த மாதம் பாலிவுட் வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து பிராட் பிட் ஜோடியாக  நடிக்கப்போகிறார் என ஹாலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. ஏற்கெனவே கதை சொல்லி ஓ.கே வாங்கி கால்ஷீட் கொடுத்தாகிவிட்டதாம்.  பாலிவுட்டை மறந்துடாத தீபிம்மா!

p58a.jpg

dot1%282%29.jpg  கேரளாவின் நன்னம்பரா கிராமப் பஞ்சாயத்து, சர்வதேச அளவில் பிரபலம். ஊருக்குள் நுழைந்து எந்தப் பக்கம் திரும்பினாலும், `எல்லாருமே ரெண்டு ரெண்டு பேராத் தெரியுறாங்களே?' என சந்தேகப்படும் அளவுக்கு கிராமம் முழுக்க இரட்டையர்கள். 20 ஆயிரம் பேர் மக்கள்தொகை கொண்ட இந்தக் கிராமத்தில் மொத்தம் 548 இரட்டையர்கள். இந்த ஆச்சர்யச் செய்தி மீடியாவை ஈர்க்க, வெவ்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து எல்லாம் ஆளாளுக்கு கேமராவோடு கிளம்பிவர... ஒருகட்டத்தில் உள்ளூர் பஞ்சாயத்துக்கு ஓவர் டென்ஷன் ஆகிவிட்டது. இதனால் `இனி மீடியா எதுவும் உள்ளே வரக் கூடாது' என ஸ்ட்ரிக்டாய்ட்டு பறஞ்சிருக்கிறார்கள் சேட்டன்மார்கள்... டபுள் ட்ரபிள்!

dot1%282%29.jpg  `ஜஸ்ட் மூன்று நாட்களில் செவ்வாய்க்கிரகத்தை அடைந்துவிடலாம்' என அறிவித்துள்ளது நாசா. `இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு, நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்களைக்கூட எளிதில் அடைய முடியாது. ஆனால், லேசர் உதவியுடன், `போட்டோனிக் புரொபல்ஷன்' எனும் புதிய தொழில்நுட்பத்தில் விண்கலன்களை உந்துவதன் மூலம் நொடிக்கு 1,000 கி.மீ வேகத்தில் செலுத்த முடியும். இதனால் நம்மால் அடைய முடியாத கோள்களையும் எட்ட முடியும். இதை மேம்படுத்தி 2030-ம் ஆண்டில் செவ்வாய்க்கிரகத்தை நோக்கிச் செயல்படுத்துவோம்' என்கிறது நாசா. ஜன்னல் ஓரமா ஒரு ஸீட் போடுண்ணே!

dot1%282%29.jpg  ஷாரூக் கானின் ‘ஃபேன்’ படத்துக்காக, ஃபேன் ஆந்தம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். தமிழ், பஞ்சாபி, போஜ்புரி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி மொழிகளிலும் அந்த ஊரின் பிரபலங்களை வைத்து, பாடல் ரெடியாகியிருக்கிறது. மராத்திக்கு சச்சினை ஐஸ் வைத்த ஷாரூக், தமிழுக்கு ரஜினியைப் புகழ்ந்திருக்கிறார். `ரஜினி சார்... நான் நடிகன் எல்லாம் இல்லை. எண்ண முடியாத அளவில் இருக்கும் உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன்தான் தலைவா’ என ட்விட்டரில் தட்டிவிட, எதிர்பார்த்தபடி ஏகப்பட்ட ரீட்வீட்ஸ். பேரை போட்டாலே சும்மா அதிரும்ல!

dot1%282%29.jpg  700 க்ளப்பில் சேர்ந்துவிட்டார் நோவாக் ஜோகோவிக். டென்னிஸின் ஒற்றையர் போட்டிகளில் 700-க்கும் அதிகமான ஆட்டங்களில் வெற்றிபெற்றவர்கள் இதுவரை 11 பேர்தான். அந்த லெஜண்டுகள் பட்டியலில் துபாய் ஓப்பனில் வெற்றிபெற்றதன் மூலம் இணைந்திருக்கிறார் ஜோகோவிக். `ரோஜர் பெடரரின் 1,067 வெற்றிகள் சாதனைதான் அடுத்த இலக்கு' என்கிறார் ஜோகோவிக். 28 வயசுதானே... அசால்ட்டா பண்ணிரலாம்!

dot1%282%29.jpg  ஸ்மிரிதி இரானியின் பார்லிமென்ட் ஸ்பீச்தான் சென்ற வாரத்தின் வைரல் வெடி. எங்கு பார்த்தாலும் `பெண் அமிதாப்', `லேடி சூப்பர்ஸ்டார்', `சாட்டையடி தோழி' என ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருந்தது வடநாட்டு வட்டாரம். பாலிவுட்டின் ஜூசன் அகமது என்கிற ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், ஸ்மிரிதிக்கு ஃபேஸ்புக்கில் எழுதிய கடிதம் மொத்தக் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியது. அந்தக் கடிதத்தில், ஸ்மிரிதி இரானியின் பேச்சு, உடல்மொழி முதலானவற்றில் இருந்த நடிப்பாற்றலையும், அந்தப் பேச்சில் இருந்த சினிமா ஸ்டைல் வசனங்களையும் பாராட்டுவதைப்போல செம வாரு வாரியிருந்தார். `சினிமாவைவிட நடிப்புக்கு அரசியல்தான் சரியான களம். அங்குதான் நீங்கள் அதிகம் ஸ்கோர் பண்ண முடியும். ஆனால், இன்னும் பயிற்சி தேவை' என அவர் சொன்னது எல்லாம் உள்குத்து பஞ்சர்.  அவ்வ்வ்வ்!

p58b.jpg

dot1%282%29.jpg  சுரேஷ் தம்பனூர், கடந்த மாதம் வரை திருவனந்தபுரம் அரிஸ்டோ ஜங்ஷனில் கூலித் தொழிலாளி; இன்று மல்லுவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகர். நிவின் பாலி நடித்த மலையாளப் படமான `ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ'வில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் சுரேஷ். `முத்தே பொன்னே பின்னங் கல்லே' என அவர் எழுதி, பாடி, மேஜையில் தாளமிட்டு நடித்த பாட்டு வைரல் ஹிட் அடிக்க, மலையாளக் கரையோரம் ஏகப்பட்ட ஃபேன்ஸ். சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ், ஒருகாலத்தில் சினிமா பார்க்கக் காசு இல்லாமல் செருப்புகளைத் திருடி விற்று படம் பார்த்தவர். நன்னாயிட்டு வரணும் சேட்டா!

p58c.jpg

dot1%282%29.jpg  ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன், நடிப்புக்கு ஒரு வருடம் இடைவெளி விட்டிருக்கிறார்.  `இப்போது ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதர் நான். அதற்காக என்னை நிறைய மேம்படுத்தவேண்டியிருக்கிறது. பெண்ணியம், பெண் உரிமைகள் தொடர்பாக நிறையப் படிக்கவேண்டியிருக் கிறது. அதுக்குத்தான்!' என்கிறார் எம்மா. நல்லா படிம்மா!

p58d.jpg

dot1%282%29.jpg  ஐஸ்வர்யா ராய் இப்போது `சரப்ஜித்’ படத்துக்காக பஞ்சாப் பார்டரில் ரொம்ப பிஸி. விஷயத்தைக் கேள்விப் பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், ஐஸ்வர்யா ராயைச் சந்திக்க ஆர்வம் கொள்ள, `இதோ வந்துட் டேன்...' என அடுத்த நாளே ஆஜராகி, ரசிக வீரர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார் ஐஸ். எல்லோருடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டவருக்கு ஒரு மிலிட்டரி தொப்பியை கிஃப்ட் கொடுத்தார்கள். நைஸ்ல!

p58e.jpg

dot1%282%29.jpg   ஒபாமாவின் பதவிக்காலம் முடியப் போவதை, செய்தியில் பார்த்த ஒரு சிறுமி `என்னால் இதை நம்பவே முடிய வில்லை. எனக்கு புதிய அதிபர் எல்லாம் வேண்டாம். எப்போதும் ஒபாமாதான்’ என தனது பாட்டியிடம் அழுது அடம்பிடிக்க, அதை வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கிவிட்டார் பாட்டிம்மா. இதை அறிந்த ஒபாமா, `பாட்டிம்மா... அந்தச் சிறுமியின் அழுகையை நிறுத்துங்கள். நான் அமெரிக் காவைவிட்டு எங்கேயும் போகப்போவது இல்லை. பதவிக்காலம் முடிந்ததும், அவளைப்போல நானும் ஓர் அமெரிக்கக் குடிமகன்தான். எங்கள் இருவருக்கும் ஒரே நாளில்தான் பிறந்தநாள் என்பதால், எப்போதும் அதை நாங்கள் ஒன்றாகத்தான் கொண்டாடுவோம்’ என ரிப்ளை தட்ட, பேத்தி - பாட்டி  ரெண்டு பேரும் செம ஹேப்பி. அம்மா குரூப்ஸ், ப்ளீஸ் நோட்!

dot1%282%29.jpg  மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி, தண்டனை பெற்ற சஞ்சய் தத் விடுதலை ஆகிவிட்டார். விடுதலை ஆன அடுத்த நாளே, `அடுத்த படம் என்ன... எப்போது?’ என மீடியா கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவருடைய வாழ்க்கை படம் ஆகப்போகிறது. சீக்கிரமே அறிவிப்பு வருமாம். படத்தில் சஞ்சய் வேடத்தில் நடிக்கப்போவது ரன்பீர் கபூர். இயக்கப்போவது ராஜ்குமார் ஹிரானி. கல்நாயக்!

p58f.jpg

p58g.jpg

dot1%282%29.jpg  `விக்டோரியா சீக்ரெட்’டின் புதிய தேவதை, ஜோஸபின் ஸ்க்ரிவர். உள்ளாடை மாடலிங்கில் அது ஆஸ்கருக்குச் சமம். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பிஸியான இந்த டென்மார்க் மாடல், அமெரிக்க விளம்பரங்களில் டாப் உயரம் எட்டியிருப்பது ஆச்சர்யம். ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் ஜோஸபின், ஓரினச் சேர்க்கையாளர்களால் வளர்க்கப்பட்ட குழந்தை. செம!

vikatan

  • தொடங்கியவர்

பிரான்ஸில் விடுமுறையை கழிக்கும் பிரிட்டிஷ் அரச குடும்பம்

 

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் தனது மனைவி இளவரசி கேட் ஆகியோர், தமது இரு குழந்தைகளுடன் குடும்ப விடுமுறையை கழிக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

160307120900_royalfamily_512x288_bbc_noc

பிரஞ்சு ஆல்ப்ஸ் பகுதியின் பனிப்பாறைகளில், இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி ஷார்லட் ஆகியோருடன், பனிக்கட்டிகளை அவர்கள் வீசி விளையாடும் காட்சியை படங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

160307121148_royalfamily_512x288_bbc_noc

இளவரசி ஷார்லட் பிறந்த பின்னர், அவர்கள் மேற்கொண்ட முதலாவது குடும்ப விடுமுறை இதுவாகும்.

  160307120805_royalfamily_512x288_bbc_noc

இது அவர்களின் முதலாவது சுற்றுப்பயணம் எனவும், அரச குடும் வாரிசுகள் முதல் தடவையாக பனிக்கட்டிகளுக்கு மத்தியில் விளையாடியுள்ளனர் எனவும் கென்சிங்டன் மாளிகையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

160307121057_royalfamily_512x288_bbc_noc

தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களை பார்த்து, மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை இளவரசர் வில்லியம் தம்பதியினர் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இளவரசர் ஜார்ஜிற்கு இரண்டு வயதாக இருக்கும்போது, கடந்த வருடம் மே மாதம் இளவரசி ஷார்லட் பிறந்தார்.

சர்ச்சை

ஆனால் , அரச குடும்பத்தினர் மேற்கொள்ள வேண்டிய ராஜிய அலுவல்களைக் கவனிக்காமல், இளவரசர் வில்லியம் விடுமுறையைக் கழிக்கச் சென்றுவிட்டதாக அவரது விமர்சகர்கள் குற்றம்சாட்டலாம் என்று பிபிசியின் அரச குடும்பச் செய்தியாளர் கூறுகிறார்.

இளவரசர் வில்லியம் கடந்த சில தினங்களாக முக்கிய நிகழ்ச்சிகளில் காணப்படாததைக் குறிப்பிட்டு சில பத்திரிகைகள் "வில்லியம் எங்கே ? " என்ற கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அவரது விடுமுறை குறித்த இந்த செய்திகள் வருகின்றன.

90 வயதான பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபத்துக்கு உதவியாக அரச கடமைகளில் வில்லியம் மேலும் கொஞ்சம் ஈடுபடலாம் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அவரது ஆதரவாளர்களோ, இளவரசர் வில்லியம், ஒரு விமான மருத்துவ ஊர்தியை ஓட்டும் விமானியாகவும் இருந்து கொண்டு, அரச குடும்ப வேலைகளையும் சேர்த்தே செய்வதையும் , தந்தை என்ற அவரது கடமையையும் செய்யவேண்டிய நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

BBC

  • தொடங்கியவர்

மனைவியை சுமந்து ஓடும் போட்டி
==============================

கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழ்ந்தால் திருமண வாழ்க்கை வெற்றிப்பெறும் என்பார்கள்.

மனைவியை சுமந்து ஓடும் போட்டியில் வெற்றிபெறவும் அந்த ஒத்துழைப்பு மிக அவசியம்.

இங்கே பிரிட்டனில் மனைவியை சுமந்தோடும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

சுகமான சுமை என்பது இதுதானோ?

BBC

  • தொடங்கியவர்

விரைவில் 'இளையராஜா 1000' கச்சேரியை ஒளிபரப்ப உள்ளது விஜய் டிவி. இதற்கான ட்ரெய்லர் வீடியோவை இன்று யுடியூபில் வெளியிட்டும் உள்ளது. வீடியோ பெப்பைக் கூட்டினாலும், 'இளையராஜா 1000' நிகழ்ச்சி கொஞ்சம் சொதப்பல்தான் என்று பலரும் விமர்சித்தது நினைவிருக்கலாம். எல்லாம் எடிட்டிங்கில் போய்விடுமோ?

  • தொடங்கியவர்

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் உலகம் கண்ட மிகச் சிறந்த அதிரடித் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ் அவர்களின் பிறந்த தினம்.
12800249_997498103632217_601109151023327
அலட்டிக்கொள்ளாத அசுர துடுப்பாட்ட வீரர்.
அபாரமான களத் தடுப்பாளர்.
ஹெல்மெட் அணியாமலேயே அதி வேகப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தவர் ரிச்சர்ட்ஸ்.

அணியை வெற்றியாக வழி நடத்திய தலைவர்.
இவர் ஒய்வு பெறும் வரை மேற்கிந்தியத் தீவுகள் அணி அசைக்க முடியாத முடி சூடா மன்னர்களாக வலம் வந்தார்கள்.
Happy Birthday Sir.Viv Richards

  • தொடங்கியவர்
நினைக்கின்ற நேரமெல்லாம், அருவியாய்க் கவிதையைக் கொட்டும் ஆற்றலை இளமைக்காலத்திலிருந்தே பெற்றிருந்த 'ஆசுகவி' என ஈழத்தமிழர்களால் அன்புடன் போற்றப் பெற்ற ஈழத்துக் கவிஞர் கல்லடி வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு தினம்.
12799207_997497040298990_420003617449470
  • தொடங்கியவர்
யோகாசனக் கலையை பரப்புவதற்காக வேடிக்கையாக 'போஸ்' கொடுக்கும் யுவதி
 

ஆஸ்­தி­ரி­யா­வைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் வித­வி­த­மான யோகா­சன போஸ்கள் மூலம் பிர­ப­ல­மா­கி­யுள்ளார்.

 

15374Untitled-2.jpg

 

22 வய­தான சாரா டிச்சா எனும் இந்த யுவதி தீவிர யோகா­சனப் பிரியை. பகுதி நேர யோகா­சன ஆசி­ரி­யை­யாகப் பணி­யாற்­று­கிறார். 

 

1537420.jpg

 

தனக்குப் பிடித்­த­மான இடங்­க­ளி­லெல்லாம் யோகா­சனம் செய்து அக்­ காட்­சி­களை படம்­பி­டித்து இன்ஸ்­ட­கிரம் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டு­வதை வழக்­க­மாகக் கொண்­டுள்ளார் சாரா டிச்சா. இதனால் அவரை பல்­லா­யி­ரக் ­க­ணக்­கானோர் இன்ஸ்­ட­கி­ரமில் பின்­தொ­டர்­கின்­றனர். 

 

1537416.jpg

 

ஸ்லோவாக்­கியா நாட்டைச் சேர்ந்த சாரா டிச்சா (Sara Ticha) தற்­போது ஆஸ்­தி­ரி­யாவின் வியன்னா நகரில் வசிக்­கிறார்.

 

15374Untitled-3.jpg

 

வணிக நிர்­வா­கத்­துறைப் பட்­டப்­ப­டிப்பில் இறு­தி­யாண்டு மாண­வி­யாக விளங்­கு­கிறார்.

 

 1537421.jpg

 

18 வய­தில்தான் சாரா டிச்சா முதன்­மு­தலில் யோகா­ச­னத்தில் ஈடு­பட ஆரம்­பித்­தாராம். 'யோகா­சனம் என்­பது முதி­ய­வர்­க­ளுக்­கான ஓர் உடற்­ப­யிற்சி என்றே 16 வய­து­வரை நான் எண்­ணிக்­கொண்­டி­ருந்தேன்.

 

1537417.jpg

 

ஆனால் அது அவ்­வா­றா­ன­தல்ல என்­பதை பின்னர் உணர்ந்­து­கொண்டேன். இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு நான் தொடர்ந்து யோகா­ச­னத்தை அறி­முகம் செய்ய விரு­ம்­பு­கிறேன். அதற்கு இந்த வேடிக்­கை­யான யோகா படங்கள் உதவும்' என நான் கரு­து­கி­றேன் என சாரா டிச்சா தெரி­வித்­துள்ளார்.

 

15374Untitled-4.jpg

 

தனது யோகா­சனக் காட்­சி­களை படம்­பி­டிப்­ப­தற்கு வச­தி­யாக ட்ரைபொட் ஒன்­றையும் சாரா டிச்சா தன்­னுடன் எடுத்துச் செல்­கிறார்.

 

15374Untitled-4.jpg

 

வீதிகள், தோட்­டங்கள், கடற்­க­ரைகள், படிக்­கட்­டுகள், வாசற்­படிகள், நீர்ச்­ச­றுக்குப் பலகை, மரங்கள் போன்­ற­வற்­றி­லி­ருந்­த­வாறு யோகா­சனம் செய்து படம் ­பி­டித்­துக்­கொண்­டுள்ளார் சாரா டிச்சா. 'எனது சிறு வயதில் நான் புகைப்­படம் பிடிப்­பதில் ஆர்வம் கொண்­டி­ருந்தேன். பின்னர் அதை நிறுத்தி விட்டேன். 

 

1537527.jpg

 

இப்­போது எனது யோகா­ச­னத்­துடன் புகைப்­படம் ­பி­டிக்கும் அந்த பழைய பொழு­து­போக்­கையும் இணைத்துக் கொண்­டுள்­ளத்தில் நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். 

 

அழ­கான, மன­துக்குப் பிடித்த இடங்­களைக் கண்டால் அங்கு படம்­பி­டித்­து­க் கொள்வேன் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.  

 

சாரா டிச்சா சைவ உணவுப் பிரியை. யோகா­சனப் படங்­களைத் தவிர தான் உட்­கொள்ளும் உண­வுகள், பாணங்­களின் புகைப்­படங்­க­ளையும் அவர் இணை­யத்தில் வெளி­யி­டு­கிறார்.

 

அவற்றில் அதி­க­மாக இருப்பது பழங்கள் மற்றும் மரக்கறிகள். 'பெரும்பாலும் நான் காலை உணவாக பழங்கள், மரக்கறிகளை உட்கொள்கிறேன். நான் இறைச்சி உண்பதில்லை. பால் அருந்துவதில்லை. ஆனால், சீஸை தவற விடுவதில்லை' என்கிறார் சாரா டிச்சா.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
2014 : எம்.எச் 370 விமானம் 239 பேருடன் காணாமல் போனது
 

வரலாற்றில் இன்று....

மார்ச் - 08

 

680varalaru----march1.jpg1618 : ஜேர்­ம­னியைச் சேர்ந்த வானி­ய­லா­ளரும் கணி­த­வி­ய­லா­ள­ரு­மான ஜொஹான்னெஸ் கெப்லர், கோள்­களின் இயக்­கங்­க­ளுக்­கான மூன்­றா­வது விதியைக் கண்­டு­பி­டித்தார்.

 

1782 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் கிறிஸ்­த­வத்­துக்கு மதம் மாறிய 90 அமெ­ரிக்க இந்­தியப் பழங்­கு­டிகள் பென்­சில்­வே­னி­யாவின் துணை இரா­ணு­வத்­தி­னரால் படு­கொலை செய்­யப்­பட்­டனர். கொல்­லப்­பட்­ட­வர்­களில் 68 பேர் குழந்­தை­களும் பெண்­க­ளு­மாவர்.

 

1817 : நியூயோர்க் பங்குச் சந்தை ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1917 : ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரில் மகளிர் தின ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்­ப­மா­கின.  (இது பழைய ஜூலியன் நாட்­காட்­டியில் பெப்­ர­வரி 23 ஆம் திக­தி­யாகும்) 

 

1921 : ஸ்பெயின் பிர­தமர் எடு­வார்டோ டாட்டோ, மட்றிட் நகரில் நாடா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யே­றும்­போது கெட்­ட­லோ­னியா கிளர்ச்சி அமைப்­பி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

 

1924 : அமெ­ரிக்­காவின் உட்டா மாநி­லத்தில் நிலக்­கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்­பெற்ற விபத்தில் 172 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவாவில் ஜப்­பா­னியப் படை­க­ளிடம் டச்சுப் படைகள் சர­ண­டைந்­தனர்.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: பர்­மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்­பற்­றி­யது.

 

1950 : சோவியத் ஒன்­றியம் தன்­னிடம் அணுக்­குண்டு இருப்­ப­தாக அறி­வித்­தது.

 

1957 : எகிப்து சூயஸ் கால்­வாயை மீண்டும் திறந்­தது.

 

1965 : வியட்நாம் போர்: 3,500 அமெ­ரிக்கப் படைகள் தென் வியட்­நாமில் தரை­யி­றங்­கின.

 

1979 : பிலிப்ஸ் நிறு­வனம் இறு­வட்டை (கொம்பாக்ட் டிஸ்க் - சி.டி) முதல் தட­வை­யாக பகி­ரங்­க­மாக செயற்­ப­டுத்திக் காண்­பித்­தது.

 

2004 : ஈராக்கில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. 

 

2014 : மலே­ஷியா எயார்­லைன்ஸின் பிளைட் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் கோலா­லம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது மர்மமாக காணாமல் போனது. இவ்விமானம் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்ததாக நம்பப்படுகிறது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12806195_1897829200443481_43518946202376

நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட
செம்மை மாதர்கள் அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

Happy Woman's day to all the women around the world

12809632_10154381170939578_7996661518382


யாழ் கள மகளிருக்கு மகளிர்தின வாழ்த்துக்கள்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மலைகளை முட்டி... லட்சியம் எட்டி... வெற்றிக்கொடி கட்டிய வீராங்கனைகள்!

 

ற்ற நாடுகளில் ஓர் தலைச் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக உருவெடுக்க  திறமையும் உழைப்பும் இருந்தால்போதும், ஆனால் இந்தியாவில்தான் திறமையுடன் பணம், அவமானம், அரசியல் என பல தடை கற்களை தாண்ட வேண்டும். அவ்வாறு பல தடைகளை வென்று மூவர்ணக் கொடியை உலகின் பல இடங்களில் உயர பறக்க விட்ட, பறக்க விடுகின்ற வீராங்கனைகளை பற்றி காண்போம்.
 

womens.png



                                                                                 தடகளம்:

பி.டி.உஷா

இந்திய தடகள வீராங்கனைகளின் முன் மாதிரி பி.டி.உஷா.1982-ல்  டெல்லியில் நடந்த ஆசிய தடகள போட்டிகளில் இரு வெள்ளி பதக்கங்கள் வென்றபோது உஷாவிற்கு 18 வயசுதான்.1986 ல் நடந்த ஆசிய போட்டிகளில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். 200மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம், 4*400 Relay என  நான்கு தங்கம் வென்று தங்க வேட்டை ஆடினார்.1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில்,  0.01 வினாடியில் வெண்கலப் பதக்கத்தை  தவற விட்டார்.1991ல் திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் பந்தயங்களுக்கு முழுக்குப் போட்டார். நான்கு வருடங்கள் கழித்து ஓடினாலும் ஹிரோசிமா ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நான்தான் ”பயோலி எக்ஸ்பிரஸ்” என மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.

prtusa_vc1.jpg


கேரளாவில் பிறந்து வளர்ந்து ஓடிய உஷா, இன்று கோழிக்கோட்டில்  ஓர் பள்ளித் துவங்கி பல தேசிய ஓட்டப் பந்தய வீரர்களை உருவாக்கி வருகிறார். 101 பதக்கங்கள், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தேசிய சாதனை, 33 உலக அளவிலான தடகள பதக்கங்கள் என இவரது எண்ணற்ற  சாதனைகளைப் பாராட்டி, இந்திய அரசாங்கம் அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

அஞ்சு பாபி ஜார்ஜ்:

prtusa_vc2.jpg


உலக சாம்பியன் மைக் பவலிடம் பயிற்சி பெற்று, உலக தடகள போட்டிகளில் நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றவர் அஞ்சு. ( அப்போட்டியில் தங்கம் வென்றவர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோற்று விட, அஞ்சுக்கு தங்கம் பதக்கம் வழங்கப்பட்டது).பாரிஸில் 2003ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம்  தாண்டுதல்  பிரிவில் 6.70 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம்  உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல்  வீராங்கனை என்ற  பெருமை பெற்றார் அஞ்சு. இந்த கேரளத்து வீராங்கனையின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிப்பவர், இவளது கணவர் பாபி ஜார்ஜ். தேசிய சாம்பியனான பாபி ஜார்ஜ், தன் மனைவிக்காக  தனது தடகள வாழ்கையை விட்டுவிட்டு அஞ்சுவின் முழு நேர பயிற்சியாளாரவும் ஆனார். 2004 ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்தாவதாக வந்து  ஒரு பதக்கமும் வெல்ல முடியாவிட்டாலும், 6.83 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்தார். 2002ல் அர்ஜுனா விருது, தொடர்ந்து ராஜிவ் கேல் ரத்னா விருது, பத்ம ஸ்ரீ என இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றார்.

ஷைனி ஆப்ரகாம்:

prtusa_vc3.jpg

1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் கொடியை ஏந்திச் சென்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் ஷைனி ஆப்ரகாம்.கேரளாவில் பிறந்த மற்றுமொரு 800 மீட்டர் ஓட்ட தடகள வீராங்கனை.1985ல் ஜகர்த்தா,1987ல் சிங்கப்பூர்,1989 ல் புதுடெல்லி,1991ல் கோலாலம்பூர்,1993 ல் மணிலா,1995-ல்   ஜகர்த்தா என தொடர்ந்து 6 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.தெற்காசிய போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 7 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளார்.1989-ல்  புதுடெல்லியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கர்ப்பமாக இருந்தும் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வந்தார்.1984 ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற  4*400 Relay  குழுவில் ஒருவர் ஷைனி. 14 வருடங்களாக 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாம்பியனாக இருந்த பெருமை இவருக்குரியது. இவரை பெருமைப்படுத்தும் விதமாக அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது இந்திய அரசு.

டிண்டு லூக்கா:

prtusa_vc4.jpg


பி.டி.உஷாவின் மாணவியான ஷைனி ஆப்ரகாமின் 14 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்த கேரளத்து தடகள வீராங்கனை. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றார். 2010 சீனாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற போது, இவருக்கு 21 வயதுதான். 2014-ல்  இன்சிலியானில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டரில் வெள்ளியும் 4*400 Relay யில் தங்கமும் வென்றார். 2010-ல் கிரோசியாவில் நடந்த காண்டினெண்டல் கோப்பைப் போட்டியில் 800 மீட்டரை 1 நிமிடம் 59.17 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையில் ஒருவர் டிண்டு லூக்கா.

அன்னு ராணி:

prtusa_vc5.jpg


இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களில் சிறந்தவர்களை  தேர்ந்து எடுத்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி, ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம்  வெல்லும் முனைப்புடன் பயிற்சி அளிப்பது Olympic Gold Quest. அவ்வாறு பயிற்சி பெறுபவர்தான் அன்னு ராணி. ஈட்டி எறிதல் போட்டியில் தேசிய சாதனைக்குரியவர் அன்னு. உத்திரபிரதேசத்தின் பஹாதிர்பூர் என்னும் கிராமத்தில் பிறந்த அன்னுவின் வெற்றிக்கு காரணம் யாரென்று  கேட்டால், தனது அண்ணன் உபேந்திராவை காட்டுகிறார் அன்னு. ஓர் கிரிக்கெட் போட்டியில் அன்னு பந்தை எறியும் திறனைப் பார்த்த உபேந்திரா, அந்த பந்துக்கு பதில் ஓர் ஈட்டியை  கொடுத்தார். அதுபோக, பெண்களுக்கான கட்டுப்பாடுகளுடைய கிராமத்து வரைமுறைகளை தாண்டி, அன்னுவை 2010 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற காசினாத்திடம்  பயிற்சிப் பெற அனுப்பினார். 2014 ஆசிய போட்டியில் வெண்கலம், 59.53 தூரம் எறிந்து தேசிய சாதனை என வெற்றிகள் குவிய துவங்கியுள்ளது.
                                                                                     துப்பாக்கிச் சுடுதல்:

ஹினா சித்து:

prtusa_vc6.jpg


2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை டாக்டர் ஹினா சித்து. பல் டாக்டரான ஹினாவிற்கு உலக தரவரிசையில் முதலிடம் பெற்று தந்தது அவரது கடின உழைப்பும் துப்பாக்கி சுடுதல் மீதிருந்த காதலும் தான். தொழிற்முறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்,  உயரிய மதிப்பான ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டி,  2013ல் ஜெர்மனியில் நடந்தது. அதில் தங்கம் வென்று சாதனை படைத்தார். ISSF பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற முதல் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரரும் ஹினாதான். துப்பாக்கிச் சுடும் வீரரான ரொனக் பண்டித்தை 2013ல் திருமணம் செய்து கொண்டார். நடுவில் தனது ஃபார்மை இழந்து பதக்கங்கள் வெல்ல முடியாமல் திணறினார். அதற்கு  வட்டியும் முதலுமாக 2015 ல் குவைத்தில் நடந்த ஆசிய சுடுதல் போட்டியில் தங்கம் வென்று,  ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப் பெற்றார். இவரது சாதனைக்கு அர்ஜுனா விருது வழங்கி பெருமைப்படுத்தியது அரசு. ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என்ற பலரது எண்ணத்தை நிறைவேற்றுவாரா ஹினா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஞ்சலி

prtusa_vc7.jpg


மும்பைவாசியான இந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை, இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் 12 தங்கம், 4 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார். இதுபோக உலக அளவில் 31 தங்கம், 23 வெள்ளி, 7 வெண்கலம் என 61 பதக்கங்கள் வென்றுள்ளார். தேசிய அளவில் 55 தங்கம், 35 வெள்ளி,16 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் 8 புது சாதனைகள் படைத்துள்ளார். கார்ல் லூயிஸை தனது ஹீரோவாக கருதும் இவர், 21 வயதில்தான் துப்பாக்கிச் சுடுதலை ஆரம்பித்தார். அடுத்த ஒரு வாரத்தில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, வெள்ளி பதக்கமும் வென்றார். இதுவரை மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, 2000 சிட்னி ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். ராஜீவ் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, HISA விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர் அஞ்சலி. ஓர் மராத்திய படத்தில் சிறப்பு தோற்றம், எழுத்தாளர், கண் பார்வையற்றோருக்கு வகுப்பு எடுப்பது, 6 துப்பாக்கிச் சுடும் வீரர்களுக்கு பயிற்சியளிப்பது என பல முகம் கொண்டவர் இந்த தங்க மங்கை.

மலைக்கா கொயல்:

prtusa_vc8.jpg



மலைக்காவிற்கு 10 வயது இருக்கும்போது, பஞ்சாப்பில் எஸ்.பி யாக பணிபுரிந்த  அவளது தந்தை, ஏதாவது ஓர் விளையாட்டை தேர்ந்து எடுத்து, அதில் திறமையை வளர்க்குமாறு கூறியிருக்கிறார். தந்தை சொல்லைக் கேட்ட மலைக்கா, துப்பாக்கிச் சுடுதலை தேர்ந்து எடுத்தார். அதை வெறும் பொழுது போக்காக செய்யாமல், அதனை தொழிற்முறையாகவும் ஏற்றுக் கொள்ள தீர்மானித்தார். அதற்காக தனது கல்வியை 6-ம் வகுப்புடன் நிறுத்தி விட்டு தன் முழு கவனத்தையும் துப்பாக்கிச் சுடுதல் மீது திருப்பினார். அதற்கேற்ற பலன் கிட்டியது. 2014 காமன்வெல்ட் போட்டிகளில் தனது ஹீரோவான ஹீனாவை வீழ்த்தி,  வெள்ளி பதக்கம் வென்றார். மலைக்காவால், ஸ்காட்லாந்தில் ஜன கன மன ஒலித்தபோது அவளுக்கு வயது 16. இப்பொழுது Olympic Gold Quest உதவியுடன் ரியோ ஒலிம்பிக்ஸிலும் நம் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்ய தீவிர பயிற்சியில் உள்ளார்.

                                                                                  ஸ்குவாஷ்:


தீபிகா பல்லிகல்:

நம்ம சென்னையில் பிறந்த கேரளா பெண். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சூசனுக்கு பிறந்தவர் தீபிகா. 2006 முதல் ஸ்குவாஷ் விளையாடி வந்தாலும் 2011ல் தான் தீபிகா, உலகப் புகழ் பெற்றார். மூன்று WISPA கோப்பைகளை வென்றும், டாப் 50 வீராங்கனைகள் பட்டியலிலும் இடம் பெற்றார் தீபிகா. சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற முதல் இந்தியர், ஆஸ்திரேலிய ஓபனின் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என பல சாதனைகளை படைத்ததின் அங்கீகாரமாய், உலக தரவரிசையில் டாப் 10ல் இடம் பெற்றார். 2014 காமன்வெல்த் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் சேர்ந்து தங்கம் வென்றார். அர்ஜுனா விருது வென்ற முதல் பெண் ஸ்குவாஷ் வீராங்கனை. 2015ல் இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார்.

prtusa_vc9.jpg



ஜோஷ்னா சின்னப்பா:

சென்னையில் பிறந்த இன்னொரு ஸ்குவாஷ் வீராங்கனை. தற்பொழுது உலக தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் ஜோஷ்னா, இதுவரை 7 பட்டங்கள் வென்றுள்ளார். ஸ்குவாஷில் மிக இளம் வயதில் தேசிய சாம்பியனான பெருமை சின்னப்பாவுடையது. சென்னை ஓபன், பிரிட்டிஸ் ஓபன் என பல தொடர்கள் வென்றிருந்தாலும்,  2014 காமன்வெல்த் போட்டியில் தீபிகா பல்லிகலுடன் சேர்ந்து தங்கம் வென்றதுதான் மிக பெரிய சாதனை. நடுவில் தீபிகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாலும்,  இப்பொழுது மீண்டும் தீம்மாக விளையாட துவங்கியுள்ளனர். 2024 ஒலிம்பிக்ஸில்  ஸ்குவாஷையும் ஓர் விளையாட்டாக சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யப் பட்டுள்ளது.

                                                                                   குத்துச் சண்டை:

மேரி கோம்:

பாலிவுட் சினிமாவுக்கும் விளையாட்டுக்கும் உள்ள தொடர்பு அழிக்க முடியாதது. ஓர் வீராங்கனையின் வாழ்கையை பயோபிக்காக வெளியிட்டு அதிரிபுதிரி ஹிட் அடித்தால், அந்த வீராங்கனையின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம். அதிகம் கவனிக்கப்படாத மேற்கிந்திய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மலை வாழ் இனத்தில் பிறந்த மேரி கோம், மலைத் தோட்டத்தில் மங்கிப்போன பல ஆயிரம் பெண்களில் ஒருவராக போயிருக்கக்கூடும். ஆனால் விடாமுயற்சியும்,  வென்றாக வேண்டும் என்ற வெறியுடனும் மேரி விட்ட குத்துக்கள், நாட்டைத் தாண்டி, உலக அளவில் ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் வெல்ல வழி வகுத்தது. 45-50 கிலோ பிரிவில் போட்டியிடும் மேரி கோம்,பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் வென்றுள்ளார். ஆசியப் போட்டிகளில் தங்கம், விட்ச் போட்டியில் தங்கம் என இந்தியப் பெண்களின் ரோல் மாடல் இந்த மேரி கோம். திருமணம், மூன்று குழந்தைகள் என வாழ்க்கையில் செட்டில் ஆனாலும், இன்றும் அவரது குத்துக்கள் பதக்கங்களை வெல்லாமல் இருப்பதில்லை. பத்மஸ்ரீ, பத்ம பூஷண்,அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் என அரசும் இவரை கவுரவப்படுத்தியுள்ளது.

prtusa_vc10.jpg



சரிதா தேவி:

மணிப்பூரில் பிறந்த மற்றொரு தேசிய சாம்பியன். ஓர் பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்த சரிதா, வயல்களில் வேலைசெய்ததே அவரது இன்றைய குத்துசண்டையில் பவர்புல்லான குத்துகள் விட உதவுகிறது.மேரி கோம் 45-50 கிலோ பிரிவை சேர்ந்தவர் எனில், சரிதா 50-55 கிலோ பிரிவில் பட்டையை  கிளப்புவர். ஆசியப் போட்டிகளில் 4 தங்கம், உலக சாம்பியன் ஷிப்பில் தங்கம் என நம் நாட்டின் கொடியை உயர பறக்க விட்டார். 2014 ஆசியப் போட்டிகளில் சில சலசலப்புகள் அரங்கேறியது. வெற்றிப் பெறும் தருவாயிலும் நடுவரின் விவாததிற்குரிய முடிவால், எதிராளியை வெற்றிப் பெற்றதாக அறிவிக்க, பதக்க மேடையில்  பதக்கத்தை வாங்க மறுத்ததினல், போட்டிகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டது. வரும் ஒலிம்பிக் போட்டியில், மேரி கோமுடன் சரிதாவும் பதக்கம் வெல்வார் என எதிர்பாக்கப்படுகிறது.

                                                                       பேட்மின்டண்:

சாய்னா நேவால்:

17 மார்ச் 1990 ல்,  ஹரியனா மருத்துவமனை ஒன்றில் சாய்னா பிறந்த போது அவரது முகத்தைக் கூட பார்க்க மறுத்தார் அவரது பாட்டி. காலம் மாறியது. 2012ல் இந்தியாவே உச்சரித்த பெயர் சாய்னா. அனைத்து பத்திரிகைகளும் சாய்னாவின் படத்தை முதல் பக்கத்தில் போட்டது. சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இறகுப்பந்து போட்டியில் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றது என்பது சாதாரண காரியம் இல்லை.அத்தோடு ஆட்டம் முடியவில்லை.ஆட்டம் சூடுப் பிடிக்க ஆரம்பித்தது. 2015 -ல் உலகின் நம்பர் 1 ஆக முன்னேறினார் சாய்னா. ஆட்டத்தில் கொஞ்சம் தொய்வு ஏற்பட, பயிற்சியாளரை மாற்றினார். மீண்டும் பழைய வெற்றிகள் குவிய ஆரம்பித்தன. இந்தியா ஓபன், சீன ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், தாய்லாந்த் ஓபன், இந்தோனேசிய ஓபன் என  இதுவரை 21 தனிப்பட்ட பட்டங்கள் வென்றுள்ளார். இதுவரை 444 போட்டிகள் விளையாடியுள்ள சாய்னா, 316 போட்டிகளில் வென்றுள்ளார். 26 வயதுக்கு முன்னே அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா என இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதுகள் வென்றுள்ளார்.

prtusa_vc11.jpg


பி.வி.சிந்து:

முன்னாள் சாம்பியன் கோபிசண்டிடம் பயிற்சி பெற்று வரும் வருங்கால சாம்பியன். 20 வயதான சிந்துவிற்கு பத்மஸ்ரீ வழங்கபட்டபோது,  வயது 18. முன்னாள் வாலிபால் வீரரான ரமணாவிற்கு பிறந்த சிந்து, பதக்கங்கள் வெல்ல துவங்கியது 2011 ல். தினமும் 56 கிலோமீட்டர் தூரம் தாண்டி பயிற்சி பெற வந்த சிந்துவிடம் கோபிசண்ட் கண்டது வெறும் ஓர் வீராங்கனையை மட்டும் இல்லை, ஓர் சாம்பியனை. தோற்க விரும்பாத,  ஓர் விடாமுயற்சி உடைய வீராங்கனையை. மலேசியன் மாஸ்டர்ஸ், MACAU ஓபன் என 6 உலக அளவிலான போட்டிகளில் சிந்து வென்றுள்ளார். தரவரிசையில் 12 -வது இடத்தில் இருக்கும் சிந்து, சாய்னாவிற்கு சற்றும் சளைத்தவர் அல்ல என நிரூபித்துக் கொண்டே வருகிறார்.

ஜுவாலா கட்டா & அஷ்வினி :


இந்திய தந்தைக்கும் சீன தாய்க்கும் பிறந்த ஜுவாலா,  கடந்த 15 வருடங்களாக இறகுப்பந்து விளையாடிக் கொண்டு வருகிறார்.இடது கை ஆட்டகாரரான ஜுவாலா,முதலில் ஷ்ருதியுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தார். அதன் பின் 2010ல் ஹாக்கி வீரரின் மகளான அஸ்வினியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பல வெற்றிகளை குவிக்க ஆரம்பித்து விட்டது. 2010 காமன்வெல்ட் போட்டிகளில் இரட்டையரில் தங்கம் வென்றனர். 2012 ஒலிம்பிக்கில் ஏற்பட்ட ஏமாற்றத்தால், சிறிது காலம் களத்தை விட்டு வெளியில் இருந்தார் ஜுவாலா. 2014 IBL -ல் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்தனர். 2014 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி வென்றனர். கனடா ஓபனில் சாம்பியன்ஸ், தரவரிசையில் டாப் 10 க்குள் இடம் என வெற்றி நடை போட ஆரம்பித்தனர்.

                                                                                 டென்னிஸ்:

சானியா மிர்சா:

prtusa_vc12.jpg


”சோதனைகள் இன்றி சாதனைகள் இல்லை” என்பதற்கு சானியாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள். 2003ல் தொழிற்முறை டென்னிஸ் வீராங்கனையாக விளையாட ஆரம்பித்த சானியா, முதலில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாகவும், பின் உலகின் நம்பர் 1 வீராங்கனையாகவும் உருப்பெற,  பற்பல அவமானங்கள், தடைகளை தாண்ட வேண்டியது இருந்தது. உடை சர்ச்சை, திருமண சர்ச்சை, பயஸ்-பூபதி சண்டையில் தன்னை சீட்டாக உபயோகித்ததாக சர்ச்சை என சானியாவை சுற்றி எப்பொழுதுமே சர்ச்சைகள் இருக்கும். அதுபோன்றே வெற்றிகளும். ஆஸ்திரேலியன் ஓபன், பிரான்ஸ் ஓபன்,விம்பிள்டன், யூ.எஸ் ஓபன் என அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் வென்றுள்ளார். ஒற்றையர் பிரிவில் யூ.எஸ் ஓபன் நான்காவது சுற்று வரை முன்னேறியதே அவரது சாதனை. அதுபோக தரவரிசையில் 27-வது வரை முன்னேறினார். மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியன் ஓபன், பிரான்ஸ் ஓபன் வென்றார். பின் 2015 ல் மார்ட்டினா ஹிங்கிஸ்-யுடன் ஜோடி சேர்ந்த சானியாவிற்கு அதன்பின் ஏறுமுகம்தான்.

விம்பிள்டன், யூ.எஸ் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், WTA பைனல் என தொட்டது எல்லாம் வெற்றி தான். தொடர்சியாக 40க்கும் மேலான போட்டிகளில் தொடர் வெற்றி என 30 வயது சானியா-36 வயது ஹிங்கிஸ் ஜோடி வேற வெலல் மேக்கிங். இப்பொழுது  இரட்டையர் தரவரிசையில் இந்த ஜோடிதான் நம்பர் 1. அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா என இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதுகள் வென்றுள்ளார். இந்த இந்திய நாட்டு மகள்,  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தான் மருமகள் ஆனாள்.

”இந்தியாவில் ஓர் நடுத்தர வருமான குடும்பத்தில் பிறந்த பெண், விளையாட்டுத் துறையில் எளிதில் சாதிக்க முடியாது” என்பது இந்தியாவின் மிக சக்சஸ்புல் விளையாட்டு வீராங்கனையாக திகழும் சானியாவின் சமீபத்திய ஸ்டேட்மெண்ட்

                                                                              வில்வித்தை:


தீபிகா குமாரி:

 

prtusa_vc13.jpg


நம்ம தோனி சொந்த ஊரான ராஞ்சியில் ஜுன் 13 1994 ல் பிறந்தவர்தான் தீபிகா குமாரி. தாய் செவிலியர், தந்தை ஆட்டோக்காரர் என நடுத்தர குடும்ப சூழ்நிலையில், கிராமத்தில் வளர்ந்த தீபிகா, 2010 காமன்வெல்த் போட்டியில் இரு தங்கம் வென்றார். பெரிய பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற குடும்ப வருமான சூழ்நிலைகள் வழிவகுக்காதபோது, குறிபார்த்து மாங்கா அடிப்பதன் மூலம், தன் வில்வித்தை திறமையை வளர்த்துக் கொண்டார். மூங்கிலில் செய்த வில் மற்றும் அம்பால் பயிற்சி செய்ய துவங்கிய தீபிகா, பின் தன் சொந்தக்காரர் வித்ய குமாரியுடன் டாடா வில்வித்தை அகாடமியில் பயிற்சி செய்ய துவங்கினார். வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தார். 2014ல் சிறு தொய்வு ஏற்பட்டாலும் அதனை சரி செய்து இப்பொழுது  மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார். உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும்  பிடித்தார். இவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளை வழங்கியுள்ளது இந்திய அரசு. வரும் ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கத்தின் மீது அவர் வைத்துள்ள குறி சரியாக பாயுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

                                                                                            மல்யுத்தம்:

கீதா பகொத்:

prtusa_vc14.jpg


சல்வார் கமிஸ் மட்டுமே அணிய வேண்டும்,18 வயதில் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும், பிறக்கும் முன்பே பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து விடும் கொடூரமான கட்டுப்பாடுகள் நிறைந்த ஹரியானாவில் உள்ள கிராமத்தில் பிறந்த கீதா, இந்தியா சார்பாக 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் பங்கேற்க  முக்கிய காரணம் அவரின் தந்தை மகாவீர் சிங்தான். அமீர் கான் தன் அடுத்த படமான “பகாலி”யில் இந்த மகாவீர் சிங்  கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கிறார். 55 கிலோப் பிரிவில் போட்டியிடும் கீதா, 2010 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம், சாதிக்க துடிக்கும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் ரோல் மாடலாக உருப்பெற்றுள்ளார். ஆண்களுக்கு மட்டுமே உரிய விளையாட்டாக கருதப்பட்ட மல்யுத்ததில் கீதா சாதித்தது மூலம், சக்சஸ்க்கு சாக்குபோக்குகள் என்றுமே பதிலாகாது என நிரூபித்துள்ளார். 2015 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷ்ப் போட்டிகளில் வெண்கலம் வென்றார். இதுபோக இவரது தங்கை பபிதா குமாரியும் 2014 காமன்வெல்ட் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இவர்களின் வெற்றி, பல பெண்களை மல்யுத்ததை கற்கவும் அதில் சாதிக்கவும் தூண்டியுள்ளது என்றால் மிகையாகாது.

                                                                                              பளுதூக்குதல்:

கர்ணம் மல்லேஸ்வரி:

prtusa_vc15.jpg



ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண். ஒன்பது ஆண்டுகளாக தேசிய சாம்பியனாக திகழ்ந்தவர். தாய்லாந்தில் நடந்த பளுதூக்குதல் போட்டியில் மூன்று வெண்கல பதக்கங்கள் வென்றார் இந்த ஆந்திராவின் இரும்பு பெண். 2000 சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் 240 கிலோ பளு தூக்கி வெண்கல பதக்கத்தை இந்தியாவிற்குரியதாக்கினார்.1997ல் பளுதூக்கும் வீரரான ராஜேஷ் தியாகியை திருமணம் செய்து கொண்டார்.அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ,ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வென்றுள்ளார்.

குஞ்சராணி தேவி:

prtusa_vc16.jpg



மணிப்பூரில் பிறந்து, இந்திய போலீஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார் குஞ்சனா தேவி. 44, 46, 48 கிலோ என பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார்.1987ல் இரு தேசிய சாதனைகள் படைத்தார்.தொடர்சியாக ஏழு பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றார். இதில் அதிகமாக வெள்ளி பதக்கங்களையே வெல்ல நேரிட்டது.1995 தென்கொரியா போட்டிகளில் 46 கிலோ பிரிவில் இரு தங்கம், ஓர் வெண்கல பதக்கம் வென்றார். அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ, ராஜீவ் கேல் ரத்னா விருதுகள் வென்றுள்ளார்.

                                                                                               சதுரங்கம்:

ஹம்மி:

prtusa_vc17.jpg



15  வயது 1 மாதம் 27 நாளில் கிராண்ட் மாஸ்டரான ஹம்மி, மிக இளம் வயதில் இச்சாதனையை படைத்தார். 2589 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடம் வகிக்கிறார். 2000 மற்றும் 2002ல் பிரிட்டிஷ் பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றார். 2600 தரவரிசை புள்ளிகளை தாண்டிய முதல் இந்திய பெண். உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பில் U-10,U-12,U-14 பிரிவுகளில் சாம்பியன்  பட்டம் வென்றுள்ளார். வேதியல் துறை ஆசிரியரான ஹம்மியின் தந்தை அஷோக், தன் மகளின் சதுரங்க வாழ்கைக்காக ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, முழு நேர பயிற்சியாளரானார். அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

                                                                               கிரிக்கெட்:

மிட்டாலி ராஜ்:

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை கேப்டன்ஷிப் பண்ணும் ராஜஸ்தானில் பிறந்த ஓர் தமிழ் பெண். வலது கை பேட்ஸ் உமன் மற்றும் வலது கை சுழல் பந்து வீச்சாளராக செயல்படும் மிட்டாலி,1999ல் அயர்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கி,சதத்துடன் தன் கிரிக்கெட் இன்னிங்சை துவங்கினார். ஒரு நாள் போட்டிகளில் 5000 ரன்கள் கடந்த இரண்டாவது பெண் கிரிக்கெட் வீராங்கனை. இந்திய அணியை 2005 உலக கோப்பை இறுதி போட்டிக்கு வழிநடத்திச் சென்ற பெருமைகள் மிட்டாலியிடமே. டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 214 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.ஒரு நாள் போட்டியில் 49 சராசரியாக வைத்துள்ளவர் இவர். அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருதுகளை வென்றுள்ளார்.

prtusa_vc18.jpg



ஜுலன் கோஸ்வாமி:

பேட்டிங்கில் மிட்டாலி என்றால், பவுலிங்க்கு ஜுலன்.மேற்கு வங்காளத்தில் பிறந்த ஜூலன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன். இன்றைய அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜூலன். தற்போது உலகின் நம்பர் 1 பவுலர் இவர்.148 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜூலன்,175 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 2007ல்  ஐசிசியின் சிறந்த பெண்கள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றார்.10 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்கள் எடுத்துள்ளார்.அதுபோக அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வென்றுள்ளார்.

prtusa_vc20.jpg



                                                         பெண்கள் ஹாக்கி அணி:

பல ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ள பெண்கள் ஹாக்கி அணிக்கு இது மறுமலர்ச்சி காலமாக கருதப்படுகிறது. சக் தே இந்தியா படம் போல், 2002 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தனர். தொடர்ந்து    Afro-Asia cup,Hockey asia cup என பட்டங்கள் வென்று வீர நடை போட்டது. தற்போது 13-வது இடத்தில் இருக்கும் பெண்கள் ஹாக்கி அணி, ரியோ ஒலிம்பிக்ஸ்க்கு தகுதி பெற்றதே பெரிய சாதனையாக கருதுகின்றனர். கடந்த காலங்களில் பல முன்னணி அணிகளை வென்றுள்ள இந்திய அணி, சிறப்பாக செயல்படும் என நம்பலாம்.

vikatan

  • தொடங்கியவர்

மார்ச் 8: தனது நடிப்பால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகர் சந்திரபாபு நினைவு நாள் இன்று.

12813964_687807491321796_314758541926380

 

white_spacer.jpg

p22.jpgந்திரபாபு... தமிழின் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும். சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?

bullet6.jpgகடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலை முத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்!

bullet6.jpgபெற்றோர் ரோட்ரிக்ஸ் - ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட... கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்!

bullet6.jpgகொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாமு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!

bullet6.jpgகாமராஜருக்கு அறிமுகமான குடும்பம். பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில், சிறுவனான சந்திரபாபுவை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!

bullet6.jpgசந்திரபாபுவுக்கு ஆங்கில அதிகாரிகள், பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள், பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேன்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

 

bullet6.jpgமேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது, ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது - பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்ஸ§க்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா!

bullet6.jpgமுதல் படம், 'தன அமராவதி' (1947), கடைசிப் படம் 'பிள்ளைச் செல்வம்' ( 1974). 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!

bullet6.jpgபுனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!

bullet6.jpgரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார். எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!

bullet6.jpgஎம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

bullet6.jpg'புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ்பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு' என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!

bullet6.jpgஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

bullet6.jpg'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும்போதும் அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்துல', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா' ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!

bullet6.jpgஎஸ்.எஸ்.வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். 'நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது' என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார்!

bullet6.jpgசென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். 'சகோதரி' படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

bullet6.jpgஎழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் 'எனக்காக அழு'. ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!

bullet6.jpgஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின்போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!

bullet6.jpgநடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். 'சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது முதல் பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல; அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதவைத் தாழிட்டுக்கொள்பவனும் அல்ல' என்று சொன்னார்!

bullet6.jpgமூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். 'மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்'' என்றவர்!

bullet6.jpg'பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு' என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, 'ஓ ஜீசஸ்!' என்று சொல்லியபடிதான் நுழைவார்!

bullet6.jpgஜனாதிபதி மாளிகையில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் 'பிறக்கும் போதும் அழுகின்றான்' பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட... உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு. 'கண்ணா நீ ரசிகன்டா' என்று அவரது தாடையைத் தடவ... ஜனாதிபதியும் மகிழ... உற்சாகமானபொழுது அது!

bullet6.jpg'தட்டுங்கள் திறக்கப்படும்' அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!

bullet6.jpgநடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஓவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும்கூட. 'ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்' என்று சிரிப்பார்!

bullet6.jpg'நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்' என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒருநாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!

bullet6.jpg'என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப்போல நடித்துக் காட்டட்டும். பார்க்கலாம்!' என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!

vikatan

  • தொடங்கியவர்

இன்று உலகமெங்கும் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை வரவேற்கும் விதமாகவும், அதை கொண்டாடும் பொருட்டும் கூகுள் நிறுவனம் ஒரு ஸ்பெஷல் டூடுலை வெளியிட்டுள்ளது. அரசியல், விளையாட்டு, தொண்டு என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த பெண்களை போற்றும் விதத்தில் இந்த டூடுல் அமைந்துள்ளது.

  • தொடங்கியவர்

மாயமாகிய மலேஷிய விமானம் : இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தி

 

mh370.jpg

மலேஷியா கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து சீனாவின் பீஜீங் விமான நிலையம் நோக்கி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த MH370 விமானம் ரேடார் கட்டமைப்பிலிருந்து காணாமல் போய் இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

MH370_ATC_and_air_routes_map.png

227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் பயணித்த MH370 பயணிகள் விமானமே காணாமல் போயிருந்தது.

இந்த விமானம் காணாமல்போன முதல் பல நாடுகளின் ஒத்துழைப்புக்களுடன் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், விமானம் தொடர்பில் உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

POTD_Flight_MH370.jpg

இதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்தோர் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என மலேஷியா அறிவித்திருந்தது.

காணாமல்போன விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சில பாகங்கள் அண்மையில் ஆப்ரிக்கா மொசம்பிக் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

virakesari

  • தொடங்கியவர்

பெண்களால் இயக்கப்பட்ட உலகின் மிக நீண்ட தூர விமான சேவை!

 

ர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம் முற்றிலும் பெண் பணியாளர்களை கொண்ட உலகின் மிக நீண்ட தூர விமான சேவையை இயக்கியது.

flight1.jpg

டெல்லியில் இருந்து அமெரிக்காவின்  சான் ஃபரான்சிஸ்கோ வரை சென்ற இந்த நீண்ட தூர விமான சேவையின் பயண நேரம் 17 மணி நேரம், அதாவது சுமார் 14500 கி.மீ. இந்த சாதனைக்காக விரைவில் கின்னஸுக்கு விண்ணப்பிக்க இருக்கிறது ஏர் இந்தியா.

இந்த விமானத்தில்  காக்பிட்டில் இருக்கும் விமான ஓட்டுநர்கள் ,கேபின் ஊழியர்கள், மருத்துவர், தரையிலிருந்து விமானத்தை வழி நடத்தும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர் மற்றும் இதர ஊழியர்கள் அனைவருமே பெண்கள். இந்த விமானத்தை கமாண்ட் செய்வது க்‌ஷம்தா பானர்ஜி , சுபாங்கி சிங் மற்றும் ஃபர்ஸ்ட் ஆபீஸர்கள் ரம்யா கீர்த்தி குப்தா மற்றும் அம்ரித் நம்தாரி.

flight5.jpg

 இடையில்  நிறுத்தமில்லாத இந்த விமானம்,  மார்ச் 6 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டது. இதுதவிர இன்று இயக்கப்படும் 22 விமானங்கள் பெண்களால் இயக்கப்பட்டு வருகின்றன. 1985ல் ஏர் இந்தியாதான் முதன் முதலாக,  முற்றிலும் பெண் பணியாளர்களை கொண்ட விமானத்தை இயக்கியது.

flight4.jpg

ஏர் இந்தியா நிறுவனத்தில் 3800 பெண்கள் ஓட்டுநர், கேபின் குழு,பொறியியலாளர்கள், மருத்துவர்கள், பாதுகாப்பு அலுவலர்களாக பணி புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.