Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
 
வரலாற்றில் இன்று: மே 09
 
 

article_1431142527-Ash300.jpeg1502; கிறிஸ்டோபர் கொலம்பஸ் நான்காவது தடவையாக ஸ்பெய்னிலிருந்து புதிய உலகத்தை நோக்கி புறப்பட்டார்.

1874: குதிரைகளால் இழுக்கப்படும் பஸ் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது..

1877: பெருநாட்டில் 8.8 ரிச்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 3541 பேர் பலி.

1901: அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்போர்னில் திறந்துவைக்கப்பட்டது.

1927: கான்பெரா நகரில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது.

1936: எத்தியோப்பியாவை இத்தாலி தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1955: நேட்டோ அமைப்பில் மேற்கு ஜேர்மனி இணைந்தது.

1970: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக வெள்ளை மாளிகை முன்னால் சுமார் ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

1980: புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல், பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததுடன் 35பேர் கொல்லப்பட்டனர்.

1985: காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

1987: போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183பேர் கொல்லப்பட்டனர்.

1988: கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

2001: கானா நாட்டில் கால்பந்தாட்டப்போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி 129 பேர் பலியாகினர்.

2002: ரஷ்யாவின் கஸ்பிஸ்க் நகரில் குண்டுவெடிப்பினால் 43 பேர் பலி.

2004: ரஷ்யாவின் செச்சினிய பிராந்திய ஜனாதிபதி அஹமட் கடிரோவ் குண்டுவெடிப்பொன்றில் பலியானார்.

2005: பிரிட்டனின் தாவர ஆலையில் அணுக் கசிவு

2010: எரிமலை சாம்பல் கசிவு காரணமாக ஐரோப்பாவுக்கான நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் இரத்து.

2012: ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்தார்.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13161868_1039809359401091_70384383132732

தமிழ்த் திரையுலகில் ஒரு சகல கலாவல்லவர் - இன்றும் துடிப்பான இளைஞராக கலக்கி வரும் T.ராஜேந்தரின் பிறந்தநாள்.

கதை, இயக்கம், இசையமைப்பு, ஒளிப்பதிவு, நடிப்பு, இசை, பாடல் எழுதுவது, பாடுவது என்று இவர் தொடாத துறைகளே கிடையாது.
எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியவர்.
அடுக்கு மொழியில், சொடுக்குப் பேச்சில் புகழ்பெற்ற தாடிக்கார பல்துறை கலைஞரை வாழ்த்துவோம்.

 

 

 

ஒரு தலை ராகமும்... டி.ராஜேந்தர் எனும் காந்தமும்!

 

TR.png

தமிழ் சினிமாவுக்கு அன்லிமிடட் உற்சாகத்தை வாரி வழங்கிக் கொண்டே இருப்பவர் டி.ராஜேந்தர். இவரின் முதல் படமான, தமிழ் சினிமாவில் ஒரு புது தடம் பதித்த ‘ஒரு தலை ராகம்’ படத்தைப் பற்றி நினைவுகூர்வோம்..!

ஒருதலைராகம் படம் 1980 ஆம் ஆண்டு தமிழகம் முழுக்க 30 தியேட்டர்களுக்குள்ளாகவே வெளியானது. படத்தின் தயாரிப்பாளரில் இருந்து, இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லோருமே ஏறக்குறைய புதுமுகங்கள். சரி போய்த்தான் பார்ப்போமே என்று அன்று தியேட்டருக்குள் நுழைந்தவர்களுக்குத் தெரியாது, தங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டப்போகிறது என்று. படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இது ஒரு புதுமாதிரியான படம் எனப் புரிந்து கொண்டார்கள். அதற்கு நான்காண்டுகளுக்கு முன்பு வெளியான ’16 வயதினிலே’ கொடுத்த அதே புதுமை. ’16 வயதினிலே’ அதுவரை காட்டியிராத கிராமத்தைக் காட்டி இருந்தது என்றால், இதில் சிறுநகரம் சார்ந்த கல்லூரியை முதன்முதலாக தமிழ் சினிமா அச்சு அசலாகப் படம் பிடித்திருந்தது.

oru-thalai-ragam.jpg


இந்தப் படம் முதலில் வசீகரித்தது கல்லூரி மாணவர்களை. ’நம்ம காலேஜ அப்படியே எடுத்துருக்காண்டா’ என கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தார்கள். பின்னர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என எல்லோரையும் தியேட்டர்களுக்கு வரவழைத்தது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி. பெரிய ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடியது. அதுவரை தமிழ் சினிமாவில் கல்லூரி என்றாலே மாணவர்கள் கூட கோட்சூட் அணிந்து செல்வார்கள் என்று நிழல் நிதர்சனம் நிஜத்திலிருந்து விலகியே இருக்கும். பெரும்பாலும் 40வயதைக் கடந்த கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாகத் தோன்றுவார்கள், ஆனால் நாம் கண்முன்னால் பார்க்கும் கல்லூரியை, மாணவர்களை, அவர்களின் இயல்பான நடை, உடை, பாவனைகளுடன் உலவவிட்டது ஒருதலை ராகம். குறிப்பிட்ட வார்த்தைகளுடனேயே புழங்கும் ஒரு சமூகத்திற்குள் பத்திரிகைகள், தொலைக்காட்சி, திரைப்படம் மூலமாகத்தான் புதிய வார்த்தைகள் சென்று சேரும். அல்லது அந்தப் பகுதிக்கு வரும் மற்றவர்களாலும் புதிய வார்த்தைகள் அறிந்து கொள்ளப்படும். தொலைக்காட்சி இல்லாத, அதிகம் பேர் பத்திரிக்கை படிக்காத அந்த நாட்களில் திரைப்படங்கள் மூலமே பல வார்த்தைகள் கிராமம் மற்றும் சிற்றூர் பகுதிகளில் உள்ளே வந்தன. அப்படிப் பார்த்தால் கல்லூரி மாணவர்களிடையே சகஜமாகப் புழங்கும் மச்சி, மாமூ போன்ற வார்த்தைகள் இந்தப் படத்தின் மூலமாகவே கிராமப்புறங்களில் கூட நுழைந்தன. காதலியைத் தொடாமல், பேசாமல் காதலன் காதலித்த முதல் படம் இதுதான். ஒரு வகையில் ’இதயம்’ திரைப்படத்துக்கு முன்னோடி.

காதலி, குடும்பச்சூழல் மற்றும் அவள் சந்தித்த ஆண்களின் மீதான வெறுப்பு காரணமாக காதலிக்க மறுக்கிறாள். உற்சாக உருவாய் வளையவந்த காதலன் மனதுடைந்து நோய் வாய்ப்படுகிறான். காதலி மனம்மாறும் தறுவாயில் இறந்து விடுகிறான்.

இந்தப் படத்தில் இருந்துதான் நாயகனுக்கு அவன் சமவயதிலேயே ஒரு நண்பர் கூட்டம், அதில் ஒரு காமெடியன், இறுக்கமான மனதுடையவன் ஒருவன் மற்றும் ஜாலியான இருவர் என்ற ஃபார்முலாவும் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தது.

டி ராஜேந்தர் இயக்கியது, ஆனால் இப்ராஹிம் என்பவர் பெயரில் வெளியானது என்று சொல்வார்கள். இசை பாடல்கள் டி.ராஜேந்தர்தான். சங்கர்(ஹீரோ), ரவீந்தர், தியாகு, சந்திரசேகர், ரூபா (ஹீரோயின்) , உஷா (பின்னாளில் டி ஆரின் மனைவியானார்), ஆகியோர் நடித்தது.

hqdefault.jpg

ஒருதலை ராகத்தின் கதை, கதை நடக்கும் களம் போலவே இன்னொரு ஆச்சரியம் கொடுத்தது அந்தப் படத்தின் பாடல்கள். அப்போது ஓரளவு வசதியான ஆட்கள் மட்டுமே டேப் ரிக்கார்டர் வைத்திருப்பார்கள். எனவே ஒரு பாடல் நன்றாக இருக்கிறதென்றால் இப்போது போல எல்லோரும் நினைத்த உடன் கேட்டுவிட முடியாது. வானொலியில் எப்போதாவது ஒலிபரப்பினால்தான் உண்டு. தியேட்டருக்குச் சென்றுதான் கேட்க முடியும். எனவே ஒரு தலை ராகத்தின் பாடல்களைக் கேட்க மக்கள் திரும்பத் திரும்ப தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்கள். கல்லூரி மாணவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

’மன்மதன் ரட்சிக்கணும் இந்த மன்மதக் காளைகளை’,‘வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது’, ’கொக்கரக்கோழி கூவுற வேளை’, ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’, ’கடவுள் வாழும் கோவிலிலே’, ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’, ‘என் கதை முடியும் நேரமிது’ என அனைத்துப் பாடல்களும் மாஸ் ஹிட். இதில் ’இது குழந்தை பாடும் தாலாட்டு’ பாடலில் வரும் எல்லா வரிகளும் எதிர்உவமையாக அமைந்திருக்கும். ’நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன்... வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்... சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்..”! ’நான் ஒரு ராசியில்லா ராஜா’ பாடலை டி.எம்.எஸ் பாடினார். அதன்பின், ’தனக்கு வாய்ப்பே இல்லை. அப்பாடல் சென்டிமெண்டலாக என்னைப் பாதித்து விட்டது’ என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். மேலும் அப்போது டி.டி.கே. மற்றும் சோனி கம்பெனிகளின் கேசட் மட்டும்தான் கிடைக்கும். அவற்றின் விலை அதிகம். தியேட்டர் பால்கனி டிக்கட் மூன்று ரூபாய்க்குள் இருந்த காலத்தில் அந்த கேசட்டுகளின் விலை 45 ரூபாய் என்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். குல்சன்குமார் டி சீரிஸ் கேசட்டுகளை சகாய விலைக்கு தயாரித்து விற்க ஆரம்பித்த உடன்தான் அதிக அளவில் மக்கள் கேசட்டுகளை வாங்கத் துவங்கினார்கள். அதற்கு அடுத்தபடியாக 90களின் ஆரம்பத்தில் 10 ரூபாய்க்கு கேசட் கிடைக்க ஆரம்பித்த உடன் மக்கள் இன்னும் அதிகமாக வாங்கத் துவங்கினார்கள்.

maxresdefault.jpg

அந்தச் சமயத்தில் எந்த ஹாஸ்டல் ரூமுக்குள் நுழைந்தாலும் ஒரு பாடல் கேசட் நிச்சயம் இருக்கும். அது ஒருதலைராகம் படத்தின் கேசட். அதனுடன் காம்போவாக இரயில் பயணங்களிலும் சேர்ந்து பதியப்பட்டிருக்கும். 10 ஆண்டுகள் முன் வந்த ஒரு படத்தின் பாடலுக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா என்று நினைத்ததுண்டு. ஆனால், இன்று வரை அந்தப் படத்தின் பாடல்களுக்கு மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படி கிளாசிக்கல் டான்ஸுக்கு சலங்கை ஒலியின் ’ஓம் நமச்சிவாய’ இன்றுவரை கல்லூரி விழாக்களில் உபயோகப்படுகிறதோ, அதுபோல ரெட்ரோ பாடல்கள் பாடுபவர்கள் இன்னும் ஒருதலை ராகத்தின் பாடல்களை உபயோகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இயக்குநர் டி ராஜேந்தர்தான் என்பதை தன் அடுத்தடுத்த படங்களில் அவர் நிரூபித்துவிட்டார். தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் கல்லூரி சார் படங்கள் தமிழில் வெளிவர ஒருதலை ராகம் ஒரு காரணமாக அமைந்தது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ராபர்ட் –ராஜசேகரன். இவர்கள் அடுத்த ஆண்டிலேயே குறைந்த முதலீட்டில் பாலைவனச் சோலை படத்தை எடுத்து அதை மிகப்பெரும் வெற்றிப் படமாக்கினார்கள். 1980களில் சிறுநகர கல்லூரி எப்படி இருக்கும்.. மாணவர்கள் என்ன மாதிரி ஆடை அணிவார்கள்... அவர்கள் கையில் என்னென்ன உபகரணங்கள் இருக்கும் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு தலை ராகம் படத்தைப் பாருங்கள். கூடுதலாக காதலிக்க அத்தனை தகுதிகள் இருந்தும், காதலைச் சொல்ல முடியாமல், அதைச் சொன்னாலும் ஏற்க மறுக்கும் ஒரு பெண்ணை காதலித்தவனின் வலியையும் தெரிந்து கொள்ளலாம்.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அத்திலாந்திக் சமுத்திரத்தில் மிதந்து சென்ற விமானம்
 

அயர்லாந்து கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மிதந்து சென்று கொண்டி ருந்த பாரிய விமானமொன்று பலரையும் வியப்பிலாழ்த்தியது.


1650203.jpg

 

போயிங் 767 ரக விமானமொன்றே இவ்வாறு கடலில் சென்றுகொண்டிருந்தது. 159 அடி நீளமான இந்த விமானம், அத்திலாந்திக் சமுத்திரத்தில் மிதந்து கொண்டிருப்பதை பார்ப்பதற்கு கரையோரங்களில் பலர் திரண்டனர்.


அயர்லாந்தைச் சேர்ந்த டேவிட் மெக்கோவன் எனும் வர்த்தகர் இவ் விமானத்தை வாங்கி அதை வள்ளமொன்றின் மூலம் கொண்டு சென்றார் என்பது பின்னர் தெரியவந்தது.


1650202.jpg

 

30 வருட கால பழைமையான இவ்விமானம் பாவனையிலிருந்து ஒதுக்கப் பட்டதாகும். பறக்க முடியாத நிலையில் அது உள்ளது. இவ் விமானத்தை வாங்கிய  டேவிட் மெக்கோவன், அதனை அயர்லாந்தின் ஷெனோன் நகர விமான நிலையத்தில் இருந்து அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக தனது உல்லாச சுற்றுலா தளத்துக்குக் கொண்டு சென்றார்.

 

1650201.jpg

 

மேற்படி உல்லாசத் தளத்தில் ஒரு விடுதித் தொகுதியாக இவ் விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இவ் விமானத்தை  அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடாக கொண்டு செல்வதற்கு 36 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சும்மாவே புகழ் பாடுவோம்... இன்னைக்கு மலர் டீச்சருக்கு பிறந்த நாள் வேற! # HBD SaiPallavi

malar.jpg

அண்மைக் காலங்களில் மலர் என்ற பெயரின் மீது நம்ம பசங்களுக்கு ஆர்வம் கூடியிருக்கிறது. ரோட்டில் யாராவது மலர் என்று பெயர் சொல்லிக்கூப்பிட்டால் நம்ம பசங்களும் கூட திரும்பி அந்த மலரைப் பார்த்துவிட வேண்டும் எனத் துடிக்கும் அளவிற்கு என்றால் பார்த்துக்கோங்களேன்! இத்தனைக்கும் காரணம் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து இதயம் கொள்ளை கொண்ட சாய்பல்லவிதான். கேரள ரசிகர்களைத் தாண்டி நம் தமிழ் ரசிகர்களும் இந்த மலர் டீச்சரை லைக் செய்ய என்ன காரணம்?

தமிழில் இவரின் முதல் அறிமுகம், விஜய் டிவியில். “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நிகழ்ச்சியில் நடனமாடி கலக்கினார். அந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் டிவி பிரியர்களுக்கு நடனக்கலைஞராக அறிமுகமானார். ஜெயம்ரவி, கங்கனா நடிப்பில் வெளியான தாம் தூம் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் கங்கனாவின் தோழியாக ஓரத்தில் நின்றிருப்பாரே அது  சாய்பல்லவியின் ஓல்டு வெர்ஷன். தமிழ் சினிமாவின் தொலைதூர ஃபிரேமில் நம்ம பிரேமம் நாயகி!

அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் மலையாளத் திரையுலகின் மிகப்பெரிய வசூல் சாதனையும், ரசிகர்களின் ஃபேவரிட் பட அந்தஸ்தும் பெற்றது ‘பிரேமம்’ படம். இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மலர் டீச்சரின் காட்சிகள் என்பதில் சந்தேகமில்லை. அதுவும், மலராக சாய்பல்லவி நடித்தது இன்னும் ஸ்பெஷல்!

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு சிறு வேடங்கள், நடன நிகழ்ச்சியில் பார்த்திருந்தாலும், பிரேமம் படத்தில் சேலையில் மிகப் பாந்தமாக, கண்டிப்பும் கரிசனமுமாக பிசிக்கலி, மெண்ட்டலி, சைக்காலஜிக்கலி, பேசிக்கலி... என அனைத்தும் வடிவத்திலும் அனைவரையும் ஈர்த்தார்!

malare.jpg

சாய்பல்லவியின் ஒவ்வொரு காட்சியும், சிரிப்பும், முகபாவனை என்று சீன் பை சீன் சிக்ஸர் விளாசியிருப்பார். ஒரு காட்சியில் இடது புருவத்தை உயர்த்தி “குர்த்தா” என்று சொல்லும் போது... சான்ஸே இல்லை! இன்னொரு காட்சியில் மல்லிகைப்பூ (மலையாளத்தில் முல்லைப்பூ), ஜார்ஜ்ஜிடம் மலர் வாங்கித்தருமாறு கேட்பார். அந்த காட்சியின் வெற்றிக்குக் காரணம், தமிழ் பசங்களையும், மல்லிகைப்பூ சென்டிமென்டையும் யாராலும் பிரிக்கமுடியாது, அது பிரேமத்திலும் நடந்ததே தான்.

சாதுவான, அடக்கமான டீச்சர், நடனத்திலும் விளாசிஎடுப்பார். நிச்சயம் அவர் நடனமாடுவதைப் பார்த்து நிவின்பாலியின் ரியாக்‌ஷன் நம்ம பசங்களின் மைன்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.    இதையெல்லாம் தாண்டி, மேக்கப்பே இல்லாமல் சின்னச் சின்ன அழகிய பருக்களும், லிஃப்ஸ்டிக் இல்லா உதடுகளுமே சாய்பல்லவியின் ஹைலைட். இவ்வாறான சின்ன சின்ன விஷயங்களில் இதமாக நம் மனதில் இசைக்க வைக்கிறார்.

மலரே நின்னே காணாதிருந்தால்......

பிறந்த நாள் வாழ்த்துகள் சாய்பல்லவி!!!...

vikatan

13151561_1097003357025344_20618869014469

  • தொடங்கியவர்

70 வயது பெண்ணின் நடனத்தைப் பார்த்து மிரண்ட நடுவர்கள்! (அசத்தல் வீடியோ)

த்தாலியில் நடைபெற்ற டிவி ரியாலிட்டி ஷோவில் ஜப்பானை சேர்ந்த 70 வயது பெண் ஒருவர்,  பாலே நடனத்தின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை அசத்தினார்.

டோக்கியோவை சேர்ந்த டோமோகா என்ற 70 வயது பெண்,  ரியாலிட்டி ஷோவில் கிமோனோ எனப்படும் ஒரு அழகான பாரம்பர்ய ஆடை அணிந்து வந்தார். பின்னர் நம்ப முடியாதவாறு தனது நடனத்தில், அனைவரையும் கவர்ந்தார். அதன் வீடியோவை காண...

vikatan

  • தொடங்கியவர்

சாகச இளவரசி மில்லா!


Milla11.jpg

‘முள்கம்பி பந்தலுக்கு அடியில் ஊர்ந்துசெல்வது, பெரிய சுவர்களில் ஏறுவது, உயரத்தில் இருந்து குதிப்பது, கயிற்றைப் பிடித்துக்கொண்டு வேகமாக மேலே ஏறுவது போன்ற ராணுவ வீரர்களின் சாகசங்களை நானும் அசால்ட்டா செய்வேன்’ என அசரவைக்கிறார் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஒன்பது வயது, மில்லா பிஸோட்டோ (Milla Bizzotto).

மில்லாவுக்கு ஏன் இந்த ஆர்வம் வந்தது? இந்த சாதனைக்கு என்ன காரணம்? நான்காம் வகுப்புக்கு வந்த மில்லா அமைதியானவள். யார் வம்புக்கும் போகமாட்டாள். இதைச் சாதகமாகப் பயண்படுத்திகொண்ட சக மாணவர்கள், மில்லாவை கேலி, கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். ‘நீ எந்த விளையாட்டுக்கும் லாயக்கில்லை’ என யாரும் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்.

வீட்டுக்கு வந்ததும் இவர்களுக்கு எப்படி தக்க பதிலடி கொடுப்பது என்று யோசித்தார் மில்லா. அப்போது, என்ன பிரச்னை என்று அப்பா கேட்டார். மில்லாவின் அப்பா கிறிஸ்டின் பிஸாட்டோ (Christian Bizzotto), உடற்பயிற்சி மையம் நடத்திவருகிறார். அவர், பேட்டில் ஃப்ராக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள பயிற்சி மேற்கொண்டிருந்த சமயம் அது. தானும் கலந்துகொள்ள ஆசையாக உள்ளது என்றார் மில்லா. அப்பாவும் சம்மதித்தார்.

வாரத்தில் 5 நாள், 3 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டார் மில்லா. தொடர்ந்து 6 மாதங்கள் பயிற்சிகள் மேற்கொண்டார். இந்த ஆண்டு மார்ச் 4, 5-ம் தேகளில் நடந்த ‘பேட்டில் ஃப்ராக்ஸ் ஃபர்ஸ்ட் எக்ஸ்ட்ரீம் 24-ஹவர்ஸ் ரேஸ் (BattleFrog’s first Xtreme 24-hours race)' என்று அழைக்கப்படும் போட்டியில் கலந்துகொண்டார். இந்தப் போட்டிகளில் இலக்கை அடைவது மிகவும் கடினம். ஆண்டுதோறும் நடக்கும் இந்த சாகசப் போட்டியில் கலந்து கொண்ட, மிகச் சிறிய வயது பெண் எனும் பெயருடன் போட்டியில் பங்கேற்றார் மில்லா.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள வர்ஜீனியா கடற்கரையில், சுமார் 58 கி.மீ தூரம் நடக்கும் இந்தத் த்ரில்லான அட்வெஞ்சர் போட்டியில், எட்டு கி.மீ தூரம் நீச்சல் அடிக்க வேண்டும். முள்கம்பி பந்தலுக்கு அடியில் ஊர்ந்து செல்லவேண்டும். 3.6 மீட்டர் உயரம் கொண்ட சுவரின் மீது ஏறி கடக்க வேண்டும். கயிற்றைப் பிடித்துக்கொண்டு, கால்கள் கீழே படாமல் தாவித் தாவி செல்ல வேண்டும். இப்படி 25 கடினமான இலக்குகளை ஆறு சுற்றுகளில், 24 மணி நேரத்தில் கடக்க வேண்டும். எல்லா தடைகளையும் கடந்து அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார் மில்லா.

 

 இப்போது,  மில்லா தனது பள்ளி முழுக்க பிரபலம். முன்பு கேலி, கிண்டல் செய்தவர்கள் மில்லாவின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். அடுத்து, மியாமியில் நடக்க இருக்கும் Athlete Race-ல் கலந்துகொள்ள உள்ளார். இதில், 6 கி.மீ தூரம் துடுப்புக்கொண்டு படகை செலுத்த வேண்டும். 5 கி.மீ தூரம் ஓடியபடி சில இலக்குகளை கடக்க வேண்டும். வரும் ஆகஸ்ட் மாதம் ஹவாய் தீவில் நடக்கும் ‘Spartan Trifecta எனும் சாகசப் போட்டியில் கலந்துகொள்கிறார்.

‘சாத்தியமற்றது எதுவும் எல்லை’ என்பதை நிரூபித்து காட்டி, மாணவர்களுக்கு ரோல்மாடலாக இருக்கிறார் மில்லா.

ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று, மாணவர்களிடம் புல்லிங் (Bullying) எனப்படும் கேலிக்கு எதிராக விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே மில்லாவின் கனவு.

vikatan

  • தொடங்கியவர்
தங்க சுவர் கட்டடம்...
 
 

article_1459235775-a.jpg

தங்கத்தினாலான சுவர்களைக்கொண்ட கட்டடமொன்று ரஷ்யாவில் விற்பனைக்கு உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கட்டடத்தின் கழிவறைக்கூட தங்கம் கலந்து ஆக்கப்பட்டுள்ளதாம்.

article_1459235782-b.jpgarticle_1459235789-c.jpg

article_1459235797-d.jpg

article_1459235803-e.jpgarticle_1459235810-f.jpgarticle_1459235817-g.jpgarticle_1459235842-j.jpg

article_1459235824-h.jpg

article_1459235832-i.jpg

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.... 

மே - 10

 

721varalar-10-04-2015.jpg1710 : காப்­பு­ரிமை பற்­றிய முத­லா­வது சட்ட விதிகள் பிரித்­தா­னி­யாவில் வெளி­யி­டப்­பட்­டன.

 

1790 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் காப்­பு­ரிமம் பற்­றிய விதிகள் எழு­தப்­பட்­டன.

 

1815 : இந்­தோ­னே­ஷி­யாவில் டம்­போரா மலை தீக்­­கி­யதில் பல தீவுகள் அழிந்­தன. இதனால் 71,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1848 : இங்­கி­லாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்­ததில் 250 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1864 : முதலாம் மெக்­ஸி­மி­லியன் மெக்­ஸிக்­கோவின் மன்­ன­னாக முடி சூடினார்.

 

1868 : அபி­சீ­னி­யாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்­தா­னிய மற்றும் இந்­தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்­னனின் படை­கள் வெற்றி கண்­டன. 700 எத்­தி­யோப்­பியப் படை­வீ­ரர்கள் கொல்­லப்­பட்­டனர். 

 

1912 : டைட்­டானிக் பய­ணிகள் கப்பல் தனது முத­லா­வதும் கடை­சி­யு­மான பய­ணத்தை இங்­கி­லாந்தின் சௌதாப்ம்டன் துறை­மு­கத்தில் ஆரம்­பித்­தது.

 

1919 : மெக்­ஸிக்கோ புரட்சித் தலைவர் எமி­லி­யானோ சப்­பாட்டா அரச படை­யி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

 

1963 : அமெ­ரிக்­காவின் த்ரெஷர் என்ற நீர்­மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.

 

1972 : வியட்நாம் போரில் அமெ­ரிக்க விமா­னங்கள் வடக்கு வியட்­நாமில் குண்­டு­களை வீசின.

 

721one-world-trade-centre.jpg1979 : டெக்சாஸ் மாநி­லத்தில் விச்­சிட்டா அரு­வியில் சுழல்­காற்று தாக்­கி­யதில் 42 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : இத்­தா­லியின் மொபி பிரின்ஸ் என்ற பய­ணிகள் கப்பல் லிவோர்­னோவில் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்­றுடன் மோதி­யதில் 140 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1998 : அயர்­லாந்து குடி­ய­ர­சுக்கும் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கும் இடையில் வட அயர்­லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

 

2002 : தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வே. பிர­பா­கரன் கிளி­நொச்­சியில் நடை­பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் மகா­நாட்டில் கலந்து கொண்டார்.

 

2006 : இந்­தி­யாவில் உத்­தர பிர­தே­சத்தில் மீரட் நகரில் வர்த்­தகக் கண்­காட்சி ஒன்றில் ஏற்­பட்ட தீயில் 60 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2010 : ரஷ்­யாவில் இடம்­பெற்ற விமான விபத்தில் போலந்து ஜனா­தி­பதி லீச் காஸின்ஸ்கி உட்­பட 96 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2013 : 1792 அடி (546.2 மீற்றர்) உயரமான “ஓர் உலக வர்த்தக மையத்தின்” (வன் வேர்ல்ட் டிரேட் சென்ரர்) கட்டடம் நியூயோர்க்கில் திறக்கப்பட்டது. மேற்கு அரைக்கோளத்தில் மிக உயரமான கட்டடம் இது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜாக்கி ஜாக்சன்!

 

p84a.jpg

சீன மொபைல்களும் இன்னபிற பிளாஸ்டிக் பொருட்களும் இந்தியாவை ஆக்கிரமித்தது எல்லாம், ஜஸ்ட் இப்போதுதான். அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு இருந்து இறக்குமதியாகி ஹிட் அடித்தவர் ஜாக்கி சான். நம் ரசிகர்களுக்காக குங்ஃபூ போட்ட ஜாக்கி, இப்போது ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியிருக் கிறார். அது என்ன படம் எனத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாக ஒரு ஃப்ளாஷ்பேக்.

உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய சினிமா மார்க்கெட், சீனா. உலகம் முழுவதும் இந்தியப் படங்களுக்கு வரவேற்பு இருந்தாலும் சீனாவில் அது கிட்டத்தட்ட ஜீரோ. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக இரு நாட்டு அரசுகளும் இணைந்து சில நடவடிக்கைகளை எடுத்தன. அதில் ஒன்று, இந்திய - சீன கூட்டுத் தயாரிப்பாக சினிமா எடுப்பது. அமீர் கானும் ஜாக்கி சானும் தலா ஒரு படத்தில் நடிப்பதாகத் திட்டம்.

ஜாக்கி சான் நடிக்கும் படம், ‘குங்ஃபூ யோகா’. அவருடன் நடித்திருப்பது `அனேகன்’ பட நாயகி அமைரா தஸ்தூர். ஐஸ்லாந்து நாட்டுப் பனிமலைகளில் ஏறி ரிஸ்க் எடுத்து நடித்த அமைராவைப் பாராட்டித் தள்ளினாராம் ஜாக்கி. இன்ஸ்டாவில் ‘ஜாக்கியும் நானும்’ படங்களைத் தட்டி லைக்ஸ் அள்ளினார் அமைரா.

இந்திய வில்லனான சோனு சூட், இதில் ஜாக்கியுடன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து கிளம்பிய சோனுவுக்கு ஜாக்கி ஒரு பரிசு தந்தாராம். அதில் ‘உங்களுடன் நடித்ததில் எனக்குப் பெருமை - ஜாக்கி’ என எழுதியிருந்ததைப் படித்து மெர்சலாகிவிட்டார் சோனு.

`குங்ஃபூ யோகா’ படப்பிடிப்புக்காக இந்தியா வந்தார் ஜாக்கி. பிரபல நடன இயக்குநர் ஃபரா கான், ஜாக்கி சானை ஒரு பக்கா இந்தியக் குத்துப்பாட்டுக்கு ஆடவைத்தார். நம்ம கமர்ஷியல் சிங்கங்களும் புலிகளும் ஒரு பன்ச் வைக்கும் நேரத்தில் மூன்று பன்ச் வைக்கும் வேகம் உடையவர்கள் சீன ஹீரோக்கள். அதிலும் ஜாக்கி, சீனாவின் சூப்பர் ஸ்டார். ‘இதெல்லாம் எனக்கு ஜுஜுபி’ என இறங்கி குத்தியிருக்கிறாராம். ஜெய்ப்பூர், ஜோத்பூர் என ராஜஸ்தானின் பல ஊர்களில் ஆடிவிட்டு, பாடலின் தொடர்ச்சியை பீஜிங் நகரில் முடித்திருக்கிறார்கள்.

`ஜாக்கியின் காமெடிக்கு நான் ரசிகை. அதைவிட அவரது நடனம் சூப்பர். அவரது வேகமும் நளினமும் என்னை ஆச்சர்யப் படுத்துகின்றன. இனி அவரை `ஜாக்கி ஜாக்சன்’ என அழைக்கலாம்’ என்கிறார் ஃபரா கான்.

p84b.jpg

`நன்றி வணக்கம்’ போடுவதற்கு முன்னரே கிளம்பிய ரசிகர்களை, `இந்தப் படத்தை கோடாக் ஃபிலிமில் எடுத்தோம். ஷூட்டிங் அப்ப என்ன நடந்ததுன்னா...’ என புளூப்பர்ஸ் போட்டு உட்காரவைத்தவர் ஜாக்கி. அந்த டெக்னிக்கை, நம்ம ஊர் சில ஆண்டுகளாகத்தான் க.க.போ செய்திருக்கிறது. சமீபத்தில் `தெறி'யில்கூட படம் முடிந்த பிறகு ஒரு பாடல் இருந்தது. அந்த ஸ்டைல்படி ‘குங்ஃபூ யோகா’விலும் இன்னொரு மாஸ் குத்து சேர்க்கலாமே எனச் சொன்னாராம் ஜாக்கி. எனவே, இன்னொரு லுங்கி டான்ஸுக்கோ, மங்கி டான்ஸுக்கோ வாய்ப்பு இருக்கிறது.

`படக் குழுவினரை தன் அன்பால் திணறத் திணற அடித்த ஜாக்கி, இந்திய ரசிகர்களை நிச்சயம் தியேட்டரில் எழுந்து ஆடவைத்துவிடுவார். அதற்கு அக்டோபர் வரை பொறுங்கள். அப்போதுதான் `குங்ஃபூ யோகா’ ரிலீஸ்' என்கிறார் இயக்குநர் ஸ்டேன்லி டாங். ஜாக்கியின் எவர்கிரீன் கிளாசிக் `போலீஸ் ஸ்டோரி’ இவரது இயக்கம்தான்.

இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் விஜய், அஜித், ஷாரூக், சல்மான் மட்டும் அல்ல... ஜாக்கியும் இருக்கிறார்!


சீனாவில், ஓர் ஆண்டுக்கு 34 வெளிநாட்டுப் படங்களை மட்டுமே அந்த நாட்டு அரசு அனுமதிக்கிறது. அதிலும் பெரும்பான்மை ஹாலிவுட் படங்கள். ஆண்டுக்கு ஐந்து இந்தியப் படங்கள் மட்டுமே அனுமதி. ஆனால், சீன சென்சாரின் ஓவர் கெடுபிடியால், நாம் அந்த ஐந்தைக்கூடத் தொட்டது இல்லை. அமீர் கானின் `பிகே’, அமிதாப்-தீபிகா நடித்த `பிக்கு’, `பாகுபலி’ போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி வசூலை அள்ளின.

p84c.jpg

ஜெய்பூரில் உள்ள நகர்மார் அருங்காட்சியகத்தில் பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் வைப்பது வழக்கம். இப்போது ஜாக்கி சானின் மெழுகுச்சிலையும் அதில் சேர்ந்திருக்கிறது. பார்ப்பதற்கு ‘பாபா’ ரஜினி போல தலைக்கட்டுடன், ஒரு யோக முத்திரையைக் காட்டிக்கொண்டு நிற்கிறார் இந்த மார்ஷியல் ஆர்ட் மாவீரன்.

vikatan

  • தொடங்கியவர்

10 நிமிசத்துக்கு ஒரு தடவ வந்து போத்தீஸ் 50 லட்சம் மரக்கன்றுகள் கொடுத்திருக்குன்னு சொல்றாரு உலகநாயகன்.
.
அம்மாவோட 60 வயசுலயிருந்து வயசு x 1 லட்சம் மரம் நட்டிருக்காங்க, இப்ப வரைக்கும் கணக்கு பண்ணா ஒரு 3 லட்சம் மரம்.
.
நம்ம விவேக் வேற 5 கோடி மரம் நடறார்.
.
கலைஞர் ஒரு 1 கோடி,
.
நம்ம சத்குரு ஒரு 1 கோடி.
.
எப்படி கணக்கு பண்ணாலும் அமேசான் காட்டை விட தமிழ் நாட்டுல தான் நிறைய மரம் இருக்கணும்.
.
ஆனாலும் வெயிலு மண்டய பொளக்குது.
# பயபுள்ளைக மரத்த பூராம் அவிங்க வீட்டு ஃபிரிட்ஜ்க்குள்ள நட்டு வச்சிருக்கானுகளோ???

13138773_1024773540930923_72994048750166

vikatan

  • தொடங்கியவர்

13147765_1040606042654756_33670793182864

தமிழ்த் திரைப்பட நடிகை நமீதாவின் பிறந்த நாள் இன்று.
முன்னாள் கவர்ச்சி - கனவுக் கன்னி இப்போது அரசியலிலும் குதித்துள்ளார்.
ஆசை யாரை விட்டது?

  • தொடங்கியவர்
3000 ஊழியர்களை சுற்றுலாவுக்காக ஸ்பெய்னுக்கு அனுப்பிய சீன கோடீஸ்வரர்
 

சீனாவைச் சேர்ந்த கோடீஸ்­வரர் ஒருவர், தனது நிறு­வ­னங்­களில் பணி­யாற்றும் சுமார் 3000 இற்கும் அதி­க­மான ஊழி­யர்­களை ஸ்பெய்­னுக்கு சுற்­றுலா அழைத்துச் சென்­றுள்ளார்.

 

16536_5043375.jpg

 

டியென்ஸ் குறூப் (Tiens Group) எனும் குழும நிறு­வ­னத்தில் சிறப்­பாக செயற்­பட்ட 3000 பேர் இச்­சுற்­று­லாவில் பங்­கு­பற்­று­கின்­றனர்.


இவர்­க­ளுக்கு ஸ்பெய்னின் மெட்றிட்  நகரில் பாரம்­ப­ரிய ஸ்பானிய இராப்­போ­சன விருந்­த­ளிக்­கப்­பட்­டது.

 

16536_5043570.jpg

 

இவர்கள் ஸ்பெய்னின் 6 அம் பிலிப் மண்­ணரின் அரண்­ம­னைக்கும் செல்­ல­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இச்­சுற்­று­லா­வுக்­கான செல­வு­களை இந்­நி­று­வ­னத்தின்  சுமார் 80 லட்சம் டொலர் (சுமார் 114    கோடி ரூபா) செல­வி­டப்­ப­டு­கி­றது.

 

16536_Untitled-4.jpg

 

டியென்ஸ் குழும நிறு­வ­னத்தின் ஸ்தாப­க­ரான கோடீஸ்­வரர் லீ ஜின்­யுவான் இச்­சுற்­று­லா­வுக்­கான செல­வு­களை ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

 

கடந்த வருடம் இவர் 6400 ஊழியர்களை பிரான்ஸுக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

www.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
உலகின் மிக நீளமான பூச்சி சீனாவில் கண்டுபிடிப்பு: 62.4 சென்ரிமீற்றர் நீளம்
 

165375041484.jpgசீனாவில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பூச்சியொன்று உலகின் மிகப் பெரிய பூச்சி என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.


இந்த பூச்சியின் நீளம் 62.4 சென்­ரி­மீற்­றர்கள் ஆகும்.

 

இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர், சீனாவின் தென் பிராந்­திய மாகா­ண­மான குவாங்­ஸி­யி­லீ­ருந்து இப்பூச்சி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


உலகில் இது­வரை கண்­ட­றி­யப்­பட்ட 807,628 பூச்சி இனங்­களில் இதுவே மிகப் பெரிய பூச்சி என சீன மேற்கு பூச்சி நூத­ன­சா­லையை மேற்கோள் காட்டி சீன ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.


2008 ஆம் ஆண்டில் லண்­டனில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 56.7 சென்­ரி­மீற்றர் நீள­மான பூச்சியொன்றே இது­வரை உலகின் மிகப் பெரிய பூச்சியாக அறி­யப்­பட்­டி­ருந்­தது.

 

இப்பூச்சி தற்­போது லண்டன் இயற்கை வர­லாற்று நூத­ன­சா­லையில் உள்­ளது.
சீனாவில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பூச்சியா­னது 62.4 சென்­ரி­மீற்றர் நீள­மா­ன­தாக உள்ள போதிலும் அது மனி­தர்­களின் சுட்டு விரல் அளவு பரு­ம­னையே கொண்­டுள்­ள­தாக விஞ்­ஞானி ஸாவோ லீ தெரி­வித்­துள்ளார். இவரே இப்பூச்சியை கண்­டு­பி­டித்­தவர் ஆவார்.


இது தொடர்­பாக ஸாவோ லீ கூறு­கையில், “6 வரு­டங்­க­ள­ளாக இப்பூச்சியை நான் தேடிக்­கொண்­டி­ருந்தேன். குவாஸ்ஸி மாகா­ணத்தின் லியுஸோ நக­ரி­லுள்ள 1200 மீற்றர் உய­ர­மான மலை­யொன்றில் 12014 ஓகஸ்ட் 16 ஆம் திகதி இரவு நான் பூச்சிகளைத் தேடிக் கொண்­டி­ருந்­த­போது இப்பச்சி அகப்­பட்­டது.

 


16537Untitled-3.jpg

 

இப்பூச்சியின் நிழலைக் கண்டு அதன் அருகில் சென்­ற­போது, இப்பூச்சியின் நீளத்தைப் பார்த்து நான் பெரும் வியப்­ப­டைந்தேன்” என ஸாவோ லீ தெரி­வித்­துள்ளார். இவரை கௌரவிக்கும் முகமாக இப்பூச்சியை  பிரைகனிஸ்ட்ரியா சைனீஸ் ஸாவோ (Phryganistria chinensis Zhao)என குறிப்பிடுகின்றனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

p921.jpg

பொன்(ய்)மொழி

`கடன் அன்பை முறிக்கும்' என்ற வாசகத்தை, கடையில் எழுதி வைத்திருந்த பங்க் கடைக்காரர், தினமும் ஆறு தண்டல்காரர்களிடம் தவணை கட்டிக்கொண்டிருந்தார்.

- ந.கன்னியக்குமார்


p922.jpg

வேலை... வேலை..!

உடல்நிலை சரியில்லாததால் ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள் ரேகா.

 - பெ.பாண்டியன்


p924.jpg

இடமும் நிலமும்

மகனின் ஆசைக்காக சென்னையில் 3 சென்ட் இடம் வாங்க, ஊரில் அப்பாவின் 8 ஏக்கர் நிலத்தை விற்க நேர்ந்தது.

 - லதா கார்த்திகேயன்


p925.jpg

தனியொருவர்

`எனக்காக யாரும் இல்லை. நீங்கள் மட்டும்தான்' எனச் சொன்ன தலைவர், எங்களைத் தனியே விட்டுவிட்டு ஹெலிகாப்டரில் பயணிக்க ஆயத்தமானார்.

- அபிசேக் மியாவ்


p923.jpg

உலக மகா நடிப்பு!

``ஃபைட் சீனுக்கு டூப் போட்டுடுங்க, சிங்கம் சண்டையை கிராஃபிக்ஸ்ல பண்ணிடுங்க’’ என்ற ஹீரோ, முத்தக் காட்சியில் மட்டும் அவரே நடித்தார்.

- ராம்குமார்


p926.jpg

என் வேலை... என் கடமை!

``வேற வேலையே இல்லை... சண்டேகூட ரெஸ்ட் எடுக்கவிடாம தொந்தரவு பண்றானுங்க!’’ - ஏதோ கம்பெனி விஷயம் பேச வந்த ஜி.எம்-மைப் பற்றி மனைவியிடம் குறை கூறினார் எம்.டி.

- பிரகாஷ் ஷர்மா


p927.jpg

ஆரோக்கிய விஷ(ய)ம்

ஆர்கானிக் காய்கறியில் செய்த பொரியலை ஒரு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் சூடாக்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் அஞ்சலி.

- நந்தகுமார்


p928.jpg

இது... ட்விஸ்ட்!

``புரட்சி பேசி, பதிவுகள் போட்டு, கட்டுரைகள் எழுதி, ஸ்டேட்டஸ்கள் பதிந்து `49ஓ'-வில் ஓட்டு போடுவேன்” என்ற குமரேசனின் பெயர், வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தது.

- எஸ்கா


p929.jpg

பொற்கால ஆட்சி

``எங்கள் ஆட்சியில் ஏழைகளே இல்லை...’’ என்று, 100 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் கொடுத்து அழைத்துவரப்பட்ட மக்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருந்தார் அந்த அரசியல்வாதி.

- ரஹீம் கஸாலி


p9210.jpg

எப்பூடி..?

`நான் முதலமைச்சரானால்...' என்ற தலைப்பில் குழந்தைகளை கட்டுரை எழுதச் சொன்ன ஆசிரியர், ஒரு குழந்தை `ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் கொடுப்பேன்' என எழுதியிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.

- ஜெ.கண்ணன்

vikatan

  • தொடங்கியவர்

இவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாமே!
 

தூரிகை வேண்டாம், அழகான வண்ணங்களும், கிராஃபிட்டி ஸ்ப்ரேயும் கூட தேவையில்லை பெயின்ட்டுகள் உரிந்த சுவர்கள் மட்டும் போதும் இந்த பாலஸ்தீன கலைஞன் படம் வரைவதற்கு. அல் ஹுசைன் அகதிகள் முகாமில் உள்ள பாலஸ்தீன அகதிகளின் நிலை பற்றி இவர் வரைந்துள்ள குட்டி மினிமலிச கதை நிச்சயம் வியக்கவைக்கும்

13087681_1929498353943232_50361665988127

13055417_1929498350609899_53470117823298

13062194_1929498357276565_20041235922463

13083340_1929498380609896_34626770251306

13062183_1929498390609895_27179188648564

13055419_1929498420609892_38650101715143

12108851_1929498423943225_44581898812273

13119023_1929498443943223_58654379826315

 

  • தொடங்கியவர்

article_1454656403-18.jpg

அவுஸ்திரேலியாவின் பிரமுகர்கள், தமது காதல் துணையுடன் ஒன்றிணையும் த கிலிட்டரிங் காலா The glittering gala, நிகழ்வு  அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான வெய்ன்னஸில் இடம்பெற்றது.

இவ்வருடம் இந்நிகழ்வில், 186 பிரமுகர்களும் அவர்களது துணைவியரும் ஒன்று கூடினர்.

article_1454656418-19.jpg

article_1454656427-20.jpg

article_1454656438-21.jpg

article_1454656448-22.jpg

article_1454656456-23.jpg

 article_1454656500-23.jpg

5

article_1454656524-26.jpg

article_1454656535-27.jpg

article_1454656547-28.jpg

article_1454656557-29.jpg

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மனசில கோல் போடறாங்க!

 

p51b.jpg

லகின் கவர்ச்சிகரமான பெண் கால்பந்து வீராங்கனைகள் 100 பேரை ‘ரேங்கர்’ இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கே இடமில்லை என்பதால் டாப் 5 பேர் மட்டும் இங்கே...

p51a.jpg

1. அலெக்ஸ் மார்கன்: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, 26 வயதான அமெரிக்க கால்பந்தாட்ட வீராங்கனை. முன்கள ஆட்டத்தில் பின்னிப் பெடலெடுப்பவர் டயமண்ட் பார் என்ற கலிபோர்னிய மாகாண ஊரில் பிறந்தவர். ஒட்டுமொத்த அனைத்து விளையாட்டுக்களையும் சேர்த்து அழகிகள் லிஸ்ட் எடுத்தால் தரவரிசையில் 2 வது இடமாம்! 30 வயதுக்கு உட்பட்டோருக்கான நடிகைகள் மாடல்கள் பட்டியலில் 132வது இடத்திலும் ‘மேக்ஸிம்’ பத்திரிகையின் உலகின் ஹாட்டஸ்ட் அழகி பட்டியலில் 116 வது இடத்திலும் இடம் பிடித்திருக்கிறார்.

p51c.jpg

2.  லைசா அன்ட்ரி யோலி :  பிரேசில் நாட்டின் பெண்கள் அணியில் இருக்கும் லைசா அதிகம் நியூட் போட்டோக்களில் தெறிக்கவிட்டு பிரேசிலை ஹாட்டாக வைத்துள்ளார். பெரிதாய் கோல்களை அடிக்காவிட்டாலும் போட்டோக்களாலேயே இணையத்தை ஹாட்டாக வைத்திருப்பதால் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

p51e.jpg

3. ஏமி டுக்கான்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திரப் பெண்கள் கால்பந்து அணியின் ஆட்டக்காரர். 36 வயதிலும் பிஸியான மாடலாக அசத்தி வருகிறார். காம்பியரிங், ‘வின்’ நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பு, ஸ்விம்மிங் என பொண்ணு புறப்பட்டு வரும் ஏரியாக்கள் அதிகம். இவ்வளவுக்கும் மூன்று குழந்தைகளுக்குத் தாய் இந்த ஏமி!

4. ஹோப் ஸோலோ:  அமெரிக்கப் பெண்கள் கால்பந்து அணியின் ஸ்டார் கோல் கீப்பர். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மங்கை. 2000-லிருந்து தொடர்ந்து ஆடி வரும் இவர் உலகின் நம்பர் ஒன் பெண் கோல்கீப்பராக தன் ஸ்டைலான ஆட்டத்தால் கொண்டாடப்படுகிறார். கோபக்கார கோங்ரா. கணவரில் ஆரம்பித்து யாராவது தன்னைக் கிண்டல் பண்ணினால் கை நீட்டி விடுவார். நிறைய நெகட்டிவ் விமர்சனங்களால் துவைத்து தோரணம் கட்டப்பட்டாலும் இன்னிய தேதியில் வீடியோ கேம், விளம்பரங்கள் என எக்கச்சக்க ஹிட் ஹாட் லேடி பிரபலம் ஸோலோதான்!

p51d.jpg

5. ஹெதர் மிட்ஸ்: அமெரிக்காவின் 37 வயது தடுப்பாட்டக்காரர். ஃப்ளோரிடாவில் கலக்கி எடுத்தவர் 2000-ல் அமெரிக்கப் பெண்கள் கால்பந்து அணிக்காக விளையாட ஆரம்பித்து 2013 வரை தொடர்ந்து ஸ்டார் ப்ளேயராய்க் கலக்கினார். உலகின் எந்த மூலையில் ஹெதர் விளையாடினாலும் தவறாமல் ஃப்ளைட் ஏறி பார்க்கக்கூடிய கொலை வெறி ரசிகர்களும் இருக்கிறார்களாம்!

vikatan

  • தொடங்கியவர்

காலில் சக்கரம் கட்டி கடலுக்கு மேல் பறந்து சாதனை: காணொளி
=============================================================

ஃபிரான்சின் தெற்கே, கடலுக்கு மேலே பறந்து புதிய சாதனை ஒன்றை ஃபிரான்கி ஸ்பாடா படைத்துள்ளார்.

தான் வீட்டில் உருவாக்கிய ஹூவர்போர்ட் மீது நின்றபடி இவர் கடலுக்கு மேலே இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு பறந்தார்.

  • தொடங்கியவர்
மேற்கத்தேய ஆடைகளில் அமைச்சர்கள்
 
 

article_1462864223-11.gif

பா.திருஞானம்

நுவரெலியாவில் இடம்பெற்ற குதிரைப் பந்தய ஓட்டத்;தை கண்டுகளிப்பதற்காக குதிரை பந்தைய திடலுக்கு வந்திருந்த, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ சமய அலுவலக அமைச்சர் ஜோன் அமரதுங்க, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நுவரெலிய மாநகர மேயர் மஹிந்த தொடம்பே கமகே, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, ஆகியோர் மேற்கத்தேய நாகரீக ஆடைகளை அணிந்திருந்தமையை படங்களில் காணலாம். இதன்போது பல வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.

article_1462864263-10.gif

article_1462864278-9.gif

article_1462864295-8.gif

article_1462864311-7.gif

article_1462864328-6.gif

article_1462864342-5.gif

article_1462864362-4.gif

article_1462864379-3.gif

article_1462864396-2.gif

article_1462864411-1.gif

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

மே - 11

 

722varalr.jpg1502 : கொலம்பஸ் தனது கடை­சியும் கடை­சி­யு­மான கடற் பய­ணத்தை மேற்­கிந்­தியத் தீவு­களை நோக்கி ஆரம்­பித்தார்.

 

1812 : பிரித்தா­னிய பிர­தமர் ஸ்பென்ஸர் பேர்­சிவல், லண்டன் நாடா­ளு­மன்­றத்தில் ஜோன் பெல்­லிங்ஹம் என்­ப­வனால் கொல்­லப்­பட்டார்.

 

1857 : இந்­தியக் கிளர்ச்சி, 1857: இந்­தியப் புரட்­சி­யா­ளர்கள் டில்­லியை பிரித்­தா­னி­யர்­க­ளிடம் இருந்து கைப்­பற்­றினர்.

 

1867 : லக்­ஸம்பேர்க் சுதந்­திரம் பெற்­றது.

 

1891 : ஜப்­பானில் பயணம் மேற்­கொண்­டி­ருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்­கலஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்­பினார்.

 

1905 : அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌ­னியன் இயக்கம் பற்­றிய தனது விளக்­கத்தை வெளி­யிட்டார்.

 

1924 : மெர்­சி­டிஸ்-பென்ஸ் நிறு­வனம் கொட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகி­யோ­ரினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1943 : இரண்டாம் உலகப் போரில் அமெ­ரிக்கப் படைகள் அலூ­சியன் தீவு­களின் அட்டு தீவைக் கைப்­பற்­றினர்.

 

1945 : அமெ­ரிக்க விமா­னம்­தாங்கி கப்­ப­லொன்று ஜப்­பா­னிய கமி­காஸஸ் தற்­கொலைப் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னதால் 346 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1949 : சியாம் நாடு, தாய்­லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்­றது.

 

722varalaru-Kasparov-DeepBlue.jpg1949 : ஐ.நா. அமைப்பில் இஸ்ரேல் இணைந்­தது.

 

1953 : அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத்தில் தாக்­கிய  சூறா­வ­ளியில் 114 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1960 : ஆர்­ஜென்­டீ­னாவில் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த நாஸி முகவ­ரான அடோல் ஈச்­மனை இஸ்­ரே­லிய மொசாட் உள­வா­ளிகள் கைது செய்­தனர்.

 

1985 : இங்­கி­லாந்தில் கால்­பந்­தாட்ட போட்­டி­யொன்றில் அரங்கில் இடம்­பெற்ற தீயினால் 56 பார்­வை­யா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1997 :  ஐ.பி.எ.ம். நிறு­வ­னத்தின் டீப் புளு கணினி, சது­ரங்க (செஸ்) போட்­டியில் உலக சம்­பி­ய­னா­கிய விளங்­கிய ரஷ்ய வீரர் கெரி கஸ்­ப­ரோவை முதன்­மு­தலில் தோற்­க­டித்­தது.

 

1998 : இந்­தியா பொக்ரான் எனும் இடத்தில் மூன்று அணு­குண்டு சோத­னை­களை நடத்­தி­யது.

 

2010 : கன்­சர்­வேட்டிவ், லிபரல் ஜன­நா­யகக் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான கூட்டணி இணக்கப்பாடு ஏற்பட்டதையடுத்து, பிரித்தானிய பிரதமராக டேவிட் கெமரூன் தெரிவானார்.

 

2013 : துருக்கியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 43 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13151643_10154604472619578_5541638675131

  • தொடங்கியவர்

செல்ஃபி மோகத்தால் 126 ஆண்டு கால சிலையை உடைத்த இளைஞர்!

 

Porchukal1b.jpg

செல்ஃபி எடுக்கும் ஆர்வக் கோளாறில் 126 ஆண்டு சிலையை உடைத்த போர்ச்சுக்கல் இளைஞர்,
"செல்ஃபி எடுக்கிறேன்" என ஆபத்து நிறைந்த இடங்களில் போஸ் கொடுத்து உயிரை விட்ட பலரின் செய்திகளை நாம் அறிவோம். ஆனால், போர்ச்சுக்கல் நாட்டில்,  ஒரு இளைஞர் செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில், 126 ஆண்டு பழமை வாய்ந்த 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசனின் சிலையை உடைத்துள்ளார். உடைத்துவிட்டு கமுக்கமாக அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆன அந்த இளைஞரை, காவல் துறையினர் மடக்கிப் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
 

போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள ரோசியோ ரயில் நிலையத்தில் உள்ளது 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த டாம் செபாஸ்டியாவோ எனும் அரசனின் சிலை. இந்த சிலையுடன் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற அந்த இளைஞர், சிலையின் பீடத்தில் நின்று, தனது செல்ஃபோனை உயர்த்தியுள்ளார். அவ்வளவுதான், 126 ஆண்டு பழமை வாய்ந்த சிலை, சில நொடிகளில் உடைந்து கீழே விழுந்தது.
 

1557 முதல் 1578 வரை போர்ச்சுக்கல் நாட்டை ஆண்ட டாம் செபாஸ்டியாவோ, தனது மூன்று வயதில் அரசர் பதவியை வகித்தார். 1578 ம் ஆண்டு நடந்த போரில்,  24 வயதான செபாஸ்டியாவோ இறந்து போனார். அவர் நினைவாக, 1890 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சிலை, உடையும் வரை நல்ல நிலையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

செல்ஃபி ஒழுங்கா வந்துச்சான்னுதான் தெரியல...!

vikatan

  • தொடங்கியவர்

”அட.... இந்தப் பொண்ணுங்களை கவனிச்சீங்களா..?!’ ஒரு டிஸ்னி ஆராய்ச்சி!

article-2077635-0F4212C900000578-870468x

ந்த டிஸ்னி அனிமேஷன் பெண் கேரக்டர்களின் ஸ்டைலே தனி தான். ஆனால் இவர்களின் கேரக்டர் டிசைன் பல இடங்களில் ஒத்துப்போகும். டிஸ்னியின் 21 கதாநாயகிகளைக் கொண்டு, வெண்டைக்காய் சாப்பிட்டு ஆராய்ந்ததில் கிடைத்த டாப் 12 ஒற்றுமைகளைப் பாருங்களேன்...

1. டிஸ்னியின் குட்டி தேவதைகளை இடையூறு செய்து விடக்கூடாது என்பதாலேயே கதாநாயகிகள் கண்டிப்பாக மனித இனமாகவே இருப்பார்கள்.#மனிதிகள்

2. பெரும்பாலும் 20 வயதுக்குக் கீழ் தான் இருப்பார்கள். ஒன்று இரண்டு 20ஐத் தாண்டும். ஆனால் பெரிய மாற்றங்கள் இருக்காது.#சின்னஞ்சிறு தேவதைகள்

3. பெரும்பாலான நாயகிகள் ஐரோப்பாவில் தான் இருப்பார்கள். ஸ்நோ ஒயிட் முதல், எல்ஸா வரை இது தொடர்கதை.. #ஆஹான்

4. படம் முடியும் தருவாயில் கண்டிப்பாக எல்லா நாயகிகளுக்கும் திருமணம் நடந்தோ அல்லது திருமணம் முடிவாகியோ தான் சுபம் போடுவார்கள். #கெட்டிமேளம் கெட்டிமேளம்

disneyweds.jpg

5. துணி தைப்பது, வாள் சண்டை, பாடிக்கொண்டே சமைப்பது , அல்லது வீட்டை சுத்தப் படுத்துவது இந்த வேலைகள் தான் பெரும்பாலும் டிஸ்னி நாயகிகளின் பொதுவான வேலையாக இருக்கும்.#சகலகலா வல்லவிகள்

disneypet.jpg

6. குறும்பு பனி மனிதன், நக்கலான பச்சோந்தி, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் செல்லக் குருவி என கண்டிப்பாக நாயகிக்கு சைட் எஃபெக்ட்டாக ஏதேனும் செல்லப் பிராணிகள் அல்லது பொருட்கள் இருக்கும்.# ஆமாம்பா ஆமாம்

giphy.gif

7. சொல்லி வைத்தாற் போல் நாயகிகளின் பெற்றோர்கள் இறந்தோ அல்லது, காணாமல் போயோ, அல்லது அப்பாவோ , அம்மாவோ நோயாளியாகவோ தான் இருப்பார்கள். இல்லை பட முடிவில் தான் பெற்றோர்களை சென்றடைவார்கள். #லேடி ரஜினிகாந்த்கள்

ParentsTangled.jpg

8. பெரும்பாலும் செல்வச் செழிப்பில் பிறப்பார்கள், அல்லது அரச குடும்பத்துக்கு வாரிசாக இருப்பார்கள். லிலோ, முலன், அலைஸ், மெகாரா, வெண்டி, மற்றும் எஸ்மெரெல்டா என்ற இந்த ஆறு பேர் மட்டுமே கொஞ்சம் ஏழைகள். #பாவத்த

9.முக்கால்வாசி நாயகிகள் , இளவரசிகளாகத்தான் இருப்பார்கள். அரச மரியாதையைக் காப்பாற்றும் பொறுப்புடன் செயல் படுவார்கள். அதில் எல்ஸா மட்டும் அரசியாக முடி சூட்டிக் கொண்ட ஒரே நாயகி. #மத்தவங்களாம் தக்காளி தொக்கா

10. டிஸ்னி நாயகிகளின் கண்கள் இரண்டே கலர் தான் ஒன்று நீலம், அல்லது பச்சை. அதே போல் ஜாஸ்மின் மட்டுமே பேண்ட் போட்ட பரம்பரை. மற்ற அனைத்து நாயகிகளும் பெரிய இளவரசி உடைகள் தான். #ராசியான நிறம் நீலம் மற்றும் பச்சை

3d5f85a7b58b077965530384050ba5fc.jpg

11. சோகமோ , துக்கமோ விம்மி அழ வேண்டுமென்றால் பெட்டில் குப்புற விழுந்தே அழுவார்கள்.. # நம் ஹீரோயின்களும் தான்

disney-princesses-crying-main.jpg

0da8dc10-14b4-0131-9e9d-2a11abc884db.gif

12. அடிக்கும் வெயிலானாலும் சரி, குளிரானாலும் சரி உடலை முழுதாக போர்த்திய கவுன், க்ளவுஸ், குட்டி கட் ஷூக்கள் இந்த நாயகிகளின் ஸ்பெஷல்.. எந்த ஹேர் ஸ்டைலானாலும் ஒற்றை முடி நெற்றியில் ஆடும்... #ஆகா

vikatan

  • தொடங்கியவர்
வாழ்வியல் தரிசனம்
 

article_1462938056-hel.jpgதங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கண்டால், அவர்கள் நெஞ்சத்தில் கலவரங்களை ஏற்படுத்தும் வார்த்தைகளை கக்கிவிடுவது, சிலரின் வக்கிர குணமாக இருப்பதுண்டு.

நல்ல காரியத்தைச் செய்யும்போது கடுமையான குற்றச்சாட்டுக்களைப் புனைவது அல்லது அவர்கள் சார்ந்த நண்பர்கள், உறவினர்களைப் பற்றி வீணான வதந்திகளைச் சந்தோஷத்துடனும் சொல்லித் திருப்திப்படுவார்கள்.

பிறர் மனதில் வலியை ஏற்படுத்துவது இயல்பான குணமாகக் கொண்டவர்கள் அவர்கள், செயலுக்கான எதிர்விளைவினை அனுபவிக்கும்போது, தனக்கு  ஆறுதலூட்ட எவருமே இல்லையா என அழுத நொந்து வாழ்வார்கள்.

இரத்தம் ஓடும்போது அர்த்தமில்லாமல் கண்டபடி வாழ்பவர்கள், இரத்தம் வற்றும்போது சித்தம் கலங்கிப் பேதலிப்பதனால் ஏதுபயன்? 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பிணங்களை தோண்டி...
 
 

article_1447306357-a.jpg

இந்தோனேசியாவிலுள்ள  சுலவேசி கிராமத்தில் பலநூறு வருடங்களுக்கு முன்னர், இறந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை, புதைக்கப்பட்டிருக்கும் உறவுகளின் சடலங்களை தோண்டியொடுத்து அந்த உடலை சுத்தம் செய்து, அவர்களுக்கு பிடித்தமான உடையில் ஆடை அணிவித்து ஒரு விழாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த விழாவை சமீபத்தில் செய்த போது, வெளியான புகைப்பட காட்சிகளை இங்கு காணலாம்.

article_1447306366-b.jpg

article_1447306373-c.jpg

article_1447306380-d.jpg

article_1447306387-e.jpg

article_1447306427-f.jpg

article_1447306435-g.jpg

article_1447306442-h.jpg

article_1447306451-i.jpgarticle_1447306458-j.jpgarticle_1447306465-k.jpg

tamilmirror.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.