Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாயவே அதிகளவு நிலங்களைக் கொள்ளையிட்டவர்! - அனுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவே அதிகளவு நிலங்களைக் கொள்ளையிட்டவர்! - அனுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு 
[Friday 2015-10-30 08:00]

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் பொதுமக்களை முகாம்களில் அடைத்து விட்டு, அவர்களின் காணிகளை அபகரித்தமையே நாட்டில் இன்றுவரை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் பொதுமக்களை முகாம்களில் அடைத்து விட்டு, அவர்களின் காணிகளை அபகரித்தமையே நாட்டில் இன்றுவரை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் பொதுமக்களை முகாம்களில் அடைத்து விட்டு, அவர்களின் காணிகளை அபகரித்தமையே நாட்டில் இன்றுவரை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

   
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வகையில் நேற்று முன்தினம் கொழும்பில் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து வடக்கில் காணிப் பிரச்சினை அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் இந்த சிக்கல் நிலை உருவாகியது. அங்கும் காணி அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தெற்கில் மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினர். வடக்கில் குரல் எழுப்ப மக்கள் இருக்கவில்லை. அனைவரும் அகதிகளாக முகாம்களில் இருந்த காரணத்தினால் அவர்களின் நிலங்களை பாதுகாக்க முடியாது போய்விட்டது.

இலங்கையில் காணிக்கொள்ளையை மஹிந்த குடும்பமே மேற்கொண்டது. அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவே நாட்டில் அதிகளவு நிலங்களை கொள்ளையடித்த நபராவார். வடக்கில் பொதுமக்களின் நிலங்களை அவரே தக்கவைத்துக்கொண்டார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் நடந்த நில ஆக்கிரமிப்பே இன்றுவரையில் நாட்டில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலும், கடற்படையின் முகாம்களை பலப்படுத்தும் வகையிலும் வடக்கில் பொதுமக்களின் காணிகளை அபகரித்தனர். விரட்டியடிக்கப்பட்ட பொதுமக்களின், காணாமல்போனோ ரின், கைவிடப்பட்ட காணிகள் என அனைத் தும் ஒருசாராருக்கு மட்டுமே சென்றடைந்தது.

யுத்தம் முடிவடைந்தவுடன் அரசாங்கம் முதலில் நிலங்களை உரிய மக்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாது பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் அடைத்துவிட்டு அவர்களது நிலங்களை அபகரிக்க ஆரம்பித்தனர். யுத்தம் முடிவடைந்தவுடன் புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என குறிப்பிடுவதாயின், வடக்கையும் கிழக்கையும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும்.

முதலில் பாதிக்கப்பட்ட அந்த மக்களை உரிய அவர்களது காணிகளில் குடியமர்த்திவிட்டு அதன்பின்னர் ஏனைய வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்க வேண்டும். மீளக்கட்டியெழுப்ப வேண்டியது அந்த பகுதி மக்களின் வாழ்க்கையையும் அவர்களது யதார்த்தமான வாழ்வாதாரத்தையுமே தவிர அவர்களை விரட்டியடித்த இராணுவத்தையும் கடற்படையையும் அல்ல. ஆனால் முன்னைய அரசாங்கம் அதைத்தான் செய்தது. பிரச்சினைகள் அப்படியே இருக்கையில் அரசாங்கம் புதிய பிரச்சினைகளை உருவாக்கியது. ஆகவே இப்போது அந்த பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய காலகட்டம் வந்துள்ளது.

தேசிய பாதுகாப்பு என்பது உரிய இடத்தில் இருக்கும் மக்களை விரட்டியடித்து அவர்களின் பகுதிகளை இராணுவ முகாம்களாக மாற்றுவதல்ல. பொதுமக்களை பாதுகாத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தேசிய பாதுகாப்பாகும். ஆனால் மஹிந்தவும் கோத்தாவும் ஜனநாயகத்துக்கு முரணாகவே செயற்பட்டனர்.

ஆகவே இந்த அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். இராணுவத்தை எங்கு நிலைப்படுத்துவது, பாதுகாப்பு வலயங்களை எங்கு அமைப் பது என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண் டும். இன்னும் வடக்கில் பாதுகாப்பு வலயங்கள் அவசியமா என்பதை சிந்திக்க வேண்டும். அந்தப் பகுதி மக்களுக்கான நிலங்கள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதில் எந்தவித பாகுபாடும் இருக்கக்கூடாது. அதேபோல் அவர்களுக்கான வாழ்வாதார நிலைமை களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நாட்டின் சனத்தொகைக்கு அமைய புதிய காணி சீரமைப்பு திட்டத்தை வகுக்க வேண்டும். விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். அதேபோல் பொதுமக்கள் வாழக்கூடிய பகுதிகள், வீதிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கட்டமைப்பை அரசாங்கம் சீரமைக்க வேண்டும். இந்த அரசாங்கம் இப்போதாவது சரியான கட்ட மைப்பை கையாளவேண்டும் எனக் குறிப் பிட்டார்.http://www.seithy.com/breifNews.php?newsID=143579&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.