Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சொல்வனம்

 
ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

 

பர்தா பெண்ணின் 

பரிபூரண ஓவியம்

பர்தா பெண்ணை வரைவது

அத்தனை எளிது.

அவளது அலங்காரங்களில்

கவனம் செலுத்தவேண்டியதில்லை

அவளது ஆடை நிறம் குறித்த குறிப்புகள் எதுவும் தேவையில்லை.

பர்தா பெண்ணின் கைகள் மட்டும்

தொலைவிலிருந்தும் தெரியலாம்ஞ்

ஒரு குழந்தையைப் பற்றியபடியோ

புத்தகங்களை மார்போடு அணைத்தபடியோ

தாயின் தோழியின் கரம் பற்றியோ

கணவனின் கரம் பற்றியோ

எதுவோ ஒன்றாய்ஞ்  

முக லாவண்யங்களுக்கும்

உணர்ச்சிகளுக்கும்

முக்கியத்துவமில்லை என்றாலும்

கண்களுக்கான சிறு இடைவெளியில்

அவள் காண்கிற உலகின் வண்ணங்களை உங்களால் இனம்காண முடிந்தால்

ஒரு பரிபூரண பர்தா பெண்ணை

ஓவியமாக்கிவிட முடியும்.

 - நர்மதாகுப்புசாமி

கடவுள்

சற்று முன்தான் கடவுளைப் பார்த்தேன்

சரியாக ராயப்பேட்டை ஹைரோடில்

கொஞ்சமாக அழுக்குப் படிந்த

வெள்ளை வேட்டி சட்டையில்,

’பசிக்கிறது நாலு இட்லி வாங்கித் தா’ என்றார்

அமைதியாக உண்டவர்

கண்ணீரைத் துடைத்தவாறு

கையெடுத்து

எனை வணங்கிச் சென்றார்.

- ராஜ்குமார் நடராஜ் 

p76a.jpg

பேரன்பு கொண்ட...

மைக்கின் பொத்தல்கள் அடைத்துக்கொள்கின்றன

மாவட்டச் செயலாளரின்

எச்சில் தெறிக்கும் பேச்சில்

 

ஐந்தாண்டு கால

ஹிட்லர் ஆட்சி

ஐந்தாண்டு கால

கொடுங்கோல் ஆட்சி

ஐந்தாண்டு கால

அடக்குமுறை ஆட்சியென

 

வார்த்தைஜாலத்துக்கு

நேரம் ஒதுக்கி செருமி செருமி

அக்வாஃபீனாவை அண்ணாத்துகிறார்.

 

நொடிக்கொரு

நகைச்சுவைத் துணுக்குச் சொல்லி

தான் மட்டும் சிரித்து

ஒன்றியம் பகுதியென

மேடையில் வீற்றிருப்பவர்களையும்

சிரிக்கவைக்க முயலும்

மாவட்டத்துக்கு

 

ரெண்டு இன்னோவா

நாலு கோழிப்பண்ணை

மூணடுக்கு மாடி

இன்க்லூடிங் அஞ்சி பொட்டபுள்ள...

 

சட்டமன்றத் தேர்தலுக்கு

ஒத்திகைபார்த்து

பெட்டி மாற்றிக்கொண்டதோடு

பொதுக்கூட்டம் முடிந்தது.

- வினையன்

வாக்குமூலம்

இந்தச் சமூகத்துக்கு

நான் இறுதியாகக்

கூறவிரும்பும் செய்தி எதுவெனில்

rupee_symbol.pngஇனிவரும் காலங்களில்

சொல்லும்படியாக

எந்தவொரு முக்கியச் செய்தியும்

இருக்கப்போவதில்லை’

என்பதே.

அ.கார்த்திகேயன்

ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பனிப்பாறைச் சரிவு
=================
ஆர்ஜண்டீனாவின் பெர்ரிட்டோ மெரினோ பனிப்பாறையின் ஒரு பகுதி
உடைந்ததுவிழும் காட்சி.

இந்த பனிப்பறையின் பாலம் போன்ற பகுதி உடைந்து கீழே ஏரியில் விழுந்த காட்சியை பல சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

18 மைல் நீளமான இந்தப் பாறையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோல நடக்குமாம்.

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: எலெக்‌ஷன் சிரிப்ஷன்

w4_2770727f.jpg

w3_2770728a.jpg

w2_2770729a.jpg

w1_2770730a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

விண்வெளியிலிருந்து பார்த்தால் சூரிய கிரகணம் எப்படித் தெரியும்?- நாசா வெளியிட்டுள்ள காணொளி.
*************

கடந்த ஒன்பதாம் திகதி இந்தோனேஷியாவில் முழுமையாகவும் உலகின் சில பாகங்களில் பகுதியளவாகவும் தெரிந்த சூரிய கிரகணத்தை விண்வெளியிலிருந்து பார்த்து நாசா வெளியிட்டுள்ள காணொளி இது.

சுற்றும் பூமியில் ஓரிடத்தில் கறுப்பு மண்டலமாக இந்த சூரிய கிரகணம் காட்சியளித்துள்ளது.

  • தொடங்கியவர்

12805887_1088243377901118_43453191649413

 

கொடுத்தால்தான் கிடைக்கும்!

கிருபானந்த வாரியார் சுவாமிகள், சொற்பொழிவின் போது, தோளில் மாலை அணிந்தபடியே பேசுவது வழக்கம்.

ஒருமுறை திருவாரூரில் சொற்பொழிவு! அப்போது மேடையில் இருந்த வாரியார் சுவாமிகளுக்கு, மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்தார். ஏற்கெனவே சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார்.

இதைப் புரிந்து கொண்ட சுவாமிகள், தோளில் கிடந்த மாலையைக் கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். உடனே இதற்காகவே காத்திருந்தவர் போல், விறுவிறுவென வந்து சுவாமிகளுக்கு மாலை அணிவித்தார் அந்த அன்பர்.

அப்போது கூட்டத்தினரைப் பார்த்து சுவாமிகள், ''எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது கொடுத்தால்தான், அடுத்தவர்கள் நமக்குக் கொடுப்பார்கள்'' என்றாராம்!

  • தொடங்கியவர்
திருப்பதியில் ஜடாமுடியுடன் நித்யானந்தா... ரஞ்சிதா உடன்
 
12-1457757668-swami-nithyananda-and-ranj
12-1457757738-swami-nithyananda-and-ranj
 
  • தொடங்கியவர்

கண், காது, மூக்கில் இருந்து தானாக வழியும் ரத்தம்- காரணமே தெரியாமல் அவதிப்படும் இளம்பெண்! (வீடியோ)

 

இங்கிலாந்தில் இளம்பெண் ஒருவரின் கண், காது, மூக்கு, நாக்கு, விரல்கள் என அனைத்து உறுப்புகளிலும் ரத்தம் தானாகவே வழிகிறது. ரத்தம் எதனால் வழிகிறது என காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 

England%20gril%20boold.jpg

இங்கிலாந்தில் உள்ள Stoke on Trent நகரில் 17 வயதான மேரின் ஹார்வி என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயது ஆகும் வரை எந்தவிதமான பிரச்னையும் இன்றி வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், 2013ம் ஆண்டில் இருந்து இவருக்கு ஒவ்வொரு அதிசய சம்பவங்கள் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் படுக்கையில் இருந்த எழுந்தபோது, அவரது தலையணையில் ரத்த வழிந்துள்ளதை பார்த்து வியப்படைந்து கண்ணாடியில் தனது முகத்தை பார்த்துள்ளார். அப்போது, அவரது மூக்கில் இருந்தும் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மகளின் முகத்தை கண்டு கண்ணீர் வடித்த தாயார் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலில் எந்தவித நோயும் இல்லை என்பது முழுமையாக உறுதியானதால், ரத்தம் எதனால் வழிகிறது என்பது தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக இந்த இளம்பெண் இதே உடல்நிலையிலேயே வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென அவரது கண்ணில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியுள்ளது. கண்ணை தொடர்ந்து காது, விரல் நகங்களிலிருந்து உச்சந்தலையில் இருந்து என ரத்தம் வழிந்ததை கண்டு அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பல மருத்துவனைகளில் பரிசோதனை செய்யப்பட்டும், இதற்கான காரணத்தை மருத்துவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஒரு நாளில் 5 முறை இவ்வாறு ரத்தம் வழிவதால், அவர் நண்பர்களுடன் வெளியே செல்வதையே நிறுத்தி விட்டு தற்போது வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்.


இதுமட்டுமில்லாமல், இவரது பள்ளி படிப்பும் இந்த புரியாத புதிரால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனை செல்வதை நிறுத்தியுள்ள அந்த பெண், சமூக வலைத்தளங்களில் தனது நிலையைக் கூறி அதற்கான தீர்வை கேட்டு வருகிறார்.

vikatan

  • தொடங்கியவர்

12525571_1000283383353689_37033386882203

குரலாலும் அழகாலும் கவர்ந்து இன்னிசைக் குயிலாக இலட்சோப இலட்சம் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகியாக விளங்கும் ஷ்ரேயா கோஷலின் பிறந்தநாள்.

Happy Birthday Shreya Ghoshal

தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி - ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்!

 

"விண்மீனைக் கண்டு கண்டு கோடி கோடிப் பூக்கள் ஏங்கும்
உன் கண்ணைக் கண்டு அந்த விண்மீன் ஏங்கும் "  என ஹரிஹரன் பாடி நிறுத்த அடுத்த விநாடியில் "அஹஹஹஹ ..."  எனத் தொடரும் அந்தக் காந்தக் குரலால் காதல் வயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த "வெயில்" திரைப்படத்தின் "உருகுதே மருகுதே .." வில் உருகிப் போகாத இசைப் பிரியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
 

sh%281%29.jpg

கண்களை மூடி "உருகுதே.. மருகுதே.. ஒரே பார்வையாலே...
உலகமே.. சுழலுதே.. உன்னப் பார்த்ததாலே.. " 
எனப் பாடி " சொக்கித்தானே போகிறேனே.. மாமா கொஞ்ச நாளா.." எனக் காதலில் கரையும்போது சொக்கிப்போவோம் நாம்.

தமிழில் "ஆல்பம்" திரைப்படத்தில் "செல்லமே செல்லம்.."  பாடலின் மூலம் அறிமுகமானார்.
 

"லாலலலாலா லாலாலா.. லாலலலாலா லாலாலா...
லாலலாலாலாலாலா "  என நமக்கு அறிமுகமான அந்தப் பாடலைத் தொடர்ந்து  அவர் கண்ணசைப்பிற்கிணங்கித்  தலையசைக்க வைத்துக்கொண்டேயிருக்கிறது அந்தக் குரல்.

பதினெட்டு ஆண்டுகளாகத் தன் குரலால் பலரது மனதைக் கட்டிப்போட்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்கத்தில் பிறந்தது 1984 ல். தனது நான்கு வயதில் இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிப் பின்பு கஸல், க்ளாசிக்கல், பாப், பஜன் என அத்தனை பிரிவுகளிலும் அடித்து நொறுக்குகிறார். தனது முதல் ஆல்பமாக "பென்தெக்கி பீனா" வை 1998 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டார்.

தனது பதினாறாவது வயதில் அதாவது 2000ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் சக்கைப் போடு போட்ட "ச ரி க ம ப"  ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி யின் தாயார் இவரது பாடும் திறனை வியந்து தன் மகனை அழைத்து நிகழ்ச்சியைப் பார்க்கச் சொல்ல, அவரும் குரலில் மயங்கி தன் அடுத்த படத்தில் அவரை அறிமுகப் படுத்தினார்.

"இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒருமுறை ஒத்திகை பார்ப்பதற்காகப் பாடச் சொன்னார்கள். நான் மெல்லக் கண்களை மூடி இடைவெளியின்றிப் பாடி முடித்துக் கண்களைத் திறந்தபோது  ரெக்கார்டிங் அறைக்கு வெளியே பரபரப்பான சூழலை உணர்ந்தேன். அதன்பிறகு சஞ்சய்ஜி சொன்னபிறகுதான் தெரிந்தது நான் சிறப்பாகப் பாடிய ஒத்திகையையே பாடலாகப் பதிவுசெய்துவிட்டது."  என நெகிழ்கிறார் அழகாகக் கண்களை சிமிட்டிபடியே..

Untitled.jpg



2003 ஆம் ஆண்டில் 'ஜிஸம்'  படத்தின் பாடலுக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2005 ஆம் ஆண்டு 'பஹேலி' படத்தில் இடம்பெற்ற 'திரே ஜால்னா'  பாடலுக்காக சிறந்த பிண்ணனிப் பாடகிக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார். 2007 ல் 'ஜப் வீ மெட்' படத்தின் பாடலுக்காக மூன்றாவது தேசிய விருதை தன்வசமாக்கினார். பின்னர் தொடர்ந்து தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தேசிய விருதுகளை அடுத்த ஆண்டிலேயே கைகளில் ஏந்தினார்.


'ஆஷிக் பானாயா அப்னே'  பாடலில் தனது மயக்கும் குரலால் இந்திய  இசைப்பிரியர்களின் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.  'தாவணி போட்ட தீபாவளி' யாக தமிழ் ரசிகர்களுக்கு இசைவிருந்து படைத்தும் பல காதலர்களின் தேர்வாக இன்றும் இருக்கும் ' முன்பே வா.. என் அன்பே வா..'  என சில்லுனு ஒரு காதலை இளைஞர்களிடம் விதைத்துவிட்டு பருத்திவீரனில் ' அய்யய்யோ ..' என அசரடித்துப் பறக்கிறது இந்தக்குயில் இசைச் சிறகுகள் கொண்டு.

இடைப்பட்ட காலமெல்லாம் தன் குரல்கொண்டு உயிர்சுண்டியிழுக்கும் வித்தைகள் புரிந்து இப்போதும் கூட 'மிருதா மிருதா ' என மென்சோகத்தைக் குரலில் தாங்கி நம் காதுகளின் வழியாகக் கடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. 'உன் பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில்..' எனக் கண்மூடிப் பாடி பலரது இரவுகளை உறக்கமின்றித் தின்றுகொண்டிருக்கும் தேவதைக்குப் பிறந்தநாள் இன்று.

பல்வேறு தென் மற்றும் வட இந்திய மொழிப்பாடல்களுக்கு உயிர்கொடுக்கும் ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது என்பதுதான் நம்பமுடியாத அதிசயம். கடந்த ஆண்டு தன் பால்ய நண்பரான ஷில்ஆதித்யா முக்கோபாத்யாயாவை மணந்த ஸ்ரேயா பிண்ணனிப்பாடகி எனும் அடையாளம் தவிர்த்து ஸ்ரேயா சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கவர்னரால் கௌரவிக்கப்பட்டு ஜூன் 26 ம் தேதி 'ஸ்ரேயா கோஷல் நாள்' என அறிவிக்கப்பட்டது. உலகின் தலைசிறந்த 'ஃபோர்ப்ஸ்' இதழில்  இந்தியாவின் நூறு சிறந்த பிரபலங்களில் ஒருவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை பெற்றவர் இந்த இசைதந்த தேவதை. இன்னும் இன்னும் தன் குரல்கொண்டு நம்மைக் கிறங்கடிக்க வாழ்த்துவோம்.

இசைக்கு சற்றுமேலேயே மிதந்தபடியிருக்கும் இவரது குரல் காதலுக்கு மிக அருகாமையானது இப்பொழுதும்.. எப்பொழுதும் !

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷ்ரேயா!

 

1915209_1055676787824668_799914726218807

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இளமை கூட்டும் பலாஸோ!

 

 

`பலாஸோ’ பேன்ட் - ஸ்டைலிஷ் ஆக விரும்பும் யுவதிகளின் பெஸ்ட் சாய்ஸ்.

`என்னது வாயில் நுழையாத பெயராக இருக்கிறதே' என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். பெரிய அளவில் சற்று வித்தியாசமாக உருவாக்கப்பட்ட பேன்ட்களே ’பலாஸோ’ பேன்ட்கள் (இப்ப 80’களின் ஹீரோ பாக்யராஜ் உங்கள் ஞாபகத்துக்கு வந்தா லைட்டா சிரிச்சுட்டு மேட்டருக்கு வாங்க).

ரைட்டு! செம ஃப்ரீ லுக் கொடுக்கும் இந்த ஆடையை அணிந்துகொள்ள ஆசை ஆசையாய் இருக்கிறதா?

அப்ப கீழே உள்ள டிப்ஸைகளைப் படிக்கலாமே!

p100a.jpg

சற்று நீளமாகவும் மெல்லியதாகவும் உள்ள பேன்ட் வகைகளை லாங் ஸ்லாப்பி (Long Sloppy) பேன்டுட்கள் என்று சொல்லலாம். உயரமானவர்கள் அணிந்தால் செம லுக் கொடுக்கும்!

p100b.jpg

டைட் டாப்ஸ் ஆடை அணிவதற்குப் பிடிக்காதவர்கள், குர்தி வகை ஆடைகளுக்கும் பலாஸோக்களைப் மேட்ச் செய்து அணியலாம்.

p100c.jpg

தடிமனாக இருக்கும் பேன்ட் வகைகளை சங்கி (Chunky) டைப் பேன்ட்கள் என்று சொல்லலாம். இதை உயரம் குறைவானவர்கள் தாராளமாக கிளிக் பண்ணலாம்.

p100d.jpg

பெரிய அளவுகளில் கோடுகள் கொண்ட பேட்டன் பலாஸோக்களுக்கு ப்ளெயின் டாப்ஸ்கள் கிராண்ட் ஃபீல் கொடுக்கும்.அதே போல் சிறிய அளவில் கோடுகள் கொண்ட சிம்பிள் பேட்டன் பலாஸோக்களை செலக்ட் செய்தால் அதற்கு  லைட் கலர் டாப் பொருத்தமாக இருக்கும்.

p100e.jpg

பலாஸோவைப் பொறுத்த வரைக்கும் கலர் முக்கியம் இல்லை. உங்களுக்கு பொருத்தமான நீளத்தில் இருக்கிறதா என பார்த்துக் கொண்டால் போதும்.ஸ்லீவ்லெஸ் மற்றும் போலோ நெக் டாப்களுக்கு, ஓவர்கோட்களை மேட்சிங் செய் தால் செம ஃபிட்டாக இருக்கும்.

டிரெஸ்ஸிங் மட்டும் போதுமா..? ஹேர்ஸ்டைல், ஃபேன்ஸி ஆபரணங்கள், காலணிகள் இவற்றில் கவனம் செலுத்தினால் இளமை அள்ளுமே!

vikatan

  • தொடங்கியவர்

மார்ச் 12: மகாத்மா காந்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தண்டி யாத்திரையை தொடங்கிய தினம் இன்று

தண்டி யாத்திரை குறித்து - எஸ்.ராமகிருஷ்ணன்

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்குப் போயிருந்தேன். -

காந்திஜி, இந்திய மனதைப் புரிந்துகொண்ட அற்புத மனிதர். அவரது செயல்பாடு, எளிய மனிதர்களின் விருப்பங்களை முன்னிறுத்தியது. அவரது எல்லாச் செயல்பாடுகளுக்குப் பின்னும் ஓர் அறம் இயங்கியிருக்கிறது.

காந்திஜியை அவரது அரசியல் செயல்பாடுகளை மட்டுமே வைத்துப் புரிந்துகொள்ள இயலாது. சுதந்திரப் போராட்டம் போன்ற தீவிர விடுதலை இயக்கத்துக்குள் இவர் வகுத்த போராட்ட முறைகளும், அந்த முறைகளில் இருந்த அடித்தட்டு மக்களின் மீதான விருப்பமும் இன்றும் வியக்கத்தக்கதாக இருக்கின்றன. குறிப்பாக, உப்பு சத்தியாகிரகம். உப்பை ஒரு ஆயுதமாக்கிய காந்தியின் போராட்டம் வெகு தனித்துவமானது.

குஜராத்தின் கடற்கரைப் பகுதியான தண்டி, அகமதாபாத்தில் இருந்து 240 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. காரில் செல்லும் போது, கடந்த காலத்தின் மயக்கம் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. இந்த சாலைகள் வழியாகத்தான் 23 நாட்கள் காந்திஜி நடந்து சென்றிருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். சாலைகள் இணைக்காத கிராமங்களைக் கூடத் தனது எளிய சொற் களின் வழியாக இணைத் திருக்கிறார். ஒரு மாபெரும் இயக்கம் நிசப்தமான தனது காலடிச் சுவடுகளை வழியெங்கும் விட்டுச் சென்றிருக்கிறது.

தண்டி கடற்கரையில் காந்திஜி உப்பு காய்ச்சிய தன் நினைவு ஸ்தூபி ஒன்றுள்ளது. சிறிய கடற்கரைக் கிராமத்தில் அந்த சம்பவத்தின் நினைவைப் பெரும் பாலும் மறந்து போயிருக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறையும், வெளி நாட்டுக்காரர்கள் வந்து பார்க்கையிலும் மட்டுமே அது நினைவுபடுத்தப் படுகிறது. காந்தி பிறந்த நாளின் போது சிலர் இங்கே வந்து ஒரு பிடி உப்பைத் தங்களது அன்பின் அடையாளமாக வைத்துவிட்டுப் போவார்கள் என்றார் ‘காந்தி சேவா’ அமைப்பின் உறுப்பினர்.

1930-ல் ஒரு மார்ச் மாதத்தின் பன்னிரண்டாம் நாள்தான் உப்பு சத்தியாகிரக யாத்திரை துவங்கியிருக்கிறது. கால்நடையாகவே காந்தி நடந்து சென்று தண்டியை அடைந்தார். அங்கு கடற்கரையில் படிந்திருந்த உப்புப் படிவத்தைத் தன் கைகளில் அள்ளி, ‘இந்த உப்பு ஆங்கிலேய சாம்ராஜ்யத்தைக் கரைக்கப் போகிறது’ என்று உப்பைக் காய்ச்சினார். ‘இந்தியா முழுவதும் உள்ள ஏழு லட்சம் கிராமங்களில் ஊருக்குப் பத்து பேர் இப்படி உப்பு காய்ச்சி னால் ஆங்கிலேயர்கள் என்ன செய்வார்கள்?’ என்ற அவரது கூக்குரல் அன்று வெள்ளைக்காரர்களை அச்சப்படுத்தியது. அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இன்றைக்கும் இந்திய சுதந்திரத்துக்கு ஒரு மௌன சாட்சி உப்பு.

12801452_1088722954519827_46343974864869

விகடன்

  • தொடங்கியவர்

சொல்வனம்!

** நம்பிக்கைகள் ** -

தொட்டிலை
ஊஞ்சலாக மாற்றிவிடவும்

தன் காலுக்குப் பொருத்தமற்ற
செருப்பை அணிந்துகொள்ளவும்

நீண்ட கைக்குட்டையை
தாவணியைப்போல நினைத்து
உடுத்திக்கொள்ளவும்

பிரியமானவர்களின்
கொஞ்சல்களைத் தவிர்த்துவிட்டு
பொம்மைகளோடு பேசித் திரியவும்
முடிகிறது குழந்தைகளால்

எதிர் முனையில்
அழைப்பவர்களின்
பதிலுக்குக் காத்திராமல்
தன் விருப்பங்களைப்
பேசிவிடுகின்றன
அலைபேசியில் குழந்தைகள்

ஆதாம் ஏவாள் காலத்தில்
நேசிக்கப்பட்ட நிர்வாணத்தை
குழந்தைகள் மீண்டும்
கௌரவிக்கின்றன

விலக்கப்பட்ட கனியாய் இருக்கும்
உலகின் நடைமுறைகள்
குழந்தைகளை வெட்கமுறச்
செய்கின்றன

குழந்தைகளின் தலையில்
குண்டு வீசிச் செல்லும்
போர் விமானங்கள் பறக்கிற வரை
உலகம்
நாகரிகம் அடைந்துவிட்டதாக
நம்புகிறவர்கள் காட்டுமிராண்டிகள்!

- அமீர் அப்பாஸ்
ஆனந்த விகடன் பொக்கிஷ கவிதை

1017408_1088875374504585_185527130970456

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'பழம்' படுத்தும் பாடு... கருணாநிதி முதல் காவலர் வரை கட்டிப்புரண்டு சண்டை!

திருவிளையாடல் படத்தில் ஞானப்பழம் யாருக்கு கிடைப்பதில் பிரச்னை. "விநாகயா, வேலவா... இரண்டு பேரில் இந்த உலகத்தை முதல் சுற்றி வருகிறீர்களோ அவர்களுக்குதான் இந்த ஞானப்பழம்...!" என்று சிவன் கூற,  'உலகத்தைத்தானே... இதோ ஒரு நொடியில் சுற்றி வருகிறேன்...' என்று வேலவன் புறப்பட்டு செல்கிறார். அடுத்து விநாயகர், தனது அம்மை அப்பனை சுற்றி வந்து ஞானபழத்தை பெற்றுக் கொள்கிறார். கடைசியில் உலகத்தை சுற்றி வந்த வேலவனுக்கு ஞானப்பழம் கிடைக்காததால் கோபம் அடைந்து, 'தனிமையில் இருக்க போகிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். இது ஒரு ஞானப்பழத்துக்காக வந்த பிரச்னை.

thiruvilaiyadal%20flim.jpg

பின்னர், கரகாட்டகாரன். இந்த படத்தில் கவுண்டமணி- செந்தில் வாழைப்பழம் காமெடி உலகம் முதல் பட்டித்தொட்டி வரை பிரபலமானது.

Senthil-%20Goundamani%20banana%20commedy

அடுத்து, தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி குறித்து கருணாநிதி தெரிவித்த  பதில் மிகவும் பிரபலமானது. "பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை" என்று கூறியிருந்தார். அவர் இப்படிக்கூறிய மூன்றே நாளில், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்தார். இதற்கு பழத்தை வைத்து, கருணாநிதியை கிண்டல் செய்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பரவியது.

vijayakanth-%20karunanithi%20Meeams%282%

பழப் பிரச்னை அதோடு முடியவில்லை. தற்போது வாழைப்பழத்துக்காக இரண்டு காவலர்கள் மோதிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பிரபலமாகியுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் தலைமைக் காவலர் சரவணன்  ஆகியோர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதாவுக்கும், தலைமைக் காவலர் சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் ரோந்து முடிந்து அடுத்தநாள் அதிகாலையில்,  சரவணன் வாங்கி வைத்து இருந்த வாழைப்பழத்தை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்து இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் மாறி, மாறி கடித்து கொண்டதால் இருவரும் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் (பொறுப்பு) டி.ஐ.ஜி. அருண், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா, தலைமை காவலர் சரவணன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

வாழைப்பழத்தால் இரண்டு காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/60471-srirangam-police-man-fight-for-banana.art
 

  • தொடங்கியவர்

26 நாட்கள்... 583 கி.மீ தூரம்.... ஒரு அசால்டான நடைபயணம்!

 

தினம் காலையில் எழுந்து நடைபயிற்சி செய்ய வேண்டும் என திட்டமிட்டு ,சோம்பேறிதனத்தால் தள்ளி போட்டு கொண்டே இருப்பவர்களுக்கு மத்தியில்,  ஃபோட்டோகிராஃபர் ஆன்சல் தாரா சற்றே வித்தியாசமானவர். மும்பையிலிருந்து கோவா வரை நடந்து சென்றுள்ளார்.  583 கிலோமீட்டர் தூரத்தை , 26 நாட்கள், தினம் 12 மணி நேரம் நடந்து மும்பை அந்தேரியிலிருந்து கோவா மோர்ஜிம் வரை சென்றுள்ளார்.

women_2.jpg

ஒரு வருடத்திற்கு முன் தன் கணவர் பிரஷாந்திடம் தனது ஆசையைக் கூற , உடனே மும்பையிலிருந்து கோவா செல்லும் வழிகளை ஆராய தொடங்கினார். இதற்கான பயிற்சியை ஆறு மாதங்களுக்கு முன்னே தொடங்கி விட்டார். முதலில் தினம் 10 கீ.மி. நடக்க தொடங்கி,  பின்னர் ஒரு நாளைக்கு 30 கிமீ வரை நடந்தார். இது மட்டும் அல்லாது உடற்பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.

women_4.jpg

தனது உடலுக்கு அவரே வைத்துக் கொண்ட ஒரு சோதனைதான் மும்பையில் இருந்து புனே வரையிலான 170 கி.மீ. தூரத்தை, 7 நாட்களில் கடந்தது. இருந்தாலும் கோவா வரையிலான பயணம்,  கடினமானதாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தார் இவர். அவருக்கு உறுதுணையாக பின் தொடர்ந்து அவரது கணவரும், கேமரா குழுவும் காரில் வந்தனர்

women_3.jpg

பயணத்தின் போது ஒவ்வொரு நாளும் காலை 4:30 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி, வெயில் வருவதற்குள் அதிக தூரம் கடக்க வேண்டும் என்பதற்காக, வெளிச்சம் வந்ததுமே நடக்க தொடங்குவார். 7 கி.மீ நடந்த பின் 15 நிமிடங்கள்  ஓய்வு எடுத்துக் கொள்வார். இதே போல இரவு 7 மணி வரை நடப்பார். இரவு தங்கும் விடுதியில் வெடித்து போன பாதங்களுக்கு  ஐஸ் ஒத்தடம் கொடுத்து விட்டு 10 மணிக்கு  உறங்கினால் மீண்டும் காலை 4.30 மணிக்கு தொடங்கும் அவரது பயணம். ஆங்காங்கே வழியில் அவரது நண்பர்கள் சிலரும் அவருடன் சிறிது தூரம் நடந்தனர்.

women_6.jpg


“இது உடல் வலிமைக்கான போட்டியை விட பல தரப்பான மனிதர்களை சந்திப்பதற்கு வாய்ப்பளித்தது. ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர், தன் பிள்ளைகளுக்காக தீபாவளி அன்று கூட வேலை பார்க்கும் லாரி ஓட்டுநர், சரியான விளைச்சல் இல்லாத ஒரு விவசாயி... இப்படி அவர் வழியில் சந்தித்த மக்கள் அனைவரும் டீ, தண்ணீர் உணவு என அளித்து உபசரித்தனர். கடை நிலை மக்களான இவர்கள் பலருக்கும் வருமானம் குறைவு என்றாலும்,  அவர்கள் எனக்கு அளித்த அன்பு ஆச்சரியமானது.” என்கிறார் ஆண்சல்.

பயணம் ஆரம்பித்த சில நாட்களிலேயே அவரது முட்டியில் வலி ஏற்பட்டது. மீதி பயணத்தை அந்த வலியை பொறுத்துக் கொண்டு கடந்தார் . ஒரு ஃபோட்டோகிராஃபராக இந்த பயணம் அவருக்கு  அற்புதமான இயற்கை காட்சிகளை படமெடுக்கும் வாய்ப்பை கொடுத்தது.

கம்ப்யூட்டர் சிறைகளில் சிக்கி தவிக்கும் நம்மில் பலருக்கும் இது போன்ற நீண்ட பயணங்கள் நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது. புத்தகங்கள் கற்று கொடுக்காத வாழ்க்கை பாடங்களை, பயணங்கள் கற்று தரும். அடுத்தபடியாக கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை  5000 கி.மீ 45 நாட்களில் சைக்கிள் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். அசாத்தியமான விஷயங்களை கூட அசால்டாக செய்கிறார்கள் இந்த ஜோடி.

VIKATAN

  • தொடங்கியவர்

12814561_1055839254475088_85943736767803

க்யூட் சமந்தா!

  • தொடங்கியவர்

பாகிஸ்தானின் கௌரவம்!

 

பா, பாய்ந்து ஓடும் ஆற்றின் ஓரத்தில் அமைதியாக அசையும் கோரைப்புற்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மிதந்து கொண்டிருந்தாள். வலியுடன் காத்திருந்தாள். கொஞ்சம் வெளிச்சம் வந்தபோது ஆற்றில் இருந்து மெதுவாக நீந்தி நகர்ந்து கரைக்கு வந்துசேர்ந்தாள். உச்சி முதல் பாதம் வரை வீக்கமும் வேதனைகளும் நிறைந்து இருந்தன. நடக்க முடியவில்லை. ஆனால், அவளுடைய ஒவ்வோர் அணுவிலும் உயிர்பிழைக்க வேண்டும் என்ற வெறி உக்கிரமாக இருந்தது. முந்தைய நாள் இரவு நடந்தவை எல்லாம் கண்களின் முன்னர் கனவுபோல வந்து மறைந்தன.

அந்த இரவில், அவளை இருபது பேர் சூழ்ந்துகொண்டு அடித்து உதைத்தனர். எங்கு இருந்து யார் அடிக்கிறார்கள் எனத் தெரியாத அளவுக்கு சரமாரியாக அடி விழுந்தது. அதில் சபாவின் அப்பாவும் இருந்தார். அவர்தான் அவளுடைய முகத்தில் காறி உமிழ்ந்தார். சபாவை நான்கு பேர் இறுக்கிப் பிடித்துக்கொள்ள, அவர்தான் ஒரு துப்பாக்கியால் அவளுடைய முகத்தில் சுடுகிறார். மூளைக்குள் பாய்ந்திருக்கவேண்டிய குண்டு, எதிர்பாராத தலை அசைவால் கன்னத்தில் புகுந்து வெளியேறியது. மயங்கி விழுந்த சபாவை, செத்துவிட்டதாக நினைத்து ஒரு சாக்குப்பையில் போட்டு ஆற்றில் தூக்கி எறிந்தனர். ஆனால், சபா கோரைப்புற்களைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பினாள். சபாவுக்கு வயது 19. செய்த தவறு... காதலித்தது.

p20a.jpg

p20b.jpg

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்துப் பெண். அவளுக்குத் திருமணம் செய்ய ஓர் இளைஞனைப் பார்த்துத் தீர்மானிக்கிறது குடும்பம். அந்த இளைஞனோடு தினமும் பேசுவது, பழகுவது என தனக்குள் ஒரு காதலை வளர்த்துக்கொண்டாள் சபா. திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் சபாவின் குடும்பத்தினர், `அந்தப் பையன் ரொம்ப ஏழை' எனக் கூறி, திருமணத்தை நிறுத்திவிட்டனர். ஆனால், சபாவால் அந்த இளைஞனை மறக்க முடியவில்லை. அதனால் இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, ஓடிப்போகிறார்கள்.

p20c.jpg

p20d.jpg

அதை ஏற்கமுடியாத சபாவின் குடும்பத்தினர், அவரை பிடித்து அடித்து உதைத்து, கொலைசெய்யத் தீர்மானிக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக சபா உயிர்தப்புகிறார். கௌரவத்தைக் காரணம் காட்டி பாகிஸ்தானில் கொலை செய்யப்படும் ஆயிரக்கணக்கான பெண்களை அவர்தான் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார். சபாவின் கதை, பாகிஸ்தானைச் சேர்ந்த இயக்குநர் ஷர்மீன் ஒபெய்டு-சினாய்க்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ஷர்மீன் ஒபெய்டு-சினாய், பாகிஸ்தானை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர். 2012-ம் ஆண்டில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி இவர் எடுத்த ‘சேவிங் ஃபேஸ்’ படம் சிறந்த குறு ஆவணப்படத்துக்கான ஆஸ்கரை வென்றது. இப்போது ‘ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி பிரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்’ படத்தின் மூலம் இரண்டாவது ஆஸ்கரையும் வாங்கியிருக்கிறார்.

p20e.jpg

p20f.jpg

இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானிலும் பெண்களும் சிறுமிகளும் தங்களுடைய அப்பா, அண்ணன், கணவன், மாமனார் என குடும்பத்து ஆண்களால் கௌரவத்தின் பெயரால் கொல்லப்படுவது ரொம்பவே சகஜம். காதலித்தால், மற்ற ஆண்களோடு பேசினால், மேற்படிப்பு படிக்க விரும்பினால், தனியாகத் தொழில் செய்தால் என, பாகிஸ்தான் ஆண்களின் கௌரவத்தைக் குலைக்கிற செயல்கள் ஏராளம் உண்டு. இப்படி கௌரவக் கொலை செய்தவர்களை, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பம் மன்னிப்பதாகக் கூறிவிட்டால், அவர்களுக்கு எந்தத் தண்டனையும் வழங்கக் கூடாது என்கிற மோசமான ‘மன்னிப்புச் சட்டம்’ அங்கே அமலில் இருக்கிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரம் பேர் வரை இறந்துபோகிறார்கள்.

ஷர்மீன் எடுத்த படத்தின் மூலம், அந்த மோசமான ‘மன்னிப்புச் சட்டம்' நீக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் மேடையில் ஷர்மீன் கூறியது இதுதான், ‘உறுதியான பெண்கள் ஒன்றுசேர்ந்தால் எதையும் நிகழ்த்திக் காட்டலாம்!'

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவில் சேவல்களால் தொல்லை

151203144528_chickens_eyes_512x288_think

 ஆஸ்திரேலியாவில் சேவல்களால் தொல்லை

ஆஸ்திரேலிய நகரான ஹொபார்ட்டில் கோழி உரிமையாளர்கள் தம்மிடமிருந்த தேவையற்ற சேவல்களை ஒப்படைத்துள்ளனர்.

தேவையற்ற சேவல்களை ஒப்படைப்பதற்கென ஒரு தினம் ஹொபர்ட்டில் நடத்தப்பட்டது.

ஹொபார்ட் நகரில் சேவல்களினால் தொல்லை அதிகரித்து வருவதாக தெரிவித்த உள்ளுர் வாசிகள் அவை நகரின் போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளன என தெரிவித்துள்ளனர். தேவையற்ற நேரங்களில் அவை கூவுவதும் பெரும் தொந்தரவாக இருந்துவந்தது.

முட்டைக்காக பலர் கோழிகளை வளர்த்தாலும், பெரும் எண்ணிக்கையில் அந்நகரில் சேவல்கள் கைவிடப்பட்டிருந்தன. இதையடுத்தே இந்த நிகழ்வுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அமைப்புக்களிடம் சனிக்கிழமை 150 கோழிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சில சேவல்கள், அவற்றை வளர்க்க விரும்புபவர்களுக்கு அளிக்கப்படும். மீதமானவை கொல்லப்பட உள்ளன.

BBC

 

நம்ம யாழ் கள ஆஸ்திரேலிய சேவல்கள் ஆர் யூ ஆல் ஓகே..tw_yum:

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

கங்காரு, குரங்கு, பாம்புகளால் தொல்லை என்றால் ஏற்றுக் கொள்ளலாம், இதென்ன சேவல்களால் தொல்லை... மிஞ்சிப்போனால் கொண்டுபோய்க் காட்டில் விடுகிறது அல்லது மிருகக் காட்சிச் சாலைக்கு குடுக்கிறது. யாருக்கு பிலிம் காட்டினம்....! :rolleyes:

  • தொடங்கியவர்

'தோனி- தி அன்டோல்ட் ஸ்டோரி' - கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!

மீபத்தில் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவே காத்திருக்கும் "தோனி- தி அன்டோல்ட் ஸ்டோரி" எனும் தோனியின் வரலாற்றுப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக மாறி உள்ள அந்த போஸ்டர், தோனி மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாது, இந்திய திரையுலகம் உள்ளிட்ட  அனைத்து தரப்பினரிடமும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்டரே இப்படி அதிரடியை கிளப்பினால், படம் வந்தால் எப்படி இருக்குமெனவும் பேச்சுகள் துவங்கி விட்டன. சுஷந்த் சிங்க் ராஜ்புட்,  தோனி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் படமாகவும், அதே சமயம் தோனி ரயில்வே டி.டி.ஆர் பணியில் இருந்து, ஒரு கிரிக்கெட் வீரரராக ஆவதையும் பிணைத்து இந்த படத்தை  உருவாக்கி உள்ளதாகவும் தெரிகிறது.

dhoni_1.jpg


முதலில், தென்கிழக்கு ரயில்வே அணிக்காக விளையாடி வந்த தோனிக்கு, 2004-ம் ஆண்டு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது, மற்றவற்றை வரலாறே நமக்கு உணர்த்தும் அளவிற்கு சாதனைகளை செய்துள்ளார் 'தல' தோனி.

வந்த புதிதில், பக்கத்து வீட்டு பையன் போல இருந்த தோனியின் அடையாளங்கள் இரண்டு.

1. அவரது நீளமான முடி.
2. அவர் பந்தை ஆக்ரோஷமாக அடிக்கும் ஸ்டைல்.

பிறகு ஒவ்வொன்றாக அவரது திறமைகள் உலகிற்கு வெளிவர துவங்கியது.

மேட்ச்சுக்கு ஏற்றார் போல விளையாடுவது, ஜவ்வு போல இழுக்காமல் ஒரு மேட்சை சீக்கிரமாக முடிப்பது என பல திறமைகளை வெளிப்படுத்த துவங்கினார்.

2007-ம் ஆண்டு, கேப்டனாக அவர் நமக்கு வாங்கிக் கொடுக்காத கப்களே இல்லை. முதல் T20 உலகக்கோப்பையை நமக்கு வென்று கொடுத்தவர்  'தல' தான். இதன் பிறகு ஐம்பது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்ததும் அவர்தான். அனைத்து ஐ சி சி தொடர்களையும் நமக்கு வென்று கொடுத்த பெருமை அவரையே சாரும். இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், சென்னை ரசிகர்கள் இவர் மீது கொண்ட பற்று மிகவும் அதிகம். காரணம், இவர் நம்ம அணியின் கேப்டனுமாவார்.

அமைதிக்கும் வெற்றிக்கும் பெயர்போன தோனியை பற்றி தெரியாத பல விஷயங்களும் இந்த திரைப்படம் மூலம் தெரிய வரும் என நம்பலாம்.

.vikatan

  • தொடங்கியவர்

1558574_1713304402245836_699540374041524

  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபரின் அதிகாரத்துக்கு எங்கே 'செக்' வைக்கிறார்கள் தெரியுமா?!

டந்த சில வருடங்களில் கிடுகிடுவென வளர்ந்து நம் வாழ்வில் வலுவாக இடம் பெற்றுவிட்ட சமூக ஊடகத்திற்கு நாணயம் போல் இரண்டு புறங்கள்.. உலகளாவிய செய்திகள் பரவலாக, படு விரைவாக சென்று சேர்வது நாணயத்தின் ஒருபுறம் எனில், தவறான புரிந்து கொள்ளல்களும் அது சார்ந்த நேர விரய விவாதங்களும் மற்றொரு புறம்.

சமீபத்திய உதாரணம் – அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளில் ஒருவரான அண்டோனின் ஸ்காலியாவின் அகால மரணத்தைத் தொடர்ந்து இந்திய அமெரிக்கரான ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுவிட்டதாக சமூக ஊடங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பரவலான புரிதல்.

உண்மையல்ல அது.

அதற்குள் செல்லும்முன்னால், இது சார்ந்த அமெரிக்க அரசியலமைப்பை விரைவாக ஒரு மேற்பார்வை பார்த்து விடலாம்.

காங்கிரஸ், அதிபர், உச்ச நீதிமன்றம் என மூன்று பிரிவுகள். ஒன்றை மற்றது கண்காணிக்க இயலும். இதுதான் அடிப்படை அமைப்பு.

காங்கிரஸ் நமது பார்லிமென்ட்டுக்கு நிகரானது. இதில் ஹவுஸ், செனட் என இரண்டு உட்பிரிவுகள்.

ஹவுஸ் பிரதிநிதிகள் தத்தம் தொகுதிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 50 மாநிலங்களில் மொத்தம் 435 தொகுதிகள். ஒரு மாநிலத்தில் எத்தனை தொகுதிகள்  இருக்கும் என்பது அந்த மாநிலத்தின் மக்கள் தொகையைச் சார்ந்தது. இதனால், கலிபோர்னியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் அதிக தொகுதிகளும், வெர்மாண்ட் போன்ற குட்டி மாநிலங்களில் சில தொகுதிகளும் இருக்கிறது. இப்படி இருப்பதால் மாநிலங்களுக்கு சமமான அளவில் பிரநிதித்துவம் கிடைப்பதில்லை. இதை நிவர்த்தி செய்கிறது காங்கிரஸின் மறுபிரிவான செனட். அளவு, மக்கள்தொகை என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், மாநிலத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் என மொத்தம் 100 செனட்டர்கள். செனட்டரின் பதவி காலம் 6 வருடங்கள். மீண்டும், மீண்டும் போட்டியிட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் ஹவுஸ் பிரதிநிதியும், செனட்டரும் பதவியில் இருந்து கொள்ளலாம்.

obma%20one%20two.jpg

சட்டங்கள் உருவாக்கப்படுவது இப்படி கோர்வையாக நடக்கும். ஹவுஸ் பிரதிநிதிகள் அல்லது செனட்டர்கள் ஒருவரோ அல்லது பலரோ இணைந்து மசோதா கொண்டு வர அது வாக்கெடுப்பில் ஹவுஸ், செனட் இரண்டிலும் வெற்றி பெற்றால், அது அதிபரின் கையெழுத்திற்கு அனுப்பப்படும். அவர் கையொப்பமிட்டதும் உருவாகிய சட்டத்தை வலியுறுத்த வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை.

அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் இதற்காக கொடுத்திருக்கும் வழிமுறைகளில் ஒழுங்கு நூறாண்டுகளுக்கும் மேலாகத்  தொடர்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பரில் வரும் முதல் திங்கள் கிழமை தாண்டிய செவ்வாய் அன்று தேர்தல். வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளர் ஜனவரி 20 மதியம் 12 மணிக்கு பொறுப்பேற்றுக் கொள்வார். ஒருவேளை 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனில், அந்த வருடங்களில் மட்டும் 21ம் தேதி பொறுப்பேற்பு நடக்கும்.

அமெரிக்க அதிபர் என்றால் வானாளாவிய அதிகாரம் இருப்பதான பிம்பம் உண்டு. ஒருவிதத்தில் அது உண்மையும் கூட. காங்கிரஸ் நிறைவேற்றி தன்னிடம் கொண்டு வரும் சட்டங்களை ஒப்புதல் அளிக்க மறுக்கும் உரிமை அதிபருக்கு உண்டு. முப்படைகளின் தலைமைப் பொறுப்பு இருந்தாலும், தான் நினைத்தபடி போர் தொடங்கும் அதிகாரம் அதிபருக்கு கிடையாது. காங்கிரஸிடம் முதலில் அனுமதி வாங்கியாக வேண்டும். இப்படி ஒருவரை மற்றொருவர் கண்காணிக்கும் பொறுப்பில் வைத்திருப்பது திட்டமிட்டு செய்யப்படும் பணிகளுக்குப் பொருந்தலாம். ஆனால், அவசர நிர்வாகங்களுக்கு இது போன்ற Checks and Balances சரிப்பட்டு வராது என்பதால், அரசியலமைப்புத்திட்டம் அதிபருக்கு சிறப்பான அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. Executive Order ஒன்றை சமர்ப்பித்துவிட்டு அதிபர் எதை வேண்டுமானால் செய்ய முடியும்.

சரி, சர்வாதிகார எண்ணம் கொண்ட ஒருவர் பசுத்தோல் போர்த்திய புலியாக அதிபராகிவிட்டு அதன் பின்னர் காங்கிரஸை கண்டுகொள்ளாமல் தன் விருப்பப்படி சட்டங்களை இயக்கி சட்டாம்பிள்ளை விளையாட்டு விளையாடினால் ? அதற்கு தெளிவான தீர்வைக் கொடுக்கிறது அரசியலமைப்பு. அதிபரை பதவியில் இருந்து கீழிறக்கும்  அதிகாரம் காங்கிரஸுக்கு உண்டு.
 
 
அதிபர் சார்ந்திருக்கும் கட்சி காங்கிரஸில் பெரும்பான்மையாக இருந்தால் அவர் நினைக்கும் திட்டங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இலையெனில், ஒவ்வொரு சட்டங்களை நிறைவேற்ற படாதபாடுபட வேண்டிவரும். அதிபர் பதவி காலம் 4 வருடங்கள் என அதிகபட்சம் இரண்டு முறை பதவி வகிக்கலாம்.

      obama%20sic%20hundred.jpg

மூன்றாவது அமைப்பிற்கு வரலாம்.

ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றம். ஒருவர் நீதிபதி ஆக வேண்டுமெனில், அவரை அதிபர் நியமிக்க வேண்டும்; காங்கிரஸின் செனட் பிரிவு நியமனத்தை உறுதிப்படுத்த வேண்டும். காங்கிரஸில் இருக்கும் ஹவுஸ் பிரதிநிதிகளுக்கோ, செனட்டர்களுக்கோ, அதிபருக்கோ இருப்பதைப் போன்ற கால எல்லை என்பது நீதிபதிகளுக்கு கிடையாது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுவிட்டால், அவர் தானாக ஓய்வெடுப்பதாக அறிவித்தால் மட்டுமே அந்த பதவியில் இருந்து விலக முடியும். அல்லது இறந்து போனால்.

இன்றைய நிலவரப்படி -

    அதிபராக தனது கடைசி எட்டாவது வருடத்தில் இருக்கிறார் ஒபாமா

    அவரது டெமாக்ரடிக் கட்சி காங்கிரஸில், குறிப்பாக செனட்டில், சிறுபான்மை இடத்தில் இருக்கிறது.

    நீதிபதி ஸ்காலியா வேட்டையாடும் விடுமுறைக்காக சென்ற மாதம் சென்றிருந்தபோது அகால மரணமடைகிறார்

    அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒபாமா ஸ்காலியாவின் இடத்தின் புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும்.

    இது அதிபரின் கடைசி வருடம் என்பதால் அது கூடாது; புதிய அதிபர் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்கிறார்கள் ரிபப்ளிக்கன் கட்சியைச் சார்ந்தவர்கள். இது அரசியலமைப்புச் சட்டத்தில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் கடமை. அதைச் செய்யவிடுங்கள் என்கிறார் ஒபாமா.

    இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதில் வெள்ளைமாளிகைக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் உங்களது செனட்டரைக் தொலைபேசியில் அழைத்து அழுத்தம் கொடுங்கள் என்ற பதிவு வெளியாகியிருக்கிறது. தனது கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், மக்கள் மூலமாக செனட்டர்களை வழிக்கு கொண்டுவரலாம் என ஒபாமாவின் நிர்வாகம் நினைப்பது தெரிய வருகிறது. இந்த சர்ச்சை விடா + கொடா கண்டனாக தொடரும் என்பது தெளிவு.


இது இப்படியிருக்க, ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுவிட்டார் என்று பரவலாக புரிந்து கொள்ளப்பட்டது எப்படி ? 2013 ல் ஸ்ரீனிவாசன் டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவின் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதை அப்போதைய செனட் முழுமையான ஆதரவுடன் உறுதிப்படுத்தவும் செய்தது. பகவத் கீதையில் மேல் கை வைத்தபடி, அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டதாக சமூக ஊடகங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஒபாமாவின் லிஸ்டில் ஸ்ரீனிவாசன் இருக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம், ஆனால், ஒபாமாவிற்கு அவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது இப்போதைய கேள்விக்குறி. தடைகளை மீறி, ஸ்ரீனிவாசன் உச்ச நீதிமன்றத்தின் இடத்தை அலங்கரித்தால் அது இந்தியாவிற்கு பெருமை; அமெரிக்காவிற்கு அதைவிட இன்னும் பெருமை!

vikatan

  • தொடங்கியவர்

Before vs Now

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மார்ச் 13
 
 

article_1426221205-UranusPlanet.jpg1781: வில்லியம் ஹேர்செல் என்பவர் யுரானஸ் கிரகத்தை கண்டுபிடித்தார்.

1809: சுவீடனில் நான்காம் கஸ்டோவ் மன்னர் புரட்சியொன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

1811: பிரித்தானியர் பிரெஞ்சுப் படைகளை லீசா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.

1881: ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டான்.(ஜூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).

1900: பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்டது.

1908: நெல்லை க்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது.

1921: மொங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1940: ரஷ்ய – சீன யுத்தம் முடிவுற்றது.

1940: இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார்.

1943: ஜேர்மனியப் படைகள் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.

1954: வியட்நாம் போர் - வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.

1955: நேபாள மன்னர் திரிபுவன் இறந்தார்.

1957: கியூப ஜனாதிபதி படிஸ்டாவை கொல்வதற்கு மாணவ புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் தோல்வியுற்றது.

1957: கியூபா ஜனாதிபதி புல்ஜென்சியோ பட்டீஸ்டாவைக் கொல்ல மாணவ தீவிரவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1969: அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1979: கிரெனடாவில் இடம்பெற்ற புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1988: உலகின் மிக நீளமான கடலடி சுரங்கப்பாதை ஜப்பானின் அமோரி தீவுக்கும் ஹக்கோடேட் தீவுக்கும் இடையில் திறக்கப்பட்டது.1992: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 500 பேர் பலி.

1992: கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற (6.8 ரிக்டர் அளவு) நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

1996: ஸ்கொட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

1997: அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்சங்கள் தெரிந்தன.

1997: நிமிர்ந்த நிலையில் நடந்த மனிதனின் மூன்றரை லட்சம் வருடங்கள் பழைமை வாய்ந்த காலடித்தடம் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.

2003: இத்தாலியில் 350,000 ஆண்டுகள் பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.

2007: 2007 உலகக்கிண்ண துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பம்.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... சரிந்த மல்லையாவின் சாம்ராஜ்யம்

 

ன்றைக்கு இந்தியாவே தேடும் ஒரு நபர் என்றால் அது விஜய் மல்லையாதான். ஏறக்குறைய ரூ.7,000  கோடி  கடனை  வாங்கி விட்டு, அதை திருப்பித் தராமலே பிரிட்டனுக்கு ஓடிவிட்டார் மல்லையா. மீண்டும் அவரை இந்தியாவுக்கு அழைத்து  வந்து, கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்று  கதறுகின்றனர் அவருக்கு கடன் தந்த வங்கி அதிகாரிகள். யார் இந்த விஜய் மல்லையா?

p24a.jpg

மல்லையாவின் ஆரம்ப காலம்!

இவருக்கு அறிமுகம் தேவையில்லை. கிங்ஃபிஷர் என்கிற ஒற்றை வார்த்தை போதும், இவரைப் பற்றி எடுத்துச் சொல்ல. ஒரு உத்தம தந்தை தனது தொழிலை ஆலமரமாக வளர்த்தெடுத்து தன் மகனுக்குத் தர, அதை தன்னுடைய பல இமாலயத் தவறுகளால் வெட்டி வீழ்த்திய ஊதாரியின் கதைதான்  விஜய் மல்லையாவினுடையது. இந்த உத்தம வில்லனின் கதையைக்  கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

டிசம்பர் 18, 1955 அன்று கொல்கத்தாவில் விட்டல் மல்லையா, லலிதா ராமையாவுக்கு மகனாகப் பிறந்தார். சில்வர் ஸ்பூன் குழந்தையாகப் பிறந்த விஜய் மல்லையாவின் தந்தை விட்டல் மல்லையா, கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் படித்தவர்.

வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் அனுபவம் பெற்றவர். 1947-ல் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 22. அடுத்த ஒரே வருடத்தில் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார்.

திருமணமானபின் கொல்கத்தாவிலிருந்து பெங்களூருவுக்கு வந்து குடியேறினார். உடல்நலக் குறைவு இருந்தபோதிலும் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தை பிரமாண்ட நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.

1983-ல் அவர் இறந்ததும் யுனைடெட் ப்ருவரீஸ் நிறுவனத்தின் தலைவராக அவரது ஒரே மகனான விஜய் மல்லையா பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அப்போது அவருக்கு வயது 28.

p25a.jpg

உலகின் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம்!

யுனைடெட் ப்ரூவரீஸ் தன் கைக்கு வருவதற்குமுன்பே, தனது 18 வயதில் ஹோக்ஸ்ட் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குனரானார் விஜய் மல்லையா. காமர்ஸ் பட்டப் படிப்பு முடித்த இவர், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பிசினஸ் மேலாண்மையில் டாக்டர் பட்டம் வாங்கியவர். அவர் பொறுப்பேற்றபிறகு யுனைடெட் ப்ரூவரீஸ் பெயரை உலக அளவில் பிரபலமாக்க அயராது உழைத்தார். அப்போது இருந்த மல்லையாவுக்கும் இப்போது நாம் பார்க்கும் மல்லையாவுக்கும் மலையளவு வித்தியாசம் இருந்தது. அவருடைய கடின உழைப்பு அசாத்தியமானதாக இருந்தது. எதற்கும் தயங்கியதில்லை, பயம் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியாது. இவைதான் அந்த நிறுவனம் உலகளவில் இரண்டாவது  பெரிய மதுபான நிறுவனமாக வளரக் காரணம்.

மஹாராஷ்டிரா அரசு ஸ்ட்ராங் பீருக்கான கலால் வரியை உயர்த்திய போது ஷா வாலஸ் உட்பட அனைத்து மதுபான நிறுவனங்களும் செய்வதறியாது தடுமாறின. ஆனால், அந்தச் சூழ்நிலையைச் சாமர்த்தியமாக சமாளித்ததோடு, தன் நிறுவனத்தை விரிவுப்படுத்திய அதே நேரத்தில் தடுமாற்றத்தில் இருந்த பல நிறுவனங்களைக் கைப்பற்றவும் செய்தார். இதனால் அவருடன் நட்புடன் இருந்த மனு மற்றும் கிஷோர் சாப்ரியா சகோதரர்களுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. சாப்ரியா சகோதரர்கள், மல்லையாவின் தொழிலுக்கு பக்கபலமாக இருந்தார்கள். அவர்களின் பிரிவு மல்லையாவுக்கு முதல் இழப்பு.

உறவு முறிந்ததுடன், கிஷோர் சாப்்ரியா மல்லையாவுக்கு போட்டியாக அலைட் ப்ரூவரீஸ் அண்ட் டிஸ்டில்லர்ஸ் என்ற மற்றொரு மதுபான நிறுவனத்தைத் தொடங்கி மிகப் பெரிய அளவில் வளர்ந்தார். ஆனால், விஜய் மல்லையாவும் சளைக்காமல் உழைத்து, இந்தியாவின் முதன்மை மது உற்பத்தி நிறுவனமாக தனது  நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஷா வாலஸ், ஹெர்பர்ட் சன்ஸ் ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்தியபிறகு உலக அளவில் டியாஜியோ நிறுவனத்துக்கு அடுத்த பெரிய மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தக்காரராக ஜொலித்தார் மல்லையா. இந்தியச் சந்தையில் கிங்ஃபிஷர் பீரின் மார்க்கெட் ஷேர் 50%. ஏறக்குறைய இந்தியா தவிர்த்து, 52 நாடுகளில் இதன் விற்பனை செமஜோர்.  மதுபானத்துக்கு பெயர் போன நகரமாக பெங்களூரு மாறியதற்கு இவரது தொழில் விரிவாக்கத் திட்டங்கள் மிக முக்கியமானவை. இந்த நிறுவனத்தின் அமெரிக்க கிளை மென்டோசினோ புரூவிங் கோ என்ற பெயரில் இயங்குகிறது.

இவருடைய யுனைடெட் ப்ரூவரீஸ் குழுமம், மதுபானங்கள் உற்பத்தி, விமானச் சேவை, ரியல் எஸ்டேட், பொறியியல் துறை, உர உற்பத்தி, உயிரியல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் என பல்வேறு துறைகளில் தனது தொழிலை ஆலமரமாக விஸ்தரித்தது. சனோஃபி இண்டியா மற்றும் பேயர் கிராப் சயின்ஸ் இண்டியா, மங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் ஆகியவை இவருடைய பிற நிறுவனங்கள்.

இதுபோன்ற அறுபது நிறுவனங்களை உள்ளடக்கிய பன்னாட்டு குழுமமாக யுனைடெட் ப்ரூவரீஸ் வளர்ந்தது. இதன் வருவாய் அவர் பொறுப்பேற்ற 15 ஆண்டுகளில் 64% உயர்ந்து, 1998 - 1999-களில் ரூ.74 ஆயிரம் கோடியாக இருந்தது.  

p26a%281%29.jpg

சரிவுக்கான மூன்று காரணங்கள்! 

“இந்த கணத்துக்காகத்தான் காத்திருந்தோம். நம் ஒட்டுமொத்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் குழுவும் ஏர்லைன்ஸ் கனவை சாத்தியப் படுத்த பாடுபட்டிருக்கிறது. இறுதியாக இந்த விண்ணை ஆள நாம் தயாராகி இருக்கிறோம். வாருங்கள் பறக்கலாம். இதுவே உங்கள் வாழ்க்கையின் பொன்னான தருணங்களாக அமையட்டும்” என்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தப் பட்ட அன்று மல்லையா செய்த இந்த முழக்கத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மாநிலங்களவை உறுப்பினராக அரசியல் களத்திலும் இருந்ததால், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என அங்கிருந்த அனைவரும் அந்த முழக்கத்தை கேட்டு ஆர்ப்பரித்தனர். குலுக்கப்பட்ட பீர் பாட்டில்கள் பொங்கி வழிந்தன. ஆனால், அந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸே தன் பிசினஸ் வாழ்வுக்கு சாவுமணி அடிக்கப் போவதை அப்போது அவர் உணரவே இல்லை.

கிங்ஃபிஷரைத்  தொடங்கிய போது, ‘விமானங்களைவிட வாடிக்கையாளர் சேவைதான் நம் நோக்கம் என்ற மல்லையா, விமானப் பணியாளர்கள் 5,500 பேரை அவரே நேர்காணல் செய்து தேர்வு செய்தார்.

அழகான, அருமையான வசதியான விமானம், நல்ல உணவு, நல்ல, அழகான பணிப்பெண்கள் மற்றும் பொழுதுபோக்கு எனப் பெயர் பெற்றது. முதல் வகுப்பு பயணிகளுக்கு இலவச மதுவும் தரப்பட்டது.

இந்தியாவில் கிங்ஃபிஷருக்கு மவுசு கூடியது. ஆனால், இது மட்டும் போதாது; உலகின் அத்தனை மூலைக்கும் தன் விமானம் செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கழிந்தபிறகே ஒரு விமான நிறுவனம், சர்வதேச சேவையைத் தொடங்க முடியும் என்ற சட்டம் அப்போது இருந்ததால், நொடிந்து கிடந்த ஏர் டெக்கான் நிறுவனத்தை வாங்கினார். அங்குதான் அவருடைய வீழ்ச்சி ஆரம்பம் ஆனது. 

p27a%281%29.jpg

பறக்க நினைத்தார்; பாதாளத்தில் விழுந்தார்!

இந்தியாவில் மிகப் பெரிய நெட்வொர்க்காக இருந்த, கேப்டன் ஜிஆர் கோபிநாத்துக்குச் சொந்தமான ஏர் டெக்கானை 2007-ல் வாங்கி, அதனை பின்னர் கிங்ஃபிஷர் ரெட் என்று பெயர் மாற்றம் செய்தார். செப்டம்பர் 2008-ல் கிங்ஃபிஷர் தனது முதல் சர்வதேச விமான சேவையை பெங்களூருவிலிருந்து லண்டனுக்கு தொடங்கியது.

சரியாக 2008, உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகி பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. அதன்பிறகு சில ஆண்டுகள்தான் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தாக்குப் பிடித்தது. ஆனால், போகப் போக நஷ்ட மடைந்து நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறியது.

பின்னர் அதன் வீழ்ச்சி தீவிரமானது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அதன் மொத்த 66 விமான சேவைகளில் 28 விமான சேவைகளை நிறுத்தியது. மேலும், பண நெருக்கடி அதிகமாகி, வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தரவேண்டிய பாக்கி அதிகமானது. வங்கிகளில் தொடர்ந்து கடன் வாங்கி வந்தார் மல்லையா. அவர் ஒரு வங்கியையும் விட்டு வைக்கவில்லை. அவர் வாங்கிய மொத்தக் கடன் ரூ.7,000 கோடி.

வாங்கிய கடனில் பெரும்பாலானவை யுனைடெட் ப்ரூவரீஸ் பெயரில் வாங்கப்பட்டிருந்தன. அதில் வந்த லாபத்தையும், வாங்கிய கடனையும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் முதலீடு செய்தார்.  அதில் லாபம் பெயருக்குக்கூட இல்லை. போகப் போக மதுபான நிறுவனத்திலும் நஷ்டம் ஏற்பட தொடங்கியது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இனி இல்லை. விரைவில் தன்னுடைய யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மீதான உரிமையும் கைவிட்டு போக இருக்கிறது என்ற நிலையிலும் விஜய் மல்லையாவின் கொண்டாட்டம் ஒருபோதும் குறையவில்லை. அவரது அழகு மாடல் பெண்களைக் கொண்ட காலண்டர்களோ, ஐபிஎல் கிரிக்கெட் ஏலங்களோ நிற்கவில்லை. 2003-லிருந்து கிங்ஃபிஷர் காலண்டரை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு, பல நூறு அழகிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அழகி களுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே திருவிழாதான் மல்லையாவுக்கு.

ஏர்லைன்ஸின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பணியாளர்கள் அனைவரும் 15 மாதங்கள் ஊதியம் தராததால், போராட்டம் செய்யும் முடிவுக்கு வந்தனர். பணியாளர் ஒருவரின் மனைவி பணப் பிரச்னையால் தற்கொலையும் செய்து கொண்டார். இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய விஜய் மல்லையா, ஏதோ ஒரு குட்டித் தீவில் உல்லாசமாக இருந்தார்.   

அவரது மகன் அந்த வருட கிங்ஃபிஷர் காலண்டருக்காக அழகான பெண்களை நேர்காணல் செய்துகொண்டும், அவர்களோடு கடற்கரையில் வாலிபால் ஆடிக்கொண்டும் அதனை அவ்வப்போது ட்விட்டரில் பதிவு செய்துகொண்டும் இருந்தார். 

p28a.jpg

இவருக்கு கடன் தந்த வங்கிகளும், வேலை இழந்த ஊழியர்களும் இவரை கண்டபடி ஏசிக் கொண்டிருக்க, அதை எல்லாம் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல், இரு மாதங்களுக்கு முன்பு இந்த வருடத்துக்கான காலண்டரை வெளியிட்டார் மல்லையா. அதன் முதல் காப்பியை உலக பிரபல பாப் பாடகர் என்ரிக் எலியாஸ்க்கு வழங்கி அதனை ட்விட்டரில் பதிவிட்டார். இந்த  காலண்டரை வெளியிடும் நிகழ்ச்சியில் உலக அழகிகள் முதல் பாலிவுட், ஹாலிவுட் நடிகைகள் வரை அனைவரும் பல கோடி கொடுத்து அழைத்து வரப்பட்டார்கள்.

இந்திய வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத ஜாம்பவான்கள் பலர் இருந்தாலும், விஜய் மல்லையாவின் இந்த ஆடம்பரக் கொண்டாட்டங்களே அவருக்கு எதிரான நடவடிக்கைகளை வங்கிகள் தீவிரப்படுத்த காரணமாகின. இதுதான் அவரது வீழ்ச்சிக்கான மூன்றாவது காரணம்.

அடுத்து என்ன?

மல்லையாவின் யுனைடெட் ப்ரூவரீஸின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தற்போது 5 சதவிகிதத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டி வருகிறது. மல்லையா யுனைடெட் ஸ்பிரீட்ஸ் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளில் 25% டியாஜியோவிடம் விற்றுவிட்டார். இப்போது 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பங்கு வைத்திருக்கிறார்.

வங்கிகளுக்குத் தரவேண்டிய ரூ.7,000 கோடி கடன் இப்போது அவரது கழுத்தை நெறிக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கடன் வசூலிப்பு முகமையிடம் மல்லையா மீது புகார் பதிவு செய்து அவரது அனைத்து சொத்துக்களையும் முடக்கிவிட்டது. டியாஜியோ தருவதாக இருந்த ரூ.515 கோடி பணத்தையும் தற்காலிகமாக முடக்கியது. இதனை அடுத்து எப்போது வேண்டுமானாலும் மல்லையா கைது செய்யப் படலாம். அவரது பாஸ்போர்ட் முடக்கப்படலாம் என்கிற  பேச்சு பலமாக எழுந்தது. ஆனால் மல்லையாவோ, ‘நான் ஒரே செட்டில்மென்டில் கடனை அடைப்பேன். நான் மோசடிக்காரன் அல்ல, ஓடி ஒளியமாட்டேன்’ என்று உதார் விட்டார்.

அவரது வழக்கின் அடுத்த வாய்தா மார்ச் 28-ம் தேதி  அன்று நடக்கிறது. அதே சமயம், மல்லையா மீது அமலாக்கப் பிரிவு கறுப்புப் பண மோசடி வழக்கும் பதிவு செய்துள்ளது. இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து என்றுணர்ந்த மல்லையா, ரகசியமாக பிரிட்டனுக்கு சென்றுவிட்டார்.

இனி அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வருவாரா, வாங்கிய கடனை திரும்பத் தருவாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


பங்குச் சந்தையில் மல்லையாவின் நிறுவனங்கள்!p29a.jpg

யுனைடெட் ப்ரூவரீஸ் - 2002-ல் ரூ.11-க்கு தொடங்கிய இதன் பங்குகள், தற்போது ரூ.800-க்கு வர்த்தகமானது. இது அதிகபட்சமாக ரூ.1,100 வரை விலை உயர்ந்திருக்கிறது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஜனவரி 2000-ல் ரூ.295க்கு வர்த்தகமாகத் தொடங்கிய இதன் பங்கு வர்த்தகம் இன்று ரூ.2,400-ல் வர்த்தகமாகிறது. இது அதிகபட்சமாக ரூ.4,000 வரை விலை உயர்ந்திருக்கிறது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் 2006-ல் ரூ.86-க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. இன்று இந்தப் பங்கு வர்த்தகமாகவில்லை. இது அதிகபட்சமாக ரூ.316 வரை விலை உயர்ந்திருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

12828922_1000890743292953_54995477998113

நியூ சீலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னரின் பிறந்தநாள்.
தென் ஆபிரிக்காவில் பிறந்து, இப்போது நியூ சீலாந்து அணிக்காக ஆடி வருகிறார்.

  • தொடங்கியவர்
சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா
 

article_1457850842-nyan.jpg

நடிகை நயன்தார, நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவுக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும் அவரது சினிமா மார்க்கெட்டும் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. 

.tamilmirror.lk/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.