Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது:- சு.ப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது: சு.ப.தமிழ்ச்செல்வன்.

மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை:

மானுட நாகரிகத்தின் முன்னோக்கிய பயணத்தில் ஒரு மைல் கல்லாக 1948 ஆம் ஆண்டு இன்றைய நாள் அமைகிறது. அன்று, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) ஐ.நா பொதுச் சபை வெளியிட்டது.

இந்நாளை நாம் இன்று அனைத்துலக மனித உரிமைகள் நாளாக நினைவு கொள்கிறோம். வரலாற்றில் முதல் தடவையாக, குறித்த ஒரு இனம், மதம், மொழி, தேசம் ஆகிய எதனுள்ளும் குறுகலாக ஒடுங்கிவிடாது, இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் அனைத்துலக அங்கீகாரம் கொண்டதாகவும் அமைய வல்ல ஓர் உயரிய சட்ட விழுமியமாக இப்பிரகடனம் பிறப்பெடுத்தது.

இம் மனித உரிமைகள் தோற்றம் பெற்று இன்றுடன் 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும் உலகின் பல தேசங்களில் வெவ்வேறு இன மக்கள் இன்றும் தம் மனித உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் போராடி வருகின்றனர்.

அரச அடக்குமுறைகளுக்கும் இனப் படுகொலைகளுக்கும் முகங்கொடுத்த வண்ணம் இம் மக்களின் வாழ்வு, விடுதலை நோக்கிய பயணமாக நகர்ந்து செல்கின்றது.

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தைத் தொடர்ந்து மனித உரிமைகள் தொடர்பான பல உடன்படிக்கைகள், பிரகடனங்கள், தீர்மானங்கள் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களாக வடிவெடுத்துள்ளன.

ஆனால் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் பிறப்பெடுத்த 1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மனித உரிமைகள் என்பவை வெறும் எழுத்துக்களில் மட்டும் உயிர் வாழ்வனவாகவும் நேரில் அனுபவிக்க முடியாதவையாகவும் அமைந்து விட்டமையே எமது வரலாறாக உள்ளது.

1948 ஆம் ஆண்டு இலங்கைத் தீவு பிரித்தானியக் கொலனித்துவத்திலிருந்து சுதந்திரம் அடைந்த காலம் முதல் இத்தீவில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களின் கடுமையான இன அடக்குமுறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் தமிழ் மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த இன அழிப்பிலிருந்து எம்மைக் காத்து எமது மனித உரிமைகளை முழுமையாக நாம் அனுபவிப்பதற்கு வழிகோலும் சுயநிர்ணய உரிமை கொண்ட மக்களாக வாழவே நாம் விரும்புகின்றோம்.

அனைத்துலக அளவில் ஒவ்வொரு மனித சமூகமும் தத்தம் மனித உரிமைகளுடனும் தத்தம் இனம், மொழி, பண்பாடு, தேசம் ஆகிய இன அடையாளங்களுடனும் கௌரவமாகவும் நீதியான அமைதியுடனும் வாழ்வதைப் போன்று நாமும் வாழ்வதற்கே இன்று நாம் சுதந்திரப்போரை நடாத்தி வருகின்றோம்.

எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை கொண்ட மக்களாக நிலை பெறுவதன் மூலமே எமது முழுமையான மனித உரிமைகளை அனுபவிக்கும் மக்களாக நாம் தொடர்ந்து வாழ முடியும். இதனாலேயே இன்று சுயநிர்ணய உரிமையானது ஐ.நா சாசனத்திலும் சர்வதேசச் சட்டங்களிலும் எவராலும் மறுக்க முடியாத ஓர் இறுக்கமான சட்ட விழுமியமாக (Jus Cogen/ Customary Law) பேணப்படுகிறது.

ஆனால், இன்று எமது மக்கள் தமது அடிப்படைப் பிறப்புரிமைகளான - வாழ்வு உரிமை (Right to life), இன அடையாள உரிமை (Right to identity), தாயக உரிமை (Right to homeland) ஆகிய அனைத்தும் மறுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறானதோர் பின்னணியில் சிறிலங்கா அரசின் பொய்ப் பரப்புரைகளை அனைத்துலக சமூகம் நம்புவதால் எமது உரிமைப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படும் போதும் எமது மக்கள் மீது மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது. இவையே மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுக்கும் நிலைக்கு எமது மக்களைத் தள்ளியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நோர்வே அரசின் அனுசரணையுடனும் அனைத்துலக ஆதரவுடனும் போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

ஆயினும் சிறிலங்கா அரசின் ஆயுதப் படைகள் தமிழ்ப் பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளும் தாக்குதல்களினாலும் வலிந்த இராணுவ நடவடிக்கைகளாலும் செயலிழந்த நிலைக்கு உடன்படிக்கை தள்ளப்பட்டுள்ளது.

இன்று சிறிலங்கா அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டிருக்கும் பயங்கவரவாதத் தடைச் சட்டம் போர்நிறுத்த உடன்படிக்கையை மேலும் பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப் பயங்கரவாதத் தடைச் சட்டமானது காணாமல் ஆக்கப்படுதல், கைது, நீதி விசாரணைகளின்றி தடுத்துவைத்தல் ஆகியவற்றை ஊக்குவித்துள்ளதுடன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கி

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

கௌரவமாகவும் நீதியான அமைதியுடனும் வாழவே சுதந்திரப் போரை நடத்துகின்றோம் - சு.ப.தமிழ்ச்செல்வன்.

அனைத்துலக அளவில் ஒவ்வொரு மனித சமூகம் தத்தமது மனித உரிமைகளுடனும் தத்தம் இனம், மொழி, பண்பாடு, தேசம் ஆகிய இன அடையாளங்களுடனும் கௌரவமாகவும் நீதியாகவும் நீதியான அமைதியுடனும் வாழ்வதைப் போன்று நாமும் வாழ்வதகே இன்று நாம் சுதந்திரப் போரை நடத்திவருகிறோம் என அரசியல்த் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நேற்றுக் காலை கிளிநொச்சியில் இடம்பெற்ற அனைத்துலக மனிதஉரிமைகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்தெரிவிக்கையில்

மானிட நாகரிகத்தின் முன்னோக்கிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக 1948ஆம் ஆண்டு இன்றைய நாள் அமைகின்றது. அனைத்துலக மனிதஉரிமைகள் பிரகடனத்தை ஐ.நாபொதுச் சபை வெளியிட்டது.

இந்த நாளை நாம் இன்று அனைத்துலக மனிதஉரிமைகள் நாளாக நினைவு கொள்கிள்றோம் வரலாற்றில் முதல் தடவையாக, குறித்த ஒரு இனம், மதம், மொழி,தேசம் ஆகிய எதனுள்ளும் குறுகலாக ஒடுக்கிவிடாது இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் அனைத்துலக அங்கீகாரம் கொண்டதாகவும் அமையவல்ல ஓர்உயரிய சட்ட விழுமியமாக இப்பிரகடனம் பிறப்பெடுத்தது.

இம் மனித உரிமைகள்தோற்றம் பெற்று இன்றுடன் 58ஆண்டுகள் கடந்துவிட்டன ஆயினும் உலகின் பல தேசங்களில் வௌ;வேறு இனமக்கள் இன்றும் தம் மனிதஉரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் போராடிவருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

www.sankathi.com

eelathu tamilarkalee vanakam

sp tamil said the correct think

but some of our tamil people don't care about our mail problem

that's why i am thinking

why u all r doin like this

please think for a minute

sorry that's not a mail problem

that's main problem

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.