Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஐரோப்பிய திரைப்பட விழா – 2015” மட்டக்களப்பில் நடைபெற உள்ளது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“ஐரோப்பிய திரைப்பட விழா – 2015” மட்டக்களப்பில் நடைபெற உள்ளது: சு.சந்திரகுமார்-

23 அக்டோபர் 2015

“ஐரோப்பிய திரைப்பட விழா – 2015”  மட்டக்களப்பில் நடைபெற உள்ளது: சு.சந்திரகுமார்-

 The Black Brothers: (2013)
எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற சுவிட்சாலாந்து நாட்டு திரைப்படம். 19ம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஒரு பின்தங்கிய மலைக்கிராமத்தில் 14 வயதான ஜியோர்ஜியோ கஸ்டமான ஆனால் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அவனது தாய் கடுமையான ஒரு விபத்தை எதிர்கொள்ளும் வரை வாழ்ந்து வருகிறான். அவனது தாயின் மருத்துவச் செலவுக்குரிய கட்டணத்தை செலுத்துவதற்கு அவனது தந்தைக்கு இருந்த ஒரே வழி அவனை தழும்புள்ள ஒரு மனிதனுக்கு 40 பிராங்குகளுக்கு விற்பதாகும். தழும்புள்ள மனிதன் மீண்டும் ஜியோர்ஜியோவை மிலான் நகரைச் சேர்ந்த செல்வந்த புகைபோக்கி துப்பரவு செய்யும் ஒரு ஒப்பந்தகாரனுக்கு விற்கிறான். மிலானில் ஜியோர்ஜியோவும் அல்பிரடோவும் நண்பர்களாகிறார்கள். நண்பர்கள் ஒடுக்கமான புகைபோக்கிகளை துப்பரவு செய்யும் பணிக்கு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனாலும் நண்பர்களுக்கு பெரு நகரமும், தேவாலயத்திற்கு கீழ் இருந்த அறையும், தனது எஜமானனின் கடுமையான நோய்வாய்ப்பட்ட அழகான மகள் அன்ஜலட்டாவும் கிளர்ச்சியூட்டக்கூடிய அனுபவமாக இருந்தன. அதிஸ்டவசமாக பற்றிஸ்ராவின் மனைவியும் மகனும் ஜியோர்ஜியோவை துன்புறுத்தியும் கூட அவனிடம் தனது எஜமானன் பற்றிஸ்றா நன்றாக நடந்து கொண்டான். நரிகள் என்ற தெருச் சண்டியர் குழுவின் தாக்குதலிருந்து தப்புமுகமாக, அல்பிரடோ,  பிளக் பிரதர்ஸ் என்ற சண்டைக் குழுவை அடையாளம் கண்டு அதிலே ஜியோர்ஜியோவையும் அங்கத்தவனாக்கிறான். அவன் புதிய நண்பர்களின் உதவிகண்டு அகமகிழ்கிறான். ஜியோர்ஜியோ நரிகளை தங்களுடன் ஒன்று சேர்க்க கெட்டிக்காரத்தனமான திட்டம் போடுகிறான். இதனிடையே நுரையீரல் நஞ்சாதல் நோய் காரணமாக அல்பிரடோ இறந்து விடுகின்றான். ஆச்சரியமூட்டும் வகையில் நரிகளும், பிளக் பிரதர்ஸ்களும் ஒரு குழுவாய் இணைந்து தழும்புள்ள மனிதனை அடைத்து வைத்து அவன் பையன்களை விற்பதற்காக அவனிடம் பணம் அறவிடுகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் புதிய, துணிச்சலான, அபாயகரமான ஒரு அத்தியாயத்தை தொடங்கிவைக்கின்றது.
 
The Chair of happiness: (2013)
இது பல விருதுகளை வென்ற இத்தாலிய திரைப்படம். ஒரு கதிரைக்குள் மறைந்திருக்கும் புதையலை ஒரு அழகியற்கலை நிபுணரும், பச்சை குத்தும் கலைஞரும் சேர்ந்து தேடும் போது காதலில் விழுகிறார்கள். மர்மமான மதபோதகர் ஒருவர் ஆரம்பத்தில் அவர்களுக்கு எதிராக வந்து பின்னர் நண்பர் ஆகுகிறார். இந்த மூவருமே இந்த அதிசய வீரதிரமி;க்க  திரைப்படத்தின் மையப் பாத்திரங்களாகுகிறார்கள். புரிந்துணர்வின்மைகளுக்கும், திருப்பங்களுக்கும் இடையே அவர்கள் மலைகளிலிருந்து பள்ளத்தாக்குகளிற்கும், வெனிசின் நீரேரிகளிலிருந்து பனி மூடிய டொலமைற் சிகரங்களிற்கும் துரத்தப்படுகிறார்கள். அங்கே அவர்கள் ஒரு கரடியும் இரண்டு சகோதரர்களும் அந்த பள்ளத்தாக்கில் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.
 
The Theory of Everything: (2013)
இது ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த படம். ஒஸ்கார், அகடமி, கோல்டன் குளோப் போன்ற பத்துக்கு மேற்பட்ட விருதுகளை வென்ற படம். இது இந்த உலகின் மிகப் பெரிய வாழும் மனது, புகழ்பெற்ற வானியல் பௌதீக விஞ்ஞானியான ஸ்ரீபன் ஹாவ்கிங்கின் அசாதாரண வாழ்வின் கதை.  ஹாவ்கிங் தன்னுடன் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கவிதை இலக்கியம் சம்பந்தமான கல்வி கற்கும் ஜேன் வைல்ட் இடம் தீவிராமான காதலில் விழுகிறார். ஹாவ்கிங் 21 வயது சுகதேகியாக, துடிப்பான இளைஞராக இருக்கும்போது தனக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியளிக்கக்கூடிய நோயைப் பற்றி அறிந்து கொள்கிறார். ஜேனின் துணையுடன் நோயுடன் போராடிக் கொண்டு தனது வாழ்வின் முக்கிய குறிக்கோளான, சார்பியல் தத்துவம், கருந்துளைகள் போன்றவற்றில் விஞ்ஞான ஆய்வைத் தொடருகிறார். இது அவரை புகழடையச் செய்கிறது. அவர்கள் காதலித்து திருமணமும் செய்துகொள்ளுகிறார்கள். ஹாவ்கின்ஸின் உடல் நிலைமை மிக மிக மோசமாகி அவரை சக்கர நாற்காலிக்கு இட்டுச் சென்றும்  கூட அவர்களின் உறவு பொறுமையுடன் தொடருகிறது.
 We are young, we are strong: (2014)
இது பல விருதுகளை அள்ளிய ஜேர்மனியத் திரைப்படம். மூன்று வித்தியாசமான குணவியல்புள்ளவர்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவம் ஒன்றின் வித்தியாசமான நோக்கு பற்றிய திரைப்படம். ஜேர்மனியில் வாழம் வியட்னாமிய பெண் லீன், அந்த நாளின் முடிவில், வீடு எனச் சொல்லுகின்ற இடம் தனக்கு சொந்தமாவதற்காக வாழ்க்கையுடன் போராடிக் கொணடிருப்பாள். ஸ்ரிபானும் அவனது நண்பனும் இரவு வன்முறை ஆர்ப்பாட்ட குழுவைச் சேர்ந்தவர்கள். இந்த இளைஞர்கள் பகலில் கோபமாகவும், சோபை இழந்தவர்களாக, அந்நியநாட்டவர்களுக்கும், பொலிசாருக்கும் எதிராக கலகங்களையும், மோதல்களையும் நடாத்துவதற்கு இரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள். தனது நண்பனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத ஸ்ரிபான் வன்முறையிலிருந்து வெளியேறுகிறான். ஸ்ரிபானின் தந்தை மார்ட்டின் ஒரு உள்ளுர் இலட்சியவாத அரசியல்வாதி. அவர்  தனது நிலையை உறுதிப்படுத்தி அரசியலில் தனது இருப்பை முன்னேற்றுவதா? அல்லது தனது கொள்கையை விட்டுக் கொடுக்காதும், தனது மகன் போன்றவர்களின் போராட்டங்களிற்கும் பொறுப்பேற்பதா? என்ற சிக்கலில் மாட்டுப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
 
Morgen: (2010)
பல விருதுகளை வென்ற றோமானியத் திரைப்படம். றோமானிய ஹங்கேரிய எல்லையிலுள்ள சலொன்ரா என்ற சிறிய நகரத்திலுள்ள ஒரு சுப்பர் மார்கட்டில் காவலாளியாக வேலைபார்க்கும் தனது நாற்பதுகளிலுள்ள ஒரு மனிதன் நெலு. இந்த இடத்திலேயே நிறைய சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் எப்படியாவது ஹங்கேரிக்குள் நுழைந்து மேற்கு ஐரோப்பாவிற்கு நுழைவார்கள். நெலுவிற்கும் நாட்களும் வழமை போலவே நகர்கின்றன. அதிகாலை மீன் பிடிப்பது, பின் வேலைக்கு செல்வது பின் கடைசியாக வீட்டுக்கு செல்வது. அங்கே அவது மனைவி புளோரிகா இருக்கிறாள். அவர்கள் சலொன்ராவின் வயல்வெளிகளுக்கு அப்பால் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் தனிமையாக பண்ணை வீடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்கள். இந் நாட்களில் அவர்களது பிரச்சினை பண்ணை வீட்டின் கூரையை செப்பனிடுவது ஆகும். ஒரு நாள் காலை, நெலு மீன் பிடிக்கச் சென்றபோது ஆற்றிலிருந்து வித்தியாசமாக ஏதோவொன்று வெளிப்படுவதைக் காண்கிறான். அது எல்லையைக் கடக்க முயற்சி பண்ணுகிற கதுருக்கிய மனிதன்;. வார்த்தைகளால் தொடர்பாட முடியவில்லையாயினும்  இருவரும் ஏதோவொரு வகையில் ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறார்கள். நெலு அந்த புதிய மனிதனை தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவனுக்கு உலர்ந்த உடைகளும், சாப்பாடும், தங்குவதற்கு இடமும் கொடுக்கிறான். அந்த புதிய மனிதனுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்று அவனுக்கு உண்மையாக தெரியவில்லை. தனக்கு எல்லையைக் கடப்பதற்கு உதவி செய்யு முகமாக, அந்த துருக்கிய மனிதன் தன்னிடமிருந்த எல்லா பணத்தையும் நெலுவிடம் கொடுத்து விடுகிறான். இறுதியாக, நெலு பணத்தைப் பெற்றுக் கொண்டு நாளை அவனை எல்லையைக் கடக்க உதவி செய்வதாக வாக்களிக்கிறான், அவனுக்குத் தெரிந்த ஒரே ஜேர்மனிய வார்த்தை – மோர்கன் (நாளை).
 

Grand Central: (2013)
பல விருதுகளை வென்ற பிரான்சிய திரைப்படம். கேரி என்ற தொழிற் பயிற்சியற்ற இளைஞன் றோனேயின் கீழ்  பள்ளத்தாக்கிலுள்ள அணுஉலை ஆலையின் அணுக்கழிவுகளை அகற்றுவதற்கான உப ஒப்பந்தகார தொழிலைப் பெறுகிறான். கண்காணிப்பாளர் கில்ஸ், மற்றும் ரொனி போன்றவர்களால் தொழிலாளர் படைக்குள் உள்வாங்கப்படுகிறான். கேரி அணுக் கதிர்வீச்சு கசிவு என்பது ஒரு அபாயத்தை ஏற்படுத்தும் காரணி என்பதை விடவும் அது ஒவ்வொருநாளும் அனர்த்த ஆபத்தை ஏற்படுத்தவல்லது என்பதை கண்டுபிடிக்கிறான். அதே நேரம் ரொனிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்;ணான கரோலுடன் தகாத உறவையும் தொடருகிறான்.

 

 “ஐரோப்பிய திரைப்பட விழா – 2015”  மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது


சமுதாயத்தின் வாழ்தலுக்கான விழிப்பை ஊட்டும் காத்திரமான திரைப்படங்கள் வெளிவருவதும் அவற்றைப் பார்வையிட்டு கலந்துரையாடுவதும் அது சார்ந்து சமூக மற்றும் கலைத்துவச் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்.


இந்த வகையில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் சமகால சமுதாயத்தின் தேவைக்கும் அதற்கான சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டும்  திரைப் படங்களை காட்சிப்படுத்துவதும் கலந்துரையாடுவதும், வர்த்தகச் சினிமாவால் சமுதாயத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றி கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் வழமை.


இதன் தொடர்ச்சியாக 2014 இல் இலங்கை அமெரிக்க தூதரகத்தினூடாக 24 அரிதானதும் அதிமுக்கியமானது உடைய திரைப் படங்கள், ஆவணப்படங்கள், கதைப்படங்கள் என்பன  கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பில் ஒரு வருட காலமாக நடைபெற்றது. இதில் திரைப்பட நெறியாளர்கள், விற்பன்னர்கள் எனப் பலர் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து கலந்துகொண்டிருந்தனர். சினிமா மற்றும் மாற்றுச் சினிமாவின் தேவை அதன் பெறுமதி அது மக்களை விழிப்படைய வைக்கும் முறை என்பன தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 


இதன் அடுத்த கட்டமாக, 2015க்கான “ஐரோப்பிய திரைப்பட விழா” கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஒழுங்கமைப்பில் கிழக்குப்பல்கலைக்கழக, விபுலாந்த அழகியற் கற்கைகள் நிறுவக பிரதான மண்டபத்தில் ஐப்பசி 24, 25 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று திரைப் படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.


24ம் திகதி சனிக்கிழமை வுhந டீடயஉம டீசழவாநசளஇ ஊhயசை ழக ர்யிpநளெஇ வுhந வுhநழசல ழக நுஎநசல வுhiபெ ஆகிய மூன்று படங்களும் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை றுந யசந லழரபெஇ றுந யசந ளவசழபெ ஆழசபநnஇ புசயனெ உநவெசயட ஆகிய மூன்று படங்களும் திரையிடப்படவுள்ளன. இது காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடையும். இதற்கான அதுமதி இலவசம்.


திரைப்படங்களைப் பார்வையிடுதல், கலந்துரையாடுதல், சமகால சமூக விடயங்களுடன் தொர்புபடுத்தல் என்பன தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்தலுக்கான திரைப்பட விழாவாக இது அமைகின்றது. இத்திரைப்பட விழா ஒழுங்கமைப்பும் கலந்துரையாடலுக்கான இணைப்பாக்கமும் நுண்கலைத்துறையின் முதுநிலை விவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களால் முன்னெடுக்கின்றது. நல்ல படங்களைப் பார்த்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர்.
சு.சந்திரகுமார், விரிவுரையாளர், நுண்கலைத்துறை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125209/language/ta-IN/article.aspx

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.