Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதிகள் விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் உதவி கோரப்படும்

Featured Replies

151115175851_sri_lanka_tna_512x288_bbc_n

இலங்கை சிறைச்சாலைகளில் கடந்த 9 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற தமிழ்க் கைதிகளின் விடுதலை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் வரும் 17 ஆம் திகதி கூடி பேச்சு நடத்தி முடிவெடுக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமானய மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார்.

வவுனியாவில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.
வவுனியா சுவர்க்கா விடுதியில் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததன் பின்னர், செய்தியாளர்களிடம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் தகவல் வெளியிட்டார்.
செவ்வாய்க்கிமை நடைபெறும் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொது அமைப்புக்களுடனும் கைதிகளின் விடுதலைக்காக ஜனநாயக வழிமுறையில் எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி கலந்தாலோசிக்கப்படும் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்க் கைதிகளின் விடுதலைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுடனும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், புளொட் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம், முன்னாள் மன்னார் நகர சபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/11/151115_tna_prisoners

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் யாரையும் வெளியிலை விடமாட்டான். அடுத்த தேர்தல் வரைக்கும் சும்மா ஒரு பம்மாத்துக்கு கூட்டங்கள் கண்டனப்பேரணிகள் நடத்த வேண்டியதுதான்... பழக்கப்பட்ட விசயமும் அதுதானே:grin:

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகள் விவகாரம்: நாளை தீர்க்கமான முடிவுகளை அறிவிப்போம் - கூட்டமைப்பு! 

"தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாத காரணத்தினால் அவர்களின் போராட்டம் சிறைச்சாலைகளில் தொடர்கின்றது. இந்நிலையில், கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டியுள்ளது. இது தொடர்பான தீர்க்கமான முடிவுகளை எதிர்வரும் நாளை செவ்வாய்க்கிழமை கூட்டமைப்பு அறிவிக்கவுள்ளது. இந்த முடிவுகளுக்கு ஜனாதிபதியும், இந்த அரசுமே முழுப்பொறுப்பாகும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குகான கூட்டம் வவுனியா சுவர்க்கா விருந்தினர் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுடைய தலைவர்கள், சிறைகளிலே நீண்ட நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் இன்று (நேற்று) மாலை கூடி ஆராய்ந்தோம். அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யவேண்டும் என்று எங்களுடைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரச தரப்பினரை வற்புறுத்தி வந்துள்ளார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் கைதிகளை நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்வேன் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த மாதம் சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் தங்களுடைய போராட்டத்தை நிறுத்தியிருந்தார்கள்.

ஆனால், ஜனாதிபதி வாக்குறுதி அளித்தவாறு கடந்த 7ஆம் திகதி வரைக்கும் அந்தக் கைதிகளை விடுதலை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதற்கு முதல் இந்த மாதம் 5ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர், சட்டமா அதிபருடைய உயர் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் எனப் பலர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. 32 கைதிகள் முதல் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக 20ஆம் திகதிக்கு முன்னராக மேலும் 30 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். மேலும் 68 கைதிகள் தொடர்பில் அமைச்சரவைக்குழு ஒன்று மிக விரைவாகக் கூடி ஆராய்ந்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அறிவிக்கும் என்றும், எஞ்சிய அதாவது நீதிமன்றத்தாலே குற்றம் காணப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட கைதிகள் சம்பந்தமாக ஜனாதிபதி - பிரதமர் ஆகியோர் பேசி அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்றும் இந்தச் சந்திப்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஆனால், 8ஆம் திகதி காலை 31 கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தியபோது சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அவர்களுக்குப் பிணை வழங்கவேண்டும் என்ற உத்தரவு நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர்களைப் பிணையில் விடுதலை செய்யப்படுவதில் இழுபறி ஏற்பட்டிருந்தது. அன்றைய தினம் மதியத்திற்குப் முன்னர் பிரதமர், அக்கைதிகளை உடனடியாகப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. மறுபடி கைதிகள் மதியமளவில் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். 20ஆம் திகதிக்கு முன்னர் ஏனைய 30 கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எங்களிடம் பிரதமர் தெரிவித்திருந்தார். எதுவாக இருந்தாலும் அந்தக் கைதிகள் 20ஆம் திகதிக்கு முன்பு விடுதலை செய்யப்படுவார்கள் என்று எங்களால் திட்டவட்டமாகத் தெரிவிக்க முடியாது. இந்த இழுபறிகள் காரணமாகவும் கைதிகள் நம்பிக்கை இழந்த காரணத்தினாலும் அவர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள்.

அப்படி அவர்கள் நம்பிக்கை இழந்த பிறகு எங்களுக்கும் இந்த அரசு மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கியது. ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி வருவதால் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் பொதுமக்கள் மற்றும் அனைத்து தமிழ்க் கட்சிகள், அமைப்புகளுக்கும் நாங்கள் அழைப்புவிடுத்து நேற்றுமுன்தினம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு முழுவதும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டோம். இந்தப் போராட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியை எவ்வளவு தூரம் நம்பிக்கையோடு அமைக்க வடக்கு, கிழக்கு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்களோ அந்த மக்கள் இன்றைக்கு ஒரு பொது வேலை நிறுத்தத்தை வடக்கு, கிழக்கு முழுவதும் நடாத்தியிருக்கின்றார்கள். இதன் தாக்கத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவேண்டும்;. அதனடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவேண்டும் என்று நாங்கள் இப்பொழுதும் வற்புறுத்திக் கேட்கின்றோம். ஆனால், அவர் அப்படிச் செய்வாரா என்ற ஐயம் எங்களுக்கு எழுகின்றது. இதனால் இன்றைய (நேற்றைய) இந்தக் கூட்டத்திலே நாங்கள் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று நாளை செவ்வாய்க்கிழமை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கூட்டமைப்பினுடைய தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தீர்மானம் எடுக்கவேண்டும் என்ற முடிவை எடுத்தோம். செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் நாங்கள் கூடுவதாகத் தீர்மானித்துள்ளோம். வவுனியாவில் நடைபெறவுள்ள அந்தக் கூட்டத்திலே எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி அறிவிப்போம். அன்று நாங்கள் மிகவும் திட்டவட்டமாக முடிவுகளை எடுத்துத் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம். அதற்கு முன்னதாக நாங்கள் பொது அமைப்புக்களுடன் பேசவுள்ளோம்.

வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாங்கள் எவ்வாறு ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி பொது அமைப்புகளின் ஆலோசனைகளைப் பெறவுள்ளோம். எமது இந்த முடிவுகளுக்கான பொறுப்பை ஜனாதிபதியும், இந்த அரசும் ஏற்க வேண்டும். சிறைகளிலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அதற்கும் இந்த ஜனாதிபதியும், இந்த அரசும் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்" - என்றார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பவான் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

http://malarum.com/article/tam/2015/11/15/12514/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.