Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பூரண ஹர்த்தால்

Featured Replies

யாழில் பூரண ஹர்த்தால்
யாழில் பூரண ஹர்த்தால்
யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் நடவடிக்கையினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. 
 
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
இதற்கு அமைய யாழ். மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், பல்கலைக்கழம் என்பன மூடப்பட்டுள்ளதுடன், யாழ் நகரம் உட்பட யாழ் மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகின்றது.
 
யாழ் நகரில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதால் மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
ஹர்தாலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர், விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
ஹர்தாலை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்பதில் பாதுகாப்பு தரப்பினர் மும்முரமாக தமது கடமைகளைச் செய்கின்றனர்.
 
எனினும் மக்களின் அத்தியாவசியமான வைத்தியசாலைச் சேவைகள் வழமைப்போல் இயங்குவதுடன், தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
 
இதனால் வெளிமாட்டங்களில் இருந்து யாழ். மாவட்டத்திற்கான போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்
 
13-11-2015 09:56 AM
Comments - 0       Views - 230

article_1447389185-unnamed-%281%29.jpg

-ரொமேஷ் மதுசங்க

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வடக்கு-கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கபடுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இந்த ஹர்த்தாலை முன்னெடுக்கின்றனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட வட, கிழக்கு மாவட்டங்களில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

வன்னி மாவட்டம்

article_1447389210-unnamed-%282%29.jpg

article_1447389218-unnamed-%283%29.jpg

article_1447389226-unnamed-%284%29.jpg

article_1447389235-unnamed.jpg

மட்டக்களப்பு-  வடிவேல் சக்திவேல்  எம்.எஸ்.எம்.நூர்தீன்பேரின்பராஜா சபேஷ்எஸ். பாக்கியநாதன்,எஸ்.சபேசன்,வா.கிருஸ்ணா

article_1447389847-1.jpg

article_1447389859-2.jpg

article_1447389871-3.jpgarticle_1447389883-4.jpg

article_1447390920-1.jpg

திருகோணமலை -வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்       

article_1447391060-unnamed.jpg

article_1447393017-unnamed.jpg

அம்பாறை -எஸ்.கார்த்திகேசு

article_1447393107-unnamed.jpg

- See more at: http://www.tamilmirror.lk/159002/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-#sthash.NNYom7Ot.dpuf

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்!

 

harthal%2077878d.jpg

 

harthal%2077881d.jpg

 

harthal%2077883d.jpg

 

batti%2077errr.jpg

 

batti%2078errr.jpg

batti%2079errr.jpg

  • தொடங்கியவர்
ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம்
 
13-11-2015 01:07 PM
Comments - 0       Views - 33

article_1447400580-jaffna-harthal-%287%2

-எம்.றொசாந்த்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரியும், வடமாகாணம் முழுவதுமாக இன்று வெள்ளிக்கிழமை (13) அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலால் யாழ்ப்பாணம் முடங்கியது.

இந்த ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அழைப்பு விடுத்திருந்தன.

காலையில் ஒன்றிரண்டு பஸ் சேவைகள் நடத்தப்பட்ட போதும் அதன்பின்னர், எவ்வித பஸ் சேவைகளும் நடத்தப்படவில்லை. கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. அரச நிறுவனங்களிலும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ளது. 

அவசர தேவை கருதி ஓரிரு மருந்தகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன. மற்றைய அனைத்தும் செயலிழந்துள்ளன.

article_1447400611-jaffna-harthal-%286%2

article_1447400627-jaffna-harthal-%285%2

article_1447400641-jaffna-harthal-%284%2

article_1447400654-jaffna-harthal-%283%2

article_1447400672-jaffna-harthal-%282%2

- See more at: http://www.tamilmirror.lk/159027/%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A3%E0%AE%AE-#sthash.KmK6jJB6.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.