Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டை உடன் அறிவிக்குக! - சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் கடிதம்

Featured Replies

விடுதலை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டை உடன்   அறிவிக்குக! - சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின்   பெற்றோர் கடிதம்

"நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதன் பிரதியை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கும் அவர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார். எனினும், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளில் 60 தொடக்கம் 70 பேர் வரையிலேயே பிணையில் விடுவிக்கப்படக் கூடிய சாத்தியம் உள்ளது என்று சட்டமா அதிபர் திணைக்களத்தினர், அரசியல் கைதிகளின் சட்டத்தரணிகளிடம் கூறியுள்ளனர். இந்த நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் மேற்படி கடிதத்தை எழுதியுள்ளனர்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சரியான நிலைப்பட்டை முன்வைக்க வேண்டும். பொது மன்னிப்பு இல்லாவிடில் நிரந்தர தீர்வாக பொது விடுதலையை வலியுறுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு வேறு நிலைப்பாடு குறித்து தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளாகிய நாம் மனவருத்தம் அடைகின்றோம். பொது மன்னிப்புத்தான் சரியான தீர்வு எனச் சிலரும், பொது மன்னிப்பை வழங்க முடியாது; அது போர்க்குற்றச்சாட்டு உள்ளவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என வேறு சிலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இவ்வாறான இரு வேறுபட்ட கருத்துகள் காணப்படுவதால் அவை எந்த வகையில் கைதிகள் விடயத்தில் தாக்கத்தை செலுத்தி நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்? இதனால் எமக்கும், எமது பிள்ளைகளான - உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மனத் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

நாமும், எமது பிள்ளைகளும் ஏமாற்றப்பட்டதாலேயே கடந்த 12 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் கடந்த காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத இழப்புக்கைளை சந்தித்தவர்கள். எஞ்சியிருப்பது சிறையில் உள்ள எமது உறவுகள்தான். புதிய ஆட்சியிலாவது தமிழர்களின் அடிப்படைத் தேவையாவது நிறைவேறும் என நம்பியிருந்தோம், ஆனால், கைதிகளின் விடயத்தில் கூட முன்னேற்றம் இல்லை. 8 - 18 வருடங்கள் சிறையில் வாழ்க்கையைக் கழித்த எமது உறவுகளுக்கு தற்போது பிணை வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையிலும், அனைவருக்கும் பிணை வழங்க முடியாது என்று கூறியிருக்கும் அரசின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன் நிரந்தரத் தீர்வு என்ன என்பதை நீங்கள் தெளிவுபடுத்தவேண்டும் - என்றுள்ளது

 http://malarum.com/article/tam/2015/10/31/12372/விடுதலை-குறித்த-கூட்டமைப்பின்-நிலைப்பாட்டை-உடன்-அறிவிக்குக-சம்பந்தனுக்கு-தமிழ்-அரசியல்-கைதிகளின்.html#sthash.rqvzSm6q.dpuf

 

 

.... மதுரைக்கு சோதனையா?????.....

ம்ம்ம்ம்ம்... ஏறக்குறைய 70 வருடகாலமாக ... அடிக்கடி எமக்கெல்லாம் மொட்டை அடித்து, சந்தனம், குங்குமம் தடவி பூவைத்து தீபம் காட்டி வந்தவர்களுக்கு ... உதெல்லாம் ... ஒரு .............??????????????

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்

அரசியல் கைதிகள் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://virakesari.lk/articles/2015/10/31/அரசியல்-கைதிகள்-மீண்டும்-உண்ணாவிரத-போராட்டத்தில்

  • கருத்துக்கள உறவுகள்

நாமும், எமது பிள்ளைகளும் ஏமாற்றப்பட்டதாலேயே கடந்த 12 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் கடந்த காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத இழப்புக்கைளை சந்தித்தவர்கள். எஞ்சியிருப்பது சிறையில் உள்ள எமது உறவுகள்தான். புதிய ஆட்சியிலாவது தமிழர்களின் அடிப்படைத் தேவையாவது நிறைவேறும் என நம்பியிருந்தோம், ஆனால், கைதிகளின் விடயத்தில் கூட முன்னேற்றம் இல்லை. 8 - 18 வருடங்கள் சிறையில் வாழ்க்கையைக் கழித்த எமது உறவுகளுக்கு தற்போது பிணை வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையிலும், அனைவருக்கும் பிணை வழங்க முடியாது என்று கூறியிருக்கும் அரசின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன் நிரந்தரத் தீர்வு என்ன என்பதை நீங்கள் தெளிவுபடுத்தவேண்டும்

 தேர்வு செய்த மக்கள் அனைவரும் முட்டாள்களா ......?
ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்கினம் ......? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.