Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பத்து நிமிடம்

Featured Replies

எங்கும் கடன்,எதிலும் கடன்,எங்கும் ஊழல்,எதிலும் ஊழல். இதுவே அரசின் தாரக மந்திரம் போல இந்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது.
ஆயிரம் கோடி ஒதுக்கீடு,பத்து கோடி ஒதுக்கீடு என வரி பணம் ஒதுக்கி செலவு செய்வதில் உள்ள அரசின் ஆர்வத்திற்கு ஒரு எல்லையே கிடையாது.நாட்டில் பணக்காரர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதில் உள்ள ஆர்வத்திற்கு தான் ஒரு எல்லை உண்டா...!

 

காலம் காலமாக பணக்கார வர்க்கம் மட்டும் முன்னேற அனைத்தையும் செய்துவரும் அரசு தேவையா என என்ன தோன்றுகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எழுத்தாளர் படுகொலை,நிருபர் படுகொலை, செய்திதாளுக்கு தடை,இணையதள சேவை என கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எல்லாமே கோலாகலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது.


முதலாளிகள் ஆதரவு,செய்தி தாள் ஆதரவு,மத சாதி இன ஆதரவு, வன்முறையாளர்கள் ஆதரவு ஆகியவை மட்டும் ஒருவருக்கு இந்தியாவில் இருந்தால் அதுவே ஆட்சியமைப்பதற்கும்,எந்த விதமான வன்முறை,குற்றம் செய்வதற்கும்,நீதிமன்றத்தை தன்கைக்குள் வைத்திருப்பதற்கும் போதுமானதாக உள்ளது.இங்குள்ள அரசும் இதைத்தான் செய்துவருகிறது.
ஆளுங்கட்சி,எதிர்கட்சியெல்லாம் இந்த ஆதரவு திரட்டலுக்காகவே ஒருவரை ஒருவர் எதிர்த்து கொள்கிறது.

 

நாட்டில் ராணுவம் ஆகட்டும், நாட்டில் ஆசிரியர் ஆகட்டும் எதோ ஒரு கட்சியை சார்ந்தே இருக்கவேண்டியதாக உள்ளது. மக்களை ஆளுதல் அரசியல் என்று போய் மக்களை கட்டுப்படுத்தி அடிமை படுத்துவதே அரசியல் என்றாகிவிட்டது.


பணக்காரன் கொலை செய்தால் தற்கொலை என்பதும் ,அதே ஒரு ஏழை கொலைசெய்தால் அவனுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதும் இங்கே எழுதப்படாத அரசியல் நீதி ஆகிப்போனது.இந்தியாவை போன்றதொரு பாரம்பரியம்மிக்க நாட்டில் மதத்தால் பிரித்து மோதவிடுவதும்,அரசு அலுவலகங்களில் லஞ்சமும்,அரசு அலுவலர்களின் பொறுப்பற்ற தன்மையும்,பாலியல் வல்லுறவு,பெண்களுக்கு எதிரான வன்முறையும்,நீதிக்கு எதிரான வன்முறையும்,காவல்துறை அதிகாரியை கொலைசெய்வதும் நடக்கத்தான் செய்கிறது.


இங்கு இந்த பிரச்சினைகளை சரிசெய்ய எவ்வளவோ முயற்சியெடுத்தாலும்,அது சட்டப்படி குற்றம் எனக்கூறி கைது செய்வதும் நாட்டின் வழக்கமாக இருப்பது வருந்த செய்கிறது.
எவ்வளவோ பாடுபட்டு சுதந்திரத்தை வென்றுஎடுத்துவிட்டோம்.அங்கும் துரோகம் தான். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சுதந்திர போராட்டம் மறைக்கப்பட்டு காந்தியை பிரபலபடுத்தி காங்கிரஸ் கட்சி தன்னை பிரபலபடுத்திக்கொண்டது. பிச்சை கேட்டு சுதந்திரம் பெறுவதற்கு சாகலாம் என கூறி ஆங்கிலேயர் மீது படையெடுக்க ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்து படை திரட்டியது அன்றோ வீரம்.
நேதாஜி காங்கிரஸ்க்கு ஆதரவாக இல்லை என தெரிந்துகொண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி அவர் உயிரோடு இருக்கும் போதே அவர் விமான விபத்தில் இறந்ததாக சொல்லி பின் ஆங்கிலேயருக்கு நேதாஜியின் இடத்தை காட்டி கொடுத்தவர்களுக்கு தானே நாம் பல வருடமாக ஆட்சியமைக்க வாய்ப்பளித்தோம்.


மாற்றம் மாற்றம் என கத்திவிட்டு எவராவது முயற்சியெடுத்தால் உடனே தீவிரவாதி என முத்திரை குத்துவதும் இங்கே தான்.நம்மை விட மிக சிறிய நாடுகளே மிக குறைந்த மக்கள்தொகையை கொண்டு வளர்ந்த நாடுகளாக இருப்பது நாம் கண்ணால் கண்டு அவமானப்படவேண்டிய விஷயம் ஆகும்.


நாம் நல்லாயிருந்தா போதும் ,மற்றபடி காஷ்மீர் எல்லையில் யார் செத்தால் எனக்கென்ன,இந்தியா மீது எவன் போர் தொடுத்தா எனக்கென்ன, பத்திரிகையாளர் செத்தால் எனக்கென்ன என்று தானே இருந்தோம். என்றாவது ஏன் அப்படி? நான் அதை தட்டிக்கேட்பேன் என்று இருந்ததுண்டா...?


வேலையில்லை வேலையில்ல என சொல்லி கொண்டிருக்கிறோமே தவிர நாம் அந்த வேலைக்கு தகுதியானவனா என எண்ணியதுண்டா..?
தேர்தலில் எப்பொழுதுதாவது நாம் பணம் ,மது,பிரியாணி வாங்காமல் நேர்மையாக வாக்களித்ததுண்டா...?
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததுண்டா...?


அது சரியில்லை,இது சரியில்லை என புலம்புவதே இந்தியனாக நம்மை அடையாளப்படுத்துவதாக இருந்துவிட்டது சர்வதேச அரங்கில். என்றாவது அதை சரிசெய்ய ஏதாவது செய்தோமா...? என்றால் இல்லை.
நாம் ஒரு நாள் மதுவிலக்குக்காக பொங்கியெழுந்தால்,அடுத்த நாளே அதை திசைதிருப்ப பெண்களுக்கு எதிரான கருத்து என்று நம்மை பொங்கச்செய்வதே அரசியலாக உள்ளது.


எதையும் மறந்துவிடும் நம் இயல்பு,இங்கு அரசியல்வாதிகளால் மிக அழகாக நம்மை ஏமாற்ற கையாளப்பட்டுவருகிறது.
மத,சாதி,இனவாதிகளுக்கு எதிராக நாம் ஒருபோதும் இருப்பதில்லை.மேலும் இங்கு கல்வி தனியார்உடமை ஆக்கப்பட்டதில் இருந்து யார் வேண்டுமானாலும்,கல்வியை விற்கலாம்,தகுதியே இல்லாதவருக்கு நாம் போலியாக பட்டம் கொடுக்கலாம் என ஒரு பக்கம் வருங்கால இந்திய சமூதாயம் தகுதியில்லாமல் இருக்க முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


ஒரு இந்தியன்,சிங்கபூரில் சாலையில் குப்பையை போடுவதில்லை ,அவர்கள் விதிமுறைக்கு கட்டுப்படுகிறோம்.ஆனால் இந்திய மண்ணை மிதித்த உடன் நாம் குப்பையை தரையில் கொட்டுகிறோம்.சிறு வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றுகிறோம்.
ஏன் அந்நிய நாட்டை மதிக்கும் நாம், நாம் பிறந்த நாட்டை நமக்கு இருக்க இடமளித்து,எல்லையில்லா சுதந்திரம் அளித்த நம் தாய் நாட்டை ஏன் மதிப்பதில்லை...!


நாம் நம் மீது நம்பிக்கை வைக்காததும், எதற்காகவும் பிற நாட்டுடன் ஒப்பீடுவதும் காரணமாக உள்ளது. நம் சாதனைகளை நாம் சரியாக பாராட்டாததால் ஏற்பட்ட குற்றம் இது.
ஏன் குறைந்த மக்கள் தொகை உடைய இஸ்ரேலால் ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்ய முடியும் போது ஏன் நம்மால் முடியாதா...!
பாக்கிஸ்தானால் நம்மை தாக்க முடியும் போது நம்மால் முடியாதா ...!


அமெரிக்கர் ஒருவர் மரணமடைந்தால் அமெரிக்கா தேசம் அடையும் ஆத்திரம் ஏன் நம்மில் ஏற்படுவதில் இல்லை...!
அந்த ஒற்றுமை ஏன் நம்மில் இல்லை...!
இன்றும் நாம் அதே பஞ்சசீல கொள்கையை பின்பற்றி எல்லோரிடமும் அடிபடும் நாடாகத்தான் இருக்கிறோம்...!


ராணுவ வலிமை,பொருளாதார வலிமை தேடி பயணப்படும் நாம் என்றாவது ஒரு இந்தியனின் மனவலிமையை வளர்க்க ஏதாவது செய்தது உண்டா...!திறமைகள் அதிகமாக இருந்தால் புறக்கணிக்கப்படுவதும்,திறமை இல்லாதவனை தேர்ந்தெடுப்பதும் இங்கு தான் சாத்தியம்....!


பொருளாதாரம்,கட்சியின் நிலையை பொறுத்தே தீர்மானிக்கபடுவதும் இங்கே தான்...!அரசை தனியார் நிறுவன முதலாளிகள் மிரட்டுவதும் இங்கே தான்...!
பெண்களை வன்முறைக்கு உட்படுத்துவதும் இங்கே தான்...!
சாதி மாறி திருமணம் செய்தால் கலவரம் நடத்துவதும் இங்கே தான்...!
சுயமாக சிந்தித்து எதையும் செய்வதற்கு மாணவர்களுக்கு உரிமையில்லை. தொழில்நுட்ப சுதந்திரம் எளியோரிடம் இல்லை.அதுவும் இங்கே தான்...!
அந்நிய முதலீடுகளுக்காக உள்ளூர் தொழில்களை மறந்த அவலமும் இங்கே தான்...!


விளையாட்டிலும் ஆதிக்க ஜாதியினர் மட்டுமே.எத்தனை பேருக்கு தெரியும்..தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பிராமணர்கள்..இங்கு திறமைகளுக்கு மதிப்பில்லை...அதுவும் இங்கே தான்..!
ஒரு பச்சை பென் கையெழுத்துக்கு ரூ.100 என சொல்லி லஞ்ச ஆட்சி நடத்தி வருவதும் இங்கே தான்...!
முன்னேறியவர்கள் மட்டுமே முன்னேறவேண்டும்.மற்றவர்கள் எல்லாம் அப்படியே வாழ வேண்டும்.. அந்த அவலக்காட்சியும் இங்கே தான்..!
குண்டர் சட்டம் என்றொரு சட்டப்பிரிவு உண்டு.அது தொடர்ந்து குற்றம் செய்பவர்களை தண்டிக்க ஆனால் இங்கு அரசுக்கு எதிராக ,மக்களின் நலனுக்காக போராடுபவர்களின் மீது போட்டு பழி வாங்கும் அவலமும் இங்கே தான்....!


எதிலும் தரமில்லை. எப்போதும் தரமில்லை.எங்கேயும் தரமில்லை. என்பது தான் இந்திய தொழில்துறையின் தாரகமந்திரம்.தரமான பொருட்களுக்கு பதிலாக தரமில்லா பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செலவை குறைத்து கொள்ளையடிப்பதும் இங்கே தான்...!
இந்தியாவில் பல இனம்,பல மொழிகள் இருந்தாலும் இங்கே இந்தியை மட்டும் திணிக்க நினைத்து மற்ற மொழிகளை கொலை செய்யும் அவலமும் இங்கே தான்...!


நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருந்தாலும் இங்கே அவர்களுக்கு யோகாவை திணிப்பதும்,ராமர் கோவில் கட்டுவதும் தான் முக்கிய பிரச்சினை...!
இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் நான் மட்டும் யோக்கியனா என கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் கூறுவேன்.


ஏதோ என்னால் முடிந்த அளவு நாட்டுக்காக பொதுவுடமை கட்சியில் இணைந்து பங்களிப்பும்,அனைத்து சமூக சேவை நிறுவனங்களுக்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளித்து வருகிறேன்...! ஊரில் என்னை நக்சல் தீவிரவாதி என அழைக்கும்படி பணியாற்றி வருகிறேன்..
ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு அரசுக்கு எதிராக கேள்வியாவது கேளுங்கள்..உங்களுக்கு தகவல் அறியும் உரிமை தரப்பட்டுள்ளது..! பயன்படுத்துங்கள்...!


ஏதாவது மக்கள் நலப்போராட்டத்தில் பங்கு பெறுங்கள்...!உங்களால் முடிந்த அளவு ஏதாவது நாட்டுக்காக செய்யுங்கள்...? அதன் பின்பு தான் நாடு உங்களுக்கு நல்லது செய்யும்...!
இந்த பதிவின் நோக்கம் ஒர ஐந்து நிமிடமாவது இந்தியாவுக்காக உங்கள் சிந்தனையை செலவிடுங்கள்...!
கேள்வி கேளுங்கள்...!
சிந்தித்து ஆதரவு வழங்குங்கள்...!
மாற்றத்தை காதலியுங்கள் ...!
ஜெய் ஹிந்த்..!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருக்கும் மக்கள் எல்லோரும் இந்தியர்களாக இருக்கும் வரை இந்த அவல  நிலை தொடர வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.