Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் யஸ்ரின் லிபரல் கட்சி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என ஆகுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்!

Featured Replies

பிரதமர் யஸ்ரின் லிபரல் கட்சி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என ஆகுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்!
பிரதமர் யஸ்ரின்  லிபரல் கட்சி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என ஆகுமா? என்பது போகப்  போகத்தான் தெரியும்!

இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை.  உயிர், உடல், செல்வம் மட்டுமல்ல பதவிகளும் நிரந்தரமில்லை.  மூன்று தேர்தல்களில் அடுக்கடுக்காய் வென்று வந்த  பழமைவாதக் கட்சி நான்காவது தடவை பலத்த தோல்வியைத்  தழுவியுள்ளது.

இம்முறை மூன்று கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. கருத்துக் கணிப்பின்படி ஒவ்வொரு கட்சியும் முதலாவதாகவும் மூன்றாவதாகவும் மாறி மாறி வந்தன. கடந்த ஓகஸ்ட் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது  புதிய சனநாயகக் கட்சி முதலாவதாகவும் பழமைவாதக் கட்சி இரண்டாவதாகவும் லிபரல் கட்சி மூன்றாவது இடத்திலும் இருந்தன. பின்னர் பழமைவாதக் கட்சி  முதலாவது இடத்திலும் புதிய சனநாயகக் கட்சி இரண்டாவது இடத்திலும் லிபரல் கட்சி  மூன்றாவது இடத்திலும் இருந்தன. தேர்தல் நடந்த ஒக்தோபர் 19 க்கு முதல் வாரம் லிபரல் கட்சி முதல் இடத்திலும் பழமைவாதக் கட்சி இரண்டாவது இடத்திலும்  புதிய சனநாயகக் கட்சி மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டன.   

ஒரு தேர்தலில் மூன்றாவது இடத்தில் இருந்த கட்சி முதலாவது இடத்தைப் பிடித்தது இதுவே முதல் தடவை. கருத்துக் கணிப்புகள்  எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை (170 இருக்கைகள்) கிடைக்காது என்றே சொல்லின. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தன.  லிபரல் கட்சி  மொத்தம் 338 இருக்கைகளில் 184 இருக்கைகளைக் கைப்பற்றி பெரும்பான்மை அரசை அமைக்க இருக்கிறது. பின்வரும் அட்டவணை 1 தேர்தல் பெறுபேறுகளை கட்சி வாரியாகக் காட்டுகின்றது.

அட்டவணை 1

2015- 2011 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

2015

2011

கட்சி

வாக்குகள்

%

இருக்கைகள்

%

வாக்குகள்

% இருக்கைகள் %

லிபரல்

6,930,136

39.5

184

54

2,783,175

18.91 166 54

பழமைவாதக் கட்சி

5,600,496

31.9

99

29

5,832,401

39.62 103 33

புதிய சனநாயக கட்சி

3,600,496

19.7

44

13

4,508,474

30.63 34 11

பசுமை

605,864

3.4

1

1

576,221

3.91 1 0

புளக் கியூபெக்வா

818,652

4.7

10

10

889,788

6.04 4 1
மொத்தம் 17,555,644   338   14,590, 059   308  
வாக்களிப்பு   68.5       61.1    

கனடாவில் 9 மாகாணங்களும் 3 பிரதேசங்களும் உண்டு. அவற்றில் கட்சிகள் பெற்ற இருக்கைகளை கீழ்க்கண்ட அட்டவணை 2 காட்டுகிறது.

17,555,644

14,590,059

அட்டவணை 2

மாகாணவாரியாக கட்சிகள் பெற்ற இருக்கைகள்

கட்சி BC AB SK MB ON QC NB NS PE NL YT NT NU Total
  லிபரல் இருக்கை 17 4 1 7 80 40 10 11 4 7 1 1 1 184
% 35.2 24.6 23.9 44.6 44.8 35.7 51.6 61.9 58.3 64.5 53.6 48.3 47.2 39.5
  பழமைவாதக் கட்சி இருக்கை 10 29 10 5 33 12 0 0 0 0 0 0 0 99
% 30.0 59.5 48.5 37.3 35.0 16.7 25.3 17.9 19.3 10.3 24.0 18.0 24.8 31.9
  புதிய சனநாயகக் கட்சி இருக்கை 14 1 3 2 8 16 0 0 0 0 0 0 0 44
% 25.9 11.6 25.1 13.8 16.6 25.4 18.3 16.4 16.0 21.0 19.5 30.8 26.5 19.7
  புளக் கியூபெக்குவா இருக்கை           10               10
%           19.3               4.7
  பசுமைக் கட்சி இருக்கை 1 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 1
% 8.2 2.5 2.1 3.2 2.9 2.3 4.6 3.4 6.0 1.1 2.9 2.8 1.5 3.4
  ஏனையோர் % 0.1 0.8 0.2 0.6 0.2 0.1 0.1 0.3   2.9       0.2
  மொத்தம் 42 34 14 14 121 78 10 11 4 7 1 1 1 338

 

பழமைவாதக் கட்சியின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. புதிய குடிவரவாளர்களை ஏற்றுக் கொள்வதில் பழமைவாதக் கட்சி காட்டிய கடும்போக்கு,  முஸ்லிம் பெண்கள் குடியுரிமை பெறும்போது நிக்காப்பை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும் என்ற அரசின் பிடிவாதம், புதிய குடிவரவாளர்கள் குடியுரிமை பெறும் காலத்தை நீட்டித்தல்,  18 வயதுக்கு மேலானவர்கள் குடும்பத்துடன் சேருவதற்கு தடை போட்டது,  பிரதமர் ஹார்ப்பரின் சர்வாதிகாரப் போக்கு.  இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டன.  மேலும் ஒரு காரணம் இருக்கிறது.  லிபரல் மற்றும் புதிய கட்சி ஆதரவாளர்கள் ஹார்ப்பரை மீண்டும் ஆட்சிக்கு வருவதை எப்பாடு பட்டாலும் தடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் புதிய சனநாயகக் கட்சி ஆதரவளர்களில்  ஒரு பகுதியினர்  கடைசிக் கட்டத்தில் தங்களது வாக்குகளை லிபரல் கட்சிக்குப் போட்டுவிட்டார்கள்.

 

பழமைவாதக் கட்சி தேர்தலில் தோற்றதற்கு மேலும் ஒரு  வலுவான  காரணம் இருக்கிறது.  வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை விரும்பினார்கள். பொதுவாக ஒரு கட்சி இரண்டு தடவைக்கு  மேல் பதவியில் தொடர்ந்தால் மக்களுக்கு அலுப்புத் தட்டிவிடுகிறது.   இதனால் வாக்காளர்கள் அவர்களை அறியாமல் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்.  இதனை ஆங்கிலத்தில்      anti - incumbency factor (ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான போக்கு)  என்பார்கள்.   கனடா நாட்டின் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்  போது  லிபரல் கட்சியும் பழமைவாதக் கட்சியும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வந்துள்ளது தெரிகிறது.  அதனை கீழ்க்கண்ட அட்டவணை 3 காட்டுகின்றது.

 

அட்டவணை

  1.  

    • கட்சி

     

    பிரதமர்

    காலம்

    ஆண்டுகள்

    லிபரல்

    William Lyon Mackenzie King/ Louis St.Laurent  23-10-1935  - 21-06-57        22

    பழமைவாதக் கட்சி

    John Diefenbaker 21-06-1957  -  22-04-1963 6

    லிபரல்

    Lester B.Pearson/PeirreTrudeau 22-04-1963 - 04-06- 1979 16
    பழமைவாதக் கட்சி Joe Clark 4-06-1979   - 03 - 03 - 1980 1

    லிபரல்

    Pierre Trudeau/John Turner 03-03-1980  - 17-09-1984 4
    பழமைவாதக் கட்சி Brian Mulroney/Kim Campbell 17-09-1984   - 04-11-1993 9
    லிபரல் Jean Chretian /Paul Martin 04-11-1993   - 06-02-2006 13
    பழமைவாதக் கட்சி Stephen Harper 06-02-2006   - 19-10-2015 9
    லிபரல் Justin Trudeau 20-10-2015 -  

 

 

இந்த ஆட்சி மாற்றங்கள் வாக்காளர்கள் தலையிடிக்கு தலைகணையை மாற்றுவது போல் படுகிறது.  அரசியல் கட்சிகள் பல வாக்குறுதிகளை அள்ளி வீசித்தான் ஆட்சியைப் பிடிக்கின்றன. ஆனால் எந்தக் கட்சியும் அவற்றை முழுதாக நிறைவேற்றுவதில்லை.

 

இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற  யஸ்ரின் ரூடோ முன்னாள் பீரே ரூடோவின் மகனாவார். கனடிய அரசியல் வரலாற்றில்  ஒரு பிரதமருடைய  மகன்  பிரதமர் பதவிக்கு வந்திருப்பது வரலாற்றில்  இதுவே முதல் தடவை.

கனடாவின் மூன்று முக்கிய கட்சிகளை அவற்றின் பொருளாதாரக் கோட்பாடுகளை வைத்து வலதுசாரி  - இடதுசாரி என ஒருவாறு பிரிக்கலாம். பழமைவாதக் கட்சி வலதுசாரிக் கட்சி எனப் பார்க்கப்படுகிறது. பெரிய தொழில் நிறுவனங்களின் வரியைக் குறைப்பதன் மூலம் முதலீட்டை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்கி  வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம் என்பது இந்தக் கட்சியின் சித்தாந்தமாக இருக்கிறது. இதற்கு மாறாக பெரிய தொழில் நிறுவனங்களின் வரியைக் கூட்டி சிறிய வணிகங்களின் வரியைக் குறைப்பதன் மூலம் வேலை வாய்ப்பையும் உற்பத்தியையும் பெருக்கலாம் என்பது புதிய சனநாயகக்  கட்சியின் கோட்பாடாகும். லிபரல் கட்சி  இந்த இரண்டுக்கும் நடுவில் மத்தியதர வர்க்கத்தின் வரியைக் குறைத்து அதிக சம்பளம் பெறுபவர்களது வரியைக் கூட்டுவது இந்தக் கட்சியின்  பொருளாதாரக் கொள்கையாகும். 

இந்தத் தேர்தலில் பழமைவாதக் கட்சியும்  புதிய சனநாயகக் கட்சியும்  வரவு - செலவுத் திட்டத்தை சமன்செய்வது தங்களது குறிக்கோள் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.   ஆனால் லிபரல் கட்சி மட்டும்  ஆண்டொன்றுக்கு 10 பில்லியன் பற்றாக்குறை வரவு - செலவு திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 30 பில்லியனை  உட்கட்டுமானம், போக்குவரத்து போன்றவற்றுக்கு செலவழிக்கப் போவதாகவும் 2019 இல்  வரவு - செலவு திட்டத்தை சமன் படுத்தப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.    கச்சாய் எண்ணெய் ஏற்றுமதியில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்து வைத்துள்ளது. ஆனால் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி கனடிய பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.  ஒரு பீப்பா எண்ணெய் டொலர் 110 க்கு விற்பனை செய்த காலம் போய் இன்று அதே பீப்பா எண்ணெய் டொலர் 43 க்கு விற்பனை ஆகிறது.  எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நிலைமையை சமாளிக்கலாம் என அரசு நினைக்கிறது.

இந்தத் தேர்தலில் 6 தமிழர்கள் போட்டியிட்டாலும் ஒருவரே கரை சேர்ந்துள்ளார். ஸ்காபரோ றூச்  பார்க் தொகுதியில் லிபரல் கட்சியில் போட்டியிட்ட  கரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 29,906 வாக்குகளை (60 விழுக்காடு) பெற்ற அவர்  அடுத்து  இரண்டாவது இடத்துக்கு வந்த பழமைவாதக் கட்சி  வேட்பாளரை 16,302  பெரும்பான்மை வாக்குகளால்  தோற்கடித்துள்ளார். இந்தத் தொகுதியில்  புதிய சனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்  எஸ்.எம். சாந்திகுமார் 5,164 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

சென்றமுறை ஸ்காபரோ - றூச் றிவர் தொகுதியில் புதிய சனநாயகக் கட்சியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றம் சென்ற இராதிகா சிற்சபைஈசன் இம்முறை மீள்சீர் அமைக்கப்பட்ட  ஸ்காபரோ  வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.  மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அவர் பெற்ற வாக்குகள் 8467 (22 விழுக்காடு) மட்டுமே. அவரது தோல்விக்கு புதிய சனநாயக் கட்சியின் வாக்கு வங்கி இம்முறை சரிந்ததே முக்கிய காரணமாகும்.

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற  338 உறுப்பினர்களில் 211 உறுப்பினர்கள் (63 விழுக்காடு) புதுமுகங்கள். முன் எப்பொழுதும் இல்லாதவாறு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 46 பேர்  இம்முறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் 19   தெற்காசியர், 5 சீனர்கள், 10 பூர்வீக குடி வேட்பாளர்கள் (2011 - 7பேர்)  2 இரானியர்,  ஒரு சோமாலியர் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள்.  கனடாவில் 10 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

தெற்காசிய வேட்பாளர்களில் 10 முஸ்லிம்கள், 5 சீக்கியர்கள் அடங்குகிறார்கள்.  மேலும் தெரிவு செய்யப்பட்ட 338 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண்களின் தொகை 76 இல் இருந்து 88  (338 இல் 26 விழுக்காடு) ஆக உயர்ந்துள்ளது.  புதிய பிரதமர் யஸ்ரின் ரூடோ தனது அமைச்சரவையில் சரிபாதிப் பேர் பெண்கள் என அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஹார்ப்பரின் பழமைவாதக் கட்சி தோற்கடிக்கப்பட்டதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி என்பதில் ஐயமில்லை.  ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்குமா அல்லது புதிய பிரதமர் யஸ்ரின்  லிபரல் கட்சி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என ஆகுமா என்பது போகப்  போகத்தான் தெரியும்.

http://onlineuthayan.com/article/56

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.