Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செந்தூரனின் மரணமும், புதிய தலை முறையினரின் நீறு பூத்த நெருப்பாக உள்ள உணர்வும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செந்தூரனின் மரணமும், புதிய தலை முறையினரின் நீறு பூத்த நெருப்பாக உள்ள உணர்வும்

 

தமிழ் மக்களின் உரிமைக்காக சிறுவயதில் உயிர்த் தியாகம் செய்த செந்தூரனுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்ளுகின்றோம். அவரின்இழப்பால் பரிதவிர்த்து போயுள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலினை தெரிவித்துகொள்கின்றோம். அதே நேரம் இப்படியான செயல்களில் எந்த தன்மானத் தமிழனும் தங்கள் விலைமதிப்பற்ற உயிரை மாய்த்து விடவேண்டாம் என்றும்இந்நேரத்தில் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் உணர்வுகளை அரசியலில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியவாறு அகிம்சை வழியில் மேற்கொள்ளுங்கள்.இம் மாணவனின் இழப்பானது தமிழ் மண்ணில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

 

இம் மாணவனின் இந் நிலைக்கு நிச்சையம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும். தமது கடமைகளை சரிவரச் செய்யாததலைமைகள் தமது பதவிகளை உடனடியாக துறக்கவேண்டும். தமிழ் மக்களின் மனக்கிடங்கை புரிந்து கொள்ளாமல் தான்தோன்றி தனமாக அறிக்கைகள்விட்டு சிங்கள அரசாங்கத்தினையும் சர்வதேச நாடுகளையும் திருப்திப்படுத்திக் கொண்டு, சொகுசாக கொழும்பில் இருந்து செயற்பட்டு வரும் தமிழ்த்தலைமை தூக்கி எறியப்பட வேண்டும். உண்யைமான தமிழ் மக்களின் உணர்வினை புரிந்து செயற்படும் சரியான தலைமை புதியதாகபொறுப்பெடுக்கவேண்டும். இதுவே இம் மாணவன் போன்று மற்றைய இளைஞர்களும் தவறான முடிவை எடுக்காமல் தடுக்கும்.

 

அதே நேரம் செந்தூரன் எழுதிவிட்டு சென்றுள்ள மரண சாசனமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் ஒரு செய்தியை சொல்லாமல்சொல்லியுள்ளான். சிங்கள அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் போனால் பாரிய பின்விளைவுகளை எதிர் நோக்கவேண்டி வரும் என்பதோடு, அரசியல் கைதிகள் விடையத்தில் சிங்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழர்களை எனியும் ஏமாற்ற வேண்டாம் என்றும்தமிழர்களின் மனநிலையை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சனையை கையாள வேண்டும் என்பதுவும், சிங்கள அரசாங்கத்தினதுவும்,பிறநாட்டினதுவும் கைக்கூலிகளாக இருக்கக் கூடாது என்பதனையும் சொல்லாமல் சொல்லியுள்ளது அவனது தற்கொடை.

 

மேலும் இவனது மரணமானது சிங்கள அரசுக்கும் சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியை நிச்சயம் கொண்டுசென்றுள்ளது. புதிய தலைமுறை இளைஞர்களின்எண்ணங்களில் இலட்சிய நெருப்பு நீறு பூத்த நெருப்பாக எரிந்து கொண்டுள்ளது என்பதுவும், தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை சர்வதேசமோ சிங்களஅரசாங்கமோ சரியாக கையாளாமல் போனால் அதன் பாதிப்பு மிக மோசமான எதிர் வினையை ஏற்படுத்தும் என்பதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

மேலும் இம் மாணவனின் இத் தற்கொடை பற்றிய ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி அவனது தியாகத்தினை எவரும் கொச்சைப்படுத்த கூடாது. அதுஉண்மையில் தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். 2009ம் ஆண்டு சென்னையில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயர்த்தியாகம் செய்ததியாகி முத்துக்குமாரின் மரணத்தை அப்போதைய தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தலைவர்கள் ' முத்துக்குமார் ஒரு மனநோயாளி' எனகொச்சைப்படுத்தினார்கள். அதுவே மக்களால் அவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய காரணங்களில் ஒன்றாக இருந்ததையும் இங்கு நினைவூட்டவிரும்புகின்றோம்.

 

தமிழர்களுக்காக தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களை பூசிக்கும் இப்புனித நாளில் அதுவும் தேசியத் தலைவனின் பிறந்த நாளில் இம் மாணவனின் மரணம்நடைபெற்றுள்ளது. அனைத்து மாவீரர்களையும் பூசிக்கும் இத்திரநாளில் இம் மாணவனையும் இணைத்து அஞ்சலி செய்வோமாக!

 

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.