Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டிற்குள் சென்று 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை! கிளிநொச்சியில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிற்குள் சென்று 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை! கிளிநொச்சியில் சம்பவம்
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2015, 04:30.42 AM GMT ]

corocodail_001.jpg

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை காப்பற்றி உள்ளார்.
எனினும் சிறுமி காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் பெய்துவரும் கடும் மழையால் வெள்ள நீர் மற்றும் வான் நீர் என்பன மக்கள் குடியிருப்பினூடு பாய்ந்து வருகிறது.

வெள்ள நீருடன் சேர்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்கு பெரிய அளவிலான முதலை ஒன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள வீடுன்றில் புகுந்தே இச் சிறுமியை தாக்கியுள்ளது.

இச் சிறுமி கனகலிங்கம் விதுசா எனவும் இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவி எனவும் தெரிய வருகிறது.

இது தொடர்பில் சிறுமியின் அப்பா தெரிவிக்கையில்,

தான் காணும்போது மகளின் தலை முதலையின் வாயில் இருந்ததாகவும் தான் ஓடிச்சென்று சத்தமிட்டவாறு மகளின் தோளை பிடித்து இழுத்து காப்பாற்றியதாகவும் மகளின் தலை, உடம்பு மற்றும் கால்களிலும் காயங்களை ஏற்படுத்தி விட்டதாக கூறினார்.

http://www.tamilwin.com/show-RUmtzBSYSVev3G.html

கிளிநொச்சியில் வௌ்ளத்தில் சென்ற முதலை, சிறுமியின் தலையை கவ்வியது

 

கிளிநொச்சியில்  வௌ்ளத்தில் சென்ற முதலை, சிறுமியின் தலையை கவ்வியது - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-



கிளிநொச்சியில்  வௌ்ளத்தில் சென்ற முதலை உறக்கத்தில் இருந்த சிறுமியின் தலையை கவ்வியது.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் வந்த முதலை ஒன்று வீட்டில் உறக்கத்தில் இருந்த சிறுமியின் தலையை கவ்விய போது தந்தையின் முயற்சியினால் காப்பற்றப்பட்டு உள்ளார்.
 
இது தொடா்பில் மேலும் தெரிய வருவதாவது இன்று சனிக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு  இரத்தினபுரம் பாலத்திற்கு அருகில் வசி்த்து வரும் கனலிங்கம் என்பவரின் தற்காலிக வீட்டினுள் புகுந்த முதலையே அவரது 14 வயது மகளான விதுசா என்பரின் தலையை கவ்வியுள்ளது.
 
மகளின் சத்தம்“ கேட்டு தந்தை  விழித்த போது  மகளின் தலை முதலையின் வாய்க்குள் இருந்துள்ளது. பதற்றம்  அடைந்த அவா் முதலையுடன் போராடி மகளை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார். இதில் சிறுமி படுகாயம் ஏற்பட்ட நிலையில் கிளிநொச்சி மவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார்.


இவா்கள் வசிக்கும் இடம் ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தினால் மூழ்கும் பிரதேசமாகும்.

கிளிநொச்சி முல்லைத்தீவில் நேற்றைய தினம் கடும்மழை காரணமாக 30 வீடுகள் காற்றில் பறந்தன-

கிளிநொச்சி முல்லைத்தீவில் நேற்றைய தினம் கடும்மழை காரணமாக 30 வீடுகள் காற்றில் பறந்த்துடன் 150 ற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்த்தோடு 75 குடும்பங்கள் இடப்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
 
வட பகுதியில் நிலவும்மழையுடன் கூடிய சீரற்ற கால நிலைகாரணமாக நேற்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் வீசிய மினிச் சூறாவளி காரணமாக 30 வீடுகள் முழுமையாக சேதமடைந்த்தோடு ,பொன்னகர் பகுதியில்  குளம் ஒன்று வான் பாய்வதனால் அதிகளவான வீடுகளிற்குள் மழை நீர் உட்புகுந்துள்ளதாகவும்  இதனால் வீடுகளை இளந்த 30குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியுள்ளனர்.


இதேவேளை நீர் புகுந்த வீட்டின் உரிமையாளர்கள் தொடர் காலநிலை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் கிளிநொச்சி மாவட்ட த்தில் மட்டும் ஒரே நாளில் 150 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன் இரணைமடுக்குளத்திற்கு கடந்த 20 மணித்தியாளத்தில் 4 அடி நீர் வந்துள்ளதாகவும் அரச அதிபர் சு.அருமைநாயகம் , ஊடகங்களிற்குத் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125914/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.