Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுத்திட்டம் தந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது : கிராம மக்கள் சரவணபவன் எம்.பியிடம் கதறல்

Featured Replies

வீட்டுத்திட்டம் தந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது : கிராம மக்கள் சரவணபவன் எம்.பியிடம் கதறல்
 
 
வீட்டுத்திட்டம் தந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது : கிராம மக்கள் சரவணபவன் எம்.பியிடம் கதறல்
போர் முடிவடைந்து 6வருடங்களில் நிரந்தர வீடுகள் அமைத்துத் தந்திருந்தால் இப்போது நாங்கள் இப்படி மழை வெள்ளத்துக்கு இடம்பெயர வேண்டி வந்திருக்காது என்று தமது சோகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் கொட்டித் தீர்த்தனர் கிளிநொச்சி, உழவனூர் மற்றும் விசுவமடு, நாதன் திட்டக் கிராமங்களின் மக்கள்.
 
கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையை அடுத்து உழவனூர் மற்றும் நாதன் திட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாடசாலை மற்றும் தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயம் என்பவற்றில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
 
உழவனூரைச்  சேர்ந்த 268 குடும்பங்களைச் சேர்ந்த 972 பேர் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியுள்ளனர்.அவர்களுக்கு பிரதேச செயலகத்தால் சமைத்த உணவு வழங்கப்படுகிறது.நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று நேரில் சென்று அவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
 
இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியிருந்த அனைவருக்கும் சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நேற்றுச் செய்யப்படவில்லை என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.பாடசாலையில் போதிய இடமின்மை காரணமாக, நண்பர்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்கியவர்களுக்க சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படவில்லை என்று மக்கள் குறைபட்டனர்.
 
நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இது தொடர்பில் பிரதேச செயலரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததை அடுத்து முகாமில் தஞ்சமடைந்த அனைவருக்கும் சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலரால் செய்யப்பட்டன.
 
நாதன் திட்டக் கிராமத்தில் உள்ள மொத்தம் 300 குடும்பங்களில் 256 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் இடம்பெயர்ந்து தென்னிந்தியத் திருச்சபையின் தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்;.நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களையும் நேரில் சென்று பார்த்து பேசினார்.
 
மீளக்குடியமர்ந்து 6ஆண்டுகள் ஆகிவிட்டபோதும்  தமக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படாமல் இருப்பதே ஒவ்வொரு ஆண்டும் தாம் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக் காரணம் என்று இரு கிராமத்துமக்களும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் குறைபட்டனர்.காணிப் பிரச்சினையைக் காரணம் காட்டி அதிகாரிகள் தமது கிராமங்களுக்கு 
வீட்டுத் திட்டங்கள் எவற்றையும் தருவதில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
 
நாங்கள் 20 தொடக்கம் 40 வருடங்களாகக் குடியிருக்கும் காணிகள் எங்கள் பெயரில் பதியப்படவில்லை என்கிற காரணத்தைக் கூறி எங்களுக்கு இன்னமும் வீட்டுத்திட்டம் தரப்படவில்லை.இதனால் நிரந்தர வீடு இன்றி நாம் அல்லாடுகிறோம்.நிரந்தர வீடு இருந்திருந்தால் இப்படி மழை வெள்ளத்துக்கு ஒவ்வொரு வருடமும் இடம்பெயர்ந்து கொண்டிருக்க மாட்டோம் என்று மக்கள் தெரிவித்தனர்.
 
இரு கிராமத்து மக்களுக்கும் நிரந்தர வீடுகள் கிடைப்பதற்கு நாடாளுமன்றத்தில் தான் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அந்த மக்களுக்கு உறுதியளித்தார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த உமையாள்புரம், காஞ்சிபுரம், குமரபுரம், பகுதியைச் சேர்ந்த 95 குடும்பங்களைச் சேர்ந்த 208 பேரும் மழை வெள்ளத்தால் இடம்பெயர்ந்து குமரபுரத்தில் உள்ள பாடசாலையில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். அவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நேரில் சென்று பார்த்து அவர்களின் தேவைகளை அறிந்து கொண்டார்.அங்கு தேங்கியுள்ள மக்களுக்கு உடனடியாகப் பாய்கள் தேவை என்க் கேட்கப்பட்டதை அடுத்து அவற்றை வாங்கி வழங்கினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.