Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் கடும் துப்பாக்கிச் சண்டை: 2 பேர் பலி; 7 பேர் கைது

Featured Replies

பாரீசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

பாரீசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

 
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ம் திகதி இரவு தீவிரவாதிகள் ஹோட்டல், கேளிக்கை விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அதில், 129 பேர் பலியாகியதோடு, 352 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஈவு இரக்க மற்ற இத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் பிரான்ஸ் பொலிசார் தாக்குதல் நடத்தி அதில், ஈடுபட்ட 8 பேரை சுட்டுக் கொன்றனர். அவர்கள் குறித்த அடையாளம் தெரிந்தது. இவர்கள் அகதிகள் போர்வையில் கிரீஸ் வழியாக பிரான்சுக்குள் ஊடுருவியது கண்டறியப்பட்டது.

எனவே, கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தவிர எஞ்சியவர்களை தேடும் பணியில் பிரான்ஸ் பொலிசார் தீவிரமாக உள்ளனர். பாரீசில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வீடுகளில் பொலிசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவர்கள் மீது பொலிசார் திருப்பி சுட்டனர். அதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால் பாரீசில் மீண்டும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
  • தொடங்கியவர்
பாரிஸில் மீண்டும் பரபரப்பு: வடக்குப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு
1
 

பிரான்சின், பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள  'Saint Denis' பிரதேசத்தில்  பாரிய துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அண்மையில் அங்கு இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து பொலிஸார் தேடல் வேட்டை நட த்தி வருவதாகவும் இதன்போதே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அங்குள்ள கட்டிடமொன்றை பெருந்தொகையான படையினர் சுற்றிவளைத்துள்ளதாகவும் , அதனுள் இருந்து துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல மணி நேரமாக துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.hirunews.lk/tamil/120427/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF#cuspopup

 

 

 

பாரீஸில் மீண்டும் புகுந்த தீவிரவாதிகள்: போலீஸாருடன் கடும் துப்பாக்கிச் சண்டை!

 

பாரீஸ்: பாரீஸின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் என சிலர் புகுந்துள்ளதாகவும், அவர்களுக்கும் தீவிரவாத தடுப்பு போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

paris%20terrorist%20600.jpg

ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து பாரீஸ் மக்கள் மீள்வதற்குள், மீண்டும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தீவிரவாதிகள் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் பதுங்கி இருந்திருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 6.15 மணி அளவில் அந்த குடியிருப்பு பகுதியை சுற்றி வளைத்த  தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார், தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.vikatan.com/news/article.php?aid=55205

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

பாரீஸில் துப்பாக்சிச் சண்டை: தீவிரவாதிகளை பிடிக்க போலீஸ் அதிரடி

 

 
 
செயின்ட் டெனிஸ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் அதிரடிப் படையினர்| படம்: ராய்ட்டர்ஸ்.
செயின்ட் டெனிஸ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் அதிரடிப் படையினர்| படம்: ராய்ட்டர்ஸ்.

மூளையாக செயல்பட்ட அப்துல் ஹமீது பதுங்கியிருப்பதாக தகவல்

*

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதிகளைப் பிடிக்க செயின்ட் டெனிஸ் பகுதியில் தீவிரவாத தடுப்பு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து பாரீஸ் புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் போலீஸார் குவிந்துள்ளனர்.

அங்கு தீவிரவாதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் இதில் போலீஸார் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் குடியிருப்புப் பகுதியினை போலீஸார் சுற்றிவளைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த போலீஸ் ஆபரேஷன் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் இத்தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்தப் பகுதி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது" என்றார்.

128 பேரை பலி கொண்ட சம்பவம்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 15-ம் தேதி பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 128 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 200 பேர் காயமடைந்தனர்.

பாரீஸில் இசை அரங்கம், கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, சிரியா - இராக்கில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

மூளையாக செயல்பட்டவருக்கு வலை:

பாரீஸ் தாக்குதலை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பிரிவு தலைமையேற்று நடத்தியுள்ளது.

அந்த நாட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாகச் செயல் பட்டுள்ளார். சிறுவயதிலேயே பெல்ஜியத்தில் இருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்ற அவர் தற்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக உள்ளார்.

சிரியாவில் உள்ள முகாமில் அவரது தலைமையில்தான் பாரீஸ் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 27 வயதாகும் அவரைப் பிடிக்க பிரான்ஸ் உளவுத் துறை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில், அப்துல் ஹமீது செயின்ட் டெனிஸ் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/article7891335.ece

  • தொடங்கியவர்

பாரீஸில் துப்பாக்கிச் சண்டை: தீவிரவாதிகளை பிடிக்க போலீஸ் அதிரடி

 

 
 
செயின்ட் டெனிஸ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் அதிரடிப் படையினர்| படம்: ராய்ட்டர்ஸ்.
செயின்ட் டெனிஸ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் அதிரடிப் படையினர்| படம்: ராய்ட்டர்ஸ்.

பெண் உட்பட 2 பேர் பலி; மூளையாக செயல்பட்ட அப்துல் ஹமீது பதுங்கியிருப்பதாக தகவல்

*

பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க பிரான்ஸ் அதிரடிப் படை போலீஸார் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். சண்டையின் போது பெண் உட்பட 2 பேர் பலியாகினர்.

பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு வெடித்துச் சிதறினார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து பாரீஸ் புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் போலீஸார் குவிந்தனர்.

அங்கு தீவிரவாதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் குடியிருப்புப் பகுதியினை போலீஸார் சுற்றிவளைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த போலீஸ் ஆபரேஷன் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் இத்தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்தப் பகுதி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது" என்றார்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/article7891335.ece?homepage=true

  • தொடங்கியவர்

பாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை

151118074834_police_operations_paris_624

 

பாரிஸில் சென்ற வாரம் 129 பேரை பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுபவரை இலக்குவைத்து பாரிஸின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அடுக்கு மாடிக் குயிருப்பு வீடொன்றில் ஆயுத பொலிசாரும் சிப்பாய்களுமாக அதிரடி வேட்டை ஒன்றை நடத்தியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

அதில் ஒருவர் பெண் என்றும் அவர் தன் மீது கட்டியிருந்த குண்டுகளைத் தானே வெடிக்கச் செய்துகொண்டார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்கள் நால்வரும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்ட நடவடிக்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

சேன் தெனி பகுதியில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் பொலிசார் பலரும் காயமடைந்துள்ளனர்.

கடும் துப்பாக்கிச் சூடும் பெரிய வெடிப்புகளும் இந்த நடவடிக்கையின்போது நிகழ்ந்துள்ளன.

தேசிய விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள இடம் சேன் தெனி ஆகும்.

கடந்த வாரம் இடம்பெற்ற வன்செயல்களில் தேசிய விளையாட்டு அரங்கத்தில் மூன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

காவல்துறையினர் தேடுதல்களை நடத்தி வரும் பகுதிகளில் சாலைகள் மறிக்கப்பட்டுள்ளன. ஏராளமான அவசர உதவி வாகனங்களும் காணப்படுகின்றன.

http://www.bbc.com/tamil/global/2015/11/151118_parisattack_stdenis

  • தொடங்கியவர்
பாரீஸில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு: பெண் தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை
 
 பாரீஸ்: பாரீஸின் புறநநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் போலீசார் 7 பேரை கைது செய்தனர். பாரீஸ் தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் தப்பியோடியுள்ளார். பாரீஸின் புறநநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் போலீசார் அந்த தீவிரவாதியை இன்று அதிகாலை தேடினர்.
 
அப்போது ஒரு வீட்டில் இருந்த 3 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் அவர்களை நோக்கி சுட்டனர். Shooting in  இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் பலர் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்குள் பதுங்கி 2 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடந்த ஸ்டேடியத்திற்கு அருகே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
பாரீஸ் தாக்குதல்கள் வழக்கு தொடர்பாக போலீசார் இன்று 7 பேரை கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகினர். இதையடுத்து தப்பியோடிய தீவிரவாதிகளை தேட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அப்படி ஒரு சோதனையின்போது தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/shooting-saint-denis-raid-paris-police-officers-hurt-240086.html
  • தொடங்கியவர்

qawqrtt.jpg

wegwg.jpg

ewqwwy.jpg

qgjkwe.jpg

qwqwhkk.jpg

wee3wg.jpg

 

 

  • தொடங்கியவர்
பாரிசில் கடும் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகள் 5 பேர் பலி; 3 பேர் கைது
 
 
 
Tamil_News_large_1389763.jpg
 
Share this video : facebooktop.jpgtwittertop.jpg
 

பாரிஸ் :பயங்கரவாதிகள் ஒரே சமயத்தில் 6 இடங்களில் தாக்குதல் நடத்தி 132 பேரின் பலிகொண்ட துயரத்திலும், அதிர்ச்சியிலும் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மீளாத நிலையில் இன்று (நவ,18) மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பல மணி நேரம் நடந்த தாக்குதலில் ஒரு பெண் உள்ளிட்ட 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 5 நாட்களுக்கு முன் பாரிஸ் நகரில் ஐஎஸ், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக பாரிஸ் நகரம் முழுவதும் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பாரிஸ் தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட அப்துல் ஹமீது என்பவரை குறிவைத்தும், குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை கைது செய்வதற்காகவும் இந்த தேடுதல் வேட்டை நடந்தது. இந்த வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

 

செயின்ட் டெனிஸ் பகுதியில் இதுவரை நடந்த சண்டையில் 7 முறை குண்டு வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர். 2 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். பெண் பயங்கரவாதி ஒருவர் உடலில் குண்டுகளை கட்டி வைத்து, தற்கொலைப்படையாக மாறி வெடிக்கச் செய்து இறந்தார். 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தரப்பில் ஒருவர் பலியாகி உள்ளார். போலீசார்-பயங்கரவாதிகள் இடையேயான தாக்குதலில் அதிகாரிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,13,000 ராணுவ மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சண்டை நடந்து வரும் செயின்ட் டெனிஸ் நகரில் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ஏராளமான ஆயுதங்களுடன் வடக்கு பாரிஸ் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

செயிண்ட் டெனிஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 2 முதல் 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1389763

 

  • தொடங்கியவர்

பாரிஸ் தாக்குதலாளிகளைத் தேடி ஊரின் வடக்கே இராணுவம் அதிரடி வேட்டை
======================================
பாரிஸில் கடந்த வெள்ளியன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரிஸின் வடக்கே பொலிசாரும் இராணுவத்தினரும் இன்று அதிரடி தேடுதல் வேட்டை ஒன்றை நடத்தியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/global/2015/11/151118_parisvt

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாரீஸில் முக்கிய தீவிரவாதியை குறிவைத்து போலீஸ் தாக்குதல்: பெண் மனிதகுண்டு உட்பட 2 பேர் பலி; 7 பேர் கைது

 

 
 
செயின்ட் டெனிஸ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் அதிரடிப் படையினர்| படம்: ராய்ட்டர்ஸ்.
செயின்ட் டெனிஸ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் அதிரடிப் படையினர்| படம்: ராய்ட்டர்ஸ்.

பிரான்ஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை குறிவைத்து ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் போலீஸார் இன்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, ஒரு பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தலைநகர் பாரீஸில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானம், இசை அரங்கம், ஓட்டல்கள் உள்ளிட்ட 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட 8 தீவிரவாதிகளில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் தப்பியதாகவும் போலீஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி அப்துல் ஹமீத் அபாவுத் மூளையாக செயல்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் பாரீஸின் புறநகர் பகுதியான செயின்ட்-டெனிஸில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அபாவுத் தங்கியிருப்பதாகவும் அவருடன் ஆயுதம் ஏந்திய 5 பேர் இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, இன்று அதிகாலை 4 மணிக்கு அப்பகுதியை நூற்றுக்கணக்கான போலீஸாரும் பாதுகாப்புப் படை வீரர்களும் சுற்றி வளைத்தனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் ஆயுதம் ஏந்திய வீரர்கள் தீவிரவாதிகள் தங்கியிருந்த குடியிருப்பை நெருங்கியபோது, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பெண் தீவிரவாதி ஒருவர் வெடிக்கச் செய்துள்ளார். அதில் அந்தப் பெண் பலியானார்.

பின்னர் அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே சுமார் 6 மணி நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 7 பேரை கைது செய்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒருவர் அந்தக் குடியிருப்பில் இருப்பதாகவும் அவர் யார் என்று தெரியவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர். இதில் 4 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்ததாகவும், பிணைக்கைதிகளாக யாரும் இலிலை என்றும் பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த அதிரடி தாக்குதலின்போது தீவிரவாதி அபாவுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7891335.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.