Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையசுதந்திர விடயத்தில் இலங்கை சாதகமான திசையில் நகர்கின்றது - பிறீடம்ஹவுஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணையசுதந்திர விடயத்தில் இலங்கை சாதகமான திசையில் நகர்கின்றது - பிறீடம்ஹவுஸ்

30 அக்டோபர் 2015
இணையசுதந்திர விடயத்தில் இலங்கை சாதகமான திசையில் நகர்கின்றது -  பிறீடம்ஹவுஸ்

இணையசுதந்திர விடயத்தில் இலங்கை சாதகமான திசையில் நகர்வதாக பிறீடம்ஹவுஸ் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அமைப்பு இணையசுதந்திரம் தொடர்பாக 65நாடுகளை ஆய்விற்குட்படுத்தியுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம இணையசுதந்திரம் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக வீழ்ச்சியடைந்து வருவது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டு அந்த அமைப்பு இலங்கை,ஜம்பியா ஆகிய இரு நாடுகள் மாத்திரம் இதற்கு விதிவிலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளது.


இலங்கை தொடர்பாக 4 முக்கிய  மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரீடம்ஹவுஸ் தெரிவித்துள்ளது. 2015 ஜனவரியில் ஜனாதிபதியாக மைத்திரிபாலசிறிசேன தெரிவுசெய்யப்பட்டமை,பல இணையத்தளங்களின் மீண்டும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டமை,மனித உரிமை மீறல்கள் குறைவடைந்துள்ளமை,டிஜிட்டல் ஊடகங்களின் மூலமாக செயற்பாடுகள், மக்கள் பங்களிப்பு ஆகியவை அதிகரித்தமை ஆகியனவே இந்த மாற்றங்கள் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் இணையசுதந்திர விடயத்தில் இலங்கை ஓரளவே சுதந்திரமாக உள்ளதாக குறிப்பிடமுடியும். இலங்கையின் புதிய அரசாங்கம் கருத்துச்சுதந்திரம் வெளிப்படைதன்மை,தகவல் அறியும் உரிமை குறித்து தனது அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், தனிப்பட்ட சுதந்திரத்தை வலியுறுத்துபவர்கள் கண்காணிப்பு தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.வடகிழக்கில் படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்வதை கருத்தில்கொள்ளும்போது இது அர்த்தமுள்ளதாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125412/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.