Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்தகாலப்பறவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

My Love story :lol:

வசந்தகாலப்பறவை.

dove.gif

அந்திமாலை சிவக்கும் நேரம். காரிருள் மெல்லத்தன்போர்வையை சூரின்பால் போர்க்கின்றான்.. பனித்துளிகள் அங்கும் இங்குமாக பரவி விழுகின்றன. இதமான உடல்ச்சூடு இன்னும் உடம்பைவிட்டு அகலவில்லை. மனமோ, அங்குமிங்குமாக இடம்விட்டு இடம் தாவுகின்றது. ஆதலால்தான் மனம் ஒரு குரங்கு என்று முன்னோர்கள் கூறியுள்ளனரோ என்று எனக்கு எண்ணத்தோன்றியது. அத்தனையும் தாண்டி கண்கள் கடிகாரத்தை பார்க்கின்றன. ஆமாம்.. இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் புகையிரதம் வந்து சேர்வதற்கு.

திடீரென.. அலைபாயும் மனததோ, ஓர்நிலைப்படுகிறது.

ஆமாம்.... அது ஒரு சிலையா,? இல்லை ஓர் சி;த்திரமா? திடிரென வசந்தகாலத்தில் மட்டும் தோன்றும் பறவையாக கண்முன்னே தோன்றுகிறாள்... என்னவென்றுதான் சொல்வது? இமைக்கமறுத்த கண்ணிமையும், செயலிழந்த மனதும் ஒன்றுசேர நினைவுகள் என்னைவிட்டகலுகின்றன..

கம்பனின் கவியில் வரையப்பட்ட கற்பனை ஓவியம் ஒன்று, கலியுகத்தில் உயிர்பெற்று, என்முன்னே தோன்றியுள்ளது போன்றதொரு பிரம்மை! காவியம் படைக்கும் அத்தனை ஆடவர்களும் இத்தகையதொரு ஓவியத்தை பார்த்ததனாலோ? பார்த்ததனால் மட்டும் அவர்களால் படைக்கமுடிகிறதா? ஆல்லது அனுபவமும் ஒன்று சேர்கிறதா?

ஏத்தனையோ தடைவைகள் கவிதை எழுதமுனைந்து முதல் அடிகூடவராமல், அப்படியே மூடிவைத்த எத்தனை ஞாகங்கள்... அத்தனையும் தாண்டி அம்முதற்பார்வை என்னை காவியத்திலே பேசவைக்கின்றது. பெண்களை நிலாவாகவும், மயிலாகவும், கிளியாகவும் எத்தனை உவமைச்சொற்களை கவிஞர்கள் உபயோகித்துள்ளனர். விடைகாணா, ஆர்வமற்றிருந்த பல வினாக்களுக்கு விடை தானாகவே கிடைக்கின்றது. அப்பொழுதுதான் ஒரு கவிஞன் எழுதிய பாடல் நினைவுக்கு வருகின்றது. "மலர்போன்றபாதம் நடக்கின்றபோது, நிலம்போல உன்னை நான்தாங்க வேண்டும்". ஆமாம், நிலம்போல நான்தாங்க நினைக்கிறேன். நிலா ஏறுக்கொள்ளுமா? பாடலின்; அர்த்தம் இப்போது புரிகின்றது, சுவைக்கின்றது.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் வரும் புகையிரத ஒலி மனவானில் சிறகடிக்கும் புதிய நினைவுகளை சிதறடிக்கின்றது.. எவ்வளவோ கஸ்ரப்பட்டு அவள் எதிர் இருக்கையில் அமர்ந்தேன்.

தேன் சிந்தும் இதழ்களும், மௌனப்புன்னகையும், புலிகைக்கண்டு மிரழும் மான்களின் கண்களும் ஓரிங்கு சேர்ந்ததால் நிலைகுலைந்துவிட்டேன். பெண்கள் என்றால் இப்படியா என்றொரு புதிய வரைவிலக்கணம் என்னுள் ஊடுருவுகின்றது.

"பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை" என்பது இந்துமதத்தத்துவம். மதமென்றால் வெறும் போலியும், பித்தலாட்டமும் என்றிருந்த எனக்கு அவ்வோவியத்தை பார்த வினாடியில் இருந்து இச்சொற்றொடரில் ஓர் பரிட்சையம் ஏற்பட்டது. ஆமாம்.. பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை. ஆவ்வோவியத்தின் சொந்தக்காரன் ஆக என்மனம் துடித்தது.

புகைவண்டி மெதுவாக நகர ஆரம்பிக்கின்றது.. பனித்துளிகள், மழைத்துளிகளுடன் சேர்ந்து வானத்தை விட்டு பூமியை நோக்கி நகர்கின்றது. இயற்கையின் அழகுகள் அனைத்தையும் தன்னகத்தே தைத்திருக்கும் பாவையின் அழகை எப்படித்தான் எழுதுவது? அதற்கு எந்த மொழிதான் ஈடுணையானது? அவழின் அழகை வர்ண்ணிக்கவேண்டுமானால், அகராதியில் புதிய சொற்கள்தேவை. அழகை அனுபவிக்கத்தான் முடியும். வெற்று எழுத்துக்களால் கூறிவிட்டு போய்விட முடியாது.

நாட்கள் பல களித்து..

அவளுடனான சந்திப்புக்கள் பல புகையிரதத்தில் கழிந்தன. அவளை பார்காத நாட்கள், ஏதோவொன்றை தொலைத்தமாதிரியான ஒரு ஏக்கம்.. வசந்தகாலத்திலே, மரத்தை விட்டகன்று செல்லும் இலைகள்பேல்! மரத்துக்கும் என்னைமாதிரி உணர்ச்சிகள் உண்டா? ஏனென்றால் "மரம்போல் உனர்ச்சியில்லாமல் நிக்கிறியே" என்று என்னை திட்டியவர்கள் கூட உண்டு. யாருக்கு எப்படித்தெரியும் மரங்களின் உணர்ச்சிகள் எப்படிப்பட்டவை என்று? மனிதனைவிட அதிமாகக்கூட இருக்கலாம்!

(நம் கலாச்சாரத்திலே காதலையும், காதலர்களையும் நம்மோர்கள் பலர் மதிப்பதில்லை. பெண்களை ஒரு காட்சிப்பொருளாகவும், கல்யாணத்தை; ஒரு வியாபாரமாக்கவும் அவர்கள் முனைகின்றனர். ஆனால் "காதல்" என்பது தமிழனின் பாரம்பரிய கலாச்சாரத்துpல் ஒன்று. உதாரணமாக வால்மீகியின் ராமாயணத்தில் கூறப்படாத சில வார்த்தைகள் தமிழனால் எழுதப்பட்ட கம்பராமாயணத்தில் இடம்பெற்றிருக்கின்றன. வால்மீகி கூறியது "வில்லை உடைத்து சீதையை கைப்பிடித்தான் ராமன்" என்று. ஆனால் கம்பனோ.. வில்லை உடைக்கவரும் வழியில் ராமன் சீதையைப்பார்க்கிறான் என்றும் அதிலே

"அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்".

பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து

ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்

வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்"..."

என்ற பாடலின் மூலம் இருவரும் காதல்வயப்படுகின்றனர் என்று தத்துரூபமாகக் காட்டுகிறான் கம்பன். தமிழர்களுடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு சுவைபட ராமாயணத்தை கூறியிருந்தான் அந்த வம்பன்.)

"உன்னைப்பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்" என்ற ஆசை பல காதலர்களிடையே தோன்றுவது போல் என்னுள்ளத்திலும் தோன்றுகின்றது. அதற்கு உன் சம்மதம் கிடைக்குமா? உன்; ஓரப்பார்வை ஒருதடவையேனும் என்மீது படுமா என்ற ஏக்கம்! உடல் எனும் சிறைக்குள் சிறைப்பட்டிருந்த என்ஆத்மா, இன்று உன் அன்புப்பார்வையால் சிறையற்று இருப்பிடம் தேடுகிறது. என் இருதயத்தின் இருப்பிடம் ஏன் உன்உடலாக இருக்கக்கூடாது? என்வாழ்க்கையின் நந்தவனம் ஏன் நீயாக இருக்கக்கூடாது?"

by. TamilsFront

உங்கள் காதல் கதையா?? :lol:

கதை நன்றாக இருக்கிறது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.