Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஸ்வர்யா ராய் திருமணம்

Featured Replies

என்ன இது கிரிக்கட் ஸ்கோர் போல போய்ட்டு இருக்கு இவங்க கல்யாணம்

ஆமா கப்பியக்கா பைனலா கல்யானம் முடிஞ்சுதா இல்லையா..........?

  • Replies 82
  • Views 27.2k
  • Created
  • Last Reply

இன்னும் 1 கிழமையில் இவையின்ட கல்யாணம் நடகாட்டி நம்ம ஜஸ்வர்யாவை மாப்பிக்கு கல்யாணம் பண்ணி வைப்போம் என டைகர்பமிலி தெறிவிக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது கிரிக்கட் ஸ்கோர் போல போய்ட்டு இருக்கு இவங்க கல்யாணம்

ஆமா கப்பியக்கா பைனலா கல்யானம் முடிஞ்சுதா இல்லையா..........?

அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி வானவில். இண்டைக்குதானே கலியாணம்.

கலியாணம் நடக்காட்டி இனி நடக்கிறதே வேற.

இந்தப்பகுதியை இத்தோட விட வேண்டியதுதான்

இன்னும் 1 கிழமையில் இவையின்ட கல்யாணம் நடகாட்டி நம்ம ஜஸ்வர்யாவை மாப்பிக்கு கல்யாணம் பண்ணி வைப்போம் என டைகர்பமிலி தெறிவிக்கிறது.

ராயல் பமிலியும் இப்படி ஒரு அறிக்கை விட்டதா ஞாபகம்

அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி வானவில். இண்டைக்குதானே கலியாணம்.

கலியாணம் நடக்காட்டி இனி நடக்கிறதே வேற.

இந்தப்பகுதியை இத்தோட விட வேண்டியதுதான்

அப்போ தாரளமா இந்த பகுதியை மூடுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேக்-ஐஸ்வர்யாராய் கோலாகல திருமணம்: நேரில் பார்க்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

மும்பை, ஏப். 20-

20abhishekiy7.jpg

பட்டாம்பூச்சி போல் திரையில் மின்னி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை ஐஸ்வர்யாராய்.

இந்தியில் பெண்கள் எத்தனையோ பேர் உலக அழகி பட்டம் வென்றாலும் ஐஸ்வர்யாராய் வெற்றி பெற்ற போது மட்டும் இந்தியாவே மகிழ்ச்சி அடைந்தது.

பெண்கள் ஒருவருக்கொரு வர் கிண்டலடிக்கும் போது நீ என்ன பெரிய ஐஸ்வர்யாராயாப என்று பொறாமைப்படும் அளவுக்கு பேசப்பட்டார்.

ஐஸ்வர்யாராய் உலக அழகிபட்டம் வென்றதும் இயக்குனர் மணிரத்னம் தனது `இருவர்' படத்தின் மூலம் சினிமா உலகத்துக்குள் இழுத்து வந்தார். ஐஸ்வர்யாராயின் கடைக்கண் பார்வை நம் மீது விழாதா என்று இந்தி நட்சத்திரங்கள் இளைஞர்கள் ஏங்கிக் கொண்டிருக்க அபிஷேக்பச்சன் மொத்தமாக ஐஸ்வர்யாராயை கவர்ந்து விட்டார்.

இவர்கள் இடையே நட்பு ஏற்பட்ட போது அபிஷேக்குக்காக ஐஸ்வர்யாராய் சல்மான்கானுடன் இருந்த தனது நட்பை முறித்துக் கொண்டார். அதேபோல் அபிஷேக் கரீஷ்மாவுடனான திருமண ஒப்பந்தத்தையும் கைவிட்டார்.

அபிஷேக்கின் தந்தை நடிகர் அமிதாப்பச்சன் 50 ஆண்டு காலமாக இந்திப்பட உலகில் பேசப்பட்டு வருபவர்.

இதனால் ஐஸ்வர்யாராய் - அபிஷேக்திருமணம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்டது.

திருமண கோஷம், பழைய காதலர்களிடம் இருந்து மிரட்டல் என பல தடைகளை தாண்டி ஐஸ்வர்யாராய் திருமணத்தில் உறுதியாக இருந்தார். பல மாதங்களாக திருமணம் பற்றி பரபரப்பான செய்திகள் வந்து கொண்டே இருந்ததால் ஐஸ்வர்யாராய் - அபிஷேக் திருமணத்தை எளிமையாக நடத்த அமிதாப் விரும்பினார்.

திருமண விழாவில் பங்கேற்க ரசிகர்களுக்கோ, பொது மக்களுக்கோ அனுமதி இல்லை. தங்களது நெருங்கிய நண்பர்கள், திரைஉலக பிரமுகர்கள், உறவினர்கள், நெருக்கமான அரசியல் பிரமுகர்களை மட்டுமே அமிதாப்பச்சன் அழைத்து இருந்தார்.

3 நாட்கள் எளிமையான முறையில் அவரது வீட்டில் இந்து முறைப்படி திருமண சடங்குகள் நடந்தன.

முதல்நாள் சங்கீத கச்சேரியும், 2-வது நாள் மெகந்தி (மருதாணி) இடும் விழாவும் தொடர்ந்து விருந்து, இசை நிகழ்ச்சியும் கோலாகலமாக நடந்தது. ராஜஸ்தானில் இருந்து மெகந்தி கொண்டு வரப்பட்டு ஐஸ்வர்யாராய்க்கு இடப்பட்டது.

இதே சமயம் நண்பர்களுக்கு அபிஷேக்தனது கடைசி நாள் பேச்சலர் விருந்து அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தி சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

இன்று காலை திருமண விழா கோலாகலமாக தொடங்கியது. ஐஸ்வர்யாராய் மணப்பெண் அலங்காரத்துடன் தேவதையாக காட்சி

அளித்தார்.அபிஷேக் பச்சன் மாப்பிள்ளை அலங்காரத்துடன் உற்சாகமாக இருந்தார். தொடர்ந்து திருமண சம்பிரதாயங்கள் நடந்தன. பிற்பகல் வரை சடங்குகள் நடைபெறுகிறது. மாலையில் தாலி கட்டும் நிகழ்ச்சி நடக் கிறது.

திருமணத்தை பார்க்க அமிதாப்பச்சன் வீடு முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் பல அடி தூரத்துக்கு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அமிதாப் வீட்டின் முன்பகுதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அலங்காரப் பந்தல் போடப்பட்டு இருந்தது.

பெரிய கேட்டின் முன் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். தங்கள் அபிமான நட்சத்திரங்களின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

என்றாலும் ரசிகர்கள் அபிஷேக் - ஐஸ்வர்யாராய் படங்களை கையில் ஏந்தியும், ஊர்வலம் நடத்தியும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும் தங்க ளது மகிழ்ச்சியையும் வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

மாலைமலர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணம் நடக்கும்: அமிதாப்பச்சன் வீட்டு முன்பு நடிகை தற்கொலை முயற்சி

மும்பை, ஏப். 20-

அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்-ஐஸ்வர்யாராய் திருமணம் இன்று மாலை நடக்கிறது. மும்பையில் ஜ×கு கடற்கரையில் உள்ள அமிதாப்பச்சன் வீட்டில் கோலாகலமான முறையில் இந்த விழா நடக்கிறது.

இதையொட்டி அமிதாப்பச்சன் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

நேற்று இரவு ஐஸ்வர்யா ராய்க்கு மருதாணி இடும் நிகழ்ச்சி நடந்து கொண் டிருந்தது. அப்போது இந்தி நடிகை ஜன்கவி கபூர் அங்கு வந்தார். அமிதாப்பச்சன் வீட்டுக்குள் நுழைய முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது ஜன்கவி திடீரென பிளேடை எடுத்து தனது மணிக்கட்டில் கிழித்து கொண்டார். கையில் ரத்தம் கொட்டியது. உடனே உஷார் அடைந்த போலீசார் மேற்கொண்டு எந்த செயல லிலும் ஈடுபட விடாமல் மடக்கி பிடித்தனர்.

அப்போது ஜன்கவி "நான் தான் அபிஷேக் பச்சனின் உண்மையான காதலி என்னை ஏமாற்றி விட்டு ஐஸ்வர்யாராயை திருமணம் செய்கிறார். அதனால் தான் தற்கொலை செய்ய போகிறேன்'' என்று கதறி கூச்சல் போட்டார்.

அவரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஜன்கவி இந்தி படங்களில் சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் இந்திபட உலகை ஆக்கிரமித்துள்ள கபூர் குடும்பத்தை

சேர்ந்தவர்.அபிஷேக்பச்சன் நடித்த `துஸ்' என்ற படத்தில் அபிஷேக்குடன் நடனம் ஆடி இருக்கிறார். அப்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதாகவும் பின்னர் அபிஷேக் அவரை மறந்து விட்டு ஐஸ்வர்யாராயை காதலித்ததாகவும் கூறினார்.

எங்கள் காதல் விவகாரம் அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு நன்றாக தெரியும். அபிஷேக்கை நான் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால் என்னை அமிதாப் குடும்பத்தினர் சமாஜ் வாடி கட்சி தலைவர் அமர்சிங் ஆகியோர் மிரட்டியதாகவும் கூறினார்.

இதுபற்றி போலீசார் கூறும் போது "ஜன்கவி போதை மருந்துக்கு அடிமையாகி இருக்கிறார். அவர் கையை அறுத்துக்கொண்ட போது சில தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டு இருந்தார்'' என்று கூறினார்கள்.

ஜன்கவி தற்கொலை முயற்சி திருமண வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலைமலர்

கப்பி அக்கா இப்போ பைனலா கல்யாணம் நடந்திட்டுதா...........?

நடந்தா சொல்லாதீங்க, நடக்காட்டி சொல்லுங்க என்னோட முயற்ச்சிய தொடருரேன்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,

எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது,

,.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn31sy1.jpg

fpn31sy1.jpg

கடைசியா ஒருமாதிரி கரை சேர்ந்திட்டா :P

Edited by Kuddithambi

fpn31sy1.jpg

அம்மாடியோவ் ஐஸ் பாட்டி ஒரு மாதிரியா கரை சேந்திட்டாவா :P

ash1_marked-thumb.jpg

ash2_1_marked-thumb.jpg

ash3_0_marked-thumb.jpg

abhi-ash-wedding-pi~_marked-thumb.jpg

வாழ்த்துக்கள் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா வுக்கு திருமணம் நடந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்

ஐஸ்வர்யா வுக்கு திருமணம் நடந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்

அப்பாடா எனியாவது இந்தப் இளம் பசங்க எங்களையும் கொஞ்சம் திரும்பிப் பாப்பாங்கள் :P

fpn31sy1.jpg

ஏன் ஐஸ்வர்யராய் இந்த பக்கம் பார்க்கிறா இல்லை? இந்தத் திருமணத்தில் இஸ்டம் இல்லையோ?

கடைசியா ஒருமாதிரி கரை சேர்ந்திட்டா :P

சேர்க்க மிகவும் பாடுபட்ட கப்பி அக்காவுக்கு வாழ்த்துகள்

ஐஸ்வர்யா வுக்கு திருமணம் நடந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்

அவாவுக்கு திருமணம் நடந்ததிற்கு நீங்கள் ஏன் இவ்வளவி சந்தோசபடுறீங்க :o

அப்பாடா எனியாவது இந்தப் இளம் பசங்க எங்களையும் கொஞ்சம் திரும்பிப் பாப்பாங்கள் :P

என்ன உங்களையோ

:(

அம்மாடியோவ் ஐஸ் பாட்டி ஒரு மாதிரியா கரை சேந்திட்டாவா :P

அடுத்தது ரசிமாமியையும் கரை சேர்த்தா தான் நம்மளுக்கு நிம்மதி தலை

:lol:

சுவீட் தமிழிச்சி அக்கா நீங்களா திருமணத்திற்கு கமரா,எல்லா படங்களும் நல்லா இருக்கு

வட இந்தியப் பாரம்பரியப்படி கோலாகலமாக அபிஷேக்- ஐஸ்வர்யா திருமணம்

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் முன்னாள் உலக அழகியும் பொலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா திருமணம், வட மாநில பாரம்பரியப்படி வெள்ளிக்கிழமை இரவு கோலாகலமாக நடந்தது. அமிதாப்பச்சன், ஜெயா பச்சன் மற்றும் நெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

மும்பையில் கடந்த மூன்று நாட்களாக இந்தத் திருமண விழா வெகு விமரிசையாக நடந்தது. கடந்த புதன்கிழமை, அமிதாப் பச்சனின் `பிரதிக்ஷா' பங்களாவில் `சங்கீத நிகழ்ச்சி' நடந்தது. மறுநாள் ஐஸ்வர்யாராயின் `லா மேர்' பங்களாவில் `மெகந்தி' இடும் சடங்கு நடந்தது. `பங்க்ரா' நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சியுடன், ராஜஸ்தானில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட `மெகந்தி'யை அபிஷேக்கின் சகோதரி, ஸ்வேதா நந்தா, நடிகை சோனாலி பிந்த்ரே கொண்டு வந்தனர். `மெகந்தி இடும்' விழாவின் போது மணப்பெண் ஐஸ்வர்யா, அரக்கு மற்றும் தங்க ஜரிகை புடவை அணிந்து ஜொலித்தார்.

இருவரின் திருமண நிகழ்ச்சி காலை மிக உற்சாகமாக தொடங்கியது. பிற்பகல் 2.25 மணிக்கு மணப்பெண் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன், அமிதாப்பின் `ஜல்சா' பங்களாவுக்கு வந்து சேர்ந்தார். சாம்பல் நிற சொகுசுக் காரில் அவரும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் `வால்வோ' பஸ்களிலும் வந்தனர். மாலை 5 மணிக்கு திருமண ஊர்வலம் தொடங்கியது. தங்கத்தில் `எம்ப்ராய்டிரி' செய்யப்பட்ட ஷெர்வானி உடையில், முகத்தை மல்லிகை பூச்சரம் மறைக்க, மணமகன் அபிஷேக் குதிரை மீது அமர்ந்து வந்தார். பாதுகாப்புக் கருதி, திருமண ஊர்வலத்தில் வழக்கமாக நடக்கும் ஆடல், பாடல்கள் இடம்பெறவில்லை. ஆனால், பாண்ட் வாத்தியக் குழுவினர் அபிஷேக் நடித்த படங்களின் பிரபலமான பாடல்களை இசைத்தபடி வந்தனர். ஊர்வலம் தொடங்கிய `ஜல்சா' பங்களாவில் இருந்து சில தெருக்கள் தள்ளி இருந்த `பிரதிக்ஷா' பங்களா வரை ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அதுதவிர, அமிதாப் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த தனியார் `பாதுகாப்பு' ஆட்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பகுதியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங், சமாஜ்வாடி கட்சியின் அமர்சிங், பொலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், அஜய் தேவ்கான், கஜோல், ரிஷி கபூர், நீடு கபூர் மற்றும் அமிதாப்பின் நெருங்கிய நண்பர்களான அனில் அம்பானி மற்றும் டினா அம்பானி உட்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். சல்மான்கான், விவேக் ஓபராய், ஷாரூக்கான் உள்ளிட்டோர் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.

திருமணத்திற்காக விசேஷ பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பந்தல் முழுவதும் `குளிரூட்டி வசதி செய்யப்பட்டு இருந்தது. சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிற மலர்களால் திருமணப் பந்தல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தங்கம் மற்றும் பச்சை நிறத்திலான திரைகள் பந்தலைச் சுற்றி கட்டப்பட்டு இருந்தன. ஐஸ்வர்யா திருமணத்தின் போது அணிந்த விலை உயர்ந்த தங்க ஜரிகை கொண்ட `பட்டா' புடவை ஒரிசாவில் நெய்யப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெற்ற சதுர்புஜ மெகர் என்பவர் மூன்று மாதங்களில் இந்த புடவையை நெய்து முடித்தார். அபிஷேக் - ஐஸ்வர்யா திருமணத்தின் போது ம.பி. குஜராத், மேற்கு வங்கம் மற்றும் காசியைச் சேர்ந்த 11 புரோகிதர்கள் மந்திரங்கள் ஓதினர். இவர்களில் ஒருவரான ம.பி. புரோகிதர் வாசுதேவ சாஸ்திரி கூறுகையில்; `திருமணத்தின் போது, வங்காளி மற்றும் குஜராத்தி மொழி புரோகிதர்கள் சடங்குகளைச் செய்தனர். நான்கு வேதங்களில் இருந்து மந்திரங்கள் ஓதப்பட்டன' என்றார்.

தினக்குரல்

அபிஷேக்குக்கும் தனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாக தற்கொலை முயற்சியில் நடிகை

அபிஷேக் பச்சனுக்கும் தனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாகக் கூறி, அமிதாப் வீட்டின் முன்புறம் நடிகை ஒருவர் தற்கொலை முயற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையைச் சேர்ந்தவர் ஜானவி கபூர். அபிஷேக் நாயகனாக நடித்த படமான `துஸ்' என்ற படத்தில் சிறிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் மும்பையின் புறநகர்ப் பகுதியான ஜுகுவில் உள்ள அபிஷேக்கின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை காலை வந்தார்.

கையில் காயம் தனது கையின் மணிக்கட்டில் கத்தியால் காயப்படுத்திக் கொண்டு தனக்கும் அபிஷேக் பச்சனுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாகக் கூறி அமர்க்களம் செய்தார். ஜானவியின் இந்த அமர்க்களத்தால், அபிஷேக்- ஐஸ்வர்யாவின் திருமண ஏற்பாட்டு நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே பொலிஸுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஜானவியை அழைத்துச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது காயத்திற்கு சிகிச்சை அளித்த பிறகு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

காவல் நிலையத்தில் ஜானவி எழுத்து மூலம் புகார் அளித்தார்.அதில் அபிஷேக் பச்சனை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தேன். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பழகி வந்தோம். கடந்த ஆண்டு டிசம்பரில் என்னைத் திருமணம் செய்து கொண்டார் அவர் எனக் கூறியிருந்தார்.

அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற ஜானவி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும் தனக்கும் அபிஷேக்கிற்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் முடிந்து விட்டதாகவே கூறினார்.

திருமணம் முடிந்ததற்கான அத்தாட்சியைக் காட்ட முடியுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ` ஆதாரத்தைக் காட்ட மாட்டேன்' என்று மறுத்து விட்டார்.

மேலும், அபிஷேக் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். ஆனால் ஐஸ்வர்யா ராயை மட்டும் மணம் முடிக்கக் கூடாது என்றும் அழுத்தமாக ஜானவி கூறினார்.

இதைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சித்ததாக ஜானவியைப் பொலிஸார் கைது செய்தனர். ஆனால் அவர் ரூ.10 ஆயிரம் செலுத்தி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

மேலும் இது தொடர்பாக பொலிஸ் தரப்பில் கூறப்படுவது;

ஜானவி போதைப் பொருள்களுக்கு அடிமைப்பட்டுள்ளார். அபிஷேக் வீட்டின் முன்பு அமர்க்களம் செய்த போது கூட அவர் தூக்கமாத்திரை சாப்பிட்டிருந்தார்.

அவரது வாக்குமூலத்தை டேப்பில் பதிவு செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது.

தனக்கும் அபிஷேக்கிற்கும் மணம் முடிந்து விட்டதாகக் கூறிவரும் ஜானவி, அதற்கான எவ்வித ஆதாரத்தையும் தங்களிடம் சமர்ப்பிக்கவில்லை எனப் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே ஜானவியின் மாமா எனக் கூறும் கல்பே சஜித் என்பவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜானவிக்கும் கல்பே ஹுசைன் என்பவருக்கும் 1997 ஆம் ஆண்டே திருமணம் முடிந்துவிட்டதாகக் கூறினார்.

இது குறித்து ஜானவியிடம் நிருபர்கள் கேட்டதற்கு நான் ஒரு இந்தியப் பெண்; எப்படி இரு தடவைகள் திருமணம் செய்து கொள்ள முடியும் எனக் கூறினார்.

abi9-l.jpg

தினக்குரல்

:( ஐஸுக்கு ஆப்பா..........? :) :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெக்னிக்கலாக' பார்த்தால் ஐஸ்.,க்கு அபி, 4வது கணவர்

மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கு, அபிஷேக் பச்சன் நான்காவது கணவர் தெரியுமா? ரொம்பவும் டென்ஷனாகி விடாதீர்கள்; "டெக்னிக்கலாக' பார்த்தால், இது உண்மை தான்.

உலகமே வியந்து பார்த்த பாலிவுட் சூப்பர் ஜோடி ஐஸ்வர்யா ராய் அபிஷேக் திருமணம், பல தடைகளை தாண்டியே நடந்துள்ளது. "ஐஸ்வர்யாவுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது; அதனால், அவருக்கு அபிஷேக் பச்சனுடன் திருமணம் செய்து வைக்கும் முன், தோஷம் நீங்க, மரபுப்படி, மூன்று திருமணங்கள் நடக்க வேண்டும்' என்று அமிதாப் பச்சன் குடும்ப ஜோதிடர்கள் கூறினர்.

"மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், அரச மரம், வாழை மரம் மற்றும் கடவுளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சடங்கை செய்த பின்னர், பார்த்து வைத்த மணமகனுடன் திருமணம் நடத்த வேண்டும். அப்படி செய்தால், மாங்கல்ய தோஷம் நீங்கி, தம்பதிகள் எந்த பிரச்னையுமின்றி, வாழ்வர்' என்றும் ஜோதிடர்கள் கூறினர். இதையடுத்து, வாரணாசியில் அரச மரம், பெங்களூரில் வாழை மரம் மற்றும் அயோத்தியில் கடவுளுடன், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடத்தும் வகையில் சடங்குகளை பச்சன் குடும்பம் நிறைவேற்றியது. அதன் பின்னர், அபிஷேக் பச்சனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார் ஐஸ்.,"இப்படி செய்வதால், ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக், "டெக்னிக்கலாக' பார்த்தால், நான்காவது கணவர்; மாங்கல்ய தோஷம் உள்ள பெண்களுக்கு, இப்படி மூன்று வித திருமண சடங்குகளை செய்து நிவர்த்தி செய்ய முடியும் என்பதற்கு ஐஸ்வர்யா ராய் முன்னுதாரணமாகி விட்டார்' என்று மும்பை ஜோதிடர்கள் கூறினர்

தினமலர்

அப்பாடா எனியாவது இந்தப் இளம் பசங்க எங்களையும் கொஞ்சம் திரும்பிப் பாப்பாங்கள் :P

என்ன உங்களையோ

:o

ரியூப் லைட்.... உது காப்பியக்காவின் ஏக்கம்... :angry:

ரியூப் லைட்.... உது காப்பியக்காவின் ஏக்கம்... :angry:

ஓ அப்படியா ஒரு நிமிசத்தில நான் பயந்தே போனேன்

:o

ஏங்க கதைக்கிறதுக்கு நடுவுள்ள "இலங்கைக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்கியதன் மூலம் ஆறரைக்கோடி தமிழரையும் இந்தியா உதாசீனப்படுத்தி விட்டது" பக்கமும் போய் ஏதாவது உருப்படியா செயலாம். யாசிச்சி பாருங்க.

யாருக்கு கல்யாணம் ஆனா என்ன, நம்ம சாப்பாட்டுக்கு நாமதான் சம்பாதிக்கனும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யாராய் திருமணபடம் இண்டர்நெட்டில் பரவியது: அமிதாப்பச்சன் அதிர்ச்சி

(படங்கள் உள்ளே)

சமீபத்தில் ஐஸ்வர்யாராய்- அபிஷேக்பச்சன் திருமணம் மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பிரதிக்ஷா பங்களாவில் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் சில முக்கிய பிரமுகர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

இத்திருமணத்தை படம் பிடிக்க அமிதாப்பச்சன் பத்திரிகை புகைப்பட கலைஞர் களை அனு மதிக்கவில்லை.

திருமணத்தை யாரும் படம் பிடித்து விடக் கூடாது என்பதில் அமிதாப்பச்சன் தகுந்த முன்னேற்பாடுகளை செய்திருந்தார்.

இதன்படி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இது தவிர திருமணத்தின் போது யாரும் போட்டோ எடுக்கக் கூடாது என்று தடை விதித்திருந்தார். அதை கண்காணிக்கவும் பாதுகா வலர்கள் சுற்றிலும் நிறுத்தி இருந்தார்.

ஆனால் இதையெல்லாம் மீறி அமிதாப்பச்சன் உறவினர் ஒருவர் தனது கேமரா செல்போன் மூலம் ரகசியமாக திருமண காட்சிகளை படம் பிடித்தார்.

பின்னர் அதனை இன்டர் நெட்டில் வெளியிட்டார். இதன் மூலம் பல்வேறு இணைய தளங்களுக்கு திருமண படங்கள் பரவியது.

இதையறிந்ததும் அமிதாப் பச்சன் கடும் அதிர்ச்சி அடைந்தார். இன்டர் நெட் டில் திருமண படங்களை வெளியிட்ட உறவினரை நேரில் அழைத்து கண்டித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

நான் எனது மகனின் திருமண படங்களை பத்திரிகை யாளர்களுக்கு நாங்களே எடுத்துக் கொடுக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் நாங்கள் கொடுப்பதற்கு முன்பே திருமண படங்கள் பத்திரிகைகள் மற்றும் இன்டர் நெட்டில் வெளியானது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இதுபற்றி எனது உறவினர்களிடம் விசாரித்த போது ஒருவர் படம் பிடித்ததை கண்டு பிடித்தேன்.

அவரை அழைத்து எனது அனுமதி இல்லாமல் எப்படி இன்டர் நெட்டில் வெளியிடலாம் என்று கேட்டேன். அவர் என்னிடம் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரிக்கு இ-மெயிலில் மூலம் திருமண படங்களை அனுப்பியதாகக் கூறினார்.

அவரது சகோதரி அதை மற்றவர்களுக்கு அனுப்பி இருக்கிறார். அவர்கள் அப்படங்களை இன்டர் நெட்டில் பரவ விட்டுள்ளனர். இந்த சம்பவம் என் மனதை கடுமையாகப் பாதித்தது.

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.

lankasri1wr2.jpg

lankasri2ke1.jpg

lankasri3eq5.jpg

lankasri4kf9.jpg

ic2xm8.jpg

ic5ih5.jpg

ic9by6.jpg

Viduppu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.