Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`வேற்று நாட்டவர்களுடன் போர் புரிவதைப் போல எமது மக்களை அரசு பட்டினி போடுகிறது'

Featured Replies

-வெள்ளிக்கிழமைத் தொடர்ச்சி-

ஒரு காலத்தில் எங்கள் தேசத்தில் நாங்கள் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சியை ஐரோப்பியர்களிடம் இழந்தோமே தவிர, சிங்கள அரசுகளிடமல்ல. அவற்றின் எந்தவோர் அரசியலமைப்பையும் நாங்கள் ஏற்றுக் கொண்டவர்களும் அல்லர், இறைமை மக்களிடம் தான் இருக்கின்றது என்ற அடிப்படையில் எங்களுடைய இறைமை எங்களுடைய மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த அடிப்படையில், எங்களுடைய இறைமையையும் எங்களுடைய ஆட்சிக் கட்டமைப்பையும், எங்களுடைய சுதந்திரத்தையும் நீங்கள் அங்கீகரிப்பதன் மூலந்தான் இந்தத் தேசத்திலே நாங்கள் ஓர் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றையாட்சியில் அல்ல - இருக்க முடியும். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் தனியாகத் தங்களுடைய சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கு இடமிருக்க முடியுமா என்பதை இந்த ஆட்சிக் காலத்திலேயே தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை எழுந்து வருகின்றது என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஆகவே, எங்களுடைய மக்களைப் பட்டினி போட்டு, வேற்று நாட்டவர்களுடன் போர் புரிவதைப் போல குண்டுகளை வீசி அவர்களை அழித்தொழிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நீங்கள் கனவு காண வேண்டாம் என்றும் நான் உங்களிடம் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். எங்களுடைய மக்கள் உயிருள்ள வரையில் ஒவ்வொரு விநாடியும் தங்களுடைய சுதந்திரத்துக்காகப் போராடுவார்கள் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் சொல்லி வைக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

அடுத்ததாக, பல்லாயிரக்கணக்கான எங்களுடைய மக்கள் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய உழைப்பை இழந்து, தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து, தங்களுடைய மண்ணையும் இழந்து நிற்கின்றார்கள். காரணம், உயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் அந்தப் பிரதேசமெல்லாம் இன்று இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பது தான். எனவே, அவர்களுக்கு என்ன விதிவிலக்கை நீங்கள் அளித்திருக்கின்றீர்கள் என்று நான் உங்களைக் கேட்க விரும்புகின்றேன். அவர்களுக்கு என்ன உத்தரவாதத்தை நீங்கள் கொடுக்கின்றீர்கள்? 1996 ஆம் ஆண்டு சைப்ரஸ்- துருக்கி ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டுப் போர் காரணமாகத் தங்களுடைய நிலங்களையும், தங்களுடைய வீடுகளையும் இழந்த மக்களுடைய சார்பிலே சைப்ரஸ் குடிமகளான லோசிடோ என்பவரால் ஐரோப்பிய Human rights Commission இலே ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கமிஷனிலே என்ன தீர்ப்பை வழங்கினார்கள்? Loizidou versus Turkey என்பது தான் அந்த வழக்கு 13 நீதிபதிகளில் 11 நீதிபதிகள் சொன்னார்கள்.

இழந்த அத்தனை உடைமைகளுக்கும் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று. எத்தனை ஆண்டுகளாக அவர்கள் தங்களுடைய பூமியில் தமது தொழில்களை இழந்திருக்கிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் நட்ட ஈடு கொடுக்க வேண்டுமென்று சொன்னார்கள். இன்று ஐ.நா. சபை வரைக்கும் அது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிலங்கள் மாத்திரமன்றி, உங்களுடைய ஆக்கிரமிப்பின் காரணமாக வடக்கு, கிழக்கின் கரையோரம் முழுவதும் பாதுகாப்பு வலயமாக உள்ளதனால், எமது தமிழ் பேசும் மக்கள் மீன் பிடிக்க முடியாத நிலையில், 20 வருடங்களாகத் தொழிலை இழந்து பசி, பட்டினியோடு வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் மக்களுக்கும் அதே நிலைமை தான்! அவர்களுக்கெல்லாம் என்ன நட்டஈடு கொடுக்க முடியும்? இறுதியாக, அவர்கள் தங்களுடைய உயிர்களை இழக்கின்ற நிலைமை, பட்டினியால் சாகின்ற நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆண்டு காலமாகத் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து, சொத்துகளை இழந்து, வீடு வாசல்களை, நிலங்களை இழந்தவர்களுக்கும் அவர்களின் உயிரிழப்புகளுக்கும் பொருளாதார ரீதியாக என்ன தீர்வு காணப்போகிறீர்கள்? என்று இந்த வரவு - செலவுத் திட்டத்தைப் பற்றிப் பேசுபவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

அடுத்ததாக, பத்து ஆண்டுத் திட்டத்தில் தலைக்குரிய வருமான மட்டம் 3000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருக்கும் வகையில் வருமானம் உயர்த்தப்படவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் வரவு- செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார். இது உங்களுடைய அரசின் அறிக்கைகள் மட்டுமே. உண்மையில் மக்களின் பொருளாதாரத்தைப் பாருங்கள்! 2006 ஆம் ஆண்டில் 1.9 மில்லியன் குடும்பங்கள் இன்னமும் வறுமைக்கோட்டின் கீழ் தான் இருக்கின்றன.

50 சதவீதமான மக்கள் இன்னமும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். அப்படியாயின் மாதாந்தம் 1500 - 2000 ரூபா வருமானத்தைக் கூட அவர்களால் பெற முடியவில்லை. அதிலும் 70 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தமிழ்ப் பிரதேசங்களில் தான் வாழ்கிறார்கள். இன்னமும் இந்நாட்டில் கிட்டத்தட்ட 3,50,000 மக்கள் சமுர்த்தித் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதற்காக 11 பில்லியன் ரூபா செலவுசெய்யப்படுகிறது. எங்களுடைய தமிழ்த் தேசத்தில் இருக்கின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் தொழிலே இல்லாமல் - கடந்த மூன்று மாதங்களாகச் சிறு கூலித் தொழிலைக் கூட செய்ய முடியாமல் - இராணுவ அடக்கு முறைக்குள்ளே ஒரு ரூபா பெறுமதியான பொருளைக் கூட வாங்கும் சக்தியை இழந்திருக்கிறார்கள். They have already lost the purchasing capacity in our areas. Have you given any consideration to that? Please! இங்கே அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதுவும் இடது சாரிக் கட்சியின் தலைவராக இருந்த அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன அவர்கள் இங்கே இருக்கின்றார்.

மூன்று மாதங்களுக்கு மேலாக ஒரு ரூபாவைக் கூட உழைக்க முடியாத நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் எங்கள் தேசத்தில் இன்று பசி பட்டினியோடு இருக்கும் போது, உங்களுடைய பொருளாதாரத் திட்டம் எங்களுக்கு எப்படிப் பயனுடையதாக இருக்க முடியுமென்று அவரிடத்தில் நான் கேட்க விரும்புகிறேன்.

யூனிசெப் 2003 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையின் படி, "இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திலே தமிழ் பேசும் மக்களின் ஒன்பது இலட்சம் குழந்தைகள் ஆரோக்கியமற்றவர்களாக, போஷாக்கற்றவர்களாக முழுமையான வளர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள்" என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த குழந்தைகளின் எண்ணிக்கை இன்று இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்காக, அவர்களுடைய ஊட்டச் சக்தியைக் கூட்டுவதற்காக, அவர்களைப் பெற்ற தாய்மார்களின் ஊட்டத்திற்காக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இதைப் பற்றி உங்களுடைய வரவு- செலவுத் திட்டத்தில் ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என்று கேட்க விரும்புகிறேன்.

இந்தப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டிய இவ்வேளையில், வடக்கு, கிழக்கு பிரிப்பு சம்பந்தமான நீதிமன்றத் தீர்ப்பையிட்டு அரசாங்கத்தின் பதில் என்னவென்று இன்றும் எங்களுடைய தலைவர் சம்பந்தன் அவர்கள் கேட்டார். இன்று, "வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நீங்கள் அதற்கான ஒரு பிரேரணையை முன் வையுங்கள். நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று ஐக்கிய தேசியக் கட்சியும் சொல்கிறது. நாங்களும் சொல்கிறோம். ஆனால், அரசாங்கம் அதற்கு ஆயத்தமாக இல்லை. இன்று வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 18,880 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய தமிழ்த் தேசத்திலே எத்தனை சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தனை ஆண்டுகளிலும் 5,178 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் சிங்கள மக்களுக்காக, குறிப்பாகத் தமிழ்ப் பிரதேசங்களென்று அடையாளம் காணப்பட்ட திருகோணமலையிலும் அம்பாறையிலும் வவுனியாவிலும் 13 பிரதேச செயலகங்களை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது! வடக்கு, கிழக்கு தேசம் தமிழர்களுடைய தாயகமென்று கண்டியத் தலைவர்கள் சொன்னதை அமரர் பண்டாரநாயக்க அவர்கள் 1920 களில் சொன்னதையெல்லாம் மீறி, இன்று நீர்ப்பாய்ச்சல் வசதியற்ற காட்டுப் பிரதேசங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 13,000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக் கொண்ட, இன்று தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசம் பிளவு படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒரு தேசிய இனம் வாழ்கின்ற பிரதேசத்தை வடக்கென்றும் கிழக்கென்றும் பிளவு படுத்தி, கிழக்கு மாகாணத்திலே அத்தமிழ் மக்களை மேலும் சிறுபான்மையினராக்கி அடியோடு அழிப்பதற்கும், அவர்களுடைய மொழி ரீதியான அரசியல் அதிகாரத்தை இழக்கச் செய்வதற்கும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள், எங்களுடைய தேசத்தின் விடுதலைப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி நாம் சுதந்திரம் பெறுவதற்கே இட்டுச் செல்லும் என்று தான் கூறுகின்றோம். எனவே, நீங்கள் அவ்வாறு செய்வதை விடுத்து, எமது தாயகதத்தில் வடக்கு, கிழக்கு என்ற அடிக் கட்டமைப்பில் எமது ஆட்சியை அங்கீகரித்து, எமது மக்களுடைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துகின்ற ஓர் அரசியல் தீர்வை எட்டுவதன் மூலம் தான் இந்த நாடு ஐக்கியமாக இருக்க முடியும். அவ்வாறான நிலை ஏற்படாதவிடத்து நாம் சர்வதேசத்திடம் எமது தேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டுமெனக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை.

http://www.thinakkural.com/news/2006/12/11...s_page17130.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.