Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பர் 27 கிரிக்கெட்டின் கறுப்பு தினம்: இளம் வீரர் ஹியூக்ஸ் உயிரை பறித்த பந்து!

Featured Replies

நவம்பர் 27 கிரிக்கெட்டின் கறுப்பு தினம்: இளம் வீரர் ஹியூக்ஸ் உயிரை பறித்த பந்து!

 

ன்று வரை கிரிக்கெட் உலகின் பிரசித்தி பெற்ற மைதானமாக விளங்கியது சிட்னி கிரிக்கெட் மைதானம்  அன்று வரையிலான அதன் வரலாறு, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் உற்சாகப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், அந்நாள் அதன் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி வைத்தது. அது, நவம்பர் 27, 2014. பவுன்சர் பந்தால் தலையில் காயம்பட்டு சிகிச்சையில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் தனது ஆயுட்காளத்தை 25 ஆண்டுகளோடு நிறைவு செய்துகொண்ட தினம்.

c3.jpg

இன்று. கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விளையாடுபவர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் கண்ணிலும் ஈரம் படர வைத்தது இத்துயர சம்பவம். தான் மிகவும் விரும்பிய, மிகவும் நேசித்த கிரிக்கெட் மைதானத்திலேயே தனது உயிரைவிட்ட இந்த வீரரைப் பற்றிய பகிர்வு இதோ...

சாதனைகளோடு தொடங்கியவர்...

2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முதலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராகக் களம் கண்டார் ஹியூக்ஸ். ஸ்டெய்ன், மோர்கல் என உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தென்னாப்பிரிக்க அணியிடம் தனது முதல் இன்னிங்சில், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் கணக்கை தொடக்காமலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்துக் கொண்டு விளையாடி 75 ரன்னெடுத்தார்.

c2.jpg

இவரது வருகையை உலகம் கவனித்தது இரண்டாவது டெஸ்டில் தான். ஆட்டத்தின் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த ஹியூக்ஸ், மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஆனால், மோசமான பார்ம் காரனமாக அடிக்கடி அணிக்கு தேர்வாவதாகவும் வெளியேற்றப்படுவதாகவும் இருந்தார். கடைசியில் இவரது இடத்தை ஆல்ரவுண்டர் வாட்சன் தனதாக்கிக் கொண்டார். ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு 2013-ல் தான் கிடைத்தது. இலங்கைக்கு எதிரான அப்போட்டியில் 112 ரன் எடுத்த ஹியூக்ஸ், அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற சாதனையையும் படைத்தார். இவர் 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013-ம் ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரருக்கான விருதினையும் ஹியூக்ஸ் வென்றார்.

கருப்பு தினம்...

சவுத் ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான செப்பீல்டு ஷீல்டு நான்கு நாட்கள் போட்டி கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த சவுத் ஆஸ்திரேலிய அணிக்காக 63 ரன்களோடு நிதானமாகவும் உறுதியோடும் விளையாடிக் கொண்டிருந்தார் பிலிப் ஹியூக்ஸ். ஆட்டத்தின் 49வது ஓவரை வீசிய நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அப்பாட், அவ்வோவரின் மூன்றாவது பந்தை பவுன்சராக வீசினார். மணிக்கு சுமார் 135 கி.மீ வேகத்தில் வந்த அப்பந்தை லெக் சைடில் ‘புல் ஷாட்’ அடிக்க ஹியூக்ஸ் முற்பட, அப்பந்து பேட்டில் படாமல் அவரது இடது காதிற்கு கீழ் புறமாக கழுத்தில் பட்டது. அடிபட்டதும் களத்திலேயே சுருண்டு விழுந்த ஹியூக்சை வீரர்கள் எழுப்ப முயற்சித்தும் அவர் எழாததால் மருத்துவமணைக்குக் கொண்டு சென்றனர். மூளைக்கு ரத்தம் எடுத்து செல்லும் ரத்தக் குழாயில் அடிபட்டு ரத்த உறைவு ஏற்பட்டது, இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அருவை சிகிச்சை செய்ய கோமா நிலைக்குப் போனார் ஹியூக்ஸ்.

c4.jpg

ஹியூக்ஸ் சீக்கிரம் நலம்பெற வேண்டி கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் பிராத்தணை செய்தவண்ணம் இருந்தனர். ஆனால் இரண்டு நாட்கள் கோமாவிலேயே இருந்த ஹியூக்ஸ். நவம்பர் 27-ம் தேதி காலை காலமானார். உலகமே இந்நிகழ்வால் உறைந்து போனது. கிரிக்கெட்டையே வாழ்க்கையாக நிணைத்த ஒரு 25 வயது இளைஞனின் வாழ்க்கை கிரிக்கெட் பந்தால் முடிவுக்கு வந்த சம்பவம் அனைவருக்கும் பேரதிர்ச்சியாய் இருந்தது. இது கிரிக்கெட்டின் கருப்பு தினமாய் கருதப்பட்டது.

ஹியூக்ஸிற்கு அஞ்சலி...

இச்செய்தியை அறிந்த முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலைத் தெரிவித்தினர். அவர்கள் மட்டுமல்லாது, ரசிகர்களும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். ட்விட்டர் மற்றும் ஃபேஸ் புக்கில் பலரது புரொபைல்களும் ஹியூக்சின் முகமாகவே இருந்தன. அதுமட்டுமல்லாது, ஒவ்வொருவரும் தங்களது வீட்டின் வெளியே ஹியூக்சின் படத்தையும், கிரிக்கெட் பேட்களையும் வெளியே வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது நடந்துகொண்டிருந்த பாகிஸ்தான்-நியூசிலாந்து டெஸ்ட் போட்டி, இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள் தள்ளிப்போயின. இதேபோல், அப்போது தொடங்கவிருந்த இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரும் தள்ளிப்போனது.

மறையாத 63 மற்றும் 408...

பின்னர் தொடங்கிய முதல் போட்டியில் ஹியூக்சை கவுரவப்படுத்தும் விதமாக அவர் ஆஸ்திரேலிய அணியின் 13வது வீரராக அறிவிக்கப்பட்டார். ஹியூக்ஸ் அடிபட்டபோது உடன் களத்திலிருந்த வார்னர், வாட்சன், ஹாடின் உள்ளிட்ட வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போதுகூட மிகவும் மனமுடைந்தே காணப்பட்டனர். அப்போட்டியில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் 63 ரன்கள் எடுத்திருந்தபோது, மட்டையை உயர்த்தி ஹியூக்சிற்கு அர்பணித்தினர். ஹியூக்ஸ் அடிபட்டபோது 63 ரன்கள் எடுத்திருந்ததால் அவ்வாறு செய்தனர்.

c1.jpg

அவர்களது சதங்களை தங்களது தோழனுக்கு அர்ப்பணிப்பதாய்க் கூறினர். இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் ஹியூக்சின் டெஸ்ட் நம்பரான 408 எண் கொண்ட உடையணிந்து விளையாடினர். ஹியூக்ஸ் அடிபட்ட சிட்னி மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் 63 ரன்கள் எடுத்திருந்தபோது டேவிட் வார்னர் மைதானத்தை முத்தமிட, குழுமியிருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் கண்ணீர் சிந்தி அவ்வீரனுக்கு அஞ்சலி செலுத்தினர். 63 மற்றும் 408 ஆகிய என்கள் கிரிக்கெட் வரலாற்றில் அழியா இடம்பிடித்துள்ளன என்பது நிதர்சனம்.

முடிவை நிர்ணயித்த முடிவு...

கடந்த 11-ம் தேதி ஹியூக்சின் வாழ்க்கை, அவரது பெயரிலேயே புத்தகமாய் வெளியிடப்பட்டுள்ளது. அதில் யாரும் அறியாத சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஹியூக்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக தனது கடைசி போட்டியில் களமிறங்கும்போது வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். அது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கும் சமயம். கேப்டன் கிளார்க் காயத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததால், தான் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தனக்கு தேசிய அணியில் இடம் கிடைக்குமென்று நம்பியிருக்கிறார் ஹியூக்ஸ். தொடக்க வீரராக மட்டுமின்றி சில போட்டிகளில் நடு வரிசையிலும் விளையாடிய அனுபவம் இருந்ததால் அப்போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டுமென்று முடிவெடுத்துள்ளார்.

c5.jpg

அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழுத் தலைவராக இருந்த மார்க் வாக் மற்றும் சவுத் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் டேரன் பெர்ரி ஆகியோரிடையே நடந்த உரையாடலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கிரிஸ் ரோஜர்சுக்கு வயது அதிகமானதாலும், அவரால் தொடார்ந்து சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியாததாலும் அவருடைய இடத்தில் ஹியூக்சை கொண்டுவர நிணைத்துள்ளார் வாக். அதனால், அவருடைய செயல்பாடுகள் குறித்து பெர்ரியிடம் விசாரித்துள்ளார். அப்போது பெர்ரி “ஹியூக்ஸ் நிச்சயம் சிறப்பாக விளையாடி தேசிய அணியில் நிரந்தர அங்கம் வகிப்பார். நியூ சவுத் வேல்சுடனான போட்டியில் நிச்சயம் அவர் சதமடிப்பார். என் வீட்டை நான் பந்தயமாகக் கூட வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

c6%281%29.jpg

இதில் சோகம் என்னவென்றால், ஹியூக்ஸ் நிரப்ப நிணைத்த கிளார்க், வாக் நிரப்ப நிணைத்த ரோஜர்ஸ், இவரது இடத்தை நிரப்பிய வாட்சன் என அனைவரது இடமும் இப்பொழுது காலியாகவே உள்ளது. ஹியூக்ஸ் மறைந்த ஒரு ஆண்டுக்குள் இவர்கள் மூவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேவிட்டனர். இன்று அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய அங்கமாய் இருந்திருப்பார். விரைவில் அணியில் இடம்பெற வேண்டுமென்று அன்று களம் கண்ட அவர், அக்களத்திலேயே முடிந்து போய்விட்டார். அவர் அந்நாளில் விளையாடாமல் ஓய்வெடுத்திருந்தால் இக்கட்டுரையே அவசியமற்றுப் போயிருக்கும்.

மரணம் வேண்டாம்.. சாதனைகள் மட்டும்...

அப்போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக களம் கண்ட ஆஸி சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ.கீஃப் “ஹியூக்ஸ் எப்படி பந்து வீசினாலும் அடித்துக்கொண்டே இருப்பார். அதைக் கட்டுப்படுத்த ‘ஷார்ட் பால்கள்’ போடவேண்டுமென்று எங்கள் பவுலர்கள் தீர்மானித்திருந்தனர். அப்படி நாங்கள் செய்த முடிவு இப்படி ஆகிவிட்டது. அவர் ஒரு மகத்தான வீரர். அவர் மரணத்தை அனைவரும் மறந்து அவர் செய்த சாதனைகளுக்காக மட்டும் அவரை நிணைவு கூற வேண்டும்” என்று கூறினார்.

c7%281%29.jpg

அதற்கு ஏற்றார்போல் அவரது நிணைவு தினமான இன்று, கிரிக்கெட் வரலாற்றின் முதல் பகலிரவு போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியின்போது ஹியூக்சை நிணைவு கூறும் வகையில் சரியாக 4.08 மணிக்கு அவரைப் பற்றிய வீடியோவை மைதானத்தில் ஒளிபரப்ப ஆஸி. கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்று அரசியல் ஆல்பங்கள் மட்டுமே வெளியிடும் ஆஸ்திரேலிய பாப் பாடகர் உர்த்பாய், ஹியூக்ஸ் நிணைவாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ‘நம்புக்கா பாய்’ என்ற பெயரில் பாடலொன்றை வெளியிட்டுள்ளார்.

எல்லாம் நவம்பரிலே!   

நவம்பர் 27ல் மறைந்த ஹியூக்ஸ் பிறந்ததும் நவம்பரில் தான். 1988-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கிரெக்-விர்ஜீனியா தம்பதிக்குப் பிறந்தார் ஹியூக்ஸ். சிறுவயது முதலே பேட்டும் கையுமாக இருந்த ஹியூக்ஸ், தனது 12 வயதிலேயே கிளப் அணிகளுக்காக விளையாடத் தொடங்கிவிட்டார். தனது குட்டையான உருவத்தால் நண்பர்களால் ‘லிட்டில் டான்’ என்று அழைக்கப்படுவாராம் ஹியூக்ஸ். ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்த ஹியூக்ஸ், முதல் தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனதும் இதே நவம்பர் மாதம் தான். 2007 நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய அவரது கிரிக்கெட் வாழ்க்கை அடுத்த 8 ஆண்டுகளில் முடிவுற்றதே பெரும் சோகம்.

c8.jpg

ஹியூக்ஸின் கிரிக்கெட் சகோதரர் என கருதப்படும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு இம்மாதம் 17-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது பேசிய அவர், ”என் சிறிய சகோதரனை நான் என்றென்றும் மறவாமல் இருக்க வேண்டியே என் மகள் அவர் மறைந்த நவம்பர் மாதத்திலேயே பிறந்திருக்கிறாள். ஹியூக்ஸ் என்றும் என் நிணைவிலேயெ இருப்பார்” என்று நெகிழ்ந்தார்.

நேசித்த இடத்திலேயெ மரணிப்பது என்பது மிகவும் சிறந்தது. ஆனால், அது விரைவில் நடந்தது தான் பேரிழப்பு. ஹியூக்சின் இழப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிற்கே பேரிழப்புதான், கிரிக்கெட்டை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் பேரிழப்பு தான். வீரனே..., ஒவ்வொரு மனிதனும் அவன் பிறந்த நாளிலும், நிணைவு நாளிலும் தான் நிணைக்கப்படுவான். ஆனால் கிரிக்கெட் பந்து எவர் ஒருவர் உடம்பில் படும்பொழுதும் அங்கு உன் நியாபகம் எழும். அதுவே இவ்வுலகம் உனக்குச் செய்யும் அஞ்சலி!

http://www.vikatan.com/news/sports/55649.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.