Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனத்த மழையே உனக்கு தேர்தல் காலம் வரத் தெரியாதோ!

Featured Replies

 

7942.jpg

கனமழையால் வட மாகாணத்தின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள னர்.

வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகிப் பொது இடங்களில் தஞ்சமடைந்த மக்களுக்கான உதவிகள் உடனடியாகக் கிடைக்கவில்லை என்று பாதிப்படைந்த மக்களும் பொது நலன் கருத்துவோரும் குற்றம் சாட்டியுள்ளனர். 
இது தவிர, வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளவர்களை அரசியல்வாதிகள் பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவது தவறு என்பது நம் தாழ்மையான கருத்து.

பெய்த கனமழை தேர்தல் காலத்தில் வந்திருக்குமாயின்; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளப் பாதிப்புக்கு ஆளானவர்களின் வீடுகளுக்கு, வந்து முதியவர்களைத் தூக்கி தோளில் சுமந்து உங்களுடன் என்றும் நாங்கள் எனப் புகைப்படத்துடன் பிரசாரம் செய்திருப்பர்.     
வெள்ளம் வழிந்தோடும் பள்ளம் எல்லாம் வேட்டியை மடித்துக் கட்டியவாறு வேட்பாளர்களின் உத விக்கரம் நீண்டிருக்கும். 

இதோ! பாண் சாப்பிடுங்கள். அட பாணை விட பணிஸ் பிரமாதம். உங்கள் குழந்தைகளுக்கு லக்ரோஜன் ஒன்றா இரண்டா இப்படி அன்புத் தொல்லையால் மக்களைப் பிய்த்தெடுத்திருப்பர். அதுமட்டு மல்ல பானை சட்டிகள் வழங்குதல், சமைத்த உணவுப் பரிமாறல்கள் என அனைத்தையும் அரசியல்வாதிகள் தாமே முன்னின்று செய்து முடித்திருப்பர். 
என்ன செய்வது! எங்கள் காலப்பிழை. நாசமறுத்த மழை தேர்தல் காலத்தில் வராமல் இப்ப வந்து பொதுசனத்தை படுத்தாப்பாடுபடுத்துகிறது. 

அதிலும் பொதுத் தேர்தல் முடிந்து சில மாதங் கள் கடந்த நிலையில் கனமழை வந்தால் எந்த அர சியல்வாதியாவது எட்டிப் பார்ப்பரா என்ன? தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என்றால் கூட அரசி யல்வாதிகளின் உதவி ஒத்துழைப்புக் கிடைத்திருக் கும்.

ஆனால் தேர்தல் முடிந்த கையோடு கனமழை பெய்ததால் அரசியல்வாதிகள் அட! இப்ப போய் சனத்துக்கு உதவி செய்தால் அடுத்த ஐந்து வருடத்தில் இந்தச் சனங்கள் செய்த உதவியை மறந்து விடுவர். ஆகையால் அரசியல்வாதிகள் எவரும் மழை வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட சனங்களை சந்திக்கவும் அவர்களுக்கு உதவவும் விரும்பமாட்டார்கள் என்பதுதான் உண்மை. 

ஆக, அன்புக்குரிய மழையாரே! இனிமேல் நீ வெள்ளம் போடுவதாக இருந்தால் தேர்தல் காலத்தில் அதைச் செய். எங்கள் மக்களுக்கு தாராள உதவி கிடைக்கும். இப்படி கோரிக்கை விடுவது தான் எங்களுக்கு இருக்கக் கூடிய ஒரேவழி. இருந்தும் இந்தக் கோரிக்கையை நாம் முணுமுணுக்கும் போது பெருகிப் பாயும் வெள்ளம்  சொல்கிறது. 

‘வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிக்காத நீங்கள் துன்பப்படும் போது யார் வந்து உதவுகிறார்கள் பார்க்கலாம் என்பதை உங்களுக்குக் காட்டவே வருண பகவான் கனமழை பொழிந்தார்’ என்று.
அட, எல்லாம் அடுத்த ஐந்து வருடத்தில் மறந் தாகும். மீண்டும் அடுத்த தேர்தலில் கூப்பிய கரங்கள் படலையைத் தட்ட, வீட்டுக்கு வந்தவருக்கு வாக்கு என்பதாக எங்கள் துன்பம் தொடரவே செய்யும். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=7942&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி கண்ணீர்வடிக்கும் வலம்புரி, அடுத்த தேர்தல் காலங்களில் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் தேர்தல் விளம்பரங்களை புறக்கணிக்குமா? வலம்புரியும் சும்மா நீலிக்கண்ணீர் வடிக்குது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.