Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலுலக தாதா 'சோட்டா ராஜன்' பாலியில் கைது

Featured Replies

நிழலுலக தாதா 'சோட்டா ராஜன்' பாலியில் கைது

 
சோட்டா ராஜன். | கோப்புப் படம்.
சோட்டா ராஜன். | கோப்புப் படம்.

இந்தியாவில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலியில் கைது செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலிய போலீஸ் அளித்த துப்புத் தகவலின் அடிப்படையில், இந்தோனேசிய அதிகாரிகள் சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சதாசிவ் நிகல்ஜியைக் கைது செய்தனர். இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளியான சோட்டா ராஜன் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை குண்டுவெடிப்பு, மற்றும் பல கடத்தல் கொலை வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார்.

இதனையடுத்து, இந்தியா கோரிக்கை வைத்தால் சோட்டா ராஜன் இந்தியா வசம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.

சோட்டா ராஜன் மும்பையில் பிறந்து வளர்ந்தவர், இப்போது இவருக்கு வயது 55.

http://tamil.thehindu.com/india/நிழலுலக-தாதா-சோட்டா-ராஜன்-பாலியில்-கைது/article7805902.ece

  • தொடங்கியவர்

10 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு மும்பை தாதா சோட்டா ராஜன் கைது!

 

பிரபல மும்பை தாதா சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுமார் 20 ஆண்டு காலம் மும்பை காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து வந்த சோட்டா ராஜன் விரைவில் இந்தியா கொண்டு வரப்பட உள்ளார்.

cr.jpg

இது குறித்து ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் பாலி நகர போலீஸ்துறை செய்தி தொடர்பாளர், ஹெரி வியான்டோ கூறுகையில், 'ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து பாலி தீவில் உள்ள உல்லாச விடுதி ஒன்றுக்கு சோட்டாராஜன் வருவதாக தகவல்  கிடைத்தது.

கான்பெராவில் இருந்து ஆஸ்திரேலிய போலீசார் எங்களுக்கு இந்த தகவலை அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் பாலி விமான நிலையத்தில் நேற்று அவரை கைது செய்தோம்.கைது செய்யப்பட்ட இந்த நபர் இந்தியாவில் 15 முதல் 20 கொலை சம்பவங்களில் தொடர்புடையவர் என சந்தேகிக்கிறோம். இண்டர் போல் அமைப்பின் உதவியுடன் விரைவில் இந்தியா அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம். ' என்றார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன், சோட்டாராஜன் ஆஸ்திரேலியாவில் வேறு நபரின் பாஸ்போர்ட்டில் தங்கியிருப்பதாக இந்திய அதிகாரிகள் ஆஸ்திரேலிய போலீசுக்கு தகவல் அளித்திருந்தனர். ஆனால் மேற்கொண்டு எந்த தகவலும் இந்திய தரப்பில் இருந்து ஆஸ்திரேலிய போலீசுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் ஆஸ்திரேலிய போலீசால் சோட்டாராஜனை கைது செய்ய முடியவில்லை.

இதற்கிடையே சோட்டாராஜன் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேஷியாவிற்கு கிளம்பியதை ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் மோப்பம் பிடித்தது. உடனடியாக இது குறித்து இந்தோனேஷிய போலீசுக்கும் தகவல் அளித்தது.

ராஜேந்திர சதாசிவ் நிக்கலே என்பது சோட்டா ராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர். மும்பையில் 'படா ராஜன்' என்பவரின் கும்பலில் இருந்தார். அதனால் சோட்டாராஜன் என்று அழைக்கப்பட்டார். கொலை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், குண்டுவெடிப்பு  என இவர் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
 

தாவூத் இப்ராஹிமுடன் சோட்டா ராஜனுக்கும் நெருங்கிய உறவு இருந்தது. 1996-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின், தாவூத்திடம் இருந்து பிரிந்த சோட்டா ராஜன் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தான். தற்போது சோட்டா ராஜனுக்கு 55 வயதாகிறது.ஆனால் சோட்டாராஜன் கைது செய்யப்பட்டது குறித்து இந்திய அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை.

http://www.vikatan.com/news/article.php?aid=54232

  • தொடங்கியவர்

ஆபரேஷன் தாவூதுக்கு முன்னோட்டமா சோட்டா ராஜன் கைது?

சோட்டார் ராஜன் | கோப்புப் படம் ( உள்படம்: தாவூத் இப்ராஹீம்)
சோட்டார் ராஜன் | கோப்புப் படம் ( உள்படம்: தாவூத் இப்ராஹீம்)

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா சோட்டா ராஜன் (55) இந்தோனேசியாவில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை, தாவூத் இபராஹிமை வீழ்த்துவதற்கான புது வியூகமாக பார்க்கப்படுகிறது.

மத்தியில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே தாவூத் இப்ரஹிமை எப்படியாவது சிறைபிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தச் சூழலில் தாவூதின் முன்னாள் கூட்டாளியும், தற்போதைய விரோதியுமான சோட்டா ராஜன் பாலியில் சரணடைந்திருப்பது இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கெனவே கூறிவருவதுபோல் தாவூத் வேட்டையின் உச்சகட்டம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துவதுபோலவே அமைந்திருக்கிறது.

சோட்டா ராஜனின் பங்களிப்பு:

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு தாவூத் இப்ராஹிம் குறித்த பல்வேறு முக்கியத் தகவல்களை மும்பை போலீஸுக்கும், உளவு அமைப்புகளுக்கும் அளிப்பதில் சோட்டா ராஜன் முக்கிய பங்கு வகித்துவந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவம் சோட்டா ராஜனுக்கும் இந்திய உளவு அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்புகளை வெளிப்படையாக உணர்த்துவதாக அமைந்தது. சோட்டா ராஜனின் கூட்டாளியான விக்கி மல்ஹோத்ரா, அஜித் தோவலுடன் (இப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) காரில் சென்று கொண்டிருந்தபோது இடைமறிக்கப்பட்ட சம்பவம்தான் அது. இது தொடர்பாக அண்மையில் கசிந்த அமெரிக்க உளவுத் தகவலில், "விக்கி மல்ஹோத்ரா, உளவு நிறுவனங்கள் கணிப்புப்படி துபாயில் நடைபெறவிருந்த தாவூத் இப்ராஹிமின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லவிருந்தால், அவர் மூலம் தாவூத் இப்ராஹிமை சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதே இந்திய உளவு அமைப்புகளின் திட்டம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய உளவு அமைப்பையும், மல்ஹோத்ராவையும் இடையே ஒரு பாலம் போல் தோவல் இவ்விவகாரத்தில் செயல்பட்டார் என்பதே கசியவிடப்பட்ட அந்த தகவல் தெரிவிக்கிறது.

கவனிக்கப்பட வேண்டிய இரு விஷயங்கள்:

சோட்டா ராஜன் கைது / சரணில் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. சோட்டா ராஜன் எங்கிருக்கிறார் என்பது இந்திய உளவு நிறுவனங்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தன. இருப்பினும் திடீரென சிபிஐ திடீரென இன்டர்போல் அமைப்பை உஷார்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

சிபிஐ-யின் இந்த நடவடிக்கையில் இருந்து இரண்டு விளக்கங்களை மட்டுமே பெற முடியும்.

ஒன்று சோட்டா ராஜனால் இனிமேல் உளவு அமைப்புகளுக்கு எந்த பயனும் இல்லை. மற்றொன்று, சோட்டா ராஜனை கைது செய்து அவரை நாடுகடத்தி இந்திய சிறையில் பத்திரமாக அடைக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல், ஆஸ்திரேலியாவில் வைத்து சோட்ட ராஜனை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே ராஜன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சோட்டா ராஜன் இந்திய சிறையில் பாதுகாப்பாக இருக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், அதன் பின்னணியில் மிகப் பெரிய பேரம் நடந்திருக்க வேண்டும். அந்த பேரம் தாவூத் இப்ராஹிமைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

http://tamil.thehindu.com/india/ஆபரேஷன்-தாவூதுக்கு-முன்னோட்டமா-சோட்டா-ராஜன்-கைது/article7809576.ece

  • தொடங்கியவர்

தாவூத்திடமிருந்து தப்பிக்க சோட்டா ராஜன் சரண்டரா? பரபரப்பு பின்னணி தகவல்கள்!

 

cho.jpg பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியா பாலி தீவில் கைது செய்யப்பட்டுள்ளது இந்தியாவில், குறிப்பாக மும்பை கேங்க்ஸ்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாவூத் இப்ராஹிமை கைது செய்வதற்காக  இந்திய உளவுத்துறை ஏஜென்சிகள் மேற்கொண்ட 'சீக்ரெட்'  ஆப்ரேஷனின் ஒரு அம்சமே இந்த நடவடிக்கை என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 

யார் இந்த சோட்டா ராஜன்?

சோட்டா ராஜனின் இயற்பெயர், ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. மும்பையில் ஏழ்மையான மராத்தி குடும்பத்தில் பிறந்த ராஜன்,  1980களில், மும்பை திரையரங்குகளில் பிளாக்கில் சினிமா டிக்கெட்டை விற்று நிழல் உலக அனுபவத்தைப் பெற தொடங்கி, பின்னர் நாயர் என்பவரிடம்,  'வேலை'க்கு சேர்ந்து, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு லோக்கல் ரவுடிகளிடம் பிரபலமானான்.

பின்னர் ராஜன் நாயருக்கு, 'படா' ராஜன் என்றும், இவருக்கு, 'சோட்டா' ராஜன் எனவும் பெயர் வந்தது. ஒரு கட்டத்தில் ரவுடிகளுடன் ஏற்பட்ட மோதலில் படா ராஜன் என்கிற நாயர் கொல்லப்பட, சோட்டா ராஜன், அந்த கும்பலின் தலைவனானான். அந்தக் காலகட்டத்தில்தான் மும்பையில்   தாவூத் இப்ராகிம், அருண் காவ்லியுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலிலும் சோட்டா ராஜன் ஈடுபட்டான். அருண் காவ்லியின் மூத்த அண்ணன் பாபா காவ்லி, கடத்தலின்போது கொல்லப்பட்டான். இந்த வழக்கில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, சோட்டா ராஜன் துபாய்  தப்பிச் சென்றான். இப்படி தொடங்கிய சோட்டா ராஜனின் தாதா பயணத்தில் பல்வேறு கொலை வழக்குகள் பதிவாகின. இந்தியாவில் மட்டும் சோட்டா ராஜன் மீது  20 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

dawood%20with%20chotta.jpg

இந்தியாவையே உலுக்கிய நிகழ்வு மும்பை குண்டுவெடிப்பு. மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த இந்தத் தொடர்குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இன்னமும் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிமுடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, தாவூத் இப்ராஹிமை விட்டுப் பிரிந்து சோட்டா ராஜன், தனது ஆதரவாளர்களுடன் தனித்துச் செயல்பட்டார்.

இதனால், தாவூத் இப்ராஹிமுக்கும் ராஜனுக்கும் மோதல் வெடித்தது. இருவரது ஆதரவாளர்களும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கொலை செய்யத் தொடங்கினர். இதையடுத்து, சோட்டா ராஜனை கைது செய்யும் முயற்சியில் மும்பை காவல் துறை தடாலடியாக இறங்கவே, இந்தியாவில் இருந்து வெளியேறி உலக நாடுகளில் தலைமறைவானான்.எந்த நாட்டில் இருக்கிறான் என்பது போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் போகவே தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்தபடியே, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத தொழில்களை நடத்தி வந்தான் ராஜன்.   

கடந்த 2000-ம் ஆண்டில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள விடுதியில் சோட்டா ராஜன் தங்கியிருந்தபோது தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் அவனைக் கொலை செய்ய முயன்றனர். ஆனால், ராஜன் ஜன்னல் வழியே குதித்து உயிர் தப்பினான். அதன்பிறகு,  ராஜன் எங்கிருக்கிறான் என்பது நிழல் உலகத்துக்கும் தெரியாமல் போனது.

இந்த  நிகழ்வுகளுக்குப் பிறகு முழுமையான தலைமறைவு வாழ்க்கையில் இருந்த சோட்டா ராஜன், தற்போது இந்தோனேசிய  பாலி தீவில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான். இந்தக் கைது குறித்துப் பல்வேறு திடுக்கிடும்  தகவல்கள் வெளியாகி உள்ளன. சோட்டா ராஜன் கைது செய்யப்படவில்லை என்றும், அவன் தானாகவே  போலீசிடம் உயிருக்குப் பயந்து சரணடைந்தததாகவும்  கூறப்படுகிறது.

chotta%20with%20phone.jpg

ஆனால் சோட்டாவின் கைது பின்னணியில், இந்த உளவுத்துறையான 'ரா'  இருக்கிறது என்றும், தாவூத்தை கைது செய்வதற்காக 'ரா'  'ஐபி' மற்றும் சிபிஐ உள்ளிட்ட  இந்திய ஏஜென்சிகள்  வகுத்த வியூகத்தின்படியே இந்தக் கைது நடந்துள்ளது என்றும் செய்திகள் மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளன. 

விரைவில் தாவூத் கைது?

சோட்டா ராஜன் கைதில்  கவனிக்கப்பட வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. சோட்டா ராஜன் எங்கிருக்கிறான் என்பதை இந்திய உளவு நிறுவனங்கள் நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு பின் தொடர்ந்துள்ளன. இருப்பினும் சிபிஐ திடீரென இன்டர்போல் அமைப்பை உஷார்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிபிஐ-யின் இந்த திடீர் நடவடிக்கையில் இருந்து இரண்டு விளக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஒன்று சோட்டா ராஜனால் இனிமேல் இந்திய உளவு அமைப்புகளுக்கு எந்த பயனும் இல்லை. மற்றொன்று, சோட்டா ராஜனை கைது செய்து அவனை நாடுகடத்தி இந்திய சிறையில் பத்திரமாக அடைக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தாவூத்தை நெருங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்றும், அதனால் இந்த திடீர் நடவடிக்கை பாய்ந்துள்ளது என்றும்  மும்பை காவல்துறை வட்டாரங்கள் மற்றும் டெல்லி வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.  

dawood%20ibrahim.jpg

தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல், ஆஸ்திரேலியாவில் வைத்து சோட்ட ராஜனை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே ராஜன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.

சோட்டா ராஜன் இந்திய சிறையில் பாதுகாப்பாக இருக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், அதன் பின்னணியில் மிகப் பெரிய பேரம் நடந்திருக்க வேண்டும். அந்த பேரம் தாவூத் இப்ராஹிமைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்றும் 'நிழல்' உலகத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதனால் மிக விரைவில் தாவூத் கைது நடக்கலாம் என்றும், அது மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனையாகப் பேசப்படும் என்றும் பா.ஜனதா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=54284

  • தொடங்கியவர்

நான் யாருக்கும் பயப்படவில்லை:சோட்டா ராஜன் பரபரப்பு பேட்டி

 

chotta%20rajan%20400.jpg புதுடெல்லி: இந்தோனேசிய போலீசாரிடம் சிக்கியுள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் கேள்விக்கு,  நான் யாருக்கும் பயப்படவில்லை என்று பதிலளித்துள்ளார்.

நிழல் உலக தாதா சோட்டாராஜன்,தனது ஆரம்ப கால கூட்டாளியான தாவூத் இப்ராஹிமுக்கு பயந்தே போலீசாரிடம் சரணடைந்தார் அல்லது கைது செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் சோட்டா ராஜன் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தோனேசியாவில் இந்தியாவுக்கு தான் கொண்டு செல்லப்பட்டதும் தனக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் உள்ள  சோட்டா ராஜன், இந்தியா செல்ல  தனக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் இந்தோனேசியா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.


சோட்டா ராஜனிடம் டென்பசார் போலீஸ் நிலையத்தில் பாலித்தீவு போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பாலி போலீஸ் கமிஷனர் நைன்கோலன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,

சோட்டா ராஜன் ஜிம்பாப்வே செல்ல விரும்புகிறார். இதற்கு முன்னதாக ஜிம்பாவே மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர் வசித்து வந்துள்ளார். ராஜன் தன்னை விடுதலை செய்யும்படி தங்களிடம் கேட்டதாகவும், இந்தியா செல்ல தாம் விரும்பவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் சோட்டா ராஜன், தொடர்ந்து பதட்டமாகவே இருந்து வருகிறார்.மருத்துவ பரிசோதனை  செய்யப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் அடிக்கடி புகைப் பிடித்தும் வருகிறார் என்று கூறியுள்ளார்.     

http://www.vikatan.com/news/article.php?aid=54319

  • தொடங்கியவர்

சர்ச்சை ஏற்படுத்தியுள்ள 'சோட்டா ராஜன் கைது'

 
சோட்டா ராஜன் | கோப்புப் படம்
சோட்டா ராஜன் | கோப்புப் படம்

பாலியில் சிக்கிய சோட்டா ராஜனை அங்குள்ள போலீஸார் கைது செய்தனரா அல்லது ராஜன் தானாக முன்வந்து சரண் அடைந் தாரா என சர்ச்சை கிளம்பியுள்ளது.

தாவூதின் நெருங்கிய கூட்டாளி யாக இருந்த ராஜன், அவரிட மிருந்து பிரிந்த பின், தாவூத் பற்றி மும்பை போலீஸார் மற்றும் மத்திய உளவுத் துறைக்கு உளவு சொல்பவராக மாறிவிட்டதாக கூறப் பட்டது. ஹாங்காங் ஹோட்டல் ஒன்றில் ராஜன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் குண்டடிபட்டு நூலிழையில் உயிர் தப்பினார். அவரை அந்நாட்டு அரசு ‘நட்பு’ காரணமாக தப்பவிட்டதாக கூறப்பட்டது.

இதற்கு முன்பாக 1998-ல் ஒருமுறை தாய்லாந்து போலீஸா ரிடம் சிக்கிய சோட்டா ராஜனை விசாரிக்க இந்திய அரசு முன்வரவில்லை. இதனால், அங்கிருந்தும் ராஜன் விடுவிக் கப்பட்டு விட்டார்.

பாகிஸ்தானின் உளவுதுறை யான ஐ.எஸ்.ஐ அமைப்பினர் உட்பட சில தீவிரவாதிகளையும் ராஜன் தனது ஆட்கள் மூலமாக நேபாளம் உட்பட பல்வேறு நாடு களில் கொன்றதன் மூலம் இந்திய உளவுத்துறைக்கு அவர் மறை முகமாக உதவி இருப்பதாகவும் கருதப்படுகிறது.

2005 டிசம்பரில் தாவூதை ராஜன் கொல்ல முயன்றார். தாவூதின் மகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியாண்டட்டின் மகனுடன் நடந்த திருமணத்தின் போது இந்த கொலை முயற்சி நடந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் சிலர் இருந்தாகவும் கூறப்பட்டது. இதில் குறிப்பாக மத்திய உளவுத் துறையின் தலைவராக இருந்து 2005 ஜூலையில் ஓய்வு பெற்றிருந்த அஜீத் தோவலின் பெயரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு தோவலுடன் ராஜனின் கும்பலை சேர்ந்த விக்கி மல்ஹோத்ரா என்பவர் டெல்லியில் காரில் சென்ற போது பிடித்து விசாரிக்கப்பட்டது ஆதாரமாகக் கூறப்பட்டது.

எனவே தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருக்கும் தோவல் எடுத்த முயற்சியின் பலனாகவே ராஜன் கைது நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “ஹாங்காங் தாக்குதலுக்கு பின் சோட்டா ராஜ னிடம் இருந்து அவரது முக்கியக் கூட்டாளிகள் பிரிந்து, ராஜன் வலுவிழக்கத் தொடங்கினார். இத் துடன் சில ஆண்டுகளாக ராஜனின் கிட்னி செயலிழந்து அவ்வப்போது அவர் ரத்த சுத்திகரிப்பு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். ராஜனின் குடும்பம் மும்பையில் இருக்கும் நிலையில், தன் எஞ்சிய காலத்தை இந்திய சிறைகளில் கழிக்க ராஜன் முடிவு செய்ததால் தான் இந்த கைது நடைபெற்றுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.

இப்போதும் கூட தாவூதின் கூட்டாளிகளுடன் சோட்டா ராஜ னுக்கு தொடர்பு இருப்பதாக நம் பப்படுகிறது. தாவூதின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்த ஒரே இந்திய உளவாளியாக ராஜன் கருதப்படுவதால் அவர் தாவூதை பிடிக்க பெரிதும் உதவியாக இருப் பார் எனவும் கருதப்படுகிறது. ராஜ னுக்கு இருக்கும் தாதா கும்பல்களின் தொடர்பு மூலம் தாவூதை கைது செய்யலாம் என மத்திய அரசு நம்புகிறது. இதை ஏற்கெனவே எதிர்பார்த்து ராஜனை கொல்ல தாவூத் முயற்சி செய்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பும் ஆஸ்திரேலியாவில் ராஜனை கொல்ல தாவூத் முயன்றதாக கூறப்படுகிறது.

உண்மையாகி விட்டதா சோட்டா ராஜனின் பாலிவுட் படக் கதை?

மும்பை தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் பல படங்கள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலானவை வெற்றி பெற்றுள்ளன. இந்த வகையில் தாவூத் இப்ராகிம் வாழ்க்கையை கதையாகக் கொண்ட ‘கம்பெனி’ என்ற படமும் வெற்றிப் படமானது. இதில் சோட்டா ராஜனாக ‘சாந்து’ எனும் பாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்தார். பல நாடுகளில் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் காட்டப்படும் சாந்து, இறுதில் இந்தோனேஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு சிறையில் இருந்தபடியே தனது பரம விரோதியும், முன்னாள் கூட்டாளியுமான மல்லீக் (தாவூதின் பாத்திரத்தில் நடித்த அஜய்தேவ்கான்) கும்பலை சிதைக்க போலீஸாருக்கு உதவுகிறார். கற்பனையாக காட்டப்பட்ட இந்தப் படத்தின் முடிவு தற்போது, சோட்டா ராஜன் இந்தியா கொண்டு வரப்படுவதால் உண்மையாகி விடும் போல் தெரிகிறது. இந்த திரைப்படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி இருந்தார்.

தாவூத் இப்ராஹிமின் அனைத்து நடவடிக்கை களையும் அறிந்த ஒரே இந்திய உளவாளியாக ராஜன் கருதப்படுவதால் அவர் தாவூதை பிடிக்க பெரிதும் உதவியாக இருப்பார் என கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/india/சர்ச்சை-ஏற்படுத்தியுள்ள-சோட்டா-ராஜன்-கைது/article7812793.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பாங்காங், ஜகார்த்தாவில் ஹோட்டல்கள் : சோட்டாராஜனுக்கு 4 ஆயிரம் கோடிக்கு சொத்து

 

ந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட நிழலுலக தாதா சோட்டா ராஜனுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கோடி வரை சொத்து இருப்பதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

chotta.jpg

இந்த சொத்தில் 50 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன. குறிப்பாக மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சோட்டாராஜனின் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. அதோடு சீனாவில் ஹோட்டல் ஒன்றும் உள்ளது. சிங்கப்பூரில் தங்க நகை கடை, பாங்காங் மற்றும் ஜகார்த்தாவில் இரு ஹோட்டல்கள் உள்ளன. இது தவிர ஆப்ரிக்க நாடுகளில் குறிப்பாக ஜிம்பாப்வேயில் வைரம் வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலிலும் சோட்டாராஜன் முதலீடு செய்துள்ளார்.

இதனால்தான் ஜிம்பாப்வேக்கு தப்பி செல்லும் முடிவில் சோட்டாராஜன் இந்தோனேஷியா வந்துள்ளார். போலீசாரிடம் பிடிபட்டதும் தன்னை ஜிம்பாப்வேக்கு அனுப்பி விடுமாறும் கெஞ்சியுள்ளார். இதற்கிடையே தாவூத் இப்ராஹிம் கும்பல், சோட்டாராஜனை பின் தொடர்ந்து வந்துள்ளது.

ஆனால் தற்போது சோட்டாராஜனின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் டயாலிசிஸ் அவருக்கு செய்யப்பட்டு வந்துள்ளது. இத்தகைய  உடல்ரீதியான உபாதைகளுடன் சோட்டா ராஜனால் தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் போராட முடியவில்லை.

இதனால் ஜிம்பாப்வேக்கு தப்பி சென்று அங்கு செட்டிலாகி விட, சோட்டா ராஜன் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக சோட்டாராஜன், ஜிம்பாப்வே அரசு அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஜிம்பாப்வே அதிகாரிகளிடம் தனக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வேண்டுமென்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆனால் ஜிம்பாப்வே அரசோ, இந்தியாவால் தேடப்படும் எந்த நபருக்கும் ஜிம்பாப்வேயில் அனுமதி கிடையாது என்று உறுதிபட தெரிவித்துவிட்டது.

தாவூத் இப்ராஹிம் கும்பலை சேர்ந்தவர்களை  சுட்டு கொன்றது உள்ளிட்ட 25 வழக்குகள் மும்பையில் மட்டும் சோட்டாராஜன் மீது உள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=54358

  • தொடங்கியவர்

நான் சரணடையவில்லை... இந்தியா திரும்பவே விரும்பினேன்: 'சோட்டா' ராஜன்

 

 
மும்பை தாதா சோட்டா ராஜனிடம் இந்தோனேசிய போலீஸார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதற்காக பாலி தீவின் டென்பாசர் போலீஸ் நிலையத்துக்கு சோட்டா ராஜனை அழைத்துச் சென்ற போலீஸார். படம்: ராய்ட்டர்ஸ்
மும்பை தாதா சோட்டா ராஜனிடம் இந்தோனேசிய போலீஸார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதற்காக பாலி தீவின் டென்பாசர் போலீஸ் நிலையத்துக்கு சோட்டா ராஜனை அழைத்துச் சென்ற போலீஸார். படம்: ராய்ட்டர்ஸ்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் (55), இந்தியாவுக்கு திரும்ப விரும்புவ தாக தெரிவித்துள்ளார்.

கடந்த 1970-களில் மும்பை செம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிழல்உலக தாதாவாக சோட்டா ராஜன் வலம் வந்தார். அவரின் நிஜப்பெயர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி.

நிழல்உலகில் கால் பதித்தது முதல் தாவூத் இப்ராஹிமின் வலது கரமாக செயல்பட்ட அவர் மீது கொலை, கடத்தல், பணம் பறிப்பு, போதை மருந்து கடத்தல் என 75-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

தாவூத்தின் சதியால் கடந்த 1993-ம் ஆண்டில் மும்பையில் 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தைக் கண்டித்து தாவூத்திடம் இருந்து சோட்டா ராஜன் நிரந்தரமாகப் பிரிந்தார். அதன்பிறகு 1995-ல் அவர் இந்தியா வில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி னார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

அண்மைகாலமாக மோகன் குமார் என்ற பெயரில் அவர் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசி யாவின் பாலி தீவுக்கு வந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சரணடையவில்லை

மும்பை குண்டுவெடிப்புக்கு பிறகு தாவூத்துக்கும் சோட்டா ராஜனுக்கும் இடையே பகைமை நீடிக்கிறது. சோட்டா ராஜனை கொலை செய்ய தாவூத்தின் ஆட்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2000-ம் ஆண்டில் பாங் காங்கில் ஹோட்டல் ஒன்றில் தங்கி யிருந்த ராஜனை கொல்ல தாவூத் ஆட்கள் முயன்றனர். ஆனால் அவர் தப்பிவிட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தானா கவே அவர் இந்திய உளவுத் துறையை தொடர்பு கொண்டு இந்தோனேசியாவில் இன்டர் போல் போலீஸாரிடம் சரண் அடைந் திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஜிம்பாப்வே நாட்டில் சோட்டாராஜன் பல்வேறு தொழில்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் அங்கு செல்ல விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக அவர் பாலியில் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்டர்போல் போலீஸிடம் நான் சரண் அடையவில்லை. விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக போலீஸார் கைது செய்தனர். இப் போதைக்கு நான் ஜிம்பாப்வே செல்ல விரும்பவில்லை. இந்தியா வுக்கு திரும்புவதையே விரும்பு கிறேன். தாவூத் உட்பட யாரைக் கண்டும் அஞ்சவில்லை. எனது உயிருக்கு அஞ்சி இந்திய உளவு அமைப்புகளுடன் எந்த பேரமும் செய்து கொள்ளவில்லை.

இந்தோனேசியாவில் எனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. கைகளுக்கு விலங்கிடுகின்றனர். எனவே விரைவில் இந்தியா திரும்ப விரும்புகிறேன். இப்போதைக்கு சிபிஐ அதிகாரிகளுக்காக காத்திருக் கிறேன். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

6 மணி நேரம் விசாரணை

இதனிடையே சோட்டா ராஜனி டம் நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக பாலி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள் ளன. அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சிபிஐ சிறப்புக் குழு பாலியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் தாவூத் உள்ளிட்ட எதிரி குழுக்கள் மூலமாக சோட்டா ராஜனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவரை இந்தியா கொண்டு வருவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து சிபிஐ ரகசியம் காத்து வருகிறது.

http://tamil.thehindu.com/world/நான்-சரணடையவில்லை-இந்தியா-திரும்பவே-விரும்பினேன்-சோட்டா-ராஜன்/article7818060.ece

  • தொடங்கியவர்

இந்தோனேஷியா சிறையில் சோட்டா ராஜன் மீது தாக்குதல்!

 

ந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மும்பை நிழலுக தாதா சோட்டா ராஜன் மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

chotta%20.jpg

இதனைத் தொடர்ந்து தற்போது பாலித் தீவு காவல்நிலையத்தில் உள்ள தனி சிறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இன்டர்போல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த சோட்டா ராஜனை,  கடந்த சில நாட்களுக்கு முன் பாலித்தீவில் இந்தோனேஷிய போலீசார் கைது செய்தனர்.

தற்போது அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் சோட்டா ராஜன் அடைக்கப்பட்டிருந்த சிறையில், அவருக்கும் சக கைதிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சோட்டா ராஜன் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்கும்படி பாலி நகர போலீசாருக்கு சோட்டா ராஜன் கடிதம் எழுதியுள்ளார். 

http://www.vikatan.com/news/article.php?aid=54423

"இந்தோனேஷியா சிறையில் சோட்டா ராஜன் மீது தாக்குதல்!"

இதை நாங்கள் நம்ப வேண்டும் என்று இந்திய உளவுத்துறை வேண்டுகிறது.

 

  • தொடங்கியவர்

சோட்டா ராஜனிடம் ரூ.500 கோடி சொத்து: மும்பை போலீஸார் தகவல்

 

 
chotarajan_2604075h.jpg
 

நிழல்உலக தாதா சோட்டா ராஜனிடம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் தலைமறை வாக வாழ்ந்துவந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசி யாவின் பாலி தீவில் கைது செய்யப் பட்டார். அவரை விரைவில் இந்தியா வுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் குர்ஜித் சிங், பாலியில் நேற்று கூறியதாவது:

சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை களில் தாமதம் இல்லை. சட்டப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப பாலி தீவில் உள்ள இந்திய தூதரகம் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே சோட்டா ராஜனிடம் கோடிக்கணக்கில் சொத்துகள் குவிந்து கிடப்பதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த வட்டாரங்கள் கூறியதாவது:

மலேசியா, சிங்கப்பூர், ஜகார்தாவில் சோட்டா ராஜனுக்கு ஹோட்டல்கள், சூதாட்ட விடுதிகள் உள்ளன. மும்பையில் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் அவர் திரைமறைவு பங்குதாரராக உள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டில் சோட்டா ராஜனின் மனைவி சுஜாதா மற்றும் மும்பை செம்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட அவரது குஷி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டன. தற்போது மும்பையில் உள்ள அவரது சொத்து விவரங்கள் தெரியவந்தால் அவையும் முடக்கப்படும்.

இன்றைய நிலையில் அவரிடம் ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி வரை சொத்துகள் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த விவரங்களை அவரிடம் இருந்து பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://tamil.thehindu.com/india/சோட்டா-ராஜனிடம்-ரூ500-கோடி-சொத்து-மும்பை-போலீஸார்-தகவல்/article7826161.ece

  • தொடங்கியவர்

சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்துவர சி.பி.ஐ. அதிகாரிகள் இந்தோனேசியா விரைவு!

 

புதுடெல்லி: இந்தோனேசியாவில் கைது செய்ப்பட்டு, பாலி தீவில் அடைக்கப்பட்டுள்ள தாதா சோட்டா ராஜனை இந்தியா அழைத்துவர சி.பி.ஐ. அதிகாரிகள் இந்தோனேசியா விரைந்துள்ளனர்.

சோட்டா ராஜன் (55) நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் சேர்ந்து பல்வேறு கடத்தல், கொள்ளை, கொலை சம்பவங்களில் ஈடுபட்டார். பின்னர் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு தாவூத் இப்ராகிமை அவர் பிரிந்து விட்டார்.

Chhota%20Rajan01.jpg

அதன் பிறகும் சோட்டா ராஜன் பல்வேறு கடத்தல், கொள்ளை, கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது இந்தியாவில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகளில் முன்னணியில் இருந்து வந்தார். சர்வதேச போலீசாரும் சோட்டா ராஜனை தேடி வந்தனர்.

சுமார் 25 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் இருந்து சோட்டா ராஜன், கடந்த மாதம் 25ஆம் தேதி இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, பாலி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஜகார்த்தாவில் உள்ள இந்திய துதரக தலைமை செயலாளர் சஞ்ஜிவ் அகர்வால், பாலி தீவிற்கு சென்று, சோட்டா ராஜனை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்து வர சி.பி.ஐ. அதிகாரிகள் குழு இன்று காலை இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் மும்பை போலீசாரும் சென்றுள்ளனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=54506

  • தொடங்கியவர்

பாகிஸ்தானின் பாதுகாப்பில் தாவூத் இப்ராஹீம்: சோட்டா ராஜன் பேட்டி!

 

chotta%20raajan.jpgபாலி: மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானின் பாதுகாப்பில் இருப்பதாக சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரபல மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கடந்த மாதம் 25ம் தேதி பாலிதீவில் கைது செய்யப்பட்டார். தற்போது இந்தோனேசியா போலீசாரின் தீவிர பாதுகாப்பில் உள்ள அவரை இந்தியா அழைத்து வர கடந்த சனிக்கிழமை மாலை சி.பி.ஐ. குழு இந்தோனேசியா பயணமானது. அவர்களுடன் டெல்லி மற்றும் மும்பை போலீசாரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேஷியாவின் பாலிதீவில் பேசிய செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள சோட்டா ராஜன், “ மும்பை தொடர் குண்டு வெடிப்பு உட்பட பல குற்ற வழக்குகளில் தேடப்படும் நபரான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில்தான்  உள்ளார்” என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=54569

  • தொடங்கியவர்

தாவூதுக்கும் தீவிரவாதத்துக்கும் எதிராக போராடுவேன்: 'சோட்டா' ராஜன்

 

சோட்டா ராஜன்| கோப்புப் படம்
சோட்டா ராஜன்| கோப்புப் படம்

மும்பை காவல்துறையைச் சேர்ந்த ஒரு சில போலீஸாருக்கும் தேடப்பட்டுவரும் தாவூத் இப்ரஹிமுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறது என நிழல் உலக தாதா சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன். பின்னர் தாவூத்திடம் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டார். மும்பை குண்டுவெடிப்பு, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், போதை கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன.

இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற சோட்டா ராஜனை சமீபத்தில் இந்தோனேசியாவில் இன்டர்போல் போலீஸார் கைது செய்தனர். அவரை இந்தியா அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் அந்த நாட்டின் பாலி தீவுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சோட்டா ராஜன், "ஒரு சில மும்பை போலீஸாருக்கும் தேடப்பட்டுவரும் தாவூத் இப்ரஹிமுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறது. என் மீத தவறான வழக்குகள் திணிக்கப்பட்டுள்ளன. மும்பை போலீஸார் எனக்கு அநீதி இழைத்துவிட்டனர். இருந்தாலும், தாவூத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எதிரான எனது போராட்டம் தொடரும். தாவூத் மீது எனக்கு அச்சமில்லை" என்றார்.

'என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை'

மும்பை திரும்புவதற்கு அச்சப்படுகிறீர்களா என சோட்ட ராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜன், "என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. இந்திய அரசு என்னை டெல்லி, மும்பை என எந்தச் சிறையில் வேண்டுமானாலும் அடைக்கும். ஆனால், எனக்கு எவ்வித அநீதியும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மும்பை போலீஸார் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இதை கருத்தில் கொண்டு அரசு எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.

விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்

இதற்கிடையில், சோட்டா ராஜன் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, இந்தோனேசிய போலீஸார் அவர் மீதான வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைப்பர் எனத் தெரிகிறது. இந்த நடைமுறைகள் முடிந்தவுடன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ராஜன் நாடு கடத்தப்படுவார் என இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பட்நவிஸ் தகவல்:

சோட்டா ராஜன் மீதான பல வழக்குகள் மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பாலியில் இருந்து அவரை சிபிஐ அதிகாரிகள் மும்பைக்கு விரைவில் அழைத்து வருவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதை மகாராஷ்டிரா முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

சோட்டா ராஜனை காவலில் வைக்க, மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச் சாலையை அதிகாரிகள் தயார்படுத்தி வருகின்றனர். அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆர்தர் சாலையில் சிறையில் உள்ள கைதிகளின் விவரங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் வைக்கப்பட்டிருந்த ‘செல்’லில் சோட்டா ராஜனையும் காவலில் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சோட்டா ராஜன் மீது தாக்குதல் எதுவும் நடக்காமல் இருக்க, சிறைக்குள்ளேயே சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த சிறை அதிகாரிகள் கோரிக்கை வைக்க உள்ளனர் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/india/தாவூதுக்கும்-தீவிரவாதத்துக்கும்-எதிராக-போராடுவேன்-சோட்டா-ராஜன்/article7837300.ece?homepage=true

  • தொடங்கியவர்

'சோட்டா' ராஜனை இந்தியா கொண்டுவர ஒருநாள் தாமதம்

 

நிழலுலக தாதா 'சோட்டா' ராஜனை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மேலும் ஒருநாள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷிய சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள மலையில் தீப்பிழம்பு புகைமூட்டும் காணப்பட்டது. இதனால், சர்வதேச விமான நிலையம் இன்று ஒருநாள் மூடப்பட்டது.

பாலியில் இருந்து நாளை காலை 8.45 மணி வரை எந்த விமானமும் புறப்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ராஜனை இன்று இந்தியா கொண்டுவர முடியவில்லை.

கொலை, கொலைமுயற்சி, கடத்தல் உட்பட 75 வழக்குகளில் தொடர்புடைய சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ குழு இந்தோனேசியாவில் முகாமிட்டுள்ளது.

இந்தோனேஷிய அதிகாரிகள் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், ராஜனை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டதாகவும் சிபிஐ குழு தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/india/சோட்டா-ராஜனை-இந்தியா-கொண்டுவர-ஒருநாள்-தாமதம்/article7841391.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சதாசிவ நிக்கல்ஜி (55). கடந்த 1970-களில் மும்பை நிழல் உலகில் கால் பதித்த அவர், பிரபல தாதா ராஜன் என்பவருடன் இணைந்து செயல்பட்டார். ராஜனின் மறைவுக்குப் பிறகு சோட்டா ராஜன் என்று அழைக்கப்பட்ட நிக்கல்ஜி பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டார்.

பின்னர் தீவிரவாதி தாவூத் இப்ராஹிம் வலதுகரமாக மாறிய அவர் மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு தனியாகப் பிரிந்தார். 1995-ல் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிய அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்தார்.

அவரை கொலை செய்ய தாவூதின் ஆட்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து தப்பிய சோட்டா ராஜன் கடந்த ஓராண்டாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். இதை இந்திய உளவுத் துறையினர் மோப்பம் பிடித்தனர். அவர்களின் தகவலின்பேரில் கடந்த 25-ம் தேதி இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு வந்த சோட்டா ராஜனை இன்டர்போல் போலீஸார் கைது செய்தனர்.

அவரை இந்தியாவுக்கு அழைத்து வர 6 பேர் கொண்ட சிபிஐ குழு பாலிக்கு சென்றது. கடந்த செவ்வாய்க்கிழமையே அவர் டெல்லிக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாலி பகுதியில் உள்ள எரிமலை வெடித்து தீக்குழம்புகளை கக்கியதால் அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு பாலி விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சோட்டா ராஜனை சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வருகின்றனர்.

பாலியின் நகுரா ராய் சர்வதேச விமான நிலையத்தில் வியாழன் இரவு 7.45 மணிக்கு சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டது.

முன்னதாக நகுரா ராய் விமான நிலையத்தில் நிருபர்களிடம் சோட்டா ராஜன் கூறியபோது, தாவூத் இப்ராஹிமை தேடும் பணியில் இந்திய உளவுத் துறையினருக்கு உதவியாக இருப்பேன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் நாடு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. என் மீது பதிவு செய்யப்பட்டவை பொய் வழக்குகள் என்று அவர் தெரிவித்தார்.

சோட்டா ராஜன் மீது மும்பை, டெல்லி போலீஸ் நிலையங்களில் 75 வழக்குகள் உள்ளன. அவற்றில் 20 கொலை வழக்குகளும் அடங்கும்.

போலி பாஸ்போர்ட் விசாரணை

இந்தோனேசியாவில் சோட்டா ராஜனை கைது செய்யபோது அவர் மோகன் குமார் என்ற பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்தார். கர்நாடக மாநிலம் மண்டியா பகுதி முகவரியில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தது. அவர் எவ்வாறு போலி பாஸ்போர்ட் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை செய்திதொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/india/இந்தோனேசியாவில்-கைது-செய்யப்பட்ட-சோட்டா-ராஜன்-இந்தியாவிடம்-ஒப்படைக்கப்பட்டார்/article7847118.ece?homepage=true

  • தொடங்கியவர்

27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி கொண்டு வரப்பட்டார் சோட்டா ராஜன்: சிபிஐ தலைமையகத்தில் பலத்த பாதுகாப்பு

  • டெல்லி விமான நிலையத்திலிருந்து பலத்து பாதுகாப்புடன் சோட்டா ராஜன் அழைத்துச் செல்லப்பட்டார் | ராய்ட்டர்ஸ்.
    டெல்லி விமான நிலையத்திலிருந்து பலத்து பாதுகாப்புடன் சோட்டா ராஜன் அழைத்துச் செல்லப்பட்டார் | ராய்ட்டர்ஸ்.
  • சோட்டா ராஜன் | படம்: ராய்ட்டர்ஸ்
    சோட்டா ராஜன் | படம்: ராய்ட்டர்ஸ்

பாலியில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிபிஐ குழுவினரால் டெல்லி கொண்டுவரப்பட்டார். சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த அவரை அதிகாரிகள் சிபிஐ தலைமையகத்துக்கு கொண்டு சென்றனர். இதனால், விமான நிலையத்திலிருந்து சிபிஐ அலுவலகம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கடந்த 27 வருடங்களாக மும்பை போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதாவான சோட்டா ராஜனை இந்தியா கொண்டு வர சிபிஐயின் குழுவினர் பாலி சென்றிருந்தனர். இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் நேற்று பாலியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ராஜன், இன்று விடியற்காலை சுமார் 5.30 மணிக்கு டெல்லி அடைந்தார். இவரை சிபிஐயின் தலைமை அலுவலகம் அழைத்து செல்லும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ராஜனின் பரம விரோதியான மற்றொரு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்தபடி தன் கிரிமினல் நடவடிக்கைகளை இந்தியாவில் செயல்படுத்தி வரும் தாவூதின் ஆட்கள் இந்தியாவிலும் பரவி உள்ளனர். இதனால், ராஜனின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதபடி விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வருவது டெல்லி போலீஸாருக்கு சவாலாகி விட்டது.

இதற்காக ஒருநாள் முன்னதாக டெல்லியின் பாலம் பகுதியின் விமான நிலையத்தில் இருந்து, சிஜிஓ காம்ப்ளக்ஸ், லோதி சாலையில் உள்ள சிபிஐயின் தலைமை அலுவலகம் மற்றும் டெல்லியின் சிறப்பு காவல்துறை அலுவலகம் என இரண்டு பாதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

இவை, இரண்டிலும் சி.ஐ.எஸ்.எப் மற்றும் சி.ஆர்.பி.எப் ஆகிய மத்திய பாதுகாப்பு படைகளுடன் டெல்லி போலீஸாரும் சாலை நெடுக ஆங்காங்கே காவல் இருந்தனர். இதனால், டெல்லி இறங்கும் ராஜன் கொண்டு செல்லப்படும் இடம் கடைசிவரை ரகசியமாக வைக்கப்பட்டது. இத்துடன், தாவூதின் ஆட்களை குழப்ப வேண்டி சோட்டா ராஜன் போலவே தோற்றத்தில் ஒற்றுமையாக இருந்த ஒருவரையும் தேர்ந்தெடுத்து பாதுகாப்பிற்காக வேண்டி ‘டம்மி’யாக பயன்படுத்தப்பட்டிருந்தது.

பாலம் விமான நிலையத்தில் இருந்து வெளிக் கொண்டுவரப்பட்ட ராஜன், சுமார் 25 நிமிடப் பயணத்தில் சிபிஐ தலைமையகம் அடைந்தார். குண்டு துளைக்காத அம்பாஸிட்டர் காரில் அழைத்து வரப்பட்டவருக்கு பாதுகாப்பாக டெல்லியின் ‘ஸ்வாட்’ எனும் சிறப்பு படையினரின் 15 வாகனங்கள் முன்னும், பின்னுமாக தொடர்ந்தன. சிபிஐ முதல் தளத்தில் உள்ள விசாரணைக் கைதிகளின் சிறையில் வைக்கப்பட்ட ராஜனுக்கு முதல் கட்டமாக மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவதால், அதற்கான சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகு அவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு ஒன்றை பதிவு செய்து ராஜனை சிபிஐ நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியை முத்தமிட்டு வணங்கிய ராஜன்

ராஜேந்திரா சதாசிவ நிகல்ஜி எனும் இயற்பெயர் கொண்ட 55 வயது சோட்டா ராஜன் மீது மும்பை உட்பட பல நகரங்களில் 20 கொலை வழக்குகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.

சர்வதேச காவல்துறையாகக் கருதப்படும் இண்டர்போல் அமைப்பாலும் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராஜன், கடந்த சில வருடங்களாக மோஹன்குமார் எனும் பெயரிலான போலி பாஸ்போர்ட் உதவியால் ஆஸ்திரேலியாவில் மறைந்திருந்ததாகக் கருதப்படுகிறது.

இங்கிருந்து கடந்த அக்டோபர் 25-ல் இந்தோனேஷியாவில் உள்ள சுற்றுலா தலமான பாலிக்கு வந்திருங்கியவர் அந்நாட்டு போலீஸாரால் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

பிறகு அவர்களை தொடர்பு கொண்ட இந்திய அரசு, ராஜனை டெல்லிக்கு வரவழைத்துள்ளது. டெல்லியின் விமான நிலையத்தில் இறங்கிய சோட்டா ராஜன், ஒரு பெருமூச்சுடன் தன் காலடியின் நிலத்தை முத்தமிட்டு வணங்கினார்.

http://tamil.thehindu.com/india/27-ஆண்டுகளுக்குப்-பின்-டெல்லி-கொண்டு-வரப்பட்டார்-சோட்டா-ராஜன்-சிபிஐ-தலைமையகத்தில-பலத்த-பாதுகாப்பு/article7849858.ece

  • தொடங்கியவர்

இந்தியா கொண்டு வரப்பட்ட டூப்ளிகேட் சோட்டா ராஜன்!

 

ந்தோனேசியாவின் பாலி நகரிலிருந்து   சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 5 மணிக்கு டெல்லி கொண்டுவரப்பட்ட சோட்டா ராஜனை, ஐந்தடுக்கு பாதுகாப்பு போட்டு பத்திரமாக சி.பி.ஐ அலுவலகத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், அந்த நபர் உண்மையான சோட்டா ராஜன் இல்லை என்பதும், அவருக்கு பதில் பாதுகாப்பு கருதி டூப்போட்டு கொண்டு வரப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

நிஜமும் - நிழலும் என இரட்டை சோட்டா ராஜன்கள் கதை வெளியே தெரிந்து விட்டதால் பரபரப்பாகி கிடக்கிறது டெல்லி சி.பி.ஐ அலுவலகம்.

 

சோட்டா ராஜனின் உயிருக்கு தாவூத் கோஷ்டியினரால் அச்சுறுத்தல் இருப்பதால், சோட்டா ராஜனைப்போல இருந்த ஒரு நபரை கொண்டு வந்த சி.பி.ஐ போலீசார், உண்மையான சோட்டா ராஜனை போல டூப்ளிகேட் சோட்டா ராஜனை தயார் செய்து மீடியா மற்றும் போலீசார்களை ஏமாற்றிவிட்டு, இரண்டு பாதைகளை உருவாக்கி டூப்ளிகேட் சோட்டா ராஜனை ஒரு பாதை வழியாகவும், நிஜ சோட்டா ராஜனை வேறொரு பாதை வழியாகவும் கொண்டு சென்றுள்ளனர்.

உன்மையான சோட்டா ராஜன் எங்கே?

உண்மையான சோட்டா ராஜன் வேறு வழியில் மிகவும் கவனமாக பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டார். அதோடு, சோட்டா ராஜனுக்கு சிறுநீரக பிரச்னை இருப்பதால் இன்று டயாலிசிஸ் செய்யப்போவதால் இந்த ஏற்பாடு என்றும் சொல்லப்படுகிறது. சோட்டா ராஜனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்களா இல்லை, வேறு ஏதும் சிறப்பு சிகிச்சைக்கு  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்களா என்பது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார்களுக்கே தெரியாமல் ரகசியமாக நடந்து வருவதாக சொல்லுகிறார்கள்.

தாவூத்தின் ஆட்கள் எந்த வழியில் வந்தாவது சோட்டா ராஜனை கொலை செய்யலாம் என்பதால் இந்த இரட்டை வேடம் என்றும்,  பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருப்பதாகவும் டெல்லி சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.vikatan.com/news/article.php?aid=54764

  • தொடங்கியவர்
இந்தோனேஷியாவில் சோட்டா ராஜன் பிடிபட்டது எப்படி?
 

 

 
 
Tamil_News_large_1381286.jpg
 
 
 
 
 

புதுடில்லி: இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜன் டில்லி கொண்டு வரப்பட்ட நிலையில், அவர் போலீசாரிடம் பிடிபட்டது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் நிழல் உலக தாதாவாக விளங்கிய சோட்டா ராஜன் கடந்த வாரம் இந்தோனேஷியாவின் பாலி தீவில் போலீசாரிடம் சிக்கினார். அவர் மீது மும்பையில் பல ஆள்கடத்தல், கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.அவரை நாடு கடத்த இந்தோனேஷியா அரசும் சம்மதம் தெரிவித்தது. இதனையடுத்து இன்று காலை சோட்டா ராஜன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் மூலம் டில்லி அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து சி.பி.ஐ., தலைமையகத்திற்கு சோட்டா ராஜனை அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் சோட்டா ராஜன் இந்தோனேஷியா போலீசாரிடம் சிக்கியது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.கடந்த வாரம் பாலி தீவில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்காக விமான நிலையத்தில் வரிசையில் சோட்டா ராஜன் காத்திருந்தார். மோகன் குமார் என்ற போலி பாஸ்போர்ட் மூலம் அவர் இந்தோனேஷியா வந்துள்ளார். அதிகாரிகள், சோட்டா ராஜனிடம் பெயர் பற்றி விசாரித்தபோது, தவறுதலாக தனது உண்மையான பெயரான ராஜேந்திர நிகழ்ஜே என கூறி பிடிபட்டுள்ளார்.

சோட்டா ராஜன் ஆஸ்திரேலியாவில் வசிப்பது குறித்து, ஆஸ்திரேலிய போலீசார் இந்தோனேஷியாவிற்கு ஏற்கனவே பல தகவல்களும் ஆதாரங்களையும் அளித்துள்ளனர். இதனையடுத்து சோட்டா ராஜனின் கைரேகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் சோட்டா ராஜன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

நாடு கடத்தப்படுவதற்கு முன் சோட்டா ராஜன் பாலி தீவில் பத்திரிகையாளர்களிடம், தன் மீதான அனைத்து வழக்குகளும் பொய் என கூறினார். பாகிஸ்தானில் மறைந்துவாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு மும்பை போலீசார் உதவி செய்து வருவதாகவும், தாவூத் ஆட்களால் மும்பையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், சி.பி.ஐ., வெளியிட்ட செய்தி ஒன்றில், 'சோட்டா ராஜனை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். சி.பி.ஐ.,-இன்டர்போல் போலீசார் அவரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறினார்.
 

தாவூதுக்கு உதவும் போலீஸ்:


 

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சோட்டா ராஜனிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளிடம் தாவூத்துக்கு உதவும் போலீஸ் அதிகாரிகள் யார் என்பது குறித்த விபரங்களை சோட்டா ராஜன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பை போலீசார் தனக்கு எதிராக பல சதிச்செயல்களை செய்துள்ளனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சிலர் பணியில் இருந்த போது, தாவூத்துக்கும், மும்பை போலீசாருக்கும் இடையே பாலமாக செயல்பட்டுள்ளனர் என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் தாவூத் இப்ராஹிமிற்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தொடர்புகள் குறித்தும், அவர் குறித்த ரகசியங்கள் சிலவற்றையும் சோட்டா ராஜன் அதிகாரிகளிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சோட்டா ராஜனுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு : சோட்டா ராஜனிடம் விசாரணை நடப்பதையடுத்து சி.பி.ஐ., அலுவலகத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ., அலுவலகத்தின் வெளியே டில்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேட் அருகே, 20 முதல் 25 சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சி.பி.ஐ., அலுவலகத்திற்குள் 50 சி.ஐ.எஸ்.எப்., கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தாவூத் சரணடைய தயார்:



தனியார் டிவி ஒன்றிற்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த தாவூத் இப்ராஹிமின் வழக்கறிஞர் கேஸ்வானி, தாவூத் இப்ராஹிம் சரணடைய தயாராக இருக்கிறார். ஆனால் சோட்டா ராஜன் நடத்தப்படுவது போன்று தானும் நடத்தப்பட வேண்டும் என்றே அவர் விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1381286

  • தொடங்கியவர்

பர்கர், சாண்ட்விச்,கார்ன்பிளேக்... சி.பி.ஐ. சோட்டராஜனுக்கு வழங்கும் உணவு!

 

ந்தோனேஷியாவில் பிடிபட்ட  சோட்டா ராஜன் அண்மையில் இந்தியா கொண்டு வரப்பட்டார். தற்போது டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அவருக்கு ஏ.சி அறை வழங்கப்பட்டுள்ளது.

cr%20.jpg

20 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இந்த  அறையில் தரை விரிப்புகளும் விரிக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் குளியல் அறையும் தனியாக உள்ளது. அந்த அறையை சுற்றி, ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களும் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதோடு வெடிகுண்டு நிபுணர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட நிழலுலக தாதாக்களால் சோட்டா ராஜனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்படுவதால், சோட்டாராஜனின் பாதுகாப்புக்காக இத்தகைய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சி.பி.ஐ. கஸ்டடியில் இருக்கும் சோட்டாராஜன், இன்னும் வெளிநாட்டு உணவுகளைதான் உண்டு வருகிறார். சி.பி.ஐ. அதிகாரிகளும் அவர் கேட்கும் உணவு வகைகளை தாராளமாக வழங்கி வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டுக்கு ஓடி விட்ட சோட்டா ராஜன், இந்திய உணவு வகைகளை கிட்டத்தட்ட மறந்து விட்டார். பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் சோட்டாராஜன், மறைந்து வாழ்ந்ததால், அந்த நாடுகளின் உணவு பழக்கத்துக்கு மாறி விட்டதாக கூறப்படுகிறது.

பச்சை கீரை வகைகள், பர்கர், சீஸ் சாண்ட்விச், கார்ன்பிளேக் இவற்றுடன் வேக வைத்த முட்டைகள் அவருக்கு உணவாக வழங்கப்படுகிறது.  குடிப்பதற்கு  காபி அல்லது ஜூஸ் அளிக்கப்படுகிறது. இந்த வகை உணவு வகைகளைதான் அவரும் கேட்பதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக விசாரணைக் கைதிகளுக்கு ரொட்டி, பருப்பு வகை மற்றும் ஒரு காய்கறி கூட்டு மட்டுமே அளிக்கப்படும்.

அதுபோல் அவருக்கு பேச்சுத்துணைக்கு 4 போலீசாரும் உள்ளனர். அவர்களுடன் பேசியபடியே சோட்டா ராஜன் ஸ்பெஷல் ஏ.சி அறையில் பொழுதை கழித்து வருகிறார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55000

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.